Pages

Monday, November 15, 2010

மும்பை ஆதர்ஷ் அடுக்கு மாடி ஊழல்...! - முழுமையான ரிப்போர்ட்..!

15-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நானும் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்திய அரசியல்வியாதிகளைப் பற்றிப் படித்து வருகிறேன். தெரிந்து வைத்திருக்கிறேன். ஒரு அரசியல்வியாதியின் மகன்களோ, மகள்களோ, பேரப்பிள்ளைகளோ ராணுவத்தில் வேலை பார்ப்பதாகப் படித்தோ, தெரிந்தோ எனக்கு நினைவே இல்லை.

அது மாதிரியான ஒரு தேசபக்தி மிகுந்த, அடிபணிந்த வேலைக்கு தத்தமது பிள்ளைகளை அனுப்ப நம்மூர் அரசியல்வியாதிகளுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது..? ஒரு வட்டச் செயலாளரின் மகன் என்றாலே போதும்.. சைக்கிளில் சென்றுகூட மாமூலை வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு ஒயிட் காலர் ரவுடியைப் போல உலா வரலாம்.

எதுக்கு இப்படி துப்பாக்கியைத் தூக்கிக்கிட்டு இராணுவத்துல சேர்ந்து அல்லல்படணும்.. எவன், எவனுக்கோ சல்யூட் அடிச்சு ஓயணும்.. உள்ளூர்ல அத்தனை போலீஸ்காரனும்தான் எங்களைப் பார்த்து சல்யூட் அடிக்கிறாங்களே இது போதாதா என்பார்கள்.

ஏற்கெனவே தொட்டில் முதல் சுடுகாடுவரையிலும் ஊழலைப் பார்த்து, பார்த்து சலித்துப் போய்விட்டோம். என்ன..? ஒவ்வொரு முறையும் ஊழலின் தொகையும் கூடிக் கொண்டே போவதுதான் இந்தியாவின் நிலையைப் பார்த்து நமக்கு பகீரென்கிறது..! அரசியல்வியாதிகளுக்கோ அவங்களே அம்புட்டுக்கு கொள்ளையடிச்சாங்க. அவங்களைக் கேட்டீங்களா என்று நம்மையே திருப்பிக் கேட்கிறார்கள்..!

இராணுவ வேலைதான் வேண்டாம் என்றார்கள். ஆனால் அதிலும் முடிந்தால் காசை அள்ளலாம் என்று முடிவு செய்து இந்த உத்தம இந்திய அரசியல்வியாதிகளின் இந்த ஆதர்ஷ் அடுக்கு மாடி ஊழலால் ஏற்கெனவே கோவணத்தோடு நிற்கும் இந்தியாவின் மானத்தில் மேலும் ஒரு கிழிசல்.. இதனை கேவலமாக நினைத்துப் பார்ப்பது ஓட்டுப் போட்ட மக்களாகிய நாம்தான். அரசியல்வியாதிகள் இல்லை.

இது பற்றி இன்றைய 'தினமலர்' பத்திரிகையில் முழுப் பக்கத்திற்கு முழுமையான ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. மனதைக் கல்லாக்கிக் கொண்டு படித்துத் தொலைத்தேன். நீங்களும் படித்துப் பாருங்கள். சிற்சில மாற்றங்களை நானும் செய்துள்ளேன்.

கடந்த 1999-ல் காஷ்மீர் மாநிலம் கார்கிலில் நடந்த போர் ஞாபகம் இருக்கிறதா..? அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கே தெரியாமல் அப்போதைய பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி முஷாரப்பே செட்டப் செய்ததுதான் இந்த கார்கில் போர்.
 
இறுதியில் இந்தியாதான் வெற்றி பெற்றது. இருந்தாலும், அந்த சண்டையில் இந்தியத் தரப்பில் 527 ராணுவ வீரர்கள் பலியாயினர்; ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்தச் சண்டையில் பலியான இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்துக்காகவும், இதில் சாகசம் செய்த ராணுவ வீரர்களுக்காகவும் மும்பை, கொலாபா பகுதியில் இலவசமாக வீடுகளை கட்டித் தர மகாராஷ்டிரா மாநில அரசு திட்டமிட்டது.

கடந்த 2000-ம் ஆண்டில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியின் விலாஸ்ராவ்  தேஸ்முக். வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்தவர் அசோக் சவான்.

முதலில் ஆறு மாடிகளைக் கொண்ட கட்டடத்தை கட்டுவதாகத்தான் முதலில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பொறுப்பு ஆதர்ஷ் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

மும்பை கொலாபா பகுதி, கடற்கரையோர பகுதி என்பதால், அங்குள்ள பெரும்பாலான இடங்கள் கடற்படையின் கண்காணிப்பில் இருந்தன. கடற்படைக்கு தேவையான வெடிமருந்துகள் மற்றும் எரிபொருள்களை சேமித்து வைக்கும் டிப்போ அந்த பகுதியில்தான் இருந்தது.
 
இதனால் அந்தப் பகுதியில் எந்தப் பெரிய கட்டிடங்கள் கட்டினாலும் அதற்கு இந்தியக் கடலோரப் படையின் மேற்கு பிராந்தியத் தலைமையகத்தில் நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வாங்கியே தீர வேண்டும்.

இந்த விதிமுறை முன்பே இருந்தாலும் வழக்கம்போல நமது அரசியல்வியாதிகள் அரசியல் சட்டமே எங்க பாக்கெட்டில் என்பதைப் போல் மீறத்தான் செய்து வந்தார்கள். கசாப் பங்கு கொண்ட தாஜ் ஹோட்டல் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு மேற்குக் கரையோரம் தமது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியிருப்பதால் கடற்படை இப்போதுதான் இந்த விதிமுறையைப் பலப்படுத்த முனைந்தது. இதில்தான் இந்த மெகா ஊழலின் ஊற்றுக்கண் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆதர்ஷ் குடியிருபுக்காக அந்த பகுதியில் 3,824 ச.மீட்டர் பரப்பிலான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது வருவாய் துறை அமைச்சராக இருந்த சவானை, ஆதர்ஷ் கூட்டுறவு சங்க அதிகாரிகள் சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில்தான் அதுவரையில் கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்காக என்று மட்டுமே இருந்த விதிமுறைகள் நீக்கப்பட்டு அரசியல்வியாதிகளின் கை அரிப்புக்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்கப்பட்டன.

ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் சார்பில் அசோக் சவானுக்கு 2000-ம் ஆண்டு ஜூன் 2-ல் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அதில், "உங்களுடன் நடந்த சந்திப்பின் அடிப்படையில், கொலாபா பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கார்கில் போர் வீரர்களுக்காக அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட முடிவு செய்துள்ளோம். மேலும், அந்த வீட்டு வசதி திட்டத்தில் ராணுவ வீரர்களை தவிர, பொதுமக்களையும் சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொள்கிறோம்..' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தக் கடிதம்தான், தற்போது பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டது. இது குறித்த தகவல் மேற்கு பிராந்திய கடற்படைத் தளபதி அலுவலகத்தில் இருந்து ராணுவ மந்திரிக்கு அனுப்பப்பட்டது. இதன் பின்புதான் இந்த ஊழலே வெளிச்சத்துக்கு வந்தது.

இதற்குப் பின், அடுத்தடுத்து வெளியான தகவலில் ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில் ஆதி முதல் அந்தம்வரை நடந்த முறைகேடுகளும், ஊழல்களும் அம்பலத்துக்கு வந்துள்ளன..

ஆறு மாடிகளை கொண்டதாக துவக்கப்பட்ட திட்டம், பல நூறு கோடி வசூலுக்காக 31 மாடிகளை கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
 
இடையில் மகாராஷ்டிராவின் முதல்வர் பதவி அசோக் சவானின் கைக்கு வந்தவுடன், ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்துக்கு மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகளை அளிப்பதற்கு, அவசரம், அவசரமாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த உதவிக்கு பதில் உதவியாக ராணுவ வீரர்களுக்காக கட்டப்படுவதாகச் சொன்ன இந்தக் குடியிருப்பில் மாகாராஷ்டிரா மாநில முதல்வர் அசோக் சவானின் மாமியார் பகவதி சர்மா, அவரது உறவினர்கள் மதன்லால் சர்மா, சீமா சர்மா ஆகியோருக்கும் முறைகேடாக வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை  ரூ. 60 லட்சத்தில் இருந்து 80 லட்சம்வரை என்றும் தீர்மானித்துள்ளார்கள்.

இதில் இன்னும் ஒரு வேடிக்கை.. மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமலேயே, இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதாம்.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமலேயே மும்பை மாநகராட்சி, அரசுத் துறை நிறுவனங்கள் தத்தமது கடமையைச் செய்திருக்கின்ற என்றால்.. இதில் எத்தனை பெரிய, பெரிய கைகள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்? சாதாரணமான துரைசாமியோ, ராமசாமியோ வீட்டின் பாத்ரூமை மாற்றியமைத்தால்கூட எத்தனை முறை கார்ப்பரேஷன் அலுவலர்களை தொங்க வேண்டும் என்பது நமக்குத்தானே தெரியும்..?

இந்த முறைகேட்டில் அசோக் சவானுக்கு மட்டுமல்லாமல், முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஸ்முக், சுஷில் குமார் ஷிண்டே, நாராயண் ரானே ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த பிரபலங்களையும் வாயடைக்க வேண்டுமெனில் இவர்களுக்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்தால்தான் ஆச்சு என்பதால் இவர்களால் பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கும், இந்த குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த அரசியல் கூட்டணியில் சுலபமாக விதிமுறைகளை மீறவும், கடிதங்களைப் பெற்றதற்காகவும் இராணுவ உயரதிகாரிகளையும் இந்தக் கூட்டணி தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் என்.சி.விஜ், கவுல், தீபக்கபூர், மாதவேந்திரா சிங் ஆகியோரது பெயரும், இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளது,

மேஜர் ஜெனரல் டி.கே.கவுல், கடந்த 2005-ல் ஏரியா கமாண்டராக இருந்தபோதுதான், அடுக்கு மாடி குடியிருப்பு அமைந்துள்ள இடத்தால், ராணுவத்துக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டது. மேலே கூறப்பட்ட ராணுவ அதிகாரிகளுக்கும் இந்த குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தவிர, மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாநில உயரதிகாரிகளும், இந்த ஆதர்ஷ் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  இப்படி இந்தக் குடியிருப்பில் இருக்கும் 104 வீடுகள் அரசு உயர் அதிகாரிகள், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் ராணுவ தளபதிகள் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

மாநில சமூக நீதித் துறை செயலர் உத்தம் கோப்ராகடே மகள் தேவ்யானி, முன்னாள் மாநகராட்சி கமிஷனர் ஜெய்ராஜ் பதக்கின் மகன் கனிஷ்கா, முன்னாள் போக்குவரத்து துறை செயலர் சங்கீத்ராவின் மகன் ரஞ்சித், முன்னாள் தலைமைச் செயலர் சங்கரனின் மகன் சஞ்சய் ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

ராணுவ வீரர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்பில் இப்படி தங்களது அதிகார பலத்தை பயன்படுத்தி அரசியல்வாதிகள், அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் ஆகியோர், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வீடுகளை பெற்றுத் தந்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, இந்த அடுக்கு மாடி குடியிருப்பு, கடலோர ஒழுங்குமுறை பிராந்தியத்தின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி, ராணுவ ரகசியங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளதாக இப்போது ராணுவத்தினரே சொல்கிறார்கள்..

ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ள மும்பை கொலாபா பகுதியில், கடலோர காவல்படை பிராந்தியத்தின் விதிமுறைகள் அமலில் உள்ளன. இங்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமானால், இந்த விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுதான் கட்ட வேண்டும். ஆதர்ஷ் கூட்டுறவு சங்கம், இந்த விதிமுறைகளை எல்லாம் பொருட்படுத்தவில்லை.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால், இங்கு 30 மீட்டர் உயரத்துக்கு மேல், கட்டடம் கட்டக் கூடாது. ஆனால், ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பின் உயரம் 100 மீட்டர். இந்த சங்கத்தில் பல வி.ஐ.பி.க்கள் இடம் பெற்றுள்ளதால், அவர்கள் வசதிக்கேற்ப விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்னை கொழுந்துவிட்ட எரிந்த பின்புதான் தீயை அணைக்கத்தான் மத்திய அரசும், மாநில அரசும் முனைந்தது. உடனடியாக அவசரம், அவசரமாக தனியார் விமானத்தைப் பிடித்து டெல்லி வந்து சேர்ந்து அசோக்சவானை டெல்லியம்மா சந்திக்க மறுத்து கேட்டுக்கு வெளியவே நிறுத்தி வைத்துவிட்டார்.

வெளியில் நிற்கும் பத்திரிகையாளர்களின் கண்களில் படாமல் ஸ்கூல் ஹெட்மாஸ்டர் அறை வாசலில் நிற்கும் பதைபதைப்புடன் அசோக்சவான் நின்றதைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. அங்கிருந்து தற்போதைய பஞ்சாயத்து மாமேதை பிரணாப் முகர்ஜியின் ஆலமரத்தடி பஞ்சாயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அசோக் சவான்.

அங்கு வைத்து தங்களது கொள்ளையடித்த கதையை எல்லாம் சொல்லி முடித்த பின்பே தலைவியிடம் முகம் காட்டும் வாய்ப்பு சவானுக்குக் கிடைத்தது. உலகத்தின் ஒரே ஜனாதிபதியான ஒபாமா இரண்டு நாட்களில் வர வேண்டியிருப்பதால் அதுவரையில் தொடருங்கள் என்று மட்டும் தலைவி சொல்ல.. இரண்டு நாட்களாச்சும் கிடைச்சுச்சே என்ற நினைப்பில்தான் தப்பியோடி மும்பை வந்து சேர்ந்தார் சவான்.

இதற்கிடையில் முறைகேடுகள் குறித்த விசாரணை அறிக்கையை ராணுவ அமைச்சகத்திடம் கடற்படை கடந்த புதன்கிழமையன்று அளித்தது. விசாரணை அறிக்கையோடு, மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளையும் கடற்படை அளித்துள்ளது.

அப்போதுதான் தூங்கியெழுந்ததாக பாவ்லா காட்டி சுற்றுச் சூழல் அமைச்சகம் தங்களின் அனுமதி பெறாமல் கட்டடம் கட்டப்பட்டதாகச் சொல்லி ஆதர்ஷ் கூட்டுறவு சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

சவான் மும்பை திரும்பியவுடன் அவருடைய ஆளுமையின் கீழ் உள்ள மும்பை மின்சார வாரியம் குடியிருப்பவர்களின் விவரங்களை தெரிவிக்காவிட்டால், ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை துண்டிக்கப் போவதாக  கடும் எச்சரிக்கை விடுத்தது.

உலகத்தின் ஜனாதிபதி பாரக் ஒபாமா டெல்லிக்கு நம் அழைப்பின்பேரிலேயே வந்து நம் காசில் சுமார் 2700 கோடியை காலி செய்துவிட்டுப் போன சில மணி நேரத்திலேயே அசோக் சவானும் தனது பதவியை ராஜினமா செய்ய அடுத்தப் பலியாடாக மத்திய அமைச்சர் பிருத்விராஜ் சவுகான் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

காங்கிரஸ் மேலிடத்தின் இந்த அதிரடி நடவடிக்கையை ஒரு தரப்பினர் பாராட்டினாலும், மற்றொரு தரப்பினர் விமர்சிக்கின்றனர். அவர்கள் கூறுகையில், "எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பியவுடன்தான், காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது. பார்லிமென்டில் எதிர்க்கட்சிகளின் அமளியை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் தலைமை எடுத்துள்ளது' என்கின்றனர்.

நாட்டுக்காக தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கான நலத் திட்டத்தை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, மெகா ஊழல் புரிந்த அரசியல்வாதிகளின் உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வந்தது, ஆறுதல் அளிக்கிறது.  ஆனால், இந்த ஊழலுக்கு ராணுவ அதிகாரிகளே உடந்தையாக இருந்தது பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. தங்களுக்கு சலுகை என்றால், நாட்டின் பாதுகாப்பையே அலட்சியப்படுத்தும் போக்கு, அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது, எதிர்காலத்தில் சமுதாயத்துக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.

தற்போது இந்த ஊழலில் அசோக் சவானின் பதவி மட்டுமே பறிக்கப்பட்டுள்ளது. தங்களது உறவினர்களுக்கு வீடுகளை பெற்றுத் தந்த, மேலும் பல அரசியல்வாதிகள், இன்னும் சுழல் விளக்கு பொருத்தப்பட்ட கார்களில் சர்வ அதிகாரத்துடன் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். இவர்களின் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியவில்லை.

அசோக் சவானுடன் இந்த விவகாரத்தை காங்கிரஸ் கை கழுவி விடுமா என்பதும் தெரியவில்லை. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட மகாராஷ்டிர மாநில அதிகாரிகளுக்கு எதிராக, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், எத்தனை உயர்ந்த பதவியில் இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான், மக்களின் எதிர்பார்ப்பு.

இவ்வளவுக்கும் பின்பும் தற்போதுதான் ராணுவ அமைச்சர் அந்தோணி, ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தில் நடந்த விதிமுறை மீறல், ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார்.

குடியிருப்பு யார் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆவணங்களை விரைவில் அளிக்குமாறு ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்துக்கு சிபிஐ உத்தரவிட்டுள்ளது.

மேலும் விதிகளை மீறி கடற்கரை பகுதியில் இந்தக் குடியிருப்புகள் கட்டுப்பட்டுள்ளது குறித்து மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்ப மகாராஷ்டிர கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதில் இன்னுமொரு கொடுமையைக் கேளுங்கள் மக்களே..!

ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க குடியிருப்பு ஒதுக்கீடு தொடர்பாக கேட்கப்பட்ட தகவல்களை அளிக்க மகாராஷ்டிர மாநில தகவல் ஆணையர் ராமநாத் திவாரி முட்டுக்கட்டையாக இருந்ததாக புதிய புகார் எழுந்துள்ளது. பூனாவைச் சேர்ந்த விகார் துருவே என்பவர்தான் இந்தப் புகாரைத் தெரிவித்துள்ளார்.

“குடியிருப்பு ஒதுக்கீடு தொடர்பான விவரங்களை கேட்டு மாநில தகவல் ஆணையத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பேயே நான் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் தகவல் ஆணையரின் மகனுக்கு இதில் குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளதால் இது தொடர்பான விவரங்களைக் கொடுப்பதற்கு அவர் முட்டுக்கட்டையாக இருந்தார்” என்று விகார் புகார் கூறியுள்ளார். வெவ்வேறு காரணங்களைக் கூறி இரண்டு ஆண்டுகளாக தாம் அலைக்கழிக்கப்பட்டதாகவும் விகார் புகார் கூறியுள்ளார்.

ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் வழக்கில் முன்னாள் மகாராஷ்டிரா முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான சுசில் குமார் ஷிண்டேயும் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து அவர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்.

இது தொடர்பாக மும்பை வக்கீல் ஒய்.பி.சிங், சமூக சேவகர்கள் சிம்பரீத் சிங், சர்தோஷ் தவுங்கர் ஆகியோர் மும்பை ஊழல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்து உள்ளனர். 71 பக்கங்களில் புகார் விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளனவாம்.

அதில், "ஆதர்ஷ் வீடு கட்ட நில ஒதுக்கீடு மற்றும் அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தில் சுஷில் குமார் ஷிண்டே மராட்டிய முதல்வராக இருந்தார். 2003 ஜனவரி முதல் 2004 அக்டோபர்வரை அவர்தான் முதல்வர். அப்போது நடந்த அனைத்தும் விதிமுறைகளை மீறியே வழங்கப்பட்டு உள்ளது.

ஆதர்ஷ் குடியிருப்பில் 2004-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ந்தேதி 51 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது மராட்டிய சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்தன. தேர்தல் விதிமுறைகளை மீறி வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வீடுக்கான நிலம் மார்க்கெட் மதிப்பைவிட 20 சதவீதம் குறைவான விலையில் கொடுக்கப்பட்டது. இவற்றுக்கு சுஷில்குமார் ஷிண்டேதான் காரணம்.

வீடு கட்டும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமலேயே கட்டிடம் கட்ட உரிமம் வழங்கப்பட்டது. கடற்கரை மண்டல விதிகளின்படியும் உரிய அனுமதி பெறவில்லை.

வருவாய்த்துறை மற்றும் நிதித்துறைகளிடம் முறைப்படி அனுமதி பெறாமலேயே முதல்வராக இருந்த சுஷில் குமார் ஷிண்டே நேரடியாக தலையிட்டு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அனுமதி வழங்கியுள்ளார். ஆதர்ஷ் வீடு விவகாரத்தில் சுஷில்குமார் ஷிண்டே தனது பதவியை தவறாக பயன்படுத்தியதுடன் இதில் அதிக அக்கறை காட்டியுள்ளார்.

அவர் அரசு விதிமுறைகளை மீறியதுடன் இந்திய குற்றவியல் சட்டப்படி ஊழலும் செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடு ஒதுக்கீட்டில் பல அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. சுஷில்குமார் ஷிண்டே முதல்வராக இருந்தபோது அவரது முதன்மை செயலாளராக இருந்தவர் சுபாஷ் வல்லா. இவரும் ஆதர்ஷ் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளார். சுபாஷ் வல்லாவின் தாயாருக்கும் இதில் வீடு ஒடுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய் செயலாளர் ஜோஷி, காங்கிரஸ் தலைவர் கித்வானி, கட்டுமான தொழில் நிறுவன அதிபர் ஆர்.சி.தாகூர் ஆகியோருக்கும் ஊழலில் பங்கு இருக்கிறது. எனவே அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..." என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் புகார்களுக்கான ஆதாரங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

சுஷில்குமார் ஷிண்டே மீது புகார் கூறப்பட்டு இருப்பதால் அவருடைய மத்திய அமைச்சர் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விடுங்கப்பா.. காங்கிரஸ்ல அமைச்சர் பதவிக்கா ஆளுக கிடைக்க மாட்டாங்க? அடுத்தது எவனோ ஒரு திருடன்..!

ஆதர்ஷ் குடியிருப்பு ஒரு பார்வை :

* அடுக்கு மாடி குடியிருப்பு அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு 3,824 ச.மீ.,
* மொத்தம் உள்ள மாடிகளின் எண்ணிக்கை: 31
* குடியிருப்புகளின் பரப்பளவு: 625 ச. அடி முதல் 1,000 ச.அடி. வரை
* மொத்த வீடுகள்: 104
* ஒவ்வொரு மாடியிலும் நான்கு வீடுகள் உள்ளன.

செலவு எவ்வளவு?

* கட்டுமானச் செலவு: 30 கோடி ரூபாய்
* நிலத்துக்காக, மாநில அரசுக்கு செலுத்தப்பட்டது: 16 கோடி ரூபாய்
* மேம்பாட்டு பணிகளுக்காக, மும்பை மேம்பாட்டு கழகத்துக்கு அளிக்கப்பட்டது: 8 கோடி ரூபாய்
* ஒரு வீட்டின் விலை : 60 லட்சம் முதல் 80 லட்சம் ரூபாய்வரை
* வீட்டின் சந்தை மதிப்பு : 6 கோடி முதல் 8.5 கோடி ரூபாய் வரை.

எந்தெந்த வகையில் விதிமுறை மீறப்பட்டது?

* கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்காகத் தான் இந்த குடியிருப்பு கட்டப்பட்டது. ஆனால், தற்போது இதில் பிரபல அரசியல்வாதிகள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
* சுற்றுச் சூழல் துறை அமைச்சகத்தின் அனுமதி இல்லாமலேயே, இந்த குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.
* கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் விதிமுறைகளை மீறி, இந்த குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. முதலாவதாக, கடலோர காவல் படை மையங்கள் உள்ள கொலாபா பகுதியில் 30 மீட்டர் உயரத்துக்கு மேல், கட்டடம் கட்டக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், ஆதர்ஷ் குடியிருப்பின் உயரம் 100 மீட்டர்.
* ஆதர்ஷ் குடியிருப்பில் வர்த்தக மையங்கள் செயல்படுவதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
* கடலோர காவல்படைக்கு தேவையான வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை சப்ளை செய்யும் இரண்டு டிப்போக்கள் இங்கு உள்ளன. இந்த டிப்போக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் ஆதர்ஷ் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.

ஊழலில் சிக்கிய அரசியல் புள்ளிகள்

அசோக் சவான்: கடந்த 2000ல் இவர், மகாராஷ்டிர மாநில வருவாய் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் இவருக்கு எழுதிய கடிதம்தான், பிரச்னைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது.  ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்காக கட்டப்பட்ட குடியிருப்பில், விதிமுறைகளை மீறி, சவானின் மாமியார் பகவதி சர்மா, உறவினர்கள் மதன் லால் சர்மா, சீமா சர்மா ஆகியோருக்கு வீடு ஒதுக்கி அனுமதி அளிக்கப்பட்டது.

விலாஸ்ராவ் தேஸ்முக்: இவர் முதல்வராக இருக்கும்போதுதான், ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தனக்கு வேண்டிய மூன்று பேருக்கு வீடு ஒதுக்கும்படி இவர் பரிந்துரை செய்துள்ளார்.

சுஷில் குமார் ஷிண்டே: கடந்த 2004-ல் இவர் முதல்வராக இருந்தபோது தான், சம்பந்தபட்ட நிலத்தில் குடியிருப்பு கட்டுவதற்கு இறுதி அனுமதி அளிக்கப்பட்டது. இவர், தனது தந்தையின் நெருங்கிய நண்பருக்கு வீடு ஒதுக்கும்படி பரிந்துரை செய்துள்ளார்.

நாராயண் ரானே: கடந்த 2007-ல் இவர் வருவாய் துறை அமைச்சராக இருந்தபோதுதான், ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில், ராணுவ வீரர்கள் அல்லாதோருக்கு வீடு ஒதுக்க இறுதி அனுமதி அளிக்கப்பட்டது. இவரின் உறவினர் ஒருவருக்கு ஆதர்ஷ் குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தில் யார் யாருக்கு தொடர்பு?

ஜெனரல் (ஓய்வு) தீபக் கபூர் : கடந்த 2008-ல் ராணுவ தளபதியாக இருந்தார். ஆதர்ஷ் குடியிருப்புக்கு ராணுவ தரப்பில் இறுதி அனுமதி அளிக்கப்பட்டது, இவரது பதவிக் காலத்தில். இவருக்கும் ஒரு வீடு வழங்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் டி.கே.கவுல்: கடந்த 2005-ல் சப் ஏரியா கமாண்டராக இருந்தார். அப்போது, கொலாபாவில் உள்ள இடம் ராணுவ எல்லைக்கு வெளியில் இருப்பதாக அறிவிக்கப்பட்டு, ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்துக்கு குடியிருப்பு கட்ட ஒப்புதல் தரப்பட்டது.

ஜெனரல் (ஓய்வு) என்.சி.விஜ் : கடந்த 2004-ல் ராணுவ தளபதியாக இருந்தார். ராணுவ மையங்கள் செயல்படும் இடங்களுக்கு ஆதர்ஷ் குடியிருப்பால் எந்த ஆபத்தும் வராது என, அறிவிக்கப்பட்டது. குடியிருப்பில் இவருக்கும் ஒரு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

அட்மிரல் (ஓய்வு) மாதவேந்திரா சிங்: கடந்த 1998-2001 வரை, கடற்படையின் மேற்கு பிராந்திய பிரிவுக்கு தலைவராக இருந்தார். இவருக்கும் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

41 comments:

  1. sir,

    eppadi irukeeenga

    encounter pathi neenga pota pathivuku nan oru comments kodukala

    anal intha pathivukku kandippa commetns potudanum.

    intha mathiri thappu seyiravangala enna mathiri thandikalam

    sattam thandikkumnu ninaikireengala illa encounter than sariyana theerava ?

    neengaley solunga

    Ranjani

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. sir,

    ithula yarannu encounterla poturahtu.

    Ellam GENERAL AND MAJOR GNERAL nu vera postingla irukanga !!!!!!!!!!!!!!!!!

    enna solrathunney theriyala

    ranjani

    ReplyDelete
  4. புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
    போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் (புதிய)
    பொதுஉடைமைக்கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
    புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம் (புதிய)
    இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
    இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் (புதிய)
    உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
    ஒருபொருள்தனி எனும் மனிதரைச் சிரிப்போம் (புதிய)
    இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
    ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம் (புதிய)

    ReplyDelete
  5. எங்க ஆபீஸ்-ல ஒருத்தர் இருக்கார். இது மாதிரி அநியாயமா ஏதாவது நடந்தா, "Give me the buttons"-ன்னு கேட்பார். எல்லாரையும் போட்டு தள்ள.

    ReplyDelete
  6. Sir, Still you will say that these people needs to bring into the court? You will say like that.. But for me as a public indian, I need to kill these bastards...

    ReplyDelete
  7. அண்ணே, வர வர நீங்க ரொம்ப கவலை பட ஆரம்பிச்சிடீங்க, தொடர்ந்து உங்களை பாதித்த இல்ல மனதை வருத்திய பதிவா வருது. யார் என்ன சொன்னாலும் இவர்களை என்றைக்குமே திருத்த முடியாது. நீங்களே நாட்டை ஆண்டாள் ஒழிய இதை திருத்த முடியாது. நீங்க இந்த பதிவ எழுதி முடிக்கறதுக்குள்ளே அடுத்த ஊழல் அம்பலம் ஆயிருக்கும். கொஞ்ச காலம் இதை விட்டுட்டு சினிமா பக்கமே வந்திருங்க.

    ReplyDelete
  8. ஊழல் எனப்படுவது யாதனில் அதிகார
    துஷ்பிரயோகத்தை அதிகாரமாக செய்தல்.

    குரல் எண் : 1331
    அதிகாரம்(?) : ஊழல்

    ReplyDelete
  9. [[[julie said...

    sir, eppadi irukeeenga?

    encounter pathi neenga pota pathivuku nan oru comments kodukala
    anal intha pathivukku kandippa commetns potudanum. intha mathiri thappu seyiravangala enna mathiri thandikalam. sattam thandikkumnu ninaikireengala illa encounter than sariyana theerava? neengaley solunga
    Ranjani]]]

    சட்டப்படிதான் தண்டிக்கணும்.. அத்தோட இனிமேல் அரசியலில் ஈடுபடவே கூடாது என்று தடையும் விதிக்கணும்..!

    ReplyDelete
  10. [[[julie said...
    sir, ithula yarannu encounterla poturahtu. llam GENERAL AND MAJOR GNERALnu vera postingla irukanga !!!!!!!!!!!!!!!!!
    enna solrathunney theriyala
    ranjani]]]

    கோர்ட்டில்தான் நிறுத்தணும்.. என்கவுண்ட்டர் எதற்குமே எனக்குப் பிடிக்காதது..!

    ReplyDelete
  11. [[[Margie said...

    புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
    போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் (புதிய)
    பொதுஉடைமைக்கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
    புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம் (புதிய)
    இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
    இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் (புதிய)
    உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
    ஒருபொருள்தனி எனும் மனிதரைச் சிரிப்போம் (புதிய)
    இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
    ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம் (புதிய)]]]

    இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே பாடிக்கிட்டு இருக்கிறதுன்னு தெரியலையே..?

    ReplyDelete
  12. [[[Margie said...
    எங்க ஆபீஸ்-ல ஒருத்தர் இருக்கார். இது மாதிரி அநியாயமா ஏதாவது நடந்தா, "Give me the buttons"-ன்னு கேட்பார். எல்லாரையும் போட்டு தள்ள.]]]

    அவர்கிட்டேயிருந்து நீங்க கொஞ்சம் பாதுகாப்பா விலகியே இருங்க.. கோபத்துல உங்களையே போட்டிரப் போறாரு..!

    ReplyDelete
  13. [[[ராமுடு said...
    Sir, Still you will say that these people needs to bring into the court? You will say like that.. But for me as a public indian, I need to kill these bastards...]]]

    உடனேயே கொல்லக் கூடாது ஸார்.. அவங்களுக்கு சிறைத்தண்டனை கொடுத்து உள்ள தள்ளணும். அப்பத்தான் தினம்தோறும் அவங்களுக்கு நரகம் மாதிரி தெரியும். அடுத்த தலைமுறை அரசியல்வியாதிகளும் கொஞ்சம் யோசிப்பாங்க..!

    ReplyDelete
  14. [[[Unmaivirumpi said...

    அண்ணே, வர வர நீங்க ரொம்ப கவலைபட ஆரம்பிச்சிடீங்க, தொடர்ந்து உங்களை பாதித்த இல்ல மனதை வருத்திய பதிவா வருது. யார் என்ன சொன்னாலும் இவர்களை என்றைக்குமே திருத்த முடியாது. நீங்களே நாட்டை ஆண்டாள் ஒழிய இதை திருத்த முடியாது. நீங்க இந்த பதிவ எழுதி முடிக்கறதுக்குள்ளே அடுத்த ஊழல் அம்பலம் ஆயிருக்கும். கொஞ்ச காலம் இதை விட்டுட்டு சினிமா பக்கமே வந்திருங்க.]]]

    முடியலையே.. முடியலையே.. என்னதான் செய்யறது.. நான் ஒரு பொறுப்பான இந்தியக் குடிமகனா இருக்கிறதுதான் பிரச்சினையா இருக்கு..!

    ReplyDelete
  15. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    ஊழல் எனப்படுவது யாதனில் அதிகார துஷ்பிரயோகத்தை அதிகாரமாக செய்தல்.

    குரல் எண் : 1331
    அதிகாரம்(?) : ஊழல்]]]

    இதுதான் நமது நாட்டு அரசியல்வியாதிகளின் தற்போதைய தாரக மந்திரம்..!

    ReplyDelete
  16. அண்ணே, தற்போதைய முதல்வரும் குற்றத்தில் அடிபடுகிறார். அவரது தாயாருக்கு இங்கு வீடு ஒதுக்கப் பட்டுள்ளதாக கேள்வி. இரண்டு நாட்களுக்கு முன்பு படித்தேன்

    ReplyDelete
  17. "கோர்ட்டில்தான் நிறுத்தணும்."

    அருமை சார்.. நியாயமான விசாரணை நடந்து , குற்றவாளிகளுக்கு இன்னும் ஒரு மாதத்தில் தண்டனை கிடைத்து வ்டும் என உங்களைப்போல நானும் நம்புகிறேன்..

    நம்மை போல அனைந்து மக்களும் இந்த யதார்த்ததை உணர மறுப்பது ஏன் என தெரியவில்லை.. நாமும் எவ்வளவோ சொல்லி அவர்களை திருத்த பார்க்கிறோம்..

    வாழ்க ஜன நாயகம்.
    வாழ்க வளமுடன் .

    ReplyDelete
  18. அய்யா இந்த குடியிருப்பில் எந்த ராணுவ வீரனுக்காவது வீடு ஒதுக்கி இருக்காங்களா? ராணுவ அதிகாரிகள் , எல்லா சலுகைகளையும் அனுபவித்தும் , ராணுவ வீரர்களை மொட்டை அடித்தும் , ராணுவ வீரர்களின் ஒவ்வொரு பதவி உயர்வுக்கும் அதிகாரிகளின் கைகளை நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் , இப்படி இருப்பதால் அதிகாரிகள் செய்யும் அட்டூழியங்கள் அளவே இல்லாதது. ராணுவ வீரர்கள் எப்படா நாம் ஒய்வு பெறுவோம் என்று கணக்கு வைத்து கொண்டே வாழ்க்கை ஓட்டுவார்கள். ஆனால் ராணுவ அதிகாரிகளோ எப்படி நம் சர்வீஸ் காலத்தை அதிக படுத்தலாம் என்று கணக்கு போடுவார்கள். அவ்வளவு அதிகாரம் , சலுகைகள் ....

    ReplyDelete
  19. ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா, இப்பவே கண்ணைகட்டுதே!...

    இவங்களையெல்லாம் என்கவுண்டர்ல போடமுடியாதா?

    ReplyDelete
  20. எரிச்சலின் உச்ச கட்டத்திற்கு அழைத்து செல்கிறார்கள் ..
    ராணுவத்தின் உயர் அதிகாரி கூட நம்பமாக இல்லை என்றால் என்ன தான் செய்வது !!
    நீதி துறை ,கல்வி துறை , மருத்துவம் ,ராணுவம் , எல்லா துறையிலும் ஊழல் லஞ்சம் !!
    இந்த ஊழலையும் லஞ்சத்தையும் நாம் எல்லாம் அமைதியாக இருந்து வளர விட்டு விட்டு இப்போது கையை பிசைந்து நிற்கிறோம் .
    அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பது இருக்கட்டும் வருங்காலத்தில் இது போல் நேராமல் இருக்க திட்ட மிட வேண்டும் .தனி மனித மேன்மையை ஒவ்வொரு பள்ளி மாணவனுக்கும் கொண்டு செல்ல வேண்டும் .இது ஊர் கூடி தேர் இழுக்கும் செயல் ஆகும் எல்லாரும் வடத்தை பிடித்து கொண்டு அவன் இழுப்பான் இவன் இழுப்பான் என்று தேமே என்று நின்று கொண்டிருந்தாள் அப்படியே மக்கி போக வேண்டியது தான் .மாட்ட்ரங்களை நம்மிலிருந்து தொடங்குவோம் .
    இந்த மாறி எத்தனை அவலங்களை நம் வாழ் நாளில் கண்டு ,மறந்து செல்ல போகிறோமோ ?

    ReplyDelete
  21. சாந்தப்பன் சார் . இவங்களை எல்லாம் என்கவுண்டர்ல போட்டா , அறிவுலகம் பொங்கி எழுந்துவிடும் . வேணும்னா அப்பாவிகள் , மலைவாழ் மக்கள் , போராளிகள் , நல்லவர்கள் -இவர்களை கொல்ல சொல்லுங்க . யாரும் எதுவும் கேட்க மாட்டங்க . ஜெய்ஹிந்த்

    ReplyDelete
  22. [[[LK said...
    அண்ணே, தற்போதைய முதல்வரும் குற்றத்தில் அடிபடுகிறார். அவரது தாயாருக்கு இங்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக கேள்வி. இரண்டு நாட்களுக்கு முன்பு படித்தேன்.]]]

    இது வேறய்யா.. இதுவும் உண்மையானால் இவரையும் தூக்கிட்டு வேற யாரைப் போடுவாங்களாம்..!? அரசியல்வியாதிகள்ன்னு திட்டுறது கரீக்ட்டாத்தான் இருக்கு..!

    ReplyDelete
  23. [[[பார்வையாளன் said...

    "கோர்ட்டில்தான் நிறுத்தணும்."

    அருமை சார்.. நியாயமான விசாரணை நடந்து, குற்றவாளிகளுக்கு இன்னும் ஒரு மாதத்தில் தண்டனை கிடைத்து வ்டும் என உங்களைப் போல நானும் நம்புகிறேன். நம்மை போல அனைந்து மக்களும் இந்த யதார்த்ததை உணர மறுப்பது ஏன் என தெரியவில்லை.. நாமும் எவ்வளவோ சொல்லி அவர்களை திருத்த பார்க்கிறோம்..

    வாழ்க ஜனநாயகம்.
    வாழ்க வளமுடன்.]]]

    பார்வையாளன் ஸார்..

    இந்திய ஜனநாயகம்ன்னா இப்படி லேட்டாகத்தான் எல்லாமே நடக்கும். வேற வழியில்லை. நாம் பொறுமையா இருக்கப் பழகிட்டோம்..!

    ReplyDelete
  24. [[[eeasy baby said...

    அய்யா இந்த குடியிருப்பில் எந்த ராணுவ வீரனுக்காவது வீடு ஒதுக்கி இருக்காங்களா? ராணுவ அதிகாரிகள், எல்லா சலுகைகளையும் அனுபவித்தும், ராணுவ வீரர்களை மொட்டை அடித்தும், ராணுவ வீரர்களின் ஒவ்வொரு பதவி உயர்வுக்கும் அதிகாரிகளின் கைகளை நம்பி இருக்க வேண்டிய கட்டாயம், இப்படி இருப்பதால் அதிகாரிகள் செய்யும் அட்டூழியங்கள் அளவே இல்லாதது. ராணுவ வீரர்கள் எப்படா நாம் ஒய்வு பெறுவோம் என்று கணக்கு வைத்து கொண்டே வாழ்க்கை ஓட்டுவார்கள். ஆனால் ராணுவ அதிகாரிகளோ எப்படி நம் சர்வீஸ் காலத்தை அதிகபடுத்தலாம் என்று கணக்கு போடுவார்கள். அவ்வளவு அதிகாரம், சலுகைகள்.]]]

    நானும் கேள்விப்பட்டேன். சொந்த ஊருக்கு டிரான்ஸ்பர் வேண்டும் என்றால் லட்சணக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என்கிறார்கள்..! லஞ்சம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றாகிவிட்டது..!

    ReplyDelete
  25. [[[Santhappan சாந்தப்பன் said...
    ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா, இப்பவே கண்ணைகட்டுதே! இவங்களையெல்லாம் என்கவுண்டர்ல போட முடியாதா?]]]

    முடியாது.. அதனாலதான் இவ்ளோவ் தைரியமா கொள்ளையடிக்கிறாங்க..!

    ReplyDelete
  26. [[[dr suneel krishnan said...

    எரிச்சலின் உச்சக்கட்டத்திற்கு அழைத்து செல்கிறார்கள்.

    ராணுவத்தின் உயர் அதிகாரிகூட நம்பமாக இல்லை என்றால் என்னதான் செய்வது?

    நீதி துறை, கல்வி துறை, மருத்துவம், ராணுவம், எல்லா துறையிலும் ஊழல் லஞ்சம் !!

    இந்த ஊழலையும் லஞ்சத்தையும் நாம் எல்லாம் அமைதியாக இருந்து வளர விட்டு விட்டு இப்போது கையை பிசைந்து நிற்கிறோம்.

    அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பது இருக்கட்டும். வருங்காலத்தில் இது போல் நேராமல் இருக்க திட்டமிட வேண்டும். தனி மனித மேன்மையை ஒவ்வொரு பள்ளி மாணவனுக்கும் கொண்டு செல்ல வேண்டும். இது ஊர் கூடி தேர் இழுக்கும் செயல் ஆகும். எல்லாரும் வடத்தை பிடித்து கொண்டு அவன் இழுப்பான், இவன் இழுப்பான் என்று தேமே என்று நின்று கொண்டிருந்தாள் அப்படியே மக்கி போக வேண்டியதுதான். மாட்ட்ரங்களை நம்மிலிருந்து தொடங்குவோம்.

    இந்த மாறி எத்தனை அவலங்களை நம் வாழ் நாளில் கண்டு, மறந்து செல்ல போகிறோமோ ?]]]

    இனி வருங்கால நமது பிள்ளைகள் எப்படி இருக்கப் போகிறார்கள் என்பதில்தான் லஞ்சப் பேய் ஒழியுமா? கூடுமா என்றெல்லாம் பார்க்க வேண்டும்..!

    தங்களுடைய முதல் வருகைக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  27. [[[பார்வையாளன் said...
    சாந்தப்பன் சார். இவங்களை எல்லாம் என்கவுண்டர்ல போட்டா, அறிவுலகம் பொங்கி எழுந்துவிடும். வேணும்னா அப்பாவிகள், மலைவாழ் மக்கள், போராளிகள், நல்லவர்கள் - இவர்களை கொல்ல சொல்லுங்க. யாரும் எதுவும் கேட்க மாட்டங்க. ஜெய்ஹிந்த்]]]

    உண்மைதான்.. பதவியும், செல்வாக்கும் உள்ளவர்களி்ன் சொல்வாக்குதான் இங்கே வேதவாக்காக இருக்கிறது..!

    ஏழைச் சொல் அம்பலத்தில் ஏறாது என்பதே உண்மை..!

    ReplyDelete
  28. இதை சீக்கிரம் இடிச்சி தள்ளனும்,ஆனா அதுக்கு டெமாலிஷன் காண்ட்ராக்ட் போட்டு கோடி கோடியா சுருட்டுவனுங்க,ஹிந்தி கொள்ளைக்காரனுங்க

    ReplyDelete
  29. ஊழல் மலிந்த நாடு இது.இது மிகவும் குறைந்த அளவுள்ள ஊழல்.எதோ பெரிசை மறைக்க இந்த சிறிசை ஊதி விட்டதாகவே தெரியுது.உங்க பிபி ஏறிப்போனது புரியுது,பார்த்து மறுபடியும் வருஷதொடக்கத்துல ஹாஸ்பிடல் போய்டாதீங்க.

    ReplyDelete
  30. [[[கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
    இதை சீக்கிரம் இடிச்சி தள்ளனும், ஆனா அதுக்கு டெமாலிஷன் காண்ட்ராக்ட் போட்டு கோடி கோடியா சுருட்டுவனுங்க, ஹிந்தி கொள்ளைக்காரனுங்க.]]]

    எல்லாத்துலேயும் கொள்ளைதான் ஸார்.. பணம் சம்பாதிக்கவே அரசியலுக்கு வந்தோம்னு சொல்றவங்களை நாம என்னதான் செய்யறது..?

    துரதிருஷ்டவசமா ஆட்சியும், அதிகாரமும் மாறி, மாறி கொள்ளைக்காரங்க கைக்கே போய்ச் சேருது..! அதுதான் கொடுமை..!

    ReplyDelete
  31. "ஒவ்வொரு முறையும் ஊழலின் தொகையும் கூடிக் கொண்டே போவதுதான் இந்தியாவின் நிலையைப் பார்த்து நமக்கு பகீரென்கிறது..!"

    என்ன பண்றது விலைவாசி அவுங்களுக்கும் ஏறுதுல!! மானம் கெட்டவங்கே!! ஒரு முக்கியமான கேள்வி சார், ஒரு மனுசன் நல்ல சுகபோகமா சாகுற வரயில் வாழ ஒரு 3 கோடி போதாதா? 100 கோடி 1000 கோடில்லாம் வச்சு என்னங்க பண்றாங்க? அவன் காலத்துக்குள்ள அவனால் அனுபவிக்க முடியுமா?

    ReplyDelete
  32. விரிவான தகவல்கள்.வாசகர் பரிந்துரைக்கு சூடா வரவேண்டியது.ஆனா வடை சூடு ஆறிப்போச்சு.

    சூடா வேணுமுன்னா இப்பத்தான் போட்ட ஸ்பெக்ட்ரம் தயார்!

    ReplyDelete
  33. [[[Rafeek said...
    "ஒவ்வொரு முறையும் ஊழலின் தொகையும் கூடிக் கொண்டே போவதுதான் இந்தியாவின் நிலையைப் பார்த்து நமக்கு பகீரென்கிறது..!"

    என்ன பண்றது விலைவாசி அவுங்களுக்கும் ஏறுதுல!! மானம் கெட்டவங்கே!! ஒரு முக்கியமான கேள்வி சார், ஒரு மனுசன் நல்ல சுகபோகமா சாகுற வரயில் வாழ ஒரு 3 கோடி போதாதா? 100 கோடி 1000 கோடில்லாம் வச்சு என்னங்க பண்றாங்க? அவன் காலத்துக்குள்ள அவனால் அனுபவிக்க முடியுமா?]]]

    5 தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைக்கணும்னு நினைக்கிறாங்க போல..!

    ReplyDelete
  34. [[[ராஜ நடராஜன் said...
    விரிவான தகவல்கள். வாசகர் பரிந்துரைக்கு சூடா வர வேண்டியது. ஆனா வடை சூடு ஆறிப் போச்சு. சூடா வேணுமுன்னா இப்பத்தான் போட்ட ஸ்பெக்ட்ரம் தயார்!]]]

    சூடா வந்தும் என்ன புண்ணியம்..? லெட்டர்ஸ் வரலியே ஸார்..!

    ReplyDelete
  35. [[[நிலாரசிகன் said...
    :)]]]

    ரொம்ப நாள் கழிச்சு வந்த நிலாரசிகனுக்கு எனது நன்றிகள்..!

    ReplyDelete
  36. [[[|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
    ஊழல் மலிந்த நாடு இது. இது மிகவும் குறைந்த அளவுள்ள ஊழல். எதோ பெரிசை மறைக்க இந்த சிறிசை ஊதி விட்டதாகவே தெரியுது. உங்க பிபி ஏறிப் போனது புரியுது, பார்த்து மறுபடியும் வருஷ தொடக்கத்துல ஹாஸ்பிடல் போய்டாதீங்க.]]]

    ஆஹா.. என்னவொரு அக்கறை.. மிக்க நன்றிகள் கீதப்பிரியன் ஸார்..!

    காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடையில் ஒரு கண்ணாமூச்சிப் போரே நடக்குது. அதான் மேட்டரு..!

    ReplyDelete
  37. உண்மை தமிழன், என்ன மகாராஷ்டிரா பக்கம் போயிட்டீங்க நீங்களும் நானும் இருக்கும் சென்னையில் எவ்வளவு வீடு சரியான விதி முறைக்கு ஏற்ப கட்டப்பட்டிருக்கு என்று தெரியுமா? ஒரு தெருவை எடுத்தா 10% விழுக்காடு தேறுமா என்று சந்தேகம் தான்.ஏதோ பெரிதாக இயற்கை பேரிடர் வரும் போது இதன் விளைவுகள் வெளிச்சத்துக்கு வரும்.

    ReplyDelete
  38. [[[வடுவூர் குமார் said...
    உண்மை தமிழன், என்ன மகாராஷ்டிரா பக்கம் போயிட்டீங்க? நீங்களும் நானும் இருக்கும் சென்னையில் எவ்வளவு வீடு சரியான விதி முறைக்கு ஏற்ப கட்டப்பட்டிருக்கு என்று தெரியுமா? ஒரு தெருவை எடுத்தா 10% விழுக்காடு தேறுமா என்று சந்தேகம்தான். ஏதோ பெரிதாக இயற்கை பேரிடர் வரும் போது இதன் விளைவுகள் வெளிச்சத்துக்கு வரும்.]]]

    தெரியும் ஸார்.. இங்கே பணத்தை வாங்கிக் கொண்டு எத்தனையோ விதிமீறலுக்கு அதிகாரிகள் துணை போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் சொன்னதுபோல இயற்கை பொங்கியெழும்போதுதான் தெரியும் சேதி..!

    ReplyDelete
  39. But the amount in this scam will not exceed Rs.30 crores(as the total cost of the house is that). In what way can we compare this scam to the 2G? How this became a big scam as our thamizhan has sone a megaaaaaaaaaaaaaaaaaaa scam??

    ReplyDelete
  40. [[[Sairam said...
    But the amount in this scam will not exceed Rs.30 crores(as the total cost of the house is that). In what way can we compare this scam to the 2G? How this became a big scam as our thamizhan has sone a megaaaaaaaaaaaaaaaaaaa scam??]]]

    ஊழலும், அதிகாரத் துஷ்பிரயோகமும் ஒருசேர நடந்தமைக்கு இந்தக் கொள்ளையும் ஒரு உதாரணம்தான்.. மெகா ஊழல் என்பதெல்லாம் எத்தனை மாடிகள் என்பதையெல்லாம் சிம்பாலிக்காக காட்டத்தான்..!

    ReplyDelete
  41. இப்படி ,அடுக்குமாடி கட்டி கட்டி ,
    ஊழல் பண்றாங்களே ,நீயே சொல்லுடி செல்லம்...
    இது அடுக்குமாடி?

    ReplyDelete