Pages

Thursday, November 04, 2010

தீபாவளியன்று எண்ணெய்க் குளியலுக்கு உகந்த நேரம் எது..?

04-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளி முக்கிய இடம் பெற்றுள்ளது. வீடு முழுவதும் தீப ஒளி ஏற்றி, பட்டாசுடனும், தித்திக்கும் இனிப்பு வகைகளுடனும் உற்றார், உறவினருடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.


தீபாவளிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இது இந்துக்கள் பண்டிகை என்றாலும், இந்தியா முழுவதும் இந்த விழாவை சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் கொண்டாடுவதை காணலாம். எனவே, இதை தேசிய திருவிழா என்றும் கருதலாம்.

இத்துனை சிறப்புப் பெற்ற தீபாவளி பண்டிகை, நாளை கொண்டாடப்படுகிறது.

தீபாவளியை கொண்டாடுவதற்கான நேரம் எது என்பது குறித்து, சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வேதவாத்தியார் பிரம்மஸ்ரீ ஏ.ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறியதாவது:-

"நரகாசுரனுடன் கிருஷ்ணர் வதம் செய்தபோது, சோர்வுற்ற நிலையில், நரகாசுரனுடன் ராதை போரிட்டார் என்றும், பெண்ணால் நரகாசுரன் அழிந்தான் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நிலையில், "நான் முக்தி அடைந்த தினத்தில், அனைவரும் புண்ணிய லோகத்தை அடைய வேண்டும் என்றும், புண்ணிய நதிகளில் முதன்மையான கங்கையில் நீராடிட வேண்டும் என்றும் நரகாசுரன் வேண்டுகோள் விடுத்தான்'' என்று புராணங்களில் கூறப்பட்டு உள்ளது.

ஐப்பசி மாதம் அதாவது துலா மாதம் சூரியன்-சந்திரன் ஒன்று கூடும்(அமாவாசை) தினத்தில், நள்ளிரவு முடிந்து, அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்பு(அதுதான் நரகாசுரனை வதம் செய்த நேரம்) சூரியன், சுவாதி நட்சத்திரத்தில் இருக்கையில், சந்திரன் கூடுகிற சதுர்த்தசி திதியில், நல்லெண்ணெய் தேய்த்து, வென்னீரில் குளிக்க வேண்டும். வென்னீரில் கங்கை வாசம் செய்வதாக கூறப்படுகிறது.

சுடு தண்ணீரைக்கூட எப்படி தயாரிக்க வேண்டும் என்றும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, தீபாவளிக்கு முன் தினம் இரவில், வென்னீர் வைக்கும் பாத்திரத்தில், சூரியன்-சந்திரன் படம் வரைந்து, தண்ணீர் ஊற்றி, பாத்திரத்தில், ஆல், அரசு, அத்தி, பூவரசு ஆகிய 4 மரங்களின் பட்டைகளைப்போட்டு மூடி வைத்து விடவேண்டும்.

குறைந்தது 2-1/2 மணி நேரத்துக்குப் பின், தண்ணீரை சூடு செய்து, எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தசி, துவாதசி, அஷ்டமி, சப்தமி, சஷ்டி, சங்கரமனம் இவைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது என்று சொல்வார்கள். திதி வார நட்சத்திர முதலிய எவ்விதமான தோஷம் இருப்பினும் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது எந்த தோஷமும் எவரையும் பாதிக்காது.

நாளை அதிகாலை 3 மணியில் இருந்து 5 மணிக்குள் சதுர்த்தசி திதி, எண்ணெய் குளியலுக்கு உகந்த நேரம் ஆகும்.

தீபாவளி தினத்தில், வென்னீரில்தான் குளிக்க வேண்டும். வென்னீரில் குளிப்பது கங்கையில் குளிப்பதற்கு சமம் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிவரையில் குரு ஹோரை நேரம் ஆகும்.

குளித்து முடித்தபின், வீடு முழுவதும் தீபம் ஏற்றி, சுவாமி, அம்பாள் முன்பாக இனிப்பு வகைகளுடன் புத்தாடையை வைத்து பூஜை செய்து தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடவேண்டும்.

சிவபெருமான் தன்னிடம் எப்போதும் அன்பாக இருக்கவேண்டும் என்பதற்காக, தவம் இருந்த நிகழ்வே கேதார கவுரி விரதமாக கருதப்படுகிறது. கணவன்-மனைவி இடையே எப்போதும் ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பெண்கள் தீபாவளி தினத்தில், இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.

தீபாவளி அன்று காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை, 10 மணியில் இருந்து 10.30 மணி வரை, மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையில் கேதார கவுரி அனுஷ்டிப்பதற்கு உகந்த நேரம் ஆகும்.

இவ்வாறு பிரம்மஸ்ரீ ஏ.ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறியுள்ளார்.

நன்றி : தினத்தந்தி 04-11-2010

33 comments:

  1. என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அன்புள்ள உண்மைத்தமிழன்,

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஏண்ணே, இதெல்லாமா பிரச்சனை... எண்ணை தேய்ப்பதற்கு தோதான நேரம் குளிப்பதற்கு முன்புதான். இதுக்கு ஒரு இடுகை :)

    (நான் இந்த போஸ்டைப் படிக்கலை என்பதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்கிறேன்!)

    ReplyDelete
  4. பறையன், உண்மைவிரும்பி, கோபிஜி.. தீபாவளி நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்..!

    ReplyDelete
  5. [[[ஜ்யோவ்ராம் சுந்தர் said...
    ஏண்ணே, இதெல்லாமா பிரச்சனை... எண்ணை தேய்ப்பதற்கு தோதான நேரம் குளிப்பதற்கு முன்புதான். இதுக்கு ஒரு இடுகை :)]]]

    தாலி கட்டுறதுக்கு நேரம் சொல்றாங்கள்ல.. அதே மாதிரிதான். நாளும், கோளும், கிரகமும், நட்சத்திரமும், ராசியும் ஒண்ணா இருக்குற நேரத்துலதான் குளிக்கணுமாம்..!

    [[[நான் இந்த போஸ்டைப் படிக்கலை என்பதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்கிறேன்!)]]]

    உங்க நேர்மை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு சுந்தர்ஜி..!

    ReplyDelete
  6. தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்!

    வேலை மெனக்கெட்டு தினத்தந்தியில் யாரோ ஒரு பிரம்ம ஸ்ரீ உளறியதை அப்படியே காப்பியடித்திருக்கிறீர்கள்! தீபாவளி உண்மையிலேயே ஹிந்துக்களுடைய பண்டிகைதானா, சமண, பௌத்தப் பண்டிகையை, ஹிந்து மதம் அப்படியே உயல்வாங்கிக் கொண்டதா, அல்லது அதற்கும் முந்தையகாலத்தைய தொன்மக் குறியீடா என்பதை ஜெயமோகன் வலைத் தளத்தில் இன்றைக்கு மிக அருமையாக எழுதியிருக்கிறாரே! அதை எல்லாம் படிப்பதில்லையா என்ன!

    ReplyDelete
  7. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. என்ன எண்ணெய் தேய்த்து குளிக்கனும்.

    நாமே தேச்சுக்கனுமா.. வர வர நீங்க டிடெய்லா பதிவு போடரதில்ல.....

    ReplyDelete
  9. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நாள் என்ன செய்யும் , பொழுது என்ன செய்யும் - தேவார வரிகள்

    ReplyDelete
  11. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அருமை!
    இப்போல்லாம் எண்ணெய்க் குளியல் தீபாவளிக்கு மட்டும்தான் என்ற மாதிரி ஆகி விட்டது.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. அண்ணே உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீப திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. I called u to tell diwali wishes.. but u did not pick up call... busy in diwali?
    ok.. have a nice time happy diwali

    ReplyDelete
  15. [[[எஸ். கிருஷ்ணமூர்த்தி said...
    தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்!
    வேலை மெனக்கெட்டு தினத்தந்தியில் யாரோ ஒரு பிரம்ம ஸ்ரீ உளறியதை அப்படியே காப்பியடித்திருக்கிறீர்கள்! தீபாவளி உண்மையிலேயே ஹிந்துக்களுடைய பண்டிகைதானா, சமண, பௌத்தப் பண்டிகையை, ஹிந்து மதம் அப்படியே உயல் வாங்கிக் கொண்டதா, அல்லது அதற்கும் முந்தைய காலத்தைய தொன்மக் குறியீடா என்பதை ஜெயமோகன் வலைத்தளத்தில் இன்றைக்கு மிக அருமையாக எழுதியிருக்கிறாரே! அதை எல்லாம் படிப்பதில்லையா என்ன!]]]

    அதையெல்லாம் படித்து என்னவாகப் போகிறது..? இருப்பதும் குழப்பமடைந்து தலைவலி வரப் போவதுதான் மிச்சம்..!

    ReplyDelete
  16. [[[ராமுடு said...
    Excellent information.. Thanks for sharing.]]]

    நன்றி ராமுடு ஸார்..!

    ReplyDelete
  17. கதிர்கா, நேசமித்ரன், துளிசியம்மா, வெங்கட், சேன், தாமஸ் ரூபன்.. இனிய வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  18. [[[அகில் பூங்குன்றன் said...
    என்ன எண்ணெய் தேய்த்து குளிக்கனும். நாமே தேச்சுக்கனுமா.. வர வர நீங்க டிடெய்லா பதிவு போடரதில்ல.]]]

    தேய்ச்சு விடுறதுக்கு பக்கத்துல ஆள் இருந்தா அப்படியே செஞ்சுக்குங்க அகில்..!

    ReplyDelete
  19. [[[ராம்ஜி_யாஹூ said...
    நாள் என்ன செய்யும், பொழுது என்ன செய்யும் - தேவார வரிகள்]]]

    எல்லாம் ஒரு நம்பிக்கைதான் ஸார்.. காலம் காலமாக இருந்து வருதுல்ல..!

    ReplyDelete
  20. [[[எஸ்.கே said...
    அருமை! இப்போல்லாம் எண்ணெய்க் குளியல் தீபாவளிக்கு மட்டும்தான் என்ற மாதிரி ஆகிவிட்டது. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!]]]

    உண்மைதான் ஸார்.. முன்பெல்லாம் வாராவாரம் சனிக்கிழமைதோறும் குளிச்சாங்க. சனிக்கிழமையும் ஆபீஸ் போகணுமேன்றப்ப ஞாயித்துக்கிழமை குளிச்சாங்க. அப்புறம் அன்னிக்காச்சும் கொஞ்சம் நிம்மதியா, ஜாலியா இருக்கலாமேன்னுட்டு அதையும் விட்டுட்டாங்க.

    ReplyDelete
  21. [[[பார்வையாளன் said...
    I called u to tell diwali wishes.. but u did not pick up call... busy in diwali? ok.. have a nice time happy diwali]]]

    எந்த நம்பர் ஸார்..? மறுபடியும் செய்யுங்களேன்..

    ReplyDelete
  22. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    lalithakrishnan

    ReplyDelete
  23. உங்களுடன் பேசியது ஒரு நூலகத்தில் நுழைந்தது போல, ஒரு நல்ல புத்தகம் படித்தது போல இருந்தது. நடமாடும் நூலகமே , உன்னை விரைவில் சந்திப்பேன்

    ReplyDelete
  24. உங்களுடன் பேசியது ஒரு நூலகத்தில் நுழைந்தது போல, ஒரு நல்ல புத்தகம் படித்தது போல இருந்தது. நடமாடும் நூலகமே , உன்னை விரைவில் சந்திப்பேன்

    ReplyDelete
  25. //நாள் என்ன செய்யும் , பொழுது என்ன செய்யும் - தேவார வரிகள்//

    தேவாரமா???

    நாளென் செயும்வினை தானென் செயும்எனை நாடிவந்த
    கோளென் செயும்கொடுங் கூற்றென் செயும்கும ரேசர்இரு
    தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும்சண்முகமும்
    தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்துதோன்றிடினே!

    அய்யா இது அருணகிரிநாதரின் கந்தரலங்காரத்தில் வரும் வரிகள் என்று படித்த ஞாபகம்...!

    ReplyDelete
  26. [[[lalitha said...

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    lalithakrishnan]]]

    நன்றிகள் மேடம்..!

    ReplyDelete
  27. [[[பார்வையாளன் said...
    உங்களுடன் பேசியது ஒரு நூலகத்தில் நுழைந்தது போல, ஒரு நல்ல புத்தகம் படித்தது போல இருந்தது. நடமாடும் நூலகமே, உன்னை விரைவில் சந்திப்பேன்.]]]

    இது ஓவரான புகழ்ச்சி. இதற்கு எந்தவிதத்திலும் தகுதியுடையவன் அல்ல நான்..!

    வாங்க நேரில் சந்திப்போம்..!

    ReplyDelete
  28. [[[விந்தைமனிதன் said...

    //நாள் என்ன செய்யும் , பொழுது என்ன செய்யும் - தேவார வரிகள்//

    தேவாரமா???

    நாளென் செயும்வினை தானென் செயும் எனை நாடிவந்த
    கோளென் செயும் கொடுங் கூற்றென் செயும்கும ரேசர்இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
    தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!

    அய்யா இது அருணகிரி நாதரின் கந்தரலங்காரத்தில் வரும் வரிகள் என்று படித்த ஞாபகம்...!]]]

    ஆஹா.. நானும் மறந்து தொலைச்சுட்டனே.. வலையுலக வாத்தியாரான சுப்பையா ஐயா.. படிச்சு, படிச்சு மண்டைல ஏத்தின பாடமாச்சே..!

    ReplyDelete
  29. //இவ்வாறு பிரம்மஸ்ரீ ஏ.ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறியுள்ளார்.
    //

    (இந்த வரி ரொம்ப பிடிச்சது...!!!!!!!!!!!!!)

    ReplyDelete