Pages

Thursday, November 18, 2010

ரஜினி உண்மையிலேயே 32 வருஷம் கழிச்சா மதுரைக்கு வந்தாரு..?

18-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பத்திரிகைகளுக்கு அல்வா கொடுப்பதிலும், தீனியைப் போடுவதிலும் நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினியை மிஞ்ச முடியாது..!

பழகின தோஷத்திற்காக, நட்புக்காக அப்போதைக்கு தோன்றுவதையெல்லாம் செய்துவிட்டு பின்பு ஆற, அமர யோசித்து தப்பாயிருச்சே என்ற பின் அமைதியாவது அண்ணனின் பொழுது போக்கு..!

அரசியலாகட்டும்.. ஆன்மீகமாகட்டும் அண்ணனின் பாணியே தனிதான்..!

"150 வருஷமா என்னோட குருஜி இமயமலைல தவத்துல இருக்காரு"ன்னு ஒரு தடவை சொல்லி ஆன்மீகத்தையே திடீர்ன்னு காமெடியாக்கி எங்களை மாதிரியானவங்களை கவலைக்குள்ளாக்கினார்.

'சந்திரமுகி' படத்தில் நாசர் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன், குமுதம் பத்திரிகையில் நாசர் இதைக் கிண்டல் செய்து பேட்டியளித்திருந்தார். அதைப் படித்துவிட்டு நாசருக்குக் கொடுக்கவிருந்த கேரக்டரில் இருந்து அவரைக் கழட்டிவிட்டு விஜயகுமாரை புக் செய்யவும் சிவாஜி பிலிம்ஸ் முனைந்தது. பின்பு ரஜினியே விஷயத்தைக் கேள்விப்பட்டு நாசரே இருக்கட்டும் என்று சொல்லி அழைத்தது வேறு விஷயம்..! அதற்குப் பின் இன்றுவரையில் அந்த குருஜி பற்றிய பேச்சே இல்லை..

பழம்பெரும் இயக்குநர் திரு. ஸ்ரீதரின் மறைவுக்குப் பின்பு அவருக்காக பிலிம் சேம்பரில் நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்தில் தான் ஸ்ரீதரை அவருடைய வீட்டில் சென்று சந்தித்ததாகவும், அவருக்குப் படம் செய்து தருகிறேன் என்று சொன்னதாகவும் பேச்சுவாக்கில் சொல்லிவிட்டார். கூடவே ஸ்ரீதரின் மரணத்தின்போது மாலை அணிவித்து மரியாதை செய்ததாகவும் சொல்ல.. மேடையில் அமர்ந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதரின் குடும்பத்தினரே ஷாக்காகிவிட்டார்கள்.

காரணம், ரஜினி ஸ்ரீதர் இறந்த பின்பு மாலை போட வரவில்லை. ஹைதராபாத்தில் இருந்ததாகச் சொன்னார்கள். பின்பு ஏன் இப்படி..? “ஏதோ வாய்வரைக்கும் வந்திருக்கும்.. சொல்லிட்டாரு. விட்ருங்க ஸார். நம்ம ரஜினி ஸார்தானே..! அவரைப் பத்தித் தெரியாதா உங்களுக்கு..?” என்று பிற்பாடு அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் போன் வந்தது தனிக்கதை.

இதோ இப்போதும் இன்றைக்கு கட்டின பாவத்துக்கு கூடப் போய் அலைஞ்ச மாதிரி கலைஞரின் பேரன் திருமணத்திற்கு மதுரைக்குப் போனவர் சந்தடிசாக்கில் “32 வருஷம் கழிச்சு இன்னிக்குத்தான் மதுரைக்கு வந்திருக்கேன்..” என்று சொல்லியிருக்கிறார்.


ஏன்தான் இப்படி பேசுறாரோ என்றுதான் எனக்கும் தெரியவில்லை. ஒரு நிகழ்ச்சியைப் பெருமைப்படுத்தி பேசணும்னா அதுக்கு எத்தனையோ வழிகள் இருக்கு. பேச்சுக்கள் இருக்கு.. விஷயங்கள் இருக்கு. அதான், “அழகிரியும், ஸ்டாலினும் ஒரு சொத்து. தி.மு.க. கட்சி ஒரு சொத்து.. அந்தச் சொத்து இந்தச் சொத்தைப் பாத்துக்கணும்; இந்தச் சொத்து அந்தச் சொத்தைப் பார்த்துக்கணும்..”னு சொல்லியாச்சுல்ல. விட்ர வேண்டியதுதான..? இதை வைச்சே இன்னும் ஒரு மாசத்துக்கு எல்லா பத்திரிகையும் மஞ்சள் குளிக்கலாமே..? போதாதா..? கூட இப்படி வேற சொல்லி தாத்தாவுக்கு புகழைச் சேர்க்கணுமா..?


ரஜினி நிசமாவே 32 வருஷம் கழிச்சுத்தான் மதுரைக்கு வந்தாரா..? இல்லை.. இருக்காது.. ஏதோ 'தாட் ஸ்லிப்' ஆயிருக்கும்னு நினைக்கிறேன்..!

ரஜினியை நான் முதலில் நேரில் பார்த்தது 1990-களில்.. 'தளபதி' படம் ரிலீஸான பின்பு என்று நினைக்கிறேன். மதுரை பாண்டியன் ஹோட்டல் வாசலில்.. உடன் ஜி.வெங்கடேஸ்வரனும் வந்திருந்தார். வந்த நோக்கம் திருச்சி அடைக்கலராஜின் பெப்ஸி கம்பெனியின் துவக்க விழா.

மதுரை நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது.. ஏர்போர்ட்டில் இருந்து விழா நடக்கும் மேலமாசிவீதி, வடக்குமாசிவீதி சந்திப்பு வரையிலும் கலக்கல் போஸ்டர்களும், தட்டிகளுமாக களைக் கட்டியிருந்தது. ஆனால் ரஜினியோ திருச்சி வரையிலும் விமானத்தில் வந்து, பின்பு அங்கிருந்து காரிலேயே மதுரை வந்து பாண்டியன் ஹோட்டலுக்குள் ஐக்கியமாகிவிட்டார்.

ஹோட்டலில் இருந்து கிளம்பும்போது அவரை ஏற்றிச் செல்ல ஐந்து காண்டஸா கிளாஸிக் கார்களை வாசலில் நிறுத்தி வைத்து ரசிகர்களை ஏமாற்றி, எதில் அவர் செல்கிறார் என்பதே தெரியாத அளவுக்கு அழைத்துச் சென்றார்கள்.

அப்போது வீட்டில் வெட்டி ஆபீஸராக தண்டச்சோறு தின்று கொண்டிருந்த நானும் தலைவரைப் பார்க்க வேண்டுமே என்கிற வெறியோடு அந்தக் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அப்போது அவர் பேசிய பேச்சின் சில பகுதிகள் இப்போதும் இணையத்தில் இருக்கின்றன..!

''மதுரைக்கும் எனக்கும் ஒரு நெருங்கிய நட்பு உண்டு. நான் மதுரைக்கு முதன்முதலில் வந்தது 'மூன்று முடிச்சு' பட விழாவுக்கு. இதில் 'மூன்று' உண்டு. அதன் பின் 'திரிசூலம்' படத்தின் வெற்றி விழாவுக்கு வந்தேன். 'திரிசூலம்' - மூன்று சூலம். இதிலும் 'மூன்று' உண்டு. பிறகு. 'மூன்று முகம்' படத்தின் வெற்றி விழாவுக்கும் வந்தேன். இதிலும் 'மூன்று' உண்டு. மதுரை என்பதிலும் மூன்று எழுத்து. ரஜினி என்பதிலும் மூன்று எழுத்து. இப்படியாக எனக்கும் மதுரைக்கும் நெருங்கிய நட்பு உண்டு.

நான் சினிமாவுக்கு வந்ததே ஒரு அதிசயம். அதிலும் கதாநாயகன் அந்தஸ்து பெற்றது பெரிய அதிசயம். அதைவிட, ரசிகர்களாகிய உங்கள் உள்ளங்களை நான் வென்றது மிகப் பெரிய அதிசயம். இந்திப் படங்களில் நடிக்கச் சென்றதும் அதிசயம். அதன் பின் ஆங்கிலப் படத்தில் நடித்தது பேரதிசயம்.

நான் பிறந்தவுடன் டாக்டர்கள், 'இவன் பத்து நாள் கூடத் தாங்க மாட்டான். இறந்துவிடுவான்' என்று சொல்லிவிட்டார்களாம். நான் பிறந்த நட்சத்திரம் என்ன என்று எனக்குத் தெரியாது. 'மூன்று முடிச்சு' விழாவுக்கு வந்திருந்தபோது, மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றேன். சக நடிகர்களெல்லாம் தங்கள் பிறந்த நட்சத்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்தார்கள். அர்ச்சகர் என்னிடம் 'உன் நட்சத்திரம் என்ன?'ன்னு கேட்டார். தெரியலைன்னேன். ஏன்னா.. என் நட்சத்திரம் என்னன்னு எனக்கே தெரியாது! ஆனா இப்போ தெரிஞ்சிருச்சு..'' என்று சொல்லி நிறுத்தியபோது, நாங்க பதிலுக்கு “சூப்பர் ஸ்டார்”ன்னு கத்துன கத்து இருக்கே..!? அதுல நிச்சயம் மதுரையே குலுங்கியிருக்கும்..!

மேலும் தொடர்ந்த ரஜினி, ''நான் ஒரு குதிரை மாதிரி. என் கண்மணிகளாகிய நீங்கள் என் மேல் அமர்ந்துள்ளீர்கள். எனக்கொரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு குதிரைமேல் சாமியை வைத்து ஊர்வலம் வந்தார்கள். வரும் வழியில் எல்லோரும் வணங்கினார்கள். உடனே குதிரைக்குக் கர்வம் வந்துவிட்டது, எல்லோரும் தன்னை வணங்குகிறார்களே என்று! கோயில் வந்ததும், சாமியை உள்ளே எடுத்துச் சென்றுவிட்டார்கள். அப்புறம் யாரும் குதிரையை மதிக்கவில்லை. அதுபோலத்தான் நானும்! ரசிகர்களாகிய நீங்கள் இருக்கும்வரைதான் எனக்கு மரியாதை!'' என்றார்..!

இதன் பின்பும் ஒரு முறை ரஜினி மதுரைக்கு வந்தார். அது தினத்தந்தி பத்திரிகையின் பொன்விழா என்று நினைக்கிறேன். மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது இந்த விழா. ரஜினி வரும்வரையில் விழாவில் ராஜா மாதிரி அமர்ந்திருந்தார் நாவலர் நெடுஞ்செழியன். ரஜினியைப் பார்த்தவுடன் எழுந்த கரகோஷமும், கூச்சலையும் பார்த்து முதலில் முகம் சுழித்தவர் நாவலர்தான்.

தன்னுடைய பேச்சில் நாவலர் இதைக் குறிப்பிட்டு, “நீங்கள்லாம் எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியும்.. நான் என்ன பேசினாலும் கேக்குற நிலைமைல நீங்க இல்லைன்றதும் தெரியும். நான் இனிமே பேசி என்னாகப் போகுது.. போங்க..” என்று ரஜினி ரசிகர்களாகிய எங்களை மறைமுகமாகக் திட்டிவிட்டுத்தான் அமர்ந்தார்.

அடுத்துப் பேசிய ரஜினி, “நான் தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டதே தினத்தந்தியைப் பார்த்துதான்..” என்றார். மேலும் “தினத்தந்தியில் என்னைப் பற்றிய அவதூறான செய்திகள் எதுவுமே வராது. அப்படித்தான் அந்தப் பத்திரிகை இருக்கிறது..” என்று பாராட்டிவிட்டும்தான் சென்றார்.

இந்த நிகழ்வு நிச்சயமாக 1990-களின் மத்தியில்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் 1995-ல் நான் மதுரையை டைவர்ஸ் செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன். ஸோ.. 1990-ல் இருந்து 1995-க்குள் இரண்டு முறை அண்ணன் ரஜினி மதுரை மண்ணை மிதித்திருக்கிறார் என்பதுதான் உண்மை.

"அப்புறம் ஏன் இப்படி 32 வருஷம் கழிச்சு வந்திருக்கேன்னு சொன்னாரு?"ன்னு கேக்குறீங்களா..? 22-ன்னு சொல்ல வந்திருப்பாரு.. தாட் ஸ்லிப்புல மாறியிருக்கும்....!

"அதான் தெரியுதுல்ல.. அடக்கிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே..!? எதுக்கு இந்த போஸ்ட்டு..? நீயே எடுத்துக் குடுக்கிறியே..? நீயெல்லாம் ஒரு ரசிகனாடா..?" அப்படீன்னு நீங்க கேக்குறதும், திட்டுறதும் புரியுது..!

முடியல.. கை ரொம்ப அரிக்குது..! இன்னிக்கு கோட்டாவுக்கு ஏதாவது மேட்டர் எழுதணும்ல.. அதுனாலதான்..! 

நன்றி.!

80 comments:

  1. நீங்களும் எழுதியிருக்கீங்க‌ன்னு நானும் ப‌டிச்சிருக்கேன் பாருங்க‌.. என்ன‌த்த‌ சொல்ல‌!

    ர‌ஜினிக்கு தெரிய‌ல‌ எவ்வள‌வு பெரிய‌ விஷ‌ய‌த்தை ம‌க்க‌ள் அவ‌ருக்குக் கொடுத்திருக்காங்க‌.... எவ்வ‌ள‌வு நியாய‌மா அவ‌ர் கிட்ட‌ இருந்து எதிர்பார்க்குறாங்க‌ன்னு... ஒரு ர‌சிக‌னா வேற‌ என்ன‌த்த‌ சொல்லுற‌து இப்ப‌டி அவ‌ர் உளறிக் கொட்டும்போது....

    ReplyDelete
  2. சார், ஏன் சித்தர்கள் 150 வருஷம் வாழ முடியும்-ன்றத நம்ப மறுக்கிறீங்க? 150 -க்கு மேலயே வாழ முடியும். சாதாரண மக்கள் 106 - வரை வாழும் போது, ஏன் சித்தர்கள் 150 வருஷம் வாழ முடியாது?

    ReplyDelete
  3. ஃபர்ஸ்ட் போச்சே

    ReplyDelete
  4. Your Write up is good. As you said this Rajni & Kamal becoming laughing stuff whenever they get mike in front of Karunanithi function. Jaya mentioned recently during her visit of Madurai "Hero becomes Zero" "Family Zero beomes Hero" though she is same type of person like MK , the timing was good. RP Rajanayam used to tell in his blog about these film stars real color & character.

    ReplyDelete
  5. ”அப்போது வீட்டில் வெட்டி ஆபீஸராக தண்டச்சோறு தின்று கொண்டிருந்த நானும்”

    சரி.. சரி... இப்ப பொறுப்புள்ள ஆபீசராக மாறிட்டீங்கனு சொல்ல வறீங்க...

    ஒத்துக்குறோம்

    ReplyDelete
  6. அந்த குதிரை கதை உண்மையில கழுதை கதை பைபளில் வரும். இயேசு கிறிஸ்து கழுதை மேல வரும் போது, எல்லோரும் வரிசையா நின்னு பூ தூவுவாங்க. கழுதை தனக்கு தான் பூ தூவுறாங்க-ன்னு நினைச்சுக்கும்....கழுதை-ன்னா கேவலமா? ஏன் குதிரை-ன்னு மாத்திருக்கார்?

    ReplyDelete
  7. உடல் மண்ணுக்கு...உயிர் தலைவனுக்கு...

    இதெல்லாம் பொது வாழ்கையில சகஜமப்பா

    ReplyDelete
  8. பெப்சி அறிமுகத்துக்காக 1986ல் மதுரைக்கு வந்திருக்கின்றார்.
    மதுரையில் நடந்த அந்த‌ விழாவில் சக்தி‍சிவம் தியேட்டருக்கருகில் மேடையில் நடிகர் ஜெய்சங்கருடன் தோன்றினார். அப்பொழுது ரஜினி அவர்கள் வலுக்கட்டாயமாக ஜெய்சங்கர் வாயில் பெப்சியை ஊற்றினார். ஜெய்சங்கர் அவர்க‌ள் முகம் சிவந்து, கடுகடுத்துப்போனார். அதை நான் அருகின் இருந்து பார்த்தேன்.

    ReplyDelete
  9. :-0) அடங்கொய்யாலே...

    ReplyDelete
  10. அண்ணனின நினைவாற்றலுக்கு ஒரு ஓஓஓஓஓ..ஓ!

    ReplyDelete
  11. அண்ணே அவரு 32 வருஷம் கழிச்சி கல்யாணத்துக்கு வந்து இருக்கேன்னு சொன்னதை இப்படி திரித்து போட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன்

    ReplyDelete
  12. தண்ணீ (தலைக்கு) ஊத்திட்டு வர்றதுக்குள்ள கூட்டம் கூடிப்போச்சே:)

    ReplyDelete
  13. அடாவடியா கேள்வி கேட்கிறது பெரும்பாலும் ஆண்களாகத்தான் இருக்கும்.

    மாறுதலா இந்தி தொலைக்காட்சியில் மூணு அம்மணிகள் பிரபலங்களை மடக்குவதில்(கேள்வி) மிகவும் பிரபலம்.

    நம்ம ராம்தேவ் சன்னியாசிகிட்ட உங்களுக்கு ’அந்த’ மாதிரி உணர்ச்சியெல்லாம் வருமான்னு கேட்டதுக.அவரும் வரும் ஆனா வராதுங்கிற மாதிரி வரும்போது பிரணாயமம் செய்வேன்ன்னு சொன்னாரு.

    அடுத்து ”பாபா!உங்களுக்கு வயசு என்ன ஆச்சுன்னு” கேட்டுச்சுக.ராம் தேவ் சிரித்து மழுப்பிவிட்டார்.அவருக்கும் 150தான் குறிக்கோள்.

    அப்புறம் முடிக்கு கருப்பா “டை” அடிக்கிறீங்களான்னு கேட்டுகிட்டே இருந்துச்சுக.இலவசமா தீபாவளிக்கு பேட்டி கொடுத்தா நீங்க இதுவும் கேட்பீங்க இன்னமும் கேட்பீங்கன்னு ராம்தேவ் பேட்டியை முடித்துகிட்டார்.

    ReplyDelete
  14. "அதான் தெரியுதுல்ல.. அடக்கிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே..!? எதுக்கு இந்த போஸ்ட்டு..? நீயே எடுத்துக் குடுக்கிறியே..? நீயெல்லாம் ஒரு ரசிகனாடா..?"

    ReplyDelete
  15. //கழுதை-ன்னா கேவலமா? ஏன் குதிரை-ன்னு மாத்திருக்கார்?//

    இயேசு பயணம் செய்தது கோவேறு கழுதை.அதை இப்படியும் சொல்லலாம்.அப்படியும் சொல்லலாம்.

    இஸ்ரேலின் மலைப்பகுதிகளுக்கு கோவேறு கழுதையில் பயணிப்பதே எளிதாக இருந்தது என்பதும் கூடுதல் தகவல்.

    ReplyDelete
  16. தமிழர்கள் நாயை எப்படி கொச்சைப்படுத்துகிறார்களோ அதேமாதிரி சிலர் பழக்க தோஷத்தில் அன்பான சொல்லாகவும் முக்கியமாக அடாவடி கோபத்தில் அரேபிகள் அமார் (கழுதை)என்றே அமார்களாகிறார்கள்.

    ReplyDelete
  17. சூப்பர் ஸ்டாரை நல்ல மனதை போற்ற ஒரு மனம் இருந்தால், நெகடிவ் ஓட்டு குத்தி விடலாம்..

    உண்மை தமிழனின் எழுததை ரசிக்க ஒரு மனம் இருந்தால், பாசிடிவ் ஓட்டு குத்தி விடலாம்..

    ஆனால் இருப்பதோ ஒரு ஓட்டு.. நான் என்ன செய்வேன் .. என்ன செய்வேன் என்ன செய்வேன்

    ReplyDelete
  18. அட குசேலன் படத்துலையே சொல்லிடாரே. யாரோ எழுதி கொடுக்குறத அவர் பேசுறாரு. அதை ஏன் உணமைன்னு நம்பிட்டு அலையிறீங்க.

    ReplyDelete
  19. நடந்த உண்மையெல்லாம் இப்படி பட்டுன்னு போட்டு உடைக்கிறீங்களே சார்...

    அதான் உண்மைத்தமிழனோ...

    //முடியல.. கை ரொம்ப அரிக்குது..! இன்னிக்கு கோட்டாவுக்கு ஏதாவது மேட்டர் எழுதணும்ல.. அதுனாலதான்..!//

    செம கலக்கல் சார்

    ReplyDelete
  20. என்ன அண்ணே பாதிக்கு பாதி பேருங்க பொங்கியிருக்காங்க?

    ReplyDelete
  21. ஐந்து வருடத்துக்கு முன்னர் நீங்க போன ஊரெல்லாம் உங்களுக்கு ஞாபகத்தில இருக்கா?

    அப்படியிருக்கேக்க 32 வருடத்துக்கு முன்னர் போன விடயம் பசுமையாக நினைவிருக்க 20 வருடத்துக்கு முன்னாடி 'ஒருவாட்டி' போனது ஏன் மறந்து போயிருக்க கூடாது?

    ஓரிரண்டு ஊருக்கு போற எங்களுக்கே ஐந்து வருடங்களுக்கு முன்னாடி எங்க போனதின்னு மறந்து போகும்போது உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தடவைகள் சுற்றும் ரஜினிக்கு மதுரைக்கு 1990 இல் போனது ஏன் மறத்து போயிருக்க கூடாது?

    ரஜினி என்ன Memory 1 Zeta Bite சிட்டி ரோபோவா அப்படியே எல்லாத்தையும் ஞாபகம் வைத்திருக்க?

    ரஜினி 32 வருடத்துக்கு முன்னாடி மதுரைக்கு போனாரின்னு எதுக்கு சொல்லணும்? அதில் அவருக்கு என்ன ஆதாயம்?

    ரஜினி அப்படி போனது ஒரு பப்ளிக் பங்சனுக்கு, அப்போது அவர் ஒரு சூப்பர் ஸ்டார், எல்லோர் கவனமும் அவர்பக்கம்தான் இருந்திருக்கும். உங்களுக்கு ஞாபகம் இருப்பதுபோல இன்னும் எத்தனை பேருக்கு ஞாபகமிருக்கும்? இது ரஜினிக்கு தெரியாதா?

    உங்க சொந்தகாரங்க, நண்பர்கள் வீடுகளுக்கு கடைசியா எப்ப போனீங்கென்னு உங்க குடும்பத்தில உள்ளவங்ககிட்ட கலந்து பேசிப்பாருங்க குறைந்தது இரண்டு மூன்று இடங்களுக்காவது நீங்கள் சொல்லும் நாள் தவறாக இருக்கும். அல்லது உங்கள் வீட்டிலுள்ளவர்களாவது வேறு வேறு நாட்களை கூறுவார்கள், இது எனது அனுபவ உண்மை.

    அங்கு பேசும்போது கடைசியாக வந்து நீண்ட நாட்களாகியிருக்கும் என்பது அவரது மைன்டிற்கு வந்திருக்கும், அப்போது கடைசியாக எப்போது வந்ததென்பதை அவரது மெமரி அடிமனதில் பதிந்த 32 வருடங்களுக்கு முன்பிருந்ததை காட்டியிருக்கும், அதை அந்த இடத்தில் கூறியிருக்கிறார், சிந்தித்து சரியான கணிப்பீட்டை சொல்லுமளவிற்கு இது அவளவு முக்கியமில்லாத சங்கதி இல்லை என்பதால் அதை மேலோட்டமாகவே ஞாபகப்படுத்தி பாத்திருக்கலாம். இது காண நேரத்தில் நடந்தது, இப்படியான தவறுகள் மனிதர்கள் எல்லோருக்குமே வரும். இதை அனுபவசாலியான நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    சூப்பர் ஸ்டாரா இருக்கிறது உலக மகா கஷ்டம்டா சாமியோவ்....... அதுவும் தமிழர்களிடம், குறிப்பாக உண்மை தமிழர்களிடம் :-)

    ReplyDelete
  22. //சூப்பர் ஸ்டாரா இருக்கிறது உலக மகா கஷ்டம்டா சாமியோவ்....... அதுவும் தமிழர்களிடம், குறிப்பாக உண்மை தமிழர்களிடம் :-)//

    :) :) :)


    இன்னொன்று, ஒரு புகாராக பதிவிடும் அளவுக்கு இது பெரிய - சீரியஸான விஷயமும் அல்ல. ரஜினியின் வீடியோ பேச்சில், மதுரைக்கு நான் 32 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறேன்... மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போனேன்... என்றுதான் குறிப்பிடுகிறார்.

    -சிவா

    ReplyDelete
  23. அட விடுங்க சார் ஏதோ குழப்பத்துல சொல்லியிருப்பாரு...“ஏதோ வாய்வரைக்கும் வந்திருக்கும்.. சொல்லிட்டாரு. விட்ருங்க ஸார். நம்ம ரஜினி ஸார்தானே..! அவரைப் பத்தித் தெரியாதா உங்களுக்கு..?” என்று பிற்பாடு அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் ஏன் உங்களுக்கேகூட போன் வந்தாலும் வரலாம்.

    ReplyDelete
  24. //
    அதான் தெரியுதுல்ல.. அடக்கிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே..!? எதுக்கு இந்த போஸ்ட்டு..? நீயே எடுத்துக் குடுக்கிறியே..? நீயெல்லாம் ஒரு ரசிகனாடா..?" அப்படீன்னு நீங்க கேக்குறதும், திட்டுறதும் புரியுது..!
    //
    இன்னிக்கு கோட்டாவுக்கு ஏதாவது மேட்டர் எழுதணும்ல.. அதுனாலதான்..!
    //
    athane parthen...

    ReplyDelete
  25. "ஏன் உங்களுக்கேகூட போன் வந்தாலும் வரலாம்."

    கொஞ்சம் லேட்டாத்தான் போன் வந்தது..அதற்குள் அண்ணன் பதிவு போட்டுட்டாரு

    ReplyDelete
  26. //சூப்பர் ஸ்டாரா இருக்கிறது உலக மகா கஷ்டம்டா சாமியோவ்....... அதுவும் தமிழர்களிடம், குறிப்பாக உண்மை தமிழர்களிடம் :-)//

    Super.. comment.. .Nethiyadiiii!!!!!

    ReplyDelete
  27. அதான், “அழகிரியும், ஸ்டாலினும் ஒரு சொத்து. தி.மு.க. கட்சி ஒரு சொத்து.. அந்தச் சொத்து இந்தச் சொத்தைப் பாத்துக்கணும்; இந்தச் சொத்து அந்தச் சொத்தைப் பார்த்துக்கணும்..”னு சொல்லியாச்சுல்ல.

    IS there any OTHER HIDDEN MEANING in this statement?

    ReplyDelete
  28. 2000 வருஷமா வாழ்ந்து கொண்டிருப்பதாக வேறு ஒரு மேடையில் சொன்னார்,
    நூற்றாண்டுக்கு ஒருவராக சிஷ்யன் அது ரஜினியாம்,
    ஸ்ரீதர் விஷயத்தில் சொன்ன பொய் படுகேவலம்.

    ReplyDelete
  29. சில சமயம் இதுபோல் தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன!

    ReplyDelete
  30. ஏன்பா உண்மை தமிழா உங்களுகே தெரியும் ரஜினிய பத்தி எழுதின கண்டிப்பா நெரிய பேரு படிபாங்கனு தெரியும். அதனால தான் ஒரு வெளம்பரத்துக்கு எதையாவது எழுதிட்டு போறது. உன்கிட்ட அதுக்கு எதாவது ப்ரோப் இருக்கா. இதுல கலர் கலரா வேற எழுதிருக்க.

    ReplyDelete
  31. சத்தியமா சொல்றேன் ஸார்... மிக நீண்ட நாட்களூக்குப் பிற்கு நான் ரசித்து வியந்த பதிவு இது.ரஜினியின் குணத்தைப் பற்றி மிக அழகாக எழுதி உள்ளீர்கள். இத்தனைக்கும் அவரின் ரசிகராய் இருந்து கொண்டே. நானும் அப்படிதான். நான் பாக்யராஜின் தீவிர ரசிகன். அவர் செய்யும் தவறுகளை வெளீப்படையாக அவரிடம் பேசுவேன். அவரும் அதை ரசிப்பார். சத்தியமாக கோபப்படவே மாட்டார். அந்த நல்ல மனசு ரஜினிக்கு வரவே வராது.

    ReplyDelete
  32. தினமலரில் நடிகைகளைப் பற்றிய தவறான [நிஜத்தில் உண்மையான] செய்திகள் வெளியிட்டதாகச் சொல்லி கண்டனக் கூட்டம். அதில் ரஜினி பேசும் போது, "நான் ரொம்ப கோபமா இருக்கும் போது பேசவே மாட்டேன், இப்ப ரொம்ப கோவமா இருக்கேன் [அப்படின்னு சொல்லிகிட்டே பேச ஆரம்பிச்சார்]. அவங்க ஏதோ ஜல்சா பண்றதுக்கோ குஷியா இருக்கரதுக்கோ பண்ணல, ரெண்டு வேலை சாப்பாட்டுக்காக அதைப் பண்றாங்க, தயவு பண்ணி அவங்க படத்த பேப்பர்ல போடாதீங்க" - இதைக் கேட்டதும், ஸ்ரீப்ரியாவுக்கு முகத்துல கலக்கம் என்னடா இது நம்மள இவரும் சேர்த்து வாருகிறாரோன்னு, அப்புறம்தான் அது விபசார வழக்கில் கைதான வேறொரு நடிகையைப் பற்றி சொன்னார்னு! இதே மாதிரி சரத்குமார், ராதிகா எடுத்த ஜக்குபாய் படத்த ரிலீஸ் முன்னாடியே எவனோ திருட்டுத் தனமா சி.டி.பண்ணி ஊர் பூராவும் விக்கிறதுக்கு குடுத்துட்டான். [அந்த சி.டி.யை ஆளுக்கு நூறு ரூபாய் குடுத்தால்தான் வாங்கிப் பார்ப்போம்னு ஒருத்தன் கூட வாங்கவில்லை என்பது வேறு விஷயம்]. அதுக்கு பத்திரிகையாலை மத்தியில் கண்டனக் கூட்டம். அதில் பேசும்போது, "இந்தப் படத்தோட கதையை என்கிட்ட சொன்னாங்க, அப்போதே இது உருப்படாது, ஊத்தி மூடிக்கும்னு எனக்குத் தெரியும், அதே மாதிரி ஆயிடிச்சு" இப்படியெல்லாம் பேசிக் கொண்டே போக கே.எஸ்.ரவிக்குமார், சரத்குமார், ராதிகா மூணு பெரும் ஏண்டா இவரைக் கூப்பிட்டோம்னு நொந்து நூடுல்ஸ் ஆகிப் போனார்கள். இவரு ஆன்மீகத்த தேடி இமைய மலைக்குப் போறாரு. ரொம்ப காஸ்ட்லியான கடவுள். எத்தனை பேரு அந்த மாதிரி போக முடியும்? உண்மையிலேயே கடவுள் இருந்தா அவரு ஏழைகளுக்கும் கிடைப்பவரா இருக்கணும். அடுத்து இவரோட குரு ஒருத்தர். பாபா படத்து வெளியீட்டுக்கு வந்தாரு. கோவையில் கூட்டத்து நேரிசளிலேயே புட்டுகிட்டு போயிட்டாரு. பாரதம்தான் புண்ணிய பூமின்னு எல்லோரும் நினைக்கிறோம், அந்த குரு எப்படின்னா அமெரிக்காவை புண்ணிய பூமியா நினைக்கிரவரு. தன்னோட பொணத்த அமெரிக்காவுல புதைக்க சொன்னதால அமெரிக்காவுக்கே பொணத்த எடுத்துக்கிட்டு போனாரு. [எல்லா அக்கிரமத்துக்கும் பேர்போன பூமியா புண்ணிய பூமி? என்ன கொடுமை?] ஆனா ஒன்னு, நடிகர்களின் ரசிகர்கள் நடிகன் என்ன பண்ணுனாலும் அதுதான் சரி என்று சப்பைக்கட்டு கட்டி பேசி வாதிட்டு, நம்மை உண்டு இல்லை என்று பண்ணி விடுவார்கள். நடிகனின் நடிப்பு பிடித்திருக்கிறது என்றால் அந்த நடிகன் தவறுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்று அவர்கள் நினைத்தால் அதற்க்கு நாம் என்ன செய்வது?

    ReplyDelete
  33. உண்மைத்தமிழன் சார்...

    தமிழ்நாட்டில் இரண்டு விஷயங்கள் மிக கடினம்..

    1) சூப்பர் ஸ்டார் ஆக இருப்பது...

    2) அதனினும் கடினம், அவருக்கு ரசிகராக இருந்து அவர் மேல் சொல்லும் பழி சொல்லுக்கு, பதிலளிப்பது...

    ReplyDelete
  34. உங்களவுக்கு அவருக்கு ஞாபகசக்தி இல்லைங்க. விட்டுத் தள்ளுங்க.

    நடிகர்கள் சொன்னது சொல்லாதது எல்லாத்தையும் உருவாக்கிப் பத்திரிகையில் போடும் 'நிருபர்களை'ப்பற்றியும் கொஞ்சம் எடுத்துரைக்கணும் நீங்க.

    பத்திரிகைகளின் அட்டையில் வரும் படங்களும் வாசகங்களும்........ என்னமோ போங்க:(

    ReplyDelete
  35. //அடுத்து இவரோட குரு ஒருத்தர். பாபா படத்து வெளியீட்டுக்கு வந்தாரு. கோவையில் கூட்டத்து நேரிசளிலேயே புட்டுகிட்டு போயிட்டாரு. //

    ரஜினிக்கு அவ்வப்போது அவருடைய குருஜிக்கள் மாறுவர் :)

    ஒரு சமயம் பாபா, இன்னொரு சமயம் தயானந்த சரஸ்வதி மற்றொரு சமயம் சச்சிதானந்த சுவாமிகள் ... இப்படி. ஏன் சமயத்தில் பால்தார்க்கரே கூட அவருக்கு தெயவமாய் தெரிவார்.

    அமெரிக்காவிலிருந்து பாபா வெளியீட்டிற்காக வந்த இந்த குரு பாபா படத்தைப் பார்த்துவிட்டு ஹார்ட் அட்டாக்கில் போய்ச்சேர்ந்தார் :)

    ReplyDelete
  36. @ Jeyadeva,
    ha ha ha

    @UT uncle,
    //அதான் தெரியுதுல்ல.. அடக்கிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே..!? எதுக்கு இந்த போஸ்ட்டு..? நீயே எடுத்துக் குடுக்கிறியே..? நீயெல்லாம் ஒரு ரசிகனாடா..?" அப்படீன்னு நீங்க கேக்குறதும், திட்டுறதும் புரியுது..!
    //
    இன்னிக்கு கோட்டாவுக்கு ஏதாவது மேட்டர் எழுதணும்ல.. அதுனாலதான்..!
    //

    ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha.

    ReplyDelete
  37. [[[பிரியமுடன் பிரபு said...
    mmm]]]

    ம்ம்ம்..!

    ReplyDelete
  38. [[[பிரபு . எம் said...
    நீங்களும் எழுதியிருக்கீங்க‌ன்னு நானும் ப‌டிச்சிருக்கேன் பாருங்க‌.. என்ன‌த்த‌ சொல்ல‌! ர‌ஜினிக்கு தெரிய‌ல‌ எவ்வள‌வு பெரிய‌ விஷ‌ய‌த்தை ம‌க்க‌ள் அவ‌ருக்குக் கொடுத்திருக்காங்க‌. எவ்வ‌ள‌வு நியாய‌மா அவ‌ர்கிட்ட‌ இருந்து எதிர்பார்க்குறாங்க‌ன்னு. ஒரு ர‌சிக‌னா வேற‌ என்ன‌த்த‌ சொல்லுற‌து இப்ப‌டி அவ‌ர் உளறிக் கொட்டும்போது.]]]

    இது வாய் தவறி வந்தது..! உளறியதில்லை..!

    ReplyDelete
  39. [[[Margie said...
    சார், ஏன் சித்தர்கள் 150 வருஷம் வாழ முடியும்-ன்றத நம்ப மறுக்கிறீங்க? 150 -க்கு மேலயே வாழ முடியும். சாதாரண மக்கள் 106 - வரை வாழும் போது, ஏன் சித்தர்கள் 150 வருஷம் வாழ முடியாது?]]]

    106-க்கு உதாரணங்கள் உண்டு. 150-க்கு உதாரணம் காட்டுங்களேன் பார்ப்போம்..!

    ReplyDelete
  40. [[[பார்வையாளன் said...
    ஃபர்ஸ்ட் போச்சே]]]

    எதுக்கு பர்ஸ்ட்டு..? நானென்ன வடையா தரப் போறேன்..?

    ReplyDelete
  41. [[[ravikumar said...
    Your Write up is good. As you said this Rajni & Kamal becoming laughing stuff whenever they get mike in front of Karunanithi function. Jaya mentioned recently during her visit of Madurai "Hero becomes Zero" "Family Zero beomes Hero" though she is same type of person like MK , the timing was good. RP Rajanayam used to tell in his blog about these film stars real color & character.]]]

    ராஜநாயகம் தற்போது எழுதாமல் இருப்பது வலையுலகத்திற்கே பெரும் இழப்பு..!

    ReplyDelete
  42. [[[பார்வையாளன் said...
    ”அப்போது வீட்டில் வெட்டி ஆபீஸராக தண்டச்சோறு தின்று கொண்டிருந்த நானும்”

    சரி.. சரி... இப்ப பொறுப்புள்ள ஆபீசராக மாறிட்டீங்கனு சொல்ல வறீங்க. ஒத்துக்குறோம்.]]]

    ஒத்துக் கொண்டமைக்கு நன்னி..!

    ReplyDelete
  43. [[[Margie said...
    அந்த குதிரை கதை உண்மையில கழுதை கதை பைபளில் வரும். இயேசு கிறிஸ்து கழுதை மேல வரும் போது, எல்லோரும் வரிசையா நின்னு பூ தூவுவாங்க. கழுதை தனக்குத்தான் பூ தூவுறாங்க-ன்னு நினைச்சுக்கும். கழுதைன்னா கேவலமா? ஏன் குதிரைன்னு மாத்திருக்கார்?]]]

    அப்பத்தானே ஒரு கவுரவமா இருக்கும்..!

    ReplyDelete
  44. [[[Margie said...
    உடல் மண்ணுக்கு...உயிர் தலைவனுக்கு. இதெல்லாம் பொது வாழ்கையில சகஜமப்பா..]]]

    இப்படிச் சொல்ற ரசிகர்கள்ல நானும் ஒருத்தன்..!

    ReplyDelete
  45. [[[உசிலை விஜ‌ய‌ன் said...

    பெப்சி அறிமுகத்துக்காக 1986ல் மதுரைக்கு வந்திருக்கின்றார்.
    மதுரையில் நடந்த அந்த‌ விழாவில் சக்தி‍சிவம் தியேட்டருக்கருகில் மேடையில் நடிகர் ஜெய்சங்கருடன் தோன்றினார். அப்பொழுது ரஜினி அவர்கள் வலுக்கட்டாயமாக ஜெய்சங்கர் வாயில் பெப்சியை ஊற்றினார். ஜெய்சங்கர் அவர்க‌ள் முகம் சிவந்து, கடுகடுத்துப்போனார். அதை நான் அருகின் இருந்து பார்த்தேன்.]]]

    1986-ம், ஜெய்சங்கரும் எனக்கு இடிக்கிறது..! ஒருவேளை இரண்டாவது முறையாக வந்தாரோ..?

    ReplyDelete
  46. [[[மோனி said...
    :-0) அடங்கொய்யாலே...]]]

    ஓகே.. ஓகே.. கூல்டவுன்..!

    ReplyDelete
  47. [[[அகில் பூங்குன்றன் said...
    ungalukku payangara nyabagasakthi.]]]

    இல்லையே.. இருந்திருந்தால் இன்னும் நிறைய எழுதியிருப்பனே.. கொஞ்சூண்டுதான்..!

    ReplyDelete
  48. [[[Rafeek said...
    அண்ணனின நினைவாற்றலுக்கு ஒரு ஓஓஓஓஓ..ஓ!]]]

    அடப் போங்கப்பா.. ஏதோ என் ஞாபகத்துல இருந்ததைச் சொன்னேன்..!

    ReplyDelete
  49. [[[நசரேயன் said...
    அண்ணே அவரு 32 வருஷம் கழிச்சி கல்யாணத்துக்கு வந்து இருக்கேன்னு சொன்னதை இப்படி திரித்து போட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.]]]

    ஓ.. இப்படியும் இருக்குமோ..? அப்போ 32 வருஷத்துக்கு முன்னாடி யார் வூட்டுக் கல்யாணம் மதுரைல நடந்துச்சு..? தேடணுமே..?

    ReplyDelete
  50. [[[ராஜ நடராஜன் said...
    தண்ணீ (தலைக்கு) ஊத்திட்டு வர்றதுக்குள்ள கூட்டம் கூடிப் போச்சே:)]]]

    நாட்ல வேலை வெட்டி இல்லாதவங்க ஜாஸ்தி ஸார்..!

    ReplyDelete
  51. [[[ராஜ நடராஜன் said...

    அடாவடியா கேள்வி கேட்கிறது பெரும்பாலும் ஆண்களாகத்தான் இருக்கும். மாறுதலா இந்தி தொலைக்காட்சியில் மூணு அம்மணிகள் பிரபலங்களை மடக்குவதில்(கேள்வி) மிகவும் பிரபலம்.

    நம்ம ராம்தேவ் சன்னியாசிகிட்ட உங்களுக்கு ’அந்த’ மாதிரி உணர்ச்சியெல்லாம் வருமான்னு கேட்டதுக.அவரும் வரும் ஆனா வராதுங்கிற மாதிரி வரும்போது பிரணாயமம் செய்வேன்ன்னு சொன்னாரு. அடுத்து ”பாபா!உங்களுக்கு வயசு என்ன ஆச்சுன்னு” கேட்டுச்சுக.ராம் தேவ் சிரித்து மழுப்பிவிட்டார்.அவருக்கும் 150தான் குறிக்கோள். அப்புறம் முடிக்கு கருப்பா “டை” அடிக்கிறீங்களான்னு கேட்டுகிட்டே இருந்துச்சுக. இலவசமா தீபாவளிக்கு பேட்டி கொடுத்தா நீங்க இதுவும் கேட்பீங்க இன்னமும் கேட்பீங்கன்னு ராம்தேவ் பேட்டியை முடித்துகிட்டார்.]]]

    மானஸ்தன்..!

    ReplyDelete
  52. [[[Ela said...
    "அதான் தெரியுதுல்ல.. அடக்கிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே..!? எதுக்கு இந்த போஸ்ட்டு..? நீயே எடுத்துக் குடுக்கிறியே..? நீயெல்லாம் ஒரு ரசிகனாடா..?"]]]

    துப்பியாச்சுல்ல.. போய்க்கிட்டே இருக்கணும்..!

    ReplyDelete
  53. [[[ராஜ நடராஜன் said...

    //கழுதை-ன்னா கேவலமா? ஏன் குதிரை-ன்னு மாத்திருக்கார்?//

    இயேசு பயணம் செய்தது கோவேறு கழுதை. அதை இப்படியும் சொல்லலாம். அப்படியும் சொல்லலாம். இஸ்ரேலின் மலைப்பகுதிகளுக்கு கோவேறு கழுதையில் பயணிப்பதே எளிதாக இருந்தது என்பதும் கூடுதல் தகவல்.]]]

    இன்றைக்கும் அந்தப் பகுதியில் கழுதைகள்தான் அதிகம் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

    ReplyDelete
  54. [[[ராஜ நடராஜன் said...
    தமிழர்கள் நாயை எப்படி கொச்சைப்படுத்துகிறார்களோ அதே மாதிரி சிலர் பழக்க தோஷத்தில் அன்பான சொல்லாகவும் முக்கியமாக அடாவடி கோபத்தில் அரேபிகள் அமார் (கழுதை) என்றே அமார்களாகிறார்கள்.]]]

    சொல்லிட்டுப் போறாங்க.. நாயைவிட கழுதை நல்லாத்தான் இருக்கு..! நாயாவது குறைக்கும். கழுதை என்னத்த செய்யும்..?

    ReplyDelete
  55. [[[பார்வையாளன் said...
    சூப்பர் ஸ்டாரை நல்ல மனதை போற்ற ஒரு மனம் இருந்தால், நெகடிவ் ஓட்டு குத்தி விடலாம்..
    உண்மை தமிழனின் எழுததை ரசிக்க ஒரு மனம் இருந்தால், பாசிடிவ் ஓட்டு குத்தி விடலாம்..
    ஆனால் இருப்பதோ ஒரு ஓட்டு.. நான் என்ன செய்வேன் .. என்ன செய்வேன் என்ன செய்வேன்.]]]

    அதான் போன வாரம் இஷ்டத்துக்கு மைனஸ் ஓட்டைக் குத்திக் கிழிச்சீங்களே.. போதாதா..?

    ReplyDelete
  56. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    அட குசேலன் படத்துலையே சொல்லிடாரே. யாரோ எழுதி கொடுக்குறத அவர் பேசுறாரு. அதை ஏன் உணமைன்னு நம்பிட்டு அலையிறீங்க.]]]

    இல்லையே.. நாங்க பார்க்கும்போது மடமடன்னு மனப்பாடம் மாதிரில்ல ஒப்பிக்கிறாரு..!

    ReplyDelete
  57. [[[அலைகள் பாலா said...
    super memory power.]]]

    யாருக்கு ரஜினிக்குத்தானே..?

    ReplyDelete
  58. [[[மாணவன் said...

    நடந்த உண்மையெல்லாம் இப்படி பட்டுன்னு போட்டு உடைக்கிறீங்களே சார்...

    அதான் உண்மைத்தமிழனோ...

    //முடியல.. கை ரொம்ப அரிக்குது..! இன்னிக்கு கோட்டாவுக்கு ஏதாவது மேட்டர் எழுதணும்ல.. அதுனாலதான்..!//

    செம கலக்கல் சார்]]]

    நன்றி மாணவன் ஸார்..!

    ReplyDelete
  59. [[[ஜோதிஜி said...
    என்ன அண்ணே பாதிக்கு பாதி பேருங்க பொங்கியிருக்காங்க?]]]

    உயிருக்குயிரான ரசிகர்களாச்சே.. விடுவாங்களா..?

    ReplyDelete
  60. [[[எப்பூடி.. said...
    சூப்பர் ஸ்டாரா இருக்கிறது உலக மகா கஷ்டம்டா சாமியோவ்....... அதுவும் தமிழர்களிடம், குறிப்பாக உண்மை தமிழர்களிடம் :-)]]]

    செமத்தியான நோஸ்கட்.. எனக்கு ரத்தம் வழியுது ஸார்..!

    ReplyDelete
  61. [[[siva said...

    இன்னொன்று, ஒரு புகாராக பதிவிடும் அளவுக்கு இது பெரிய - சீரியஸான விஷயமும் அல்ல. ரஜினியின் வீடியோ பேச்சில், மதுரைக்கு நான் 32 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறேன்... மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போனேன்... என்றுதான் குறிப்பிடுகிறார்.

    -சிவா]]]

    புகாரெல்லாம் இல்ல ஸார்.. ச்சும்மா ஒரு ஜாலிக்குத்தான்..!

    ReplyDelete
  62. [[[ரஹீம் கஸாலி said...
    அட விடுங்க சார் ஏதோ குழப்பத்துல சொல்லியிருப்பாரு...“ஏதோ வாய்வரைக்கும் வந்திருக்கும்.. சொல்லிட்டாரு. விட்ருங்க ஸார். நம்ம ரஜினி ஸார்தானே..! அவரைப் பத்தித் தெரியாதா உங்களுக்கு..?” என்று பிற்பாடு அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் ஏன் உங்களுக்கேகூட போன் வந்தாலும் வரலாம்.]]]

    விட்டுட்டேன்..!

    ReplyDelete
  63. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

    //அதான் தெரியுதுல்ல.. அடக்கிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே..!? எதுக்கு இந்த போஸ்ட்டு..? நீயே எடுத்துக் குடுக்கிறியே..? நீயெல்லாம் ஒரு ரசிகனாடா..?" அப்படீன்னு நீங்க கேக்குறதும், திட்டுறதும் புரியுது..!//

    இன்னிக்கு கோட்டாவுக்கு ஏதாவது மேட்டர் எழுதணும்ல.. அதுனாலதான்..!//

    athane parthen...]]]

    வேற வழி.. போஸ்ட் எதுனாச்சும் ஐடியா கொடுங்கப்பா..!

    ReplyDelete
  64. [[[பார்வையாளன் said...
    "ஏன் உங்களுக்கேகூட போன் வந்தாலும் வரலாம்." கொஞ்சம் லேட்டாத்தான் போன் வந்தது. அதற்குள் அண்ணன் பதிவு போட்டுட்டாரு.]]]

    இல்லை. இன்னும் வரவேயில்லை..!

    ReplyDelete
  65. [[[sasibanuu said...

    //சூப்பர் ஸ்டாரா இருக்கிறது உலக மகா கஷ்டம்டா சாமியோவ்....... அதுவும் தமிழர்களிடம், குறிப்பாக உண்மை தமிழர்களிடம் :-)//

    Super.. comment... Nethiyadiiii!!!!!]]]

    ஓகே.. ஓகே.. உங்க சந்தோஷமே என் சந்தோஷம்..!

    ReplyDelete
  66. [[[vasan said...

    அதான், “அழகிரியும், ஸ்டாலினும் ஒரு சொத்து. தி.மு.க. கட்சி ஒரு சொத்து.. அந்தச் சொத்து இந்தச் சொத்தைப் பாத்துக்கணும்; இந்தச் சொத்து அந்தச் சொத்தைப் பார்த்துக்கணும்..”னு சொல்லியாச்சுல்ல.

    IS there any OTHER HIDDEN MEANING in this statement?]]]

    மொத்தத்துல போயஸ் ஆத்தா மறுபடியும் கோட்டைல கால் வைக்கக் கூடாதுன்றதுதான் எங்க தலைவரோட விருப்பம்..!

    ReplyDelete
  67. [[[andygarcia said...
    2000 வருஷமா வாழ்ந்து கொண்டிருப்பதாக வேறு ஒரு மேடையில் சொன்னார்,
    நூற்றாண்டுக்கு ஒருவராக சிஷ்யன் அது ரஜினியாம், ஸ்ரீதர் விஷயத்தில் சொன்ன பொய் படுகேவலம்.]]]

    சரி விடுங்க. அவசரத்துல வாய் தவறி வந்திருக்கும்..!

    ReplyDelete
  68. [[[எஸ்.கே said...
    சில சமயம் இதுபோல் தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன!]]]

    உண்மைதான் ஸார்.. பல சமயங்களில் எனக்கும் இதுபோல் நிகழ்ந்ததுண்டு..!

    ReplyDelete
  69. [[[Ayyanar said...
    ஏன்பா உண்மை தமிழா உங்களுகே தெரியும் ரஜினிய பத்தி எழுதின கண்டிப்பா நெரிய பேரு படிபாங்கனு தெரியும். அதனாலதான் ஒரு வெளம்பரத்துக்கு எதையாவது எழுதிட்டு போறது. உன்கிட்ட அதுக்கு எதாவது ப்ரோப் இருக்கா. இதுல கலர் கலரா வேற எழுதிருக்க.]]]

    சரி.. சரி.. அதுக்காக இப்படியா ஊரைக் கூட்டிச் சொல்றது.. நமக்குள்ளேயே இருக்கட்டும்..!

    ReplyDelete
  70. [[[சீனிவாசன் said...
    http://www.youtube.com/watch?v=JtsgYeOx3RY&NR=1]]]

    நன்றியோ நன்றி..!

    ReplyDelete
  71. [[[எஸ்.எஸ்.பூங்கதிர் said...
    சத்தியமா சொல்றேன் ஸார்... மிக நீண்ட நாட்களூக்குப் பிற்கு நான் ரசித்து வியந்த பதிவு இது.ரஜினியின் குணத்தைப் பற்றி மிக அழகாக எழுதி உள்ளீர்கள். இத்தனைக்கும் அவரின் ரசிகராய் இருந்து கொண்டே. நானும் அப்படிதான். நான் பாக்யராஜின் தீவிர ரசிகன். அவர் செய்யும் தவறுகளை வெளீப்படையாக அவரிடம் பேசுவேன். அவரும் அதை ரசிப்பார். சத்தியமாக கோபப்படவே மாட்டார். அந்த நல்ல மனசு ரஜினிக்கு வரவே வராது.]]]

    ஏன் வராது.. எப்பவுமே அவர் அப்படித்தான் இருக்காரு..!

    ReplyDelete
  72. [[[நடிகர்களின் ரசிகர்கள் நடிகன் என்ன பண்ணுனாலும் அதுதான் சரி என்று சப்பைக் கட்டு கட்டி பேசி வாதிட்டு, நம்மை உண்டு இல்லை என்று பண்ணி விடுவார்கள். நடிகனின் நடிப்பு பிடித்திருக்கிறது என்றால் அந்த நடிகன் தவறுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்று அவர்கள் நினைத்தால் அதற்க்கு நாம் என்ன செய்வது?]]]

    ஜெயதேவா ஸார்.. நல்ல பாயிண்ட்டை எடுத்துக் கொடுத்திருக்கீங்க.. நன்றி..!

    ReplyDelete
  73. [[[R.Gopi said...

    உண்மைத்தமிழன் சார்...

    தமிழ்நாட்டில் இரண்டு விஷயங்கள் மிக கடினம்..

    1) சூப்பர் ஸ்டார் ஆக இருப்பது...

    2) அதனினும் கடினம், அவருக்கு ரசிகராக இருந்து அவர் மேல் சொல்லும் பழி சொல்லுக்கு, பதிலளிப்பது.]]]

    ஆமா ஸார்.. பார்த்தீங்களா.. எத்தனை கொலைப் பழி.. இத்தனையையும் இனிமேல் நான்தான் சுமக்கோணும்..!

    ReplyDelete
  74. [[[பரிதி நிலவன் said...

    //அடுத்து இவரோட குரு ஒருத்தர். பாபா படத்து வெளியீட்டுக்கு வந்தாரு. கோவையில் கூட்டத்து நேரிசளிலேயே புட்டுகிட்டு போயிட்டாரு. //

    ரஜினிக்கு அவ்வப்போது அவருடைய குருஜிக்கள் மாறுவர் :) ஒரு சமயம் பாபா, இன்னொரு சமயம் தயானந்த சரஸ்வதி மற்றொரு சமயம் சச்சிதானந்த சுவாமிகள். இப்படி. ஏன் சமயத்தில் பால்தார்க்கரே கூட அவருக்கு தெயவமாய் தெரிவார்.
    அமெரிக்காவிலிருந்து பாபா வெளியீட்டிற்காக வந்த இந்த குரு பாபா படத்தைப் பார்த்துவிட்டு ஹார்ட் அட்டாக்கில் போய்ச் சேர்ந்தார் :)]]]

    அதுக்கென்ன செய்றது..? அவர் விதி இங்க வந்துதான் சாகணும்னு இருக்கு..!

    ReplyDelete
  75. [[[துளசி கோபால் said...
    உங்களவுக்கு அவருக்கு ஞாபகசக்தி இல்லைங்க. விட்டுத் தள்ளுங்க.
    நடிகர்கள் சொன்னது சொல்லாதது எல்லாத்தையும் உருவாக்கிப் பத்திரிகையில் போடும் 'நிருபர்களை'ப் பற்றியும் கொஞ்சம் எடுத்துரைக்கணும் நீங்க. பத்திரிகைகளின் அட்டையில் வரும் படங்களும் வாசகங்களும். என்னமோ போங்க:(]]]

    டீச்சர்.. எங்களைப் பத்தி நாங்களே கேவலமாப் பேசணும்னா எப்படி..?

    ReplyDelete
  76. [[[அனாமிகா துவாரகன் said...

    @ Jeyadeva,
    ha ha ha

    @UT uncle,
    //அதான் தெரியுதுல்ல.. அடக்கிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே..!? எதுக்கு இந்த போஸ்ட்டு..? நீயே எடுத்துக் குடுக்கிறியே..? நீயெல்லாம் ஒரு ரசிகனாடா..?" அப்படீன்னு நீங்க கேக்குறதும், திட்டுறதும் புரியுது!//

    இன்னிக்கு கோட்டாவுக்கு ஏதாவது மேட்டர் எழுதணும்ல.. அதுனாலதான்..!//

    ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha.]]]

    என்ன சிரிப்பு..? உண்மையைத்தாங்க சொன்னேன்..!

    ReplyDelete
  77. ரஜினி 90ல் மதுரை வந்தது ஒருபுறம் இருக்கட்டும் இப்பொழுது தனுஷ் கல்யாணமான வருடம் 2006ல் ராமேஸ்வரம் கோவில் சென்றுவிட்டு அருணாச்சலம் படத்தின் தயாரிப்பாளர் நாகராஜன் ராஜாவுடன் மதுரை வந்து அங்கு இருந்து
    விமானம் ஏறி சென்றது நினைவில்லையா

    ReplyDelete