Pages

Wednesday, October 27, 2010

கொல்ல முடியாத கணங்கள்..!

27-10-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!





கொல்ல முடியாத கணங்கள்..!

பூனையொன்றை பார்க்க வைத்தே
மீனின் குச்சி எலும்பைக் கூட
விடாத தர்மவான்களை..

ஒட்டிய வயிறோடு
கையை நீட்டும் சிறாரை
எட்டி உதைக்கும் கால்களுக்குச்
சொந்தக்காரர்களை..

வீடுவரையேனும்
விடாமல் துரத்தி
கையூட்டு வாங்கும்
அரசாளர்களை..

மன்னிப்பு கேட்டும்
மண்டியிட வைக்கும்
அதிகார வர்க்கத்தினரை..

அரைசாண் வயிற்றுக்காக
கழிவறைக்குள்
இறங்கியவனிடமே
காசு பார்க்கும் தரகனை..

குடும்பத்திற்காக
பணி தேடி வந்தவளை
படுக்கைவரை இழுத்தவனை..

தோல் சுருங்க
தூக்கி வளர்த்தவர்களை
மேல் கருக்க
மீளவும் உழைக்கனுப்பிய
உத்தம பிள்ளைகளை..
 

இருக்கிறான் ஆண்டவன்
என்றெண்ணி
பக்தன் அளித்ததை
கொள்ளையடிக்கும்
போலி பக்தர்களை..

இன்னும் நிறையவர்களை
கொல்லத்தான் நினைக்கிறேன்
தினம் தினமும்...

ஒவ்வொரு முறையும்
தோல்வியில் முடிகிறது
எனது முயற்சி..

இறுதியில் கண்டு கொண்டேன்..
இவர்களில் எங்கோ நானும்
ஒளிந்திருக்கிறேன் என்று..!


37 comments:

  1. கடைசி வரி

    ...... நிஜம்தான்

    ReplyDelete
  2. அண்ணாச்சி எல்லாரும் அப்படித்தான் இருக்கோம் .. நிதர்சனம் அண்ணாச்சி.. கவிதைக்குன்னு இன்னொரு தளம் ஆரம்பிங்களேன் அண்ணாச்சி.. இந்த இடத்த கட்டுரை, சினிமாக்கு மட்டும் விட்டு வைங்களேன்... சொல்ல மறந்துட்டேனே.. கவிதை ரொம்பா நல்லா வருது அண்ணாச்சி...

    ReplyDelete
  3. //இறுதியில் கண்டு கொண்டேன்..
    இவர்களில் எங்கோ நானும்
    ஒளிந்திருக்கிறேன் என்று..!//


    ம்ம்ம்ம் உங்களுக்குள் இப்படியொரு கவிஞன் ஒளிந்திருப்பது இப்பதான் தெரிகிறது..

    ReplyDelete
  4. ரொம்ப நல்லாருக்குங்கண்ணே... அடிக்கடி எழுதுங்க...! கதிர் சொன்னதுபோல் கடைசிவரி உண்மைதான்.

    ReplyDelete
  5. நாலு வாரப்பத்திரிக்கைகள் வாங்கி படிக்க வேண்டிய விசயங்களை நீங்கள் ஒருத்தர் தான் உருப்படியா எனக்கு கொண்டு வந்து சேர்த்துக்கிட்டு இருந்தீங்க. அதுக்கும் இப்ப ஆப்பா?

    வேண்டாம் சரவணன். ஹாலிவுட் பாலா இல்லைங்ற தைரியத்தில் இந்த போடு போடக்கூடாது. அதென்ன காய்ச்சலில் இருந்தா கவிதை அருவி மாதிரி கொட்டுமா?

    நல்லாத்தான் எழுதிறீங்க. ஆனா உங்க களம் வேறு? இராமசாமி கண்ணன் சொன்னமாதிரி.

    ReplyDelete
  6. இவனுக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்..!!

    ReplyDelete
  7. எங்கேயோ போய்க்கிட்டே.......... இருக்கீங்க.

    ReplyDelete
  8. //கண்டு கொண்டேன்..
    இவர்களில் எங்கோ நானும்//

    நானும்

    ReplyDelete
  9. [[[raghava said...
    அருமை.]]]

    நன்றி ராகவ்..!

    ReplyDelete
  10. [[[ராம்ஜி_யாஹூ said...
    arumai, appoppo katturaiyum eluthungal saamy.]]]

    உங்களை மாதிரியான ஊக்குவிப்பு நாயகர்கள் இருக்கும்போது எழுதமலா இருப்பேன். நிச்சயம் எழுதுகிறேன் ஸார்..!

    ReplyDelete
  11. [[[ஈரோடு கதிர் said...

    கடைசி வரி

    ...... நிஜம்தான்]]]

    அதான.. பொய்யுன்னு யாராவது சொல்ல முடியுமா என்ன..?

    ReplyDelete
  12. [[[Indian Share Market said...
    அருமை.]]]

    நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  13. [[[இராமசாமி கண்ணண் said...
    அண்ணாச்சி எல்லாரும் அப்படித்தான் இருக்கோம். நிதர்சனம் அண்ணாச்சி. கவிதைக்குன்னு இன்னொரு தளம் ஆரம்பிங்களேன் அண்ணாச்சி. இந்த இடத்த கட்டுரை, சினிமாக்கு மட்டும் விட்டு வைங்களேன். சொல்ல மறந்துட்டேனே. கவிதை ரொம்பா நல்லா வருது அண்ணாச்சி.]]]

    ஐயோ இன்னொண்ணா..? தாங்காது ராமசாமி.. இது ஒண்ணை வைச்சு சமாளிக்கிறதே பெரும்பாடா இருக்கு. ஆளை விடுங்க.. இதுவே போதும்கிறேன்..!

    ReplyDelete
  14. [[[Riyas said...

    //இறுதியில் கண்டு கொண்டேன்..
    இவர்களில் எங்கோ நானும்
    ஒளிந்திருக்கிறேன் என்று..!//

    ம்ம்ம்ம் உங்களுக்குள் இப்படியொரு கவிஞன் ஒளிந்திருப்பது இப்பதான் தெரிகிறது.]]]

    ஏதோ ஒண்ணு எழுதுறேன் ஸார்.. இது கவிதையா இல்லையான்றதெல்லாம் எனக்குத் தெரியாது..!

    ReplyDelete
  15. [[[பிரபாகர் said...
    ரொம்ப நல்லாருக்குங்கண்ணே... அடிக்கடி எழுதுங்க...! கதிர் சொன்னதுபோல் கடைசி வரி உண்மைதான்.]]]

    அடிக்கடி இல்ல பிரபா.. தினமும் ஒரு கவிதை எழுதுவேன்..!

    ReplyDelete
  16. [[[செந்தழல் ரவி said...

    Hi Mr.

    I think you are in LOVE.]]]

    போடாங்.. வாய்ல நல்லா வருது..!

    ஒரு ஆளு அதுக்குன்னு சிக்கியிருந்தா நான் ஏன் இப்படி எதையோ எழுதி புலம்பிக்கிட்டிருக்கப் போறேன்..?

    ReplyDelete
  17. [[[ஜோதிஜி said...

    நாலு வாரப் பத்திரிக்கைகள் வாங்கி படிக்க வேண்டிய விசயங்களை நீங்கள் ஒருத்தர்தான் உருப்படியா எனக்கு கொண்டு வந்து சேர்த்துக்கிட்டு இருந்தீங்க. அதுக்கும் இப்ப ஆப்பா?

    வேண்டாம் சரவணன். ஹாலிவுட் பாலா இல்லைங்ற தைரியத்தில் இந்த போடு போடக் கூடாது. அதென்ன காய்ச்சலில் இருந்தா கவிதை அருவி மாதிரி கொட்டுமா?

    நல்லாத்தான் எழுதிறீங்க. ஆனா உங்க களம் வேறு? இராமசாமி கண்ணன் சொன்ன மாதிரி.]]]

    உங்களுக்காகவே அடுத்தப் பதிவைப் போட்டுட்டேன் ஸார்..!

    ReplyDelete
  18. [[[இவன்... said...
    இவனுக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்..!!]]]

    ஹி.. ஹி.. ஹி.. நன்றி..!

    ReplyDelete
  19. [[[தருமி said...
    எங்கேயோ போய்க்கிட்டே.......... இருக்கீங்க.]]]

    எங்க பேராசிரியரா..? புழல் ஜெயிலை நோக்கியா..?

    ReplyDelete
  20. [[[நசரேயன் said...

    //கண்டு கொண்டேன்..
    இவர்களில் எங்கோ நானும்//

    நானும்]]]

    ஆஹா.. ஒத்துக் கொண்ட மூன்றாவது நபர் நீங்கதான் நசரேயன்..!

    ReplyDelete
  21. அவ்வப்போது இப்படியும் எழுதுங்கள் அருமையாய். வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  22. //தோல் சுருங்க
    தூக்கி வளர்த்தவர்களை
    மேல் கருக்க
    மீளவும் உழைக்கனுப்பிய
    உத்தம பிள்ளைகளை.\.//

    vaalththukkal.

    ReplyDelete
  23. [[[பிரபாகர் said...
    ரொம்ப நல்லாருக்குங்கண்ணே... அடிக்கடி எழுதுங்க...! கதிர் சொன்னதுபோல் கடைசி வரி உண்மைதான்.]]]

    அடிக்கடி இல்ல பிரபா.. தினமும் ஒரு கவிதை எழுதுவேன்..!

    ---
    அபாங்.. சிபாங்.. டபாங் (:

    ReplyDelete
  24. [[[Mahi_Granny said...
    அவ்வப்போது இப்படியும் எழுதுங்கள் அருமையாய். வாழ்த்துக்கள்.]]]

    நிச்சயம்.. தங்களுடைய உற்சாகமூட்டும் பின்னூட்டங்களே என்னை உரமேற்றுகின்றன..!

    ReplyDelete
  25. [[[மதுரை சரவணன் said...

    //தோல் சுருங்க
    தூக்கி வளர்த்தவர்களை
    மேல் கருக்க
    மீளவும் உழைக்கனுப்பிய
    உத்தம பிள்ளைகளை.\.//

    vaalththukkal.]]]

    நன்றி.. நன்றி.. நன்றி..!

    ReplyDelete
  26. [[[இராமசாமி கண்ணண் said...

    [[[பிரபாகர் said...
    ரொம்ப நல்லாருக்குங்கண்ணே... அடிக்கடி எழுதுங்க...! கதிர் சொன்னதுபோல் கடைசி வரி உண்மைதான்.]]]

    அடிக்கடி இல்ல பிரபா.. தினமும் ஒரு கவிதை எழுதுவேன்..!

    ---
    அபாங்.. சிபாங்.. டபாங் (:]]]

    தபாங்.. மபாங்.. கிபாங்..! இதெப்படி இருக்கு..?

    ReplyDelete
  27. [[[பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
    Great !!!! Sir nalla irukuthu]]]

    நன்றி நரியாரே..!

    ReplyDelete
  28. மானே.....தேனே..இல்லை

    ReplyDelete
  29. [[[மணிஜீ...... said...
    மானே. தேனே.. இல்லை]]]

    அதெல்லாம் இல்லண்ணே.. இது ச்சும்மா..! எழுத, எழுத வருது..!

    ReplyDelete
  30. அருமை!!
    நிதர்சனமானது! வாழ்க்கையில் எல்லோரும் ஏதேனும் ஒரு கணத்தில் இப்படி யோசிப்பதுண்டு! ஆனால் கடைசியில் அந்த யோசனை யோசனையாகவே நின்றுவிடுகிறது........

    ReplyDelete
  31. [[[எஸ்.கே said...
    அருமை!! நிதர்சனமானது! வாழ்க்கையில் எல்லோரும் ஏதேனும் ஒரு கணத்தில் இப்படி யோசிப்பதுண்டு! ஆனால் கடைசியில் அந்த யோசனை யோசனையாகவே நின்றுவிடுகிறது.]]]

    ஏன் நிற்கிறது என்று யோசித்தபோதுதான் இந்தக் கவிதை உருவானது..!

    எல்லாருக்குமே இந்த அனுபவம் உண்டு பாருங்கள்..!

    ReplyDelete