Pages

Tuesday, October 26, 2010

அள்ள முடியாத சொற்கள்..!


26-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!




அள்ள முடியாத சொற்கள்..!!!



மூச்சின்றி கிடந்தது என் வீட்டின்
வாசம்.!



கூடத்தில் சிதறிக் கிடந்தன
நான் வீசிய சொற்கள்.


மேலும் பேச விடாமல் நாவைத்
தடுத்தது மனம்.


அவரவர் மனதில் அவரவர் அம்புகள்
தயார் நிலையில்.
 

இனி யார் வீசுவது என்பதில்தான்
அனைவருக்கும் தயக்கம்.
 

இங்கே துவக்கம் ஒரு போரின்
அடையாளம்தான்..
 

துவங்கிய பின்பு 
செல்லும் திசையை
யார் கணிப்பது..?
 

பேச்சு, மூச்சுமில்லாமல் 
கிடப்பதுகூட
ஒருவகையில் பிராப்தம்தான்..
 

எந்த அம்பையும் எதிர்கொள்ளத்
தேவையில்லை..
 

வீட்டின் மெளனத்தைக் கலைத்தன
சிட்டுக் குருவிகளின் கூச்சல்.
 

கிடைத்த நேரத்தில் இரங்கிப் போக
எத்தனித்தேன்..
 

நான் வீசியிருந்த சொற்களே
என்னைத் தடுத்தன.
 

சிதறிக் கிடந்தவற்றை
முடிந்தவரை ஒழுங்காக்கினேன்.
 

ஆனால் அள்ள முற்பட்டுத்தான்
தோற்றுப் போனேன்..
 

மீண்டும், மீண்டும்
தோல்வியடைந்தேன்.
 

இறுதியில்
வேறொரு அம்பைத்தான்
என்னால் வீச முடிந்தது.

52 comments:

  1. //நான் வீசியிருந்த சொற்களே
    என்னைத் தடுத்தன. //

    சிந்தித்து பேசவேண்டும் என்ற கருத்தை எடுத்துக்கொள்களிறேன்.

    //இறுதியில்
    வேறொரு அம்பைத்தான்
    என்னால் வீச முடிந்தது.//

    அள்ள முடியாத சொற்களை அம்புகள் கொண்டு வீழ்த்தலாம் எனும் எண்ணத்தை வளர்க்கும் வரிகள் . அருமை நண்பரே..!

    ReplyDelete
  2. இதில் எந்தவிதமான உள்குத்து ஒன்றும் கிடையாது அல்லவா உண்மை தமிழரே
    என்னமோ எனக்கு இது வால் பையனுக்கு எழுதிய கவிதை போல் தெரிகிறது வாத்தியாரே
    அன்புடன்
    ராகவேந்திரன்,தம்மம்பட்டி

    ReplyDelete
  3. கவிப்பேரரசு உ.த அண்ணாச்சி வாழ்க :)

    ReplyDelete
  4. //சிதறிக் கிடந்தவற்றை
    முடிந்தவரை ஒழுங்காக்கினேன்.

    ஆனால் அள்ள முற்பட்டுத்தான்
    தோற்றுப் போனேன்...//

    //இறுதியில்
    வேறொரு அம்பைத்தான்
    என்னால் வீச முடிந்தது.//

    அருமைங்க...அநேகத் தருணங்களில் முடிவு இப்படித்தான் அமைந்துவிடுகிறது :(

    ReplyDelete
  5. 15270788164745573644 வீட்டு எண் தானே இது:)

    ReplyDelete
  6. கவிதை அருமை, தொடர்ந்து கவிதை உலகில் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் - நல்ல கவிதை

    ப்ரவீன்குமார் சொனனது போல் கடைசி வரி

    ReplyDelete
  8. மிக நன்று. தொடருங்கள்.

    ReplyDelete
  9. அண்ணே ,கவிதையிலும் கலக்கறீங்களே எப்படி?

    ReplyDelete
  10. கவிதையில்ம் கலக்கறீங்களே

    ReplyDelete
  11. அண்ணே உங்களுக்கு கட்டுரைகளை விடவும் எளிதாக கவிதை கைவருகிறது..

    இப்படி பேசியபின் அள்ளமுடியாத சொற்களை வைத்துகொண்டு நம்மை பழிதீர்க்கும் சொற்களை நாம்தான் தருகிறோம்..

    ReplyDelete
  12. /*நான் வீசியிருந்த சொற்களே
    என்னைத் தடுத்தன. */

    i like this word.. super padhivu

    ReplyDelete
  13. எவ்வளவு அற்புதமான கருத்துக்கள்! அருமை! சிறப்பாக கட்டுரைகள் எழுதும் உங்களுக்கு சிறப்பாக கவிதையும் எழுத வருகிறது! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. [[[பிரவின்குமார் said...

    //நான் வீசியிருந்த சொற்களே
    என்னைத் தடுத்தன. //

    சிந்தித்து பேசவேண்டும் என்ற கருத்தை எடுத்துக் கொள்களிறேன்.

    //இறுதியில் வேறொரு அம்பைத்தான்
    என்னால் வீச முடிந்தது.//

    அள்ள முடியாத சொற்களை அம்புகள் கொண்டு வீழ்த்தலாம் எனும் எண்ணத்தை வளர்க்கும் வரிகள் .

    அருமை நண்பரே..!]]]

    நன்றி பிரவீன்..!

    ReplyDelete
  15. [[[T.V.ராதாகிருஷ்ணன் said...
    அருமை]]]

    அய்.. கவிதைன்னாத்தான் தாத்தா நம்ம வூட்டுப் பக்கம் வர்றாரு..!

    ReplyDelete
  16. [[[நையாண்டி நைனா said...
    Nice]]]

    ஓ.. இதெல்லாம் கேட்டு வாங்க வேண்டியிருக்கு..!

    ReplyDelete
  17. [[[ராகவேந்திரன் said...

    இதில் எந்தவிதமான உள்குத்து ஒன்றும் கிடையாது அல்லவா உண்மை தமிழரே என்னமோ எனக்கு இது வால்பையனுக்கு எழுதிய கவிதை போல் தெரிகிறது வாத்தியாரே
    அன்புடன்
    ராகவேந்திரன்,தம்மம்பட்டி]]]

    தப்பிதமான அர்த்தம் ராகவேந்திரன். இதற்கும் வால்பையனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை..!

    ReplyDelete
  18. [[[இராமசாமி கண்ணண் said...

    கவிப்பேரரசு உ.த அண்ணாச்சி வாழ்க :)]]]

    ஐயையோ.. எனக்கு தர்ம அடி வாங்கிக் கொடுக்காம விட மாட்டீங்க போலிருக்கே..!

    ReplyDelete
  19. [[[சுந்தரா said...

    //சிதறிக் கிடந்தவற்றை
    முடிந்தவரை ஒழுங்காக்கினேன்.

    ஆனால் அள்ள முற்பட்டுத்தான்
    தோற்றுப் போனேன்...//

    //இறுதியில்
    வேறொரு அம்பைத்தான்
    என்னால் வீச முடிந்தது.//

    அருமைங்க. அநேகத் தருணங்களில் முடிவு இப்படித்தான் அமைந்து விடுகிறது :(]]]

    கோபத்தில் வீசிய வார்த்தைகளால் பல நல்லவர்களின் வாழ்க்கையும் சீரழிந்த கதையை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்..!

    நன்றி சுந்தரா..!

    ReplyDelete
  20. [[[ராஜ நடராஜன் said...
    15270788164745573644 வீட்டு எண்தானே இது:)]]]

    இல்லை.. பிளாக்கர் எண்..!

    ReplyDelete
  21. [[[ராம்ஜி_யாஹூ said...
    கவிதை அருமை, தொடர்ந்து கவிதை உலகில் சிறக்க வாழ்த்துக்கள்.]]]

    நன்றிங்கண்ணா.. பின்னூட்டச் சூறாவளியின் வாழ்த்து கிடைக்க கொடுத்து வைச்சிருக்கணும்..!

    ReplyDelete
  22. [[[சுல்தான் said...
    ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் - நல்ல கவிதை

    ப்ரவீன்குமார் சொனனது போல் கடைசி வரி]]]

    உண்மைதான் சுல்தான்.. பார்த்து வீச வேண்டும் வாளாக இருந்தாலும் சரி.. வார்த்தையாக இருந்தாலும் சரி..!

    ReplyDelete
  23. [[[ராமலக்ஷ்மி said...
    மிக நன்று. தொடருங்கள்.]]]

    நன்றிங்கோ மேடம்..!

    ReplyDelete
  24. [[[சி.பி.செந்தில்குமார் said...
    அண்ணே, கவிதையிலும் கலக்கறீங்களே எப்படி?]]]

    இப்பத்தான சாமி எழுதவே ஆரம்பிச்சிருக்கேன்..!

    ReplyDelete
  25. [[[கே.ஆர்.பி.செந்தில் said...

    அண்ணே உங்களுக்கு கட்டுரைகளை விடவும் எளிதாக கவிதை கை வருகிறது.]]]

    ஆஹா.. அப்படியா..? இனி கவிதைகளுக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து கட்டுரைகளை நிறுத்த முயல்கிறேன்..!

    [[[இப்படி பேசிய பின் அள்ள முடியாத சொற்களை வைத்து கொண்டு நம்மை பழி தீர்க்கும் சொற்களை நாம்தான் தருகிறோம்.]]]

    உண்மைங்கண்ணே..!

    ReplyDelete
  26. [[[Dhosai said...

    /*நான் வீசியிருந்த சொற்களே என்னைத் தடுத்தன. */

    i like this word.. super padhivu]]]

    நன்றி தோசை.. நல்ல பேரு..

    ReplyDelete
  27. [[[எஸ்.கே said...
    எவ்வளவு அற்புதமான கருத்துக்கள்! அருமை! சிறப்பாக கட்டுரைகள் எழுதும் உங்களுக்கு சிறப்பாக கவிதையும் எழுத வருகிறது! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!]]]

    ஐயா வந்துட்டீங்களா..? இப்பல்லாம் ஒவ்வொரு பதிவுக்கும் மனம் உங்களைத் தானாகத் தேடத் துவங்குகிறது..!

    ஏதோவொரு பந்தம் போலும்..!

    ReplyDelete
  28. உனா தானே, கவிதை எல்லாம் எழுதுவியாய்யா நீர்!ரொம்ப நல்லா (புரியும்படி) இருக்கு! தொடர்ந்து எழுதவும்!

    ReplyDelete
  29. உனா தானே, கவிதை எல்லாம் எழுதுவியாய்யா நீர்!ரொம்ப நல்லா (புரியும்படி) இருக்கு! தொடர்ந்து எழுதவும்!

    ReplyDelete
  30. அருமையான பதிவு! கோவத்தில் நாம் வீசும் சொற்களை எப்போதுமே அள்ள முடியாது!!!

    ReplyDelete
  31. ரொம்ப அனுபவிச்சு எழுதி இருக்கீங்க?. கடைசியில் அம்பை எய்து விட்டு வலி தாளாமல் வந்த கவிதையோ?

    ReplyDelete
  32. கலக்குறீங்க பாஸ்.

    ReplyDelete
  33. அண்ணே : ரொம்ப நல்லா இருக்கு..........

    ReplyDelete
  34. தலைவா....

    கவிதைலயும் கலக்கறீங்களே...

    அந்த கடைசி வரி :

    //இறுதியில்
    வேறொரு அம்பைத்தான்
    என்னால் வீச முடிந்தது.//

    இது என்ன “மன்மத அம்பு” தானே!! பார்த்து தல.... திரிஷா மேல வுட்டா, உலக நாயகன் கோபப்படப்போறாரு!!!

    ReplyDelete
  35. [[[அபி அப்பா said...
    உனாதானே, கவிதை எல்லாம் எழுதுவியாய்யா நீர்! ரொம்ப நல்லா (புரியும்படி) இருக்கு! தொடர்ந்து எழுதவும்!]]]

    தங்களது ஆசீர்வாதம்ண்ணே..!

    ReplyDelete
  36. [[[சிவா said...
    அருமையான பதிவு! கோவத்தில் நாம் வீசும் சொற்களை எப்போதுமே அள்ள முடியாது!!!]]]

    நன்றி சிவா..!

    ReplyDelete
  37. [[[Anandha Loganathan said...
    ரொம்ப அனுபவிச்சு எழுதி இருக்கீங்க? கடைசியில் அம்பை எய்து விட்டு வலி தாளாமல் வந்த கவிதையோ?]]]

    ம்.. அப்படியும் வைச்சுக்கலாம்.. அனுபவத்தில் விளைவதுதான் உண்மையாக இருக்கும் நண்பரே..!

    ReplyDelete
  38. [[[Gopi Ramamoorthy said...
    கலக்குறீங்க பாஸ்.]]]

    நன்றிங்கோ கோபி..!

    ReplyDelete
  39. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    அண்ணே : ரொம்ப நல்லா இருக்கு.]]]

    நல்லது தம்பி..!

    ReplyDelete
  40. [[[R.Gopi said...

    தலைவா....

    கவிதைலயும் கலக்கறீங்களே...

    அந்த கடைசி வரி :

    //இறுதியில்
    வேறொரு அம்பைத்தான்
    என்னால் வீச முடிந்தது.//

    இது என்ன “மன்மத அம்பு”தானே!! பார்த்து தல. திரிஷா மேல வுட்டா, உலக நாயகன் கோபப்படப் போறாரு!!!]]]

    கமல்=திரிஷா காம்பினேஷனே உதைக்குதே.. அதைப் பத்தி நீங்க யோசிக்கலையா..?

    ReplyDelete
  41. எதுக்கும் வாக்குவம் கிளீனர் பயன்படுத்தி பாருங்க

    ReplyDelete
  42. /ஆஹா.. அப்படியா..? இனி கவிதைகளுக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து கட்டுரைகளை நிறுத்த முயல்கிறேன்..! //

    அப்படியே அடுத்த கட்டத்துக்கு வாங்க! உங்களுக்கு ஹைக்கூ கவிதைகள்தான் கரெக்டு

    ReplyDelete
  43. [[[என்.ஆர்.சிபி said...
    எதுக்கும் வாக்குவம் கிளீனர் பயன்படுத்தி பாருங்க.]]]

    அதெல்லாம் எப்பவோ செஞ்சு பார்த்தாச்சு.. சிக்கவில்லை தம்பி..!

    ReplyDelete
  44. [[[என்.ஆர்.சிபி said...

    /ஆஹா.. அப்படியா..? இனி கவிதைகளுக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து கட்டுரைகளை நிறுத்த முயல்கிறேன்..! //

    அப்படியே அடுத்த கட்டத்துக்கு வாங்க! உங்களுக்கு ஹைக்கூ கவிதைகள்தான் கரெக்டு.]]]

    ஹைக்கூவா? அப்படீன்னா? ஏதாவது எக்ஸாம்பிள் கவிதையை எழுதியனுப்பு ராசா.. அப்பால பார்க்கலாம்..!

    ReplyDelete
  45. [[[அன்புடன் அருணா said...
    பூங்கொத்து! அருமை!]]]

    நன்றி.. நன்றி.. நன்றி..!

    ReplyDelete
  46. நன்றாக இருந்தது... தொடர்ந்து கவிதைகளை ஒரு கை பாருங்கள்..

    ReplyDelete
  47. [[[ஈ ரா said...
    நன்றாக இருந்தது... தொடர்ந்து கவிதைகளை ஒரு கை பாருங்கள்..]]]

    செஞ்சிருவோம்.. இது போன்ற உங்களுடைய உற்சாகமூட்டல் கிடைத்தாலே போதும்..!

    ReplyDelete