Pages

Sunday, October 24, 2010

கே.பாலசந்தர்-ரஜினி - அசத்தலான நேருக்கு நேர் பேட்டி..!


24-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 40-வது ஆண்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த சில நடிகர், நடிகைகள் மேடைக்கு வந்து தங்களைக் கவர்ந்த இயக்குநர்கள் யார், யார்..? தங்களுடைய வளர்ச்சியில் இயக்குநர்களுக்கு இருந்த பங்கு என்ன என்பதைப் பற்றி விலாவாரியாகப் பகிர்ந்து கொண்டார்கள்.

இந்த விழாவுக்கே முத்தாய்ப்பு வைப்பது போல ஒரு நிகழ்ச்சி இறுதியில் நடைபெற்ற ரஜினி-கே.பாலசந்தர் இருவர் மட்டும் கலந்து கொண்ட நேருக்கு நேர் பேட்டிதான்.

சுமார் இருபது நிமிடங்கள் நீடித்த இந்த நேருக்கு நேர் பேட்டியில் கே.பி.யின் அசத்தலான கேள்விகளும், ரஜினியின் பட், பட்டென்ற நறுக்குத் தெரித்தாற்போன்ற பதில்களும் கைதட்டல்களை அள்ளிக் கொண்டு போனது.

இந்தப் பேச்சில் கிடைத்த ஒரு மில்லியன் டாலர் ஸ்கூப் செய்தி ரஜினி நாடகத்தில் நடிக்கப் போவதுதான். கே.பி. தன்னுடைய புகழ் பெற்ற நாடகமான 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தை ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் அரங்கேற்றம் செய்யப் போகிறார். அதில் மேஜர் சந்திரகாந்தாக ரஜினியே நடிக்க இருக்கிறார். சூப்பர்தான்.. நாடக அரங்கங்களும் இதனாலேயே ஹவுஸ்புல் ஆனால் நமக்குச் சந்தோஷம்தான்..!

முதலில் மேடைக்கு வந்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் 'இயக்குநர் சிகரம்' பாலசந்தரைப் பற்றிப் பேசி அவரை மேடைக்கு அழைத்தார். பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினியையும் மேடைக்கு அழைத்து அவரையும்  பாலசந்தரின் அருகில் அமர வைத்துவிட்டுப் போனார்.

இதன் பின்பு பாலசந்தரே பேசத் தொடங்கினார்.

"ரஜினி இன்றைக்கு உலக சினிமாவுக்குப் போய்விட்டார். இந்திய சினிமாவின் உச்ச நடிகர். எவ்வளவோ வளர்ந்து விட்ட நிலையிலும் இன்றும் எனக்கு அவர் மாணவன்தான். என்னை எப்போதும் குருவாகவே மதிக்கிறார். நானும் அவரும் சந்திக்கும்போது எப்படி இருக்க? என்ன செய்யற? நல்லாயிருக்கேன்.. இவ்ளோதான்.. கொஞ்சம்தான் பேசுவோம்.. ஆனா இப்ப அவர்கிட்ட ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்சிருந்ததையெல்லாம் கேட்கலாமேன்னு நினைச்சிருக்கேன். இந்த விழா மேடையில் அதையெல்லாம் கேட்கப் போகிறேன்… இந்த மேடையைப் பொறுத்தவரை என்னை குருன்னு நினைக்காம ஒரு பிரஸ்காரனா அவர் நெனச்சிக்க வேண்டியதுதான்.
ரஜினி, இதுக்கு நீ உன்னால முடிஞ்ச அளவுக்கு பதில் சொல்லணும். பதில் சொல்ல வேண்டாம்னு நினைச்சா 'நோ கமெண்ட்ஸ்'ன்னு சொல்லிட்டுப் போயிரலாம். எனக்காக எந்தப் பயமும் வேண்டாம். ச்சும்மா ரிலாக்ஸா... ஒரு நேருக்கு நேரா இதை நினைச்சுக்க..

இங்க இருக்குற எல்லாருக்குள்ளேயும் உன்கிட்ட கேக்குறதுக்கு நிறைய கேள்விகள் இருக்கும். அப்படியொரு கேள்விப் பட்டியலைத்தான் நான் இவங்க சார்பா தயார் பண்ணி கொண்டு வந்திருக்கேன்..” என்று சொல்லிவிட்டு கேள்வி பதிலைத் தொடங்கினார்.

இந்த நேரத்தில் சன் டிவியின் தொகுப்பாளர் விஜயசாரதி ஒரு பேப்பரை கொண்டு வந்து ரஜினியிடம் கொடுத்துவிட்டு அவரது காதருகில் ஏதோ முனங்கிவிட்டுப் போனார். அந்தப் பேப்பரை கூர்ந்து படித்த ரஜினி எந்த ரியாக்ஷனும் காட்டாமல் சரி என்பது போல் தலையாட்டிவிட்டு கேள்வி-பதிலுக்குத் தயாரானார்.

இனி இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் கேட்ட கேள்விகளும், அதற்கு சூப்பர்ஸ்டார் ரஜினி அளித்த பதில்களும் என்னுடைய நினைவில் இருந்து இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

முழுமையாகத் தெரிய வேண்டுமெனில் வரும் தீபாவளிவரையில் பொறுமையாக இருங்கள். அன்றைக்கு சன் டிவியில் இந்த நிகழ்ச்சிதான் நிஜமான தீபாவளி.

சிவப்பு நிறத்தில் இருப்பதெல்லாம் இயக்குநர் சிகரத்தின் கேள்விகள்..

நீல நிறத்தில் இருப்பதெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பதில்கள்..

திரும்பவும் சிவாஜிராவாக மாற முடியுமா உன்னால்..?

இப்பவே அப்படித்தான் இருக்கேன்..

புகழ் உச்சிக்குப் போனாலும் இதனால உன்னோட பிரைவஸி போயிருச்சேன்னு உனக்கு வருத்தம் உண்டா..?

இருக்கு.

உன்னோட புகழால பிரைவஸியைவிட வேற எதையாவது இழந்துட்டியா..?

இப்ப சூழ்நிலைக் கைதி மாதிரிதான் இருக்கேன்.

உன்னோட வாழ்க்கைக் கதையை நீயே எழுதுவியா..?

ஆட்டோபயோகிராபின்னா நிச்சயம் நிறைய உண்மைகளை எழுதணும்.. வேண்ணா உங்ககிட்ட சொல்லி எழுதுவேன்..

உண்மையை எழுதறதால உனக்கு பயமா இருக்கா..?

ஜாஸ்தியா இருக்கு..

உன்னை இந்த அளவுக்குப் புகழ் உச்சில கொண்டு போய் வைச்சிருக்கிற இந்தத் தமிழ்ச் சமூகத்துக்கு நீ என்ன செய்யப் போற..?

பெருமைப்படற அளவுக்கு அவங்களுக்கு ஏதாவது செய்யணும். நிச்சயம் செய்வேன்.

நிறைய சினிமாக்களைப் பார்க்கும்போது இதை நாம பண்ணியிருந்தா நல்லாயிருக்குமேன்னு நினைச்சிருப்பியே.. அது மாதிரியான படங்கள் எது..?

நிறைய படங்கள்.. பெயர் வேண்டாமே..

நீ ஒன் மேன் ஆர்மி மாதிரி. நீயே ஒரு படம் டைரக்ட் செஞ்சா என்ன..?

அது ஒரு பெரிய பொறுப்பு. என்னால செய்ய முடியுமான்னு தெரியலை.. யோசிக்கணும்.. இப்போதைக்கு முடியாதுன்னுதான் நினைக்கிறேன்.

ஒருவேளை அப்படி நீ படம் எடுத்தா என்னை அஸிஸ்டெண்ட்டா சேர்த்துக்குவியா..?

சிரிப்பு

நீ இதுவரைக்கும் மொத்தமா எத்தனை படத்துல நடிச்சிருக்க..?

154

50 வருஷம் கழிச்சு உன்னோட படத்துல எந்தப் படத்தை ரீமேக் செய்யலாம்னு நினைக்கிற..?

ராகவேந்திரா.. பாட்சா, எந்திரன்..

இதுல என் படத்தை ஏன் சொல்ல மாட்டேன்ற..?

சிரிப்பு..

அமிதாப்பச்சன் செஞ்ச 'சீனி கம்' மாதிரி கதையம்சம் உள்ள படத்துல நடிப்பியா..?

அது மாதிரி நமக்கு செட்டாகாது. கமலுக்குத்தான்..

தேசிய விருது வாங்கலையேன்னு உனக்கு இப்பவும் வருத்தம் இருக்கா? இல்லியா..?

இருக்கு.. அது மாதிரி நல்ல கதையோட டைரக்டர்ஸ் அமையலை.. இனிமே நீங்க பண்ணினாத்தான்..

நான் உன்னை வைச்சு இனிமே படமே பண்ண முடியாதுப்பா. நீ எங்கயோ போயிட்ட..

சரி அதை விடு. என்னோட நாடகத்துல நடிப்பியா..?

கண்டிப்பா..

என்னோட மேஜர் சந்திரகாந்த் நாடகத்தைத் திருப்பிப் போடப் போறேன். ஏப்ரல்-15 வைச்சுக்கலாமா? ரெண்டு நாள் மட்டும் டேட் கொடு. போதும்..

சரி..

கமல் என்னை நடிக்க வைச்சு டைரக்ட் பண்றேன்னு சொல்றாரு. ஆனா நீ ஏன் அது மாதிரி சொல்ல மாட்டேன்ற..?

செஞ்சா சொல்றேன்..

ரஜினிகாந்த்ன்னு உனக்கு என்னிக்கு பேர் வைச்சேன்னு ஞாபகம் இருக்கா..?

ஹோலிப் பண்டிகை அன்னிக்கு..

அப்போவெல்லாம் ஒவ்வொரு வருஷமும் ஹோலிப் பண்டிகைக்கும் இந்தப் பேர் வைச்சதை ஞாபகம் வைச்சிருந்து என்னைப் பார்க்க வருவ.. கொஞ்ச வருஷம் வந்துக்கிட்டிருந்த.. அப்புறம் வர்றதில்லை.. மறந்துட்டியேப்பா..

இனிமேல் நடக்காது. கண்டிப்பா வருவேன்.

ஆனா, எனக்கு ஹோலிப் பண்டிகைன்னாலே உன் ஞாபகம்தான் வரும்.. ஓகே..

என் படத்துல நடிக்கும்போது ஏண்டா, இவன்கிட்ட மாட்டிக்கிட்டோம்ன்னு என்னிக்காவது நினைச்சிருக்கியா..?

நிறைய தடவை..

நாம ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணினதே 5 படம்தான் இருக்கும். அதுக்குள்ளயே நிறைய தடவை யோசிச்சுட்டியா..?

சிரிப்பு

உனக்கு ஞாபகம் இருக்கா.. 'தில்லுமுல்லு' படத்துல நடிக்க உன்னைக் கூப்பிட்டப்போ “உன்னால காமெடி செய்ய முடியும். தைரியமா செய்”யுன்னு நான்தான் அழுத்தி, அழுத்திச் சொன்னேன்.

ஆமாமாம்..

நீதான் ரொம்ப பயந்த.. ஏன்னா மீசையை எடுக்கணுமேன்னு..!? 

சிரிப்பு

'அவர்கள்' ஷூட்டிங் சமயத்துல உன்னை கண்டபடி திட்டிட்டேன். கோச்சுக்கிட்டு வெளில போயிட்டேன். நீ மறக்கலியே..?

இல்லை..

பஸ் கண்டக்டரா இருக்கும்போது யாரையாவது லவ் பண்ணியிருக்கியா..?

அப்புறமா சொல்றேன்..

எந்திரன் உன் அல்டிமேட் படமா..?

இல்லை..

நான் எந்திரன் படத்தை 2 தடவை பார்த்தேன். உனக்காகத்தான்.. நீ என் படத்தை என்னிக்காச்சும் 2 தடவை பார்த்திருக்கியா..?

நிறைய பார்த்திருக்கேன்..

எந்திரன் படத்தை முடிச்சிட்ட..? மகளுக்கும் கல்யாணம் செஞ்சு வைச்சிட்ட.. இப்ப உன்னோட அடுத்தக் கவலை என்ன..?

எதைப் பத்தியும் நினைக்கலை..

இப்போ என்கிட்ட என்ன எதிர்பார்க்குற..?

இந்தக் கேள்வி பதில் எப்போ முடியும்..?

உனக்குப் புடிச்ச சூப்பர் ஸ்டார்.. எந்தத் துறையில வேண்டுமானாலும் இருக்கலாம்..

சிங்கப்பூர் முன்னாள் பிரைம் மினிஸ்டர் லீ க்வான் யூ..

கவிதை எழுத ஆசை இருக்கா உனக்கு?

இருக்கு.

அதற்கு ஏதாவது முயற்சி செஞ்சிருக்கியா..?

இல்லை.

இவர் போல் இல்லையேன்னு நீ யாரையாவது பார்த்து நினைச்சிருக்கியா..?

நிறைய பேர்..
 

வாழ்க்கையில யாரையாவது பார்த்து பொறாமைப்பட்டிருக்கியா?

இமயமலையில் உள்ள துறவிகளைப் பார்த்து ரொம்ப பொறாமைப்பட்டிருக்கிறேன்.

உனக்குச் சின்னச் சின்ன ஆசைகள் உண்டா..?

உண்டு..

இப்பவும் சிகரெட் பிடிப்பியா..?

நிறைய..

விடுறா.. நீ விட்டீன்னா நாட்ல நிறைய பேர் விட்ருவாங்க. உனக்கே தெரியும் நான் பாக்கெட், பாக்கெட்டா எத்தனை ஊதியிருக்கேன்னு. நானும் ஒரு நாள் விட்டேன். நீயும் விட்ரு என்ன..?

ட்ரை பண்றேன்..

இந்த நேரத்தில் இடையில் புகுந்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், “ரஜினி சிகரெட் பிடிக்கவே நீங்கதான் ஸார் காரணம். நீங்கதான் அதைப் படம் பிடிச்சு காட்டுனீங்க..” என்று சொல்ல சட்டென்று உஷ்ணமாகிவிட்டார் கே.பி.

“அவரு அப்படி, இப்படின்னு ஸ்டைலா தூக்கிப் போடுறதை மட்டும்தான் செஞ்சு காட்டுறான்னு சொல்லி படத்துல வைச்சேன். புகையை விடச் சொல்லலியே..?” என்று கேட்க ரஜினியே சிரித்துவிட்டார்..

இனிமேல் நான் கேட்கிற எல்லா கேள்விக்கும் ஒரு வரியில்தான் பதில் சொல்லணும். ஓகேவா?

ரஜினி சரியென்று தலையாட்டினார்.

உனக்குப் பிடித்த தமிழ் இயக்குநர் யார்?

மகேந்திரன்..

உனக்குப் பிடித்த புத்தகம் எது?

பொன்னியின் செல்வன்..

குடும்பத்தோடு நீ சென்று வந்த பிக்னிக் ஸ்பாட்..?

லண்டன்..

நீ மட்டும் தனியா போயிட்டு வந்த இடம்.. இமயமலையைத் தவிர..?

நேபாளம்..

அதுவே கிட்டத்தட்ட இமயமலைதான்.. சரி விடு..  

உனக்குப் பிடித்த உணவு எது?

சிக்கன்.

யார்கிட்ட சொல்றான் பாருங்க. என்கிட்ட.. ஏதாவது வெஜ் அயிட்டம் சொன்னீன்னா நான் அதை பாலோ பண்ணலாம்னு நினைச்சேன்..

உன்னோட பெஸ்ட் பிரெண்டு யாரு..?

ராவ்பகதூர்..

ஏற்கெனவே சொல்லியிருக்க.. சரி.. உன்னோட பேவரிட்டான வண்டி..

ஜாவா மோட்டார் பைக்..

நீ இப்பவும் நினைச்சுப் பார்த்து சந்தோஷப்படுற நாள்..?

கே.பி. ஸார் என்னை அவர் படத்துல புக் செஞ்ச நாள்..

நீ இப்பவும் நினைச்சு துக்கப்படுற நாள்..?

எங்கப்பா செத்த நாள்..

நீ மறக்காம வைச்சிருக்கிறது..?

முள்ளும் மலரும் படம் பார்த்துட்டு நீங்க எனக்கு எழுதின லெட்டர்..

உன்னை ரொம்ப அவமதிப்பு செஞ்ச விஷயம்..?

வேண்டாமே..

உன்கிட்டயே உனக்குப் பிடிக்காதது..?

என்கிட்ட எனக்குப் பிடிக்காதது எது..?

என்கிட்ட உனக்குப் பிடிக்காதது எது..?

உங்க கோபம்..

சரி.. என்கிட்ட மட்டுமாச்சும் ரகசியமா சொல்லு.. அரசியலுக்கு நீ வருவியா? மாட்டியா..?

மேலே கைகளைத் தூக்கிக் காண்பித்தார்.

இப்ப நீ ஏதாவது சொல்றதா இருந்தா சொல்லிக்க..!

நோ கமெண்ட்ஸ்..

 இத்துடன் நேருக்கு நேர் முடிந்தது..!

ஒரு சில இடங்களில் கேள்வி-பதிலையும் மீறி ரஜினியும், கே.பி.யும் பேசிக் கொண்டார்கள். அதனை நினைவில் கொண்டு வர முடியவில்லை..

கிட்டத்தட்ட 90 சதவிகிதத்தை இதில் எழுதியிருக்கிறேன்.

நள்ளிரவு 11 மணிக்குத்தான் இந்த நிகழ்வு தொடங்கியது.. என்னுடைய வருத்தமெல்லாம் என்னவெனில், இது மாதிரியான ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி பின்னால் வரப் போகிறது என்பது தெரியாததால் நிறைய நடிகர், நடிகைகளும், பொதுமக்களும் லேட்டாயிருச்சேன்னு எழுந்து போய்விட்டது சோகமானது.

கிட்டத்தட்ட காலரியில் பாதி காலியான நிலையில்தான் இந்தப் பேட்டி நடந்து கொண்டிருந்தது மிக, மிக வருத்தமானது. இதனை முன்கூட்டியே சொல்லியிருந்தாலாவது கூட்டம் இருந்திருக்கும். அல்லது முன்கூட்டியே இதனை நடத்தியிருக்கலாம். 

இதற்குப் பின்பும் 1 மணிவரை நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது..!


11-01-2011 அன்று வீடியோ இணைக்கப்பட்டது :



82 comments:

  1. சூப்பரேய்ய்ய்ய்ய்ய்ய் !


    :) தீபாவளி ஸ்பெஷலா?!
    ரைட்டு கலக்கல் கொண்டாட்டம் தான்

    ReplyDelete
  2. சூப்பர் சார்! அருமையா இருக்கு!

    ReplyDelete
  3. விளம்பர தொல்லை இல்லாமல் நிகழ்ச்சியை பார்க்கத் தந்த உங்களுக்கு நன்றி தலைவா

    ReplyDelete
  4. //முருகன் செஞ்ச சதி.. வேறென்னத்த சொல்றது..!//

    ஹுமும் ....,இதுக்கு பேரு தான் தன்னை தானே EMMATHIKARATHU ,முருகனை EMMATHIRATHU ...,அந்த மனுஷன் (முருகன் ) என்ன பண்ணான் ...,தான் உண்டு நம்மளை பாக்கிறதுக்கு வரவங்களுக்கு அமைதியையும் ,அருளையும் வழங்கி

    கொண்டு கந்த கோட்டத்தில இருக்கான் ...,அவனை போய் நீங்க குற்றம் சொல்றது அடுக்குமா ..,அண்ணே ..,இதுக்கே முருகன் என்ன பண்ண போறான் பாருங்க ...,அடுத்த முக்கியமான போஸ்ட் போடும் போது ...,ஒரு

    நாள் பூரா கரண்ட் கட் போறான் :))))

    ReplyDelete
  5. அண்ணா-

    மிகவும் ரசித்தேன். அரிய நிகழ்ச்சியை முதலில் பதிவு செய்த உங்களுக்கு என் நன்றி.

    (ஒரு எடத்துல கேள்வி பதில் கலர் மாறிருக்கு..)

    ReplyDelete
  6. இனி நீங்க பண்ண தப்புக்கு முருகன் மீது பழியை போட்டால் வீறு கொண்டு எழுந்திடுவான் ...,இந்த நரி ..,:))

    ReplyDelete
  7. ஒப்புக்கு சப்பாணியா இதே நக்கீரன் பேட்டி பார்த்தேன்.நீங்க அசலா அசத்துறீங்க.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. //சரி.. என்கிட்ட மட்டுமாச்சும் ரகசியமா சொல்லு.. அரசியலுக்கு நீ வருவியா? மாட்டியா..?//

    அப்ப எப்ப வருவேன்னு எனக்கே தெரியாது
    வசனம் உண்மையாகப் போகுதா?

    முதலில் திண்ணை காலியாகட்டும்.பார்க்கலாம்.

    ReplyDelete
  9. அண்ணே சூப்பர் COVERAGE ..., நேர்ல பார்த்த மாதிரி இருக்கு ...,

    ReplyDelete
  10. //சிவப்பு நிறத்தில் இருப்பதெல்லாம் இயக்குநர் சிகரத்தின் கேள்விகள்..

    பச்சை நிறத்தில் இருப்பதெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பதில்கள்..//

    அண்ணா,

    பச்சை நிறமே இல்லையெண்ணா?

    ReplyDelete
  11. அருமை தமிழன். பத்திரிகையாளர் ஸ்டைல் இப்போதான் சரியா வெளிப்பட்டிருக்குன்னு நெனக்கிறேன்.

    நானும் அந்த நிகழ்ச்சியில் இருந்தேன். உங்கள் கவரேஜ் 85 சதவீதம் சரியாகவே உள்ளது. நம்மாளுங்க பலபேர் 50 பர்சென்ட் கூட சரியா ரிப்போர்ட் பண்றதில்லை. Good Job. Thanks.

    -Siva

    ReplyDelete
  12. ரஜினியின் வார்த்தைகளில் இருந்த உண்மை தெரியும்படியாக பதிவு செய்திருக்கிறீர்கள். நல்ல முயற்சி. ஆபாவாணனின் "தோல்வி நிலையென " பாடலை இருமுறை இசைக்கச் செய்து அனைவரும் உடன் பாடியதும் உணர்வு பூர்வமாக இருந்ததாக கேள்விப்பட்டேன்...

    ReplyDelete
  13. ரஜினிகாந்த்னு பெயர் வச்ச நாள் ஹோலி பண்டிகையா... போகிப் பண்டிகையா?

    ஹோலின்னு சொன்னதா ஞாபகம். நினைவுபடுத்திச் சொல்லுங்க.

    ReplyDelete
  14. பேட்டி மொக்கை. ஆனால் நீங்கள் பதிவிட்ட விதம் மிக அருமை

    ReplyDelete
  15. பேட்டியும் அருமை.. தொகுப்பும் அருமை..

    பிறவி பத்திரிகையாளன் என்பதை நிரூபித்து விட்டீர்...

    உங்களுக்கான் காலம் இனிமேல்தான் வரப்போகிறது என நினைக்கிறேன்..
    நல்ல மனம், உழைப்பு, திறமை எல்லாம் கொண்ட உங்களுக்க்கு நேரம் மட்டும் கூடி வந்து விட்டால் , தமிழ் நாட்டின் முக்கியமான ஒருவராக திகழ்வீர்கள்..

    ( சென்ற பதிவில், சும்மா சீண்டுவதற்காக உங்கள் தந்தை போன் நம்பர் கேட்டேன்.. உண்மை தெரிந்து அதிர்ந்து விட்டேன்,, மனதை காயப்படுத்தி இருந்தால் , மனப்பூர்வமாக வருந்துகிறேன் .. )

    ReplyDelete
  16. [[[ஆயில்யன் said...
    சூப்பரேய்ய்ய்ய்ய்ய்ய்!:) தீபாவளி ஸ்பெஷலா?! ரைட்டு கலக்கல் கொண்டாட்டம்தான்.]]]

    தீபாவளியை தலைவரோட சேர்ந்து கொண்டாடுங்க ஆயில்யன்..!

    ReplyDelete
  17. [[[எஸ்.கே said...
    சூப்பர் சார்! அருமையா இருக்கு!]]]

    மிக்க நன்றி எஸ்.கே. ஸார்.. ஒவ்வொரு பதிவுக்கும் தங்களுடைய வருகை எனக்கு அளவில்லாத உற்சாகத்தைத் தருகிறது..

    ReplyDelete
  18. [[[Sukumar Swaminathan said...
    விளம்பர தொல்லை இல்லாமல் நிகழ்ச்சியை பார்க்கத் தந்த உங்களுக்கு நன்றி தலைவா.]]]

    நன்றி சுகுமார்..!

    ReplyDelete
  19. பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

    //முருகன் செஞ்ச சதி.. வேறென்னத்த சொல்றது..!//

    ஹுமும், இதுக்கு பேருதான் தன்னைதானே EMMATHIKARATHU, முருகனை EMMATHIRATHU, அந்த மனுஷன்(முருகன் ) என்ன பண்ணான். தான் உண்டு நம்மளை பாக்கிறதுக்கு வரவங்களுக்கு அமைதியையும், அருளையும் வழங்கி
    கொண்டு கந்த கோட்டத்தில இருக்கான். அவனை போய் நீங்க குற்றம் சொல்றது அடுக்குமாண்ணே. இதுக்கே முருகன் என்ன பண்ண போறான் பாருங்க. அடுத்த முக்கியமான போஸ்ட் போடும் போது ஒரு நாள் பூரா கரண்ட் கட் போறான் :))))]]]

    ஏற்கெனவே இது மாதிரி நிறைய செஞ்சிருக்கான் நரி ஸார்..!

    ReplyDelete
  20. [[[பரிசல்காரன் said...
    அண்ணா- மிகவும் ரசித்தேன். அரிய நிகழ்ச்சியை முதலில் பதிவு செய்த உங்களுக்கு என் நன்றி. ஒரு எடத்துல கேள்வி பதில் கலர் மாறிருக்கு..)]]]

    பல மாதங்கள் கழித்து என் வீட்டுக்கு வருகை தந்திருக்கும் எழுத்தாளர் பரிசல்குமாரனுக்கு எனது நன்றிகள்..

    தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்திவிட்டேன் பரிசல்..!

    ReplyDelete
  21. [[[பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
    இனி நீங்க பண்ண தப்புக்கு முருகன் மீது பழியை போட்டால் வீறு கொண்டு எழுந்திடுவான். இந்த நரி.:))]]]

    நல்லது. சந்தோஷம்..!

    ReplyDelete
  22. [[[ராஜ நடராஜன் said...
    ஒப்புக்கு சப்பாணியா இதே நக்கீரன் பேட்டி பார்த்தேன். நீங்க அசலா அசத்துறீங்க. வாழ்த்துக்கள்.]]]

    மிக்க நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  23. [[[ராஜ நடராஜன் said...

    //சரி.. என்கிட்ட மட்டுமாச்சும் ரகசியமா சொல்லு.. அரசியலுக்கு நீ வருவியா? மாட்டியா..?//

    அப்ப எப்ப வருவேன்னு எனக்கே தெரியாது. வசனம் உண்மையாகப் போகுதா? முதலில் திண்ணை காலியாகட்டும். பார்க்கலாம்.]]]

    கதை கடைசீல அப்படித்தான் ஆகப் போகுது..!

    ReplyDelete
  24. [[[பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
    அண்ணே சூப்பர் COVERAGE. நேர்ல பார்த்த மாதிரி இருக்கு.]]]

    ரொம்ப சந்தோஷம்..!

    ReplyDelete
  25. [[[என். உலகநாதன் said...

    //சிவப்பு நிறத்தில் இருப்பதெல்லாம் இயக்குநர் சிகரத்தின் கேள்விகள்.. பச்சை நிறத்தில் இருப்பதெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பதில்கள்..//

    அண்ணா, பச்சை நிறமே இல்லையெண்ணா?]]]

    மன்னிக்கணும். நீல நிறம் என்பதற்கு பச்சை நிறம் என்று சொல்லிவிட்டேன்..!

    ReplyDelete
  26. [[[siva said...

    அருமை தமிழன். பத்திரிகையாளர் ஸ்டைல் இப்போதான் சரியா வெளிப்பட்டிருக்குன்னு நெனக்கிறேன்.
    நானும் அந்த நிகழ்ச்சியில் இருந்தேன். உங்கள் கவரேஜ் 85 சதவீதம் சரியாகவே உள்ளது. நம்மாளுங்க பல பேர் 50 பர்சென்ட்கூட சரியா ரிப்போர்ட் பண்றதில்லை. Good Job. Thanks.

    -Siva]]]

    இதிலேயும் நிறைய தவறுகள் சிவா. அவ்வப்போது திருத்தியபடியே உள்ளேன். தங்களுடைய பகிர்வுக்கும், வெளிப்படையான கருத்துக்கும் மிக்க நன்றி..!

    ReplyDelete
  27. [[[Kuttymaanu said...
    ரஜினியின் வார்த்தைகளில் இருந்த உண்மை தெரியும்படியாக பதிவு செய்திருக்கிறீர்கள். நல்ல முயற்சி. ஆபாவாணனின் "தோல்வி நிலையென" பாடலை இரு முறை இசைக்கச் செய்து அனைவரும் உடன் பாடியதும் உணர்வுபூர்வமாக இருந்ததாக கேள்விப்பட்டேன்.]]]

    ஆமாம்.. நானும் கேள்விப்பட்டேன். நான் 12 மணிக்கு அங்கிருந்து கிளம்பியதால் தெரியவில்லை..!

    ReplyDelete
  28. [[[siva said...
    ரஜினிகாந்த்னு பெயர் வச்ச நாள் ஹோலி பண்டிகையா... போகிப் பண்டிகையா? ஹோலின்னு சொன்னதா ஞாபகம். நினைவுபடுத்திச் சொல்லுங்க.]]]

    சிவா ஸார்.. நீங்க சொன்னதுதான் கரெக்ட்டு.. ஹோலிதான்.. இப்போது விசாரித்து தெரிந்து, திருத்தி விட்டேன்.

    ReplyDelete
  29. [[[ராம்ஜி_யாஹூ said...
    MANY THANKS]]]

    வாங்கண்ணே.. இதெல்லாம் நம்ம கடமைண்ணே..!

    ReplyDelete
  30. [[[ராம்ஜி_யாஹூ said...
    பேட்டி மொக்கை. ஆனால் நீங்கள் பதிவிட்ட விதம் மிக அருமை.]

    நீங்க டிவில பாருங்க.. எப்படின்னு தெரியும்..!?

    ReplyDelete
  31. [[[பார்வையாளன் said...

    பேட்டியும் அருமை.. தொகுப்பும் அருமை.. பிறவி பத்திரிகையாளன் என்பதை நிரூபித்து விட்டீர்.
    உங்களுக்கான் காலம் இனிமேல்தான் வரப்போகிறது என நினைக்கிறேன்..
    நல்ல மனம், உழைப்பு, திறமை எல்லாம் கொண்ட உங்களுக்க்கு நேரம் மட்டும் கூடி வந்து விட்டால் , தமிழ் நாட்டின் முக்கியமான ஒருவராக திகழ்வீர்கள்.]]]

    மிக்க நன்றிகள் ஸார்..!

    (சென்ற பதிவில், சும்மா சீண்டுவதற்காக உங்கள் தந்தை போன் நம்பர் கேட்டேன். உண்மை தெரிந்து அதிர்ந்து விட்டேன், மனதை காயப்படுத்தி இருந்தால், மனப்பூர்வமாக வருந்துகிறேன்.)

    நோ பிராப்ளம்.. இதுக்கெல்லாம் போய்க் கவலைப்பட்டுக்கிட்டு.. என்கிட்டதான கேட்டீங்க. விடுங்க..!

    ReplyDelete
  32. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    தோழர்களே..! இந்தக் கட்டுரையில் எனக்கு நினைவுக்கு இருந்தவரையில் எழுதியிருந்தேன். சிற்சில தவறுகள் இருந்தன. இன்னமும் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.

    ரஜினிக்கு பெயர் வைத்த நாள் போகிப்பண்டிகை நாள் அல்ல ஹோலி பண்டிகை தினம் என்று சிவா சொன்னது உண்மைதான்.

    மேலும் ஒவ்வொரு கேள்வியின்போதும் ரஜினி கூடுதலாகவும் சில வார்த்தைகளைப் பேசினார். இது என்வழி.காம் மற்றும் தேட்ஸ்தமிழ்.காமில் பதிவாகியுள்ளது.

    அந்த அளவுக்கு என்னால் குறிப்பெடுக்க முடியவில்லை. எனது காது பிரச்சினையோடு கேலரியில் அமர்ந்திருந்ததால் சரிவரக் கேட்காமல் போய்விட்டது. மேலும் கே.பி.யும், ரஜினியும் பேசியதே ஓவர் ஸ்பீடு.. டிவியில் பாருங்கள். உங்களுக்கே புரியும்.

    இனிமேலான தவறுகளுக்கும் பெரிய மனது பண்ணி என்னை மன்னியுங்கள்..

    ReplyDelete
  33. KB was economically down, to uplift him Rajini agreed to do a film for him, but on one condition....??? KB shouldn't direct it!! That film is........Annamalai!

    ReplyDelete
  34. "எனது காது பிரச்சினையோடு கேலரியில் அமர்ந்திருந்ததால் சரிவரக் கேட்காமல் போய்விட்டது"

    மிகைப்படுதுவதாக நினைத்தாலும் பரவாயில்லை..
    இந்த வரியை படிக்கும்போது லேசாக கண்கலங்கி விட்டது..
    எதிர் நீச்சல் போடும்போதே , இவ்வளவு வித்தை காட்டுவது பாராட்டுக்குரியது..

    ReplyDelete
  35. @ ராம்ஜி_யாஹூ

    //பேட்டி மொக்கை.//


    பக்கத்தில எங்கயாவது ஜெலுசில் இருந்தால் அதை வாங்கி பயன்படுத்தினால் உடம்புக்கு நல்லது பாஸ்.

    ReplyDelete
  36. jayadeva

    //KB was economically down, to uplift him Rajini agreed to do a film for him, but on one condition....??? KB shouldn't direct it!! That film is........Annamalai!//


    ரஜினி கேபி கிட்ட கண்டிசன் போடும்போது தாங்கள் அங்கு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ரஜினி அல்லது கேபி அலுவலகத்தில் நீங்கள் வேலைபார்த்து எங்களுக்கு தெரியாம போச்சே, வாழ்த்துக்கள் சார். அப்புறம் இப்ப வயிறு எப்படி? ஓகேவா ?

    ReplyDelete
  37. நீங்க தான் பத்திரிக்கையாளர்..

    அபார ஞாபகம்..

    ReplyDelete
  38. தங்களது நினைவாற்றலுக்கு ஒரு ராயல் சல்யூட்...........
    பேட்டியை நேரில் பார்த்த உணர்வு....

    ReplyDelete
  39. //எப்பூடி.. said...//நீங்க நினைக்கிற மாதிரி விஷயத்துக்கு வயிறு எரியுற party நான் இல்ல. அதே சமயத்துல சன் பிக்சர்ஸ் காரன் சம்பாதிக்கிற பணத்த பாத்து ஏதோ தன்னோட சொந்த பிசினசே வெற்றியடைஞ்ச மாதிரி சந்தோஷப் பட்டுக்குற பெருந்தன்மை எனக்கில்லை, உங்களுக்கு இருக்கு. என்னைப் பொறுத்தவரை அங்காடித் தெரு படமும் பிடிக்கும், பாட்சாவும் பிடிக்கும் எந்திரனும் பிடிக்கும். எனக்கு யாரையாவது பிடிச்சதுன்னா அவங்களை வீட்டுக்கு கூப்பிட்டு பாலோ, காபியோ போட்டு குடுப்பேன். அவங்க புகைப் படத்த வாங்கி அதுக்கு ஒரு குடம்
    பாலூத்திப் பாக்க மாட்டேன். நீங்க செய்வீங்க ஏன்னா நீங்க பகுத்தறிவு வாதி. அந்த மாதிரி பகுத்தறிவு ஏனோ எனக்கில்ல. இப்போ பிரபுதேவாவும், நயனும் கசமுசா பண்றாங்கன்னு ஒருவேளை நீங்க என்கிட்ட வந்து சொன்னீங்கன்னா, அந்தச் செய்தி உங்களுக்கு ஏதோ செய்தித் தாட்கள் மூலமா வந்திருக்கும்னு நான் புரிஞ்சிக்குவேன், அத விட்டுட்டு நீ என்ன அங்க விளக்கு பிடிச்சுகிட்டு இருந்தியான்னு [தப்ப நினைக்காதீங்க Light boy என்பதற்கு விளக்கு பிடிப்பவர் பொருள்] அதி புத்திசாலித்தனமா கேட்க மாட்டேன். மத்த மூணு தென் மாநிலங்களை விட தமிழகம் உருப்படாம போனதுக்கு திரைப்படத்த வாழ்க்கைக்குள் ரொம்ப விட்டதுதான் என்பது என்னோட தியரி. சினிமாவை போட்டு விட்டுட்டு வேட்டியை உருவினாக்கூட வேட்டி போனது கூடத் தெரியாமல் சினிமாவை ஆன்னு பார்க்கும் கூட்டம் தமிழ்க் கூட்டம். இந்த சினிமா குட்டிச் சுவத்துல இருந்து வெளியே வரும் வரை தமிழகம் உருப்படாது.

    ReplyDelete
  40. Jayadeva

    //இப்போ பிரபுதேவாவும், நயனும் கசமுசா பண்றாங்கன்னு ஒருவேளை நீங்க என்கிட்ட வந்து சொன்னீங்கன்னா, அந்தச் செய்தி உங்களுக்கு ஏதோ செய்தித் தாட்கள் மூலமா வந்திருக்கும்னு நான் புரிஞ்சிக்குவேன், அத விட்டுட்டு நீ என்ன அங்க விளக்கு பிடிச்சுகிட்டு இருந்தியான்னு [தப்ப நினைக்காதீங்க Light boy என்பதற்கு விளக்கு பிடிப்பவர் பொருள்] அதி புத்திசாலித்தனமா கேட்க மாட்டேன்//

    பிரபுதேவா விடயம் பப்ளிக்கில அவங்களே ஒத்துகொண்டது, அதுக்காக பிரபுதேவா அவரோட அம்மா அப்பா சொல்லித்தான் நயன் கூட திரியிராறேன்று சொன்னா அதை யாரு உங்க கிட்ட சொம்ன்னாங்கன்னுதான் கேக்கணும்? ரஜினி கேபி க்கு போட்ட கண்டிசன் எப்பிடி உங்களுக்கு தெரியுமென்று சொல்லாமல் விளக்கு பிடிக்கிற உங்க தொழிலை (சாரி மன்னிக்க்கனும் ) இங்க எதுக்கு பேசிகிட்டு இருக்கிறீங்க?

    ReplyDelete
  41. Jayadeva

    //இப்போ பிரபுதேவாவும், நயனும் கசமுசா பண்றாங்கன்னு ஒருவேளை நீங்க என்கிட்ட வந்து சொன்னீங்கன்னா, அந்தச் செய்தி உங்களுக்கு ஏதோ செய்தித் தாட்கள் மூலமா வந்திருக்கும்னு நான் புரிஞ்சிக்குவேன், அத விட்டுட்டு நீ என்ன அங்க விளக்கு பிடிச்சுகிட்டு இருந்தியான்னு [தப்ப நினைக்காதீங்க Light boy என்பதற்கு விளக்கு பிடிப்பவர் பொருள்] அதி புத்திசாலித்தனமா கேட்க மாட்டேன்//

    பிரபுதேவா விடயம் பப்ளிக்கில அவங்களே ஒத்துகொண்டது, அதுக்காக பிரபுதேவா அவரோட அம்மா அப்பா சொல்லித்தான் நயன் கூட திரியிராறேன்று சொன்னா அதை யாரு உங்க கிட்ட சொம்ன்னாங்கன்னுதான் கேக்கணும்? ரஜினி கேபி க்கு போட்ட கண்டிசன் எப்பிடி உங்களுக்கு தெரியுமென்று சொல்லாமல் விளக்கு பிடிக்கிற உங்க தொழிலை (சாரி மன்னிக்க்கனும் ) இங்க எதுக்கு பேசிகிட்டு இருக்கிறீங்க?

    ReplyDelete
  42. எப்பூடி ஜீவதர்ஷன் இரண்டும் நான்தான்.

    ReplyDelete
  43. [[[Jayadeva said...
    KB was economically down, to uplift him Rajini agreed to do a film for him, but on one condition. KB shouldn't direct it!! That film is Annamalai!]]]

    நண்பரே.. ரஜினி அந்த கண்டிஷன் போடவில்லை. காரணம் அதற்கான வாய்ப்பே இந்தப் படத்தில் இல்லை. தான் இயக்காமல் தனது சிஷ்யன் வசந்தை வைத்துத்தான் படத்தை எடுப்பதாக ரஜினியிடமே முன்பே சொல்லித்தான் ஆரம்பித்தார்கள்.

    அண்ணாமலை படத்தின் கதை டி.கே.சண்முகசுந்தரம் என்ற கதாசிரியருடையது. அவரிடமிருந்து கதையைப் பெற்று திரைக்கதை, வசனமெல்லாம் எழுதி ஷெட்யூல் போட்டு நாளை ஷூட்டிங் என்ற நிலையில் முந்தின நாள் இரவு இயக்குநர் வசந்த் பயந்துபோய் தான் இயக்க முடியாது என்று கே.பி.யிடம் சொல்லிவிட்டார். இதன் பின்புதான் ஒரே நாளில் சுரேஷ்கிருஷ்ணா புக் செய்யப்பட்டார்.

    ReplyDelete
  44. சூப்பரேய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  45. [[[பார்வையாளன் said...
    "எனது காது பிரச்சினையோடு கேலரியில் அமர்ந்திருந்ததால் சரிவரக் கேட்காமல் போய்விட்டது"
    மிகைப்படுதுவதாக நினைத்தாலும் பரவாயில்லை. இந்த வரியை படிக்கும்போது லேசாக கண்கலங்கி விட்டது. எதிர் நீச்சல் போடும்போதே, இவ்வளவு வித்தை காட்டுவது பாராட்டுக்குரியது.]]]

    லூஸ்ல விடுங்க..!

    ReplyDelete
  46. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    சூப்பரேய்ய்ய்ய்ய்ய்ய்!]]]

    நன்றி..!

    ReplyDelete
  47. [[[எப்பூடி.. said...

    @ ராம்ஜி_யாஹூ
    //பேட்டி மொக்கை.//

    பக்கத்தில எங்கயாவது ஜெலுசில் இருந்தால் அதை வாங்கி பயன்படுத்தினால் உடம்புக்கு நல்லது பாஸ்.]]]

    அவருடைய கருத்தைச் சொல்வதற்கு அவருக்கு உரிமையுண்டு..!

    அதனை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்ள வேண்டும் நண்பரே..!

    ReplyDelete
  48. எப்பூடி.. said...

    [[[jayadeva

    //KB was economically down, to uplift him Rajini agreed to do a film for him, but on one condition....??? KB shouldn't direct it!! That film is........Annamalai!//

    ரஜினி கே.பி.கிட்ட கண்டிசன் போடும்போது தாங்கள் அங்கு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ரஜினி அல்லது கேபி அலுவலகத்தில் நீங்கள் வேலை பார்த்து எங்களுக்கு தெரியாம போச்சே, வாழ்த்துக்கள் சார். அப்புறம் இப்ப வயிறு எப்படி? ஓகேவா?]]]

    அது தவறான தகவல் என்று நானும் சொல்லிவிட்டேன். விட்டுவிடுங்கள்.

    ReplyDelete
  49. [[[காவேரி கணேஷ் said...

    நீங்கதான் பத்திரிக்கையாளர்..

    அபார ஞாபகம்..]]

    இல்லை. குறிப்பெடுத்திருந்தேன் கணேஷ்..!

    ReplyDelete
  50. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    தங்களது நினைவாற்றலுக்கு ஒரு ராயல் சல்யூட். பேட்டியை நேரில் பார்த்த உணர்வு.]]]

    குறிப்பெடுத்து வைத்திருந்தேன் யோகேஷ்..

    வருகைக்கு நன்றி..!

    ReplyDelete
  51. [[[Jayadeva said...

    //எப்பூடி.. said...//

    நீங்க நினைக்கிற மாதிரி விஷயத்துக்கு வயிறு எரியுற party நான் இல்ல. அதே சமயத்துல சன் பிக்சர்ஸ்காரன் சம்பாதிக்கிற பணத்த பாத்து ஏதோ தன்னோட சொந்த பிசினசே வெற்றியடைஞ்ச மாதிரி சந்தோஷப்பட்டுக்குற பெருந்தன்மை எனக்கில்லை. உங்களுக்கு இருக்கு. என்னைப் பொறுத்தவரை அங்காடித் தெரு படமும் பிடிக்கும், பாட்சாவும் பிடிக்கும் எந்திரனும் பிடிக்கும். எனக்கு யாரையாவது பிடிச்சதுன்னா அவங்களை வீட்டுக்கு கூப்பிட்டு பாலோ, காபியோ போட்டு குடுப்பேன். அவங்க புகைப்படத்த வாங்கி அதுக்கு ஒரு குடம்
    பாலூத்திப் பாக்க மாட்டேன். நீங்க செய்வீங்க ஏன்னா நீங்க பகுத்தறிவுவாதி. அந்த மாதிரி பகுத்தறிவு ஏனோ எனக்கில்ல.

    இப்போ பிரபுதேவாவும், நயனும் கசமுசா பண்றாங்கன்னு ஒருவேளை நீங்க என்கிட்ட வந்து சொன்னீங்கன்னா, அந்தச் செய்தி உங்களுக்கு ஏதோ செய்தித் தாட்கள் மூலமா வந்திருக்கும்னு நான் புரிஞ்சிக்குவேன், அத விட்டுட்டு நீ என்ன அங்க விளக்கு பிடிச்சுகிட்டு இருந்தியான்னு [தப்ப நினைக்காதீங்க Light boy என்பதற்கு விளக்கு பிடிப்பவர் பொருள்] அதி புத்திசாலித்தனமா கேட்க மாட்டேன்.

    மத்த மூணு தென் மாநிலங்களைவிட தமிழகம் உருப்படாம போனதுக்கு திரைப்படத்த வாழ்க்கைக்குள் ரொம்ப விட்டதுதான் என்பது என்னோட தியரி. சினிமாவை போட்டு விட்டுட்டு வேட்டியை உருவினாக்கூட வேட்டி போனது கூடத் தெரியாமல் சினிமாவை ஆன்னு பார்க்கும் கூட்டம் தமிழ்க் கூட்டம். இந்த சினிமா குட்டிச் சுவத்துல இருந்து வெளியே வரும்வரை தமிழகம் உருப்படாது.]]]

    ஜெயதேவா.. இவ்வளவு கோபம் வேண்டியதில்லை. அவர் ரஜினியின் ரசிகர் என்பதால் சொல்கிறார் என்பதை ஊகித்தாலே போதுமானது. எதற்கு இந்த பெரிய பின்னூட்டம்..?

    ReplyDelete
  52. [[[ஜீவதர்ஷன் said...

    Jayadeva

    //இப்போ பிரபுதேவாவும், நயனும் கசமுசா பண்றாங்கன்னு ஒருவேளை நீங்க என்கிட்ட வந்து சொன்னீங்கன்னா, அந்தச் செய்தி உங்களுக்கு ஏதோ செய்தித் தாட்கள் மூலமா வந்திருக்கும்னு நான் புரிஞ்சிக்குவேன், அத விட்டுட்டு நீ என்ன அங்க விளக்கு பிடிச்சுகிட்டு இருந்தியான்னு [தப்ப நினைக்காதீங்க Light boy என்பதற்கு விளக்கு பிடிப்பவர் பொருள்] அதி புத்திசாலித்தனமா கேட்க மாட்டேன்//

    பிரபுதேவா விடயம் பப்ளிக்கில அவங்களே ஒத்துகொண்டது, அதுக்காக பிரபுதேவா அவரோட அம்மா அப்பா சொல்லித்தான் நயன்கூட திரியிராறேன்று சொன்னா அதை யாரு உங்ககிட்ட சொம்ன்னாங்கன்னுதான் கேக்கணும்? ரஜினி கேபிக்கு போட்ட கண்டிசன் எப்பிடி உங்களுக்கு தெரியுமென்று சொல்லாமல் விளக்கு பிடிக்கிற உங்க தொழிலை (சாரி மன்னிக்க்கனும் ) இங்க எதுக்கு பேசிகிட்டு இருக்கிறீங்க?]]]

    இங்கே யார் சொல்வதாக இருந்தாலும் அது கேள்விப்பட்டதாகத்தான் இருக்கும். அதற்கு அங்கீகாரம் கொடுக்கப்படாததால் பிரச்சினையை இப்படியே முடித்துக் கொள்வது நல்லது..!

    ReplyDelete
  53. //அவருடைய கருத்தைச் சொல்வதற்கு அவருக்கு உரிமையுண்டு..!

    அதனை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்ள வேண்டும் நண்பரே..!//

    சரி அண்ணா


    //அது தவறான தகவல் என்று நானும் சொல்லிவிட்டேன். விட்டுவிடுங்கள்.//

    அவர் விடுறமாதிரி இல்லை போலிருக்கிறது. இப்ப நான் தொடரவா இல்லை தொடர்ந்து பதிலளிப்பதா? இது உங்கள் தளம் நீங்கள்தான் சொல்லவேண்டும்.

    ReplyDelete
  54. [[[ஜீவதர்ஷன் said...
    எப்பூடி ஜீவதர்ஷன் இரண்டும் நான்தான்.]]]

    என் எப்பூடி ரெண்டு லாகின்..?

    ReplyDelete
  55. [[[லதாமகன் said...
    சூப்பரேய்ய்ய்ய்ய்ய்ய்]]]

    நன்றிங்கண்ணா..!

    ReplyDelete
  56. [[[எப்பூடி.. said...

    //அவருடைய கருத்தைச் சொல்வதற்கு அவருக்கு உரிமையுண்டு..! அதனை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்ள வேண்டும் நண்பரே..!//

    சரி அண்ணா.

    /அது தவறான தகவல் என்று நானும் சொல்லிவிட்டேன். விட்டுவிடுங்கள்./

    அவர் விடுற மாதிரி இல்லை போலிருக்கிறது. இப்ப நான் தொடரவா இல்லை தொடர்ந்து பதிலளிப்பதா? இது உங்கள் தளம் நீங்கள்தான் சொல்லவேண்டும்.]]]

    உங்களுடைய சில பின்னூட்டங்களையும் அவருடைய சில பின்னூட்டங்களையும் டெலீட் செய்துவிட்டேன். போதும். வேறு வேலை இருந்தால் பாருங்கள்..!

    ReplyDelete
  57. [[[Jayadeva said...

    //நண்பரே.. ரஜினி அந்த கண்டிஷன் போடவில்லை. காரணம் அதற்கான வாய்ப்பே இந்தப் படத்தில் இல்லை.

    /மன்னிக்கணும் சார், வந்த இடத்துல என்னோட வாயைக் கிளறி விட்டுட்டாங்க. பின்னூட்டம் போடுபவர்களை நாய்கள் என்று திட்டும் ரெண்டு கால் மிருங்களுக்கெல்லாம் பதில் போட வேண்டிய கேவலமான நிலை இங்கே வந்து விட்டது. இந்தச் செய்தி உண்மை, நீங்கள் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்.]]]

    பின்னூட்டங்கள் உங்களைப் புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..!

    ரசிகர்கள், கட்சித் தொண்டர்களிடம் விவாதம் நடத்துவதும், தெளிவடைவதும் இந்தக் காலத்தில் யாராலும் சாத்தியமில்லை. அதற்காக நான் அவர்களை கிண்டல் செய்வதாகவும், உங்களுக்கு ஆதரவாக பேசுவதாகவும் எண்ண வேண்டாம். நீங்கள் எதிர்ப்பதும், அவர்கள் ஆதரிப்பதும் ஒன்றுதான்..!

    அண்ணாமலை பட விஷயம் நீங்கள் சொன்னது போல உண்மையாகவே இருக்கட்டும். விடுங்கள்..!

    ReplyDelete
  58. ரொம்ப நன்றி சார்!

    ReplyDelete
  59. நான் சொன்னதே உண்மை என வாதிட வில்லை, தங்களது கனிவான பதிலுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  60. //என் எப்பூடி ரெண்டு லாகின்..?//

    'எப்பூடி' எனது வலைப்பூவின் ஐடி, எனது வலைப்பூவில் என்னைத்தவிர ஆனது தம்பியும் நண்பரும் சம்பத்தப்பட்டிருப்பதால் விவாதம் என்று வரும்போது எனது சொந்த ஐடியை உபயோகப்படுத்தினேன். இவருடன் இதற்கு முன்னரும் விவாதித்ததில் ஏற்ப்பட்ட அனுபவம்தான் இது. அதனால்தான் அவருக்கு பதிலளிக்கும்போது எனது ஐடியை பயன்படுத்தினேன். இரண்டு ஐடியும் நீங்கள் கிளிக் செய்தால் எப்பூடியின் ப்ரொபைலுக்குதான் போகும். இதை நீங்கள் செக் செய்து கொள்ளலாம். அவளவுதான். நன்றி.

    ReplyDelete
  61. எப்பூடி, ஜெயதேவா.. எந்தக் காரணத்திற்காகவும் வரம்பு மீற வேண்டாம்.

    இதுவொரு சாதாரண விஷயம்.. இதுக்குப் போய் ஏன் இப்படி சீரியஸாகப் பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை.

    அந்த நாய் தொடர்பான பின்னூட்டங்களை டெலீட் செய்துவிட்டேன். யாரும் பதிலளிக்க வேண்டாம்..!

    ReplyDelete
  62. //அந்த அளவுக்கு என்னால் குறிப்பெடுக்க முடியவில்லை. எனது காது பிரச்சினையோடு கேலரியில் அமர்ந்திருந்ததால் சரிவரக் கேட்காமல் போய்விட்டது...//

    - சரவணன், எதார்த்தத்தில் இது ரஜினி ஸ்டைல்னு சொல்லலாம்.

    ஆனால் இதைப் படித்து நான் நெகிழவோ, அனுதாபம் கொள்ளவோ இல்லை. நீங்கள் இன்னும் போராடுங்கள். நல்ல நிலைமைக்கு வாருங்கள். அதுவே என் விருப்பம். ஜெயா டிவி நண்பர்களுடன் அடிக்கடி உங்களைப் பற்றி பேசுவதுண்டு.

    இன்னொன்று-

    தயவு செய்து நாகரிகமாக பின்னூட்டம் போடச் சொல்லி இவர்களுக்குச் சொல்லுங்கள். மீடியா வளர்ந்த அளவுக்கு நாம் வளராமலே இருந்தால் எப்படி...

    ReplyDelete
  63. அப்படியே 'ராஜா'க்கள் ரெண்டு பேரும் பேசிக்கிட்டதையும் போடுங்க சரவணன்!

    ReplyDelete
  64. //இனிமேல் நடக்காது. கண்டிப்பா வருவேன்.

    ஆனா, எனக்கு போகிப் பண்டிகைன்னாலே உன் ஞாபகம்தான் வரும்.. ஓகே..//

    Please correct this too...

    ReplyDelete
  65. [[[siva said...

    //அந்த அளவுக்கு என்னால் குறிப்பெடுக்க முடியவில்லை. எனது காது பிரச்சினையோடு கேலரியில் அமர்ந்திருந்ததால் சரிவரக் கேட்காமல் போய்விட்டது...//

    - சரவணன், எதார்த்தத்தில் இது ரஜினி ஸ்டைல்னு சொல்லலாம்.
    ஆனால் இதைப் படித்து நான் நெகிழவோ, அனுதாபம் கொள்ளவோ இல்லை. நீங்கள் இன்னும் போராடுங்கள். நல்ல நிலைமைக்கு வாருங்கள். அதுவே என் விருப்பம். ஜெயா டிவி நண்பர்களுடன் அடிக்கடி உங்களைப் பற்றி பேசுவதுண்டு.]]]

    மிக்க நன்றி. நீங்கள் அங்கு வேலை செய்கிறீர்களா..?

    [[[இன்னொன்று - தயவு செய்து நாகரிகமாக பின்னூட்டம் போடச் சொல்லி இவர்களுக்குச் சொல்லுங்கள். மீடியா வளர்ந்த அளவுக்கு நாம் வளராமலே இருந்தால் எப்படி.]]]

    நம்மால் சொல்லத்தான் முடியும். சொல்லியும்விட்டேன். சில பின்னூட்டங்களை டெலீட் செய்துவிட்டேன். இனி பிரச்சினை வராது.

    ReplyDelete
  66. [[[siva said...
    அப்படியே 'ராஜா'க்கள் ரெண்டு பேரும் பேசிக்கிட்டதையும் போடுங்க சரவணன்!]]]

    போடுறேன் ஸார்..!

    ReplyDelete
  67. [[[siva said...

    //இனிமேல் நடக்காது. கண்டிப்பா வருவேன். ஆனா, எனக்கு போகிப் பண்டிகைன்னாலே உன் ஞாபகம்தான் வரும்.. ஓகே..//

    Please correct this too...]]]

    ஆஹா.. மறந்திட்டேன் பாருங்க.. இப்ப மாத்திடறேன்.. நன்றி..!

    ReplyDelete
  68. இந்த நிகழ்ச்சியில இருந்ததாலதான் நேத்து சாயந்தரம் போன் எடுக்கவேயில்லையா ?

    நல்ல தொகுப்பு. சன்டிவி உங்க மேல கேஸ் போடப்போறாங்க.

    அன்பு நித்யன்

    ReplyDelete
  69. //இப்போ என்கிட்ட என்ன எதிர்பார்க்குற..?

    இந்தக் கேள்வி பதில் எப்போ முடியும்..?


    இது டாப்பு....

    ReplyDelete
  70. நான் முதல் தடவையா வந்து எட்டி பார்த்தேன். சூப்பரா இருக்கு.

    எனக்கு ஒரு சின்ன சந்தேகம்..
    சண்டிவிக்கு தீபாவளிக்கு இப்பாவே எல்லொரையும் டிவி முன் சரண்டர் ஆகிடுங்க என்று சொல்றிங்க. குட் ஸார்.
    ஹாய் என்க்கு இங்கு ரிக்கார்ட் மோடில் போட்டுவிட்டு எங்கவீட்டில் பார்டிடைம்க்கு போட்ட்டால் எல்லோரும் சேர்ந்து பார்த்துடுவோம்.
    நன்றி நன்பரே.I will come againt. until then
    www.vijiscreation.blogspot.com
    www.vijisvegkitchen.blogspot.com

    ReplyDelete
  71. [[[நித்யகுமாரன் said...

    இந்த நிகழ்ச்சியில இருந்ததாலதான் நேத்து சாயந்தரம் போன் எடுக்கவேயில்லையா?

    நல்ல தொகுப்பு. சன் டிவி உங்க மேல கேஸ் போடப் போறாங்க.

    அன்பு நித்யன்]]]

    போன் செஞ்சியா தம்பி.. மிஸ்டு கால்ல உன் பேர் இல்லையே..?

    சன் டிவிக்கு இது ஓசி விளம்பரம்தானே..!

    ReplyDelete
  72. [[[பிரியமுடன் ரமேஷ் said...

    //இப்போ என்கிட்ட என்ன எதிர்பார்க்குற..?

    இந்தக் கேள்வி பதில் எப்போ முடியும்..?

    இது டாப்பு.]]]

    கரீக்ட்டு..!

    ReplyDelete
  73. [[[Vijiskitchen said...

    நான் முதல் தடவையா வந்து எட்டி பார்த்தேன். சூப்பரா இருக்கு.

    எனக்கு ஒரு சின்ன சந்தேகம்..

    சண்டிவிக்கு தீபாவளிக்கு இப்பாவே எல்லொரையும் டிவி முன் சரண்டர் ஆகிடுங்க என்று சொல்றிங்க. குட் ஸார்.

    ஹாய் என்க்கு இங்கு ரிக்கார்ட் மோடில் போட்டு விட்டு எங்க வீட்டில் பார்டி டைம்க்கு போட்ட்டால் எல்லோரும் சேர்ந்து பார்த்துடுவோம்.

    நன்றி நன்பரே.I will come againt. until then
    www.vijiscreation.blogspot.com
    www.vijisvegkitchen.blogspot.com]]]

    தங்களுடைய முதல் வருகைக்கு எனது நன்றிகள்..!

    நேரமிருநதால் பாருங்கள். இல்லாவிடில் நம் வேலையை பார்க்கலாம்..!

    ReplyDelete
  74. //மிக்க நன்றி. நீங்கள் அங்கு வேலை செய்கிறீர்களா..?//

    -நான் ஜெயா டிவியில் இல்லை. ஆனால் நண்பர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்!
    -சிவா

    ReplyDelete
  75. [[[siva said...

    //மிக்க நன்றி. நீங்கள் அங்கு வேலை செய்கிறீர்களா..?//

    -நான் ஜெயா டிவியில் இல்லை. ஆனால் நண்பர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்!
    -சிவா]]]

    சந்தோஷம்..!

    ReplyDelete
  76. அன்பு சரவணன் - இந்த போஸ்ட்க்கு சம்பந்தம் இல்லாத் மேட்டர் ஆக இருக்கலாம். என் மகன் ஒரு roller skating player.
    ஞாயிறு காலை 6.00 மணிக்கு, நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு சென்ற போது கண்ட காட்சி, சினிமாக்காரர்களை நூறு ஜென்மத்திற்கு போதுமான் சாபங்களை கொடுத்தோம். மைதானம் முழுவதும் குடித்து விட்டு சிறுவர்கள் விளையாடும் இடம் என்று பாராது, பாட்டில்களை, தூள்தூளக உடைத்து போட்டு இருந்தார்கள். சாப்பாடு பொட்டலங்களை மைதான்ம் முழுவதும் வீசி - மிக கேவலமாக ஆக்கியிருந்தார்கள். அன்று சுத்தம் செய்ய ஆள் இல்லாத்தால், நாங்கள் சுமார் பத்து பேர் சுத்தம் செய்து, பயிற்சி தொடங்க்கும் போது மணி காலை பத்து. நாங்கள் போனபோது காலை மணி ஆறு. இந்த கொடுமையை எங்கு போய் சொல்லுவது.
    நடராஜன்

    ReplyDelete
  77. மாலி நடராஜன் said...

    அன்பு சரவணன் - இந்த போஸ்ட்க்கு சம்பந்தம் இல்லாத் மேட்டர் ஆக இருக்கலாம். என் மகன் ஒரு roller skating player.

    ஞாயிறு காலை 6.00 மணிக்கு, நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு சென்றபோது கண்ட காட்சி, சினிமாக்காரர்களை நூறு ஜென்மத்திற்கு போதுமான் சாபங்களை கொடுத்தோம்.

    மைதானம் முழுவதும் குடித்து விட்டு சிறுவர்கள் விளையாடும் இடம் என்று பாராது, பாட்டில்களை, தூள்தூளக உடைத்து போட்டு இருந்தார்கள். சாப்பாடு பொட்டலங்களை மைதான்ம் முழுவதும் வீசி - மிக கேவலமாக ஆக்கியிருந்தார்கள். அன்று சுத்தம் செய்ய ஆள் இல்லாத்தால், நாங்கள் சுமார் பத்து பேர் சுத்தம் செய்து, பயிற்சி தொடங்க்கும் போது மணி காலை பத்து. நாங்கள் போனபோது காலை மணி ஆறு. இந்த கொடுமையை எங்கு போய் சொல்லுவது.

    நடராஜன்]]]

    வருந்துகிறேன் ஸார்.. மன்னிக்கணும்.. நம்ம மக்களைப் பத்திதான் நமக்கே தெரியுமே..? அரங்கத்தின் உள்ளேயே டூரிங் தியேட்டரில் விற்பனை செய்வதைப் போல திண்பண்டங்களையும், காபியையும் சப்ளை செய்தார்கள். அதன் விளைவுதான் இது..!

    எப்படியிருந்தாலும் இதனை கிளீன் செய்ய வேண்டியது அதனை நிர்வகிக்கும் பொதுப்பணித் துறையின் பொறுப்பு. அன்று ஞாயிறு என்பதால் ஆட்கள் வேலைக்கு வந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

    நீங்கள் பட்ட கஷ்டத்திற்காக எனது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

    ReplyDelete