Pages

Thursday, October 21, 2010

ஆதிசேஷனும், பணியாரக் கிழவியும்

21-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


அமரர் ஆதிசேஷன்




அரவம் இல்லாச் சூழலில்
அரவம் தீண்டி வைகுந்தம்
போனான் ஆதிசேஷன்..

 

பணியாரக் கிழவி


 

பள்ளி வயதில்
பணியாரமே காலையுணவு.
தெருமொக்கில் கூரை இல்லாத
சிறு கடை கிழவியுடையது..
எப்போதும் எண்ணெய் வாசம்
கிழவியைச் சுற்றி..
 

அவசரத்திற்காகவேனும்
அரைகுறையாக சுடுவது
கிழவியின் வழக்கமில்லை..
கரண்டியால் குத்தியெடுத்து
அதனை டப்பாவிற்குள்
போடுவதே ஒரு தனி கலை..
ஒரு பணியாரம் அஞ்சு காசு..
எப்பவும் காலையில்
ஆறு பணியாரம்
முப்பது காசு..
சுருக்குப் பை தாங்காத அளவுக்கு
சில்லறைகள் குலுங்கும்..
நிமிடத்தொரு முறை
அவிழ்க்கவும், மறுபடியும் இடுப்பில்
கட்டவுமே கிழவிக்கு நேரம்
சரியாய் இருக்கும்.
ஆனாலும் முடிச்சுப் போட
மறப்பதில்லை..
அந்தப் பணியாரமும்
என்னை மறந்ததில்லை..

காலம் வெகுவேகமாக ஓடிப் போக
மறந்தது பணியாரத்தையும்
கிழவியையும்..
ஊருக்கு வந்திருந்த
நேரத்தில் அக்கா
எங்கோ பார்த்தநோக்கில் சொன்னாள்..
பணியாரக் கிழவி இழுத்துக்கிட்டிருக்கு..

கழுத்தில் இருந்த ஒரு
கறுப்புக் கயிறை
முன்னுக்குள் தள்ளியபடி
தொண்டை நரம்பு
உள்ளே, வெளியே என்று
துடித்துக் கொண்டிருக்க..
கிழவியைச் சுற்றிலும்
எப்போது போகும் என்ற
எதிர்பார்ப்புடன் சொந்தங்கள்..

ஒட்டிப் போன
பாலைவனத்து ரேகை பதிந்த
கன்னங்களையும் தாண்டி
கூர்மையான பார்வை..
அருகில் சென்றவனை
தன் கையால் பிடித்தாள் கிழவி..
பிசுபிசுத்தது கை..
விலக்கிய பின்பு
என் கையைப் பார்த்தேன்..
அதே பிசுபிசுப்பு..

திரும்பிப் பார்க்காமல்
வந்தபோது
மனம் முழுவதும்
நிரம்பியிருந்தது
பணியாரம்..!

57 comments:

  1. உ த அண்ணே, முடியலை,

    ReplyDelete
  2. அற்புதம் சார்! உண்மையாலுமே நெகிழ்ச்சியான கவிதை!

    ReplyDelete
  3. மிகவும் அருமையான கவிதை ,

    என் நெஞ்சை அடைத்தது உங்கள் வரிகள்.

    ReplyDelete
  4. பணியாரக் கிழவி நினைவுகளில் இனிப்பாய் ...

    ReplyDelete
  5. ஒரு வழியா கவிதையும் எழுதிட்டீங்களா அண்ணே.. அப்பா முருகா ... ஒரு ஹைக்கூ எழுதுங்கண்ணே.. வரலாற்று சிறப்பு பெரும் :D

    ReplyDelete
  6. குபீர் கவிஞர் சரவணன் வாழ்க வாழ்க

    ReplyDelete
  7. கவிஞர் சரவணன் வாழ்kakakaka

    ReplyDelete
  8. "ஹைக்கூ எழுதுங்கண்ணே"

    சிங்கத்தை சீண்ட வேண்டம் என கேட்டு கொள்கிறேன்.. கு றும்படத்துக்கே, பக்கம் பக்கமாக வசனம் சேர்த்தவர் அண்ணன்... அவரை போய், மூன்று வரியில் கவிதை எழுத சொல்லுவதா?

    கரிசல் காடு சுருங்கலாம்.. அண்ணனின் கவிதைக் காடு சுருங்காது..

    ReplyDelete
  9. பதிவுத்தான் அப்படின்னா கவிதையும் இப்படியா??? நீளத்தை சொன்னேன் :)

    //குபீர் கவிஞர் சரவணன் வாழ்க வாழ்க//

    குபீர் கலைஞர் இல்லங்க திடீர் கவிஞர். உ.தமிழண்ணே...நிங்க கவிதை எழுதுவிங்கன்னு இப்பத்தான் தெரியும்...

    ReplyDelete
  10. [[[LK said...
    உ த அண்ணே, முடியலை.]]]

    என்ன படிச்சு முடியலையா..? படிக்கவே முடியலையா..?

    ReplyDelete
  11. [[[எஸ்.கே said...
    அற்புதம் சார்! உண்மையாலுமே நெகிழ்ச்சியான கவிதை!]]]

    மிக்க நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  12. [[[மொக்கராசா said...

    மிகவும் அருமையான கவிதை ,

    என் நெஞ்சை அடைத்தது உங்கள் வரிகள்.]]]

    மொக்கராசாவுக்கே பிடித்தது எனில் கவிதைதான் எழுதியிருக்கிறேன் என்று ஒத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது.

    ReplyDelete
  13. [[[கே.ஆர்.பி.செந்தில் said...
    பணியாரக் கிழவி நினைவுகளில் இனிப்பாய்.]]]

    ம்.. இப்போதும் இருக்கிறாள்..!

    ReplyDelete
  14. [[[Vidhoosh said...
    ஒரு வழியா கவிதையும் எழுதிட்டீங்களா அண்ணே.. அப்பா முருகா. ஒரு ஹைக்கூ எழுதுங்கண்ணே.. வரலாற்று சிறப்பு பெரும் :D]]]

    ஹைக்கூவா? அப்படீன்னா என்னங்க சகோ..?

    ReplyDelete
  15. [[[Vidhoosh said...
    குபீர் கவிஞர் சரவணன் வாழ்க வாழ்க.]]]

    எல்லாம் உங்க ஆசீர்வாதங்கள்தான்..!

    ReplyDelete
  16. [[[ஜோதிஜி said...
    கவிஞர் சரவணன் வாழ்kakakaka]]]

    நன்றி.. நன்றி.. நன்றி..!

    ReplyDelete
  17. [[[பார்வையாளன் said...

    "ஹைக்கூ எழுதுங்கண்ணே"

    குறும்படத்துக்கே, பக்கம் பக்கமாக வசனம் சேர்த்தவர் அண்ணன்... அவரை போய், மூன்று வரியில் கவிதை எழுத சொல்லுவதா?

    கரிசல் காடு சுருங்கலாம்.. அண்ணனின் கவிதைக் காடு சுருங்காது.]]]

    ஆமாமாம்.. கவிதையின் கதைக்கேற்ப நீளம் கூடும், குறையும்..!

    ReplyDelete
  18. [[[நாஞ்சில் பிரதாப் said...

    பதிவுத்தான் அப்படின்னா கவிதையும் இப்படியா??? நீளத்தை சொன்னேன் :)]]]

    கதையைப் பொறுத்து நீளம் கூடும், குறையும். ஆதிசேஷன் கவிதை எத்தனை வரிகள் ஸார்..?

    ReplyDelete
  19. [[[T.V.ராதாகிருஷ்ணன் said...
    கவிஞர் சரவணன் வாழ்க]]]

    கவிஞர் டி.வி.ஆர். வாழ்க..!

    ReplyDelete
  20. காலனா இல்லா சூழலிலும்
    காலனா யாரவன் என
    பதிவெழுதி சென்றான்
    -உண்மை தமிழன்

    ReplyDelete
  21. வேலை நேரத்தில்
    பதிவுகளே காலையுணவு.
    மவுசு முனையில் முடிவு இல்லாத
    சிறு வலைப்பக்கம் தமிழணோடது..
    எப்போதும் முருகன் வாசம்
    உண்மை தமிழனை சுற்றி


    அவசரத்திற்காகவேனும்
    அரைகுறையாக பதிவிடுவது
    தமிழனின் வழக்கமில்லை..
    தட்டச்சில் வார்த்தெடுத்து..
    அதனை பதிவிற்குள்..
    போடுவதே ஒரு தனி கொலை..

    ஒரு பத்தி அஞ்சு பக்கம்
    எப்பவும் காலையில்
    ஆறு பத்தி.
    முப்பது பக்கம்
    கமண்டு பக்கம் தாங்காத அளவுக்கு
    பின்னூட்டம் குலுங்கும்
    கமண்டுக்கொரு முறை
    படிக்கவும், மறுபடியும் பதில்
    கட்டவுமே தமிழனுக்கு நேரம்
    சரியாய் இருக்கும்.
    ஆனாலும் பதில்... போட
    மறப்பதில்லை
    அந்தப் பதிலும்
    என்னை மறந்ததில்லை..

    -இவ்ளோ தான் இப்ப முடிஞ்சது..

    ReplyDelete
  22. ஆதிசேஷனைக்காட்டிலும் பணியாரக்கிழவி பட்டுன்னு மனசுல ஒட்டிக்கிட்டாங்க. படிச்சுமுடிக்கும்போது அதே எண்ணெய் வாசனை இங்கேயும் :)

    ReplyDelete
  23. அந்தம்மா கிழவியா?

    எங்க ஊர்ப்பக்கமெல்லாம் பணியாரக்காரம்மா.

    ReplyDelete
  24. [[[Narasimmarin Naalaayiram said...
    அற்புதம்]]]

    நன்றி நண்பரே..! கவிதை எழுத ஆரம்பிச்சதுல இருந்து புதுசு புதுசா வர்றாங்கப்பா..!

    ReplyDelete
  25. [[[aishwarya said...
    :) nice sooper]]]

    மிக்க நன்றிகள்..!

    ReplyDelete
  26. [[[நையாண்டி நைனா said...
    காலனா இல்லா சூழலிலும்
    காலனா யாரவன் என
    பதிவெழுதி சென்றான்
    -உண்மை தமிழன்]]]

    ஹா.. ஹா.. நைனா அசத்திட்ட போ..!

    ReplyDelete
  27. நைனாஜி..

    நீ வாழ்க.. நீர் வாழ்க.. நீவிர் வாழ்க..!

    அசத்துறப்பூ..!

    ReplyDelete
  28. [[[சுந்தரா said...
    ஆதிசேஷனைக் காட்டிலும் பணியாரக் கிழவி பட்டுன்னு மனசுல ஒட்டிக்கிட்டாங்க. படிச்சு முடிக்கும்போது அதே எண்ணெய் வாசனை இங்கேயும் :)]]]

    உண்மையாகவே அந்தக் கிழவியை இப்போது நினைத்தாலும் மனசு கிடந்து அல்லாடுகிறது..!

    திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியில் எத்தனை பிள்ளைகள் அவருடைய பனியாரத்தை காலை உணவாகச் சாப்பிட்டுவிட்டு வருடக்கணக்காக பள்ளிக்கு ஓடியிருக்கிறார்கள்.

    வெறும் அஞ்சு காசில் முடிந்துவிட்டதே அத்தனை வருட பாசமும், உழைப்பும்..!

    ReplyDelete
  29. கவித நல்லா இருக்குங்க!

    ========================================
    உ.த. வை ஹைகூ எழுதச் சொல்லும் சதி!
    ========================================

    தம்பி உ.த,
    கலங்க வேண்டாம். உங்க பின்னால, ரசிகர் படை, உங்க பதிவு போலவே நீண்டு இருக்கிறது.
    கவலை வேண்டாம். பதிவுகளை பிரின்ட் எடுத்து அரணாக்கிப் போராடுவோம்.
    அஞ்ச வேண்டாம்..... ஹைகூவுக்கு மூன்று வரிகளென்று.
    குழம்ப வேண்டாம்... Word-wrap இல்லாமல், ஒரு வரியில் ஓராயிரம் சொற்கள் எழுதும் கலை இருக்கும் வரை,
    ஒரு பதிவையே மூன்று வரிகளில் எழுத முடியுமே!

    ReplyDelete
  30. [[[ராஜ நடராஜன் said...
    அந்தம்மா கிழவியா? எங்க ஊர்ப் பக்கமெல்லாம் பணியாரக்காரம்மா.]]]

    ஆமாம்.. கிழவிதான். தொங்கட்டான் தொங்கு, தொங்கென்று காதில் ஆடும்..!

    ReplyDelete
  31. கெக்கேபிக்குணி அண்ணனுக்கு நன்றி..!

    ஹைக்கூ கவிதை எழுதிப் பார்க்கிறேன். நன்றாக வந்தால் போடுகிறேன். நீங்கள் வரவேற்றால் தொடர்வேன். தூ என்று துப்பினால் துடைத்துவிட்டு என்ட்டர் கவிதைகள் தொடரும்..!

    ReplyDelete
  32. கெக்கெபிக்குணி அக்காவை அண்ணனென்று
    அழைத்த உண்மையே உன்
    தமிழில் உள்குத்து.

    ReplyDelete
  33. [[[கெக்கே பிக்குணி said...
    கெக்கெபிக்குணி அக்காவை அண்ணனென்று அழைத்த உண்மையே உன் தமிழில் உள்குத்து.]]]

    ஐயையோ.. அக்காவா? எனக்கு இத்தனை நாளா தெரியாதே..? அடிக்கடி நம்ம வூட்டுப் பக்கம் வந்து போயிருந்தா தெரியும்.. நீங்கதான் நம்மளையெல்லாம் ஒதுக்கீல்ல வைச்சிருக்கீக.. எப்படி தெரியும்..?

    ReplyDelete
  34. கண்னுலேந்து தாரதாரயா கண்ணிர் கொட்டுது எனக்கு.. எதில பிடிக்கன்னு தெரியல (:

    ReplyDelete
  35. //குபீர் கவிஞர் சரவணன் வாழ்க வாழ்க//

    மறுபடி சொல்லிக்கிறேன்

    ReplyDelete
  36. நேத்து நீங்க போன கல்யாண போட்டோ வை பார்த்தேன் ..,ஒரு நிமிஷம் ஆடி போய்டேன் ...,சும்மா நல்லா young தான் தல இருக்கீங்க ...,(யாரும் கிண்டல் பண்ணாதீங்க யா சத்தியமா அப்படி தான் இருக்காரு ) ...,தமிழன் சார் ..,புத்தக கண்காட்சிக்கு வருவீங்களா ...,உங்களை பார்க்கலாமா ?

    குறிப்பு : சார் மோர்ன்னு ஏக வசனத்துடன் என்னை அழைக்க வேண்டாம் ...,சும்மா தம்பி ன்னு அழைத்தாலே போதும் என்றும் கேட்டு கொள்கிறேன் ...,அப்படியே என் ப்ளாக் பக்கமெல்லாம் வந்துடாதீங்க அண்ணே ..,நானெல்லாம் சும்மா டம்மி பீசு .....,

    ReplyDelete
  37. ரொம்ப நல்ல முயற்சி

    ReplyDelete
  38. [[[இராமசாமி கண்ணண் said...
    கண்னுலேந்து தாரதாரயா கண்ணிர் கொட்டுது எனக்கு.. எதில பிடிக்கன்னு தெரியல (:]]]

    வீட்ல அண்டா, குண்டா சட்டியெல்லாம் இல்லியா..?

    ReplyDelete
  39. [[[நசரேயன் said...

    //குபீர் கவிஞர் சரவணன் வாழ்க வாழ்க//

    மறுபடி சொல்லிக்கிறேன்]]]

    நீங்க சொன்னா சரிதாண்ணே..!

    ReplyDelete
  40. [[[பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

    நேத்து நீங்க போன கல்யாண போட்டோவை பார்த்தேன். ஒரு நிமிஷம் ஆடி போய்டேன். சும்மா நல்லா youngதான் தல இருக்கீங்க. (யாரும் கிண்டல் பண்ணாதீங்கயா சத்தியமா அப்படிதான் இருக்காரு ) தமிழன் சார், புத்தக கண்காட்சிக்கு வருவீங்களா, உங்களை பார்க்கலாமா?

    குறிப்பு : சார் மோர்ன்னு ஏக வசனத்துடன் என்னை அழைக்க வேண்டாம். சும்மா தம்பி ன்னு அழைத்தாலே போதும் என்றும் கேட்டு கொள்கிறேன். அப்படியே என் ப்ளாக் பக்கமெல்லாம் வந்துடாதீங்க அண்ணே. நானெல்லாம் சும்மா டம்மி பீசு.]]]

    மாமேதை தம்பி..!

    நான் எப்பவுமே யூத்துதான். காமாலைக் கண்ணோட பார்க்கிறவங்களுக்குத்தான் நான் வேற..!

    இருந்தாலும் உள்ளன்போட என்னை வாழ்த்தியிருக்கிறதால உங்களுக்கு எனது நன்றிகள்..!

    எதுக்குப் புத்தகக் கண்காட்சிவரைக்கும் காத்திருக்கணும்.. கே.கே.நகர் பக்கம் வந்தீங்கன்னா சொல்லுங்க. நானே தேடி வந்து சந்திக்கிறேன்..!

    ReplyDelete
  41. [[[Gopi Ramamoorthy said...
    ரொம்ப நல்ல முயற்சி]]]

    ஏதோ உங்க ஆசிர்வாதம் ஸார்..!

    ReplyDelete
  42. எங்கண்ணன் உண்மைத்தமிழனை யாருய்யா உசுப்பேத்துனது?

    கவிஞர்கள் இனி ஜாக்கிரதையா இருக்கணும் போல!

    ReplyDelete
  43. "அரவம் இல்லாச் சூழலில்
    அரவம் தீண்டி வைகுந்தம்
    போனான் ஆதிசேஷன்.."


    வேலை யாரோ திருடி சென்றதால்
    வேலை போன பழனி முருகனுக்கு,
    ஒரு வேளை , வேளை சரியில்லையோ !!


    இது போல எழுதி இருந்தால் ரசித்து இருப்போம்.. ஒருவர் தாம் நம்பும் சாமியை சீண்டி விளையாடலாம்.. மற்றவர் நம்பும் சாமியை அல்ல..

    ReplyDelete
  44. "கே.கே.நகர் பக்கம் வந்தீங்கன்னா சொல்லுங்க. நானே தேடி வந்து சந்திக்கிறேன்..!"


    நான் தினமும்தான் வரேன்.. போன் செய்தால் எடுப்பது இல்லை

    ReplyDelete
  45. சார் வணக்கம் ,

    எங்கள் ஊரிலும்
    ஒரு பணியாரக்கிழவி இருந்தாள்
    எனக்கும் பிடிக்கும்
    அந்த இனிப்பு பணியாரம்
    இப்போதவள் எங்கே போனால் என்று
    தெரியவில்லை
    நானும் தேட வில்லை (????)

    ReplyDelete
  46. [[[ப்ரியமுடன் வசந்த் said...

    எங்கண்ணன் உண்மைத்தமிழனை யாருய்யா உசுப்பேத்துனது? கவிஞர்கள் இனி ஜாக்கிரதையா இருக்கணும் போல!]]]

    ஆமாம்ப்பா.. எல்லாரும் வசந்த் சொல்றதை கவனமா கேட்டுக்குங்க..! நானும் கவிஞன்தான்.. நானும் கவிஞன்தான்.. நானும் கவிஞன்தான்..

    சொல்லிப்புட்டேன்..!

    ReplyDelete
  47. [[[பார்வையாளன் said...

    "அரவம் இல்லாச் சூழலில்
    அரவம் தீண்டி வைகுந்தம்
    போனான் ஆதிசேஷன்.."

    வேலை யாரோ திருடி சென்றதால்
    வேலை போன பழனி முருகனுக்கு,
    ஒரு வேளை, வேளை சரியில்லையோ !!

    இது போல எழுதி இருந்தால் ரசித்து இருப்போம்.. ஒருவர் தாம் நம்பும் சாமியை சீண்டி விளையாடலாம். மற்றவர் நம்பும் சாமியை அல்ல.]]]

    தாராளமா..? சொல்லிக்கலாம்.. எனக்கும் இது தப்பிதமாகத் தெரியவில்லை..!

    ReplyDelete
  48. [[[பார்வையாளன் said...

    "கே.கே.நகர் பக்கம் வந்தீங்கன்னா சொல்லுங்க. நானே தேடி வந்து சந்திக்கிறேன்..!"

    நான் தினமும்தான் வரேன்.. போன் செய்தால் எடுப்பது இல்லை.]]]

    ஏங்க இப்படி கதை விடுறீங்க.. இதுவரைக்கும் ஆறேழு தடவை நீங்க போன் நம்பர் கேட்டுட்டீங்க.. நானும் சொல்லிட்டேன். நீங்கதான் போன் செய்யவே இல்லை..!

    ReplyDelete
  49. [[[மங்குனி அமைசர் said...
    சார் வணக்கம், எங்கள் ஊரிலும்
    ஒரு பணியாரக் கிழவி இருந்தாள்
    எனக்கும் பிடிக்கும், அந்த இனிப்பு பணியாரம். இப்போதவள் எங்கே போனால் என்று தெரியவில்லை
    நானும் தேடவில்லை (????)]]]

    மங்குனி அமைச்சரே.. ஒரு "ச்" விட்டுப் போய்விட்டது. முதலில் அதனை சரி செய்யும்..!

    தங்களுடைய முதல் வருகைக்கு எனது நன்றிகள்..!

    ReplyDelete
  50. ஏன்ணே நீயி தண்ணியும் அடிக்க மாட்டியே.. ம்ம்..

    ReplyDelete
  51. ஆகா அருமை அருமை.. உ.தமிழரே..
    தொடர்ந்து எழுதுங்க..

    @கெக்கே பிக்குணி .. கலக்கிறீங்கப்போங்க..ஹய்யோ..:)

    ReplyDelete
  52. [[[எம்.எம்.அப்துல்லா said...
    ஏன்ணே நீயி தண்ணியும் அடிக்க மாட்டியே.. ம்ம்..]]]

    தம்பி.. ரொம்ப லேட்டா இப்பத்தான் பார்த்தேன்.. தண்ணியடிக்கத்தான் நீ கூப்பிடறதே இல்லையே..? அப்புறம் என்ன அடிக்க மாட்டியேன்னு கேள்வி வேற..?

    ReplyDelete
  53. [[[முத்துலெட்சுமி/muthuletchumi said...
    ஆகா அருமை அருமை.. உ.தமிழரே..
    தொடர்ந்து எழுதுங்க..
    @கெக்கே பிக்குணி .. கலக்கிறீங்கப் போங்க..ஹய்யோ..:)]]]

    முத்தக்காவுக்கு என் தாமதமான நன்றிகள். கோபிக்கப்படாது..

    ReplyDelete