Pages

Tuesday, October 19, 2010

கவிதையும், கத்திரிக்காயும், பின்னே காதலும்..!

18-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


தோழி கேட்டார்
உன் கவிதையா..?
இருக்கவே இருக்காது என்றார்
திடமாக..!

எனக்கேன் கவிதை 
வசப்படவில்லை..!
காதலித்தால் மட்டும்தான் 
கவிதை வருமா..?

நான்தான் காதலிக்கப்பட்டவனில்லையே..!
பின் எப்படி 
கவிதையும் கத்திரிக்காயும் 
பின்னே காதலும்
வரும்..!?

தேடுகிறேன் தேடுகிறேன்
காதலையும், காதலியையும்..!

காதல் கிடைத்தால்
காதலி கிடைப்பதில்லை..
காதலி கிடைத்தால் 
காதல் கிடைப்பதில்லை..

பாசத்திற்கு ஏங்கினேன்..
அது தாயோடு போயிற்று..
அன்புக்கு ஏங்கினேன்
அது தந்தையோடு ஒழிந்தது..
பிரியத்திற்கு ஏங்கினேன்
உடன்பிறந்தாரோடு தொலைந்தது..
நேசத்துக்கு ஏங்கினேன்
நண்பர்களோடு முடிந்தது..

இப்போதுதான்
முதல்முறையாக
காதலுக்காக ஏங்குகிறேன்...

சில காதல்கள் 
பறந்து செல்ல
துணை நின்றேன்.
ஆனால் என் காதலைத்
துவக்கிவிடவே 
ஆள் இல்லை..!

பள்ளிக் காலத்தில்
வந்த காதல்
வருடத்தோடு முடிந்தது..!

இப்போது
திரும்பிப் பார்க்கிறேன்..!
அவளுக்கென்று
ஒரு மனம்..!

எப்போதாவது
தலையில்
ஒற்றைப் புஷ்பத்தோடு
யாரேனும் 
கடந்து போனால்
சட்டென்று 
நினைவுக்கு வருகிறது
அவள் நினைவு..!

காதலுக்கு 
தகுதியுண்டா?
அனுபவித்தவர்களிடம் 
கேட்டேன்..

காதலுக்கு 
முதல் தகுதி 
நீர் 
கவிதை ஆசிரியர் ஆவதுதான்
என்றனர்..

கவிதை எது 
என்றேன்..
காதலை
மறந்துவிடு 
என்றனர் பட்டென்று..

கவிதை இல்லாமல்
காதல் இல்லையா..?
காதல் இல்லாமல் 
கவிதை இல்லையா..?

காதல் எதற்கு?
கவிதை எதற்கு..?
நீண்டன என் 
கேள்விகள்..

காதல் வாழ்க்கைக்கு..
கவிதை காதலுக்கு 
என்றனர்..

கவிதையற்ற
காதலைத் தேடுகிறேன்
என்றேன்..

தேடு.. தேடிக் கொண்டேயிரு
என்றனர்.

அவர்களது சொற்கள்
வாழ்த்தா அல்லது சாபமா
இன்றுவரையில்
தெரியவில்லை..

ஆனாலும் 
இப்போதுவரையிலும்
தேடுகிறேன்..
கவிதையற்ற
என் காதலை..!

டிஸ்கி : சத்தியமா நான்தாம்பா இதை எழுதினேன்.. 100.6 டிகிரி காய்ச்சலாம்.. படுத்தா தூக்கம் வர மாட்டேங்குது. உக்காந்தா தூங்கணும் போல இருக்கு.. ஏதாவது எழுதலாமேன்னு கீபோர்ட்ல கை வைச்சா இப்படித்தான் வருது.. என்ன செய்வேன்? என்ன செய்வேன்..?

94 comments:

  1. Excellent Kavithai!!!
    Pls take care of health!!

    ReplyDelete
  2. உண்மையில் கவிதை ரெம்ப நல்லாயிருக்கு ,

    ஆனா என்ன சொல்ல வர்ங்கன்னு எனக்கு புரியவில்லை
    take care

    ReplyDelete
  3. அண்ணே நீங்களா.................. நம்பமுடியவில்லை..........................

    ReplyDelete
  4. அண்ணே நீங்களா நம்பவே முடியலை

    ReplyDelete
  5. உடம்பு சரியில்லைன்னா அதிகமா பினாத்துவாங்க தெரியும். இப்படி கவிதையா கக்குவாங்கன்னு இப்பத்தான் பார்க்கறேன். கவிதையைக் கூட இம்புட்டு பெருசா எழுதணுமா..

    உடம்பைப் பாத்துக்குங்க அண்ணே

    ReplyDelete
  6. நீங்களா.................. நம்பமுடியவில்லை :))))

    ReplyDelete
  7. ரொம்ப நல்லாயிருக்கு:)!

    ReplyDelete
  8. 100.6 டிகிரிக்கெல்லாம் நரம்பு மண்டலம் பாதிக்காதே அண்ணே, ஏன் இப்படி??

    இந்த கேபிள் பெருசு கூட சேராதீங்கன்னா கேக்குறீங்களா? இப்போ பாருங்க எண்டர் கவுஜ வியாதி உங்களுக்கும் வந்திருச்சி

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  9. மிகவும் அருமையான கவிதை வரிகள்.!!

    ReplyDelete
  10. /*டிஸ்கி : சத்தியமா நான்தாம்பா இதை எழுதினேன்.. */

    இதை நீங்க சொல்லவே வேண்டாம் கவிதையின் நீளத்தை பார்த்தாலே தெரியுது.

    அப்புறம் காதல் கவிதைக்கு, ஆரம்பத்திலேயே மலர் வளையம் வச்சிருக்கீங்களே ஒரு வேளை நீங்க பின் நவீன கவிஞரா??? அவ்வ்வ்வவ்வ்வ்வ்

    ReplyDelete
  11. \\காதல் வாழ்க்கைக்கு..
    கவிதை காதலுக்கு //
    அழகு..
    :)

    மேல போட்டோல தலைக்கு வச்சிக்கிற பூவும் ரொம்ப அழகு ..

    ReplyDelete
  12. அண்ணே, உடம்பை கவனித்துக் கொள்ளவும்...

    கவுஜ நாட்டிற்கும், வீட்டிற்கும், ப்ளாகிற்கும் கேடு :)

    ReplyDelete
  13. கவிதைலாம் எழுதிவீங்களா

    நல்லாத்தான் இருத்துச்சு

    அட நல்லாதாங்க இருத்துச்சு

    ReplyDelete
  14. //காதல் கிடைத்தால்
    காதலி கிடைப்பதில்லை..
    காதலி கிடைத்தால்
    காதல் கிடைப்பதில்லை..// super/

    ReplyDelete
  15. //எனக்கேன் கவிதை
    வசப்படவில்லை..!
    காதலித்தால் மட்டும்தான்
    கவிதை வருமா..?
    //

    இல்லை.. மனநிலை சரியில்லைனாலும் வரும் :)

    ரெண்டும் ஒண்ணு தானேனு கேக்கப்பிடாது ;)

    ReplyDelete
  16. //நான்தான் காதலிக்கப்பட்டவனில்லையே..!
    பின் எப்படி
    கவிதையும் கத்திரிக்காயும்
    பின்னே காதலும்
    வரும்..!?//

    காய்கறி தள்ளு வண்டிக்கு முன்னாடி போயிருப்பீங்க. அதனால கத்திரிக்காய் பின்னாடி வந்த மாதிரி தெரிஞ்சிருக்கும்.

    ReplyDelete
  17. //காதல் கிடைத்தால்
    காதலி கிடைப்பதில்லை..
    காதலி கிடைத்தால்
    காதல் கிடைப்பதில்லை..
    //

    கல்லைக் கண்டா
    நாயைக் காணோம்
    நாயைக் கண்டா
    கல்லைக் காணோம்...

    இதோட உல்டா தானே மேல எழுதியிருக்கீங்க? ;)

    ReplyDelete
  18. //பாசத்திற்கு ஏங்கினேன்..
    அது தாயோடு போயிற்று..
    அன்புக்கு ஏங்கினேன்
    அது தந்தையோடு ஒழிந்தது..
    பிரியத்திற்கு ஏங்கினேன்
    உடன்பிறந்தாரோடு தொலைந்தது..
    நேசத்துக்கு ஏங்கினேன்
    நண்பர்களோடு முடிந்தது.

    //

    ராஜ்கிரண் படம் பார்த்த எஃபக்ட் கிடைக்குது இதைப் படிக்கும் போது :)

    ReplyDelete
  19. //இப்போதுதான்
    முதல்முறையாக
    காதலுக்காக ஏங்குகிறேன்...
    //

    வயசான காலத்துல இதெல்லாம் தேவையா? :)

    ReplyDelete
  20. //சில காதல்கள்
    பறந்து செல்ல
    துணை நின்றேன்.
    ஆனால் என் காதலைத்
    துவக்கிவிடவே
    ஆள் இல்லை..!

    //

    நீங்க ஷாஜகான் விஜய் மாதிரியாண்ணே.. சொல்லவே இல்லை.

    ReplyDelete
  21. ஜுரவேகத்தில் காளமேகம் ஆனீரோ!!!!!!

    ஆமாம். அந்தப் பூவை எங்கியோ பார்த்தமாதிரி இருக்கே!!!

    ReplyDelete
  22. [[[PARAYAN said...
    Excellent Kavithai!!! Pls take care of health!!]]]

    முதல் வாழ்த்தே நல்லவிதமா வந்திருக்கு. நன்றி..!

    ReplyDelete
  23. [[[Gnana Prakash said...
    nalla irukku]]]

    இன்னாபா இது? கவிதைன்னு சொன்னவுடனே முதல் தடவையா வூட்டுக்குள்ளார வர்றீங்க..?

    நன்றி..!

    ReplyDelete
  24. [[[மொக்கராசா said...
    உண்மையில் கவிதை ரெம்ப நல்லாயிருக்கு. ஆனா என்ன சொல்ல வர்ங்கன்னு எனக்கு புரியவில்லை
    take care]]]

    மை காட்.. 30 வரில எழுதியும் புரியலையா..? முருகா..!

    நல்லாயிருக்குன்னு சொன்னதுக்கு மட்டும் நன்றி..!

    ReplyDelete
  25. [[[அத்திரி said...
    அண்ணே நீங்களா.................. நம்ப முடியவில்லை.]]]

    நான்தான்.. நானேதான்.. இத்தனை நாளா எங்கிருந்தாய் தம்பி..?

    ReplyDelete
  26. [[[நசரேயன் said...
    அண்ணே நீங்களா நம்பவே முடியலை]]]

    என்னப்பா இது? நான் கவிதை எழுதக் கூடாதா? இல்லாட்டி கவிதை எனக்கு வராதா..? ஏன் இப்படி எல்லாரும் அதிசயமா பார்க்குறீங்க..?

    நானும் ஒரு கவிஞன்தாம்ப்பா. இதைப் படிச்சாவாது ஒத்துக்குங்க..!

    ReplyDelete
  27. [[[சென்ஷி said...
    உடம்பு சரியில்லைன்னா அதிகமா பினாத்துவாங்க தெரியும். இப்படி கவிதையா கக்குவாங்கன்னு இப்பத்தான் பார்க்கறேன். கவிதையைக் கூட இம்புட்டு பெருசா எழுதணுமா..
    உடம்பைப் பாத்துக்குங்க அண்ணே]]]

    சரிங்க தம்பி.. கவிதைன்னு சொன்னவுடனே உன் வரவைத்தான் எதிர்பார்த்தேன்.. நன்றி..!

    ReplyDelete
  28. [[[T.V.ராதாகிருஷ்ணன் said...
    நீங்களா.................. நம்ப முடியவில்லை :))))]]]

    இனிமேலாச்சும் நம்புங்க ஸார்.. நானும் ஒரு கவிஞன்தான்..!

    ReplyDelete
  29. [[[ராமலக்ஷ்மி said...
    ரொம்ப நல்லாயிருக்கு:)!]]]

    ஆஹா.. நீங்களே சொல்லிட்டீங்க.. மிக்க நன்றிகள் மேடம்..!

    ReplyDelete
  30. [[[sriram said...

    100.6 டிகிரிக்கெல்லாம் நரம்பு மண்டலம் பாதிக்காதே அண்ணே, ஏன் இப்படி??

    இந்த கேபிள் பெருசுகூட சேராதீங்கன்னா கேக்குறீங்களா? இப்போ பாருங்க எண்டர் கவுஜ வியாதி உங்களுக்கும் வந்திருச்சி

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்]]]

    சேர்வார் சேர்க்கை சரியில்லைன்னு சொல்றீங்க.. ஓகே.. மறுபரிசீலனை செய்யறேன்..

    ஆனால் கவிதை எழுதுவதை விடமாட்டேன்..!

    ReplyDelete
  31. [[[பிரவின்குமார் said...
    மிகவும் அருமையான கவிதை வரிகள்.!!]]]

    நன்றி பிரவின்குமார்..!

    ReplyDelete
  32. கவிதை நல்லா இருக்கு. ஆனா கட்டுரை அளவுக்கு பெருசா இருக்கு.
    கவிதை கூட பெருசா தான் எழுதுவீங்களா? பரவால்ல ஆனா இதை ஹைக்கூ ன்னு மட்டும் சொல்லிடாதிங்க. ;-)

    கவிதை எழுதரனால தான் எனக்கும் ஏதும் செட் ஆக மாட்டேன்குது.

    ReplyDelete
  33. [[[நையாண்டி நைனா said...

    /*டிஸ்கி : சத்தியமா நான்தாம்பா இதை எழுதினேன்.. */

    இதை நீங்க சொல்லவே வேண்டாம் கவிதையின் நீளத்தை பார்த்தாலே தெரியுது.

    அப்புறம் காதல் கவிதைக்கு, ஆரம்பத்திலேயே மலர் வளையம் வச்சிருக்கீங்களே ஒரு வேளை நீங்க பின் நவீன கவிஞரா??? அவ்வ்வ்வவ்வ்வ்வ்]]]

    நைனா.. உன் வாழ்த்துல ஒருவித வெறி தெரியுது.. ஏத்துக்குறேன்..!

    ReplyDelete
  34. [[[முத்துலெட்சுமி/muthuletchumi said...

    \\காதல் வாழ்க்கைக்கு..
    கவிதை காதலுக்கு //

    அழகு..:)

    மேல போட்டோல தலைக்கு வச்சிக்கிற பூவும் ரொம்ப அழகு.]]]

    நீண்ட நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்திருக்கும் முத்தக்காவுக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  35. [[[வெட்டிப்பயல் said...
    அண்ணே, உடம்பை கவனித்துக் கொள்ளவும். கவுஜ நாட்டிற்கும், வீட்டிற்கும், ப்ளாகிற்கும் கேடு :)]]]

    என்ன தம்பி இப்படிச் சொல்லிட்ட..? பிளாக்ல கவுஜ எழுதக் கூடாதுன்னு மட்டும் கூகிள் கம்பெனி சொல்லட்டும்.. எத்தனை பேரு தீக்குளிப்பாங்க தெரியுமா..?

    ReplyDelete
  36. [[[நா.மணிவண்ணன் said...

    கவிதைலாம் எழுதிவீங்களா

    நல்லாத்தான் இருத்துச்சு

    அட நல்லாதாங்க இருத்துச்சு]]]

    ஆஹா.. ரொம்ப நன்றிங்கண்ணா..!

    ReplyDelete
  37. [[[மதுரை சரவணன் said...

    //காதல் கிடைத்தால்
    காதலி கிடைப்பதில்லை..
    காதலி கிடைத்தால்
    காதல் கிடைப்பதில்லை..//

    super/

    மதுரை சரவணன்.. உங்கள் அனுபவம் எப்படி..?

    ReplyDelete
  38. [[[வெட்டிப்பயல் said...

    //எனக்கேன் கவிதை
    வசப்படவில்லை..!
    காதலித்தால் மட்டும்தான்
    கவிதை வருமா..?//

    இல்லை.. மனநிலை சரியில்லைனாலும் வரும் :)
    ரெண்டும் ஒண்ணுதானேனு கேக்கப்பிடாது ;)]]]

    அப்போ நான் நல்லாத்தான் இருக்கேன். எனக்கு மனநிலையும் நல்லாத்தான் இருக்கு..!

    ReplyDelete
  39. [[[வெட்டிப்பயல் said...

    //நான்தான் காதலிக்கப்பட்டவனில்லையே..!
    பின் எப்படி
    கவிதையும் கத்திரிக்காயும்
    பின்னே காதலும்
    வரும்..!?//

    காய்கறி தள்ளுவண்டிக்கு முன்னாடி போயிருப்பீங்க. அதனால கத்திரிக்காய் பின்னாடி வந்த மாதிரி தெரிஞ்சிருக்கும்.]]]

    காதல்ன்னு சொன்னவுடனேயே எல்லார் வாய்லேயும் அடுத்ததா வர்றது கத்திரிக்காய்தானே.. அதுனாலதான் இங்க பயன்படுத்தினேன்..!

    ReplyDelete
  40. [[[வெட்டிப்பயல் said...

    //காதல் கிடைத்தால்
    காதலி கிடைப்பதில்லை..
    காதலி கிடைத்தால்
    காதல் கிடைப்பதில்லை..//

    கல்லைக் கண்டா
    நாயைக் காணோம்
    நாயைக் கண்டா
    கல்லைக் காணோம்...

    இதோட உல்டாதானே மேல எழுதியிருக்கீங்க?;)]]]

    ஹி.. ஹி.. இப்படி சபைல போட்டு உடைக்கறதுதான் நட்பா..?

    ReplyDelete
  41. [[[வெட்டிப்பயல் said...

    //பாசத்திற்கு ஏங்கினேன்..
    அது தாயோடு போயிற்று..
    அன்புக்கு ஏங்கினேன்
    அது தந்தையோடு ஒழிந்தது..
    பிரியத்திற்கு ஏங்கினேன்
    உடன்பிறந்தாரோடு தொலைந்தது..
    நேசத்துக்கு ஏங்கினேன்
    நண்பர்களோடு முடிந்தது.//

    ராஜ்கிரண் படம் பார்த்த எஃபக்ட் கிடைக்குது இதைப் படிக்கும்போது:)]]]

    கண்ணுல தண்ணி வந்திருச்சா..? துடைச்சுக்குங்க..!

    ReplyDelete
  42. [[[வெட்டிப்பயல் said...

    //இப்போதுதான்
    முதல்முறையாக
    காதலுக்காக ஏங்குகிறேன்...//

    வயசான காலத்துல இதெல்லாம் தேவையா?:)]]]

    வயசைப் பத்தி ஏன்யா இப்ப ஞாபகப்படுத்துறீங்க..? அது கெடக்கு கழுதை..

    காதலுக்கு வயசா முக்கியம்..?

    ReplyDelete
  43. [[[வெட்டிப்பயல் said...

    //சில காதல்கள்
    பறந்து செல்ல
    துணை நின்றேன்.
    ஆனால் என் காதலைத்
    துவக்கிவிடவே
    ஆள் இல்லை..!//

    நீங்க ஷாஜகான் விஜய் மாதிரியாண்ணே.. சொல்லவே இல்லை.]]]

    இல்லை.. விஜய் கூடவே வரும் கைத்தடிகள் மாதிரி..!

    ReplyDelete
  44. [[[துளசி கோபால் said...
    ஜுரவேகத்தில் காளமேகம் ஆனீரோ!]]]

    ஆமாம் டீச்சர்.. ஏதேதோ புலம்ப வைச்சிருச்சு..!

    [[[ஆமாம். அந்தப் பூவை எங்கியோ பார்த்தமாதிரி இருக்கே!!!]]]

    கூகிளாண்டவர்கிட்ட சுட்டேன்..!

    ReplyDelete
  45. ஆண்டவரும் சுட ஆரம்பிச்சுட்டாரா!!!!

    நம்ம தாய்லாந்து பதிவில் நான் போட்ட படம்தான் அது:-)

    http://thulasidhalam.blogspot.com/2010/07/7.html

    ReplyDelete
  46. அண்ணே,

    யாரையோ காதலிக்கிறீங்க போல..


    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  47. பரிசல் அடுத்து ஒரு கவிதைப் போட்டி வைக்கப் போவதாகக் கேள்வி. நீங்கதான் வின்னர் அப்படின்னு இப்பவே தோணுது எனக்கு

    ReplyDelete
  48. அருமை, வாலி வைரமுத்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

    ReplyDelete
  49. ஹாலிவுட பாலா பதிவுலகத்த விட்டு ஏன் விலகினாருன்னு எனக்கு இப்ப புரிஞ்சிடுச்சி :)

    ReplyDelete
  50. இனிமே எல்லா பதிவும் இந்த மாதிரியே இருக்கட்டும் :)

    ReplyDelete
  51. //தோழி கேட்டார்
    உன் கவிதையா..?
    இருக்கவே இருக்காது என்றார்
    திடமாக..!
    //

    கவுஜ ஒரு ரெண்டாயிரம் வரி இருந்தா நம்பி இருப்பாங்க


    //
    எனக்கேன் கவிதை
    வசப்படவில்லை..!
    காதலித்தால் மட்டும்தான்
    கவிதை வருமா..?
    //

    வரி வரியா மடக்கி போட்டாலே கவுஜ வரும்

    //
    நான்தான் காதலிக்கப்பட்டவனில்லையே..!
    பின் எப்படி
    கவிதையும் கத்திரிக்காயும்
    பின்னே காதலும்
    வரும்..!

    //

    வரவே வராது

    //
    தேடுகிறேன் தேடுகிறேன்
    காதலையும், காதலியையும்..!//

    ஓடிருங்க .. ஓடிருங்க .. உண்மை தமிழன் அண்ணன் வாராரு

    //
    காதல் கிடைத்தால்
    காதலி கிடைப்பதில்லை..
    காதலி கிடைத்தால்
    காதல் கிடைப்பதில்லை..

    //
    என்ன ஒரு தத்துவம்

    ReplyDelete
  52. //100.6 டிகிரி காய்ச்சலாம்.. படுத்தா தூக்கம் வர மாட்டேங்குது. உக்காந்தா தூங்கணும் போல இருக்கு..//

    ஒருவேளை காத்து கருப்பு அல்லது மோகினிப்பேயின் வேலையாயும் இருக்கலாம்...

    ReplyDelete
  53. காதல் கிடைத்தால்
    காதலி கிடைப்பதில்லை..
    காதலி கிடைத்தால்
    காதல் கிடைப்பதில்லை..
    ---
    இத

    கல்ல கண்டா
    நாய கானோம்
    நாய கண்டா
    கல்ல காணோம்

    இப்படியும் எழுதலாம்னா...

    ReplyDelete
  54. துளசி கோபால் said...

    ஆண்டவரும் சுட ஆரம்பிச்சுட்டாரா!!!!

    நம்ம தாய்லாந்து பதிவில் நான் போட்ட படம்தான் அது:-)//

    நான் கூட எங்கயோ பாத்த மாதிரின்னு நினைச்சேன் உங்களுதா ..:))

    ReplyDelete
  55. உடலை தேத்திக்கிட்டு வாங்க.. களத்துல இறங்கிடலாம்..

    நாளைக்கு கே கே நகர்ல இருந்தா சொல்லுங்க..
    ஆரம்ப திட்டப்பணிகளை ஆரம்பிச்சுடலாம்

    ReplyDelete
  56. [[[துளசி கோபால் said...
    ஆண்டவரும் சுட ஆரம்பிச்சுட்டாரா!!!!
    நம்ம தாய்லாந்து பதிவில் நான் போட்ட படம்தான் அது:-)
    http://thulasidhalam.blogspot.com/2010/07/7.html]]]

    அட ஆமாம்.. டீச்சர் கரீக்ட்டு.. உங்க படத்தைத்தான் கூகிளாண்டவர் சுட்டு வைச்சிருக்காரு. உடனே கேஸ் போடுங்க. கோடிக்கணக்குல வரும்..!

    ReplyDelete
  57. [[[தீப்பெட்டி said...
    அட..]]]

    தம்பி தீப்பெட்டி.. இப்படியெல்லாம் பின்னூட்டம் போட்டா நான் எப்படி நன்றி சொல்றது..? கொஞ்சம் டைப்பிங் செய்யுங்கப்பா..!

    ReplyDelete
  58. [[[Katz said...
    கவிதை நல்லா இருக்கு. ஆனா கட்டுரை அளவுக்கு பெருசா இருக்கு.
    கவிதைகூட பெருசாதான் எழுதுவீங்களா? பரவால்ல ஆனா இதை ஹைக்கூன்னு மட்டும் சொல்லிடாதிங்க. ;-)]]]

    ச்சே.. அந்தளவுக்கெல்லாம் ஈவிரக்கமில்லாதவன் இல்ல நான்..! நம்புங்க ஸார்.. இது வெறும் கவிதைதான்..!

    ReplyDelete
  59. [[[காவேரி கணேஷ் said...
    அண்ணே, யாரையோ காதலிக்கிறீங்க போல.. வாழ்த்துக்கள்.]]]

    தம்பி.. உன் கண்டுபிடிப்பு பொய்.. அது இருக்கட்டும்.. ஏன் இப்படி ஆடிக்கொரு தடவை.. அமாவாசைக்கு ஒரு தடவைன்னு வர்றீங்க..?

    ReplyDelete
  60. [[[Gopi Ramamoorthy said...
    பரிசல் அடுத்து ஒரு கவிதைப் போட்டி வைக்கப் போவதாகக் கேள்வி. நீங்கதான் வின்னர் அப்படின்னு இப்பவே தோணுது எனக்கு.]]]

    மோதிருவோம்.. ஒரு கை பார்த்திர்றேன் கோபி. நன்றி..!

    ReplyDelete
  61. [[[ராம்ஜி_யாஹூ said...
    அருமை, வாலி வைரமுத்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.]]]

    ஆஹா.. என்ன அருமையான பாராட்டு..!? இதையெல்லாம் வாங்குறதுக்கு ரொம்பக் கொடுத்து வைச்சிருக்கணும்..! நன்றிங்கண்ணே..!

    ReplyDelete
  62. [[[ஸ்ரீநாராயணன் said...
    Ean? Ean? Ean? Ean?]]]

    காதலிக்க ஆள் வேணும்..!

    ReplyDelete
  63. [[[இராமசாமி கண்ணண் said...
    ஹாலிவுட பாலா பதிவுலகத்த விட்டு ஏன் விலகினாருன்னு எனக்கு இப்ப புரிஞ்சிடுச்சி :)]]]

    ஐயையோ.. அது சி.ஐ.ஏ. சதிப்பா. நான் எதுவும் செய்யலை.

    இனிமேல் யாராச்சும் பதிவுலகத்தை விட்டு விலகினா நான் பொறுப்பேத்துக்குறேன்..!

    ReplyDelete
  64. கவிதை! ஆச்சரியமாக உள்ளது ஆனால் அருமையாக உள்ளது! உங்களுக்குள்ளும் ஒரு கவிஞர் இருக்கிறார்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  65. [[[இராமசாமி கண்ணண் said...
    இனிமே எல்லா பதிவும் இந்த மாதிரியே இருக்கட்டும் :)]]]

    உங்களுடைய உற்சாகக் குரல் தினமும் கிடைக்குமென்றால் எழுதுவேன்..!

    ReplyDelete
  66. //ஆனால் கவிதை எழுதுவதை விடமாட்டேன்..!//

    அண்ணே, ஏன் இந்த கொலவெறி..
    நாங்க என்ன பாவம் பண்ணோம், ப்ளாக்கரா இருக்கறதும், உங்க பதிவுகளை படிப்பதும் ஒரு பாவமா? எங்களுக்கு ஏனிந்த கருட புராண தண்டனை.. பாத்து செய்யுங்கண்ணே.

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  67. கவிஞர் நசரேயன்..

    உங்களை மாதிரி எழுத முடியுங்களா..?

    அதுக்காக படம் போட்டு விளக்குற மாதிரி என்னைக் கொத்துப் புரோட்டோ போடணுமா?

    நான் பாவமில்லீங்களா..?

    ReplyDelete
  68. [[[தமிழன்பன் said...

    //100.6 டிகிரி காய்ச்சலாம்.. படுத்தா தூக்கம் வர மாட்டேங்குது. உக்காந்தா தூங்கணும் போல இருக்கு..//

    ஒருவேளை காத்து கருப்பு அல்லது மோகினிப் பேயின் வேலையாயும் இருக்கலாம்.]]]

    இருக்கலாமோ..? நாளைக்கு தர்ஹாவுக்கு போய் மந்திரிக்கணும்..!

    ReplyDelete
  69. [[[இராமசாமி கண்ணண் said...

    காதல் கிடைத்தால்
    காதலி கிடைப்பதில்லை..
    காதலி கிடைத்தால்
    காதல் கிடைப்பதில்லை..
    ---
    இத

    கல்ல கண்டா
    நாய கானோம்
    நாய கண்டா
    கல்ல காணோம்

    இப்படியும் எழுதலாம்னா.]]]

    இதை ஏற்கெனவே ஒருத்தர் வந்து சொல்லிக் காமிச்சிட்டுப் போயிட்டாரு. இப்போ நீங்களா?

    ReplyDelete
  70. வெட்டிப்பயல் பாலாஜி..

    எனக்கு ஒரு போன் பண்ண முடியல.
    இங்க வந்து ஒரு இடுகைக்கு 7 பின்னூட்டம் போட முடியுது உங்களால.

    இருங்க போன் பண்ணும் போது வச்சிக்கறேன் கச்சேரிய

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  71. [[[முத்துலெட்சுமி/muthuletchumi said...

    துளசி கோபால் said...

    ஆண்டவரும் சுட ஆரம்பிச்சுட்டாரா!!!!

    நம்ம தாய்லாந்து பதிவில் நான் போட்ட படம்தான் அது:-)//

    நான்கூட எங்கயோ பாத்த மாதிரின்னு நினைச்சேன் உங்களுதா ..:))]]]

    முத்தக்கா.. நான் திருடலை.. கூகிளாண்டவர்தான் திருடியிருக்காரு.. அவரைத் திட்டுங்க..!

    ReplyDelete
  72. [[[பார்வையாளன் said...
    உடலை தேத்திக்கிட்டு வாங்க.. களத்துல இறங்கிடலாம். நாளைக்கு கே கே நகர்ல இருந்தா சொல்லுங்க.. ஆரம்ப திட்டப் பணிகளை ஆரம்பிச்சுடலாம்]]]

    எப்பவும் கே.கே.நகர்லதான் இருக்கேன். வீட்டுக்கு வாங்க. பேசுவோம்..!

    ReplyDelete
  73. [[[எஸ்.கே said...
    கவிதை! ஆச்சரியமாக உள்ளது ஆனால் அருமையாக உள்ளது! உங்களுக்குள்ளும் ஒரு கவிஞர் இருக்கிறார்! வாழ்த்துக்கள்!]]]

    நன்றி எஸ்.கே. ஸார்.. உங்களுடைய பாராட்டு நிஜமாகவே எனக்கு உற்சாகமூட்டுகிறது..!

    ReplyDelete
  74. [[[sriram said...

    //ஆனால் கவிதை எழுதுவதை விடமாட்டேன்..!//

    அண்ணே, ஏன் இந்த கொலவெறி..
    நாங்க என்ன பாவம் பண்ணோம், ப்ளாக்கரா இருக்கறதும், உங்க பதிவுகளை படிப்பதும் ஒரு பாவமா? எங்களுக்கு ஏனிந்த கருட புராண தண்டனை. பாத்து செய்யுங்கண்ணே.

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்]]]

    வேற வழியில்லை. அனுபவிச்சுத்தான் ஆகணும். இத்தனை நாளா எனது கட்டுரைகளைக் கொண்டாடுன மாதிரி இனிமேல் என் கவிதையைக் கொண்டாடுங்கப்பா..!

    ReplyDelete
  75. [[[sriram said...
    வெட்டிப் பயல் பாலாஜி.. எனக்கு ஒரு போன் பண்ண முடியல. இங்க வந்து ஒரு இடுகைக்கு 7 பின்னூட்டம் போட முடியுது உங்களால. இருங்க போன் பண்ணும்போது வச்சிக்கறேன் கச்சேரிய

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்]]]

    ஆஹா.. தானா வந்து மாட்டினாரா பாலாஜி..!?

    ReplyDelete
  76. கவிதையைக் கூட பெருசா.... நல்லாயிருக்கு....

    ReplyDelete
  77. அடடே! (ஆச்சர்யகுறி) missing.. அதனால, இது கவிதை இல்லையோ? #டவுட்டு.
    It is too nice.. Congrats. Carry on...

    ReplyDelete
  78. @ துளசி மேடம்,

    //ஆமாம். அந்தப் பூவை எங்கியோ பார்த்தமாதிரி இருக்கே!!!//

    போட்டுடைக்கும் முன் கேட்ட விதம், ஐ லைக் இட்:)))!

    ReplyDelete
  79. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    கவிதையைக் கூட பெருசா. நல்லாயிருக்கு.]]]

    எங்க போனாலும் நம்மளோட தனித்தன்மையை விடக் கூடாது யோகேஷ்..!

    ReplyDelete
  80. [[[ஜோதிஜி said...
    சபாஷ்.]]]

    ஆஹா.. நன்றிண்ணே..! நன்றிண்ணே..!

    ReplyDelete
  81. [[[Thangaraju said...
    அடடே! (ஆச்சர்யகுறி) missing.. அதனால, இது கவிதை இல்லையோ? #டவுட்டு. It is too nice.. Congrats. Carry on...]]]

    நன்றி தம்பி..!

    ReplyDelete
  82. [[[ராமலக்ஷ்மி said...

    @ துளசி மேடம்,

    //ஆமாம். அந்தப் பூவை எங்கியோ பார்த்தமாதிரி இருக்கே!!!//

    போட்டுடைக்கும் முன் கேட்டவிதம், ஐ லைக் இட்:)))!]]]

    அதான் டீச்சரம்மா..! என்ன இருந்தாலும் இந்த டீச்சர் குணம் அவங்களை விட்டு எப்பவும் போகவே போகாது..!

    ReplyDelete
  83. சந்தோஷமான செய்திண்ணே.

    ReplyDelete
  84. [[[முரளிகண்ணன் said...
    சந்தோஷமான செய்திண்ணே.]]]

    நான் ஒண்ணுமே சொல்லலியேண்ணே..! கவிதை எழுத வந்தது உங்களுக்குச் சந்தோஷமா..?

    ReplyDelete
  85. காதலும் ,கவிதையும் இணைந்தே இருப்பவை !
    கவிதை இல்லா காதலும்
    காதல் இல்லா கவிதையும்... சுவைப்பதில்லை!

    ReplyDelete
  86. [[[marimuthu said...

    காதலும், கவிதையும் இணைந்தே இருப்பவை!

    கவிதை இல்லா காதலும்

    காதல் இல்லா கவிதையும்...

    சுவைப்பதில்லை!]]]

    அனுபவித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.. வாழ்க வளமுடன்..!

    ReplyDelete
  87. உடம்பைப் பாத்துக்குங்க அண்ணே

    ReplyDelete
  88. [[[லதாமகன் said...
    உடம்பைப் பாத்துக்குங்க அண்ணே]]]

    அக்கறைக்கு மிக்க நன்றி அண்ணே..!

    ReplyDelete