Pages

Monday, October 18, 2010

சூப்பர் ஸ்டாரின் ஹிமாலயன் டூர் புகைப்படங்கள்..!

18-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு திரைப்படம் வெளியானவுடன் இமயமலைக்குச் சென்று பல ஆண்டுகளாக உயிருடன் இருப்பதாகச் சொல்லப்படும் தனது ஆன்மிகக் குருவான பாபாவின் குகையில் அமர்ந்து தியானம் செய்து மறுபடியும் புல் சார்ஜ் ஏற்றிக் கொண்டு திரும்பி வருவதுதான் தன் வழக்கம் என்று ஏதோ ஒரு பட விழாவில் அண்ணன் ரஜினி கூறியிருந்தார்.

சென்ற முறை அவர் அப்படி இமயமலைக்குச் சென்றபோது அவருடன் சென்றிருந்த ஹரி என்னும் நண்பரைத் துப்பறிந்து கண்டறிந்த பத்திரிகைகள், அவருடன் ரஜினியின் அனுபவங்கள் என்ற தலைப்பில் பேட்டி கண்டு கல்லா கட்டியது நினைவிருக்கலாம்.

விஜய் டிவி ஒரு படி மேலே போய் சூப்பர் ஸ்டார் சென்று வந்த பாதைகளில் கேமிராவுடன் சென்று படமெடுத்து, அவர் தியானம் செய்த குகையையும் பதிவு செய்து தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு இமயமலைக்குச் சென்று வந்தால் அமைதி கிடைக்கும் என்று சொல்லியது.

இந்த முறையும் 'எந்திரன்' என்னும் சூப்பர்ஹிட்டை கொடுத்துவிட்டு வழக்கம்போல அண்ணன் இமயமலைக்குச் சென்று வந்திருக்கிறார். எப்போதும் காதும், காதும் வைத்தாற்போல் சென்று வருபவர் இந்த முறை மட்டும் எந்தத் தேதியில் செல்கிறார்? எந்தத் தேதியில் திரும்பி வருகிறார்? என்கிற செய்தியையெல்லாம் வெளியில் ரிலீஸ் செய்துவிட்டுத்தான் போனார்.

போனவர் தனது தியானத்தை முடித்துவிட்டு பத்திரமாக திரும்பிவிட்டார். இனி ரசிகர்களுக்கான விருந்து அழைப்பு என்றைக்கு என்று பத்திரிகைகள் செய்திக்காக காத்திருக்கும் நேரத்தில்  அதிசயமாக இமயமலையில் ரஜினி ரவுண்ட் அடித்த புகைப்படங்களை பேஸ்புக்கில்தான் முதலில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

யார் இந்தப் புண்ணியவான்கள் என்று தெரியவில்லை.. ரஜினிக்குத் தெரியாமல் புகைப்படம் வெளியில் வர வாய்ப்பில்லை என்பதால் அண்ணன் தேறிவிட்டார் என்றே நினைத்துக் கொள்ளலாம்.

புகைப்படத்திற்காக இமயமலையிலும் சூப்பர் ஸ்டாராகவே போஸ் கொடுத்திருப்பதைப் பார்த்த பின்புதான் இதனை நாமும் வெளியிட்டு கல்லா கட்டினால் என்ன என்று தோன்றியது..?

இந்தப் புகைப்படங்களில் சூப்பர் ஸ்டார் தெரிகிறாரா? சாதாரண ரஜினிகாந்த் தெரிகிறாரா என்று நீங்களே பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்..!

நன்றி..!
















45 comments:

  1. Excellent Pictures ! Thank you Saravanan Ji.

    ReplyDelete
  2. எனக்கென்னமோ சூப்பர்ஸ்டார்தான் தெரியுறாரு... ஸ்டைலா போஸ் கொடுக்ககறது அவரு கூட பொறந்தது..

    இமயமலைக்கு போறவங்க காவிகட்டி, ருத்ராட்சமாலை, கமண்டலத்தோட இருப்பாங்கன்னு கேள்விப்பட்ருக்கேன்...

    ReplyDelete
  3. இதத்தான் நெட் முழுக்க போட்ருகாய்காங்களே.. நீங்க வேற எதுக்கு :) வேற எதுவும் இண்ட்ரஸ்டிங்கா எழுதிருக்கலாம்.. உடம்பு சரி ஆய்ருச்சா :)

    ReplyDelete
  4. புகைப்படங்கள் அருமை.

    பல்லிருக்குறவன் பக்கோடா திங்கிறான்.

    நான் நம்ம முட்டு சந்து முண்டகன்னி அம்மன் கிட்ட வேண்டிகிட்டு தான் பத்தாங்கிளாஸ் பாஸ் ஆனேன். ஏதோ நம்மால முடிஞ்சது.

    ReplyDelete
  5. இரஜினி வேட்டி கட்டுவாறா? இப்ப தான் வேட்டியோட பார்க்கிறேன்.

    வேட்டி மறைமுகமா ஒரு கதை சொல்லுதே.

    ReplyDelete
  6. கடைசில இருந்து மூணாவது படம்... அதான் அந்த சாப்பாட்டு தட்டோட நிக்கிற படம் அது மட்டும் மனசிலேயே நிக்கிது...

    ReplyDelete
  7. அழகு அழகு அனைத்தும் அழகு!

    ReplyDelete
  8. //இந்தப் புகைப்படங்களில் சூப்பர் ஸ்டார் தெரிகிறாரா? சாதாரண ரஜினிகாந்த் தெரிகிறாரா//

    புகைப்படங்களில் தெரிவது சூப்பர் ஸ்டாரா அல்லது ரஜினிகாந்தா என்ற ஆராச்சிக்கு முன் இந்தச் சின்னஞ் சிறு பதிவை இட்டது உண்மைதமிழனா அல்லது சரவணனா?????

    ReplyDelete
  9. நீ நடந்தால் நடை அழகு.. நீ சிரித்தால் சிரிப்பழகு.. நீ பேசும் தமிழ் அழகு.. நீ ஒருவன் தான் அழகு..

    நான் ரஜினியை சொன்னேன் .. ஹி ஹீ

    உங்க பதிவும் அழகுதான்

    ReplyDelete
  10. சப்பாட்டு தட்டோட நிக்கற ரஜினி படம்...ஏதோ மனச பண்ணுது...!

    ReplyDelete
  11. படவு சூப்பர்...........

    உடம்பு சரியாயிடிச்சா???

    ReplyDelete
  12. [[[PARAYAN said...
    Excellent Pictures ! Thank you Saravanan Ji.]]]

    நன்றிஜி..!

    ReplyDelete
  13. [[[நாஞ்சில் பிரதாப் said...

    எனக்கென்னமோ சூப்பர் ஸ்டார்தான் தெரியுறாரு. ஸ்டைலா போஸ் கொடுக்ககறது அவருகூட பொறந்தது.]]]

    அதான் அவரோட ஸ்டைலு.. வேற யாருக்கும் வராதது..!

    [[[இமயமலைக்கு போறவங்க காவி கட்டி, ருத்ராட்சமாலை, கமண்டலத்தோட இருப்பாங்கன்னு கேள்விப்பட்ருக்கேன்.]]]

    அது உண்மையான சாமியார்களுக்கு..! டிரை பண்றவங்களுக்கு இல்லை..!

    ReplyDelete
  14. [[[இராமசாமி கண்ணண் said...
    இதத்தான் நெட் முழுக்க போட்ருகாய்காங்களே.. நீங்க வேற எதுக்கு :) வேற எதுவும் இண்ட்ரஸ்டிங்கா எழுதிருக்கலாம்..:)]]]

    அப்படியா? போடலைன்னு நினைச்சுத்தான போட்டேன். ஸாரி இராமசாமி ஸார்..!

    ReplyDelete
  15. [[[VISA said...

    புகைப்படங்கள் அருமை.

    பல்லிருக்குறவன் பக்கோடா திங்கிறான்.

    நான் நம்ம முட்டு சந்து முண்டகன்னி அம்மன்கிட்ட வேண்டிகிட்டுதான் பத்தாங் கிளாஸ் பாஸ் ஆனேன். ஏதோ நம்மால முடிஞ்சது.]]]

    ஒண்ணும் தப்பில்லையே விஸா..? ஏழைக்கேத்த உசரம்.. அவர் உசரத்துக்கு இமயமலைக்குப் போயிட்டு வரலாம். நம்மளால முடியுங்களா..?

    ReplyDelete
  16. [[[குறும்பன் said...
    ரஜினி வேட்டி கட்டுவாறா? இப்பதான் வேட்டியோட பார்க்கிறேன்.
    வேட்டி மறைமுகமா ஒரு கதை சொல்லுதே.]]]

    குறும்பன் இதென்ன கேள்வி? ரஜினி வேஷ்டி கட்டி பார்த்ததில்லையா..? ஆச்சரியமா இருக்கு..! நீங்கள் தமிழர்தானா? தமிழ்நாட்டில்தான் இருக்கிறீரா..? இல்லை காமெடி செய்கிறீரா..?

    ReplyDelete
  17. [[[எஸ்.கே said...
    அழகு அழகு அனைத்தும் அழகு!]]]

    இதுதான் ரஜினி..!

    ReplyDelete
  18. [[[தமிழன்பன் said...

    //இந்தப் புகைப்படங்களில் சூப்பர் ஸ்டார் தெரிகிறாரா? சாதாரண ரஜினிகாந்த் தெரிகிறாரா//

    புகைப்படங்களில் தெரிவது சூப்பர் ஸ்டாரா அல்லது ரஜினிகாந்தா என்ற ஆராச்சிக்கு முன் இந்தச் சின்னஞ்சிறு பதிவை இட்டது உண்மைதமிழனா அல்லது சரவணனா?]]]

    நான்தாண்ணே.. நானேதான்.. அதாவது உங்களது உண்மைத்தமிழன் என்னும் சரவணன்..!

    ReplyDelete
  19. [[[பார்வையாளன் said...
    நீ நடந்தால் நடை அழகு.. நீ சிரித்தால் சிரிப்பழகு.. நீ பேசும் தமிழ் அழகு.. நீ ஒருவன்தான் அழகு.. நான் ரஜினியை சொன்னேன்.. ஹி ஹீ.. உங்க பதிவும் அழகுதான்]]]

    உங்க கமெண்ட்டும் அழகுதான்..!

    ReplyDelete
  20. [[[♥♪•வெற்றி - VETRI•♪♥ said...
    சப்பாட்டு தட்டோட நிக்கற ரஜினி படம். ஏதோ மனச பண்ணுது.!]]]

    தீவிர ரசிகர்போல் தெரிகிறது.. மனசைத் தேத்திக்குங்க.. இதெல்லாம் மனித வாழ்க்கைல சகஜம்..!

    ReplyDelete
  21. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    படவு சூப்பர். உடம்பு சரியாயிடிச்சா???]]]

    காய்ச்சல் சரியாயிருச்சு. ஆனால் போன காதுதான் திரும்பி வரலை யோகேஷ்..

    ReplyDelete
  22. "போன காதுதான் திரும்பி வரலை யோகேஷ்.."


    இந்த தகவல் உண்மையாக இருக்காது.. உங்களோட இருக்காதும் நல்லாத்தான் இருக்கு., சும்மா தமாஷ் செய்றீங்கன்னு நினைக்றேன்..
    பூரண உடல் நலம் பெற இறை அருளை வேண்டுகிறேன்

    ReplyDelete
  23. Excellent!
    ரஜினி சாப்பிடும் படம் இப்போ என் டெஸ்க்டாப்பை அலங்கரிக்கிறது!
    மிகவும் நன்றி உ.த.சார்!

    ReplyDelete
  24. யெய்யா ரஜினி, இந்த யதார்த்தந்தாய்யா ஒன்ன இம்புட்டு ஒசரத்துல வெச்சிருக்கு. நல்லா இரு.

    ReplyDelete
  25. சூப்பர் ஸ்டார் கூட இருக்குறவங்க யாருங்க

    ReplyDelete
  26. சூப்பர் ஸ்டார் கூட இருக்குறவங்க யாருங்க

    ReplyDelete
  27. ஆன்மீக பயணம் போகிறார்.. ஆனால் அதனை படம் எடுத்து விளம்பர படுத்துகிறார்.. பாபாதான் பாவம்.. நீங்க சொல்ற மாதிரி தேறிட்டாருன்னுதான் தோணுது..

    ReplyDelete
  28. [[[பார்வையாளன் said...

    "போன காதுதான் திரும்பி வரலை யோகேஷ்.."

    இந்த தகவல் உண்மையாக இருக்காது. உங்களோட இருக்காதும் நல்லாத்தான் இருக்கு., சும்மா தமாஷ் செய்றீங்கன்னு நினைக்றேன். பூரண உடல் நலம் பெற இறை அருளை வேண்டுகிறேன்]]]

    காது அதே இடத்துலதான் இருக்குது..! ஆனால் அதுனுடைய கேட்கும் சக்திதான் வெகுவாகக் குறைந்துவிட்டது..! இதுதான் பிரச்சினை..!

    ReplyDelete
  29. [[[Ganpat said...
    Excellent! ரஜினி சாப்பிடும் படம் இப்போ என் டெஸ்க்டாப்பை அலங்கரிக்கிறது!
    மிகவும் நன்றி உ.த.சார்!]]]

    ஓ.. ரஜினியின் தீவிர விசிறியோ.. வாழ்க வளமுடன்..!

    ReplyDelete
  30. [[[VJR said...
    யெய்யா ரஜினி, இந்த யதார்த்தந்தாய்யா ஒன்ன இம்புட்டு ஒசரத்துல வெச்சிருக்கு. நல்லா இரு.]]]

    நானும் உங்களை மாதிரியே வாழ்த்திக்கிறேன் விஜேஆர்.

    ReplyDelete
  31. [[[கமெண்ட் மட்டும் போடுறவன் said...
    சூப்பர் ஸ்டார் கூட இருக்குறவங்க யாருங்க?]]]

    வெங்கட், ஹரி என்ற இரண்டு ஆன்மிக நண்பர்கள்..!

    ReplyDelete
  32. [[[கே.ஆர்.பி.செந்தில் said...
    ஆன்மீக பயணம் போகிறார்.. ஆனால் அதனை படம் எடுத்து விளம்பரபடுத்துகிறார்.. பாபாதான் பாவம்.. நீங்க சொல்ற மாதிரி தேறிட்டாருன்னுதான் தோணுது.]]]

    ஆமாங்கண்ணே.. தேறிட்டாருங்கண்ணே..!

    ReplyDelete
  33. go to layout. click edit in blog posts. then check mark email post links. i want to email your posts to my friends without leaving your blog.

    ReplyDelete
  34. பகிர்வுக்கு நன்றி அண்ணா.

    ReplyDelete
  35. நீங்கள் இப்படி படத்தொகுப்புக்கள் போடுவதைவிடவும் நல்ல கட்டுரைகள் எழுதலாம். தங்களின் எஸ். எஸ். சந்திரன் பற்றிய கட்டுரையை இன்றுதான் வாசித்தேன். மிக அருமையாக தகவல்கள் திரட்டி எழுதியிருக்கிறீர்கள். முன்பொரு பேட்டியில் அவர் இலங்கையில் இருந்தபோது இலங்கையின் முன்னாள் அதிபர் ஜெயவர்த்தனா இவருடன் ஒரே அறையில் ஹாஸ்டலில் தங்கியிருந்தவர் என்று சொல்லியிருக்கிறார். இவரை நடிகர் சிவகுமார் அவர்களின் படப்பிடிப்பின்போது ஒரேயொருமுறை சந்தித்திருக்கிறேன். இயல்பாக கலகலப்பாகப் பழகும் குணம் இருந்தது அவருக்கு. அவரது மேடைப்பேச்சுக்கள்தாம் காதுகொடுத்துக் கேட்கமுடியாத அளவுக்கு இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு தங்களின் சுயம் பற்றிய கவலை இல்லாமல் பேசும்- நடந்துகொள்ளும் - கலைஞர்களுக்கு இதெல்லாம் ஒரு பாடம்தான்.

    ReplyDelete
  36. [[[d said...
    go to layout. click edit in blog posts. then check mark email post links. i want to email your posts to my friends without leaving your blog.]]]

    ஒண்ணும் புரியல ஸாரே..!

    ReplyDelete
  37. [[[முரளிகண்ணன் said...
    பகிர்வுக்கு நன்றி அண்ணா.]]]

    அண்ணே.. வணக்கம்ண்ணே.. என்னை மாதிரி சின்ன ஆளுகளையெல்லாம் ஞாபகத்துல வைச்சிருக்கீகளே.. அதுவே போதும்ண்ணே..!

    ReplyDelete
  38. [[[Amudhavan said...
    நீங்கள் இப்படி படத் தொகுப்புக்கள் போடுவதை விடவும் நல்ல கட்டுரைகள் எழுதலாம். தங்களின் எஸ். எஸ். சந்திரன் பற்றிய கட்டுரையை இன்றுதான் வாசித்தேன். மிக அருமையாக தகவல்கள் திரட்டி எழுதியிருக்கிறீர்கள். முன்பொரு பேட்டியில் அவர் இலங்கையில் இருந்தபோது இலங்கையின் முன்னாள் அதிபர் ஜெயவர்த்தனா இவருடன் ஒரே அறையில் ஹாஸ்டலில் தங்கியிருந்தவர் என்று சொல்லியிருக்கிறார். இவரை நடிகர் சிவகுமார் அவர்களின் படப்பிடிப்பின்போது ஒரேயொருமுறை சந்தித்திருக்கிறேன். இயல்பாக கலகலப்பாகப் பழகும் குணம் இருந்தது அவருக்கு. அவரது மேடைப் பேச்சுக்கள்தாம் காது கொடுத்துக் கேட்க முடியாத அளவுக்கு இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு தங்களின் சுயம் பற்றிய கவலை இல்லாமல் பேசும்- நடந்து கொள்ளும் - கலைஞர்களுக்கு இதெல்லாம் ஒரு பாடம்தான்.]]]

    பல கட்டுரைச் செய்திகளுக்கு நடுவே இது போன்று ஒரு சில செய்திகளைத்தானே போடுகிறேன்..

    தங்களுடைய அறிவுரைக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  39. படத்தைப் பார்த்தால் இது அரசியலுக்கு தேர்ற மாதிரி தெரியலையே.

    ReplyDelete
  40. [[[ராஜ நடராஜன் said...
    படத்தைப் பார்த்தால் இது அரசியலுக்கு தேர்ற மாதிரி தெரியலையே.]]]

    அரசியலா மூச்.. தமிழக அரசின் சுற்றுலாப் பிரிவுக்கு விளம்பரமா இதை யூஸ் பண்ணிக்கலாம்..!

    ReplyDelete
  41. nice


    watch rajni's simplicity


    http://www.youtube.com/watch?v=-1K_8EsLzBg

    ReplyDelete
  42. ராம்ஜி ஸார்..

    ரஜினி தென்னகத்தில் அதிகம் பேசப்படுவதற்கு அவரது எளிமையும் ஒரு காரணம்..!

    தனது மாஸ் செல்வாக்கை அறிந்து கொள்ளாதவரைப் போலவே அவர் இருந்து வருகிறார். இதுதான் பலரையும் கவர்ந்திருக்கிறது..!

    ReplyDelete
  43. இந்த புகைப்படம் நக்கீரனில் ஏற்க்கனவே வந்திடிச்சே மக்கா..........
    ஸோ இருந்தாலும், ஜூப்பர்............

    ReplyDelete
  44. [[[நாஞ்சில் மனோ said...
    இந்த புகைப்படம் நக்கீரனில் ஏற்க்கனவே வந்திடிச்சே மக்கா. ஸோ இருந்தாலும், ஜூப்பர்.]]]

    நன்றி நாஞ்சில்..!

    ReplyDelete
  45. Dear Rajini,


    I like Your first Photo . I also wants to sit like this.
    B.Mahadevan

    ReplyDelete