Pages

Monday, September 20, 2010

பஞ்சமுகி - சினிமா விமர்சனம்

18-09-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்திற்குக் கிளம்பும்போதே தம்பி ஜாக்கி, “வேண்டாம்ண்ணே.. அதெல்லாம் ஒரு படம்னு பார்க்கப் போற..? பொழப்பைப் பாருண்ணே..” என்றான். நான்தான் கேட்கவில்லை. அனுபவித்தேன்.

அழகு தேவதைகளுக்கெல்லாம் நல்ல மனசு இருக்காது என்று கல்நெஞ்சக்காரர்கள்தான் பசப்புவார்கள். உண்மையில் தேவதைகள் மிகவும் மென்மையானவர்கள். அன்பானவர்கள். பாசமானவர்கள். பண்பானவர்கள். குறிப்பாக இரக்கக் குணமுள்ளவர்கள்.

உதவி என்று கேட்டுப் போனால் மூலக் கடவுளர்களைவிடவும் உடனுக்குடன் வேண்டியதைக் கொடுத்து அருள் பாலிப்பார்கள். கடவுளர்கள்தான் கொஞ்சம் கொடூரமானவர்கள். நம்மை கொஞ்சம் சுத்தவிட்டு, அழுக வைத்து, வேடிக்கை பார்த்துவிட்டு கடைசியாக போனால் போகிறதென்று கொடுப்பார்கள்..

பீடிகை எதற்கு..? சினிமா நடிகைகள் அத்தனை பேரும் பணத்திலேயே குறியாக இருந்துவிடுவதில்லை.. அதையும் மீறி உதவிகள் செய்வதிலும் ஹீரோக்களுக்கு சளைத்தவர்களில்லை. என்ன.. இவர்கள் செய்வது அதிகம் வெளியே தெரியாது.. அவ்வளவுதான் விஷயம்..

இப்படித்தான் நமது தற்போதைய கனவுக் கன்னி அனுஷ்காவும் நினைத்திருக்கிறார். தன்னை அழகுபடுத்திய கைகளை தானும் பதிலுக்கு அழகுபடுத்த வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அவருடைய சொந்த மேக்கப்மேன் சந்திரராவின் மேல் அவருக்கு பிரியம் ஜாஸ்தி. அவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்துவிட வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.


இந்த நேரத்தில் 'அருந்ததி'யின் தீயான ஓட்டம் அனுஷ்காவை கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கிறது. தன்னுடைய பேயாட்டத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் கிறங்கிப் போயிருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் இதேபோல் இன்னொரு பேயாட்டத்தை ஆடி காசை அள்ளலாமே என்று நினைத்திருக்கிறார். 'அருந்ததி'க்கு பிறகு அவரைத் தேடி வந்த அத்தனை அம்மன் படங்களையும் நிராகரித்தவர், ஒரேயொரு இயக்குநர் சொன்ன கதையை மட்டும் ஓகே செய்துவிட்டு தயாரிப்பாளரை தானே செலக்ட் செய்திருக்கிறார். அவர் அனுஷ்காவின் ஆஸ்தான மேக்கப்மேன் சந்திராராவ். 


சந்திராராவை தன்னிடத்தில் சேர்ப்பித்துவைத்த தன்னுடைய படவுலக கார்டியன் அக்கினேனி நாகார்ஜூனாவின் மேற்பார்வையிலும், வழிகாட்டுதலிலும் தெலுங்கில் 'பஞ்சாக்ஷ்ட்ரி' என்னும் பெயரில் இந்தப் படத்தைத் தயாரித்து முடித்து வெளியிட்டிருக்கிறார் அனுஷ்காம்மா. தமிழில் இ.ராம்தாஸின் வசன மொழி பெயர்ப்பில் டப்பிங் செய்து 'பஞ்சமுகி' என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள்.

பக்கா தெலுங்கு மசாலாதான். ஆனால் மசாலா சரியாக மிக்ஸ் செய்யப்படாததுதான் வருத்தம். தவறு இயக்குநர் மீதுதான். அனுஷ்காவின் மீதல்ல..

எப்படியும் நீங்க படத்தைப் பார்க்கப் போறதில்லை. அதுனால கதையையாவது முழுசா படிச்சுத் தொலைங்க..

கதை-1

பஞ்சமுகி என்னும் அம்மன் கோவில் வாசலில் பிறந்த காரணத்தால் பஞ்சமுகி என்னும் இந்த அனுஷ்காவை அந்த ஊரே கொண்டாடுகிறது. வருடாவருடம் சித்ரா பெளர்ணமியன்று மட்டும் அனுஷ்காவை, பஞ்சமுகி அம்மனாகவே பாவிக்கிறார்கள் அந்த ஊர் மக்கள். அன்று அனுஷ்காவின் உடலுக்குள் புகும் பஞ்சமுகியம்மன், தன்னிடம் அருள் வாக்கு கேட்கும் அத்தனை பக்தர்களுக்கும் சொல்வாக்கை வஞ்சகமில்லாமல் கொட்டுகிறார். அத்தனையும் பலித்து விடுவதால் பக்தர்கள் கூட்டம் அன்று மட்டும் அலை மோதுகிறது.

இப்போது பஞ்சமுகி பாவாடை, தாவணியில் ஊரை வலம் வரும் மயிலு. அப்போது பார்த்து ஊருக்கு வரும் சாம்ராட் என்னும் இளைஞன் பஞ்சமுகியின் அழகில் மயங்கி அவளைத் திருமணம் செய்து கொள்ளத் துடிக்கிறான். பஞ்சமுகியின் அப்பாவும், ஊராரும் பேசி அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. இதற்குப் பின்பும் வருடவருடம் சித்ரா பெளர்ணமியில் சாமியாடுவதையும் பஞ்சமுகி நிறுத்தவில்லை.

இந்த நேரத்தில் அந்த ஊரிலேயே இருக்கும் பிரபல தாதாவிடம்  தொல்பொருள் அலுவலக அதிகாரி ஒருவர், பஞ்சமுகி கோவிலின் உள்ளே பல கோடி மதிப்புள்ள தங்க, நகைகள் இருப்பதாகச் சொல்கிறார். இதைக் கேட்டு சாமியாடும் தாதா, அந்த அதிகாரியை அங்கேயே பொலி போட்டு குழி தோண்டி புதைத்துவிட்டு புதையலைத் தோண்டியெடுக்க திட்டம் போடுகிறார்.

தாதாவின் திட்டப்படியே அடுத்து வரும் சித்ராபெளர்ணமியன்று பஞ்சமுகி சாமியாடும்போது மஞ்சள், குங்குமத்திற்கு இடையில் கந்தகத்தை வைத்து அவளை உயிரோடு எரித்து சமாதியாக்குகிறார்கள் கூட்டாளிகள். இப்போது கோவிலுக்குத் தீட்டாகிவிட்டது. கோவிலைப் பூட்டுங்கள் என்று புரளியைக் கிளப்பியும், மேலும் கோவிலுக்கு வருபவர்களிடம் தாதாவின் ஆட்களே கொள்ளையடிக்கவும் செய்ய.. ஒருவித பயத்துடன் கோவில் மூடப்படுகிறது.

தினமும் இரவில் தாதாவின் ஆட்கள் மட்டும் கோவிலுக்குள் போய் புதையலைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கதை-2

இன்னொரு அனுஷ்கா. பெயர் ஹனி. பேஷன் டெக்னாலஜி படித்து முடித்துவிட்டு ஹைதராபாத்தில் மிகப் பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் கடை வைத்திருக்கிறாள். அப்பா, அம்மா, அண்ணன்கள், அத்தை என்று பெரிய குடும்பத்தோடு இருப்பவர்களுக்கு ஒரேயொரு தொல்லை அவளுடைய அத்தைதான்.


“எப்படியாவது, எங்கிட்டாவது சீக்கிரமாக ஒரு இளிச்சவாயனைப் புடிச்சு, இவளை அவன் தலைல கட்டி வைச்சிரு தம்பி..” என்று தனது தம்பியான ஹனியின் அப்பனைப் போட்டு அரித்தெடுக்கிறாள். அத்தையின் தொந்தரவு தாங்காமல் போட்டா ஸ்டூடியோவில் கிடைக்கும் ஸ்ரீராம் என்னும் இளைஞனின் புகைப்படத்தைக் கொடுத்து “இவனை நான் லவ் பண்றேன். இவன் இப்போ அமெரிக்கால படிச்சுக்கிட்டிருக்கான். ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் வருவான்” என்று சொல்லி வீட்டாரின் வாயை அடைக்கிறாள் ஹனி.

மிக்ஸான கதை..!

இதே நேரம் செத்துப் போன பஞ்சமுகியின் கணவனான சாம்ராட் ஹைதராபாத்தில் தனது குழந்தையுடன் செட்டில் ஆகியிருக்கிறான். அவனது பெண் குழந்தை தனது தாயின் நினைவாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

சினிமாவின் தற்செயல் விபத்தின் இலக்கணத்தின்படி ஒரு மெடிக்கல் ஷாப்பில் மோதிக் கொள்ளும் சாம்ராட்டும்-ஹனி அனுஷ்காவும் சந்தித்துக் கொள்கிறார்கள். தனது மனைவி போலவே இருக்கிறாளே என்றெண்ணி சாம்ராட், ஹனி அனுஷ்காவை அவளுக்குத் தெரியாமலேயே வீடியோ படம் எடுத்து அதனை தனது மகளுக்கு வீட்டில் போட்டுக் காட்டி கூல் செய்து வருகிறான்.

இடையில் ஹனி அனுஷ்கா தன் காதலன் என்று சொன்ன ஸ்ரீராமை சந்தித்து விடுகிறாள். அவனை இப்போது நான்கைந்து பேர் கொலை வெறியோடு துரத்தி வருகிறார்கள். ஆள் அனுப்பி வைத்தது பஞ்சமுகியைக் கொலை செய்த அதே தாதா. காரணம், ஸ்ரீராம் பஞ்சமுகியைக் கொலை செய்ய வேண்டாம் என்று தடுத்ததுதான். எங்கே இவனை விட்டுவைத்தால் வெளியில் சொல்லிவிடுவானோ என்பதால் இவனுக்கு மரண தண்டனையை விதித்திருக்கிறான் தாதா.

அனுஷ்காவை விரட்டிக் கொண்டு வீட்டுற்குள் வருகிறான் ஸ்ரீராம் பின்னாலேயே வரும் போலீஸ் இவன் ஒரு கொடூரமான கொலைக் குற்றவாளி என்று சொல்லி இழுத்துச் செல்ல.. குடும்பத்தினரிடம் உண்மையைச் சொல்லித் தொலைக்கிறாள் அனுஷ்கா.

இந்த நேரத்தில் மெடிக்கல் ஷாப்பில் மோதிய வேகத்தில் தனது டைரியை எடுத்து வைத்திருக்கும் சாம்ராட்டிடம் டைரியை வாங்கச் செல்லும் அனுஷ்கா அங்கு அவனது நிலைமையையும், அவனது குழந்தையின் பரிதாபத்தையும் பார்த்து அச்சச்சோ கொட்டுகிறாள். பஞ்சமுகியின் கதையைக் கேட்டு ஆர்வப்பட்டு அவன் கூடவே பஞ்சமுகி வாழ்ந்த கிராமத்துக்கு வந்து சேர்கிறாள். இதற்குப் பின் இவள் குடும்பத்தில் ஒருத்தரைக்கூட கண்ணில் காட்டவில்லை..

இப்போது தாதா கும்பல் கோவிலுக்குள் குழி தோண்டிக் கொண்டிருக்க.. பஞ்சமுகியாக மாற ஹனி அனுஷ்கா ஆசையோடு இருக்க.. ஊர் மக்களெல்லாம் சித்ரா பெளர்ணமியை கொண்டாடிவிட வேண்டும் என்று ஆசையோடு காத்திருக்க.. புதையல் கிடைத்ததா? ஹனி அனுஷ்கா பஞ்சமுகியாக மாறினாளா..? என்பதுதான் மிச்ச சொச்சக் கதை..


தலையைச் சுற்றி மூக்கைத் தொட வைக்கும் வழக்கமான தெலுங்கு மசாலாவான இக்கதை திரையில் கொஞ்சம் முன் பின்னாக மாற்றியிருப்பதால் இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

அனுஷ்கா ஆத்தாவாகவும், ஹனியாகவும் தோன்றினாலும் அவரை இன்னும் கொஞ்சம் நன்கு பயன்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.


முதல் காட்சியில் கோவிலில் போடும் கெட்ட ஆட்டத்தின் நெளிவு, சுழிவுகளைப் பார்த்தால் தமன்னா ரசிகர் மன்றத்திலிருந்து வாலண்டரி ரிட்டையர்டுமெண்ட் வாங்கிக் கொண்டு வெளியே வந்துவிடலாம் போலத் தோன்றுகிறது. 


அனுஷ்காவின் ரசிகர்களுக்காகவே ஒரு பேஸ்கட்பால் சீனும் உண்டு. ஆனால் படத்தின் நீளத்தைக் கருத்தில் கொண்டு அதில் கத்திரி போட்ட இயக்குநரை உங்களது அனைவரின் சார்பாக நானே திட்டித் தீர்க்கிறேன்.

பாடல் காட்சியில் சொக்க வைக்கும் அழகை மொக்கைத்தனமாக காட்ட வைத்திருக்கும் இயக்குநரை கூடுதலாக கவனிக்க வேண்டும்போல தோன்றுகிறது. அனுஷ்காவுக்கே இது அடுக்குமா என்று தெரியவில்லை..


பஞ்சமுகியாக சேலையில் அடக்க ஒடுக்கமாக பாந்தமாக நாம் பார்க்கும்போது சாட்சாத் அந்த அம்பாளே நேரில் வந்ததுபோல் இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் அம்பாளை இதற்கு முன் நேரில் பார்த்திராத காரணத்தால், படத்தில் வரும் இந்த வசனத்தை நாமும் நம்பி விடலாம்.

அருந்ததியில் இருந்த திரைக்கதை இறுக்கமும், சுவாரஸ்யமும் இதில் இல்லாததால் அனுஷ்காவுக்கும் அதிகமாக வேலையில்லாமல் போய்விட்டது. இறுதிக் காட்சியிலாவது அசத்த வைக்கப் போகிறார்கள் என்று பார்த்தால் இராம.நாராயணன் படம் அளவுக்குக்கூட சிந்திக்காமல் கிராபிக்ஸை வைத்து ஏமாற்றிவிட்டார்கள்.


பல்லு மேல நாக்கா.. நாக்கு மேல பல்லா என்றெல்லாம் தெரியாமல் ஜொள்ளுவிடும் அனுஷ்காவிடம், அவர் நாக்கை வெளியே தள்ளி பத்ரகாளி ஆட்டம் ஆட வைத்தது மட்டுமே பக்தியாளர்களுக்குக் கிடைத்த ஒரேயொரு திருப்தி.. பார்த்தவர்கள் பரவசமானார்கள். தெரு ஓரங்களில் குறி சொல்வதைப் போல ஆத்தாவிடம் அருள் வாக்கு பெறும் காட்சியை எடுத்திருப்பதால் எனக்கு வி.ஏ.ஓ. போஸ்ட் கிடைக்குமா என்றுகூட என்னால் கேட்க முடியவில்லை.

சிட்டி அனுஷ்காவின் அப்பா கேரக்டர் நாசருக்கு. ஏதோ வித்தியாசமானவர் என்பதைக் காட்டுவதற்காக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று குடும்பமே மொத்தமாக அமர்ந்து சாப்பிடும் காட்சியை வங்க மொழித் திரைப்படங்களில்கூட பார்த்து, பார்த்து அலுத்துப் போச்சு.. வேற எதையாவது யோசிங்கப்பா..


அந்த வில்லன் பேரு என்னப்பா.. பிரதீப் ரவாத்.. டாலிவுட்டின் செல்ல வில்லன் இப்போதைக்கு இவர்தான்.. இவரை அறிமுகப்படுத்துகின்ற காட்சியில் கேமிரா காட்டுகின்ற கோணமும், பில்டப்பும் ஒரு சேர மனதையும், மூளையையும் போட்டுக் குழப்பிவிட்டது. எப்படி இருக்கு அந்த ஆயில் மசாஜ்..? அப்படியொரு ஆளு, மசாஜ் செஞ்சுவிட்டா யார்தான் அப்படி போஸ் கொடுக்க மாட்டாங்க..

இந்த போலீஸ்.. கீலிஸ்ன்னு ஒண்ணு இருக்குமே.. அது நம்ம தமிழ்ச் சினிமால வந்த மாதிரி ஒரேயொரு சீன்ல மட்டும்தான் வந்தாங்க. அவ்ளோதான். அவ்ளோ பெரிய ஊர்ல ஒரே தாதா ராஜ்ஜியமாம். கொலை, குழி தோண்டி புதைத்தல், உயிரோடு எரித்தல் என்று சகலமும் நடந்தும் மூச்.. தெலுங்கில் இது சகஜம்தான் என்பதால் விட்டுத் தொலைக்கலாம்.

தெலுங்கு வெர்ஷனில் இருந்த பிரம்மானந்தம் சம்பந்தப்பட்ட அத்தனை நகைச்சுவைக் காட்சிகளையும், தமிழில் நீக்கிவிட்டதால் முதற்பாதி முக்கால் மணி நேரத்தில் முடிந்துவிட்டது. படம் மிக வேகமாகப் பயணித்ததுபோல் தெரிந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் அநியாயத்திற்கு அனுமார் வாலாகப் போய்விட்டது.

அம்மன், அருந்ததி பாதிப்பில் வில்லனுக்கு உதவுதற்காக ஒரு மந்திரவாதியைக் கொண்டு வந்து அவன் ஏதோ மந்திரம் செய்கிறேன் என்று சொல்லிச் சொல்லிச் ச்சும்மா தூங்கிக் கொண்டிருந்த பஞ்சமுகி அம்மனையே எழுந்து வரச் சொல்லி அம்மன் கையாலேயே செத்தும்போய் ஜீவசமாதியாகிவிடுகிறான். இதெல்லாம் தேவையா..? தப்பு செய்யாதீங்கடான்னு சொன்னா கேக்குறானுகளா சாமி..

பலவித லாஜிக் மீறல்களுடனும், நம்ப முடியாத சரடுகளுடனும், அவசரத்தில் அள்ளித் தெளித்தாற்போன்று இயக்கம் செய்திருக்கும் இயக்குநருக்கு எனது கண்டனங்கள். இப்படியொரு பொன்னான வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரேன்னு எனக்கு வருத்தமும்கூட..

திரைக்கதையில் வேகம் இருந்தும், இது போன்ற பதார்த்தத்தை இதைவிட அதிகமான சுவையுடன் ருசித்திருப்பதால் இதன் சுவை அவ்வளவாக கவரவில்லை..  தெலுங்கிலேயே சுமாரான ஓட்டம் என்கிறது அங்கிருந்து வரும் தகவல்..!

'பஞ்சமுகி' அம்மனை பார்க்கணும்னா போய்ப் பாருங்க..

ஹனி என்னும் அனுஷ்காவை பார்க்கணும்னா தெலுங்கு சேனல்கள்ல அந்த முதல் பாட்டை இனிமேல் அடிக்கடி போடுவாங்க. அதுல பார்த்துக்குங்க..

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.kollywoodzone.com, www.searchandhra.com

36 comments:

  1. அருமையான விமர்சனம் மற்றும் அனுபவம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சொல்ல சொல்ல கேக்காம ரொம்ப சின்னதா பதிவு போடுறீங்க அண்ணாச்சி.. இத மாதிரி சின்னதா பதிவு போட்டா இனிமே உங்க பிளாக்கு வரமாட்டேன் நான்.. சொல்லிட்டேன் :)

    ReplyDelete
  3. அனுஷ்கா ஃபோட்டோக்களை கண்ணுக்கு குளிர்ச்சியா போட்டதுக்குக்காக அண்ணனுக்கு ஜே!

    ReplyDelete
  4. அனுஷ்காவின் ரசிகர்களுக்காகவே ஒரு பேஸ்கட்பால் சீனும் உண்டு. ஆனால் படத்தின் நீளத்தைக் கருத்தில் கொண்டு அதில் கத்திரி போட்ட இயக்குநரை உங்களது அனைவரின் சார்பாக நானே திட்டித் தீர்க்கிறேன்.


    !!!!!!!!


    இது ரொம்ப அநியாயம்

    கத்திரிய கதையில போடாம பாஸ்கட் பால் சீனுல போட்டது தப்புதான்

    அனுஷ்கா ரசிகர் மன்றத் தலைவரா அகப் போறீங்களா

    hahahahhaa

    ReplyDelete
  5. [[[மதுரை சரவணன் said...
    அருமையான விமர்சனம் மற்றும் அனுபவம். வாழ்த்துக்கள்.]]]

    நன்றிகள் சரவணன்..!

    ReplyDelete
  6. [[[இராமசாமி கண்ணண் said...
    சொல்ல சொல்ல கேக்காம ரொம்ப சின்னதா பதிவு போடுறீங்க அண்ணாச்சி.. இத மாதிரி சின்னதா பதிவு போட்டா இனிமே உங்க பிளாக்கு வரமாட்டேன் நான்.. சொல்லிட்டேன் :)]]]

    போதும் இராமசாமி..! இந்தப் படத்துக்கு ஆறு பக்கமே அதிகம்..! கமர்ஷியல்தானே.. வேறென்ன இருக்கு..?

    ReplyDelete
  7. [[[விந்தைமனிதன் said...
    அனுஷ்கா ஃபோட்டோக்களை கண்ணுக்கு குளிர்ச்சியா போட்டதுக்குக்காக அண்ணனுக்கு ஜே!]]]

    உங்களுக்காகத்தான் போட்டது விந்தை..!

    ReplyDelete
  8. [[[julie said...

    அனுஷ்காவின் ரசிகர்களுக்காகவே ஒரு பேஸ்கட்பால் சீனும் உண்டு. ஆனால் படத்தின் நீளத்தைக் கருத்தில் கொண்டு அதில் கத்திரி போட்ட இயக்குநரை உங்களது அனைவரின் சார்பாக நானே திட்டித் தீர்க்கிறேன்.]]]

    இது ரொம்ப அநியாயம். கத்திரிய கதையில போடாம பாஸ்கட் பால் சீனுல போட்டது தப்புதான். அனுஷ்கா ரசிகர் மன்றத் தலைவரா அகப் போறீங்களா..?

    hahahahhaa]]]

    ஆயிட்டேன்..!

    ReplyDelete
  9. //முதல் காட்சியில் கோவிலில் போடும் கெட்ட ஆட்டத்தின் நெளிவு, சுழிவுகளைப் பார்த்தால் தமன்னா ரசிகர் மன்றத்திலிருந்து வாலண்டரி ரிட்டையர்டுமெண்ட் வாங்கிக் கொண்டு வெளியே வந்துவிடலாம் போலத் தோன்றுகிறது//
    சீக்கிரம் நம்ம சங்கத்துக்கு வாங்க தலைவா..

    ReplyDelete
  10. பஞ்சமுகி படம் பார்த்து அனுக்‌ஷாவின் அருளை முழுமையாக பெற்ற அண்ணன் உண்மைத்தமிழன் வாழ்க....

    இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் சந்திரமுகி அளவு கலெக்‌ஷன் அள்ளி இருந்திருக்கலாம்..

    ReplyDelete
  11. விமர்சனம் படிச்சதுமே படம் பாத்த effect வந்துருச்சே!!!

    ReplyDelete
  12. இப்படி ஒரு படம் வந்துருக்குனே உங்க பதிவு பார்த்து தான் தெரிஞ்சுட்டேன்...விமர்சனம் நல்லா இருந்தது..எந்திரனுக்கும் இப்படியே ஒரு டீடைல் பதிவு போட்ருங்க..எங்களுக்கு பைசா மிச்சம்..:-))

    ReplyDelete
  13. agila ulaga anoshkaa rasigarmandra thalaivar vu.tha vaazhga.......

    ReplyDelete
  14. //முதல் காட்சியில் கோவிலில் போடும் கெட்ட ஆட்டத்தின் நெளிவு, சுழிவுகளைப் பார்த்தால் தமன்னா ரசிகர் மன்றத்திலிருந்து வாலண்டரி ரிட்டையர்டுமெண்ட் வாங்கிக் கொண்டு வெளியே வந்துவிடலாம் போலத் தோன்றுகிறது. //

    ellaa azhagaana pengalukkum oru rasigar mandram aarambippom venumnaa neengale thalaivaraaga irungal naan oru adi matta thondanaaga irukkiren

    ReplyDelete
  15. [[[அலைகள் பாலா said...

    //முதல் காட்சியில் கோவிலில் போடும் கெட்ட ஆட்டத்தின் நெளிவு, சுழிவுகளைப் பார்த்தால் தமன்னா ரசிகர் மன்றத்திலிருந்து வாலண்டரி ரிட்டையர்டுமெண்ட் வாங்கிக் கொண்டு வெளியே வந்துவிடலாம் போலத் தோன்றுகிறது//

    சீக்கிரம் நம்ம சங்கத்துக்கு வாங்க தலைவா..]]]

    ஓ.. ஏற்கெனவே ஆரம்பிச்சாச்சா..? எனக்கு பொருளாளர் போஸ்ட் மட்டும் குடுத்திருங்கப்பா.. போதும்..!

    ReplyDelete
  16. [[[R.Gopi said...
    பஞ்சமுகி படம் பார்த்து அனுக்‌ஷாவின் அருளை முழுமையாக பெற்ற அண்ணன் உண்மைத்தமிழன் வாழ்க....

    இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் சந்திரமுகி அளவு கலெக்‌ஷன் அள்ளி இருந்திருக்கலாம்..]]]

    இல்லை கோபி.. சந்திரமுகியின் வெற்றிக்குப் பல காரணங்கள்.. அதில் ஒன்றுகூட இதில் இல்லை..!

    ReplyDelete
  17. [[[மதுரை பாண்டி said...
    விமர்சனம் படிச்சதுமே படம் பாத்த effect வந்துருச்சே!!!]]]

    அப்படியா..? அப்போ 100 ரூபாயை தனியா வைச்சிருங்க.. நேர்ல பார்க்கும்போது வாங்கிக்கிடறேன்..!

    ReplyDelete
  18. [[[ஆனந்தி.. said...
    இப்படி ஒரு படம் வந்துருக்குனே உங்க பதிவு பார்த்துதான் தெரிஞ்சுட்டேன். விமர்சனம் நல்லா இருந்தது..]]]

    மேடம் வீட்ல டிவி இல்லையோ.. தினமும் இப்போ விளம்பரம் வந்துக்கிட்டிருக்கே..!

    [[[எந்திரனுக்கும் இப்படியே ஒரு டீடைல் பதிவு போட்ருங்க..எங்களுக்கு பைசா மிச்சம்..:-))]]]

    ஐயோ.. அந்தப் படத்தை விமர்சனத்தைப் படிச்சாலும், படிக்காட்டியும் போய்ப் பார்த்திருங்க..! எப்படியும் உங்களுக்குப் பிடிக்கும்..!

    ReplyDelete
  19. [[[பித்தன் said...
    agila ulaga anoshkaa rasigarmandra thalaivar vu.tha vaazhga.......]]]

    தலைவர் பதவி எனக்கு வேண்டாம்.. பொருளாளர் பதவிதான் வேணும்..!

    ReplyDelete
  20. [[[பித்தன் said...

    //முதல் காட்சியில் கோவிலில் போடும் கெட்ட ஆட்டத்தின் நெளிவு, சுழிவுகளைப் பார்த்தால் தமன்னா ரசிகர் மன்றத்திலிருந்து வாலண்டரி ரிட்டையர்டுமெண்ட் வாங்கிக் கொண்டு வெளியே வந்துவிடலாம் போலத் தோன்றுகிறது.//

    ellaa azhagaana pengalukkum oru rasigar mandram aarambippom venumnaa neengale thalaivaraaga irungal naan oru adi matta thondanaaga irukkiren.]]]

    தலீவா.. யோசிக்கிறதாம் யோசிக்கிறீங்க.. நீங்களே தலைவரா இருக்கணும்னு யோசிங்கப்பா.. அப்பத்தான் பொழைக்க முடியும்..?

    ReplyDelete
  21. தங்கள் விமர்சனம் தெலுங்கு சேனலில் முதல் பாட்டை பார்க்க தூண்டுது..!
    அண்ணே ஏதாவது எக்கு தப்பா நடந்த நீங்க பொறுப்பு சொல்லிட்டேன்...!

    ReplyDelete
  22. [[[♥♪•வெற்றி - VETRI•♪♥ said...
    தங்கள் விமர்சனம் தெலுங்கு சேனலில் முதல் பாட்டை பார்க்க தூண்டுது..! அண்ணே ஏதாவது எக்கு தப்பா நடந்த நீங்க பொறுப்பு சொல்லிட்டேன்...!]]]

    என்ன நடந்தாலும் சரி.. நான் பொறுப்பேத்துக்குறேன் வெற்றி. நீங்க பாருங்க..!

    ReplyDelete
  23. நான்தான் சொன்னேன் இல்லை...மீறி போனது எதுக்குன்னு எனக்கு தெரியும்.....

    ReplyDelete
  24. மீறி போனது எதுக்குன்னு எனக்கு தெரியும்....."
    எனக்கும் தெரியும்... இந்த மாதிரி கஷ்டபடுவதற்கு பதிலாக, பிட் படம் பார்த்து விமர்சனம் எழுதி விடலாம்

    ReplyDelete
  25. [[[ஜாக்கி சேகர் said...
    நான்தான் சொன்னேன் இல்லை... மீறி போனது எதுக்குன்னு எனக்கு தெரியும்.....]]]

    ஹி.. ஹி.. அதான் சங்கத்துல சேர்ந்துட்டோம்ல்ல..!

    ReplyDelete
  26. [[[பார்வையாளன் said...
    மீறி போனது எதுக்குன்னு எனக்கு தெரியும்..... எனக்கும் தெரியும்... இந்த மாதிரி கஷ்டபடுவதற்கு பதிலாக, பிட் படம் பார்த்து விமர்சனம் எழுதி விடலாம்]]]

    பிட் படம் எங்க ஓடுது..?

    ReplyDelete
  27. அண்ணே,வழக்கம் போல்கலக்கல் தான்.எனக்கு பிடித்த லைன்

    எப்படியும் நீங்க படத்தைப் பார்க்கப் போறதில்லை. அதுனால கதையையாவது முழுசா படிச்சுத் தொலைங்க..

    ஏன் அண்ணே,இப்படி ஒரு சலிப்பு?

    ReplyDelete
  28. //தமன்னா ரசிகர் மன்றத்திலிருந்து வாலண்டரி ரிட்டையர்டுமெண்ட் வாங்கிக் கொண்டு வெளியே வந்துவிடலாம் போலத் தோன்றுகிறது//

    உ.த அண்ணே.. பென்ஷன் வாங்குற வயசில இதெல்லாம் தேவையா???

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  29. /////எப்படியும் நீங்க படத்தைப் பார்க்கப் போறதில்லை. .//////

    இப்படிச்சொன்னா எப்படி நைனா?

    ReplyDelete
  30. [[[d said...

    Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு
    http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html]]]

    பயன்படுத்திக் கொண்டோம். நன்றி..!

    ReplyDelete
  31. [[[சி.பி.செந்தில்குமார் said...

    அண்ணே, வழக்கம் போல் கலக்கல்தான்.

    எனக்கு பிடித்த லைன்

    எப்படியும் நீங்க படத்தைப் பார்க்கப் போறதில்லை. அதுனால கதையையாவது முழுசா படிச்சுத் தொலைங்க..

    ஏன் அண்ணே, இப்படி ஒரு சலிப்பு?]]]

    படத்தின் தோல்வி தெரிஞ்ச விஷயம்தானே..!

    ReplyDelete
  32. [[[sriram said...

    //தமன்னா ரசிகர் மன்றத்திலிருந்து வாலண்டரி ரிட்டையர்டுமெண்ட் வாங்கிக் கொண்டு வெளியே வந்துவிடலாம் போலத் தோன்றுகிறது//

    உ.த அண்ணே.. பென்ஷன் வாங்குற வயசில இதெல்லாம் தேவையா???

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்]]]

    ஹி.. ஹி.. ஹி.. ஆனாலும் நான் இன்னும் பேச்சிலராத்தான இருக்கேன். அதுதான்..!

    ReplyDelete
  33. [[[sweatha said...

    வரி செலுத்தும் உங்கள் உரிமைகள் மீட்க வரிகளாக்கி எழுதுங்கள் உங்கள் மனசாட்சியை. ஜீஜிக்ஸ்.காமில்

    சிறந்த எழுத்துக்கு ஒவ்வொரு வாரமும் Rs 500 பெறுங்கள்.

    சமுதாய ஆர்வலர்களின் உலக மேடை www.jeejix.com .
    பரிசு பெற்ற பதிவுகள் காண http://www.jeejix.com/Post/SubCategory?SCID=163]]]

    நல்ல விளம்பரம்..! தொடருங்கள்..!

    ReplyDelete
  34. [[[SP.VR. SUBBAIYA said...

    //எப்படியும் நீங்க படத்தைப் பார்க்கப் போறதில்லை..//

    இப்படிச் சொன்னா எப்படி நைனா?]]]

    இப்ப தியேட்டருக்கு வர்ற கூட்டம் குறைஞ்சுக்கிட்டே போகுது வாத்தியாரே..! நல்ல படம்னு தெரிஞ்சாத்தான் சனம் தியேட்டருக்கு வருது. இதுக்கு வராதுன்றது தெரிஞ்சு போச்சு. அதுதான் சொன்னேன்..!

    ReplyDelete
  35. இந்த மாசம் மாவே ஆட்டலையா. இட்லி தோசை ....எல்லாம் எங்கங்க ?

    ReplyDelete
  36. [[[அகில் பூங்குன்றன் said...
    இந்த மாசம் மாவே ஆட்டலையா. இட்லி தோசை.. எல்லாம் எங்கங்க?]]]

    இந்த மாசம் மேட்டரே கிடைக்கலீங்க..!

    ReplyDelete