Pages

Saturday, September 11, 2010

பாஸ் என்கிற பாஸ்கரன் - சினிமா விமர்சனம்

11-09-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தற்போதைய தமிழ்ச் சினிமாச் சூழலில் ஒரு வெற்றிப் படத்திற்கு என்னென்ன தகுதிகள் வேண்டுமோ அத்தனையையும் ஒருங்கே கொண்டு அனைத்துத் தரப்பினரையும் கவருகின்றவிதத்தில் இந்தப் படம் கண்ணைக் கட்டுகிறது. நிச்சயம் சூப்பர்ஹிட்டான திரைப்படம் என்று முதல் நாளான இன்றைக்கே உறுதியுடன் சொல்லலாம்..

பாஸ் என்கிற பாஸ்கரன் பட்டப் படிப்பில் அரியர்ஸ்களை வகை, தொகையாக பாக்கி வைத்துக் கொண்டு அதனைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்க்கையை என்ஜாய் செய்யும் ஒரு சராசரி தமிழ் வாலிபன். 


இந்தச் சினிமாவில் கதையை நகர்த்த வேண்டுமென்பதற்காக ஒரு வல்லிய ஹீரோயின் அவனை கிராஸ் செய்கிறாள். அவள் அவனது அண்ணனின் கொழுந்தியாளாகவும் நெருக்கமாக வந்துவிட,  இன்னமும் அவளைக் காதலிக்கத் துவங்குகிறான்.

வேலை வெட்டியில்லாத அவனை நம்பி எப்படி என் தங்கையைக் கட்டிக் கொடுப்பது என்று பாஸ்கரனின் அண்ணி கேட்க.. ரோஷப்படும் பாஸ்கரன் “நானே சுயமாகச் சம்பாதித்து அந்தப் பணத்தில் என் தங்கச்சி கல்யாணத்தையும், என் கல்யாணத்தையும் நடத்திக் காட்டுறேன்..” என்று கற்பூரம் ஏற்றாத குறையாகச் சத்தியம் செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். கடைசியில் எப்படி இதனைச் செய்து முடித்து தனது காதலியைக் கரம் பிடிக்கிறான் என்பதுதான் மிச்ச, சொச்சக் கதை..


ஹீரோ ஆர்யா.. ஹீரோயின் நயன்தாரா.. ஹீரோவைக் காப்பாற்ற சந்தானம்.. இசைக்கு யுவன்சங்கர்ராஜா.. கதை சொல்லத் தெரிந்த இயக்குநர்.. நகைச்சுவையுடன் இயக்கத் தெரிந்த இயக்குநர்.. இது போதாதா இந்த டீமுக்கு..? எந்த லாஜிக்கையும் யோசிக்க வைக்காமல் இறுதிவரை போரடிக்காமல் சிரித்தபடியே கொண்டு போக வைத்து கதையை முடித்திருக்கிறார்கள்.

நான் கடவுள் ஆர்யாவா என்றெல்லாம் யோசிக்க வேண்டியுள்ளது. இதுவரையில் அவர் நடித்த திரைப்படங்களில் இருந்த ஹீரோ மேனரிசத்தை சுத்தமாகத் துடைத்துவிட்டு இயக்குநருக்கு நல்ல பிள்ளையாக நடித்திருக்கிறார்.

நயன்ஸை கல்லூரிக்குள் சென்று டாவு விடுவது.. அண்ணனின் முதல் இரவைக் கெடுத்துவிட்டு அமைதியே உருவாக இருப்பது.. வருங்கால மாமனாரிடம் சீற வேண்டிய நேரத்தில் சீறுவது.. நண்பனான சந்தானத்தை இறுதிவரையில் உடன் இழுத்து வைத்துக் கொண்டு கழுத்தை அறுப்பது.. கடைசிவரையிலும் புரிந்து கொள்ளாத ஒரு வயசுப் பையனாகவே இருந்து தொலைத்து.. நயன்ஸை மட்டுமல்ல நம்மையும் சேர்த்தே அவ்வப்போது டென்ஷனாக்குகிறார்.

காட்சிப்படுத்தலில் இயக்குநர் ஜெயித்திருக்கிறார். முதல் காட்சியிலேயே வர்ணனை பின்புலத்தில் ஒலிக்க.. அரிவாளுடன் ஒருவரை விரட்டிக் கொண்டு போகும் ஆர்யாவைக் காட்டவிட.. இந்த அடிதடி எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருந்த அத்தனை பேருக்கும் கடைசியில் குட்டை உடைத்து, பெரிய திருப்பதி நாமத்தை சாத்தியிருக்கும் இந்த இயக்குநரின் முதுகில் சந்தோஷமாக நாலு சாத்து சாத்த வேண்டும்..

பிட் அடிப்பதற்காக முனைப்போடு 32 பிட்டுகளை எழுதி வைக்கும் காட்சியும், பஸ்ஸில் நயன்ஸை பார்த்து ஜொள்ளுவிட்டபடியே வந்து வகுப்பறையில் அவரைப் பார்த்தவுடன் செய்யும் தவிர்க்க முடியாத ஆக்ஷன்.. ரொம்பவே யதார்த்தம்.. அதிலும் வகுப்பறையில் நயன்ஸை சந்தித்தது ஆடியன்ஸுக்குக்கூட சூப்பர் டிவிஸ்ட்டாக இருந்தது..


நயன்தாரா பல முறை ஜாடைமாடையாகச் சொல்லியும் காதலைப் புரிந்து கொள்ளாத மக்குப் பையனாக இருக்கும் ஆர்யா, கடைசிவரையில் அதுபோலவே இருப்பது சற்று எரிச்சலைத் தந்தாலும் மெச்சூரிட்டியான காட்சிகளை திணிக்காமல் அந்தக் கேரக்டர் ஸ்கெட்ச்சை பாலோ செய்திருக்கும் இயக்குநருக்கு ஒரு ஷொட்டு..


"நண்பன்டா" என்று சொல்லிச் சொல்லியே சந்தானத்தை ரவுண்டு கட்டும் ஆர்யாவின் சேட்டைகளில் தியேட்டரே அதிர்கிறது.. “அவனவன் பத்து, பதினைஞ்சு நண்பர்களை வைச்சுக்கிட்டு ஓட்டுறாங்க. நான் ஒரே ஒருத்தனை நண்பனா வைச்சுக்கிட்டு படுற பாடு இருக்கே..” என்ற சந்தானத்தின் கமெண்ட்டுக்கு ரசிகர்களின் கரகோஷம் பின்னியெடுத்தது.

சந்தானம் சில வசனங்களை தேவையில்லாமல் ஜவ்வாய் இழுப்பது எரிச்சலைத் தரும் அதே நேரத்தில் இன்றைய தேதியில் அவரைவிட்டால் இளைய ஹீரோக்களைக் காப்பாற்ற வேறு ஆள் இல்லை என்பதும் உண்மை.

சந்தானம், ஆர்யாவுக்காகப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு சாணியள்ளும் வேலையை நினைத்துப் பார்க்கும்போதும், டுடோரியல் கல்லூரியில் மாணவர்களிடத்தில் படும் பாட்டையும் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது.. போகப் போக படத்தின் ஹீரோ ஆர்யாவா? சந்தானமா? என்பதே கேள்விக்குறி என்பதைப் போல காட்சிகள் இருந்தது ஆச்சரியம்தான்.


சமீப காலமாக கல்லூரி ஆசிரியைகளை கண்ணியக்குறைவாகவே நடத்திக் காண்பிப்பது தமிழ்ச் சினிமாவின் வழக்கமாகிவிட்டது. இதிலும் சிற்சில வகுப்பறைக் காட்சிகளில் நயன்ஸ் அணிந்திருந்த உடைகளைப் பார்த்தால் இதற்காகவே கல்லூரிக்கு மாணவர்கள் வருகிறார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்வதுபோல் இருக்கிறது. மகா அபத்தம்..

அதேபோல் டுடோரியல் கல்லூரிக்கு ஷகிலாவை அழைத்து வந்து இரட்டை அர்த்த வசனங்களை வைத்து காட்சிப்படுத்தியிருப்பது தேவையில்லாதது. இது போன்ற காட்சிகளை படத்துக்குப் படம் வைப்பதினால் நிச்சயம் பள்ளிகள், கல்லூரிகள் மீதான இளைஞர்களின் பார்வை தடுமாறும்.. தமிழ்த் திரையுலகம் இந்தப் போக்கை அவசியம் மாற்றிக் கொள்ள வேண்டும்..

தொடர்ந்த அந்த கண் பார்வையற்ற பெண்ணின் காட்சிப்படுத்துதல் அதிர்ஷ்டவசமாக அழகாக அமைந்து போனது இயக்குநரின் திறமையினால்தான்.. பாராட்டுக்கள் ராஜேஷ்..

ஆர்யாவின் அண்ணனாக வரும் சுப்பு(கவிஞர், தயாரிப்பாளரான பஞ்சு அருணாச்சலத்தின் மகன்) டிவி சீரியல் போலவே சிற்சில இடங்களில் வசனங்களைப் பேச மிகவும் கஷ்டப்பட்டிருக்கும் தோரணையைப் பார்க்க சகிக்கவில்லை. ஆனாலும் களத்தில் குதித்துவிட்டார்.. ஒரு ரவுண்டு வரலாம்.

அண்ணியாக பிரெண்ட்ஸ் ஹீரோயின் விஜயலட்சுமி.. இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் பீல்டுக்குள் கால் வைத்திருப்பதால் கொஞ்சம் பூசினாற்போல் தெரிகிறார். இவர்தான் ஹீரோவுக்கு அறிவைப் புகுத்தி கதையை நகர்த்தும் வேலையைச் செய்திருப்பவர் என்பதால் ஒரு ஜே போட்டுக்குவோம்..


அடுத்து தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். பம்பர் பரிசாக நயன்ஸின் அப்பா கேரக்டர்.. பொண்ணு பார்க்க வந்த இடத்தில் “நீங்க என்ன பண்றீங்க?” என்று விடாக்கொண்டன், கொடாக்கொண்டனாக ஆர்யாவிடம் கேள்வி கேட்டு பிடுங்குவது ரசனையானது.. கடைசியில் மாமா பொண்ணைக் கொடு பாடல் காட்சியில் நடனமாடியும் தனது கலைச்சேவையின் இன்னுமொரு மைல் கல்லைத் தொட்டுவிட்டார்.

ஆர்யாவுக்கு வங்கி லோன் கொடுக்க அழைத்த காட்சியில் சித்ரா பேசுகின்ற டயலாக் டெலிவரியில் இருக்கும் நகைச்சுவையும், ஆர்யாவின் ரியாக்ஷனும் சூப்பரப்பு.. எப்படித்தான்யா இந்த டைரக்டர் ஷூட் பண்ணினாரு.. எல்லாம் சாதாரணமாத்தான் இருக்கு.  ஆனால் ஸ்கிரீன்ல பார்க்க அத்தனை ரசிப்புத் தன்மை..

நயன்ஸ்.. சொல்வதற்கு ஒன்றுமேயில்லை.. ஐயாவில் பார்த்த நயனா இது..? ஐயகோ கொடுமையிலும் கொடுமை.. அதில் பப்ளிமாஸ் மாதிரி கன்னத்தைக் கிள்ளலாம் போல இருந்த தோற்றம், இன்றைக்கு கிள்ளுவதற்கே கன்னத்தில் ஏதுமில்லை என்பதைப் போல் இருக்கிறது.. கொடூரமப்பா..


அதிலும் ஒரு மூக்குத்தி வேற.. பார்க்கச் சகிக்கவில்லை.. கேமிராவின் கோணத்தில் ஒன் சைடாக காண்பிக்கும்போதெல்லாம் விஷாலை வீடு புகுந்து வெட்ட வேண்டும்போல தோன்றியது. சிக்ஸ் பேக் நயன்ஸ் எவனுக்கு வேணும்..? வல்லவனிலாவது உருப்படியாக இருந்தார்.. இன்றைக்கு எந்த உருப்படியும் சரியில்லை என்ற நிலைமையில் இருக்கிறார். அடுத்து எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லையாம் அம்மணி.. ஏனென்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் நல்லாயிருந்தா சரிதான்..


இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் என்றாலே முக்கால் காத தூரம் ஓடும் இன்றைய கோடம்பாக்கத்திய சூழலில் இளம் நடிகர் ஜீவா ஒரு ச்சின்ன கேரக்டரில் நடிக்க முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது.. அதிலும் ஒரு ட்விஸ்ட் வைத்து கலக்கியிருக்கிறார்கள். இது போன்ற காட்சிகள் படத்தினை முடித்து வைப்பதற்கும், ஹீரோவை ரொம்ப நல்லவனாக காட்டுவதற்கும் பயன்படும் என்பதை இயக்குநரே செல்போனில் வந்து சொல்வது தமிழ்ச் சினிமாவுக்கு புதுசு. இந்த அளவுக்காச்சும் வெளிப்படையாக ஒத்துக் கொண்டாரே இயக்குநர். இதற்காக இன்னுமொரு முறை பாராட்டலாம்.


இசை யுவன்சங்கர்ராஜா.. வழக்கம்போலத்தான். எனக்கு கடைசிப் பாடல் மட்டுமே பிடித்திருந்தது.. அது நம்ம டப்பாங்குத்து போல “மாமா உன் பொண்ணைக் குடு..” ஸ்டைலில் இருந்ததாலும் ஓகேதான். ஆனாலும் இதற்கு நயன்ஸ் ஆடியிருக்கும் ஆட்டம்.. ம்ஹும்..

சிவா மனசுல சக்தியைப் போலவே லாஜிக் மீறல்கள் நிறையவே இந்தப் படத்தில் இருந்தாலும், அது பற்றியே நம்மை சிந்திக்கவிடாமல் சிரிக்க மட்டுமே வைத்து அனுப்பியிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

இந்தப் படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்பதால் உதயநிதி ஸ்டாலின் மேக்கப் பெட்டியைத் தைரியமாக நம்பிக்கையுடன் திறக்கலாம்..

ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.. தப்பில்லை..

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

41 comments:

  1. அப்பாடா.. நீங்க நல்லாயிருக்கும் சொல்லிடீங்க..

    படம் பார்க்கணும்..

    ReplyDelete
  2. நிறைய காட்சிகள் என்னால் யூகிக்கமுடிந்தது. முதலில் அவர் துரத்தும் போதே அது யாரென்றும்..தேர்வு கண்காணிப்பாளர் நயன் என்றும் ....ஷகிலா தான் அடுத்த டீசர் என்றும்.. வெளிநாட்டு மாப்பிள்ளை ஜீவா என்றும் ... இருந்தும் என்னால் படத்தை ரசிக்க முடிந்தது...
    அப்புறம் நயன் சீக்கிரம் உங்க ஆளக் கல்யாணம் பண்ணிக்குங்க சகிக்கல ...
    ராஜேஷ் சார்.. நீங்களும் ஷங்கர் சார் மாதிரி தான்... ஹீரோயினே செலக்ட் பண்ணத் தெரியல...

    ReplyDelete
  3. அண்ணே இப்படில்லாம் சின்னதா பதிவு போடாதீங்கன்னே .. கால் மணி நேரத்துல படிச்சு முடிச்சுட்டேன் :)

    ReplyDelete
  4. இராமசாமி அண்ணேன் - நீங்க நயன்தாரா படத்தை எல்லாம் படிக்க முயற்சி பண்ணினா கால் மணி என்ன அரை மணி கூட ஆகும் :)-

    ReplyDelete
  5. நயன் தாராவிற்காக எப்படியும் ஒரு தடவை பார்ப்பவர்கள் இருப்பார்களே

    படம் ஹிட் தான்

    ReplyDelete
  6. தமிழ்த் திரையுலகம் இந்தப் போக்கை அவசியம் மாற்றிக் கொள்ள வேண்டும்..

    ReplyDelete
  7. அண்ணே,விமர்சனம் நறுக் சுருக்,குறிப்பா என்னைக்கவர்ந்த வரிகள்
    நயன்தாரா பற்றிய கமெண்ட்ஸ்

    ReplyDelete
  8. //புரிந்து கொள்ளாத ஒரு வயசுப் பையனாகவே//

    சின்னாபுள்ளைய எல்லாமா ஈரோவாக்குறாங்க?!

    ReplyDelete
  9. நீங்க லேட்டுன்னே. நான் ஒங்களுக்கு முன்னாடியே விமர்சனம் போட்டுட்டேன்.

    ReplyDelete
  10. அண்ணே .,
    நேத்து இரவே பதிவை எதிர்பார்தேன் ..,

    ReplyDelete
  11. அண்ணே ,
    அய்யஹோ எங்கே என் நயன்தாரா ? வாடி வதங்கி போயிருக்கரே ....

    ReplyDelete
  12. [[[butterfly Surya said...
    அப்பாடா.. நீங்க நல்லாயிருக்கும் சொல்லிடீங்க..]]]

    அதுவும் ரொம்ப நாள் கழிச்சுண்ணே..!

    ReplyDelete
  13. [[[ஆண்டனி said...

    நிறைய காட்சிகள் என்னால் யூகிக்க முடிந்தது. முதலில் அவர் துரத்தும் போதே அது யாரென்றும்.. தேர்வு கண்காணிப்பாளர் நயன் என்றும் ஷகிலாதான் அடுத்த டீசர் என்றும்.. வெளிநாட்டு மாப்பிள்ளை ஜீவா என்றும் இருந்தும் என்னால் படத்தை ரசிக்க முடிந்தது...]]]

    ஆச்சரியமா இருக்கு ஸார்..! இவங்கள்லாம் படத்துல இருக்காங்கன்னு தெரிஞ்சதால ஒருவேளை நீங்களே யூகிச்சிருக்கலாம்..!

    [[[அப்புறம் நயன் சீக்கிரம் உங்க ஆளக் கல்யாணம் பண்ணிக்குங்க சகிக்கல..]]]

    இதேதான்.. எல்லோருடைய புலம்பலும்..!

    [[[ராஜேஷ் சார்.. நீங்களும் ஷங்கர் சார் மாதிரிதான்... ஹீரோயினே செலக்ட் பண்ணத் தெரியல...]]]

    ஹீரோயின் படத்துக்காக இல்லைன்னாலும், பப்ளிசிட்டிக்காகவும் இருக்கலாம் ஆண்டனி..!

    ReplyDelete
  14. [[[இராமசாமி கண்ணண் said...
    அண்ணே இப்படில்லாம் சின்னதா பதிவு போடாதீங்கன்னே. கால் மணி நேரத்துல படிச்சு முடிச்சுட்டேன் :)]]]

    போதும்ண்ணே..! இனிமே இப்படித்தான்..!

    ReplyDelete
  15. [[[மணிகண்டன் said...
    இராமசாமி அண்ணேன் - நீங்க நயன்தாரா படத்தை எல்லாம் படிக்க முயற்சி பண்ணினா கால் மணி என்ன அரை மணி கூட ஆகும் :)-]]]

    ஆமாமாம்.. ஆகும்.. ஆகும்..! நயன்தாராவையெல்லாம் பார்த்துட்டு உடனே அப்பீட்டு ஆயிரணும்..!

    ReplyDelete
  16. [[[புருனோ Bruno said...
    நயன்தாராவிற்காக எப்படியும் ஒரு தடவை பார்ப்பவர்கள் இருப்பார்களே.
    படம் ஹிட்தான்]]]

    அந்தக் கூட்டமும் சேர்ந்து வருது..! ஆச்சரியம்தான்..!

    ReplyDelete
  17. [[[நசரேயன் said...
    தமிழ்த் திரையுலகம் இந்தப் போக்கை அவசியம் மாற்றிக் கொள்ள வேண்டும்..]]]

    மொதல்ல ரசிகர்கள்தாண்ணே மாறணும்.. அவங்க மாறுனாங்கன்னா தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தானாவே மாறிருவாங்கண்ணே..!

    ReplyDelete
  18. [[[சி.பி.செந்தில்குமார் said...
    அண்ணே, விமர்சனம் நறுக் சுருக்.. குறிப்பா என்னைக் கவர்ந்த வரிகள். நயன்தாரா பற்றிய கமெண்ட்ஸ்]]]

    நன்றி செந்தில்..!

    ReplyDelete
  19. [[[விந்தைமனிதன் said...

    //புரிந்து கொள்ளாத ஒரு வயசுப் பையனாகவே//

    சின்னா புள்ளைய எல்லாமா ஈரோவாக்குறாங்க?!]]]

    ஆமாண்ணே..! எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமா ஸ்கிரீன்ல வந்தா அது விஜய் படமா ஆயிரும்..!

    ReplyDelete
  20. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    ok will see today]]]

    பாருங்க.. பாருங்க..!

    ReplyDelete
  21. [[[இரா கோபி said...
    நீங்க லேட்டுன்னே. நான் ஒங்களுக்கு முன்னாடியே விமர்சனம் போட்டுட்டேன்.]]]

    யாரைக் கேட்டுப் போட்டீங்க..? கோர்ட்ல கேஸ் போடப் போறேன். பாருங்க..!

    ReplyDelete
  22. [[[பனங்காட்டு நரி said...
    அண்ணே, நேத்து இரவே பதிவை எதிர்பார்தேன்.]]]

    கொஞ்சம் லேட்டாயிருச்சுண்ணே..!

    ReplyDelete
  23. [[[பனங்காட்டு நரி said...
    அண்ணே, அய்யஹோ எங்கே என் நயன்தாரா? வாடி வதங்கி போயிருக்கரே....]]]

    கத்திரிக்காய் முத்தினா..?

    ReplyDelete
  24. ஆகா உனா தானா தம்பி கலர் பதில் போட உட்காந்தாச்சு! அண்ணே எனக்கு ஒரு பதில் சொல்லிடுங்க! அந்த புள்ள ஏன் அத்தனை சோர்வா இருக்கு? மாசமா இருக்குதா?

    ReplyDelete
  25. sappi potta panangkottai pola irukkiraar nayan, paarkave romba paavamaaga irukku. vimarsanam arumai athil unga karisanam therigirathu.

    ReplyDelete
  26. http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/09/blog-post_10.html -- அந்தப் பதிவிலேயே சொல்லிட்டேனே .. பாத்துக்குங்க!

    ReplyDelete
  27. அண்ணே உங்களுக்கு,உங்கள் குடும்பத்தினர்,நண்பர்கள் அணிவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி திருநாள் வாழ்த்துகள்....



    //ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.. தப்பில்லை..//

    ரொம்ப நாள் கழிச்சு நல்லாயிருக்கு என்று சொல்லியிருக்கிங்க.... பார்த்திடுவோம் நன்றி.

    ReplyDelete
  28. முஸ்லிம் நண்பர்கள், அவர்கள் குடும்பத்தினர் அணைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்...(கர்நாடகாவில் இன்று ரமலான்).

    ReplyDelete
  29. [[[அபி அப்பா said...
    ஆகா உனா தானா தம்பி கலர் பதில் போட உட்காந்தாச்சு! அண்ணே எனக்கு ஒரு பதில் சொல்லிடுங்க! அந்த புள்ள ஏன் அத்தனை சோர்வா இருக்கு? மாசமா இருக்குதா?]]]

    நேர்ல வாங்க.. கூட்டிட்டுப் போறேன்.. நீங்களே உங்க வாயால கேட்டுக்குங்க..! நல்லா கேக்குறாங்கய்யா கொஸ்டீனு..?

    ReplyDelete
  30. [[[பித்தன் said...
    sappi potta panangkottai pola irukkiraar nayan, paarkave romba paavamaaga irukku. vimarsanam arumai athil unga karisanam therigirathu.]]]

    நன்றி பித்தன்ஜி..!

    ReplyDelete
  31. [[[தருமி said...
    http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/09/blog-post_10.html -- அந்தப் பதிவிலேயே சொல்லிட்டேனே .. பாத்துக்குங்க!]]]

    பார்த்தேன்.. பார்த்தேன். பாவம் கார்த்திகை.. என்கூட லின்க்கை கொடுத்து அவர் பிளாக் வாழ்க்கைய கெடுக்கலாம்னு பார்க்குறீங்க..?

    ReplyDelete
  32. [[[Thomas Ruban said...
    அண்ணே உங்களுக்கு,உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அணிவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி திருநாள் வாழ்த்துகள்....]]]

    நன்றி தாமஸ்..!

    //ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.. தப்பில்லை..//

    ரொம்ப நாள் கழிச்சு நல்லாயிருக்கு என்று சொல்லியிருக்கிங்க.... பார்த்திடுவோம் நன்றி.]]]

    அவசியம் குடும்பத்தோட போய்ப் பாருங்க..!

    ReplyDelete
  33. [[[Thomas Ruban said...
    முஸ்லிம் நண்பர்கள், அவர்கள் குடும்பத்தினர் அணைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்...(கர்நாடகாவில் இன்று ரமலான்).]]]

    என்ன இது கொடுமை..? ஸ்டேட் விட்டு ஸ்டேட் கொண்டாட்டமே தேதி மாறி வருமா..? புரியலையே.. ஏன் தாமஸ்..?

    ReplyDelete
  34. //
    அண்ணியாக பிரெண்ட்ஸ் ஹீரோயின் விஜயலட்சுமி.. இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் பீல்டுக்குள் கால் வைத்திருப்பதால் கொஞ்சம் பூசினாற்போல் தெரிகிறார். இவர்தான் ஹீரோவுக்கு அறிவைப் புகுத்தி கதையை நகர்த்தும் வேலையைச் செய்திருப்பவர் என்பதால் ஒரு ஜே போட்டுக்குவோம்..//

    ரெண்டு ஆண்டுகளா. அண்ணே இப்பதான் தில்லாலங்கடியில் ஒரு காட்சியில் அவர் நடித்தார்.

    ReplyDelete
  35. நல்லாயிருக்குன்னு சொல்றிங்க பார்த்திடுவவோம்..
    இப்போது வரும் சில படங்களில் நாயகனை விட காமெடியன் தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை காப்பாததுகிறான் அந்த வகையில் இது சாருமா..?
    //சிக்ஸ் பேக் நயன்ஸ் எவனுக்கு வேணும்..?//
    அதுதானே...! எவனுக்கு வேனும்

    ReplyDelete
  36. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    //அண்ணியாக பிரெண்ட்ஸ் ஹீரோயின் விஜயலட்சுமி.. இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் பீல்டுக்குள் கால் வைத்திருப்பதால் கொஞ்சம் பூசினாற்போல் தெரிகிறார். இவர்தான் ஹீரோவுக்கு அறிவைப் புகுத்தி கதையை நகர்த்தும் வேலையைச் செய்திருப்பவர் என்பதால் ஒரு ஜே போட்டுக்குவோம்..//

    ரெண்டு ஆண்டுகளா. அண்ணே இப்பதான் தில்லாலங்கடியில் ஒரு காட்சியில் அவர் நடித்தார்.]]]

    மறந்துவிட்டது.. எப்பா.. வில்லனுக்கு வில்லன்.. எத்தனுக்கு எத்தன் நிறைய பேர் இருக்கீங்கப்பா..! சூதானமா இருக்கணும் போலிருக்கு..!

    ReplyDelete
  37. [[[Riyas said...

    நல்லாயிருக்குன்னு சொல்றிங்க பார்த்திடுவவோம்.. இப்போது வரும் சில படங்களில் நாயகனைவிட காமெடியன் தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை காப்பாததுகிறான் அந்த வகையில் இது சாருமா..?]]]

    நிச்சயம்..இதுதான் உண்மை ரியாஸ்..! படத்தைப் பார்த்துவிட்டு மிச்சத்தைச் சொல்லுங்கள்..!

    [[[//சிக்ஸ் பேக் நயன்ஸ் எவனுக்கு வேணும்..?//

    அதுதானே...! எவனுக்கு வேனும்]]]

    நானும் அதைத்தான் கேக்குறேன்..!

    ReplyDelete
  38. //என்ன இது கொடுமை..? ஸ்டேட் விட்டு ஸ்டேட் கொண்டாட்டமே தேதி மாறி வருமா..? புரியலையே.. ஏன் தாமஸ்..?//

    முஸ்லிம் சகோதரர்கள் எந்த பண்டிகையையும் பிறை பார்த்து தான்
    முடிவு செய்வார்கள்.கர்நாடகாவில் பிறை தெரிய ஒருநாள் தாமதமானதால் ரமலான்னும் ஒருநாள் தாமதமான நன்றி.

    ReplyDelete
  39. [[[Thomas Ruban said...

    //என்ன இது கொடுமை..? ஸ்டேட் விட்டு ஸ்டேட் கொண்டாட்டமே தேதி மாறி வருமா..? புரியலையே.. ஏன் தாமஸ்..?//

    முஸ்லிம் சகோதரர்கள் எந்த பண்டிகையையும் பிறை பார்த்துதான்
    முடிவு செய்வார்கள். கர்நாடகாவில் பிறை தெரிய ஒருநாள் தாமதமானதால் ரமலான்னும் ஒரு நாள் தாமதமான நன்றி.]]]

    ஆஹா.. இதுல இப்படி ஒரு விஷயமும் இருக்கா..!

    தெரிஞ்சுக்கிட்டேன்.. நன்றி தாமஸ்..!

    ReplyDelete
  40. வல்லவனிலாவது உருப்படியாக இருந்தார்.. இன்றைக்கு எந்த உருப்படியும் சரியில்லை என்ற நிலைமையில் இருக்கிறார்.


    hahahahhahahaha


    என்னத்த சொல்றது

    அடுத்தவங்க குடிய கெடுத்தா கொஞ்சம் கொஞ்சமா இப்படி வீனா போக வேண்டியதுதான்

    எங்க ஊரு பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க

    நல்ல பாம்பு முள்ளு அழிஞ்ச மாதிரி

    இதுதான் ஞாபகத்துக்கு வருது

    ReplyDelete