Pages

Saturday, September 04, 2010

சிந்துசமவெளி - சினிமா விமர்சனம்


04-09-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

டைட்டில் கார்டுக்கு முன்பாகவே “இது நூறு சதவிகிதம் நடப்பதுதான். தினமும் நாம் பார்த்த கேட்ட கதைகளில் ஒன்றுதான்” என்று சொல்லிவிட்டார்கள்.

"ரஷ்ய எழுத்தாளரான இவான் துக்னோவ் என்பவர் எழுதிய 'முதல் காதல்' என்கிற கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்தப் படத்தின் கதை" என்று இரண்டாவது டைட்டில் கார்டு போடப்பட்டிருக்கிறது. கூடவே 'நாவல் வடிவம்  - ஜெயமோகன்' என்றும் வருகிறது.

ஆனால் நிஜத்தில் என்னவோ வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது.

1982-ம் ஆண்டு பி.கே.கிருஷ்ணன் என்பவரின் இயக்கத்தில் வெளி வந்த 'மழு' என்கிற மலையாளத் திரைப்படம், 'மாமனாரின் இன்ப வெறி' என்று தலைப்பு மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் வெற்றிகரமாக பல ஆண்டுகள் ஓடியது. 



இப்போது இதே படத்தையே லேசுபாசாக தூசுத் தட்டி மறுபடியும் நமக்குக் கொடுத்திருக்கிறார். வருங்கால 'ஆஸ்கார் இயக்குநர்' திரு.சாமி.

ஏற்கெனவே இவர் எடுத்தத் திரைப்படங்களின் அடிநாதங்கள் அனைத்துமே காமத்தைக் கரை சேர்க்கும் விதமாகவே இருந்து தொலைய.. இத்திரைப்படத்தின் தயாரிப்பின்போதும், கடைசியாக திரையிடப்பட்ட இந்த ஒரு மாதக் காலக்கட்டத்திலும் இப்படத்தின் கதை பற்றி முடிந்த அளவுக்கு பரபரப்பை ஊட்டி படத்திற்கும், தனக்கும் விளம்பரத்தைத் தேடிக் கொண்டார்.

நாடோடிகள் என்றொரு திரைப்படத்தைத் தயாரித்துவிட்டு இந்தத் திரைப்படத்தையும் தயாரிக்க முன் வந்திருக்கும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டலாம்.

வீட்டில் அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ, பாட்டிக்கோ கண் வலி.. பேப்பர் படிக்க முடியவில்லை என்று கூறி நம்மிடம் தினத்தந்தியைக் கொடுத்து படித்துக் காண்பிக்கச் சொன்னால் நாம் என்ன செய்வோம்..? எது செய்தி என்று நமக்குத் தெரிந்ததோ, எது செய்திகள் என்று சொல்லப்படுகின்றனவோ அவற்றை மட்டுமேதான் சொல்வோம்..

தினத்தந்தியில் ஏழு காலம் அளவுக்கு கள்ளக்காதல் செய்திகள் இருக்கின்றன என்பதால் அவற்றை நாம் ஊர் முழுக்க கேட்பதுபோலவோ, நம் வீட்டிற்குள்ளேயே அடுத்த நபர்களுக்குக் கேட்பது போலவோ நாம் படிப்பதில்லை. இது நமக்கு நாமே போட்டுள்ள கடிவாளம்.

திருமணம் முடிந்தால் மணமக்கள் இரவில் எந்த அறையில் தங்குகிறார்களோ அந்த அறையில், அவர்களுக்கிடையில் என்ன நடக்கும் என்பது அந்த வீட்டில் இருப்பவர்களுக்கும் தெரியும்.. பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கும் தெரியும்.. ஆனால் குழந்தைகளுக்கு மட்டும்தான் தெரியாது. திருமணம் முழுவதையும் குழந்தைகளிடம் காண்பிக்கும் நாம் இதனை மறைக்கத்தான் செய்கிறோம்.. அது ஒரு சாதாரண நிகழ்வாக ஒதுக்கித் தள்ளுகிறோம். காரணம், அது நம் மனதை பிசாசாக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

அதற்காக எந்த அத்துமீறலான காதலும், காமமும் நம் சமூகத்தில் இல்லவே இல்லை என்று நாம் ஒருபோதும் சொல்லிவிட முடியாது. ஆனால் இதையெல்லாம் நாம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன் என்று சொல்லி படமெடுத்து வைத்தால் இதனைக் குடும்பத்தோடு எப்படி வந்து பார்ப்பது..?

ஏற்கெனவே தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கும் கூட்டம் மாதத்திற்கு மாதம் குறைந்து கொண்டே செல்கிறது. இந்த லட்சணத்தில் இது மாதிரி திரைப்படங்கள் வந்து தொலைவது நிச்சயம் திரையுலகத்தை இருட்டில்தான் தள்ளும்..

எவரோ ஒரு சென்சார் போர்டு உறுப்பினர் சொன்னாராம்.. “காலத்திற்கேற்றாற் போன்ற படம்தான்.. நல்லவிதமாகத்தான் கொடுத்திருக்கிறீர்கள்..” என்று.. படத்தைப் பார்த்த பின்புதான் தெரிகிறது.. சாமியும், அந்த சென்சார் போர்டு உறுப்பினரும் எந்த வகையான மனநிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று..

தென்னக சென்சார் போர்டு சர்டிபிகேட் தர மறுத்து ரீவைஸிங் கமிட்டிக்கு மும்பைக்குச் சென்று அங்குள்ளவர்கள் இரண்டு, மூன்று வசனங்களை மட்டுமே கட் செய்து ஏ சர்டிபிகேட் கொடுத்தனுப்பிவிட்டார்கள்.

மகனது டீன்ஏஜ் மனைவியான மருமகளை பெண்டாளத் துணியும் மாமனாரும்.. கணவன் அருகில் இல்லாத சூழலில் உடற்பசியின் தூண்டுதலில் மாமனாரையே கணவனாக்கிக் கொண்டு, கணவனாக இருப்பவனையே விரட்டியனுப்பும் மனைவியும்.. இவர்கள் இருவரின் கூட்டுக் களவாணித்தனத்தை கண்டுபிடித்தாலும், கல்லூரியில் படிக்கின்ற,  போதிய பக்குவமில்லாத காரணத்தாலும்.. கணவன் ஏதும் சொல்ல முடியாமல் தவிக்க.. கடைசியில் இந்த மூவரின் கதி என்னாகிறது என்பதைத்தான் நம்ம அண்ணன் சாமி, திரைக்காவியமாக படைத்திருக்கிறார்.

நம் கண் முன்னே எடுக்கப்பட முடியாமல், தெரியாமல் எத்தனையோ கதைகள் இன்னமும் புதைந்துபோய் கிடக்க அதையெல்லாம் கிண்டாமல், கிளறாமல் வாலிப வயதின் அடையாளத்தையே மறுபடியும், மறுபடியும் உசுப்பிவிட்டு, அதன் ஒரு பகுதியைக் காட்டுகிறேன் என்று சித்து விளையாடுவது இயக்குநருக்கு இதைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதைத்தான் காட்டுகிறது.

ஒரு பக்கம் களவாணியும், வம்சமும் நம் தமிழ் மண்ணைக் கிளறி புத்தம் புது வாசனையையும், புதுவித கிறக்கத்தையும் திரையுலகின்பால் ஈர்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இது மாதிரி நெருஞ்சி முள் திரைப்படங்கள் நமக்குள் உட்புகக் கூடாது.

ஒருவனை கெட்டவன் என்று காட்ட எத்தனை, எத்தனை கொடுஞ்செயல்களை அவன் செய்கிறான் என்பதுபோல் காட்டிவிட்டு கடைசிக்கு முந்தின ரீலில் அவனுக்குத் தத்துவ மழையாக அட்வைஸை அள்ளிப் பொழிந்து, அவனைத் திருத்திவிட்டு இதோ பார் திருந்திவிட்டான். நீங்களும் திருந்திவிடுங்கள். இதுவொரு வாழ்க்கைப் பாடம்.. பலரது கண்களையும் திறக்கவே இப்படியெல்லாம் படம் எடுக்கிறேன் என்று சொல்வதெல்லாம் ச்சும்மா பம்மாத்து.

படத்தின் இரண்டாவது ரீலில் துவங்கி மாமனார் திருந்துவதற்கு முந்தின ரீல்வரையிலும் காமத்தை வசனங்களிலும், காட்சியமைப்பிலும், மாறி மாறி ஓவர் டோஸாக கொடுத்துவிட்டு கடைசியில் அட்வைஸ் செய்வது என்னவோ 1985 காலத்து மலையாள பிட்டு படங்களை பார்த்ததுபோலத்தான் இருந்தது. ஒரு உதாரணமான டயலாக்.. கோஹினூர் பாக்கெட்டை காட்டி “யூஸ் பண்ணிட்டீன்னா தூக்கிப் போட்டுராத.. அதைக் கழுவி, காய வைச்சு, அயர்ன் பண்ணி திருப்பி யூஸ் பண்ணிக்கலாம்..”

லாஜிக் ஓட்டை என்பதெல்லாம் கிளைமாக்ஸில் படகில் ஓட்டை விழுந்து குப்புறக் கவிழ்வதைப் போல காட்சிக்கு காட்சி பல்டிதான்.. லாஜிக் ஓட்டைதான். எப்படியும் காமத்தையும், முறையற்றதையும் காட்டுவதாக முடிவு செய்துவிட்டதால் மக்கள் அதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்றெண்ணி இஷ்டத்துக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார்.

முழுக்க, முழுக்க நம்ப முடியாத திரைக்கதை, ஏற்றுக் கொள்ள முடியாத காட்சியமைப்புகளில் அத்துமீறலான காமத்தால் அத்துமீறியவர்கள் மீண்டும், மீண்டும் அதை அடையத் துடிப்பது ஏன் என்பதற்கான நிஜமான காரணத்தைச் சொல்லவில்லை. இது முழுக்க முழுக்க காமத்தால் நடந்த கதை, நடக்கும் கதை என்றான பின்பு எதற்கு நமது ஒழுக்கம், பண்பாடு பற்றிய பக்கம், பக்கமான வசனங்கள்.

காமத்தில் இருந்து மீள முடியாமல் ஒருவன் தவிக்கும்போது அது ஒரு வகை நோய் என்று நாம் அறிவதில்லை. அதனுடைய சூழலில் இருந்து தப்பிக்கும் வழியைக் கண்டறிந்து நாம் செல்வதுதான் சிறந்தது என்று நாம் நினைப்போம். ஆனால் செய்வதில்லை. ஒரு முறை செய்த தவறுக்கு வேண்டுமானால் சந்தர்ப்பத்தையும், சூழ்நிலையையும் குற்றஞ்சாட்டலாம். ஆனால் தொடர்ச்சியான அந்தக் குற்றத்திற்கு நாமேதான் முழு காரணமாக வேண்டும்..

படத்தை அக்குவேறு ஆணிவேறாக பிய்த்தெடுக்கலாம் போலத்தான் தோன்றியது. ஆனால் இந்தப் படத்துக்குப் போய் எதுக்கு இப்படியொரு பில்டப் என்று சோர்வடையாத எனது கைகளே சொல்கின்றன என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ஒன்றே ஒன்று.. இத்திரைப்படத்தில் மருமகளாக நடித்திருக்கும் அனகா என்ற இந்தப் புதுமுகத்திற்கு சரியான வழிகாட்டிகள் கிடைத்து, நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் அவர் கோடம்பாக்கத்தில் ஒரு பெரிய ரவுண்டு வரலாம்.

மற்றபடி குடும்பத்தோடு பார்க்கவே கூடாத, முடியாத திரைப்படங்களில் இதுவும்  ஒன்று.

வேறு ஏதாவது பொழைப்பு இருந்தால் போய்ப் பாருங்கள்..!

81 comments:

  1. அண்ணே.. கோபியை ஸ்பேம்ல போடுங்க. நாந்தான் ஃபர்ஸ்ட். :)

    ReplyDelete
  2. //படத்தை அக்குவேறு ஆணிவேறாக பிய்த்தெடுக்கலாம் போலத்தான் தோன்றியது.//

    இதுக்கு மேலயுமாண்ணே??இதுவே தலையில ரிவிட் அடிச்ச மாறி கிர்ருங்குதே... இதுக்கு மேல அக்கையும் ஆணியையும் பிரிச்சீங்கன்னா... எங்க தலையில ஒன்னும் மிஞ்சாது.

    ReplyDelete
  3. //'மாமனாரின் இன்ப வெறி' என்று தலைப்பு மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் வெற்றிகரமாக பல ஆண்டுகள் ஓடியது.
    ///

    இந்தப் படத்துக்கான விமர்சனம் இன்னும் உங்ககிட்ட இருந்து வரலை.

    முடிஞ்சா.. இதை அக்குவேறு, ஆணிவேறா.. பிரிச்சி உங்களால எழுத முடியுமா..??

    இதை பொதுவில் ஒரு சவாலாவே உங்ககிட்ட கேக்கறேன்??

    ReplyDelete
  4. //மகனது டீன்ஏஜ் மனைவியான மருமகளை பெண்டாளத் துணியும் மாமனாரும்.. கணவன் அருகில் இல்லாத சூழலில் உடற்பசியின் தூண்டுதலில் மாமனாரையே கணவனாக்கிக் கொண்டு, கணவனாக இருப்பவனையே விரட்டியனுப்பும் மனைவியும்..
    //

    இது 21-ஆம் நூற்றாண்டு புரட்சிண்ணே!!

    பொது மன்னிப்பு கொடுத்திடலாம்.

    ReplyDelete
  5. என்ன இப்படி ஆகிப் போச்சு? ஆனா நீங்க சொல்றது எல்லாம் சரிதான். எவ்ளவோ நல்லா விஷயங்கள் இருக்கும்போது இத எடுக்கலன்னு யார் அழுதா?

    அது எப்படி 1982 ஆம் ஆண்டு எடுத்த படத்தின் டீடைல எல்லாம் விரல் நுனில வெச்சிருக்கீங்க?

    ReplyDelete
  6. பாலா இந்த வாட்டி வாடா எனக்குத்தான்

    ReplyDelete
  7. //கோஹினூர் பாக்கெட்டை காட்டி “யூஸ் பண்ணிட்டீன்னா தூக்கிப் போட்டுராத.. அதைக் கழுவி, காய வைச்சு, அயர்ன் பண்ணி திருப்பி யூஸ் பண்ணிக்கலாம்..”
    ////

    இந்த கோகினூர் டயலாகில் மிகப் பெரிய லாஜிக் ஓட்டை ஒன்னு இருக்கே... நீங்க அதை ஏன் தெளிவா... எங்களுக்கு புரியற மாறி விளக்கி சொல்லக் கூடாது??!!! :)

    ஏன்னா.. நாளைக்கு உ.த அண்ணனே அந்த டயலாகை பத்தி எந்த தப்பும் சொல்லலைன்னு, சின்னப் பசங்க தப்பா நினைச்சி அயன் பண்ணிட்டு அப்புறம் டங்க் மேல டீத் போட்டு பேசுவாங்கண்ணே.

    ReplyDelete
  8. ஓ, இதுக்குப் பேர்தான் கும்முறதா? நல்லா இருக்கே.

    ReplyDelete
  9. //sorry I meant vadai. Typo//

    மன்னிப்பு கொடுக்க நானென்ன உ.த அண்ணனா??

    மொதல்ல.. இராமசாமி கண்ணன் கவிதைகள்ல ஒரு பத்து படிச்சி மனப்பாடமா சொல்லுங்க. அதுதான் தண்டனை. ;)

    ReplyDelete
  10. //காமத்தில் இருந்து மீள முடியாமல் ஒருவன் தவிக்கும்போது அது ஒரு வகை நோய் என்று நாம் அறிவதில்லை.
    //

    இப்படியெல்லாம் தப்பு தப்பா பசங்களுக்கு சொல்லிக் கொடுக்காதீங்க. முருகன் கண்ணை குத்திடுவார்.

    ReplyDelete
  11. \\மொதல்ல.. இராமசாமி கண்ணன் கவிதைகள்ல ஒரு பத்து படிச்சி மனப்பாடமா சொல்லுங்க. அதுதான் தண்டனை. ;)\\

    அவ்ளோ மொக்கயாவா அவர் எழுதுவாரு. அனுப்புங்க லிங்க பாப்போம். ஆனா அந்தக் கவிதைக்கு எந்த விதத்திலும் குறையாத மொக்கைப் பின்னூட்டம் போடுவேன் நான். சொல்லப் போனா அதவிட ஜாஸ்தி மொக்கயாவே போடுவேன். நான் உண்மைத் தமிழன் பதிவத் தவறாம படிக்கிறவன் ஆக்கும்.

    ReplyDelete
  12. படத்துக்கு ஏன்ண்ணே.. சிந்துசமவெளி -ன்னு பேர் வச்சாங்க??

    எதுனா பெயர் காரணம் இருக்கா?

    ReplyDelete
  13. //அவ்ளோ மொக்கயாவா அவர் எழுதுவாரு.//

    டேய் பாலா... உனக்கு நாக்கில் சனிடா!!

    இராமசாமி... இராமசாமி... இந்த கோபி யாருன்னே எனக்குத் தெரியாது.

    ReplyDelete
  14. //வேறு ஏதாவது பொழைப்பு இருந்தால் போய்ப் பாருங்கள்..!//

    உங்களுக்கு பொறாமைண்ணே!! நீங்க மட்டும் எல்லா பிட்டையும் பார்த்துடுங்க.

    ReplyDelete
  15. ரைட்டு...

    உ. த அண்ணே..., கோபி...

    லாங் வீக்கெண்ட். ஸோ..... பை.. பை....!!!!!!!!!

    ReplyDelete
  16. \\படத்துக்கு ஏன்ண்ணே.. சிந்துசமவெளி -ன்னு பேர் வச்சாங்க??\\

    நாகரிகம்னு தோன்றிய காலத்துலேயே இந்த மாதிரி கதையெல்லாம் உண்டு அப்படின்னு டைரக்டர் சொல்ல வரார்னு நெனைக்கிறேன்.
    அல்லது சிந்து சமவெளி நாகரிகம் இந்தப் படக் கதை மாதிரிதான் இருந்ததுன்னு (?!) சொல்ல வர்றார்னும் வெச்சிக்கலாம். எதுக்கும் எங்க ஹிஸ்டரி மேடத்தக் கேட்டுட்டு நாளைக்குச் சொல்றேன்.

    ReplyDelete
  17. //துக்கு இப்படியொரு பில்டப் என்று சோர்வடையாத எனது கைகளே சொல்கின்றன என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.//

    இந்த மாதிரி படத்தை எல்லாம் பாத்துட்டு வந்து ஒரு மணி நேரம் கழிச்சி கை சோர்வடையாம என்ன செய்யும்??

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  18. பாலா,,
    எனக்கு போன் பண்ணி கூப்பிடாம நீ மட்டும் எப்படி கும்மி அடிக்கலாம்?? ஒன்னோட கா..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  19. //எனக்கு போன் பண்ணி கூப்பிடாம நீ மட்டும் எப்படி கும்மி அடிக்கலாம்?? ஒன்னோட கா.//

    ஏங்க.. லாங்க் வீகெண்ட்ல நீங்க என்னிக்கு ஊர்ல இருந்திருக்கீங்க? அமெரிக்கா சுற்றும் வாலிபன்(?) கணக்கா.. சுத்திகிட்டேயிருந்தா...



    // கை சோர்வடையாம என்ன செய்யும்?? //

    அவர் சோர்வடையாத-ன்னுதானே சொல்லியிருக்காரு??

    மொதல்ல... ஜாக்கிகிட்ட நீங்க பேசறதை குறைக்கனும். :) :) :) :)

    ReplyDelete
  20. //மகனது டீன்ஏஜ் மனைவியான மருமகளை பெண்டாளத் துணியும் மாமனாரும்.. கணவன் அருகில் இல்லாத சூழலில் உடற்பசியின் தூண்டுதலில் மாமனாரையே கணவனாக்கிக் கொண்டு, கணவனாக இருப்பவனையே விரட்டியனுப்பும் மனைவியும்..//

    Superu

    ReplyDelete
  21. நீங்க ஏன் பலே பாண்டியா போகாம இதுக்கு போனீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா.?

    ReplyDelete
  22. ஸ்ரீராம்... கேபிள் ஏரியா காலியாதான் இருக்கு. அங்க வாங்க... கும்மி போடுவோம்.

    பாவம்.. உ.த அண்ணன்.. இந்த அத்தனை கமெண்டுக்கும் தனித்தனியா பதில் எழுதுவாரு.

    அண்ணே..... இதுக்கெல்லாம் பதில் சொல்லிகிட்டு இருக்காதீங்கண்ணே.

    ReplyDelete
  23. சாமியோட லொள்ளு தாங்கல..

    ReplyDelete
  24. அடுத்து கூகிள் பஸ்'ஸில் ஆ'ரம்பம்'

    ReplyDelete
  25. கொஞ்ச நாளா உங்களுக்கு கிரகம் சரியில்லை...

    ReplyDelete
  26. //
    ஹாலிவுட் பாலா சைட்...
    ஸ்ரீராம்... கேபிள் ஏரியா காலியாதான் இருக்கு. அங்க வாங்க... கும்மி போடுவோம்.
    //
    தோ.. அங்க தான் பொயிக்கிட்டு இருக்கேன்...

    ReplyDelete
  27. இந்த படம் பாக்கற அளவுக்கு எனக்கு வயசாகல இன்னும் (:

    ReplyDelete
  28. அது எப்படி அண்ணாச்சி மரணதண்டனைக்கு அப்புறம் ராமர் வந்துச்சு..

    முத்துக்குமாருக்கு அப்புறம் இது...

    (:

    அடுத்து எத பத்தி எழுத போறீங்க !

    ReplyDelete
  29. கேபிள் இந்த படத்த கண்டுக்காதீங்க போட்ருக்காரு... அதனால நோ பின்னூட்டம்,,, நோ ஓட்டு

    ReplyDelete
  30. இந்த மாதிரி படங்களை புறக்கணிப்போம்.

    அப்படியே பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும் இணையத்தில் இலவசமாக பார்ப்போம், திரை அரங்கிற்கு சென்று ஆதரவு அளிக்க வேண்டாம். அவ்வாறு வணிக ரீதியாக தோல்வி அடைந்தால் தான் இது போல படனகள் மேலும் வராது.

    ReplyDelete
  31. [[[இரா கோபி said...
    I the first]]]

    வெல்கம்..!

    ReplyDelete
  32. [[[ஹாலிவுட் பாலா said...
    அண்ணே.. கோபியை ஸ்பேம்ல போடுங்க. நாந்தான் ஃபர்ஸ்ட். :)]]]

    அது எப்படிய்யா.. போஸ்ட் போட்ட அடுத்த செகண்ட்டுல உள்ள வர்றீங்க..? ஒண்ணும் புரியலை..! தமிழ்மணத்துல இணைக்கக் கூட இல்லை.. அதுக்குள்ளேயாவா..? ஏதாவது சாப்ட்வேர்ல இணைச்சிருக்கீங்களா..?

    ReplyDelete
  33. [[[ஹாலிவுட் பாலா said...

    //படத்தை அக்குவேறு ஆணிவேறாக பிய்த்தெடுக்கலாம் போலத்தான் தோன்றியது.//

    இதுக்கு மேலயுமாண்ணே?? இதுவே தலையில ரிவிட் அடிச்ச மாறி கிர்ருங்குதே. இதுக்கு மேல அக்கையும் ஆணியையும் பிரிச்சீங்கன்னா எங்க தலையில ஒன்னும் மிஞ்சாது.]]]

    அதுனாலதான் பொழைச்சுப் போங்கன்னு விட்டுட்டேன்..!

    ReplyDelete
  34. [[[ஹாலிவுட் பாலா said...

    //'மாமனாரின் இன்ப வெறி' என்று தலைப்பு மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் வெற்றிகரமாக பல ஆண்டுகள் ஓடியது.///

    இந்தப் படத்துக்கான விமர்சனம் இன்னும் உங்ககிட்ட இருந்து வரலை.

    முடிஞ்சா.. இதை அக்குவேறு, ஆணிவேறா.. பிரிச்சி உங்களால எழுத முடியுமா..??

    இதை பொதுவில் ஒரு சவாலாவே உங்ககிட்ட கேக்கறேன்??]]]

    கண்டிப்பா போடுறேன்.. விரைவில் எதிர்பாருங்கள்..!

    ReplyDelete
  35. [[[ஹாலிவுட் பாலா said...
    /மகனது டீன் ஏஜ் மனைவியான மருமகளை பெண்டாளத் துணியும் மாமனாரும்.. கணவன் அருகில் இல்லாத சூழலில் உடற்பசியின் தூண்டுதலில் மாமனாரையே கணவனாக்கிக் கொண்டு, கணவனாக இருப்பவனையே விரட்டியனுப்பும் மனைவியும்..//

    இது 21-ஆம் நூற்றாண்டு புரட்சிண்ணே!! பொது மன்னிப்பு கொடுத்திடலாம்.]]]

    கொடுத்தால்..! அடுத்து மாமியாரும், மருமகனும் என்று வேறொருத்தர் படம் எடுப்பார்.. பரவாயில்லையா..?

    ReplyDelete
  36. [[[இரா கோபி said...

    என்ன இப்படி ஆகிப் போச்சு? ஆனா நீங்க சொல்றது எல்லாம் சரிதான். எவ்ளவோ நல்லா விஷயங்கள் இருக்கும்போது இத எடுக்கலன்னு யார் அழுதா?

    அது எப்படி 1982 ஆம் ஆண்டு எடுத்த படத்தின் டீடைல எல்லாம் விரல் நுனில வெச்சிருக்கீங்க?]]]

    கோபிஜி..!

    அப்பவும் இதே தொழில்தான்.. இப்பவும் இதே தொழில்தான்..!

    ReplyDelete
  37. [[[இரா கோபி said...
    பாலா இந்த வாட்டி வாடா எனக்குத்தான்.]]]

    இவ்ளோ அவசரமா யார் கமெண்ட் போடச் சொன்னா..? போடுறதே ஒரு வரி.. அதுல ஒரு தப்பா..? பெஞ்ச்சு மேல நில்லுங்க..!

    ReplyDelete
  38. [[[இரா கோபி said...

    sorry I meant vadai. Typo]]]

    -)))))))))))

    ReplyDelete
  39. [[[ஹாலிவுட் பாலா said...

    //கோஹினூர் பாக்கெட்டை காட்டி “யூஸ் பண்ணிட்டீன்னா தூக்கிப் போட்டுராத.. அதைக் கழுவி, காய வைச்சு, அயர்ன் பண்ணி திருப்பி யூஸ் பண்ணிக்கலாம்..”//

    இந்த கோகினூர் டயலாகில் மிகப் பெரிய லாஜிக் ஓட்டை ஒன்னு இருக்கே... நீங்க அதை ஏன் தெளிவா... எங்களுக்கு புரியற மாறி விளக்கி சொல்லக் கூடாது??!!! :)

    ஏன்னா.. நாளைக்கு உ.த அண்ணனே அந்த டயலாகை பத்தி எந்த தப்பும் சொல்லலைன்னு, சின்னப் பசங்க தப்பா நினைச்சி அயன் பண்ணிட்டு அப்புறம் டங்க் மேல டீத் போட்டு பேசுவாங்கண்ணே.]]]

    அதுல எனக்கு அனுபவம் இல்லையே ராசா.. அதுனால இதுல இருக்குற லாஜிக் ஓட்டை எனக்குத் தெரியாது..! தெரிஞ்சவங்க நீங்க.. சொல்லுங்களேன்..!

    ReplyDelete
  40. [[[இரா கோபி said...
    ஓ, இதுக்குப் பேர்தான் கும்முறதா? நல்லா இருக்கே.]]]

    ஓ.. இதுக்குப் பேர்தான் ஏத்தி விடுறதா..? நல்லாயிருக்கே..!

    ReplyDelete
  41. [[[ஹாலிவுட் பாலா said...

    //sorry I meant vadai. Typo//

    மன்னிப்பு கொடுக்க நானென்ன உ.த அண்ணனா??

    மொதல்ல.. இராமசாமி கண்ணன் கவிதைகள்ல ஒரு பத்து படிச்சி மனப்பாடமா சொல்லுங்க. அதுதான் தண்டனை. ;)]]]

    வேணாம் பாலா.. கோபி வலையுலகை விட்டு ஓடிரப் போறாரு.. விட்ருங்க..!

    ReplyDelete
  42. [[[ஹாலிவுட் பாலா said...

    //காமத்தில் இருந்து மீள முடியாமல் ஒருவன் தவிக்கும்போது அது ஒரு வகை நோய் என்று நாம் அறிவதில்லை.//

    இப்படியெல்லாம் தப்பு தப்பா பசங்களுக்கு சொல்லிக் கொடுக்காதீங்க. முருகன் கண்ணை குத்திடுவார்.]]]

    என்ன வேணும்னாலும் செய்யட்டும். நான் உண்மையை சொல்லத்தான் செய்வேன்..!

    ReplyDelete
  43. [[[இரா கோபி said...

    \\மொதல்ல.. இராமசாமி கண்ணன் கவிதைகள்ல ஒரு பத்து படிச்சி மனப்பாடமா சொல்லுங்க. அதுதான் தண்டனை. ;)\\

    அவ்ளோ மொக்கயாவா அவர் எழுதுவாரு. அனுப்புங்க லிங்க பாப்போம். ஆனா அந்தக் கவிதைக்கு எந்த விதத்திலும் குறையாத மொக்கைப் பின்னூட்டம் போடுவேன் நான். சொல்லப் போனா அதவிட ஜாஸ்தி மொக்கயாவே போடுவேன். நான் உண்மைத் தமிழன் பதிவத் தவறாம படிக்கிறவன் ஆக்கும்.]]]

    அப்போ நான் மொக்கைப் பதிவராக்கும்..! ஆஹா.. வஞ்சப்புகழ்ச்சில தமிழர்களை அடிச்சுக்கவே முடியாதுப்பா..!

    ReplyDelete
  44. [[[ஹாலிவுட் பாலா said...
    படத்துக்கு ஏன்ண்ணே.. சிந்துசமவெளி -ன்னு பேர் வச்சாங்க?? எதுனா பெயர் காரணம் இருக்கா?]]]

    சிந்து சமவெளிலதான் முதல் முதல்லா மனித நாகரீகம் தோன்றியதான்.. அதுனால இனிமேல் எல்லாரும் திருந்தி நாகரிகமாக வாழப் பாருங்கன்னு அட்வைஸ் பண்ணியிருக்காரு..!

    ReplyDelete
  45. [[[ஹாலிவுட் பாலா said...

    //அவ்ளோ மொக்கயாவா அவர் எழுதுவாரு.//

    டேய் பாலா... உனக்கு நாக்கில் சனிடா!! இராமசாமி... இராமசாமி... இந்த கோபி யாருன்னே எனக்குத் தெரியாது.]]]

    எங்கய்யா போனாரு அந்த இராமசாமி..?

    ReplyDelete
  46. [[[ஹாலிவுட் பாலா said...

    //வேறு ஏதாவது பொழைப்பு இருந்தால் போய்ப் பாருங்கள்..!//

    உங்களுக்கு பொறாமைண்ணே!! நீங்க மட்டும் எல்லா பிட்டையும் பார்த்துடுங்க.]]]

    அண்ணன்.. எவ்ளோ பொறுப்பா என்னைக் கஷ்டப்படுத்திக்கிட்டு உங்களுக்கு நல்லது செய்யறேன்.. என்னைய போய் தப்பா பேசலாமா..?

    ReplyDelete
  47. [[[ஹாலிவுட் பாலா said...

    ரைட்டு...

    உ. த அண்ணே..., கோபி...

    லாங் வீக்கெண்ட். ஸோ..... பை.. பை....!!!!!!!!!]]]

    ஓகே.. பை.. என்ஜாய்.. நல்லாயிரு..!

    ReplyDelete
  48. [[[இரா கோபி said...

    \\படத்துக்கு ஏன்ண்ணே.. சிந்துசமவெளி -ன்னு பேர் வச்சாங்க??\\

    நாகரிகம்னு தோன்றிய காலத்துலேயே இந்த மாதிரி கதையெல்லாம் உண்டு அப்படின்னு டைரக்டர் சொல்ல வரார்னு நெனைக்கிறேன். அல்லது சிந்து சமவெளி நாகரிகம் இந்தப் படக் கதை மாதிரிதான் இருந்ததுன்னு (?!) சொல்ல வர்றார்னும் வெச்சிக்கலாம். எதுக்கும் எங்க ஹிஸ்டரி மேடத்தக் கேட்டுட்டு நாளைக்குச் சொல்றேன்.]]]

    கேட்டுட்டு திரும்பவும் பின்னூட்டமா போடுங்க.. நானும் தெரிஞ்சுக்குறேன்..!

    ReplyDelete
  49. [[[sriram said...

    //துக்கு இப்படியொரு பில்டப் என்று சோர்வடையாத எனது கைகளே சொல்கின்றன என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.//

    இந்த மாதிரி படத்தை எல்லாம் பாத்துட்டு வந்து ஒரு மணி நேரம் கழிச்சி கை சோர்வடையாம என்ன செய்யும்??

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்]]]

    ஹா.. ஹா.. பாஸ்டன்ஜி.. லொள்..!

    ReplyDelete
  50. [[[ஹாலிவுட் பாலா said...

    //எனக்கு போன் பண்ணி கூப்பிடாம நீ மட்டும் எப்படி கும்மி அடிக்கலாம்?? ஒன்னோட கா.//

    ஏங்க.. லாங்க் வீகெண்ட்ல நீங்க என்னிக்கு ஊர்ல இருந்திருக்கீங்க? அமெரிக்கா சுற்றும் வாலிபன்(?) கணக்கா.. சுத்திகிட்டேயிருந்தா...

    // கை சோர்வடையாம என்ன செய்யும்??//

    அவர் சோர்வடையாதன்னுதானே சொல்லியிருக்காரு??

    மொதல்ல... ஜாக்கிகிட்ட நீங்க பேசறதை குறைக்கனும். :) :) :) :)]]]

    ஆமாம்.. பயபுள்ளை இங்க இருக்கிறவனுகளையெல்லாம் கெடுக்குறான்.. தூரத்துல இருக்குறவங்களையும் கெடுத்து வைச்சிருக்கான்..!

    ReplyDelete
  51. [[[எறும்பு said...

    //மகனது டீன்ஏஜ் மனைவியான மருமகளை பெண்டாளத் துணியும் மாமனாரும்.. கணவன் அருகில் இல்லாத சூழலில் உடற்பசியின் தூண்டுதலில் மாமனாரையே கணவனாக்கிக் கொண்டு, கணவனாக இருப்பவனையே விரட்டியனுப்பும் மனைவியும்..//

    Superu]]]

    இதைவிட டீஸண்ட்டா கதையைச் சொல்ல முடியலை..!

    ReplyDelete
  52. [[[எறும்பு said...
    நீங்க ஏன் பலே பாண்டியா போகாம இதுக்கு போனீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா.?]]]

    நான் போன தியேட்டர்ல இந்தப் படம்தான் போட்டிருந்தாங்க..!

    ReplyDelete
  53. [[[ஹாலிவுட் பாலா said...

    ஸ்ரீராம்... கேபிள் ஏரியா காலியாதான் இருக்கு. அங்க வாங்க... கும்மி போடுவோம்.

    பாவம்.. உ.த அண்ணன்.. இந்த அத்தனை கமெண்டுக்கும் தனித்தனியா பதில் எழுதுவாரு.

    அண்ணே..... இதுக்கெல்லாம் பதில் சொல்லிகிட்டு இருக்காதீங்கண்ணே.]]]

    போட்டாச்சு..

    ReplyDelete
  54. [[[அஹமது இர்ஷாத் said...
    சாமியோட லொள்ளு தாங்கல..]]]

    தாங்கலைதான்..! கட்டற்ற சுதந்திரம் வலையுலகில் மட்டுமல்ல.. சினிமாவிலும் இருக்கு..!

    ReplyDelete
  55. [[[அஹமது இர்ஷாத் said...
    அடுத்து கூகிள் பஸ்'ஸில் ஆ'ரம்பம்']]]

    பின்ன..? வேலையத்தவங்க எத்தனை பேர் இங்கன இருக்காங்க.. எல்லாருக்கும் பொழுது போக வேண்டாம்..?

    ReplyDelete
  56. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    கொஞ்ச நாளா உங்களுக்கு கிரகம் சரியில்லை...]]]

    கொஞ்ச நாள்ன்னு இல்லை.. கொஞ்ச வருஷமாவே இப்படித்தான் இருக்கு..!

    ReplyDelete
  57. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

    //ஹாலிவுட் பாலா சைட்...
    ஸ்ரீராம்... கேபிள் ஏரியா காலியாதான் இருக்கு. அங்க வாங்க... கும்மி போடுவோம்.//

    தோ.. அங்கதான் பொயிக்கிட்டு இருக்கேன்...]]]

    நன்றி.. சென்று வருக..!

    ReplyDelete
  58. [[[இராமசாமி கண்ணண் said...
    இந்த படம் பாக்கற அளவுக்கு எனக்கு வயசாகல இன்னும் (:]]]

    சரி.. நம்புறேன்.. ஏன் இன்னிக்கு இவ்ளோ லேட்டு..?

    ReplyDelete
  59. [[[இராமசாமி கண்ணண் said...

    அது எப்படி அண்ணாச்சி மரணதண்டனைக்கு அப்புறம் ராமர் வந்துச்சு..

    முத்துக்குமாருக்கு அப்புறம் இது...

    (:

    அடுத்து எத பத்தி எழுத போறீங்க !]]]

    நம்ம எப்பவும் இப்படித்தான..? வெரைட்டிதான் நம்ம பாலிஸி..!

    ReplyDelete
  60. [[[sivakasi maappillai said...
    கேபிள் இந்த படத்த கண்டுக்காதீங்க போட்ருக்காரு... அதனால நோ பின்னூட்டம். நோ ஓட்டு]]]

    அடப்பாவிகளா..!!!!

    ReplyDelete
  61. [[[ராம்ஜி_யாஹூ said...
    இந்த மாதிரி படங்களை புறக்கணிப்போம். அப்படியே பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும் இணையத்தில் இலவசமாக பார்ப்போம், திரை அரங்கிற்கு சென்று ஆதரவு அளிக்க வேண்டாம். அவ்வாறு வணிக ரீதியாக தோல்வி அடைந்தால்தான் இது போல படனகள் மேலும் வராது.]]]

    நன்றி ராம்ஜி..! அதனால்தான் நானும் கடைசியில் சொல்லியிருக்கிறேன்..!

    ReplyDelete
  62. anne romba ora vanjanai ungalukku oru stillu koodavaa ungalukku kidaikkala,sari eththana bittu padaththula irunthuthu, bittukkaana saaththiyak koorugal niraiya irukku poonthu vilaiyaadiyirukkalaam cameraavum nadiganum... sokkaa namakku illa....

    aamaa naan 18+ illaiye appo intha padam paakkak koodaathaaaa....

    ReplyDelete
  63. //அப்பவும் இதே தொழில்தான்.. இப்பவும் இதே தொழில்தான்..!
    ///

    28 வருஷமா பிட்டு ப‌ட‌ம் பாக்குற‌து மட்டுமே தொழிலா வ‌ச்சிருக்கீங்க‌ளா?? உங்க‌ளுக்கு "பிட்டு சாம்ராட்" என்ற‌ ப‌ட்ட‌ம் வ‌ழங்க‌ ப‌ரிந்துரைக்கிறேன்

    ReplyDelete
  64. //அப்பவும் இதே தொழில்தான்.. இப்பவும் இதே தொழில்தான்..!
    ///

    28 வருஷமா பிட்டு ப‌ட‌ம் பாக்குற‌து மட்டுமே தொழிலா வ‌ச்சிருக்கீங்க‌ளா?? உங்க‌ளுக்கு "பிட்டு சாம்ராட்" என்ற‌ ப‌ட்ட‌ம் வ‌ழங்க‌ ப‌ரிந்துரைக்கிறேன்

    ReplyDelete
  65. //நம்ம எப்பவும் இப்படித்தான..? வெரைட்டிதான் நம்ம பாலிஸி..!///


    விஷுவல் வெரைட்டி மட்டும் ட்ரை பண்ணுங்க.... ப்ராக்டிகல் வெரைட்டி ட்ரை செய்யாதீர்கள் ..... (மிருகம் ஆதி ஆகி விடுவீர்கள்)

    ReplyDelete
  66. //நான் போன தியேட்டர்ல இந்தப் படம்தான் போட்டிருந்தாங்க..!
    //

    தப்பு,,, இந்த படம் ஓடுன தியேட்டர்க்கு நீங்க போய்ருக்கீங்க‌

    ReplyDelete
  67. அன்பிற்கினிய அண்ணனே...,

    / /...வீட்டில் அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ.....எது சொல்லக்கூடிய செய்தி என்று நமக்குத் தெரிந்ததோ அவற்றை மட்டுமேதான் சொல்வோம்..
    தினத்தந்தியில் ஏழு காலம் அளவுக்கு கள்ளக்காதல் செய்திகள் இருக்கின்றன என்பதால் நம் வீட்டிற்குள்ளேயே அடுத்த நபர்களுக்குக் கேட்பது போலவோ நாம் படிப்பதில்லை. இது நமக்கு நாமே போட்டுள்ள கடிவாளம்..../ /

    நல்ல எடுத்துகாட்டு.
    இந்த படத்திற்கு சிறந்த உதாரணம் மற்றும் விமர்சனம் இவைதான்.

    நன்றி..
    மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
    அன்புடன்.ச.ரமேஷ்.

    ReplyDelete
  68. [[[பித்தன் said...
    anne romba ora vanjanai ungalukku oru stillu koodavaa ungalukku kidaikkala, sari eththana bittu padaththula irunthuthu, bittukkaana saaththiyak koorugal niraiya irukku poonthu vilaiyaadiyirukkalaam cameraavum nadiganum. sokkaa namakku illa.]]]

    பித்தன்ஜி.. இதையெல்லாம் பார்த்தும், பார்க்காத மாதிரி போறதுதான் நமக்கு நல்லது..!

    ReplyDelete
  69. [[[sivakasi maappillai said...
    //அப்பவும் இதே தொழில்தான்.. இப்பவும் இதே தொழில்தான்..!///

    28 வருஷமா பிட்டு ப‌ட‌ம் பாக்குற‌து மட்டுமே தொழிலா வ‌ச்சிருக்கீங்க‌ளா?? உங்க‌ளுக்கு "பிட்டு சாம்ராட்" என்ற‌ ப‌ட்ட‌ம் வ‌ழங்க‌ ப‌ரிந்துரைக்கிறேன்.]]]

    நன்றியோ நன்றி..!

    ReplyDelete
  70. [[[sivakasi maappillai said...

    //நம்ம எப்பவும் இப்படித்தான..? வெரைட்டிதான் நம்ம பாலிஸி..!///

    விஷுவல் வெரைட்டி மட்டும் ட்ரை பண்ணுங்க. ப்ராக்டிகல் வெரைட்டி ட்ரை செய்யாதீர்கள். (மிருகம் ஆதி ஆகி விடுவீர்கள்)]]]

    அட்வைஸூக்கு நன்றி..!

    ReplyDelete
  71. [[[sivakasi maappillai said...

    //நான் போன தியேட்டர்ல இந்தப் படம்தான் போட்டிருந்தாங்க..!//

    தப்பு, இந்த படம் ஓடுன தியேட்டர்க்கு நீங்க போய்ருக்கீங்க‌]]]

    ஆமாம்.. அங்க போன பின்னாடிதான் தெரிஞ்சது..!

    ReplyDelete
  72. S.ரமேஷ். said...

    அன்பிற்கினிய அண்ணனே...,

    //வீட்டில் அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ எது சொல்லக் கூடிய செய்தி என்று நமக்குத் தெரிந்ததோ அவற்றை மட்டுமேதான் சொல்வோம்.

    தினத்தந்தியில் ஏழு காலம் அளவுக்கு கள்ளக்காதல் செய்திகள் இருக்கின்றன என்பதால் நம் வீட்டிற்குள்ளேயே அடுத்த நபர்களுக்குக் கேட்பது போலவோ நாம் படிப்பதில்லை. இது நமக்கு நாமே போட்டுள்ள கடிவாளம்..../ /

    நல்ல எடுத்துகாட்டு. இந்த படத்திற்கு சிறந்த உதாரணம் மற்றும் விமர்சனம் இவைதான்.

    நன்றி..
    மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
    அன்புடன்.ச.ரமேஷ்.]]]

    நன்றிகள் ரமேஷ்..!

    ReplyDelete
  73. aNNe,ungka vimarsanam super.innum kiziccu saamiyai thaakkuvingkanu edhirparththen

    ReplyDelete
  74. நல்ல விமர்சனம் அண்ணா.. :)

    பலே பாண்டியா வந்துருக்கே.. அத பாத்துட்டு எப்டி இருக்கு-னு சொல்லுங்கண்ணா..

    கண்டிப்பா இந்த படத்துக்கு போறதா இல்ல....

    ReplyDelete
  75. [[[சி.பி.செந்தில்குமார் said...
    aNNe, ungka vimarsanam super. innum kiziccu saamiyai thaakkuvingkanu edhirparththen.]]]

    என்னத்த தாக்குறது..? அவருக்கே அறிவு வேணும்..! எதை பேசணும்.. எதை வெளிப்படுத்தணும்? எதைக் குறிப்பிடணும்ன்ற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாம இயக்கம் செய்ய வந்துட்டாரே.. நம்ம தலையெழுத்து..?

    ReplyDelete
  76. [[[kanagu said...

    நல்ல விமர்சனம் அண்ணா.. :)

    பலே பாண்டியா வந்துருக்கே.. அத பாத்துட்டு எப்டி இருக்கு-னு சொல்லுங்கண்ணா..]]]

    உக்காந்து பார்க்குற மாதிரியில்லேன்னு சொல்றாங்கப்பா..!

    [[[கண்டிப்பா இந்த படத்துக்கு போறதா இல்ல....]]]

    குட்.. வெரிகுட்..!

    ReplyDelete
  77. //'மாமனாரின் இன்ப வெறி' என்று தலைப்பு மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் வெற்றிகரமாக பல ஆண்டுகள் ஓடியது.///

    இந்தப் படத்துக்கான விமர்சனம் இன்னும் உங்ககிட்ட இருந்து வரலை.

    முடிஞ்சா.. இதை அக்குவேறு, ஆணிவேறா.. பிரிச்சி உங்களால எழுத முடியுமா..??

    இதை பொதுவில் ஒரு சவாலாவே உங்ககிட்ட கேக்கறேன்??]]]

    கண்டிப்பா போடுறேன்.. விரைவில் எதிர்பாருங்கள்..!

    ***********************
    சவாலை ஏற்றதற்கு நன்றி.. முகபாவனை, இசை, இயக்கம் என விரிவா எழுதுங்கண்ணே..

    ReplyDelete
  78. [[[பார்வையாளன் said...

    //'மாமனாரின் இன்ப வெறி' என்று தலைப்பு மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் வெற்றிகரமாக பல ஆண்டுகள் ஓடியது.///

    இந்தப் படத்துக்கான விமர்சனம் இன்னும் உங்ககிட்ட இருந்து வரலை.
    முடிஞ்சா.. இதை அக்குவேறு, ஆணிவேறா.. பிரிச்சி உங்களால எழுத முடியுமா..??

    இதை பொதுவில் ஒரு சவாலாவே உங்ககிட்ட கேக்கறேன்??]]]

    கண்டிப்பா போடுறேன்.. விரைவில் எதிர்பாருங்கள்..!

    ***********************
    சவாலை ஏற்றதற்கு நன்றி.. முகபாவனை, இசை, இயக்கம் என விரிவா எழுதுங்கண்ணே..]]]

    எழுதிருவோம்ண்ணே..!

    ReplyDelete
  79. இந்த விமர்சனம் இப்போ தான் பார்த்தேன் சகோதரரே...நீங்கள் சொன்ன மாதிரி கருத்து ஒருமித்திருக்கிறது..நன்றி..வீட்டு பக்கம் வந்ததுக்கு..தொடர்ந்து வாருங்கள் சகோதரரே...

    ReplyDelete