Pages

Sunday, September 12, 2010

எந்திரன் - அசத்தும் டிரெயிலர்கள்..!


12-09-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



இந்தியாவே பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எந்திரன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, சேலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒரே நேரத்தில் நடந்தது.

ரூ 190 கோடி செலவில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தியாவின் மிகப் பிரமாண்டமான படம் 'எந்திரன்'. ரஜினிகாந்த் விஞ்ஞானியாகவும், ரோபோவாகவும் நடித்துள்ளார். ரோபோட்ரானிக்ஸ் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சில காட்சிகளில் 100 ரஜினியை உருவாக்கி, வியக்க வைக்கும் காட்சிகளை அமைத்துள்ளனர் ஹாலிவுட் தொழில் நுட்பக் கலைஞர்கள்.

ரஜினியின் ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்துள்ளனர். ஹாலிவுட்டுக்கு ஒரு இந்தியக் கலைஞரின் சவால் என்று வர்ணிக்கும் வகையில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ஷங்கர். சமீபத்தில் வெளியான எந்திரனின் இந்திப் பதிப்பான ரோபோவின் முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்த அனைவரும் பெரும் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்தப் படம் இந்தியக் கலைஞர்கள் உருவாக்கியதுதானா என்ற வியப்பு இன்னும் அகலவில்லை.

ஏ.ஆர்.ரகுமான் இசையில், எந்திரன் பாடல்கள் மலேசியாவில் மிகப் பிரமாண்ட முறையில் வெளியிடப்பட்டது. மலேசியாவில் நிகழ்ந்த முதல் தமிழ்ப் பட இசை வெளியீட்டு விழா என்ற சிறப்பு எந்திரனுக்கே கிடைத்தது. இந்த நிகழ்ச்சியை ரஜினி, ஐஸ்வர்யா ராய், சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பங்கேற்று சிறப்பித்தனர்.

எந்திரன் இந்திப் பதிப்பான ரோபோவின் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் அமிதாப்பச்சன் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஹைதராபாத்தில் தெலுங்குப் பதிப்பான 'ரோபோ' படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. இதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி, மோகன்பாபு கலந்து கொண்டனர்.

இந்த மூன்று மொழிகளிலுமே எந்திரன் பாடல்கள் விற்பனையில் புதிய சரித்திரம் படைத்துள்ளன. ஆடியோ விற்பனையில் இனி இப்படியொரு சாதனை நிகழுமா என்று கேட்க வைக்கும் விதத்தில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறது எந்திரன்.

இந்த நிலையில் படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.

காலை 10 மணிக்கு சென்னையில் சத்யம் தியேட்டரில் நடந்த இந்த விழாவில் படத்தின் நாயகன் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன், இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மற்றும் தமிழ் திரைப்பட முன்னணி நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் உட்பட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர். படத்தின் டிரெய்லரை ரஜினிகாந்த் வெளியிட்டார்.

சென்னை கே.கே.நகர் காசி, அம்பத்தூர் ராக்கி, மதுரை குரு, தமிழ் ஜெயா, கோவை சாந்தி, சாரதா, திருநெல்வேலி பூர்ணகலா, திருச்சி கலையரங்கம், புதுச்சேரி  முருகா, சேலம் கீதாலயா, ராஜேஸ்வரி, வேலூர் வீனஸ், குடியாத்தம் கங்கா, திருவண்ணாமலை சக்தி ஆகிய திரையரங்குகளிலும்  இன்று  டிரெய்லர்  வெளியிடப்பட்டது.

அதேபோல் சூட்டோடு சூட்டாக இணையத்தளங்களிலும் இந்த டிரெயிலர் வெளிவந்துவிட்டது.. ஹிந்தி, தமிழுக்குத் தனித்தனியாகத் தயாரித்திருக்கிறார்கள். 15 செகண்ட்டுகள் ஓடும்படியாக 4 வகை டிரெயிலர்கள் ஹிந்திக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளன. 

ஒரு பக்கம் பிரமிப்பாகவே இருந்தாலும், பல ஆங்கிலப் படங்களின் தாக்கம் அதிகமாகச் சினிமா பார்க்கும் பழக்கமுள்ளவர்களுக்கு உண்டு என்பதால் கொஞ்சம் ஏமாற்றமே.. எனக்கு அந்த பாம்பு கிராபிக்ஸ் பிடிக்கவில்லை. இதைவிடவும் இன்னும் கொஞ்சம் நல்லவிதமாகச் செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

ஐஸ்வர்யாவின் அழகை பிரதானப்படுத்தியிருக்கிறார்கள் தமிழில்.. ஹிந்தியில் கிராபிக்ஸ் அழகுதான் முதலிடம்.. படத்தினைத் தயாரித்துவிட்டால் மட்டும் போதாது..! அதனை முறைப்படி, மக்களின் கண்களுக்கும், காதுகளுக்கும் எட்ட வைக்க வேண்டும்.. 

இத்தனை பெரிய படத்திற்கே இத்தனை முஸ்தீபுகளை செய்யும்போது மற்ற பட்ஜெட் படங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்..! இதிலிருந்தாவது தமிழ்த் திரையுலகம் விளம்பர முன்னோட்டம் பற்றித் தெரிந்து கொள்ளட்டும்..

இது  தமிழ்  டிரெயிலர்



இது ஹிந்தி டிரெயிலர்


34 comments:

  1. அண்ணாச்சி இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பன்னுங்க.. எந்த எந்த சீன் எந்த எந்த படத்துல இருந்து காப்பி அடிச்சதுன்னு பெரிய லிஸ்ட் ரெடி ஆயிட்டிருக்கும் நம்ம் ஆளுங்க கிட்ட இருந்து :)

    ReplyDelete
  2. எலேய் ராம்ஸ் தூங்கவே மாட்டியா . jacksion ville ல முதல்ல நெட் கட் பண்ணனும் ..

    ReplyDelete
  3. செய்தியில் 80 சதவீதம் தட்ஸ்தமிழில் வந்ததை காப்பி பேஸ்ட் செய்திருக்கிறீர்கள். முதல் ட்ரெயிலர் ஒரிஜினல் அல்ல. ஒரு ரசிகர் உருவாக்கியது. அதையும் ஆராயாமல் கூட சுட்டிருக்கிறீர்கள்.

    இதில் ஊருக்கு உபதேசம் வேற!

    -சிவா

    ReplyDelete
  4. [[[இராமசாமி கண்ணண் said...
    அண்ணாச்சி இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பன்னுங்க.. எந்த எந்த சீன் எந்த எந்த படத்துல இருந்து காப்பி அடிச்சதுன்னு பெரிய லிஸ்ட் ரெடி ஆயிட்டிருக்கும் நம்ம் ஆளுங்ககிட்ட இருந்து :)]]]

    அதுக்குத்தான நீங்க இருக்கீங்க..?

    ReplyDelete
  5. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    yeley raams thoonkave maattiyaa. jacksion ville la muthalla net cut pannanum..]]]

    நீங்க என்ன ஒபாமாவுக்கு அக்கா மகனா..? இல்லை அக்கா பேரனா..? இப்படியெல்லாம் ஆக்சன் எடுக்கச் சொல்றீங்க..?

    ReplyDelete
  6. siva said...

    செய்தியில் 80 சதவீதம் தட்ஸ்தமிழில் வந்ததை காப்பி பேஸ்ட் செய்திருக்கிறீர்கள்.]]]

    ஆமாம்.. படிக்கும்போதே தெரிந்திருக்குமே.. பத்திரிகை ஸ்டைல் என்று..!

    [[[முதல் ட்ரெயிலர் ஒரிஜினல் அல்ல. ஒரு ரசிகர் உருவாக்கியது. அதையும் ஆராயாமல் கூட சுட்டிருக்கிறீர்கள்.]]]

    அதெப்படி எனக்குத் தெரியும்.. தம்பி ஒருத்தன் அனுப்பி வைத்தான். நான் தியேட்டருக்குப் போய் அந்த டிரெயிலரை பார்க்கவில்லை. ஒருவேளை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்..!

    வருகைக்கு நன்றி சிவா..!

    இதில் ஊருக்கு உபதேசம் வேற!

    -சிவா]]]

    ReplyDelete
  7. "ஆமாம்.. படிக்கும்போதே தெரிந்திருக்குமே.. பத்திரிகை ஸ்டைல் என்று..!"

    -அந்த மாதிரி நேரும்போது செய்தி வெளியான தளத்துக்கு ஒரு Credit குடுங்கஜி.

    99.9 சதவீத ப்ளாக்கர்ஸ் பண்ற தப்பை உங்களிடம் எதிர்ப்பார்க்காததால் நான் போட்ட கமெண்ட் அது.

    ஆமா... நீங்க தமிழன் எக்ஸ்பிரஸ் பார்ட்டியா?

    நான் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்!'

    -சிவா

    ReplyDelete
  8. Science has rendered theology and the existence of God "unnecessary" for our
    understanding of how the universe and humanity came into being, world-renowned
    physicist Stephen Hawking tells CNN's Larry King.


    Religion Creates god /science creates RobO_ inspired by the both
    - an ordinary human.

    ReplyDelete
  9. அண்ணே,ட்ரைலர் அருமை,நெகடிவ் கமெண்ட்ஸ்க்காக மனசை விட்ராதீங்க.it is aall in the game.
    எனக்கு பிடித்த வரிகள்

    படத்தை தயாரித்தால் மட்டும் போதாது,அதனை முறைப்படி....

    ReplyDelete
  10. ட்ரைலருக்கும் விமர்சனமா? உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா:)

    ReplyDelete
  11. [[[siva said...

    "ஆமாம்.. படிக்கும்போதே தெரிந்திருக்குமே.. பத்திரிகை ஸ்டைல் என்று..!"

    -அந்த மாதிரி நேரும்போது செய்தி வெளியான தளத்துக்கு ஒரு Credit குடுங்கஜி. 99.9 சதவீத ப்ளாக்கர்ஸ் பண்ற தப்பை உங்களிடம் எதிர்பார்க்காததால் நான் போட்ட கமெண்ட் அது.]]]

    இனிமேல் செஞ்சிருவோம்..!

    [[[ஆமா... நீங்க தமிழன் எக்ஸ்பிரஸ் பார்ட்டியா? நான் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்!'

    -சிவா]]]

    அட ராமா.. அப்போ நீங்க தட்டச்சு செய்வது இன்ஸ்பிகிரிப்ட் முறையிலா..? எனக்கு ஒரு தோஸ்த்து..!

    ReplyDelete
  12. [[[மெளனம் said...

    Science has rendered theology and the existence of God "unnecessary" for our
    understanding of how the universe and humanity came into being, world-renowned physicist Stephen Hawking tells CNN's Larry King. Religion Creates god /science creates RobO_ inspired by the both
    - an ordinary human.]]]

    முருகா.. அர்த்தம் புரியலையே..?

    ReplyDelete
  13. [[[சி.பி.செந்தில்குமார் said...
    அண்ணே, ட்ரைலர் அருமை, நெகடிவ் கமெண்ட்ஸ்க்காக மனசை விட்ராதீங்க.it is aall in the game. எனக்கு பிடித்த வரிகள்.]]]

    ச்சூ.. நமக்கும் நண்பர்தான். அக்கறையுடனும், உரிமையுடனும்தான் சொல்லியிருக்கிறார்..!

    [[[படத்தை தயாரித்தால் மட்டும் போதாது, அதனை முறைப்படி....]]]

    இதுதான் இப்போதைக்கு தமிழ்ச் சினிமாவுலகம் கற்க வேண்டிய பாடம்..!

    ReplyDelete
  14. [[[இரா கோபி said...
    ட்ரைலருக்கும் விமர்சனமா? உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா:)]]]

    ஹி.. ஹி.. ஹி..!

    ReplyDelete
  15. [[[Mutram said...

    ஏன் தமிழ் உலகமே இந்த மாதிரி சினிமா பின்னால் ஏதோ போல் அலைகிறது என்று தெரியவில்லை! எந்திரன் போன்ற மெகா பட்ஜட் திரைபடங்கள் கறுப்பு பண முதலாளிகளுக்குத்தான் உதவப் போகிறது. படம் வருவதற்க்கு முன்பே எத்துனை ஆர்பாட்டம் ? ஏற்கனவே பாடல் வெளியீட்டு விழா என்ற பெயரில் தமிழ் மக்களின் பொன்னான நேரத்தை வீணாக்கி ஏகப்பட்ட பணத்தை பார்த்தாயிற்று. இப்போது டிரெயிலர் வெளியீட்டு விழாவாம்!]]]

    அப்படிப் பார்த்தால் ரேடியோ, நாடகம், கலை நிகழ்ச்சிகள் உட்பட அனைத்துமே நேர விரயம் என்றுதான் பொருள்..!

    [[[இது போன்ற மக்களை தமிழ் மக்கள் ஆதரித்தால் " பசங்க, நடோடிகள், அங்காடித் தெரு..." என்ற படங்கள் இந்த மெகா பட்ஜட் பட சூறாவளியில் சிக்கி காணாமல் போகக் கூடும் ]]]

    நிச்சயம் ஆகாது.. நல்ல கதையம்சமுள்ள படங்கள் ஒருபோதும் இங்கே புறக்கணிக்கப்பட மாட்டாது..!

    ReplyDelete
  16. அண்ணே ட்ரெயிலருக்கே இவ்வளவு நீளமா இடுகை போவுதே?? மெயின் பிக்சருக்கு.. ஒரு நாள் லீவு போட்டுத்தான் படிக்கணும் போலயே?

    ReplyDelete
  17. அன்பர்களே,

    எந்திரன் டிரைலர் பார்தேன். ஒரு குப்பை மாதிரி இருந்தது. ஒன்னு எடுத்தா "sci-fi" படம் எடுக்க வேண்டும். இல்லை, மரத்தை சுத்தி பாட்டு பாடும் படம் எடுக்க வேண்டும். ஏதற்கு ரெண்டையும் கலந்து கட்டி ஒரு குப்பையை 150 கோடியில் மக்கள் தலையில் கட்டி அவன் கோமணத்தை உருவ வேண்டும். (சூரிய குடும்பத்தில் இருந்து வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?)

    சங்கர நா தியாகராஜன்
    நெதர்லாண்ட்ஸ் - கோயம்பத்தூர்.

    ReplyDelete
  18. அண்ணே ட்ரெயிலருக்கே இந்த மாதிரி விமர்சனம் என்றால் படத்துக்கு எப்படி விமர்சனங்கள் இருக்கும்னு ஓரளவுக்குப்
    புரியுது!!!..நன்றி.

    ReplyDelete
  19. தேசிய விருது பெற்ற (கருத்தம்மா படத்தில் போறாளே பொன்னுத்தாயி) 37 வயது பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ணலதா இன்று காலை மரணம் அடைந்தார்.
    அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்....

    ReplyDelete
  20. [[[முகிலன் said...
    அண்ணே ட்ரெயிலருக்கே இவ்வளவு நீளமா இடுகை போவுதே?? மெயின் பிக்சருக்கு.. ஒரு நாள் லீவு போட்டுத்தான் படிக்கணும் போலயே?]]]

    போட்டிருவோம் தம்பி..! ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவைதான..! போட்டு சாய்ச்ச்சிருவோம் எல்லாரையும்..!

    ReplyDelete
  21. [[[tshankar89 said...

    அன்பர்களே,

    எந்திரன் டிரைலர் பார்தேன். ஒரு குப்பை மாதிரி இருந்தது. ஒன்னு எடுத்தா "sci-fi" படம் எடுக்க வேண்டும். இல்லை, மரத்தை சுத்தி பாட்டு பாடும் படம் எடுக்க வேண்டும். ஏதற்கு ரெண்டையும் கலந்து கட்டி ஒரு குப்பையை 150 கோடியில் மக்கள் தலையில் கட்டி அவன் கோமணத்தை உருவ வேண்டும். (சூரிய குடும்பத்தில் இருந்து வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?)

    சங்கர நா தியாகராஜன்
    நெதர்லாண்ட்ஸ் - கோயம்பத்தூர்.]]]

    அதிகமான மக்கள் பார்க்கப் போகிறார்கள் என்பதால்தான் வசூல் தொகை கூடுகிறது..!

    ஒரு புதுமையான முயற்சியை தங்களது சக்திக்குட்பட்ட அளவுக்கு எடுத்துக் காண்பிப்பது ஒன்றும் தவறில்லையே ஸார்..!

    ReplyDelete
  22. [[[Thomas Ruban said...
    அண்ணே ட்ரெயிலருக்கே இந்த மாதிரி விமர்சனம் என்றால் படத்துக்கு எப்படி விமர்சனங்கள் இருக்கும்னு ஓரளவுக்குப் புரியுது!!!..நன்றி.]]]

    சரி.. சரி.. கூல் டவுன் தம்பி..!

    ReplyDelete
  23. [[[Thomas Ruban said...
    தேசிய விருது பெற்ற (கருத்தம்மா படத்தில் போறாளே பொன்னுத்தாயி) 37 வயது பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ணலதா இன்று காலை மரணம் அடைந்தார். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்....]]]

    எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

    ReplyDelete
  24. பலரும் சென்னைத் தமிழைத் தமிழின் இழிந்த வழக்காகக் கருதி விமர்சனமும் பரிகாசமும் செய்வதுண்டு. சமீபத்தில் பாணா காத்தாடி என்னும் படத்துக்குத் தன் வலைப்பக்கத்தில் விமர்சனம் எழுதிய உண்மைத் தமிழன் என்பவர் படத்தில் கூவம் பாஷை நன்றாகக் கையாளப்பட்டிருப்பதாக மெச்சிக்கொள்கிறார். கதாநாயகனாக நடித்த அதர்வா, கூவம் பாஷையிலும் பொளந்துகட்டுகிறாராம்//
    brother unmai tamilan,
    news from kalachuvadu did u read that.

    http://kalachuvadu.com/issue-129/page60.asp

    ReplyDelete
  25. உண்மை தமிழன் சார்....

    பாருங்க... டிரைலருக்கு விமர்சனம் எழுதும் போதே படத்த பத்தி எவ்ளோ வயித்தெரிச்சல் பார்ட்டிங்க கமெண்ட் போடறாங்கன்னு...

    இன்னும் படம் வந்தா, யப்பா... ஜெலுசில் தவிர எந்த மருந்தும் ஃபார்மஸில விக்காது போல இருக்கே..

    மக்களே ..... திருந்துங்கய்யா... எப்போ தான் அடுத்தவன பார்த்து பொறாமை படறத நிறுத்த போறீங்க.. அத என்னிக்கு நிறுத்தறீங்களோ, அன்னிக்கு தான்யா, உங்களுக்கு எல்லாம் வாழ்க்கையில முன்னாடி / முன்னேறி போக முடியும்...

    ReplyDelete
  26. அண்ணே : 6வது ஓட்ட 7 ஆக்கிட்டேன்..........

    ReplyDelete
  27. [[[புரட்சித்தலைவன் said...

    பலரும் சென்னைத் தமிழைத் தமிழின் இழிந்த வழக்காகக் கருதி விமர்சனமும் பரிகாசமும் செய்வதுண்டு. சமீபத்தில் பாணா காத்தாடி என்னும் படத்துக்குத் தன் வலைப்பக்கத்தில் விமர்சனம் எழுதிய உண்மைத் தமிழன் என்பவர் படத்தில் கூவம் பாஷை நன்றாகக் கையாளப்பட்டிருப்பதாக மெச்சிக்கொள்கிறார். கதாநாயகனாக நடித்த அதர்வா, கூவம் பாஷையிலும் பொளந்து கட்டுகிறாராம்//

    brother unmai tamilan, news from kalachuvadu did u read that.
    http://kalachuvadu.com/issue-129/page60.asp

    முன்பே படிச்சிட்டேன் நண்பரே..! தகவலுக்கு நன்றி..

    ReplyDelete
  28. [[[R.Gopi said...

    உண்மை தமிழன் சார் பாருங்க... டிரைலருக்கு விமர்சனம் எழுதும்போதே படத்த பத்தி எவ்ளோ வயித்தெரிச்சல் பார்ட்டிங்க கமெண்ட் போடறாங்கன்னு. இன்னும் படம் வந்தா, யப்பா... ஜெலுசில் தவிர எந்த மருந்தும் ஃபார்மஸில விக்காது போல இருக்கே..

    மக்களே ..... திருந்துங்கய்யா... எப்போதான் அடுத்தவன பார்த்து பொறாமைபடறத நிறுத்த போறீங்க.. அத என்னிக்கு நிறுத்தறீங்களோ, அன்னிக்குதான்யா, உங்களுக்கு எல்லாம் வாழ்க்கையில முன்னாடி / முன்னேறி போக முடியும்...]]]

    இதெல்லாம் சகஜம்தானே.. அவர் சந்திக்காத எதிர்ப்பா..? விடுங்க கோபி..

    நாம சினிமாவை, சினிமாவா மட்டும் பார்ப்போம்..!

    ReplyDelete
  29. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    அண்ணே : 6வது ஓட்ட 7 ஆக்கிட்டேன்..........]]]

    டூ லேட்.. இனிமே ஓட்டுப் போட்டு பிரயோசனமில்லை..! இருந்தாலும் நன்றி..!

    ReplyDelete
  30. [[[சிங்கக்குட்டி said...
    :-)]]]

    -))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  31. அண்ணே ட்ரெயிலருக்கே இவ்வளவு நீளமா இடுகை போவுதே?? மெயின் பிக்சருக்கு.. ஒரு நாள் லீவு போட்டுத்தான் படிக்கணும் போலயே?


    முகிலன் எப்டீங்க. சிரித்து வயிறு பஞ்சர் ஆகி விட்டது.

    விடுங்க தமிழா.... இதெல்லாம் நமக்கு சகஜம் தானே?

    ஆனா எத்தனை பேரும் சொன்னாலும் உங்க ஸ்டைல் மாத்தாம இருக்கிற அந்த தில்லு ரொம்ப புடுச்சுருக்கு.

    ReplyDelete
  32. Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

    by
    TS



    டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

    ReplyDelete