Pages

Wednesday, August 25, 2010

ஆனந்தின் டாக்டர் பட்டம் சர்ச்சை..! அலட்சியமான அதிகார வர்க்கம்..!

25-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


தனது 18-வது வயதில் பத்மஸ்ரீ விருது.. 23-வது வயதிலேயே விளையாட்டுக்கான உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது. 2000-ம் ஆண்டு பத்மபூஷன் விருது.. 2007-ம் ஆண்டு பத்மவிபூஷன் விருது.. 2000ம் ஆண்டில் இருந்து 2002-ம் ஆண்டுவரையிலும் பிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம்.. இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பட்டம்.. பிடே ரேங்கிங்கில் 2800 புள்ளிகளை எடுத்து முதல் ஐவரில் ஒருவராகக் காட்சியளித்த முதல் இந்தியர்.. 15 மாதங்கள் தொடர்ச்சியாக உலகின் நம்பர் ஒன் செஸ் வீரராகத் திகழ்ந்த சாதனை.. என்று எழுதினால் போய்க் கொண்டேயிருக்கும் அளவுக்கு சாதனைகளைப் படைத்திருக்கும் இந்த விஸ்வநாதன் ஆனந்த் என்ற மயிலாடுதுறையில் பிறந்த தமிழனுக்கு நேற்றைக்கு வந்த சோதனை மட்டும் வேறொரு இந்தியனுக்கு வந்திருந்தால் இந்நேரம் இந்தியாவே அலறித் துடித்திருக்கும்.

ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆனந்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முன் வந்திருக்கிறது. அதை ஏற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை ஆனந்த் செய்து வந்திருக்கிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே இது தொடங்கிவிட்டது. தனது செஸ் விளையாட்டிற்காக வருடத்தில் பெரும்பாலான நாட்களை ஸ்பெயினில் கழித்துவரும் ஆனந்தின் பாஸ்போர்ட்டை சோதனை செய்த அதிகாரிகள் டீமுக்கு அவர் இந்தியரா என்று திடீர் சந்தேகம் வந்துவிட்டது. கேள்வி மேல் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஆனந்தும் அதற்குப் பதிலும் சொல்லியிருக்கிறார்.

எல்லாம் முடிந்தது என்ற நிலையில் பட்டமளிப்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு வந்து, பட்டம் வாங்க ஆசையோடு வந்திருக்கும் நிலையில், “இன்னும் எங்களது சந்தேகம் தீரவில்லை.. ஆனந்துக்கு டாக்டர் பட்டம் கொடுக்காதீர்கள்” என்று மத்திய மனித வள அமைச்சகம் ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு தகவல் கொடுத்ததினால் நிகழ்ச்சி கேன்சல். இது ஆனந்திற்கு எவ்வளவு பெரிய அவமானத்தைக் கொடுத்திருக்கும்.?

ஆனாலும் மனிதர் எதையும் அலட்டிக் கொள்ளாமல் தான் பாட்டுக்கு கண்காட்சிப் போட்டியில் காய்களை நகர்த்திக் கொண்டிருந்ததை தொலைக்காட்சியில் பார்த்தபோது, கொஞ்சம் பிரமிப்பாகத்தான் இருந்தது.

இந்திய பாஸ்போர்ட் இல்லாத ஒருவர் வெளிநாட்டிற்குப் போயிருக்கவே முடியாது. இது முதல் விஷயம்.. வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்தியக் குடியுரிமையை ரத்து செய்து கொண்டவர் மறுபடியும் இந்தியாவுக்குள் கால் வைப்பதும் தூதரக அனுமதியில்லாமல் முடியாத விஷயம்.. இது இரண்டுமே ஆனந்தின் விஷயத்தில் தெளிவாக இருக்கும்போது, இதைக்கூட சோதிக்கத் தெரியாதவர்களையெல்லாம் அதிகாரிகளாக வைத்திருக்கும் இந்த அரசியல் அமைப்பியல் நமக்குத் தேவையா..?

ஆனந்த் ஸ்பெயினில் குடியேறியிருப்பது செஸ் விளையாட்டில் மேலும், மேலும் வளர்ச்சியை அடைவதற்காக.. அந்த வளர்ச்சியினால் அதிகம் பெருமையடப்போவது யார் இந்தியாதான். எந்த ஒரு போட்டியிலும் பக்கத்தில் மூவர்ணக் கொடியில்லாமல் ஆனந்த் விளையாடி நான் பார்த்ததில்லை. இந்தியாவின் சார்பாகத்தான் அத்தனை உலகப் போட்டிகளிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார். அப்படியிருக்கும்போது இந்த முட்டாள்தனமான அதிகாரிகளுக்கு எப்படி இந்த சந்தேகம் எழுந்திருக்க முடியும்..? எதனால் வந்திருக்கிறது..?

அப்படியே வந்தாலும் தங்களது மேல் மட்டத்திற்கு விஷயத்தைக் கொண்டு சென்று முடித்திருக்க வேண்டாமா..? இந்தப் பிரச்சினையை ஏன் இரண்டு வருடங்களாக ஜவ்வாக இழுத்தார்கள்..? தெரியவில்லையெனில் விளையாட்டுத் துறை அமைச்சகத்தை அணுகியிருக்கலாமே.. அவர்கள் சொல்லியிருப்பார்களே.. எதுவுமே செய்யத் தெரியாத.. யோசிக்கத் தெரியாத இந்த அதிகார வர்க்கம்தான் டெல்லியை ஆண்டு கொண்டிருக்கிறது போலும்..

இன்றைக்கு எல்லாம் முடிந்து கருமாரி கொண்டாடிய பின்பு வெளிச்சத்துக்கு வருகிறார் மத்திய மனித வளத் துறை அமைச்சர் கபில்சிபல். ஆனந்திடம் தொலைபேசியில் பேசி தான் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும், ஆனந்த் அந்த விருதைப் பெற ஒத்துக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் இந்த முட்டாள்தனமான பிரச்சினையைக் கிளப்பிய அதிகாரிகளை என்ன செய்யப் போகிறார் என்பதை மட்டும் சொல்லவில்லை.

அநேகமாக அதிக முறை மன்னிப்பு கேட்டிருக்கும் ஒரே கேபினட் அமைச்சர் இவராகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். மன்னிப்பு கேட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா..? இப்போது மத்திய அமைச்சராகிவிட்டதால் இவர் ஒரு வக்கீலா என்று யாராவது நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் இவருக்கு தார்மீகக் கோபம்கூட வராதா.. என்ன..?

இது பற்றிய செய்திகள் வெளியில் வந்தால் நமக்குத்தானே கேவலம் என்றுகூட அந்த அதிகாரிகள் நினைக்கவில்லையெனில், நானெல்லாம் இந்தியன் என்று சொல்லிக் கொள்வதற்கே மிகவும் வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன்.. விரும்பவும் இல்லை..

ஆனந்த்ஜி... தயவு செய்து அந்த விருதை வாங்கிக் கொள்ளாதீர்கள். அது வெட்கக்கேடானது..! 

75 comments:

  1. என்னத்தண்ணே... சொல்லுறது??! :( :(

    நாளைக்கு நான் இந்தியாவுக்குள்ள வந்தாலும் இந்தப் பிரச்சனை வரலாம்.

    எதுக்கும் ரெடியா இருந்துக்கறேன்.

    ReplyDelete
  2. Sir,

    I'm agreeing with u

    Our govt is not able to felicitate our players

    but they are ready to insult our players.

    intha unmayellam neenga sollithan theriyuthu

    nan francela iruken .

    ithellam padukumbothu appadiye oru gun eduthu ovvoru politician suttu kollanaum pola iruku sir

    Really sir
    avvalo kobam

    ANandh Franceku vanthu irunthar
    avar Spain la thangi irunthalum avaroda ovvoru asaivlayum INDIAN appadithan kanbicharu

    avara poi ippadi insult pannitangaley

    ada kanraviye

    manasey kashtama iruku

    soory tamil type panna en software accept panna matenguthu sir

    ReplyDelete
  3. sir

    innoru vishayatha solla maranthuten

    SONIA GANDHI ya mattum namba congress thalaivaragal (appainu vera solli tholayanuma !!!!! ) thanai petra thayavida romba mathipa SONIA THAI appadinu solranga

    avanga motha INDIANa appadinu mothalal KAPIL SIBAlla visarika solunga

    enna kodumada sami
    italy nationality ellam indiala koothadikuthu

    oru mayavaruthukarar avaruku ippadi oru nilamaya ???

    irunthalum nan konjam jakirathaya irukanum

    Ippaye ennoda indian passport oru 10 copy xerox eduthu vachikiren

    ReplyDelete
  4. /ஆனந்த்ஜி... /
    அவரு ஜீயா? மயிலாடுதுறைன்னு சொன்னீங்களே முருகா

    ReplyDelete
  5. அரசு அதிகாரிகள் எதையும் நேராகப் பார்க்க மாட்டார்கள். அவர்களின் பயிற்சி முறை அப்படி. ஒரு பென்சனர் உயிரோடு இருக்கிறார் என்று நேரில் போய்ச்சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த பென்சனர் தன் கைப்பட நான் உயிரோடு இருக்கிறேன் என்று எழுதி அதை ஒரு ஆபீசர் ஒப்புதல் கையொப்பம் போட்டால்தான் அவர் உயிரோடு இருக்கிறார் என்று ஒப்புக்கொள்வார்கள்.

    ReplyDelete
  6. //ஆனந்த்ஜி... தயவு செய்து அந்த விருதை வாங்கிக் கொள்ளாதீர்கள். அது வெட்கக்கேடானது..!//

    வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  7. நீங்கள் எழுப்பியுள்ள வினாக்கள் அனைத்தும் சரியானவை. அமைச்சகங்களின் ஒருங்கிணைப்புஇந்தளவு இருக்கிறது...

    ஆனந்த் எங்கள் வூரை (மயிலாடுதுறையை) சேர்ந்தவர் என்பது எனக்கு புது தகவல்... நன்றி...

    ReplyDelete
  8. வணக்கம். ஆனந்த் இந்த விருதை மறுத்தாக செய்தி. ஆனால் கபில் சிபல், "ஆனந்த் இந்த விருதை புறக்கணிக்கவில்லை. மற்றொரு நாளில் பெற்றுக் கொள்வார்" என்று பேட்டி அளித்துள்ளார். எது உண்மை என்று புரியவில்லை.

    இந்த நாட்டில் அலட்சியம் என்பது எவ்வளவு தூரம் இருக்கிறது பாருங்கள்.

    ReplyDelete
  9. ஆனந்த் ஒரு தமிழனாக இருப்பதால் வட இந்திய நாய்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை,இப்ப புரியுதா...?தமிழனுக்கும்,இந்தியனுக்கும் உள்ள வித்தியாசத்தை...

    ReplyDelete
  10. \\சேட்டைக்காரன் said...

    //ஆனந்த்ஜி... தயவு செய்து அந்த விருதை வாங்கிக் கொள்ளாதீர்கள். அது வெட்கக்கேடானது..!//


    வழிமொழிகிறேன்!\\

    நானும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  11. //எந்த ஒரு போட்டியிலும் பக்கத்தில் மூவர்ணக் கொடியில்லாமல் ஆனந்த் விளையாடி நான் பார்த்ததில்லை//

    உண்மை!

    //ஆனந்த்ஜி... தயவு செய்து அந்த விருதை வாங்கிக் கொள்ளாதீர்கள். அது வெட்கக்கேடானது..!//

    வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  12. இதிலும் தமிழன் இந்தியன் பிரச்சனையா? ஒரு அதிகாரி செய்ததற்கு எல்லா வட இந்தியனுகளும் பொறுப்பா? இப்படித்தான் ரந்திப் போட்ட நோ-பாலின் போது, எல்லா சிங்களவனும் இப்படித்தான் என எழுதி ஈழப்பதிவர்களிடம் பல்பு வாங்கினார்கள் நம்மாட்கள்.

    இப்போதுகூட சக இந்தியர்கள்தான் ஆனந்தின் திறமையை மதித்து டாக்டர் பட்டம் தர முன்வந்தார்கள். ஜெயலலிதா,விஜய்,சங்கருக்கெல்லாம்பட்டம் தந்த தமிழ்நாட்டு பல்கலைகழகங்களுக்கு இது தோன்றவில்லை!தமிழன் என சொல்லவே கேவலமாய் இல்லையா?

    ReplyDelete
  13. என்னங்க நீங்க புரியாம பேசறீங்க.. ஆனந்த என்ன டாக்டர் விஜய் அளவுக்கு ஏதாவது சாதனை செஞ்சிருக்காரா? சும்மா எதோ இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறேன்னு செஸ் ஆடறாரு.. இதுக்கெல்லாம் போய் யாரவது டாக்டர் பட்டம் குடுப்பாங்களா.. இதே ஒரு 2 படம் நடிச்சிருந்தா யோசிக்கலாம்..

    ReplyDelete
  14. உருப்படியான பதிவு... நீங்களாவது இது குறித்து எழுதி (பிரபல) பதிவர்களில் கொஞ்சமாவது சமூக பொறுப்பு உள்ளவர் என நிருபித்து உள்ளீர்கள்....

    நீங்க எழுதின பிட்டு பட விமர்சன பதிவுகளை விட இந்த பதிவு சிறப்பாக உள்ளது....

    ReplyDelete
  15. சரியா சொல்லியிருக்கீங்க சார், ஆனந்த் கண்டிப்பா இந்த விருத வாங்கிக்கக் கூடாது.

    ReplyDelete
  16. [[[ஹாலிவுட் பாலா said...

    என்னத்தண்ணே... சொல்லுறது??! :( :(

    நாளைக்கு நான் இந்தியாவுக்குள்ள வந்தாலும் இந்தப் பிரச்சனை வரலாம்.
    எதுக்கும் ரெடியா இருந்துக்கறேன்.]]]

    பாலா.. உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்குறேன்னு யார் சொன்னாலும் சுதாரிப்பா இருந்துக்குங்க..!

    ReplyDelete
  17. அருமையான சமூக பொறுப்பு உள்ள பதிவு.

    இந்தியாவில் விளையாட்டுத் துறையின் அவலங்களைச் சொல்லி மாளாது. இங்கு நீங்கள் சிறந்த விளையாட்டு வீரராக, புகழும், பணமும் மரியாதையும் பெற வேண்டுமானால் கிரிக்கெட் வீரராய்த்தான் இருக்க வேண்டும் அல்லது நடிகராக, அரசியல்வாதியாக இருக்க வேண்டும்.

    பகிர்வுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  18. [[[julie said...

    Sir, I'm agreeing with u

    Our govt is not able to felicitate our players. but they are ready to insult our players.

    intha unmayellam neenga sollithan theriyuthu. nan francela iruken .

    ithellam padukumbothu appadiye oru gun eduthu ovvoru politician suttu kollanaum pola iruku sir

    Really sir. avvalo kobam
    ANandh Franceku vanthu irunthar
    avar Spain la thangi irunthalum avaroda ovvoru asaivlayum INDIAN appadithan kanbicharu
    avara poi ippadi insult annitangaley

    ada kanraviye. manasey kashtama iruku.]]]

    நன்றி ஜூலி..

    நம்ம நாட்டைப் பிடிச்ச சாபக்கேடு ஒண்ணு அரசியல்வியாதிகள்ன்னா இன்னொரு பக்கம் இந்தக் கேடு கெட்ட அதிகார வர்க்கம்..!

    தகுதி, திறமை எதுவும் இல்லாம சிபாரிசு மூலமாகவே பதவிக்கு வந்துவிடும் அதிகாரிகள்தான் இது மாதிரியான பெரிய விஷயத்தில் உறுதியான முடிவெடுக்க முடியாமல் முட்டாள்தனம் செய்கிறார்கள்..!

    நடந்தது நமது நாட்டுக்கு அவமானமான விஷயம் என்பதை அதிகார வர்க்கத்தைத் தவிர மற்றவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்..!

    [[[soory tamil type panna en software accept panna matenguthu sir]]]

    உங்களது கணினி என்ன ஆபரேட்டிங் சிஸ்டம்? NHM Writer-ஐ பயன்படுத்துங்கள்.. மிக எளிதாக தட்டச்சு செய்யலாம்..!

    ReplyDelete
  19. டெல்லியில் தொடங்கப்பட இருக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் ஊழல்கள் பிரச்சினையை திசை திருப்ப உருவாக்கப்பட்ட பிரச்சினையாக இருக்குமோ என்ற சந்தேகம்மும் உள்ளது.

    ReplyDelete
  20. [[[julie said...

    sir, innoru vishayatha solla maranthuten.

    SONIA GANDHIya mattum namba congress thalaivaragal(appainu vera solli tholayanuma) thanai petra thayavida romba mathipa SONIA THAI appadinu solranga. avanga motha INDIANa appadinu mothalal KAPIL SIBAlla visarika solunga.

    enna kodumada sami. italy nationality ellam indiala koothadikuthu. oru mayavaruthukarar avaruku ippadi oru nilamaya ???

    irunthalum nan konjam jakirathaya irukanum. Ippaye ennoda indian passport oru 10 copy xerox eduthu vachikiren.]]]

    ஜூலி.. இந்தக் கேள்வியைத்தான் இந்தியா முழுக்க நேத்துல இருந்து கேட்டுக்கிட்டிருக்காங்க..!

    சோனியாவுக்கு ஒரு நீதி.. ஆனந்துக்கு ஒரு நீதியான்னு..!?

    இதாங்க நம்ம இந்தியா..!

    ReplyDelete
  21. ஆனந்த்ஜி அந்த விருதைப்பெற்றுக்கொள்ளவில்லை.

    சந்தோசமான சமாச்சாரம்.

    ஆனந்த்ஜி ஸ்பெயின் நாட்டில் பலவாண்டுகளாக வாசம் செய்கிறார். ஒருவேளை அங்கேயே செட்டில் ஆகி விட்டாரோ? என ஐயம் வரக்கூடாதா? அவ்வையத்தை போக்க விசாரிக்கக்கூடாதா?

    காமன்வெல்த் கேம்சில் இந்தியா சார்பாக டென்னிஸ் விளையாட சோப்ரா என்ற பெண்ணுக்கும் அமிர்தராஜ் பையனுக்கு அனுமதி மறுக்குப்பட்டிருக்கிறது.

    ஏன்?

    சேம் மேட்டர்.

    அவர்கள் பலவாண்டுகளாக அமெரிக்க வாசம். அவர்கள் அங்கேயே குடியுரிமை பெற்றுவிட்டார்களா என்ற ஐயம் எழ, பின்னர் விசாரிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டது.

    ஆனால், அந்த ஐயம் கூட எழக்கூடாது என்கிறார்.

    ஆனந்திஜிக்கு ஒரு சட்டம். திரு அமிர்தராஜ் பைய்னுக்கு ஒரு சட்டம்.

    என்ன நாடப்பா இது?

    ReplyDelete
  22. [[[வில்லங்கம் விக்னேஷ் said...

    /ஆனந்த்ஜி... /

    அவரு ஜீயா? மயிலாடுதுறைன்னு சொன்னீங்களே முருகா]]]

    ச்சும்மா.. ஒரு மரியாதைக்கு ஜி போட்டேன் விக்னேஷ்..!

    ReplyDelete
  23. [[[DrPKandaswamyPhD said...

    அரசு அதிகாரிகள் எதையும் நேராகப் பார்க்க மாட்டார்கள். அவர்களின் பயிற்சி முறை அப்படி. ஒரு பென்சனர் உயிரோடு இருக்கிறார் என்று நேரில் போய்ச் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த பென்சனர் தன் கைப்பட நான் உயிரோடு இருக்கிறேன் என்று எழுதி அதை ஒரு ஆபீசர் ஒப்புதல் கையொப்பம் போட்டால்தான் அவர் உயிரோடு இருக்கிறார் என்று ஒப்புக் கொள்வார்கள்.]]]

    பென்சனர் நேரில் வந்து சென்றதை உறுதிப்படுத்தத்தான் கையெழுத்து கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன்..!

    இது சிவப்பு ரிப்பன் செய்கின்ற வேலை ஸார்.. அடிப்படையையே மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..!

    ReplyDelete
  24. [[[சேட்டைக்காரன் said...

    //ஆனந்த்ஜி... தயவு செய்து அந்த விருதை வாங்கிக் கொள்ளாதீர்கள். அது வெட்கக்கேடானது..!//

    வழிமொழிகிறேன்!]]]

    நன்றி சேட்டைக்காரன்..!

    ReplyDelete
  25. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

    நீங்கள் எழுப்பியுள்ள வினாக்கள் அனைத்தும் சரியானவை. அமைச்சகங்களின் ஒருங்கிணைப்பு இந்தளவு இருக்கிறது...

    ஆனந்த் எங்கள் வூரை (மயிலாடுதுறையை) சேர்ந்தவர் என்பது எனக்கு புது தகவல்... நன்றி...]]]

    அதிகாரிகள் வேலை பார்க்கும் லட்சணத்திற்கு இதுவொரு எடுத்துக்காட்டு..!

    ReplyDelete
  26. [[[விஜய்வீரப்பன் சுவாமிநாதன் said...

    வணக்கம். ஆனந்த் இந்த விருதை மறுத்தாக செய்தி. ஆனால் கபில் சிபல், "ஆனந்த் இந்த விருதை புறக்கணிக்கவில்லை. மற்றொரு நாளில் பெற்றுக் கொள்வார்" என்று பேட்டி அளித்துள்ளார். எது உண்மை என்று புரியவில்லை.]]]

    ஆனந்த், நேற்று இரவு வெளியி்ட்ட ஒரு அறிக்கையில் இந்த விருது தனக்கு வேண்டாம் என்று அறிவித்துள்ளார்..!

    ReplyDelete
  27. [[[ஜெரி ஈசானந்தன். said...
    ஆனந்த் ஒரு தமிழனாக இருப்பதால் வட இந்திய நாய்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, இப்ப புரியுதா...? தமிழனுக்கும், இந்தியனுக்கும் உள்ள வித்தியாசத்தை...]]]

    இந்தப் பேதம் அடிப்படை காரணமாக இருக்காது என்று நினைக்கிறேன்..! மறைமுகமாக நீயா, நானா பார்த்துவிடுவோம் என்று நினைத்திருக்கிறார்கள்..!

    ReplyDelete
  28. [[[R Gopi said...

    \\சேட்டைக்காரன் said...

    //ஆனந்த்ஜி... தயவு செய்து அந்த விருதை வாங்கிக் கொள்ளாதீர்கள். அது வெட்கக்கேடானது..!//


    வழிமொழிகிறேன்!\\

    நானும் வழிமொழிகிறேன்.]]]

    நன்றி கோபிஜி..!

    ReplyDelete
  29. [[[thenali said...

    இதிலும் தமிழன் இந்தியன் பிரச்சனையா? ஒரு அதிகாரி செய்ததற்கு எல்லா வட இந்தியனுகளும் பொறுப்பா? இப்படித்தான் ரந்திப் போட்ட நோ-பாலின் போது, எல்லா சிங்களவனும் இப்படித்தான் என எழுதி ஈழப் பதிவர்களிடம் பல்பு வாங்கினார்கள் நம்மாட்கள்.]]]

    அதற்காகச் சொல்லவில்லை.. இப்படியொரு நிலைமை கங்குலிக்கோ, கபில்தேவிற்கோ நடந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்நேரம் அந்தந்த மாநில அரசுகளே களத்தில் குதித்து நியாயம் கேட்டு மத்திய அரசின் சட்டையைப் பிடித்திருப்பார்கள்..!

    [[[இப்போதுகூட சக இந்தியர்கள்தான் ஆனந்தின் திறமையை மதித்து டாக்டர் பட்டம் தர முன் வந்தார்கள்.]]]

    ஆனால் தருவதற்கு முட்டுக்கட்டை போட்டது யார் ஸார்..? அதுவும் இந்தியர்கள்தானே..?

    [[[ஜெயலலிதா, விஜய், சங்கருக்கெல்லாம் பட்டம் தந்த தமிழ்நாட்டு பல்கலைகழகங்களுக்கு இது தோன்றவில்லை! தமிழன் என சொல்லவே கேவலமாய் இல்லையா?]]]

    கேவலமாய்த்தான் இருக்கிறது.. வேறென்ன செய்ய..?

    ReplyDelete
  30. [[[ரவிச்சந்திரன் said...

    //எந்த ஒரு போட்டியிலும் பக்கத்தில் மூவர்ணக் கொடியில்லாமல் ஆனந்த் விளையாடி நான் பார்த்ததில்லை//

    உண்மை!

    //ஆனந்த்ஜி... தயவு செய்து அந்த விருதை வாங்கிக் கொள்ளாதீர்கள். அது வெட்கக்கேடானது..!//

    வழி மொழிகிறேன்.]]]

    கை கொடுத்தமைக்கு மிக்க நன்றி ரவிச்சந்திரன்..

    ReplyDelete
  31. [[[ACE !! said...
    என்னங்க நீங்க புரியாம பேசறீங்க.. ஆனந்த என்ன டாக்டர் விஜய் அளவுக்கு ஏதாவது சாதனை செஞ்சிருக்காரா? சும்மா எதோ இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறேன்னு செஸ் ஆடறாரு.. இதுக்கெல்லாம் போய் யாரவது டாக்டர் பட்டம் குடுப்பாங்களா.. இதே ஒரு 2 படம் நடிச்சிருந்தா யோசிக்கலாம்..]]]

    ஹி.. ஹி.. இது நமது தனியார் பல்கலைக்கழகங்களின் லட்சணம்..!

    ReplyDelete
  32. [[[sivakasi maappillai said...
    உருப்படியான பதிவு. நீங்களாவது இது குறித்து எழுதி (பிரபல) பதிவர்களில் கொஞ்சமாவது சமூக பொறுப்பு உள்ளவர் என நிருபித்து உள்ளீர்கள்.]]]

    அண்ணே.. இன்னிக்குப் பாருங்க.. இன்னும் நிறைய பேர் எழுதுவாங்க..!

    [[[நீங்க எழுதின பிட்டு பட விமர்சன பதிவுகளைவிட இந்த பதிவு சிறப்பாக உள்ளது.]]]

    அடப்பாவிகளா.. அப்போ என்னை பிட்டுப் பட பதிவர்ன்னே நினைச்சுட்டீங்களா..? கொடுமை..!

    ReplyDelete
  33. [[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
    சரியா சொல்லியிருக்கீங்க சார், ஆனந்த் கண்டிப்பா இந்த விருத வாங்கிக்கக் கூடாது.]]]

    நன்றி ராமசாமி ஸார்.. ஒரு சின்ன விண்ணப்பம்..

    உங்களுடைய பெயரின் முன்னால் இருக்கும் அந்தப் பன்னிக்குட்டி என்பதை நீக்கிவிடக் கூடாதா..? அழைப்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது..!

    ReplyDelete
  34. [[[Thomas Ruban said...

    அருமையான சமூக பொறுப்பு உள்ள பதிவு. இந்தியாவில் விளையாட்டுத் துறையின் அவலங்களைச் சொல்லி மாளாது. இங்கு நீங்கள் சிறந்த விளையாட்டு வீரராக, புகழும், பணமும் மரியாதையும் பெற வேண்டுமானால் கிரிக்கெட் வீரராய்த்தான் இருக்க வேண்டும் அல்லது நடிகராக, அரசியல்வாதியாக இருக்க வேண்டும்.

    பகிர்வுக்கு நன்றி சார்.]]]

    கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுக்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் மவுசு ஒரு பக்கம்..!

    இன்னொரு பக்கம் அதிகாரிகளின் திருவிளையாடல்கள்.. அவர்களையும் சமாளித்தால் மட்டுமே இந்தியாவில் குப்பைக் கொட்ட முடியும்..! இதைத்தான் இந்தச் சம்பவம் நிரூபித்திருக்கிறது..!

    ReplyDelete
  35. [[[Thomas Ruban said...
    டெல்லியில் தொடங்கப்பட இருக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் ஊழல்கள் பிரச்சினையை திசை திருப்ப உருவாக்கப்பட்ட பிரச்சினையாக இருக்குமோ என்ற சந்தேகமும் உள்ளது.]]]

    அப்படியெல்லாம் இருக்காது..! காமன்வெல்த் போட்டியே ஊழலின் சாம்ராஜ்யமாக உள்ளது.. அந்தக் கண்றாவியோடு இந்தக் கொடூரத்தையும் சேர்த்தே கேட்க வேண்டிய நிலைமை நமக்கு..?!!

    ReplyDelete
  36. ஆனந்த் அந்த கவுரவ டாக்டர் பட்டம் பெற திட்டவட்டமாக மறுத்துள்ளார் அவருக்கு(மானமுள்ள தமிழன்) நம்முடைய வாழ்த்துகள்...

    ReplyDelete
  37. [[[கள்ளபிரான் said...

    ஆனந்த்ஜி அந்த விருதைப் பெற்றுக் கொள்ளவில்லை. சந்தோசமான சமாச்சாரம்.

    ஆனந்த்ஜி ஸ்பெயின் நாட்டில் பலவாண்டுகளாக வாசம் செய்கிறார். ஒருவேளை அங்கேயே செட்டில் ஆகிவிட்டாரோ? என ஐயம் வரக்கூடாதா? அவ்வையத்தை போக்க விசாரிக்கக் கூடாதா?

    காமன்வெல்த் கேம்சில் இந்தியா சார்பாக டென்னிஸ் விளையாட சோப்ரா என்ற பெண்ணுக்கும் அமிர்தராஜ் பையனுக்கு அனுமதி மறுக்குப்பட்டிருக்கிறது. ஏன்? சேம் மேட்டர்.

    அவர்கள் பலவாண்டுகளாக அமெரிக்க வாசம். அவர்கள் அங்கேயே குடியுரிமை பெற்று விட்டார்களா என்ற ஐயம் எழ, பின்னர் விசாரிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்த ஐயம் கூட எழக் கூடாது என்கிறார்.

    ஆனந்திஜிக்கு ஒரு சட்டம். திரு அமிர்தராஜ் பைய்னுக்கு ஒரு சட்டம்.

    என்ன நாடப்பா இது?]]]

    கள்ளபிரான் ஸார்..!

    நாட்டு நடப்புகளை நன்கு அறிந்தவர்கள்தான் இது போன்று முடிவெடுக்கக் கூடிய இடங்களில் அதிகாரிகளாக இருக்க வேண்டும். அந்த அளவுக்கு அறிவுள்ளவர்கள் இருந்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது..

    இது இரண்டு வருடங்களாக பைல்களில் நடைபெற்ற சண்டையாக மாறியிருக்கிறது..! ஆனந்த் தன்னிடம் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் மிகச் சரியாகப் பதிலை அனுப்பியிருக்கிறார். அந்தப் பதிலில் இவர்களுக்கு சந்தேகம் இருந்தால் அப்போதே சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடம் தனது முடிவைச் சொல்லியிருக்க வேண்டும்..

    ஆற, அமர பட்டமளிப்பு விழாவுக்கு தேதி குறித்து, விழா ஏற்பாடுகளை நடத்திய பின்பு விழாவன்று நிறுத்து என்று சொன்னால் இந்த அதிகாரிகள் என்ன லட்சணத்தில் வேலை செய்திருக்கிறார்கள் என்று கேட்க வேண்டாமா..?

    அமிர்தராஜ் பையன் விஷயம்.. எனக்கும் தெரியும்.. அந்தப் பையன் அமெரிக்க குடியுரிமை பெற்றவன் என்பதும் தெரியும்.. எனக்குத் தெரிந்த அந்த உண்மை அதிகாரிகளுக்கும் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டுமே..!

    இதற்கெல்லாம் ஒரே வழி.. விதிமுறைகள், நிபந்தனைகளை வெளிப்படையாக்கி, அனைவருக்கும் பொதுவானதாக வைத்திருக்க வேண்டும்..!

    ReplyDelete
  38. [[[Thomas Ruban said...
    ஆனந்த் அந்த கவுரவ டாக்டர் பட்டம் பெற திட்டவட்டமாக மறுத்துள்ளார் அவருக்கு(மானமுள்ள தமிழன்) நம்முடைய வாழ்த்துகள்.]]]

    அந்த அறிக்கையைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகுதான் நான் இந்த இடுகையை எழுதினேன் தாமஸ்..!

    ReplyDelete
  39. ||ஆனாலும் மனிதர் எதையும் அலட்டிக் கொள்ளாமல்||

    தன் திறமையால் உயரத்திற்கு போன மனிதனுக்கு, இந்த டாக்டர் பட்டமெல்லாம் ஜுஜூபிங்க

    இந்த டாக்டர் பட்டத்த வச்சு கடல பொறி கூட வாங்க முடியுமான்னு தெரியல...

    ReplyDelete
  40. //அண்ணே.. இன்னிக்குப் பாருங்க.. இன்னும் நிறைய பேர் எழுதுவாங்க..! //

    இல்லை த‌மிழா... நான் ரெகுல‌ராக‌ செல்லும் வ‌லைப்பூக்க‌ளில் நீங்க‌ள் ம‌ட்டுமே இது குறித்து எழுதியுள்ளீர்க‌ள்....


    //அடப்பாவிகளா.. அப்போ என்னை பிட்டுப் பட பதிவர்ன்னே நினைச்சுட்டீங்களா..? கொடுமை..!//

    ஹ‌ல்லோ... நான் என்ன‌ பிட்டு ப‌ட‌ இய‌க்குன‌ர் இல்ல நடிகர் என்றா சொன்னேன்??... ப‌திவ‌ர் என்றுதானே சொன்னேன்...

    ReplyDelete
  41. \\அப்படியே வந்தாலும் தங்களது மேல் மட்டத்திற்கு விஷயத்தைக் கொண்டு சென்று முடித்திருக்க வேண்டாமா..? இந்தப் பிரச்சினையை ஏன் இரண்டு வருடங்களாக ஜவ்வாக இழுத்தார்கள்..? தெரியவில்லையெனில் விளையாட்டுத் துறை அமைச்சகத்தை அணுகியிருக்கலாமே.. அவர்கள் சொல்லியிருப்பார்களே..\\

    கடமைக்கு வேலை செய்யும் அந்த அநியாய ஆபீஸர்க்கு எப்படி வேலை கொடுத்தானுங்க. ஆனந்த் பத்தி தெரியலை, அவர் இந்தியன் என்பது தெரியலை. அவரால நம்ம நாட்டுக்கு பெருமை என்பது தெரியலை. இதல்லாம் தெரியாம சிபாரிசுல வேலைக்கு தான் வந்து தொலைச்சுட்டானுங்க. அப்படியே சந்தேகம் வந்தாலும் கேட்டு தெரிஞ்சு பின்னே நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

    அதை எல்லாம் விடுப்பா அதே ஆனந்து கூட இன்னும் ஒருத்தர் கவுரவ டாக்டர் பட்டம் வாங்க இருந்தாரே வாங்கினாரே நேத்து அவர் மாண்போர்டு ஆங்கிலேயர் தானே. இந்தியர் இல்லியே! என்னவோ போங்க! என்னால முடிஞ்சது ஒரு + ஓட்டு இந்த பதிவுக்கு!

    ReplyDelete
  42. வேற எதாவது உள்குத்தா இருக்குமோ?

    ஆனந்த் அப்படிப்பட்ட காண்ட்ராவர்ஸியலான ஆளும் இல்லையே?

    அந்த அதிகாரிகளை கோயில் கட்டி கும்பிடனும்.

    ஹீம்...

    டாக்டர் பட்டம் கொடுப்பது ஒரு பல்கலைக்கழகம்.

    பிரச்சினையை செய்தது அரசு.

    ReplyDelete
  43. இந்தியன் , தமிழன் என்ற பிரச்சனை இருப்பது உண்மைதான் . ஆனால் இந்த விவகாரத்தில் அதிகாரவர்கத்தின் சாக்கடை புத்திதான் தெரிகிறது. கபில்தேவை ஒருமுறை அசிங்கபடுத்தினார்கள் . இதில் எல்லாம் அவர்கள் பாரபட்சம் பார்ப்பதில்லை . கண்டிக்கதக்க போக்கு .

    பிட்டு பட விமர்சகர் என அண்ணனை பாராட்டிய சிவகாசிகாரருக்கு நன்றி. பிட்டு படத்தில் நாம் எல்லாம் ஆக்சனை மட்டும்தான் பார்ப்போம் . அண்ணன் அதில் கூட இயக்கம் , இசை , முகபாவனை , கேமிரா அன அலசும் அழகு அவருக்கு மட்டுமே உரியது. விலை விமர்சனத்தை விரைவில் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  44. அண்ணனை இயக்குனர் அல்லது நடிகர் என்றா சொன்னேன் என கேலி செய்யும் சிவகாசிமாப்பிள்ளைக்கு கண்டனங்கள் . அண்ணனுக்கு இந்த மாதிரியான படங்களை இயக்கும் திறனும் உண்டு . நடிக்க தேவையான பர்சனாலிட்டியும் உண்டு . தேவையில்லாமல் சீண்ட வேண்டாம் என கேட்டுகொள்கிறேன்

    ReplyDelete
  45. anne ithu sollave naa koozum oru visayam inge sonnal sirikkiraargal. ennadaa oru selabritikke intha nilai athuvum naattai represent pannuravarukku saamaaniyanin nilamai romba mosam.

    avar aethaavathu padaththula nadiththirunthaal oththuk kondiruppaargaloo.....

    ReplyDelete
  46. // அண்ணனுக்கு இந்த மாதிரியான படங்களை இயக்கும் திறனும் உண்டு . நடிக்க தேவையான பர்சனாலிட்டியும் உண்டு . தேவையில்லாமல் சீண்ட வேண்டாம் என கேட்டுகொள்கிறேன்//

    தமிழா... தமிழா... கண்கள் கலங்காதே....

    ReplyDelete
  47. //
    ஜெரி ஈசானந்தன். said...
    ஆனந்த் ஒரு தமிழனாக இருப்பதால் வட இந்திய நாய்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை,இப்ப புரியுதா...?தமிழனுக்கும்,இந்தியனுக்கும் உள்ள வித்தியாசத்தை...
    //

    வட இந்தியர்களுக்கு மட்டுமல்ல... தமிழன் தமிழனாக இருப்பது தமிழனாலேயே பொறுத்து கொள்ள முடியாத விஷயம். இதில் ஏன் மற்றவர்களை குறை சொல்ல வேண்டும்

    ReplyDelete
  48. Anand doesn't need any appreciations from these cheap bastards(bloody indian minister)He is wellknown by the world as a Grand Master of Chess.
    As said by Unmai Thamizhan,he should not accept the award,,But Anand is a polite and gentleman who doesn't care these kind of cheap publicities

    ReplyDelete
  49. [[[ஈரோடு கதிர் said...

    ||ஆனாலும் மனிதர் எதையும் அலட்டிக் கொள்ளாமல்||

    தன் திறமையால் உயரத்திற்கு போன மனிதனுக்கு, இந்த டாக்டர் பட்டமெல்லாம் ஜுஜூபிங்க... இந்த டாக்டர் பட்டத்த வச்சு கடல பொறிகூட வாங்க முடியுமான்னு தெரியல.]]]

    பத்ம விருதுகளும் அப்படித்தானே கதிர்..? ஆனால் கொடுப்பதையும் ஒழுங்காக கொடுத்துத் தொலையக் கூடாதா..?

    ReplyDelete
  50. [[[sivakasi maappillai said...

    //அண்ணே.. இன்னிக்குப் பாருங்க.. இன்னும் நிறைய பேர் எழுதுவாங்க..! //

    இல்லை த‌மிழா... நான் ரெகுல‌ராக‌ செல்லும் வ‌லைப்பூக்க‌ளில் நீங்க‌ள் ம‌ட்டுமே இது குறித்து எழுதியுள்ளீர்க‌ள்.]]]

    அப்படியா..?

    //அடப்பாவிகளா.. அப்போ என்னை பிட்டுப் பட பதிவர்ன்னே நினைச்சுட்டீங்களா..? கொடுமை..!//

    ஹ‌ல்லோ நான் என்ன‌ பிட்டு ப‌ட‌ இய‌க்குன‌ர் இல்ல நடிகர் என்றா சொன்னேன்?? ப‌திவ‌ர் என்றுதானே சொன்னேன்.]]]

    ம்ஹும்.. இது எனக்குத் தேவைதான்..!

    ReplyDelete
  51. [[[அபி அப்பா said...

    \\அப்படியே வந்தாலும் தங்களது மேல் மட்டத்திற்கு விஷயத்தைக் கொண்டு சென்று முடித்திருக்க வேண்டாமா..? இந்தப் பிரச்சினையை ஏன் இரண்டு வருடங்களாக ஜவ்வாக இழுத்தார்கள்..? தெரியவில்லையெனில் விளையாட்டுத் துறை அமைச்சகத்தை அணுகியிருக்கலாமே.. அவர்கள் சொல்லியிருப்பார்களே..\\

    கடமைக்கு வேலை செய்யும் அந்த அநியாய ஆபீஸர்க்கு எப்படி வேலை கொடுத்தானுங்க. ஆனந்த் பத்தி தெரியலை, அவர் இந்தியன் என்பது தெரியலை. அவரால நம்ம நாட்டுக்கு பெருமை என்பது தெரியலை. இதல்லாம் தெரியாம சிபாரிசுல வேலைக்கு தான் வந்து தொலைச்சுட்டானுங்க. அப்படியே சந்தேகம் வந்தாலும் கேட்டு தெரிஞ்சு பின்னே நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

    அதை எல்லாம் விடுப்பா.. அதே ஆனந்துகூட இன்னும் ஒருத்தர் கவுரவ டாக்டர் பட்டம் வாங்க இருந்தாரே வாங்கினாரே நேத்து அவர் மாண்போர்டு ஆங்கிலேயர்தானே. இந்தியர் இல்லியே! என்னவோ போங்க! என்னால முடிஞ்சது ஒரு + ஓட்டு இந்த பதிவுக்கு!]]]

    வெளிநாட்டவருக்கு ஒரு நீதி.. உள்நாட்டவருக்கு வேறோரு நீதியா..?

    ஓட்டுப் போட்டதுக்கு நன்றி..!

    ReplyDelete
  52. [[[யாசவி said...

    வேற எதாவது உள் குத்தா இருக்குமோ? ஆனந்த் அப்படிப்பட்ட காண்ட்ராவர்ஸியலான ஆளும் இல்லையே? அந்த அதிகாரிகளை கோயில் கட்டி கும்பிடனும்.
    ஹீம்... டாக்டர் பட்டம் கொடுப்பது ஒரு பல்கலைக்கழகம். பிரச்சினையை செய்தது அரசு.]]]

    அரசு நடைமுறைச் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதற்கு இந்த விவகாரமும் ஒரு காரணமாக இருக்கிறது..!

    ReplyDelete
  53. [[[பார்வையாளன் said...

    பிட்டு பட விமர்சகர் என அண்ணனை பாராட்டிய சிவகாசிகாரருக்கு நன்றி. பிட்டு படத்தில் நாம் எல்லாம் ஆக்சனை மட்டும்தான் பார்ப்போம் . அண்ணன் அதில் கூட இயக்கம், இசை, முகபாவனை, கேமிரா அன அலசும் அழகு அவருக்கு மட்டுமே உரியது. விலை விமர்சனத்தை விரைவில் எதிர்பார்க்கிறோம்.]]]

    விலையா..? அப்படீன்னு ஒரு படம் வருதா என்ன..?

    ReplyDelete
  54. [[[பார்வையாளன் said...
    அண்ணனை இயக்குனர் அல்லது நடிகர் என்றா சொன்னேன் என கேலி செய்யும் சிவகாசி மாப்பிள்ளைக்கு கண்டனங்கள்.

    அண்ணனுக்கு இந்த மாதிரியான படங்களை இயக்கும் திறனும் உண்டு. நடிக்க தேவையான பர்சனாலிட்டியும் உண்டு. தேவையில்லாமல் சீண்ட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.]]]

    அறுக்க மாட்டாதாவனுக்கு ஆயிரத்தெட்டு அருவாளாம்..

    நான் என்னைத்தான் சொன்னேன்..

    ReplyDelete
  55. [[[பித்தன் said...

    anne ithu sollave naa koozum oru visayam. inge sonnal sirikkiraargal. ennadaa oru selabritikke intha nilai athuvum naattai represent pannuravarukku saamaaniyanin nilamai romba mosam. avar aethaavathu padaththula nadiththirunthaal oththuk kondiruppaargaloo.]]]

    அவர் வெளிநாட்டில் இருப்பதுதான் பிரச்சினையெனில் அது தொடர்பான சட்டங்களை மாற்ற வேண்டியது அரசின் கடமையல்லவா..?

    அதைவிட்டுவிட்டு விசாரிப்பு என்ன வேண்டிக்கிடக்கு..?

    ReplyDelete
  56. [[[sivakasi maappillai said...
    // அண்ணனுக்கு இந்த மாதிரியான படங்களை இயக்கும் திறனும் உண்டு . நடிக்க தேவையான பர்சனாலிட்டியும் உண்டு . தேவையில்லாமல் சீண்ட வேண்டாம் என கேட்டுகொள்கிறேன்//

    தமிழா... தமிழா... கண்கள் கலங்காதே....]]]

    ஐயையோ.. எனக்கு புல்லரிக்குதே.. என்ன பாசம்.. என்ன பாசம்..? சிவகாசி மாப்பிள்ளை.. சீக்கிரமா உங்களைத் தேடி சிவகாசிக்கு வரேன்..!

    ReplyDelete
  57. [[[sivakasi maappillai said...

    // ஜெரி ஈசானந்தன். said...
    ஆனந்த் ஒரு தமிழனாக இருப்பதால் வட இந்திய நாய்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, இப்ப புரியுதா? தமிழனுக்கும், இந்தியனுக்கும் உள்ள வித்தியாசத்தை...//

    வட இந்தியர்களுக்கு மட்டுமல்ல. தமிழன் தமிழனாக இருப்பது தமிழனாலேயே பொறுத்து கொள்ள முடியாத விஷயம். இதில் ஏன் மற்றவர்களை குறை சொல்ல வேண்டும்.?]]]

    இதுவே ஒரு சீக்கியனுக்கு நடந்திருந்தால் மன்னமோகனசிங் இந்நேரம் ச்சும்மா இருந்திருப்பாரா..?

    ReplyDelete
  58. [[[moulefrite said...

    Anand doesn't need any appreciations from these cheap bastards(bloody indian minister) He is well known by the world as a Grand Master of Chess.

    As said by Unmai Thamizhan, he should not accept the award, But Anand is a polite and gentleman who doesn't care these kind of cheap publicities.]]]

    நானும் ஆனந்தின் இந்தக் குணத்தை வரவேற்கிறேன்.. நல்லது.. இந்த மாதிரி கழிசடைகளிடம் போய் நமது பொன்னான நேரத்தை வீணாக்குவதைவிட அவர் தனது விளையாட்டிலேயே கவனம் செலுத்துவது நல்லது..!

    ReplyDelete
  59. தம்பி!
    ஆனந்தை ஒரு படம் நடிக்கச் சொல்லுங்கோ? மாய்ந்து மாய்ந்து பட்டம் கொடுப்பாங்க!
    இச்செய்தியை பிபிசியில் படித்தும்; தூ நாய்களே! எனத் துப்ப வேண்டும் போல் இருந்தது.ஏன் இந்த அரசியல் வியாதிகள் கற்பூரமும் கழுதையுமாக நம் நாடுகளில் வாழ்கிறார்களோ? தெரியவில்லை.

    ReplyDelete
  60. //நானெல்லாம் இந்தியன் என்று சொல்லிக் கொள்வதற்கே மிகவும் வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன்.. விரும்பவும் இல்லை..//

    அதனால்தான் நான் என்னை எப்பவும் ஒரு நல்ல மனிதன் என்றே சொல்லிக்கொள்கிறேன்....இந்தியன், தமிழன் எல்லாம் அப்புறம்தான்

    ReplyDelete
  61. //சிவகாசி மாப்பிள்ளை.. சீக்கிரமா உங்களைத் தேடி சிவகாசிக்கு வரேன்..!//

    சிவகாசிக்கு போகாதீங்க... நாம் மும்பையில் இருக்கிறேன்.... அக்டோபரில் சென்னை வருகிறேன்... தங்களை சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சி அடைவேன்

    ReplyDelete
  62. அவசியமான பதிவு.

    ஆனா சுருக்கமா எழுதிடீங்க..??

    போங்கண்ணே....

    ReplyDelete
  63. அடே போங்கண்ணே...நீங்களும் உங்க அரசியல் அமைப்பு சட்டமும்...புண்ணாக்கு

    ReplyDelete
  64. [[[யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

    தம்பி! ஆனந்தை ஒரு படம் நடிக்கச் சொல்லுங்கோ? மாய்ந்து மாய்ந்து பட்டம் கொடுப்பாங்க!

    இச்செய்தியை பிபிசியில் படித்தும்; தூ நாய்களே! எனத் துப்ப வேண்டும் போல் இருந்தது. ஏன் இந்த அரசியல் வியாதிகள் கற்பூரமும் கழுதையுமாக நம் நாடுகளில் வாழ்கிறார்களோ? தெரியவில்லை.]]]

    யோகன் அண்ணே.. நலமா..? ரொம்ப நாளாச்சுண்ணே உங்களைப் பார்த்து..!

    சிவப்பு நாடாவுக்குள் இருக்கும் பைல்களின் நடைமுறைகளை மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.. இனிமேலாவது அந்த அதிகார வர்க்கம் மாறுகிறதா என்று பார்ப்போம்..!

    ReplyDelete
  65. [[[sivakasi maappillai said...

    //நானெல்லாம் இந்தியன் என்று சொல்லிக் கொள்வதற்கே மிகவும் வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன்.. விரும்பவும் இல்லை..//

    அதனால்தான் நான் என்னை எப்பவும் ஒரு நல்ல மனிதன் என்றே சொல்லிக் கொள்கிறேன். இந்தியன், தமிழன் எல்லாம் அப்புறம்தான்]]]

    ஓகேண்ணே.. நானும் உன் வழிக்கே வந்தர்றேன்..!

    ReplyDelete
  66. [[[butterfly Surya said...

    அவசியமான பதிவு.

    ஆனா சுருக்கமா எழுதிடீங்க..??

    போங்கண்ணே....]]]

    இதுக்கு மேல எழுதினா எனக்கு பி.பி. ஏறும் போலத் தோணுச்சு. அதான் நிறுத்திட்டேன்..!

    ReplyDelete
  67. [[[நாஞ்சில் பிரதாப் said...
    அடே போங்கண்ணே. நீங்களும் உங்க அரசியல் அமைப்பு சட்டமும். புண்ணாக்கு]]]

    இதென்ன கலாட்டா.. தம்பி நாஞ்சிலு.. எனக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும் சம்பந்தமில்லை தம்பி. சொன்னா கேளுப்பா..!

    நான் யாரோ.. அவங்க யாரோ..!

    ReplyDelete
  68. வெட்கக் கேடானது.. நாங்கள் முன்பு யாழ்ப்பாணத்தில் சதுரங்கம் ஆடுகையில் எங்கள் ஆதர்ச குரு அவர்..

    ReplyDelete
  69. For that matter all cine field persons like Ilayaraja,Kamala hassan have a villa in Dubai.Does it make them less Indian?This is sheer nonsense

    ReplyDelete
  70. இதை படிங்க முதல்ல -
    http://mightymaverick.blogspot.com/2010/08/i-want-freedom-from-india.html

    ReplyDelete
  71. [[[sinmajan said...
    வெட்கக்கேடானது. நாங்கள் முன்பு யாழ்ப்பாணத்தில் சதுரங்கம் ஆடுகையில் எங்கள் ஆதர்ச குரு அவர்.]]]

    வெட்கமாத்தான் இருக்கு.. ஆனால் என்ன செய்யறது.. எங்களுடைய அரசு அதிகாரிகளுக்கு அது பற்றிய சிந்தனையே இல்லையே..!

    ReplyDelete
  72. [[[sundar said...
    For that matter all cine field persons like Ilayaraja, Kamala hassan have a villa in Dubai. Does it make them less Indian? This is sheer nonsense.]]]

    சுந்தர்.. அதிகாரிகள் வேலை பார்க்கும் லட்சணத்தின் வெளிப்பாடு இது..! தவறுதான்..!

    ReplyDelete
  73. [[[வித்தியாசமான கடவுள் said...

    இதை படிங்க முதல்ல -

    http://mightymaverick.blogspot.com/2010/08/i-want-freedom-from-india.html]]]

    படிச்சிட்டேன்.. நன்றி நண்பரே..!

    ReplyDelete