Pages

Saturday, August 21, 2010

இனிது இனிது - சினிமா விமர்சனம்


21-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'ஹேப்பி டேய்ஸ்' என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் வடிவம்தான் இந்த 'இனிது இனிது'. 


4 மாணவர்கள், 4 மாணவிகள் என்று எட்டு பேர் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பாடப் பிரிவில் முதலாமாண்டில் சேர்ந்தது முதல், கல்லூரியைவிட்டு வெளியே வரும்வரையிலான அவர்களுடைய கல்லூரி வாழ்க்கைக் கதையைத்தான் இதில் சொல்லியிருக்கிறார்கள்.

கல்லூரிக்கு எதற்குப் போனார்களோ அல்லது போகிறார்களோ.. அந்தப் படிப்பு என்ற ஒன்றை மட்டும்விட்டுவிட்டு மீதி அத்தனையையும் இதில் காட்டுகிறார்கள்.

கல்லூரிகளில் ராகிங் செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் முதல் லோக்கல் கவுன்சிலர்வரையிலும் குரல் கொடுத்து வரும் சூழலில், அப்படியொரு சுகமும் மாணவர்களுக்கு உண்டு என்பதை பற்ற வைத்திருப்பது போல் இதில் வரும் காட்சிகள் பல உண்டு. முற்றிலுமாக தவிர்த்திருக்கக் கூடிய விஷயம் இது.

என்னதான் தடை செய்தாலும் அது நிஜத்தில் நடக்கத்தான் செய்கிறது என்றாலும், அதற்கு ஒரு அளவு வைத்து செய்திருக்கலாம்.. அதையே காமெடியாக்கி செய்திருப்பதால் அதன் தாக்கம் மற்றவர்களைச் சேராது என்று நினைத்துவிட்டார்கள் போலும்.. ஆனால் படத்தில் ராகிங் காட்சிகள் ஓவர் டோஸ்.
 

அதேபோல் கல்லூரி லெக்சரராக வரும் அஞ்சலா ஜாவேரியின் மீது மாணவன் ஜொள்ளு விடுவதும், அதனை பார்த்தவுடன வரும் காதலாக வர்ணிப்பதும் ரொம்பவே கொடுமை.. இது போன்று வகுப்பறைகளில்  ஆசிரியைகளின் உடை நெகிழ்வதைப் பார்த்து ஜொள்ளு விடும் மாணவ சமுதாயத்தையும், உடையை நெகிழ வைக்க வேண்டிய ஜன்னல் கதவுகளை மாணவர்களே திறப்பதும், அஞ்சலா குனியும்போது காற்று வீச வேண்டி மாணவர்கள் கையில் இருக்கும் நோட்டுப் புத்தகங்களை வீசி காற்றை வரவழைக்கின்ற காட்சிகளும் வெட்கக்கேடான விஷயங்கள்..! 


பள்ளிகளைப் போன்றே கல்லூரிகளும் இருக்கும்.. இருக்க வேண்டும் என்கிற நினைப்பையே மாணவர்களும், ஆசிரியர்களும் கொண்டிருக்க சினிமா இயக்குனர்களும், கதாசிரியர்களும் மட்டுமே இந்த அளவுக்கு மட்டமான சிந்தனையை பகிரங்கப்படுத்தி வருவது கேவலமானது.

நான்கு மாணவர்களுமே சொல்லி வைத்தாற்போல் மூன்று மாணவிகள் மேல் காதல் கொள்கிறார்கள். அதில் அவர்களுக்குள் அவ்வப்போது ஏற்படும் மோதல்கள், தாபங்கள், காதல்கள், ஈகோக்கள் அத்தனையையும் வரிசைக்கிரமமாக என்னைப் போலவே விலாவாரியாக புட்டுப் புட்டு வைக்கிறார்கள்.

சிற்சில இடங்களில் ஜிலேபியின் மீதே தேன் ஊற்றிச் சாப்பிடுவதுபோல காட்சிகளின் அமைப்பு நகைக்க வைக்கிறது.. குபீர் சிரிப்பு தேவையில்லை. வெகு இயல்பான காட்சிகள் ஊடேயே நகைச்சுவையைத் தெளித்திருக்கிறார்கள்.

முற்றிலும் புதுமுகங்கள் என்றாலும் யாரும் சோடை போகவில்லை.. மது என்ற பெயரில் நடித்திருக்கும் ரேஷ்மி சேலை அணிந்து பஸ்ஸில் இருந்து இறங்கி வருகின்ற காட்சியே அழகு.. ஒரு அழகுக்கு, அழகு சேர்த்தது போல் இருந்தது அவர் சேலை அணிந்து வருகின்ற அத்தனை காட்சிகளும்..

அதேபோல் ஷாலு என்ற சீனியர் மாணவியும்.. அவருடைய பேச்சே இல்லாத முதல் தலையசைப்பு ஆக்ஷனே வித்தியாசத்தைக் காட்டிவிட்டது. அசத்தல்ம்மா.. போட்டோகிராபி முகம்.. எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் நடிப்பு தெரிகிறது.. இது போல் நூறில் ஒருவருக்குத்தான் கிடைக்கும்..

எம்.எல்.ஏ.வின் மகனாக விமல் என்கிற கேரக்டரில் நடித்திருப்பவரை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.. முதல் படம் என்பதே தெரியாத அளவுக்கு டைமிங் டயலாக் டெலிவரியில் பின்னியிருக்கிறார். அதிலும் ஜூஸில் எதையோ கலந்து குடித்துவிட்டு அவர் செய்கின்ற கோணங்கிச் சேட்டை.. சூப்பர்..!

ஷாலுவைக் காதலிக்கும் அந்த சைமனின் கதை.. மது-ஆதித் ஈகோவால் மோதல் துவங்கி இறுதியில் ஒன்று சேரும் இந்த ஜோடிகளின் கதை.. ரெண்டாங்கிளாஸில் பாட்டுப் பாடியதை ஞாபகம் வைத்திருந்து இப்போது திடீரென்று வரும் ஒரு பெண்ணால் தன் காதல் பாதிக்கப்பட்டு வருத்தப்படும் இன்னொரு பெண்.. தனது அழகை நினைத்து வருத்தப்பட்டு புலம்புகின்ற காட்சியெல்லாம் சுவையாகத்தான் இருந்தன.

அனைவரையும் ரொம்ப நல்லவர்களாகவே காட்டிவிட்டால் இன்றைய சூழலுக்குப் பொருத்தமாக இருக்காது என்று நினைத்து இவர்களிடையே ஒரு பெண்ணை மட்டும் கூடு விட்டு கூடு பாயும் காந்தாரியாகக் காட்டியிருக்கிறார்கள். இந்தப் பெண்ணை வைத்து மேலும் ஒரு குட்டிக் கலாட்டா.. அதனால் மீண்டும் ஒன்று சேர ஒரு முனைப்பு என்று திரைக்கதையில் கதம்பத்தை இறுக்கி, இறுக்கிக் கட்டியிருக்கிறார்கள்.

படத்தில் பெரிதும் சிரிக்க வைத்தக் காட்சிகள் கிரிக்கெட் போட்டி காட்சிகள்தான்.. வசனமே இல்லாமல் காட்சிகளிலேயே இந்த அளவுக்கு சிரிக்க வைக்க முடியும் என்று காண்பித்திருக்கிறார்கள். பாராட்ட வேண்டிய விஷயம்..

ஒரு நல்லத் திரைப்படம்தான் என்பதை சொல்லுவதைப் போன்ற திரைக்கதை அமைப்புடன் இப்படத்தை எடுத்திருந்தாலும், இது முற்றிலும் மேல்தட்டு வர்க்கத்தினருக்கான படமாகவே அமைந்திருப்பது மிகப் பெரிய குறை.

இந்தத் திரைப்படம் எந்தக் காரணத்துக்காக ஆந்திராவில் சூப்பர் ஹிட்டானது என்று எனக்குப் புரியவில்லை. 

இந்தப் படம் சத்தியமாக, சத்யம், பி.வி.ஆர்., மாயாஜால், ஐநாக்ஸ் என்ற இடங்களுக்கு நுனிநாக்கு ஆங்கிலம் பேசி, பில்லியனில் இடம் பிடித்து வரும் நங்கைகளுக்கும், அவர் தம் நண்பருக்கு மட்டுமே ஓடும் படமாக இருக்கிறது. பி.அண்ட் சி.யில் எப்படி ஓடும் என்று தெரியவில்லை.

படத்தின் முக்கால்வாசி வசனங்கள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. அணிகின்ற ஆடைகள் முதற்கொண்டு, காட்சியமைப்புகள் வரையிலும் ஹை கிளாஸ் சொசைட்டிக்காகவே இருப்பது படத்தின் மிகப் பெரிய குறை.

இவ்வளவு தூரம் படத்தை அக்கறையாக பிரேம் டூ பிரேம் செதுக்கியிருக்கும் இயக்குநர் ஒரு காட்சியாவது மனதில் நிற்பதைப் போல் எடுக்க வேண்டும் என்று நினைக்காதது ஏன் என்று தெரியவில்லை.. இறுதிக் காட்சியிலாவது ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் ஏதோ ஒரு பாடலுடன் மங்களம் பாடி முடித்துவிட்டார்கள்.

'ஒரு தலை ராகம்' படத்தில் கடைசி நாள் வகுப்பறை காட்சி இன்னமும் என் மனக்கண்ணில் அப்படியே நிற்கிறது. அந்தக் காட்சியில் சந்திரசேகர் சொல்லும் அந்த 'புறா, ரத்தம்' கதை இன்னமும் என் நெஞ்சில் ஈரத்தைச் சொட்டுகிறது.. மறக்க முடியாத படம் என்று சொல்ல வைக்க வேண்டும் என்று நினைத்தவர்கள், நகைச்சுவையே போதும் என்று நினைத்து பாதியிலேயே விட்டுவிட்டார்களோ தெரியவில்லை..

குடும்பத்துடன் பார்க்கலாம்.. எந்தக் குத்துப் பாட்டு டான்ஸோ, தலைவலி தரக்கூடிய அடிதடிகளோ இல்லை என்றாலும் இந்தப் படத்தின் கதை என்ன என்பதை, வீட்டுக்கு வந்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

இதற்கு முன் மிகச் சமீபமாக கல்லூரி என்னும் திரைப்படம் இதே போன்ற கதையம்சத்துடன்தான் வந்தது. ஆனால் அதில் நமது மண்ணின் மணமும், மனமும் கொஞ்சம் கலந்திருந்தது.. நம் பக்கத்து வீடு, என் எதிர்த்த வீட்டுக் கதைகளும், நாம் பார்த்திருந்த, கேட்டிருந்த உரையாடல்களும், நாம் சந்தித்த, எதிர்த்த, பழகிய கதாபாத்திரங்களும் கண் முன்னே உலாவியிருந்தனர்.  அதில் கால்வாசி அளவுகூட இந்தப் படத்தில் நமக்கானதாக இல்லாமல் அந்நியப்பட்டு போயிருப்பது ரொம்பவே வருத்தமான விஷயம்.

என்னுடைய இந்த வருத்தத்திற்கான காரணம், இத்திரைப்படம் இந்தியாவின் மிக ஆச்சரிய கலைஞனான பிரகாஷ்ராஜின் சொந்தத் தயாரிப்பு. இரவு, பகல் பாராமல் தான் கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்திருக்கும் பணத்தில் தனது விருப்பத்திற்காக அவர் எடுத்திருக்கும் படம் இது. இதற்கு முன் அவர் எடுத்திருந்த படங்கள் மூன்றுமே எனக்கு மிகவும் பிடித்தமான படங்கள்.. அவற்றில் கதை இருந்தது.. தமிழகத்தின் வாசனையும் இருந்தது.. மக்களும் இருந்தார்கள்..

இத்திரைப்படம் மட்டுமே புதிய, இளமையான மேட்டுக்குடி வர்க்கத்தினரை அடையாளம் காட்டுவதைப் போலவும், இவர்கள் பயில்கின்ற கல்லூரிகளின் தன்மையையும், இயல்பையும் காட்டுவதைப் போலவும் வெளியே போய்விட்டது.

தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படிக்க வரும் பால்பாண்டி என்ற மாணவரை ராகிங் செய்யும்போது “உனக்கெல்லாம் எதுக்குடா இந்த காலேஜ்..? இந்த என்ஜீனியரிங் படிப்பு?” என்று கிண்டல் செய்வதெல்லாம் நிச்சயமாக பகடியல்ல.. நகைச்சுவையல்ல.. கொடுமை..

இந்த பால்பாண்டியை வைத்து அவருக்கு தைரியம் கொடுத்து மற்றவர்களின் ஒத்துழைப்பால் அவன் நன்றாக ஆங்கிலம் பேசி நல்ல வேலையில் அமர்வதாக வி.சேகர் டைப் கதையோடு கொண்டு போய் சேர்த்திருந்தாலும் படத்தில் அழுத்தமான காட்சிகளாக அது இல்லாததால் பத்தோடு பதினொன்றாகவிட்டது.

பாடல்கள் ஒலித்தன.. ஒலித்தன.. ஒலித்துக் கொண்டேயிருந்தன.. இடையில் இந்திய தேசியத்திற்கு  ஒரு ஜே-யும் போட்டிருக்கிறார்கள்.. கல்லூரி மாணவர்களிடத்தில் தேசபக்தியை புகுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரே விஷயம். ஒளிப்பதிவு.. கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்போல அவ்வளவு அழகு. அடுத்தது காஸ்ட்யூம்ஸ் அண்ட் செட் பிராப்பர்ட்டீஸ்.. ஒவ்வொரு பிரேமையும் கலை நுணுக்கத்தோடு பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அவரே பிரபலமான ஒளிப்பதிவாளர் என்பதால் ரொம்பவே மெனக்கெட்டு உழைத்திருக்கிறார் போலும்.. வாழ்த்துக்கள் குகன் ஸார்.

'இனிது இனிது காதல் இனிது' என்பவர்கள் தாராளமாக இந்தப் படத்திற்கு தங்களது 'காதல்களோடு' செல்லலாம்.

54 comments:

  1. http://cablesankar.blogspot.com/2010/08/blog-post_20.html?showComment=1282249845949#c2396105130675951949

    நோ கும்மி ஃபார் ஒன் வீக்-னு இராமசாமி கண்ணன் மேல சத்தியம் பண்ணியிருக்கேன்

    ReplyDelete
  2. எந்த திரை அரங்கம் பாஸ்

    எல்லா திரைபடங்களையும் விடாமல் பார்க்கும் உங்கள் பொறுமைக்கு மிகுந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  3. ஹாப்பி டேஸ் உண்மையிலேயே அருமையான படம் அண்ணா... நீங்க பாருங்க.. அருமையா இருக்கும்..

    அதுல கொஞ்சம் நேட்டிவிட்டி தெரியும்... இதுல அது மிஸ்ஸிங்-னு நினைக்கிறேன்... படத்தோட ஸ்டில்ஸ் மட்டும் தான் பாத்தேன்... கொஞ்சம் ஹைகிளாஸா தான் இருந்துது..

    ஆமா... பிரகாஷ்ராஜ் தயாரிப்புல எந்த படம் பி அண்ட் சி-ல ஒடி இருக்கு???

    ReplyDelete
  4. //குடும்பத்துடன் பார்க்கலாம்.. எந்தக் குத்துப் பாட்டு டான்ஸோ, தலைவலி தரக்கூடிய அடிதடிகளோ இல்லை என்றாலும் இந்தப் படத்தின் கதை என்ன என்பதை, வீட்டுக்கு வந்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது
    //

    குத்து இல்லாத தமிழ் படமா?

    கேட்கவே ரெம்ப கஷ்டமா இருக்கே ?

    ReplyDelete
  5. இனிது இனிது காதல் இனிது
    அதைவிட உண்மை தமிழன்
    விமர்சனம் இனிது

    ReplyDelete
  6. அண்ணே நீங்க குத்தைக்கு எடுத்து வச்சி இருக்கிற தியேட்டர் விலாசம் கொடுங்க, பிற் காலத்திலேயே பயன் படும்

    ReplyDelete
  7. எம்.பி.க்களின்
    ஊதிய உயர்வு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதன்படி, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஊதியம் ரூ.16
    ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.?????????


    என்ன கொடுமை சரவணன்..?


    இதற்கான பதிவை உங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

    ReplyDelete
  8. //
    எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் நடிப்பு தெரிகிறது
    //
    அண்ணே : ஸ்க்கிரீனுக்கு பின் பக்கமா போயி பாத்தீங்களோ........

    ReplyDelete
  9. //அண்ணே : ஸ்க்கிரீனுக்கு பின் பக்கமா போயி பாத்தீங்களோ........//

    எப்படியெல்லாம் கேள்வி கேட்குறாங்க.....


    திங்கள் போலாம்னு நினைச்சேன்.....
    பார்ப்போம்....வேற எதுவும் அட்டு பிட்டு படம்
    ரீலீஸ் ஆகிருக்கா?? ஆலந்தூர் எஸ்.கே ஷோ
    டைமிங் சொல்ல முடியுமா??

    ReplyDelete
  10. எனக்கு தெலுகு வெர்ஷனே ரொம்ப பிடிச்சது

    ReplyDelete
  11. ஆஹா,முந்திக்கிட்டீங்களே,நான் மகான் அல்ல முதல்ல பார்ப்பீங்கனு நினைச்சேன்

    ReplyDelete
  12. \\கல்லூரிக்கு எதற்குப் போனார்களோ அல்லது போகிறார்களோ.. அந்தப் படிப்பு என்ற ஒன்றை மட்டும்விட்டுவிட்டு மீதி அத்தனையையும் இதில் காட்டுகிறார்கள்.\\

    படிப்பை எல்லாம் காண்பித்தால் நமக்கு அலுப்பு தட்டும் பாஸ்.

    \\...அத்தனையையும் வரிசைக்கிரமமாக என்னைப் போலவே விலாவாரியாக புட்டுப் புட்டு வைக்கிறார்கள்.\\

    அதை நாங்க சொல்லணும். நான் இன்னும் படம் பார்கவில்லை. ஆனால் உங்கள் மேல் நம்பிக்கை உள்ளது. அப்படி அவர்கள் செய்திருந்தால் அதுவே பெரிய வெற்றிதான்.

    \\வெகு இயல்பான காட்சிகள் ஊடேயே நகைச்சுவையைத் தெளித்திருக்கிறார்கள். \\

    கிட்டத்தட்ட உங்கள் பதிவு போலவே உள்ளதாகச் சொல்ல வருகிறீர்களா?

    \\இது முற்றிலும் மேல்தட்டு வர்க்கத்தினருக்கான படமாகவே அமைந்திருப்பது மிகப் பெரிய குறை.\\

    கதைக்கான களம் அதுதான் என்றால் யார் என்ன செய்ய முடியும்?

    \\இவ்வளவு தூரம் படத்தை அக்கறையாக பிரேம் டூ பிரேம் செதுக்கியிருக்கும் இயக்குநர் ஒரு காட்சியாவது மனதில் நிற்பதைப் போல் எடுக்க வேண்டும் என்று நினைக்காதது ஏன் என்று தெரியவில்லை.. \\

    ரேஷ்மி சேலையில் வருவது, ஷாலுவின் தலை அசைப்பு என்று அணு அணுவாக ரசித்து விட்டுப் பேச்சைப் பாரு.

    \\இந்தப் படத்தின் கதை என்ன என்பதை, வீட்டுக்கு வந்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது.\\

    வீட்டுக்கும் போயும் யோசிக்கிறீர்களா? அதுவே இந்தப் படத்திற்குக் கிடைத்த பெரிய வெற்றிதான்.

    \\இதற்கு முன் அவர் எடுத்திருந்த படங்கள் மூன்றுமே எனக்கு மிகவும் பிடித்தமான படங்கள்.. அவற்றில் கதை இருந்தது.. தமிழகத்தின் வாசனையும் இருந்தது.. மக்களும் இருந்தார்கள்..\\

    அப்படியா? மொழி, அபியும் நானும் முதலிய படங்களில் நிறைய மண் வாசனை இருந்ததா? அந்தப் படங்களின் கதை மாந்தர்கள் போலத்தான் நம் பெரும்பான்மையான மக்கள் உள்ளனரா? அவை இரண்டும் நல்ல படங்கள் என்பதில் எனக்கும் கருத்து வேற்றுமை இல்லை.

    ReplyDelete
  13. [[[ஹாலிவுட் பாலா said...

    நோ கும்மி ஃபார் ஒன் வீக்-னு இராமசாமி கண்ணன் மேல சத்தியம் பண்ணியிருக்கேன்.]]]

    கும்மியடிக்க வேணாம்.. ஒரு ஒப்பாரியாவது வைச்சிட்டுப் போயிருக்கலாம்ல..!

    ReplyDelete
  14. [[[ராம்ஜி_யாஹூ said...

    எந்த திரை அரங்கம் பாஸ்..?]]]

    உதயம் காம்ப்ளக்ஸ்..!

    [[[எல்லா திரைபடங்களையும் விடாமல் பார்க்கும் உங்கள் பொறுமைக்கு மிகுந்த பாராட்டுகள்.]]]

    ஹி.. ஹி.. வேலை வெட்டி இல்லாதவன் ஸார்.. அதுனாலதான்..!

    ReplyDelete
  15. [[[kanagu said...

    ஹாப்பி டேஸ் உண்மையிலேயே அருமையான படம் அண்ணா... நீங்க பாருங்க.. அருமையா இருக்கும்.. அதுல கொஞ்சம் நேட்டிவிட்டி தெரியும்... இதுல அது மிஸ்ஸிங்-னு நினைக்கிறேன்... படத்தோட ஸ்டில்ஸ் மட்டும்தான் பாத்தேன்... கொஞ்சம் ஹைகிளாஸாதான் இருந்துது..

    ஆமா... பிரகாஷ்ராஜ் தயாரிப்புல எந்த படம் பி அண்ட் சி-ல ஒடி இருக்கு???]]]

    மொழி எல்லா சென்டர்லேயும் நல்லா ஓடுச்சுப்பா..!

    ReplyDelete
  16. [[[நசரேயன் said...

    //குடும்பத்துடன் பார்க்கலாம்.. எந்தக் குத்துப் பாட்டு டான்ஸோ, தலைவலி தரக்கூடிய அடிதடிகளோ இல்லை என்றாலும் இந்தப் படத்தின் கதை என்ன என்பதை, வீட்டுக்கு வந்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது//

    குத்து இல்லாத தமிழ் படமா?
    கேட்கவே ரெம்ப கஷ்டமா இருக்கே?]]]

    இருக்கும்.. இருக்கும்..! நசரேயன்.. குத்துக்கு ரசிகரா நீங்க..?

    ReplyDelete
  17. [[[நசரேயன் said...
    இனிது இனிது காதல் இனிது
    அதைவிட உண்மை தமிழன்
    விமர்சனம் இனிது]]]

    நன்றி.. நன்றி.. நன்றி..!

    ReplyDelete
  18. [[[நசரேயன் said...
    அண்ணே நீங்க குத்தைக்கு எடுத்து வச்சி இருக்கிற தியேட்டர் விலாசம் கொடுங்க, பிற்காலத்திலேயே பயன்படும்.]]]

    உதயம் காம்ப்ளக்ஸ்..! வீட்டுக்குப் பக்கத்துல இருக்கு.. சீப் அண்ட் பெஸ்ட்..!

    ReplyDelete
  19. [[[butterfly Surya said...
    எம்.பி.க்களின் ஊதிய உயர்வு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதன்படி, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஊதியம் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

    என்ன கொடுமை சரவணன்..?

    இதற்கான பதிவை உங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்கிறேன்.]]]

    தினமும் என்னை டென்ஷன்படுத்தலேன்னா இந்த அரசியல்வியாதிகளுக்குத் தூக்கம் வராது போலிருக்கு..! படுத்துறானுகய்யா..!

    ReplyDelete
  20. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

    //எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் நடிப்பு தெரிகிறது//

    அண்ணே : ஸ்கிரீனுக்கு பின் பக்கமா போயி பாத்தீங்களோ........]]]

    ஹா.. ஹா.. நக்கலு..! ஓகே.. யோகேஷ்.. படத்தைப் பார்த்திட்டுச் சொல்லுங்க..!

    ReplyDelete
  21. முதல் வரி வாசித்தேன் //
    மூன்று மாணவர்கள், மூன்று மாணவிகள் என்று ஆறு பேர் //

    படத்தில ஏழு பேரு நிக்கிறாங்களே ... சரி .. படம் பார்த்து தெரிஞ்சிக்கிறேன்.

    ReplyDelete
  22. [[[ஜெட்லி... said...

    //அண்ணே : ஸ்க்கிரீனுக்கு பின் பக்கமா போயி பாத்தீங்களோ........//

    எப்படியெல்லாம் கேள்வி கேட்குறாங்க. திங்கள் போலாம்னு நினைச்சேன். பார்ப்போம். வேற எதுவும் அட்டு பிட்டு படம் ரீலீஸ் ஆகிருக்கா?? ஆலந்தூர் எஸ்.கே ஷோ டைமிங் சொல்ல முடியுமா??]]]

    பாருங்க ஜெட்லி..

    நாம எவ்ளோ கஷ்டப்பட்டு காசையும் செலவழிச்சு, நேரத்தையும் செலவழிச்சிட்டு படத்தை பார்த்திட்டு வந்து கதை சொன்னா.. இன்னா நக்கலு..!?

    ReplyDelete
  23. [[[pappu said...
    எனக்கு தெலுகு வெர்ஷனே ரொம்ப பிடிச்சது.]]]

    அப்படியா..? எல்லாரும் அதேதான் சொல்றாங்க..

    ஆனா நான் தெலுங்கு வெர்ஷனை பார்க்கலை.. அதுனால ஒண்ணும் சொல்ல முடியல ஸார்..!

    ReplyDelete
  24. [[[சி.பி.செந்தில்குமார் said...
    ஆஹா, முந்திக்கிட்டீங்களே, நான் மகான் அல்ல முதல்ல பார்ப்பீங்கனு நினைச்சேன்.]]]

    அதுக்குத்தான் போலாம்னு நினைச்சேன். ஆனா இடைவேளைக்கு அப்புறம் ரத்தக்களறின்னு சொன்னாங்க.. அதுனால மருவாதையா இதுக்கு ஓடிட்டேன்..!

    ReplyDelete
  25. //வரிசைக்கிரமமாக என்னைப் போலவே விலாவாரியாக புட்டுப் புட்டு வைக்கிறார்கள்.//

    veen vilambaram......

    vimarsanam arumai, application vaangiyaachchaaaa......

    ReplyDelete
  26. [[[R Gopi said...

    \\படிப்பை எல்லாம் காண்பித்தால் நமக்கு அலுப்பு தட்டும் பாஸ்.

    அதை நாங்க சொல்லணும். நான் இன்னும் படம் பார்கவில்லை. ஆனால் உங்கள் மேல் நம்பிக்கை உள்ளது. அப்படி அவர்கள் செய்திருந்தால் அதுவே பெரிய வெற்றிதான்.

    \\வெகு இயல்பான காட்சிகள் ஊடேயே நகைச்சுவையைத் தெளித்திருக்கிறார்கள். \\

    கிட்டத்தட்ட உங்கள் பதிவு போலவே உள்ளதாகச் சொல்ல வருகிறீர்களா?

    \\இது முற்றிலும் மேல்தட்டு வர்க்கத்தினருக்கான படமாகவே அமைந்திருப்பது மிகப் பெரிய குறை.\\

    கதைக்கான களம் அதுதான் என்றால் யார் என்ன செய்ய முடியும்?

    \\இவ்வளவு தூரம் படத்தை அக்கறையாக பிரேம் டூ பிரேம் செதுக்கியிருக்கும் இயக்குநர் ஒரு காட்சியாவது மனதில் நிற்பதைப் போல் எடுக்க வேண்டும் என்று நினைக்காதது ஏன் என்று தெரியவில்லை.. \\

    ரேஷ்மி சேலையில் வருவது, ஷாலுவின் தலை அசைப்பு என்று அணு அணுவாக ரசித்து விட்டுப் பேச்சைப் பாரு.

    \\இந்தப் படத்தின் கதை என்ன என்பதை, வீட்டுக்கு வந்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது.\\

    வீட்டுக்கும் போயும் யோசிக்கிறீர்களா? அதுவே இந்தப் படத்திற்குக் கிடைத்த பெரிய வெற்றிதான்.

    \இதற்கு முன் அவர் எடுத்திருந்த படங்கள் மூன்றுமே எனக்கு மிகவும் பிடித்தமான படங்கள்.. அவற்றில் கதை இருந்தது.. தமிழகத்தின் வாசனையும் இருந்தது.. மக்களும் இருந்தார்கள்..\\

    அப்படியா? மொழி, அபியும் நானும் முதலிய படங்களில் நிறைய மண் வாசனை இருந்ததா? அந்தப் படங்களின் கதை மாந்தர்கள் போலத்தான் நம் பெரும்பான்மையான மக்கள் உள்ளனரா? அவை இரண்டும் நல்ல படங்கள் என்பதில் எனக்கும் கருத்து வேற்றுமை இல்லை.]]]

    ஆத்தாடி.. நம்மளையே கொத்துப் புரோட்டா போடுறாங்களே சாமி..!

    அண்ணே கோபியண்ணே.. இனிமே ஜாக்கிரதையாவே இருக்குறேண்ணே..!

    ReplyDelete
  27. [[[தருமி said...

    முதல் வரி வாசித்தேன் //
    மூன்று மாணவர்கள், மூன்று மாணவிகள் என்று ஆறு பேர் //

    படத்தில ஏழு பேரு நிக்கிறாங்களே. சரி.. படம் பார்த்து தெரிஞ்சிக்கிறேன்.]]]

    தப்புங்கய்யா.. ஒரு ஜோடியை நான் லிஸ்ட்ல சேர்க்காம விட்டுட்டேன்..!

    மன்னிச்சுக்குங்க..!

    நான்கு, நான்கு பேராக எட்டு பேர்..!

    ReplyDelete
  28. [[[பித்தன் said...

    //வரிசைக்கிரமமாக என்னைப் போலவே விலாவாரியாக புட்டுப் புட்டு வைக்கிறார்கள்.//

    veen vilambaram...... imarsanam arumai, application vaangiyaachchaaaa......]]]

    விண்ணப்பத்தினை நிரப்பி அனுப்பியாகிவிட்டது பித்தன்ஜி..!

    ReplyDelete
  29. பாசு.. அப்ப இந்தப் படத்த கடைசி வரைக்கும் உக்காந்து பாத்துருக்கீங்க.. எங்களுக்காக நீங்க படும் கஷ்டத்தை நினைக்கும்போது கண்கள் குளமாகின்றன...

    ReplyDelete
  30. [[[பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
    பாசு.. அப்ப இந்தப் படத்த கடைசி வரைக்கும் உக்காந்து பாத்துருக்கீங்க.. எங்களுக்காக நீங்க படும் கஷ்டத்தை நினைக்கும்போது கண்கள் குளமாகின்றன...]]]

    சரி.. சரி.. கண்ணைத் தொடைச்சிட்டு ஆயிரம் ரூபாயை கைல எடுத்திட்டு நேரா வாங்க..!

    ReplyDelete
  31. வழமை போல நல்லதொரு விமர்சனம்
    உண்மைத்தமிழன்
    படம் பார்க்கலாம் எப்படியிருக்கென்று

    ReplyDelete
  32. படம் தேறாது போலிருக்கண்ணே! பிரகாஷ்ராஜ் பேட்டியெல்லாம் பிரமாதமா இருந்தது...? ம்..ஹூம்.

    பிரபாகர்...

    ReplyDelete
  33. [[[Riyas said...
    வழமை போல நல்லதொரு விமர்சனம்
    உண்மைத்தமிழன்
    படம் பார்க்கலாம் எப்படியிருக்கென்று]]]

    நேரம் கிடைச்சா பாருங்க ரியாஸ்..!

    ReplyDelete
  34. அப்ப ஹாப்பி டேஸ் ஹாப்பியா பார்க்கலாம் சரியா.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  35. thala, kaipaesi yen padam paathacha? sattubuttunu review yaeludhunga...

    ReplyDelete
  36. [[[பிரபாகர் said...
    படம் தேறாது போலிருக்கண்ணே! பிரகாஷ்ராஜ் பேட்டியெல்லாம் பிரமாதமா இருந்தது...? ம்..ஹூம்.

    பிரபாகர்...]]]

    பெயரெடுக்கும. ஆனால் வசூல் வராது..!

    ReplyDelete
  37. நல்ல படம் என்று சொன்னது சந்தோஷமா இருக்கு சரவணன்.. பேரெடுக்கும்னு வேற சொல்லிட்டீங்க.. அது போதும்..நம்ம நண்பரோட படம் கெலிக்கலின்னா வேற யாரு படம் கெலிக்கும்..:))

    ReplyDelete
  38. [[[சிங்கக்குட்டி said...
    அப்ப ஹாப்பி டேஸ் ஹாப்பியா பார்க்கலாம் சரியா. பகிர்வுக்கு நன்றி.]]]

    நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் சிங்கக்குட்டி..!

    ReplyDelete
  39. அண்ணே படிக்கறதையும் காட்டுறாங்க.. அதை மட்டும் காமிச்சா போனி ஆகாதுன்னே...

    கல்லூரின்னு நீங்க சொன்ன ஸ்டைலில் எடுத்தார்கள்... அது பிசியில் ஓடிச்சான்னே...?????

    ReplyDelete
  40. கிராம அதிகாரி தேர்வுக்கான மாதிரி வினா விடை இன்னைலேர்ந்து தினத்தந்தி ல வருது.... படிச்சி வைங்க...
    பலான படமா தேடி அலையாதீங்க‌

    ReplyDelete
  41. [[[Pradeep said...
    thala, kaipaesi yen padam paathacha? sattubuttunu review yaeludhunga...]]]

    இன்னும் பார்க்கலியே பிரதீப்..! பார்த்துட்டுச் சொல்றேன்..!

    ReplyDelete
  42. [[[தேனம்மை லெக்ஷ்மணன் said...
    நல்ல படம் என்று சொன்னது சந்தோஷமா இருக்கு சரவணன்.. பேரெடுக்கும்னு வேற சொல்லிட்டீங்க.. அது போதும். நம்ம நண்பரோட படம் கெலிக்கலின்னா வேற யாரு படம் கெலிக்கும்..:))]]]

    நிச்சயம் நல்ல படம்தான்.. ஒரு முறை பார்க்கலாம் தேனக்கா.. அவசியம் பாருங்க..!

    ReplyDelete
  43. நான் எந்திரனை விட மிகவும் எதிர்பார்த்த திரைப்படம்.. மேக்கிங் எல்லாம் ஓகே.. ஆனால் படத்தில் உயிர் இல்லை... ஹாப்பி டேஸ் கிளாசிக். அது பக்கத்துல கூட நிற்க முடியலை. அருமையா சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
  44. [[[Pradeep said...
    thala, kaipaesi yen padam paathacha? sattubuttunu review yaeludhunga...]]]

    இன்னும் பார்க்கலியே பிரதீப்..! பார்த்துட்டுச் சொல்றேன்..!

    // film tickets available here... vaenumna sollunga

    ReplyDelete
  45. [[[ஜாக்கி சேகர் said...

    அண்ணே படிக்கறதையும் காட்டுறாங்க.. அதை மட்டும் காமிச்சா போனி ஆகாதுன்னே...

    கல்லூரின்னு நீங்க சொன்ன ஸ்டைலில் எடுத்தார்கள்... அது பிசியில் ஓடிச்சான்னே...?????]]]

    ஓடலைதான்.. ஆனால் நமது மண்ணின் கதைன்னு ஒண்ணு இருந்துச்சே.. இதுல என்ன இருக்கு..?

    ReplyDelete
  46. [[[sivakasi maappillai said...
    கிராம அதிகாரி தேர்வுக்கான மாதிரி வினா விடை இன்னைலேர்ந்து தினத்தந்தில வருது.... படிச்சி வைங்க... பலான படமா தேடி அலையாதீங்க‌]]]

    அக்கறைக்கு மிக்க நன்றி சிவகாசி மாப்பிள்ளை..! கட் பண்ணி வைச்சுப் படிக்கிறேன்..!

    ReplyDelete
  47. [[[கவிதை காதலன் said...
    நான் எந்திரனை விட மிகவும் எதிர்பார்த்த திரைப்படம்.. மேக்கிங் எல்லாம் ஓகே.. ஆனால் படத்தில் உயிர் இல்லை... ஹாப்பி டேஸ் கிளாசிக். அது பக்கத்துலகூட நிற்க முடியலை. அருமையா சொல்லி இருக்கீங்க.]]]

    கவிதை காதலன்ஜி..

    நான் ஹேப்பி டேய்ஸ் பார்க்கலை. அதுனால இன்னும் ஆழமா எழுத முடியலை.. ஸாரி..!

    ReplyDelete
  48. [[[Pradeep said...

    [[[Pradeep said...
    thala, kaipaesi yen padam paathacha? sattubuttunu review yaeludhunga...]]]

    இன்னும் பார்க்கலியே பிரதீப்..! பார்த்துட்டுச் சொல்றேன்..!//

    film tickets available here... vaenumna sollunga]]]

    வேண்டாம்.. வேண்டாம். நாளைக்கு பார்த்தர்றேன்..!

    ReplyDelete
  49. கேவலமான படம் ..சுத்த அரைவேக்காடு .அறுவையோ அறுவை ..பிரகாஷ்ராஜ் ..என்னாச்சு?

    ReplyDelete
  50. //சரி .. படம் பார்த்து தெரிஞ்சிக்கிறேன்//

    ஐயோ ..தருமி ஐயா ..தயவு செய்து பார்க்காதீங்க .. பார்த்துட்டு உண்மைத்தமிழன் மேல கொலை வெறி வராம இருந்தா அப்புறம் சொல்லுங்க.

    ReplyDelete
  51. [[[ஜோ/Joe said...
    கேவலமான படம். சுத்த அரைவேக்காடு. அறுவையோ அறுவை.. பிரகாஷ்ராஜ்.. என்னாச்சு?]]]

    ஹி.. ஹி.. ஹி..! என்னாச்சு ஜோ.. இம்புட்டு கோபம்..? காசு வேஸ்ட்டா போச்சா..?

    ReplyDelete
  52. [[[ஜோ/Joe said...

    //சரி .. படம் பார்த்து தெரிஞ்சிக்கிறேன்//

    ஐயோ. தருமி ஐயா. தயவு செய்து பார்க்காதீங்க. பார்த்துட்டு உண்மைத்தமிழன் மேல கொலை வெறி வராம இருந்தா அப்புறம் சொல்லுங்க.]]]

    தருமி ஐயா.. ஜோ சொல்றதையும் கொஞ்சம் கேளுங்க..

    படம் பார்த்திட்டு என்னையெல்லாம் குத்தம் சொல்லக் கூடாது..!

    ReplyDelete