Pages

Wednesday, August 04, 2010

ஆடிக் கிருத்திகையை பாடிக் கொண்டாடுவோம்..!

04-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..!


 அப்பன் முருகன் வீற்றிருக்கும் அத்தனை திருத்தலங்களும் ஆடிக்கிருத்தியை முன்னிட்டு கோலாகலமாக இருக்கின்றன. பக்தர்கள் தங்களது பெருமானை பார்க்க படியேறிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.  
தமிழகத்து மக்களால் பெரிதும் விரும்பி வணங்கிப் போற்றப்படும் தெய்வமான முருகன், கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் என விளங்கி அடியார்களுக்கெல்லாம் முருகன் அருள் செய்தி வருகின்றான்.

முருகன் என்றதுமே தமிழ் மக்களின் உள்ளமெல்லாம் உருகும். முருகன்பால் தமிழ் மக்களுக்கு எல்லையில்லாத பக்தியுண்டு.

தமிழ்நாட்டில் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் பெரும்பாலும் முருகனுக்கு கோவில்கள் அமைந்திருக்கின்றன. முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி முதலிய சிறப்பு நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் விரதமிருந்து முருகனை வழிபட்டு மகிழ்கிறார்கள். முருகன் கோவில்கள் எல்லாம் சிறந்த பிரார்த்தனை தலங்களாக விளங்குகின்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிருத்திகை முதலிய சிறப்பு நாட்களில் முருகன் கோவில்களில் பெருந்திரளாகக் கூடி வணங்கி மகிழ்கிறார்கள்.

தொல்காப்பியம் என்னும் பண்டைப் பெருந்தமிழ் நூலிலும் முருகன் வழிபாடு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. மேலும் சங்க காலப் புலவர் பெருமான் முருகனைப் பற்றி திருமுருகாற்றுப்படை என்னும் துதி நூலை பாடியிருக்கின்றார். அதன் மூலம் ஆறு திருத்தலங்கள், முருகனின் அறுபடை வீடுகள் என்ற சிறப்பை பெற்றுள்ளன.

திருப்பரங்குன்றம் - சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரனின் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.

திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.

பழனி - மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டி போட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.

சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தரும் திருத்தலமிது.

திருத்தணி - சூரனை வதம் செய்த பின் சினம் தணிந்து குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.

பழமுதிர்ச்சோலை - அவ்வைக்கு பழம் உதிர்த்து, வள்ளி, தெய்வானையோடு காட்சித் தரும் திருத்தலமிது.

முருகன் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலவன், சுப்பிரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன், சண்முகன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன. புராணங்களின்படி சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர் இந்த ஆறு குழந்தைகளையும் வளர்த்தனர்.

பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறுமுகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகம் என்று அழைக்கப்படுகிறார். கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானின் பிறந்த தினமாகக் கொண்டாடப்படுகிறது.

தந்தைக்கு ஓம் என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறும் உண்டு. ஓம் என்பது அ, உ, ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையில் உண்டானது. அ-படைத்தல், உ-காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும்.

அ, உ, ம என்னும் இந்த மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துக்களுக்கும் ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது. முருகு என்ற மூன்றெழுத்துக்களிலும் அ, உ, ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவானவன்.

முருகப் பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்த வரலாறும் உண்டு.

தெய்வானை கிரியா சக்தியாகவும், வள்ளி இச்சா சக்தியாகவும் வேல் ஞான சக்தியாகவும், மயில் ஆணவம் என்றும், சேவல் சிவஞானம் என்கிறார்கள் புலவர்கள்.

தன்னை வணங்கும் பக்தர்களுக்கு எப்போதும் அருள் பாலித்து வரும் எம்பெருமான் அப்பன் முருகனை இன்றைய கிருத்திகை நாளில் நானும் வணங்குகிறேன்.

நாளென் செயும் வினை தானென் செயுமெனை நாடி வந்த
கோளென் செயுங் கொடுங் கூற்றென் செயுங்கும் ரேசரிரு
நாளுஞ் சிலம்பஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகத்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடனே..!

முருகா சரணம்..!
கந்தா சரணம்..!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
கந்தவேல் முருகனுக்கு அரோகரா..


44 comments:

  1. நிறைவாக, சுருக்கமாக & நன்றாக இருந்தது

    ReplyDelete
  2. கட்டுரை நல்லா இருக்கு.
    "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்"-னு வரணூம்ங்க

    ReplyDelete
  3. ஏன் அப்பன் முருகனுக்கு மட்டும் சின்ன பதிவு?

    ReplyDelete
  4. பெரியார் முருகன் எப்படி பிறந்தார் என்று விளக்கியிருப்பாரே ஏன் மிஸ்ஸிங்?

    ReplyDelete
  5. முருகன் கண்ண குத்த போறாரு.....
    பிட்டு படத்துக்கு திரைக்கதை பதிவும் முருகன பத்தி சிறு குறிப்பும் எழுதுனதுக்கு

    ReplyDelete
  6. //ஏன் அப்பன் முருகனுக்கு மட்டும் சின்ன பதிவு?//அதானே ஏன் ஏன்??....

    ReplyDelete
  7. anne,,, appan muruganukku mattum en chinna pathivu.."ilyaia pillai eduppar kaipillai" endruthana..

    ReplyDelete
  8. [[[அது ஒரு கனாக் காலம் said...
    நிறைவாக, சுருக்கமாக & நன்றாக இருந்தது.]]]

    ஆஹா.. மிக்க நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  9. [[[சின்ன அம்மிணி said...
    கட்டுரை நல்லா இருக்கு.
    "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்"-னு வரணூம்ங்க.]]]

    தப்புதாங்க அம்மிணி..

    இப்போ மாத்திப்புட்டேங்க..!

    திருத்தினதுக்கு நன்றிங்கோ..!

    ReplyDelete
  10. [[[பரிதி நிலவன் said...
    ஏன் அப்பன் முருகனுக்கு மட்டும் சின்ன பதிவு?]]]

    அந்தச் சுண்டைக்காய் பயலுக்கு இதுவே அதிகம் பரிதி..!

    ReplyDelete
  11. [[[ஆட்காட்டி said...
    பெரியார் முருகன் எப்படி பிறந்தார் என்று விளக்கியிருப்பாரே ஏன் மிஸ்ஸிங்?]]]

    இதென்ன ஊருக்கு தெரியாத ரகசியமா..? அம்புட்டு தமிழர்களுக்கும் தெரியுமே..?

    ReplyDelete
  12. [[[sivakasi maappillai said...
    முருகன் கண்ண குத்த போறாரு.
    பிட்டு படத்துக்கு திரைக்கதை பதிவும் முருகன பத்தி சிறு குறிப்பும் எழுதுனதுக்கு.]]]

    ஹி.. ஹி.. குத்தினா குத்தட்டுமே மாப்பிள்ளை..!

    அவன் கொடுத்த தமிழால அவனை ரொம்பப் பாட முடியாது..! அவனே கூச்சப்படுவான்..! அதுனாலதான்..!

    ReplyDelete
  13. [[[Mrs.Menagasathia said...

    //ஏன் அப்பன் முருகனுக்கு மட்டும் சின்ன பதிவு?//

    அதானே ஏன் ஏன்??....]]]

    முருகன் ஒரு சின்னப் பயல்.. அதுனாலதான்..!

    ReplyDelete
  14. இன்று ஆடிக்கிருத்திகை எனபது தெரியாமலேயே முருகன் கோவிலுக்கு போய்விட்டு வந்தேன்.அருள் கிடைத்தால் சரி

    ReplyDelete
  15. ஆடிக்கிருத்தியை
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. உண்மைத்தமிழன் நல்ல கட்டுரை..
    தமிழர்களுக்கு முருகன் யார்னு சொல்ற நிலமை வந்தது தான் சோகம்..என் வலைத்தளத்தில் “சூப்பர் ஸ்டார் பிள்ளையார” என்று எழுதி இருந்தது படித்தீர்களா? முடிந்தால் படிக்கவும்

    ReplyDelete
  17. //அவன் கொடுத்த தமிழால அவனை ரொம்பப் பாட முடியாது..! அவனே கூச்சப்படுவான்..!
    //

    ஏண்ணே.. இப்பத்தான் குச்சு குச்சு ஹோத்தா ஹே-ன்னு ஹிந்தி படமெல்லாம் பார்க்கறீங்களே.

    அப்படியே ஹிந்தில பாடுறதுதானே?!

    ReplyDelete
  18. I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

    ReplyDelete
  19. //ஹி.. ஹி.. குத்தினா குத்தட்டுமே மாப்பிள்ளை..!///


    அவளின் உணர்ச்சிகள், பேசுவது கிளியா.....

    பாக்க முடியாது.... வெறும் ம்யூசிக்க வச்சு விமர்சனம் எழுதனும்
    பரவாயில்லையா??

    ReplyDelete
  20. [[[அகில் பூங்குன்றன் said...
    anne, appan muruganukku mattum en chinna pathivu.."ilyaia pillai eduppar kaipillai" endruthana..]]]

    சின்னப் பையன்.. அதுனால..!

    ReplyDelete
  21. [[[வடுவூர் குமார் said...
    இன்று ஆடிக்கிருத்திகை எனபது தெரியாமலேயே முருகன் கோவிலுக்கு போய்விட்டு வந்தேன். அருள் கிடைத்தால் சரி.]]]

    நிச்சயமாகக் கிடைக்கும் ஸார்..! அவனது நாள் என்று தெரியாமலேயே உங்களை அழைத்திருக்கிறான் பாருங்கள்..! ஏதோ ஒரு காரணம் இருக்கும்..!

    ReplyDelete
  22. [[[T.V.ராதாகிருஷ்ணன் said...

    அரோகரா..:))]]]

    அரோகரா..!

    ReplyDelete
  23. [[[தீப்பெட்டி said...

    :)]]]

    தீப்பெட்டி.. என்னாச்சு..? இத்தனை நாளா வரக் காணோம்..?

    போனாவது பண்ணுங்க சாமி..!

    ReplyDelete
  24. [[[நீச்சல்காரன் said...
    ஆடிக்கிருத்தியை வாழ்த்துக்கள்.]]]

    வாழ்த்துக்கள் நீச்சல் ஸார்..!

    ReplyDelete
  25. [[[அ.வெற்றிவேல் said...
    உண்மைத்தமிழன் நல்ல கட்டுரை..
    தமிழர்களுக்கு முருகன் யார்னு சொல்ற நிலமை வந்தது தான் சோகம். என் வலைத்தளத்தில் “சூப்பர் ஸ்டார் பிள்ளையார” என்று எழுதி இருந்தது படித்தீர்களா? முடிந்தால் படிக்கவும்.]]]

    நன்றிகள் வெற்றிவேல் ஸார்..!

    ReplyDelete
  26. ஹாலிவுட் பாலா said...

    //அவன் கொடுத்த தமிழால அவனை ரொம்பப் பாட முடியாது..! அவனே கூச்சப்படுவான்..!//

    ஏண்ணே.. இப்பத்தான் குச்சு குச்சு ஹோத்தா ஹே-ன்னு ஹிந்தி படமெல்லாம் பார்க்கறீங்களே.
    அப்படியே ஹிந்தில பாடுறதுதானே?!]]]

    எனக்கு ஹிந்தி தெரியாதே..!

    ReplyDelete
  27. [[[sweatha said...
    I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .]]]

    நல்வரவு..!

    ReplyDelete
  28. [[[sivakasi maappillai said...

    //ஹி.. ஹி.. குத்தினா குத்தட்டுமே மாப்பிள்ளை..!///

    அவளின் உணர்ச்சிகள், பேசுவது கிளியா. பாக்க முடியாது.... வெறும் ம்யூசிக்க வச்சு விமர்சனம் எழுதனும்
    பரவாயில்லையா??]]]

    பார்த்திருவோம் மாப்ளை.. பார்த்திட்டுச் சொல்றேன்..!

    ReplyDelete
  29. திருசெந்தூர் எக்ஸ்பிரஸ் அனைத்து படை வீடுகளின் வழியாகவும் செல்லும் .. ( இதை மாற்ற போவதாக ஒரு பேச்சு )

    ReplyDelete
  30. "போனாவது பண்ணுங்க சாமி..!"

    give number.... I have to discuss about the film " vilai " !!!

    ReplyDelete
  31. [[[பார்வையாளன் said...
    திருசெந்தூர் எக்ஸ்பிரஸ் அனைத்து படை வீடுகளின் வழியாகவும் செல்லும்.(இதை மாற்ற போவதாக ஒரு பேச்சு)]]]

    எல்லா படை வீடுகளின் ஊடேயும் செல்லவில்லை. பக்கத்தில் தொட்டு விட்டுச் செல்கிறது..!

    ReplyDelete
  32. அண்ணே
    ஆர்வமுள்ள பதிவர்களை உங்க தலைமை ல , அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு அழைத்து செல்லலாம் . பக்தி பதிவர் பயணம்

    ReplyDelete
  33. [[[பார்வையாளன் said...
    "போனாவது பண்ணுங்க சாமி..!"
    give number.... I have to discuss about the film " vilai " !!!]]]

    தளத்தில் கொடுத்திருக்கிறனே தலைவா..? 9840998725 போன் பண்ணுங்க..

    ReplyDelete
  34. [[[பார்வையாளன் said...
    அண்ணே, ஆர்வமுள்ள பதிவர்களை உங்க தலைமைல, அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு அழைத்து செல்லலாம். பக்தி பதிவர் பயணம்]]]

    தல.. இந்த அளவுக்கெல்லாம் நான் வொர்த் இல்லீங்கோ..

    இதெல்லாம் சாத்தியப்படாது..!

    ReplyDelete
  35. [[[எஸ்.ஏ.சரவணக்குமார் said...
    முருகா சரணம்..!]]]

    கந்தா சரணம்..! கடம்பா சரணம்.. கதிர்வேலா சரணம்..!

    ReplyDelete
  36. பக்தி பரவசத்துடன் எழுதிய பதிவு போல....

    ReplyDelete
  37. அருமை.


    ஆடிக்கிருத்திகையில் ராஜ அலங்காரத்தில் முருகனை ஏகாந்தமா சேவிக்கும் பாக்கியம் கிடைச்சது ஏழாம் படைவீட்டில்.

    கெமெரா கொண்டு போக மறந்துட்டேன். நம்ம வகையில் பைனாப்பிள் கேஸரி செஞ்சு கொண்டுபோய் அப்புறம் வந்த பக்தர்களுக்கு விநியோகம் செஞ்சாச்சு.

    http://ezhampadaiveedu.blogspot.com/2010/06/blog-post.html

    ReplyDelete
  38. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    பக்தி பரவசத்துடன் எழுதிய பதிவு போல....]]]

    "போல இல்லீங்கண்ணா.. அப்படித்தான்.."

    ReplyDelete
  39. அப்படியே ஹிந்தில பாடுறதுதானே?!
    பாலா உங்களுக்கு பதில் கொடுத்த தமிழினை பாத்தீகளா?

    ReplyDelete
  40. தமிழரே சுந்தர் பாராட்டி விட்டாரேன்னு உங்க பாதையை மறந்து விடாதீங்க

    ReplyDelete
  41. [[[துளசி கோபால் said...

    அருமை. ஆடிக் கிருத்திகையில் ராஜ அலங்காரத்தில் முருகனை ஏகாந்தமா சேவிக்கும் பாக்கியம் கிடைச்சது ஏழாம் படைவீட்டில்.

    கெமெரா கொண்டு போக மறந்துட்டேன். நம்ம வகையில் பைனாப்பிள் கேஸரி செஞ்சு கொண்டுபோய் அப்புறம் வந்த பக்தர்களுக்கு விநியோகம் செஞ்சாச்சு.
    http://ezhampadaiveedu.blogspot.com/2010/06/blog-post.html]]]

    டீச்சர், ஏழாம் படை வீட்டை ஜோரா நடத்துங்க..!

    வருகைக்கு நன்றி..!

    ReplyDelete