Pages

Tuesday, August 17, 2010

இட்லி, தோசை, பொங்கல், வடை, சட்னி, சாம்பார்-17-08-2010


17-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


 கைது செய்ய முடியாமல் திணறும் கர்நாடக போலீஸ்..!

ஆடு திருடிய வழக்கு என்றாலே ஆளைப் பிடித்து உள்ளே போட்டுவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும் போலீஸார், குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் ஒருவரை கைது செய்ய முடியாமல் தவிப்பது விந்தைதான்.


2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பாக கேரளாவின் மக்கள் முன்னணியின் தலைவரான அப்துல் நாசர் மதானி 31-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.  இவரைக் கைது செய்ய பிடிவராண்டு பிறப்பித்து ஒரு மாதமாகியும் கர்நாடக போலீஸார் கேரளாவில் முகாமிட்டு பத்து நாட்களுக்கு மேலாகியும் இன்னமும் அவரைக் கைது செய்ய முடியவில்லை. முடியவில்லை என்பதற்கு உண்மையான காரணம் இந்தக் கைதால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்கெடுத்து விடு்மோ என்கிற பயம் இரு மாநில அரசுகளுக்கும் இருப்பதுதான். 

மதானி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை பெங்களூர் தனி நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. அவரை கைது செய்ய பெங்களூர் மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது.  இதையடுத்து அவரை கைது செய்வதற்காக பெங்களூர் மத்திய குற்றப் பிரிவு போலீஸ் கமிஷனர் சித்தராமைய்யா தலைமையில் 6 போலீ்ஸ் அதிகாரிகள் கடந்த 10-ம் தேதி கொல்லம் சென்று இன்னமும் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மதானியின் வீட்டருகே குவிந்ததால் பிரச்சினை பெரிதாகும் என்று நினைத்து கைது நடவடிக்கைக்கு கேரள போலீஸார் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணனோ “மதானி தகுந்த நேரத்தில் கைது செய்யப்படுவார். அதைச் செய்ய வேண்டியது கர்நாடக போலீஸார்தான். சட்டம் ஒழுங்கையும் நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது. எனவே கைதை இன்னும் அனுமதிக்காமல் உள்ளோம்” என்று கூறினார்.

இப்போது முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார் மதானி. கொல்லம் மாவட்டமே இப்படி டென்ஷனில் சாமியாடிக் கொண்டிருக்கும் சூழலில், சுப்ரீம் கோர்ட்டில் மனு விசாரணைக்கு வரும்வரை மருத்துவமனையில் இருக்கலாமே என்ற யோசனையில் கொல்லம் மருத்துவமனையில் அட்மிட்டாகிவிட்டார் மதானி.

இதுவே சாதாரணமான ஒரு பொதுஜனமாக இருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்..?



சந்தித்து கொண்ட காதலியும், மனைவியும்..!

சென்ற மாதம் பாலிவுட்டில் பரபரப்பான நியூஸே இதுதான்.. ஒரு காலத்தில் எலியும், பூனையுமாக இருந்த ஜெயாபச்சனும், எவர்கிரீன் ஹீரோயினும், அமிதாப்பின் முன்னாள் காதலியுமான ரேகாவும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டதுதான்..!


கெளதம் ராஜயக்ஷயா என்பவர் எழுதிய புத்தகத்தின் வெளியிட்டு விழாவுக்கு வந்திருந்த ஜெயாவும், ரேகாவும் சந்திக்காமலேயே போவதற்கு வாய்ப்பிருந்தும், ரேகாவின் விருப்பத்தின்பேரில் சந்தித்தது வீடியோவில் பார்த்தாலே தெரிகிறது.. ரேகாதான் ஜெயாவிடம் சரண்டராயிருக்கிறார் என்று மறுநாள் அனைத்து பத்திரிகைகளும் புள்ளி வைத்து கோலம் போட்டு எழுதியிருந்தன.

1981-ல் வெளிவந்த யாஷ்சோப்ராவின் சில்சிலா என்ற திரைப்படத்தில்தான் ஜெயாபச்சனும், ரேகாவும் கடைசியாக இணைந்து நடித்திருந்தார்கள். இதில் இவர்களுடன் அமிதாப்பும் நடித்திருந்தார். கிட்டத்தட்ட இவர்களது முக்கோணக் காதல் கதையை ஒட்டியே படத்தின் கதையும் இருந்து தொலைந்து படத்திற்கு நல்ல பெயர் கிடைத்தது. ஜெயாவுக்கும் அமிதாப் கிடைத்தார். ரேகாதான் பாவம்..!


புகைப்படக்காரர்களுக்கு அன்றைக்கு செமத்தியாக தீனி கிடைத்தாலும், கஜோல், பத்மினி கோலாப்பூரி, ஹேமமாலினி லதா மங்கேஷ்கார், ஆஷா போன்ஸ்லே, என்று இன்னொரு ஹாட்டான பார்ட்டிகளெல்லாம் இதே விழாவுக்கு வந்திருந்தும் அவர்களை படம் எடுக்க ஆளில்லாமல் போனதால் அவர்கள்தான் படு அப்செட்டாம்..!



ஈழத் தமிழன் சிவந்தனின் நடைப்பயணம்..!

மகிந்த ராஜபக்சே என்னும் இதயமில்லாத மனிதனின் பேராசையாலும், கொடுங்கோன்மையாலும் ஈழம் என்கிற கனவை தற்போதைக்கு சிதையுண்டு போனாலும், லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் மத்தியில் அந்தக் கனவு இன்னமும் நெருப்பாய் கனன்று கொண்டுதான் இருக்கிறது.

இலங்கையில் தமிழர் தாயகத்தில் இடம் பெற்ற தமிழின அழிப்பைக் கண்டித்தும் இதற்கு உடனடியாக விசாரணை நடத்தி இன அழிப்பில் ஈடுபட்டவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டுமென்றும், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும் சென்ற மாதம் 23-ம் நாள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு லண்டனில் இருந்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். லண்டனில் இருந்து பிரான்ஸ், இத்தாலி வழியாக கிட்டத்தட்ட 900 கிலோ மீட்டர்கள் தூரத் தொலைவை கடந்து ஜெனீவாவை அடையவிருக்கும் சிவந்தனின் இந்த நடைப்பயணத்திற்கு எனது மனப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 12 மணி நேரம் நடந்து சென்று கொண்டிருக்கும் சிவந்தனுடன் ஒவ்வொரு நாட்டிலும், ஆங்காங்கே பல ஈழத் தமிழர்களும் அந்த நாட்டு எல்லை வரையிலும் அவருடன் நடந்து சென்று அவரை ஊக்குவித்து வருகிறார்கள்..! இன உணர்வு என்பது இருக்கிறது.. இனத்தைக் காக்க போராட வேண்டிய தைரியமும், ஆற்றலும் நம்மிடையே உண்டு என்பதை நமக்கே சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த சிவந்தனை எத்தனை பாராட்டினாலும் தகும்..!

சிவந்தனின் நடைப்பயணத்தில் அவர் ஒரு நாளைக்குக் கடக்கும் தூரத்தை வைத்து எத்தனை நாட்களில் அவர் ஜெனீவாவை வந்தடைவார் என்று கணிக்க முடியாததால் தற்போதைக்கு தேதியை உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது என்கிறார்கள். ஜெனீவாவின் ஐ.நா. மனித உரிமைகள் சபை தலையமைகத்தின் முன்பாக இருக்கும் ஈகப் பேரொளி முருகதாசன் திடலில், ஈழத் தமிழர்களின் மாபெரும் கண்டனக் கூட்டமும் நடைபெறவிருக்கிறது.

ஐ.நா.வின் போர்க் குற்ற விசாரணைக் குழுவையே எதிர்த்து போராட்டம் நடத்தி ஐ.நா. அலுவலகத்தையே மூட வைக்கின்ற அளவுக்கு வெறியர்களாக உள்ள சிங்கள இனவாத ஆட்சிக்கு எதிராக ஐ.நா. கடும் நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும். சிவந்தன் ஐ.நா.விடம் சமர்ப்பிக்கவுள்ள மனுவில் ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல.. தமிழகத்தில் உள்ள ஈழத்து ஆதரவு தமிழர்களின் உளப்பூர்வமான ஒப்புதலும் இருக்கிறது.

http://www.vgtv.no/?id=31467&category=1

கணவன் மனைவி சண்டை - ஒரே நாளில் காணாப் போச்சு..!

கணவன், மனைவி சண்டையென்றால் சில நிமிடங்கள். சில நாட்கள் என்பதெல்லாம் நிஜம்தான் போலிருக்கிறது.

முதல் நாள் காலை, தனது கணவரான ராகுல் மகாஜன் தன்னை அடித்து உதைத்து, முடியைப் பிடித்திழுத்து வீட்டிற்கு வெளியே தள்ளிவிட்டதாக போலீஸ் ஸ்டேஷன்வரைக்கும் சென்று புகார் பாடினார் ராகுலின் மனைவி டிம்பி.


லட்டு மாதிரி கிடைத்த செய்தியை வடக்கத்திய சேனல்காரர்கள் விட்டுவிடுவார்களா என்ன..? காலையில் இருந்து மறுநாள் காலைவரையிலும் இதை ஓட்டியே பொழைப்பை ஓட்டினார்கள்.

மறுநாளே இன்னுமொரு ஷாக் அவர்களுக்கு.. தம்பதிகள் இருவரும் ஜோடியாக சித்தி விநாயகர் கோவிலுக்கு வந்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டதை பார்த்து ஒரு கணம் திகைத்துதான் போனார்கள்.

அந்த புகார் என்னாச்சு என்ற கேள்விக்கு.. “அதை நீங்களும் மறந்திருங்க.. நாங்க மறந்திட்டோம்.. இது எங்க பெர்ஸனல் வாழ்க்கை.. இதுல இதுக்கு மேல தலையைக் கொடுக்காதீங்க” என்றார் ராகுல். இதை மட்டும் செய்திகளின் ஊடேயே காட்டிவிட்டு சமர்த்தாக ஒதுங்கிக் கொண்டன சேனல்கள்..

இந்த மீடியா தெய்வங்களுக்கு யாராவது தாலி அறுத்தால்தான் செய்தி போலிருக்கிறது.



கணவருக்கான அப்ரண்டீஸ் வேலையில் தேறிவிட்டார் சயீப்..!

போன மாதம் நான் எழுதிய கணவர்களைத் திருடும் நடிகைகள் -பாலிவுட் சர்வே  என்ற பதிவைப் படித்துவிட்டு அதிகமாகத் திட்டியும், குறைவாகப் பாராட்டியும் மடல் அனுப்பிய பிரசாத் என்னும் மும்பை நண்பர், இந்த லின்க்கை எனக்கு அனுப்பி வைத்துள்ளார்.


ஏதோ ஒரு விழாவில் கலந்து கொள்ள ஜோடியாக வருகிறார்கள் சயீப் அலிகானும், கரீனாவும்.. உள் அரங்கத்தில் மீடியாக்களின் பார்வைக்கு வந்தவுடன் கரீனாவுக்கு தனது உடை லூஸாகிவிட்டது போல் தோன்றியதாம்.. கணவர் வேலைக்குத் தற்போது டிரெயினிங் எடுத்துக் கொண்டிருக்கும் அப்ரண்டீஸான சயீப்பிடம் கரீனா ஏதோ சொல்ல.. கர்மசிரத்தையாக எஜமானியின் மேலாடையை இன்னும் கொஞ்சம் டைட் செய்கிறார் சயீப்..!

அப்ரண்டீஸ்லேயே இப்படின்னா பெர்மனன்ட்டுன்னு அப்பாயிண்ட்மெண்ட் கிடைச்சுட்டா இவர் நிலைமை என்னாகும்..?



வி.ஏ.ஓ. விண்ணப்பத்தினை பூர்த்தி செய்த கதை..!


ஏழு கழுதை வயசான பின்னாடிதான் நமக்குப் புத்தி வந்திருக்கு. கோடம்பாக்கமே கதி என்று சுற்றிய பின்பும், பத்திரிகையுலகில் அடுத்தப் புயல் நான்தான் என்று பிலிம் காட்டியபோதும், சீரியல் உலகில் எனக்கு நானே சீரியல் லைட் பிடித்தபோதும் வராத அறிவு இப்போது வந்திருக்கிறது.

காலம்போன கடைசியில் தற்போது டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கும் வி.ஏ.ஓ. போஸ்ட்டுக்கு விண்ணப்பித்தால் என்ன..? தேர்வு எழுதினால் என்ன..? பாஸ் செய்தால் என்ன..? வேலை கிடைத்தால் பொழைப்பைப் பார்க்கப் போனால் என்ன என்று புத்தி வந்திருக்கிறது.

அப்ளிகேஷனில்தான் கொஞ்சம் பிரச்சினை..! முக்கியமான தலைமை அஞ்சலங்களிலும், சென்னையில் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திலும் மட்டுமே விண்ணப்பங்கள் கொடுக்கப்படுகின்றன. விண்ணப்பத்துடன் தரப்படும் குறிப்பேடு டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும் அனைத்துப் பதவிகளுக்குமான பொது குறி்ப்பேடு. இந்த வி.ஏ.ஓ. பதவிக்கான தனிக் குறிப்பேடு அல்ல.

அந்தக் குறிப்பேட்டில் விண்ணப்பத்தினரை பூர்த்தி செய்வது  எப்படி என்றுதான் விளக்கம் கொடுத்திருக்கிறார்களே தவிர, வி.ஏ.ஓ. பதவிக்கான விதிமுறைகள் எதுவும் அதில் இல்லை..

இதை எங்கடா போய் வாங்குறதுன்னு போன் செஞ்சு கேட்டா.. “பேப்பர்ல விளம்பரம் வந்துச்சே.. அதுல பாருங்க ஸார்.. நாங்க தனியால்லாம் அடிக்கலை. பேப்பர் கிடைக்கலைன்னா. நீங்க நெட்ல இருந்து டவுன்லோடு செஞ்சுக்குங்க”ன்னு அலட்சியமா சொல்லிட்டு போனை வைச்சுருச்சு ஒரு தாய்க்குலம்..

எனக்குப் பரவாயில்லை.. டவுன்லோடு செஞ்சுட்டேன்.. எங்கிட்டோ காரியாப்பட்டில இருக்கிறவன் என்ன செய்வான்..? அந்த விளம்பரம் வந்த அன்னிக்கு பேப்பரை வாங்காதவன் எங்கெங்க தேடியிருப்பான்..? அவனுக்கெல்லாம் எப்படி கிடைக்கும் இது..?  

இந்த லட்சணத்துல அந்த அப்ளிகேஷன் 30 ரூபா. முப்பது ரூபாயை மட்டும் வாங்கத் தெரிஞ்சவங்களுக்கு விதிமுறைகளை இணைச்சுக் கொடுக்கணும்ன்ற குறைந்தபட்ச அறிவுகூட இல்லையா..? எப்படித்தான்யா இந்த அதிகாரிகளைத் திட்டுறது..?

சதாவின் உண்மையான அழுகை..!

இது ஹைதராபாத்தில் இருந்து எனது தம்பி செந்தில்குமார் அனுப்பியது. எந்தக் காலத்தில் எடுத்ததோ தெரியவில்லை.


போய்யா போ என்று வலிப்பு நோய் வந்ததைப் போல ஜெயம் படத்தில் நடிப்பைக் காட்டிய சதா என்னும் நமது முன்னாள் தமிழ் நடிகை தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்கும்போது பாடல் காட்சியில் யூனிட்காரங்க தன்னைப் படுத்திய பாட்டை பார்த்து திடீரென்று அழுது தீர்த்து “நடிக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு ஓடிய ஒரிஜினல் காட்சிதான் இது..! என்ன படம் என்பதை யாராவது சொன்னால் தெரிந்து கொள்கிறேன்..!

நிஜமாகவே இந்தப் பொண்ணு ஸ்கிரீனைவிட  நிஜத்துல  நல்லாவே கண்ணீர் விடுதுங்க..!



தாத்தா நெல்சன் மண்டேலாவுக்கு வந்த சோதனை..!

வயசான காலத்துல ஒரு மனுஷனுக்கு இப்படியெல்லாம் பிரச்சினை வந்தா எப்படிங்க..?

தென்னாப்பிரிக்காவின் காந்தி தாத்தாவான நம்ம நெல்சன் மண்டேலாவின் புறக்கணிக்கப்பட்ட மகள் நான் என்று போன வருடம் இறந்து போன தென்னாப்பிரிக்க பெண்மணி ஒருவர் சொல்லியிருப்பதுதான் சென்ற வாரம் தென்னாப்பிரிக்காவில் ஹாட் நியூஸ்.


மாபூலே என்னும் அந்தப் பெண்மணி சென்ற ஆண்டு இறந்து போனார். அவர் எழுதி வைத்திருக்கும் கடிதங்களும், விட்டுச் சென்ற ஆதாரங்களும்தான் இப்போது மண்டேலாவின் நியாயவான் கோட்டையை கொஞ்சம் அசைத்திருக்கிறது.

தனது தாயாரான செய்பதி மோனாகலிக்கும், மண்டேலாவுக்கும் 1945-ம் ஆண்டில் உறவு இருந்ததாகவும், அதன் பலனாய் பிறந்த தன்னை இத்தனை நாட்களாக மண்டேலா ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்துவிட்டதாக எழுதி வைத்திருக்கிறார் மாபூலே.

பேக்கரியில் வேலை பார்த்து வந்த மாபூலே, தனது ஆறு பிள்ளைகள் மற்றும் 12 பேரப் பிள்ளைகள் சூழ வாழ்ந்தாலும் தனது தந்தை மண்டேலா என்பதை நிரூபிக்க முடியாத பெரும் வருத்தத்தில் இருந்திருக்கிறார். இதற்காக மண்டேலாவையும், அவரது குடும்பத்தினரையும் சந்திக்க பல முறை முயன்றும் முடியவில்லை என்றும் வருத்தப்பட்டுச் சொல்லியிருக்கிறார். தான் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு மாபூலே, மண்டேலாவுக்கு எழுதிய உணர்ச்சிகரமான கடிதத்தையும் அந்தப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

“அன்புள்ள அப்பா.. நம்முடைய நீண்ட கால உணர்ச்சிப்பூர்வமான, ரகசியமான உறவு முறையை இப்போது நான் தொட்டிருப்பதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இப்போதும் உங்களிடம் நான் வைக்கும் கோரிக்கை என்னவெனில், உங்களைச் சந்திக்க எனக்கு அனுமதி தரும்படி இப்போதும் வேண்டுகிறேன். ஏனெனில் நீங்கள்தான் எனது தந்தை. நான் தங்களுடைய ரத்த வாரிசுதான் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்..” இப்படி எழுதப்பட்டிருக்கிறது அந்த பாசக் கடிதம்..!

மாபூலேவுக்கு தான் மண்டேலாவின் மகள் என்கிற விஷயமே 1998-ம் வருடம் அவரது பாட்டியான வின்பிரட் மோனாகலி சொல்லித்தான் தெரியுமாம். அவருடைய தாயார் செய்பதி மோனாகலியோ, 1992-ம் ஆண்டு இறக்கின்றவரையிலும் மாபூலேயின் அப்பா பற்றிய எந்தத் தகவலையும் சொல்ல மறுத்துவிட்டாராம்..


மண்டேலா வெற்றிகரமான இளம் வழக்கறிஞராகப் பணியாற்றியபோது அப்படி, இப்படி இருந்ததெல்லாம் ஆப்பிரிக்க கண்டம் முழுவதுமே தெரிந்ததுதான் என்றாலும் வாரிசுகள் என்று கிளம்பி வந்திருப்பது இதுதான் முதல் முறை என்கிறார்கள்.  இதையேதான் மண்டேலாவின் பேரன் மண்ட்லாவும் பத்திரிகையாளர்களிடம் சொல்லியிருக்கிறார். “இது மாதிரி நிறைய பேர் இதுவரையிலும் எங்களிடம் வந்து சொல்லியிருக்கிறார்கள். நாங்களும் மண்டேலா பேமிலிதான் என்று.. எத்தனை பேரைத்தான் எங்களால் ஒத்துக் கொள்ள முடியும்.. எங்க தாத்தா கிளியரா சொல்லிட்டாரு.. மூணே மூணு கல்யாணம்தான் என்று.. ஸோ.. அவ்வளவுதான்.. மாபூலே விஷயத்துல அவர் உசிரோட இருந்தால்கூட டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம். இப்போதான் அவர் இல்லையே.. பின்பு எப்படி உறுதி செய்வது..?” என்று சொல்லியிருக்கிறார்.

நெல்சன் மண்டேலா தரப்பில் இருந்து இதுவரையிலும் எந்தப் பதிலும் இதற்கு வரவில்லை. ஆனாலும் மாபூலே தெரிவித்திருக்கும் செய்திகளின் அடிப்படையில் அதனை ஆராய்ந்து பார்த்த நெல்சன் மண்டேலா பவுண்டேஷனின் அதிகாரிகள் இதில் அதிகம் உண்மையிருப்பதாக மண்டேலாவின் புதல்வி ஜிண்ட்ஜிக்கு கடிதம் அனுப்பிவிட்டு பதிலுக்காகக் காத்திருக்கிறார்களாம்..

நடிகை கவிதாவின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்..!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி டீன் ஏஜில் வழக்கமாக கதாநாயகியாக உருவெடுத்து, ஆடிக் களைத்த பின்பு அம்மா கேரக்டரிலும் நடித்து முடித்து, இந்தியத் திரையுலகத்தின் வழக்கமான ரிட்டையர்ட்மெண்ட்டுக்கு அப்புறமான வேலை என்பதைப் போல தற்போது அரசியலில் தலையெடுத்திருக்கும் கவிதா அம்மணியைப் பற்றி தெலுங்குலகில் தற்போது பரபர செய்திகள்.


நடிகை ரோஜா தெலுங்கு தேசத்தில் விலகிய பிறகு, தற்போது அக்கட்சியில் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கின்ற கவிதாவுக்கு வாய் ரொம்பவே ஜாஸ்தி என்கிறார்கள் டாலிவுட் பத்திரிகையாளர்கள்.

தெலுங்கு தேசத்தில் சேரும்போதே சிரஞ்சீவி கட்சியில் இணைவதற்கு தன்னிடம் பணம் கேட்டதாக ஒரு புயலைக் கிளப்பி சிரஞ்சீவிக்கு எதிராக முதல் கரும்புள்ளியைக் குத்திவிட்டவர் இவர்தான்..!

தன்னுடைய வீட்டில் பணியாற்றிய இளம் பெண்களைத் தரக்குறைவாக, ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகவும் இவர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது..! அவ்வளவு பேச்சு பேசுவார் என்கிறார்கள்.

தமிழில் ஏதோ ஒரு படத்தில் நடிக்கின்றபோது உடன் நடித்த வடிவுக்கரசியுடன் லேசான மோதலில் ஆரம்பித்து கடைசியில் அது கை கலப்பு வரையிலும் போனது கோடம்பாக்கத்து நியூஸ்..!

தமிழைவிட தெலுங்கில்தான் அம்மணி நிறைய படங்களில் நடித்திருக்கிறார். பூர்விகமும் அதுதான். தான் தயாரித்த அதிகமான படங்களில் கவிதாவை நடிக்க வைத்திருக்கும் தெலுங்கு தயாரிப்பாளர் அம்பிகா கிருஷ்ணா கவிதாவைப் பற்றிச் சொல்கையில், ஒரு ஊதுபத்தி எரிஞ்சு முடியறதுக்குள்ள கவிதாகிட்ட நாம 50 கெட்ட வார்த்தையாவது கத்துக்கலாம். அவ்வளவு நல்ல வார்த்தைகள் வரும் அந்தம்மாகிட்டேயிருந்து..” என்று சொல்லியிருப்பது ஹாட் நியூஸ்..

இதுதான் இப்படியென்றால் சமீபத்தில் மிக நீண்ட நாட்கள் கழித்து சென்னைக்கு ஷூட்டிங்கிற்காக வந்த கவிதா, ஒரு மதிய நேரத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டல் பாரில் கொஞ்சூண்டு ஏற்றிக் கொண்டு விட்ட சவுண்ட்டில் பாரில் வேலை செய்தவர்களே அரண்டு போய், “இனிமே அந்த சினிமா கம்பெனிக்கு இங்க ரூம் தரக்கூடாது” என்று கண்டிஷனாகச் சொல்லியே விட்டார்கள்.

இது இப்படியிருக்க.. அம்மணி இதன் பின்பு ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மிகச் சாதாரணமாகச் சொல்லியிருப்பதுதான் டாலிவுட்டை கொஞ்சம் கலக்கியிருக்கிறது. “நான் வாய்ப்புக்காக எந்த அளவுக்கும் இறங்கி வருபவள் அல்ல.. இதுவரைக்கும் என் விருப்பமில்லாமல் எவனும் என்னைத் தொட்டதில்லை..! பட வாய்ப்புக்கிற்காக எந்தத் தயாரிப்பாளரிடமும் நான் படுத்ததில்லை..” என்று ஓப்பன் டாக்கில் அள்ளிவிட.. அரசியல் அரங்கைவிட டாலிவுட்டே கொஞ்சம் பதைபதைத்துதான் போயிருக்கிறது..!

பார்த்ததில் பிடித்தது

பிரபல மலையாள நடிகர் உண்டபக்ருவும், அவரது மனைவி காயத்ரியும்..!

நன்றி..!

மீண்டும் அடுத்த வாரம் சந்தி்ப்போம்..!

48 comments:

  1. //
    டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கும் வி.ஏ.ஓ. போஸ்ட்டுக்கு விண்ணப்பித்தால் என்ன..? தேர்வு எழுதினால் என்ன..? பாஸ் செய்தால் என்ன..? வேலை கிடைத்தால் பொழைப்பைப் பார்க்கப் போனால் என்ன என்று புத்தி வந்திருக்கிறது.
    //

    நல்ல யோசனை வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அண்ணே நான் வடக்கூர் செய்தியை காசு கொடுத்து படின்னு சொன்னாலும் படிக்கிறதில்லை

    ReplyDelete
  3. ஆனாலும் ஜெயாவைவிட ரேகா சூப்பர் பிகர். ம்ம்

    ReplyDelete
  4. நல்லா இருந்துது அண்ணா இன்றைய டிபன் :) :)

    பல தகவல்கள்.. நடைபயணமாவது ஈழ தமிழர் வாழ்வில் வளம் ஏற்படுத்தினால் நலம் தான்..

    டி.என்.பி.சி தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா :) :)

    ReplyDelete
  5. எங்க இருந்து புடுக்கிறியா? இது போலான வீடியோவை....???

    ReplyDelete
  6. இத்தனை வீடியோ போட்டீங்களே...கூட
    ரெண்டு பிட் வீடியோ போட்டிருந்த சந்தோசமா
    இருந்துருக்கும்.....

    ReplyDelete
  7. //டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கும் வி.ஏ.ஓ. போஸ்ட்டுக்கு விண்ணப்பித்தால் என்ன..? தேர்வு எழுதினால் என்ன..? பாஸ் செய்தால் என்ன..? வேலை கிடைத்தால் பொழைப்பைப் பார்க்கப் போனால் என்ன என்று புத்தி வந்திருக்கிறது.//

    அப்புறம் தமிழ் பிளாக் உலகமே ஸ்தம்பிச்சுடும்னே. அப்புறம் அந்தப் போஸ்டுக்கு உச்ச பட்ச வயது வரம்பு என்னன்னு பாருங்கண்ணே.

    ReplyDelete
  8. அண்ணே,
    TNPSC அந்த vao தேர்வுக்கு வயது வரம்பு இருக்கிறதா?

    பார்க்கவும்.

    ReplyDelete
  9. கிராம அதிகாரி ஆக வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  10. ரேகா பாவம், சதா பாவம்...உமா சங்கர் பாவம்...சிவந்தனுக்கு வாழ்த்துக்கள்...டிம்பிக்கு வாழ்த்துக்கள்... சபாஷ் சாயீஃப்... பாவம் மாபூலே...கலக்கல் கவிதா...சபாஷ் 'அமிதாப் பக்ரூ'...

    ReplyDelete
  11. [[[நசரேயன் said...

    //டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கும் வி.ஏ.ஓ. போஸ்ட்டுக்கு விண்ணப்பித்தால் என்ன..? தேர்வு எழுதினால் என்ன..? பாஸ் செய்தால் என்ன..? வேலை கிடைத்தால் பொழைப்பைப் பார்க்கப் போனால் என்ன என்று புத்தி வந்திருக்கிறது.//

    நல்ல யோசனை வெற்றி பெற வாழ்த்துக்கள்]]]

    உங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி நசரேயன்..!

    ReplyDelete
  12. [[[நசரேயன் said...
    அண்ணே நான் வடக்கூர் செய்தியை காசு கொடுத்து படின்னு சொன்னாலும் படிக்கிறதில்லை.]]]

    இதென்ன கெட்டப் பழக்கம்..? எல்லா நியூஸும் நமக்குத் தேவைதான்..! அவசியம் படிக்கோணும்..! அதுவும் ஒரு பொது அறிவுதான்..!

    ReplyDelete
  13. [[[அகில் பூங்குன்றன் said...
    ஆனாலும் ஜெயாவைவிட ரேகா சூப்பர் பிகர். ம்ம்]]]

    ஆனாலும், குடும்பம் நடத்த முடியுமான்னு அமிதாப் யோசிச்சிருப்பாருன்னு நினைக்கிறேன்..!

    ReplyDelete
  14. [[[kanagu said...

    நல்லா இருந்துது அண்ணா இன்றைய டிபன் :) :)

    பல தகவல்கள்..

    நடைபயணமாவது ஈழ தமிழர் வாழ்வில் வளம் ஏற்படுத்தினால் நலம்தான்..

    டி.என்.பி.சி தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா :) :)]]]

    நன்றி தம்பி..!

    ReplyDelete
  15. [[[ஜாக்கி சேகர் said...
    எங்க இருந்து புடுக்கிறியா? இது போலான வீடியோவை....???]]]

    கூகிளாண்டாவர் துணையிருக்கும்போது என்ன கவலை ஜாக்கி..?

    ReplyDelete
  16. [[[ஜெட்லி... said...
    இத்தனை வீடியோ போட்டீங்களே. கூட
    ரெண்டு பிட் வீடியோ போட்டிருந்த சந்தோசமா இருந்துருக்கும்.]]]

    ஏன் சாமி உனக்கு இந்த கோபம்...?

    ஏதோ கொஞ்ச பேர்தான் இப்ப வந்துக்கிட்டிருக்காங்க.. இதுல சுத்தமா நாமத்தைப் போட ஐடியா கொடுக்குறியே..?

    ReplyDelete
  17. [[[R Gopi said...

    //டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கும் வி.ஏ.ஓ. போஸ்ட்டுக்கு விண்ணப்பித்தால் என்ன..? தேர்வு எழுதினால் என்ன..? பாஸ் செய்தால் என்ன..? வேலை கிடைத்தால் பொழைப்பைப் பார்க்கப் போனால் என்ன என்று புத்தி வந்திருக்கிறது.//

    அப்புறம் தமிழ் பிளாக் உலகமே ஸ்தம்பிச்சுடும்னே. அப்புறம் அந்தப் போஸ்டுக்கு உச்ச பட்ச வயது வரம்பு என்னன்னு பாருங்கண்ணே.]]]

    40 வயதுதான் அதிகப்பட்சம். ஆனால் ஊனமுற்றவர்களுக்கு பத்து வயது வரையிலும் தள்ளுபடி உண்டு..!

    ReplyDelete
  18. [[[காவேரி கணேஷ் said...
    அண்ணே, TNPSC அந்த vao தேர்வுக்கு வயது வரம்பு இருக்கிறதா?
    பார்க்கவும்.]]]

    40..!

    ReplyDelete
  19. [[[sivakasi maappillai said...
    கிராம அதிகாரி ஆக வாழ்த்துக்கள்.]]]

    சிவகாசி மாப்பிள்ளைக்கு நன்றி..!

    ReplyDelete
  20. [[[ஸ்ரீராம். said...
    ரேகா பாவம், சதா பாவம்... உமா சங்கர் பாவம்... சிவந்தனுக்கு வாழ்த்துக்கள்... டிம்பிக்கு வாழ்த்துக்கள்... சபாஷ் சாயீஃப்... பாவம் மாபூலே... கலக்கல் கவிதா... சபாஷ் 'அமிதாப் பக்ரூ'...]]]

    அட்டகாசம்..! அமர்க்களம்..! ஒரே குத்துல அல்லாரையும் வீழ்த்திட்டீங்க..!

    ReplyDelete
  21. அண்ணே ரொம்ப நாள் கழிச்சு இந்த டிபன் நல்லா இருக்கு....

    அடிக்கடி எழுதுங்க அண்ணே... நீங்க அரசியல்பத்தி எழுதாமல் உள்ளது எனக்கு கொஞ்சம் சந்தேகம் தருகிறது....

    ReplyDelete
  22. /1981-ல் வெளிவந்த யாஷ்சோப்ராவின் சில்சிலா//
    // ஜெயாவுக்கும் அமிதாப் கிடைத்தார்//

    அண்ணே.. அபிஷேக் 1976லே பிறந்தாரே... எப்படி? அவருக்கு ஜெயா பச்சன் தானே தாயார்? புரியல எனக்கு

    ReplyDelete
  23. நல்லாருக்கு. என்னா சினிமா செய்திகள் கொஞ்சம் தூக்கலா இருக்கு

    ReplyDelete
  24. Karki Said.....
    1981-ல் வெளிவந்த யாஷ்சோப்ராவின் சில்சிலா//
    // ஜெயாவுக்கும் அமிதாப் கிடைத்தார்//

    அண்ணே.. அபிஷேக் 1976லே பிறந்தாரே... எப்படி? அவருக்கு ஜெயா பச்சன் தானே தாயார்? புரியல எனக்கு



    Yenakkum puriyala.....

    ReplyDelete
  25. [[[தமிழ் உதயன் said...

    அண்ணே ரொம்ப நாள் கழிச்சு இந்த டிபன் நல்லா இருக்கு....

    அடிக்கடி எழுதுங்க அண்ணே... நீங்க அரசியல் பத்தி எழுதாமல் உள்ளது எனக்கு கொஞ்சம் சந்தேகம் தருகிறது.]]]

    என்ன சந்தேகம் உதயன்..?

    ReplyDelete
  26. [[[கார்க்கி said...

    /1981-ல் வெளிவந்த யாஷ்சோப்ராவின் சில்சிலா//

    //ஜெயாவுக்கும் அமிதாப் கிடைத்தார்//

    அண்ணே.. அபிஷேக் 1976லே பிறந்தாரே. எப்படி? அவருக்கு ஜெயாபச்சன்தானே தாயார்? புரியல எனக்கு]]]

    உண்மைதான் தம்பி..! திருமணத்திற்குப் பின்பும் ஜெயா பல படங்களில் நடித்து வந்திருக்கிறார். அதில் இதுவும் ஒன்று..!

    ரேகாவும், ஜெயாவும் இணைந்து பல படங்களில் நடித்திருந்தாலும் அதுதான் அந்தக் காலக் கட்டத்தில் கடைசி என்பதை மட்டுமே குறிப்பிடுகிறேன்..!

    அமிதாப்பச்சன் தொடர்பாக ஜெயா-ரேகா இடையே, இந்தப் படத்தின் ஷூட்டிங்கிலும், பட வெளியிட்டிற்குப் பின்பு நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களும் கண்ணில் பட்டன. பின்பு வேறொரு பதிவில் அதனைப் பகிர்கிறேன்..!

    தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள்..!

    அதெப்படி தப்புன்னா தெரிஞ்சா மட்டும்தான் வீட்டுக்கு வருவியா..? மத்த நாளெல்லாம் எட்டிக் கூட பார்க்கிறதில்ல..!

    ReplyDelete
  27. [[[மோகன் குமார் said...
    நல்லாருக்கு. என்னா சினிமா செய்திகள் கொஞ்சம் தூக்கலா இருக்கு.]]]

    சாம்பார் நிறைய ஊத்திட்டேன் போலிருக்கு..!

    ReplyDelete
  28. ஜூம் டிவி சேனல் ஒரு பாடாவிதி சேனல் என்பது வடநாட்டுகாரர்களே ஒத்துகொண்ட விஷயம். இந்த லச்சணத்துல அவ புடவை அவுந்து போச்சு இவ ஜட்டி கிழிஞ்சி போச்சின்னு என்னவோ உலக செய்தி சொல்றாராம். வர வர கழுத கட்டெறும்பு ஆனா கதைதான் உம்முடைய ஓசி வலைமனை. இதுதான் கடைசியா போடுற கமெண்ட், உம்முடைய வலைமனைக்கு இனி ஒரு குட் பாய்.

    ReplyDelete
  29. அண்ணே மனசு சரி இல்லை ணே .உங்களுக்கு எதிரா சதி ணே . இந்த வி ஏ ஓ தேர்வுல அடிஷனல் ஷீட் தர மாட்டாய்ங்களாலாம் . ஏராளமா எழுதி குவிக்கிறதுதான் நம்ம ஸ்பெஷாலிட்டி . அதுக்கு ஆப்பு வச்சுட்டாய்ங்க . நாம எப்படீணே கரை சேர போறோம் ? :-(

    ReplyDelete
  30. [[[சாரு புழிஞ்சதா said...

    ஜூம் டிவி சேனல் ஒரு பாடாவிதி சேனல் என்பது வடநாட்டுகாரர்களே ஒத்து கொண்ட விஷயம். இந்த லச்சணத்துல அவ புடவை அவுந்து போச்சு இவ ஜட்டி கிழிஞ்சி போச்சின்னு என்னவோ உலக செய்தி சொல்றாராம். வர வர கழுத கட்டெறும்பு ஆனா கதைதான் உம்முடைய ஓசி வலைமனை. இதுதான் கடைசியா போடுற கமெண்ட், உம்முடைய வலைமனைக்கு இனி ஒரு குட் பாய்.]]]

    ஆமா ரொம்ப அவசியம் பாரு.. போங்கடா போய் உங்க வேலைய பாருங்கடா..

    ReplyDelete
  31. [[[பார்வையாளன் said...
    அண்ணே மனசு சரி இல்லைணே. உங்களுக்கு எதிரா சதிணே. இந்த வி ஏ ஓ தேர்வுல அடிஷனல் ஷீட் தர மாட்டாய்ங்களாலாம். ஏராளமா எழுதி குவிக்கிறதுதான் நம்ம ஸ்பெஷாலிட்டி. அதுக்கு ஆப்பு வச்சுட்டாய்ங்க. நாம எப்படீணே கரை சேர போறோம்? :-(]]]

    பார்வையாளன் ஸார்..

    வி.ஏ.ஓ. தேர்வுல டிக் பண்றதுதான் வேலை.. எழுதறது இல்லை..

    அதுனால இதை நினைச்சு வருத்தமெல்லாம் நமக்கு வேணாம்..!

    ReplyDelete
  32. [[[கிருஷ்குமார் said...

    Karki Said.....
    1981-ல் வெளிவந்த யாஷ்சோப்ராவின் சில்சிலா//
    // ஜெயாவுக்கும் அமிதாப் கிடைத்தார்//

    அண்ணே.. அபிஷேக் 1976லே பிறந்தாரே... எப்படி? அவருக்கு ஜெயா பச்சன் தானே தாயார்? புரியல எனக்கு.

    Yenakkum puriyala.....]]]

    ஒரு சின்ன தப்பு நடந்து போச்சுண்ணே.. கார்க்கிக்கு பதில் சொல்லியிருக்கேன் பாருங்க..!

    ReplyDelete
  33. advance congrats and wish u all the success.

    pinnal athukku oru pathivu pottu lanjam laavanyam ithil niraiya vilaiyaadi irukki niraiya peru thervezhuthaamale paas pannittaangannu solluveengannu ninaikkiren. lanjam irunthaal ungalukku velai nichchayam

    but onnu rendu seat padikkiravangalukkum kidaikkuthu athil neenga paas aaga ungal murugan thunai irukka vendugiren

    ReplyDelete
  34. தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா!!

    அப்புறம் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.உங்க ப்ரொபைல் பெயர் உ.த பக்கத்தில் ஒரு 20 நம்பர் போட்டிருக்கிங்களே அது எதை குறிக்குது??

    ReplyDelete
  35. விரைவில் வி ஏ ஓ. ஆக வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  36. நல்ல வெரைட்டி டேஸ்ட்..

    அப்புறம்

    நல்ல சில்லறை கிடைக்கிற வேலைக்குதான் அப்ளை பண்ணிருக்கீங...). வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. [[[பித்தன் said...

    advance congrats and wish u all the success.

    pinnal athukku oru pathivu pottu lanjam laavanyam ithil niraiya vilaiyaadi irukki niraiya peru thervezhuthaamale paas pannittaangannu solluveengannu ninaikkiren. lanjam irunthaal ungalukku velai nichchayam

    but onnu rendu seat padikkiravangalukkum kidaikkuthu athil neenga paas aaga ungal murugan thunai irukka vendugiren.]]]

    நன்றி பித்தன்ஜி.. உங்களது வாக்கு பலிக்கட்டும்..!

    ReplyDelete
  38. [[[Mrs.Menagasathia said...
    தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா!!

    அப்புறம் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். உங்க ப்ரொபைல் பெயர் உ.த பக்கத்தில் ஒரு 20 நம்பர் போட்டிருக்கிங்களே அது எதை குறிக்குது??]]]

    ரொம்ப நன்றிம்மா..!

    அது பிளாக்கர் நம்பர்ம்மா..!

    ReplyDelete
  39. [[[துளசி கோபால் said...
    விரைவில் வி ஏ ஓ. ஆக வாழ்த்துகின்றேன்.]]]

    வாழ்த்துக்களுக்கு நன்றி டீச்சர்..!

    ReplyDelete
  40. [[[Jey said...

    நல்ல வெரைட்டி டேஸ்ட்..

    அப்புறம்

    நல்ல சில்லறை கிடைக்கிற வேலைக்குதான் அப்ளை பண்ணிருக்கீங...). வாழ்த்துக்கள்.]]]

    ஹா.. ஹா.. ஹா.. ஜெய்.. சில்லறை வாங்கினா முருகன் கல்லறையைக் காட்டிருவான்..!

    ReplyDelete
  41. \\[[[Mrs.Menagasathia said...
    தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா!!

    அப்புறம் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். உங்க ப்ரொபைல் பெயர் உ.த பக்கத்தில் ஒரு 20 நம்பர் போட்டிருக்கிங்களே அது எதை குறிக்குது??]]]

    ரொம்ப நன்றிம்மா..!

    அது பிளாக்கர் நம்பர்ம்மா..!\\

    நான் கேள்விப்பட்டவரை அவ்ளோ ஹிட்ஸ் வந்தவுடனே பதிவுக்கு முழுக்குப் போடுவீங்கன்னு சொன்னாங்க:)

    ReplyDelete
  42. மிகவும் வருந்துகிறேன் உண்மைத்தமிழன்....

    //ஏதோ ஒரு விழாவில் கலந்து கொள்ள ஜோடியாக வருகிறார்கள் சயீப் அலிகானும், கரீனாவும்.. உள் அரங்கத்தில் மீடியாக்களின் பார்வைக்கு வந்தவுடன் கரீனாவுக்கு தனது உடை லூஸாகிவிட்டது போல் தோன்றியதாம்.. கணவர் வேலைக்குத் தற்போது டிரெயினிங் எடுத்துக் கொண்டிருக்கும் அப்ரண்டீஸான சயீப்பிடம் கரீனா ஏதோ சொல்ல.. கர்மசிரத்தையாக எஜமானியின் மேலாடையை இன்னும் கொஞ்சம் டைட் செய்கிறார் சயீப்..!

    அப்ரண்டீஸ்லேயே இப்படின்னா பெர்மனன்ட்டுன்னு அப்பாயிண்ட்மெண்ட் கிடைச்சுட்டா இவர் நிலைமை என்னாகும்..?

    //

    முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணாக இருந்தாலும், பெண்ணின் ஆடை அவளுக்குத் தெரியாமலேயே விலகி இப்படி இருக்கும்போது அவர்களை உடனே அறிவுறுத்துவதும் அவசரமானால் யார் வேண்டுமானலும் அதைச் சரி செய்ய உதவிக்கரம் கொடுப்பதும் இயல்பான உதவிகள். ஏற்கனவே பழகியவர் அல்லது அறிமுகமானவர் என்றால் அத்தகைய உதவிகள் இயல்பாக வரும். இது போன்ற சின்னச் சின்ன உதவிகள் நல்லவிதமாக அணுகப்பட வேண்டும் திரையுலகம் என்றாலும்.

    அப்பரண்டீஸ் எசமான் எல்லாம் ரொம்ப அல்பமான வார்த்தைப் பிரயோகங்கள்.

    ReplyDelete
  43. [[[R Gopi said...

    \\[[[Mrs.Menagasathia said...
    தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா!!

    அப்புறம் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். உங்க ப்ரொபைல் பெயர் உ.த பக்கத்தில் ஒரு 20 நம்பர் போட்டிருக்கிங்களே அது எதை குறிக்குது??]]]

    ரொம்ப நன்றிம்மா..!

    அது பிளாக்கர் நம்பர்ம்மா..!\\

    நான் கேள்விப்பட்டவரை அவ்ளோ ஹிட்ஸ் வந்தவுடனே பதிவுக்கு முழுக்குப் போடுவீங்கன்னு சொன்னாங்க:)]]]

    உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி கோபி..!

    ஆனால் இது நடவாத காரியம்.. அதுவரையிலும் என் அப்பன் முருகன் என்னை இங்கேயே விட்டு வைத்திருக்க மாட்டான்..!

    ReplyDelete
  44. [[[கல்வெட்டு said...

    மிகவும் வருந்துகிறேன் உண்மைத்தமிழன்....
    முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணாக இருந்தாலும், பெண்ணின் ஆடை அவளுக்குத் தெரியாமலேயே விலகி இப்படி இருக்கும்போது அவர்களை உடனே அறிவுறுத்துவதும் அவசரமானால் யார் வேண்டுமானலும் அதைச் சரி செய்ய உதவிக்கரம் கொடுப்பதும் இயல்பான உதவிகள். ஏற்கனவே பழகியவர் அல்லது அறிமுகமானவர் என்றால் அத்தகைய உதவிகள் இயல்பாக வரும். இது போன்ற சின்னச் சின்ன உதவிகள் நல்லவிதமாக அணுகப்பட வேண்டும் திரையுலகம் என்றாலும்.
    அப்பரண்டீஸ் எசமான் எல்லாம் ரொம்ப அல்பமான வார்த்தைப் பிரயோகங்கள்.]]]

    கல்வெட்டுஜி..

    இது அவர்களைப் பொறுத்தவரையில் மீடியாவில் கிடைக்கும் ஒரு பப்ளிசிட்டி..!

    இதனை இப்படித்தான் விமர்சனம் செய்தாக வேண்டும்..!

    நீங்கள் இயல்பு என்கிறீர்கள். ஆனால் அதனை வைத்து அவர்கள் தங்களுக்கு விளம்பரம் தேடும்போது எதற்கு ஆராதனைகளும், உச்சுக் கொட்டுதலும்..!

    விடுங்கண்ணே..!

    ReplyDelete
  45. .

    உண்மைத் தமிழன்,
    எனக்கு இந்த மேல்சட்டை சரி செய்தல் மிகவும் இயல்பானதாய் தெரிகிறது.

    அந்தச் சூழ்நிலையில் நானாக இருந்தாலும் நானும் அப்படித்தான் நடந்திருப்பேன். சமீபத்தில் நீச்சல் உடையில் மேல்சட்டையின் கொக்கி பின்னால் கழன்றுவிழும் சூழ்நிலையில் ஒரு 14 வயது பெண்ணிற்கு இப்படி உதவியும் உள்ளேன். பலருடைய வாழ்வில் இப்படி நடந்திருக்கும்.

    *

    நீங்கள் பிட்டுப்படம் பார்த்து பார்த்து இப்படி ஆகி விட்டீர்களோ? :-)))


    **
    இங்கே நீங்கள் போட்டிருக்கும் நடிகை சதா அவர்களின் அழுகை கூட அவரும் ஒரு பெண் , சராசரி மனிதர் என்ற எல்லைகள் தாண்டி கவர்சியை கறக்கும் பொருட்டு துன்புறுத்தப்படும்போது (காசு கொடுத்தாலும் பாலியல் தொழிலாளியிடம்கூட கடைபிடிக்கப்பட வேன்டிய நெறிகள் உண்டு) வரும் அழுகை இயல்பானதே.

    **

    எப்போதும் பத்திரிக்கை /போட்டோகள் சூழ்ந்து இருக்கும் சூழலில் ஒன்றும் செய்ய முடியாது. "கிழக்கு வெளுத்தாச்சு" என்ற படம் கோவை சிறுவாணி அருகே படமாக்கப்பட்டபோது மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா அவர்கள் ஒண்ணுக்குப்போக ஒதுங்கினால்கூட கூட்டம் அவரை விரட்டிக் கொண்டே இருந்தது.
    **

    ReplyDelete
  46. [[[கல்வெட்டு said...
    உண்மைத் தமிழன், எனக்கு இந்த மேல்சட்டை சரி செய்தல் மிகவும் இயல்பானதாய் தெரிகிறது.
    அந்தச் சூழ்நிலையில் நானாக இருந்தாலும் நானும் அப்படித்தான் நடந்திருப்பேன். சமீபத்தில் நீச்சல் உடையில் மேல்சட்டையின் கொக்கி பின்னால் கழன்றுவிழும் சூழ்நிலையில் ஒரு 14 வயது பெண்ணிற்கு இப்படி உதவியும் உள்ளேன். பலருடைய வாழ்வில் இப்படி நடந்திருக்கும்.*]]]

    அதனைச் சரி செய்வதற்கு நிறைய இடங்களுக்கான வாய்ப்புகள் அந்த அரங்கத்தில் நிச்சயம் இருந்திருக்கும் கல்வெட்டுஜி..

    நான் இதனை பப்ளிசிட்டி என்கிற வகையிலேயே பார்த்ததால்தான் அது போல் எழுதினேன்.. உண்மையாகவே அவசரத்தில் நடந்ததாக எனக்குத் தோன்றியிருந்தால் நிச்சயம் அவ்வாறு எழுதியிருக்க மாட்டேன்.

    என்னைப் பற்றி உங்களுக்கே தெரியும்..!

    ReplyDelete
  47. சதா அழுத பாட்டு தேடிக் கிண்டி எடுத்திருக்கிறேன் இந்தாங்க முருகா ;)

    http://www.youtube.com/watch?v=hkCkJSPZwfo

    படம் பேர் அ ஆ இ ஈ

    ReplyDelete
  48. [[[கானா பிரபா said...

    சதா அழுத பாட்டு தேடிக் கிண்டி எடுத்திருக்கிறேன் இந்தாங்க முருகா ;)

    http://www.youtube.com/watch?v=hkCkJSPZwfo

    படம் பேர் அ ஆ இ ஈ]]]

    ஆஹா..! தம்பின்னா நீதாண்டா தம்பி.. தங்கக் கம்பி..

    நான் கேட்காமயே எனக்காக ஒரு உதவி செஞ்சிருக்க பாரு.. நீ ஆஸ்திரேலியா இருந்தாலும் என் இதயத்துல தனியா இடம் பிடிச்சிட்ட ராசா..!

    நூறாயுசு வாழ்க..!

    ReplyDelete