Pages

Saturday, August 07, 2010

பாணா காத்தாடி - சினிமா விமர்சனம்


07-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'துரதிருஷ்டம்' என்கிற வார்த்தைக்கு மிகச் சிறந்த உதாரணம் இத்திரைப்படத்தின் கதை.. மிக நல்ல கதை.. படமாக்கியவிதமும் அருமை..

வாழ்க்கையை நாம் எவ்வளவுதான் திட்டமிட்டு, அறிவூப்பூர்வமான சிந்தனையுடன் செயல்பட்டு செதுக்கி வைத்தாலும், ஒரு நொடியில் அனைத்தையும் கலைத்துப் போட்டு விடுவான் அப்பன் முருகன்.

நம் அறிவை மிஞ்சியும் ஏதோ ஒன்று உலகத்தில் இருக்கிறது. நம்மைச் சுற்றியே அதுவும் இருக்கிறது. அதனை விதி எனலாம். நம்பாதவர்கள் பெயர் சொல்லாமலேயே “அதுக்கென்ன செய்யறது..? நடக்கணும்னு இருக்கு.. நடந்திருச்சு” என்று சமாளித்துவிட்டுப் போய்விடலாம்.. ஆனாலும் ஒரு பிரமிப்பு நம்மை விட்டுப் போகாது.. இந்த உணர்வு பெரும்பாலும் நமக்குத் துக்கச் சம்பவத்தில்தான் புரியும்.. இன்பத்தில் புரியவே புரியாது..

இப்படியொரு துன்பவியல் சம்பவத்தை கிளைமாக்ஸில் வைத்துவிட்டு படத்தின் துவக்கத்திலிருந்து, இறுதி வரையிலும் ஒரு பல்லாங்குழி ஆட்டத்தை அற்புதமாக ஆடியிருக்கிறார் படத்தின் இயக்குநர்.

பாணா என்னும் காற்றாடியைப் போல வானில் பறந்து, திரிந்து, காற்றில் அலைந்து, அசைந்தோடி இறுதியில் ஒரு நொடியில் வீழ்கின்ற வாழ்க்கையைத்தான் படம் பிடித்திருக்கிறார்கள் என்பதால் பாணா என்கிற படத்தின் தலைப்பும் பொருத்தமாகத்தான் இருக்கிறது..


பாணா காற்றாடி விடுவதில் இருக்கும் ஆர்வத்தை, படிப்பில் காட்டாமல் ஊர் சுற்றும் நான்கு பள்ளி மாணவர்கள். காற்றாடியை விரட்டிச் செல்லும்போது கதாநாயகியான ப்ரியாவின் பென் டிரைவையும் தன்னையே அறியாமல் தட்டிச் சென்று விடுகிறான் ஹீரோ ரமேஷ்.

தன்னுடைய பேஷன் டெக்னாலஜி படிப்பின் பிராஜெக்ட் வொர்க் அந்த பென் டிரைவிற்குள் இருப்பதால் பதற்றமான பிரியா, ரமேஷின் வீட்டிற்கு நேரில் வந்து பென் டிரைவை கேட்க..  “எனக்குத் தெரியாது. நான் எடுக்கல..” என்று அவளுடன் சண்டையிட்டு திருப்பியனுப்பி வைக்கிறான் ரமேஷ்.

இதனாலேயே அவளிடம் ஒரு அறையும் வாங்கிக் கொள்கிறான். ஆனாலும் அடுத்த நாளே அவனது டிராயரில் பென் டிரைவ் சிக்கிவிட மரியாதையாக அதை பிரியாவிடம் திருப்பிக் கொடுக்கச் செல்கிறான். இந்த நாகரிகம் அவர்களுக்கிடையே நட்பை துவக்கி வைக்க.. வீட்டிற்குள் பாயாசம் சாப்பிடும் அளவுக்கு இருவருக்குமிடையில் நெருக்கம் கூடுகிறது.


இதற்கு ஒரு ஆப்பு வைக்கிறான் இந்த இளந்தாரிகள் கூட்டத்தில் இருக்கும் வாலிபனான கருணாஸ். அவனுடைய 'உபயோகத்திற்காக' வைத்திருந்த நிரோத் காண்டம் பாக்கெட்டை, பணம் என்று நினைத்து  அவசரத்தில் எடுத்துக் கொண்டு போய் ப்ரியாவிடம் நீட்டி விடுகிறான் ரமேஷ்.. அந்த நேரத்தில் போலீஸ் அங்கே வர..

திடீரென்று போலீஸை அந்தச் சூழலில் சந்தித்த ப்ரியா, தப்பிக்க வேண்டி ரமேஷை யாரென்றே எனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டுப் போய் விடுகிறாள். போலீஸில் அடிபட்டு, மிதிபட்டு அவமானத்துடன் வீடு வந்து சேர்கிறான் ரமேஷ்.

இந்த நேரத்தில் லோக்கல் தாதாவான பிரசன்னா செய்யும் ஒரு கொலையை ரமேஷ் நேரில் பார்த்துத் தொலைத்துவிட, வில்லங்கம் வில் மாதிரி படையெடுத்து வருகிறது. அவனைச் சில நாட்கள் வெளியூரில் போய் இருக்கும்படி சொல்லி பணம் கொடுத்து அனுப்புகிறார் பிரசன்னா. 


ஏற்கெனவே ப்ரியா தன்னை அவமானப்படுத்திய விஷயத்தால் நொந்து போயிருக்கும் ரமேஷ், இப்போது குஜராத்துக்கு பயணப்படுகிறான். இந்த நேரத்தில் ரமேஷின் மீது தவறில்லை என்பதையும், அவன் தன்னை டீப்பாக காதலித்தவன் என்பதையும் புரிந்து கொண்டு ஹீரோயின் ப்ரியா பின்னாடியே குஜராத்துக்கு வந்து நிற்க.. ரமேஷ் அவளை ஏற்க மறுத்து பிடிவாதம் பிடிக்கிறான்.

அகமதாபாத்தில் வருடந்தோறும் நடக்கும் காற்றாடி போட்டியில் வெற்றி பெற்று பணத்துடன் திரும்பி வரும் ரமேஷுக்கு பூதம் கொலையுண்டவனின் மகன் மூலமாக வருகிறது. பிரசன்னாவின் கையால் குத்துப்பட்டுச் செத்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால், அவரின் மகன் கமிஷனரிடம் நேரடியாகப் புகார் செய்ய..

அதுவரைக்கும் கூட்டாளியாக இருந்த லோக்கல் இன்ஸ்பெக்டர் பிரசன்னாவின் தலைவரான ராஜேந்திரனிடம் வந்து “யாரோ ஒரு பையன பார்த்ததா ஒரு அலிபி கமிஷனர்கிட்ட சிக்கிருக்கு. அந்தப் பையனை நாமளே முடிச்சிடறது நல்லது. இல்லேன்னா நம்ம எல்லாரும் கூண்டோடு உள்ள போக வேண்டி வரும்” என்று எச்சரித்துவிட்டுப் போக.. இப்போது சிக்கல் பிரசன்னாவுக்கு ரமேஷை கொலை செய்தே தீர வேண்டும் என்று..

வாலிபன் கருணாஸ் மூலமாக காதலி ப்ரியாவின் மனதை அறியும் ரமேஷ் தான் அவளைச் சந்திக்கப் போய் காதலை புதுப்பிக்க நினைக்க..

ரமேஷை கொலை செய்துதான் தீர வேண்டும் என்ற தலைவரின் கட்டளையை மீற முடியாத நிலையில் பிரசன்னா..

பிரசன்னா செய்யாவிட்டால் தாதா கூட்டத்தில் இன்னொருவனும் ரமேஷை போட்டுத் தள்ளத் தயாராக இருக்க..

ரமேஷ் தனது காதலியிடம் சேர்ந்தானா? அல்லது இவர்களிடம் வீழ்ந்தானா என்பதுதான் கிளைமாக்ஸ்..

என்றும் மாணவ நடிகரான முரளியின் மகன் அதர்வாதான் ஹீரோ. ரமேஷாக உருமாறியிருக்கிறார். நிஜமாகவே நல்ல நடிப்பு. முதல் படம் போலவே தெரியவில்லை.. சென்னையிலேயே பிறந்து வாழ்ந்தவர் என்பதால் கூவம் பாஷையிலும் பொளந்து கட்டியிருக்கிறார்.

அடக்கமான, அமர்க்களமில்லாத நடிப்பு என்பதால் தமிழ்த் திரையுலகில் நிச்சயம் இவர் ஒரு ரவுண்டு வர வாய்ப்புண்டு. அடுத்து யாராவது பெரிய இயக்குநர் ஒருவர் இவரை வைத்து இன்னொரு ஹிட்டடித்துவிட்டால் நிச்சயம் ஹீட்டாகிவிடுவார். 


அதே போல் ஹீரோயினாக நடித்த சமந்தா. இயக்குநர் செமத்தியாக ஹோம்வொர்க் கொடுத்து பிழிந்திருப்பார் போலிருக்கிறது. பாடல் காட்சிகளில் மாடுலேஷனில் மட்டுமே சற்றுப் பிசகுகிறது. மற்றபடி இவருடைய நடிப்பும் அசத்தல் ரகம்தான்.. பொருத்தமான ஜோடி. ஆனால் தமிழ்ச் சினிமா எதிர்பார்க்கும் ஏதோ ஒன்று இந்தப் பெண்ணிடம் இல்லை என்பதால் மேற்கொண்டு சில படங்களில் மட்டுமே இவரை காண முடியும் என்று நினைக்கிறேன்.

எத்தனை சான்ஸ்கள் வீடு தேடி வந்தும் தலையாட்டாத மெளனிகா, இதில் அம்மா கேரக்டரில் இருக்கின்ற அத்தனை நடிப்பையும் கொட்டித் தீர்த்திருக்கிறார். இன்னும் இரண்டு படங்களில் இதேபோல் இவர் நடித்தால், சரண்யாவுக்கு செம பைட் கொடுக்கலாம்..

கருணாஸின் கூட்டணியை வைத்து முற்பாதியில் இருக்கும் நகைச்சுவையை குறைத்து மதிப்பிட முடியாது. அதுதான் படத்தை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறது. துவக்கத்தில் போலீஸ் ஸ்டேஷனில் கருணாஸை மாட்டிவிடும் காட்சியும், சப்-இன்ஸ்பெக்டர் கருணாஸை வறுத்தெடுக்கும் காட்சியுமே உதாரணம். கருணாஸே படத்திற்கு இடைவேளை விடவும் காரணமாக இருக்கிறார். இறுதியில் காதலர்கள் சேரவும் காரணமாக இருக்கிறார். இவருக்கும், இவரது அப்பா டி.பி.கஜேந்திரனுக்கும் இடையில் நடக்கும் டக் அப் வார் பெரிதும் ரசிக்கக் கூடியது.


'அஞ்சாதே' டைப் கேரக்டர் பிரசன்னாவுக்கு.. கூலிக்கு வேலை செய்யும் தாதா என்றாலும் தன்னிடம் வேலை கேட்டு வரும் அதர்வாவின் பிரெண்ட்டை நாலு அறைவிட்டு ஸ்கூலுக்கு போய் படிக்கச் சொல்கிறார். காற்றாடிக்காக நடந்த சண்டைக்குப் பின் அதர்வாவையும், நண்பர்களையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று கூல்டிரிங்க்ஸ் கொடுத்துவிட்டு தான் வைத்திருந்த காற்றாடியை எடுத்துக் கொடுக்கும் மென்மையான கேரக்டர்.. இறுதியில் “அதான் நீ இருக்கியேண்ணே.. பார்த்துக்க மாட்டியா?” என்ற அப்பாவித்தனமான அதர்வாவின் பேச்சில் தாக்கப்பட்டு ஒரு முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் 'ஏ' கிளாஸ் நடிப்பு. இப்படியாவது சிற்சில கேரக்டர்களில் பிரசன்னா வந்து போனால் நன்றாக இருக்கும்..

கூவம் பாஷையை கொத்து புரோட்டா போட்டு கொலை செய்யும் மற்ற சினிமாக்கள் மத்தியில், நம்மை நிஜமான கூவத்திற்கே கொண்டு போய் உட்கார வைத்து விட்டார்கள்.

முதலில் இப்படியொரு கதையை தயார் செய்ததற்கு இயக்குநருக்கு ஒரு ஷொட்டு. பொதுவாக தங்களுடைய முதல் படத்திலேயே இப்படியொரு கிளைமாக்ஸுக்கு கதாநாயகனும், இயக்குநரும் பெரும்பாலும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். எப்படி இதில் தயாரிப்பாளரை காம்பரமைஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் ஆச்சரியம்தான்.. சந்தடிச்சாக்கில் தயாரிப்பாளரின் முதுகிலும் ஒரு டின் கட்டிவிடுவோம்.. சூப்பருங்கோ ஸார்..


படத்தின் மிகப் பெரும் பலமே வசனங்கள்தான்.. துவக்கக் காட்சியில் வரும் சில இரட்டை அர்த்த வசனங்களை மறந்துவிட்டுப் பார்த்தால் மொத்தத்தில் அருமையான வசனங்கள்.

சன் டிவியில் 'மீண்டும் மீண்டும் சிரிப்பு' என்று காமெடி நிகழ்ச்சிக்கு 14 வருடங்களாக கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ராதாகிருஷ்ணன்தான், இந்தப் படத்திற்கு வசனகர்த்தா. 'சின்னப் பாப்பா பெரிய பாப்பா', 'சூப்பர் டென்', 'கலக்கப் போவது யாரு முதல் பாகம்,' 'கிங் ஜாக் குயின்' என்று நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இந்த ராதாகிருஷ்ணன்தான் வசனகர்த்தா..

“ராதா எழுதலைன்னா நான் சீரியலில் நடிக்க மாட்டேன்” என்று இன்றுவரையிலும் எஸ்.வி.சேகர் மறுதலிக்கும் அளவுக்கு அவருடைய ஆஸ்தான ரைட்டர் இதே ராதாதான். விஜய் டிவியில் வந்த 'நாட்டு நடப்பு' இவருடைய கை வண்ணம்தான். சன் டிவி என்றில்லை. இப்போது எல்லா டிவிக்களிலும் நகைச்சுவை எழுத்துப் பணியைத் திறம்பட செய்து வருபவர். தனது முதல் திரைப்படத்திலேயே வெற்றியடைந்திருக்கும் ராதாவுக்கு ஒரு ஷொட்டு. 

அதிலும் முரளி ரெஸ்ட்டாரெண்ட்டில் அதர்வாவிடம் ரோஜாப் பூவை கொடுத்துவிட்டு சொல்கின்ற டயலாக்கிற்கு தியேட்டரே ஆடிப் போகிறது.. பொருத்தம் பார்த்துத்தான் அடித்திருக்கிறார்கள்..

பிற்பாதியில் கொஞ்சம் சோகத்தை அப்பிய நிலையில் இருப்பதால் தொய்வானது போல் தோன்றியது.. இருந்தாலும் திடீரென்று வந்த அந்த குத்துப்பாட்டு அதையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது. இனி மிச்ச வருடம் முழுவதும் மியூஸிக் சேனல்களில் இதுதான் டாப்பில் ஓடும் என்று நினைக்கிறேன். ஊர்த் திருவிழாக்களிலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் இந்த டான்ஸ் நிச்சயம் உண்டு. வித்தியாசமாக இருக்கிறது. அதேபோல் சண்டைக் காட்சிகள் மூன்றுமே அசத்தல் ரகம். அதிலும் அதர்வா போடும் முதல் சண்டைக் காட்சியில் எடிட்டிங் பிரமாதம்.

யுவன்சங்கர்ராஜாவின் இசையில் பாடல்களும், இசையும் சுமார் ரகம்தான்.. கொஞ்சமே ரசிக்கும்படி இருந்தது.. இப்போது வெளியாகும் அனைத்து சினிமாக்களிலுமே இப்படித்தானே இருக்கிறது.. இவர்களை மட்டும் குற்றம் சொல்லி என்ன புண்ணியம்..?

நிஜமான சேரிப் பகுதிகளில் முடிந்த அளவுக்கு ஆர்ப்பாட்டமில்லாமல், இருப்பதை வைத்து எடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். முதல் காட்சியில் அந்த ரோடு சேஸிங்கில் அழகாக படமாக்கியிருக்கிறார்.. குஜராத் சம்பந்தப்பட்ட காட்சிகளின்போதும், பாடல் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளரின் சிறப்பான பணி தனியே தெரிகிறது.

இத்திரைப்படத்தின் இயக்குநர் வெங்கட்பத்ரி.. லஷ்மிகாந்தன் என்பவரின் கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கட்பத்ரி. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் இந்த நான்கையுமே நான்தான் செய்வேன் என்று பெரும்பாலான இயக்குநர்களைப் போல அடம் பிடிக்காமல் கதை, வசனத்திற்கு தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருக்கும் இவருடைய பெருந்தன்மைக்கு முதல் சல்யூட்..

இயக்குநர் வெங்கட்பத்ரி, லயோலா கல்லூரியின் விஸ்காம் மாணவர்.. அடையாறு பிலிம் இண்ஸ்ட்டியூட்டில் டைரக்ஷன் டிபார்ட்மெண்ட்டில் பேராசிரியராக வேலை பார்த்தவர். யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் நேரடித் தேர்வின் மூலம் இயக்குநராகியிருக்கிறார்.

தனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளரை ஏமாற்றாமல் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் அனைவரும் பாராட்டக் கூடிய அளவுக்கு படத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

வெல்டன் ஸார்.. இன்னும் இது போல் நிறைய நல்ல படங்களை எடுத்துக் கொடுங்கள்..

வாரவாரம் தியேட்டர்களுக்கு வருகின்ற கூட்டம் குறைந்து கொண்டே இருக்கும் இந்தச் சூழலில், இது போன்ற வெற்றிகரமான மீடியம் பட்ஜெட் திரைப்படங்கள் வெளிவருவது தமிழ்த் திரையுலகத்திற்கு ஆரோக்கியமான விஷயம்..

சினிமா ரசிகர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்..

உங்கள் வீட்டு பட்ஜெட்டில் இந்த மாதம் ஒரு சினிமாவுக்குத்தான் அனுமதியென்றால், தயங்காமல் இதற்குச் செல்லலாம்.

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com 

67 comments:

  1. அண்ணே.. இந்த ராமசாமி வர்றதுக்குள்ள மீ த ஃபர்ஸ்டு போட்டுட்டு தூங்க போறேன்.

    காலைல வந்து எப்பவும் போல கடைசி வரியை படிச்சிடுறேண்ணே!!!

    மீ த ஃபர்ஸ்டு..

    இராமசாமி.. தோத்தாங்கொள்ளி தொர்ரி

    ReplyDelete
  2. பாடல்களை ஆடியோவில் கேட்டு விட்டு கருத்து சொல்லுங்க சார்

    ReplyDelete
  3. அண்ணே, என்னை உண்மைதமிழனோட ரசிகரான்னு, பின்னூட்டத்தில கேட்டாங்க, எனக்கு எதுக்கு சொன்னாங்கனு புரியலை, உங்க பதிவுகள படிச்சதுகப்புறம்தான் புரியுது, உங்கள மாதிரியே பதிவ நீளமா போட்டதுனால சொல்லிருக்காங்கன்னு.

    எதை சொல்ல வந்தாலும் நல்லா விலாவாரியா வெலக்கு வெலக்குனு வெலக்கிரீங்கண்ணே.

    ReplyDelete
  4. வர வர காசு வாங்கிட்டு விமர்சனம் எழுதுற மாதிரி தெரியுது...? அண்ணே படம் பாக்க சொல்லி பரிந்துரை எல்லாம் செய்றீங்க இது நல்லால்ல...ஆமாம்...

    ReplyDelete
  5. [[[ஹாலிவுட் பாலா said...

    அண்ணே.. இந்த ராமசாமி வர்றதுக்குள்ள மீ த ஃபர்ஸ்டு போட்டுட்டு தூங்க போறேன்.

    காலைல வந்து எப்பவும் போல கடைசி வரியை படிச்சிடுறேண்ணே!!!

    மீ த ஃபர்ஸ்டு..

    இராமசாமி.. தோத்தாங்கொள்ளி தொர்ரி]]]

    இதுக்கெல்லாம் ஒரு போட்டியா..?

    பாலா.. ஹாலிவுட் பேரைக் கெடுக்குறப்பா..!

    ReplyDelete
  6. [[[krubha said...
    பாடல்களை ஆடியோவில் கேட்டு விட்டு கருத்து சொல்லுங்க சார்.]]]

    அதெல்லாம் கேட்டாச்சு..! சவுண்ட்டு மட்டும்தான் கேக்குது..!

    ReplyDelete
  7. [[[Jey said...
    அண்ணே, என்னை உண்மைதமிழனோட ரசிகரான்னு, பின்னூட்டத்தில கேட்டாங்க, எனக்கு எதுக்கு சொன்னாங்கனு புரியலை, உங்க பதிவுகள படிச்சதுகப்புறம்தான் புரியுது, உங்கள மாதிரியே பதிவ நீளமா போட்டதுனால சொல்லிருக்காங்கன்னு. எதை சொல்ல வந்தாலும் நல்லா விலாவாரியா வெலக்கு வெலக்குனு வெலக்கிரீங்கண்ணே.]]]

    அப்படியா..? சந்தோஷம்தான். நமக்கும் ஒரு தோஸ்த்து இருக்காரே..

    ஜெய்.. அடிக்கடி வாங்க..!

    ReplyDelete
  8. [[[கே.ஆர்.பி.செந்தில் said...
    வர வர காசு வாங்கிட்டு விமர்சனம் எழுதுற மாதிரி தெரியுது...?]]]

    எவ்வளவு வாங்கினேன்றதையும் எழுதியிருந்தீங்கன்னா சந்தோஷப்பட்டிருப்பேன்..! ஒரு கோடி, ஒரு லட்சம், பத்தாயிரம், ஆயிரம்.. ஏதாவது ஒண்ணை சொல்லுங்க..

    இதுவரைக்கும் எத்தனையோ படத்துக்கு எழுதியாச்சு.. காசு வாங்கித்தான் எழுதியிருப்பேன்னா
    நான் ஏன் இன்னமும் இப்படி தரித்திரமா உக்காந்திருக்கேன்..!?

    [[[அண்ணே படம் பாக்க சொல்லி பரிந்துரை எல்லாம் செய்றீங்க இது நல்லால்ல. ஆமாம்...]]]

    பையா, தில்லாலங்கடி போன்ற சினிமாக்களோடு ஒப்பிட்டால் இந்தப் படம் எவ்வளவோ பரவாயில்லை..!

    ReplyDelete
  9. //இதுவரைக்கும் எத்தனையோ படத்துக்கு எழுதியாச்சு.. காசு வாங்கித்தான் எழுதியிருப்பேன்னா
    நான் ஏன் இன்னமும் இப்படி தரித்திரமா உக்காந்திருக்கேன்..!?//

    அண்ணே நகைச்சுவைக்காக அப்படி எழுதினேன்.. உண்மையில் உங்கள் விமர்சனம் பார்த்து இன்று படத்துக்கு போகிறேன்...

    ReplyDelete
  10. ஆனந்த விகடன் ரேஞ்சுக்கு ஷொட்டு...மொட்டு என்று கலக்கறீங்க....
    (மார்க்கெல்லாம் போட்ராதீங்க)
    கொஞ்சம் சுருக்கி....க் கொண்டால்
    இன்னும் நன்றாக இருக்கும்....
    (விமர்சன தில்லாலங்கடி'தானய்யா நீர்)
    - ஆகாய மனிதன்

    ReplyDelete
  11. அன்பிற்கினிய அண்ணன் அவர்களே..,

    / / ..வெல்டன் ஸார்.. இன்னும் இது போல் நிறைய நல்ல படங்களை எடுத்துக் கொடுங்கள்.. / /


    வெல்டன் ஸார்.. இன்னும் இது போல் நிறைய நல்ல படங்களின் (தேவ லீலை, அந்தரங்கம் அல்ல) விமர்சனங்களை எடுத்துக் கொடுங்கள்..


    / /...அதிலும் முரளி ரெஸ்ட்டாரெண்ட்டில் அதர்வாவிடம் ரோஜாப் பூவை கொடுத்துவிட்டு சொல்கின்ற டயலாக்கிற்கு தியேட்டரே ஆடிப் போகிறது.. / /


    படத்தில் முரளி இருக்கிறாரா..?

    விமர்சனம் நன்றாக இருக்கிறது..


    நன்றி..,

    மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..

    S.ரமேஷ்.

    ReplyDelete
  12. பேசுவது கிளியா போகமல் பாணா போன உம்மை வன்மையாக கண்டிக்கிறேன்....

    உங்கள்ல்லாம் நம்பி ஒரு படம் ரீலீஸ் பண்ண முடிய மாட்டேங்குது

    ReplyDelete
  13. [[[கே.ஆர்.பி.செந்தில் said...

    //இதுவரைக்கும் எத்தனையோ படத்துக்கு எழுதியாச்சு.. காசு வாங்கித்தான் எழுதியிருப்பேன்னா
    நான் ஏன் இன்னமும் இப்படி தரித்திரமா உக்காந்திருக்கேன்..!?//

    அண்ணே நகைச்சுவைக்காக அப்படி எழுதினேன்.. உண்மையில் உங்கள் விமர்சனம் பார்த்து இன்று படத்துக்கு போகிறேன்.]]]

    இது உங்களுக்கும், எனக்கும் தெரியும் தம்பி.. மத்தவங்களுக்கு..?

    யாராவது ஒருத்தர் இதை சீரியஸா உண்மைன்னு நம்பிட்டா என் கதி..?

    ReplyDelete
  14. [[[ஆகாயமனிதன்.. said...
    ஆனந்த விகடன் ரேஞ்சுக்கு ஷொட்டு...மொட்டு என்று கலக்கறீங்க.... (மார்க்கெல்லாம் போட்ராதீங்க) கொஞ்சம் சுருக்கி....க் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்....

    (விமர்சன தில்லாலங்கடி'தானய்யா நீர்)
    - ஆகாய மனிதன்]]]

    ஆகாயம் ஸார்.. வருகைக்கு நன்றி..!

    விளக்கமாக எழுதுவது என்பது எனது பாணி..! தயவு செய்து என்னை என் போக்கிலேயே விட்டுவிடுங்கள்..!

    ReplyDelete
  15. [[[S.ரமேஷ். said...

    அன்பிற்கினிய அண்ணன் அவர்களே..,

    //வெல்டன் ஸார்.. இன்னும் இது போல் நிறைய நல்ல படங்களை எடுத்துக் கொடுங்கள்.. / /

    வெல்டன் ஸார்.. இன்னும் இது போல் நிறைய நல்ல படங்களின் (தேவ லீலை, அந்தரங்கம் அல்ல) விமர்சனங்களை எடுத்துக் கொடுங்கள்..

    //அதிலும் முரளி, ரெஸ்ட்டாரெண்ட்டில் அதர்வாவிடம் ரோஜாப் பூவை கொடுத்துவிட்டு சொல்கின்ற டயலாக்கிற்கு தியேட்டரே ஆடிப் போகிறது//

    படத்தில் முரளி இருக்கிறாரா..?]]]

    ம்... ஒரு காட்சியில் மட்டும் தோன்றுகிறார்..!

    வருகைக்கு நன்றி ரமேஷ்..!

    ReplyDelete
  16. [[[sivakasi maappillai said...
    பேசுவது கிளியா போகமல் பாணா போன உம்மை வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள்ல்லாம் நம்பி ஒரு படம் ரீலீஸ் பண்ண முடிய மாட்டேங்குது.]]]

    இந்தக் குத்தல் பேச்சை மட்டும் நல்லா பேசுங்க..!

    ஆனா ஓட்டு மட்டும் போட்டுராதீங்க..? என்ன..?

    ReplyDelete
  17. //யாராவது ஒருத்தர் இதை சீரியஸா உண்மைன்னு நம்பிட்டா என் கதி..?//

    அப்பன் முருகன் பாத்துக்குவான் அண்ணே....

    ReplyDelete
  18. unga budgetla mutha muraiyaa oru nalla padaththukku selavu senchirukkeenga pola

    ReplyDelete
  19. unga budgetla mutha muraiyaa oru nalla padaththukku selavu senchirukkeenga pola

    ReplyDelete
  20. aamaa inthamaathi maasam evvalavu selavu pannuveenga sathyam inoxnnaa budget konjam uthaikkume.....

    ReplyDelete
  21. பாடல் காட்சிகளில் மாடுலேஷனில் மட்டுமே சற்றுப் பிசகுகிறது

    நுட்பமான கவனிப்பு,அதேபோல் வசன்கர்த்தா பற்றிய தகவலும் புதுசு.உங்ககிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்குங்கோவ்

    ReplyDelete
  22. //பேசுவது கிளியா போகமல் பாணா போன உம்மை வன்மையாக கண்டிக்கிறேன்....//


    தாறுமாறாக வழிமொழிகிறேன்....



    அவளின் உணர்ச்சிகள் விமர்சனமும் சீக்கரம் போடுங்க...
    பக்கத்துக்கு வுட்டு தாத்தா உங்க விமர்சனத்தை படிச்சுட்டு
    தான் இப்ப எல்லாம் அட்டு படத்துக்கு போறார்....!!

    ReplyDelete
  23. //யாராவது ஒருத்தர் இதை சீரியஸா உண்மைன்னு நம்பிட்டா என் கதி..?//


    உண்மை பேரில் இருக்கும் போது எதுக்கு டென்ஷ‌ன்???

    ReplyDelete
  24. //இந்தக் குத்தல் பேச்சை மட்டும் நல்லா பேசுங்க..!

    ஆனா ஓட்டு மட்டும் போட்டுராதீங்க..? என்ன..?
    //

    சத்தியமா ஓட்டு போட தெரியலை... ஒருதபா போட்டேன்.. மறந்து போச்சு... யாரவது இது குறித்து எழுதினால் நலம்....

    இந்த தமிழில் பின்னூட்டம் போடுவது எப்படி என்பது கூட தல கேபிள் சொல்லி கொடுத்த்து....

    ReplyDelete
  25. //உங்கள் வீட்டு பட்ஜெட்டில் இந்த மாதம் ஒரு சினிமாவுக்குத்தான் அனுமதியென்றால் //


    உங்க பட்ஜெட் ல....இந்த‌ மாச‌ம்


    ஆறாவது வனம், இலக்கணபிழை, பாணா, அவளின் உணர்ச்சிகள், பேசுவ‌து கிளியா,நர்ஸ், நான் மகான் அல்ல,இனிது இனிது, வம்சம், வீரன் மாறன்,

    இத்தன படங்கள வச்சிகிட்டு....

    //நான் ஏன் இன்னமும் இப்படி தரித்திரமா உக்காந்திருக்கேன்..!?//

    என்று சீன் போடுகிறீரா???????

    ReplyDelete
  26. அண்ணே.. இந்த ராமசாமி வர்றதுக்குள்ள மீ த ஃபர்ஸ்டு போட்டுட்டு தூங்க போறேன்.

    காலைல வந்து எப்பவும் போல கடைசி வரியை படிச்சிடுறேண்ணே!!!

    மீ த ஃபர்ஸ்டு..

    இராமசாமி.. தோத்தாங்கொள்ளி தொர்ர

    விழுந்து விழுந்து சிரிச்சி வச்சேன்....

    அப்ப படம் பார்க்கலாம்.. சரி பார்க்கின்றேன்..

    ReplyDelete
  27. [[[கே.ஆர்.பி.செந்தில் said...

    //யாராவது ஒருத்தர் இதை சீரியஸா உண்மைன்னு நம்பிட்டா என் கதி..?//

    அப்பன் முருகன் பாத்துக்குவான் அண்ணே.]]]

    ஓ.. அவனா நீயி..!

    ReplyDelete
  28. [[[பித்தன் said...
    anne arumaiyaana vimarsanam vaazhthukkal.]]]

    நன்றி பித்தன்ஜி..!

    ReplyDelete
  29. [[[பித்தன் said...
    unga budgetla mutha muraiyaa oru nalla padaththukku selavu senchirukkeenga pola]]]

    அப்படியில்ல.. நான் பார்த்த சில நல்ல படங்கள்ல இதுவும் ஒண்ணு..!

    ReplyDelete
  30. [[[பித்தன் said...
    aamaa inthamaathi maasam evvalavu selavu pannuveenga sathyam inoxnnaa budget konjam uthaikkume.]]]

    அந்தப் பக்கமெல்லாம் தலைவைச்சுக்கூட படுக்கிறதில்லை.. வடபழனி, கோடம்பாக்கம், அசோக் நகரைத் தாண்டுறதில்லை.. அதுனால பாதிதான் செலவாகும்..!

    ReplyDelete
  31. [[[சி.பி.செந்தில்குமார் said...
    பாடல் காட்சிகளில் மாடுலேஷனில் மட்டுமே சற்றுப் பிசகுகிறது
    நுட்பமான கவனிப்பு, அதேபோல் வசன்கர்த்தா பற்றிய தகவலும் புதுசு. உங்ககிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்குங்கோவ்.]]]

    ஹி.. ஹி.. அப்படியில்லீங்கண்ணா. நானும் ரெண்டு, மூணு பேர்கிட்ட கத்துக்கிட்டதுதான்..!

    ReplyDelete
  32. [[[ஜெட்லி... said...

    //பேசுவது கிளியா போகமல் பாணா போன உம்மை வன்மையாக கண்டிக்கிறேன்....//

    தாறுமாறாக வழிமொழிகிறேன்.
    அவளின் உணர்ச்சிகள் விமர்சனமும் சீக்கரம் போடுங்க. பக்கத்துக்கு வுட்டு தாத்தா உங்க விமர்சனத்தை படிச்சுட்டுதான் இப்ப எல்லாம் அட்டு படத்துக்கு போறார்!!]]]

    ஜெட்லி தம்பி..

    இப்படியென்னை கை விடலாமா..?

    மத்த படம்ன்னா பர்ஸ்ட் ஷோவே பார்த்துட்டு மதியானமே பதிவு போடுற ஆளு நீ..!

    இப்ப என்னை மட்டும் மாட்டி விடுறியே..?

    ReplyDelete
  33. [[[sivakasi maappillai said...

    //யாராவது ஒருத்தர் இதை சீரியஸா உண்மைன்னு நம்பிட்டா என் கதி..?//

    உண்மை பேரில் இருக்கும்போது எதுக்கு டென்ஷ‌ன்???]]]

    ம்.. இப்படியொண்ண சொல்லி சமாளிக்காதீங்கப்பா..!

    தப்பு தப்புதான்..!

    ReplyDelete
  34. [[[sivakasi maappillai said...

    //இந்தக் குத்தல் பேச்சை மட்டும் நல்லா பேசுங்க..! ஆனா ஓட்டு மட்டும் போட்டுராதீங்க..? என்ன..?//

    சத்தியமா ஓட்டு போட தெரியலை... ஒரு தபா போட்டேன்.. மறந்து போச்சு... யாரவது இது குறித்து எழுதினால் நலம்....

    இந்த தமிழில் பின்னூட்டம் போடுவது எப்படி என்பதுகூட தல கேபிள் சொல்லி கொடுத்த்து.]]]

    மொதல்லல தமிழ்மணத்துல மெம்பராகுங்க.. உடனே லாகின் பண்ணி உள்ளே வாங்க.. அதுக்கப்புறம் ஓட்டு போட வேண்டிய பதிவை ஓப்பன் செஞ்சு தமிழ்மணம் கருவிப் பட்டைல கட்டை விரல் உயர்த்தியிருக்கிற இடத்தை கிளிக் பண்ணுங்க..!

    தானா அந்த ஓட்டு விழுந்திரும்..

    ReplyDelete
  35. [[[sivakasi maappillai said...

    //உங்கள் வீட்டு பட்ஜெட்டில் இந்த மாதம் ஒரு சினிமாவுக்குத்தான் அனுமதியென்றால் //

    உங்க பட்ஜெட் ல....இந்த‌ மாச‌ம்
    ஆறாவது வனம், இலக்கண பிழை, பாணா, அவளின் உணர்ச்சிகள், பேசுவ‌து கிளியா, நர்ஸ், நான் மகான் அல்ல, இனிது இனிது, வம்சம், வீரன் மாறன்,
    இத்தன படங்கள வச்சிகிட்டு....

    //நான் ஏன் இன்னமும் இப்படி தரித்திரமா உக்காந்திருக்கேன்..!?//

    என்று சீன் போடுகிறீரா???????]]]

    சிவகாசி மாப்பிள்ளை..

    இதுலயும் சில படங்களை மட்டும்தான் பார்ப்பேன்..!

    நானும் பட்ஜெட் போட்டுத்தான் படம் பார்த்துக்கிட்டிருக்கேன்..!

    ReplyDelete
  36. [[[ஜாக்கி சேகர் said...

    அண்ணே.. இந்த ராமசாமி வர்றதுக்குள்ள மீ த ஃபர்ஸ்டு போட்டுட்டு தூங்க போறேன்.
    காலைல வந்து எப்பவும் போல கடைசி வரியை படிச்சிடுறேண்ணே!!!
    மீ த ஃபர்ஸ்டு..
    இராமசாமி.. தோத்தாங்கொள்ளி தொர்ர

    விழுந்து விழுந்து சிரிச்சி வச்சேன்....
    அப்ப படம் பார்க்கலாம்.. சரி பார்க்கின்றேன்..]]]

    அவசியம் பாருங்க தம்பி..!

    ReplyDelete
  37. அட போங்கண்ணே . உங்க கூட டூ . . பேசுவது கிளியா விமர்சனம் எதிர்பார்த்து ஏமாந்தேன் . உங்க கூட இனி பேச மாட்டேன் . அவளின் உணர்ச்சிகள் ,பே.கி அல்லது விலை விமர்சனம் எழுதினால்தான் சமாதானம் ஆவேன்

    ReplyDelete
  38. நல்ல விளக்கமான விமர்சனம் அண்ணா.. :) :) பதிவோட நீளத்த மட்டும் கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்கண்ணா...

    படத்த அடுத்த வாரம் தான் பார்ப்பேன் -னு நினைக்கிறேன்...

    ReplyDelete
  39. [[[பார்வையாளன் said...
    அட போங்கண்ணே. உங்க கூட டூ. பேசுவது கிளியா விமர்சனம் எதிர்பார்த்து ஏமாந்தேன். உங்ககூட இனி பேச மாட்டேன். அவளின் உணர்ச்சிகள், பே.கி அல்லது விலை விமர்சனம் எழுதினால்தான் சமாதானம் ஆவேன்.]]]

    அடப் போங்கப்பா..!

    நான் கஷ்டப்பட்டு காசையும், நேரத்தையும் செலவழிச்சு பதிவு போடுறது.. நீங்க வந்து நோகாம படிச்சுப்புட்டு ஒரு ஓட்டுகூட போடாம ரெண்டு வரில தட்டிப்புட்டு எஸ்கேப்பாகுறது..!

    இதுக்கெல்லாம் ஒரு பாசப்பிணைப்பு வேற..!

    ஓட்டுப் போடுங்கய்யான்னா யாராவது கேக்குறீங்களேய்யா..?

    ReplyDelete
  40. [[[kanagu said...
    நல்ல விளக்கமான விமர்சனம் அண்ணா.. :) :) பதிவோட நீளத்த மட்டும் கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்கண்ணா...

    படத்த அடுத்த வாரம்தான் பார்ப்பேன் -னு நினைக்கிறேன்.]]]

    நீளத்தை கம்மி பண்ணிட்டா மட்டும் ஓட்டுப் போட்டு குத்திருவீங்க..!

    அடப் போங்கப்பா..! கொதிப்புல இருக்கேன்..!

    ReplyDelete
  41. //பையா, தில்லாலங்கடி போன்ற சினிமாக்களோடு ஒப்பிட்டால் இந்தப் படம் எவ்வளவோ பரவாயில்லை..!//

    நானும் இதை அமோதிக்கிறேன் !
    நல்ல விமர்சனம், நீங்கள் உங்கள் விருப்படியே நீண்ட விமர்சனம் எழுதுங்கள் அது தான் என் விருப்பமும் கூட :)

    ReplyDelete
  42. Please dont shorten your writings. Your vimarsanam is pack of entertainment , information and your thoughts . Three in one package . Beautiful. Dont change this writing style

    ReplyDelete
  43. தமிழ்மணம் கருவிப் பட்டைல கட்டை விரல் உயர்த்தியிருக்கிற இடத்தை கிளிக் பண்ணுங்க..!

    தானா அந்த ஓட்டு விழுந்திரும்..
    //

    சொல்லிகுடுக்கும் போது சரியா சொல்லி குடுங்க

    கட்டை விரல் உயர்த்தியிருக்குறதை கிளிக்கினால் + ஓட்டும், கட்டை விரல் கீழ் நோக்கி இருப்பதை கிளிக்கினால் - ஓட்டும் விழும் என்று..

    விரும்பியதை அவர் தேர்ந்து எடுக்கட்டும் :)

    ReplyDelete
  44. உங்கள் விமர்சனமே படம் பார்த்த திருப்தி தந்து விட்டது . நன்றிகள்.
    பத்து வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பல படங்கள் இப்படி வந்ததே. விலாயாடாய் ஆரம்பிக்கும் படம் ஒரு கொலை அல்லது கற்பழிப்பு நிகழவிருக்கு பிறகு சீரியஸ் ஆகி வேறு தளத்திற்கு செல்லும்- தமிழிலும் வந்தன சில- உதாரணம்- இதய தாமரை, உத்தம புருஷன்...

    ReplyDelete
  45. அடப் போங்கப்பா..! கொதிப்புல இருக்கேன்..!
    //

    சரி சரி ரெண்டு ஓட்டு போட்டு இருக்கேன்

    வைச்சிக்கங்க :)

    ReplyDelete
  46. பாடல்களை கேட்டேன் நல்லா இருக்கு இன்னும் படம் பார்க்கவில்லை . விமர்சனம் நல்ல இருக்கு . படம் பார்த்துவிட்டு மீண்டும் வருவேன் . பகிர்வுக்கு நன்றி தல

    ReplyDelete
  47. [[[Maduraimohan said...

    //பையா, தில்லாலங்கடி போன்ற சினிமாக்களோடு ஒப்பிட்டால் இந்தப் படம் எவ்வளவோ பரவாயில்லை..!//

    நானும் இதை அமோதிக்கிறேன் !
    நல்ல விமர்சனம், நீங்கள் உங்கள் விருப்படியே நீண்ட விமர்சனம் எழுதுங்கள் அதுதான் என் விருப்பமும் கூட :)]]]

    ஆஹா.. மதுரை மோகன் நமக்கு புல் சப்போர்ட்டா..!

    நன்றிகள்..!

    ReplyDelete
  48. [[[பார்வையாளன் said...
    Please dont shorten your writings. Your vimarsanam is pack of entertainment, information and your thoughts . Three in one package. Beautiful. Dont change this writing style]]]

    நன்றி பார்வையாளன் ஸார்..!

    ReplyDelete
  49. [[[மின்னுது மின்னல் said...
    தமிழ்மணம் கருவிப் பட்டைல கட்டை விரல் உயர்த்தியிருக்கிற இடத்தை கிளிக் பண்ணுங்க.!
    தானா அந்த ஓட்டு விழுந்திரும்.//

    சொல்லி குடுக்கும் போது சரியா சொல்லி குடுங்க.

    கட்டை விரல் உயர்த்தியிருக்குறதை கிளிக்கினால் + ஓட்டும், கட்டை விரல் கீழ் நோக்கி இருப்பதை கிளிக்கினால் - ஓட்டும் விழும் என்று. விரும்பியதை அவர் தேர்ந்து எடுக்கட்டும் :)]]]

    எதுக்கு மைனஸ் குத்து..? எல்லாமே பிளஸ் குத்தா இருக்கட்டுமேன்னுதான் சொல்லலை..

    ஹி.. ஹி.. ஹி..!

    ReplyDelete
  50. [[[ராம்ஜி_யாஹூ said...

    உங்கள் விமர்சனமே படம் பார்த்த திருப்தி தந்து விட்டது. நன்றிகள்.
    பத்து வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பல படங்கள் இப்படி வந்ததே. விலாயாடாய் ஆரம்பிக்கும் படம் ஒரு கொலை அல்லது கற்பழிப்பு நிகழவிருக்கு பிறகு சீரியஸ் ஆகி வேறு தளத்திற்கு செல்லும் - தமிழிலும் வந்தன சில- உதாரணம் - இதய தாமரை, உத்தமபுருஷன்.]]]

    நன்றி ராம்ஜி யாஹூ..

    இதனாலேயே படம் பார்க்காமல் இருந்துவிடாதீர்கள்..!

    இந்த மாசம் ஒரேயொரு படம்தாண்ணா.. அவசியம் இதை பாருங்க..!

    ReplyDelete
  51. [[[மின்னுது மின்னல் said...
    அடப் போங்கப்பா..! கொதிப்புல இருக்கேன்..!//

    சரி சரி ரெண்டு ஓட்டு போட்டு இருக்கேன். வைச்சிக்கங்க :)]]]

    இப்ப வந்து குத்தி என்ன புண்ணியம்..? நேத்து செஞ்சிருந்தாலும் தமிழ்மணத்துல கொஞ்ச நேரமாவது மூஞ்சி பக்கத்துல நின்றிருக்கும்..!

    ReplyDelete
  52. [[[!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    பாடல்களை கேட்டேன் நல்லா இருக்கு இன்னும் படம் பார்க்கவில்லை. விமர்சனம் நல்ல இருக்கு. படம் பார்த்துவிட்டு மீண்டும் வருவேன். பகிர்வுக்கு நன்றி தல.]]]

    பார்த்திட்டு வாங்க சங்கர் ஸார்..!

    ReplyDelete
  53. கொஞ்ச நாளா பாத்த படமெல்லாம் மொக்கையா இருக்கேன்னு வருத்தமா இருந்திருப்பீங்க...
    இந்த படம் உங்களை கொஞ்சம் கூல் பண்ணிஇருக்கும்னு நினைக்கிறேன்...

    ReplyDelete
  54. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    கொஞ்ச நாளா பாத்த படமெல்லாம் மொக்கையா இருக்கேன்னு வருத்தமா இருந்திருப்பீங்க. இந்த படம் உங்களை கொஞ்சம் கூல் பண்ணி இருக்கும்னு நினைக்கிறேன்.]]]

    உண்மைதான் யோகேஷ்.. மனம் நிறைவாக இருந்தது..!

    மாதத்திற்கு ஒரு திரைப்படம் இது போல் வந்தால், சினிமா ரசிகர்களின் எண்ணிக்கை நிச்சயம் கூடும்..!

    ReplyDelete
  55. உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது! படிக்க சுவாரசியமாகவும் நேரம்போவது தெரியாமலும் உள்ளன!
    வாழ்த்துக்களும் நன்றிகளும்!

    ReplyDelete
  56. இதுவரை இந்தப் படத்திற்கு எல்லோரும் எழுதியிருந்த விமர்சனங்களைப் படித்துவிட்டு..இந்தப்படம் பார்க்க வேண்டாம்..என்று நினைத்திருந்தேன்..ஆனால் உங்கள் விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது..நல்ல விமர்சனம்...

    ReplyDelete
  57. நீங்க இன்னிக்கி காலையில மனநல டாக்டர் கொடுத்த மருந்த சாப்டீங்களா? மருந்து சாப்பிடாம கம்ப்யூட்டர் முன்னாடி உட்காராதீங்க.

    ReplyDelete
  58. //ரமேஷ் தனது காதலியிடம் சேர்ந்தானா? அல்லது இவர்களிடம் வீழ்ந்தானா என்பதுதான் கிளைமாக்ஸ்..//

    மீதிய வெள்ளித்திரையில் காணலாம்ணு இருந்தா..

    //இறுதியில் காதலர்கள்
    சேரவும் காரணமாக இருக்கிறார்.//

    இப்பிடி டப்புன்னு போட்டு ஒடச்சிட்டிங்களே? :)

    ஒரு ஓட்டு குத்திட்டேன். மய்யும் வச்சாச்சு!

    ReplyDelete
  59. //இராமசாமி.. தோத்தாங்கொள்ளி தொர்ரி//

    வெளாட்டுப் பசங்க.
    ரசித்தேன்!

    ReplyDelete
  60. [[[எஸ்.கே said...
    உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது! படிக்க சுவாரசியமாகவும் நேரம் போவது தெரியாமலும் உள்ளன!
    வாழ்த்துக்களும் நன்றிகளும்!]]]

    மிக்க நன்றி எஸ்.கே. ஸார்..!

    ReplyDelete
  61. [[[ரமேஷ் said...
    இதுவரை இந்தப் படத்திற்கு எல்லோரும் எழுதியிருந்த விமர்சனங்களைப் படித்துவிட்டு. இந்தப் படம் பார்க்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது. நல்ல விமர்சனம்...]]]

    பார்த்துவிட்டு வந்து சொல்லுங்கள் ரமேஷ்..!

    ReplyDelete
  62. [[[சாரு புழிஞ்சதா said...
    நீங்க இன்னிக்கி காலையில மனநல டாக்டர் கொடுத்த மருந்த சாப்டீங்களா? மருந்து சாப்பிடாம கம்ப்யூட்டர் முன்னாடி உட்காராதீங்க.]]]

    எல்லா மருந்தையும் ஒண்ணா கலக்கி குடிச்சிட்டுத்தான் உக்காந்திருக்கேன் சாரு..!

    ReplyDelete
  63. [[[தஞ்சாவூரான் said...

    //ரமேஷ் தனது காதலியிடம் சேர்ந்தானா? அல்லது இவர்களிடம் வீழ்ந்தானா என்பதுதான் கிளைமாக்ஸ்..//

    மீதிய வெள்ளித்திரையில் காணலாம்ணு இருந்தா..

    //இறுதியில் காதலர்கள் சேரவும் காரணமாக இருக்கிறார்.//

    இப்பிடி டப்புன்னு போட்டு ஒடச்சிட்டிங்களே? :)]]]

    இதுவும் இறுதியான கிளைமாக்ஸ் இல்லை.. அது வேறு தஞ்சாவூரான்..!

    [[[ஒரு ஓட்டு குத்திட்டேன். மய்யும் வச்சாச்சு!]]]

    இப்ப வந்து ஓட்டு குத்தி, மை வைச்சு என்ன புண்ணியம்..? அன்னிக்கேல்ல வந்திருக்கணும்..!

    ReplyDelete
  64. [[[தஞ்சாவூரான் said...

    //இராமசாமி.. தோத்தாங்கொள்ளி தொர்ரி//

    வெளாட்டுப் பசங்க. ரசித்தேன்!]]]

    என் வீட்டுக்கு வருபவர்கள் பெரும்பாலோர் வெளாட்டுப் பசங்கதான் ஸார்..!

    ReplyDelete
  65. [[[vinoth said...
    baana kaathadi,intresting climax !!!]]]

    கிளைமாக்ஸ் வித்தியாசமாக, எதிர்பாராததாக இருந்தது உண்மைதான். ஆனால் அதில் அழுத்தம் இல்லாமல் போய்விட்டதால் மனதில் ஒட்டவில்லை..!

    ReplyDelete