Pages

Friday, August 27, 2010

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-27-08-2010

27-08-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

 
அந்தோணி முத்துவின் மரணம்

இந்த மனிதருக்குள் இருந்த உற்சாகமும், உத்வேகமும் இவ்வளவு சீக்கிரம் உடைந்து போகும் என்று நான் நினைக்கவில்லை. மாற்றுத் திறனாளியாகத் தான் இருந்தாலும், அந்தக் கஷ்டத்தை மட்டும் வெளியில் சொல்ல விருப்பமில்லாமல் சக பதிவர்களைப் போலவே பதிவிட்டு உற்சாகத்துடன் வலம் வந்து கொண்டிருந்த நம்முடைய அந்தோணி முத்துவின் வாழ்க்கை நிச்சயம் பல பேருக்கு முன் உதாரணமாகத் திகழ வேண்டியது.

கடைசியாக அவர் எழுதியிருந்த பதிவில்கூட கடைசி வரியில் மட்டுமே தன்னைக் கொன்று கொண்டிருந்த அந்த உடல் வலியை குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய தளத்தில் தனது உடல் குறையை தான் எப்படி சமாளித்தேன் என்பதையும், அது பற்றிய நினைப்பைத் தான் எப்படி தூக்கியெறிந்தேன் என்பதையும் நிறைய பதிவுகளில் எழுதியிருந்தார்.

என்ன இருந்தாலும்.. இவருக்கு இப்படியொரு துன்பத்தைக் கொடுத்து, வாழ நினைத்த வயதில் அதற்கு அனுமதியும் கொடுக்காத முருகனை வையத்தான் வேண்டும்.. அந்தோணி முத்துவின் ஆத்மா சாந்தியாகட்டும்..


கேரளா.. குடிகாரர்களின் சொர்க்கம்

கேரளா மாநிலம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அதிகம் குடியிருக்கும் தேசம் என்றாலும் குடியின் மீது விருப்பம் கொண்ட குடிகார இந்தியர்களும் இங்குதான் அதிகம். 


ஓணம் பண்டிகையையொட்டி கடந்த நாட்களில் மட்டும் 155 கோடி ரூபாயை குடித்தே தீர்த்திருக்கிறார்கள் இந்த மகா குடிமகன்கள். அதிலும் ஒணம் நாளான 23ம் தேதியன்று மட்டும் 30 கோடிக்கு ஊத்தியிருக்கிறார்கள். சென்ற வருடத்தோடு ஒப்பிட்டால் இந்த வருடம் 18 சதவிகிதம் வசூல் அதிகமாம்..

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் திருச்சூரை அடுத்த சாலக்குடி கேரளாவிலேயே அதிக மது விற்பனை நடந்த இடம் என்ற பெயரைத் தக்க வைத்துள்ளது. அங்கு 6 நாட்களில் ரூ. 30 லட்சத்திற்கு விற்பனை நடந்துள்ளது. திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரம், கருணாகரப்பள்ளி முறையே ரூ.22 லட்சம், ரூ.21 லட்சத்துடன் 2-வது, 3-வது இடங்களைப் பிடித்துள்ளன.

விற்பனையில் ரம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மொத்த விற்பனையில் 50 சதவிகிதம் ரம் விற்பனையாகியுள்ளது. இரண்டாம் இடத்தில் பிராந்தி உள்ளது. இந்த கணக்குகள் அனைத்தும் இந்திய தயாரிப்பு, வெளிநாட்டு மதுபான வகைகளை விற்கும் கேரள மதுபான விற்பனை கழகத்தின் 370 கடைகளில் நடந்தது.  தனியார் பார்கள், கள்ளுக் கடைகள், ராணுவ கேன்டீன்களில் நடந்த வி்ற்பனையையும் சேர்த்தால் விற்பனை பல மடங்கு அதிகமாகும்.



படிப்பிற்கும், செயலுக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபிக்கிறது கடவுளின் செல்லக் குழந்தையான இந்த கேரள பூமி..



காட்சிப்பிழை - புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

சமீபத்தில் 'காட்சிப்பிழை' என்கின்ற திரைப்படத் திறனாய்வு நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர்-இயக்குநர் சேரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ. ரவிக்குமார், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, சுபசற்குணராஜன், களவாணி படத்தின் இயக்குநர் சற்குணம், எழுத்தாளர் பிரபஞ்சன், ராஜன்குறை போன்றோர் கலந்து கொண்டனர்.

ரவிக்குமார் பேசுகின்றபோது அரசியல் மேடையாக நினைக்காமல், இலக்கிய மேடையாகவும் கருதாமல் வெகு சாதாரணமாகவே பேசினார். பேசினார்.. பேசிக் கொண்டேயிருந்தார். பொறுமையிழந்து போன ஒரு தோழர் கை தட்டினார்.. தட்டினார்.. தட்டினார்.. தட்டிக் கொண்டேயிருந்தார்.. ரவிக்குமாரே பேச்சை நிறுத்திவிட்டு “என்னப்பா..?” என்று கேட்டார். கை தட்டியவர் பதிலே சொல்லவில்லை.

புரிந்து கொண்ட ரவிக்குமார் “நான் இதுக்கு மேலேயும் பேசுறது நல்லாயில்ல. தோழருக்குப் பிடிக்கலை போலிருக்கு. சரி போதும் நிறுத்திக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.

சிறிது நேரத்தில் தனது சீட்டில் இருந்து எழுந்து வந்த ரவிக்குமார் கை தட்டிய தோழரின் அருகில் அமர்ந்து அவரிடம் நலம் விசாரித்தார். அந்தத் தோழரும் பதிலுக்கு ஏதோ சொல்ல.. இருவருக்குள்ளும் கசமுசாவானது.. மேடையில் இருந்த சேரன் தலையிட்டு.. “இப்ப எதுவும் வேண்டாமே.. நிகழ்ச்சி முடியட்டும்..” என்று சொல்ல ரவிக்குமார் தாங்க முடியாத கோபத்தை அடக்கிக் கொண்டு அமர்ந்தார். ஆனாலும் கை தட்டிய தோழர் வேறிடத்தில் போய் அமர்ந்து கொண்டதால் எதுவும் செய்ய முடியவில்லை.. ரவிக்குமாரும் பாதியிலேயே கிளம்பி போய்விட்டார்.

ரவிக்குமார் தனது கட்சிக் கூட்டத்தினரோடு வந்திருந்தால், இந்தத் தோழரின் கதி என்னவாயிருக்கும்..? நல்லவேளை.. அன்றைக்கு தப்பித்தார் அந்தத் தோழர்..


நடிகை ஜெயந்தியின் உண்மையான மனம் திறந்த பேட்டி


மனம் திறந்த பேட்டி என்று பலருடைய பேட்டிகளை பத்திரிகைகளில் படித்திருக்கலாம். ஆனால் அது உண்மையாகவே அவர்கள் மனம் திறந்ததுதானா என்பது சந்தேகம்.

ஆனால் சமீபத்தில் நான் படித்த ஒரு பழைய சினிமா புத்தகத்தில் இருந்த இந்த பேட்டி நிச்சயமாக மனம் திறந்த பேட்டி என்றே நம்புகிறேன்.. ஏனெனில் சொல்லியிருக்கும் விஷயம் அப்படி. பேட்டியளித்தவர் கன்னட பழம் பெரும் நடிகை ஜெயந்தி.

".....ஒரு நாள் ஷூட்டிங் முடிந்து மிகவும் டயர்டாக ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தேன். பின்னாலேயே அந்தப் படத்தின் இயக்குநர் பெக்கட்டி சிவராமும் வந்தார். அறையில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். திடீரென்று அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. என் மீது புலி போல் பாய்ந்தார். மிகக் களைப்பான நிலையிலும், எதிர்பாராத இந்த அதிர்ச்சியினாலும் தாக்குண்ட நான் ஒரு கட்டத்தில் அதனை எதிர்க்க முடியாமல் போய் அவருக்குள் அடங்கிவிட்டேன்.

சாதாரணமாக ஸாரி என்று சொல்லிவிட்டுப் போனவர் மறுநாள் என்னை விரும்புவதாகவும், அதனால்தான் எல்லை மீறியதாகவும் கூறினார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் அவருக்குத் திருமணமாகி கல்யாண வயதில் பிள்ளைகள் இருந்தார்கள்.

இதனை வெளியில் சொல்ல முடியாத சூழல் எனக்கிருந்தாலும், அவருடைய பேச்சு என்னைக் கரைய வைத்தது. திருமணம் செய்ய முடியாத நிலையிலும் அவர் தொடர்ந்து எனது வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்தார். அதற்குப் பின்புகூட நாங்கள் 6 அல்லது 7 முறை உறவு கொண்டிருப்போம் என்று நினைக்கிறேன். என் பையன் அந்த உறவால்தான் பிறந்தான். ஆனாலும் அதன் பின்பு அவருடனான தொடர்பு முற்றிலும் அறுந்து போகும் வரையிலும் அவருடைய முதல் குடும்பத்தினருடன் எனக்கு நல்ல உறவு இருந்தது.

இதன் பின் எனது வாழ்க்கையில் காதல் என்பதையே திரைப்படங்களில் மட்டுமே செய்து வந்தேன்.. என் மகனுக்காக நான் வாழ்ந்த காலக்கட்டத்தின் பின்பகுதியில் மேலும் ஒரு சோதனை வந்தது. என் மகனுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஒரு மாணவன் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவான். ப்ரீயாகப் பேசுவான்.. பழகுவான். நானும் அப்படியே பழகினேன்.

திடீரென்று தனது துணிமணிகளுடன் எனது வீட்டிற்கு வந்தவன் என்னை காதலிப்பதாகவும், என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் எனது காலைப் பிடித்துக் கொண்டு அழுதான். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நல்ல புத்திமதி சொல்லி அனுப்பப் பார்த்தேன். ஆனால் நான் முடியாது என்று சொன்னால் இப்பவே தற்கொலை செய்து கொள்வேன் என்று அழுது, அரற்றி பிடிவாதம் பிடித்தான்.

இரண்டு நாட்கள் வீட்டில் அவனைத் தங்க வைத்து எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் முடியாததால் அந்தப் பையனுக்காக நான் எனது முடிவை மாற்றிக் கொண்டு அவனைத் திருமணம் செய்ய முடிவெடுத்தேன். எனது வீட்டிலேயே பூஜையறையில் மாலை மாற்றிக் கொண்டு தம்பதிகளாக ஆனோம்.. இது மிகச் சரியாக பதினைந்து நாட்கள்தான்..

விஷயம் தெரிந்து அந்தப் பையனின் பெற்றோர் என் வீடு தேடி வந்து கதறி அழுதார்கள். நானும் என் நிலைமையை எடுத்துச் சொன்னேன். அவர்கள் பையனைக் காப்பாற்ற வேண்டியே இப்படியொரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயமானதாகச் சொன்னேன்.

நல்லவேளை அந்தப் பையன் இந்தப் பதினைந்து நாட்களில் கொஞ்சம் தெளிவாகிவிட்டான்.. அவனது பெற்றோர்களைப் பார்த்ததும் கொஞ்சம் மனம் திருந்தி அவர்களுடனேயே போய்விட்டான்.. இதனால் எனக்கு எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லை. ஒரு இளைஞனின் வாழ்க்கையையும், உயிரையும் காப்பாற்றினேன் என்கிற ஒரு திருப்தியே என் மனதில் இருந்தது..."

- இதுதான் நம்ம ஜெயந்தியம்மா கொடுத்திருந்த உண்மையான மனம் திறந்த பேட்டி.



பாகிஸ்தானில் இஸ்லாமிய சட்டமா..?

ஏதோ பாகிஸ்தானே மதவாத நாடு என்றும், இஸ்லாமிய சட்டம் என்கிற பெயரில் பெண்களை அடக்கி ஒடுக்கி ஆள்கிறார்கள் என்றெல்லாம் பில்டப் கொடுத்த சாமிகளே.. இந்த வீடியோவைப் பாருங்கள். 


தனது அலுவலக அறையிலேயே ஸ்டைலாக புகை விட்டுக் கொண்டு ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி ஷோ காட்டும் இந்த அம்மணியின் பெயர் ஷெர்ரி ரஹ்மான். பாகிஸ்தான் நாட்டின் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர்.



ரொம்பவே முற்போக்கானவர். வீடியோவை பார்த்தாலே தெரியுதும்பீங்க. இப்போது அவர் பதவியில் இல்லை. தானாகவே ராஜினாமா செய்துவிட்டார். காரணம் இதுவல்ல..

சென்ற வருடம் பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் அரசு சில மீடியாக்கள் மீது கொண்டு வந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து போர்க்கொடி தூக்கியிருக்கிறார் இந்த ஷெர்ரி. ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியும், பிரதமர் யூசுப் கிலானியும் அவற்றில் உறுதியாக இருக்க.. "போங்கடா நீங்களும் உங்க ஜனநாயகமும்" அப்படீன்னு சொல்லிட்டு அப்பீட்டு ஆயிட்டாங்களாம் அம்மணி. பரவாயில்லை. அங்ககூட முற்போக்கு கொள்கையெல்லாம் வாழுதே.. சந்தோஷம்..



ONG Bak-2 சண்டைக் காட்சி

நானும் எத்தனையோ சண்டைக் காட்சிகளை திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை ஸ்டார் மூவிஸ் சேனலில் பார்த்தபோது பிரமித்துப் போய்விட்டேன். அதிலும் அந்த கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி.. சான்ஸே இல்லை.. நிச்சயம் ஒரு வெறியர்களால்தான் இப்படியொரு காட்சியை படமாக்கியிருக்க முடியும்.. அற்புதம் என்றே சொல்லலாம்..

எப்படி இந்தப் படத்தை மிஸ் பண்ணினேன் என்று தெரியவில்லை. அவசரமாக டிவிடியை வாங்கிப் படத்தையும் பார்த்துவிட்டேன். அது பற்றிய விமர்சனத்தை தனிப் பதிவாகப் போடுகிறேன்.. ஆனாலும் சண்டைப் பிரியர்களுக்குப் பிடித்தமான இந்தச் சண்டைப் படத்தைக் காணத் தவறாதீர்கள்.

உங்களுக்காக அதில் முக்கியமான ஒரு சண்டைக் காட்சி இங்கே..




பிரகாஷ்ராஜின் திருமணம்

மிக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு திருமணம் இன்று மும்பையில் நடந்தேறியுள்ளது. லலிதகுமாரியுடனான காதல் முடிந்து போய்விட்டது அல்லது தீர்ந்து போய்விட்டது என்று சொல்லிவிட்டு பிரகாஷ்ராஜ் அடுத்தக் காதலைத் தேடிப் போய்விட்டார். பாவம்.. லலிதாகுமாரி.. இந்த வயதில், இனிமேல் அவர் வேறொரு காதலைத் தேடிப் போக முடியுமா..? அல்லது வந்தால்தான் ஏற்க முடியுமா..? குழந்தைகளுக்காக தன் வாழ்க்கையை இனி சன்னியாசினிபோல் வைத்துக் கொண்டு வாழ வேண்டியதுதான்.. இதுதான் முக்கால்வாசி இந்தியப் பெண்களின் நிலை.


ஆணுக்கொரு நீதி.. பெண்ணுக்கொரு நீதி.. பாதியிலேயே நீர்த்துப் போவதற்குப் பெயர் காதலா..? அல்லது எத்தனை காதல் வந்தாலும் அதனை அனுபவித்துப் பார்ப்பதுதான் வாழ்க்கையா..? தனி மனித உரிமைதான் முக்கியமெனில் எதற்காகக் காதலிக்க வேண்டும்..? கல்யாணம் செய்ய வேண்டும்? பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும்..? பிள்ளைகளைப் பெற்றெடுத்தால் அவர்களுக்காக தங்களது சுதந்திரத்தை, உரிமையை விட்டுக் கொடுத்தானே ஆக வேண்டும். அப்போது ஏன் தனி மனித சுதந்திரம் முக்கியம் என்கிறான் ஒரு ஆண்..? ம்ஹூம்.. இதில் இருப்பது ஆணாதிக்கத் திமிர் மட்டுமே என்பதுதான் எனது கருத்து..



களை கட்டும் கல்யாண டான்ஸ்

ஒரு டான்ஸ் நிகழ்ச்சியைத்தான் பார்த்துக்கிட்டிருந்தேன். திடீர்ன்னு இந்த வீடியோ வந்து ரொம்பவே சிரிக்கவும் வைச்சிருச்சு. ஆச்சரியப்படவும் வைச்சிருச்சு.

பிலிப்பைன்ஸ் நாடுன்னு நினைக்கிறேன். ஒரு கல்யாண விருந்து போல.. மாமி வயதில் இருக்கும் ஒரு பெண் எவ்வளவு அழகாக நிகழ்ச்சியை கொண்டாடுகிறார் பாருங்கள்.




வட கொரியா கால்பந்து வீரர்கள் இனி சுரங்கத் தொழிலாளிகள்..

ஏதோ கம்யூனிஸ ஆட்சி நடப்பதால் ஜனநாயகம் தழைத்தோங்குவதாகவும், மக்களெல்லாம் சந்தோஷச் சிரிப்போடு துள்ளல் நடையோடு தெருக்களில் நடனமாடி வருவதாகவும் தோழர்கள் சொல்லி வரும் வடகொரியாவில் நடந்திருக்கும் கொடுமையை நினைத்தால் கம்யூனிஸத்தின் பெயரால் இவர்கள் நடத்துவது சர்வாதிகாரம்தான் என்று அடித்துச் சொல்லிவிடலாம்போலத் தோன்றுகிறது.


சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் படு தோல்வியடைந்து நாடு திரும்பிய தனது நாட்டு அணியினரை தலைநகரின் முச்சந்தியில் மூன்று மணி நேரம் நிற்க வைத்து அவமானப்படுத்தியிருக்கிறது அந்நாட்டு அரசு.

போர்ச்சுக்கல் அணியுடன் 7-0 என்ற கோல் கணக்கிலும், பிரேசிலுடன் 2-1 என்ற கோல் கணக்கிலும், ஐவரிகோஸ்ட்டிடம் 3-0 என்ற கோல் கணக்கிலும் படு தோல்வியடைந்திருந்தது வடகொரிய அணி.

இதனை நாட்டிற்கு கிடைத்த அவமானமாக கருதியிருக்கும் அந்நாட்டு சர்வாதிகார கம்யூனிஸ அரசு, அணியின் கோச் ஜாங் ஹன்னை கட்சியில் இருந்தும், விளையாட்டு அமைப்பில் இருந்தும் வெளியேற்றியதோடு இல்லாமல், நாட்டின் வடகோடியில் இருக்கும் ஒரு ஊரில் வீடு கட்டும் பணிகளைச் செய்யும் கொத்தனாராக போஸ்ட்டிங் போட்டு டிரான்ஸ்பர் செய்திருக்கிறதாம். இவரை மட்டுமா..? அணி வீரர்கள் அனைவரையும் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களாக இடம் மாற்றி திருப்பியடித்துவிட்டதாம்..

தோல்விக்கு அவர்கள் என்ன செய்வார்கள்..? பாவம்.. அந்த நாடு இருந்த இருப்பிற்கு உலகக் கோப்பை போட்டியில் விளையாடத் தகுதி பெற்றதே பெரிய விஷயம். எந்த நாட்டுடனும் சுமூகமான உறவில்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்று போட்டிகளில் விளையாட விடாமல் செய்துவிட்டு, திடீரென்று உலகக் கோப்பைக்கு மட்டும் வெளிநாட்டுக்கு அனுப்பி விளையாட விட்டால் அவர்களால் எப்படி ஜெயிக்க முடியும்..? பிரேசிலுக்கு எதிராக ஒரு கோல் போட்டதே அவர்களைப் பொறுத்தவரையில் உலக சாதனை.

இவர்கள் மட்டுமா இப்படி..? சதாம் உசேன் ஆட்சிக் காலத்தில் அரபு சாம்பியன் கால்பந்து போட்டியில் ஈராக் அணி தோல்வியடைந்து நாடு திரும்பிய பின்பு, அந்த அணி வீரர்களுக்கும் இந்தத் தண்டனைதான் கிடைத்திருக்கிறது.

நாடு திரும்பிய மறுநாளே அனைத்து வீரர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். கால்பந்து சைஸுக்கு பெரிய இரும்பாலான குண்டு தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு வீரரும் ஒரு நாளைக்கு 50 முறை அந்தப் பந்தை உருட்டியபடியே மைதானத்தைச் சுற்றி வர வேண்டும் என்ற தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்கள்.

இதனையும் செவ்வனே செய்து முடித்த பின்பு அத்தனை வீரர்களின் கால்களும், இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு முறிக்கப்பட்டது. அணியின் கேப்டன் மீது மட்டும் கரிசனம் காட்டிய சதாம் உசேனின் மகன்களில் ஒருவர், கேப்டனிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து ஜோர்டானுக்குச் சென்று பிழைத்துக் கொள்ளும்படி சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.

அந்த வீரர் ஜோர்டானில் இருந்து சிகிச்சைக்காக லண்டனுக்கு பறந்து வந்து உலக மனித உரிமை அமைப்பிடம் இது பற்றி புகார் செய்த பின்புதான் இந்த விஷயமே வெளியே வந்தது..

சர்வாதிகாரிகள் எந்த நாட்டில் இருந்தாலும் அட்டூழியத்தை ஒன்று போலத்தான் செய்கிறார்கள். இவனுக தலைல இடி விழ..!!!




ஹியரிங் எய்டு கிளப்

எங்கேயாவது வெளியிடங்களில் என்னை மாதிரியே காது கேட்கும் கருவியை மாட்டியிருக்கும் இளையவர்களைக் கண்டால் ஏதோ நமது தூரத்து உறவினர் மாதிரி தன்னிச்சையாக எனது முகம் புன்முறுவலைக் காட்டிவிடுகிறது.. தவிர்க்க முடியவில்லை. ச்சே.. நம்மளை மாதிரியே இன்னும் எத்தனை பேரை இந்த முருகன் இப்படியாக்கி வைச்சிருக்கான்னு நினைச்சு அந்த நேரத்துல வருத்தமும் வரும்.

முதியோர்கள் காதில் மிஷின் வைத்திருப்பதைப் பார்த்தால் சரி.. “வயதாகிவிட்டது.. காது பழுதாகியிருக்கும். வச்சுட்டாங்க.. வேறென்ன செய்யறது.. முருகன் கொடுத்தது அவ்ளோதான்..” என்ற சமாதான எண்ணமும் மனதில் உண்டாகிறது..

இப்போது எனக்கு மிகவும் பிடித்தமான இரண்டு பேர் இந்த ஹியரிங் எய்டு மாட்டியவர்கள் கிளப்பில் சேர்ந்திருப்பது எனக்கு பெரிய வருத்தத்தைத் தந்தாலும், நான் அவர்களுடனான ஒரு ஒற்றுமையில் இருக்கிறேனே என்ற ஒரு சிறு சந்தோஷமும் லேசாக வந்திருக்கிறது.


ஒருவர், இந்திய அரசியலையும், அரசியல்வியாதிகளையும், அவர்தம் சாதனைகளையும், சோதனைகளையும் எனது நினைவு தெரிந்த நாளிலேயே எனக்குக் கற்றுக் கொடுத்த அரசியல் ஆசான் திரு.சோ.ராமசாமி.

இன்னொருவர், சினிமாவுலகத்திற்குள் கால் வைக்க வேண்டும் என்கிற ஆவலையும், வெறியையும் எனக்குள் ஏற்படுத்திய எனதருமை திரையுலகத்துறை ஆசான் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

பாவம்.. இவருக்குமே வயது 75 ஆகிவிட்டது என்பதால் வருத்தத்துடன் இருவரையும் வரவேற்கிறேன்.. வெல்கம் மை டியர் சீனியர்ஸ்.

இன்னும் ஒரு முக்கியப் பிரமுகருக்கும் இந்தக் கேளாமை நோய் உண்டு. ஆனால் அதனை வெளியில் சொல்லாமல் இருந்து வருகிறார்.  80 வயதான இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாதான் அவர்.

சமீபத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சருடனான செயலாளர்கள் தொடர்பான முரண்பாட்டில் எஸ்.எம்.கிருஷ்ணா உடனுக்குடன் பதில் சொல்ல முடியாமல் போனதே இதனால்தானாம்.. ஆனால் இதனை வெளியில் சொல்லாமல் சமாளித்து வருகிறார். இவருக்கு எப்படி புத்தி சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறார்கள் வெளியுறவுத் துறைச் செயலாளர்கள்.. பூனைக்கு யார் மணி கட்டுவது..?

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம் தோழர்களே..!

72 comments:

  1. ஒன் மினிட் அண்ணே...

    ஸாரி.. ஒன் அவர் அண்ணே.. படிச்சிட்டு வர்றேன்.

    ReplyDelete
  2. அண்ணே அவர் படிக்காம கமெண்டு போட்ருக்காரு.. நான் ஒன் அவரா படிச்சுட்டு கமெண்டு போட்ருக்கேன்.. நாந்தான் பஸ்ட் :)

    ReplyDelete
  3. அண்ணா விக்ரம் பக்கா பரமக்குடி கிடையாதா :) நீங்க சொல்லிருக்கிற்த பார்த்தா என்னவோ அந்த ஆளு கர்நாடகா மாதிரி இருக்கு :)

    ReplyDelete
  4. அந்தோணி குடும்பத்தாருக்கு என் வருத்தங்கள். :( :(

    -----

    என் மாமனார், மாமியாரெல்லாம் சாலக்குடி இல்லைன்னாலும், 155 கோடியில் அவங்க பங்கு கொஞ்சம் இருக்கும்.

    க்றித்துமஸ்க்கு கொஞ்சம் அதிகம்.

    ஏன்ணே.. யு.எஸ்-ல இந்த மலையாளிகள் குடிச்ச கணக்கெல்லாம் அதுல சேருமா? ஏன்னா...........

    ------

    ஜெயந்தி வாழ்க. அப்ப பிரசாந்துக்கும், விக்ரமுக்கும் என்னண்ணே சம்பந்தம்??

    ------

    டோனி ஜா படத்தை இப்பத்தான் பார்க்கறீங்களா?? அவரோட முதல் படமா வந்த Protector படத்தை பாருங்கண்ணே.

    ஒரே ஷாட்டில் எடுத்த ஆறு நிமிஷ சண்டைக் காட்சி - அது அல்டிமேட்.
    -----

    பிரகாஷ்ராஜ் : விடுங்கண்ணே... நீங்க எதுனா.. இப்படி சொன்னா... வயித்தெறிச்சல்-ன்னு சொல்லுவாங்க.

    பல்லிருக்கறவன் பக்கோடா திங்கறான் -ன்னு எல்லாம் சொல்லுவாங்க. நீங்க கண்டுக்காதீங்க.

    -----

    ஹியரிங் எய்டில், என் தாத்தா, அப்பா எல்லாரும் இருக்காங்கண்ணே. பரம்பரை மேட்டர்ன்னா.. நானும் ஜாய்ன் பண்ணிக்குவேன்.

    ReplyDelete
  5. //என் தாத்தா, அப்பா எல்லாரும் இருக்காங்கண்ணே.//

    ஆக்சுவலி.. தாத்தா இருந்தார்ண்ணே. அப்பா இருக்கார்ண்ணே!!!!

    ReplyDelete
  6. மிஸ்டர் வயித்தெரிச்சல் இராமசாமி. முடிஞ்சா முன்னாடி வந்து கமெண்ட் போடுங்க மேன்.

    ReplyDelete
  7. வழக்கமா... எது இட்லி, எது வடை, பொங்கல்-ன்னு பிரிச்சி பிரிச்சி கொடுப்பீங்க??!!

    இதுல எல்லாம் ஒன்னா பிசைஞ்சிட்டீங்களா?

    ReplyDelete
  8. \\இராமசாமி கண்ணண் said...

    அண்ணே அவர் படிக்காம கமெண்டு போட்ருக்காரு.. நான் ஒன் அவரா படிச்சுட்டு கமெண்டு போட்ருக்கேன்.. நாந்தான் பஸ்ட் :)
    \\

    அரை மணி நேரமா சிரிச்சுகிட்டு இருக்கேன். நிச்சயமா இராமசாமி கண்ணன் கப்பு உங்களுக்கு தான். ஹாலிவுட் பாலா பெட்டர் லக் நெக்ட் டைம்:-)))))))

    ReplyDelete
  9. ஜெயந்தி பாலசந்தர் படத்திலே அழுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். இருகோடுகள், மாடிப்படி மாது படம் மாதிரி அப்போ பாலசந்தரின் ஆஸ்தான நடிகை.

    @ விக்ரம்-பிரசாந் சொந்தம்ன்னு தெரியும் ஆனா இந்த விஷயம் எல்லாம் புதுசு எனக்கு.

    @ பிரகாஷ்ராஜ் மேல இருந்து மதிப்பு கொஞ்சம் குறைஞ்சிடுச்சு.

    @ எஸ் எம் கிருஷ்ணா சொதப்பியதுக்கு அதான் காரணம் எனில் அதை சரிபண்ணிப்பது உத்தமம். தலைக்கு விக்கு வைக்க வெட்கம் இல்லாதப்ப ஹியரிங் மிஷின்ல என்ன வெட்கம், அதும் நாட்டின் ஒரு முக்கிய விஷயம் பேசும் போது!கண்ணுக்கு கண்ணாடி போடுவதில்லையா அதே போலத்தான் இதுவும்.

    ReplyDelete
  10. புல் மீல்ஸ் சாப்பிட்டது போல நிறைஞ்சிருச்சி


    எப்படி இப்படிப்பட்ட தகவல்கள் எல்லாம் பிடிக்கிறீங்க?

    சூப்பர்....சூப்பர்....

    எஸ்.எம் கிருஷ்ணா விசயம் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. இதில் வெட்க பட ஒன்றும் இல்லை.

    ஜெயந்தி விசயம் - அருமை

    ReplyDelete
  11. விக்ரம் தமிழ்நாட்டுக்காரர் இல்லையா?

    ReplyDelete
  12. அண்ணே : எதை சொல்ல........ எதை விட......... மொத்தத்தில் பதிவு டாப் டக்கர்........

    ReplyDelete
  13. இட்லி,தோசை,பொங்கல்,வடை,சட்னி,சாம்பார் சூடாகவும்,சுவையாகவும் உள்ளது.

    பகிர்வுக்கு நன்றி அண்ணே...

    ReplyDelete
  14. Actress Jeyanthi news is shocking and interesting.

    So Vikram is Prasanth's uncle son.
    Thanks for sharing

    ReplyDelete
  15. அந்தோணியை இறுதி பயணத்தில் பார்த்ததும் நெஞ்சை பிசையுது.. இன்று இவர் , நமக்கும் ஒருநாள் நியாபகம் வருது

    ---------

    மாமி நடனம் வெகு அருமை.. கலாக்கா மாதிரி போல..

    ----------

    பிரகாஷ்ராஜ் செய்தது சரியே.. நட்போடு , புரிதலோடு பிரிவது நல்லதே என்பது என் கருத்து..

    விரும்பாத துணையோடு தினம் பாலியல் செய்வதை விட இது பரவாயில்லை...

    ReplyDelete
  16. [[[ஹாலிவுட் பாலா said...
    ஒன் மினிட் அண்ணே... ஸாரி.. ஒன் அவர் அண்ணே.. படிச்சிட்டு வர்றேன்.]]]

    ReplyDelete
  17. [[[இராமசாமி கண்ணண் said...
    அண்ணே அவர் படிக்காம கமெண்டு போட்ருக்காரு.. நான் ஒன் அவரா படிச்சுட்டு கமெண்டு போட்ருக்கேன்.. நாந்தான் பஸ்ட் :)]]]

    யார்கிட்ட காது குத்துறீங்க.. போஸ்ட் போட்டதே 1.40 மணிக்கு.. உங்க கமெண்ட் வந்திருக்கிறது 1.49 மணிக்கு.. ஆக்ச்சுவல்லி 9 நிமிஷம்தான்.. இது ஒன் ஹவராம்.. பிய்ச்சுப்பிடுவேன் பிய்ச்சு..!

    ReplyDelete
  18. முதல் செய்தி மிக வருத்தம்; மற்ற பல செய்திகள் சுவாரஸ்யம்

    ReplyDelete
  19. [[[இராமசாமி கண்ணண் said...
    அண்ணா விக்ரம் பக்கா பரமக்குடி கிடையாதா :) நீங்க சொல்லிருக்கிற்த பார்த்தா என்னவோ அந்த ஆளு கர்நாடகா மாதிரி இருக்கு :)]]]

    ஒருவேளை அவங்க அம்மா பரமக்குடியோ என்னவோ..?

    ReplyDelete
  20. [[[ஹாலிவுட் பாலா said...

    அந்தோணி குடும்பத்தாருக்கு என் வருத்தங்கள். :( :(

    -----

    என் மாமனார், மாமியாரெல்லாம் சாலக்குடி இல்லைன்னாலும், 155 கோடியில் அவங்க பங்கு கொஞ்சம் இருக்கும். க்றித்துமஸ்க்கு கொஞ்சம் அதிகம். ஏன்ணே.. யு.எஸ்-ல இந்த மலையாளிகள் குடிச்ச கணக்கெல்லாம் அதுல சேருமா? ஏன்னா...........]]]

    மாமனார் சரி.. மாமியார் பேரை எதுக்கு இதுல சேர்த்தீங்க..?

    [[[ஜெயந்தி வாழ்க. அப்ப பிரசாந்துக்கும், விக்ரமுக்கும் என்னண்ணே சம்பந்தம்??]]]

    ம்.. இது கூடத் தெரியாதாக்கும்.. மாமா பையன்..!

    [[[டோனி ஜா படத்தை இப்பத்தான் பார்க்கறீங்களா?? அவரோட முதல் படமா வந்த Protector படத்தை பாருங்கண்ணே. ஒரே ஷாட்டில் எடுத்த ஆறு நிமிஷ சண்டைக் காட்சி - அது அல்டிமேட்.]]]

    இனி பார்த்தர்றேன்..!

    [[[பிரகாஷ்ராஜ் : விடுங்கண்ணே... நீங்க எதுனா.. இப்படி சொன்னா... வயித்தெறிச்சல்-ன்னு சொல்லுவாங்க.
    பல்லிருக்கறவன் பக்கோடா திங்கறான்னு எல்லாம் சொல்லுவாங்க. நீங்க கண்டுக்காதீங்க.]]]

    சொல்லிட்டுப் போறாங்க.. அதுனால மனசுல நிக்குறதை வெளில சொல்லாம விட முடியுமா பாலா..!

    [[[ஹியரிங் எய்டில், என் தாத்தா, அப்பா எல்லாரும் இருக்காங்கண்ணே. பரம்பரை மேட்டர்ன்னா.. நானும் ஜாய்ன் பண்ணிக்குவேன்.]]]

    வாக்மேன் மாட்டுறதை அவாய்ட் பண்ணுங்க.. கொஞ்சம் தள்ளிப் போடலாம்..!

    ReplyDelete
  21. [[[ஹாலிவுட் பாலா said...

    //என் தாத்தா, அப்பா எல்லாரும் இருக்காங்கண்ணே.//

    ஆக்சுவலி.. தாத்தா இருந்தார்ண்ணே. அப்பா இருக்கார்ண்ணே!!!!]]]

    திருத்தியமைக்கு நன்றி..!

    ReplyDelete
  22. [[[ஹாலிவுட் பாலா said...
    மிஸ்டர் வயித்தெரிச்சல் இராமசாமி. முடிஞ்சா முன்னாடி வந்து கமெண்ட் போடுங்க மேன்.]]]

    சிரிப்பு சீப்பு சீப்பா வருது..! என்ன ஒரு பிரெண்ட்ஷிப்பு.. என்ன ஒரு போட்டி..? அதுவும் நட்ட நடு ராத்திரில..!

    ReplyDelete
  23. [[[ஹாலிவுட் பாலா said...
    வழக்கமா... எது இட்லி, எது வடை, பொங்கல்-ன்னு பிரிச்சி பிரிச்சி கொடுப்பீங்க??!! இதுல எல்லாம் ஒன்னா பிசைஞ்சிட்டீங்களா?]]]

    இல்ல.. நீங்களே முடிவு பண்ணிக்குங்கன்னு சொல்லிட்டேன்..!

    ReplyDelete
  24. [[[அபி அப்பா said...

    ஜெயந்தி பாலசந்தர் படத்திலே அழுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். இருகோடுகள், மாடிப்படி மாது படம் மாதிரி அப்போ பாலசந்தரின் ஆஸ்தான நடிகை.]]]

    நடிப்பது பிடிக்கும்னு சொல்வாங்க. இந்த மாயவரம் மைனரு புதுசா அழுவது பிடிக்கும்னு சொல்றாருங்கோ..!

    [[[@ எஸ் எம் கிருஷ்ணா சொதப்பியதுக்கு அதான் காரணம் எனில் அதை சரி பண்ணிப்பது உத்தமம். தலைக்கு விக்கு வைக்க வெட்கம் இல்லாதப்ப ஹியரிங் மிஷின்ல என்ன வெட்கம், அதும் நாட்டின் ஒரு முக்கிய விஷயம் பேசும் போது!கண்ணுக்கு கண்ணாடி போடுவதில்லையா அதே போலத்தான் இதுவும்.]]]

    பார்ப்போம்.. வைக்கிறாரா இல்லையான்னு..?

    ReplyDelete
  25. [[[யாசவி said...
    புல் மீல்ஸ் சாப்பிட்டது போல நிறைஞ்சிருச்சி. எப்படி இப்படிப்பட்ட தகவல்கள் எல்லாம் பிடிக்கிறீங்க?]]]

    கூகிளாண்டவர் இருக்கும்போது நமக்கு என்ன கவலை யாசவி..?

    ReplyDelete
  26. [[[யாசவி said...
    விக்ரம் தமிழ்நாட்டுக்காரர் இல்லையா?]]]

    தமிழ்நாட்டில் பிறந்தவர். அதனால் தமிழர்தான்..!

    ReplyDelete
  27. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    அண்ணே : எதை சொல்ல........ எதை விட......... மொத்தத்தில் பதிவு டாப் டக்கர்........]]]

    நன்றிங்கோ தம்பி..!

    ReplyDelete
  28. [[[SENTHIL said...
    excalant.very good]]]

    நன்றி செந்தில்.. நீங்க யு.எஸ். செந்திலா..?

    ReplyDelete
  29. [[[Thomas Ruban said...
    இட்லி, தோசை, பொங்கல், வடை, சட்னி, சாம்பார் சூடாகவும், சுவையாகவும் உள்ளது.

    பகிர்வுக்கு நன்றி அண்ணே...]]]

    பின்னூட்டத்திற்கு நன்றி தாமஸ்..!

    ReplyDelete
  30. [[[ராம்ஜி_யாஹூ said...

    Actress Jeyanthi news is shocking and interesting.]]]

    எனக்கும் அதிர்ச்சிதான் ராம்ஜி.. அதனால்தான் பதிவிட்டேன்..!

    ReplyDelete
  31. உண்மையண்ணே,

    அப்ப பிரசாந்த் அம்மம்மா ஜெயந்தி இல்லையா?
    விக்ரம் அப்பத்தா ஜெயந்தி இல்லையா?
    ஏன்னா ஜெயந்திய்யொட கணவரோடனு போட்டிருகிறதனால கேட்டேன்.

    பிரசாந்தைப்பற்றி தெரியும்.ஆனால் விக்ரம் எங்க(ராமனாதபுரம்) மாவட்டதுக்காரர்..பச்சைதமிழனென்று நினைத்தேன்..

    புதுசா இருக்கு...

    ReplyDelete
  32. [[[புன்னகை தேசம். said...

    அந்தோணியை இறுதி பயணத்தில் பார்த்ததும் நெஞ்சை பிசையுது.. இன்று இவர், நமக்கும் ஒரு நாள் நியாபகம் வருது.]]]

    இறப்பின்போது அனைவரும் கூடுவது அதற்காகத்தான்..!

    [[[பிரகாஷ்ராஜ் செய்தது சரியே.. நட்போடு, புரிதலோடு பிரிவது நல்லதே என்பது என் கருத்து..

    விரும்பாத துணையோடு தினம் பாலியல் செய்வதைவிட இது பரவாயில்லை.]]]

    இந்தக் காதலாவது நிலைக்கிறதா என்பதைப் பார்ப்போம்..! அதன் பிறகு நட்பு, புரிதல் என்பது பற்றிப் பேசலாம்..

    ReplyDelete
  33. [[[மோகன் குமார் said...
    முதல் செய்தி மிக வருத்தம்; மற்ற பல செய்திகள் சுவாரஸ்யம்.]]]

    நன்றி மோகன் ஸார்..!

    ReplyDelete
  34. [[[மறத்தமிழன் said...

    உண்மையண்ணே,

    அப்ப பிரசாந்த் அம்மம்மா ஜெயந்தி இல்லையா? விக்ரம் அப்பத்தா ஜெயந்தி இல்லையா? ஏன்னா ஜெயந்திய்யொட கணவரோடனு போட்டிருகிறதனால கேட்டேன்.

    பிரசாந்தைப் பற்றி தெரியும். ஆனால் விக்ரம் எங்க(ராமனாதபுரம்) மாவட்டதுக்காரர். பச்சை தமிழனென்று நினைத்தேன்..

    புதுசா இருக்கு.]]]

    பிள்ளைகள் எல்லாம் வளர்ந்தது தமிழகத்தில்தான்..

    விக்ரமின் தாயார் தமிழ்தான்..!

    இயக்குநர் சிவராம் கடைசியாக 2002-ல் சென்னையில்தான் இறந்து போனார்..!

    ReplyDelete
  35. [[[அபி அப்பா said...

    \\இராமசாமி கண்ணண் said...

    அண்ணே அவர் படிக்காம கமெண்டு போட்ருக்காரு.. நான் ஒன் அவரா படிச்சுட்டு கமெண்டு போட்ருக்கேன்.. நாந்தான் பஸ்ட்:)\\

    அரை மணி நேரமா சிரிச்சுகிட்டு இருக்கேன். நிச்சயமா இராமசாமி கண்ணன் கப்பு உங்களுக்குதான். ஹாலிவுட் பாலா பெட்டர் லக் நெக்ட் டைம்:-)))))))]]]

    ஓகே.. ஓகே.. இதுக்கு அரைமணி நேர சிரிப்பா..!

    அபிப்பா இது கொஞ்சம் ஓவரா தெரியலை..?

    ReplyDelete
  36. எங்கேயிருந்துதான் உங்களுக்கு இந்த நியூஸெல்லாம் கிடைக்க்குதோ..??

    Heavy Tiffin.



    ஒரு முக்கியமான விஷயம்..

    வரும் ஞாயிறு (29/08/2010)நான், கேபிள், மணிஜீ, நர்சிம், அப்துல்லா கலந்து கொண்ட விஜய் தொலைகாட்சியின் “நீயா நானா”? நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது..

    வேலை அதிகம்... மறந்துட்டேன்னு ஏதாவது சாக்கு சொன்னீங்க..

    முருகன் கிட்ட சொல்லிபுடுவேன்.. ஆமா..

    ReplyDelete
  37. நேரம் கிடைச்சா இந்த சண்டை காட்சியை பாருங்க தலை.

    http://www.youtube.com/watch?v=jiCVtvasLxw

    ReplyDelete
  38. //ஒன் மினிட் அண்ணே...

    ஸாரி.. ஒன் அவர் அண்ணே.. படிச்சிட்டு வர்றேன்.
    //

    ஸாரி.. ஒன் WEEK அண்ணே.. படிச்சிட்டு வர்றேன்.

    ReplyDelete
  39. தகவல் பகிர்வுக்கு நன்றி தம்பி

    ReplyDelete
  40. ஜெயந்தியின் கணவரான பெக்கட்டி சிவராமின் சொந்த மகள்தான் நடிகர் பிரசாந்தின் அம்மா. சொந்த மகன் நடிகர் விக்ரமின் அப்பா.

    ஆனா படத்துல காட்டுற பரம்பரை பகை மாதிரி ரெண்டு குடும்பமும் வாயே திறக்கமாட்டேன் என்கிறார்கள்.

    அதற்கு ஏதும் கெட்டி சட்னி உண்டா?

    ReplyDelete
  41. kaathaal panni panni thelivaaro namma prakaash. natpu, kaathaal ithyaathi ithyaathi summaa udaance, irukkuravarai anubavikkanum silar sollittu namma prakaash maathiri seyyiraango silar sollaama vaazhuraango....

    ReplyDelete
  42. நல்ல தொகுப்பு அண்ணே,.,,

    ரொம்ப நன்றி...

    முதல் தகவல் கண்ணீர் கசிய வைத்தது... இயற்கையின் கோணல் புத்தி என பெரியார் சொல்வதை நினைவு படுத்தியது... ஆன்மிக வாதிகள் இவ்வளவு கடுமையாக கடவுளை திட்ட முடியாது.. திட்டித்தான் என்ன ஆக போகிறது...

    மற்ற தகவல்கள் குறித்து ஜாலியாக பின்னுட்ட்டம் இட மனம் வரவில்லை... எனவே இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்... முதன் முதலில் இந்த பதிவை படித்தவன் நான்தான்.. முதல் பின்னஊடம் இந்த முறை என் பின்னுட்டமாக இருந்திருக்க வேண்டியது... ஆனால், அந்தோணி அவர்களின் செய்தி அதிர்ச்சிக்கு ஆளாக்கி விட்டதால் எதுவும் எழுத முடியவில்லை...

    ReplyDelete
  43. அண்ணே யாருண்ணே இந்த உறாலிவுட் பாலாவும் இராமசாமி கண்ணனும். இப்படி கலக்கறாங்க உங்களை. இவங்க கமெண்ட் இப்போ உங்க செய்தி அளவு கலகலப்பாயிடிச்சி. நல்ல கவுண்டமணி செந்தில் போல.

    ReplyDelete
  44. அண்ணே,உங்கைட்ட இருந்து இவ்வளவு டீட்ட்ய்லான ,பிரமாதமான பதிவை எதிரபார்க்கலை,வழக்கமா சினிமா விமர்சனத்துலதான் கலக்குவீங்க.இப்போ இப்படியும்மா? தூள்

    ReplyDelete
  45. அந்தோனி அவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

    மற்றபடி தகவல்கள் அனைத்துமே வித்தியாசமாக..ஆர்வமானவையாக இருந்தன...

    ReplyDelete
  46. என்னண்ணே...... ஸ்வீட் இல்லாத டிபனெல்லாம் டிபனா.. எங்கே கேசரி...


    அந்தோணி :( ரொம்ப வருத்தமாயிருக்கு.

    ReplyDelete
  47. அந்தோனியின் ஆன்மா சாந்தியடைய இறைஞ்சுகிறேன்.


    மற்றைய எல்லாச் செய்திகளும் பழனி பஞ்சாமிர்தம்

    ReplyDelete
  48. [[[butterfly Surya said...

    எங்கேயிருந்துதான் உங்களுக்கு இந்த நியூஸெல்லாம் கிடைக்க்குதோ..??

    Heavy Tiffin.]]]

    கூகிளாண்டவர்தான் கொடுத்தாருண்ணே..!

    [[[ஒரு முக்கியமான விஷயம்..

    வரும் ஞாயிறு (29/08/2010)நான், கேபிள், மணிஜீ, நர்சிம், அப்துல்லா கலந்து கொண்ட விஜய் தொலைகாட்சியின் “நீயா நானா”? நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது..

    வேலை அதிகம்... மறந்துட்டேன்னு ஏதாவது சாக்கு சொன்னீங்க..

    முருகன்கிட்ட சொல்லிபுடுவேன்.. ஆமா..]]]

    மறக்கவே மாட்டேன்.. அன்னிக்கு நான் எட்டு மணிக்கெல்லாம் தூங்கிருவேன்..!

    ReplyDelete
  49. [[[செல்வன் said...

    நேரம் கிடைச்சா இந்த சண்டை காட்சியை பாருங்க தலை.

    http://www.youtube.com/watch?v=jiCVtvasLxw]]]

    படமே பார்த்துட்டேன் ஸார்..!

    ஆனா இதுல டெக்னாலஜி அதிகமாச்சே..

    ஆனால் அது அப்படியில்லையே..! அதனால்தான் வியந்தேன்..!

    ReplyDelete
  50. [[[என்.ஆர்.சிபி said...

    //ஒன் மினிட் அண்ணே...
    ஸாரி.. ஒன் அவர் அண்ணே.. படிச்சிட்டு வர்றேன்.//

    ஸாரி.. ஒன் WEEK அண்ணே.. படிச்சிட்டு வர்றேன்.]]]

    சோம்பேறி.. வடி கட்டின சோம்பேறி..!

    ReplyDelete
  51. [[[Mahi_Granny said...
    தகவல் பகிர்வுக்கு நன்றி தம்பி]]]

    வருகைக்கு நன்றிங்கண்ணா..!

    ReplyDelete
  52. [[[ஜோதிஜி said...

    ஜெயந்தியின் கணவரான பெக்கட்டி சிவராமின் சொந்த மகள்தான் நடிகர் பிரசாந்தின் அம்மா. சொந்த மகன் நடிகர் விக்ரமின் அப்பா.

    ஆனா படத்துல காட்டுற பரம்பரை பகை மாதிரி ரெண்டு குடும்பமும் வாயே திறக்கமாட்டேன் என்கிறார்கள்.

    அதற்கு ஏதும் கெட்டி சட்னி உண்டா?]]]

    ஆமாண்ணே.. தியாகராஜனின் திருமணம் காதல் திருமணம்.. வீட்டாரை எதிர்த்துதான் செய்து கொண்டார்.. அன்றிலிருந்து அவர்களிடையே சுமூகமான பேச்சுவார்த்தை இல்லியாம்..!

    ReplyDelete
  53. [[[பித்தன் said...
    kaathaal panni panni thelivaaro namma prakaash. natpu, kaathaal ithyaathi ithyaathi summaa udaance, irukkuravarai anubavikkanum silar sollittu namma prakaash maathiri seyyiraango silar sollaama vaazhuraango....]]]

    பித்தன்ஜி.. கலக்கிட்டீங்க..!

    ReplyDelete
  54. [[[பார்வையாளன் said...

    நல்ல தொகுப்பு அண்ணே,.,,

    ரொம்ப நன்றி...

    முதல் தகவல் கண்ணீர் கசிய வைத்தது. இயற்கையின் கோணல் புத்தி என பெரியார் சொல்வதை நினைவுபடுத்தியது... ஆன்மிகவாதிகள் இவ்வளவு கடுமையாக கடவுளை திட்ட முடியாது.. திட்டித்தான் என்ன ஆக போகிறது...

    மற்ற தகவல்கள் குறித்து ஜாலியாக பின்னுட்ட்டம் இட மனம் வரவில்லை... எனவே இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்... முதன் முதலில் இந்த பதிவை படித்தவன் நான்தான்.. முதல் பின்னஊடம் இந்த முறை என் பின்னுட்டமாக இருந்திருக்க வேண்டியது. ஆனால், அந்தோணி அவர்களின் செய்தி அதிர்ச்சிக்கு ஆளாக்கி விட்டதால் எதுவும் எழுத முடியவில்லை...]]]

    நன்றி பார்வையாளன்..

    நானே இப்படி எழுதியிருக்கக் கூடாது என்று இப்போதுதான் பீல் செய்கிறேன்.. வருத்தப்படுகிறேன்..!

    ReplyDelete
  55. [[[gopi g said...
    அண்ணே யாருண்ணே இந்த உறாலிவுட் பாலாவும் இராமசாமி கண்ணனும். இப்படி கலக்கறாங்க உங்களை. இவங்க கமெண்ட் இப்போ உங்க செய்தி அளவு கலகலப்பாயிடிச்சி. நல்ல கவுண்டமணி செந்தில் போல.]]]

    ஹாலிவுட் பாலா யாரா..?

    கோபி.. வலையுலகத்துலதான் இருக்கீரா..? இப்படியொரு கேள்வியைக் கேக்குறீங்களே..?

    அவரோட வலைத்தளத்துக்குள்ள போய்ப் பாருங்க.. அவர் யாருன்னு தெரியும்..!

    ReplyDelete
  56. [[[சி.பி.செந்தில்குமார் said...
    அண்ணே, உங்கைட்ட இருந்து இவ்வளவு டீட்ட்ய்லான, பிரமாதமான பதிவை எதிரபார்க்கலை, வழக்கமா சினிமா விமர்சனத்துலதான் கலக்குவீங்க. இப்போ இப்படியும்மா? தூள்.]]]

    என்னுடைய பழைய இட்லி-வடை பதிவுகள் அனைத்தையும் படித்துப் பாருங்கள் செந்தில்..!

    ReplyDelete
  57. [[[பிரியமுடன் ரமேஷ் said...

    அந்தோனி அவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

    மற்றபடி தகவல்கள் அனைத்துமே வித்தியாசமாக.. ஆர்வமானவையாக இருந்தன.]]]

    நன்றி ரமேஷ்..!

    ReplyDelete
  58. [[[Vidhoosh said...
    என்னண்ணே...... ஸ்வீட் இல்லாத டிபனெல்லாம் டிபனா.. எங்கே கேசரி...]]]

    கேசரி எதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கனும்னு நினைச்சுத்தான் நான் எதையும் சொல்லலை..!

    ReplyDelete
  59. [[[கானா பிரபா said...

    அந்தோனியின் ஆன்மா சாந்தியடைய இறைஞ்சுகிறேன்.

    மற்றைய எல்லாச் செய்திகளும் பழனி பஞ்சாமிர்தம்.]]]

    வருகைக்கும், தோள் கொடு்த்தமைக்கும் மிக்க நன்றி தம்பி..!

    ReplyDelete
  60. மனதிற்குப் படுவதைச் சொல்கிறேன். தவறாக எண்ண வேண்டாம். அந்தோணி முத்து இறந்த செய்தியை உங்களுடைய இந்தப் பதிவில் சேர்த்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. அதை ஒரு தனிப்பதிவாகப் போட்டிருக்கலாம்.

    ReplyDelete
  61. ஏராளமான, மிக சுவாரஸ்யமான தகவல்கள்...

    ReplyDelete
  62. [[[R Gopi said...
    மனதிற்குப் படுவதைச் சொல்கிறேன். தவறாக எண்ண வேண்டாம். அந்தோணி முத்து இறந்த செய்தியை உங்களுடைய இந்தப் பதிவில் சேர்த்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. அதை ஒரு தனிப் பதிவாகப் போட்டிருக்கலாம்.]]]

    உண்மைதான்..

    ReplyDelete
  63. [[[ஸ்ரீராம். said...
    ஏராளமான, மிக சுவாரஸ்யமான தகவல்கள்...]]]

    வருகைக்கு நன்றிகள் ஸ்ரீராம்

    ReplyDelete
  64. செம வாசிப்பு மேட்டர் .....தேங்க்ஸ்

    ReplyDelete
  65. அண்ணே, ஷெர்ரி ரஹ்மான் பத்தி நீங்க போட்டது சுமார் வீடியோ. இங்க பாருங்க ஷெர்ரி ரஹ்மானை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானி என்ன செய்கிறார் என்று...(Adults only).நம்மாளுக தேவலை போல!

    ReplyDelete
  66. அண்ணே,

    ஜெயந்திக்கு பிறந்த மகன் யார்? என்ன செய்துகொண்டிருக்கிறார்?

    ReplyDelete
  67. [[[பத்மா said...

    செம வாசிப்பு மேட்டர் .....தேங்க்ஸ்]]]

    நன்றி பத்மாஜி..!

    ReplyDelete
  68. [[[thenali said...
    அண்ணே, ஷெர்ரி ரஹ்மான் பத்தி நீங்க போட்டது சுமார் வீடியோ. இங்க பாருங்க ஷெர்ரி ரஹ்மானை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானி என்ன செய்கிறார் என்று. (Adults only). நம்மாளுக தேவலை போல!]]]

    முன்னாடியே பார்த்துட்டேன் தெனாலி.. ஆனா போட வேண்டாமேன்னு நினைச்சுத்தான் தவிர்த்தேன்..!

    ReplyDelete
  69. [[[காவேரி கணேஷ் said...
    அண்ணே, ஜெயந்திக்கு பிறந்த மகன் யார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்?]]]

    காவேரி.. ஜெயந்தியின் மகன் ஒரு சினிமா தயாரிப்பாளர்.. இவர் திருமணம் செய்திருப்பது கன்னட நடிகையான அனு பிரபாகரை.. இந்த அனு பிரபாகர் ஏதோ ஒரு தமிழ்ப் படத்திலும் நடித்திருக்கிறார். பெயர்தான் நினைவுக்கு வர மறுக்கிறது..!

    ReplyDelete