Pages

Friday, July 02, 2010

அறிக்கி LC 112 கூட்டு - திரை விமர்சனம்


02-07-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“இந்தக் களவாணிப் பயலுகளோட கூட்டு வைச்சுக்கிட்ட நாசமாப் போயிருவ..” என்ற வசனத்தை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த வசனமே பேசப்படாமல் அதே 'களவாணிப்' பயபுள்ளை ஒருத்தனோட கதையை அந்த மண்ணின் மணம் குறையாமல் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சற்குணம்..!


நிச்சயம் இது போன்ற திரைப்படங்கள் மட்டுமே இன்றைய சூழலில் தமிழ்த் திரையுலகத்தை முன்னெடுக்கும் என்று நம்புகிறேன்..! அரங்கு நிறைந்த காட்சிகளாக இல்லாவிட்டாலும் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடும் அளவுக்கு மக்கள் கூட்டம் இந்தப் படத்திற்குத்தான் வந்து கொண்டிருக்கிறது..!

'களவாணிகள்' என்னும் வார்த்தை அடுத்தவர் சொத்தை களவாடுபவர்கள் என்கிற அர்த்தத்தில் மட்டுமல்ல.. வாழ்க்கையின் அனைத்து புறங்களிலும் களவாடல் செய்பவர்கள் என்றே அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். அப்படியொரு 'களவாணிப் பயலோட' கதைதான் இது..!

படத்தின் கதை பலருக்கும் பிடிக்காத.. ஒவ்வாத.. ஏற்றுக் கொள்ள முடியாத கதைதான் என்றாலும் ட்ரீட்மெண்ட்டும் கடைசி அரை மணி நேர பதைபதைப்பும்தான் இப்படத்தைப் பற்றி அனைவரையும் பேச வைத்திருக்கிறது..!

டுடோரியல் கல்லூரியில் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும் அறிவழகன் என்னும் அறிக்கி  தனது தந்தை துபாயில் வேகாத வெயிலில் காய்ந்து கருவாடாகி சம்பாதித்து அனுப்புகின்ற பணத்தை தனது அம்மாவிடம் ஆட்டைய போட்டு திருட்டுத்தனம் செய்யும் ஒரு  இளைஞன்..

இவனது பார்வையில் படும் மகேஷ்வரி என்னும் மகேஷ் ஸ்கூலுக்குப் போகும் சின்னப் பொண்ணு. அந்தப் பெண்ணின் மனசைக் கலைத்து “என்னைக் கட்டிக்கிறேன்னு சொல்லலை.. ஊர் முழுக்க உன் பேரையும், என் பேரையும் இணைச்சு வைச்சு எழுதிருவேன்..” என்று மிரட்ட பணிய வைக்கிறான்..


அறிவழகனின் ஊருக்கும், மகேஷின் ஊருக்கும் இடையில் ஈரான், ஈராக் போர் மாதிரி எப்போதுமே உரசல்தான்.. இதில் மகேஷின் அண்ணனுடன் ஏற்கெனவே அறிவழகனுக்கு முட்டல் மோதல்கள்.. இந்த லட்சணத்தில் மகேஷின் காதல் அவள் அண்ணனுக்குத் தெரிய வர.. சட்டுப்புட்டுன்னு காதும், காதும் வைத்தாற்போல் ஒரு மாப்பிள்ளையை பார்த்து அவளுக்குக் கட்டி வைக்க எண்ணுகிறார்கள்.

நம்ம பிளஸ் டூ 'களவாணிப் பய புள்ள' அதை எப்படி முறியடிச்சு தனது காதலியை மனைவியாக்கிக் கொள்கிறான் என்பதுதான் கதை..!

இந்தக் 'களவாணி'யின் பில்டப்புக்கு உறுதுணை அவனது அம்மா. “ஆனி போய் ஆடி போய் ஆவணி வந்தா பய டாப்பா வந்திருவான்.. பாருங்க..” என்று பலரிடமும் சொல்லிச் சொல்லி களவாணிப் பய புள்ளைக்கு பணத்தை அள்ளி வீசுகிறாள்.

அப்பன்காரன் என்னமோ ஏதாச்சோன்னு நினைச்சு பயந்து போய் ஓடியாந்து பார்த்தா.. வீடு கட்ட கொடுத்தனுப்பிய காசையெல்லாம் களவாணிப் பய டாஸ்மாக் கடைல ஊத்தறதுக்கும், ஊர் சுத்துறதுக்கும் செலவழிச்சிருக்கிறது தெரிய வந்து சுதாரிச்சிர்றார்..


அப்பன் வந்ததுக்கப்புறம் 'களவாணிப்' பய ஒழுக்கமாகி அப்பன் கண்ணுபடவே இருக்க.. இடையில காதலையும், காதலியையும் வளர்த்துக்கிட்டு கிடக்கான்.. இதுல அப்பன்காரன் வயலை உழுது நெல்லு நட வைச்சு அதனை வெள்ளாமையும் செஞ்சு, வீட்டையும் கட்டிப்புட்டு அதுக்கு கிரகப்பிரவேசமும் வைச்ச அன்னிக்குத்தான் நம்ம 'களவாணிப் ' பய கிளைமாக்ஸை முடிக்கிறான்..!

இந்தக் கூத்தோட கொஞ்சம் குறைச்சலில்லாம அள்ளிக் கொடுக்குறாரு கஞ்சா கருப்பு. பஞ்சாயத்து என்பதுதான் அவரது பெயர். மனிதரை முதல் காட்சியிலேயே சாகப் போறாருன்னு கூச்சப்படாம சொல்லி விரட்டுறது இருக்கு பாருங்க. அக்மார்க் களவாணிப் பயலுக குறும்புதான்..!


ஒவ்வொரு தடவையும் இவங்ககிட்ட மாட்டிக்கிட்டு கருப்பு படுற பாட்டை பார்த்தா திரைக்கதை எழுதினவங்களுக்கு திருஷ்டி சுத்திப் போடணும்ப்பா.. லின்க்க கரெக்ட்டா புடிச்சு வைச்சிருக்காங்க..! கடைசில “சத்தியமா பாலிடாலை இவ குடிக்கலை.. அத்தனை பேர் கால்ல வேண்ணாலும் விழுந்து சொல்றேன்..” என்று அவர் செய்யும் புலம்பலையும், ஆஸ்பத்திரியில் இருந்து சலைன் பாட்டிலோடு கிளம்பும் அலப்பறையிலும் அளவிட முடியாத சிரிப்பு..!

வில்லேஜ் தாய் கேரக்டருக்கு  சரண்யாவை அடிச்சுக்க முடியல.. பொளந்து கட்டுறாங்க.. பையன்கிட்ட நேருக்கு நேரா பேசுறதுக்கு பயந்துக்கிட்டு மககிட்ட பேசிவிடுறதும்.. பையன் கேக்கும்போதெல்லாம் அலுத்துக்கிட்டே பணத்தைக் கொடுக்குறதையும் பார்த்தா எனக்கெல்லாம் இப்படி ஒரு ஆத்தா இல்லாம போச்சேன்னு வருத்தமா இருக்கு..!

வூட்டுக்காரன் வந்து செவுட்டுல நாலு அப்பு வைச்சவுடனேயே மககிட்ட, “ஒரு டிராமா போடுறேன்.. வந்து காப்பாத்திரு”ன்னு சொல்லிட்டு தூக்கு மாட்டிக்கப் போய் பையனைக் காப்பாத்துற சீன் இருக்கு பாருங்க.. படத்தை மறந்திட்டு ஏதோ பக்கத்து வீட்ல நடக்குறத பார்க்குற மாதிரியிருந்தது..!

இவங்களுக்கு அடுத்த ஸ்கோர் அப்பா இளவரசு. நடிக்கிறதுக்கு ரொம்பவே கஷ்டமெல்லாம் பட வேணாம்பா.. இயல்பா இருக்கிறதை, பேசுறதை, நடக்கிறதை செஞ்சாலே போதும்.. அதுதான்யா நடிப்புன்றான் இந்தாளு..

பய படுத்துன பாட்டைப் பார்த்திட்டும், ஆத்தாக்காரி பையனுக்கு கொடுக்குற சப்போர்ட்டை கேட்டும் பக்கத்து வீட்டுக்காரன்கிட்ட புலம்புற அக்மார்க் அப்பா இவர்தான்.. குட் ஸார்..!

தாலிக்கொடியைக் கழட்டிக் கொடுக்க முன்னாடி வரும் பொண்டாட்டிகிட்ட பணத்தை எடுத்துக் கொடுக்குற வேகத்திலேயும், கடைசி காட்சில ஹீரோயினை அவ அண்ணன்காரன் தூக்கிட்டுப் போறப்ப பொங்கி எந்திரிச்சிட்டு வர்ற சீன்லேயும் அண்ணன் இளவரசு, இளவரசுதான்..!

இந்த ஹீரோயின் ரொம்ப சின்னப் பொண்ணுன்னு நினைக்கிறேன்.. அந்த ஸ்கூல் யூனிபார்முக்கு ரொம்பவே கச்சிதமா இருக்கு.. சின்ன சின்ன முகபாவனைகளைக்கூட ரொம்ப அழகா பண்ணியிருக்கு. டைட் குளோஸப் ஷாட்ல பார்க்கிறதுக்கே கொள்ளை அழகு..! 


“ஐ லவ் யூ சொல்ல மாட்டேன்” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டு கொஞ்ச தூரம் போய் திரும்பிப் பார்த்து “கட்டிக்கிறேன்”னு சொல்லும் அழகுக்கு தூக்கி வைத்துக்(முடிந்தால்) கொஞ்சலாம்..!

மிச்சம், மீதியாக அண்ணன்கிட்ட பயம்... அப்பன்கிட்ட மாட்டிக்கிட்டான்ற பயம்.. வீடு தேடி வந்துட்டானேன்ற பயம்.. தயக்கம்.. ஐயையோ நிக்குறானேன்ற பதைபதைப்பு.. மாட்டிக்கிட்ட திகில்ன்னு பொண்ணு நல்லாவே கலக்கிருக்கு..! சரியான மேனேஜர் கிடைச்சா  இந்தப் பொண்ணு  ஒரு  ரவுண்ட் வரலாம்..!

அடுத்தது நம்ம 'களவாணிப்' பய அறிவழகனா விமல்.. பசங்க படத்துல பார்த்த அதே மாடுலேஷன் மட்டும்தான் உறுத்துதே தவிர.. மத்ததெல்லாம் 'களவாணிப்' பய ஸ்டைல்தான்..!


செங்கல்லைத் தூக்கி வைச்சிக்குட்டு ஆத்தாகி்ட்ட துட்டு கேக்குற தெனாவெட்டு.. உர மூட்டையைத் தைரியமா ஆட்டையை போட்டுட்டு அதனை கஞ்சா கருப்பு மேல பழியைப் போட்டு டிராக் மாத்துற ஸ்டைலு.. ஹீரோயின் பொண்ணுகிட்ட ஊர் முழுக்க “நம்ம நிலம்தான்.. எவ்வளவு வேண்ணாலும் வந்து எடுத்துக்க” என்ற ஜொள்ளுவிடும் தெனாவெட்டில் படம் கலகலக்கிறது..!

கிளைமாக்ஸ் காட்சியில் அடிக்கிறார் பாருங்கள் ஒரு உலக மகா அந்தர் பல்டி.. தியேட்டரே குலுங்கியது..! இதுவும் 'களவாணி'களிடையே இருக்கும் ஒரு குணம்தான். அவங்களுக்கு ஒரே இலக்குதான். தாங்கள் அடிபடாமல் அனுபவிக்கணும்..! அதனை வரிசை கட்டிச் சொல்லி ஜமாய்த்திருக்கிறார் இயக்குநர்..!

தம்பிக்கு இயல்பாகவே வசனத்தில் நகைச்சுவையைக் கலந்து கொடுப்பது வருகிறது என்பதால் படம் முழுவதையும் ரசிக்க முடிந்தது..! நல்ல தேர்வு..!

இடையில் சிறிது நேரம் படம் டல்லடித்தாலும், காதல் மேட்டர் பொண்ணு வீட்டுக்குத் தெரிந்தவுடன் படம் பரபரப்பாகிவிட்டது..! அந்த டெம்போ சிறிதும் குறையாமல் பார்த்துக் கொண்டதுபோல சீன்ஸ்களை வைத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர். அதிலும் ஹீரோ அவ்வப்போது அடிக்கும் அந்தர்பல்டியினால் பொங்கி வருகிறது சிரிப்பு..! ரைஸ் மில்லுக்கு வண்டி கட்டிப் போகும் வழியில் ஹீரோயினின் அழைப்பால் மாட்டு வண்டியை அப்படியே வி்ட்டுவிட்டு ஓடுகின்ற காட்சி நச்..!

மகேஷ்வரியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது எதிரில் வரும் மச்சான்களை பார்த்தவுடன் பஸ்ஸுக்குள் காதலியை இழுத்துப் போட்டுவிட்டு சைக்கிளை கையில் பிடித்தபடி தப்பிக்கும் காட்சியில் வாண்டு, சிண்டுகளெல்லாம் கை தட்டினார்கள்..!

எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியாய் 'அறிக்கி LC 122 கூட்டு' என்கிற அந்த வார்த்தைப் பிரயோகம் அழகாக புதுமையாக இருந்தது.. 'சிலவற்றை அனுபவிக்கணும்.. ஆராயக்கூடாது'ன்னு சொல்வாங்க பாருங்க.. அதுல இதுவும் ஒண்ணு..! ஒரு வேளை இயக்குநருக்கு சொந்த அனுபவமோ..!

பாடல் காட்சிகளைக்கூட துண்டு, துண்டாக ஒரு நிமிடம், இரண்டு நிமிடத்திற்கு என்று மட்டும் வைத்துக் கொண்டு கத்திரி போட்டிருப்பது புதுமைதான்..! அதேபோல் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு இந்தக் கதையைத் தயார் செய்த இலாகாவினரின் பெயரையும் டைட்டிலில் போட்டு மரியாதைப்படுத்தியிருப்பதற்கு இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு..!

தஞ்சை மண் என்று சொல்லிவிட்டு அப்படியே பொட்டல் வெளியவா காட்ட முடியும்..? இவ்வளவு வயல், வரப்புகளையும் கொள்ளை கொண்ட அழகையும் சினிமால பார்த்து ரொம்ப நாளாச்சு.. கண்ணுக்கு ச்சும்மா ஜில்லுன்னு இருந்துச்சு ஒளிப்பதிவாளரே.. நன்றி உங்களுக்கு..!

மதுரைத் தமிழைப் புறக்கணித்துவிட்டு தஞ்சைத் தமிழைக் கையில் எடுத்திருக்கும் இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு..!

இப்படியொரு கதைக்கு திரைக்கதை எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்க வேண்டுமோ அதை கிட்டத்தட்ட 90 சதவிகிதம் முழுமையாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

மகேஷ்வரியின் திடீர் திருமண ஐடியா அறிவழகனுத்துத் தெரிகின்ற இடத்தில் மட்டும் சறுக்கினாலும், பரவாயில்லை நம்மையும் கூடவே ஜம்ப் செய்ய வைத்து மாப்பிள்ளையை கடத்த வைத்திருக்கும் ஐடியாவுக்கு ஒரு சபாஷ் போட்டுத்தான் தீர வேண்டும்..!

சமீபத்தில் வந்த திரைப்படங்களில் 'திட்டக்குடி' படத்தின் கதை இதைவிடவும் சிறப்பானது என்றாலும் அதன் உருவாக்கம் சோகத்தின் பின்னணியில் இருந்ததினால் மக்கள் மனதைக் கவரவில்லை.. இதற்கும் திட்டக்குடி படத்திற்கும் சம்பந்தமான ஒரு விஷயம்.. 'திட்டக்குடி' படத்தின் கதாநாயகி 'களவாணி'யில் ஹீரோயினுக்கு பிரெண்ட்டாக நடித்திருக்கிறார்.. இது எப்படி இருக்கு..?

இப்போ தமிழ்ச் சினிமால வில்லேஜ் 'களவாணி'களோட டிரெண்ட்.. அதுனால இதே மாதிரி இன்னும் நிறைய படம் வரும்னு நினைக்கிறேன்.. எது வந்தாலும் சரி.. இந்தப் படத்தைப் பார்த்திட்டு இதைவிட இன்னும் பெட்டரா கொடுக்கணும்னு நம்ம இயக்குநர்களெல்லாம் நினைச்சு செயல்பட்டாங்கன்னா தமிழ்ச் சினிமாவுக்கும் நல்லது.. நமக்கும் நல்லது..!


களவாணி - மனசை களவாடிட்டான்..! அவசியம் பாருங்க..!
 

43 comments:

  1. பார்த்து விடுவோம் அண்ணே..

    ReplyDelete
  2. பாத்துருவோம்ணே :-).

    ReplyDelete
  3. இந்த படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டது உங்களின் விமர்சனம் அருமை நண்பரே ! பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. ஆக பசங்க படத்துக்கு பின்னே ஒரு நல்ல படம் போலிருக்கு. எங்கிட்டு, நான் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. பேராண்மை அதுக்கு பின்னே ஆயிரத்தில் ஒருவன், பின்னே அங்காடிதெரு...அத்தனையே! ஆனா இந்த படம் நிச்சயமா பார்க்க தோணுது அந்த ஹீரோ பையனுக்காக, பாப்போம்!

    ReplyDelete
  5. லைப்பை பார்த்ததும் அரிக்கி என்று ஒரு புது படம் வந்து உள்ளதோ என்றோ குழம்பி விட்டேன்

    ReplyDelete
  6. [[[இளங்கோ said...
    பார்த்து விடுவோம் அண்ணே..]]]

    அவசியம் பாருங்கண்ணே..!

    ReplyDelete
  7. [[[இராமசாமி கண்ணண் said...
    பாத்துருவோம்ணே :-).]]]

    ஆகட்டும்ண்ணே..!

    ReplyDelete
  8. [[[!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    இந்த படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டது உங்களின் விமர்சனம் அருமை நண்பரே ! பகிர்வுக்கு நன்றி]]]

    நல்ல படம்தான் சங்கர்.. மிஸ் பண்ணிராதீங்க..!

    ReplyDelete
  9. [[[மின்னுது மின்னல் said...

    ம்ம்]]]

    மின்னலு.. என்னம்மா இப்படி ரெண்டெழுத்துல முடிச்சிட்ட..?

    பார்த்துட்டியா..? அல்லாட்டி பார்க்கப் போறியா..?

    ReplyDelete
  10. [[[அபி அப்பா said...
    ஆக பசங்க படத்துக்கு பின்னே ஒரு நல்ல படம் போலிருக்கு. எங்கிட்டு, நான் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. பேராண்மை அதுக்கு பின்னே ஆயிரத்தில் ஒருவன், பின்னே அங்காடிதெரு. அத்தனையே! ஆனா இந்த படம் நிச்சயமா பார்க்க தோணுது அந்த ஹீரோ பையனுக்காக, பாப்போம்!]]]

    அவசியம் பாருங்கண்ணே..! குடும்பத்தோட போங்க..!

    ReplyDelete
  11. நம்ம ஊரு படம். பார்த்திட வேண்டியதுதான்.

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  12. மின்னலு.. என்னம்மா இப்படி ரெண்டெழுத்துல முடிச்சிட்ட..?
    //

    புட்பால் மேச் ஓடிகிட்டு இருந்தது அதுதான் ம்ம் :)


    படம் இன்னும் பார்க்கலை டவுன்லோட் பண்ணனும்

    ReplyDelete
  13. பாத்திடறேன். நல்லா இருக்கும்போல இருக்கு

    ReplyDelete
  14. உங்கள் விமர்சனம் என்னை களவாணியை பார்க்கதுண்டுகிறது.

    http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html

    ReplyDelete
  15. அண்ணே. எப்படீணே திட்டகுடி படத்தை இன்னும் ஆதரிக்கிறீங்க?
    சரி , இந்த படம் உண்மையிலேயே நல்ல படமா? திட்டகுடி போன்ற நல்ல படமா ?

    ReplyDelete
  16. [[[ராம்ஜி_யாஹூ said...
    தலைப்பை பார்த்ததும் அரிக்கி என்று ஒரு புது படம் வந்து உள்ளதோ என்றோ குழம்பி விட்டேன்.]]]

    ஹி.. ஹி.. ச்சும்மா ஒரு விளம்பரத்துக்குத்தான் ராம்ஜி..!

    ReplyDelete
  17. [[[ரவிச்சந்திரன் said...
    நம்ம ஊரு படம். பார்த்திட வேண்டியதுதான்.

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்]]]

    அவசியம் பாருங்க ரவி..!

    ReplyDelete
  18. உங்களை நம்பி தியேட்டரில் போய் படம்
    பாக்க போறேன்...

    ReplyDelete
  19. //அழகுக்கு தூக்கி வைத்துக்(முடிந்தால்) கொஞ்சலாம்..!//

    முடியலன்னாலும் ரொம்பத்தான் ஜொள்ளு

    ReplyDelete
  20. [[[மின்னுது மின்னல் said...

    மின்னலு.. என்னம்மா இப்படி ரெண்டெழுத்துல முடிச்சிட்ட..?//

    புட்பால் மேச் ஓடிகிட்டு இருந்தது அதுதான் ம்ம் :) படம் இன்னும் பார்க்கலை டவுன்லோட் பண்ணனும்]]]

    டவுன்லோடு பண்றியா..? இது உனக்கே நியாயமா..?

    தியேட்டர்ல போய் பார்த்தா படத்துக்கும் மருவாதை.. ரிலீஸ் செஞ்சவங்களுக்கும் ஏதோ காசு கிடைச்ச மாதிரியிருக்கும்..!

    ReplyDelete
  21. இன்னுமாண்ணே திட்டக்குடியை நம்பிகிட்டு இருக்கீங்க ? அந்த படத்தின் இயக்குனர் கூட இந்த அளவுக்கு நம்பி இருக்க மாட்டார்

    ReplyDelete
  22. [[[சின்ன அம்மிணி said...
    பாத்திடறேன். நல்லா இருக்கும்போல இருக்கு]]]

    இருக்கும் போலன்னு இல்லம்மா.. நல்லாத்தான் இருக்கு.. அவசியம் பார்த்திருங்க..!

    ReplyDelete
  23. [[[முனியாண்டி said...
    உங்கள் விமர்சனம் என்னை களவாணியை பார்க்க துண்டுகிறது.
    http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html]]]

    பார்த்துட்டுச் சொல்லுங்கண்ணே..!

    உங்களுடைய முதல் வருகைக்கு மிக்க நன்றிங்கண்ணே..!

    ReplyDelete
  24. [[[பார்வையாளன் said...
    அண்ணே. எப்படீண்ணே திட்டக்குடி படத்தை இன்னும் ஆதரிக்கிறீங்க?
    சரி , இந்த படம் உண்மையிலேயே நல்ல படமா? திட்டக்குடி போன்ற நல்ல படமா?]]]


    திட்டக்குடி போன்று நல்ல படம்தான்..!

    ReplyDelete
  25. [[[கார்த்திக் பாலசுப்பிரமணியன் said...

    athu sharp ela boss
    top aa varuvan]]]

    தவறைச் சுட்டியமைக்கு மிக்க நன்றி கார்த்திக்..

    ReplyDelete
  26. [[[தமிழ் வெங்கட் said...
    உங்களை நம்பி தியேட்டரில் போய் படம் பாக்க போறேன்...]]]

    அவசியம் பாருங்க தமிழ்..

    பார்த்திட்டு திரும்பவும் வந்து உங்களுடைய கருத்துக்களைச் சொல்லுங்களேன்.. தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்..!

    ReplyDelete
  27. //
    இவங்களுக்கு அடுத்த ஸ்கோர் அப்பா இளவரசு. நடிக்கிறதுக்கு ரொம்பவே கஷ்டமெல்லாம் பட வேணாம்பா.. இயல்பா இருக்கிறதை, பேசுறதை, நடக்கிறதை செஞ்சாலே போதும்.. அதுதான்யா நடிப்புன்றான் இந்தாளு..
    //

    எனக்கு மிக பிடித்தமான குணசித்திர நடிகர்களில் இளவரசுவும் ஒருவர்.... ஒளிப்பதிவாளராக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர்.

    ReplyDelete
  28. [[[முரளிகண்ணன் said...
    பார்த்துடுவோம்ணே]]]

    அவசியம் பாருங்கண்ணே..!

    ReplyDelete
  29. [[[பரிதி நிலவன் said...

    //அழகுக்கு தூக்கி வைத்துக் (முடிந்தால்) கொஞ்சலாம்..!//

    முடியலன்னாலும் ரொம்பத்தான் ஜொள்ளு]]]

    ஏதோ நம்மாளால முடிஞ்சது பரிதி..!

    ReplyDelete
  30. நேற்றுதான் பார்த்தேன். அருமையான படம். நல்ல பொழுதுபோக்கு படமட்டுமல்ல, கொஞ்சம் கிளாசிக்கான படமும் கூட. உதாரணத்திற்கு, சொந்த ஊரில் பிழைக்க வழியில்லாமல் துபாய் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வேலைக்கு போகிறவர்கள், தன்னுடைய குடிசை/ஓட்டு வீடுகளுக்கு பக்கத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக மாடிவீடு கட்டியதை பார்த்திருக்கிறேன். அழகான பதிவு இது.

    ReplyDelete
  31. For some reasons Cable Sankar's review is totally biased. Your review gives a counter answer to his every point.

    ReplyDelete
  32. நல்லதொரு விமர்சனம். முழுசா படிச்சிட்டேன்.

    பாத்துடுவோம்.

    ReplyDelete
  33. [[[பார்வையாளன் said...
    இன்னுமாண்ணே திட்டக்குடியை நம்பிகிட்டு இருக்கீங்க? அந்த படத்தின் இயக்குனர்கூட இந்த அளவுக்கு நம்பி இருக்க மாட்டார்.]]]

    ஒருவரின் தனிப்பட்ட கலாரசனை என்றைக்குமே மாறாது பார்வையாளன் ஸார்..

    ReplyDelete
  34. [[[வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...
    //இவங்களுக்கு அடுத்த ஸ்கோர் அப்பா இளவரசு. நடிக்கிறதுக்கு ரொம்பவே கஷ்டமெல்லாம் பட வேணாம்பா. இயல்பா இருக்கிறதை, பேசுறதை, நடக்கிறதை செஞ்சாலே போதும். அதுதான்யா நடிப்புன்றான் இந்தாளு.//

    எனக்கு மிக பிடித்தமான குணசித்திர நடிகர்களில் இளவரசுவும் ஒருவர். ஒளிப்பதிவாளராக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர்.]]]

    எனக்கும் மிக பிடித்தமானவராகிவிட்டார் இளவரசு..!

    ReplyDelete
  35. [[[அ.பிரபாகரன் said...
    நேற்றுதான் பார்த்தேன். அருமையான படம். நல்ல பொழுதுபோக்கு படமட்டுமல்ல, கொஞ்சம் கிளாசிக்கான படமும்கூட. உதாரணத்திற்கு, சொந்த ஊரில் பிழைக்க வழியில்லாமல் துபாய் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வேலைக்கு போகிறவர்கள், தன்னுடைய குடிசை/ஓட்டு வீடுகளுக்கு பக்கத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக மாடி வீடு கட்டியதை பார்த்திருக்கிறேன். அழகான பதிவு இது.]]]

    வருகைக்கு நன்றி பிரபாகரன் ஸார்..!

    ReplyDelete
  36. படமெல்லாம் பார்க்குறதுக்கு நேரமிருக்கு. ஒரு விழாவுக்கு கூப்பிட்டா நல்லா போத்திக்கிட்டு தூங்குங்க :(

    ReplyDelete
  37. [[[அ.பிரபாகரன் said...
    For some reasons Cable Sankar's review is totally biased. Your review gives a counter answer to his every point.]]]

    ஒவ்வொருவரின் பார்வையும் வேறு, வேறாகத்தான் இருக்கும் பிரபாகரன்..! இதில் ஒன்றும் தவறில்லையே..?

    ReplyDelete
  38. [[[manjoorraja said...
    நல்லதொரு விமர்சனம். முழுசா படிச்சிட்டேன். பாத்துடுவோம்.]]]

    அவசியம் பாருங்க மஞ்சூர் ஸார்..!

    ReplyDelete
  39. [[[மயில்ராவணன் said...
    படமெல்லாம் பார்க்குறதுக்கு நேரமிருக்கு. ஒரு விழாவுக்கு கூப்பிட்டா நல்லா போத்திக்கிட்டு தூங்குங்க :(]]]

    ஹி.. ஹி.. கொஞ்சம் அசந்து போய் தூங்கிட்டேன் தம்பி..!

    அதையே இன்னும் ஞாபகத்துல வைச்சிருந்தா எப்படி?

    மறக்கோணும்..!

    ReplyDelete
  40. [[[மயில்ராவணன் said...
    படமெல்லாம் பார்க்குறதுக்கு நேரமிருக்கு. ஒரு விழாவுக்கு கூப்பிட்டா நல்லா போத்திக்கிட்டு தூங்குங்க :(]]]

    அன்னிக்கு பார்த்து கொஞ்சம் மறந்து தொலைச்சிட்டேன் தம்பி.. கோச்சுக்காத..!

    இன்னொரு நாள் கச்சேரியை வைச்சுக்கலாம்..!

    ReplyDelete