Pages

Tuesday, July 20, 2010

கணவர்களைத் திருடும் நடிகைகள்..! பாலிவுட் சர்வே..!


20-07-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நடக்குமா? நடக்காதா? என்று தமிழ்த் திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அந்தச் சம்பவம் கடந்த மாதம் நடந்தேறிவிட்டது.

சட்டப்படி சுற்றமும், நட்பும் சூழ ஆடம்பரமான சூழலில் செய்து ஜொலிப்பான மண்டபத்தில் மணமக்களாக அமர முடியாத துர்பாக்கியத்துடன் ஒரு வீட்டுக்குள் மாலையை மாற்றிக் கொண்டு தம்பதிகளாகிவிட்டார்கள் பிரபுதேவாவும், நயன்தாராவும்.

“எத்தனை நாளைக்குத்தான் இப்படி சேர்ந்து வாழுறாங்கன்னு நாங்களும் சொல்லிக்கிட்டே இருக்குறது..! பேசாம கட்டிக்குங்க.. வர்றது வரட்டும்..” என்று தனது தாய் வீட்டார் சொன்னதையே பிரபுதேவா ஏற்றுக் கொள்ள.. திருமணம் நடந்தேறியுள்ளது.

ஆனால் சட்டப்படி இதனை வெளியில் சொல்ல முடியாததால் "யாகம் ஒன்று நடத்தினோம். அதில் அவர்களும் கலந்து கொண்டார்கள்" என்பது போல், தங்களது செல்வாக்கை வைத்து பத்திரிகைகளில் செய்திகளை வரவழைத்துக் கொண்டார்கள் பிரபுதேவா குடும்பத்தினர்.

தான் உயிருக்குயிராய் காதலித்து, மணந்து, தனக்காக மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்த தன்னையே நம்பி வந்த ஒரு பெண், இதே ஊரில் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறொரு வீட்டில் குடியிருக்கும்போது, பிரபுதேவாவுக்கு இப்படிச் செய்ய எப்படி மனம் வந்தது என்கிறார்கள் திரையுலகத்தினர்.

தயாரிப்பாளர் தாணுவின் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ திரைப்படத்தில் நடித்த சூட்டோடு, தன்னுடன் படங்களில் ஜோடியாக நடனமாடிக் கொண்டிருந்த ஷம்ஷத் என்னும் முஸ்லீம் பெண்ணை தாணுவின் அலுவலகத்தில் வைத்துத்தான் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா. அத்திருமணத்தை நடத்தி வைத்து, பிரஸ்மீட் வைத்து பத்திரிகையாளர்களிடம் தம்பதியினரை அறிமுகப்படுத்தி வைத்ததும் தயாரிப்பாளர் தாணுதான்.

நயன்தாரா இப்படிச் செய்வார் என்று யாரும் எதிர்பார்க்காத சூழலில் இது போன்று நடிகைகள் ஏன் ஏற்கெனவே திருமணமான நடிகர்களை விரும்புகிறார்கள் என்பதுகூட ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருக்கிறது.

தமிழ்ச் சினிமாவில் இதற்கு பல முன்னோடிகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்குள்ளும் சில தனிப்பட்ட காரணங்கள் இருந்திருக்கின்றன. மீள முடியாமல் திருமண ஒப்பந்தத்தில் சிக்கிக் கொண்டார்கள் என்றாலும், அதனை வெற்றிகரமாக நடத்திக் காண்பித்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது திரையுலக வரலாறு.

தமிழ்த் திரையுலகம் போலவே வடக்கத்திய ஹிந்தி திரையுலகத்தையும் இப்படி ஒரு சர்வே எடுத்தால் என்ன என்ற ஆசையால் உருவானதுதான் இந்தப் பதிவு..!

தர்மேந்திரா - ஹேமமாலினி

‘வெண்ணிற ஆடை’ தமிழ்ப் படத்தில் நடிப்பதற்காக மேக்கப் டெஸ்ட் எடுத்து, 'இது ஸ்கிரீனில் காட்ட முடியாத முகவெட்டு' என்று சொல்லி இயக்குநர் ஸ்ரீதரால் நிராகரிக்கப்பட்ட ஹேமமாலினி, பின்பு ஹிந்திக்குச் சென்று ‘முடிசூடா ராணி’யாகத் திகழ்ந்தது பாலிவுட் சரித்திரம்.

ஜெமினிகணேசன், சாவித்திரியைப் போலவே இங்கும் பிரபலமானது தர்மேந்திரா-ஹேமமாலினி ஜோடிதான்..! 

‘Sholay’, ‘Charas’, ‘Aas Paas’, ‘Jugnu ', ‘Seeta Aur Geeta’, ‘The Burning Train’ என்று புகழ் பெற்றத் திரைப்படங்களில் இந்த ஜோடி பலரது கண்களையும் உறுத்தினாலும் ‘ஷோலே’யிலேயே ஹேமமாலினியின் லொட லொட பேச்சில் தர்மேந்திரா கவிழ்ந்துவிட்டது பிற்பாடுதான் தெரிந்தது.


பிரகாஷ்கவுரை மணந்து இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்த தர்மேந்திரா, ஹேமமாலினியின் தாயார் ஜெயா சக்கரவர்த்தியிடம் நேரில் சென்று பெண் கேட்டு ஹேமமாலினியை மணம் முடித்தார். ஆனாலும் இந்து மத முறைப்படி முதல் மனைவியிடமிருந்து சட்டப்படி பிரியாமல் இன்னொரு திருமணம் செய்ய முடியாது என்பதால் முஸ்லீமாக இருவருமே மதம் மாறித் திருமணம் செய்து கொண்டார்கள். இதன் பின்புதான் தர்மேந்திரா தனது முதல் மனைவியை டைவர்ஸ் செய்தார். ஆனாலும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்..!???


இரண்டு பெண் வாரிசுகளுடன் இப்போதுவரையிலும் இணை பிரியாதவர்களாக இருக்கும் இந்த ஜோடியில் ஹேமமாலினியின் இந்தக் காதலுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும்..?

ஹெலன் - சலீம்கான்

“ஏன்? ஏன்? ஏன்? ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.. ஏன்.. ஏன்..?” என்று ‘வசந்தமாளிகை’யில் நடிகர் திலகத்துக்கு வக்காலத்து வாங்கியபடியே ஆடிய ஹிந்தித் திரையுலகின் ‘கவர்ச்சிக் கன்னி’ ஹெலன் இது போன்றதொரு முடிவைத்தான் தன் சொந்த வாழ்க்கையிலும் எடுத்தார்.


இவர் காதலித்தது சினிமா கதாசிரியர் சலீம்கான் மீது. சலீம்கான் அப்போதே திருமணமானவர். சல்மாகான் என்றொரு மனைவி இருந்தார். இந்த சல்மாகான் மூலமாக தற்போதைய ஹிந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான்கான், சோகைல்கான், அர்பஜ்கான் என்ற மூன்று மகன்களும் அல்வீரா என்ற மகளும் இவருக்கு இருந்தனர். 


ஆனால் காதல் கண்ணை மறைத்துவிட்டது. சலீம்கான், ஹெலன் மீதான காதலில் உறுதியுடன் இருந்ததால் சல்மாகான் இதற்கு ஒத்துக் கொண்டார். ஹெலனையும் மணந்து கொண்டார் சலீம்கான்.

ஷப்னா ஆஸ்மி - ஜாவேத் அக்தர்..!

இந்தி திரையுலகில் கவர்ச்சி தவிர நடிப்பை மட்டுமே காட்டுவதில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் ஒரு சம காலத்தில் இருவர் மட்டுமே. அதில் ஒருவர் ஸ்மிதா பாட்டீல். மற்றவர் ஷப்னா ஆஸ்மி.

தான் நடிக்கும் கலைச் சிற்பங்களைப் போன்ற படங்களுக்கு திரைக்கதையை வடித்துக் கொடுக்கும் சிற்பியான ஜாவேத் அக்தருடன் பல மாதங்கள் பழகிய பின்பு காதல் கொண்டார் ஷப்னா. ஜாவேத்தும் அப்போது திருமணமானவர்தான். 


ஹனி இரானி என்னும் திரைக்கதை ஆசிரியர்தான் ஜாவேத்தின் மனைவி. அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருந்தன. ஆனாலும் ஷப்னாவின் காதலுக்காக தனது மனைவி ஹனியை டைவர்ஸ் செய்துவிட்டு ஷப்னாவை திருமணம் செய்து கொண்டார் ஜாவேத்.

இங்கே எந்தப் பெண்ணியமும் பேசப்படாமல், காதல் மட்டுமே பேசப்பட்டதை நினைவு கூர்க..!

ஜெயப்பிரதா - ஸ்ரீகாந்த் நகாதா

தெலுங்கு படவுலகில் கிளாமர் ஹீரோயின் என்று சுண்டிவிட்டால் ரத்தம் வரும் அளவுக்கு செக்கச் செவேல் என்றிருந்த ஜெயப்பிரதாவை, அன்றைக்கு இருந்த தெலுங்கு ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள்..!


ஆனால் இவரது துரதிருஷ்டம் வேறு மாதிரியானது. 1979-ல் கே.விஸ்வநாத்தின் ‘சர்கம்’ என்கிற ஹிந்திப் படத்தில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட ஜெயப்பிரதா மளமளவென முன்னேறி தெலுங்குலகின் முன்னணி நட்சத்திரமானார்.

அதே வேகத்தில் 1986-ல் ஸ்ரீகாந்த் நகாதா என்னும் திரைப்படத் தயாரிப்பாளரைத் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். இந்த நகாதாவுக்கு சந்திரா என்ற பெண்ணுடன் ஏற்கெனவே திருமணமாகி அவர் மூலமாக 3 குழந்தைகளும் இருந்தன.

இத்திருமணத்தை ஏற்காத நகாதாவின் முதல் மனைவி சந்திரா ஜெயப்பிரதாவை பழி வாங்கிய விதம்தான், எல்லோருக்கும் பிலிம் காட்டும் இந்திய சினிமாவுலகத்துக்கே, பிலிம் காட்டிவிட்டது.

தனது கணவர் நகாதாவை மருத்துவமனைக்கு நைச்சியமாக அழைத்துப் போய் அவருக்கே தெரியாமல் குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷனை செய்துவைத்துவிட்டார் சந்திரா. ஒரு மாதம் கழித்து இதனை பகிரங்கமாக வெளிப்படுத்திய சந்திரா, “இனிமேல் என் பிள்ளைகள் மட்டும்தான் ஸ்ரீகாந்த் நகாதாவின் குடும்ப வாரிசுகள்.. முடிந்தால் ஜெயப்பிரதா, என் கணவர் ஸ்ரீகாந்த் நகாதா மூலம் பிள்ளை பெற்றுக் காட்டட்டும்...” என்று பத்திரிகைகளில் சவால் விட்டதைக் கண்டு இந்தியத் திரையுலகமே ஆடிப் போய்விட்டது..!

ஜெயப்பிரதா அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை.. ஆனாலும் கணவருக்காக பொறுத்துக் கொண்டவர் நாளாவட்டத்தில் கட்சி, அரசியல் ஈடுபாடு காரணமாக தனது கணவரிடமிருந்து விலகியவர் இப்போது ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்ற நிலையில் இருக்கிறார்.

“நான் வாழ்க்கையில் செய்த ஒரே முட்டாள்தனம், நகாதாவை திருமணம் செய்ததுதான்” என்று சொல்லி தனது மணவாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளியை சோகத்துடன் வைத்திருக்கிறார் ஜெயப்பிரதா.

சங்கீதா பிஜ்லானி - முகமது அஸாருதீன்

சிற்சில ஹிந்தி திரைப்படங்களில் நடித்து சல்மான்கானை லவ்விக் கொண்டு பாலிவுட்டில் பத்திரிகைகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருந்த  சங்கீதா பிஜ்லானி சல்மான்கானுடனான தனது காதல் முறிந்து போன சோகத்தில் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கப் போய் நல்லதொரு குடும்பத்தையே பவுன்ஸராக்கிவிட்டார்.


நிர்மா பவுடர் விளம்பரத்தில் பளிச்சென்று அத்தனை அழகிய உடையில் முகத்தைக் காண்பித்த சங்கீதா, ஒரு காதலை மறக்க அடுத்தக் காதலை ஏற்பதுதான் சரியான வழி என்று நினைத்திருந்த சூழலில்தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது அஸாருதீனை சந்தித்தார். கிளீன்போல்டு அஸாரூதின்.

தனது மனைவி, மகன் என்று அழகாக இருந்த முகமது அஸாருதீனை பார்த்த மாத்திரத்திலேயே இழுத்துப் பிடித்த சங்கீதாவுக்கு, அஸாருதினே ஷாஜகான் போல் தனக்குத் தெரிவதாகச் சொல்லிவிட.. தனது மனைவியை விவகாரத்து செய்வதைத் தவிர அஸாருதீனுக்கு வேறு வழியில்லாமல் போனது..!

அஸாரூதின் திருமணத்திற்கு முன்பு தன்னைப் பெண் பார்க்க வந்த தனது தந்தை வீட்டு வரவேற்பறையில், சில ஆண்டுகள் கழித்து அதே போன்றதொரு மாலை வேளையில் சுற்றிலும் மதப் பிரமுகர்களை வைத்துக் கொண்டு தன்னைப் பார்த்து 'தலாக்' 'தலாக்' 'தலாக்' என்று மூன்று முறை சொன்ன சூழலை பத்திரிகைகளில் அவருடைய மனைவி பேட்டியாகச் சொல்லியிருந்த துயரத்தைப் படித்தவர்களில் நானும் ஒருவன். இன்னமும் என்னால் அதனை மறக்க முடியவில்லை..!

பின்பு சங்கீதா பிஜ்லானியுடன் அமர்க்களமாக தனது திருமணத்தை முடித்துக் கொண்டார் அஸாருதீன். அவருடைய முன்னாள் மனைவியும் இப்போது வேறொரு திருமணம் செய்து கொண்டு துபாய் சென்றுவிட்டது வேறு கதை.

ஸ்ரீதேவி - போனி கபூர்

“இவருக்கு எப்பத்தான் கல்யாணமாம்.. ஒரு ச்சின்ன க்ளூவாவது கொடுங்கப்பா..?” என்று பத்திரிகையாளர்களை அங்கலாய்க்க வைத்தவர் ஸ்ரீதேவிதான். ‘நான் அடிமை இல்லை’ படத்தோடு தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு குட்பை சொல்லிவிட்டு பாலிவுட்டில் ராணியாக வலம் வந்த ஸ்ரீதேவிக்கு ஏற்பட்ட சொந்தப் பிரச்சினைகளே ஏற்கெனவே திருமணமாகி வயதுக்கு வந்த பிள்ளைகள் இருக்கும் சூழலிலும், போனி கபூர் என்னும் ஹிந்தி திரைப்படத் தயாரிப்பாளருக்கு கழுத்தை நீட்டும் சூழ்நிலையைக் கொடுத்தது.


தனது அப்பாவின் மரணம்.. தொடர்ந்து அம்மாவுக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவு என்று துணைக்கு ஆள் இல்லாமல் அல்லல்பட்ட நேரத்தில் தான் தயாரிக்கும் ‘மிஸ்டர் இந்தியா’ படத்தில் நடிக்கும் ஹீரோயின் என்கிற முறையில், ஸ்ரீதேவிக்கு உதவிகள் செய்ய ஓடோடி வந்தார் போனி கபூர்.

ஸ்ரீதேவியின் அம்மாவுக்கு மூளை ஆபரேஷனில் ஏற்பட்ட குளறுபடிக்காக அமெரிக்க மருத்துவமனை நஷ்டஈடாகத் தந்த 75 கோடி ரூபாய்தான் ஸ்ரீதேவியை சட்டென திருமண முடிவெடுக்க வைத்தது.


போனிகபூரின் முதல் மனைவி இதனை கடுமையாக எதிர்த்தும், பிள்ளைகள் தடுத்தும் போனிகபூர் இதில் உறுதியாக நின்றார். தனது தம்பியும் நடிகருமான அனில்கபூரின் உதவியுடன் ஸ்ரீதேவியை ரகசியத் திருமணமும் செய்து கொண்டார்.

ஆனாலும் ஆத்திரம் தீராத போனிகபூரின் மாமியார் ஒரு நாள் நட்சத்திர ஹோட்டலில் போனிகபூருடன் பார்ட்டியில் இருந்த ஸ்ரீதேவியின் செவிட்டில் நாலு அறை கொடுத்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்திய கதையும் நடந்தது. அத்தோடு போனியின் முதல் மனைவியுடனான சகவாசமும் முடிந்தது. போனி கபூருக்கு விரைவில் டைவர்ஸூம் கிடைத்தது.

நடிகர் விஜயகுமாரின் சென்னை வீட்டில் ஸ்ரீதேவிக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியின்போதுதான் ஒரு வருடமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஸ்ரீதேவியின் உண்மை வாழ்க்கை வெளியே வந்தது.

இந்தக் காதலுக்குக் காரணம் கொஞ்சம் பணமும், அதிகமாகத் தேவைப்பட்ட பாதுகாப்பும்தான் என்பது ஊரறிந்த விஷயம்..!

ரவீணா தாண்டன் - அனில் தண்டான்

நடிகர் அக்ஷய்குமாருடனான தனது தெய்வீகக் காதல் ஒரு பாரில் நடந்த சின்ன கருத்து மோதலில் முடிந்து போய்விட்டதில் சோகத்துடன் இருந்த ரவீணாவுக்கு, ஆறுதல் சொல்ல வந்தவர்தான் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான அனில் தண்டான்.

போகிறபோக்கில் ரவீணாவின் வீட்டு வேலைகளையெல்லாம் செய்து அவரது அம்மாவுடன் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு “இப்படியொரு மாப்பிள்ளை நமக்குக் கிடைச்சா எப்படியிருக்கும்..?” என்று டிவி சீரியல் பாணியில் தனது வருங்கால மாமியார் மனதில் ‘பச்செக்’கென்று இடம் பிடித்துவிட்டார் அனில்.


வினை அனில் தண்டானின் முதல் மனைவிக்கு நடாஷா ஷிப்பிக்குத்தான் போனது. அரசல் புரசலாக செய்தியறிந்து கோபப்பட்ட நடாஷாவுக்கு, ஆறுதல் சொல்லும் விதமாக விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி புல்லரிக்க வைத்தார் அனில்.

ரவீணா ஷீட்டிங்கிற்கு போகின்ற ஊருக்கு முதல் நாளே அங்கே சென்று எல்லா வசதிகளும் ‘அம்மா’வுக்கு தோதாக இருக்கிறதா என்று சோதிக்கிற அளவுக்கு நல்லவராக இருந்த அனிலை, ரவீணாவாலும் மறக்க முடியவில்லை..!


அனிலுக்கு டைவர்ஸ் கிடைத்ததும், ஜெய்ப்பூர் கோட்டையில் வைத்து கோலாகலமாகத் திருமணம் செய்துகொண்டார் ரவீணா டாண்டன்.

கரீஷ்மா கபூர் - சஞ்சய் கபூர்

ஆரவாரமாக அமிதாப்பச்சனின் குடும்ப வாரிசு அபிஷேக்பச்சனுடன் நிச்சயத்தார்த்தம் செய்து வைக்கப்பட்ட ராஜ்கபூர் பேத்தி கரிஷ்மா கபூரின் அந்தத் திருமணம், ஏதோ ஒரு காரணத்தால் முறிந்து போனது சோகமயமானதுதான்..

இடையில் ஒரு குதிரைப் பந்தய மைதானத்தில் தான் சந்தித்த சஞ்சய் என்பவரைக் காதலிக்கத் துவங்கிய கரீஷ்மா, அவர் திருமணமானவர் என்பது தெரிந்தும் இன்னும் அதிகமாக காதலித்துவிட்டார். 


விளைவாக சஞ்சய் தனது மனைவியையும், குழந்தையையும் பிரிந்து ஓடி வந்து கரீஷ்மாவை திருமணம் செய்து கொண்டுவிட்டார். இதுக்கு காரணமெல்லாம் கேட்கக் கூடாது. தம்பதிகளுக்கு இப்போது ஆறு வயதில் சமீரா என்றொரு மகள் இருக்கிறாள். 


இந்தத் தம்பதிகளுக்கு இடையிலும் பல முறை சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு அது வீதிக்கு வந்து நிற்க.. இப்போதுதான் பெரியவர்களாக பார்த்து ஏதோ ஒரு பெவிகால் போட்டு ஒட்டி வைத்திருக்கிறார்கள்.

ஷில்பா ஷெட்டி - ராஜ்குந்த்ரா

ராஜஸ்தானின் ராயல்ஸ் சேலஞ்ச் அணியில் ஜீரோ பங்குகள் வைத்திருந்தும் அதற்குச்  சொந்தக்காரராக இருக்கும் வித்தியாசமான முதலாளியான ஷில்பா ஷெட்டி திருமணம் செய்திருக்கும் ராஜ்குந்திரா லண்டனில் மிகப் பெரும் தொழிலதிபர்.

ஷில்பா, தன்னை உலகத்துக்கே அடையாளம் காட்டிய டிவி ரியலிட்டி ஷோவில் பங்கேற்கச் சென்றபோதுதான் ராஜ்குந்த்ராவை சந்தித்தார். பார்த்த மாத்திரத்தில் ராஜ்குந்த்ரா கவிழ்ந்துவிட.. ஷில்பாவும் அதனை ஏற்றுக் கொண்டார்.

ராஜ்குந்த்ராவுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி குழந்தையும் இருந்தது. விரைவில் தன்னைத் திருமணம் செய்து கொள்வதற்கு ஏதுவாக மனைவியை விவாகரத்து செய்யும்படி ராஜ்குந்த்ராவுக்கு ஷில்பா உத்தரவிட ராஜ்குந்த்ராவும் அதை ஏற்று முதல் மனைவியை விவகாரத்து செய்துவிட்டு ஷில்பாவை திருமணம் செய்து கொண்டுவிட்டார்.


“இப்படி கல்யாணமான ஒருவரை மணக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று ஷில்பாவிடம் கேட்டபோது “எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. இதுனால என் பேமிலிக்கு ரொம்ப கெட்ட பேரு வந்திருச்சேன்னு வருத்தமாவும் இருக்கு. இருந்தாலும் ராஜ்குந்திராவை நான் டீப்பா லவ் பண்றனே..! அதை என்னால மறைக்க முடியலை.. அவரை மறக்கவும் முடியல.. நான் என்ன செய்யறது..?” என்கிறார் ஷில்பா. காதலுக்குக் கண்ணில்லையாமே..?

கரீனா கபூர் - சயீப் அலிகான்

இப்போதுவரையிலும் சேர்ந்து வாழ்கிறார்கள். “எப்போது திருமணம்..?” என்று கேட்டால் வானத்தைக் கை காட்டுகிறார்கள் இந்தத் தம்பதிகள்.

தன்னைவிட வயதில் குறைந்த நடிகர் ஷாகித்கபூருடன் சில ஆண்டுகளாக லவ்விக் கொண்டிருந்த கரீனா கபூர், ஒரு மதிய பொழுதில் ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றில்  இவர்கள் நாக்கோடு நாக்கு உரசி ஏதோவொரு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்ததை, செல்போனில் படம் பிடித்த எவனோ ஒருவன், ‘மும்பை மிட்டே’ பத்திரிகைக்கு அதைப் போட்டுக் கொடுத்ததினால் எழுந்த பிரச்சினையில் இவர்களது காதலும் காணாமல் போய்விட்டது.

இந்த வேகத்தில்தான் சிக்கினார் சயீப் அலிகான். பட்டியாலா ராஜ வம்சத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் நவாப் மன்சூர் அலிகான் பட்டோடிக்கும், ஹிந்தியின் மற்றொரு கனவுக் கன்னி ஷர்மிளா தாகூருக்கும் பிறந்தவர். 


தன்னைவிட 6 வயது மூத்த அம்ரிதா சிங்('மாவீரன்' படத்தின் ஹிந்தி மூலமான 'மர்த்' படத்தில் அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக நடித்தவர்)கை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்த நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2004-ம் ஆண்டில் அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்தார் சயீப். 

இதன் பின்பு கொலம்பியாவைச் சேர்ந்த ரோஸா என்கிற மாடலிங் பெண்ணுடன் இரண்டாண்டு காலமாக காட்சி தந்த சயீப், 2007-ம் ஆண்டு திடிரென்று அந்த உறவு கசந்து போனதாகச் சொல்லி முறித்துக் கொண்டார்.
 

மிகச் சரியாக இந்த நேரத்தில்தான் இணைந்தார்கள் கரீனா கபூரும், சயீப் அலிகானும். இவ்வளவு வேகமாக இதுவரையில் எந்த சினிமா ஜோடியும் நிஜவாழ்க்கையில் ஒட்டியதில்லை. அப்படியொரு ஒட்டுதலுடன் இருந்ததினால் அம்ரிதா சிங்கை டைவர்ஸ் செய்தார் சயீப் அலிகான்.

தம்பதிகள் இருவரின் டைரிகளுமே தற்போது கால்ஷீட்டுகளால் நிரம்பி வழிவதால், “முதலில் முடிந்தவரையில் கல்லா கட்டுவோம். பின்பு பார்த்துக் கொள்வோம்.. கல்யாணமானாத்தான் சேர்ந்திருக்கணுமா என்ன?” என்று கேள்வி கேட்டுவிட்டு இப்போதே தம்பதிகளாக வாழ்கிறார்கள்.

இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு வந்தது காதல்தான் என்று சொல்லி மனைவிகளுக்கு ரிவீட் அடிப்பதால் இந்தக் 'காதல்' என்கிற வார்த்தையை எதிர்த்து யாரும் எதுவும் சொல்ல முடியாத காரணத்தினால் இவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்..!

ஆனாலும் காதல் என்கிற உணர்வு இருக்கின்றவரையில் இதனைக் கட்டுப்படுத்துவது என்பது முடியாது என்றே தோன்றுகிறது..!

இதில் யார் செய்வது சரி.. யார் செய்வது தவறு என்று யாராலும் சொல்ல முடியவில்லை. இந்த பாழாய்ப் போன தனி மனித உரிமையும், கட்டற்ற சுதந்திரமும் இடையில் புகுந்து குடும்பம் என்கிற வார்த்தையை உடைப்பதால் இதில் மாட்டிக் கொள்வது மனைவிகளாகிய பெண்கள்தான்..!

பெண்ணுக்கே பெண்ணே எதிரி என்பதற்கு இதைவிடவும் சிறந்த உதாரணங்கள் இருக்க முடியாது..!

- 'இவள் புதியவள்' - ஜூலை-2010

டிஸ்கி : தமிழ்ச் சினிமாவில் இந்த லிஸ்ட், அடுத்து வரும் பதிவில்..!

95 comments:

  1. // இந்த சல்மாகான் மூலமாக தற்போதைய ஹிந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான்கான், சோகைல்கான், அர்பஜ்கான், அல்வீரா என்று 4 மகன்களும் இவருக்கு இருந்தனர்.
    //

    Alvira is daughter.

    ReplyDelete
  2. /தமிழ்ச் சினிமாவில் இந்த லிஸ்ட், அடுத்து வரும் பதிவில்./

    waiting for the next posssssst :)))

    ReplyDelete
  3. Mr. UT,

    You've got amazing memory.
    Interesting facts.

    ReplyDelete
  4. //சங்கீதா பிஜ்லானி அமீர்கானுடனான தனது காதல் முறிந்து போன சோகத்தில் கிரிக்கெட்//

    Salman khan?

    ReplyDelete
  5. //தன்னைவிட 6 வயது மூத்த அம்ரிதா சிங்(மாவீரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர்)கை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்த நிலையில், மனைவியுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாட்டால் ஒரே வீட்டில் இருந்தாலும் பேச்சுவார்த்தை இல்லாமல் சயீப் அலிகான் தனித்திருந்த சூழல் அது.

    மோதிய வேகத்தில் இணைந்தார்கள் கரீனா கபூரும், சயீப் அலிகானும். இவ்ளோ ஸ்பீடாக இதுவரையில் எந்த சினிமா ஜோடியும் நிஜவாழ்க்கையில் ஒட்டியதில்லை.

    //

    Saif is/was having a fling with Roza, an Italian before Kareena crossed his path.

    ReplyDelete
  6. //டிஸ்கி : தமிழ்ச் சினிமாவில் இந்த லிஸ்ட், அடுத்து வரும் பதிவில்..!//

    Seekiram podungo.

    ReplyDelete
  7. [[[Indian said...

    // இந்த சல்மாகான் மூலமாக தற்போதைய ஹிந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான்கான், சோகைல்கான், அர்பஜ்கான், அல்வீரா என்று 4 மகன்களும் இவருக்கு இருந்தனர்.//

    Alvira is daughter.]]]

    உதவிக்கு மிக்க நன்றி இந்தியன் ஸார்.. திருத்திவிட்டேன்..!

    ReplyDelete
  8. [[[gulf-tamilan said...

    /தமிழ்ச் சினிமாவில் இந்த லிஸ்ட், அடுத்து வரும் பதிவில்./

    waiting for the next posssssst :)))]]]

    போடுறேன்..

    இதுக்கு ஓட்டுப் போட்டாச்சா கல்ப் தமிழன் ஸார்..!

    ReplyDelete
  9. [[[Indian said...
    Mr. UT, You've got amazing memory.
    Interesting facts.]]]

    கொஞ்சம் நினைவில் வைத்திருந்தது.. மீதிக்கு கூகிளாண்டவரே துணை..!

    ReplyDelete
  10. [[[Indian said...

    //சங்கீதா பிஜ்லானி அமீர்கானுடனான தனது காதல் முறிந்து போன சோகத்தில் கிரிக்கெட்//

    Salman khan?]]]

    அட ஆமாம் இந்தியன் ஸார்..! திரும்பவும் விசாரித்தேன்.. அப்படித்தான் சொல்கிறார்கள்..! நன்றியோ நன்றி..!

    ReplyDelete
  11. வாழ்க நீ எம்மான் ! வையத்துள் வாழ்வாங்கு

    ReplyDelete
  12. தலை சுத்துது..., இதுல தமிழ் சினிமா வேற வருதா?

    ReplyDelete
  13. தலை சுத்துது..., இதுல தமிழ் சினிமா வேற வருதா?///

    repeeeeeeeeeetttttt

    ReplyDelete
  14. //இந்தி திரையுலகில் கவர்ச்சி தவிர நடிப்பை மட்டுமே காட்டுவதில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் ஒரு சம காலத்தில் இருவர் மட்டுமே. அதில் ஒருவர் ஸ்மிதா பாட்டீல். மற்றவர் ஷப்னா ஆஸ்மி//


    இந்த ஷப்னா ஆஸ்மி நான் பார்த்த ஒரு ஆங்கில திரைப்படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருந்தார். என்னால் அதை நம்பக்கூட முடியவில்லை. காரணம் அப்போது அவர் நீங்கள் மேலே சொன்ன வரிகளின்படி புகழப்பட்டவர்.

    ReplyDelete
  15. //- 'இவள் புதியவள்' - ஜூலை-2010//

    இந்த விவரங்கள் நீங்கள் எழுதி இந்த பத்திரிகையில் வெளிவந்ததா?

    (இப்படியெல்லாம் கூட பத்திரிகை வருதா? திரைப்பட விஷயத்தில்தான் பிரபலமில்லாத படங்களை பார்க்கிறீர்கள் என்றால் இதழ்களில் கூடவா? :-)))

    ஏற்கெனவே திருமணமான ஆண்களை நடிகைகள் திருமணம் செய்து கொள்வதில் உளவியல் பின்னணி இருக்கும் போலிருக்கிறது. பணத்திற்காகத்தான் தன்னை எல்லோரும் போற்றுகிறார்கள் என்கிற insecurity உணர்வில் இருக்கும் நடிகைகளுக்கு இளைஞர்களை விட (அவர்களுடன் டூயட் பாடி சலித்திருக்கும்) தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் நம்பிக்கை ஏற்படுகிற (அப்பாவிற்கு ஆல்டர்னேட்டிவ்) நபர்களைத் தங்களின் எதிர்காலம் கருதி திருமணம் செய்கிறார்கள் என்று யூகிக்கிறேன்.

    ReplyDelete
  16. என் அறிவு கண்ணை திறந்துட்டீங்க....

    ReplyDelete
  17. தலைவா.. கட்டுரை பிரமாதம் ;-)

    ஒரு சின்ன ஸ்கூப் ந்யூஸ் குடுக்கறேன்.. ஹேமமாலினி பத்தி..

    ஆக்சுவலா, ஹேமமாலினி, சஞ்சீவ் குமார்ன்னு (ஷோலே டாக்குர்) ஒரு நடிகரை லவ் பண்ணாங்க.. சஞ்சீவ் கபூரும். ஆனா, திடும்னு நடுவுல குதிச்ச தர்மேந்திரா, ஹேமமாலினிய லபக்ன்னு கொத்திகினு பூட்டாரு நைனா.. பாவம் சஞ்சீவ் குமார்.. தேவதாஸா மாறிக்கினாரு..

    ReplyDelete
  18. பெண்ணுக்கே பெண்ணே எதிரி 100% உண்மை..

    ReplyDelete
  19. //ஒரே வீட்டில் இருந்தாலும் பேச்சுவார்த்தை இல்லாமல் சயீப் அலிகான் தனித்திருந்த சூழல் அது.

    மோதிய வேகத்தில் இணைந்தார்கள் கரீனா கபூரும்
    //

    அதுக்கப்புறம் ஐயா ’ரோசா’ன்ற ஒரு இத்தாலி(?) பெண்ணோட ரொம்ப நாள் இருந்ததா படிச்ச ஞாபகம்ண்ணே :))

    ReplyDelete
  20. அண்ணே.. இவ்வளவு விவரம் எங்க இருந்து எடுக்குறீங்க...

    ReplyDelete
  21. அண்ணே நீங ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கணும்.

    ReplyDelete
  22. அண்ணே இதுக்கெல்லாமா ஆராய்ச்சி

    ReplyDelete
  23. உ த அண்ணே, இதிலேருந்து நீங்க தெரிஞ்சிக்க வேண்டியது - மொதல்ல வத்தலோ தொத்தலோ ஏதோ ஒண்ண கல்யாணம் பண்ணுங்க, கல்யாணம் ஆனவர்னு தெரிஞ்சா ஹீரோயினி பலபேர் உங்கள கல்யாணம் செஞ்சிக்க வருவாங்க. தலாக் பண்ணிட்டு குஜால் பண்ணுங்க.. ஐடியா எப்புடி???
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  24. இந்தப் பதிவை படிக்கும், நடிகை, உப நடிகை, துணை நடிகைகளுக்கு... ஒரு முக்கியமான அறிவிப்பு!!

    எனக்கு கல்யாணமாகி மூணு வயசில் குழந்தையிருக்கு.

    ஐ’ம் எலிஜபிள் & அவைலபிள்!!!!

    ReplyDelete
  25. //ஹாலிவுட் பாலா said...

    இந்தப் பதிவை படிக்கும், நடிகை, உப நடிகை, துணை நடிகைகளுக்கு... ஒரு முக்கியமான அறிவிப்பு!!

    எனக்கு கல்யாணமாகி மூணு வயசில் குழந்தையிருக்கு. ஐ’ம் எலிஜபிள் & அவைலபிள்!!!!///

    பாலா .. இரு இரு வீட்ல வத்தி வைக்கிறேன்..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  26. ஐ’ம் எலிஜபிள் & அவைலபிள்!!!!

    வாய்பில்லை பாலா? காரணம் ரகஸ்யம் வந்து சொல்றேன்.....

    திகைத்து விட்டேன் தமிழா?

    பெரிய ஆராய்ச்சி..... தெரியாத விசயங்கள்....

    ReplyDelete
  27. //பாலா .. இரு இரு வீட்ல வத்தி வைக்கிறேன்.. //

    எதிரியை எங்கேயும் தேட வேணாம்!!

    ----

    //வாய்பில்லை பாலா?//

    குண்டூசி விக்கற தொழிலதிபரா இருக்கணும்னு சொல்லுறீங்களா தல??

    நமக்கு பேர்லதான் ஹாலிவுட் இருக்கு. சரியான அட்ரஸ்... ஹாலிவுட்டுக்கு பக்கதில் இருக்கும் முட்டுச் சந்தின், ப்ளாட்பாரம்.

    ReplyDelete
  28. அண்ணே பல் இருக்கிறவன் பக்கடா திங்கான்?

    ReplyDelete
  29. உங்களோட எல்லா இடுகையும் ரொம்ப விரிவான அலசலா இருக்கு சரவணா.. அருமை..

    ReplyDelete
  30. Blogger சுரேஷ் கண்ணன் said...
    ///ஏற்கெனவே திருமணமான ஆண்களை நடிகைகள் திருமணம் செய்து கொள்வதில் உளவியல் பின்னணி இருக்கும் போலிருக்கிறது.///

    ஆமாம்! நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. எங்கேயோ படித்த நியாபகம்.

    இதற்க்கு முதன்மையான் காரணம் திருமணம் ஆன ஆண்களை அவர்களது மனைவிகள் நன்றாக "screen" செய்த (தேர்வு செய்து) பிறகு தான் திருமணம் செய்து கொள்வார்கள் (This is with respect to the dating culture that is the norm abroad). ஆதலால் அந்த ஆண் எல்லா விதமான "test" -லும் தேறி இருப்பான் என்ற உத்தரவாதம் (certificate) உண்டு!

    EVEN in western culture no woman wants to get married and go for a divorce that too after having babies. இது இந்தியாவிற்கும் பொருந்தும் என்று நினைக்கிறன்

    அதுவும் இந்தியாவில் ஆணாதிக்கம் அதிகம். ஆண் எப்படி வேண்டுமானால் இருக்கலாம். "கற்புக்கு அரசனாக" இருக்கத் தேவையில்லை. தேவையே இல்லை!

    "ஆம்ப்ளைனா அப்படி இப்படித்தான் இருப்பான். நீ தாண்டி மாப்பிள்ளையை "adjust" செய்து கொண்டு போகணும் என்று சொல்லும தாய்மார்கள், பெண்கள் தமிழ் நாட்டில், மிக மிக, மிக மிக அதிகம். Pardon me if I am wrong. தவறு பெண்கள் மீது அல்ல. அதுமாதிரி அவர்களை நமது சமுதாயம் வைத்திருக்கிறது.

    ஏன் இப்படி? உதாரணமாக ஒரு சாதாரன "Company" - இல மூன்று வருடம் வேலை செய்து தனது திறமையை காட்டிய ஊழியர்களை Multi National Company - கள் அள்ளிக்கொண்டு போவதில்லைய? அது மாதிரி!


    ஆகவே, மனைவிகள் ஜாக்கிரதை!!!

    ReplyDelete
  31. அது என்ன முஸ்லீமா மதம் மாறி சிம்பிளா ஐயங்கார் வெட்டிங்??????????????

    ReplyDelete
  32. கத்ரீனா கைப் மேட்டரை கடைசிவரை எதிர்பார்த்தேன்.

    ReplyDelete
  33. ஆனா கடைசியில இருக்கு...

    ReplyDelete
  34. விட்டு விட்டு படிச்சா அப்படித்தான்...

    ReplyDelete
  35. // அம்ரிதா சிங்(மாவீரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர்)கை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்த //

    மாவீரனில் ரஜினிக்கு அம்பிகாதான் ஜோடி. பைதபை, ரஜினிக்கு ஜோடியாக ஒரு இந்திப்படத்தில் அம்ரிதா சிங் நடித்திருக்கிறார்.

    அம்ரீதா சிங்கும், சன்னி தியோலும் இந்தி சினிமாவின் பிரபு, குஷ்பு மாதிரி.

    ReplyDelete
  36. [[[Indian said...

    Saif is/was having a fling with Roza, an Italian before Kareena crossed his path.]]]

    இந்தியன் ஸார்.. உண்மைதான்.. திருத்தி விடுகிறேன்..!

    நம்மளைவிட கில்லாடிகள்லாம் உலகத்துல இருக்காங்கப்பா..!

    இதைத்தான் முருகன் அப்பப்ப ஆப்படிக்கிறதுன்னு சொல்றது..!

    ReplyDelete
  37. [[[Indian said...
    //டிஸ்கி : தமிழ்ச் சினிமாவில் இந்த லிஸ்ட், அடுத்து வரும் பதிவில்..!//

    Seekiram podungo.]]]

    இருங்கண்ணா.. கொஞ்சம் டைம் வேணாமா எனக்கு..?

    ReplyDelete
  38. [[[மணிஜீ...... said...
    வாழ்க நீ எம்மான் ! வையத்துள் வாழ்வாங்கு]]]

    எல்லாம் உங்க ஆசீர்வாதம்ண்ணே..!

    ReplyDelete
  39. [[[அமைதி அப்பா said...
    தலை சுத்துது..., இதுல தமிழ் சினிமா வேற வருதா?]]]

    வேற வழி..! தப்பிக்க முடியாதே..!!!

    ReplyDelete
  40. [[[அஹமது இர்ஷாத் said...

    தலை சுத்துது... இதுல தமிழ் சினிமா வேற வருதா?///

    repeeeeeeeeeetttttt]]]

    நன்றி அஹமது ஸார்..!

    ReplyDelete
  41. [[[Selvaraj said...

    //இந்தி திரையுலகில் கவர்ச்சி தவிர நடிப்பை மட்டுமே காட்டுவதில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் ஒரு சம காலத்தில் இருவர் மட்டுமே. அதில் ஒருவர் ஸ்மிதா பாட்டீல். மற்றவர் ஷப்னா ஆஸ்மி//


    இந்த ஷப்னா ஆஸ்மி நான் பார்த்த ஒரு ஆங்கில திரைப்படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருந்தார். என்னால் அதை நம்பக்கூட முடியவில்லை. காரணம் அப்போது அவர் நீங்கள் மேலே சொன்ன வரிகளின்படி புகழப்பட்டவர்.]]]

    நான் இதுவரையிலும் கேள்விப்படாத செய்தி இது..

    செல்வராஜ் ஸார்.. அந்த ஆங்கிலத் திரைப்படத்தின் பெயர் என்னவென்று சொல்ல முடியுமா..?

    ReplyDelete
  42. [[[சுரேஷ் கண்ணன் said...

    //- 'இவள் புதியவள்' - ஜூலை-2010//

    இந்த விவரங்கள் நீங்கள் எழுதி இந்த பத்திரிகையில் வெளிவந்ததா?]]]

    ஆமாண்ணே..!

    (இப்படியெல்லாம் கூட பத்திரிகை வருதா? திரைப்பட விஷயத்தில்தான் பிரபலமில்லாத படங்களை பார்க்கிறீர்கள் என்றால் இதழ்களில் கூடவா? :-)))

    ஏண்ணே.. உங்களுக்கும் என்னைப் பார்த்தா கிண்டலா தெரியுதா..?

    சூரியக்கதிர் பத்திரிகையின் சார்பு பத்திரிகைண்ணே.. இப்பத்தான் தொடங்கி மூணு மாசமாச்சு..!

    [[[ஏற்கெனவே திருமணமான ஆண்களை நடிகைகள் திருமணம் செய்து கொள்வதில் உளவியல் பின்னணி இருக்கும் போலிருக்கிறது. பணத்திற்காகத்தான் தன்னை எல்லோரும் போற்றுகிறார்கள் என்கிற insecurity உணர்வில் இருக்கும் நடிகைகளுக்கு இளைஞர்களை விட (அவர்களுடன் டூயட் பாடி சலித்திருக்கும்) தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் நம்பிக்கை ஏற்படுகிற (அப்பாவிற்கு ஆல்டர்னேட்டிவ்) நபர்களைத் தங்களின் எதிர்காலம் கருதி திருமணம் செய்கிறார்கள் என்று யூகிக்கிறேன்.]]]

    எனது கருத்தும் இதேதாண்ணே..!

    எப்படியோ ஒரு புள்ளில இணைஞ்சிட்டோம்ண்ணே..!

    ReplyDelete
  43. [[[ஜெட்லி... said...
    என் அறிவு கண்ணை திறந்துட்டீங்க.]]]

    இந்த அறிவுக் கண்ணை வைச்சாவது இனிமே நல்லபடியா பொழைச்சுக்க தம்பி..!

    ReplyDelete
  44. [[[கருந்தேள் கண்ணாயிரம் said...

    தலைவா.. கட்டுரை பிரமாதம் ;-)

    ஒரு சின்ன ஸ்கூப் ந்யூஸ் குடுக்கறேன். ஹேமமாலினி பத்தி.

    ஆக்சுவலா, ஹேமமாலினி, சஞ்சீவ்குமார்ன்னு (ஷோலே டாக்குர்) ஒரு நடிகரை லவ் பண்ணாங்க.. சஞ்சீவ் கபூரும். ஆனா, திடும்னு நடுவுல குதிச்ச தர்மேந்திரா, ஹேமமாலினிய லபக்ன்னு கொத்திகினு பூட்டாரு நைனா.. பாவம் சஞ்சீவ் குமார்.. தேவதாஸா மாறிக்கினாரு.]]]

    ஆமாங்கண்ணா.. இது மட்டுமல்ல.. இன்னும் நிறைய உள்ளடி மேட்டர் நிறைய கிடைச்சது..

    எல்லாத்தையும் எழுதினா பதிவின் நோக்கம் மாறிருமேன்னுட்டு விட்டுட்டேன்..!

    ReplyDelete
  45. [[[திவ்யாஹரி said...
    பெண்ணுக்கே பெண்ணே எதிரி 100% உண்மை.]]]

    உண்மையை ஏற்றுக் கொண்டமைக்கு மிக்க நன்றிகள் திவ்யா..!

    ReplyDelete
  46. [[[☀நான் ஆதவன்☀ said...

    //ஒரே வீட்டில் இருந்தாலும் பேச்சுவார்த்தை இல்லாமல் சயீப் அலிகான் தனித்திருந்த சூழல் அது.
    மோதிய வேகத்தில் இணைந்தார்கள் கரீனா கபூரும்//

    அதுக்கப்புறம் ஐயா ’ரோசா’ன்ற ஒரு இத்தாலி(?) பெண்ணோட ரொம்ப நாள் இருந்ததா படிச்ச ஞாபகம்ண்ணே :))]]]

    ஆமாங்கண்ணா.. நானும் மறந்து தொலைச்சிட்டேன்..!

    ReplyDelete
  47. [[[கே.ஆர்.பி.செந்தில் said...
    அண்ணே.. இவ்வளவு விவரம் எங்க இருந்து எடுக்குறீங்க]]]

    பாதி நம்ம மண்டை ஸ்டோரேஜ்ல இருந்து..

    மீதி கூகிளாண்டவர்கிட்ட கேட்டு..!

    ReplyDelete
  48. [[[VISA said...
    அண்ணே நீங ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கணும்.]]]

    ஆஹா.. என்னவொரு வாழ்த்து..!

    விசா தம்பி.. நீயும் வாழ்க..!

    ReplyDelete
  49. [[[குழலி / Kuzhali said...
    அண்ணே இதுக்கெல்லாமா ஆராய்ச்சி?]]]

    ச்சும்மாதான்.. வெட்டி ஆபீஸர்ன்னு வெளில காட்டிக்க வேண்டாமா..?

    ReplyDelete
  50. உண்மை அண்ணா ,
    நல்ல அலசல்.சமுதாயத்துக்கு தேவையென்று இல்லாவிட்டாலும் சுவாரஸ்யமாகத்தான் உள்ளது.
    நடிகைகள் ஏன் திருமணமான ஆண்களை மணக்கிறார்கள் என்பதில் ஏதோ உளவியல் காரணம் இருக்கிறது என்ற கருத்து உண்மைதான்.
    இந்த நடிகைகளை நினைத்தால் கோபம் என்பதை விட பரிதாபம்தான் வருகிறது.
    அழகு புகழ் பணம் இருந்தும் கடைசியில் இப்படி இன்னொரு பெண்ணின் குடும்பத்தைக் குலைத்து இரண்டாம்தாரமாக வாழ்க்கைப் படுகிறார்கள். அல்லது அமெரிக்க மாப்பிளை , சிங்கப்பூர் தொழில் அதிபர் என்று யாரையோ மணந்து போன வேகத்தில் திரும்பி வந்து ஆகி சின்னத்திரையில் நடித்து காலம் கழிக்கிறார்கள்
    நட்சித்திரங்களாக மற்றவர்கள் முன் ஜொலிக்கும் இவர்கள் பின்புலத்தில் எத்தனை மனவேதனைகளோ !
    ஹிந்திக்கு போன திரிஷா அசின் போன்றோர் இந்தப் பழைய நடிகைகள் மாதிரி செய்கிறார்களோ என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
    திரிஷா துணிச்சல் கட்டை , நயன் தாரா மாதிரி உணர்ச்சிவசப்பட்டு குழம்புகிற பெண் அல்ல அதனால் தப்பித்துக் கொள்ளுவா என்று நம்புவோம்.
    --வானதி

    ReplyDelete
  51. [[[sriram said...

    உ த அண்ணே, இதிலேருந்து நீங்க தெரிஞ்சிக்க வேண்டியது - மொதல்ல வத்தலோ தொத்தலோ ஏதோ ஒண்ண கல்யாணம் பண்ணுங்க, கல்யாணம் ஆனவர்னு தெரிஞ்சா ஹீரோயினி பல பேர் உங்கள கல்யாணம் செஞ்சிக்க வருவாங்க. தலாக் பண்ணிட்டு குஜால் பண்ணுங்க.. ஐடியா எப்புடி???
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்]]]

    ஐடியா நல்லாத்தான் இருக்கு..!

    சமயத்துல பல இடத்துல அடியெல்லாம் விழுகுதாம்மே.. அதான் யோசிக்க வேண்டியிருக்கு..!

    ReplyDelete
  52. [[[சுரேஷ் கண்ணன் said...

    @ பாஸ்டன் ஸ்ரீராம்

    :-)))))]]]

    ம்.. நானும் நோட் பண்ணிக்கிறேன்..! எனக்கொரு நேரம் வரும்ண்ணே..!

    ReplyDelete
  53. [[[ஹாலிவுட் பாலா said...

    இந்தப் பதிவை படிக்கும், நடிகை, உப நடிகை, துணை நடிகைகளுக்கு... ஒரு முக்கியமான அறிவிப்பு!!

    எனக்கு கல்யாணமாகி மூணு வயசில் குழந்தையிருக்கு.

    ஐ’ம் எலிஜபிள் & அவைலபிள்!!!!]]]

    எதையாவது தூக்கிட்டு அடிக்கிறதுக்கு வரப் போறாங்க..!

    ReplyDelete
  54. [[[sriram said...

    //ஹாலிவுட் பாலா said...

    இந்தப் பதிவை படிக்கும், நடிகை, உப நடிகை, துணை நடிகைகளுக்கு... ஒரு முக்கியமான அறிவிப்பு!!

    எனக்கு கல்யாணமாகி மூணு வயசில் குழந்தையிருக்கு. ஐ’ம் எலிஜபிள் & அவைலபிள்!!!!///

    பாலா .. இரு இரு வீட்ல வத்தி வைக்கிறேன்..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்]]]

    நாடு விட்டு நாடு போனாலும் நம்ம குல புத்தி போகாதே..!

    ReplyDelete
  55. [[[ஜோதிஜி said...

    ஐ’ம் எலிஜபிள் & அவைலபிள்!!!!

    வாய்பில்லை பாலா? காரணம் ரகஸ்யம் வந்து சொல்றேன்.

    திகைத்து விட்டேன் தமிழா?

    பெரிய ஆராய்ச்சி. தெரியாத விசயங்கள்.]]]

    நன்றிங்கண்ணா.. பெரிசால்லாம் இல்லண்ணே.. தேடினப்போ கிடைச்சதுதான்..!

    ReplyDelete
  56. [[[ஹாலிவுட் பாலா said...

    //பாலா .. இரு இரு வீட்ல வத்தி வைக்கிறேன்.. //

    எதிரியை எங்கேயும் தேட வேணாம்!!]]]

    வூட்டாண்டேயே இருக்கு ராசா.. பார்த்து பத்திரமா இருந்துக்க..!

    ReplyDelete
  57. [[[நசரேயன் said...
    அண்ணே பல் இருக்கிறவன் பக்கடா திங்கான்?]]]

    தி்ன்னுட்டுப் போறான்.. நான் ஒண்ணும் சொல்லலியேண்ணே..!???

    ReplyDelete
  58. [[[thenammailakshmanan said...
    உங்களோட எல்லா இடுகையும் ரொம்ப விரிவான அலசலா இருக்கு சரவணா.. அருமை..]]]

    நன்றி தேனக்கா..!

    ReplyDelete
  59. [[[ஆட்டையாம்பட்டி அம்பி said...

    Blogger சுரேஷ் கண்ணன் said...
    /ஏற்கெனவே திருமணமான ஆண்களை நடிகைகள் திருமணம் செய்து கொள்வதில் உளவியல் பின்னணி இருக்கும் போலிருக்கிறது./

    ஆமாம்! நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. எங்கேயோ படித்த நியாபகம்.

    இதற்க்கு முதன்மையான் காரணம் திருமணம் ஆன ஆண்களை அவர்களது மனைவிகள் நன்றாக "screen" செய்த (தேர்வு செய்து) பிறகுதான் திருமணம் செய்து கொள்வார்கள் (This is with respect to the dating culture that is the norm abroad). ஆதலால் அந்த ஆண் எல்லா விதமான "test" -லும் தேறி இருப்பான் என்ற உத்தரவாதம் (certificate) உண்டு!

    EVEN in western culture no woman wants to get married and go for a divorce that too after having babies. இது இந்தியாவிற்கும் பொருந்தும் என்று நினைக்கிறன்

    அதுவும் இந்தியாவில் ஆணாதிக்கம் அதிகம். ஆண் எப்படி வேண்டுமானால் இருக்கலாம். "கற்புக்கு அரசனாக" இருக்கத் தேவையில்லை. தேவையே இல்லை!

    "ஆம்ப்ளைனா அப்படி இப்படித்தான் இருப்பான். நீ தாண்டி மாப்பிள்ளையை "adjust" செய்து கொண்டு போகணும் என்று சொல்லும தாய்மார்கள், பெண்கள் தமிழ் நாட்டில், மிக மிக, மிக மிக அதிகம். Pardon me if I am wrong. தவறு பெண்கள் மீது அல்ல. அது மாதிரி அவர்களை நமது சமுதாயம் வைத்திருக்கிறது.

    ஏன் இப்படி? உதாரணமாக ஒரு சாதாரன "Company" - இல மூன்று வருடம் வேலை செய்து தனது திறமையை காட்டிய ஊழியர்களை Multi National Company - கள் அள்ளிக்கொண்டு போவதில்லைய? அது மாதிரி!

    ஆகவே, மனைவிகள் ஜாக்கிரதை!!!]]]

    தங்களுடைய கருத்துக்கு நன்றி அம்பி ஸார்..!

    மனைவிகள் ஜாக்கிரதையாகத்தான் இருந்தாக வேண்டும்..!

    ReplyDelete
  60. [[[துளசி கோபால் said...
    அது என்ன முஸ்லீமா மதம் மாறி சிம்பிளா ஐயங்கார் வெட்டிங்??????????????]]]

    முஸ்லீமாக மதம் மாறிவி்ட்டதாக கோர்ட்டில் தெரிவித்தாராம் தர்மேந்திரா..!

    ஆனால் இந்த புகைப்படத்தை டைவர்ஸ் கிடைத்த பின்புதான் வெளியிட்டதாகச் சொல்கிறார்கள்..!

    ReplyDelete
  61. [[[செந்தழல் ரவி said...
    கத்ரீனா கைப் மேட்டரை கடைசிவரை எதிர்பார்த்தேன்.]]]

    இந்தப் பொண்ணு இன்னும் யார்கிட்டேயும் சிக்கலையேடா ராசா..?

    ReplyDelete
  62. [[[செந்தழல் ரவி said...
    கத்ரீனா கைப் மேட்டரை கடைசிவரை எதிர்பார்த்தேன்.]]]

    எழுதியிருந்தாத்தான இருக்கும்..!

    ReplyDelete
  63. [[[செந்தழல் ரவி said...
    ஆனா கடைசியில இருக்கு...]]]

    அடப்பாவி.. எழுதின எனக்கே தெரியாம எங்க இருக்காங்க கைப்..?

    ReplyDelete
  64. [[[செந்தழல் ரவி said...
    விட்டு விட்டு படிச்சா அப்படித்தான்.]]]

    அப்படியென்ன ராசா பெரிய வேலை பார்க்குறீங்க..?

    ReplyDelete
  65. [[[J. Ramki said...

    //அம்ரிதா சிங்(மாவீரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர்)கை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்த //

    மாவீரனில் ரஜினிக்கு அம்பிகாதான் ஜோடி. பைதபை, ரஜினிக்கு ஜோடியாக ஒரு இந்திப்படத்தில் அம்ரிதா சிங் நடித்திருக்கிறார்.]]]

    ஆஹா.. ராம்கியண்ணேன்ல்லாம் நமக்கு பின்னூட்டம் போட வந்திட்டாரு.. நாம ரெளடிதான்..!

    அண்ணே.. மாவீரனின் இந்தி மூலமான மர்த் படத்தில் அமிதாப்புக்கு ஜோடியாக நடித்தவர்ன்னு சொல்ல வந்தவன் அவசரத்துல நம்ம தலைவரோட கம்பேர் பண்ணிட்டேன்.. மன்னிச்சுக்குங்கண்ணே..! திருத்திட்டேண்ணே..!

    [[[அம்ரீதா சிங்கும், சன்னி தியோலும் இந்தி சினிமாவின் பிரபு, குஷ்பு மாதிரி.]]]

    இதென்ன புதுக் கதையா இருக்கு..? சன்னிதியோலும், டிம்பிள் கபாடியாவும்தான பிரபு-குஷ்பு ஜோடி..!

    அம்ரிதாசிங்கும், ரவிசாஸ்திரியும்தாண்ணே இது மாதிரி ஜோடியா திரிஞ்சாங்க..!

    ReplyDelete
  66. உங்கள் சேவை.. எங்கள் தேவை.. தமிழ் பதிவு எப்போ..??

    ReplyDelete
  67. //அந்த ஆங்கிலத் திரைப்படத்தின் பெயர் என்னவென்று சொல்ல முடியுமா..//

    "Immaculate Conception"?

    ReplyDelete
  68. ஆகா நாட்டுல நம்மதான் முன்னேறாம இருக்கோம் போலையே..... சீக்கிரம் தொழிலதிபர் ஆகனும்ணே... :-)))

    ReplyDelete
  69. //
    டிஸ்கி : தமிழ்ச் சினிமாவில் இந்த லிஸ்ட், அடுத்து வரும் பதிவில்..!
    //
    அண்ணே : அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ( இந்தி சினிமாவுக்கும் நமக்கும் 8
    கிலோமீட்டர்...)

    ReplyDelete
  70. காதல் புனிதமானது. நீங்கள் ஏன் அதை குறை சொல்கிறீர்கள் என்று யாரவது கேப்பாங்க. கவனம்

    ReplyDelete
  71. என்னே ஒரு சேவை...! எப்படியெல்லாம் மேட்டர் புடிக்கிறீங்க அண்ணே...! எல்லாத்துலயும் அனுபவம் உள்ளவன்னா போட்டி குர்க்கத்தானே செயும் அதனாலதான் பல கிராஸ் திருமணங்கள் ரகசியமாகவே இருக்கிறது.

    ReplyDelete
  72. // sriram said...
    உ த அண்ணே, இதிலேருந்து நீங்க தெரிஞ்சிக்க வேண்டியது - மொதல்ல வத்தலோ தொத்தலோ ஏதோ ஒண்ண கல்யாணம் பண்ணுங்க, கல்யாணம் ஆனவர்னு தெரிஞ்சா ஹீரோயினி பலபேர் உங்கள கல்யாணம் செஞ்சிக்க வருவாங்க. தலாக் பண்ணிட்டு குஜால் பண்ணுங்க.. ஐடியா எப்புடி???
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்//

    பாஸ்டன் ஸ்ரீராம் இதைநான் வன்மையாகக் கண்டிக்கிறேன்..... 'தலாக்' என்ற பிரயோகம் மிகத் தவறு, ஒரு சமூகத்தையே குறிப்பதாக உள்ளது.

    ReplyDelete
  73. அடிப்படை புரிதலே இல்லாத ஒரு சமூகச் சூழலே இங்கு நிலவுகிறது. 'தலாக்' 'தலாக்' (முத்தலாக்) என்று மூன்றுமுறை கூறவேண்டும் ஆனால் ஒரு தலாக்குக்ம் மற்றொன்றுக்கும் குறிப்பிட்ட இடைவெளி தேவை, அதுவரையில் தம்பதியர் இருவரும் சேர்ந்து வாழவேண்டும். மூன்றாவதுவரையில் அவர்கள் தங்கள் விலகலில் உறுதியுடன் இருப்பார்களேயானால்..... அவர்களுக்கு தலாக் வழங்கப்படும். இதில் இருவருமே ஒத்துப் போகும் நிலையில் முத்தலாக்கை அந்நிமிடமே சொல்லி விலகிக்(Mutual Consent) கொள்ளலாம்.

    ஆனால் உண்மையில் நடப்பது வேறாக இருக்கிறது, பெண்கள் யாரும் அங்கே இருப்பதில்லை (பெண்ணின் விருப்பம் தனியாகப் பதிவுசெய்யப்படும்). முத்தலாக் என்பதை அந்நிமிடமே சொல்லி முடித்து வைக்கப்படுகிறது. இதுதான் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் (இந்தியா முழுவதும்) நடக்கிறது. இது நாடாமைகளின் அராஜகத்தால் நிகழ்த்தப்படும் ஒன்று. சட்டம் சொன்னதை விடுத்து இவர்கள் செய்யும் அட்டூழியத்தால் நிகழ்வது. அதற்காக ஒட்டுமொத்த சமூகமே தவறீழைத்தாக பொருள்படும் தொனியில் குறை சொல்வது நல்லதாகப் படவில்லை.

    ReplyDelete
  74. அண்ணே, சரியான ஆராய்ச்சிக் கட்டுரைண்ணே......

    ReplyDelete
  75. மனைவிகளை திருடும் நடிகர்களைப் பற்றியும் பட்டியல் போட்டால் தன்யனாவேன்.

    ReplyDelete
  76. ஏகப்பட்ட விவரங்கள்... பழைய கிசுகிசுக்கள் செய்திகளாய் பார்ப்பதும் சுவாரஸ்யம்தான்.

    ReplyDelete
  77. ஆத்தாடி இத்தன பேரா,,,

    ReplyDelete
  78. [[[vanathy said...
    உண்மை அண்ணா, நல்ல அலசல். சமுதாயத்துக்கு தேவையென்று இல்லாவிட்டாலும் சுவாரஸ்யமாகத்தான் உள்ளது.

    நடிகைகள் ஏன் திருமணமான ஆண்களை மணக்கிறார்கள் என்பதில் ஏதோ உளவியல் காரணம் இருக்கிறது என்ற கருத்து உண்மைதான்.

    இந்த நடிகைகளை நினைத்தால் கோபம் என்பதை விட பரிதாபம்தான் வருகிறது.

    அழகு புகழ் பணம் இருந்தும் கடைசியில் இப்படி இன்னொரு பெண்ணின் குடும்பத்தைக் குலைத்து இரண்டாம்தாரமாக வாழ்க்கைப் படுகிறார்கள். அல்லது அமெரிக்க மாப்பிளை , சிங்கப்பூர் தொழில் அதிபர் என்று யாரையோ மணந்து போன வேகத்தில் திரும்பி வந்து ஆகி சின்னத்திரையில் நடித்து காலம் கழிக்கிறார்கள்

    நட்சித்திரங்களாக மற்றவர்கள் முன் ஜொலிக்கும் இவர்கள் பின்புலத்தில் எத்தனை மனவேதனைகளோ !

    ஹிந்திக்கு போன திரிஷா அசின் போன்றோர் இந்தப் பழைய நடிகைகள் மாதிரி செய்கிறார்களோ என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    திரிஷா துணிச்சல் கட்டை, நயன்தாரா மாதிரி உணர்ச்சிவசப்பட்டு குழம்புகிற பெண் அல்ல அதனால் தப்பித்துக் கொள்ளுவா என்று நம்புவோம்.
    --வானதி]]]

    வானதியம்மா..!

    ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீக..!

    வந்ததுக்கு மிக்க நன்றி..!

    நடிகைகளின் இந்த முடிவுக்குக் காரணம் அவர்களுடைய அந்தஸ்தும், தெரிந்தவர், சினிமா பீல்டில், உடன் நடிப்பவராக இருந்தால் தனக்குப் பிரச்சினையிருக்காது.. சரியான புரிதல் இருக்கும் என்று எண்ணுகிறார்கள்..

    இதுதான் பெரும்பான்மையோரின் காரணம்..!

    ReplyDelete
  79. [[[butterfly Surya said...
    உங்கள் சேவை.. எங்கள் தேவை.. தமிழ் பதிவு எப்போ..??]]]

    அதையும் போடணுமான்னு கொஞ்சம் யோசனையா இருக்குண்ணே..!

    ReplyDelete
  80. [[[Indian said...

    //அந்த ஆங்கிலத் திரைப்படத்தின் பெயர் என்னவென்று சொல்ல முடியுமா..//

    "Immaculate Conception"?]]]

    தகவலுக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  81. [[[ரோஸ்விக் said...
    ஆகா நாட்டுல நம்மதான் முன்னேறாம இருக்கோம் போலையே..... சீக்கிரம் தொழிலதிபர் ஆகனும்ணே... :-)))]]]

    ரொம்ப ஆசை ரோஸ்விக்..! தப்பு..!

    ReplyDelete
  82. [[[வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

    //டிஸ்கி : தமிழ்ச் சினிமாவில் இந்த லிஸ்ட், அடுத்து வரும் பதிவில்..!//

    அண்ணே : அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ( இந்தி சினிமாவுக்கும் நமக்கும் 8
    கிலோமீட்டர்...)]]]

    ஒருத்தன் அடி வாங்குறதுல எம்புட்டு பேருக்கு சந்தோஷம் பாருங்க..!

    ReplyDelete
  83. [[[Karthick Chidambaram said...
    காதல் புனிதமானது. நீங்கள் ஏன் அதை குறை சொல்கிறீர்கள் என்று யாரவது கேப்பாங்க. கவனம்.]]]

    ஓகே.. ஓகே.. எனக்கும் புரியுது..! ஆனால் அந்தக் காதல் சரியா? தவறா..?

    ReplyDelete
  84. [[[பித்தன் said...
    என்னே ஒரு சேவை...! எப்படியெல்லாம் மேட்டர் புடிக்கிறீங்க அண்ணே...! எல்லாத்துலயும் அனுபவம் உள்ளவன்னா போட்டி குர்க்கத்தானே செயும் அதனாலதான் பல கிராஸ் திருமணங்கள் ரகசியமாகவே இருக்கிறது.]]]

    பித்தன்ஜி.. எல்லாம் உங்க ஆசீர்வாதம்..!

    அனுபவம் இதுல தேவையில்லை. பாதுகாப்புதான் முக்கியம்னு நினைக்குறாங்க. அதுதான்..!

    ReplyDelete
  85. [[[பித்தன் said...

    // sriram said...
    உ த அண்ணே, இதிலேருந்து நீங்க தெரிஞ்சிக்க வேண்டியது - மொதல்ல வத்தலோ தொத்தலோ ஏதோ ஒண்ண கல்யாணம் பண்ணுங்க, கல்யாணம் ஆனவர்னு தெரிஞ்சா ஹீரோயினி பலபேர் உங்கள கல்யாணம் செஞ்சிக்க வருவாங்க. தலாக் பண்ணிட்டு குஜால் பண்ணுங்க.. ஐடியா எப்புடி???
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்//

    பாஸ்டன் ஸ்ரீராம் இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    'தலாக்' என்ற பிரயோகம் மிகத் தவறு, ஒரு சமூகத்தையே குறிப்பதாக உள்ளது.]]]

    பித்தன்ஜி..

    அஸாருதீன் செய்த செயலைத்தான் நீங்கள் கண்டிக்க வேண்டும்..!

    ராம் ஒரு கிண்டலுக்குத்தான் அதனை பயன்படுத்தியிருக்கிறார்..! விவாகரத்து என்று சொல்வதைப் போல..!

    ReplyDelete
  86. [[[பித்தன் said...

    அடிப்படை புரிதலே இல்லாத ஒரு சமூகச் சூழலே இங்கு நிலவுகிறது.

    'தலாக்' 'தலாக்'(முத்தலாக்) என்று மூன்று முறை கூறவேண்டும் ஆனால் ஒரு தலாக்குக்ம் மற்றொன்றுக்கும் குறிப்பிட்ட இடைவெளி தேவை, அதுவரையில் தம்பதியர் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும். மூன்றாவதுவரையில் அவர்கள் தங்கள் விலகலில் உறுதியுடன் இருப்பார்களேயானால்..... அவர்களுக்கு தலாக் வழங்கப்படும்.

    இதில் இருவருமே ஒத்துப் போகும் நிலையில் முத்தலாக்கை அந்நிமிடமே சொல்லி விலகிக் (Mutual Consent) கொள்ளலாம்.

    ஆனால் உண்மையில் நடப்பது வேறாக இருக்கிறது, பெண்கள் யாரும் அங்கே இருப்பதில்லை

    (பெண்ணின் விருப்பம் தனியாகப் பதிவு செய்யப்படும்).

    முத்தலாக் என்பதை அந்நிமிடமே சொல்லி முடித்து வைக்கப்படுகிறது.

    இதுதான் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் (இந்தியா முழுவதும்) நடக்கிறது. இது நாடாமைகளின் அராஜகத்தால் நிகழ்த்தப்படும் ஒன்று.

    சட்டம் சொன்னதை விடுத்து இவர்கள் செய்யும் அட்டூழியத்தால் நிகழ்வது. அதற்காக ஒட்டு மொத்த சமூகமே தவறீழைத்தாக பொருள்படும் தொனியில் குறை சொல்வது நல்லதாகப்படவில்லை.]]]

    சரி.. அந்தச் சில நாட்டாமைகளை மட்டுமே நானும் ராமும் கண்டித்திருப்பதாக எடுத்துக் கொள்ளுங்கள்..!

    ReplyDelete
  87. [[[kavi said...
    அண்ணே, சரியான ஆராய்ச்சிக் கட்டுரைண்ணே.]]]

    நன்றி.. நன்றி.. நன்றி கவி..!

    ReplyDelete
  88. [[[பரிதி நிலவன் said...
    மனைவிகளை திருடும் நடிகர்களைப் பற்றியும் பட்டியல் போட்டால் தன்யனாவேன்.]]]

    அப்படி யாராவது இருக்கிறார்களா என்ன..? எனக்குத் தெரியவில்லை பரிதி..!

    ReplyDelete
  89. [[[ஸ்ரீராம். said...
    ஏகப்பட்ட விவரங்கள்... பழைய கிசுகிசுக்கள் செய்திகளாய் பார்ப்பதும் சுவாரஸ்யம்தான்.]]]

    அப்போ படிச்சு ஸ்டோரேஜ் ஆன விஷயங்கள்தான் இப்போ வெளில வருது..!

    ReplyDelete
  90. [[[Riyas said...

    ஆத்தாடி இத்தன பேரா..?]]]

    இதுக்கே இப்படி வாய் பொளக்குறீங்களே..? முடியாமல் போன கதைகளையும் சேர்த்து எழுதியிருந்தால் விடிந்து போயிருக்கும்..!

    ReplyDelete
  91. //இதன் பின்புதான் தர்மேந்திரா தனது முதல் மனைவியை டைவர்ஸ் செய்தார். ஆனாலும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்..!???//

    என்ன எழவுங்க இது?

    ReplyDelete