Pages

Thursday, July 08, 2010

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு யாருக்காக நடத்தப்பட்டது..?

08-07-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சமீபத்தில் நடந்து முடிந்த கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி பல்வேறு பத்திரிகைகளில் வந்த செய்திகளின் தொகுப்புதான் இது..
 

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் குடும்பத்தில் இருந்து 2 ஆயிரத்து 632 பேர் வந்திருந்திருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் கோல்டன் பாஸ் கொடுத்திருக்கிறார்கள்.

முதல்வர் வீட்டுச் சம்பந்திகள், அவர்களது வீட்டு உறவினர்கள், பேரன், பேத்திகள் என்று அத்தனை பேருக்கும் 90 புரோட்டோகால் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது அவர்களைத் தங்குமிடத்தில் இருந்து விழா இடத்துக்கு அழைத்து வரும் வேலையைச் செய்தது இந்த கடமை தவறாத தமிழக அரசு அதிகாரிகள்தானாம்..

இது தவிர, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கார், ஒரு டிரைவர்ன்னு சூப்பரா ஏற்பாடு செய்திருக்கிறார்கள்..

இதெல்லாம் யார் வீட்டுக் காசு..?

தி.மு.க. மாநாட்டு மேடைகளில் அவர்களது விழாக்களில் முதல்வர் கருணாநிதியின் குடும்பம் முன் வரிசையை மொத்தமாக ஆக்கிரமித்துக் கொள்ளும். தமிழுக்காக ஒரு மாநாடு நடத்தப்படும்போதும் அந்த நிலைதான் தொடர வேண்டுமா..?

ஊர்வலத்தைப் பார்ப்பதற்கு வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்கள், உள்ளூர்ப் புலவர்கள் பலரும் ஒழுங்கான இடமில்லாமல் திணறித் தவிக்க.. கருணாநிதி குடும்பத்தின் நான்கு தலைமுறை வாரிசுகளும் ஒரு முழு மேடையை கபளீகரம் செய்து கொண்டார்கள்.

மாநாட்டுப் பொது மேடையின் முன் வரிசையில் இருந்த மொத்த நாற்காலிகளும் அவர்களுக்குத்தான்.. அவர்கள் திடீரென அரங்குக்குள் நுழையும்போது 15 வரிசை ஆட்களும் எழுந்து நிற்கிறார்கள். அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் பேசிக் கொண்டிருக்கும்போது செல்வி, துர்கா ஸ்டாலின், காந்தி அழகிரி வருகிறார்கள். முன் வரிசை ஆட்கள் எழுந்து நிற்கிறார்கள். ஹார்ட் இதன் அர்த்தம் புரியாமல் விழிக்கிறார்.

தொடக்க விழாவில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதால் ஊர்வலம் பார்க்கும் மேடையை அழகிரியும், தயாநிதி மாறனும் பிடித்துக் கொண்டார்கள். ஆய்வரங்கத் தொடக்க விழா மேடையில் கனிமொழி மகாராணி போல் வலம் வந்தார். அழகிரி மகள் கயல்விழி கவியரங்கில் இருந்தார். செல்வி மகள் எழிலரசி வீணை வாசித்தார். கண்காட்சியை அழகிரி திறந்து வைத்தார். இணையதளக் கண்காட்சியைத் திறப்பது தயாநிதி மாறன். இறுதி நாள் மேடையில் ஸ்டாலினுக்கு நாற்காலி இருப்பதை உணர்ந்த அழகிரியும் தானே மேடையேறி ஓர் இடத்தைப் பிடித்தார்.

கிளம்பிற்றுகாண் ஜால்ரா கூட்டம்..

அதே கவிஞர்கள்.. அதே கூட்டம் சூழ்ந்திருக்க நடுநாயகமாக வீற்றிருக்கிறார் முதல்வர்.. யாரங்கே.. தொடங்கட்டும் என்று ஆரம்பமாகிறது கவியரங்கம்..

கிளம்பிற்றுக்கான் தமிழ்ச் சிங்கக் கூட்டம் என்று வைரமுத்துவும், தமிழுக்கும் அமுதென்று பேர் என்று வாலியும் ஆளுக்கொரு சோப்பு கம்பெனியுடன் வந்தார்கள்.

செம்மொழித் தங்கமே எங்கள் செல்வச் சிங்கமே.. உன்னைக் கும்பிட்டால் ஊரையே கும்பிட்ட மாதிரி” என்று ஆரம்பித்து பாப்பநாயக்கன்பாளையம் டீக்கடை ஒன்றில் செம்மொழி மாநாடு நோக்கி நிற்கும் ஒரு மூதாட்டியிடம் தான் பேசும் பாவனையில் முதல்வர் மேல் மும்மாரி பொழிந்தார் வைரமுத்து.

கலைஞரின் கபாலக் களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களைவிட ஈரப் பெண் எண்ணங்களே அதிகம். இல்லாவிட்டால், கோபாலபுரம் வீட்டை கொடையாகத் தர முடியுமா..? அந்த ஒளவையார் காலத்தில் இவர் இருந்திருந்தால் அதியமான் ஏமாந்திருப்பான்..” என்றெல்லாம் கவிதை மழை பொழிந்தது ஈரோடு தமிழன்பன்.

பாடலாசிரியர் விவேகா, “தலைவா நீ சாகா விளக்கு.. விதி விலக்கு.. அகல் விளக்கு.. அகலா விளக்கு.. சென்னைக்குத் தெற்கே உள்ள திருக்குவளையில்தான் தமிழுக்குக் கிழக்கே பிறந்தது” என்று கண்டுபிடித்துச் சொன்னார்.

விடுவாரா நா.முத்துக்குமார்? “சோற்றை விட்டுவிட்டு சூரியனைச் சாப்பிட்டாய்.. திரையுலகில் பலர் ஜெயித்திருக்கிறார்கள். ஆனால் கலைஞர் திரை உலகையே ஜெயித்திருக்கிறார். கலைஞர் ஒரு மலைக்கோட்டை” என்று வாசித்தார்.

கயல்விழிக்கான அறிமுகமே அபாரம். “தாத்தா தலையாட்ட.. பாட்டி தாலாட்ட.. அப்பா பாராட்ட.. சித்தப்பா சீராட்ட.. பாட வா பெண்ணே.. உன் தாத்தாவிடம் நீ கேட்ட தமிழ்ப் பாட்டை..” என்று அழைத்தார் வைரமுத்து.

பாட்டு என்று அழைத்ததால் உண்மையில் பாடியேவிட்டார் கவிதாயினி. “பள்ளம் மேடாக வேண்டும். புரையோடிப் போன லஞ்சம் போக வேண்டும்” என்று சொன்னதுதான் யாருக்கு என்று புரியவில்லை..

இதையெல்லாம் கேள்விப்பட்ட வாலி தலைமையிலான அணி 16 அடி பாய்ந்தது. “ஒரு குவளை தமிழ்த் தாய்க்கே பால் ஊட்டியது அக்குவளை திருக்குவளை..” என்று சொன்னவர் மேத்தா. “காற்றே கலைஞரின் புகழ்ப் பாடித் திரி..” என்று இயற்கைக்கு உத்தரவிட்டார் வாலி. “கலைஞரை முத்தமிழ் என்று சொன்னால் நான் முரண்படுவேன். அவர் மொத்தத் தமிழன். வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி.. காடு வரை பிள்ளை.. கடைசிவரை கலைஞர்..” என்றெல்லாம் புகழ் பாடிப் பொழிந்தவர் இறுதியில் “முத்துக்குமார் தீக்குளித்து வளர்த்த தமிழ்” என்று முடித்தார் பழநிபாரதி.

“82 வயது உடல் மறைத்த இளைஞனே.. கலைஞரில் இருக்கிறார் கடவுள்.. 108 வடிவில் காப்பது கலைஞர்தானே..?” என்று தன் பணியைச் செவ்வனே முடித்தார் பா.விஜய்.

ஹைலைட்டான விஷயம்..

செம்மொழி மாநாட்டு அழைப்பிதழ்களை கலைஞர் குடும்பத்து குல தெய்வமான திருக்குவளை பரமேஸ்வரி கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டிருக்கிறது. அந்த அழைப்பிதழ்களை கொண்டு வந்து கொடுத்த ஆறு பூசாரிகளுக்கும் தனது கையாலே, தலா மூன்றாயிரம் ரூபாய் ரொக்கத்தையும், பட்டு வேஷ்டியையும் கொடுத்திருக்கிறார் கருணாநிதி. இதைச் சொல்லிச் சொல்லி பூரித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த பூசாரிகள்.

ம்ஹும்.. பகுத்தறிவு வேஷம் போடும் இவரைப் போன்ற வேடதாரிகள் தமிழினத்தின் தலைவராம்..

மொழிக்காக உயிரையே கொடுப்பேன் என்று வெற்றுக் கூச்சல் போட்டு மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து 450 கோடியைத் திருடி தன்னைத் தானே வாழ்த்திக் கொண்ட அற்பபுத்தியுடைய இந்தத் திருடர்கள் கூட்டம்தான் தமிழகத்தை வாழ வைக்க வந்த தெய்வங்களாம்..

சகித்துக் கொள்ள முடியவில்லை..

(தொடரும்)

39 comments:

  1. \\கண்காட்சியை அழகிரி திறந்து வைத்தார\\

    அஜண்டாவிலே தான் அழகிரி. உண்மையா திறந்தது டி ஆர் பாலு. இருங்க மீதி படிச்சுட்டு வர்ரேன். மீ தி பஷ்ட்டு போட்டு ரொம்ப நாள் ஆகுது. அதான்:-))

    ReplyDelete
  2. \\கண்காட்சியை அழகிரி திறந்து வைத்தார\\

    அஜண்டாவிலே தான் அழகிரி. உண்மையா திறந்தது டி ஆர் பாலு. இருங்க மீதி படிச்சுட்டு வர்ரேன். மீ தி பஷ்ட்டு போட்டு ரொம்ப நாள் ஆகுது. அதான்:-))

    ReplyDelete
  3. //வெற்றுக் கூச்சல் போட்டு மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து 450 கோடியைத் திருடி தன்னைத் தானே வாழ்த்திக் கொண்ட அற்பபுத்தியுடைய
    //

    இதுக்கு நான் மாநாட்டுக்கு போகலை

    ReplyDelete
  4. //வெற்றுக் கூச்சல் போட்டு மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து 450 கோடி//
    இதுக்குத்தான் நான் வரி கட்டுறதே இல்லை. அதனால மாநாட்டும் போவலை

    ReplyDelete
  5. அப்ப தமிழ்மொழிக்கு இந்த மாநாட்டினால் ஒன்றுமே நல்லது நடக்கலேன்னு சொல்றீங்களா??

    ReplyDelete
  6. அண்ணே, இதையெல்லாம் படிச்சி உடம்ப கெடுத்துகாதீங்கன்னு சொன்னா கேக்கமாடீங்களா ?

    ReplyDelete
  7. 18+ படமா ஒரு 10 பதிவு எழுதினா.. தமிழ் தானா வளர்ந்துட்டுப் போவுது.

    ReplyDelete
  8. //அந்த ஒளவையார் காலத்தில் இவர் இருந்திருந்தால் அதியமான் ஏமாந்திருப்பான்..” என்றெல்லாம் கவிதை மழை பொழிந்தது ஈரோடு தமிழன்பன்//

    சரியாத்தான் சொல்லியிருக்காரு.. அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுக்கலாம்னு ஆசை ஆசையா வர்ற வழியிலேயே அவன மடக்கி நெல்லிக்கனிய புடுங்கி இவரு தின்னுபுட்டா அதியமான் ஏமாந்துதான போயிருப்பான்...

    ReplyDelete
  9. த‌லைவா

    உன் உமிழ் நீரும் த‌மிழ் நீர்

    நீ ஆய் போவ‌தும் தாய்த் த‌மிழ்

    -உட‌ன்பொற‌ப்பு

    ReplyDelete
  10. அபி அப்பா said...
    \\கண்காட்சியை அழகிரி திறந்து வைத்தார\\

    அஜண்டாவிலே தான் அழகிரி. உண்மையா திறந்தது டி ஆர் பாலு. இருங்க மீதி படிச்சுட்டு வர்ரேன். மீ தி பஷ்ட்டு போட்டு ரொம்ப நாள் ஆகுது. அதான்:-))
    //

    செம்மொழி மாநாட்டில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், கொதிப்படைந்த அழகிரி கண்காட்சி திறப்பை புறக்கணித்ததாகவும், டி.ஆர் பாலு என்கிற (ஜூனியர்) எம்.பிக்கு கண்காட்சியைத் திறக்கும் வாய்ப்பை கலைஞர் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது!

    டி.ஆர்.பாலுக்கு வந்த லக்கப்பாருங்க!

    கலைஞரின் பெருந்தன்மையை பாராட்டியே தீர வேண்டும்!

    ReplyDelete
  11. தானைத் தலைவர் தமிழனத் தென்றல்....

    அண்ணே இந்த முதுகு சொறிதலில் உள்ள சுகம்...... சொலித் தெரிவதில்லை...... நாமெல்லாம் பனை ஓலையில் சொறிவோம் இவர் பண ஓலையில் சொறிகிறார்.....

    ReplyDelete
  12. உண்மைத் தமிழன்,
    தமிழ்மணத்தில் எமது பதிவை இணைக்க பல சிக்கல்கள்.
    உமது வலைப்பூவில் இதை லிங்க் கொடுத்து உதவலாம்.

    ReplyDelete
  13. அண்ணே ,

    நீங்கள் சொல்லுவதும் உண்மையாக இருக்கலாம் .


    சிங்கப்பூரிலிருந்து செம்மொழி மாநாட்டில் பங்கெடுத்தவர்களின் மின்னஞ்சலை இங்கு தருகிறேன் .



    Actually if one communicated well with the organizing committee and
    get clearance in advance might have experienced less discomfort.
    In my case. It was a event I will keep very close to my heart. In
    general the event bring in thesprit tolearn and understand the love
    for Tamil. I know some walked 200 onto attend.they took the event as a
    festival of life time.
    It was amazing to see so many people and speak only one language.
    Of course with such big magnitude some might have suffered.
    But this event is a better refelection of how Tamil nadu and india
    have improved.
    I have a district collector IPS officer standing at the airport to
    invite us. It isnot acommon sight in the past. From the minute I land
    upto the second I departed Tamil nadu. The secretariat of the event
    was in touch with me and provide all basic needs as agreed.
    I feel sorry for the people who might suffered. But it will be
    ungrateful to critcise blindly.
    Chemozhi manadu is another mile stone for Tamil nadu showing how
    people can make a difference for a common cause.
    I'm sure the delegates from Singapore can share your experiences.
    In summary. It might take a while To organize a event with such
    dedication and professinisim.

    ==

    I'm one of the speakers . In reality the conference was organized
    > well.
    >
    > I did learn a lot about our Tamil language.
    >
    > I got to know government officials and Tamil friends from all over the
    > world who got only objective to learn and appeicuate our mother
    > language Tamil.
    >
    > I guess we should organize a sharing session about the unique
    > experience at WCTC.
    ===

    ReplyDelete
  14. [[[அபி அப்பா said...

    \\கண்காட்சியை அழகிரி திறந்து வைத்தார\\

    அஜண்டாவிலேதான் அழகிரி. உண்மையா திறந்தது டி.ஆர்.பாலு. இருங்க மீதி படிச்சுட்டு வர்ரேன். மீ தி பஷ்ட்டு போட்டு ரொம்ப நாள் ஆகுது. அதான்:-))]]]

    ஓஹோ..!

    ReplyDelete
  15. [[[நசரேயன் said...

    //வெற்றுக் கூச்சல் போட்டு மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து 450 கோடியைத் திருடி தன்னைத் தானே வாழ்த்திக் கொண்ட அற்பபுத்தியுடைய//

    இதுக்கு நான் மாநாட்டுக்கு போகலை.]]]

    இதனாலதான் நானும் போகலை..!

    ReplyDelete
  16. [[[ILA(@)இளா said...

    //வெற்றுக் கூச்சல் போட்டு மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து 450 கோடி//

    இதுக்குத்தான் நான் வரி கட்டுறதே இல்லை. அதனால மாநாட்டும் போவலை]]]

    நீங்க கட்டுறதில்ல. ஆனா அவங்க கரீக்ட்டா புடுங்கிக்கிட்டுத்தான் இருக்காங்க..! உங்களுக்குத்தான் அது புரியலை..!

    ReplyDelete
  17. [[[gulf-tamilan said...
    அப்ப தமிழ் மொழிக்கு இந்த மாநாட்டினால் ஒன்றுமே நல்லது நடக்கலேன்னு சொல்றீங்களா??]]]

    மொழிக்கு என்ன நடந்தது என்று நீங்கள் சொன்னால் நான் கேட்டுக் கொள்கிறேன்..!

    ReplyDelete
  18. [[[ஒரு காசு said...
    அண்ணே, இதையெல்லாம் படிச்சி உடம்ப கெடுத்துகாதீங்கன்னு சொன்னா கேக்க மாடீங்களா?]]]

    முடியலையே.. எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் இதைத்தான பக்கம், பக்கமா போட்டுத் தாளிக்கிறாங்க..!

    ReplyDelete
  19. [[[ஹாலிவுட் பாலா said...
    18+ படமா ஒரு 10 பதிவு எழுதினா.. தமிழ் தானா வளர்ந்துட்டுப் போவுது.]]]

    குட் ஐடியா பாலா..!

    நீங்க மொதல்ல துவக்குங்க..!

    ReplyDelete
  20. [[[முகமூடி said...

    //அந்த ஒளவையார் காலத்தில் இவர் இருந்திருந்தால் அதியமான் ஏமாந்திருப்பான்..” என்றெல்லாம் கவிதை மழை பொழிந்தது ஈரோடு தமிழன்பன்//

    சரியாத்தான் சொல்லியிருக்காரு.. அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுக்கலாம்னு ஆசை ஆசையா வர்ற வழியிலேயே அவன மடக்கி நெல்லிக்கனிய புடுங்கி இவரு தின்னுபுட்டா அதியமான் ஏமாந்துதான போயிருப்பான்..]]]

    ஹி.. ஹி.. இருந்தாலும் இருக்கலாம்.. நடந்தாலும் நடந்திருக்கலாம்.. முடிந்தாலும் முடியலாம்..!

    நாம கொஞ்சம் லக்கு பண்ணிருக்கோம்..!

    ReplyDelete
  21. அதெல்லாம் இருக்கட்டும். மாநாடு முடிந்தவுடன் முதல்வர் பதவி விலகுவதாக சொன்னாரே. எப்போது விலகுவார் என்று கேட்டுச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  22. [[[க‌ரிச‌ல்கார‌ன் said...

    த‌லைவா

    உன் உமிழ் நீரும் த‌மிழ் நீர்

    நீ ஆய் போவ‌தும் தாய்த் த‌மிழ்

    -உட‌ன்பொற‌ப்பு]]]

    ஹா.. ஹா.. ஹா..!

    ReplyDelete
  23. ஒரு வாரத்துக்கு முன்னாடி யதேச்சையாக இந்த பாடலை youtubeil கேட்டேன். இந்த பாடலை உங்களுடன் பகிந்து கொள்கின்றேன்.
    பாபநாசம் சிவன் எழுதிய பாடல். அவரும் தமிழ் வளர்த்தவர்களில் ஒருவர்.
    முருகன் பக்தனான உங்களுக்கு இந்த பாடல் பிடிக்கும் என்று இடுகின்றேன்.

    இதற்கும் commentkkum பதிவிக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை.



    சொப்பன வாழ்வில் மகிழ்ந்து
    சொப்பன வாழ்வில் மகிழ்ந்து - சுப்ரமண்ய
    ஸ்வாமி உனை மறந்தார் - அந்தோ
    சொப்பன வாழ்வில் மகிழ்ந்து - சுப்ரமண்ய
    ஸ்வாமி உனை மறந்தார் - அந்தோ
    அற்பப் பணப் பேய் பிடித்தே - அறிவிழந்து
    அற்பர்களைப் புகழ்வார்
    அற்பப் பணப் பேய் பிடித்தே அறிவிழந்து
    அற்பர்களைப் புகழ்வார்

    நாவால் பொய் மொழிவார் - பொருள் விரும்பி
    நாவால் பொய் மொழிவார் - தனது வாழ்
    நாளெல்லாம் பாழ் செய்வார் - அந்தோ
    நாவால் பொய் மொழிவார் - உன்தன்
    பாவன நாமமதை ஒரு பொழுதும்
    பாவனை செய்தறியார்
    பாவன நாமமதை ஒரு பொழுதும்
    பாவனை செய்தறியார்

    அந்தோ விந்தையிதே - அறிந்தறிந்து
    ஆழ்நரகில் உழல்வாரே - மாந்தர்
    அந்தோ விந்தையிதே - அறிந்தறிந்து
    ஆழ்நரகில் உழல்வாரே - இவர்
    சிந்தை திருந்தி உய்ய - குகனே உன்தன்
    திருவருள் புரியாயோ
    சிந்தை திருந்தி உய்ய - குகனே உன்தன்
    திருவருள் புரியாயோ

    ReplyDelete
  24. [[[அத்திவெட்டி ஜோதிபாரதி said...

    அபி அப்பா said...
    \\கண்காட்சியை அழகிரி திறந்து வைத்தார\\

    அஜண்டாவிலேதான் அழகிரி. உண்மையா திறந்தது டி ஆர் பாலு. இருங்க மீதி படிச்சுட்டு வர்ரேன். மீ தி பஷ்ட்டு போட்டு ரொம்ப நாள் ஆகுது. அதான்:-))//

    செம்மொழி மாநாட்டில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், கொதிப்படைந்த அழகிரி கண்காட்சி திறப்பை புறக்கணித்ததாகவும், டி.ஆர் பாலு என்கிற(ஜூனியர்) எம்.பிக்கு கண்காட்சியைத் திறக்கும் வாய்ப்பை கலைஞர் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது!

    டி.ஆர்.பாலுக்கு வந்த லக்கப் பாருங்க! கலைஞரின் பெருந்தன்மையை பாராட்டியே தீர வேண்டும்!]]]

    இதெல்லாம் உள்ளரங்க அரசியல் சாமி..!

    இந்த தட்டிக் கொடுப்பது, விட்டுக் கொடுப்பதையெல்லாம் வீட்டுப் பிரச்சினைல வைச்சுக்கக் கூடாதா..? மக்களோட காசுலதான் விளையாடணுமா..?

    ReplyDelete
  25. [[[பித்தன் said...
    தானைத் தலைவர் தமிழனத் தென்றல்.... அண்ணே இந்த முதுகு சொறிதலில் உள்ள சுகம். சொலித் தெரிவதில்லை. நாமெல்லாம் பனை ஓலையில் சொறிவோம் இவர் பண ஓலையில் சொறிகிறார்.]]]

    பித்தன்ஜி..

    உங்களது பிதற்றல் சூப்பர்..!

    ReplyDelete
  26. //கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு யாருக்காக நடத்தப்பட்டது..? //

    பாவமுயா நீ. அது முதல்ல கட்சி மகாநாடா இருக்குமுன்னு நினைச்சேன்; கடைசில அது குடும்ப விழாவா போய்டிச்சு.

    ReplyDelete
  27. [[[வெட்டு 1 துண்டு 2 said...

    கருணாநிதிக்கு செம டோஸ்.
    http://vettuonnu.blogspot.com/2010/07/blog-post.html]]]

    ரொம்ப ஹெவியாத்தான் இருக்கு நண்பரே..!

    ReplyDelete
  28. [[[வெட்டு 1 துண்டு 2 said...

    உண்மைத் தமிழன்,
    தமிழ்மணத்தில் எமது பதிவை இணைக்க பல சிக்கல்கள்.
    உமது வலைப்பூவில் இதை லிங்க் கொடுத்து உதவலாம்.]]]

    தமிழ்மணத்தில் அதற்கான வழிமுறைகள் எளிய தமிழில் கொடுக்கப்பட்டுள்ளன நண்பரே..!

    தயவு செய்து அதனைப் படித்துப் பயன் பெறுங்கள்.. தமிழ்மணத்தில் இணைப்பது மிக எளிதானது..!

    ReplyDelete
  29. லால்தாஸூ அண்ணே..

    வருகைக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  30. [[[ananth said...
    அதெல்லாம் இருக்கட்டும். மாநாடு முடிந்தவுடன் முதல்வர் பதவி விலகுவதாக சொன்னாரே. எப்போது விலகுவார் என்று கேட்டுச் சொல்லுங்கள்.]]]

    1972-லேயே தி.மு.க.வில் இருந்து விலகுகிறேன்.. ஒதுங்கிக் கொள்கிறேன் என்று வீர வசனம் பேசியவர்தான் இவர்..!

    அதையே நம்பிவிட்ட நீங்கள் இதையும் அதேபோல் நம்பிருங்களேன்..!

    ReplyDelete
  31. ஆனந்தலோகநாதன் ஸார்..!

    "சொப்பன வாழ்விலே மகிழ்ந்து"தான் அத்தனை அரசியல்வியாதிகளும் மஞ்சள் குளித்து வருகிறார்கள்..!

    இன்னும் எத்தனை நாளைக்கு இந்தச் சொப்பனம் நிகழும் என்பதையும் பார்ப்போம்..?

    ReplyDelete
  32. கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு யாருக்காக நடத்தப்பட்டது..?

    /////

    ஏண்ணே இம்புட்டு பதிவு எழுதியிருக்கிக இது கூட தெரியலயா ?

    செ செ


    இட்ஸ் ஒன்லி பார் டமில் பிபுள்

    ReplyDelete
  33. [[[ConverZ stupidity said...

    //கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு யாருக்காக நடத்தப்பட்டது..? //

    பாவமுயா நீ. அது முதல்ல கட்சி மகாநாடா இருக்குமுன்னு நினைச்சேன்; கடைசில அது குடும்ப விழாவா போய்டிச்சு.]]]

    குடும்பத்துல விழா நடத்தணும்னா அவங்க காசுல தனியா நடத்திட்டுப் போறது.. எதுக்காக மக்கள் காசை சுரண்டனும்..?

    ReplyDelete
  34. உண்மை. ஜால்ரா சத்தம் காது கிழிஞ்சு போச்சு தல. என்னோட உணர்வுகளையும் உங்க பதிவு பிரதிபலிக்கிறதறகாக நன்றி.

    ReplyDelete
  35. [[[பிரியமுடன் பிரபு said...

    கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு யாருக்காக நடத்தப்பட்டது..?/

    ஏண்ணே இம்புட்டு பதிவு எழுதியிருக்கிக இது கூட தெரியலயா?

    செ செ இட்ஸ் ஒன்லி பார் டமில் பிபுள்]]]

    ஓ.. பிரபு.. அப்ப நாமெல்லாம் அன்னிய பியூப்புள்ளா..?

    ReplyDelete
  36. [[[தருமி said...
    உண்மை. ஜால்ரா சத்தம் காது கிழிஞ்சு போச்சு தல. என்னோட உணர்வுகளையும் உங்க பதிவு பிரதிபலிக்கிறதறகாக நன்றி.]]]

    அப்பாடா..

    இந்த ஒரு விஷயத்திலாவது நம்ம ஒருமித்தக் கருத்துல இருக்கோமே..

    ஓகே தலைவா..!

    ReplyDelete
  37. தல எனக்கு பிரியல. நமக்கு என்ன கருத்து வேறுபாடு.

    ReplyDelete
  38. [[[தருமி said...
    தல எனக்கு பிரியல. நமக்கு என்ன கருத்து வேறுபாடு.]]]

    கருத்து வேறுபாடு ஒண்ணுமே இல்லியா..?

    அப்புறம் ஏன் நீங்க ஆடிக்கொருதரம், அமாவாசைக்கொரு தரமா என் வூட்டுக்கு வர்றீங்க தாத்தா..

    டெய்லி வரலாமே..?

    ReplyDelete
  39. அண்ணாத்த, மொதல்ல என்ன மன்னிச்சுடுங்க. நான் நீங்க நினைக்கிற தருமி இல்ல. நான் ஒரு பிள்ளக்கா பய. இப்பதான் புதுசா பிளாக்கு எழுதுற "பிரபல பதிவரு". பேரு கொழப்பமாயிப் போச்சு. அதான். பேர மாத்திபுட்டேன் சாமி. இப்போலருந்து நான் "ஜூனியர் விகடன்" சீ... சீ... "ஜூனியர் தருமி". நானும் உங்கள மாதிரி "பிரபல பதிவரு" ஆ வரணும்னு ஆசிர்வதிங்க. புரிதலுக்கு நன்றி.

    ReplyDelete