Pages

Monday, June 21, 2010

கோட்டா சீனிவாசராவுக்கு எனது ஆறுதலும், வருத்தங்களும்..!

21-06-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்று மாலை அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டபோது சட்டென ஒரு நிமிடம் எனக்குள் தூக்கிவாரிப் போட்டது, “ஏண்டா முருகா.. அவருக்கு ஏன் இந்தக் கொடுமை..?” என்று..

அவ்வளவுதான்.. அடுத்த நிமிடத்தில் நாட்டில் தினம்தோறும் நடக்கின்ற சாலை விபத்துக்களில் அதுவும் ஒன்றாகி மனம் தன்னைத்தானே சமாதானமாக்கிக் கொள்ள, மனமும் வேறு வேலைகளில் ஈடுபட்டாகிவிட்டது.

ஆனால் நேற்றைய இரவில் ஜெமினி தொலைக்காட்சியில் உடைந்து போய் சுக்குச் சுக்கலான நிலையில் இருந்த எனது அபிமானத்துக்குரிய அந்த மனிதரைப் பார்த்தவுடனேயே இடம் மாறிய எனது மனம் இந்த நிமிடம்வரையிலும் அந்த நிகழ்வில் இருந்து வெளியில் வர மறுக்கிறது..

கோட்டா சீனிவாசராவ் என்கிற பெயரை தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து போய்விட முடியாது.. கம்பீரமான தோற்றம்.. கள்ளச் சிரிப்பு.. நொடிக்கொரு முறை மாறும் முக பாவனை.. வில்லனா.. நல்லவனா என்பதே தெரியாத வகையிலான நடிப்பு.. வில்லத்தனத்திலேயே நகைச்சுவையை கலந்து கொடுக்கும் சாமர்த்தியம்.. இப்படி எல்லாவற்றுக்கும் ஒரே நடிகராக அக்மார்க் முத்திரை குத்தப்பட்டு தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நபராக இருக்கிறார்.


இவருடைய ஒரே மகன் கோட்டா பிரசாத். வயது 39. திருமணமாகி இரண்டு பையன்கள் இருக்கிறார்கள். நேற்று தற்செயலாக மதிய விருந்துக்கு ஹோட்டலில் போய் சாப்பிட வேண்டும் என்று முடிவெடுத்து குடும்பத்துடன் கிளம்பியிருக்கிறார். மனைவி மற்றும் பிள்ளைகள் காரில் பின்னால் வர.. பிரசாத் தனக்கு மிகவும் பிடித்தமான தனது வெளிநாட்டு பைக்கை ஓட்டிச் சென்றிருக்கிறார்.

ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நரசிங்கி என்னும் இடத்திற்கு வரும்போது எமன் ஒரு லாரி உருவத்தில் வந்து பிரசாத்தின் பைக்கை தாக்கியிருக்கிறான். மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் புண்ணியமில்லை.. உயிரற்ற உடலாகத்தான் பிரசாத்தை வெளியில் கொண்டு வர முடிந்திருக்கிறது.


ஷூட்டிங்கிற்காக பெங்களூர் சென்றிருந்த கோட்டா சீனிவாசராவ் ஹைதராபாத்துக்கு அவசரமாக ஓடி வந்தும் உயிரற்ற தனது மகனைத்தான் பார்க்க முடிந்திருக்கிறது..


எத்தனையோ சினிமாக்களில் அவரும் நல்ல, பாசமான, உண்மையான அப்பாவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். படம் பார்த்த ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறார். இன்றைக்கு தாங்க முடியாத ஒரு சோதனையை அவர் வெளிப்படுத்தியவிதம் அவர் மீது விவரிக்க முடியாத ஒரு ஈர்ப்பை வைத்திருந்த என்னை மாதிரியான சினிமா ரசிகர்களால் சட்டென்று ஜீரணிக்க முடியவில்லை.


1978-ல் இருந்து நடித்து வரும் கோட்டா சீனிவாசராவை எனது பால்ய வயதில் இருந்தோ அல்லது எப்போது தெலுங்குத் திரைப்படங்களை விரும்பி பார்க்கத் துவங்கினேனோ அப்போதிலிருந்தே ரசிக்கத் துவங்கிவிட்டேன். முப்பத்தைந்து வருடங்களாக இன்றுவரையிலும் அவரைப் பற்றிய ஒரு பிம்பம் என் மனதில் இருக்க.. இன்றைக்கு அந்த பிம்பம் உடைந்து போன சூழலில் என்னாலும் இதனை வெளியில் சொல்லாமல் இருக்க முடியவில்லை..

கோட்டா பிரசாத் தற்போதுதான் தனது தந்தை வழியில் நடிக்க வந்திருக்கிறார். சித்தம் என்கிற தெலுங்கு திரைப்படத்தில் ஜே.டி.சக்கரவர்த்தியின் இயக்கத்தில் ஜெகபதிபாபுவிற்கு வில்லனாக நடித்து தனது நடிப்பு கேரியரைத் துவக்கியிருக்கிறார். பின்பு தனது தந்தையுடனேயே ஒரு படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். தற்போது கைவசம் மூன்று திரைப்படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதுநாள் வரையிலும் திரையுலகத்திற்குள் கால் வைக்காமல் தான் உண்டு, தனது கிரானைட் பிஸினஸ் உண்டு என்று இருந்தவர், கோட்டா சீனிவாசராவ் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது திரையுலக லைம் லைட்டிற்கு வர வேண்டிய கட்டாயமாகிவிட்டது.

முதல் படத்திலேயே அடையாளம் காணும் அளவுக்கு நடித்திருக்கும் கோட்டா பிரசாத்திற்கு அடுத்தடுத்து அழைப்புகள் வர.. அத்தனையிலும் கையெழுத்திட்டுவிட்டு காத்திருந்தவரைத்தான் எமன் கொள்ளை கொண்டு போயிருக்கிறான்.


அஞ்சலி செலுத்த வந்தவர்கள் முன் அழுகையை கட்டுப்படுத்த பல்லைக் கடித்துக் கொண்டு கோட்டா சீனிவாசராவ் பட்ட கஷ்டத்தை தொலைக்காட்சியில் பார்த்தபோது, இந்தக் கொடூரம் வேறு யாருக்கும் வரக்கூடாது என்று நினைக்கத் தோன்றுகிறது..


சோகத்தில் பெரும் சோகம், புத்திர சோகம் என்பார்கள். தான் உயிருடன் இருக்க தான் பெற்ற பிள்ளைக்கு கொள்ளி வைப்பது என்பது மிகப் பெரும் கொடுமை என்பார்கள்.. தனக்கு மிகவும் நெருக்கமான பாபுமோகனையும், பிரம்மானந்தத்தையும் பார்த்தவுடன் கட்டுப்படுத்த முடியாமல் மீறிய அவரது அழுகையை பார்த்து என் கண்களும் சட்டென்று கலங்கிவிட்டன.


பைக் ஓட்டுவதில் பெரும் ஆர்வமுள்ள பிரசாத் ஆசையாக அந்த பைக்கில் அமர்ந்த நிலையில் எடுத்திருந்த புகைப்படத்தை துக்கம் விசாரிக்க வந்தவர்களிடத்திலெல்லாம் காட்டியபடியே கண் கலங்கிய ஒரு தந்தையின் பரிதவிப்பை இன்றைக்கு சீனிவாசராவ் மூலமாக நான் பார்த்தேன்..


“எங்க அப்பா கூடவே அவருக்கு சரிக்கு சமமான எதிர் வில்லனா நடிக்கணும்.. அதுதான் என்னோட திரையுலக லட்சியம்..” என்று கடைசியாக பேட்டியளித்திருக்கும் பிரசாத்தின் கனவு நிராசையானது சோகம்தான்..

இறந்தவர் யாராக இருந்தால்தான் என்ன..? யார் வீட்டில் நடந்தாலும் அது சாவுதானே..?

ஆனாலும் தந்தையர் தினத்தன்றே.. ஒரு தந்தைக்கு இந்தக் கொடுமை நடந்திருக்கக் கூடாதுதான்.. அவரது ஆன்மா சாந்தியாகட்டும்..

46 comments:

  1. என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களும் அஞ்சலிகளும்.. சாலைவிபத்து என்பது இந்த அவசரமான உலகத்தில் தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றும் நம்மால் தடுக்கமுடியவில்லையே என்னும்போது ரொம்ப வருத்தமாக உள்ளது. என்ன செய்ய?..

    மகனை இழந்து தவிக்கும் கோட்டா சீனிவாசராவ் சாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய கண்ணீர் அஞ்சலிகள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  2. கடைசி வரிகள் உலுக்கிவிட்டது அண்ணா.

    படித்ததும் கண்கலங்கிவிட்டது. புகைப்படங்களும் கலங்க வைக்கின்றன.

    எனது கண்ணீர் அஞ்சலிகள்.

    ReplyDelete
  3. மகனை இழந்து தவிக்கும் கோட்டா சீனிவாசராவ் சாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய கண்ணீர் அஞ்சலிகள் ஆழ்ந்த அனுதாபங்கள்.........

    ReplyDelete
  4. மகனை இழந்து தவிக்கும் கோட்டா சீனிவாசராவ் சாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய கண்ணீர் அஞ்சலிகள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  5. எனது கண்ணீர் அஞ்சலிகள்.

    ReplyDelete
  6. மனம் வருந்துகிறேன்.

    எமன் யார் வீட்டுக்கு வந்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு துக்கம்தான்:(

    அன்னார் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  7. பொதுவாழ்க்கைக்கு வந்தாலே, எல்லாமே பொதுவாக இப்படி அலசி ஆராய்ந்து கட்டம் கட்டப்படுவது, ரொம்பவே சோகம்.
    இந்த தருணங்களில் ப்ரைவஸி கொடுப்பது அவசியம்?
    indiaglitz முத்திரையுடன் படங்கள் பார்ப்பது வேதனையாக உள்ளது.

    ReplyDelete
  8. மிகுந்த வருத்தமாக உள்ளது. அவருக்கு ஒரே மகன் என எழுதி உள்ளீர்கள்; வேறு பெண்ணாவது உள்ளனரா? உங்கள் எழுத்தும் படங்களும் சேர்ந்து தாக்குகின்றன.

    ReplyDelete
  9. மகனை இழந்து தவிக்கும் கோட்டா சீனிவாசராவ் சாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய கண்ணீர் அஞ்சலிகள் ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  10. [[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களும் அஞ்சலிகளும்.. சாலை விபத்து என்பது இந்த அவசரமான உலகத்தில் தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றும் நம்மால் தடுக்க முடியவில்லையே என்னும் போது ரொம்ப வருத்தமாக உள்ளது. என்ன செய்ய?..]]]

    பிரசாத் பைக் ஓட்டுவதில் மிகவும் ஆர்வம் உள்ளவராம். இத்தனைக்கும் அந்த பைக் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பைக்காம்..! விலையுயர்ந்தது என்கிறார்கள்..!

    ReplyDelete
  11. ஒரே மகனை இழந்து தவிக்கும் இவருக்கும் இவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...

    ReplyDelete
  12. [[[செ.சரவணக்குமார் said...
    கடைசி வரிகள் உலுக்கிவிட்டது அண்ணா. படித்ததும் கண் கலங்கிவிட்டது. புகைப்படங்களும் கலங்க வைக்கின்றன. எனது கண்ணீர் அஞ்சலிகள்.]]]

    தந்தையர் தினத்தன்று நடந்த கொடூரம் என்பது மேலும் கொஞ்சம் சோகத்தைக் கூட்டிவிட்டது சரவணா..!

    ReplyDelete
  13. சாலை விபத்துக்கள் அன்றாட நிகழ்வு ஆகி விட்டன.. இதை தவிர்க்க , உரிய நடவடிக்கைகள் எடுப்பதே, இவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக அமையும்..
    அவரது வேதனையை உணர முடிகிறது... ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  14. என்ன சொல்வது என்ன எழுதுவது? சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம் தான்!

    ReplyDelete
  15. ஆழ்ந்த அனுதாபங்கள்!

    ReplyDelete
  16. சொல்லில் அடங்கா சோகம்.எனது அனுதாபங்கள் கோட்டா சீனிவாசராவுக்கு!

    ReplyDelete
  17. ரமேஷ்,
    டி.வி.ஆர். ஸார்..
    துளசியம்மா..
    ஒரிஜினல் மனிதன்..!

    துக்கத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி..!

    ReplyDelete
  18. [[[SurveySan said...
    பொது வாழ்க்கைக்கு வந்தாலே, எல்லாமே பொதுவாக இப்படி அலசி ஆராய்ந்து கட்டம் கட்டப்படுவது, ரொம்பவே சோகம். இந்த தருணங்களில் ப்ரைவஸி கொடுப்பது அவசியம்? indiaglitz முத்திரையுடன் படங்கள் பார்ப்பது வேதனையாக உள்ளது.]]]

    இதில் கொஞ்சம் சரியும்.. கொஞ்சம் தப்பும் இருக்குண்ணே..!

    பிரைவஸி என்றாலும் மீடியாக்கள் இதைச் செய்தியாக்குவதால் பலருக்கும் செய்திகள் போய்ச் சேர வாய்ப்புண்டு..!

    இருந்தாலும் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டல்லவா.. அதற்குள்ளாக இருக்க வேண்டியதுதான்..!

    ReplyDelete
  19. [[[மோகன் குமார் said...
    மிகுந்த வருத்தமாக உள்ளது. அவருக்கு ஒரே மகன் என எழுதி உள்ளீர்கள்; வேறு பெண்ணாவது உள்ளனரா? உங்கள் எழுத்தும் படங்களும் சேர்ந்து தாக்குகின்றன.]]]

    2 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் ஒரே மகன்தான்.. இறந்தவர் மட்டுமே..!

    ReplyDelete
  20. ஜெய்லானி
    மிஸ்டர் பூ

    நன்றி..!

    ReplyDelete
  21. இதயத்தை பிளிந்தெடுத்தீங்கீட்டீங்கண்ணே -- அறியாத உத்தமருக்கு என் கண்ணீர் --
    ஆமா. நீங்க சினிமால எந்த துறை அண்ணே ?
    I admire your writing skill.

    ReplyDelete
  22. மகனை இழந்து தவிக்கும் கோட்டா சீனிவாசராவ் சாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய கண்ணீர் அஞ்சலிகள் ஆழ்ந்த அனுதாபங்கள்.........



    Read more: http://truetamilans.blogspot.com/2010/06/blog-post_21.html#ixzz0raDlbEsR

    ReplyDelete
  23. [[[பார்வையாளன் said...
    சாலை விபத்துக்கள் அன்றாட நிகழ்வு ஆகி விட்டன. இதை தவிர்க்க, உரிய நடவடிக்கைகள் எடுப்பதே, இவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக அமையும். அவரது வேதனையை உணர முடிகிறது. ஆழ்ந்த அனுதாபங்கள்]]]

    இந்த விபத்துக்களுக்கான காரணங்கள்தான் நூற்றுக்கும் மேல் இருக்கின்றனவே..

    இதில் யாரைக் குற்றம் சொல்வது..?

    ReplyDelete
  24. மங்களூர் சிவா
    இராகவன் நைஜீரியா
    மோகன்
    ராஜநடராஜன்
    அபிஅப்பா

    வருத்தங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்..!

    ReplyDelete
  25. அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்துக்கு என்னுடைய‌ ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  26. எனது கண்ணீர் அஞ்சலிகள்.

    ReplyDelete
  27. மிக உருக வைக்கும் பதிவு.
    அன்னாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  28. [[[benza said...
    இதயத்தை பிளிந்தெடுத்தீங்கீட்டீங்கண்ணே -- அறியாத உத்தமருக்கு என் கண்ணீர் --
    ஆமா. நீங்க சினிமால எந்த துறை அண்ணே? I admire your writing skill.]]]

    மறுபடியும் அண்ணனா..? விடுங்க ஸார்..!

    ReplyDelete
  29. நன்றிகள்

    விமல்
    அக்பர்
    பாலகுமார்
    கண்பத்திற்கு..!

    ReplyDelete
  30. வருந்துகிறேன் நண்பரே . புகைப்படங்கள் மேலும் சோகத்தைக் கக்குகின்றன .

    ReplyDelete
  31. ரொம்ப கஷ்டமா இருக்கு இச்செய்தி. கண்ணீர் அஞ்சலிகள்.

    ReplyDelete
  32. பனித்துளி சங்கர்
    மயில் ராவணன்

    வருத்தங்களை பகிர்ந்து கொள்கிறேன்..!

    ReplyDelete
  33. :( ரொம்ப வருத்தமா இருக்கு சார்.

    ReplyDelete
  34. [[[Vidhoosh(விதூஷ்) said...
    :(ரொம்ப வருத்தமா இருக்கு சார்.]]]

    என்னால முடியலை..! அதுனாலதான் பதிவே போட்டேன்..!

    ReplyDelete
  35. வருத்ததிற்குறிய நிகழ்வு..அன்னாரின்
    குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  36. வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்வெங்கட்..!

    ReplyDelete
  37. எங்கோ நடக்கும் ஒரு நிகழ்வுதானே என
    புறம் தள்ளாமல் அவர் குடும்பத்தில் ஒருவரைப்போன்று
    நீங்கள் உங்கள் துக்கத்தை வெளிப்படுத்திய பாங்கு
    தமிழன் உயர்ந்தவன் என பறைசாற்றுகிறது.
    கோட்டா....அசல் கலைஞன்.
    அவரை கண்ணீருடன் பார்க்க மனதை என்னவோ செய்கிறது.

    அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  38. [[[கபிலன் said...
    எங்கோ நடக்கும் ஒரு நிகழ்வுதானே என புறம் தள்ளாமல் அவர் குடும்பத்தில் ஒருவரைப்போன்று
    நீங்கள் உங்கள் துக்கத்தை வெளிப்படுத்திய பாங்கு
    தமிழன் உயர்ந்தவன் என பறைசாற்றுகிறது.
    கோட்டா. அசல் கலைஞன்.
    அவரை கண்ணீருடன் பார்க்க மனதை என்னவோ செய்கிறது.
    அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.]]]

    கபிலன்..

    இந்த எண்ணம் நம் அனைவருக்குள்ளும் இருக்கிறது..!

    கோட்டா என்னும் நடிகனின் துக்கத்தில் நாமும் சிறு பங்கை எடுத்துக் கொள்வோமே..!

    ReplyDelete
  39. ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  40. மனம் வருந்துகிறேன்.அஞ்சலிகள்.

    ReplyDelete