Pages

Tuesday, June 08, 2010

உங்ககிட்ட எவ்வளவு இருக்கு..?

08-06-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நோகாமல் நுங்கு உரிப்பதைப் போல தேர்தல் பிரச்சாரம், மீட்டிங், செலவு என்று எந்த ஒப்பாரியுமில்லாமல் ஆறு வருடங்கள் டெல்லி மேல்சபை உறுப்பினராக பதவி வகித்து சுருட்டுகின்றவரையில் சுருட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் நிற்கும் நமது மாநில வேட்பாளர்களை அந்தந்த கட்சியினரே தற்போது தேர்ந்தெடுத்து நிறுத்தியுள்ளனர்.

இன்றைய நிலைமையில் இந்த ஆறு பேருமே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். நான் எப்போதும் தேடித் தேடிப் பார்ப்பது போல இவர்களது சொத்து மதிப்புக் கணக்கை மட்டும் தனியாகச் சுரண்டி எடுத்து வைத்திருந்தேன்.

எனக்கிருக்கும் சிறு மூளையைக் கசக்கி, கஷ்டப்படுத்தி புதிதாக ஒரு பதிவு போட தற்போது எனக்கு நேரமில்லாத காரணத்தினால் அந்தப் புதிய நாட்டாமைகளின் சொத்துக் கணக்கை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்..

படித்துப் பார்த்து பெருமூச்சுவிட்டு உங்களது சோகத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..!


1. தி.மு.க. வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தின் சொத்துப் பட்டியல்..

கே.பி.ராமலிங்கத்துக்கு கையிருப்பில் ஆயிரம் ரூபாயும், அவரது மனைவியின் கையிருப்பில் ரூ.5 ஆயிரமும் உள்ளது.

கே.பி.ராமலிங்கத்தின் வங்கிக் கணக்கில் ரூ.23 லட்சத்து 89 ஆயிரத்து 850-ம், அவரது மனைவியின் வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சத்து 8 ஆயிரத்து 223 தொகையும் உள்ளது.

கே.பி.ராமலிங்கம் பெயரில் மொத்தம் ரூ.11.75 லட்சம் மதிப்புள்ள 3 கார்கள் உள்ளன.

அவரது பெயரில் பங்கு முதலீடாக ரூ.12 லட்சமும், மனைவியின் பங்கு முதலீடாக ரூ.19 லட்சமும் காட்டப்பட்டு உள்ளது.

மனைவிக்கு சொந்தமாக ரூ.16 லட்சம் மதிப்புள்ள 200 சவரன் தங்க நகைகள் உள்ளன.

இவர்களுக்கு ராசிபுரம், திருச்சி துறையூர், நாமக்கல் கொல்லிமலை, சேத்தமங்கலம், திருச்செங்கோடு, ஏற்காடு, சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகர், அண்ணாநகர் மேற்கு அன்பு காலனி ஆகிய இடங்களில் விவசாய நிலம், விவசாயம் இல்லாத நிலம், வீட்டு மனை, வீடுகள், கட்டிடங்கள் உள்ளன.

கே.பி.ராமலிங்கத்தின் பெயரில் ரூ.1.57 கோடி மதிப்பிலும், அவரது மனைவியின் பெயரில் ரூ.2.44 கோடி மதிப்பில் நிலங்கள் இருக்கிறது.

ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கடனும் இவர்களுக்கு உள்ளது.

2. தி.மு.க. வேட்பாளர் தங்கவேலுவின் சொத்துப் பட்டியல்..!

தங்கவேலு, பாக்கியம் கையிருப்பில் ரூ.22 ஆயிரத்து 500, பிள்ளைகளின் கையிருப்பில் ரூ.19 ஆயிரம் உள்ளது.

தங்கவேலிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள கார், ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பெட்ரோல் பங்க் உள்ளன. ரூ.1.28 கோடி மதிப்புள்ள நிலங்கள் உள்ளன.

பாக்கியம் பெயரில் 320 கிராம் தங்க நகைகள், ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 10 சென்ட் நிலம் உள்ளன.

மகள் ரேணுகா பெயரில் 2,400 கிராம் தங்க நகைகள் உள்ளன.

மகன் ராஜராஜன் பெயரில் ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 10 சென்ட் இடம் உள்ளது.

இவர்களுக்கு 21.50 லட்சம் ரூபாய் கடன் உள்ளது.

3. தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி சொத்துப் பட்டியல்..!

செல்வகணபதியிடம் ரூ.13 லட்சம், மனைவி பாப்புவிடம் ரூ.5 லட்சம், மகன்கள் அரவிந்தன் மற்றும் அஸ்வினிடம் தலா ரூ.25 ஆயிரம் ரூபாய் கையிருப்பில் உள்ளது.

இவர்களின் வங்கிக் கணக்கில் முறையே, ரூ.4.44 லட்சம், ரூ.2.48 லட்சம், ரூ.28 ஆயிரம், ரூ.58 ஆயிரம் உள்ளது.

இவரது மனைவி பாப்புவிடம் 108 சவரன் தங்கநகை உள்ளது. மேலும் ரூ.3.74 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ வெள்ளி, 2 காரட் வைரம் உள்ளன.

செல்வகணபதி பெயரில் ரூ.1.01 கோடி மதிப்புள்ள நிலம் உள்ளது.

மனைவி பாப்புவுக்கு ரூ.1.33 கோடி மதிப்பிலும், 2 மகன்களுக்கும் தலா ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிலங்கள் உள்ளன.

இவர்களுக்கு ரூ.39 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக கணக்கில் காட்டப்பட்டு உள்ளது.

4. அ.தி.மு.க. வேட்பாளர் பால் மனோஜ் பாண்டியனின் சொத்துப் பட்டியல்..!

மனோஜ் பாண்டியனின் வங்கிக் கணக்கில் ரூ.4.80 லட்சம். அவரது மனைவி தீப்தியின் வங்கிக் கணக்கில் ரூ.24 ஆயிரத்து 673 ரூபாயும் உள்ளது.

மனோஜ்க்கு ரூ.12.86 லட்சத்துக்கான பங்கு பத்திரமும், மனைவி தீப்திக்கு ரூ.1.55 லட்சத்துக்கான பங்கு பத்திரமும் உள்ளது.

மனோஜிடம் பொதுசேமநல நிதி ரூ.46 ஆயிரம், ரூ.6 லட்சம் மதிப்புள்ள 2 கார் மற்றும் ஒரு வாகனம் உள்ளது.

மனைவி தீப்தியிடம் ரூ.4.75 லட்சம் மதிப்புள்ள 118 சவரன் தங்க நகை(சீதனம்), வேளச்சேரியில் ரூ.4.18 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரம் சதுர அடி இடம்(தாய்வழி சொத்து), ரூ.5.48 லட்சம் மதிப்புள்ள கார் ஆகியவை உள்ளன.

சென்னை அண்ணாநகரில் பிளாட் வாங்க அட்வான்சாக 2 பேரும் கொடுத்த தலா ரூ.64.50 லட்சம், மகேந்திரா ரிசாட்ஸ் நிறுவனத்தில் உள்ள ரூ.2 லட்சம் பங்கு, சாத்தூர் நல்லிசத்திரத்தில் ரூ.1.51 லட்சம் மதிப்புள்ள 16.43 ஏக்கர் நிலம், கொடைக்கானல் அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள 11 சென்ட் நிலம், மதுரை ஆனையூரில் ரூ.11.62 லட்சம் மதிப்புள்ள நிலம்-ரூ.5.85 மதிப்புள்ள 758 சதுர அடி வீட்டுமனை, திருக்கச்சூரில் ரூ.3.20 லட்சம் மதிப்புள்ள ஒரு கிரவுண்டு நிலம், அயனம்பாக்கத்தில் ரூ.10.25 லட்சம் மதிப்புள்ள 7,417 சதுர அடி நிலம், குன்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலை அருகே ரூ.33 ஆயிரத்து 333 மதிப்புள்ள 18 சென்ட் நிலம் உட்பட பல்வேறு சொத்துகள் கணக்கில் காட்டப்பட்டு உள்ளன.

மனோஜ் கணக்கில் உள்ள ரொக்கம், நிலம், பங்கு உள்ளிட்ட அனைத்து சொத்துக்களின் மதிப்பும் சுமார் ரூ.1.30 கோடியாகவும், தீப்தியின் பெயரில் உள்ள அனைத்து சொத்துகளின் மதிப்பும் சுமார் ரூ.1.04 கோடியாகவும் காட்டப்பட்டு உள்ளது.

இவர்களுக்கு ரூ.54 லட்சம் கடன் இருக்கிறது.

5. அ.தி.மு.க. வேட்பாளர் கே.வி.ராமலிங்கத்தின் சொத்துப் பட்டியல்..!

ராமலிங்கத்தின் கையிருப்பு ரூ.25 ஆயிரம். இவரது அம்மா அம்மணி அம்மாள் கையிருப்பு ரூ.20 ஆயிரம். ஸ்கார்ப்பியோ கார் ஒன்று உள்ளது.

தாயார் அம்மணி அம்மாள் பெயரில் 493 கிராம் தங்க நகையும், மனைவி அம்மணி பெயரில் 525 கிராம் தங்க நகையும் உள்ளது.

ராமலிங்கத்துக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள 8.15 ஹெக்டேர் நிலம், தாயார் அம்மணி அம்மாள் பெயரில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 8.5 ஹெக்டேர் நிலம், ராமலிங்கத்துக்கு நாமக்கல் மற்றும் தாராபுரத்தில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள நிலம் மற்றும் வீடு, மனைவி அம்மணி பெயரில் நாமக்கல்லில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள நிலம் உட்பட பல சொத்துகள் காட்டப்பட்டு உள்ளன.

ஒட்டு மொத்தமாக இவர்களுக்கு ரூ.1.85 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும், ரூ.18.22 லட்சம் கடன் இருப்பதாகவும் ஆவணங்களில் காட்டப்பட்டு உள்ளது.

6. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுதர்சன நாச்சியப்பனின் சொத்துப் பட்டியல்..!

ரூ.20 ஆயிரம் ரொக்கம் கையிருப்பு, மனைவி தேவகி பெயரில் ரூ.5 ஆயிரம்; பல்வேறு வங்கிகளில் தனது பெயரில் ரூ.1.64 லட்சம், மனைவியுடனான கூட்டு வங்கிக் கணக்கில் ரூ.38 ஆயிரம்; பல்வேறு மியூச்சுவல் பண்ட்களில் ரூ.1.39 லட்சம்; எல்.ஐ.சி.யில் ரூ.25 லட்சத்துக்கான உறுதியளிக்கப்பட்ட பாலிசி, பொது சேம நலநிதியில் ரூ.50 ஆயிரம் ஆகியவை உள்ளன.

ரூ.27,984 மதிப்புள்ள 16 கிராம் தங்க மோதிரம், மனைவியிடம் ரூ.2.09 லட்சம் மதிப்புள்ள 120 கிராம் தங்க நகைகள்; ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள போர்டு ஐகான் கார், ரூ.2.3 லட்சம் மதிப்புள்ள குவாலிஸ் மற்றும் ரூ.4.11 லட்சம் மதிப்புள்ள செவ்ரோலே கார்;

சிவகங்கை மாவட்டம் எரியூரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலம் மற்றும் விவசாயம் அல்லாத நிலம் ரூ.95 ஆயிரம் மதிப்புமிக்கது;

டெல்லியில் ரூ.76 லட்சம் மதிப்புள்ள வீடு, எரியூரில் ரூ.4.12 லட்சத்தில் வீடு, சிவகங்கையில் ரூ.9.2 லட்சம் மற்றும் ரூ.12 லட்சத்தில் வீடுகள், மனைவி பெயரில் சென்னை விருகம்பாக்கத்தில் ரூ.15 லட்சத்தில் வீடு ஆகியவை உள்ளன.

மேலும் இவர்களுக்கு வங்கியில் கார் கடனுக்கான பாக்கி ரூ.54,531 மற்றும் வீட்டுக் கடனுக்கான பாக்கியாக ரூ.38 லட்சம் கடன் தொகையும் உள்ளதாம்

ம்ஹும்...!

என்னோட வங்கிக் கணக்குல ஒரே ஒரு தடவைதான் இருபதாயிரம் ரூபாயைத் தாண்டுச்சு.. அதுக்கப்புறம் இன்னிக்குவரைக்கும் பத்தாயிரம் ரூபாகூட நிக்க மாட்டேங்குது..!

இதையெல்லாம் பார்த்தா..?

என்னதான் மண்ணுல விழுந்து அழுது புரண்டாலும், ஒட்டுற மண்ணுதான் ஒட்டுமாம்..!

தகவல் உதவிக்கு நன்றி : பல்வேறு செய்தித்தாள்கள்

42 comments:

  1. அண்ணே விஜய் மல்லையாவுக்கு தத்து பிள்ளையா போய்விடு! எல்லாம் சரி ஆயிடும்!

    ReplyDelete
  2. அண்ணே,

    உங்களை சின்ன வட்டத்துல சிக்க வைக்க குசும்பன் செய்யற சதியில மாட்டாதீங்க. பில்கேட்ஸுக்கு பேரப்பிள்ளையாகுற யோகம் உங்களுக்கு இருக்குது.

    ReplyDelete
  3. கே.பி.ராமலிங்கத்தின் பெயரில் ரூ.1.57 கோடி மதிப்பிலும், அவரது மனைவியின் பெயரில் ரூ.2.44 கோடி மதிப்பில் நிலங்கள் இருக்கிறது.

    ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கடனும் இவர்களுக்கு உள்ளது.
    //

    இதைப்பாத்தா எனக்கு என்ன தோனுது தெரியுமா?


    பேசாம கொஞ்ச நிலத்த வித்துட்டு இந்தக் கடன இவர்கள் கொடுத்துடலாமுன்னு தோனுது.

    அல்லது

    கடன் கொடுத்தவர்கள் சொத்து கையிருப்பை ஆதாரத்தோட காட்டி கடனை மீட்டுக் கொள்ளலாமுன்னு தோனுது.

    ReplyDelete
  4. தகவல் உதவிக்கு நன்றி : பல்வேறு செய்தித்தாள்கள்

    ReplyDelete
  5. தமிழா மணிஜீ சிரிக்க வைத்து விட்டார்.

    ReplyDelete
  6. இப்படி அடுத்தவங்க சொத்து கணக்கையே பார்த்துகிட்டு இருந்தா எப்படி நம்மளோட சொத்து மதிப்பு ஏறும்?

    அப்புறம் ஒரு சின்ன விஷயம் சின்ன வீடு ஏதும் இல்லியா அவங்களுக்கு...

    ஐய்யா சாமி நான் நெசமாவே சின்ன வீட்டை தான் கேட்டேன், "சின்ன வீட்டை" யா கேட்டேன்னு அடிக்க வந்துராதீங்க ஆவ்வ்வ்வவ்

    ReplyDelete
  7. என்னதான் மண்ணுல விழுந்து அழுது புரண்டாலும், ஒட்டுற மண்ணுதான் ஒட்டுமாம்..!

    correct ......!!11

    ReplyDelete
  8. kammunu katchi aarambichirunga. kusumban senshi, paarthuppanga

    ReplyDelete
  9. இதுவரை குடுத்ததற்கு போதுமான நன்றிகள் வரவில்லை என்பது முருகனின் புலம்பல் ::)

    ReplyDelete
  10. [[[குசும்பன் said...
    அண்ணே விஜய் மல்லையாவுக்கு தத்து பிள்ளையா போய் விடு! எல்லாம் சரி ஆயிடும்!]]]

    நிஜ புள்ளையாண்டான்.. என்னை உசிரோட குழி தோண்டி புதைச்சிருவான்..!

    ReplyDelete
  11. [[[சென்ஷி said...
    அண்ணே, உங்களை சின்ன வட்டத்துல சிக்க வைக்க குசும்பன் செய்யற சதியில மாட்டாதீங்க. பில்கேட்ஸுக்கு பேரப் பிள்ளையாகுற யோகம் உங்களுக்கு இருக்குது.]]]

    அப்படியா..? நல்ல வார்த்தை சொல்லியிருக்கடா ராசா..! மி்க்க நன்றி..!

    ReplyDelete
  12. [[[அத்திவெட்டி ஜோதிபாரதி said...

    கே.பி.ராமலிங்கத்தின் பெயரில் ரூ.1.57 கோடி மதிப்பிலும், அவரது மனைவியின் பெயரில் ரூ.2.44 கோடி மதிப்பில் நிலங்கள் இருக்கிறது. ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கடனும் இவர்களுக்கு உள்ளது.//

    இதைப் பாத்தா எனக்கு என்ன தோனுது தெரியுமா?

    பேசாம கொஞ்ச நிலத்த வித்துட்டு இந்தக் கடன இவர்கள் கொடுத்துடலாமுன்னு தோனுது.

    அல்லது

    கடன் கொடுத்தவர்கள் சொத்து கையிருப்பை ஆதாரத்தோட காட்டி கடனை மீட்டுக் கொள்ளலாமுன்னு தோனுது.]]]

    அதெல்லாம் இனிமே ஒண்ணும் நடக்காது.. அவுக மக்கள் பிரதிநிதிகள்..!

    அவங்க கடன் வாங்கினா யாரும் திருப்பிக் கேட்க முடியாது.. கூடாது..! இதுதான் இந்திய அரசியல் சட்டம்..!

    ReplyDelete
  13. [[[மணிஜீ...... said...
    தகவல் உதவிக்கு நன்றி : பல்வேறு செய்தித் தாள்கள்]]]

    ஓவர் நக்கலு..!

    ReplyDelete
  14. [[[ஜோதிஜி said...
    தமிழா மணிஜீ சிரிக்க வைத்து விட்டார்.]]]

    என்னையும்தான் ஸார்..!

    ReplyDelete
  15. அய்யோ அண்ணே எனக்கு மயக்கமா வருது.....

    ReplyDelete
  16. //அண்ணே விஜய் மல்லையாவுக்கு தத்து பிள்ளையா போய்விடு! எல்லாம் சரி ஆயிடும்//

    அண்ணே...குசும்பன் தப்பு தப் ஐடியா தர்றாரு...இப்ப நான் சொல்றேன் போருங்க ...பேசாம மல்லையாவுக்கு மருமகனா ஆயிடுங்கண்ணே....

    ReplyDelete
  17. [[[நையாண்டி நைனா said...

    இப்படி அடுத்தவங்க சொத்து கணக்கையே பார்த்துகிட்டு இருந்தா எப்படி நம்மளோட சொத்து மதிப்பு ஏறும்? அப்புறம் ஒரு சின்ன விஷயம் சின்ன வீடு ஏதும் இல்லியா அவங்களுக்கு...

    ஐய்யா சாமி நான் நெசமாவே சின்ன வீட்டைதான் கேட்டேன், "சின்ன வீட்டை"யா கேட்டேன்னு அடிக்க வந்துராதீங்க ஆவ்வ்வ்வவ்]]]

    தம்பி உன்னைத்தான் வலை வீசி தேடிக்கிட்டிருக்கோம்..!

    எங்கப்பா போன இத்தனை நாளா..?

    ஒரு போன்கூட செய்யலை..!?

    உடனே எனக்கு போன் பண்ணு..!

    ReplyDelete
  18. அண்ணே! பில்கேட்ஸ் இப்போ நைஜிரியாவில்தான் இருக்காரு

    நான் வேணும்னா பேசிப் பார்க்கவா ?

    :)

    ReplyDelete
  19. [[[kishore said...
    என்னதான் மண்ணுல விழுந்து அழுது புரண்டாலும், ஒட்டுற மண்ணுதான் ஒட்டுமாம்..!

    correct ......!!]]]

    எல்லாம் ஒரு அனுபவந்தான்..!

    ReplyDelete
  20. [[[ILA(@)இளா said...
    kammunu katchi aarambichirunga. kusumban senshi, paarthuppanga]]]

    அது சரி.. ஆறு மாசத்துல அவங்க ஸ்டெடியாக என்னைக் கழட்டி விட்டுட்டாங்கண்ணா..!?

    ReplyDelete
  21. [[[மின்னுது மின்னல் said...
    இதுவரை குடுத்ததற்கு போதுமான நன்றிகள் வரவில்லை என்பது முருகனின் புலம்பல் ::)]]]

    அப்படீன்னு சொன்னானா அந்த படவா ராஸ்கோலு..!?

    நேர்ல பார்க்கும்போது வைச்சுக்குறேன் அவனை..!

    ReplyDelete
  22. [[[Mrs.Menagasathia said...
    அய்யோ அண்ணே எனக்கு மயக்கமா வருது.....]]]

    ஒரு சோடா குடிம்மா.. எல்லாம் சரியாயிரும்..!

    ReplyDelete
  23. [[[நாஞ்சில் பிரதாப் said...

    //அண்ணே விஜய் மல்லையாவுக்கு தத்து பிள்ளையா போய்விடு! எல்லாம் சரி ஆயிடும்//

    அண்ணே... குசும்பன் தப்பு தப் ஐடியா தர்றாரு... இப்ப நான் சொல்றேன் போருங்க... பேசாம மல்லையாவுக்கு மருமகனா ஆயிடுங்கண்ணே....]]]

    நல்ல ஐடியாவா இருக்கே..?

    தம்பி மொதல்ல எனக்காக நீ போய் பேசிட்டு வாயேன்..!

    ReplyDelete
  24. [[[நேசமித்ரன் said...

    அண்ணே! பில்கேட்ஸ் இப்போ நைஜிரியாவில்தான் இருக்காரு

    நான் வேணும்னா பேசிப் பார்க்கவா ?

    :)]]]

    அண்ணே.. நாஞ்சில் தம்பி ஒரு ஐடியா சொல்லிருக்காரு..!

    பரவாயில்லை.. அந்தப் பக்கமும் முயற்சி செய்வோம்..

    நீ பேசிட்டு அவர் என்ன சொல்றாருன்னு கேட்டுச் சொல்லு..!

    அப்புறம் பார்க்கலாம்..?

    அவரா..? இவரான்னு..?

    ReplyDelete
  25. இதெல்லாம் வொயிட்டு, ப்ளாக்குல எவ்ளோ!?

    ReplyDelete
  26. உண்மைத்தமிழன் அண்ணாச்சி,

    பிரச்சனை எல்லாத்தையும் சால்வ் பண்ணிட்டு
    இவ்வளவு சாவகாசமா கம்மெண்ட் போடுவது!

    மகிழ்ச்சிதான்!

    ReplyDelete
  27. [[[வால்பையன் said...
    இதெல்லாம் வொயிட்டு, ப்ளாக்குல எவ்ளோ!?]]]

    அதையெல்லாம் தேர்தல் கமிஷனே கேக்க முடியாது.. நாம கேக்க முடியுங்களா வாலு..?

    ReplyDelete
  28. [[[அத்திவெட்டி ஜோதிபாரதி said...
    உண்மைத்தமிழன் அண்ணாச்சி,
    பிரச்சனை எல்லாத்தையும் சால்வ் பண்ணிட்டு இவ்வளவு சாவகாசமா கம்மெண்ட் போடுவது! மகிழ்ச்சிதான்!]]]

    நன்றி ஜோதி அண்ணாச்சி..!

    ReplyDelete
  29. எங்க கிட்ட எங்க அம்மா இருக்காங்க..

    (நன்றி: தீவார் ஹிந்தி திரைப்பட வசனம்)

    ReplyDelete
  30. [[[Vidhoosh(விதூஷ்) said...

    எங்ககிட்ட எங்க அம்மா இருக்காங்க..

    நன்றி: தீவார் ஹிந்தி திரைப்பட வசனம்)]]]

    ஆஹா.. விதூஷ் மேடம்.. சிச்சுவேஷனுக்கு பொருத்தமான டயலாக்குதான்..!

    நன்றி..!

    ReplyDelete
  31. அண்ணா!!!
    இந்த கணக்கு எப்போ எடுக்கப்பட்டது 1960-லா?????

    ReplyDelete
  32. அண்ணே... குசும்பன் தப்பு தப் ஐடியா தர்றாரு... இப்ப நான் சொல்றேன் போருங்க... பேசாம மல்லையாவுக்கு மருமகனா ஆயிடுங்கண்ணே....]]]

    ஏண் ஒரு பொன்னு வாழ்க்கையில் விளையாடுறீங்க.-:))

    ReplyDelete
  33. [[[சதீஷ் said...
    அண்ணா!!! இந்த கணக்கு எப்போ எடுக்கப்பட்டது 1960-லா?????]]]

    ஐயோ தம்பி..!

    போன வாரம் அவுக கொடுத்த கணக்கு தம்பி..!

    ReplyDelete
  34. [[[ஷாகுல் said...
    அண்ணே... குசும்பன் தப்பு தப் ஐடியா தர்றாரு... இப்ப நான் சொல்றேன் போருங்க... பேசாம மல்லையாவுக்கு மருமகனா ஆயிடுங்கண்ணே....]]]

    ஏண் ஒரு பொன்னு வாழ்க்கையில் விளையாடுறீங்க.-:))]]]

    இப்படிச் சொல்லி என் வாழ்க்கைல விளையாடுறீங்களேண்ணா..!

    ReplyDelete
  35. கிண்டலுக்காக பில் கேட்சை குறிப்பிட்டிருந்தாலும் அவரைப் பற்றியும் அவருடைய நெருங்கிய நண்பர் வாரன் - உலகின் இரண்டாவது பணக்காரர் - பற்றியும் சில வார்த்தைகள் சொல்ல நினைக்கிறேன். இருவரும் தங்களுடைய பிள்ளைகளிடம் - "நீங்கள் இந்த உலகில் எதைப் படிக்க விரும்பினாலும் அதைப் படியுங்கள். அதற்கான பள்ளிக் கட்டணத்தை தந்து விடுகிறேன். அதன் பிறகு கொஞ்சம் பணம் தருகிறேன். அதை விடுத்து வேறு எதையும் என்னிடமிருந்து எதிர் பார்காதீர்கள் " . Warren gave just 100,000 USD (~50 Lakhs in INR) out of 60 billion USD of his wealth (~30,000 Crores in INR) .

    அதனால், பில் கேட்சின் பேரப் பிள்ளையானால் ஒன்றும் கிடைக்காது பாஸ் :-)

    ReplyDelete
  36. விடுங்க பாஸ். அவங்ககிட்ட இல்லாத ஒன்னு நம்மகிட்ட இருக்கு. அது நிம்மதி.

    ReplyDelete
  37. [[[பாலா அறம்வளர்த்தான் said...
    கிண்டலுக்காக பில்கேட்சை குறிப்பிட்டிருந்தாலும் அவரைப் பற்றியும் அவருடைய நெருங்கிய நண்பர் வாரன் - உலகின் இரண்டாவது பணக்காரர் - பற்றியும் சில வார்த்தைகள் சொல்ல நினைக்கிறேன்.

    இருவரும் தங்களுடைய பிள்ளைகளிடம் - "நீங்கள் இந்த உலகில் எதைப் படிக்க விரும்பினாலும் அதைப் படியுங்கள். அதற்கான பள்ளிக் கட்டணத்தை தந்து விடுகிறேன். அதன் பிறகு கொஞ்சம் பணம் தருகிறேன். அதை விடுத்து வேறு எதையும் என்னிடமிருந்து எதிர் பார்காதீர்கள் "

    . Warren gave just 100,000 USD (~50 Lakhs in INR) out of 60 billion USD of his wealth (~30,000 Crores in INR) .

    அதனால், பில் கேட்சின் பேரப் பிள்ளையானால் ஒன்றும் கிடைக்காது பாஸ் :-)]]]

    அடப்பாவிகளா..?

    இவங்கெல்லாம் நல்ல அப்பனுங்கதானா..?

    பெத்த புள்ளைக்கு அத்தனையையும் சேர்த்து வைச்சுக் கொடுக்காம வேற யாருக்கு நீட்டப் போறாங்களாம்..?

    ReplyDelete
  38. [[[அக்பர் said...
    விடுங்க பாஸ். அவங்ககிட்ட இல்லாத ஒன்னு நம்மகிட்ட இருக்கு. அது நிம்மதி.]]]

    அப்படியா பாஸ்..?

    அந்த நிம்மதியைத்தான் பல வருஷமா நானும் தேடிக்கிட்டிருக்கேன்..!

    இல்லாததை இருக்குன்றீங்களே அக்பரு..?

    ReplyDelete
  39. அண்ணே,

    கடைசில இவங்க எல்லாம் என்ன எடுத்துட்டு போறாங்கன்னு பார்க்கலாம்ணே... விடுங்க

    ReplyDelete
  40. [[[தமிழ் உதயன் said...
    அண்ணே, கடைசில இவங்க எல்லாம் என்ன எடுத்துட்டு போறாங்கன்னு பார்க்கலாம்ணே... விடுங்க]]]

    இதுவும் கரெக்ட்டுதான்..!

    ஆனால் இருக்கிறதுக்கே நாம அல்லல்பட வேண்டியிருக்கே..! அதுக்கென்ன பதில்..?

    ReplyDelete
  41. வெலக்கெண்ணைய்ய தடவிக்கிட்டு வீதியில புரண்டாலும் ஓட்டுற மண்ணுதான் ஒட்டுமுங்கோவ் உண்மைத்தமிழரே.............

    ReplyDelete
  42. [[[அரைகிறுக்கன் said...
    வெலக்கெண்ணைய்ய தடவிக்கிட்டு வீதியில புரண்டாலும் ஓட்டுற மண்ணுதான் ஒட்டுமுங்கோவ் உண்மைத்தமிழரே.]]]

    ம்ஹும்... அதைத்தான் நானும் சொல்லியிருக்கேன் கிறுக்கன் ஸார்..!

    ReplyDelete