Pages

Thursday, June 03, 2010

பழம் நீயப்பா! ஞானப் பழம் நீயப்பா!! தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!!!




ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த முருகா..!
 

நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்..!


உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது 

என்று நாணித்தான் முருகா!
 

நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த  நல்ல குருநாதன்!


உனக்கென்ன விதமிக்கனியை நாமீவது 

என்று நாணித்தான் அப்பனித் தலையர் தரவில்லை...!

முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ!
 

உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான்
அப்பனித் தலையர் தரவில்லை...!
 

அப்பனித் தலையர் தரவில்லையாதலால்
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே..!
 

ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ!
 

உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
நாணித்தான் அப்பனித் தலையர் தரவில்லையாதலால்..


முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே!
 

முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
 

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
 

சக்தி வடிவேல் வடிவேல் வேல்...
 

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா 
உனக்குக் குறையுமுளதோ?
 

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா 
உனக்குக் குறையுமுளதோ?
 

முருகா உனக்குக் குறையுமுளதோ?
 

ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?
 

முருகா நீ... 

ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?
 

எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்..!

என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன்
 

தருவையரு பழனி மலையில்
 

சந்ததம் குடிகொண்ட சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி..!
 

தண்டாபாணி தண்டபாணி தண்டபாணித் தெய்வமே..!
 

பழம் நீயப்பா! ஞானப் பழம் நீயப்பா!! தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!!!
 

பழம் நீயப்பா! ஞானப் பழம் நீயப்பா!! தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!!!
 

சபைதன்னில்
 

திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்
 

பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா! தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!!
 

கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!
 

நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!
 

ஆறு  கமலத்தில் உருவாய் நின்றாய்!
 

ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்!
 

கார்த்திகைப் பெண்பால் உண்டாய்!
 

திருக்கார்த்திகைப் பெண் பாலுண்டாய்!
 

உலகன்னை அணைப்பாலே
 

திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!
 

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு..!
 

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு..!

நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு!
 

நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு!
 

தாயுண்டு! மனம் உண்டு..!!
 

தாயுண்டு! மனம் உண்டு..! 

அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு
 

உன் தத்துவம் தவறென்று சொல்லவும் 


ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு ..!
 

ஆறுவது சினம் கூறுவது தமிழ்.. அறியாத சிறுவனா நீ?
 

ஆறுவது சினம் கூறுவது தமிழ்.. அறியாத சிறுவனா நீ?
 

மாறுவது மனம் சேருவது இனம்.. தெரியாத முருகனா நீ?
 

மாறுவது மனம் சேருவது இனம்.. தெரியாத முருகனா நீ?
 

ஏறு மயிலேறு..! ஈசனிடம் நாடு..!! இன்முகம் காட்டவா நீ..!!!
 

ஏற்றுக் கொள்வான்.. கூட்டிச் செல்வேன்.. 

என்னுடன் ஓடி வா நீ..!
 

என்னுடன் ஓடி வா நீ..!


44 comments:

  1. தனித்து விடப்பட்டது யார்ங் ணா?

    ReplyDelete
  2. பழனி, கரூர், நெரூர், மதுரை என்று நான்கு நாட்களாக ஊரில் இல்லை.

    நல்ல பகிர்வு. நன்றி. முருகனை பார்த்து வந்தால் இங்கே இந்தப் பாடல். :)

    அப்படியே கே.பி.எஸ். அம்மாவின் குரலும் ஒலிக்கச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அண்ணா.

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா :)

    ReplyDelete
  3. அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகராஅரோகரா அரோகரா அரோகராஅரோகரா அரோகரா அரோகராஅரோகரா அரோகரா அரோகராஅரோகரா அரோகரா அரோகராஅரோகரா அரோகரா அரோகராஅரோகரா அரோகரா அரோகரா

    ReplyDelete
  4. உண்மை சுடும் அது உண்மை தமிழனையும் சுடும்....

    ஒளவை சொல்ல மறந்தது.

    ReplyDelete
  5. யப்பா...இதுல ஏதும் அரசியல் இல்லையே?

    பதிவை ரசித்தேன்.

    ReplyDelete
  6. உடலும் உள்ளமும் நலம் தானே?

    ReplyDelete
  7. /ஏற்றுக் கொள்வான்.. கூட்டிச் செல்வேன்..

    என்னுடன் ஓடி வா நீ..!

    என்னுடன் ஓடி வா நீ..!/

    இப்படியெல்லாம் பாட்டுப் போட்டா மட்டும் யாராவது ஓடி வந்துடுவாங்களாக்கும்!

    அப்பனே முருகா! பாட்டுப் பாடிக் கூடப் பயமுறுத்தராங்களேப்பா!

    :-)))

    ReplyDelete
  8. முருகா உனக்குக் குறையுமுளதோ?

    ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?

    :))

    ReplyDelete
  9. பழனி வேல் முருகனுக்கு.. அரோகரா

    ReplyDelete
  10. முருகனுக்கு அரோகரா.. கந்தனுக்கு அரோகரா!

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

    ReplyDelete
  11. ஆறுவது சினம் கூறுவது தமிழ்.. அறியாத சிறுவனா நீ?


    * * * * * * * * *

    மாறுவது மனம் சேருவது இனம்.. தெரியாத முருகனா நீ?

    ReplyDelete
  12. :) முழுவதுமாக இன்றுதான் பாடலை படித்தேன். அருமை. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    ReplyDelete
  13. ஏன் திடீரென்று இப்படி ஒரு பாடல். அல்லது இந்த பாடல். யாராவது இருப்பதையெல்லாம் உறுவி விட்டு விட்டார்களா. அல்லது தங்களுக்கு தாங்களே மொட்டை போட்டுக் கொண்டு விட்டீர்களா.

    ReplyDelete
  14. அண்ணே என்ன ஆச்சு..........திருச்செந்தூர் முருகா...........அண்ணனை காப்பாத்து

    ReplyDelete
  15. உண்மைத் தமிழரே...! ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து, ஆறு என பதிவுலகத்தை வரிசைப்
    படுத்திப் பாடு....!

    ஒரு வாரம் பதிவெல்லாம படித்துவிட்டு ICUவில் படுத்துவிட்டு drips ஏற்றிக்கொண்டு வந்து “பழனியப்பா” பாட்டு கேட்டதும் தெவிட்டாத ஆனந்தம்.

    ReplyDelete
  16. [[[கே.ஆர்.பி.செந்தில் said...
    தனித்து விடப்பட்டது யார்ங்ணா?]]]

    யாரும் இல்லீங்கண்ணா..!

    எதுவுமே இங்கே வீணாகாதுண்ணா..!

    ReplyDelete
  17. [[[துளசி கோபால் said...

    ஏனிப்படி.................????????]]]

    முருகனுக்கு கோபம் வந்திருச்சு டீச்சர்..!

    அதான் மலை ஏறிருச்சு..!

    ReplyDelete
  18. [[[LK said...
    ?????]]]

    முந்தின பதிலைப் பார்க்கவும்..!

    ReplyDelete
  19. [[[Vidhoosh(விதூஷ்) said...

    பழனி, கரூர், நெரூர், மதுரை என்று நான்கு நாட்களாக ஊரில் இல்லை.

    நல்ல பகிர்வு. நன்றி. முருகனை பார்த்து வந்தால் இங்கே இந்தப் பாடல். :)

    அப்படியே கே.பி.எஸ். அம்மாவின் குரலும் ஒலிக்கச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அண்ணா.

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா :)]]]

    ஆஹா.. என் அப்பனை பார்க்கப் போனீங்களா..?

    எப்படியிருக்கான் அந்தக் கோவணான்டி..?

    ReplyDelete
  20. [[[சூரியன் said...
    அரோகரா :)]]]

    அரோகரா சூரியன் ஸார்..!

    ReplyDelete
  21. [[[எறும்பு said...
    அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகராஅரோகரா அரோகரா அரோகராஅரோகரா அரோகரா அரோகராஅரோகரா அரோகரா அரோகராஅரோகரா அரோகரா அரோகராஅரோகரா அரோகரா அரோகராஅரோகரா அரோகரா அரோகரா]]]

    பதிலுக்கு இத்தனை அரோகராவை நானும் போட முடியாது..!

    ஒண்ணே ஒண்ணுதான்..

    அரோகரா..!

    ReplyDelete
  22. [[[தமிழ் உதயன் said...
    உண்மை சுடும் அது உண்மை தமிழனையும் சுடும்.... ஒளவை சொல்ல மறந்தது.]]]

    சூடு பட்டவங்கதான் அதனை உணர முடியும் உதயன்..!

    ReplyDelete
  23. [[[வானம்பாடிகள் said...

    முருகா!]]]

    வாங்க முருகா..!

    ReplyDelete
  24. [[[சீனு said...
    யப்பா... இதுல ஏதும் அரசியல் இல்லையே? பதிவை ரசித்தேன்.]]]

    ஒரு அரசியலும் இல்லை..! ச்சும்மா.. என் அப்பனைப் பத்தி பேசி ரொம்ப நாளாச்சு.. அதுதான்..!

    ReplyDelete
  25. [[[ஜோதிஜி said...

    உடலும் உள்ளமும் நலம்தானே?]]]

    மிக்க நலம் ஜோதிஜி ஸார்..!

    ReplyDelete
  26. [[[கிருஷ்ணமூர்த்தி said...

    /ஏற்றுக் கொள்வான்.. கூட்டிச் செல்வேன்.. என்னுடன் ஓடி வா நீ..!
    என்னுடன் ஓடி வா நீ..!/

    இப்படியெல்லாம் பாட்டுப் போட்டா மட்டும் யாராவது ஓடி வந்துடுவாங்களாக்கும்! அப்பனே முருகா! பாட்டுப் பாடிக் கூடப் பயமுறுத்தராங்களேப்பா!

    :-)))]]]

    நான் ரெடியாத்தான் ஸார் இருக்கேன். அவன்தான் கூப்பிட மாட்டேன்றான்..!

    ReplyDelete
  27. [[[டவுசர் பாண்டி... said...
    முருகா உனக்குக் குறையுமுளதோ?
    ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?

    :))]]]

    அப்புறம்.. ஒரு பழத்தை பெறக்கூட எனக்கு அருகதையில்லையா..?

    ReplyDelete
  28. [[[ILA(@)இளா said...
    பழனிவேல் முருகனுக்கு.. அரோகரா]]]

    கந்தவேல் முருகனுக்கு அரோகரா..!

    ReplyDelete
  29. [[[செந்தில் குமார் said...

    முருகனுக்கு அரோகரா.. கந்தனுக்கு அரோகரா!

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா]]]

    வேல் வேல் வெற்றிவேல்..!

    கந்தனுக்கு அரோகரா..!

    முருகனுக்கு அரோகரா..!

    ReplyDelete
  30. [[[butterfly Surya said...

    ஆறுவது சினம் கூறுவது தமிழ்.. அறியாத சிறுவனா நீ?

    * * * * * * * * *

    மாறுவது மனம் சேருவது இனம்.. தெரியாத முருகனா நீ?]]]

    ஒளவை சொன்னவுடனேயே தெளிஞ்சிட்டேன் அண்ணே..!

    ReplyDelete
  31. [[[V.Radhakrishnan said...
    :) முழுவதுமாக இன்றுதான் பாடலை படித்தேன். அருமை. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.]]]

    நன்றி ராதா ஸார்..!

    ReplyDelete
  32. [[[ananth said...
    ஏன் திடீரென்று இப்படி ஒரு பாடல். அல்லது இந்த பாடல். யாராவது இருப்பதையெல்லாம் உறுவி விட்டு விட்டார்களா. அல்லது தங்களுக்கு தாங்களே மொட்டை போட்டுக் கொண்டு விட்டீர்களா.]]]

    எப்படி வேண்டுமானாலும் நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள் ஆனந்த்..!

    ReplyDelete
  33. [[[தாராபுரத்தான் said...
    பழம் நானப்பா?]]]

    நானும் பழம்தான்..!

    ReplyDelete
  34. [[[அத்திரி said...
    அண்ணே என்ன ஆச்சு.......... திருச்செந்தூர் முருகா........... அண்ணனை காப்பாத்து]]]

    ஆஹா... அவன்தான இந்தப் பதிவையே போடச் சொன்னான்..!

    ReplyDelete
  35. [[[கே.ரவிஷங்கர் said...

    உண்மைத் தமிழரே...! ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என பதிவுலகத்தை வரிசைப்படுத்திப் பாடு....!

    ஒரு வாரம் பதிவெல்லாம படித்துவிட்டு ICU-வில் படுத்துவிட்டு drips ஏற்றிக் கொண்டு வந்து “பழனியப்பா” பாட்டு கேட்டதும் தெவிட்டாத ஆனந்தம்.]]]

    தெவிட்டாத ஆனந்ததைத் தருவது இந்த அப்பனின் பாட்டுதானே ஸார்..!

    ReplyDelete
  36. ஹே டண்டனக்கா.. டனக்குனக்கா..

    ReplyDelete
  37. தவறை தவறு என சுட்டி காட்டுவது தமிழுக்கு பெருமையா? அல்லது தவறு செய்தவனும் , பாதிக்கப்பட்டவனும் ஒருவரை ஒருவர் மன்னித்துக்கொண்டு , சமாதானமாக போங்கள் என சொல்வது தமிழுக்கு பெருமையா ? தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பது முக்கியம் அல்ல.. ஆனால் பாதிக்கப்பட்டவனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் முக்கியம் என்பது முக்கியம் என சொல்வதுதான் தமிழுக்கு பெருமை...

    தமிழ் கடவுள் முருகன் இதைதான் விரும்புவார்..

    அது இருக்கட்டும், சிறுவாபுரி முருகன் கோயில் சென்று இருக்கிறீர்களா ?

    ReplyDelete
  38. [[[SanjaiGandhi™ said...
    ஹே டண்டனக்கா.. டனக்குனக்கா..]]]

    இப்படி ஆடுறதுக்கு என் முருகன்தான் உனக்குக் கிடைச்சானா..?

    பிய்ச்சிருவேன் பிய்ச்சு..! காவடி மட்டும் ஆடு..!

    ReplyDelete
  39. [[[பார்வையாளன் said...

    தவறை தவறு என சுட்டி காட்டுவது தமிழுக்கு பெருமையா? அல்லது தவறு செய்தவனும், பாதிக்கப்பட்டவனும் ஒருவரை ஒருவர் மன்னித்துக் கொண்டு , சமாதானமாக போங்கள் என சொல்வது தமிழுக்கு பெருமையா ?

    தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பது முக்கியம் அல்ல.. ஆனால் பாதிக்கப்பட்டவனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் முக்கியம் என்பது முக்கியம் என சொல்வதுதான் தமிழுக்கு பெருமை...

    தமிழ் கடவுள் முருகன் இதைதான் விரும்புவார்.. அது இருக்கட்டும், சிறுவாபுரி முருகன் கோயில் சென்று இருக்கிறீர்களா?]]]

    இல்லை.. இன்னமும் செல்லவில்லை. விரைவில் போக வேண்டும் என்று நினைத்துள்ளேன்.. நன்றி பார்வையாளன் ஸார்..!

    ReplyDelete