Pages

Friday, June 25, 2010

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-24-06-10

24-06-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இட்லி

'குமுதம்' - பங்கு பிரிச்சாச்சு

அந்தக் காலம் வேற.. இந்தக் காலம் வேறன்னு பெரியவங்க வீட்ல முக்காலில உக்காந்து பெருமூச்சுவிட்டுப் பேசுவாங்க. அது 'குமுதம்' குடும்பத்துலேயும் நடந்திருச்சு..!


பெரியவர் எஸ்.ஏ.பி.யும், பி.வி.பார்த்தசாரதியும் நட்புடன் இருந்த காலம் போய்.. அவர்களுடைய வாரிசுகள் எதிரிகளாக உருமாறி கைது, கோர்ட், கேஸ் என்றாகி படபடத்துவிட்டது பத்திரிகை உலகம்.

ஆனாலும் நம்ம பத்திரிகையாச்சே என்ற பாசத்தில் மெகா மெகா ஆட்களெல்லாம் இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்திருக்கிறார்கள்..!

முடிவாக 'குமுதம்' பத்திரிகைகளை இரண்டாகப் பிரித்து பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று 'தினத்தந்தி', 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகளில் நடந்ததைப் போல் முடிவெடுத்திருக்கிறார்களாம்..

இதன்படி 'குமுதம் ரிப்போர்ட்டர்', 'குமுதம் சிநேகிதி' என்ற இரண்டு இதழ்கள் மற்றும் 'ஆஹா எஃப்.எம்.', 'குமுதம்.காம்' ஆகிய இரண்டு பிரிவுகளுடன் கூடவே, கணிசமான ரொக்கப் பணத்துடன் வரதராஜன் தனியாகப் பிரிகிறாராம். 


அவர் கைக்கு அனைத்தும் வந்தவுடன் அவற்றில் இருக்கும் 'குமுதம்' என்கிற பெயர் மட்டும் நீக்கப்பட்டுவிடுமாம். 'குமுதம்' என்ற பிராண்ட் நேம், ஜவஹர் பழனியப்பனுக்கு மட்டுமே என்பதுதான் பெரியவர்களின் தீர்ப்பாம்..!

இதற்கிடையில் அந்த பிராண்ட் நேம் சாம்ராஜ்யத்தையே விலைக்குக் கேட்டு தென் மண்டல தளபதியின் சொந்த பந்தங்கள் மருத்துவரை நெருக்குவதாகவும் பத்திரிகையுலகில் பேச்சு..!

ம்.. கத்திரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும்.. வரட்டும் பார்ப்போம்..!


தோசை

தடம் புரண்ட இயக்குநர்


தங்களது துறையில் வளர்ந்த பலர் வாழ்க்கையில் சறுக்கி விடுகிறார்கள். வாழ்க்கையில் சிறந்து விளங்கும் சிலர் தங்களது துறையில் சறுக்கி விடுகிறார்கள். இரண்டிலுமே சிறந்து விளங்குபவர்கள் ரொம்ப ரொம்பச் சிலர்தான்.

மிகுந்த கஷ்டத்திற்குப் பிறகு புகழ் உச்சிக்கு வருபவர்கள் திடீரென்று வருகின்ற புகழையும், கவர்ச்சியையும் உண்மை என்று நம்பி அலட்டுகின்ற அலட்டலில் இருக்கின்ற வாழ்க்கையையும் தொலைக்கத்தான் செய்கிறார்கள்.

நமக்குத் தெரிந்த இயக்குநர் ஒருவரும் அவர்களில் ஒருவர்தான். முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்.. ஒரு பாட்டுக்காகவே ஓடிய படம். அடுத்த படம் ஹீரோவுக்காகவும், கதைக்காகவும் பேசப்பட்டது.

இந்நிலையில் 39 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்தவர் இப்போது அந்த முடிவெடுக்க நினைத்து அவரசத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டார். இயக்குநரிடம் முதலில் சிக்கியவர் ஒரு துணை நடிகை. இவரிடம் வாய்ப்பு கேட்டு வந்தவரை வாழ்க்கைத் துணையாக்கும் அளவுக்குத் துணிந்துவிட்டார் இயக்குநர். இதில் ஒரு விசேஷம். இந்த துணை நடிகையான பெண்ணிற்கு கல்லூரி செல்லும் வயதில் ஒரு பெண் இருக்கிறார்.

இன்னொரு பெண் சினிமாவில் இருக்கும் நடனப் பெண்மணி. அந்தப் பெண்மணியின் வயிற்றில் இயக்குநரின் குழந்தை வேறு.. இந்த இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் வீடு தேடி வந்து சண்டையிட்டுக் கொண்டு அந்த இயக்குநரின் பெயர் கோடம்பாக்கத்தில் கெட்டதுதான் மிச்சம்..!

இரண்டாவது படத்தின் ஹீரோவான பெரிய இயக்குநரே இடையில் தலையிட்டு நடனப் பெண்மணியை பஞ்சாயத்து செய்து விலக்கி வைக்க.. இயக்குநர் இதுவரையில் சம்பாதித்து வைத்திருந்ததெல்லாம் இதற்கான நஷ்ட ஈடாகவே போய்விட்டதாம்.

“அவதான் போயிட்டாள்ள.. நம்ம கல்யாணம் எப்போ..?” என்று துணை நடிகை அனத்தத் தொடங்க.. நம்ம இயக்குநருக்கு இப்போதுதான் நிஜ சூழல் புரிந்திருக்கிறது. தனது வயதான தாய், தந்தையரின் பேச்சைக் கேட்டு துணை நடிகையை அவாய்ட் செய்ய ஆரம்பித்தார் இயக்குநர்.. கோபமான துணை நடிகை வீடு தேடி வந்து ருத்ரதாண்டவம் ஆடிவிட்டாராம்..!

இப்போது இந்தப் பிரச்சினைக்கென்று தனியாக பஞ்சாயத்து செய்ய ஆள் தேடிக் கொண்டிருக்கிறார் இயக்குநர்..! சிறந்த திறமையோடு கனவுலகத்திற்குள் நுழையும் சிலர் ஏன் இப்படி தங்களது சொந்த வாழ்க்கையும் அழித்து, கேரியரையும் அழித்துக் கொள்கிறார்களோ என்று தெரியவில்லை..!

அவர்களுடைய இடத்தை அடைய முடியாமல் எத்தனை பேர் தவியாய்த் தவிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா..?


பொங்கல்

இளமைக் காலங்கள் - சசிகலா


தற்செயலாகத்தான் பார்த்தேன்.. இத்தனை நாள் எங்கிருந்தாய் என்று கேட்கத் தோன்றுவதைப் போல இருந்தது அம்மணியை பார்த்தவுடன்..!

இளமைக் காலங்களில் அறிமுகமான சசிகலா என்னும் இந்தத் தாரகை, தமிழிலும், தெலுங்கில் 1993 வரையிலும் தனது திறமையைக் காட்டிவிட்டு அதன் பின்பு சப்தமில்லாமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டாராம்..! இப்போது அதே சப்தமில்லாமல் டைவர்ஸும் வாங்கிக் கொண்டு மீண்டும் திரையுலகத்திற்குள் நுழைந்திருக்கிறார்..


 

தெலுங்கில் டிவி சீரியலில்தான் முதலில் கால் வைத்திருக்கிறார்.. 'டாக்டர் இந்திரா' என்பது சீரியலின் பெயராம்..! பலருக்கும் தெரியாத ஒன்று.. அம்மணிக்கு தமிழில் மட்டும்தான் 'சசிகலா' என்ற பெயர்.. தெலுங்கில் 'ரஜ்னி' என்ற பெயராம்..!

ஸ்பெஷல் தோசை

பாலகிருஷ்ணா - சிவபார்வதி

நந்தமூரி தாரக ராமாராவ் என்னும் என்.டி.ராமராவின் குடும்பத்து கதை உலகம் முழுக்கவே பேமஸ்தான்..! பத்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தும் வயதான காலத்தில் தன்னைக் கவனிக்க ஆளில்லையே என்ற கோபத்தில் தன்னிடம் பேட்டியெடுக்க வந்த கல்லூரி பேராசிரியை சிவபார்வதியை வயதான காலத்தில் திருமணம் செய்து கொண்டார் ஆந்திராவின் கிருஷ்ணன்.

இந்தத் திருமணத்தால் ராமராவின் வாரிசுகள் அத்தனை பேரின் கடும் எதிரியானார் சிவபார்வதி. ராமராவ்வின் மரணத்தன்று வீடு தேடி வந்த வாரிசுகள் எல்லாம் வீட்டில் இருப்பதையெல்லாம் எடுத்துப் போக பார்க்கிறார்கள் என்று ராமராவின் சடலத்தை வைத்துக் கொண்டே பெரும் ரகளை செய்தார் சிவபார்வதி.

அப்போது ஏற்பட்ட மனக்கசப்பினாலும் ராமராவ் தனியாக நடத்தி வந்த தெலுங்கு தேசக் கட்சியை சிவபார்வதி தொடர்ந்து நடத்தி வந்ததாலும் இத்தனை நாட்கள் மனக்கசப்போடு இருந்த ராமராவ் குடும்பத்தினர் சிவபார்வதியின் கட்சி கடலில் கரைந்த பெருங்காயமாக கரைந்த பின்புதான் மனதை ஆற்றிக் கொண்டது.

ஆனாலும் ராமராவ் கடைசி காலத்தில் வசித்து வந்த வீடும், அவர் பயன்படுத்திய பொருட்களும், சில சொத்துக்களும் இன்னமும் சிவபார்வதியின் வசமே உள்ளன. போதாக்குறைக்கு ராமாராவ்வின் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருந்ததாகவும் பின்பு அது தானாகவே கலைந்துவிட்டதாகவும் சிவபார்வதி ஒரு செய்தியை எடுத்துவிட.. கடுப்பாகிவிட்டார்கள் மொத்தக் குடும்பத்தினரும்..!

இப்படி ராமாராவின் பத்துக் குடும்பங்களும் சிவபார்வதியை முறைத்தபடியே இருந்த நிலையில் அதில் ஒருவரான நடிகர் பாலகிருஷ்ணா திடீரென்று தனது சித்தியை நேரில் சென்று பார்த்து குசலம் விசாரித்திருக்கிறார். எதிர்பாராத இந்த அதிர்ச்சியில் சித்தி பட்ட பரவசத்தை வீடியோவில் பார்க்கவும்..!



சந்திப்பிற்கான காரணத்தை அப்போது பாலகிருஷ்ணா வெளிப்படையாகச் சொல்லவில்லையென்றாலும், என்.டி.ஆர். பெயரில் கட்டப்படும் மியூஸியத்திற்குத் தேவையான பொருட்களை பெறுவதற்காகவே பாலகிருஷ்ணா வந்ததாகச் சொல்கிறார்கள். இதையடுத்து ஒரு டிவி நிகழ்ச்சியிலும் பாலகிருஷ்ணா தனக்குப் பிடித்தமான மகன் என்று சொல்லி அவருடைய புகைப்படத்திற்கு முத்தமும் கொடுத்து அசத்தியிருந்தார் சிவபார்வதி.

எல்லாம் ஒரே மாசம்தான்.. கடந்த மாதம் நடந்த ஜூனியர் என்.டி.ஆரின் திருமண நிச்சயத்தார்த்தத்திற்கு சிவபார்வதியை கூப்பிடாமல் போக.. “என் மகனே இப்படிச் செய்யலாமா..? நான் ஒருத்தி குடும்பத்துல பெரியவ உசிரோட இருக்கும்போது என்னைக் கூப்பிடாம எப்படி நடத்தலாம்?”னு கேட்டு கண்ணு கலங்கிட்டாங்க சித்தி..!

ஆனாலும் “பாலய்யா என்ற பாலகிருஷ்ணாதான் எத்தனை சினிமால நடிச்சிருப்பாரு.. அவருக்கா தெரியாது..? வேண்டியதையெல்லாம் வசூல் பண்ணியாச்சு. அதான் மறுபடியும் சிவபார்வதியை ஒதுக்கிட்டாங்க..” என்கிறார்கள் ஆந்திர மணவாடுகள்..!


வடை

மட்டக்களப்பு நகரில் ராவணன் வெளியீடு..!

ஐஃபா விழாவுக்கு எதிர்ப்பு..! இலங்கையில் ஷூட்டிங் நடத்த எதிர்ப்பு.. இலங்கை ஆளும் தலைவர்களைச் சந்தித்தால் எதிர்ப்பு என்று சகல வழிகளிலும் அவர்களைப் புறக்கணிக்கச் சொல்லும் தமிழ்த் திரையுலகம் தன்னுடைய படங்களை மட்டும் ஏன் அங்கே அனுப்புகிறது என்றுதான் எனக்குப் புரியவில்லை..!

வருடாவருடம் சென்னையில் ஐ.சி.ஏ.எஃப். சார்பில் நடக்கும் சிங்களத் திரைப்பட விழா இரண்டு வருடங்களாக இங்கே நடக்கவில்லை. ஆனால் புதியத் தமிழ்த் திரைப்படங்கள் மட்டும் தொடர்ந்து இலங்கையில் திரையிடப்பட்டு வருகிறது. புறக்கணிப்பு என்பது ஒரு வழிப் பாதையா..?

நாம் நடத்திய போராட்டத்தைப் போலவே ஈழத்திலும் அவர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். மட்டக்களப்பு நகரில் ராவணன் படம் திரையிட இருந்த சாந்தி தியேட்டரை முதல் நாள் இரவு அடித்து நொறுக்கி திரையை எரித்துவிட்டார்கள்..!

இப்போது ஒரு வாரத்திலேயே தியேட்டரைச் செப்பனிட்டுவிட்டு இப்போது ராவணன் படத்தினை திரையிட்டுவிட்டார்கள். ராவணன் படத்தை யாராவது எதிர்த்து ரகளை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்கிறது இலங்கை அரசு. இதுவே ஒரு விதத்தில் அவர்களுக்கு உதவுவதைப் போலத்தானே..? நாம் ஏன் இதனைச் செய்ய வேண்டும்..?

நமது சொந்தங்கள் அங்கே போகக் கூடாது.. படப்பிடிப்புகள் நடத்தக் கூடாது.. நம்மால் அவர்களுக்கு எந்த பண வரவு ஆதாயங்களும் வரக்கூடாது என்றால் சரிதான்.. அதேபோல் நாம் நமது படங்களையும் அங்கே ரிலீஸ் செய்யாமல் இருக்கலாமே..? இது மட்டும் எதற்காகவாம்..?

சில லட்சங்கள் கிடைக்கிறது என்பதற்காக நாமே நமது கொள்கையை அடகு வைக்கலாமா..? திரையுலகம் யோசிக்கட்டும்..!


காரச்சட்னி

ராதாரவியின் அடங்காத கோபம்


சென்ற வாரம் பத்திரிகைகளில் வந்திருந்த ஒரு செய்தி பரவலாக கோடம்பாக்கத்திலேயே ரீச் ஆகவில்லை..!

பல போராட்டங்கள் நடத்திப் பார்த்தும் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாத வருத்தத்தில் இருக்கும் 'இந்து மக்கள் கட்சி'யினர் கடைசியாக நடிகர் சங்கத்தில் போய் நின்றிருக்கிறார்கள்.

'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்கிற பெயரை 'தமிழ்நாடு நடிகர் சங்கம் ' என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவியிடம் மனு கொடுத்துள்ளார்கள்.

எப்போதும் கட் அண்ட் ரைட்டாக பேசும் ராதாரவி மனுவை வாங்கிக் கொண்டு அங்கேயே அவர்களுக்கு தடாலடியாக பதிலை அள்ளி வீசியிருக்கிறார். அவர் வீசியிருக்கும் பவுன்ஸரில் வழக்கம்போல இயக்குநர் இமயம் பாரதிராஜா மாட்டியிருக்கிறார். கூடவே கலைஞரும்..! இதுதான் பலருக்கும் ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது..!

ராதாரவி தனது பதிலாக, “ஒரு பிரபல இயக்குநர்கூட(பாரதிராஜா) சில ஆண்டுகளுக்கு முன்பாக இதே கோரிக்கையை எங்கள் முன் வைத்தார். 'தமிழ் நடிகர் சங்கம் என்று பெயர் வைத்த பின்புதான் எனது மகனை திரையுலகில் களமிறக்குவேன்' என்று எங்களிடம் வீராப்பு பேசினார். ஆனால் சமீபத்தில் அவர் இயக்கிய படத்தில்(பொம்மலாட்டம்) நானாபடேகரைத்தான் நடிக்க வைத்தார். ஏன் அந்த கேரக்டரை பண்ண தமிழ் நடிகர் யாருக்குமே தகுதியில்லையா..?” என்று கேட்டிருக்கிறார்..

”கலைஞர் ஆயுட்கால உறுப்பினராக இருக்கும் 'தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க'த்தின் பெயரை 'தமிழ் எழுத்தாளர் சங்கம் ' என்று மாற்ற அவரிடம் போய்ச் சொல்லுங்களேன். அப்படியே 'பெப்சி' அமைப்பை, 'தமிழ்த் திரைப்படத் தொழிலாளர் சங்கம்' என்று பெயர் மாற்றச் சொல்லுங்கள். எல்லாம் நல்லபடியா முடிஞ்சா, நாங்களும் பெயர் மாற்றம் செய்கிறோம்.” என்று சுடச்சுடப் பதில் சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதா மீதான கோபத்தில் கலைஞருடன் சமீப காலமாக இணக்கமாக இருந்து வரும் ராதாரவி இப்போது திடீரென்று இப்படி கலைஞர் மீது காட்டத்தைக் காட்டிய விவகாரம் என்னவெனில், அது எஸ்.வி.சேகரை எம்.ஆர்.ராதாவின் வாரிசு என்று கலைஞர் சொன்னதுதானாம்..

“எங்கப்பாவோட பெருமை என்ன..? புகழ் என்ன..? அவருக்கு நானே வாரிசா இருக்க முடியாது.. இதுல இந்த காமெடியன்தான் வாரிசா..? கலைஞருக்கு கொஞ்சமாச்சும் மனசாட்சி இருந்தா இப்படியெல்லாம் பேசியிருப்பாரா..?” என்று தனக்கு நெருக்கமான சினிமா புள்ளிகளிடம் புலம்பித் தள்ளிக் கொண்டிருக்கிறார் ராதாரவி..!


தக்காளி சட்னி

பார்த்திபனின் குத்திக் காட்டல்..!


சினிமாவை தயாரித்தால் மட்டும் போதாது..! அதனை விளம்பரப்படுத்த வேண்டும்.. அதற்கு தயாரிப்புச் செலவில் பாதியையாவது செலவழித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்த் திரையுலகம் வந்துவிட்டது. இதற்காக சினிமாக்காரர்கள் சொல்கின்ற காரணம் 'மூன்று நிதி'களின் திரையுலக  ஊடுறுவலைத்தான்..!

அவர்கள் வாங்குகின்ற படங்களை மட்டுமே அவர்கள் பிரமோட் செய்து கொண்டேயிருப்பதால் மற்ற படங்களெல்லாம் ரிலீஸாகவில்லையோ என்கிற பிரமையை மக்களிடத்தில் ஏற்படுத்தி மற்ற படங்களுக்கு கூட்டத்தையும், வசூலையும் வர விடாமல் மறைமுகமாகத் தடுக்கிறார்கள் என்பதுதான் இவர்களது குற்றச்சாட்டு..!

அதேபோல் இன்னுமொரு குற்றச்சாட்டுத்தான் மிக முக்கியமானது. இந்த மூன்று நிதிகள் வெளியிடும் படங்களின் வி.சி.டி.க்கள் மட்டும் தமிழ்நாட்டில் வெளியாவதே இல்லை.. அந்த அளவுக்கு போலீஸ் கெடுபிடியாகிறது. ஆனால் மற்ற படங்களெனில் அடுத்த நாளே வந்துவிடுகிறது. காவல்துறை அதனை மட்டும் கண்டு கொள்ளாமல் விடுவது ஏன் என்பதுதான் திரையுலகத்தினரின் கேள்வி. ஆனால் யாருக்கும் இங்கே முதுகெலும்பு இல்லாததால் வெளிப்படையாக பேச மறுக்கிறார்கள்.

ஆனால் மேடைக்கு மேடை ஜொள்ளுவிட்டே பேசும் பார்த்திபன் 'காதல் சொல்ல வந்தேன்' படத்தின் கேஸட் வெளியீட்டு விழாவில் இதனைப் பற்றி வெளிப்படையாக கேட்டது வந்திருந்தவர்களுக்கு இனிய அதிர்ச்சியை அளித்துவிட்டது. அன்று இரவு முழுவதும் பார்த்திபனின் செல்போனுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்து கொண்டேயிருந்ததாம்..

இது பற்றி பார்த்திபன் சொன்னது இதுதான்.. “குறிப்பிட்ட ஒரு சில படங்களுக்குத் திருட்டி விசிடி வருவதில்லை. இவர்களது பட விசிடிகள் வருவதை இவர்கள் தடுப்பது போல மற்ற பட விசிடிகளையும் இவர்கள் தடுக்கலாமே..? ஏன் தடுப்பதில்லை..? இப்படி எல்லா திருட்டு விசிடிகளையும் தடுத்தால் திரைப்பட உலகம் நன்றாக இருக்குமே..”


சாம்பார்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்

மறுபடியும் ஒரு பஞ்சாயத்து துவங்கியிருக்கிறது திரையுலகில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு பொறுப்பாளராக இருந்த ஏவி.எம்.முருகனே இந்த முறையும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 


சங்கத் தலைவர் நாற்காலியைக் கைப்பற்ற கடும் போட்டியே நிலவுகிறது. சென்ற ஆண்டு சன் டிவிக்கும், கலைஞருக்குமிடையே கபடியாட்டம் நடந்து கொண்டிருந்ததால் கலைஞரின் ஆசியோடு இராம.நாராயணன் தனி அணி அமைத்து போட்டியிட்டார். எதிரணியில் சன் டிவிக்காக ராதிகாவும், பஞ்சு அருணாச்சலமும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் நின்றார்கள். இதில் ராதிகாவை நிற்கவிடாமல் செய்வதற்காக 'அவர் தெலுங்குப் பெண்.. தமிழச்சி அல்ல..' என்றெல்லாம்கூட கடைசி நேரத்தில் பிரச்சாரம் செய்யும் நிலைமைக்குச் சென்றது திரையுலகத்தைக் கலவரப்படுத்தியது.

ஆனால் இந்த முறை அப்படியிருக்காது என்கிறார்கள். தங்களது டிவிக்காக படங்களை வாங்கிப் போடுவதற்கு தங்களது விரலசைவில் நடப்பவரே சங்கப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று ஆளும்கட்சி டிவி நினைப்பதால் 'போதுமடா சாமி.. ஆளை விடுங்கப்பா..' என்று கைகூப்பி வணங்கிவிட்டு வீட்டுக்கு போக நினைத்த இராம.நாராயணனை, கலைஞரே அழைத்து தட்டிக் கொடுத்து களத்தில் குதிக்கும்படி சொல்லியனுப்பியிருக்கிறாராம்.. அவருடைய அணியில் இருப்பவர்கள் யார், யார் என்பதுதான் இன்னமும் முடிவாகவில்லை.

பிலிம் சேம்பர் தலைவராக சமீப காலம்வரையிலும் இருந்த கே.ஆர்.ஜி., தைரியமாக இராம.நாராயணனை எதிர்த்து களமிறங்கியுள்ளார். இடையில் தயாரிப்பாளர்களுடன் சரிக்கு சமமாக மோதிக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் சங்கம் தங்களது தலைவர் பாரதிராஜாவை நிறுத்தலாமா என்றுகூட யோசித்தது. ஆனால் சங்கத்தின் பை-லா ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள்.

எனவே சென்ற தேர்தலில் மனு செய்துவிட்டு பின்பு பஞ்சாயத்து செய்து கழட்டிவிடப்பட்ட அமீரை செயலாளர் பதவிக்கு நிறுத்தலாமா என்று யோசித்து வருகிறார்கள்.

இடையில் இராம.நாராயணனுக்கு முன்பாக தலைவராக இருந்த சத்யஜோதி தியாகராஜன் தான் நிற்கலாம் என்று நினைத்து காய்களை நகர்த்தி வந்தார். ஆனால் கோபாலபுரத்தின் ஆசி இராம.நாராயணன் மீது இருப்பதை அறிந்து கப்சிப்பாகிவிட்டார்.

அடுத்த மாதத் துவக்கத்தில் களத்தில் நிற்பவர்கள் யார் என்பது தெரிந்துவிடும்..!


துவையல்

சூர்யாவின் அதிரடிப் பேச்சு


"ஐஃபா விழா விவகாரமே செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே… என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்துவிடாது” என்று  தைரியமாகச் சொல்லியுள்ளார் சூர்யா.

சம்பந்தமேயில்லாத அமிதாப்பச்சன், அனில்கபூர், ஷாரூக்கான் வீடுகளின் முன்பெல்லாம் உண்ணாவிரதம் இருந்த தொண்டர்களும், தோழர்களும் இப்போது என்ன செய்யப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை..!

ஆளுக்கொரு நீதியாக போராட்டம் திரும்பும்போதே அது நீர்த்துப் போய்விடுகிறது..! இதில் “தம்பிக்காக இந்த ஒரு முறை மட்டும் விட்டுவிடுகிறேன்” என்று 'ரத்த சரித்திரம்' படத்தை வெளியிட ஆட்சேபணையில்லை என்று சொல்லியிருக்கும் சீமானின் அரசியல் நேர்மையும் கேள்விக்குறியாகிவிட்டது..!

பாவம் ஈழத் தமிழர்கள்..! அவர்களுடைய ஒவ்வொரு நம்பிக்கையையும், சிங்களவனைவிட தமிழர்களாகிய நாமே முந்திக் கொண்டு உடைத்தெறிந்து வருகிறோம்..!


கேசரி

இரண்டு வலைத்தளங்கள்..!

1. அனிதா ரத்னம்


தற்செயலாகத்தான் இந்த பிளாக்கை பார்த்தேன். படித்தேன். ஆங்கிலத்தில்தான் உள்ளது. பிரபல பரத நாட்டியக் கலைஞர் அனிதா ரத்னத்தின் சொந்த வலைத்தளம்..!

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் மார்க்கோஸ் குடும்பத்தினரைப் பற்றி எழுதியிருக்கும் ஒரு கட்டுரை செம காமெடி..!
 

http://anita-ratnam.blogspot.com/2010/05/sisters-of-imelda.html

2. சார்லஸ் அண்ணன்

முன்னாதாகவே இந்த வலைத்தளம் பற்றி நான் எழுதியிருக்க வேண்டும். சற்றுத் தாமதமாகிவிட்டது. எனக்கு முன்பாக நண்பர் சுரேஷ்கண்ணன் எழுதிவிட்டார்..!


http://vaarthaikal.wordpress.com/

'ருத்ரவீணை', 'சிவமயம்', 'காத்து கருப்பு', 'என் தோழி, என் காதலி, என் மனைவி', 'ரோஜாக்கூட்டம்' என்ற சீரியல்களையும், 'ஜில்லுன்னு ஒரு சேலஞ்ச்', 'இசைக்குடும்பம்', 'சவால்', 'மென்பொருள்' என்ற ஷோக்களையும் இயக்கியிருக்கும் 'சார்லஸ்' என்ற அண்ணனின் தளம் இது.. இவர் தற்போது 'நஞ்சுபுரம்' என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

தளத்தின் வடிவமைப்பு மிகக் கச்சிதமாக கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. அதேபோல் உள்ளடக்கமும்..! கொஞ்சமும் சுய விளம்பரம் இல்லாமல் முழுக்க, முழுக்க சினிமாவுக்காகவே தளத்தை இயக்கி வருகிறார்.. முழுவதையும் படித்துப் பாருங்கள்.. கிறுகிறுத்துப் போய்விடுவீர்கள்..! எளிமையான எழுத்து நடை..!

பார்த்ததில் பிடித்தது



என்ன கொடுமை பாருங்கள்..!? 

இதையெல்லாம் பார்க்கும்போது நம்மை இப்படியாவது விட்டு வைத்திருக்கும் அப்பன் முருகனுக்கு இன்னொரு கோவில் கட்டலாம் போலத்தான் தோன்றுகிறது..!

87 comments:

  1. //சார்லஸ் அண்ணன்//
    வலைதளத்திற்கு லிங்க இல்லயே அண்ணாச்சி.

    ReplyDelete
  2. [[[இராமசாமி கண்ணண் said...

    //சார்லஸ் அண்ணன்//

    வலைதளத்திற்கு லிங்க இல்லயே அண்ணாச்சி.]]]

    மிக விரைவான பின்னூட்டத்திற்கு நன்றி தோழரே..

    இப்போது திருத்திவிட்டேன்..! சிரமத்திற்கு வருந்துகிறேன்.. மன்னிக்கவும்..!

    ReplyDelete
  3. யூ டியூப்பை தளத்திலேயே காட்டுவதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..!

    தோழர்கள் யாராவது சொல்லுங்களேன்..!

    ReplyDelete
  4. எல்லாமே நல்ல இருக்குங்க . அடுத்த தடவை தேங்காய்சட்னியும் வேண்டும்...

    ReplyDelete
  5. தோசைக்கு சட்னி சாம்பார் சுவையா இருக்கு.. மேலும் நல்ல தளங்களை அறிமுகப்படுத்திய சரவணன் அண்ணனுக்கு ஜெ.

    ReplyDelete
  6. ///இதையெல்லாம் பார்க்கும்போது நம்மை இப்படியாவது விட்டு வைத்திருக்கும் அப்பன் முருகனுக்கு இன்னொரு கோவில் கட்டலாம் போலத்தான் தோன்றுகிறது..!///

    ஆமா கண்டிப்பா இறைவனுக்கு நன்றி சொல்லணும்.

    ReplyDelete
  7. Indha pathivu nalla irundhudu anna :) :)

    aana iyakkunar pera sollaliye.. :(

    apram Charles avaroda valaithalatha arimuga paduthunathuku nandri anna :) :)

    ReplyDelete
  8. // யூ டியூப்பை தளத்திலேயே காட்டுவதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..!

    தோழர்கள் யாராவது சொல்லுங்களேன்..!//
    Embed Code இனை எடுத்துப் போடுங்கள்!!

    ReplyDelete
  9. http://www.google.com/support/blogger/bin/answer.py?hl=en&answer=80767

    indha link paarunga na.. athula youtube videos epdi add panrathu nu pottu irukku :)

    ReplyDelete
  10. அந்த மன்மதராசாவத்தான் ஏற்கனவே இணையத்துல நாறடிச்சுட்டாங்களே?

    ReplyDelete
  11. வாரம் ஒரு முறை இது போல் எழுதுங்கள், அந்த வாரம் முழுக்க நடந்த விசயங்களை கோர்த்து விடலாம். தொடர்ச்சியாக புத்தகங்கள் படிக்க முடியாத கவலையை உங்கள் எழுத்துக்கள் போக்கியது. நன்றி தமிழா.

    ReplyDelete
  12. //தன்னிடம் பேட்டியெடுக்க வந்த கல்லூரி பேராசிரியை சிவபார்வதி//

    இன்றைய புது தகவலுக்கு நன்றி.....

    ReplyDelete
  13. அண்ணே நாலு கள்ள வோட்டு வேணும்னாலும் போட்டுடுறேன்., உங்களுக்கு தமிழ் ட்ய்பிங் செம சூப்பரா வரும்ன்னு தெரியும், இட்லி, வடை சைசுக்கு போட்டுட்டு அப்புறம் பொங்கல், சட்னியை போடுங்கண்ணே, தூக்கத்துல கூட உங்க ப்ளாக் தான் கனவுல வருதுன்னே v

    ReplyDelete
  14. செம்மொழி மாநாட்டுக்கு பெருமையாக கிளம்பிப் போன பதிவர்களை உள்ளேயே விடவில்லையாமே ?

    தினமலரில் செய்தி

    ReplyDelete
  15. முள் குத்துவதை கூட உடனே பதிவாக வெளியிடுபவர்கள் இன்னும் ஒரு வரி கூட எழுதவில்லையே ?

    ReplyDelete
  16. பாவம் ஈழத் தமிழர்கள்..! அவர்களுடைய ஒவ்வொரு நம்பிக்கையையும், சிங்களவனைவிட தமிழர்களாகிய நாமே முந்திக் கொண்டு உடைத்தெறிந்து வருகிறோம்..!
    //

    100%

    ReplyDelete
  17. தோசையைத் திருப்பிப்போடாம ஆப்பமா விட்டுட்டீங்க போல!


    கடைசிப்படம் மனசுக்கு படா பேஜாரா இருக்கு:(

    ReplyDelete
  18. இட்லி,தோசை,பொங்கல்,வடை,சட்னி,சாம்பார், சுவையாக இருந்தது நன்றி.

    //யூ டியூப்பை தளத்திலேயே காட்டுவதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..!
    தோழர்கள் யாராவது சொல்லுங்களேன்..!//
    யூ டியூப்தளம்--->கிளிக் Embed Code--->(Include related videos,
    Show Border, Enable privacy-enhanced mode)
    இந்த மூன்று கட்டங்களில் உள்ள டிக் மார்க் போட்டு விட்டு மேலே உள்ள கட்டத்தில் உள்ள Code ஐ காப்பி செய்து உங்கள் New post ல் பேஸ்ட் செய்யவும்.
    நன்றி.

    ReplyDelete
  19. அன்புத்தம்பி உண்மைத்தமிழன்

    உங்கள் வாசகர்களுக்கு என்னுடைய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  20. ஐஃபா விழாவுக்கு எதிர்ப்பு..! இலங்கையில் ஷூட்டிங் நடத்த எதிர்ப்பு.. இலங்கை ஆளும் தலைவர்களைச் சந்தித்தால் எதிர்ப்பு என்று சகல வழிகளிலும் அவர்களைப் புறக்கணிக்கச் சொல்லும் தமிழ்த் திரையுலகம் தன்னுடைய படங்களை மட்டும் ஏன் அங்கே அனுப்புகிறது என்றுதான் எனக்குப் புரியவில்லை..//

    எதிர்ப்பு காட்டுவது சிங்களவர்களுக்கு ! படத்தை அனுப்புவது நம் தமிழ் நண்பர்களுக்காக....
    நீங்கள் எதிர்த்தால் நாங்களும் எதிர்ப்போம் என்று முற்றாக தமிழர்களால் சூழப் பட்ட இடத்திலே உள்ள திரையை எரித்து தமிழர்கள் தமிழ்ப் படமே பார்க்கக் கூடாது என்பது போல அடக்க நினைக்கிறது சிங்கள அரசு.
    அதைவிட விந்தை அவர்களே எரித்து அதற்கு எதிராக அவர்களே அறிக்கையும் வேற...

    எல்லாவற்றையும் விட இது எதுவுமே தெரியாமல் உங்கள் கருத்து.
    சும்மா எழுதிவிட்டுப் போறதுதானே என்று, ஒருவிசயத்தைப் பற்றி அறிந்து கொள்ளாமல் எழுத வேண்டாம் நண்பரே!
    எழுத்து என்பதும் தவம் அதை சரியாகச் செய்யுங்கள்....
    எதையும் சரியாக ஆராய்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  21. எனக்கு கேசரி பிடிக்கிறது, எப்போதும் போல.. :)

    ReplyDelete
  22. \\அப்பன் முருகனுக்கு இன்னொரு கோவில் கட்டலாம் போலத்தான் தோன்றுகிறது..!\\

    முதல் கோவிலுக்கான கும்பாபிஷேக பத்திரிக்கையே இன்னும் தரலை!!!


    கடைசி படம் மனசு வலிக்குது!

    @யோகேஸ்வரா! சிவபார்வதி கதை எல்லாம் நடந்தப்ப நீ கொயந்த!

    ReplyDelete
  23. நியூஸ் எல்லாம் சூப்பர் அண்ணே ..

    ReplyDelete
  24. "இந்த பிளாக்கை பார்த்தேன். படித்தேன். ஆங்கிலத்தில்தான் உள்ளது"

    அப்படீனா , நாங்க எப்படி படிக்றது? நல்ல கட்டுரைகளை தமிழிலில் மொழி பெயர்த்து உங்கள் பதிவில் வெளிஇடுங்கள்..

    மற்ற எல்லாம் நன்றாக இருந்தது... இன்னும் கூடுதலாக தந்து இருந்தாலும் , திகட்டி இருந்து இருக்காது....

    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. அபிஅப்பா : //@ யோகேஸ்வரா! சிவபார்வதி கதை எல்லாம் நடந்தப்ப நீ கொயந்த! //

    ஹி ஹி .... இப்ப மட்டும் நம்மள பேட்டி எடுக்க ஆளுங்க வரிசயிலயா நிக்கிறாங்க???
    (ஆத்தாடி ..... பேட்டிங்கிர வார்த்தய கேட்டாலே நடுங்குதே.....)

    ReplyDelete
  26. நடிகை சசிகலாவிற்கு தெலுங்கில் 'ரஜ்னி' என்று பெயர்,ராகினி அல்ல.

    ReplyDelete
  27. ராதார‌வின் 'வாரிசு' கோவ‌ம் மிக‌ச்ச‌ரியான‌தே.
    யாரை, யாரோடு? க‌லைஞரின் வ‌ஞ்ச‌க‌ம்.

    பார்த்திப‌னுக்கு, இப்போதாவ‌து, அதிகார‌ மைய‌த்தின்
    சுய‌ரூப‌ த‌ரிச‌ன‌ம் கிட்டிய‌தே. நெருப்பை அதிக‌ம் நெருங்க‌வும்,
    விட்டு வில‌க‌வும் கூடாதென்ப‌த‌றியாத‌வ‌ரா
    இந்த‌ வித்தியாச‌ சிந்த‌னையாள‌ர்? என்ன‌வோ ந‌ட‌க்க‌ட்டும்.

    அருமையான‌, ப‌ல‌வ‌கை ப‌ல‌கார‌ங்க‌ள்.
    சுவையும், அள‌வும் கெஞ்ச‌ம் அதிக‌ம்தான்.

    ReplyDelete
  28. கலந்து கட்டி அடிச்சிருக்கிங்க ... சுவாரசியம்...

    ReplyDelete
  29. //என்ன கொடுமை பாருங்கள்..!?

    இதையெல்லாம் பார்க்கும்போது நம்மை இப்படியாவது விட்டு வைத்திருக்கும் அப்பன் முருகனுக்கு இன்னொரு கோவில் கட்டலாம் போலத்தான் தோன்றுகிறது..!//


    நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா!?
    அந்த பெண்ணை அப்படி படைத்த எல்லா கடவுள்களையும் புல்டோசர் விட்டு இடிக்கனும்!

    ReplyDelete
  30. நிறைய தகவல்களைத் தங்களின் விமர்சனங்களுடன் அழகிய செய்திகளாக்கும் நேர்த்தியை ரசிக்கமுடிகிறது.பதிவுலகில் மிக வேகமாக டைப் செய்பவர் நீங்கள்தான் என்ற செய்தியையும் கேள்விப்பட்டேன்.வாழ்த்துக்கள்.வேறொரு தளத்தில் கவிஞர் கண்ணதாசனின் காதலர் என்று உங்களை நீங்கள் அறிமுகப்படுத்திக்கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்ததனால் இந்த அறிமுகம்; கவிஞர் சம்பந்தப்பட்ட பதிவு இது.அவரைக் கொண்டாடுபவர்கள் இந்தப் பதிவினைத் தவிர்த்தலாகாது என்பதனால் இதனை இங்கே சொல்கிறேன்.தயவு செய்து என்னுடைய இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.http://amudhavan.blogspot.com

    ReplyDelete
  31. [[[அகில் பூங்குன்றன் said...
    எல்லாமே நல்ல இருக்குங்க . அடுத்த தடவை தேங்காய் சட்னியும் வேண்டும்.]]]

    கொடுத்திருவோம் அகில்..!

    ReplyDelete
  32. [[[Starjan(ஸ்டார்ஜன்) said...
    தோசைக்கு சட்னி சாம்பார் சுவையா இருக்கு. மேலும் நல்ல தளங்களை அறிமுகப்படுத்திய சரவணன் அண்ணனுக்கு ஜெ.]]]

    வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன் ஸார்..!

    ReplyDelete
  33. [[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    //இதையெல்லாம் பார்க்கும்போது நம்மை இப்படியாவது விட்டு வைத்திருக்கும் அப்பன் முருகனுக்கு இன்னொரு கோவில் கட்டலாம் போலத்தான் தோன்றுகிறது..!//

    ஆமா கண்டிப்பா இறைவனுக்கு நன்றி சொல்லணும்.]]]

    பாவமில்ல.. எதுக்காக இப்படி படைக்கணும்..? வருத்தமா இருக்கு..!

    ReplyDelete
  34. [[[jegan said...
    Good Food]]]

    வருகைக்கு நன்றி ஜெகன்..!

    ReplyDelete
  35. [[[kanagu said...
    Indha pathivu nalla irundhudu anna :) :) aana iyakkunar pera sollaliye.. :( apram Charles avaroda valaithalatha arimuga paduthunathuku nandri anna :) :)]]]

    அந்த மேட்டர் இன்னும் கொஞ்ச நாள்ல தானாவே வெளிய வரும் கனகு..!

    அந்த இயக்குநர் யாருன்னு அப்ப தெரிஞ்சுக்க..!

    ReplyDelete
  36. [[[மாயா said...

    //யூ டியூப்பை தளத்திலேயே காட்டுவதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..! தோழர்கள் யாராவது சொல்லுங்களேன்..!//

    Embed Code இனை எடுத்துப் போடுங்கள்!!]]]

    நன்றி மாயா..! செய்துவிட்டேன். இப்போது அந்த வீடியோவையும் கொஞ்சம் பாருங்களேன்..!

    ReplyDelete
  37. [[[kanagu said...

    http://www.google.com/support/blogger/bin/answer.py?hl=en&answer=80767

    indha link paarungana. athula youtube videos epdi add panrathunu pottu irukku :)]]]

    தகவலுக்கு மி்கக நன்றி கனகு..!

    ReplyDelete
  38. [[[Indian said...
    அந்த மன்மதராசாவத்தான் ஏற்கனவே இணையத்துல நாறடிச்சுட்டாங்களே]]]

    அது இந்த மேட்டர்ல இல்லியே..?

    யோகி படம் காப்பின்னுதானே கும்மாங்குத்து குத்தினோம்..!

    ReplyDelete
  39. [[[ஜோதிஜி said...
    வாரம் ஒரு முறை இது போல் எழுதுங்கள், அந்த வாரம் முழுக்க நடந்த விசயங்களை கோர்த்து விடலாம். தொடர்ச்சியாக புத்தகங்கள் படிக்க முடியாத கவலையை உங்கள் எழுத்துக்கள் போக்கியது. நன்றி தமிழா.]]]

    உங்களுடைய யோசனைக்கு மிக்க நன்றிகள் ஜோதிஜி ஸார்..!

    நிச்சயம் செய்கிறேன்..!

    ReplyDelete
  40. [[[வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

    //தன்னிடம் பேட்டியெடுக்க வந்த கல்லூரி பேராசிரியை சிவபார்வதி//

    இன்றைய புது தகவலுக்கு நன்றி.]]]

    அந்தக் கதை தெரியாதா உங்களுக்கு..? உங்க வயசென்ன ஸார்..?

    ReplyDelete
  41. [[[ஷர்புதீன் said...
    அண்ணே நாலு கள்ள வோட்டு வேணும்னாலும் போட்டுடுறேன்., உங்களுக்கு தமிழ் ட்ய்பிங் செம சூப்பரா வரும்ன்னு தெரியும், இட்லி, வடை சைசுக்கு போட்டுட்டு அப்புறம் பொங்கல், சட்னியை போடுங்கண்ணே, தூக்கத்துலகூட உங்க ப்ளாக்தான் கனவுல வருதுன்னே]]]

    ஆஹா.. அப்படியா ஷர்புதீன்..!

    ரொம்ப சந்தோஷம்.. யாம் பெற்ற இன்பம், ஒரு பதிவரை கனவில்கூட விடாமல் துரத்துவது..!

    மிக்க நன்றி..!

    ReplyDelete
  42. [[[மதி.இண்டியா said...

    செம்மொழி மாநாட்டுக்கு பெருமையாக கிளம்பிப் போன பதிவர்களை உள்ளேயே விடவில்லையாமே ?

    தினமலரில் செய்தி]]]

    இன்னிக்கு பேசுறாங்களாம்..!

    ReplyDelete
  43. [[[மதி.இண்டியா said...
    முள் குத்துவதை கூட உடனே பதிவாக வெளியிடுபவர்கள் இன்னும் ஒரு வரி கூட எழுதவில்லையே?]]]

    அவரவர் வீடு வந்து சேர்ந்ததும் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்..!

    ஆனால் நேற்றே நமது சுப்பையா வாத்தியார் தனது பதவில் எழுதிவிட்டார்..!

    ReplyDelete
  44. [[[கானா பிரபா said...

    பாவம் ஈழத் தமிழர்கள்..! அவர்களுடைய ஒவ்வொரு நம்பிக்கையையும், சிங்களவனைவிட தமிழர்களாகிய நாமே முந்திக் கொண்டு உடைத்தெறிந்து வருகிறோம்..!//

    100%]]]

    உண்மைதான் என்பதை வெட்கத்துடன் ஒப்புக் கொள்கிறேன் தம்பி கானா..!

    ReplyDelete
  45. [[[துளசி கோபால் said...
    தோசையைத் திருப்பிப் போடாம ஆப்பமா விட்டுட்டீங்க போல!]]]

    அவ்ளோ பெரிசா இருக்கா..? இல்லாட்டி கருகிப் போச்சா..? ஒண்ணும் பிரியலே டீச்சர்..!


    கடைசிப் படம் மனசுக்கு படா பேஜாரா இருக்கு:(]]]

    நன்றி டீச்சர்..!

    ReplyDelete
  46. [[[Thomas Ruban said...
    இட்லி, தோசை, பொங்கல், வடை, சட்னி, சாம்பார், சுவையாக இருந்தது நன்றி.

    //யூ டியூப்பை தளத்திலேயே காட்டுவதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..! தோழர்கள் யாராவது சொல்லுங்களேன்..!//

    யூ டியூப்தளம்--->கிளிக் Embed Code--->(Include related videos,
    Show Border, Enable privacy-enhanced mode)

    இந்த மூன்று கட்டங்களில் உள்ள டிக் மார்க் போட்டு விட்டு மேலே உள்ள கட்டத்தில் உள்ள Code ஐ காப்பி செய்து உங்கள் New post ல் பேஸ்ட் செய்யவும்.
    நன்றி.]]]

    நன்றி ரூபன்.. செய்துவிட்டேன்.

    இப்போது மறுபடியும் பதிவினை வந்து பார்க்கவும்..!

    ReplyDelete
  47. [[[இயக்குனர் சார்லஸ் said...
    அன்புத் தம்பி உண்மைத்தமிழன்
    உங்கள் வாசகர்களுக்கு என்னுடைய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி.]]]

    நன்றிங்கண்ணா..!

    ReplyDelete
  48. [[[வசந்திரன் said...
    hi]]]

    ஏனுங்கண்ணா இப்படி..?

    ReplyDelete
  49. [[[வசந்திரன் said...

    ஐஃபா விழாவுக்கு எதிர்ப்பு..! இலங்கையில் ஷூட்டிங் நடத்த எதிர்ப்பு.. இலங்கை ஆளும் தலைவர்களைச் சந்தித்தால் எதிர்ப்பு என்று சகல வழிகளிலும் அவர்களைப் புறக்கணிக்கச் சொல்லும் தமிழ்த் திரையுலகம் தன்னுடைய படங்களை மட்டும் ஏன் அங்கே அனுப்புகிறது என்றுதான் எனக்குப் புரியவில்லை..//

    எதிர்ப்பு காட்டுவது சிங்களவர்களுக்கு! படத்தை அனுப்புவது நம் தமிழ் நண்பர்களுக்காக.

    நீங்கள் எதிர்த்தால் நாங்களும் எதிர்ப்போம் என்று முற்றாக தமிழர்களால் சூழப்பட்ட இடத்திலே உள்ள திரையை எரித்து தமிழர்கள் தமிழ்ப் படமே பார்க்கக் கூடாது என்பது போல அடக்க நினைக்கிறது சிங்கள அரசு.

    அதைவிட விந்தை அவர்களே எரித்து அதற்கு எதிராக அவர்களே அறிக்கையும் வேற.

    எல்லாவற்றையும்விட இது எதுவுமே தெரியாமல் உங்கள் கருத்து. சும்மா எழுதி விட்டுப் போறதுதானே என்று, ஒரு விசயத்தைப் பற்றி அறிந்து கொள்ளாமல் எழுத வேண்டாம் நண்பரே!

    எழுத்து என்பதும் தவம் அதை சரியாகச் செய்யுங்கள். எதையும் சரியாக ஆராய்ந்து எழுதுங்கள்.]]]

    ஆலோசனைக்கு மிக்க நன்றி வசுந்திரன்..!

    அந்த தியேட்டரை எரி்த்தது யார் என்று எனக்குத் தெரியாது. அரசுத் தரப்பே செய்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் இப்போது வலுக்கட்டாயமாக படப்பெட்டியை வாங்கி படத்தை அங்கே திரையிடுவதற்குக் காரணம் தமிழர்களுக்காக அல்ல..

    அங்கே நிலைமை சுமூகமாக உள்ளது. தமிழர்களுக்காக அத்தனையும் செய்யப்பட்டு வருகிறது. தமிழர்கள் சந்தோஷமாகவே இருக்கிறார்கள் என்பதை பறைசாற்றத்தான்..!

    இலங்கை அரசின் இந்த சூழ்ச்சியை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்..!

    ReplyDelete
  50. [[[Vidhoosh(விதூஷ்) said...
    எனக்கு கேசரி பிடிக்கிறது, எப்போதும் போல.. :)]]]

    வாங்க வாங்க விதூஷ் மேடம்..!

    உங்களுக்காகவே இனிமேல் வாராவாரம் கேசரி போடலாம்னு இருக்கேன்..!

    ReplyDelete
  51. [[[அபி அப்பா said...

    \\அப்பன் முருகனுக்கு இன்னொரு கோவில் கட்டலாம் போலத்தான் தோன்றுகிறது..!\\

    முதல் கோவிலுக்கான கும்பாபிஷேக பத்திரிக்கையே இன்னும் தரலை!!!]]]

    நம்மல்லாம் மாப்ளை வீட்டுக்காரங்க.. நாமதான் ஓடணும்..! கூப்பிடல்லாம் மாட்டாங்க..!

    [[[கடைசி படம் மனசு வலிக்குது!]]]

    ரொம்பக் கஷ்டமா இருக்குண்ணே..!

    ReplyDelete
  52. [[[♥ ℛŐℳΣŐ ♥ said...
    நியூஸ் எல்லாம் சூப்பர் அண்ணே.]]]

    நன்றி ரோமியோ..!

    வேர் இஸ் ஜூலியட்..?

    ReplyDelete
  53. [[[பார்வையாளன் said...
    மற்ற எல்லாம் நன்றாக இருந்தது. இன்னும் கூடுதலாக தந்து இருந்தாலும் திகட்டி இருந்து இருக்காது.
    மனமார்ந்த நன்றி]]]

    அப்படியா..? சந்தோஷம் ஸார்..!

    அடுத்த தடவை இன்னும் கொஞ்சம் கூடுதலாக்கிர்றேன்..!

    பின்னூட்டம் வரலைன்னா நீங்கதான் வந்து கை கொடு்க்கணும்.. இப்பவே சொல்லிட்டேன்..!

    ReplyDelete
  54. [[[வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

    அபிஅப்பா : //@ யோகேஸ்வரா! சிவபார்வதி கதை எல்லாம் நடந்தப்ப நீ கொயந்த! //

    ஹி ஹி. இப்ப மட்டும் நம்மள பேட்டி எடுக்க ஆளுங்க வரிசயிலயா நிக்கிறாங்க???

    (ஆத்தாடி. பேட்டிங்கிர வார்த்தய கேட்டாலே நடுங்குதே.)]]]

    அவரவர்க்கு மச்சம் எங்கிட்டிருந்தெல்லாம் வருதுன்னு சொல்ல முடியாது தம்பி..!

    ReplyDelete
  55. [[[Mohan said...
    நடிகை சசிகலாவிற்கு தெலுங்கில் 'ரஜ்னி' என்று பெயர், ராகினி அல்ல.]]]

    தகவலுக்கு நன்றி மோகன்..!

    ReplyDelete
  56. [[[vasan said...

    ராதார‌வின் 'வாரிசு' கோவ‌ம் மிக‌ச் ச‌ரியான‌தே. யாரை, யாரோடு? க‌லைஞரின் வ‌ஞ்ச‌க‌ம்.

    பார்த்திப‌னுக்கு, இப்போதாவ‌து, அதிகார‌ மைய‌த்தின் சுய‌ரூப‌ த‌ரிச‌ன‌ம் கிட்டிய‌தே. நெருப்பை அதிக‌ம் நெருங்க‌வும், விட்டு வில‌க‌வும் கூடாதென்ப‌த‌றியாத‌வ‌ரா
    இந்த‌ வித்தியாச‌ சிந்த‌னையாள‌ர்? என்ன‌வோ ந‌ட‌க்க‌ட்டும்.

    அருமையான‌, ப‌ல‌வ‌கை ப‌ல‌கார‌ங்க‌ள். சுவையும், அள‌வும் கெஞ்ச‌ம் அதிக‌ம்தான்.]]]

    வருகைக்கு நன்றிகள் வாசன் ஸார்..!

    கலைஞர் சமயம் பார்த்து தனது வஞ்சகக் குணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது இதுவும் ஒரு உதாரணம்..!

    ReplyDelete
  57. [[[அஹமது இர்ஷாத் said...
    கலந்து கட்டி அடிச்சிருக்கிங்க. சுவாரசியம்.]]]

    மிக்க நன்றி அஹமது..!

    ReplyDelete
  58. [[[வால்பையன் said...

    //என்ன கொடுமை பாருங்கள்..!?

    இதையெல்லாம் பார்க்கும்போது நம்மை இப்படியாவது விட்டு வைத்திருக்கும் அப்பன் முருகனுக்கு இன்னொரு கோவில் கட்டலாம் போலத்தான் தோன்றுகிறது..!//


    நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா!?

    அந்த பெண்ணை அப்படி படைத்த எல்லா கடவுள்களையும் புல்டோசர் விட்டு இடிக்கனும்!]]]

    இடிச்சிரலாம்..!

    நேர்ல சிக்கினாத்தான..!?

    ReplyDelete
  59. [[[Amudhavan said...

    நிறைய தகவல்களைத் தங்களின் விமர்சனங்களுடன் அழகிய செய்திகளாக்கும் நேர்த்தியை ரசிக்கமுடிகிறது.பதிவுலகில் மிக வேகமாக டைப் செய்பவர் நீங்கள்தான் என்ற செய்தியையும் கேள்விப்பட்டேன்.வாழ்த்துக்கள்.வேறொரு தளத்தில் கவிஞர் கண்ணதாசனின் காதலர் என்று உங்களை நீங்கள் அறிமுகப்படுத்திக்கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்ததனால் இந்த அறிமுகம்; கவிஞர் சம்பந்தப்பட்ட பதிவு இது. அவரைக் கொண்டாடுபவர்கள் இந்தப் பதிவினைத் தவிர்த்தலாகாது என்பதனால் இதனை இங்கே சொல்கிறேன். தயவு செய்து என்னுடைய இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். http://amudhavan.blogspot.com]]]

    தங்களுடைய முதல் வருகைக்கு நன்றி அமுதவன் ஸார்..!

    நிச்சயம் வருகிறேன்..!

    ReplyDelete
  60. //நன்றி ரூபன்.. செய்துவிட்டேன்.

    இப்போது மறுபடியும் பதிவினை வந்து பார்க்கவும்..//

    இப்போது சுவையுடன்,மணமும் கூடியுள்ளது நன்றி.

    ReplyDelete
  61. பார்த்திபன் இப்பதானே உருப்படியா பேசி இருக்காரு....

    இயக்குனர் கிசுகிசு பேப்பரில் படித்தேன்....சிவா அப்படின்னு
    முடியுமா?? சரியா??

    ReplyDelete
  62. [[[Thomas Ruban said...

    //நன்றி ரூபன்.. செய்துவிட்டேன்.
    இப்போது மறுபடியும் பதிவினை வந்து பார்க்கவும்..//

    இப்போது சுவையுடன், மணமும் கூடியுள்ளது நன்றி.]]]

    மிக்க நன்றி ரூபன்.. மீண்டும் வருக..!

    ReplyDelete
  63. [[[ஜெட்லி... said...
    பார்த்திபன் இப்பதானே உருப்படியா பேசி இருக்காரு.]]]

    அட ஆமாம்ல.. அதான் பாராட்டியிருக்கேன் ஜெட்லீ..!

    [[[இயக்குனர் கிசுகிசு பேப்பரில் படித்தேன். சிவா அப்படின்னு
    முடியுமா?? சரியா??]]]

    கொள்ள அறிவு தங்கத்துக்கு..!

    ReplyDelete
  64. இடுகை முழுதும் நல்ல சுவாரஸ்யத்துடன் இருந்தன. கடைசிப் படம் நெகிழ்வு. அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது...

    ReplyDelete
  65. நல்ல பகிர்வுகள்.. எப்படி இவ்வளவு எழுதுகிறீர்கள்.. சரவணா..

    ReplyDelete
  66. சூர்யா சொன்னதாக செய்திகள் தெரிவிப்பது விவேக் ஓப்ரோய் இலங்கையில் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகவும் இந்த விஷயத்தில் அவர் என்ன உதவி கேட்டாலும் செய்ய தான் தயார் எனறும்,அவருடன் சேர்ந்து அந்தப் பணியைச் செய்ய விரும்புவதாகவும். நீங்கள் சூர்யா ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்ய கூடாது என்றா விரும்புகிறீர்கள்? பாவம் ஈழத் தமிழர்கள்!

    ReplyDelete
  67. மன்னிகவும்… இவ்வாறான ஒரு பதிவை எழுத கூடாது என்றுதான் நினைத்தேன் .. ஆனால் உங்களின் பதிவுகளும் செயல்களுமே இதை எழுத வைத்தது,,, இனிமேலாவது எங்களை காயபடுத்தாதீர்கள்…

    http://ilangaiunmaithamilan.wordpress.com/

    ReplyDelete
  68. //இதையெல்லாம் பார்க்கும்போது நம்மை இப்படியாவது விட்டு வைத்திருக்கும் அப்பன் முருகனுக்கு இன்னொரு கோவில் கட்டலாம் போலத்தான் தோன்றுகிறது..!//

    *****

    மிக சரியாக சொன்னீர்கள் தோழரே...

    கோவில் கட்டறதுன்னு முடிவு பண்ற மேட்டர் மட்டும் “தல” காதுக்கு விழாம பண்ணனும்...

    ReplyDelete
  69. [[[ஸ்ரீராம். said...
    இடுகை முழுதும் நல்ல சுவாரஸ்யத்துடன் இருந்தன. கடைசிப் படம் நெகிழ்வு. அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.]]]

    வருகைக்கு நன்றிங்கோ..!

    ReplyDelete
  70. [[[thenammailakshmanan said...
    நல்ல பகிர்வுகள்.. எப்படி இவ்வளவு எழுதுகிறீர்கள்.. சரவணா..]]]

    ரொம்ப நாளா இப்படித்தான்க்கா..!

    ReplyDelete
  71. [[[Chandran said...
    சூர்யா சொன்னதாக செய்திகள் தெரிவிப்பது விவேக் ஓப்ரோய் இலங்கையில் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகவும் இந்த விஷயத்தில் அவர் என்ன உதவி கேட்டாலும் செய்ய தான் தயார் எனறும்,அவருடன் சேர்ந்து அந்தப் பணியைச் செய்ய விரும்புவதாகவும். நீங்கள் சூர்யா ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்ய கூடாது என்றா விரும்புகிறீர்கள்? பாவம் ஈழத் தமிழர்கள்!]]]

    நான் அப்படிச் சொல்லவில்லை..!

    அங்கே ஷூட்டிங் நடத்தி தென்னிலங்கை இயல்பாக இருப்பதாக காட்டி உலக நாடுகளிடையே சீன் காட்ட நினைக்கும் இலங்கை அரசின் செயலுக்கு துணை போக வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்..!

    ReplyDelete
  72. [[[jonam said...

    மன்னிகவும்… இவ்வாறான ஒரு பதிவை எழுத கூடாது என்றுதான் நினைத்தேன் .. ஆனால் உங்களின் பதிவுகளும் செயல்களுமே இதை எழுத வைத்தது,,, இனிமேலாவது எங்களை காயபடுத்தாதீர்கள்…

    http://ilangaiunmaithamilan.wordpress.com/]]]

    நண்பரே.. நான் தங்களைக் காயப்படுத்தவில்லை.. நீங்கள்தான் எங்களைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்..!

    அங்கே எதுவுமே நடக்கவில்லை. அனைத்துமே நன்றாக இருக்கிறது என்பதை உலகத்துக்குக் காட்டவே இலங்கை அரசு விரும்புகிறது..!

    உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தால்தான் ஈழத்தின் நிலைமை உலகிற்குப் புரியும்..!

    இதனால்தான் அங்கே நடக்கின்ற கூத்துக்களுக்கு நாம் செவி சாய்க்க வேண்டாம் என்கிறோம்..!

    மற்றபடி ஈழத்து மக்களை புறக்கணிக்க இல்லை. இவர்களுக்காகத்தானே இத்தனையையும் செய்து கொண்டிருக்கிறோம்..

    சற்றுப் புரிந்து கொள்ளுங்கள் தோழரே..!

    ReplyDelete
  73. [[[R.Gopi said...

    //இதையெல்லாம் பார்க்கும்போது நம்மை இப்படியாவது விட்டு வைத்திருக்கும் அப்பன் முருகனுக்கு இன்னொரு கோவில் கட்டலாம் போலத்தான் தோன்றுகிறது..!//

    *****

    மிக சரியாக சொன்னீர்கள் தோழரே...
    கோவில் கட்டறதுன்னு முடிவு பண்ற மேட்டர் மட்டும் “தல” காதுக்கு விழாம பண்ணனும்.]]]

    கோபி இந்த விஷயத்துல எந்தத் தல கிட்டேயும் பெர்மிஷன் கேக்க வேண்டிய அவசியமே இல்லையே..?

    பின்ன எதுக்குப் பயப்படணும்..?

    ReplyDelete
  74. நன்றி நண்பரே...... உண்மையில் உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு ஆறுதல் அளிக்கின்றன...... உண்மைதான் இலங்கை அரசு உலகிற்கு காட்டவே இப்படி செய்கிறது.... ஆனால் இலங்கைக்கு என்றுமே தனிமை படுத்தப்பட உணர்வு தோன்றாது.. எப்பொழுதும் ரஷ்யாவும், சீனாவும் , இந்தியாவும், ஜப்பானும், இன்னும் சில கீழைத்தேய நாடுகளும் இலங்கை அரசுடன் கை கோர்த்தே இருக்கின்றன ...... சில ஆயிரம் பேர்களின் போரட்டத்தாலோ , சில நூறு பேர்களின் பதிவுகளினாலோ இவற்றை ஒன்றும் செய்ய முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி .... மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட எங்கள் முந்திய தலைமுறையினருக்கு என்ன நேர்ந்தது என்பதை உலகறியும் ..... இங்கு நாம் பயத்துடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .....
    ஆனால்... எனக்கு என்ன கவலை என்றால் சில பதிவர்கள் ஏன் எங்கள் நிலைமையை நகைச்சுவையாக எழுதுகிறார்கள் ? உதாரணத்திற்கு நீங்கள் பல சினிமா சம்பத்தப்பட்ட விடயங்களுடன் எங்கள் விடயத்தை வடை என்கிற தலைப்பில் எழுதியிருகீரீர்கள்....காரணம் என்னவோ தெரியவில்லை ...... ஆனால் அதுவும் பரவாயில்லை இலங்கை அரசை தனிமை படுத்தும் நோக்கில் ஏன் எங்களை தனிமை படுத்துகிறீர்கள் ? உதாரணத்திற்கு தமிழ் படங்கள் இலங்கையில் வெளியிடப்பட்ட கூடாது என்கிறீர்கள் , ஆனால் எந்த ஒரு தமிழ் படம் ரிலீஸ் ஆனாலும் அதை முதல் நாளே பார்த்துவிட்டு நான்கு பக்கதிற்கு விமர்சனம் எழுதுகிறீகள் .... அது என்ன உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயம்...

    ReplyDelete
  75. மன்னிகவும் நண்பரே.. அன்று ஜோனம் என்ற பெயரில் பின்னூட்டமிட்டதும், இன்று இலங்கை உண்மைத்தமிழன் என்ற பெயரில் பின்னூட்டமிட்டதும் நானே.... இதுவே எனது புதிய வலை http://ilangaiunmaithamilan.blogspot.com/2010/06/blog-post.html
    சில பல காரணங்களுக்காக எங்களை நாங்கள் வெளியுலகத்திற்கு அடையாளம் காட்ட பயப்படுகிறோம் ..... தவறாக என்ன வேண்டாம்....

    ReplyDelete
  76. அதிரடி செய்தி
    அண்ணே இட்லி சட்னி சாம்பார் ஒ.கே , அப்படியே இட்லி பொடி (அரசியல் ) சேர்க்க வேண்டாமா
    www.athiradenews.blogspot.com

    ReplyDelete
  77. [[[unmaithamilan said...

    உதாரணத்திற்கு நீங்கள் பல சினிமா சம்பத்தப்பட்ட விடயங்களுடன் எங்கள் விடயத்தை வடை என்கிற தலைப்பில் எழுதியிருகீரீர்கள். காரணம் என்னவோ தெரியவில்லை.]]]

    இது நகைச்சுவைக்காக அல்ல.. வரிசையாக எழுதப்பட்டிருந்ததில் வந்தமர்ந்த உணவுப் பதார்த்தப் பெயர்ச் சொல் அது.. அவ்வளவே.. இதற்குள்ளேயே ஏன் அரசியல் பார்க்கிறீர்கள் நண்பா..?

    [[[இலங்கை அரசை தனிமைபடுத்தும் நோக்கில் ஏன் எங்களை தனிமைபடுத்துகிறீர்கள் ?
    உதாரணத்திற்கு தமிழ் படங்கள் இலங்கையில் வெளியிடப்பட்ட கூடாது என்கிறீர்கள்.
    ஆனால் எந்த ஒரு தமிழ் படம் ரிலீஸ் ஆனாலும் அதை முதல் நாளே பார்த்துவிட்டு நான்கு பக்கதிற்கு விமர்சனம் எழுதுகிறீகள்.
    அது என்ன உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயம்.]]]

    நண்பா.. ஈழத்தில் நிலைமை மக்கள் வாழுகின்ற வகையில் இல்லை என்பதையும், அங்கே ஆட்சி செய்யும் மஹிந்தா என்னும் அரக்கனின் உண்மை முகத்தை இந்தியாவிலேயே இதுவரையில் தெரியாதவர்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில்தான் கொழும்பு விழாவை புறக்கணிக்கச் சொன்னோம்..

    இதற்கு உலகளாவிய புலம் பெயர்ந்த தமிழர்களின் பெரும் ஆதரவும் கிடைத்தது..! இதே பாணியில்தான் நம்முடைய முயற்சிகளை நாம் தொடர்ந்து கொண்டே செல்வோம்.. செய்வோம்..!

    உடனேயே நமக்கு பலன் கிடைக்கும் என்று நான் நம்பவில்லை. ஆனால் அங்கே இருக்கும் ஆட்சியாளர்கள் பற்றியும், இலங்கையில் ஏதோ ஒரு கொடூரம் நடக்கிறது என்பதும் உலக மக்களின் மனதில் பதிகிறது அல்லவா.. இதைத்தான் புலம் பெயர்ந்த தமிழர்களும் எதிர்பார்க்கிறார்கள்..! இதற்காகத்தான் செய்து கொண்டிருக்கிறோம்..!

    நம்மால் முடிந்த எதிர்ப்பை நம்மால் முடிகின்ற அளவுக்குக் காட்டித்தான் ஆக வேண்டும்..!

    ReplyDelete
  78. [[[unmaithamilan said...

    மன்னிகவும் நண்பரே.. அன்று ஜோனம் என்ற பெயரில் பின்னூட்டமிட்டதும், இன்று இலங்கை உண்மைத்தமிழன் என்ற பெயரில் பின்னூட்டமிட்டதும் நானே. இதுவே எனது புதிய வலை

    http://ilangaiunmaithamilan.blogspot.com/2010/06/blog-post.html

    சில பல காரணங்களுக்காக எங்களை நாங்கள் வெளியுலகத்திற்கு அடையாளம் காட்ட பயப்படுகிறோம். தவறாக என்ன வேண்டாம்.]]]

    தோழரே.. வலையுலகம் என்று உலகம் கடந்தது..! இதில் இருக்கின்ற பெயர்கள் உலகளாவிய அளவிலேயே பதிவர்களுக்கு பரிச்சயம்..

    இந்த நிலையில் நீங்களும் உண்மைத்தமிழன் என்கிற தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டது நல்லதாகப் படவில்லை..!

    எனக்காக வேறு ஏதேனும் பெயரை வைத்துக் கொள்ளுங்களேன்..!

    ஏனெனில் புதிதாக வரும் ஒரு சிலருக்கு இது குழப்பமாகிவிடும்..!

    வெளியில் பேசும்போது உண்மைத்தமிழன் எழுதினார்.. எழுதியிருக்கிறார் என்றுதான் சொல்வார்கள்..!

    அது என்னையா..? அல்லது உங்களையா..? என்று இன்னொரு கேள்வி எழுப்பித்தான் பதில் கிடைக்கும்..!

    தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்கள்..

    ReplyDelete
  79. [[[beer mohamed said...

    அதிரடி செய்தி
    அண்ணே இட்லி சட்னி சாம்பார் ஒ.கே, அப்படியே இட்லி பொடி (அரசியல்) சேர்க்க வேண்டாமா
    www.athiradenews.blogspot.com]]]

    அடுத்த வாரம் சேர்த்தர்றேன்..!

    ஆர்வத்திற்கும், வருகைக்கும் நன்றி நண்பரே..!

    ReplyDelete
  80. அண்ணே, பரோட்டாவுக்குப் போட்டியா ண்ணே.....என்ன இருந்தாலும் நம்ம ஊர் இட்லி, வடை, சாம்பார் தான் டேஸ்ட்.

    ReplyDelete
  81. [[[kavi said...
    அண்ணே, பரோட்டாவுக்குப் போட்டியாண்ணே. என்ன இருந்தாலும் நம்ம ஊர் இட்லி, வடை, சாம்பார்தான் டேஸ்ட்.]]]

    எதுக்கும் போட்டியில்லண்ணே..! நம்ம வழி தனி வழி..!

    ReplyDelete
  82. உங்கள் பதில்களில் இருந்து அறிய கூடியதாக உள்ளது ,வெளிநாடுகளில் மிக வசதியாக வாழும் புலிகளை திருப்திபடுத்த முயற்சிப்பீர்களே தவிர இலங்கையில் வாழும் தமிழர்களை பற்றி அக்கறை இல்லை என்பது.

    ReplyDelete
  83. [[[Chandran said...
    உங்கள் பதில்களில் இருந்து அறிய கூடியதாக உள்ளது, வெளிநாடுகளில் மிக வசதியாக வாழும் புலிகளை திருப்திபடுத்த முயற்சிப்பீர்களே தவிர இலங்கையில் வாழும் தமிழர்களை பற்றி அக்கறை இல்லை என்பது.]]]

    நண்பரே உங்களுடைய இந்தப் பின்னூட்டம் கவலையளிக்கிறது..!

    ஈழத் தமிழர்களிடையே இருக்கும் இந்த பணக்காரன், ஏழை என்கிற பேத வர்க்கமும் நம்முடைய விடுதலைக்கு இன்னுமொரு தடைக்கல்லாகிவிடுமோ என்ற அச்ச உணர்வு எனக்கு ஏற்பட்டிருக்கிறது..!

    ஈழத்தின் உண்மை நிலையை எப்பாடுபட்டாவது உலக நாடுகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் கொண்டு போய்ச் சேர்க்க பலரும் பலவிதங்களிலும் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்..!

    நீங்கள் இப்படிப் பிரித்துப் பேசுகிறீர்கள்..? என்னவென்று சொல்வது..?

    ReplyDelete