Pages

Saturday, May 22, 2010

மகனே என் மருமகனே..! - திரை விமர்சனம்


22-05-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

600 எபிசோடுகளுக்குக் கொண்டு போய் வெற்றி விழா நடத்தியிருக்கக் கூடிய சீரியல் கதை. ராஜ் டிவி இதனை சினிமாவுக்குத் தள்ளிவிட்டிருக்கிறது.


நகைச்சுவை கலந்த மிடில் கிளாஸ் கதைகளை உருவாக்குவதில் வல்லவரான விசுவின் அந்தியந்த சீடர் டி.பி.கஜேந்திரனின் ஆஸ்தான கதாசிரியர் டி.துரைராஜின் கதை என்று ஏற்கெனவே தெரிந்ததால் இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்த்துதான் சென்றிருந்தேன்.

அதேதான்..

சிங்கம்பட்டி ஜமீன்தார் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். கையில் 'டப்பு' இல்லாவிட்டால்கூட பரவாயில்லை.. கடன் வாங்கியாவது தானமாக வழங்குகிறார். இவருடைய பையன் ஹாஸ்டலில் தங்கி படித்தவன் ஐ.டி. முடித்து லட்சக்கணக்கில் சம்பளத்துடன் சென்னையில் பொட்டி தட்டிக் கொண்டிருக்கிறான்.

ஜமீன்தாரின் அப்பாவின் சின்ன வீட்டுக்குப் பிறந்த பேரன் சிங்காரமாக விவேக். முறுக்கிவிட்ட மீசையோடு அல்லக்கைகள் இருவரோடு ஊருக்குள் அலப்பறை செய்தபடியே திரியும் மைனர். ஜமீன்தார் நாசரின் பொண்ணான பொன்னரசியை எடக்கு மடக்கு செஞ்சு கல்யாணத்தைப் பண்ணிக் கொள்கிறார். ஆனாலும் சீட்டு விளையாட்டில் ஏனோ மனதைப் பறி கொடுத்து பாட்டியின் கழுத்து செயின்வரையிலும் உருவி கொண்டு போய் சீட்டு விளையாட்டில் தொலைக்கிறார்.

விளையாட பணமில்லாத சூழலில் “பொண்டாட்டியை வைச்சு விளையாடலாம் வாடா..” என்றவனை அடித்து உதைத்த நிலையில் “உன் சாவு என் கைலதாண்டா” என்று விவேக் சொல்லி முடிக்க அன்றைக்கே அவன் சாவு நடந்தேறுகிறது.. போலீஸூம் சொல்லி வைத்தாற்போல் விவேக்கை அரெஸ்ட் செய்ய.. ஜமீன்தார் குடும்பத்துக்கு சனி தசை நடக்கத் துவங்குகிறது.. விவேக்கை ஜாமீனில் எடுக்கக்கூட பணமில்லாமல் தவிக்கும் ஜமீன்தார் பையனிடம் கேட்க பையன் தர மறுத்து அவதூறாகப் பேச குடும்பத்திற்குள் பிரிவினை.

இதில் ஜமீன்தாரின் மச்சான் லிவிங்ஸ்டன் மகனை தனக்கு மாப்பிள்ளையாக்க நினைத்து உள்ளடி வேலைகளை செய்து பையனின் மனசைக் கெடுத்துத் தொலைக்கிறார்.

ஜெயிலில் இருந்து திரும்பி வரும் புருஷனைக் கூட்டிக் கொண்டு மெட்ராஸுக்கு வருகிறாள் ஜமீன்தாரின் மகள். "இங்கேயே ஏதாவது வேலை செஞ்சு பொழைச்சு சம்பாதிச்சுக் காட்டிட்டுத்தான் மறுபடியும் நம்ம ஊருக்குள்ள கால் வைக்கணும்" என்று கண்ணகி கணக்காக சூளூரைக்க அது நடந்ததா, இல்லையா என்பதுதான் மிச்சக் கதை..

விவேக்தான் கதாநாயகன் என்பதால் சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பார்கள் என்று நினைத்து நீங்கள் போனால் அதற்கு நான் பொறுப்பில்லை. முதல் பகுதியில் ஓரளவுக்கு நம் பல்லைக் காட்ட முடிகிறது.. பிற்பகுதியில் சீரியல்களையே தோற்கடிக்கும் அளவுக்கு திடுக், திடுக் சீரியல் திரைக்கதைகளும், சென்டிமெண்ட்டும் நெஞ்சையும், கண்ணையும் ஒரு சேர பிழிகிறது.

விவேக்கிற்கு டயலாக் டெலிவரி நன்றாகவே வருகிறது. ஆனால் வடிவேலுவை போல உடல்மொழிதான் வர மறுக்கிறது. இதனாலேயே சிரிக்க வேண்டிய காட்சிகளிலெல்லாம் அடுத்தக் காட்சி துவங்கிய பின்புதான் சிரிக்க முடிகிறது.

வசிய மருந்து வைக்க வம்பிழுத்தான்பட்டிக்குள் போய் வயிறு கலங்கி குந்த வைத்து உட்காரும் இடத்தில் நல்ல கலகலக.. மற்றபடி ஸ்பீட் டயலாக்கிலேயே கவரும் முயற்சியில் அவருக்குப் பாதி தோல்வி.. பாதி வெற்றி..!

ஆனாலும் கதாநாயகன் லெவலுக்கு மாறியிருப்பதால் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். குறிப்பாக பாட்டியின் பிணத்தைப் பார்த்து சுடுகாட்டில் அழுவதைச் சொல்லலாம். இதில் புதிதாக ஒன்று.. விவேக் நன்றாக நடனமாடவும் செய்திருக்கிறார். வாழ்க..


ஹீரோயின் யாமினி ஷர்மா. ஏதாவது சரக்கடித்த நிலையில் தேர்வு செய்தார்களா என்று தெரியவில்லை. ஹீரோயினுக்கான பேஸே இல்லை.. பின் எதற்கு..? ஆனால் கிளைமாக்ஸில் நிஜமாவே அழுதுத் தொலைக்கும்போது கொஞ்சம் நடிப்பு தெரிகிறது..! மற்றபடி இந்த ஒரு படத்தோடு கோவிந்தா ஆவது உறுதி..!


மிதுன் என்றொரு பையன் இன்னொரு ஹீரோ. ஜமீன்தாரின் பையனாக நடித்திருக்கிறார். இட்ஸ் ஓகே.. 'தவமாய் தவமிருந்து' படத்தில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்திருந்த மீனாள் இதில் முற்றும் துறந்த முனியாய் காட்சியளிக்கிறார். இவருக்குத் துணை இவரது சகோதரியாக நடித்த ஒருவர். அவரும் அரைகுறை முனிதான். நல்லவேளை இவர்களது அம்மா ஷர்மிளி முழுக்க போர்த்திக் கொண்டுதான் நடித்திருக்கிறார். தப்பித்தோம்..


சகோதரிகள் இருவரும் வீட்டிலேயே கால் சட்டை, அரை டிராயரில் உலா வருவதைப் பார்த்தால் இப்படியொரு இடம் கிடைத்தால், வீட்டோடு மாப்பிள்ளையாக போய்விடலாம்போலத் தோன்றியது.

இந்த வீட்டிலேயே இன்னொரு ஹீரோயினாக தேன்மொழி. நவ்யா நாயர் மலையாளத்தில் அறிமுகமான 'நந்தனம்' படத்தின் அருமையான சின்ன கான்செப்ட்டை அட்டகாசமாக உருவி இதில் சொருவியிருக்கிறார்கள். அதில் பெருமாள்.. இதில் என் அழகு அப்பன் முருகன்.

சதாசர்வகாலமும் என் அப்பன் முருகனிடம் தனது சோகத்தைப் பிழிந்து சொல்லியபடியே இருக்கும் ஒரு கேரக்டர்.. எதற்கு இது என்று மண்டையைப் போட்டு பிய்த்துக் கொண்டதில்தான் இருக்கிறது கதை ஆசிரியரின் திறமை. கிளைமாக்ஸில் கலக்கியிருக்கிறது திரைக்கதை.


'பழனி' என்ற போர்டையும், மலையையும் மட்டும் காட்டிவிட்டு ,லோக்கலில் படம் பிடித்துக் காட்டியிருக்கும் இவர்களை என் அப்பன் மன்னிப்பானாக..


ஜமீன்தாராக நாசர். மனைவியாக சரண்யா. அல்லல்படும் அம்மா கேரக்டருக்கு சரண்யாதான் இனிமேல் பெஸ்ட்.. கொடுத்த காசுக்கு மேலேயே நடித்துக் காட்டுகிறார். சீரியல் இயக்குநர்கள் வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் டைட் குளோஸப் ஷாட் வைப்பார்கள். இதிலும் அப்படியே மகனுடன் சொத்துக்காக சண்டையிடும் காட்சியில் சரண்யாதான் நடிப்பில் ஜொலிக்கிறார். 


விவேக்கின் பாட்டியாக பரவை முனியம்மா. பேத்தியை கரம் பிடிக்க பேரனுக்கு ஐடியா கொடுக்கிறார். பேரன் ஒரு புல் பாட்டிலை வைத்து முழுங்கிக் கொண்டிருக்க, பக்குவமாக அவனுக்கு மீன் சுட்டுக் கொடுக்கிறார். அடுத்தக் காட்சியில் தானே ஒரு ஆஃப் அடித்துவிட்டு பேரனை நினைத்து புலம்புகிறார்.. இப்படி ஒரு பாட்டி நமக்கும் கிடைக்கக் கூடாதா..? இவருடன் தாத்தா விவேக்குக்கு 'மாசிலா உண்மைக் காதலே ' என்றொரு பிளாக் அண்ட் ஒயிட் 'டூயட்'டும் உண்டு என்பது அடிஷனல் செய்தி.

வசனம் எழுதியிருப்பவர்களில் பத்திரிகையாளர் 'குமுதம்' கிருஷ்ணா டாவின்ஸியும் ஒருவர்.. பல இடங்களில் விவேக் பேசும் டபுள் மீனிங்கை முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டும். இதையும் கேட்டுவிட்டு 'யு' சர்டிபிகேட் கொடுத்திருக்கும் இந்த சென்சார் போர்டை என்னவென்று சொல்ல..?


இசை தீனா என்று டைட்டில் சொன்னது.. பாடல்கள் வந்தன.. சென்றன.. இரண்டு பாடல்கள் மட்டுமே கேட்கும்படி இருந்தன.  ஒரு ரீமிக்ஸ் பாடல். “ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை..” ம்ஹும்.. வழக்கம்போலை கொலை செய்திருக்கிறார்கள்.. டைட்டில் காட்சியிலேயே ஒரு குத்துப் பாடலை சொருகி சீரியல் நடிகர் ஸ்ரீயை ஆட வைத்திருக்கிறார்கள். உடன் ஆடும் பெண்ணின் 'அனாடமி' பற்றி கேபிள் சங்கர் நிச்சயம் எழுதுவார்.


'அண்ணாமலை' ஸ்டைலில் ஒரே பாடல் காட்சியில் கோடீஸ்வரர் ஆவதைப் போல் காட்சிகளை வைத்து இரண்டாம் பாதியில் சிரிப்பு மூட்டியிருக்கிறார்கள். நகைச்சுவைத் திரைப்படம் என்பதால் லாஜிக் பார்க்க மாட்டார்கள் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்..!

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் நகைச்சுவையை சேர்த்திருத்தால் திரையரங்கில் கூட்டம் கூடியிருக்க வாய்ப்புண்டு. நழுவ விட்டுவிட்டார்கள்..!

'இதயமாற்று தானம்' செய்து தமிழகத்தில் ஒரு புதிய புத்துணர்ச்சியை ஊட்டி ஹிரேந்தினின் கதை இதிலும் வருகிறது. ஆனால் 4 வருடங்களாக படத்தின் தயாரிப்பு இருந்து தொலைத்ததால் ஹிரேந்திரன் சம்பவத்திற்கு முன்பாகவே இது திட்டமிடப்பட்ட கதை என்கிறார் கதை ஆசிரியர். வாழ்த்துவோம்..! அப்போதே ரிலீஸ் ஆகியிருந்தால் இந்த ஒன்றுக்காகவே பரபரப்பைக் கூட்டியிருக்கலாம்..

கல்யாணத்தைப் போலவே சினிமா ரிலீஸையும் உடனுக்குடன், அந்தந்த வயதில் முடித்தாக வேண்டும். இல்லையெனில் இப்படியாக முதிர் கன்னி, முதிர்ந்து போன கதையாகத்தான் போய் முடியும்.

ஏதோ ஒரு படத்துக்குப் போய் பொழுதைக் கழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக இங்கே செல்லலாம்..!

மகனே என் மருமகனே - ஒரு சீரியல் கதம்பம்..!

தியேட்டர் டிப்ஸ் :

ஒரு திரையரங்கை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை என்று மூக்கால் அழுபவர்கள் வடபழனி ஏவி.எம்.ராஜேஸ்வரி தியேட்டருக்கு வந்து பார்த்துவிட்டுச் செல்லலாம்.

அவ்வளவு சுத்தம்.. டிக்கெட் கொடுப்பவர்கள்கூட ஸார் போட்டுத்தான் பேசுகிறார்கள். பிளாக்கில் டிக்கெட் மூச்.. யாராவது வாங்கியவர்களே விற்றால்தான்.. படம் துவங்குவதற்கு முன்பேயே தியேட்டருக்கு முன்பிருக்கும் இடங்களில் பார்வையாளர்கள் அமர அனுமதிக்கப்படுகிறார்கள். நன்று..!

இந்திய அளவில் 'ஜனகனமண' என்று 'தேசிய கீத'த்தை ஒளிபரப்பும் தியேட்டர் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். தேசிய கீதம் ஒலிக்கும்போது அட்டென்ஷனில் நிற்கலாம். ஓகே.. ஆனால் பாப்கார்னையும், சமோசாவையும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் என்ன செய்வார்கள்..? முழுங்காமல் இருக்க வேண்டுமா? அல்லது முழுங்கலாமா..? அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என்று தெரிந்தவர்கள் சொன்னால் அடுத்த முறை நான் பின்பற்றிக் கொள்ள வசதியாக இருக்கும்..

படத்தின் பிரமோஷனுக்காக ராஜ் டிவியில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்திற்கு டிக்கெட்டுகள் வாரி வழங்கப்பட்டிருந்ததால் அரங்கம் பாதி நிரம்பியிருந்தது. அதிலும் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒருவர் படத்தில் பங்கு கொண்டவர் போலிருக்கிறது. “இந்த இடத்துலதான் நான் பக்கத்துல உக்காந்திருந்தேன். நின்னுக்கிட்டிருந்தேன்” என்று தனது மனைவியிடம் பீலாவிட்டதையும் கேட்க வேண்டியிருந்தது.

படத்தின் இடைவேளையில் காபி குடிக்க வெளியே வந்தால் படத்தின் கதாநாயகன் விவேக்கே நேரில் வரவேற்றுக் கொண்டிருந்தார். படத்தின் விளம்பரத்திற்காக என்னென்ன செய்ய வேண்டியிருக்கிறது பாருங்கள்..?

வந்தவர்கள் அனைவருக்கும் படத்தின் பெயர் பொறிக்கப்பட்ட அரைத் தொப்பி இலசவமாக வழங்கப்பட்டது. அந்த அரைத் தொப்பியில் விவேக்கிடம் கையெழுத்து வாங்க அடிதடியே நடந்தது.. “படம் சக்ஸஸ் ஸார்..” என்று எங்கிருந்தோ வந்த சவுண்ட்டை கேட்டு திரும்பிப் பார்த்து கும்பிட்டு நன்றி சொல்லிவிட்டுப் போனார் விவேக்.

படம் முடிந்த பின்பு வந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ..? 


புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

40 comments:

  1. மிதுன் புதுமுக ஹீரோ இல்லை என்பதை சபைக்கு சொல்லிக்கொள்கிறோம்

    ReplyDelete
  2. குமுதத்துல பத்திரிக்கையாளரா இருந்தவரு வசனம் எழுதினா இரட்டை அர்த்தம் இல்லாமல் இருக்குமா???
    என்ன்ண்ணே நான் சொல்றது....

    ReplyDelete
  3. /சகோதரிகள் இருவரும் வீட்டிலேயே கால் சட்டை, அரை டிராயரில் உலா வருவதைப் பார்த்தால் இப்படியொரு இடம் கிடைத்தால், வீட்டோடு மாப்பிள்ளையாக போய்விடலாம்போலத் தோன்றியது//

    முருகப்பெருமான் அருளட்டும்

    ReplyDelete
  4. படத்தோட ஸ்டில்ஸ் எல்லாம் பாத்தவுடனே செம காமெடியா இருக்கும்-னு நெனச்சேன்... கொஞ்சம் மொக்க போல இருக்கே... :( :(

    கொல கொலயா முந்திரிக்கா பாத்துட்டு எப்படி இருக்கு-னு சொல்லுங்கண்ணா...

    ReplyDelete
  5. //
    சகோதரிகள் இருவரும் வீட்டிலேயே கால் சட்டை, அரை டிராயரில் உலா வருவதைப் பார்த்தால் இப்படியொரு இடம் கிடைத்தால், வீட்டோடு மாப்பிள்ளையாக போய்விடலாம்போலத் தோன்றியது.//

    //உடன் ஆடும் பெண்ணின் அனாடமி பற்றி கேபிள் சங்கர் நிச்சயம் எழுதுவார்//

    மேலே உள்ள இரண்டு வாக்கூமூலத்திலும் முரண்பாடு உள்ளது..ஏதாவது ஒண்ணுதான் சரியாய் இருக்கும்.
    புரியவில்லை என்றால் மெயில் அனுப்பவும்.


    ;)))

    ReplyDelete
  6. `சன்டீவிக்கு இருக்கும் தொழில் சாமர்த்தியம் ராஜுக்கு இல்லையோ...

    ReplyDelete
  7. //சகோதரிகள் இருவரும் வீட்டிலேயே கால் சட்டை, அரை டிராயரில் உலா வருவதைப் பார்த்தால் இப்படியொரு இடம் கிடைத்தால், வீட்டோடு மாப்பிள்ளையாக போய்விடலாம்போலத் தோன்றியது.// உங்களுக்கு ரொம்பதான் ஆசை அண்ணா...

    ReplyDelete
  8. “படம் சக்ஸஸ் ஸார்..” என்று எங்கிருந்தோ வந்த சவுண்ட்டை கேட்டு திரும்பிப் பார்த்து கும்பிட்டு நன்றி சொல்லிவிட்டுப் போனார் விவேக்.

    இது நல்ல காமெடி.
    ஆமா இந்த மாதிரி படங்களையெல்லாம் எப்படி தேடிக்கண்டுபிடித்து பார்க்கிறீர்கள்

    ReplyDelete
  9. /சகோதரிகள் இருவரும் வீட்டிலேயே கால் சட்டை, அரை டிராயரில் உலா வருவதைப் பார்த்தால் இப்படியொரு இடம் கிடைத்தால், வீட்டோடு மாப்பிள்ளையாக போய்விடலாம்போலத் தோன்றியது//

    முருகப்பெருமான் அருளட்டும்//

    பத்து லட்சம் ஹிட்ஸ்கு பார்ட்டி எப்பண்ணே? :)

    ReplyDelete
  10. [[[கானா பிரபா said...
    மிதுன் புதுமுக ஹீரோ இல்லை என்பதை சபைக்கு சொல்லிக் கொள்கிறோம்]]]

    கானா தம்பி.. தவறைத் திருத்தியமைக்கு மிக்க நன்றிகள்..!

    உங்களை மாதிரி நான் யூத்துக படத்தையெல்லாம் பார்க்கிறதில்ல ராசா..!

    ReplyDelete
  11. [[[நாஞ்சில் பிரதாப் said...
    குமுதத்துல பத்திரிக்கையாளரா இருந்தவரு வசனம் எழுதினா இரட்டை அர்த்தம் இல்லாமல் இருக்குமா???
    என்ன்ண்ணே நான் சொல்றது....]]]

    அவர் ஒருத்தரின் முடிவாக மட்டுமே இது இருக்க முடியாது..

    விவேக் மற்றும் இயக்குநரின் பங்களிப்பும் நிச்சயம் இதில் இருக்கும்..!

    ReplyDelete
  12. [[[மணிஜீ...... said...
    /சகோதரிகள் இருவரும் வீட்டிலேயே கால் சட்டை, அரை டிராயரில் உலா வருவதைப் பார்த்தால் இப்படியொரு இடம் கிடைத்தால், வீட்டோடு மாப்பிள்ளையாக போய் விடலாம் போலத் தோன்றியது//

    முருகப் பெருமான் அருளட்டும்]]]

    இதுக்கெல்லாம் நிச்சயம் அருள மாட்டாண்ணே..!

    ReplyDelete
  13. [[[kanagu said...

    படத்தோட ஸ்டில்ஸ் எல்லாம் பாத்தவுடனே செம காமெடியா இருக்கும்-னு நெனச்சேன்... கொஞ்சம் மொக்க போல இருக்கே... :( :(

    கொல கொலயா முந்திரிக்கா பாத்துட்டு எப்படி இருக்கு-னு சொல்லுங்கண்ணா...]]]

    கனகு.. தமிழ் டைப்பிங்.. வாழ்த்துக்கள்..!

    கொல கொலயா.. பார்க்கலாம்..!

    ReplyDelete
  14. [[[எறும்பு said...

    //சகோதரிகள் இருவரும் வீட்டிலேயே கால் சட்டை, அரை டிராயரில் உலா வருவதைப் பார்த்தால் இப்படியொரு இடம் கிடைத்தால், வீட்டோடு மாப்பிள்ளையாக போய் விடலாம் போலத் தோன்றியது.//

    //உடன் ஆடும் பெண்ணின் அனாடமி பற்றி கேபிள் சங்கர் நிச்சயம் எழுதுவார்//

    மேலே உள்ள இரண்டு வாக்கூமூலத்திலும் முரண்பாடு உள்ளது. ஏதாவது ஒண்ணுதான் சரியாய் இருக்கும்.

    புரியவில்லை என்றால் மெயில் அனுப்பவும்.]]]

    நல்லாவே புரியுது..!

    எனக்கு ஏத்தாப்புல இருந்தது முன்னது..

    கேபிளுக்கு ஏத்தாப்புல இருக்கிறது பின்னது..!

    ReplyDelete
  15. [[[பேநா மூடி said...
    `சன் டீவிக்கு இருக்கும் தொழில் சாமர்த்தியம் ராஜுக்கு இல்லையோ.]]]

    நிச்சயமா..

    அந்த அளவுக்கு இருந்திருந்தா இவங்க ஏன் இன்னமும் ஏழாவது இடத்துலேயே உக்காந்திருக்கப் போறாங்க..?

    ReplyDelete
  16. [[[Mrs.Menagasathia said...

    //சகோதரிகள் இருவரும் வீட்டிலேயே கால் சட்டை, அரை டிராயரில் உலா வருவதைப் பார்த்தால் இப்படியொரு இடம் கிடைத்தால், வீட்டோடு மாப்பிள்ளையாக போய்விடலாம்போலத் தோன்றியது.//

    உங்களுக்கு ரொம்பதான் ஆசை அண்ணா...]]]

    ரொம்பத் தப்பான ஆசைதாம்மா..!

    பார்த்தவுடனேயே மனசுல பட்டதை சொல்லிரணும்னு நினைச்சேன். சொல்லிட்டேன்..!

    பெரிய மனசு பண்ணி மன்னிச்சிரு..!

    ReplyDelete
  17. [[[சதீஷ் said...

    “படம் சக்ஸஸ் ஸார்..” என்று எங்கிருந்தோ வந்த சவுண்ட்டை கேட்டு திரும்பிப் பார்த்து கும்பிட்டு நன்றி சொல்லிவிட்டுப் போனார் விவேக்.

    இது நல்ல காமெடி. ஆமா இந்த மாதிரி படங்களையெல்லாம் எப்படி தேடிக் கண்டு பிடித்து பார்க்கிறீர்கள்?]]]

    தொழிலே இதுதானே சதீஷ்..? நல்லாயிருக்கோ.. இல்லையோ.. பார்த்துதான் ஆகணும்.. எனக்கு வேற வழியில்லை..!

    ReplyDelete
  18. [[[【♫ஷங்கர்..】 ™║▌│█│║││█║▌║ said...

    /சகோதரிகள் இருவரும் வீட்டிலேயே கால் சட்டை, அரை டிராயரில் உலா வருவதைப் பார்த்தால் இப்படியொரு இடம் கிடைத்தால், வீட்டோடு மாப்பிள்ளையாக போய்விடலாம்போலத் தோன்றியது//

    முருகப் பெருமான் அருளட்டும்//
    பத்து லட்சம் ஹிட்ஸ்கு பார்ட்டி எப்பண்ணே?:)]]]

    அடுத்த வாரம் இருபது லட்சமாயிரும்.. அப்போ..!

    ReplyDelete
  19. தொழிலே இதுதானே சதீஷ்..? நல்லாயிருக்கோ.. இல்லையோ.. பார்த்துதான் ஆகணும்.. எனக்கு வேற வழியில்லை..!
    :( or :) ?

    சகோதரிகள் இருவரும் வீட்டிலேயே கால் சட்டை, அரை டிராயரில் உலா வருவதைப் பார்த்தால் இப்படியொரு இடம் கிடைத்தால், வீட்டோடு மாப்பிள்ளையாக போய்விடலாம்போலத் தோன்றியது

    Be careful, you might end up wearing nightie or an apron:)

    ReplyDelete
  20. Aen Unmai Thamizan,

    Ithu mathiri Mokkai padathuku ellam vimarsanam ezhuthiye aaganumgurudu enna kattayama.

    ReplyDelete
  21. ஹி ஹி....தெரியும் நீங்களும் ஒரு மொக்கை படம்
    போவீங்கன்னு....

    பேசாம நாம மொக்கை படம் பார்ப்பவர்கள்னு ஒரு சங்கம்
    ஆரம்பிச்சுருவமோ??

    ReplyDelete
  22. நல்ல விமர்சனம். உண்மை தன்மை அப்பப்ப பாட்டி இப்படி இருந்தால் நல்லா இருக்குமே.இப்படி இருக்கும் வீட்டில் இருக்க வேண்டும் என்ற வசனம் சுவைகூட்டுகிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. மொக்க படத்துக்கு விமர்சனம் படிச்சு நாளாச்சுண்ணே

    ReplyDelete
  24. மணிஜீ...... said...

    /சகோதரிகள் இருவரும் வீட்டிலேயே கால் சட்டை, அரை டிராயரில் உலா வருவதைப் பார்த்தால் இப்படியொரு இடம் கிடைத்தால், வீட்டோடு மாப்பிள்ளையாக போய்விடலாம்போலத் தோன்றியது//

    முருகப்பெருமான் அருளட்டும்

    ரிப்பிடேஏஏஏய்

    ReplyDelete
  25. ராஜ் டிவி தனது சீரியல் பாணியில் படம் எடுப்பதை எப்போதும் விட மாட்டார்கள் போலிருக்கிறதே... சரி அவர்களுக்கும் சன் டிவியுடன் போட்டி போட ஏதாவது படம் பண்டிகை நாட்களில் போட உதவும் இது....

    ஜமாய்க்கட்டும்...... கூடவே விவேக்குக்கு ஜமாய்டா ராஜா ஜமாய்...

    ReplyDelete
  26. "இப்படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி". இது இப்பொழுதெல்லாம் ரொம்ப சாதாரண வசனமாகப் போய்விட்டது. எந்த நடிகரும் அவர் படம் ஹிட்ன்னு சொல்லுராங்கோ.

    ReplyDelete
  27. /*கனகு.. தமிழ் டைப்பிங்.. வாழ்த்துக்கள்..!*/
    அண்ணா... ஆபிஸ்-ல இருந்து கமெண்ட் பண்ணா தான் இங்கிலிஷ் டைப் பண்ணுவேன்.. அங்க தமிழ் சாப்ட்வேர் இல்ல...

    வீட்ல எப்பவுமே தமிழ் தான் :)

    ReplyDelete
  28. [[[tamil said...

    தொழிலே இதுதானே சதீஷ்..? நல்லாயிருக்கோ.. இல்லையோ.. பார்த்துதான் ஆகணும்.. எனக்கு வேற வழியில்லை..!

    :( or :) ?

    பொழப்பு சினிமாத் துறைக்குள்ளத்தாண்ணே இருக்கு.. அதுதான்..!

    ReplyDelete
  29. [[[subramanian said...
    Aen Unmai Thamizan, Ithu mathiri Mokkai padathuku ellam vimarsanam ezhuthiye aaganumgurudu enna kattayama.]]]

    இல்லைதான்.. ஆனாலும் பார்த்தே ஆகணும்னு ஒரு விதி இருக்கு. அதுனால பார்த்துட்டு சும்மா இருக்க முடியலையே..!

    ReplyDelete
  30. [[[ஜெட்லி said...
    ஹி ஹி தெரியும் நீங்களும் ஒரு மொக்கை படம் போவீங்கன்னு....

    பேசாம நாம மொக்கை படம் பார்ப்பவர்கள்னு ஒரு சங்கம்
    ஆரம்பிச்சுருவமோ??]]]

    சங்கமா..? மறுபடியுமா..? ஐயா சாமி ஜெட்லி.. ஆளை விடு..

    மறுபடியும் மிதி வாங்க நான் தயாரில்லை..!

    ReplyDelete
  31. [[[மதுரை சரவணன் said...
    நல்ல விமர்சனம். உண்மை தன்மை அப்பப்ப பாட்டி இப்படி இருந்தால் நல்லா இருக்குமே. இப்படி இருக்கும் வீட்டில் இருக்க வேண்டும் என்ற வசனம் சுவை கூட்டுகிறது. வாழ்த்துக்கள்.]]]

    நன்றி மதுரை சரவணன்.. என் பெயரும் சரவணன்தான்..!

    ReplyDelete
  32. [[[கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...
    மொக்க படத்துக்கு விமர்சனம் படிச்சு நாளாச்சுண்ணே.]]]

    இப்பப் படிச்சிட்டீங்களாக்கும்..!

    ReplyDelete
  33. [[[நேசமித்ரன் said...

    மணிஜீ...... said...

    /சகோதரிகள் இருவரும் வீட்டிலேயே கால் சட்டை, அரை டிராயரில் உலா வருவதைப் பார்த்தால் இப்படியொரு இடம் கிடைத்தால், வீட்டோடு மாப்பிள்ளையாக போய்விடலாம்போலத் தோன்றியது//

    முருகப்பெருமான் அருளட்டும்

    ரிப்பிடேஏஏஏய்]]]

    அப்பாடா.. இப்படியாச்சும் நம்ம வீட்டுக்கு வந்தீங்களே.. ரொம்ப சந்தோஷம்ண்ணே..!

    ReplyDelete
  34. [[[Rafiq Raja said...

    ராஜ் டிவி தனது சீரியல் பாணியில் படம் எடுப்பதை எப்போதும் விட மாட்டார்கள் போலிருக்கிறதே... சரி அவர்களுக்கும் சன் டிவியுடன் போட்டி போட ஏதாவது படம் பண்டிகை நாட்களில் போட உதவும் இது....

    ஜமாய்க்கட்டும். கூடவே விவேக்குக்கு ஜமாய்டா ராஜா ஜமாய்...]]]

    ஏதோ பொழுது போவுது ரபீக்.. ஒண்ணும் தப்பில்ல..!

    ReplyDelete
  35. [[[பித்தன் said...
    "இப்படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி". இது இப்பொழுதெல்லாம் ரொம்ப சாதாரண வசனமாகப் போய்விட்டது. எந்த நடிகரும் அவர் படம் ஹிட்ன்னு சொல்லுராங்கோ.]]]

    அப்பத்தான அவருக்கு மார்க்கெட் ரேட் ஏறும்..!

    இது விளம்பர, வியாபார யுத்தி பித்தன்ஜி..!

    ReplyDelete
  36. [[[kanagu said...

    /*கனகு.. தமிழ் டைப்பிங்.. வாழ்த்துக்கள்..!*/

    அண்ணா... ஆபிஸ்-ல இருந்து கமெண்ட் பண்ணாதான் இங்கிலிஷ் டைப் பண்ணுவேன்.. அங்க தமிழ் சாப்ட்வேர் இல்ல... வீட்ல எப்பவுமே தமிழ்தான்:)]]]

    ஓ.. அப்படியா.. ரொம்ப சந்தோஷம் கனகு..!

    ReplyDelete
  37. உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
    http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html

    ReplyDelete
  38. [[[ஜெயந்தி said...
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
    http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html]]]

    விருது கொடுத்த புண்ணியவதியே நீ வாழ்க..!

    ReplyDelete