Pages

Friday, May 28, 2010

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-28-05-2010

28-05-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்றைக்கு முதலிலேயே கேசரி

ஜாஸ்மின் - பத்தாம் வகுப்பில் முதலிடம்

இந்த வருட பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் சற்று ஆச்சரியத்தை அளித்திருக்கின்றன. மாநகராட்சி பள்ளிகளில் கல்வித் தரம் குறைவாகத்தான் இருக்கும் என்ற பொதுஜன நினைப்பில் மண்ணைத் தூவியிருக்கிறார் ஜாஸ்மின் என்னும் மாணவி.

நெல்லை டவுன் மாநகராட்சி கல்லணை மேல்நிலைப்பள்ளி மாணவியான ஜாஸ்மின், 495 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் முதல் மாணவியாகி அசத்தியிருக்கிறார். அவருடைய தந்தை வீடு, வீடாகச் சென்று துணிகள் விற்பனை செய்பவராம். தான் நன்கு படித்து கம்ப்யூட்டர் என்ஜினியரிங் படித்து அதன் பின் ஐ.ஏ.எஸ். படித்து எங்களது குடும்பத்தைக் காப்பாற்றுவேன். இதுதான் எனது லட்சியம் என்று டிவி பேட்டியில் அந்த மாணவி சொன்னதைக் கேட்டு அசந்து போனேன்.. ம்.. பொறுப்புள்ள மகளாகவும் அந்தப் பெண் வளர்ந்து வருகிறாள். வாழ்த்துகிறேன்..

கூடவே ஜாஸ்மின் படித்த பள்ளியின் ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. இப்போதெல்லாம் மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்கத்தான் மிடில் கிளாஸ் குடும்பங்களில் போட்டா போட்டி நடக்கிறது.. சென்ற வருடம் கோடம்பாக்கம் மாநகராட்சி விண்ணப்பங்கள் வந்த கியூ சாலையையும் தாண்டி நின்று கொண்டிருந்ததை பார்த்தேன்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்.. நல்லதுதான்..

இட்லி

கருணாநிதி - ஆர்.எம்.வீரப்பன் கள்ளத் தொடர்பு..

“நாங்க திட்டுற மாதிரி திட்டுவோம்.. அடிக்கிற மாதிரி அடிப்போம்.. அழுகுற மாதிரி அழுவோம்.. இதையெல்லாம் உண்மைன்னு நினைச்ச உங்களை நினைச்சா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது”ன்னு மறுபடியும் ஒரு லட்சத்தி ஒண்ணாவது தடவையா தமிழினத் தலைவர் நம்மை முட்டாளாக்கியிருக்கிறார்.

எம்.ஜி.ஆருடன் ஆர்.எம்.வீரப்பன் இருந்தபோதும்” என்னோடு கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். அப்போதும் என் மீது மாசற்ற அன்பையும், பாசத்தையும் கொட்டியவர் வீரப்பன்” என்று புளகாங்கிதமடைந்து புல்லரிக்கும் வகையில் வீரப்பனின் மகன் திருமணத்தில் பேசியுள்ளார்.

“வேல் திருடி வீரப்பனை பதவியில் இருந்து நீக்கம் செய். அவரை கைது செய்து சிறையில் அடை.. தமிழ் மக்களின் முழு முதற் கடவுளான முருகப் பெருமானின் வேலைத் திருடி சினிமா எடுக்கும் வீரப்பனே உனக்கெதுக்கு மந்திரி பதவி..?” - இப்படியெல்லாம் கோஷமிட்டபடியே ஒரு காலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்களை கால் வலிக்க மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு நடந்தே அழைத்துச் சென்ற இந்த மாமேதை.. இன்றைக்கு தாங்கள் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். இதையும் ஒரு கூட்டம் கூடி கை தட்டி ஆரவாரம் செய்திருக்கிறது. இப்படியொரு ஆட்டு மந்தைகள் இருக்கின்றவரையில் இவரை மாதிரியான ஆட்கள் எதுவும் பேசலாம்.

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை மட்டும்தான் மலம் துடைக்கப் பயன்படுத்தலாம் என்றில்லை. இவர் மாதிரியான அறிவுச் சுரங்கங்கள் எது பேசினாலும், இனிமேல் அவற்றை அதற்கே பயன்படுத்தலாம். தப்பில்லை..

தோசை

கனகவேல் காக்க - விமர்சனமா எழுதுற..?

ஏதோ பிளாக்குல வர்ற சினிமா விமர்சனங்களை படிச்சிட்டுத்தான் பொதுமக்கள் அத்தனை பேரும் சினிமாவுக்குப் போறாங்கன்னு எல்லாருக்கும் நினைப்பா அல்லது மாயப்பிரமையான்னு தெரியலை.

பத்திரிகைகளில் கடுமையான விமர்சனத்தை வைத்தால்கூட எதுவும் பேசாமல் இருப்பவர்கள், வலைத்தளங்களில் எழுதிவிட்டால் உடனேயே புருவத்தை உயர்த்துகிறார்கள். கோபப்படுகிறார்கள்.

நான் எழுதிய கனகவேல் காக்க திரைப்படத்தின் விமர்சனத்தைப் படித்துவிட்டு ஒருவர் போனில் அழைத்தார். 

“நீங்கதான் உண்மைத்தமிழனா?”
“ஆமா.. நீங்க..?”
“நான் கனகவேல் காக்க புரொடியூஸர் பேசுறேன்.. என்னங்க எழுதியிருக்கீங்க விமர்சனம்னு..”

-    இப்படி ஆரம்பித்து சட்டென்று லைன் கட்டானது.

நான் சுதாரித்து நிற்பதற்குள் மறுபடியும் அழைப்பு.. இம்முறை நான் “ஹலோ.. ஹலோ” என்று சொல்ல மறுமுனையில் பதிலே இல்லை. இதுபோல அன்றைக்கே மூன்று முறை அழைப்பு வருவதும், நான் தொண்டை கிழிய “ஹலோ.. ஹலோ” என்று சொல்வதுமாக ஓய்ந்தது.

அன்றைக்குத்தான் என்று நினைத்தேன். அது இன்றுவரையிலும் தொடர்வதுதான் எனது சோகம்.. மூன்று நாட்களாகத் தொடர்ந்து காலையில் 11.15 மணிக்கு போன் வரும். நான் “ஹலோ” என்பேன். மறுமுனையில் பேச்சே வராது. கட் செய்வார்கள். மீண்டும் அழைப்பு வரும். எடுத்தால் மீண்டும் மெளனம்.

சரி நாம அடிச்சுப் பார்ப்போம்னு செஞ்சா ரிங் போகவே மாட்டேங்குது.. என்னன்னு தெரியலை.. நம்பர் வேணுமா - 442081180048. இதுதான். இது எந்த ஊர் நம்பர்னு தெரியலை. ஆனா அவர் அடிச்சா எனக்கு வருது. நான் அடிச்சா போக மாட்டேங்குது.. இன்னாடா இது சோதனை..? முருகன் விதவிதமா சோதனையைக் கொடுக்குறான் பாருங்க..

வடை

அட்சயத் திரிதியை - அள்ளிக்கோ தங்கத்தை..!

இந்த அட்சயத் திரிதியை என்கிற வார்த்தை மிகச் சமீபமாக ஒரு ஐந்தாண்டு காலத்திற்குள்தான் தமிழக மக்கள் கேட்டுத் தெரிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இதற்கு முன்னர் கேள்விப்பட்டதே இல்லை.

அன்றைய தினத்தில் நகை வாங்கினால் குடும்பத்திற்கு நல்லது என்று எந்த புண்ணியவான் பரப்பிவிட்டானோ அவன் தலையில் சத்தியமாக இடிதான் விழ வேண்டும்.

பணத்தைக் கொண்டு போய் கொட்டினால் நகைக்கடைக்காரர்களுக்கு லாபம். அவர்கள் விளம்பரம் கொடுக்கும் டிவிக்காரர்களுக்கு கொழுத்த லாபம்.. பக்கம், பக்கமாக விளம்பங்களை வாங்கிக் குவிக்கும் பத்திரிகையாளர்களுக்கும் செம லாபம்.. இந்த மூன்று பேரும் கூட்டணி அமைத்துக் கொண்டு நம் மக்கள் முழித்திருக்கும்போதே அவர்கள் தலையை மொட்டையடிக்கிறார்கள்.

அன்றைய காலையில் தி.நகரில் கூட்டமே இல்லை. ஆனால் அனைத்து தொலைக்காட்சிகளும் சொல்லி வைத்தாற்போல் “தி.நகரில் கூட்டம் அலை மோதுகிறது.. போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது” என்று ஏகத்துக்கும் பில்டப் கொடுத்து வாங்கின காசுக்கு மேலேயே கூவிவிட்டார்கள்.

இனி நான்காவது எஸ்டேட் என்கிற பெயரைத் தூக்கிப் போட்டுவிட்டு அரசியல்வியாதிகள் லிஸ்ட்டிலேயே இந்த மீடியாக்களையும் சேர்த்துவிடலாம்.. வேறு வழியே இல்லை..

பொங்கல்

குஷ்புவால் ஆடிப் போன ஜெயா டிவி

குஷ்புவின் திடீர் முடிவால் இன்றுவரையிலும் ஜெயா டிவி அதிர்ச்சியுடன்தான் இருக்கிறது. “இதுகூட தெரியாம என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க ஆபீஸ்ல?” என்று டாப் லெவல் பார்ட்டிகளுக்கு கார்டனில் இருந்து போனிலேயே மசாஜ் நடந்திருக்கிறது.

அதிர்ச்சியானவர்கள் நம்ப முடியாமல் இருந்ததற்குக் காரணம்.. குஷ்பு தி.மு.க.வில் சேர்கின்ற அதே நாள், அதே நேரத்தில் ஜெயா டிவிக்கு வந்து அவருடைய அடுத்த பிராஜெக்ட்டுக்காக அக்ரிமெண்ட்டில் கையெழுத்துப் போடுகிறேன் என்று சொல்லியிருந்தாராம்.

இதற்காக அந்த அக்ரிமெண்ட்டையெல்லாம் பக்காவாக எடுத்து வைத்துக் காத்துக் கொண்டிருந்த டிவி பெரிசுகளுக்கு, கலைஞர் செய்திகளில் வந்த ஸ்கிரால் நியூஸை பார்த்து நெஞ்சு வலி வராத குறை.

“இத்தனை நாட்கள் நல்லாத்தான போய்க்கிட்டிருந்துச்சு.. நல்ல கவுரவமாத்தானே வைச்சிருந்தோம். எம்.டி. கார் நிறுத்துற இடத்துல இவர் காரையும் நிறுத்திக்குற அளவுக்கு உரிமை இருந்துச்சே.. ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிருக்கலாமே..” என்று தயாரிப்பு தரப்பு முனங்கினாலும், எடுத்து கையில் வைத்திருக்கும் 15 எபிசோடுகளுக்கான சம்பளப் பட்டுவாடாவில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.

“அதென்ன ஜூஜூபி சம்பளம்..? வாங்க.. அதுக்கு மேலேயே கவனிக்கிறோம்” என்று அறிவாலயத்தில் கிடைத்த உறுதிமொழியுடனேயே அடைக்கலமாகியிருப்பதால் குஷ்புவுக்கு இதில் கவலைப்பட ஏதுமில்லை..

ரவாதோசை

ஸ்டார் ஹிந்தி சேனலின் டான்ஸ் புரோகிராம்

ஒரு நாள் சேனல் சேனலாக மாற்றிக் கொண்டே வரும்போது ஸ்டார் சம்பந்தப்பட்ட ஒரு சேனலில் ஏதோ ஒரு டான்ஸ் புரோகிராம். அனைவரும் ராஜாக்கள் டிரெஸ்ஸில், தர்பார் செட்டப்பில் அமர்ந்திருந்தார்கள். சரி. ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே பார்க்கலாம் என்று உட்கார்ந்தால்..

சனியனே கண்ணுக்குள் வந்து உக்கார்ற மாதிரி ஒரு கான்செப்ட்.. மகாபாரதத்துல திரெளபதியின் சேலையை உருவுற மாதிரி சீனு.. இதுல நடிச்ச நடிகை ஏதோ வீர வசனத்தை பாடியபடியே ஆட.. துச்சாதனனாக நடித்தவர் நிஜமாகவே சேலையை முழுவதுமாக உருவி தனது கழுத்தில் போட்டுக் கொண்டு கெத்தாக பார்க்க.. அந்த நடிகை அப்போதும் விடாமல் விரிந்து கிடந்த கூந்தலை அள்ளி முடியும் சபதத்தை எடுக்கின்றவரையில் அப்படியே டான்ஸ் ஆடிக் காட்டிவிட்டுத்தான் உள்ளே போனார். என்ன கொடுமைடா இதுன்னு யோசிக்கிறதுக்குள்ள.. தொடர்ந்து வந்த இன்னொரு கோஷ்டியும் இதே மாதிரி ஒரு டான்ஸை ஆடிக் காட்டுச்சு. அப்புறம் இன்னொரு கோஷ்டி..

போதுமடா சாமி.. இனிமே இந்த நாட்டுல எத்தனை கோயில் கட்டினாலும் சரி.. எம்புட்டு தடவை விழுந்து விழுந்து கும்பிட்டாலும் சரி.. நாடு நாஸ்திதான்..

ஸ்பெஷல் தோசை

குழந்தைக்கு அம்மாவின் இன்ஷியல் - மும்பை கல்வித்துறை

தமிழ்நாட்டில் இந்த மாதிரியான வசதிகள் இருக்கிறதா என்று தெரியவில்லை. மிகச் சமீபத்தில் மும்பை கல்வித்துறை மாணவர்களின் டி.சி.யில் அவர்களுக்கு பெயருக்கு இன்ஷியலாக அவர்களது தாயாரின் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதியளித்துள்ளது.

அப்பாவின் பெயரையே இன்ஷியலாக வைப்பது வழிவழியாக நம்ம வீட்ல நடக்குறதுதான். ஒரு வித்தியாசமா அம்மா பெயரை வைக்கலாமே என்றுகூட என் வீட்டில் யாரும் யோசித்ததில்லை. தமிழ்நாட்டில் பலரும் வைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

அம்மாவின் பெயரையே தனது பெயருக்கு முன்னால் சேர்த்து வைத்துக் கொண்டவர்களும் உண்டு. அங்காடித் தெரு இயக்குநர் வசந்தபாலனின் அம்மா பெயர் வசந்தா. தனது தாயார் மீதிருக்கும் அதீத அன்பு காரணமாகத்தான் வெறும் பாலனாக இருந்த அவர் வசந்தாவையும் சேர்த்துக் கொண்டு உச்சரிப்புக்காக வசந்தபாலனாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

இன்ஷியலில் முக்கியத்துவம் கொடுப்பதினால் பெண்கள் மீதான மரியாதையும், அணுகுமுறையும் நமது சமூகத்தில் நிச்சயம் மாறும். இதைவிட சிறந்த வழி இன்ஷியலில் அம்மாவின் பெயரையும், அப்பாவின் பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்.. எதுக்கு அப்பாவையும் விடணும்..? அவங்களும் பாவமில்லையா..?

சட்னி

உலகக் கோப்பை கால்பந்து

இப்போதுதான் டி-20 மேட்ச்சுகள் முடிந்து நள்ளிரவில் தூங்கப் போய் மறுநாள் அலுவலகத்தில் நீண்ட கொட்டாவி விட்டுக் கொண்டேயிருந்தது முடிவுக்கு வந்தது.. அடுத்த அட்டகாசம் அடுத்த மாதம் 11-ம் தேதி துவங்குகிறது.

உலகக் கோப்பை கால்பந்து.. பூமிப்பந்தின் நான்கில் ஒரு பங்கு ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் இந்த விளையாட்டு தென் ஆப்பிரிக்காவின் அடுத்த பத்தாண்டுகளுக்குத் தேவையான பொருளாதார வசதியை ஏற்படுத்தி கொடுக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை.

வரக்கூடிய லட்சக்கணக்கான ரசிகர்களின் வசதிக்காக தென் ஆப்பிரிக்கா தயாராகிவரும் சூழலில் புதிதாக தலைநகர் ஜோஹன்னஸ்பர்க்கில் பிச்சைக்காரர்களே கண்ணில்படக்கூடாது. அத்தனை பேரையும் கண் காணாத இடத்திற்கு கொண்டு போய்விட்டுவிடுங்கள் என்று உத்தரவாகிவிட்டதாம். கூடவே பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

பிச்சைக்காரர்களுக்கு சங்கம் இல்லை என்பதால் நாய் பிடிக்கிற வேன் மாதிரி போலிஸ் வேனில் அள்ளிக் கொண்டு போவதை பி.பி.ஸி. சுவாரசியமாகக் காட்டியது. அதே நேரத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்களோ, “நாங்க என்ன பாவம் செஞ்சோம்..? அதான் காண்டம் இல்லாம யாரையும் பக்கத்துல வர விட மாட்டோம்னு சொல்லிட்டோம்ல.. அப்புறமென்ன..? நாங்களும் இந்த சீசன்ல நாலு காசு பார்த்தாத்தான பொழைக்க முடியும்..” என்று போர்க்கொடி தூக்கி ஆர்ப்பாட்டமான ஊர்வலம் நடத்தியதையும் காட்டினார்கள்.

ஆனாலும் அரசு தனது தரப்பில் உறுதியுடன் இருக்கிறது. இந்த கால்பந்து திருவிழாவுக்காக உலகம் முழுவதிலும் இருக்கின்ற காண்டம் தயாரிக்கின்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை லட்சக்கணக்கில் வாங்கிக் குவித்திருக்கிறது தென்னாப்பிரிக்க அரசு. இதற்கு ஐ.நா.வும் நிதியுதவி செய்திருக்கிறதாம்.

“என்ன இருந்தாலும் இவங்களை நம்ப முடியாது.. கடைசி நேரத்துல நிறைய ஆளை பிடிக்கணும்னு நினைச்சு அவசர, அவசரமா காரியத்துல இறங்கினாங்கன்னு வைங்க.. இங்க வந்து போற கால்பந்து ரசிகர்கள்ல நாலு பேருல ஒருத்தருக்கு எய்ட்ஸ் நிச்சயம்..” என்றார் பேட்டியளித்த ஒரு அதிகாரி.

இதற்கெல்லாம் ஒரே வழியாக என் யோசனை.. அனைத்துப் போட்டிகளையும் விடிய, விடிய இரவிலேயே நடத்திவிட்டால் என்ன? இந்தத் தொல்லையும் இல்லை. விடிஞ்சாலும் தூக்கக் கலக்கத்துல தூங்கணும்னு நினைச்சு பாதிப் பேரு ரூம்ல அடைஞ்சு கிடப்பாங்கள்ல.. ஏதோ எனக்கு வந்த யோசனையைச் சொல்றேன்.. புரிஞ்சுக்கிட்டு நடந்தா தென்னாப்பிரிக்க அரசுக்கு நல்லது. என் பேச்சைக் கேட்கலைன்னா போய்ச் சாவுங்க.. எனக்கென்ன..?

சாம்பார்

ராஜபுதன இளவரசி காயத்ரி தேவி

“உசிர் இழுத்துக்கிட்டு இருந்தாலும் பரவாயில்லை.. ஆளு வீட்ல இருந்தாத்தான் மருவாதை” அப்படீன்னு நம்மூர் பெரிசுக சொல்லிக் கேள்விப்பட்டிப்பீங்க.. அப்படித்தான் நடந்திருக்கு ராஜஸ்தான்ல..

இந்தியாவின் கவர்ச்சிக் கன்னியாகவும், ராஜபுதன அழகிகளில் முதலிடத்தைப் பிடித்தவருமான ராணி காயத்ரிதேவி சமீபத்தில்தான் முருகனடி சேர்ந்தார். அவர் இருந்த காலம்வரையிலும் அவருடைய சொந்தங்களுக்கும், அவருக்குமிடையில் மிச்சம், மீதி இருக்கின்ற கோட்டைகளும், கொத்தளங்களும் யாருக்குச் சொந்தம் என்பதில் சண்டை, சச்சரவுகள் இருந்து கொண்டேயிருந்தன.

ஒரு வழியாக அம்மா போய்ச் சேர்ந்தவுடன் சொத்துத் தகராறு ஏற்பட்டு நம்மூர் ஹரி படத்து வெட்டுக் குத்துக்கு அஞ்சாத அளவுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டு மாநில, மத்திய அரசுகள் தலையிட்டு கூல் செய்து வைத்திருக்கின்றன.

இதில் இப்போது அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது காயத்ரி தேவி உயிரோடு இருந்தபோது அவருக்காகவே, அவருடனேயே வாழ்ந்து வந்த சில குடும்பங்கள்தான். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அரண்மனையை ஒட்டிய வீடுகளில் குடியிருந்து காயத்ரிக்கு கார் ஓட்டிய டிரைவர்களின் வீடுகள், காயத்ரியின் செயலாளராக இருந்தவர்களின் வீடுகள், பணிப்பெண்களின் வீடுகள், அரண்மனையில் வேலை பார்த்தவர்களின் வீடுகள் என்று அனைத்தையும் ஒரே நாளில் தரை மட்டமாக்கி அவர்களை வெளியேற்றியிருக்கிறார்கள்.

பாவம் அந்த பெண்கள்.. ராஜ விசுவாசத்தோடு இறுதிவரையில் உடன் இருந்ததற்கு அடையாளமாக அந்த ராணியின் விலைமதிக்க முடியாத புன்னகை தாங்கிய புகைப்படத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு விசும்பலுடன் முக்காடு போட்டுக் கொண்டு போவதைக் காண்பித்தபோது எனக்கு விசுக்கென்றுதான் இருந்தது.

ராஜ விசுவாசத்திற்குக் கூடவா நாட்டில் நன்றியில்லாமல் போய்விட்டது..? என்ன கொடுமை சரவணா இது..?

இடியாப்பம்

அடுத்த ரவுண்ட் மாலைப் பத்திரிகை

ஏதோ 'மாலை முரசு', 'மாலை மலர்', 'தமிழ் முரசு' என்று மாலை பத்திரிகைகள் கொஞ்சம் கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றன. இவைகளிலும் யார் முந்தி, யார் பிந்தி என்றெல்லாம் கலாட்டாக்கள் நடந்து கொண்டிருக்க சந்தேகமேயில்லாமல் தமிழ் முரசு முந்தி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் துணை முதல்வரின் வீட்டு மாப்பிள்ளை மற்றொரு மாலை பத்திரிகையை சப்தமில்லாமல் விலைக்கு வாங்கி காலத்திற்கேற்றாற்போல் வடிவமைப்பை மாற்றும் டிங்கரிங் வேலைகளை செய்து வருகிறார்.

மிக விரைவில் 'மாலைச்சுடரை' கையில் ஏந்தியபடியே தளபதியின் குடும்ப உறுப்பினர்கள் போஸ் கொடுக்கும் விளம்பரம் கலைஞர் தொலைக்காட்சியில் வருவது உறுதி..

அப்போ 'தமிழ் முரசு' சொல்றதெல்லாம் பொய்யுன்னு விளம்பரம் வருமா..?

பில்ட்டர் காபி

ஒரு கல்யாணம் - உறவு முறை குழப்பம்

விரைவில் ஒரு திருமணம் ஊரறிய நடக்கப் போகிறது. வாழ்த்தலாம் என்று நினைப்பதற்குள் ஏதோ ஒரு பொறி தட்ட.. குழப்பம்தான் ஏற்பட்டது. நீங்களாவது தீர்த்து வையுங்களேன்.

ஏ என்பவரின் அக்கா மகளுக்கும், அதே ஏ-யின் மனைவியின் உடன்பிறந்த அண்ணனுக்கும் திருமணம்..

இது சரியான உறவு முறைதானா..? எனக்கு சந்தேகம்.. உங்களுக்கு..?
 
சாம்பார் இட்லி

பார்த்ததில் பிடித்தது

67 comments:

  1. //அம்மாவின் பெயரையும், அப்பாவின் பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்..//

    ஒரு பெயர் வைத்தாலே பாஸ்போர்ட் போன்ற இடங்களில் ரொம்ப சிரமம். இதில் இரண்டு பெயரெல்லாம் வைத்தால் அலுவலகம் உட்பட பல இடங்களில் கண்ணை கட்டி விடும். முடிந்த வரை குழந்தை பெயரையும் சிறியதாக வைக்க முயற்சிப்பதே தற்போது நல்லது.

    ReplyDelete
  2. உங்களுக்கு Indiaglitz தான் ரொம்ப பிடிக்குமா எப்போதும் அங்கே இருந்தே படங்கள் தருகிறீர்கள் ;-)

    ReplyDelete
  3. நல்ல டிபன் நன்றிண்ணே! :)

    ReplyDelete
  4. காலையிலே நல்ல அருமையான டிபன்

    ReplyDelete
  5. சூப்பர் டிபன் ..!! நீங்க இந்த மாதிரி பொதுவான ப்ளாக் எழுதுங்க. தயவு செய்து திரை விமரிசனம் வேண்டாம். .

    //நம்பர் வேணுமா - 442081180048. இதுதான். இது எந்த ஊர் நம்பர்னு தெரியலை. ஆனா அவர் அடிச்சா எனக்கு வருது. // - அண்ணா அந்த நம்பர் UK நம்பர் ஆக இருக்கலாம். 44 UK விற்கான ISD கோடு.அவர் internet வழியாக போன் செய்து இருக்கலாம்.

    ReplyDelete
  6. Mother initial facility in Tamilnadu was brought during Jayalalitha rule itself.

    I too like Mani and Suhasini photo

    ReplyDelete
  7. //அன்றைக்குத்தான் என்று நினைத்தேன். அது இன்றுவரையிலும் தொடர்வதுதான் எனது சோகம்.. மூன்று நாட்களாகத் தொடர்ந்து காலையில் 11.15 மணிக்கு போன் வரும். நான் “ஹலோ” என்பேன். மறுமுனையில் பேச்சே வராது. கட் செய்வார்கள். மீண்டும் அழைப்பு வரும். எடுத்தால் மீண்டும் மெளனம்.

    சரி நாம அடிச்சுப் பார்ப்போம்னு செஞ்சா ரிங் போகவே மாட்டேங்குது.. என்னன்னு தெரியலை.. நம்பர் வேணுமா - 442081180048. இதுதான். இது எந்த ஊர் நம்பர்னு தெரியலை. ஆனா அவர் அடிச்சா எனக்கு வருது. நான் அடிச்சா போக மாட்டேங்குது.. இன்னாடா இது சோதனை..? முருகன் விதவிதமா சோதனையைக் கொடுக்குறான் பாருங்க..//


    இது லண்டனிலிருந்து வருகின்ற நம்பர் போல் உள்ளது. இன்டெர்நெட் மூலமாக உங்களுக்கு அவர் அடித்திருக்கலாம். ஆனால் உங்களால் அந்த நம்பருக்கு அடிக்க முடியாது அதனால் யாரென்று அறிந்து கொள்ளவும் இயலாது.

    இந்த பிரச்சினை உங்களுக்கு மட்டுமல்ல கீழ்காணும் சுட்டிக்கு சென்று பாருங்களேன்

    http://whocallsme.com/Phone-Number.aspx/442081180048

    ReplyDelete
  8. உண்மை தமிழன் அண்ணே...

    அது லண்டன் நம்பர்.... இது ஒரு வகையான இண்டெர்நெட் கனெக்க்ஷன் தொலைபேசி அழைப்பு... skype call மாதிரி.....

    ReplyDelete
  9. உறவுமுறை இருக்கட்டும்.. யாருங்க அது . ?

    ReplyDelete
  10. சென்னை ஸில்க்ஸ், நல்லி குமரன் சரவணாஸ்ன்னு எக்கசக்கமாப் புடவைக்கடைகள் இருந்தும் த்ரௌபதிக்குப் புடவை கிடைக்கலையா.... டூ பேட்:(

    ReplyDelete
  11. டிபன் ஹெவி. இனி ராத்திரி சாப்டுக்கலாம்:))

    ReplyDelete
  12. [[[கிரி said...

    //அம்மாவின் பெயரையும், அப்பாவின் பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்..//

    ஒரு பெயர் வைத்தாலே பாஸ்போர்ட் போன்ற இடங்களில் ரொம்ப சிரமம். இதில் இரண்டு பெயரெல்லாம் வைத்தால் அலுவலகம் உட்பட பல இடங்களில் கண்ணை கட்டி விடும். முடிந்தவரை குழந்தை பெயரையும் சிறியதாக வைக்க முயற்சிப்பதே தற்போது நல்லது.]]]

    இன்ஷியலைத்தாண்ணே சொன்னேன்..!

    ReplyDelete
  13. [[[கிரி said...
    உங்களுக்கு Indiaglitz தான் ரொம்ப பிடிக்குமா எப்போதும் அங்கே இருந்தே படங்கள் தருகிறீர்கள் ;-)]]]

    இது மாதிரியான சுவையான புகைப்படங்கள் அங்கு மட்டும்தான் கிடைக்கின்றன கிரியாரே..!

    ReplyDelete
  14. [[[♫ஷங்கர்..】 ™║▌│█│║││█║▌║ said...

    நல்ல டிபன் நன்றிண்ணே! :)]]]

    வயிறு ரொம்பினா எனக்கும் சந்தோஷம்தான் தம்பி..!

    ReplyDelete
  15. [[[அத்திரி said...
    காலையிலே நல்ல அருமையான டிபன்]]]

    பில் வரும்டி மவனே..!

    ReplyDelete
  16. [[[K Gowri Shankar said...

    சூப்பர் டிபன் ..!! நீங்க இந்த மாதிரி பொதுவான ப்ளாக் எழுதுங்க. தயவு செய்து திரை விமரிசனம் வேண்டாம்..]]]

    பரிசீலிக்கிறேன் கெளரி..

    //நம்பர் வேணுமா - 442081180048. இதுதான். இது எந்த ஊர் நம்பர்னு தெரியலை. ஆனா அவர் அடிச்சா எனக்கு வருது. // -

    அண்ணா அந்த நம்பர் UK நம்பர் ஆக இருக்கலாம். 44 UK விற்கான ISD கோடு.அவர் internet வழியாக போன் செய்து இருக்கலாம்.]]]

    அப்படித்தான் என்று நிறைய நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்..!

    ReplyDelete
  17. [[[Sudhar said...
    Mother initial facility in Tamilnadu was brought during Jayalalitha rule itself.

    I too like Mani and Suhasini photo]]]

    ஓ.. அப்படியா.. சட்ட அனுமதியாக இருந்தால் எனக்கும் சந்தோஷம்தான்..!

    ReplyDelete
  18. [[[Karikal@ன் - கரிகாலன் said...

    //அன்றைக்குத்தான் என்று நினைத்தேன். அது இன்றுவரையிலும் தொடர்வதுதான் எனது சோகம்.. மூன்று நாட்களாகத் தொடர்ந்து காலையில் 11.15 மணிக்கு போன் வரும். நான் “ஹலோ” என்பேன். மறுமுனையில் பேச்சே வராது. கட் செய்வார்கள். மீண்டும் அழைப்பு வரும். எடுத்தால் மீண்டும் மெளனம்.

    சரி நாம அடிச்சுப் பார்ப்போம்னு செஞ்சா ரிங் போகவே மாட்டேங்குது.. என்னன்னு தெரியலை.. நம்பர் வேணுமா - 442081180048. இதுதான். இது எந்த ஊர் நம்பர்னு தெரியலை. ஆனா அவர் அடிச்சா எனக்கு வருது. நான் அடிச்சா போக மாட்டேங்குது.. இன்னாடா இது சோதனை..? முருகன் விதவிதமா சோதனையைக் கொடுக்குறான் பாருங்க..//

    இது லண்டனிலிருந்து வருகின்ற நம்பர் போல் உள்ளது. இன்டெர்நெட் மூலமாக உங்களுக்கு அவர் அடித்திருக்கலாம். ஆனால் உங்களால் அந்த நம்பருக்கு அடிக்க முடியாது அதனால் யாரென்று அறிந்து கொள்ளவும் இயலாது.

    இந்த பிரச்சினை உங்களுக்கு மட்டுமல்ல கீழ்காணும் சுட்டிக்கு சென்று பாருங்களேன்

    http://whocallsme.com/Phone-Number.aspx/442081180048]]]

    கரிகாலன்.. தங்களுடைய உதவிக்கு மிக்க நன்றிகள்..!

    என்னை மாதிரியே நிறைய சோகக்காரர்கள் உலகத்தில் இருக்கிறார்கள் போலிருக்கிறதே..!

    ReplyDelete
  19. [[[தமிழ் உதயன் said...

    உண்மை தமிழன் அண்ணே அது லண்டன் நம்பர். இது ஒரு வகையான இண்டெர்நெட் கனெக்க்ஷன் தொலைபேசி அழைப்பு. skype call மாதிரி.]]]

    மிக்க நன்றி தமிழ் உதயன் தம்பி..!

    ReplyDelete
  20. [[[கே.ஆர்.பி.செந்தில் said...
    உறவு முறை இருக்கட்டும்.. யாருங்க அது.?]]]

    சொல்ல மாட்டனே..!!!

    ReplyDelete
  21. யாருங்கண்ணே அந்த “ஏ” ?

    ReplyDelete
  22. ய்ய்யாவ்... பெரிய ஏப்பம் விட்டேன்...டிபன் சூப்பர்
    கடைசியா சொன்ன அந்த திருமணத்துல பொண்ணுங்க பையன் என்ன முறை வேணும்... குழப்பமா இருக்கு...

    ReplyDelete
  23. கேசரி ரொம்ப நன்றாக இருந்தது. :)

    ReplyDelete
  24. //ஏ என்பவரின் அக்கா மகளுக்கும், அதே ஏ-யின் மனைவியின் உடன்பிறந்த அண்ணனுக்கும் திருமணம்..//

    ஏ என்பவருக்கு அக்கா மகள் என்றால், ஏ என்பவருக்கு மணப்பெண் மாமன் மகள். ஏ-யின் மனைவின் அண்ணன் என்றால் மணமகன் ஏ என்பவருக்கு மாமன் மகன், சரியா? இவருக்கு அவ்விரு குடும்பத்தினரும் மாமன் வகை உறவுகள் என்றால், இவருக்கு மட்டும் தானே அந்த வகை உறவு. அவர்கள் எப்படி அண்ணன், தங்கை முறை ஆவார்கள்?.அந்த இரு குடும்பத்தினருக்கும் எந்த இரத்த சம்பந்தமும் இல்லையே?.
    மேலும், இதில் கூட்டம், வகையறா, கோத்திரம் போன்றவைகள்தாம் முக்கியம். ஒரே கோத்திரம் கொண்டவர்களே அண்ணன் தம்பி வகையறா உறவு கொண்டவர்கள்.
    ஆகவே இதில் எந்தக் குழப்பமும் இல்லை! :)

    சொந்தத்தில் பெண் எடுப்பது, கொடுப்பது போன்றவைகளில் இப்படி சுத்திச்சுத்திதான் வரும்.

    ReplyDelete
  25. " ஏ என்பவரின் அக்கா மகளுக்கும், அதே ஏ-யின் மனைவியின் உடன்பிறந்த அண்ணனுக்கும் திருமணம். இது சரியான உறவு முறைதானா..? எனக்கு சந்தேகம்
    "
    உங்க சந்தேகத்தை தெளிவா நான் தீர்த்து வைக்கிறேன் ,,, ஆனா ஒரு கண்டிஷன். பார்ட்டி யாரு ன்னு நீங்க சொல்லணும்... யாருன்னு யோசிச்சு எனக்கு தலைவலி வந்துருச்சு

    ReplyDelete
  26. இட்லி:
    அரசியல்ல இதல்லாம் சாதாரணம் அப்பா !

    டிபன் திண்ணாச்சி, தண்ணிர் யார் தருவாங்க!!!

    ReplyDelete
  27. கடைசியாக "சாம்பார் இட்லி" னு போட்டு இருக்கீங்க, ஆனால் சப்பாத்தி போல தெரிகிறது ... ஏவ்..... :)

    ReplyDelete
  28. //இதற்காக அந்த அக்ரிமெண்ட்டையெல்லாம் பக்காவாக எடுத்து வைத்துக் காத்துக் கொண்டிருந்த டிவி பெரிசுகளுக்கு, கலைஞர் செய்திகளில் வந்த ஸ்கிரால் நியூஸை பார்த்து நெஞ்சு வலி வராத குறை.//

    தொழிலையும்,தனிப்பட்ட விசயத்தையும் ஒன்றாக கலக்காதே-முந்தைய மொழி

    தொழிலையும்,அரசியலையும் ஒன்றாக கலக்காதே-குஷ்பு மொழி

    ReplyDelete
  29. //“இத்தனை நாட்கள் நல்லாத்தான போய்க்கிட்டிருந்துச்சு.. நல்ல கவுரவமாத்தானே வைச்சிருந்தோம். எம்.டி. கார் நிறுத்துற இடத்துல இவர் காரையும் நிறுத்திக்குற அளவுக்கு உரிமை இருந்துச்சே..//

    கார் நிறுத்தறதுல கூட தராதரமா?விளங்கிடும்.பார்கிங்க் கிடைக்கிற இடத்துல டபக்குன்னு உள்ள நுழையுறவங்களுக்கு சிரிப்புதான் வரும்:)

    ReplyDelete
  30. டிபன் சூப்பரகயிருக்குண்ணா...

    //அன்றைக்குத்தான் என்று நினைத்தேன். அது இன்றுவரையிலும் தொடர்வதுதான் எனது சோகம்.. மூன்று நாட்களாகத் தொடர்ந்து காலையில் 11.15 மணிக்கு போன் வரும். நான் “ஹலோ” என்பேன். மறுமுனையில் பேச்சே வராது. கட் செய்வார்கள். மீண்டும் அழைப்பு வரும். எடுத்தால் மீண்டும் மெளனம்.
    // என்ன கொடுமை இது இப்படி வேற நடக்குதா????

    //ஏ என்பவரின் அக்கா மகளுக்கும், அதே ஏ-யின் மனைவியின் உடன்பிறந்த அண்ணனுக்கும் திருமணம்..

    இது சரியான உறவு முறைதானா..? எனக்கு சந்தேகம்.. உங்களுக்கு..
    // சரின்னு தான் தோனுது..தப்பா இருந்தா திட்டாதீங்க யாரும்....

    ReplyDelete
  31. //இதற்கெல்லாம் ஒரே வழியாக என் யோசனை.. அனைத்துப் போட்டிகளையும் விடிய, விடிய இரவிலேயே நடத்திவிட்டால் என்ன?//

    அது பற்றியெல்லாம் நினைப்ப அப்புறம் தள்ளி விட்டு உர்ருன்னு தொலைக்காட்சில சிவராத்திரி,நேரடியா நவராத்திரி கொண்டாடுபவனே உலக கோப்பை கால்பந்தாட்ட ரசிகன்.

    ReplyDelete
  32. \\எனக்கு வந்த யோசனையைச் சொல்றேன்.. புரிஞ்சுக்கிட்டு நடந்தா தென்னாப்பிரிக்க அரசுக்கு நல்லது. என் பேச்சைக் கேட்கலைன்னா போய்ச் சாவுங்க.. எனக்கென்ன..///

    இதை மண்டேலாக்கு அனுப்பி வைங்க அண்ணே.. அப்படியே ஜோகனஸ்பார்க்ல நடக்குற முதல் போட்டி அன்னைக்கு ஒரு கல்வெட்டில் இதை செதுக்கி வச்சு பக்கத்துல உக்காந்துகோங்க, உங்களுக்கு பின்னாடி வர சங்கதிகள் அதை பார்த்து படிச்சு தெரிஞ்சிபாங்க.. ஹி ஹி ஹி

    ReplyDelete
  33. அண்ணே எல்லா அயிட்டமும் நல்லா இருந்துச்சு...

    சாம்பார் இட்லி - நுண்ணரசியல். ரசித்தேன். :-)

    ReplyDelete
  34. //குழந்தை பெயரையும் சிறியதாக வைக்க முயற்சிப்பதே தற்போது நல்லது/
    சரியான வார்த்தை.
    Skype ல இருந்து கூப்பிட்டிருக்காங்க. மறுபடியும் விளையாட்ட ஆரம்பிச்சுட்டாங்க போலிருக்கே

    ReplyDelete
  35. [[[துளசி கோபால் said...
    சென்னை ஸில்க்ஸ், நல்லி குமரன் சரவணாஸ்ன்னு எக்கசக்கமாப் புடவைக் கடைகள் இருந்தும் த்ரௌபதிக்குப் புடவை கிடைக்கலையா.... டூ பேட்:(]]]

    இருக்கு டீச்சர். இருந்தாலும் இவங்க கொடுக்க மாட்டாங்க..!

    அப்புறம் துச்சாதனன் டயர்டாயிருவான்ல.. அதுதான்..!

    ReplyDelete
  36. [[[வானம்பாடிகள் said...
    டிபன் ஹெவி. இனி ராத்திரி சாப்டுக்கலாம்:))]]]

    அப்பாடா.. இது போதும் எனக்கு..!

    கவிஞருக்கு நிறைவு தர வைப்பது எவ்வளவு கடினம்..?

    ReplyDelete
  37. [[[மணிஜீ...... said...
    யாருங்கண்ணே அந்த “ஏ” ?]]]

    சற்றுப் பொறுங்கண்ணே.. தெரியத்தானே போகுது..!

    ReplyDelete
  38. [[[நாஞ்சில் பிரதாப் said...
    ய்ய்யாவ். பெரிய ஏப்பம் விட்டேன். டிபன் சூப்பர் கடைசியா சொன்ன அந்த திருமணத்துல பொண்ணுங்க பையன் என்ன முறை வேணும். குழப்பமா இருக்கு.]]]

    அதுனாலதான் உங்ககிட்ட கேட்டேன். நீங்களும் குழப்பம்னு சொன்னா எப்படி..?

    ReplyDelete
  39. [[[Vidhoosh(விதூஷ்) said...
    கேசரி ரொம்ப நன்றாக இருந்தது. :)]]]

    நன்றிங்கோ மேடம்..!

    ReplyDelete
  40. [[[நல்லதந்தி said...

    //ஏ என்பவரின் அக்கா மகளுக்கும், அதே ஏ-யின் மனைவியின் உடன்பிறந்த அண்ணனுக்கும் திருமணம்..//

    ஏ என்பவருக்கு அக்கா மகள் என்றால், ஏ என்பவருக்கு மணப்பெண் மாமன் மகள். ஏ-யின் மனைவின் அண்ணன் என்றால் மணமகன் ஏ என்பவருக்கு மாமன் மகன், சரியா?]]

    அப்படியானால் ஏ-யின் அக்கா மகள் ஏ-யின் மனைவியை அக்கா என்றுதான் அழைப்பார். அந்த அக்காவின் அண்ணனை எப்படி அழைப்பார்..? அண்ணன் என்றுதானே.. இதில் எப்படி மாமா என்று வரும்..!

    அத்தை என்கிற வார்த்தை வயதைப் பொறுத்துதான் வரும்..! கல்யாண வயதில் இருக்கும் பெண், தனது தாய் மாமன் மனைவியை அத்தை என்று அழைப்பதில்லை என்பது வழக்கமானதுதானே..!

    ReplyDelete
  41. [[[பார்வையாளன் said...

    "ஏ என்பவரின் அக்கா மகளுக்கும், அதே ஏ-யின் மனைவியின் உடன்பிறந்த அண்ணனுக்கும் திருமணம். இது சரியான உறவு முறைதானா..? எனக்கு சந்தேகம்"

    உங்க சந்தேகத்தை தெளிவா நான் தீர்த்து வைக்கிறேன். ஆனா ஒரு கண்டிஷன். பார்ட்டி யாருன்னு நீங்க சொல்லணும். யாருன்னு யோசிச்சு எனக்கு தலைவலி வந்துருச்சு.]]]

    மொதல்ல சரியா? தவறா என்பதை ஆதாரத்துடன் சொல்லுங்கள்.

    பின்பு ஆள் யாருன்னு நான் சொல்றேன்..!

    ReplyDelete
  42. [[dearbalaji said...
    இட்லி: அரசியல்ல இதல்லாம் சாதாரணம் அப்பா !
    டிபன் திண்ணாச்சி, தண்ணிர் யார் தருவாங்க!!!]]]

    டியர் பாலாஜி.. என் அறிவுக் கண்ணைத் தொறந்திட்டீங்க..!

    அடுத்தப் பந்தில தண்ணிக்குன்னு தனியா ஒரு மேட்டர் போட்டுர்றேன்..!

    நன்றிங்கண்ணா..!

    ReplyDelete
  43. [[[Pragul Raj said...
    கடைசியாக "சாம்பார் இட்லி"னு போட்டு இருக்கீங்க, ஆனால் சப்பாத்தி போல தெரிகிறது. ஏவ்..... :)]]]

    அப்படியா..? சரி.. இந்த தடவை மட்டும் கண்ணை மூடிக்கிட்டு, சகிச்சிக்கிட்டு சாப்பிட்டு முடிச்சிருங்க..!

    ReplyDelete
  44. [[[ராஜ நடராஜன் said...

    தொழிலையும், தனிப்பட்ட விசயத்தையும் ஒன்றாக கலக்காதே-முந்தைய மொழி தொழிலையும், அரசியலையும் ஒன்றாக கலக்காதே-குஷ்பு மொழி]]]

    அப்படீங்கிறீங்க.. சரிதான்..!

    ReplyDelete
  45. [[[ராஜ நடராஜன் said...

    //“இத்தனை நாட்கள் நல்லாத்தான போய்க்கிட்டிருந்துச்சு.. நல்ல கவுரவமாத்தானே வைச்சிருந்தோம். எம்.டி. கார் நிறுத்துற இடத்துல இவர் காரையும் நிறுத்திக்குற அளவுக்கு உரிமை இருந்துச்சே..//

    கார் நிறுத்தறதுலகூட தராதரமா? விளங்கிடும். பார்கிங்க் கிடைக்கிற இடத்துல டபக்குன்னு உள்ள நுழையுறவங்களுக்கு சிரிப்புதான் வரும்:)]]]

    அப்புறம். அறிவாலயத்துல கலைஞர் கார் நிக்குற இடத்துல ஆளே நிக்க முடியாது.. அதே மாதிரிதான்..!

    ReplyDelete
  46. Mrs.Menagasathia said...

    டிபன் சூப்பரகயிருக்குண்ணா...

    //அன்றைக்குத்தான் என்று நினைத்தேன். அது இன்றுவரையிலும் தொடர்வதுதான் எனது சோகம்.. மூன்று நாட்களாகத் தொடர்ந்து காலையில் 11.15 மணிக்கு போன் வரும். நான் “ஹலோ” என்பேன். மறுமுனையில் பேச்சே வராது. கட் செய்வார்கள். மீண்டும் அழைப்பு வரும். எடுத்தால் மீண்டும் மெளனம்.//

    என்ன கொடுமை இது இப்படி வேற நடக்குதா????]]]

    அப்புறம்.. இதெல்லாம் எங்க பொதுவுலக வலையுலக வாழ்க்கையல சகஜம்மா..!

    //ஏ என்பவரின் அக்கா மகளுக்கும், அதே ஏ-யின் மனைவியின் உடன்பிறந்த அண்ணனுக்கும் திருமணம்.. இது சரியான உறவு முறைதானா..? எனக்கு சந்தேகம்.. உங்களுக்கு..//

    சரின்னுதான் தோனுது..தப்பா இருந்தா திட்டாதீங்க யாரும்....]]]

    ஆனா எப்படி சரின்னு சொல்லியிருந்தா கொஞ்சம் சந்தோஷப்பட்டிருப்பேன்..!

    ReplyDelete
  47. [[[ராஜ நடராஜன் said...

    //இதற்கெல்லாம் ஒரே வழியாக என் யோசனை.. அனைத்துப் போட்டிகளையும் விடிய, விடிய இரவிலேயே நடத்திவிட்டால் என்ன?//

    அது பற்றியெல்லாம் நினைப்ப அப்புறம் தள்ளிவிட்டு உர்ருன்னு தொலைக்காட்சில சிவராத்திரி, நேரடியா நவராத்திரி கொண்டாடுபவனே உலக கோப்பை கால்பந்தாட்ட ரசிகன்.]]]

    -)))))))))))))))

    ReplyDelete
  48. [[[~~Romeo~~ said...

    \\எனக்கு வந்த யோசனையைச் சொல்றேன்.. புரிஞ்சுக்கிட்டு நடந்தா தென்னாப்பிரிக்க அரசுக்கு நல்லது. என் பேச்சைக் கேட்கலைன்னா போய்ச் சாவுங்க.. எனக்கென்ன..///

    இதை மண்டேலாக்கு அனுப்பி வைங்க அண்ணே.. அப்படியே ஜோகனஸ்பார்க்ல நடக்குற முதல் போட்டி அன்னைக்கு ஒரு கல்வெட்டில் இதை செதுக்கி வச்சு பக்கத்துல உக்காந்துகோங்க, உங்களுக்கு பின்னாடி வர சங்கதிகள் அதை பார்த்து படிச்சு தெரிஞ்சிபாங்க.. ஹி ஹி ஹி]]]

    தம்பி ரோமியோ..

    உன் அன்பைக் கண்டு மெச்சினோம்..! ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டு பூரிப்படைந்தோம்..!

    நன்றி..!

    ReplyDelete
  49. [[[ரோஸ்விக் said...
    அண்ணே எல்லா அயிட்டமும் நல்லா இருந்துச்சு. சாம்பார் இட்லி - நுண்ணரசியல். ரசித்தேன். :-)]]]

    மிக்க நன்றி தம்பி..!

    ReplyDelete
  50. நீங்க நல்ல சரக்கு மாஸ்டர்..

    வாரம் இரு முறை போடவும்..

    ReplyDelete
  51. கேசரியும் இட்லியும் ரொம்ப நன்னாயிருக்கு பேஷ் பேஷ்

    ReplyDelete
  52. [[[ILA(@)இளா said...

    //குழந்தை பெயரையும் சிறியதாக வைக்க முயற்சிப்பதே தற்போது நல்லது/

    சரியான வார்த்தை.]]]

    இப்ப அதைத்தான செஞ்சுக்கிட்டிருக்காங்க..! இன்ஷியலைத்தான் இரண்டா வைச்சுக்கலாம்னு சொல்றேன்..!

    [[[Skype ல இருந்து கூப்பிட்டிருக்காங்க. மறுபடியும் விளையாட்ட ஆரம்பிச்சுட்டாங்க போலிருக்கே]]]

    ம்..

    ReplyDelete
  53. [[[butterfly Surya said...

    நீங்க நல்ல சரக்கு மாஸ்டர்..

    வாரம் இரு முறை போடவும்..]]]

    நன்றி சூர்யாண்ணே..!

    வாரம் ஒரு முறைதான் நன்றாக இருக்கும்..!

    ReplyDelete
  54. [[[நீச்சல்காரன் said...
    கேசரியும் இட்லியும் ரொம்ப நன்னாயிருக்கு பேஷ் பேஷ்]]]

    மிக்க நன்றி நீச்சல்காரன் ஸார்..!

    ReplyDelete
  55. ஏ என்பவருக்கு அக்கா மகள் என்றால், ஏ என்பவருக்கு மணப்பெண் மாமன் மகள். ஏ-யின் மனைவின் அண்ணன் என்றால் மணமகன் ஏ என்பவருக்கு மாமன் மகன், சரியா? இவருக்கு அவ்விரு குடும்பத்தினரும் மாமன் வகை உறவுகள் என்றால், இவருக்கு மட்டும் தானே அந்த வகை உறவு. அவர்கள் எப்படி அண்ணன், தங்கை முறை ஆவார்கள்?.அந்த இரு குடும்பத்தினருக்கும் எந்த இரத்த சம்பந்தமும் இல்லையே?.
    மேலும், இதில் கூட்டம், வகையறா, கோத்திரம் போன்றவைகள்தாம் முக்கியம். ஒரே கோத்திரம் கொண்டவர்களே அண்ணன் தம்பி வகையறா உறவு கொண்டவர்கள்.
    ஆகவே இதில் எந்தக் குழப்பமும் இல்லை! :)

    சொந்தத்தில் பெண் எடுப்பது, கொடுப்பது போன்றவைகளில் இப்படி சுத்திச்சுத்திதான் வரும்.

    அது சரி தான். ஏன்னா அருண் விஜய் சொந்தத்துல கல்யாணம் பண்ணலை இல்லியா.
    இது பத்தி யோசிக்காமயா அவங்க முடிவு பண்ணி இருப்பாங்க ?

    http://www.indiaglitz.com/channels/tamil/article/57308.html

    ReplyDelete
  56. [[[அது சரிதான். ஏன்னா அருண் விஜய் சொந்தத்துல கல்யாணம் பண்ணலை இல்லியா. இது பத்தி யோசிக்காமயா அவங்க முடிவு பண்ணி இருப்பாங்க?
    http://www.indiaglitz.com/channels/tamil/article/57308.html]]]

    ஆஹா.. கண்டு பிடிச்சிட்டீங்களா..?

    ஆனாலும் பொதுவாக இந்துக்களில் இது பற்றி ரொம்பவே யோசிப்பார்கள்..!

    அதனால்தான் கேட்டேன்..!

    ReplyDelete
  57. சம்பந்தபட்டவங்களே சரிதான்னு பண்றாங்கன்னு சொன்னேன்

    ReplyDelete
  58. [[[SUPRIYAATHIYAGU said...
    சம்பந்தபட்டவங்களே சரிதான்னு பண்றாங்கன்னு சொன்னேன்.]]]

    சரிதான்.. அந்த சரிதான் சரிதானான்னுதான் எனக்கு டவுட்..

    அதுனால உங்ககிட்ட கொடுத்து சரி பார்க்கச் சொன்னேன்..!

    ReplyDelete
  59. கேசரியும் இட்லியும் சூப்பர்.....

    ReplyDelete
  60. மாநகராட்சி பள்ளியில படிச்ச பொண்ணு முதல் மார்க்கா??? உண்மையிலேயே சந்தோஷப்பட வேண்டிய விஷயம்ண்ணா... :) :)
    கருணாநிதி எல்லாரையும் நல்லாவே முட்டாள் ஆக்கிட்டி இருக்கார்... இதுக்கும் கைய தட்டிக்க வேண்டியது தான் :(
    விமர்சனம் எழுதுனா போன் போட்டெல்லாமா மிரட்டுறாங்க... பாத்து பத்திரமா இருங்கண்ணா...
    டான்ஸ் ஷோ எல்லாம் மக்களா தூண்டும் விதமா இருக்கு :( :(
    உறவுமுறைல எல்லாம் நான் கொஞ்சம் வீக் அண்ணா...

    இந்த வாட்டி பிரேக்ஃபாஸ்ட் சூப்பர் :)

    ReplyDelete
  61. வயது சரியாக இருந்தால் கட்டிக் கொள்ளும் முறை தான்..

    நன்றி..

    ReplyDelete
  62. காலை உணவுக்கு ராத்திரியில் தான் நன்றி தெரிவிக்க முடிந்தது..

    நன்றி,..

    ReplyDelete
  63. [[[சுடர்விழி said...
    கேசரியும் இட்லியும் சூப்பர்.....]]]

    தங்களுடைய முதல் வருகைக்கு மிக்க நன்றி சுடர்விழி..!

    ReplyDelete
  64. [[[kanagu said...

    மாநகராட்சி பள்ளியில படிச்ச பொண்ணு முதல் மார்க்கா??? உண்மையிலேயே சந்தோஷப்பட வேண்டிய விஷயம்ண்ணா... :) :)

    கருணாநிதி எல்லாரையும் நல்லாவே முட்டாள் ஆக்கிட்டி இருக்கார்... இதுக்கும் கைய தட்டிக்க வேண்டியதுதான் :(

    விமர்சனம் எழுதுனா போன் போட்டெல்லாமா மிரட்டுறாங்க... பாத்து பத்திரமா இருங்கண்ணா...

    டான்ஸ் ஷோ எல்லாம் மக்களா தூண்டும் விதமா இருக்கு :( :(

    உறவு முறைல எல்லாம் நான் கொஞ்சம் வீக் அண்ணா...

    இந்த வாட்டி பிரேக்ஃபாஸ்ட் சூப்பர் :)]]]

    இதுக்குப் பேரு பின்னூட்டமா..?

    யாராவது திட்டுங்களேம்ப்பா..!

    ReplyDelete
  65. [[[பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
    வயது சரியாக இருந்தால் கட்டிக் கொள்ளும் முறைதான்..
    நன்றி..]]]

    அப்படீங்களா..? ஓகே..! இதுக்கு மேல சொல்றதுக்கு என்ன இருக்கு..?

    ReplyDelete