Pages

Monday, April 19, 2010

ஜெயலலிதாவின் இந்த நோட்ஸ்களை வைத்தும் நடவடிக்கை எடுங்கள் மிஸ்டர் பிரைம்மினிஸ்டர்..!

19-04-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

"வந்தாரை வாழ வைத்த தமிழ்நாடு" இனி தன் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

தமிழ்நாட்டுக்கென்றே இருந்த தனி மரியாதையையும், சிறப்பையும் தனி மனிதர் ஒருவரின் சுயநலத்தால் இழந்து போய் நிற்கிறோம்.


பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் ஏற்கெனவே பல ஆண்டுகள் தமிழகத்தில் திருச்சியில் வசித்தவர். அவருடைய புதல்வர் பிரபாகரன் தனி ஈழத்தின் முதல் தேசியத் தலைவராக தனியாட்சி நடத்திக் கொண்டிருந்தபோதே அந்த அம்மையார் தமிழ்நாட்டில்தான் இருந்தார்.



பிரபாகரன் என்ன தவறு வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும்.. அதைப் பற்றி இப்போது பேச்சில்லை. இந்த 76 வயது அம்மையார் என்ன பாவம் செய்தார்..? தமிழச்சியாக பிறந்தது பாவமா..? அல்லது பிரபாகரனை பெற்றெடுத்ததுதான் பாவமா..?

மூச்சுக்கு மூச்சு "தமிழுக்காக உயிரைக் கொடுப்பேன்.. தமிழர்களுக்காகத் தலையைக் கொடுப்பேன்" என்று சவுடால்விட்ட முதல்வர், இன்றைக்குச் சட்டசபையில் வாந்தியெடுத்திருக்கிறார்.. அதே தமிழில்தான்.. "பார்வதியம்மாள் தமிழகத்திற்கு வந்ததே தனக்குத் தெரியாது..! என்று.. நாம் தமிழர்கள் அனைவரும் நமது நெஞ்சில் அடித்துக் கொள்ளலாம் இந்த ஒரு வார்த்தையைக் கேட்டுவிட்டும் நாம் இன்னமும் உயிரோடு இருப்பதற்காக.. கிராமப்புறங்களில் சாவு வீட்டில் பெண்கள் தங்களது நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுவார்கள் பாருங்கள்.. அதுபோல்..

ஒரு முதலமைச்சராக இருப்பவருக்கே இது தெரியாது எனில் இவர் எதற்காக முதலமைச்சர் பதவியில் வெட்கமில்லாமல் இருக்கிறார் என்பதை யாரேனும் கேட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும்.

இவருக்கே தெரியாது என்றால் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டுக்கு மட்டும் எப்படி தெரிந்ததாம்..? வைகோவும், நெடுமாறனும் முறைப்படி அனுமதிச் சீட்டை வாங்கிக் கையில் வைத்திருந்தும் விமான நிலையத்திற்குள் அனுமதிக்க மறுத்து ரவுடித்தனம் செய்த காவல்துறையை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தது ஜாங்கிட்தானே..

ஒரு மாநிலத்தில் ஒரு நகர கமிஷனருக்குத் தெரிந்திருக்கும் விஷயம்கூட அந்த மாநிலத்தின் முதலமைச்சருக்குத் தெரியவில்லை என்றால் இதைவிட வெட்கக்கேடு வேறென்ன இருக்க முடியும்..? இப்படியெல்லாம் தமிழர்கள் நினைக்க மாட்டார்களா என்றுகூட யோசிக்காமல் அண்டப்புழுகை வீசியிருக்கிறாரே இந்த 86 வயது முதியவர்.. இவரை என்ன பெயர் வைத்துத்தான் இனிமேல் அழைப்பது. உலக மகா பொய்யன்..!

"அவசரப்பட்டு விசா கொடுத்துவிட்டீர்கள்.. ஏன் எங்களிடம் முன்பே கருத்து கேட்கவில்லை. வந்தால் உங்களுக்குத்தான் பிரச்சினை.. பரவாயில்லையா..?" என்று தமிழக அரசின் தரப்பிலிருந்து மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை சென்ற பிறகுதான், மத்திய அரசு திருப்பியனுப்பும் முடிவை நடத்திக் காட்டியிருப்பதாக டெல்லி பத்திரிகையாளர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் சொல்கிறார்கள்.

"அந்த அம்மாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டு தினம்தோறும் அவருடைய உடல்நல அறிக்கையை அறிவித்து அனைத்துக் கட்சிகளும் மீண்டும் இலங்கை பிரச்சினையைக் கையில் எடுப்பார்கள். கோவை உலகத் தமிழ் மாநாட்டு சமயத்தில் இதை வைத்தே ஏதேனும் பிரச்சினை வரும்.. அனுமதிக்காதீர்கள்.." என்ற ஸ்ட்ராங்கான அட்வைஸ் கோபாலபுரத்தில் இருந்துதான் சென்றிருக்கிறது.

இரண்டு அரசுகளுக்குமே இப்போது இலங்கை பிரச்சினை வேப்பங்காய் என்பதால், தூக்கி சாக்கடையில் வீசிவிட்டார்கள் அந்த மூதாட்டியை.

வழக்கம்போல கட்சிகளுக்குள் இதை வைத்து சடுகுடுவும் ஆரம்பமாகிவிட்டது.

வைகோவும், நெடுமாறனும் பிரபாகரனின் அண்ணன் மனோகரனின் மூலமாக பார்வதியம்மாவுக்கு சிகிச்சையளிக்க சென்னைக்கு அழைத்து வரும் வேலைகளை ரகசியமாக செய்து முடித்ததாகச் செய்தி. இதில் கூட்டாளிகளாகத் தங்களை அழைக்காததால் ராமதாஸும், தொல்.திருமாவும் கோபத்தில் இருக்கிறார்கள்.

அதிலும் மேல்சபை வரப் போகிறது. சும்மா இருக்கும் முந்திரிக்காடு தளபதிகளை அதில் தள்ளிவிட அரசுத் தரப்பின் உதவி வேண்டும். இப்போதுதான் ஐயா கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார். கூடவே மாநிலங்களவை எம்.பி. பதவியும் தொங்கலில் நிற்கிறது.. போயஸ்கார்டன் பக்கமும் போக முடியாது.. அம்மா பந்த் விஷயத்தை பகிரக்கூட நம்மை அழைக்கவில்லை. எனவே ஐயாவைப் பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டி மத்திய அரசையும் கண்டிக்கவில்லை. மாநில அரசையும் கண்டிக்கவில்லை என்று ரெண்டுங்கெட்டாத்தனமாக ஒரு அறிக்கையை விட்டிருக்கிறார் ராமதாஸ். கூடவே ஒரு நம்பிக்கையும் வேறு.. கருணாநிதிக்கு இது தெரியாது என்றே இவர் நம்புகிறாராம்.. இவரை நம்புகிறவர்களை நாம் நம்பக்கூடாது என்பது தெளிவாகத் தெரிகிறது.

தொல்.திருமாவோ ஒரு மாதத்திற்கு முன்பாகவே தன்னைத் தொடர்பு கொண்டு சென்னையில் வைத்து பார்வதியம்மாளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று பலரும் மலேஷியாவில் இருந்து கேட்டுக் கொண்டதாகச் சொல்கிறார். ஆனால் பதிலுக்கு இவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று தெரியவில்லை.

ஆனால் இப்போது "பார்வதி அம்மாளை திருப்பியனுப்பியது யாராக இருந்தாலும் அதனை நியாயப்படுத்த முடியாது" என்று சொல்லி ஜாம் தடவியிருக்கிறார். அம்பேத்கரின் அரசியலில் இருந்து பெரியாரின் அரசியல்வரைக்கும் கிண்டி கிழங்கெடுக்கும் இந்த சிறுத்தைக்கு பார்வதியம்மாள் திருப்பியனுப்பட்ட பின்னணியில் இருந்தது யாரென்று தெரியாதாம்.. நாமும் அதனை நம்ப வேண்டுமாம்..

எப்போதும் நாட்டு நடப்புகள் என்றால் உடனுக்குடன் அறிக்கை விடும் முதல்வர் ஐயா, இரண்டு நாட்களாக அமைதி காத்துவிட்டார். வழக்கமாக வெளிவரும் தானே கேள்வி. தானே பதில்கூட வராததால் பத்திரிகையாளர்கள் குழப்பத்தில் நிற்க,, லேசுபாசாக ஒரு அறிக்கையை பத்திரிகையாளர்களிடம் பரவவிட்டு மேலோட்டம் பார்த்தது ஆட்சி நிர்வாகம். அதனை ஸ்மெல் செய்த மீடியா அதில் இருந்த மேட்டரை படித்து சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் இப்போதுவரைக்கும்.

முன்பு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதுதான் பார்வதியம்மாள் முறைப்படி விசா பெற்று இலங்கைக்குப் பயணமானார். அவரை அனுப்பிய கையோடு அவரை மீண்டும் தமிழகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்று குறிப்பாணையை மத்திய அரசுக்கு அனுப்பினாராம் ஜெயலலிதா.

2003-ம் ஆண்டு எழுதியனுப்பப்பட்ட அந்தக் குறிப்பாணையை இப்போது கையில் எடுத்துத் தூசி தட்டிப் படித்துப் பார்த்து, கண் கலங்கி, அறிவு பெருகி, ஆற்றல் பெற்று, இதன் பிறகுதான் பார்வதி அம்மாளை திருப்பியனுப்ப மத்திய அரசு முடிவெடுத்ததாம்..

சபாஷ்.. 2003-ல் புரட்சித் தலைவி எழுதியனுப்பிய ஒரு 'நோட்'..(இது கோரிக்கைதான்.. வேண்டுதல்தான்..) இதை வைத்து தற்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் அந்தக் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமென்றால்..

"தினகரன் பத்திரிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டு மகன் மு.க.அழகிரியை காப்பாற்றிய தமிழக அரசை டிஸ்மிஸ் செய்..

மத்திய அமைச்சர் ராஜாவின் பல ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்டரம் ஊழலுக்கு உடந்தையாய் இருக்கும் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்..

இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைத்திருக்கும் கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்..

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பொய்யான தகவலையளித்த தமிழக அரசை டிஸ்மிஸ் செய்..

தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்க்க வக்கில்லாத தமிழக அரசை டிஸ்மிஸ் செய்.."

இவைகளெல்லாம் தமிழகத்தின் தற்போதைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவி, முன்னாள் முதலமைச்சர், 2003-ல் 'நோட்' எழுதிக் கொடுத்து, இப்போது உங்களுக்குக் கை கொடுத்திருக்கும் 'கோப்பெருந்தேவி' இந்த நான்காண்டு காலத்தில் எழுப்பியிருக்கும் கோஷங்கள்தான்..

அந்த 'நோட்'டை வைத்து எப்படி நடவடிக்கை எடுத்தீர்களோ.. அதேபோல் இப்போதும் 'போயஸ் ஆத்தா' இந்த மூன்றரை ஆண்டுகளாக எழுப்பிக் கொண்டிருக்கும் இந்த 'நோட்ஸ்'களை வைத்தும் சூடு, சொரணை இருந்தால் நடவடிக்கை எடுங்கள் மிஸ்டர் மன்னமோகனசிங்..!

96 comments:

  1. உண்மைத்தமிழர்கள் என்ன ஊளையிட்டாலும் மஞ்சதுண்டு அரசியல் மட்டுமே செய்வார்... ...

    ReplyDelete
  2. முற்பகல் செய்யின் குறள்தான் ஞாபகம் வருகிறது. இவர்களுக்கும் இப்படி ஒரு நிலை எதிர்காலத்தில் நிச்சயம் வரும். உதவி செய்ய யாருமின்றி சா.....ம்

    //அந்த 'நோட்'டை வைத்து எப்படி நடவடிக்கை எடுத்தீர்களோ.. அதேபோல் இப்போதும் 'போயஸ் ஆத்தா' இந்த மூன்றரை ஆண்டுகளாக எழுப்பிக் கொண்டிருக்கும் இந்த 'நோட்ஸ்'களை வைத்தும் சூடு, சொரணை இருந்தால் நடவடிக்கை எடுங்கள் மிஸ்டர் மன்னமோகனசிங்..!//

    சூடு, சொரணை என்னவென்று அர்த்தமோ (இ) வேறு எழவோ தெரியாததால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

    ReplyDelete
  3. மானம் கெட்ட மண்ணாங்கட்டி களுக்கு இது உரைக்காது அண்ணே !!!!

    ReplyDelete
  4. கருணாநிதிக்கு காரம் தடவி .. அம்மாக்கு ஜாம் தடவி உங்கள் அம்மா பாசம் வாழ்க.. !
    தேசிய தலைவர் தாய் மீது உங்களுக்கு தான் என்ன ஒரு பாசம்.. அடேங்கப்பா ...

    இதுவே அம்மா வின் ஆட்சியில் நடந்திருந்தால் , உங்கள் பதிவு எப்படி இருக்கும் நு நினைச்சேன்.. சிரிப்பு சிறிபா வருது

    வாழ்க புரட்சி தலைவி அம்மா

    ReplyDelete
  5. தமிழன துரோகி கருணாநிதிக்கு ஆட்சி அதிகாரம் தான் முக்கியம் யார் பற்றியும் கவலை இல்லை .

    ReplyDelete
  6. அய்யகோ. கிழத்துக்கு அல்சீமர் வந்துடுச்சோ. சொந்தமெல்லாம் மறந்து போகுமே! யாராவது ஆட்டய போட்டுட்டு போய்டுவாங்களே!இந்தாளையாவது மன்னிக்கலாம், இந்த சிறுமாவ என்ன பண்ணாத் தகும். மனுசனா அவன்.

    ReplyDelete
  7. ரூ.2000 , பிரியாணி மற்றும் சாராயம் வாங்கிக்கொண்டு நாம் நம் வோட்டை இவர்களுக்கு விற்பதை என்றைக்கு நிறுத்துகிரோமோ அன்றைக்குத்தான் நமக்கு இவர்களை கேள்வி கேட்க்கும் அருகதை உண்டு.

    ReplyDelete
  8. ஒருத்தனையும் மன்னிக்கக் கூடாது!

    அதான் பாராளுமன்றத் தேர்தல் முடிஞ்சிடுச்சுல்ல! இனி அடுத்த சட்டசபைத் தேர்தலப்போ இலங்கைத் தமிழன்னு ஒருத்தன் இருந்தான் என்பதை ஞாபகப் படுத்திக் கொண்டால் போதும்!

    ReplyDelete
  9. + போட்டாச்சு!

    உருப்படியான பதிவு!

    ReplyDelete
  10. இன்னுமாடா இந்த ஊரு இவனுங்கள நம்புது..

    இவர்களுக்கு அரசியல் விளையாட்டை எந்த விஷயத்தில் விளையாடுவது என்ற குறைந்தபட்ச அறிவு கூட இருக்காது போலும்.

    ReplyDelete
  11. பார்வதியம்மா திருப்பி அனுப்பப்படக் காரணம் ஜெயலலிதா - திருமாவளவன்
    இந்த அறிய கண்டுபிடிப்பிற்காக நமது குருமாவிற்கு அன்னை சோனியா விருதை கலைஞரின் தங்க கரங்களால் அளிக்க வேண்டும்.

    ReplyDelete
  12. //"அவசரப்பட்டு விசா கொடுத்துவிட்டீர்கள்.. ஏன் எங்களிடம் முன்பே கருத்து கேட்கவில்லை. வந்தால் உங்களுக்குத்தான் பிரச்சினை.. பரவாயில்லையா..?" என்று தமிழக அரசின் தரப்பிலிருந்து மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை சென்ற பிறகுதான் மத்திய அரசு திருப்பியனுப்பும் முடிவை நடத்திக் காட்டியிருப்பதாக டெல்லி பத்திரிகையாளர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் சொல்கிறார்கள்.//

    இந்த உண்மையை நீங்கள் பொதுவுக்கு கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. //இந்த உண்மையை நீங்கள் பொதுவுக்கு கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்.//

    ஆனா இவரைத் தேடி ஆட்டோ வருமாமே!

    ReplyDelete
  14. உண்மை.. தமிழன்!... உண்மைத்தமிழன்!

    பிரபாகர்.

    ReplyDelete
  15. மானங்கெட்ட மாங்கா மடையன்கள்.

    இவர்களின் கேடுகெட்ட அரசியலுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. தமிழர்களுக்கும் பழகிப்போய்விட்டது.

    உருப்படியா தமிழ்நாட்ட நடத்துறதுக்கு இனிமேல் யாராவது வந்தா தான் உண்டு. அதுவும் அடுத்த 50 ஆண்டுகளில் நடக்க சாத்தியமில்லை என்றே தெரிகிறது.

    ReplyDelete
  16. //"அவசரப்பட்டு விசா கொடுத்துவிட்டீர்கள்.. ஏன் எங்களிடம் முன்பே கருத்து கேட்கவில்லை. வந்தால் உங்களுக்குத்தான் பிரச்சினை.. பரவாயில்லையா..?" என்று தமிழக அரசின் தரப்பிலிருந்து மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை சென்ற பிறகுதான் மத்திய அரசு திருப்பியனுப்பும் முடிவை நடத்திக் காட்டியிருப்பதாக டெல்லி பத்திரிகையாளர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் சொல்கிறார்கள்.//

    அதி பயங்கர ரகசியத்தை நாட்டிற்கு அம்பலப்படுத்திய

    இண்டர்போலின் ரகசிய ஏஜண்டே, கே.ஜி.பி.பெற்றெடுத்த கிங்காங்கே
    மொசாத்தின் மூல முதல்வனே

    நின் திசை நோக்கி தொழுகின்றேன்.

    "உண்மைத்தமிழர்கள் என்ன ஊளையிட்டாலும் "

    என்னத்த சொல்ல....

    ReplyDelete
  17. அண்ணே..

    கலைஞர் செஞ்ச தமிழினத் துரோகத்தை எதிர்க்கிற அதே நேரத்தில், நீங்க கடைசியா சொல்லி இருக்கிறது, ஜெயலலிதாவுக்கு சொம்பு தூக்குற மாதிரி இருக்குங்கிறதையும் என்னால மறுக்க முடியலை.

    2002ல முதல்வரா இருந்தப்போ அப்பிடி ஒரு நோட் மத்திய அரசுக்கு ஜெயலலிதா அனுப்பியிருந்தா அதையும் கண்டிக்கனுமே ஒழிய, அதை வச்சி நடவடிக்கை எடுத்த மாதிரி மத்த கோரிக்கைகளையும் நிறைவேத்துன்னு கேக்குறது மடத்தனமா இருக்கு.

    முதல்வரா இருந்து நோட் அனுப்புறதுக்கும் எதிர்க்கட்சியா இருந்து கோரிக்கை வைக்கிறதுக்கும் இருக்குற வித்தியாசத்தை உங்களுக்கு நான் கிளாஸ் எடுக்கணுமா என்ன?

    ReplyDelete
  18. /*
    ஒரு முதலமைச்சராக இருப்பவருக்கே இது தெரியாது எனில் இவர் எதற்காக முதலமைச்சர் பதவியில் வெட்கமில்லாமல் இருக்கிறார் என்பதை யாரேனும் கேட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும்...
    ....
    ....
    ....
    வைகோவும், நெடுமாறனும் பிரபாகரனின் அண்ணன் மனோகரனின் மூலமாக பார்வதியம்மாவுக்கு சிகிச்சையளிக்க சென்னைக்கு அழைத்து வரும் வேலைகளை ரகசியமாக செய்து முடித்ததாகச் செய்தி.... */

    உங்களோடு நகைச்சுவையாய் இருக்கிறது போங்கள்...

    ReplyDelete
  19. //கலைஞர் செஞ்ச தமிழினத் துரோகத்தை எதிர்க்கிற அதே நேரத்தில், நீங்க கடைசியா சொல்லி இருக்கிறது, ஜெயலலிதாவுக்கு சொம்பு தூக்குற மாதிரி இருக்குங்கிறதையும் என்னால மறுக்க முடியலை//

    ஸேம் ப்ளட்

    ReplyDelete
  20. [[[நிழல்_Shadow said...
    உண்மைத்தமிழர்கள் என்ன ஊளையிட்டாலும் மஞ்சதுண்டு அரசியல் மட்டுமே செய்வார்]]]

    அப்போ நான் யார் நரியா..? போச்சுடா சாமிகளா..? நல்லதுக்கே காலமில்லை போலிருக்கு..!

    ReplyDelete
  21. Pavathukkuu pillai petha pariyari enna seivanu???

    ReplyDelete
  22. [[[கப்பலோட்டி said...
    thathavukku sariyana sataiyadi anna....]]]

    கப்பலோட்டி தங்களுடைய முதல் வருகைக்கு மி்க்க நன்றி..!

    ReplyDelete
  23. [[[வரதராஜலு .பூ said...

    முற்பகல் செய்யின் குறள்தான் ஞாபகம் வருகிறது. இவர்களுக்கும் இப்படி ஒரு நிலை எதிர்காலத்தில் நிச்சயம் வரும். உதவி செய்ய யாருமின்றி சா.....ம்]]]

    வேண்டாம்.. அவர்களும் நல்லாவே இருக்கட்டும்..!

    //அந்த 'நோட்'டை வைத்து எப்படி நடவடிக்கை எடுத்தீர்களோ.. அதேபோல் இப்போதும் 'போயஸ் ஆத்தா' இந்த மூன்றரை ஆண்டுகளாக எழுப்பிக் கொண்டிருக்கும் இந்த 'நோட்ஸ்'களை வைத்தும் சூடு, சொரணை இருந்தால் நடவடிக்கை எடுங்கள் மிஸ்டர் மன்னமோகனசிங்..!//

    சூடு, சொரணை என்னவென்று அர்த்தமோ (இ) வேறு எழவோ தெரியாததால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.]]]

    அப்புறம் முத்தமிழறிஞர் கோச்சுக்க மாட்டாரா..? இதையெல்லாம் என்கிட்ட கேட்டிருந்தா சொல்லிக் கொடுத்திருப்பனேன்னு சண்டைக்கு வருவாரே..!

    ReplyDelete
  24. [[[கப்பலோட்டி said...
    மானம் கெட்ட மண்ணாங்கட்டிகளுக்கு இது உரைக்காது அண்ணே!!!!]]]

    உரைக்குறதுக்கு நாம என்ன செய்யணம்னு தெரியலையே..?

    ReplyDelete
  25. [[[வாக்காளன் said...
    கருணாநிதிக்கு காரம் தடவி .. அம்மாக்கு ஜாம் தடவி உங்கள் அம்மா பாசம் வாழ்க..!]]]

    ஏன் உங்களுக்குத் தமிழ் சரியாப் படிக்கத் தெரியாதா..?

    [[[தேசிய தலைவர் தாய் மீது உங்களுக்குதான் என்ன ஒரு பாசம்.. அடேங்கப்பா.]]]

    அவர் யாருடைய தாயாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.. ஒரு முதியவர் என்ற ரீதியிலாவது பார்க்கக் கூடாதா..?

    [[[இதுவே அம்மாவின் ஆட்சியில் நடந்திருந்தால், உங்கள் பதிவு எப்படி இருக்கும்னு நினைச்சேன்.. சிரிப்பு சிறிபா வருது
    வாழ்க புரட்சி தலைவி அம்மா]]]

    இந்த ஒரு காரணத்துக்காகவே அந்தம்மா ஆட்சி வந்து தொலையக்கூடாதான்னு தோணுது..

    கிழிச்சுக் காட்டுறேன்..!

    ReplyDelete
  26. [[[Vinoth said...
    தமிழன துரோகி கருணாநிதிக்கு ஆட்சி அதிகாரம்தான் முக்கியம் யார் பற்றியும் கவலை இல்லை.]]]

    இது நாட்டு மக்களுக்குப் புரியணுமே வினோத்..!

    ReplyDelete
  27. [[[வானம்பாடிகள் said...
    அய்யகோ. கிழத்துக்கு அல்சீமர் வந்துடுச்சோ. சொந்தமெல்லாம் மறந்து போகுமே! யாராவது ஆட்டய போட்டுட்டு போய்டுவாங்களே! இந்தாளையாவது மன்னிக்கலாம், இந்த சிறுமாவ என்ன பண்ணாத் தகும். மனுசனா அவன்.]]]

    திருமாவுக்கு தமிழக சட்டசபைதான் குறி.. பாட்டாளி மக்கள் கட்சியைவிடவும் கூடுதலான இடங்களைப் பிடித்துவிட வேண்டும் என்கிற வெறியில் இருக்கிறார்.

    அதற்காக அவருக்கு ஐயாவின் தயவு தேவைப்படுகிறது.. இதற்காக எதை வேண்டுமானாலும் அடகு வைப்பார்..!

    ReplyDelete
  28. [[[Rajaraman said...
    ரூ.2000 , பிரியாணி மற்றும் சாராயம் வாங்கிக் கொண்டு நாம் நம் வோட்டை இவர்களுக்கு விற்பதை என்றைக்கு நிறுத்துகிரோமோ அன்றைக்குத்தான் நமக்கு இவர்களை கேள்வி கேட்க்கும் அருகதை உண்டு.]]]

    நிச்சயம்.. ஆனா அதுவரைக்கும் நாம உயிரோட இருக்கணுமே..?

    ReplyDelete
  29. [[[என்.ஆர்.சிபி said...
    ஒருத்தனையும் மன்னிக்கக் கூடாது!
    அதான் பாராளுமன்றத் தேர்தல் முடிஞ்சிடுச்சுல்ல! இனி அடுத்த சட்டசபைத் தேர்தலப்போ இலங்கைத் தமிழன்னு ஒருத்தன் இருந்தான் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டால் போதும்!]]]

    சிபியாரே.. நீரே நக்கீரன்..!

    உண்மையை உள்ளதுபடியே சொல்லிவிட்டீர்..!

    ReplyDelete
  30. [[[என்.ஆர்.சிபி said...

    + போட்டாச்சு!

    உருப்படியான பதிவு!]]]

    அப்பாடி.. சிபிச் சக்கரவர்த்தி எனக்கும் பிளஸ் குத்தெல்லாம் குத்துறாருங்கோ..!

    ReplyDelete
  31. [[[பரிதி நிலவன் said...
    இன்னுமாடா இந்த ஊரு இவனுங்கள நம்புது.. இவர்களுக்கு அரசியல் விளையாட்டை எந்த விஷயத்தில் விளையாடுவது என்ற குறைந்தபட்ச அறிவுகூட இருக்காது போலும்.]]]

    அறிவா..? அதெல்லாம் யாருக்கு வேணும்..?

    அவங்களுக்கு இருக்கிறதெல்லாம் சுரண்டல் அறிவுதான்..!

    ReplyDelete
  32. [[[Rajaraman said...
    பார்வதியம்மா திருப்பி அனுப்பப்படக் காரணம் ஜெயலலிதா - திருமாவளவன் இந்த அறிய கண்டுபிடிப்பிற்காக நமது குருமாவிற்கு அன்னை சோனியா விருதை கலைஞரின் தங்க கரங்களால் அளிக்க வேண்டும்.]]]

    கொடுத்திரலாம்..! நானும் சேர்ந்து சிபாரிசு பண்றேன்..!

    ReplyDelete
  33. [[[ராஜ நடராஜன் said...

    //"அவசரப்பட்டு விசா கொடுத்துவிட்டீர்கள்.. ஏன் எங்களிடம் முன்பே கருத்து கேட்கவில்லை. வந்தால் உங்களுக்குத்தான் பிரச்சினை.. பரவாயில்லையா..?" என்று தமிழக அரசின் தரப்பிலிருந்து மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை சென்ற பிறகுதான் மத்திய அரசு திருப்பியனுப்பும் முடிவை நடத்திக் காட்டியிருப்பதாக டெல்லி பத்திரிகையாளர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் சொல்கிறார்கள்.//

    இந்த உண்மையை நீங்கள் பொதுவுக்கு கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்.]]]

    டில்லிக்கார ஆங்கிலப் பத்திரிகை நிருபர்கள் உண்மையை எழுதியனுப்பியும் பத்திரிகை முதலாளிகளின் விருப்பதற்கேற்பதான் அது எழுதப்பட்டிருக்கிறது..!

    ReplyDelete
  34. [[[என்.ஆர்.சிபி said...

    //இந்த உண்மையை நீங்கள் பொதுவுக்கு கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்.//

    ஆனா இவரைத் தேடி ஆட்டோ வருமாமே!]]]

    எப்ப வரும்..? எப்போ வரும்..? எப்படி வரும்..?

    சிபி நம்பர் சொல்லுங்கப்பா.. ஜாமீன் எடுக்க ரெடியா இருக்கச் சொல்லணும்..!

    ReplyDelete
  35. [[[பிரபாகர் said...

    உண்மை.. தமிழன்!... உண்மைத்தமிழன்!

    பிரபாகர்.]]]

    பிரபாகர் நன்னி..!

    ReplyDelete
  36. [[[எட்வின் said...

    மானங்கெட்ட மாங்கா மடையன்கள்.
    இவர்களின் கேடுகெட்ட அரசியலுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. தமிழர்களுக்கும் பழகிப் போய்விட்டது.
    உருப்படியா தமிழ்நாட்ட நடத்துறதுக்கு இனிமேல் யாராவது வந்தாதான் உண்டு. அதுவும் அடுத்த 50 ஆண்டுகளில் நடக்க சாத்தியமில்லை என்றே தெரிகிறது.]]]

    இதுதான் நம்ம தலையெழுத்து..!

    இன்னொரு காமராஜரை நாம எங்க போய்த் தேடுறது..?

    ReplyDelete
  37. [[[ஒரிஜினல் "மனிதன்" said...

    //"அவசரப்பட்டு விசா கொடுத்துவிட்டீர்கள்.. ஏன் எங்களிடம் முன்பே கருத்து கேட்கவில்லை. வந்தால் உங்களுக்குத்தான் பிரச்சினை.. பரவாயில்லையா..?" என்று தமிழக அரசின் தரப்பிலிருந்து மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை சென்ற பிறகுதான் மத்திய அரசு திருப்பியனுப்பும் முடிவை நடத்திக் காட்டியிருப்பதாக டெல்லி பத்திரிகையாளர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் சொல்கிறார்கள்.//

    அதி பயங்கர ரகசியத்தை நாட்டிற்கு அம்பலப்படுத்திய இண்டர்போலின் ரகசிய ஏஜண்டே, ே.ஜி.பி. பெற்றெடுத்த கிங்காங்கே மொசாத்தின் மூல முதல்வனே நின் திசை நோக்கி தொழுகின்றேன்.
    "உண்மைத்தமிழர்கள் என்ன ஊளையிட்டாலும் "
    என்னத்த சொல்ல....?]]]

    அவனா நீயி..? கீழ்ப்பாக்கத்துக்கு சென்னைல எல்லா இடத்துல இருந்தும் பஸ் இருக்கு..!

    ReplyDelete
  38. [[[முகிலன் said...

    அண்ணே.. கலைஞர் செஞ்ச தமிழினத் துரோகத்தை எதிர்க்கிற அதே நேரத்தில், நீங்க கடைசியா சொல்லி இருக்கிறது, ஜெயலலிதாவுக்கு சொம்பு தூக்குற மாதிரி இருக்குங்கிறதையும் என்னால மறுக்க முடியலை. 2002ல முதல்வரா இருந்தப்போ அப்பிடி ஒரு நோட் மத்திய அரசுக்கு ஜெயலலிதா அனுப்பியிருந்தா அதையும் கண்டிக்கனுமே ஒழிய, அதை வச்சி நடவடிக்கை எடுத்த மாதிரி மத்த கோரிக்கைகளையும் நிறைவேத்துன்னு கேக்குறது மடத்தனமா இருக்கு. முதல்வரா இருந்து நோட் அனுப்புறதுக்கும் எதிர்க்கட்சியா இருந்து கோரிக்கை வைக்கிறதுக்கும் இருக்குற வித்தியாசத்தை உங்களுக்கு நான் கிளாஸ் எடுக்கணுமா என்ன?]]]

    ஜெயலலிதாவின் ஒரு குறிப்பை இவ்வளவு சீரியஸா எடுக்கிற அளவுக்கு காங்கிரஸ்ல மூளை உள்ளவங்க யாருங்க தம்பி இருக்கா..?

    இது ச்சும்மா லூலாய்யி.. அவங்க எதுக்காக ஜெயலலிதாவை இழுத்திருக்காங்கன்றதையும் கொஞ்சம் யோசிச்சுப் பாரு..!

    இதிலும் அவர்கள் நடத்தியிருப்பது அரசியல்தானே தவிர, உண்மையாகவே அந்த குறிப்பாணைக்கு மதிப்பளித்து அல்ல..!

    எதிர்க்கட்சிக்காரர்களை ஆளும்கட்சியினர் எப்படி நடத்துகிறார்கள்.. நடத்துவார்கள் என்பது நாம் அறிந்ததுதானே..?

    ReplyDelete
  39. [[[Govindarajan said...

    /ஒரு முதலமைச்சராக இருப்பவருக்கே இது தெரியாது எனில் இவர் எதற்காக முதலமைச்சர் பதவியில் வெட்கமில்லாமல் இருக்கிறார் என்பதை யாரேனும் கேட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும்...

    வைகோவும், நெடுமாறனும் பிரபாகரனின் அண்ணன் மனோகரனின் மூலமாக பார்வதியம்மாவுக்கு சிகிச்சையளிக்க சென்னைக்கு அழைத்து வரும் வேலைகளை ரகசியமாக செய்து முடித்ததாகச் செய்தி.... */

    உங்களோடு நகைச்சுவையாய் இருக்கிறது போங்கள்.]]]

    சிரித்ததற்கு காசு கொடுத்திட்டுப் போங்க..!

    ரகசியமாக என்பது மற்ற ஈழ ஆதரவுக் கட்சிகளுக்குத் தெரியாமல் என்பதுதான் உண்மை..

    முதல்வருக்குத் தெரியாமலேயே இதுவெல்லாம் நடக்கிறது என்றால் இவர் ராஜினாமா செய்துவிட்டுப் போக வேண்டியதுதான்..!

    எல்லாஞ்சரி.. வைகோவும், நெடுமாறனும் விமான நிலையம் வருவதற்கு முன்பாகவே ஜாங்கிட் தலைமையில் போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது ஏன்.. எதற்காக..?

    விளக்கம் சொல்லுங்கள் ப்ளீஸ்..!

    ReplyDelete
  40. [[[கண்ணா.. said...

    //கலைஞர் செஞ்ச தமிழினத் துரோகத்தை எதிர்க்கிற அதே நேரத்தில், நீங்க கடைசியா சொல்லி இருக்கிறது, ஜெயலலிதாவுக்கு சொம்பு தூக்குற மாதிரி இருக்குங்கிறதையும் என்னால மறுக்க முடியலை//

    ஸேம் ப்ளட்]]]

    அவருக்குத் தெளிவா ஒரு பதில் சொல்லியிருக்கேன் கண்ணா.. போயி படிச்சுக்குங்க..!

    ReplyDelete
  41. [[[shiva said...
    Pavathukkuu pillai petha pariyari enna seivanu???]]]

    அப்படீன்னா..?

    ReplyDelete
  42. உண்மை தமிழன் மூலமாகத்தான் அந்த மெசேஜ் மத்திய அரசுக்கு போச்சா? நக்கீரன் ஜூ வி க்கு எந்த விதத்திலும் குறையவில்லை.. !
    பூட்டிய அறையில் கருணாநிதி அன்பழகம் பேசியது... ஜெயலலிதா பன்னிர்செல்வம் பேசியது எல்லாம் வரிக்கு வரிக்கு எப்படி ஜு வி நக்கீரன் போடுமோ அதே போல தான் இதுவும்.

    ReplyDelete
  43. இடுகையின் அளவு நோக்கம் வார்த்தைகள் என்று எல்லாமே கனகச்சிதம் தமிழா? ஒரு இடத்தில் மட்டும் பிழை. மொன்னமோகன்சிங்?

    ReplyDelete
  44. தமிழா, பதிவை படித்தால் இந்த பாட்டுதான் ஞாபகம் வருது.

    "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
    வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்"

    ReplyDelete
  45. //ஜெயலலிதாவின் ஒரு குறிப்பை இவ்வளவு சீரியஸா எடுக்கிற அளவுக்கு காங்கிரஸ்ல மூளை உள்ளவங்க யாருங்க தம்பி இருக்கா..?

    இது ச்சும்மா லூலாய்யி.. அவங்க எதுக்காக ஜெயலலிதாவை இழுத்திருக்காங்கன்றதையும் கொஞ்சம் யோசிச்சுப் பாரு..!

    இதிலும் அவர்கள் நடத்தியிருப்பது அரசியல்தானே தவிர, உண்மையாகவே அந்த குறிப்பாணைக்கு மதிப்பளித்து அல்ல..!

    எதிர்க்கட்சிக்காரர்களை ஆளும்கட்சியினர் எப்படி நடத்துகிறார்கள்.. நடத்துவார்கள் என்பது நாம் அறிந்ததுதானே..?
    //

    அண்ணே.. ஆளுங்கட்சி அதிருப்தியாளர்களை சமாளிக்க என்ன வேணும்னாலும் செய்யும்ணே.. இல்லாத நோட்டைக் கூட எடுத்து இதுனாலதான் செஞ்சோம்னு சொல்லும். அதப் பத்தி நான் பெருசா கவலைப் படலை..

    ஆனா நீங்க இந்த இடுகையை எழுதுனது அதிமுகவுக்கு சொம்பு தூக்குற மாதிரிதான் இருக்குங்கிற என்னோட கேள்விக்கு நீங்க பதில் சொல்லவே இல்லை.

    அதிமுகவே இதுக்கு பதில் சொல்லாம விவாதத்துல கலந்துக்காம வெளியேறிட்டாங்கன்னா, அந்த நோட் அனுப்புனது உண்மைன்னு தான அர்த்தம்?

    அத வச்சி நடவடிக்கை எடுத்தாங்களோ இல்லையோ, அதை அனுப்புனது தமிழினத் தலைவரின் பெற்றோர்களை அவமானப்படுத்தியதாத்தான அர்த்தம்.

    இப்பிடி ஒரு நோட் அனுப்பிட்டு எந்த ஒரு மூஞ்ச வச்சிட்டுத் தனி ஈழம்னு இந்தம்மா எலக்சன் டயத்துல குரல் குடுத்துச்சி?

    நியாயமா அதையுமில்ல நீங்க கண்டிச்சிருக்கணும்?

    இப்போ இதே மாதிரி சஞ்சய் காந்தியோ, இல்ல லக்கியோ இந்த திருப்பி அனுப்புனதையே நியாயப் படுத்தி எழுத முடியுமே?

    ReplyDelete
  46. விருப்பமில்லா தற்கொலைக்கான ஒத்திகை...

    அதிகாலை நாளிதழ்களை
    பார்க்கும் போது
    உணர்ச்சிவசப்பட கூடாது
    என்பதே என்
    நெடுநாளைய பிரார்த்தனையாக
    உள்ளது...

    ஒவ்வெரு நாள்
    காலையிலும் என்
    பிரார்த்தனை அரசனால்
    மீறப்படுகிறது ...

    எமக்கான உரிமை
    எல்லா திசைகளிலும்
    மறுக்கப்படுகிறது...

    எமக்கான கருணை
    எல்லா வடிவங்களிலும்
    நிராகரிக்கப்படுகிறது...

    குடியாட்சியின் பதுமைகள்
    எமது இருப்பை
    கேலி செய்கிறது...

    பின் பொழுதுகளில்
    பேயாட்சியால்
    நாங்கள் உயிரோடு
    உண்ணப்படுகிறோம்...

    மீண்டு வருமினும்
    விருப்பமில்லா தற்கொலைக்கான
    ஒத்திகையிலேயே
    அந்நாள் முடிவடைகிறது.......
    http://stalinfelix.blogspot.com/

    ReplyDelete
  47. அவசியமான பதிவு...... நன்றி

    ReplyDelete
  48. அண்ணா,

    2003ல் ஜெ. அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதை சொன்ன கருணாநிதி, அன்றைக்கிருந்த வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் திமுகவும் அங்கம்,முரசொலி மாறனும், டி.ஆர். பாலுவும் மிகுந்த செல்வாக்குடன் இருந்தார்கள் என்பதை வழக்கம் போல திட்டமிட்டு சொல்லாது விட்டுவிட்டார்.

    இது பற்றி நான் எழுதியிருக்கிறேன், நேரம் இருந்தால் படித்து பாருங்கள்.

    http://muranthodai.blogspot.com/2010/04/blog-post_19.html

    ReplyDelete
  49. பெயருக்குகேத்த பதிவுங்க.. உண்மை தமிழன்.

    ReplyDelete
  50. தல

    முதல் முறையா உங்க பெயருக்கு ஒரு அர்த்தம் வந்துருக்கு :)

    நல்ல கோர்வையா எழுதியிருக்கீங்க.

    ஆனா இங்க நீங்க பக்கம் பக்கமா எழுதி ஒரு பிரயோஜனம் கூட இல்ல. மக்கள் இதை சேர்த்தாதான் ஏதாவது பிரயோஜனம் உண்டு.

    அதிமுக்கியமான விசயம்

    தமிழகத்தின் விடிவெள்ளி சுப்ரமணியசுவாமி ( பெயர் எவன் வெச்சான்னு தெரியல) அறிக்கையை பற்றி கருத்து கூறாததை கண்டபடியும் காட்டுத்தனமாகவும் கண்டிக்கிறேன்

    ReplyDelete
  51. செருப்புல, சாணி தடவி அடிதீர்கள் அயயா..
    தொடரட்டும் உங்கள் கேள்விகள்..

    ReplyDelete
  52. [[[ராஜேஷ், திருச்சி said...
    உண்மை தமிழன் மூலமாகத்தான் அந்த மெசேஜ் மத்திய அரசுக்கு போச்சா? நக்கீரன் ஜூ வி க்கு எந்த விதத்திலும் குறையவில்லை.. !
    பூட்டிய அறையில் கருணாநிதி அன்பழகம் பேசியது. ஜெயலலிதா பன்னிர்செல்வம் பேசியது எல்லாம் வரிக்கு வரிக்கு எப்படி ஜு வி நக்கீரன் போடுமோ அதே போலதான் இதுவும்.]]]

    சில விஷயங்களில் ஆஃப் தி ரிக்கார்டு ஆக அதிகாரிகளே பல விஷயங்களை வெளியில் பற்ற வைப்பார்கள்..!

    அவைகளில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களும் அடங்கும்..!

    பல சமயங்களில் சில பொய்கள் உலா வந்து சில கூட்டணிகளை உடைத்ததுண்டு..!

    சில சமயங்களில் பல பொய்கள் உலா வந்து பலரது அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்க வைத்ததும் உண்டு..!

    பத்திரிகைகளில் வெளி வரும் அரசியல் கிசுகிசுக்களில் 90 சதவிகிதம் உண்மையே..!

    அந்தப் பத்து சதவிகிதம்தான் போட்டு வாங்குவது..!

    என் காதுக்கு வந்த செய்திகளை நான் உண்மை என்று நம்பித்தான் இங்கே எழுதியிருக்கிறேன். இதை நம்புவதும், நம்பாததும் உங்களது இஷ்டம் ராஜேஷ்..!

    ReplyDelete
  53. [[[ஜோதிஜி said...
    இடுகையின் அளவு நோக்கம் வார்த்தைகள் என்று எல்லாமே கனகச்சிதம் தமிழா? ஒரு இடத்தில் மட்டும் பிழை. மொன்னமோகன்சிங்?]]]

    ஐயோ அண்ணே..

    அது வேணும்னே எழுதினதுதான்..!

    ReplyDelete
  54. [[[♠புதுவை சிவா♠ said...

    தமிழா, பதிவை படித்தால் இந்த பாட்டுதான் ஞாபகம் வருது.
    "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
    வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்"]]]

    அதெல்லாம் நம்ம தாத்தாவுக்கு கிடைக்காது.. கொடுப்பினை இல்லை..

    செய்தி வினை அவ்வளவு..!

    ReplyDelete
  55. [[[முகிலன் said...

    //ஜெயலலிதாவின் ஒரு குறிப்பை இவ்வளவு சீரியஸா எடுக்கிற அளவுக்கு காங்கிரஸ்ல மூளை உள்ளவங்க யாருங்க தம்பி இருக்கா..?

    இது ச்சும்மா லூலாய்யி.. அவங்க எதுக்காக ஜெயலலிதாவை இழுத்திருக்காங்கன்றதையும் கொஞ்சம் யோசிச்சுப் பாரு..!

    இதிலும் அவர்கள் நடத்தியிருப்பது அரசியல்தானே தவிர, உண்மையாகவே அந்த குறிப்பாணைக்கு மதிப்பளித்து அல்ல..!

    எதிர்க்கட்சிக்காரர்களை ஆளும்கட்சியினர் எப்படி நடத்துகிறார்கள்.. நடத்துவார்கள் என்பது நாம் அறிந்ததுதானே..?//

    அண்ணே.. ஆளுங்கட்சி அதிருப்தியாளர்களை சமாளிக்க என்ன வேணும்னாலும் செய்யும்ணே. இல்லாத நோட்டைக்கூட எடுத்து இதுனாலதான் செஞ்சோம்னு சொல்லும். அதப்பத்தி நான் பெருசா கவலைப்படலை..

    ஆனா நீங்க இந்த இடுகையை எழுதுனது அதிமுகவுக்கு சொம்பு தூக்குற மாதிரிதான் இருக்குங்கிற என்னோட கேள்விக்கு நீங்க பதில் சொல்லவே இல்லை.

    அதிமுகவே இதுக்கு பதில் சொல்லாம விவாதத்துல கலந்துக்காம வெளியேறிட்டாங்கன்னா, அந்த நோட் அனுப்புனது உண்மைன்னுதான அர்த்தம்?

    அத வச்சி நடவடிக்கை எடுத்தாங்களோ இல்லையோ, அதை அனுப்புனது தமிழினத் தலைவரின் பெற்றோர்களை அவமானப்படுத்தியதாத்தான அர்த்தம்.

    இப்பிடி ஒரு நோட் அனுப்பிட்டு எந்த ஒரு மூஞ்ச வச்சிட்டுத் தனி ஈழம்னு இந்தம்மா எலக்சன் டயத்துல குரல் குடுத்துச்சி?

    நியாயமா அதையுமில்ல நீங்க கண்டிச்சிருக்கணும்?

    இப்போ இதே மாதிரி சஞ்சய்காந்தியோ, இல்ல லக்கியோ இந்த திருப்பி அனுப்புனதையே நியாயப்படுத்தி எழுத முடியுமே]]]

    தம்பி முகிலா..!

    அந்த நோட் எழுதி அனுப்புனது போயஸ் ஆத்தாதான்.. அதுல சந்தேகமில்லை. அது உண்மைதான்..!

    மத்திய அரசுக்கு ஒரு காரணம் தேவைப்பட்டுச்சு.. அப்போ அவங்க கண்ல பட்டிருக்கிறது இந்தத் துணுக்கு. அதுனால அவங்க அதை யூஸ் பண்ணிக்கிட்டாங்க..

    ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..! அதை வைச்சு திருப்பியும் அனுப்பியாச்சு.. மொத்தப் பழியையும் ஜெயலலிதா மேல தூக்கியும் போட்டாச்சு..!

    சரி.. ஜெயலலிதா ஏன் அந்தத் துணுக்கை எழுதணும்? அதுதான் அம்மா.. அந்தம்மா இதை எழுதலைன்னாதான் நமக்கு ஆச்சரியம் தரணும்..! எழுதக் கூடியவங்கதான்..!

    புலி விஷயத்தில்கூட அந்தம்மாவை விட்ரலாம்.. ஆனா ஈழ விடுதலை விஷயத்தில் விட முடியாது..

    நான்கூட ஒரு காலத்தில் ஈழ விடுதலை விஷயத்தில் எதிராகத்தான் இருந்தேன். ஒரு கட்டத்தில் உண்மை உரைத்தபோதுதான் இடம் மாறினேன்.

    இந்த இடுகை அந்தம்மாவுக்கு வக்காலத்தெல்லாம் வாங்கலை..! பொதுவா எதிர்க்கட்சிக்காரங்க சொல்றதையெல்லாம் வேதவாக்கா எடுத்துக்கிட்டு எந்த ஆளும்கட்சியும் பெரிய அளவுல கொள்கை முடிவு எடுக்க மாட்டாங்க..! ஆனா இதுல எடுத்திருக்காங்க..!

    அதுனாலதான் இதைச் சொன்னேன்..!

    பொதுவா தி.மு.க. வீட்டுக்குப் போகணும்ன்ற கொள்கை எனக்கும் இருக்கே..! அதுனாலதான்..!

    ReplyDelete
  56. காலப்பறவை..

    கவிதைக்கும், வருகைக்கும் மிக்க நன்றி..!

    ReplyDelete
  57. [[[அது சரி said...
    அண்ணா, 2003-ல் ஜெ. அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதை சொன்ன கருணாநிதி, அன்றைக்கிருந்த வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் திமுகவும் அங்கம்,முரசொலி மாறனும், டி.ஆர். பாலுவும் மிகுந்த செல்வாக்குடன் இருந்தார்கள் என்பதை வழக்கம் போல திட்டமிட்டு சொல்லாது விட்டுவிட்டார்.

    இது பற்றி நான் எழுதியிருக்கிறேன், நேரம் இருந்தால் படித்து பாருங்கள்.

    http://muranthodai.blogspot.com/2010/04/blog-post_19.html]]]

    கடிதத்தைப் படித்துவிட்டு இத்தனை நாட்கள் அமைதி காத்திருக்கிறார்கள்..! இப்போது வாய்ப்பு கிடைத்தவுடன் அதனை ஒரு சாக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள்..!

    ReplyDelete
  58. [[[தாராபுரத்தான் said...
    பெயருக்குகேத்த பதிவுங்க.. உண்மைதமிழன்.]]]

    நன்றிங்க ஐயா..!

    ReplyDelete
  59. [[[யாசவி said...
    தல, முதல் முறையா உங்க பெயருக்கு ஒரு அர்த்தம் வந்துருக்கு:)
    நல்ல கோர்வையா எழுதியிருக்கீங்க.]]]

    அடப்பாவிகளா..! இத்தனை மாசமா எழுதிக்கிட்டிருந்தனே.. அப்போ அதெல்லாம்..?

    [[[ஆனா இங்க நீங்க பக்கம் பக்கமா எழுதி ஒரு பிரயோஜனம்கூட இல்ல. மக்கள் இதை சேர்த்தாதான் ஏதாவது பிரயோஜனம் உண்டு.]]]

    மக்களுக்கு இப்போது தத்தமது வாழ்க்கைப் பிரச்சினைதான் முக்கியம்..! இதுதான் தமிழ்நாடு..!

    [[[அதி முக்கியமான விசயம்
    தமிழகத்தின் விடிவெள்ளி சுப்ரமணியசுவாமி (பெயர் எவன் வெச்சான்னு தெரியல) அறிக்கையை பற்றி கருத்து கூறாததை கண்டபடியும் காட்டுத்தனமாகவும் கண்டிக்கிறேன்.]]]

    அது ஒரு காமெடி பீஸு..! வேறென்ன பேசும்..!? அதைக் கண்டித்து அறிக்கை வேற விடணுமா..? லூஸ்ல விடுங்க..!

    ReplyDelete
  60. [[[பட்டாபட்டி.. said...
    செருப்புல, சாணி தடவி அடிதீர்கள் அயயா. தொடரட்டும் உங்கள் கேள்விகள்.]]]

    ஐயோ.. இந்த அளவுக்கெல்லாம் காரம் இல்லீங்க..!

    ReplyDelete
  61. உலக மகா நடிகன் கருணாநிதி..

    ReplyDelete
  62. //

    Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said

    [[[வரதராஜலு .பூ said...

    முற்பகல் செய்யின் குறள்தான் ஞாபகம் வருகிறது. இவர்களுக்கும் இப்படி ஒரு நிலை எதிர்காலத்தில் நிச்சயம் வரும். உதவி செய்ய யாருமின்றி சா.....ம்]]]

    வேண்டாம்.. அவர்களும் நல்லாவே இருக்கட்டும்..!

    //அந்த 'நோட்'டை வைத்து எப்படி நடவடிக்கை எடுத்தீர்களோ.. அதேபோல் இப்போதும் 'போயஸ் ஆத்தா' இந்த மூன்றரை ஆண்டுகளாக எழுப்பிக் கொண்டிருக்கும் இந்த 'நோட்ஸ்'களை வைத்தும் சூடு, சொரணை இருந்தால் நடவடிக்கை எடுங்கள் மிஸ்டர் மன்னமோகனசிங்..!//

    சூடு, சொரணை என்னவென்று அர்த்தமோ (இ) வேறு எழவோ தெரியாததால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.]]]

    அப்புறம் முத்தமிழறிஞர் கோச்சுக்க மாட்டாரா..? இதையெல்லாம் என்கிட்ட கேட்டிருந்தா சொல்லிக் கொடுத்திருப்பனேன்னு சண்டைக்கு வருவாரே..!//

    வேற வேலை இல்லியா அவருக்கு. சண்டையெல்லாம் போடமாட்டாரு. அதுக்கு கடிதம்தான் போடுவாரு.

    ReplyDelete
  63. அண்ணா… நான் சொல்ல நினைத்த கருத்து முரண்தொடையிலிருந்ததால் அப்படியே Ctrl X and Ctrl V செய்யாது கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கேன். ஹி ஹி!!!

    கருணாநிதியின் அறிக்கைப்படி, நடந்த விவகாரத்திற்கு முழு பொறுப்பு. 5.5.2003 அன்று, அன்றைக்கிருந்த ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சி, மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தின் படியே பார்வதியம்மாள் இந்தியாவுக்குள் நுழைய தடை செய்யப்பட்டிருக்கிறது.

    ஆனால், கருணாநிதி மிகத் தெளிவாக, சொல்லாது திட்டமிட்டு மறைத்த விஷயம், அன்றைக்கிருந்த மத்திய ஆட்சி வாஜ்பாய் தலைமையில், திமுகவின் ஆதரவுடன் நடந்த ஆட்சி, கருணாநிதியின் ஆட்சி. மாறன், டி.ஆர். பாலு, ஆ.ராசா என்று திமுகவின் முக்கிய புள்ளிகள் எல்லாம் ஆட்சியில் முக்கிய பங்கும், அதிகாரமும் செலுத்திய ஆட்சி. தமிழ்நாட்டு விவகாரங்களில் மாறனையும் திமுகவையும் மீறியோ, அல்லது அவர்களுக்கு தெரியாமலோ எந்த ஒரு முடிவையும் மத்திய அரசு எடுக்க முடியாத படி, திமுகவின் முழு செல்வாக்கின் கீழ் நடந்த ஆட்சி.
    (இதன் பின்னரே முரசொலி மாறன் நவம்பர் 23, 2003ல் இறக்கிறார். உடல்நலமில்லாது இருந்த அவரை, இந்திய அரசின் செலவில் தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தது இதே கருணாநிதி தான் என்பது இங்கு தேவையில்லாத விஷயம்)
    அதாவது, ஜெயலலிதாவின் அதிமுக அரசு எழுதிய கடிதத்தை மாறனும், பாலுவும், கருணாநிதியும் நினைத்திருந்தால் ஏற்காது கிடப்பில் போட்டிருக்கலாம்.
    ஆனால், கருணாநிதியின் மந்திரிகள் முழு ஒப்புதல் அளித்தே பார்வதி அம்மாள் இந்தியா உள்ளே நுழைய தடை செய்யப்பட்டிருக்கிறது!
    இதையே சன் டிவி மீது நடவடிக்கை எடுக்க கோரியோ, கருணாநிதியை கைது செய்ய கோரியோ ஜெ. அரசு கடிதம் கொடுத்திருந்தால் செய்திருப்பார்களா?
    ஆக, இந்த மனிதத் தன்மையே இல்லாத செயலில் பொறுப்பு அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் மட்டுமா? இல்லை கருணாநிதிக்கும் பங்கு உண்டு என்பதைத் தெளிவாக சொல்லியிருக்கீங்க…!!!
    (கருத்துக் கடன் பெற்றது முரண்தொடையிலிருந்து…..)

    ReplyDelete
  64. வெறும் விசாவை மட்டும் வாங்கிக் கொண்டு இந்தியா வர பார்வதி அம்மாள் சாமானிய மனுஷி இல்லை. மடிந்து போன இயக்கத்தின் மகத்தான தலைவனின் தாயார்.விடுதலைப் புலிகள் சம்பந்தப் பட்டவர்களுக்கு இந்திய மண்ணில் அனுசரனை இல்லையென்பது அங்கை நெல்லி.

    இத்தகைய சூழலில் நிஜமாகவே திருமதி.பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க நினைத்திருப்பவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்....கலைஞரை சந்தித்து பேசியிருக்கலாம். அல்லது திருமா மாதிரியானவர்களின் துனையோடு அதற்கான சூழ்நிலைகளை உருவாக்கும் முயற்சிகளிலாவது ஈடுபட்டிருக்கலாம்.

    அதையெல்லாம் விடுத்து அடுத்தவனுக்கு தெரியாமல் விமான நிலைய வாசலில் வில்லங்க நாடகம் நடத்தி விட்டு கருணாநிதி தலையினை உருட்டுவது நியாயமில்லை. கலைஞர் மற்றும் சோனியாவின் நிலைப்பாடு தெரிந்தே அவர்களை சிக்கலில் இழுத்துவிடும் குறுகிய அரசியல் நாடகமே தவிர அந்த அம்மையாரின் உடல் நலம் குறித்த அக்கறை இந்த அரசியல் வாதிகளுக்கு இல்லை.

    சமீபத்தைய உங்களின் பதிவுகள் நீங்கள் பிரச்சினைகளை அதீத உணர்வுவயப் பட்ட நிலையில் அணுகுகிறீர்கள் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.

    இது உங்களின் உடல்நலத்திற்கு ஏற்றதில்லை.

    ReplyDelete
  65. " பார்வதியம்மாள் தமிழகத்திற்கு வந்ததே தனக்குத் தெரியாது என்று"

    பாவம் .. எப்பவும் டீ சாப்டர கடைல , தின தந்தி படிச்சுதான் , அவரு விஷயத்தை தெரிஞ்சுகிட்டாராம்.... இதை போய் கிண்டல் செய்றீங்களே... உங்களை மன்னித்து விட்டு விடுமாறு, எல்லாம் வல்ல இயற்கையை பிரார்த்தித்து கொள்கிறேன்

    ReplyDelete
  66. ராமதாசு-வை பத்தி நல்லாவே தெரியும். திருமா சிறுத்தையும் இல்லை சிங்கமும் இல்ல; அது ஒரு புலி கொட்டை எடுக்கப்பட்ட புலி, கெட்டுபோன குறுமா; ஒரு நல்ல விசயத்துக்கும் லாயக்கில்லாத புலி, வேத்த்துவேட்டு வெறுமா.

    என்ன இவனுங்கள்ல ஓரளவுக்கு விஷயம் உள்ள வைகோ கொஞ்சம் நல்ல மனுஷன் (கவனிக்கவும் நான் அவரின் புலி ஆதரவை ஏற்க்கவில்லை) . ஆனா ஓட்டு போட அந்தாளு பணம் தர மாட்டாரு. இன்னிய நிலமைல ஜெ. இருந்துருந்தா சிகிசைக்கவது அனுமதிசிருக்கும்.

    பெருச பத்தி நல்லாவே தெரியும்...

    ஹ்ம்ம் என்னைக்குதான் இந்தியாவுக்கு நல்ல காலமோ. தமிழா நீ வழக்கம்போல டாஸ்மாக்-ல ஞானத்தை தேடு.

    ReplyDelete
  67. ரொம்பவும் மனசு கஷ்டப்படுகிறது.வயதான காலத்தில் என்நென்ன துன்பம் பார்வதி அம்மாவுக்கு.

    நான் ஒரு புலி அபிமானி இல்லை என்பதர்காகவே இலங்கக்கு போ (?)என்று சொன்னவர்கள் உண்டு.அவர்கள் எல்லாம் இப்போ எங்கே?

    மொழியைவைத்து இதைவிட பிழைப்பு நடத்திய இனம் இன்னொன்று உண்டா என்று தேடிபார்க்கணும்.மனிதாபிமானம் இல்லாமல் மொழிஅபிமானம் வைத்து என்ன பயன்.

    ரொம்பவும் வருத்தமாக உள்ளது.

    ReplyDelete
  68. Annalum ungala romba paratanum na...

    enaku namma mudhalavara neraya thitti veruppe vandhuduchi na.. avar thiruntha porathu illa...

    neenga nalla kaalam ithellam pathivu panni vaikureenga... illana ivar panna sadhanaigala maatume solli thiyagi aakiduvanga...

    ReplyDelete
  69. [[[Cool Boy said...
    உலக மகா நடிகன் கருணாநிதி..]]]

    தெரிஞ்ச விஷயம்தான கூல்பாய்..!

    ReplyDelete
  70. [[[வரதராஜலு .பூ said...

    //அப்புறம் முத்தமிழறிஞர் கோச்சுக்க மாட்டாரா..? இதையெல்லாம் என்கிட்ட கேட்டிருந்தா சொல்லிக் கொடுத்திருப்பனேன்னு சண்டைக்கு வருவாரே..!//

    வேற வேலை இல்லியா அவருக்கு. சண்டையெல்லாம் போடமாட்டாரு. அதுக்கு கடிதம்தான் போடுவாரு.]]]

    பேசுறதைவிட அது ரொம்பக் கொடுமையில்ல..!

    ReplyDelete
  71. [[[அறிவுடைநம்பி said...

    அண்ணா… நான் சொல்ல நினைத்த கருத்து முரண்தொடையிலிருந்ததால் அப்படியே Ctrl X and Ctrl V செய்யாது கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கேன். ஹி ஹி!!!

    கருணாநிதியின் அறிக்கைப்படி, நடந்த விவகாரத்திற்கு முழு பொறுப்பு. 5.5.2003 அன்று, அன்றைக்கிருந்த ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சி, மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தின் படியே பார்வதியம்மாள் இந்தியாவுக்குள் நுழைய தடை செய்யப்பட்டிருக்கிறது.

    ஆனால், கருணாநிதி மிகத் தெளிவாக, சொல்லாது திட்டமிட்டு மறைத்த விஷயம், அன்றைக்கிருந்த மத்திய ஆட்சி வாஜ்பாய் தலைமையில், திமுகவின் ஆதரவுடன் நடந்த ஆட்சி, கருணாநிதியின் ஆட்சி. மாறன், டி.ஆர். பாலு, ஆ.ராசா என்று திமுகவின் முக்கிய புள்ளிகள் எல்லாம் ஆட்சியில் முக்கிய பங்கும், அதிகாரமும் செலுத்திய ஆட்சி. தமிழ்நாட்டு விவகாரங்களில் மாறனையும் திமுகவையும் மீறியோ, அல்லது அவர்களுக்கு தெரியாமலோ எந்த ஒரு முடிவையும் மத்திய அரசு எடுக்க முடியாதபடி, திமுகவின் முழு செல்வாக்கின் கீழ் நடந்த ஆட்சி.

    (இதன் பின்னரே முரசொலி மாறன் நவம்பர் 23, 2003ல் இறக்கிறார். உடல்நலமில்லாது இருந்த அவரை, இந்திய அரசின் செலவில் தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தது இதே கருணாநிதி தான் என்பது இங்கு தேவையில்லாத விஷயம்)

    அதாவது, ஜெயலலிதாவின் அதிமுக அரசு எழுதிய கடிதத்தை மாறனும், பாலுவும், கருணாநிதியும் நினைத்திருந்தால் ஏற்காது கிடப்பில் போட்டிருக்கலாம். ஆனால், கருணாநிதியின் மந்திரிகள் முழு ஒப்புதல் அளித்தே பார்வதி அம்மாள் இந்தியா உள்ளே நுழைய தடை செய்யப்பட்டிருக்கிறது! இதையே சன் டிவி மீது நடவடிக்கை எடுக்க கோரியோ, கருணாநிதியை கைது செய்ய கோரியோ ஜெ. அரசு கடிதம் கொடுத்திருந்தால் செய்திருப்பார்களா?
    ஆக, இந்த மனிதத் தன்மையே இல்லாத செயலில் பொறுப்பு அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் மட்டுமா? இல்லை கருணாநிதிக்கும் பங்கு உண்டு என்பதைத் தெளிவாக சொல்லியிருக்கீங்க…!!!
    கருத்துக் கடன் பெற்றது
    முரண்தொடையிலிருந்து…..)]]]

    சூப்பரப்பூ..!

    ReplyDelete
  72. [[[shankar said...

    Chappal pinchipochu !!!]]]

    ச்சே.. அப்படீல்லாம் நினைக்காதீங்க. என் கோபத்தை எழுத்தால் மட்டும்தான் காட்டுகிறேன்..!

    ReplyDelete
  73. [[[டவுசர் பாண்டி... said...
    வெறும் விசாவை மட்டும் வாங்கிக் கொண்டு இந்தியா வர பார்வதி அம்மாள் சாமானிய மனுஷி இல்லை. மடிந்து போன இயக்கத்தின் மகத்தான தலைவனின் தாயார். விடுதலைப் புலிகள் சம்பந்தப் பட்டவர்களுக்கு இந்திய மண்ணில் அனுசரனை இல்லையென்பது அங்கை நெல்லி.

    இத்தகைய சூழலில் நிஜமாகவே திருமதி.பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க நினைத்திருப்பவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். கலைஞரை சந்தித்து பேசியிருக்கலாம். அல்லது திருமா மாதிரியானவர்களின் துனையோடு அதற்கான சூழ்நிலைகளை உருவாக்கும் முயற்சிகளிலாவது ஈடுபட்டிருக்கலாம்.

    அதையெல்லாம் விடுத்து அடுத்தவனுக்கு தெரியாமல் விமான நிலைய வாசலில் வில்லங்க நாடகம் நடத்தி விட்டு கருணாநிதி தலையினை உருட்டுவது நியாயமில்லை. கலைஞர் மற்றும் சோனியாவின் நிலைப்பாடு தெரிந்தே அவர்களை சிக்கலில் இழுத்துவிடும் குறுகிய அரசியல் நாடகமே தவிர அந்த அம்மையாரின் உடல் நலம் குறித்த அக்கறை இந்த அரசியல்வாதிகளுக்கு இல்லை.]]]

    சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது டவுசர் பாண்டி..!

    அவர்கள் தங்களது சொந்த முயற்சியெடுத்து இதைச் செய்திருக்கும்போது அடுத்தக் கட்சிக்காரர்களிடம் போய் எப்படிச் சொல்வார்கள்..?

    அதிலும் கருணாநிதியிடமும், திருமாவிடமும்..? இதுக்குச் சொல்லாமலேயே இருக்கலாம்..!

    [[[சமீபத்தைய உங்களின் பதிவுகள் நீங்கள் பிரச்சினைகளை அதீத உணர்வுவயப்பட்ட நிலையில் அணுகுகிறீர்கள் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.
    இது உங்களின் உடல்நலத்திற்கு ஏற்றதில்லை.]]]

    அக்கறைக்கும், அனுசரணைக்கும் மிக்க நன்றிகள் பாண்டி..!

    ReplyDelete
  74. [[[பார்வையாளன் said...
    "பார்வதியம்மாள் தமிழகத்திற்கு வந்ததே தனக்குத் தெரியாது என்று"

    பாவம் எப்பவும் டீ சாப்டர கடைல, தினதந்தி படிச்சுதான், அவரு விஷயத்தை தெரிஞ்சுகிட்டாராம். இதை போய் கிண்டல் செய்றீங்களே... உங்களை மன்னித்து விட்டு விடுமாறு, எல்லாம் வல்ல இயற்கையை பிரார்த்தித்து கொள்கிறேன்.]]]

    இயற்கையா..? எல்லாம் வல்ல முருகன் என்றிருக்க வேண்டும்..!

    ReplyDelete
  75. [[[Sreenivasan said...

    ராமதாசுவை பத்தி நல்லாவே தெரியும். திருமா சிறுத்தையும் இல்லை சிங்கமும் இல்ல; அது ஒரு புலி கொட்டை எடுக்கப்பட்ட புலி, கெட்டுப் போன குறுமா; ஒரு நல்ல விசயத்துக்கும் லாயக்கில்லாத புலி, வேத்த்துவேட்டு வெறுமா.

    என்ன இவனுங்கள்ல ஓரளவுக்கு விஷயம் உள்ள வைகோ கொஞ்சம் நல்ல மனுஷன் (கவனிக்கவும் நான் அவரின் புலி ஆதரவை ஏற்க்கவில்லை) . ஆனா ஓட்டு போட அந்தாளு பணம் தர மாட்டாரு. இன்னிய நிலமைல ஜெ. இருந்துருந்தா சிகிசைக்கவது அனுமதிசிருக்கும்.

    பெருச பத்தி நல்லாவே தெரியும்...

    ஹ்ம்ம் என்னைக்குதான் இந்தியாவுக்கு நல்ல காலமோ. தமிழா நீ வழக்கம்போல டாஸ்மாக்-ல ஞானத்தை தேடு.]]]

    அண்ணே.. இது உனக்கே நியாயமா..? நான் என்னிக்கு டாஸ்மாக்குக்கு போயிருக்கேன்..?

    ReplyDelete
  76. [[[seetha said...

    ரொம்பவும் மனசு கஷ்டப்படுகிறது. வயதான காலத்தில் என்நென்ன துன்பம் பார்வதி அம்மாவுக்கு.

    நான் ஒரு புலி அபிமானி இல்லை என்பதர்காகவே இலங்கக்கு போ(?) என்று சொன்னவர்கள் உண்டு. அவர்கள் எல்லாம் இப்போ எங்கே?
    மொழியை வைத்து இதைவிட பிழைப்பு நடத்திய இனம் இன்னொன்று உண்டா என்று தேடி பார்க்கணும். மனிதாபிமானம் இல்லாமல் மொழிஅபிமானம் வைத்து என்ன பயன். ரொம்பவும் வருத்தமாக உள்ளது.]]]

    எனக்கும் உங்கள் நிலைமைதான்..!

    நானும் புலி எதிர்ப்பாளனாகத்தான் அறியப் பெற்றேன்.. நானும் அது மாதிரியான வசவுகளைப் பெற்றவன்தான்..!

    மொழி, இனம், மதம் தாண்டி மனிதநேயத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாமல் செய்கிறது தனி மனித அரசியல்..! வெட்கக்கேடு..!

    தங்களுடைய முதல் வருகைக்கு மிக்க நன்றிகள்..!

    ReplyDelete
  77. [[[kanagu said...
    Annalum ungala romba paratanumna.
    enaku namma mudhalavara neraya thitti veruppe vandhuduchina. avar thiruntha porathu illa. neenga nalla kaalam ithellam pathivu panni vaikureenga. illana ivar panna sadhanaigala maatume solli thiyagi aakiduvanga.]]

    நன்றி தம்பி கனவு அவர்களே..! இன்னுமா தமிழ்ல டைப் பண்ணக் கத்துக்கலை..?

    ReplyDelete
  78. [[அண்ணே.. இது உனக்கே நியாயமா..? நான் என்னிக்கு டாஸ்மாக்குக்கு போயிருக்கேன்..?]]

    உங்கள சொல்லலைங்க... சத்தியமா. நம்மூருல எப்படா காலைல 8.00 மணி ஆகும் எப்படா சாயந்திரம் 6.00 மணி ஆகுமுன்னு திரியிற புறம்போக்கு, மானம்கெட்ட சூடு சொரணை இல்லாத, ஓட்டு போடுறதுக்கு அரசியல் கட்சிகள் கிட்ட வாய்க்கரிசி வாங்கிகிட்ட 'குடி'மகன்கள சொன்னேன்.


    அப்பறம் அது என்ன 'அண்ணன்னு' கேப்புல சைக்கிள் ஓட்டுறது. நான் உங்கள விட சின்ன பையன்

    ReplyDelete
  79. Shame for all tamilan ,
    How a CM does not know abt her arrival in airport ?

    ReplyDelete
  80. [[[Veliyoorkaran said...
    Fantastic..!]]]

    நன்றி வெளியூர்க்காரன் ஸார்..!

    ReplyDelete
  81. [[[Sreenivasan said...

    [[அண்ணே.. இது உனக்கே நியாயமா..? நான் என்னிக்கு டாஸ்மாக்குக்கு போயிருக்கேன்..?]]

    உங்கள சொல்லலைங்க... சத்தியமா. நம்மூருல எப்படா காலைல 8.00 மணி ஆகும் எப்படா சாயந்திரம் 6.00 மணி ஆகுமுன்னு திரியிற புறம்போக்கு, மானம்கெட்ட சூடு சொரணை இல்லாத, ஓட்டு போடுறதுக்கு அரசியல் கட்சிகள்கிட்ட வாய்க்கரிசி வாங்கிகிட்ட 'குடி'மகன்கள சொன்னேன்.]]]

    ஓஹோ.. அப்படியா? கொஞ்சம் வெளக்கமா சொல்லப்படாதா..? நான் என்னைத்தான் நினைச்சு புலம்பிட்டேன்.. ஸாரி..!

    [[[அப்பறம் அது என்ன 'அண்ணன்னு' கேப்புல சைக்கிள் ஓட்டுறது. நான் உங்களவிட சின்ன பையன்]]]

    அப்படியா..? எழுத்துல பார்த்தா அப்படி தெரியலீங்களேண்ணா..!

    ReplyDelete
  82. [[[Dharmarajan said...
    Shame for all tamilan, How a CM does not know abt her arrival in airport?]]]

    ச்சும்மா நடிக்கிறார்ண்ணே.. வர்றது எல்லாம் அவருக்கு முன்னாடியே தெரியும்..!

    இல்லைன்னா எதுக்கு போலீஸ் வைகோவும், நெடுமாறனும் வர்றதுக்கு முன்னாடியே ஏர்போர்ட்டுக்கு வரணும்..?

    இதையும் ஒரு சி.எம். வெக்கமில்லாம சொல்றாரு பாருங்க.. இது நம்ம தலையெழுத்து..!

    ReplyDelete
  83. //இவருக்கே தெரியாது என்றால் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டுக்கு மட்டும் எப்படி தெரிந்ததாம்..?//

    அது ஒன்னுமில்லிங்ணா, அந்த ஜாங்கிரி...ச்ச்சே... ஜாங்கிட்டு தமிழக முதலமைச்சரை மதிக்காம அப்படி செஞ்சிட்டாராம்.

    ஆமா,”அவரு” தமிழ் நாட்டோட முதலை அமைச்சரா? முதலமைச்சரா?

    ReplyDelete
  84. //அம்பேத்கரின் அரசியலில் இருந்து பெரியாரின் அரசியல்வரைக்கும் கிண்டி கிழங்கெடுக்கும் இந்த சிறுத்தைக்கு பார்வதியம்மாள் திருப்பியனுப்பட்ட பின்னணியில் இருந்தது யாரென்று தெரியாதாம்..//

    பாவம்!

    கிழடுவின் கிழங்கை கிண்டிக்கொண்டிருந்ததோ என்னவோ?

    ReplyDelete
  85. //சபாஷ்.. 2003-ல் புரட்சித் தலைவி எழுதியனுப்பிய ஒரு 'நோட்'..(இது கோரிக்கைதான்.. வேண்டுதல்தான்..) இதை வைத்து தற்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் அந்தக் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமென்றால்..

    "தினகரன் பத்திரிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டு மகன் மு.க.அழகிரியை காப்பாற்றிய தமிழக அரசை டிஸ்மிஸ் செய்..

    மத்திய அமைச்சர் ராஜாவின் பல ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்டரம் ஊழலுக்கு உடந்தையாய் இருக்கும் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்..

    இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைத்திருக்கும் கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்..

    முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பொய்யான தகவலையளித்த தமிழக அரசை டிஸ்மிஸ் செய்..

    தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்க்க வக்கில்லாத தமிழக அரசை டிஸ்மிஸ் செய்.."

    இவைகளெல்லாம் தமிழகத்தின் தற்போதைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவி, முன்னாள் முதலமைச்சர், 2003-ல் 'நோட்' எழுதிக் கொடுத்து, இப்போது உங்களுக்குக் கை கொடுத்திருக்கும் 'கோப்பெருந்தேவி' இந்த நான்காண்டு காலத்தில் எழுப்பியிருக்கும் கோஷங்கள்தான்..

    அந்த 'நோட்'டை வைத்து எப்படி நடவடிக்கை எடுத்தீர்களோ.. அதேபோல் இப்போதும் 'போயஸ் ஆத்தா' இந்த மூன்றரை ஆண்டுகளாக எழுப்பிக் கொண்டிருக்கும் இந்த 'நோட்ஸ்'களை வைத்தும் சூடு, சொரணை இருந்தால் நடவடிக்கை எடுங்கள் மிஸ்டர் மன்னமோகனசிங்..!

    டேய் மண்ணு மோகன் சிங்கு மாப்பு.

    தமிழன் வெச்சிட்டாண்டா ஆப்பு.

    ReplyDelete
  86. [[[’மனவிழி’சத்ரியன் said...

    //இவருக்கே தெரியாது என்றால் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டுக்கு மட்டும் எப்படி தெரிந்ததாம்..?//

    ஆமா,”அவரு” தமிழ் நாட்டோட முதலை அமைச்சரா? முதலமைச்சரா?]]]

    முதல் அமைச்சர் என்றுதான் அவரே அவரைப் பற்றிச் சொல்லிக் கொள்கிறார்..!

    ReplyDelete
  87. [[[’மனவிழி’சத்ரியன் said...

    //அம்பேத்கரின் அரசியலில் இருந்து பெரியாரின் அரசியல்வரைக்கும் கிண்டி கிழங்கெடுக்கும் இந்த சிறுத்தைக்கு பார்வதியம்மாள் திருப்பியனுப்பட்ட பின்னணியில் இருந்தது யாரென்று தெரியாதாம்..//

    பாவம்! கிழடுவின் கிழங்கை கிண்டிக் கொண்டிருந்ததோ என்னவோ?]]]

    சாப்பிட்டுக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறேன்..!

    ReplyDelete
  88. [[[’மனவிழி’சத்ரியன் said...

    //டேய் மண்ணு மோகன் சிங்கு மாப்பு. தமிழன் வெச்சிட்டாண்டா ஆப்பு.]]]

    -))))))))))))

    ReplyDelete
  89. சரியான மொக்கை. சங்கம் கிங்கம்னு ஆலயறதை விட்டுட்டு இன்னும் எழுதி பழகுங்க. உங்க முருகன் ரொம்ப சந்தோஷபடுவான். இந்த பதிவுக்கு உங்க கிட்ட இருந்து காசு வாங்கி ஒட்டு போட்ட கூட்டத்தை பார்த்தல் நீங்களும் அலப்பறை சங்கத்துல நிர்வாகி ஆகுவதில் போட்டி போடுவது சரியா தான் இருக்கு. அதிமுகவுக்கு சொம்பு தூக்குற மாதிரிதான் இருக்கு இந்த பதிவு.

    ReplyDelete
  90. [[[இடிச்சபுளி said...
    சரியான மொக்கை. சங்கம் கிங்கம்னு ஆலயறதை விட்டுட்டு இன்னும் எழுதி பழகுங்க. உங்க முருகன் ரொம்ப சந்தோஷபடுவான். இந்த பதிவுக்கு உங்ககிட்ட இருந்து காசு வாங்கி ஒட்டு போட்ட கூட்டத்தை பார்த்தல் நீங்களும் அலப்பறை சங்கத்துல நிர்வாகி ஆகுவதில் போட்டி போடுவது சரியாதான் இருக்கு. அதிமுகவுக்கு சொம்பு தூக்குற மாதிரிதான் இருக்கு இந்த பதிவு.]]]

    நன்றி இடிச்சப்புளியாரே..!

    நான் காசு கொடுத்து ஓட்டுப் போட வைச்சு.. இந்த ஓட்டை வைச்சு நான் ஆஸ்கார் விருது வாங்கப் போகிறேன் என்கிற உங்களுடைய அரிய கண்டுபிடிப்புக்கு உங்களை புழுத்தப்புளி என்று அழைப்பதே மிகச் சரியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்..!

    ReplyDelete
  91. Tamil ini mella saagum - Andre sonnan பாரதி .....

    ReplyDelete
  92. [[[pradeep rajaram said...
    Tamil ini mella saagum - Andre sonnan பாரதி.]]]

    அவன் தமிழ் மொழியைச் சொன்னானோ.. தமிழ் இனத்தைச் சொன்னானோ தெரியவில்லை..

    இரண்டுமே நடந்துவிடும் போலிருக்கிறது..!

    ReplyDelete