Pages

Thursday, March 25, 2010

வலைப்பதிவர்கள் கலந்துரையாடல் கூட்டம் - மறக்காம வந்திருங்க..!

25-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!!!

சனிக்கிழமை. கிரகந்தான்.. ஆனா அதைவிட பெரிய கெரகம் நாமதான். நமக்கே தெரியும்.. 'சனி போனால் திரும்பி வராது'ம்பாங்க.. அதுனால நாம விடக்கூடாது.. அன்னிக்கே நாம நம்மளோட சதி வேலையை, ஸாரி!! 'சனி' வேலையை ஆரம்பிச்சாகணும்..

ச்சும்மா எத்தனை நாளைக்குத்தான் 'அவர் ஏற்பாடு'.. 'இவர் ஏற்பாடு'ன்னு பெயரைச் சொல்லிக்கிட்டே இருக்குறது.. 'நம்ம சங்க ஏற்பாடு'. 'நம்ம அமைப்போட ஏற்பாடு'.. 'நம்ம பேமிலி செட்டப்பு' அப்படீன்னு சொல்றதுக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு..

அதுக்குத்தான் வசதியா வர்ற சனிக்கிழமை (27-03-2010) வலைப்பதிவர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் கே.கே.நகரில் முனுசாமி சாலையில் உள்ள டிஸ்கவரி புக் ஸ்டால்ல நடக்கப் போகுது..

உண்மையாக இனிமேல் வலைப்பதிவர்கள் சமூகம் என்ன செய்ய வேண்டும்..?

எப்படிச் செயல்பட வேண்டும்..?

குழுமமாகவா..? அல்லது ஒரு தொழிலாளர் சங்கத்தைப் போன்றா..? அல்லது ஒரு கட்சியைப் போன்றா..?

குழுமம் என்றால் அதன் நடைமுறைகள் என்னென்ன..? யார், யார் அதில் பொறுப்பேற்பது..? என்னென்ன பொறுப்புக்களை அமைப்பது..? எப்படி அதன் செயல்பாடுகளை வடிவமைப்பது..?

அந்தக் குழுமத்தின் நோக்கம் என்ன..? அதன் செயல்பாடுகள் என்ன..? எப்படியெல்லாம் செயல்பட வைக்க வேண்டும்..? அதன் நடைமுறைகளை அமல்படுத்துவது எப்படி..?

குழுமத்தை நேரடியாக நிர்வகிப்பது எப்படி.? யார் கவனித்துக் கொள்வது.? நிர்வாகச் செலவுகளை யார் ஏற்பது..? குழுமத்தின் செலவுகளுக்காக பணம் வசூலிப்பது எப்படி..? அதனை பொறுப்பாகக் கவனித்துக் கொள்வது யார்..?

இப்படி நமக்குள் ஒளித்து வைத்திருக்கும் அல்லது எழுந்திருக்கும் பலதரப்பட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில்கள் உடனுக்குடன் அனைவராலும் வெளிப்படையாக வைக்கப்பட வேண்டும்.

இங்கே யாரும் இப்போது வெட்டி ஆபீஸராக இல்லை என்பது நமக்கே நன்கு தெரியும்.. ஒரு முறை கூடி பேசுகின்றபோதே ஏதாவது ஒரு முடிவை நாம் எடுத்தாக வேண்டும். கட்சிக் கூட்டம் போல அடுத்தக் கூட்டத்தில் பேசித் தீர்ப்போம் என்று காலத்தைக் கடத்துவதில் அர்த்தம் இல்லை.

பதிவர்கள் வருகின்றபோதே மேலே சொன்னதுபோலோ அல்லது மேலே சொன்னதில் இல்லாமல் உங்களுக்குத் தோன்றியவற்றிற்கும் தயாரான பதில்களையோ அல்லது இது பற்றிய உங்களது மேலான கருத்துக்களையோ தயார் செய்து கொண்டு வந்துவிட்டால் நமது வேலை சுலபமாகிவிடும்.

இந்தக் கூட்டம் "கலந்துரையாடல் மட்டுமே" என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால் அனைத்துப் பதிவர்களும் தங்களது கருத்துக்களை முன் வைத்து அந்தக் கருத்துக்கள் பெருவாரியான பதிவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அது அங்கேயே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில் கூட்டம் நிறைவு பெற வேண்டும்.

இது எனது அவா..!

மற்றபடி தோழர் லக்கி தனது பதிவில் எழுதியிருப்பதைப் போல் 'எழுத்தாளர்' என்கிற வார்த்தை நமக்குத் தேவையில்லை என்றே நானும் நினைக்கிறேன்.

அதேபோல் வெறுமனே 'தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்' என்று வைப்பதற்குப் பதிலாக 'சென்னை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்' என்று ஆரம்பிக்கலாம்.

ஏனெனில் இதேபோல் பல்வேறு ஊர்களில் இருக்கின்ற வலைப்பதிவர்களும் ஊர்ப் பெயரில்லாமல் 'தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்' என்று வைத்தால் குழப்பம் வருமே..?

இதற்கு மாறாக அவரவர் ஊர்களின் பெயர்களில் வலைப்பதிவர் குழுமங்களை ஆரம்பித்தால் அழைப்பதற்கும், குழப்பங்கள் வராமல் இருப்பதற்கும் ஏதுவாக இருக்கும்.

'தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்' என்று சங்கங்களின் சட்டத்தின் அடிப்படையில் ஒரு இடத்தில்தான் பதிவு செய்ய முடியும் என்பதையும் நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும்.

ஆகவே 'சென்னை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்' அல்லது 'சங்கம்' என்று ஆரம்பிப்பது சாலச் சிறந்தது என்கிறேன்.

மேற்கொண்டு ஒரு விஷயம் சொல்ல வேண்டுமெனில் கூட்ட அரங்கம் சிறியது என்பதால் அங்கே மெட்டல் டிடெக்டர் கருவியெல்லாம் வைத்து பதிவர்களுக்கு பாதுகாப்பு வழங்க இயலாது.

ஆகவே வீசுவதற்கேற்ற முட்டைகள், அரிவாள், கத்திகள், சுத்தியல்கள், கம்புகள் மற்ற இத்யாதி.. இத்யாதிகள்.. அரங்கத்தின் உள்ளே பாதுகாப்பு கருதி அனுமதிக்கப்படாது.

ஆனால் பதிவர்கள் அவரவர் வாகனங்களில் கொண்டு வந்து வாகனத்திலேயே வைத்திருக்கலாம்.. அது பற்றி நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை.

எப்படியும் நிகழ்ச்சி முடிந்தவுடன் தாகசாந்திக்காக எந்தப் பக்கம் செல்வது என்கிற சர்ச்சையில் சிலர் இறங்கக்கூடும். அதை சாக்காக வைத்து ஆசையோடு காத்திருக்கும் நண்பர்கள் தாங்கள் கொண்டு வரும் 'பூஜை பொருட்களை' முடிந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக வருகின்ற பதிவர்களுக்கு கொடுக்கப்படவிருக்கும் டீ, பிஸ்கட் செலவுக்கான தொகையை மட்டும்(பீடி, சிகரெட், கஞ்சா, பிரவுன்சுகர், தாகசாந்தி அயிட்டங்களுக்கு அல்ல) நான் ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்பதை எனது அண்ணாச்சிகளுக்கு தெரிவித்துவிட்டு தற்காலிகமாக உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்..

நன்றி

வணக்கம்.


நிகழ்ச்சி நிரல்

தேதி : 27.03.10/சனிக்கிழமை
நேரம் : மாலை 5.30
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6.முனுசாமி சாலை முதல் மாடி,
மஹாவீர் காம்ப்ளெக்ஸ்
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்,
மேற்கு கே.கே.நகர்,
சென்னை –78

43 comments:

  1. உங்க பழைய பதிவெல்லாம் படிச்சேன் .அட்டகாசம். நடுரோட்ல புலம்பல் ,அனுராதா .சூப்பர் சார்

    ReplyDelete
  2. என்னது இடுகை இவ்வளவு சின்னதா இருக்கு? இது நியாயமா?. சென்னை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் \ சங்கம் இதற்கும் ஒரு முடிவு எடுக்கவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. சந்திப்பு இனிதே நடைபெற என் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. அங்க சந்திப்போம் ..:))

    ReplyDelete
  5. சந்திப்போம்.. விவாதிப்போம்.... சந்தோஷமாக இருப்போம்..

    சண்டையெல்லாம் போட மாட்டோம்.

    உங்களுக்கு ஏன் இவ்வளவு பயம்..??

    யாமிருக்க பயம் ஏன்..?

    முருகா.. முருகான்னு சொல்லிகிட்டே வாங்க..

    ReplyDelete
  6. சனிகிழமை அன்னைக்கு வர முடியுமா-னு தெரியல அண்ணா... :( :(

    ஞாயிறு அன்னைக்கு அங்க வரேன்.. முடிந்தால் சந்திக்கலாம் அண்ணா... நீங்க அன்னைக்கு அங்க இருப்பீங்களா???

    ReplyDelete
  7. என்னா சார். என்னல்லாமோ சொல்லி பயமுறுத்துறீங்க.

    ReplyDelete
  8. குறும்பா... இதுவே சின்னதா???
    மீட்டிங் அறிவிப்பை இதை விட யாராவது பெரிசா எழுத முடியுமா??

    அண்ணன் ஸ்பான்ஸர் உ.த வாழ்க வாழ்க..
    அண்ணே விடாதீங்க தலைவர் பதவியை பிடிச்சிடுங்க

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  9. வாழ்த்துக்க‌ள் ஸார் :)

    ReplyDelete
  10. சென்னை தமிழ் வலைப் பதிவர்கள் சங்கம் என்று பதிவு செய்வது நல்லதே. மற்ற ஊர்களில் உள்ளவர்கள் இதனால் ஒன்று கூடி தங்கள் ஊரில் இப்படி குழுமம் அமைக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.நல்லதொரு யோசனை.

    ReplyDelete
  11. அண்ணே நீங்க கடைசியில் சொல்றத பார்த்தா
    கட்சி கூட்டம் மாதிரி...சண்டையெல்லாம் நடக்குமா??...

    ReplyDelete
  12. சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. [[[padma said...
    உங்க பழைய பதிவெல்லாம் படிச்சேன். அட்டகாசம். நடுரோட்ல புலம்பல், அனுராதா. சூப்பர் சார்]]]

    மிக்க நன்றிம்மா..!

    ReplyDelete
  14. [[[பழமைபேசி said...
    வாழ்த்துகள்!]]]

    ஆ..! பழமையண்ணே..!

    வாழ்த்துக்கு நன்றிங்கண்ணா..!

    ReplyDelete
  15. [[[குறும்பன் said...
    என்னது இடுகை இவ்வளவு சின்னதா இருக்கு? இது நியாயமா?. சென்னை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் \ சங்கம் இதற்கும் ஒரு முடிவு எடுக்கவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.]]]

    ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அனர்த்தமா..?

    இது நல்லாயில்லை குறும்பன்..!

    ReplyDelete
  16. [[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    சந்திப்பு இனிதே நடைபெற என் வாழ்த்துகள்.]]]

    வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்டார்ஜன்..!

    ReplyDelete
  17. [[[♫ஷங்கர்..】 ™║▌│█│║││█║▌║ said...
    அங்க சந்திப்போம்..:))]]]

    ஓகே.. ஓகே.. ஓகே..!

    ReplyDelete
  18. [[[ராமு said...
    சந்திப்போம்..]]]

    சந்திப்போம்..!

    ReplyDelete
  19. [[[butterfly Surya said...

    சந்திப்போம்.. விவாதிப்போம்.... சந்தோஷமாக இருப்போம்..
    சண்டையெல்லாம் போட மாட்டோம்.
    உங்களுக்கு ஏன் இவ்வளவு பயம்..??
    யாமிருக்க பயம் ஏன்..? முருகா.. முருகான்னு சொல்லிகிட்டே வாங்க..]]]

    சண்டையெல்லாம் இல்லாம ஒரு கூட்டமா..? அது நல்லாவாண்ணே இருக்கும்..?

    ReplyDelete
  20. [[[kanagu said...
    சனிகிழமை அன்னைக்கு வர முடியுமா-னு தெரியல அண்ணா...:(:(
    ஞாயிறு அன்னைக்கு அங்க வரேன்.. முடிந்தால் சந்திக்கலாம் அண்ணா... நீங்க அன்னைக்கு அங்க இருப்பீங்களா???]]]

    சனிக்கிழமை வரப் பாருங்க கனகு..!

    நான் ஞாயிறன்று வீட்லதான் இருப்பேன். போன் பண்ணிட்டு வாங்க..!

    ReplyDelete
  21. [[[நேசமித்ரன் said...
    அண்ணே வாழ்த்துகள்]]]

    மறக்காம வந்திருங்கண்ணே..!

    ReplyDelete
  22. [[[வானம்பாடிகள் said...
    என்னா சார். என்னல்லாமோ சொல்லி பயமுறுத்துறீங்க.]]]

    பயப்படாதீங்க.. முருகன் இருக்கான்.. பார்த்துக்குவான்..! மறக்காம வந்திருங்க..!

    ReplyDelete
  23. [[[sriram said...
    குறும்பா... இதுவே சின்னதா???
    மீட்டிங் அறிவிப்பை இதைவிட யாராவது பெரிசா எழுத முடியுமா??
    அண்ணன் ஸ்பான்ஸர் உ.த வாழ்க வாழ்க.. அண்ணே விடாதீங்க தலைவர் பதவியை பிடிச்சிடுங்க

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்]]]

    அய்.. எனக்கு முதல் ஆதரவை பாஸ்டன் அண்ணன் கொடுத்திருக்காரு..

    நன்றிங்கண்ணோவ்..!

    ReplyDelete
  24. [[[ர‌கு said...
    வாழ்த்துக்க‌ள் ஸார்:)]]]

    நன்றி ரகு ஸார்..!

    ReplyDelete
  25. [[[திருவாரூரிலிருந்து சரவணன் said...
    சென்னை தமிழ் வலைப் பதிவர்கள் சங்கம் என்று பதிவு செய்வது நல்லதே. மற்ற ஊர்களில் உள்ளவர்கள் இதனால் ஒன்று கூடி தங்கள் ஊரில் இப்படி குழுமம் அமைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நல்லதொரு யோசனை.]]]

    நன்றும், நன்றியும் சரவணனுக்கு..!

    ReplyDelete
  26. [[[ஜெட்லி said...
    அண்ணே நீங்க கடைசியில் சொல்றத பார்த்தா கட்சி கூட்டம் மாதிரி சண்டையெல்லாம் நடக்குமா??...]]]

    நடத்தினாத்தான் அங்க கூட்டம் நடந்ததா எல்லாரும் ஒத்துக்குவாங்க..!

    ReplyDelete
  27. [[[சைவகொத்துப்பரோட்டா said...
    சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.]]]

    நன்றி சைவம் ஸார்..!

    ReplyDelete
  28. அன்பின் சரவணன்

    சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற நல்வாழ்த்துகள் = சட்டுப்புட்டுனு ஆரம்பிச்சிடுங்க சங்கத்தையோ இல்ல குழுமத்தையோ - நாங்களும் மதுரல ஆரம்பிக்கணூம்

    ReplyDelete
  29. முருகா சரணம் ! முடிந்தால் வரவும் !

    ReplyDelete
  30. [[[cheena (சீனா) said...
    அன்பின் சரவணன்
    சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற நல்வாழ்த்துகள் = சட்டுப்புட்டுனு ஆரம்பிச்சிடுங்க சங்கத்தையோ இல்ல குழுமத்தையோ - நாங்களும் மதுரல ஆரம்பிக்கணூம்.]]]

    சீனா ஸார்.. தங்களுடைய ஆர்வத்திற்கு மிக்க நன்றிகள்..!

    நீங்களும் மதுரையில் ஆரம்பித்துவிடலாம்.. ஒன்றும் பிரச்சினையில்லை.

    எங்களுக்காக காத்திருக்க வேண்டாம்..!

    ReplyDelete
  31. [[[மணிஜீ...... said...
    முருகா சரணம்! முடிந்தால் வரவும்!]]]

    அப்புறம் வராம.................?

    ReplyDelete
  32. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    vaazhthukkal]]]

    ரமேஷ் ஸார்.. சத்தியமா நீங்க நல்லவர்தான்.. ஒத்துக்குறேன்..

    தங்களுடைய முதல் வருகைக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  33. [[[புளியங்குடி said...
    வாழ்த்துக்கள்...]]]

    நன்றியோ நன்றி புளியங்குடி ஸார்..!

    ReplyDelete
  34. என்னா சார். என்னல்லாமோ சொல்லி பயமுறுத்துறீங்க.

    ReplyDelete
  35. ஒரு எடத்துல கூட முருகனப் பத்தி சொல்லவே இல்ல !

    ReplyDelete
  36. அண்ணே உங்கள சந்திக்க முடியாததற்கு வருந்துகிறேன். அடுத்த வாரம் சந்திக்கிறேன்.விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete