Pages

Saturday, March 13, 2010

மாத்தி யோசி - திரைப்பட விமர்சனம்..!

13-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுத வேண்டாம்னுதான் நினைச்சேன். ஆனா முடியலை.. மன்னிச்சுக்குங்க..!!!

தண்டோரா மணி, அகநாழிகை வாசுதேவன், பட்டர்பிளை சூர்யா என்ற அண்ணன்மார்களின் அன்புக் கட்டளைக்கிணங்கி படம் பார்க்கச் சென்றிருந்ததால், அவர்கள் மனம் வருத்தப்படுமே என்கிற காரணத்துக்காக இந்த விமர்சனம்..!


ஏன் எழுத வேண்டாம் என்று நினைத்தால் படம் நான் நினைத்துச் சென்றதைப் போல் எதையும் மாத்தி யோசித்து எடுக்கப்படவில்லை.. எதையோ மாத்தணும்னு நினைச்சுத்தான் கதை பேச உக்காந்திருக்காங்க போலிருக்கு. ஆனா எதையுமே மாத்தாம அப்படியே எடுத்து வைச்சிருக்காங்க..

சினிமாவுக்குள்ளேயே இருந்துக்கிட்டு சினிமாக்காரங்களை திட்டுறதுக்கு மனசு வர மாட்டேங்குது.. "ஆனா விமர்சனம் பண்ணலாமே..?" அப்படீன்னு நீங்க கேக்குறீங்க கரெக்ட்டா..? கரெக்ட்டுதான்.. ஆனா எதை விமர்சனம் பண்றதுன்னுதான் தெரியலை.. ஏதாவது இருந்திருந்தால்தானே..?

மாங்கா, பாண்டி, கோனா, மாரி இந்த நாலு பேரும் மதுரைக்குப் பக்கத்துல இருக்குற கடவூர் அப்படீன்ற கிராமத்துல இருக்குற காலனி பசங்க.. செய்றதெல்லாம் சேட்டை.. உடும்பு பிடிக்கிறது.. ஓணானை அடிக்கிறது.. முயலை கொல்றது, ஊர் பக்கம் வரும் ஸ்டேஷனிரிஸ் வேனை நிறுத்திக் கொள்ளையடிக்கிறதுன்னு பலவித கொடுமைகளைச் செய்யும் சேட்டைக்காரர்கள்.


ஊரில் இருக்கும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள், ஊர்க் கோவிலின் தேரை சுத்தம் செய்யும் காலனி சிறுமியை அடித்துவிட, அதனால் கோபப்பட்டு ராவோடு ராவாக ஊர்க் கோவிலில் இருந்த முருகனை தேரோடு தள்ளிக் கொண்டு காலனிக்குள் கொண்டு போய் வைத்துவிடுகிறார்கள் இந்த நாலு மாத்தி யோசி மைனர்களும்.

ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி நாலு பேரையும் அடித்து உதைக்கும் ஆதிக்கச் சாதியினர், எப்போதும் அவர்களுக்குத் துணை போகும் காவல்துறையிடம் காலனி பசங்களை மாட்டிவிட்டு லாடம் கட்ட வைக்கிறார்கள். அடி, உதைபட்டு வரும் நம்ம காலனி பசங்க டீம் பண்ணையாருக்கு பாடம் புகட்ட வேண்டி பண்ணையாரின் வீட்டுக்குள் நுழைகிறது. பண்ணையாரின் மகளை ஒன் சைடாக லவ்விக் கொண்டிருந்த ஒரு டீம் மெம்பர் தூங்கிக் கொண்டிருக்கும் பண்ணையாரின் மகளுக்கு வலுக்கட்டாயமாக கிஸ் கொடுத்துவிட்டுத் தப்பியோடுகிறது. தங்களைத் தேடி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு மொட்டையடித்து ஹிட்லர் மீசையோடு ஊருக்குள் அனுப்பி வைக்க..


இப்போது போலீஸும், ஆதிக்கச் சாதியினரும் ஒன்று சேர்ந்து கொலைவெறியோடு இந்த மாத்தி யோசி டீமைத் தேடுகிறார்கள். உயிருக்குப் பயந்து சென்னைக்கு வண்டியேறுகிறார்கள் நால்வரும்..

வந்தாரை வாழ வைக்கும் சென்னை இவர்களுக்கு 'பெப்பே' என்கிறது.. வந்த இடத்தில் வயிற்றுப் பசிக்காக மாத்தி யோசித்து ஒரு அருமையான வழியைக் கண்டுபிடிக்கிறார்கள். அது திருட்டு. அப்படியொரு இடத்தில் திருடப் போய் ஹீரோயின் என்று சொல்லப்படும் ஷம்முவை காப்பாற்றி தனது டீமில் சேர்க்கிறான் பாண்டி.

ஒரு மாமா பயலினால் பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட ஷம்மு வெளிநாடு செல்லவோ அல்லது மேல்படிப்பு படிக்கவோ முயல்கிறாளாம்.. பல காட்சிகளில் வசனங்களை கொத்து புரோட்டா போட்டிருப்பதால் இவ்வளவுதான் ஊகிக்க முடிகிறது.

'மாத்தி யோசி' டீம் ஷம்முவை கஷ்டப்பட்டு ஊருக்கு அனுப்பிவைக்க.. அவள் போன வேகத்தில் அவர்களிடமே திரும்பி வந்து நிற்கிறாள். அவளைத் தேடி வரும் மாமா ஊரில் இருக்கும் சல்லிப் பயல்களிடமெல்லாம் ஷம்முவின் போட்டோவைக் காட்டி கண்டுபிடிக்கச் சொல்ல..


இந்த 'மாத்தி யோசி' டீம் கடைசியில் என்னதான் செய்தது என்பதையும், ஷம்மு என்னவானாள் என்பதையும் தயவு செய்து இன்னும் சில தினங்களில் உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக கலைஞர் தொலைக்காட்சியில் இப்படம் காட்டப்படும்போது பார்த்துக் கொள்ளுங்கள்.

நல்ல இலக்கிய ரசனை தெரிந்தவர். அடிப்படையில் பத்திரிகைக்காரர்.. நிறைய விஷய அனுபவம் உள்ளவர் படத்தின் இயக்குநர் நந்தா பெரியசாமி. அந்த ஒரு தகுதிக்காகவே இத்திரைப்படத்தை முதலில் பார்க்க நினைத்து ஓடினேன். பெருத்த ஏமாற்றம்..

கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை.. அலுப்பூட்டும் காட்சியமைப்புகள்.. சவசவ என்று மதுரை ஸ்லாங்கை கொத்துக் கறி போட்டிருக்கும் வசனங்கள்.. வசன டப்பிங்கில் ஏகத்துக்கும் குளறுபடி.. அரதப் பழசான பின்னணி இசை.. என்று எல்லாமே ஒரே நேரத்தில் நம்மைத் தாக்கினால் எவ்வளவுதான் தாங்குவது..?


கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்பதை ஒத்துக் கொள்கிறேன். உடல் உழைப்பு மட்டுமே ஒரு திரைப்படத்தை ஜெயிக்க வைத்துவிடாது. பிரசன்டேஷன் சிறப்பான முறையில் வேண்டும். அது இல்லையெனில் அத்தனையும் வீண்தான்.. சினிமா உலகத்தில் படம் ஓடினால்தான் வெற்றி. இல்லையெனில் தோல்விதான். அந்த வகையில் இவர்களுடைய நல்ல உழைப்பு வீணாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில்தான் கடைசியாக பார்த்தது இது மாதிரியான பின்னணி இசை. பல காட்சிகளில் இசைஞானி இளையராஜாவின் பழைய பாடல்களின் மெட்டையே உலாவ விட்டிருப்பது எரிச்சலோ எரிச்சலைத் தருகிறது. அதிலும் தன்னிடம் விசிட்டிங் கார்டு கொடுத்த பெண்ணைத் தேடி 'மாத்தி யோசி' டீம் செல்லும்போது, ஒலிக்கும் 'கிழக்கே போகும் ரயில்' பாட்டு.. எரிச்சலோ எரிச்சல்..


ஷம்முவின் கேரக்டர் படத்தில் நுழைந்தவுடன் வருகின்ற லாஜிக் ஓட்டைகளில் படம் ஓட்டை விழுந்த படகுபோல் தள்ளாடுகிறது.. நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுகின்ற பெண் இந்தச் சட்டை போடாத நாலு பேருடனும் சென்னையில் உலா வருகின்ற காட்சிகளைப் பார்த்தாலே கொடுமையாக இருக்கிறது.. இதில் இயக்குநர் என்ன மாத்தி யோசித்திருக்கிறார் என்று தெரியவில்லை..?

ஒரு துப்பாக்கி கையில் கிடைத்தவுடன் அதை வைத்துக் கொண்டு அத்தனை கொலைகள் செய்யும்போதும் கத்துகிறார் பாருங்கள் அந்த நடிகர்.. அப்படியே அந்தத் துப்பாக்கியை பிடுங்கி.. நாமளும் பதிலுக்கு..?????? செஞ்சிரலாம்னு கோபமா வருது..

பீலிங் வர வேண்டிய இடத்துல சிரிப்பையும், சிரிப்பு வர வேண்டிய இடத்துல கோபத்தையும் கொடுத்து நமது பி.பி.யை எகிற வைத்திருக்கிறார் இயக்குநர்.

படத்தில் கோபம் வருவதற்காக பாரதியாரின் "ஆத்திரம் கொள்.. ரெளத்திரம் பழகு" என்ற பாடலையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார். உண்மையில் நமக்குத்தான் கோபம் கொப்பளிக்கிறது..

படத்தில் ஒன்றுமே நன்றாக இல்லையா என்று விசனப்பட வேண்டாம். பாராட்டப்பட வேண்டியவர் ஒருவர் இருக்கிறார். அவர் எடிட்டர் கோலா பாஸ்கர். அவர் ஒருவரால்தான் படம் கொஞ்சமாவது தப்பித்தது என்று சொல்லலாம். அடுத்த நிலையில் இருப்பவர் படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்.. சென்னையைவிட கிராமத்து வாழ்க்கையைக் காட்டுகையில் ஜொலிக்கிறது கேமிரா.


நடிகர்களில் மாமாவாக நடித்திருக்கும் ரவி மரியாதான் முதலிடம். கொஞ்சமாவது ரசிக்க வைக்கிறது அவரது நடிப்பு. சட்டை போடாமல் நடக்க வைத்து, தாவ வைத்து, குதிக்க வைத்து, ஓட வைத்து, அலம்ப வைத்து, சலம்ப வைத்து.. இன்னும் என்னென்னமோ வைத்தெல்லாம் பார்த்துவிட்டார்.. மனதை ஒட்டாத கதையினாலும், காட்சிகளினாலும் அந்த நான்கு பேரின் நடிப்பு விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.

உண்மையாகவே ஆதிக்கச் சாதி, காலனி மக்கள் பிரச்சினையைத்தான் கொடுக்கப் போகிறோம் என்று முடிவு செய்து கதையை மாற்றம் செய்திருந்தாலாவது ஒரு 'மாத்தி யோசி'த்த கதை என்று சொல்லியிருக்கலாம். பாதியிலேயே அந்தக் கதையில் இருந்து ஒரே தாவாக தவ்விவிட்டு கடைசிக் காட்சியில் மட்டும், "நாங்களும் உங்களை மாதிரிதானடா.. உங்களை மாதிரியே சாப்பிடுறோம்.. உங்களை மாதிரியே சிரிக்குறோம்.. அழுகுறோம்...!" என்று வசனம் பேசினால் எப்படி..?

சென்னையின் தாதாக்களின் சக்தியைக் காட்டுவதாக நினைத்து போலீஸ் துறையை எந்த அளவுக்கு கேவலமாக்க வேண்டுமோ அந்த அளவுக்கு ஆக்கிவிட்டார்கள். அதிலும் இந்தத் தாதா தனது தம்பியை இன்ஸ்பெக்டர் கடத்தியதற்குப் பதிலடியாக இன்ஸ்பெக்டர் மனைவியைக் கடத்திவந்து தன் வீட்டில் கட்டிவைத்துவிட்டு அவள் கண் முன்பாகவே தன் மனைவியுடன் சல்லாபத்தில் ஈடுபடுவாராம்.. கொடுமை இல்லையா..?

இன்னொரு இடத்துல 'மாத்தி யோசி' டீம் பணத்துக்காக கடத்தின பெண்ணோட அம்மா, "எனக்குப் பணம்தாண்டா முக்கியம்.. பொண்ணு முக்கியமில்லை. பிள்ளை போனா இன்னொரு பிள்ளைய பெத்துக்கலாம்.. பணம் சம்பாதிக்கிறதுதான் கஷ்டம்"னு சொல்லிட்டு அசால்ட்டா போறதை பார்த்தா இவங்களோட 'மாத்தி யோசி'ப்பு எந்த அளவுக்கு இருக்குன்னு புரிஞ்சுக்க முடியுது..!

ஆனாலும், சிற்சில இடங்களில் மட்டுமே 'மாத்தி யோசி'த்திருக்கிறார்கள். ஆனால் அந்த இடங்கள் வெறும் குறியிடூகளாக இருந்து தொலைந்ததானால், கதைக்கு எந்தவிதமான உதவியையும் அவைகள் தராமல் போக அதுவும் வீணானதுதான் மிச்சம்.

படத்தில் ஐந்து நிமிடங்களுக்கொரு முறை வரும் 'மச்சான் மாத்தி யோசி..' 'மச்சான் மாத்தி யோசி..' பாட்டை இயக்குநரும், அவர்தம் குழுவினரும் படத் தயாரிப்பின்போது தினம்தோறும் கேட்டிருந்தாலே உருப்படியாக எதையாவது மாத்தி யோசித்திருப்பார்கள்..

நல்ல கதைக்களம் ஒன்று கையில் இருந்தும், குரங்கு கையில் சிக்கிய பூமாலையாகிவிட்டது இந்த மாத்தி யோசி.

ம்ஹும்.. போறவங்க போய்க்கலாம்..

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

69 comments:

  1. //போறவங்க போய்க்கலாம்//
    இது உங்களுக்கே அநியாயமா இல்ல.. நல்லா கிழிச்சிட்டு இப்படி சொன்னா எப்படி?

    ReplyDelete
  2. //ம்ஹும்.. போறவங்க போய்க்கலாம்..//
    இதுக்கப்புறமும் பாக்குறதுக்கு எங்களுக்கு என்னா கிறுக்கா பிடிச்சிருக்கு
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  3. ஏண்ணே , இந்த விமர்சனம் எழுதுறத்து பணம், கிணம் எதாவது வாங்குனீங்களா ?

    ஒரு சொத்த படத்துக்கு இவ்ளோ பெரிய விமர்சனமா ?

    ReplyDelete
  4. தலைவரே மாத்தியோசி படம் என்னை
    மாத்தியோசிக்க வைக்குது....
    அதாவது இனிமே இந்த மாதிரி புது
    பசங்க நடிச்ச படத்துக்கு போலாமா வேணாமானு.....

    ReplyDelete
  5. எதையுமே பாசிடிவா மாத்தி யோசிக்கிற என் அண்ணனயே டரியலாக்கிற படம்னு பாக்கிறப்போ, உண்மையிலேயே ரொம்ப மாத்திதான் யோசிச்சிருக்காங்க போலிருக்கு. படம் பாக்குறதுல இருந்து எஸ்கேப்... கேபிள் அண்ணன் பக்கத்துல இருந்தாலும் (சிங்கை விசிட்) இன்னுமொரு அன்பு அண்ணனால் நல்ல வார்னிங்... காப்பாத்திட்டீங்க..

    பிரபாகர்.

    ReplyDelete
  6. //எதையுமே பாசிடிவா மாத்தி யோசிக்கிற என் அண்ணனயே டரியலாக்கிற படம்னு பாக்கிறப்போ, உண்மையிலேயே ரொம்ப மாத்திதான் யோசிச்சிருக்காங்க போலிருக்கு. //

    அதானே! உங்களயே நோவடிச்சிட்டாங்களா?

    ReplyDelete
  7. வித்தியாசமா எடுக்கிறேன் பேர்வழி என்று வித்தியாசமே இல்லாமல் எடுத்திருப்பார்களே... விளம்பரங்களைப் பார்த்தால் ரேணிகுண்டா சாயல் தெரிகிறதே... அது உண்மையா...

    ReplyDelete
  8. இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுத வேண்டாம்னுதான் நினைச்சேன். ஆனா முடியலை.. மன்னிச்சுக்குங்க..!!//

    அப்புறம் 'மாத்தி யோசி'ச்சு விமர்சனம் எழுதிட்டீங்க...!

    ReplyDelete
  9. படக்குழு மாத்தி யோசிக்கவே இல்லையே......

    ReplyDelete
  10. //நல்ல கதைக்களம் ஒன்று கையில் இருந்தும், குரங்கு கையில் சிக்கிய பூமாலையாகிவிட்டது இந்த மாத்தி யோசி.//

    :-))

    ReplyDelete
  11. [[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    ரைட்டு]]]

    ஓகே..! எப்பவுமே முதல் கமெண்ட்டா..? எப்ப சாமி தூங்குறீங்க..? எப்போ சாமி முழிச்சிருக்கீங்க..! ஒண்ணும் புரியலை..!

    ReplyDelete
  12. [[[பாலகுமார் said...

    //போறவங்க போய்க்கலாம்//

    இது உங்களுக்கே அநியாயமா இல்ல.. நல்லா கிழிச்சிட்டு இப்படி சொன்னா எப்படி?]]]

    என்ன இருந்தாலும் அடுத்தவங்களோட கருத்துக்கும் மதிப்பளிக்கணும்ல்ல.. அதுதான்..!

    ReplyDelete
  13. [[[sriram said...

    //ம்ஹும்.. போறவங்க போய்க்கலாம்..//

    இதுக்கப்புறமும் பாக்குறதுக்கு எங்களுக்கு என்னா கிறுக்கா பிடிச்சிருக்கு
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்]]]

    போச்சுடா.. பத்து டாலரை மைனஸ் பண்ணிட்டனா..?

    ReplyDelete
  14. [[[ஒரு காசு said...
    ஏண்ணே, இந்த விமர்சனம் எழுதுறத்து பணம், கிணம் எதாவது வாங்குனீங்களா? ஒரு சொத்த படத்துக்கு இவ்ளோ பெரிய விமர்சனமா?]]]

    எதுனால சொத்ததுன்னு சொல்ல வேண்டாமா காசண்ணே..!

    ReplyDelete
  15. [[[ஜெட்லி said...
    தலைவரே மாத்தியோசி படம் என்னை மாத்தி யோசிக்க வைக்குது.
    அதாவது இனிமே இந்த மாதிரி புது
    பசங்க நடிச்ச படத்துக்கு போலாமா வேணாமானு.]]]

    போகலாம்.. ஆனா முதல் நாளே போய் பார்க்க வேணாம்.. ரிசல்ட் தெரிஞ்சப்புறம் போய்க்கலாம்..!

    ReplyDelete
  16. [[[பிரபாகர் said...

    எதையுமே பாசிடிவா மாத்தி யோசிக்கிற என் அண்ணனயே டரியலாக்கிற படம்னு பாக்கிறப்போ, உண்மையிலேயே ரொம்ப மாத்திதான் யோசிச்சிருக்காங்க போலிருக்கு. படம் பாக்குறதுல இருந்து எஸ்கேப்... கேபிள் அண்ணன் பக்கத்துல இருந்தாலும் (சிங்கை விசிட்) இன்னுமொரு அன்பு அண்ணனால் நல்ல வார்னிங்... காப்பாத்திட்டீங்க..

    பிரபாகர்.]]]

    பிரபாகர் அண்ணே..

    தியேட்டர் காசை அப்படியே பத்திரமா வைச்சிருந்து சென்னைக்கு வர்றப்போ என்கிட்ட கொடுத்திரணும்.. சொல்லிப்புட்டேன்..

    ஆமா.. அது யாரு.. அவதார் போட்டோல கும்முன்னு போஸ் கொடுக்குறது..? அசத்தலா இருக்கு வாலு..!

    ReplyDelete
  17. [[[புலவன் புலிகேசி said...
    நல்ல வேலை நான் போகல.]]]

    இப்படியெல்லாம் தப்பிக்கக் கூடாது.. புலிகேசின்னு பேரை வைச்சுக்கிட்டு இதுக்கெல்லாம் போய் பயப்படலாமா..?

    ReplyDelete
  18. [[[நல்லதந்தி said...

    //எதையுமே பாசிடிவா மாத்தி யோசிக்கிற என் அண்ணனயே டரியலாக்கிற படம்னு பாக்கிறப்போ, உண்மையிலேயே ரொம்ப மாத்திதான் யோசிச்சிருக்காங்க போலிருக்கு. //

    அதானே! உங்களயே நோவடிச்சிட்டாங்களா?]]]

    ஆமாங்க தந்தியாரே..! ஒண்ணும் சொல்லிக்க முடியலை..!

    ReplyDelete
  19. [[[flying taurus said...
    வித்தியாசமா எடுக்கிறேன் பேர்வழி என்று வித்தியாசமே இல்லாமல் எடுத்திருப்பார்களே. விளம்பரங்களைப் பார்த்தால் ரேணிகுண்டா சாயல் தெரிகிறதே. அது உண்மையா...]]]

    ரேணிகுண்டா சாயல்தான்..! ஆனால் அதைவிட வன்முறை இதில் கொஞ்சம் குறைவு..!

    ReplyDelete
  20. [[[ஸ்ரீராம். said...

    இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுத வேண்டாம்னுதான் நினைச்சேன். ஆனா முடியலை.. மன்னிச்சுக்குங்க..!!//

    அப்புறம் 'மாத்தி யோசி'ச்சு விமர்சனம் எழுதிட்டீங்க...!]]]

    கரெக்ட்டுங்கண்ணே..!

    ReplyDelete
  21. [[[சைவகொத்துப்பரோட்டா said...
    படக் குழு மாத்தி யோசிக்கவே இல்லையே.]]]

    அதான் பிரச்சினையே..? அப்புறம் எதுக்கு இப்படியொரு பேரு..?

    ReplyDelete
  22. [[[T.V.ராதாகிருஷ்ணன் said...

    //நல்ல கதைக்களம் ஒன்று கையில் இருந்தும், குரங்கு கையில் சிக்கிய பூமாலையாகிவிட்டது இந்த மாத்தி யோசி.//

    :-))]]]

    அவசரத்துல வார்த்தைகள் வந்து விழுந்துவிட்டது..

    தப்புதான்.. மன்னிச்சுக்குங்க..!

    ReplyDelete
  23. நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுகின்ற பெண் இந்தச் சட்டை போடாத நாலு பேருடனும் சென்னையில் உலா வருகின்ற காட்சிகளைப் பார்த்தாலே கொடுமையாக இருக்கிறது.. இதில் இயக்குநர் என்ன மாத்தி யோசித்திருக்கிறார் என்று தெரியவில்லை..?

    அதான் மாத்தி யோசிச்சுஇருக்கார்ல.

    இந்த மதுரையை எப்ப விட போறாங்களோ தெரியல.

    ReplyDelete
  24. இன்னொரு யதார்த்த பட முயற்சில இறங்கிருப்பானுங்க...
    மதுரை போரடிச்சுடிச்சு அப்படியே எங்க ஊர் பக்கம் வரச்சொல்லுங்கண்ணே...

    எப்படியோ கிரேட் எஸ்கேப்பு...

    ReplyDelete
  25. இயக்குனர் எத்தனை நாளைக்குத்தான் வாயால் சாப்பிடுவது என்று மாத்தி யோசித்திருக்கிறார் போல.

    ReplyDelete
  26. எவ்ளோ மாத்தி யோசிச்சாலும்...
    ஹும்ம் இதுதாண்ணே நினைவுக்கு வருது...:)

    --
    //
    நாமளும் இது மாதிரி சினிமா எடுக்கத்தான் போறோம்.. இதேபோல் தவறுகளைச் செய்யத்தான் போகிறோம்..! இப்ப நாம செய்றதெல்லாம் அப்போ ரிவீட் அடிக்கும்.. ஞாபகத்துல வைச்சுக்குங்க..!

    ஒருத்தருக்கு ஒரு கருத்தும், வழிமுறையும் சரியா இருக்கும். அடுத்தவங்களுக்குத் தப்பா தெரியலாம்..!

    அதெல்லாம் அவங்கவங்க படிச்சு வளர்ந்து வர்ற சூழலினால்தான்..!

    நாம தட்டித்தான் கொடுக்கணும்..! குட்டக் கூடாது..!
    //

    ReplyDelete
  27. [[[காவேரி கணேஷ் said...

    நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுகின்ற பெண் இந்தச் சட்டை போடாத நாலு பேருடனும் சென்னையில் உலா வருகின்ற காட்சிகளைப் பார்த்தாலே கொடுமையாக இருக்கிறது.. இதில் இயக்குநர் என்ன மாத்தி யோசித்திருக்கிறார் என்று தெரியவில்லை..?]]

    அதான் மாத்தி யோசிச்சு இருக்கார்ல.
    இந்த மதுரையை எப்பவிட போறாங்களோ தெரியல.]]]

    விட மாட்டாங்க கணேஷ்..

    இன்னிக்குவரைக்கும் மதுரைப் பக்கம் சுமாரா 11 திரைப்படங்களின் ஷூட்டிங் நடந்துக்கிட்டிருக்காம்..! இது சீஸன் அவ்வளவுதான்..!

    ReplyDelete
  28. [[[நாஞ்சில் பிரதாப் said...
    இன்னொரு யதார்த்த பட முயற்சில இறங்கிருப்பானுங்க. மதுரை போரடிச்சுடிச்சு அப்படியே எங்க ஊர் பக்கம் வரச் சொல்லுங்கண்ணே...
    எப்படியோ கிரேட் எஸ்கேப்பு.]]]

    உங்க ஊர் எதுங்கண்ணா..? நாஞ்சில் நாடுங்களா..?

    அந்த ஊர் தமிழைப் பேசினா இங்க பாதிப் பேருக்கு புரியாதுங்களே.. அதுனாலதான் தொடாம இருக்காங்க..!

    ReplyDelete
  29. [[[தண்டோரா ...... said...
    இயக்குனர் எத்தனை நாளைக்குத்தான் வாயால் சாப்பிடுவது என்று மாத்தி யோசித்திருக்கிறார் போல.]]]

    ஹி.. ஹி.. ஹி..

    இதுக்கு நான் ஒண்ணும் சொல்ல மாட்டேனாக்கும்..!

    ReplyDelete
  30. [[[எம்.எம்.அப்துல்லா said...

    உ.வி

    :)]]]

    என்ன கவிஞரே.. ரெண்டு எழுத்துல முடிச்சிட்டீங்க..? இதை நான் என்னன்னு புரிஞ்சுக்கிறது..?

    உண்மை விமர்சனமா..?
    உன் வினையா..?
    உன் விதியா..?

    ReplyDelete
  31. [[[♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    எவ்ளோ மாத்தி யோசிச்சாலும்...
    ஹும்ம் இதுதாண்ணே நினைவுக்கு வருது...:) //

    நாமளும் இது மாதிரி சினிமா எடுக்கத்தான் போறோம்.. இதேபோல் தவறுகளைச் செய்யத்தான் போகிறோம்..! இப்ப நாம செய்றதெல்லாம் அப்போ ரிவீட் அடிக்கும்.. ஞாபகத்துல வைச்சுக்குங்க..!

    ஒருத்தருக்கு ஒரு கருத்தும், வழிமுறையும் சரியா இருக்கும். அடுத்தவங்களுக்குத் தப்பா தெரியலாம்..!

    அதெல்லாம் அவங்கவங்க படிச்சு வளர்ந்து வர்ற சூழலினால்தான்..!
    நாம தட்டித்தான் கொடுக்கணும்..! குட்டக் கூடாது..!//

    ஐயையோ..

    நான் எழுதினதை எடுத்து எனக்கே ஆப்படிக்கிறானே தம்பி..!

    ராசா.. நானும் இதுல மெல்லமா குட்டித்தான சொல்லியிருக்கேன்..! தட்டித்தான் கொடுத்திருக்கேன்..!

    தப்பொண்ணும் இல்லியே..?

    ReplyDelete
  32. இந்த படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். போக வேண்டாம் என்று மனதை மாத்தி யோசிக்க வைத்து விட்டீர்கள். இப்படியும் திரைப்படம் எடுத்து மனிதர்களை வதைக்கிறார்களே. மிருக வதை தடுப்பு சட்டம் இருப்பது போல் மனித வதை தடுப்பு சட்டம் இருந்தால் அதில் இவர்களை உள்ளே தள்ளலாம்.

    ReplyDelete
  33. [[[ananth said...

    இந்த படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். போக வேண்டாம் என்று மனதை மாத்தி யோசிக்க வைத்து விட்டீர்கள். இப்படியும் திரைப்படம் எடுத்து மனிதர்களை வதைக்கிறார்களே. மிருக வதை தடுப்பு சட்டம் இருப்பது போல் மனித வதை தடுப்பு சட்டம் இருந்தால் அதில் இவர்களை உள்ளே தள்ளலாம்.]]]

    ஆனந்த்.. ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க.. விடுங்க.. இதைவிட மோசமான படங்களெல்லாம் வந்திருக்கு..! ஏதோ எனக்குப் பிடிக்கலை..!

    ReplyDelete
  34. ஆத்திரப்பட்டோ உணர்ச்சி வயப்பட்டோ சொல்லவில்லை. சும்மா நகைச்சுவைக்காக சொன்னது. இதைவிட மோசமான படங்களெல்லாம் இருக்கிறது. சகஜமப்பா என்று இருக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
  35. [[[ananth said...
    ஆத்திரப்பட்டோ உணர்ச்சி வயப்பட்டோ சொல்லவில்லை. சும்மா நகைச்சுவைக்காக சொன்னது. இதைவிட மோசமான படங்களெல்லாம் இருக்கிறது. சகஜமப்பா என்று இருக்க வேண்டியதுதான்.]]]

    -)))))))))))))))))))))))

    ReplyDelete
  36. விமர்சனத்துல படிக்கும் போதே பயங்கரமா இருக்கு அண்ணா...

    நான் எஸ்கேப் ஆகுறேன் :) :)

    ReplyDelete
  37. [[[kanagu said...
    விமர்சனத்துல படிக்கும்போதே பயங்கரமா இருக்கு அண்ணா... நான் எஸ்கேப் ஆகுறேன் :) :)]]]

    இப்படியெல்லாம் சொல்லித் தப்பிக்கக் கூடாது கனகு..!

    நீங்களாவது படத்தை பார்த்து என் சோகத்துல பங்கெடுத்துக்குங்க..!

    ReplyDelete
  38. நான் நிச்சயமாக இந்த படத்தை பார்க்கப்போகிறேன்...அய்யோ சாரி சார் மாத்தி யோசிச்சுட்டேன். பாக்க போறதில்ல!!!!

    ReplyDelete
  39. [[[VISA said...
    நான் நிச்சயமாக இந்த படத்தை பார்க்கப் போகிறேன். அய்யோ சாரி சார் மாத்தி யோசிச்சுட்டேன். பாக்க போறதில்ல!!!!]]]

    என் வயித்தெரிச்சலை கொட்டிக்காதீங்க விஸா..

    தயவு செஞ்சு பாருங்க..!

    ReplyDelete
  40. நல்ல வேளை. கேபிள் ஊரில் இல்லை. இல்லைன்னா அவரும் பார்திருப்பார்.

    கொடுமை..

    ReplyDelete
  41. சஞ்சய் பதிவில் எழுதிய பின்னூட்டத்திற்காக இந்த பின்னூட்டம். (உங்க பதிவில் நான் பின்னூட்டம் போட்டுட்டேன்)

    பின்குறிப்பு: உருப்படியில்லாத படம் என ஆரம்பத்திலேயே நீங்கள் சொல்லிவிட்டதால் இந்த விமர்சனத்தை படிக்கவில்லை)

    ReplyDelete
  42. //போறவங்க போய்க்கலாம்..//

    நான் வரல இந்த ஆட்டைக்கு.

    ReplyDelete
  43. [[[butterfly Surya said...
    நல்ல வேளை. கேபிள் ஊரில் இல்லை. இல்லைன்னா அவரும் பார்திருப்பார். கொடுமை..]]]

    வந்தவுடனேயே நிச்சயம் பார்ப்பார்..!

    ReplyDelete
  44. [[[மஞ்சூர் ராசா said...
    சஞ்சய் பதிவில் எழுதிய பின்னூட்டத்திற்காக இந்த பின்னூட்டம். (உங்க பதிவில் நான் பின்னூட்டம் போட்டுட்டேன்)

    பின்குறிப்பு: உருப்படியில்லாத படம் என ஆரம்பத்திலேயே நீங்கள் சொல்லிவிட்டதால் இந்த விமர்சனத்தை படிக்கவில்லை)]]]

    ஐயையோ.. இப்படி வேற சிக்கல் இருக்கா..?

    இனிமே என்னோட கருத்தை கடைசியாவே வைச்சுக்குறேன்..

    உதவிக்கு நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  45. [[[ஸ்ரீsaid...

    //போறவங்க போய்க்கலாம்..//

    நான் வரல இந்த ஆட்டைக்கு.]]]

    வரலேன்னாலும் இழுத்துக்கிட்டுத்தான் போவோம்..!

    ReplyDelete
  46. [[[சாம்ராஜ்ய ப்ரியன் said...
    கண்டேன்.. நொந்தேன்.
    http://3.ly/eav8]]]

    ஹா.. ஹா.. ஹா..!

    எனக்கொரு நண்பர் கிடைத்துவிட்டார்..!

    மிக்க நன்றி நண்பரே..! இனிமேலும் அடிக்கடி நம்ம பக்கம் வாங்க..!

    ReplyDelete
  47. ஒரு நல்ல நோக்கத்துடன் வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற முனைப்போடு தொடங்கப்பட்ட ஒரு படம், நல்ல முதுகெலும்பு இல்லாமல் வீணாய்ப் போய் விடக் கூடாது என்ற உங்களின் உள்ள ஆதங்கம் புரிகிறது நண்பரே..

    புலிகேசி ஹிட். இந்திர லோகத்தில் நா அழகப்பன் பிளாப்.. ஒரே மாதிரியான சாயலில் படம் எடுத்தால், எப்பேர்பட்ட பெரிய ஆளுக்கும் அடி சறுக்கும்.. எனவே மாத்தி யோசியுங்கள்.. ரேணிகுண்டா போல கலரிங் செய்து விட்டு,மாத்தி யோசி என்று பேர் வைத்தால் இது யார் காதில் பூ சுற்றும் வேலை.. உண்மையைச் சொல்லப் போனால் இந்த மாதிரியான படங்களின் துவக்கம் சுப்ரமணியபுரம் என்று நினைக்கிறேன்..

    நல்ல எழுத்து நடை..
    நன்றி...

    ReplyDelete
  48. இந்த படம் பார்க்கிறதுக்கு நித்யா படம் இன்னொருவாட்டி பார்த்துடலாம்

    ReplyDelete
  49. பாவம் படம் எடுத்தவர் . என்னை மாதிரி மலையை உருட்டவேண்டியதுதான் இனி அவரும் .


    மீண்டும் வருவான் பனித்துளி

    ReplyDelete
  50. [[[பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

    ஒரு நல்ல நோக்கத்துடன் வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற முனைப்போடு தொடங்கப்பட்ட ஒரு படம், நல்ல முதுகெலும்பு இல்லாமல் வீணாய்ப் போய் விடக் கூடாது என்ற உங்களின் உள்ள ஆதங்கம் புரிகிறது நண்பரே..

    புலிகேசி ஹிட். இந்திர லோகத்தில் நா அழகப்பன் பிளாப்.. ஒரே மாதிரியான சாயலில் படம் எடுத்தால், எப்பேர்பட்ட பெரிய ஆளுக்கும் அடி சறுக்கும்.. எனவே மாத்தி யோசியுங்கள்.. ரேணிகுண்டா போல கலரிங் செய்து விட்டு, மாத்தி யோசி என்று பேர் வைத்தால் இது யார் காதில் பூ சுற்றும் வேலை. உண்மையைச் சொல்லப் போனால் இந்த மாதிரியான படங்களின் துவக்கம் சுப்ரமணியபுரம் என்று நினைக்கிறேன்..
    நல்ல எழுத்து நடை..
    நன்றி...]]]

    ஆமாம் பிரகாஷ்.. நீங்க சொல்றது உண்மைதான்..

    இது அத்தனைக்கும் முதல் காரணம் சுப்பிரமணியபுரம்தான்..!

    ReplyDelete
  51. [[[பரிதி நிலவன் said...
    இந்த படம் பார்க்கிறதுக்கு நித்யா படம் இன்னொருவாட்டி பார்த்துடலாம்.]]]

    அய்.. இப்படியொரு கோணத்துல நான் சிந்திக்கவே இல்லையே..? கீப் இட் அப் ஸார்..!

    ReplyDelete
  52. [[[♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    பாவம் படம் எடுத்தவர் . என்னை மாதிரி மலையை உருட்டவேண்டியதுதான் இனி அவரும்.

    மீண்டும் வருவான் பனித்துளி.]]]

    உங்க பன்ச் நல்லாயிருக்குங்க சங்கர்..!

    ReplyDelete
  53. //அரதப் பழசான பின்னணி இசை.. என்று எல்லாமே ஒரே நேரத்தில் நம்மைத் தாக்கினால் எவ்வளவுதான் தாங்குவது..? //

    நீங்க நல்லவருங்க. இப்படி அடிச்சிருக்காங்க. வலிக்காத மாதிரியே நடிச்சிருக்கீங்களே. நல்லவேளை இந்த மாதிரிப் படங்களெல்லாம் பூனாவுக்கு வர்றதில்லை. க்ரேட் எஸ்கேப்.

    ReplyDelete
  54. [[[செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

    //அரதப் பழசான பின்னணி இசை.. என்று எல்லாமே ஒரே நேரத்தில் நம்மைத் தாக்கினால் எவ்வளவுதான் தாங்குவது..? //

    நீங்க நல்லவருங்க. இப்படி அடிச்சிருக்காங்க. வலிக்காத மாதிரியே நடிச்சிருக்கீங்களே. நல்லவேளை இந்த மாதிரிப் படங்களெல்லாம் பூனாவுக்கு வர்றதில்லை. க்ரேட் எஸ்கேப்.]]]

    அடப்பாவி முருகா..!

    அப்படியொரு இடத்துல எனக்கு வேலை வாங்கித் தரக் கூடாதா..? நிம்மதியா இருந்திருப்பனே..?

    ReplyDelete
  55. //அடப்பாவி முருகா..!

    அப்படியொரு இடத்துல எனக்கு வேலை வாங்கித் தரக் கூடாதா..? நிம்மதியா இருந்திருப்பனே..? //

    பாஸ், தமிழ்ப்படங்களிடமிருந்து தப்பிச்சி, உசிரோட வாழணும்னா, நாம தான் இந்த மாதிரி ஊர்ல வேலை வாங்கிட்டு ஓடி வந்துடணும்.

    ReplyDelete
  56. [[[செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

    //அடப்பாவி முருகா..! அப்படியொரு இடத்துல எனக்கு வேலை வாங்கித் தரக் கூடாதா..? நிம்மதியா இருந்திருப்பனே..? //

    பாஸ், தமிழ்ப் படங்களிடமிருந்து தப்பிச்சி, உசிரோட வாழணும்னா, நாமதான் இந்த மாதிரி ஊர்ல வேலை வாங்கிட்டு ஓடி வந்துடணும்.]]]

    நானும்தான் தேடுறேன்.. கிடைக்கலியே நண்பரே.. நீங்க கொடுத்து வைச்சவரு.. அவ்ளோதான் சொல்ல முடியும்..!

    ReplyDelete
  57. வணக்கம் சார் மிகவும் நல்ல விமர்சனம்

    என் வலைத்தளத்திற்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

    http://www.gouthaminfotech.com

    ReplyDelete
  58. [[[வடிவேலன் ஆர். said...

    வணக்கம் சார் மிகவும் நல்ல விமர்சனம்
    என் வலைத்தளத்திற்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
    http://www.gouthaminfotech.com]]]

    நேற்றே எதிர்பார்த்தேன் வேலு..!

    ReplyDelete
  59. நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணா..

    காலையில் உங்களுக்கு பதிலா சுடர்விழியை மாத்தியோசிச்சுடாங்களோ....

    ReplyDelete
  60. அட தமிழ்மணம் ஸ்டாரு.... வாழ்த்துகள்.... சந்தோஷமாயிட்டுண்டு...

    ReplyDelete
  61. நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

    கச்சேரி ஆரம்பிக்கட்டும்:-)

    ReplyDelete
  62. அண்ணே. அலைபேசியில் சொன்னதுபோல குட்டி குட்டி பதிவாக இடவும்...!!!

    ReplyDelete
  63. நண்பரே,
    நட்சத்திர வாழ்த்துக்கள்...

    என்ன ஸ்டாண்ட் பை மாதிரி வந்துட்டீங்களா? வேறொரு பெயர் பார்த்தேன்,மதியம்?

    என்னப்பா நடக்குது?

    என்னவா இருந்தா என்ன? சூப்பரா ஒரு வாரத்துக்கு அசத்துங்க...

    ReplyDelete