Pages

Friday, January 01, 2010

வருக வருக புத்தாண்டே..!

01-01-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


தமிழர்களின் வாழ்வைப் பொறுத்தவரையில் கருணையே இல்லாத 2009-ம் ஆண்டு விடைபெற்று 2010-ம் ஆண்டு அரியணை ஏறியிருக்கிறது.

சென்ற ஆண்டின் மிகப் பெரிய சோகமான ஈழத்தின் அழிப்பே கண் முன்பாக பிரதானமாகக் காட்சியளிப்பதால் எனது வலையுலக வாழ்க்கையையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

பதிவு எழுதுவதை நிறுத்தி வைக்கும் ஒரு விரதத்தில் இருந்தாலும், வருடத்தின் முதல் நாளே நமது எழுத்து அரியணை ஏறினால் பதிவுக்கும், பதிவுலகத்துக்கும் நல்லது என்று சென்டிமெண்ட்டல் டச் காரணமாக இந்தப் பதிவு.

சென்றாண்டை போலில்லாமல் இந்தாண்டாவது ஈழத்தின் கண்ணீருக்கு எந்த ரூபத்திலாவது ஒரு விடுதலை கிடைக்குமா என்று பார்ப்போம். இல்லாவிடில் தற்காலிக விடுதலையேனும் அம்மக்களுக்குக் கிடைத்தால் நமக்கும் மகிழ்ச்சிதான்.

இந்தாண்டின் தத்துவப் பாடலாக ஏதாவது ஒரு திரைப்படப் பாடலை வெளியிடலாம் என்று நினைத்து கண்ணதாசனின் துணை கொண்டு தேடும்போது இந்த வார்த்தைகள் ஈ-மெயிலில் வந்தன.. பொறுக்கியெடுத்துக் கொண்டேன்..!

எனக்காக இந்த வருடத்தின் முதல் பதிவில் நமக்குத் தேவையான ஒரு செய்தி..

வாழ்க்கை ஒரு சவால்; அதனை எதிர்கொள்.

வாழ்க்கை ஒரு பரிசு; அதனை தயங்காமல் ஏற்றுக் கொள்.

வாழ்க்கை ஒரு சுவாரசியம்; அதனை கஷ்டப்பட்டாவது அடைந்து பார்.

வாழ்க்கை ஒரு கவலை; அதையும் ஒரு கை பார்த்துவிடு.

வாழ்க்கை ஒரு பயங்கரம்; எதுவாக இருந்தாலும் நேர்கொள்.

வாழ்க்கை ஒரு கடமை; அதை சரியாகச் செய்துவிடு.

வாழ்க்கை ஒரு விளையாட்டு; ஆசை தீர விளையாடு.

வாழ்க்கை ஒரு மர்மம்; எப்படியானாலும் கண்டுபிடி.

வாழ்க்கை ஒரு பாடல்; சிந்தை குளிர பாடிவிடு.

வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்; தயங்காமல் எடுத்துக் கொள்.

வாழ்க்கை ஒரு பயணம்; தாமதமில்லாமல் பயணம் செய்.

வாழ்க்கை ஒரு சத்தியம்; தயவு செய்து இதனை மீறாதே.

வாழ்க்கை ஒரு காதல்; காதலியாக நினைத்து நிறைவேற்று.

வாழ்க்கை ஒரு அழகு; நிச்சயம் புகழ்ந்துவிடு.

வாழ்க்கை ஒரு ஆன்மா; அதன்படியே நடந்துவிடு.

வாழ்க்கை ஒரு போராட்டம்; துணிந்து போரிடு.

வாழ்க்கை ஒரு புதிர்; அதனை விடுவித்துப் பார் புரியும்.

வாழ்க்கை ஒரு லட்சியம்; முயன்றால் அடைந்தே தீருவாய்..!

52 comments:

  1. வணக்கம் சரவணன்.

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    முதல் பின்னூட்டத்தை நானே ஆரம்பித்து வைக்கிறேனே...

    மிக மிக நல்ல செய்திகளுடன் தங்களது இவ்வாண்டின் முதல் பதிவு. வாழ்த்துக்கள்.

    சும்மா புகுந்து விளையாடுங்க.....

    தங்களது எழுதா விரதத்தை பழரசம் கொடுத்து முடிவுக்கு கொண்டு வருகிறேன்.

    அன்புடன்,

    செந்தில் முருகன்.

    ReplyDelete
  2. செண்ட்டிமெண்ட் மேட்டர் எல்லாம் சொல்லி நீங்களும் ஒரு அக்மார்க் தமிழ் சினிமாக்காரர்னு நிரூபிச்சிருக்கீங்க....

    இதையே ஒரு ஆரம்பமா நினைச்சி நீங்க இந்த வருசம் தமிழ் சினிமாவுலயும் கலக்க வாழ்த்துகள்.....

    ReplyDelete
  3. புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  4. வ‌ண‌க்க‌ம். புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்.

    உங்க‌ள் ப‌திவுக‌ளை கால‌ம் அனும‌திக்கும் போது ம‌ட்டும் ப‌டிக்கும் வாச‌க‌ன்.

    //தங்களது எழுதா விரதத்தை பழரசம் கொடுத்து முடிவுக்கு கொண்டு வருகிறேன்.//

    ஒரு ச‌ந்தேக‌ம் , உண்ணா விர‌த‌த்திற்கு ப‌ழ‌ர‌ச‌ம் ச‌ரி, எழுதா விர‌த‌த்திற்கு என்ன‌ ர‌ச‌ம் த‌ர‌வேண்டும்?

    இல‌க்கிய‌ர‌ச‌ம் கொண்ட‌ நூலா? காத‌ல் ர‌ச‌ம் சொட்டும் பாவா? இல்லை ந‌க்க‌ல் ர‌ச‌ம் ஊரும் இணைய‌ பூவா?

    ReplyDelete
  5. புது வருடம் புது பதிவு,, கலக்குங்க சார்.., ::))

    ReplyDelete
  6. இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    //எந்த ரூபத்திலாவது ஒரு விடுதலை கிடைக்குமா//

    //வாழ்க்கை ஒரு லட்சியம்; முயன்றால் அடைந்தே தீருவாய்..!//

    நம்புவோம்.

    ReplyDelete
  7. //சென்றாண்டை போலில்லாமல் இந்தாண்டாவது ஈழத்தின் கண்ணீருக்கு எந்த ரூபத்திலாவது ஒரு விடுதலை கிடைக்குமா என்று பார்ப்போம்.//
    நானும் அதையே விரும்புகிறேன்.புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. அண்ணே இதையும் சேர்த்துங்க..

    ”வாழ்க்கை ஒரு ப்ளாக்கு, அதுல புகுந்து வூடுகட்டு”
    :)

    ReplyDelete
  10. அன்பு சரவணன்

    இந்த வருடம் எல்லா வளமும் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன் .

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. என்னா.. அண்ணாத்த..? சேப்பு கலர்ல எழுதிட்டா.... அது பொன்மொழியா? :) :)

    எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. புத்தாண்டு வாழ்த்துக்கள் உண்மைத்தமிழன் அண்ணா.

    ReplyDelete
  13. புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    இது என்ன புதுவருஷத் தீர்மானமா?

    நம்மை அம்போன்னு விட்டுட்டீங்க!

    பதிவு ஒரு பக்கம்தான் இருக்கு? பாக்கி எங்கே? :-)))))

    ReplyDelete
  14. இனிய மகிழ்ச்சிகரமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் சரவணன் சார்...!

    ReplyDelete
  16. என்ன சார் ஏமாத்திட்டீங்க இவ்ளோ சிறிய பதிவு?

    ReplyDelete
  17. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...! :)

    ReplyDelete
  19. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  20. அளவாய்...அழகாய்...உங்கள் எண்ணங்கள்.

    புது வருட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. புத்தாண்டு வாழ்த்துக்கள் சரவணன்..

    இந்த வருடமாவது, நீங்களும் கேபிளும் நாங்கள் யூத்து இல்ல, பெருசுங்கன்னு ஒத்துக்குவீங்களா???

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  22. நல்ல கருத்துக்கள்....

    ReplyDelete
  23. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் இடுகையை பார்த்தேன்.

    வெற்றி பெற வாழ்த்துக்கள் சரவணன்.

    ReplyDelete
  25. என் அன்பிற்கினிய தோழரே. சீன நாள்காட்டியின் படி, 2010 புலிகளின் ஆண்டு. இந்த ஆண்டில், புலிகள் வெளிவருகிறார்களோ இல்லையோ, ராஜபக்ஷேவுக்கும், பொன்சேகாவுக்குமான சண்டை முற்றி, ஈழத் தமிழர் படுகொலை குறித்த பல உண்மைகள் வெளிவரும். இந்திய அரசின் முகத்திரை கிழியும். ஈழத்தமிழருக்கு விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது. உங்களோடு சேர்ந்து ஈழத் தமிழரின் வாழ்வில் ஒளி வர நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  26. புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. பின்னூட்டமிட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்..!

    ReplyDelete
  31. வணக்கம் அண்ணை மீண்டும் பழைய வலைக்கு வந்தமை மகிழ்ச்சி.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. புத்தாண்டு வாழ்த்துக்க‌ள் சரவணன்.

    ReplyDelete
  33. புத்தாண்டு வாழ்த்துகள் !!

    ReplyDelete
  34. வாழ்க்கை ஒரு போரான விஷயம். சகித்துக்கொள். இதையும் சேர்த்திருக்கலாம். புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  35. அண்ணே..பொங்கல் வாழ்த்துக்கள்..::))

    ReplyDelete
  36. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. தலைவரே...தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்..::))

    வீறு கொண்டு வாருங்கள்..::))

    ReplyDelete
  39. வெற்றிக் கனியைப் பறித்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. //முத்துக்குமரன் இறுதி ஊர்வலம்///

    தமிழ்மண முதல் பரிசுக்கு வாழ்த்துகள்.. உ.த!! :) :)

    ReplyDelete
  41. தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்..::))

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள்....தமிழ்மணம் விருதுக்கு.

    ReplyDelete
  43. tamilmanam virudhu petramaikku vazthukkal anna... :) :)

    ReplyDelete
  44. தமிழ்மண விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  45. truetamilan,
    unga pathivu yeppo? eagerly waiting

    ReplyDelete
  46. வாழ்த்துக்கள்.
    வாழ்க்கையின் வரிகளை அழகாய் சொல்லியிருக்கீங்க..

    நேரம்கிடைக்கும்போது இங்கும் வரவும்

    http://fmalikka.blogspot.com/

    http://niroodai.blogspot.com

    ReplyDelete
  47. truetamilan,
    unga pathivu yeppo? romba aarvama wait pannuren

    ReplyDelete