Pages

Friday, November 20, 2009

சுகுணா திவாகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..!

20-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


பகுத்தறிவுத் திலகம், தந்தை பெரியாரின் சீற்றமிகு சீடர், சுயமரியாதைச் சுடரொளி, நமது இனிய நண்பர், மற்றும் நமது பதிவுலக சகாவுமான அண்ணன் சுகுணா திவாகர் இன்று தனது 31-வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.

அன்னாருக்கு நமது பதிவுலகம் சார்பாக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணன் இன்றுபோல் என்றும் இளமையுடன், இனிமையுடன் வாழ எனது அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..!

38 comments:

  1. பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. அண்ணே,
    31 வயது காரர் உங்களுக்கு அண்ணனா:)

    ReplyDelete
  5. சுகுணாவிற்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  7. எனது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கிறேன்!

    அண்ணே என்னைவிட பத்து வயசு தான் மூத்தவர் போல!

    ReplyDelete
  8. எனது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கிறேன்!

    அண்ணே என்னைவிட பத்து வயசு தான் மூத்தவர் போல!


    ஹிஹி ரிப்பிட்டுபோட்டுகின்னு அப்பிட்டு

    ReplyDelete
  9. உ.தா.வுக்கு என்னமோ ஆகிப்போச்சு!

    தொடர்ந்து மூணு பதிவுகளா, ரொம்ப சுருக்கப்பதிவுகளாப் போட ஆரம்பிச்சுட்டார்!

    என்ன ஆச்சு,பக்கம் பக்கமாகத் தட்டச்சு செய்து அலுத்துப் போய்விட்டதா என்றுபக்கத்தில் இருக்கும் திருப்பரங்குன்றம் முருகன் கேட்கிறான்!

    ReplyDelete
  10. எனது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கிறேன்!

    ReplyDelete
  11. நான் வர்றேன்னுட்டு traffic block பண்ணுறது வழி நெடுக...

    வலையுலக வாலிபன்,
    எழுத்துலக எட்டாம் திசை,
    தமிழ்த்தாயின் தவப் புதல்வன்ன்னு....
    கண்ட மேனிக்கு கட் அவுட் வைக்குறதுன்னு

    நம்ம தொண்டங்க அதகளம் பண்ணுவாங்க. உங்களுக்கேத் தெரியும் எனக்கு இந்த வீண் பப்ளிகுட்டில லைகிங் இல்லை.

    அண்டா அண்டாவா சொறாக்குறது, சொல் பேச்சு கேக்காம செய்வாங்க அதெல்லாம் வேண்டாம், நீங்க அடுப்ப மட்டும் ரெடி பண்ணுங்க half பாயில நான் போடுறேன்.

    ReplyDelete
  12. அண்ணன் சுகுணாவிற்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
    வாழ்த்துக்கள் சொல்லும் இந்த மேடையில்,, 32வயது உடையவரை சந்தடி சாக்கில் அண்ணன் என்று விளித்த தாத்தா உண்மை தமிழனை மென்மையாக கண்டிக்கிறேன்..
    ;))

    ReplyDelete
  15. அண்ணன் இன்றுபோல் என்றும் இனிமையுடன் வாழ முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..!

    பகுத்தறிவுத் திலகம்,
    தந்தை பெரியாரின் சீற்றமிகு சீடர், சுயமரியாதைச் சுடரொளி

    ReplyDelete
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. "ஆ.......!" மயங்கி விழுந்துட்டேன். இவ்வளவு சின்னப் பதிவா?

    ReplyDelete
  18. முப்பத்தி ஒன்னா?

    என்னைவிட சின்னவரா? சரி...!!

    வாழ்த்துகள்! :)

    ReplyDelete
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  20. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் திவாகர் :-)

    ReplyDelete
  21. ஸ்ரீராம். said...

    /"ஆ.......!" மயங்கி விழுந்துட்டேன்./

    மயக்கம் வரச் செய்கிற இன்னொரு விஷயமும் இருக்கு! வழக்கமா, அஞ்சோ, பத்தோ பின்னூட்டங்கள் வந்தவுடன் ஒவ்வொன்றாகப் பதில் சொல்லும் உண்மைத் தமிழன் எங்கேயோ எஸ்கேப் ஆகிப் போய்விட்டார்!

    ReplyDelete
  22. அண்ணன் சுகுணாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லிய அத்தனை நல்ல இதயங்களுக்கும் அண்ணனின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

    ReplyDelete
  23. அண்ணன் சுகுணா திவாகர் இன்று தனது 31-வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.
    //

    சுகுணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ஆமாம் அது என்னா சைக்கிள் கேப்பில் அண்ணன் சுகுணா என்று சொல்லி உங்க வயசை குறைக்கும் முயற்சியா?

    ReplyDelete
  24. அன்பான நண்பர் திரு சுகுணா திவாகர்,

    ஆங்கிலத்தில் Pseudo-Intellectual என்ற ஒரு வார்த்தை உள்ளது. தமிழில் போலி-அறிவுஜீவி! A simple and straight definition will be " A Person exhibiting intellectual pretensions that have no basis in sound scholarship!"

    தமிழகத்தில் இவர்கள்தான் "politically correct" எனும் திண்ணையை பலகாலமாக பிடித்துக்கொண்டு, பிடித்து தள்ளினாலும் போகவே மாட்டேன் என்றும் பக்கம் பக்கமாக புரியாததை படைத்து அதற்க்கு பிரதிகளும் எடுத்து யாரும் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, கேட்காவிட்டாலும் கவலை இல்லை, நாங்கள் மட்டுமே முற்போக்கு என்று மார்த்தட்டி கொண்டிருக்கிறார்கள்!

    கரவொலி எழுப்ப பெரும் கூட்டம் இல்லாவிட்டாலும், இந்த சிறிய கூட்டம் காழ்ப்புணர்ச்சிகளை கவர்ச்சியாக எழுதி, தங்கள் கூடாரத்திற்கு உள்ளேயே பரப்பவிட்டு, உன் எழுத்துகளுக்கும் எண்ணங்களுக்கும் ஆரத்தி எடுக்க நான், எனக்கு நீ என்ற தங்களுக்குள்ளேயே கும்மி அடித்து மகிழும் வித்தையில் தேர்ந்து, காலப்போக்கில் அதை ஒரு வாழும் கலையாக்கி; தங்களின் தாண்டவத்திற்கு மருப்பென்று வருவதை தரக்குறைவாக திட்டி, இது தகாது என்று முத்திரை குத்தி, அதுவும் பெரும் கலையாகி, முத்திரை குத்தும் மாவீரர்கள் என்று பெயரோடும் தொழிலோடும் இன்று நிற்கின்றனர்!

    இந்த முத்திரை மாவீரர்கள் வளர்ந்து இன்று politically correct என்ற பொய் வழியை மெய்வழியாக மாற்ற முயற்சி மேல் முயற்சி செய்து, திண்ணை மட்டுமே அல்ல , வீடும் எங்களுடையது என்று கூசாமல் கூறி நிற்கின்றார்!

    இந்த கூட்டத்திற்கு சிந்தனை தூண்டிகள் சில. அதில் முக்கியமான ஒன்று சினிமா!

    ReplyDelete
  25. People with such low levels of intellect, yet who have the urge to pose as intellectuals, jump on to the most simple minded stuff and ordinary structures to stich their fanciful theories and arguements!

    ஏன் அவர்கள் அதை செய்கிறார்கள் என்ற கேள்விக்கு ஒரே பதில், மேன்மையானவைகள் அவர்களுக்கு புரியாது! புரிந்திருந்தால் அவர்கள் இப்படி போலி அறிவு ஜீவிகளாக இருந்திருக்க மாட்டார்கள், முத்திரை மட்டுமே குத்தும் மகான்களாகவும் இருந்திருக்கமாட்டார்கள்!

    இவர்களின் கண்ணோட்டங்கள், உலகைப்பற்றியானாலும் சரி, வாழ்க்கைப்பற்றியானாலும் சரி, எவையாக இருந்தாலும் சரி, சினிமா மற்றும் சில அற்பமான விடயங்களை மட்டும் கொண்டே, அவற்றை பொருத்திப்பார்த்து, தங்களின் சற்றும் சரியில்லாத சிந்தனைகளுக்கு சாட்சி கிடைத்தது அல்லது பருக சாறு கிடைத்தது என்று மாறிவிட்ட உலகில் மாறாமல் நிற்கின்றனர்!

    உலகில் எல்லா இடங்களிலும் இனம்கண்டு, வேண்டாத நாச சிந்தனைகள் என்று கைவிடப்பட்டு பின்பு துரத்தப்பட்ட கரை படிந்த ஆக்கங்கள், அவை சுரந்த குப்பையான எண்ணக் கலவைகள், வேறு எங்கும் இல்லாமல் தமிழகத்தில் மட்டுமே, Politically correct என்ற போர்வயை போர்த்திக்கொண்டு பாசாங்காக வலம் வந்து கொண்டிருக்கிறது!

    ReplyDelete
  26. ஸ்டாலின், பிடெல் காஸ்ட்ரோ போன்ற கடைந்தெடுத்த சர்வாதிகாரிகள், அதுவும், அடையாளம் கண்டு களையப்பட்ட காட்டு தர்பார் நடத்திய ஏனையா so called "தலைவர்கள்தான்" இவர்களுக்கு "Hero க்கள்" !

    எழுத்துலகில், கேட்கவே வேண்டாம். பிரச்சார பிட் நோட்டிசில் காணப்படும் கருத்தாழத்தோடு கக்கப்பட்ட கசடுகள்தான் இவர்களுக்கு சித்தாந்த்த விளக்கங்கள்!

    நாஜிகள், தாங்கள் செய்வதை ஞாயப்படுத்த அல்லது செய்யப்போவதற்கு ஆதாரமாக reasoning கொடுக்க காழ்புணர்ச்சி மட்டுமே உள்ள ஆனால் கொஞ்சம் சுவையாக கக்க தெரிந்த சிலரை அறிவு ஜீவிகள் என்றும் உருகொடுத்த ஊட்டி வளர்த்தார்கள்!
    அவர்களும் வாங்கிய காசுக்கு வக்கணையாக, வளர்த்துக்கொண்ட காழ்ப்புணர்ச்சிக்கு வடிகாலாக கண்டபடி எழுதித்தள்ளினார்கள்!

    ஸ்டாலின்னிஸ்ட்டுகளும் மாவோஇஸட்களும் பின்பற்றியதும் ஏறக்குறையா இதே வழிமுறை. என்ன, மார்க்ஸ்இன் பெயரை முன்னால் வைத்து முக்கியதால், நாசிகளின் பிரச்சார பீரங்கிகள் வாங்கிய அடிகளை இவர்கள் வாங்காமல் தப்பினார்கள், ரொம்ப காலமாக! இவர்களின் வண்டவாளங்கள் வெளியே வந்து, நேபாளத்தை தவிர, வட கொரியாவைத்தவிர மற்ற எல்லா இடத்திலிருந்தும் விரட்டப்பட்டதால் வேரறுந்து போனார்கள், இந்திய போன்ற நாடுகளில் மட்டும், யாரும் தங்களை பார்க்கா விட்டாலும் கேட்காவிட்டாலும், முடிந்ததை கக்கி, குப்பை மேடுகள் பலவற்றை கோபுரங்களின் உயரத்திற்கு கட்டி, இதோ பார் புரட்ச்சி, நாங்கதான் அறிவு ஜீவி என்று கத்திக்கொண்டிருக்கிறார்கள்!

    ReplyDelete
  27. இவர்களுடன் சேர்ந்து கொண்டோ, அல்லது பயந்தோ கொண்டோ பலர், இந்த பிட் நோடிசு பம்மாத்தை நவீன அறிவுக்களஞ்சியம் என்று நம்பி அல்லது விரும்பி தங்களால் முடிந்த குப்பைகளை இங்கே கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்!

    என்ன, முன்னர் சொன்னது போல, சாதாரண விடயங்களும், சினிமா சொல்லும் சப்பையான அடையாளங்களும்தான் இவர்களின் உலகை, அதாவது இவர்களின் பிட் நோடிசு சொல்லும் உலகை தீர்மானிக்கின்றன!

    இவர்கள் எழுதுவதில், சமகால அறிவியல் ஆராய்ந்து சொன்னது சுத்தமாக இல்லை, ஆதாரத்தோடு எழுட்டப்பட்ட சமகால வரலாறும் சத்தியமாக இல்லை. சத்தம் போட்டு இவர்கள் சொல்வதெல்லாம், சகிக்காத முடியாத சினிமா விமர்சனம், சத்திலா பல சங்கதிகள், அதும் அவர்களுக்கு தேர்ந்த pick and choose செய்து பொருக்கி எடுக்கப்பட்ட சான்றுகள், கூடவே வரும் உணர்ச்சி தூண்டல்கள் மற்றும் கவர்ச்சிகரமாக அலங்காரம் செய்யப்பட்ட சாக்கடை சங்கதிகள்!

    தமிழ் வலையுலகம் உயிர்பெற்றவுடன் இந்த பிட் நோடிசு மா வீரர்கள் செய்த முதல் வேலை, காலியாய் கிடந்த இடத்தை நிரப்புவது, அதுவும், அற்பமான ஏதோ ஒரு சினிமாவில் தங்களின் சித்தாந்தங்களை பொருத்தி பக்கம் பக்கமாக மொக்கை போடுவது மற்றும் பிடிக்காதவர்களை, பிடிக்காதவைகளை, பிடிக்காததால் இது நாசமாக போகவேண்டும் என்று காழ்புணர்ச்சியுடன் தரக்குறைவாக எழுதித்தள்ளுவது. மேலும் இதை செய்யாத ஏனையா மக்களை பிற்போக்கின் ப்ரதிநிதியே முற்போக்கா நீ என்று பயமுறுத்தி முத்திரை குத்துவது!!!!

    ReplyDelete
  28. இதை எல்லாம் ஏன் உங்களுக்கு சொல்லுகின்றேன் என்றால், இந்த கூட்டத்தின் முக்கிய மனிதார் நீங்கள் இல்லாவிடினும், முகவரி தந்து சந்தா கட்டும் முத்திரை வீரராக இருப்பதால் இந்த காணிக்கை!

    மேலும், ஜெயமோகன் என்ன, உங்களின் பிட் நோடிசு உலகை உணர்ந்து, இது வெறும் போலி அறிவு ஜீவிகள் கூட்டமே என்று தெளிந்து, உங்களை போன்றவர்களை அடையாளம் காட்டும் அல்லது உண்மை பேசிகள் அல்ல இவர்கள் என்று ஒதிங்கிப்போகும் யாரையும் எவரையும் திட்டுவதும் ரொம்ப சாதாரணம்தனே, நம்ம தொழிலே அதுதானே!!!

    முத்திரை குத்த ஆளில்லை எனின்,
    புதுவித பொய்கள் பத்தை சொல்லி
    உண்மை சத்துடன் எழுதும் சான்றோரையும்
    சற்றும் சங்கடமில்லாமல் சதாய்ப்பதும்
    பித்தம் பிடித்தவர் போல பதம் பார்ப்பதும்
    சுகுணா போன்றோருக்கு சுகமன்றோ

    உண்மையை சொல்லவேண்டுமென்றால், சுகுணா திவாகர் ஒரு சும்மானா டுபாகூர்!!!!

    நன்றி

    -----------------


    நன்றி

    ReplyDelete
  29. Above is Dedicated to திரு சுகுணா திவாகர் அவர்கள்
    (அவரின் பதிவில் பின்னூட்டமாக போட்டது, மறுபடியும் இங்கே. என்ன, கொஞ்சம் லேட்டு, மத்தபடி, கருத்துல ஒன்றும் மாற்றமில்லை)

    ReplyDelete
  30. [[[குசும்பன் said...
    அண்ணன் சுகுணா திவாகர் இன்று தனது 31-வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.//

    சுகுணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ஆமாம் அது என்னா சைக்கிள் கேப்பில் அண்ணன் சுகுணா என்று சொல்லி உங்க வயசை குறைக்கும் முயற்சியா?]]]

    ஆமாம்.. அப்படியென்ன எனக்கு வயசாயிருச்சு..? நான் யூத்துதான குசும்பண்ணே..!

    ReplyDelete
  31. நோ ஸார்..

    சுகுணாவுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம்.

    அதைக் காட்டுவதற்கு இந்தப் பதிவும், இந்த மேடையும்தான் உங்களுக்குக் கிடைத்ததா..?

    அநாகரிகம்..!

    ReplyDelete
  32. இந்தாளு தான் என் தளத்துல வந்து அசிங்கமாக பின்னூட்டம் எழுதினாரா. ஆளுக்கு மூஞ்சீல இருக்கிற நாகரீகம் எழுத்தில இல்லையே!ஓ இது தான் பகுத்தறிவோ?

    ReplyDelete
  33. @hayyram
    நீங்கள் சுகுணா திவாகரையா குறிப்பிடுகிறீர்கள்?

    இப்போது போலி சுகுணா திவாகரும் களத்தில் குதித்துல்ளார். அவர்தான் உங்கள் பதிவில் பின்னூட்டம் இருப்பார் என நினைக்கிறேன்.

    போலியை இங்கு கீழ்க்கண்ட காரணங்களால் அடையாளம் காண இயலவில்லை.

    1. போலி அசல் இருவரது வலைப்பூக்களுமே இன்வைடெட் ஆடியன்சுக்காக உள்ளன. ஆகவே அசலால் தன்னை காத்து கொள்ள முடியாது.
    2. அசல் தனது போட்டோவை தனது வலைப்பூவில் போடவில்லை. அதனாலும் பிரச்சினை அதிகரிக்கும்.
    3. நான், உண்மைத்தமிழன் செய்வது போல தன் டிஸ்ப்ளே பெயரில் பதிவர் எண்ணும் வருமாறு செய்திருக்கலாம், அதை செய்யவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete