Pages

Tuesday, November 24, 2009

சுப்பையா வாத்தியாரின் சாதனை..! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..!

24-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பதிவுலகிற்குள் மாதந்தோறும் 20 பேர் வருவதும், அதில் பாதி பேர் சில காலங்களில் சத்தம் இல்லாமல் மறைவதும் சகஜமாக போய்க் கொண்டிருக்கிறது. எழுத்து என்பது அனைவருக்குள்ளும் இருக்கிறது. வரும்.. வருகிறது. ஆனால் அனைவருக்கும் பிடித்தமாக எழுதுவது என்பது சிலரால் மட்டுமே முடிகிறது. அது இறைவனின் கொடை..

அந்த வரிசையில் நமது வாத்தியார் திரு.சுப்பையா அவர்களின் எழுத்துக்கள் வலையுலகத்தில் அத்தனை பிரிவினரையும் கவர்ந்திழுத்திருக்கிறது.



ஆன்மிகம், ஜோதிடம், ஜாதகம் என்று எழுதினாலும் அதில் நம்பிக்கை இல்லாதவர்களைக்கூட அதன் மீது ஈர்க்கக் கூடிய அளவுக்கு அவருடைய எழுத்து வன்மை அதில் தெரிகிறது.

அந்த நம்பிக்கையில்லாமல் எதிர்க் கேள்விகளை அடுக்கி வைப்பவர்களுக்குக்கூட மிக நாகரிகமாக பதில்களைச் சொல்லும் ஐயாவின் சகிப்புத்தன்மையும், பெரிய மனதும் ஊரறிந்தது.

அவருடைய வகுப்பறை என்னும் தளம் எத்தனையோ வலைப்பதிவர்களுக்கும், படிக்கக் கூடிய ஆர்வலர்களுக்கும் பிரமிப்பை ஊட்டியிருக்கிறது.. எதிர்காலம் பற்றிய ஒரு சிறு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

அவருடைய சிறுகதைத் தொகுப்புகள் மூன்றுமே ரத்தினச் சுருக்கமான வாழ்க்கை வழிகாட்டிகள். அப்படித்தான் நான் நினைக்கிறேன். ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு நீதியினைச் சுட்டிக் காட்டி வாழ்க்கை என்பது என்ன என்பதை நமக்குத் தெளிவாக்கியிருக்கிறார்.

இத்தகைய வித்தகர் நமது வலையுலகில் பவனி வருவது நிச்சயம் நமக்குப் பெருமைதான். நான் சற்றும் கிஞ்சித்தும் அவரை உயர்த்திப் பேசவில்லை. அவருக்குத் தற்போது கிடைத்துள்ள பாலோயர்ஸ் எண்ணிக்கையை சற்று பாருங்கள்..

வலையுலகில் முதல் முறையாக ஒரு தமிழ் பதிவருக்கு ஆயிரம் பாலோயர்களைத் தாண்டியது என்றால் அது நமது வாத்தியாருக்குத்தான்.. இப்போது அவருடைய பாலோயர்களின் எண்ணிக்கை 1032-ல் நிற்கிறது. வாத்தியாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

நானும் மூன்றாண்டுகளாக இங்கே குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன்.. இப்போதுதான் 300-ஐ தாண்டியிருக்கிறேன். ஆனால் ஐயா அவர்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை பார்த்தால் அவருடைய எழுத்தின் வலிமை தெரிகிறது.. புரிகிறது..

அவருடைய கொள்கையில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள்கூட என்ன சொல்லப் போகிறார்..? எப்படிச் சொல்லப் போகிறார்..? என்கிற ஆர்வத்தில் ஐயாவின் எழுத்தில் கிறங்கிப் போயிருக்கிறார்கள் என்பது என் தெளிவு.

ஐயாவின் இந்த சாதனையை ஊர் அறிய, உலகறிய பாராட்டும் கடமை அவருடைய வகுப்பறை மானிட்டர் என்கிற முறையில் எனக்குக் கிட்டியிருப்பது எனக்குப் பெருமைதான்..

வகுப்பறையின் பெருமையும், ஐயாவின் சீரிய எழுத்தும் மென்மேலும் வளர்ந்து வலையுலகை ஆட்கொள்ள வேண்டுமாய் என் அப்பன் முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்கிறேன்.

வகுப்பறை வாழ்க..! சுப்பையா வாத்தியார் வாழ்க..!

38 comments:

  1. ஆசானுக்கு முன்னாள் மாணவனின் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் :))

    ReplyDelete
  2. வாத்தியார் ஐயாவுக்கு எங்கள் வாழ்த்து(க்)களும் இனிய பாராட்டுகளும்.

    ReplyDelete
  3. சுப்பையா வாத்தியார் வாழ்க..!


    pl also visit

    http://tvrk.blogspot.com/2009/09/blog-post_20.html

    ReplyDelete
  4. /நானும் மூன்றாண்டுகளாக இங்கே குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன்.. இப்போதுதான் 300-ஐ தாண்டியிருக்கிறேன்.

    Read more: http://truetamilans.blogspot.com/2009/11/blog-post_24.html#ixzz0XklhIoEh//
    கொஞ்சமா எழுதினா பாலோ பண்ணுவாங்க.. இப்ப எழுதினாப்போல எழுதுங்க..

    ReplyDelete
  5. வணங்கிகிறேன் வாத்தியாரே

    ReplyDelete
  6. இணைய ஆசானுக்கு இதயம் கனிந்த நன்றிகள்!!!
    தமிழன் அண்ணா.என்னையும் சேர்த்து இன்று முதல் உங்கள் பாலோயர்ஸ் எண்ணிக்கை 318.

    ReplyDelete
  7. வாத்தியாருக்கு வாழ்த்துகள்.

    // கொஞ்சமா எழுதினா பாலோ பண்ணுவாங்க.. இப்ப எழுதினாப்போல எழுதுங்க.. //

    ரிப்பீட்டேய்ய்ய்ய்

    ReplyDelete
  8. /*நானும் மூன்றாண்டுகளாக இங்கே குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன்.. இப்போதுதான் 300-ஐ தாண்டியிருக்கிறேன்.*/

    அடச்சே.... பத்து கோடி "தமிலர்"கள்ளே முன்னூறு பேரு உயிரை வெறுத்து இருக்காங்களே...

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

    அண்ணே... நல்லா விசாரிச்சு பாருங்க.. அந்த 300 பேரும்
    நீங்க பதிவு போட்ட ஒடனே... ஐயா சாமி அவரு பதிவு போட்டுட்டாரு... இனி அந்த பக்கம், கோடை விடுமுறை அப்பத்தான் போகணும்னு... சொல்லி...
    சுவரு/கேட்டு ஏறி குதிச்சு ஓடுற ஆளா இருக்க போறாங்க....

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  9. வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ஜோதிடத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லாததால் நான் ஐயாவின் இடுகைகள் படித்ததில்லை ,நீங்கள் இப்போது அவரின் பதிவுக்குள் போகும் ஆர்வத்தை தூண்டி உள்ளீர்கள் ,நன்றி.இன்னொரு பதிவரைப்
    பாராட்டும் உங்கள் பண்பு மெச்சத் தக்கது .
    தமிழர் ஒற்றுமையில்லாத ஒரு இனம் என்பதற்கு தமிழ் பதிவுலகமும் ஒரு சான்று.
    தமிழ் அரசியல் வாதிகள் மாதிரி தமிழ் பதிவுலகிலும் பல பிரிவினைகள் ,ஈகோக்கள் உண்டு என்பது புரியாத ஒரு அசட்டு அப்பாவியாகத்தான் ஆரம்பத்தில் நான் இருந்தேன் ,இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பதிவுலகின் தாற்பரியங்கள் எனது மர மண்டைக்கு புரிய ஆரம்பித்துள்ளன .
    மேலோர் கீழோர் என்ற elitism தமிழ் பதிவுலகிலும் உண்டு என்பது புரிகிறது .எல்லோரும் எல்லா பதிவர்களாலும் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார்கள் என்பதும் இப்போது புரிகிறது,
    உ.த அண்ணா இந்த சமயத்தில் விழாவுக்கு வந்த எல்லோரையும் பார பட்சம் இல்லாமல் வரவேற்கும் விழா
    ஏற்பாட்டாளர் மாதிரி உங்கள் பதிவில் பின்னூட்டம் போடும் எல்லோருக்கும் தனித்தனியே பதில் சொல்லும் உங்கள் வழக்கத்தை பாராட்டுகிறேன்
    --வானதி

    ReplyDelete
  11. எனது வாழ்த்துக்களும் ஐயா

    ReplyDelete
  12. வானதியை வழிமொழிகிறேன்...

    இரண்டு நாட்கள் முன்னால் நடந்த பதிவர் ச்ந்திப்பு நானும் சென்றேன். அங்கே உணர்ந்தேன்.

    ReplyDelete
  13. வகுப்பறைக்கு நானும் சென்று வந்துள்ளேன். பிரமித்துள்ளேன்..பாராட்டுக்களுக்குப் பாராட்டுக்கள்...

    ReplyDelete
  14. வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. avarudaya valaithalathai enaku arimugapaduthiyatharkku nandri anna.. :)

    ReplyDelete
  16. ஆசானுக்கு என்னுடைய வாழ்த்துக்களும்...!!!!!!!!!!

    ReplyDelete
  17. வாத்தியார் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்களும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  18. வாத்தியார் ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்களும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  19. சென்ஷி தம்பி.. துளசி டீச்சர்.. டிவிஆர் ஸார்..

    நன்றிகள் உரித்தாகுக..!

    ReplyDelete
  20. கேபிளு..

    என்ன இருந்தாலும் நம்ம தனித்தன்மையை இழந்துறக்கூடாது..!

    ReplyDelete
  21. தண்டோராஜி..
    பூங்குன்றன் ஸார்..
    இராகவன் ஸார்..

    மிக்க நன்றிகள்..!

    ReplyDelete
  22. [[[நையாண்டி நைனா said...

    /*நானும் மூன்றாண்டுகளாக இங்கே குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன்.. இப்போதுதான் 300-ஐ தாண்டியிருக்கிறேன்.*/

    அடச்சே.... பத்து கோடி "தமிலர்"கள்ளே முன்னூறு பேரு உயிரை வெறுத்து இருக்காங்களே...
    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
    அண்ணே... நல்லா விசாரிச்சு பாருங்க.. அந்த 300 பேரும்
    நீங்க பதிவு போட்ட ஒடனே... ஐயா சாமி அவரு பதிவு போட்டுட்டாரு... இனி அந்த பக்கம், கோடை விடுமுறை அப்பத்தான் போகணும்னு... சொல்லி...
    சுவரு/கேட்டு ஏறி குதிச்சு ஓடுற ஆளா இருக்க போறாங்க....
    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்]]]

    நையாண்டி நைனா..

    நீ நேர்ல சிக்கும்போது இருக்குடி மவனே..!

    ReplyDelete
  23. அக்பர், ஸ்டார்ஜன் வருகைக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  24. [[[vanathy said...
    ஜோதிடத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லாததால் நான் ஐயாவின் இடுகைகள் படித்ததில்லை ,நீங்கள் இப்போது அவரின் பதிவுக்குள் போகும் ஆர்வத்தை தூண்டி உள்ளீர்கள், நன்றி. இன்னொரு பதிவரைப் பாராட்டும் உங்கள் பண்பு மெச்சத்தக்கது.]]]

    வானதி.. சுப்பையா ஐயா பதிவராக இல்லை.. என்னைப் போன்ற பலருக்கும் வாத்தியாராக இருக்கிறார். ஆக ஒரு ஆசிரியருக்கு விழா எடுக்கும் மாணவனைப் போன்று நான்..

    ReplyDelete
  25. புதுகைத்தென்றல்
    அசோக்
    ஸ்ரீராம்
    Mrs.Menagasathia
    கனகு
    ராமலஷ்மி
    முத்துலஷ்மி
    செந்தழல்ரவி
    நிஜமா நல்லவன்

    அனைவரின் வருகைக்கும், வாழ்த்திற்கும் வாத்தியார் சார்பில் நன்றிகள்..!

    ReplyDelete
  26. உண்மைதான்,வாத்தியாருக்கு பல்வேறு கடமைகள் இருந்தாலும் பதிவ, வாசகர்ளூக்கு அவர் எழுதி வருவது பாராட்ட தக்கது.
    வாழ்த்துக்கள் வாத்தியாரே உங்களை தொடர்பவன் என்ற பெருமையுடன்.

    ReplyDelete
  27. 18+ எழுதுவாரா? :)
    --

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. நம்மாளுகளுக்கு எதிர்காலம் பற்றி சொல்லப்போறேன்னு சொன்னா ஓடிருவாங்க. அதான் இத்தனை பேரு. இருந்தாலும் வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  29. வணங்கிகிறேன் வாத்தியாரே

    ReplyDelete
  30. அண்ணா..என்னுடைய இந்த பதிவை பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.நான் சொல்வது சரி என்றால் என் அண்ணன் என்கிற முறையிலும், மூத்த பிரபலபதிவர்
    என்கிற முறையிலும் எனக்கு உங்களின் ஆதரவு தாருங்கள்.. நன்றியுடன், உங்கள் அன்பு தம்பி, பூங்குன்றன்.


    http://poongundran2010.blogspot.com/2009/11/blog-post_24.html

    ReplyDelete
  31. உங்கள் அனைவரின் பாராட்டுக்களுக்கும் நன்றி. இந்தத் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு விதத்தில் எனக்கு மகிழ்ச்சியை தந்தாலும், வேறு ஒரு விதத்தில் கவலையையும் அளிக்கிறது. இன்னும் அதிகப் பொறுப்புணர்ச்சியுடன் நான் எழுத வேண்டும். அதோடு, 20ல் இருந்து 70 வயதுவரை என் பதிவிற்கு வந்து போகிறவர்கள் அனைவரும் படிக்கும் விதமாக மேலும் சுவாரசியத்துடன் எழுத வேண்டும்.

    உங்கள் அனைவரின் அன்பிற்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  32. வாத்தியாருக்கு வணக்கம்.

    ReplyDelete
  33. நண்பரே

    சரியான சமயத்தில் நமது வாத்தியாரை பற்றி நல்ல ஒரு பதிவை வெளியீட்டு உள்ளீர்கள்

    அவரது பதிவுற்கு ஒரு அட்டவணை போட்டதெற்கே எனது பதிவு ஒரு வருடமாக எதுவும் எழுதமேலையே அதிக பட்ச ஹிட் பெற்று கொண்டு உள்ளது என்பதே ஒரு மிக பெரிய உதாரணம்ஆகும்.

    நானும் வழி மொழிகிறேன்

    வகுப்பறை வாழ்க..! சுப்பையா வாத்தியார் வாழ்க..!

    ReplyDelete
  34. வாத்தியார் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கங்களும் வாழ்த்துக்களும்.!

    ReplyDelete