Pages

Sunday, November 22, 2009

புதுச்சேரியின் திண்ணிப் பண்டாரங்களான அரசியல்வியாதிகள்..!!!

22-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அரசியல்வாதிகளை 'அரசியல்வியாதிகள்' என்றே நான் குறிப்பிட்டு வருவதைக் குறித்து பல அரசியல் விமர்சனப் பதிவர்கள் நேரிலும், எழுத்திலும் ரொம்பவே வருத்தப்பட்டுக் கொண்டார்கள். 'எனது அரசியல் விமர்சனங்கள் ரொம்பவே ஓவராக இருப்பதாக' அவர்கள் குறை சொல்லி வருகிறார்கள்.

நான் என்ன வேண்டுமென்றே பொச்செரிச்சலுடனா அவர்களைக் கடித்துக் குதறிக் கொண்டிருக்கிறேன். முகமூடி அணிந்து கொள்ளையடிக்கும் திருட்டுக் கும்பலைப் போல, முகமூடி அணியாமல் வெள்ளை வேஷ்டி, சட்டையில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்தக் கும்பலுக்கென்ன மாலை, மரியாதையா செய்ய முடியும்..?

நமது மாநிலம்தான் இப்படி என்றால் கேள்வி கேட்பாரே இல்லாத புதுவை மாநிலத்தில் கேட்கவா வேண்டும்? புகுந்து விளையாடுகிறார்கள் அமைச்சர்கள்..


மக்கள் ஏதேனும் குற்றம், குறைகளை சுட்டிக் காட்டிப் பேசினால் மட்டும் “ஐயையோ.. நம்ம ஸ்டேட்டை பத்தி உங்களுக்கே தெரியாதா? எல்லா பைலும் டெல்லிக்கு போய் கையெழுத்தாகிதான் வரணும்.. கொஞ்சம் லேட்டாகும்.. எல்லாத்துக்கும் டெல்லிதான் காரணம்..” என்று கூசாமல் பொய்யை மொழுகி அதன் மேல் சாணியைத் தெளித்து கோலம் போட்டும் வாய்ச்சொல் வீரர்கள் அல்லவா இவர்கள்..

ஆனால் தங்களது சொந்த நலன்களுக்காக கொள்ளையடிக்க இறங்கிவிட்டால் மட்டும் தயங்காமல் உடனுக்குடன் காரியங்களைச் செய்து கொள்கிறார்கள். அதிலும் உடன் இருந்தே குழி பறிப்பது, காலை வாரி விடுவது என்பதெல்லாம் புதுவை அரசியலில் மிக சர்வசாதாரணமான விஷயம். எல்லாம் ஒரு லெவல் வரைக்கும்தான்.. ஆட்சிக்கு வந்துவிட்டால் அந்தப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கூட்டுக் கொள்ளையடிக்க தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.

இதோ இங்கே பாருங்கள்.. புதுவையில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் தலைமையிலான அரசின் முதலமைச்சரும், சில அமைச்சர்களும் மக்களின் வரிப்பணத்தை எப்படியெல்லாம் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

தகவல் கேட்புரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட சில உண்மைத் தகவல்கள் இந்த அரசியல் வியாதிகள் சிறையில் இருக்க வேண்டிய வியாதிகள்தான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.


புதுவை முதல்வர் வைத்திலிங்கம் தனது சொந்த வீட்டில் குடியிருந்து கொண்டே வீட்டு வாடகையை அரசிடம் இருந்து வசூலித்து வருகிறார். மாத வாடகை 39000 ரூபாயாம். இவரல்லவோ முதல் அமைச்சர்..?

2008, ஆகஸ்ட் 9-ம் தேதியன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் திண்பண்டங்களுக்காக முதல்வர் செலவிட்ட தொகை 1 லட்சத்து 6000 ரூபாயாம். இதே போல் ஒன்பது மாதங்களில் திண்பண்டங்களுக்காக மட்டுமே 10 லட்சத்து 4000 ரூபாயை செலவழித்திருக்கிறார் முதல்வர் வைத்திலிங்கம். இவரை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை..

இவர் மட்டுமா? தலையே இப்படி இருந்தால் 'வாலுகள்' எந்த லட்சணத்தில் இருக்கும்..?

தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி தனது சொந்த வீட்டிற்கு வாடகையாக அரசிடமிருந்து பெறும் தொகை 14000 ரூபாய். திண்பண்டங்களுக்காக ஒன்பது மாதங்களில் இந்த அமைச்சர் செலவிட்டுள்ள தொகை, அதிகமில்லை ஜென்டில்மேன்ஸ்.. 9,47,000 ரூபாய் மட்டுமே. இதுபோக டீ, பிஸ்கட்டுக்கான செலவு மட்டும் 3,49,648 ரூபாயாம்.


கல்வித்துறை அமைச்சர் ஷாஜகான் தனது சொந்த வீட்டிற்கு அரசிடமிருந்து வாடகையாக பெறும் தொகை 69,940 ரூபாய். இதில் இதுவரையில் அந்த வீட்டை அழகுபடுத்த வேண்டி அவர் செலவிட்ட அரசுப் பணம் 17,49,187 ரூபாய். இன்னமும் 15,03,000 ரூபாய்க்கு கொட்டேஷன் கொடுத்திருக்கிறாராம்.. அதுவும் மத்திய அரசிடமிருந்து சாங்ஷன் ஆகிவிட்டதாம்..

2008, அக்டோபர் 28-ம் தேதி ஒரு நாளில் மட்டும் 78,000 ரூபாய்க்கு திண்பண்டங்கள் வாங்கியதாக கணக்குக் காட்டியிருக்கிறார். இவர் செலவிட்டுள்ள நான்கு மாத திண்பண்டங்கள் செலவுத் தொகை 1,50,000 ரூபாய். ஒன்பது மாத திண்பண்டச் செலவு 2,79,000 ரூபாய் என்று மொத்தக் கணக்கும் காட்டி பில் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது.

பொது சுகாதாரத் துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது அலுவலகத்தை அலங்காரப்படுத்த செலவழித்த தொகை 13,25,511 ரூபாய். இனி செய்யப் போகும் செலவுக்கான எஸ்டிமேட் தொகை ரூபாய் 9,88,880. அக்டோபர் 28-ம் தேதியன்று ஒரு நாளில் மட்டும் திண்பண்டங்களுக்காக இவர் செலவிட்ட தொகை 75,000 ரூபாய். இவருடைய ஒன்பது மாத திண்பண்டங்களுக்கான மொத்தச் செலவு 6,88,000 ரூபாய்.


உள்துறை அமைச்சர் வல்சராஜ் டிசம்பர் 5, 2008 அன்று ஒரு நாள் மட்டும் திண்பண்டங்களுக்காக 60,000 ரூபாயை செலவழித்திருக்கிறார். இவருடைய ஒன்பது மாத திண்பண்டச் செலவு 4,35,000 ரூபாயாம்.

போதுமா..?

கிராமப்புறங்களில் தங்களுடைய குடிசை வீட்டை மராமத்து செய்யவே வக்கில்லாமல் எத்தனையோ ஏழை மக்கள் அல்லாடிக் கொண்டிருக்க..

இந்த வெட்கங்கெட்ட ஜென்மங்கள் லட்சம், லட்சமாக தின்றே தீர்க்கிறார்களே.. இவர்களையெல்லாம் அரசியல் வியாதிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது..?

69 comments:

  1. இந்த செய்திய நானும் படிச்சேன் அண்ணா.... ஆனா எவ்ளோ காலம் தான் இவங்கள திட்டி திட்டி எழுதி நம்ம டைம்-அ வேஸ்ட் பண்றதுனு விட்டுட்டேன்...

    அரசியல்வதிகள் அப்டினு சொல்லாம தீனிபண்டாரங்கள் அப்டி-னு இவங்களை சொல்லலாம்... எப்படி தான் மத்தவங்க காசு-ல வஞ்சகம் இல்லாம சாப்புடுறாங்க-னு தெரியல..

    /*'எனது அரசியல் விமர்சனங்கள் ரொம்பவே ஓவராக இருப்பதாக' அவர்கள் குறை சொல்லி வருகிறார்கள்.*/

    எல்லாம் கரக்ட்டா தான் அண்ணா இருக்கு... இத விட கடுமையாவே எழுதணும்.. அப்ப தான் கொஞ்சமாவது எடுபடும்...

    அடுத்து அந்த கரும்பு விலை பிரச்சனை பத்தி எழுதுங்க அண்ணா.. எனக்கு ஏதோ சுமாரா தான் புரிஞ்சுது...

    ReplyDelete
  2. அண்ணே ... ஜுஜுபி மேட்டரைப் போட்டு இருக்கீங்க...

    திங்கறதுல மத்த மாநிலங்களை பார்த்தால், இவங்க கொஞ்சமாகத்தான் இருக்கும்...

    மத்த விஷயங்களைப் பாருங்க அண்ணே...

    விட்டா இவங்க எல்லாம் சேர்ந்து இந்தியாவை வித்துடுவாங்க..

    ReplyDelete
  3. அப்டியே லைட்டா தமிழ்நாட்டுப் பக்கமும் ஒரு ரவுண்டு அடிங்க அண்ணாச்சி

    ReplyDelete
  4. அரசியல்ல இது எல்லாம் ரொம்ப சகஜங்க....அட, நாலாவது ஆளா கருத்து சொல்ல வந்த கந்த சாமி ஆயட்டேனே...

    ReplyDelete
  5. அடப்பாவிகளா..ஒருத்தன் கூடவா சரக்குக்கு செலவு பண்ணலை?

    ReplyDelete
  6. இப்படியே நாமும் அரசியல்வாதிகளை குறைப்பட்டுகொண்டே இருக்க வேண்டியது தான்.தம்மாத்துண்டு ஊர் புதுவையே இந்த ஆட்டம் போடுகிறது என்றால் நம்ம அமைதிபூங்கா தமிழ்நாடு? அய்யோ சாமி..கேட்கவே வேணாம்.எதுக்கெல்லாம் என்ன அண்ணா முடிவு?நம்ம மக்கள் இலவசங்களில் அல்லவா வாழ்கிறார்கள் !!!

    ReplyDelete
  7. அப்படி என்னதான் திண்பானுங்க!!!!

    ReplyDelete
  8. பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
    “செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

    ReplyDelete
  9. [[[kanagu said...

    இந்த செய்திய நானும் படிச்சேன் அண்ணா. ஆனா எவ்ளோ காலம்தான் இவங்கள திட்டி திட்டி எழுதி நம்ம டைம்-அ வேஸ்ட் பண்றதுனு விட்டுட்டேன்...

    அரசியல்வதிகள் அப்டினு சொல்லாம தீனிபண்டாரங்கள் அப்டி-னு இவங்களை சொல்லலாம்... எப்படிதான் மத்தவங்க காசு-ல வஞ்சகம் இல்லாம சாப்புடுறாங்க-னு தெரியல.]]]

    அரசியல்வாதியா ஆயிட்டாலே இந்த மாதிரியான சூடு, சொரணை இல்லாத குணம் தானா வந்திரும்..!

    /*'எனது அரசியல் விமர்சனங்கள் ரொம்பவே ஓவராக இருப்பதாக' அவர்கள் குறை சொல்லி வருகிறார்கள்.*/

    எல்லாம் கரக்ட்டாதான் அண்ணா இருக்கு. இதவிட கடுமையாவே எழுதணும். அப்பதான் கொஞ்சமாவது எடுபடும்.]]]

    அப்படீங்குற.. ஆஹா.. எனக்கும் இப்படியொரு ரசிகர்.. சரி.. ஆரம்பிச்சுர்றேன்..!

    [[[அடுத்து அந்த கரும்பு விலை பிரச்சனை பத்தி எழுதுங்க அண்ணா.. எனக்கு ஏதோ சுமாராதான் புரிஞ்சுது...]]]

    நானும் தேடி, தேடி படிச்சிட்டிருக்கேன். எனக்கு புரிஞ்சு போச்சுன்னு எழுதிர்றேன்.. நானும் உன் நிலைமைலதான் இருக்கேன் கனகு..!

    ReplyDelete
  10. [[[இராகவன் நைஜிரியா said...

    அண்ணே ... ஜுஜுபி மேட்டரைப் போட்டு இருக்கீங்க. திங்கறதுல மத்த மாநிலங்களை பார்த்தால், இவங்க கொஞ்சமாகத்தான் இருக்கும்...
    மத்த விஷயங்களைப் பாருங்க அண்ணே. விட்டா இவங்க எல்லாம் சேர்ந்து இந்தியாவை வித்துடுவாங்க.]]]

    அதுவும் ஒரு நாளைக்கு நடக்கத்தான் போகுது இராகவன்..

    இப்பவே கொஞ்சம், கொஞ்சமா வித்துக்கிட்டுத்தான் இருக்காங்க..!

    ReplyDelete
  11. [[[KVR said...
    அப்டியே லைட்டா தமிழ்நாட்டுப் பக்கமும் ஒரு ரவுண்டு அடிங்க அண்ணாச்சி.]]]

    என்னத்த ரவுண்டு அடிக்கிறது..? இக்கரைக்கு அக்கரை பச்சைதான்..!

    ReplyDelete
  12. [[[தண்டோரா ...... said...
    அடப்பாவிகளா.. ஒருத்தன் கூடவா சரக்குக்கு செலவு பண்ணலை?]]]

    சரக்கை சொந்த செலவுல வாங்கிட்டு சைட் டிஷ்ஷை மட்டும் மக்கள் செலவுல தி்ன்னுட்டாங்க போலிருக்கு..!

    ReplyDelete
  13. [[[பூங்குன்றன் வேதநாயகம் said...
    இப்படியே நாமும் அரசியல்வாதிகளை குறைப்பட்டுகொண்டே இருக்க வேண்டியதுதான். தம்மாத்துண்டு ஊர் புதுவையே இந்த ஆட்டம் போடுகிறது என்றால் நம்ம அமைதிபூங்கா தமிழ்நாடு? அய்யோ சாமி.. கேட்கவே வேணாம். எதுக்கெல்லாம் என்ன அண்ணா முடிவு? நம்ம மக்கள் இலவசங்களில் அல்லவா வாழ்கிறார்கள் !!!]]]

    மக்கள் எவ்வழியோ நாடும் அப்படித்தான் இருக்கும்..

    இலவசமாக போடப்படும் பிச்சையிலேயே சந்தோஷப்படும் இந்த மக்கள் இருக்கின்றவரையில் இந்த அரசியல்வியாதிகளின் ஆட்டம் தொடரத்தான் செய்யும்..!

    ReplyDelete
  14. [[[antony said...
    அப்படி என்னதான் திண்பானுங்க!!!!]]]

    அதான..?

    ReplyDelete
  15. [[[RAD MADHAV said...
    பதிவர்களே. நல் வணக்கங்கள்...
    “செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html]]]

    கலந்துக்கிட்டா போச்சு..!

    ReplyDelete
  16. [[[ஸ்ரீராம். said...
    அரசியல்ல இது எல்லாம் ரொம்ப சகஜங்க.... அட, நாலாவது ஆளா கருத்து சொல்ல வந்த கந்தசாமி ஆயட்டேனே...]]]

    அரசியல்ல இல்ல.. ஜனநாயகத்துல இது சகஜமாயிருச்சு..!

    நீங்க கருத்து கந்தசாமின்னா நான் யாரு..?

    ReplyDelete
  17. அமைச்சராவதற்கு அவர்கள் சகித்துக் கொள்ளும் நிகழ்வுகளைப் பற்றி கொஞ்சமாவது சிந்தித்துப் பாருங்கள். அப்போது தெரியும் அந்த வலி. சும்மா சும்மா எதுக்கெடுத்தாலும் அமைச்சர்களையும், யெம்மெல்லேக்களையும் குற்றம் சொல்லுவதை விடுங்கள். அவரவர்கள் அந்த நிலைக்கு வர என்ன பாடுபடுகிறார்கள் என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டால் நல்லது.

    ReplyDelete
  18. தல புதுவையில் அரசியலில் இதற்கு மேலும் அநியாயங்கள் நடக்கின்றன..இதெல்லாம் சும்மா ஒரு ஜூஜூபி மேட்டர்..இந்த விஷயம் வெளியே வந்ததே ஆச்சரியம்..அங்க ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையில் எப்பொழுதும் ஒரு "புரிதல்" உண்டு..அதனால் யாரு என்ன பண்ணாலும் பெருசா கண்டுக்கமாட்டாங்க..

    ReplyDelete
  19. //i love u!//

    ரொம்பவே தீவிரமான ரசிகர்கள் எல்லாம் உருவாக்கிட்டு இருக்காங்க..

    ReplyDelete
  20. [[[மணிப்பக்கம் said...
    i love u!]]]

    ஏன்.. ஏன் இந்த கொலைவெறி..?

    ReplyDelete
  21. [[[வெளிச்சத்தில் said...
    அமைச்சராவதற்கு அவர்கள் சகித்துக் கொள்ளும் நிகழ்வுகளைப் பற்றி கொஞ்சமாவது சிந்தித்துப் பாருங்கள். அப்போது தெரியும் அந்த வலி. சும்மா சும்மா எதுக்கெடுத்தாலும் அமைச்சர்களையும், யெம்மெல்லேக்களையும் குற்றம் சொல்லுவதை விடுங்கள். அவரவர்கள் அந்த நிலைக்கு வர என்ன பாடுபடுகிறார்கள் என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டால் நல்லது.]]]

    ஐயா பொதுநலச் சேவை.. மக்கள் பணியாற்றுதல், அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு..?

    சம்பாதிப்பதற்கு இது ஒன்றும் வியாபாரம் இல்லை..!

    ReplyDelete
  22. [[[வினோத்கெளதம் said...
    தல புதுவையில் அரசியலில் இதற்கு மேலும் அநியாயங்கள் நடக்கின்றன.. இதெல்லாம் சும்மா ஒரு ஜூஜூபி மேட்டர்.. இந்த விஷயம் வெளியே வந்ததே ஆச்சரியம்.. அங்க ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையில் எப்பொழுதும் ஒரு "புரிதல்" உண்டு.. அதனால் யாரு என்ன பண்ணாலும் பெருசா கண்டுக்கமாட்டாங்க..]]]

    உண்மைதான் வினோத்..

    இப்போதுகூட இந்த மேட்டரை தீக்கதிர் மட்டுமே வெளியிட்டது.. அதன் பின் ஹிந்துவில் வெளி வந்தது.

    இப்போதும் பாண்டிச்சேரியிலும், காரைக்காலிலும் முக்கிய இடங்களில் தட்டிகளில் எழுதி வைத்துள்ளது கம்யூனிஸ்ட் கட்சி..!

    மற்ற எதிர்க்கட்சிகள்.. ம்ஹும்.. வாயைத் தொறக்க மாட்டார்கள் என்பது அனைவருக்குமே தெரியும்..!

    ReplyDelete
  23. [[[வினோத்கெளதம் said...

    //i love u!//

    ரொம்பவே தீவிரமான ரசிகர்கள் எல்லாம் உருவாக்கிட்டு இருக்காங்க..]]]

    ஆமாமாம்.. ஒரு பக்கம் பயமாவும் இருக்கு சாமிகளா..!!!

    ReplyDelete
  24. அண்ணே, தமிழ்மண ஓட்டுப்பட்டைய மேலேத்தி வையுங்க... ஓட்டுப் போடுறதுக்கு அல்லாட வேண்டி இருக்கு!

    ReplyDelete
  25. [[[பழமைபேசி said...
    அண்ணே, தமிழ்மண ஓட்டுப்பட்டைய மேலேத்தி வையுங்க... ஓட்டுப் போடுறதுக்கு அல்லாட வேண்டி இருக்கு!]]]

    அல்லாத்தையும் படிச்சு முடிச்சிட்டு அப்புறமாதான் கருவிப்பட்டைல கை வைக்கணும்னு சொல்லித்தான் கீழ வைச்சிருக்கேன்..!

    மொதல்லயே வைச்சா திரும்பவும் மேல ஸ்குரால் பண்றதுக்கு சோம்பேறித்தனப்பட்டு அப்படியே போயிடறாங்க நிறைய பேரு..

    அதுனாலதான் இந்த மாற்றம்..! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க ராசா..!

    ReplyDelete
  26. சரியான தீனி பண்டாரமா இருப்பானுவ போல! :0

    ReplyDelete
  27. சூப்பர் எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சுட்டீங்க.ஊர் பணத்தை கொள்ளையடிக்கறதுக்கேன்னு பொறந்திருக்கான்னுங்க...

    ReplyDelete
  28. தலைவரே ஒய் டென்ஷன்....பி கூல்.

    உண்மை தமிழன் அண்ணன் வீட்டுக்கு டின் பீர் ஒரு கேஸ் பார்சல்....

    ReplyDelete
  29. [[[செந்தழல் ரவி said...
    i 3 love u.]]]

    இதென்ன புதுசா இருக்கு...?

    ReplyDelete
  30. [[[☀நான் ஆதவன்☀ said...
    சரியான தீனி பண்டாரமா இருப்பானுவ போல! :0]]]

    சொந்தக் காசுல தின்னு தொலைய வேண்டியதுதானே..?

    ReplyDelete
  31. [[[Mrs.Menagasathia said...
    சூப்பர் எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சுட்டீங்க. ஊர் பணத்தை கொள்ளையடிக்கறதுக்கேன்னு பொறந்திருக்கான்னுங்க.]]]

    கரெக்ட் மேடம்..!

    ReplyDelete
  32. [[[ஜெட்லி said...
    தலைவரே ஒய் டென்ஷன். பி கூல். உண்மை தமிழன் அண்ணன் வீட்டுக்கு டின் பீர் ஒரு கேஸ் பார்சல்.]]]

    எப்படி டென்ஷன் இல்லாம இருக்குறது..? பி.பி.யும் எகிறிக்கிட்டுச்சு..!

    இது பீரெல்லாம் சாப்பிட்டு இறங்காது தம்பீ..!

    ReplyDelete
  33. //எப்படி டென்ஷன் இல்லாம இருக்குறது..? பி.பி.யும் எகிறிக்கிட்டுச்சு..! //

    உடம்ப பாத்துக்கோங்க தலைவா.

    ReplyDelete
  34. /// புதுவை முதல்வர் வைத்திலிங்கம் தனது சொந்த வீட்டில் குடியிருந்து கொண்டே வீட்டு வாடகையை அரசிடம் இருந்து வசூலித்து வருகிறார். மாத வாடகை 39000 ரூபாயாம். இவரல்லவோ முதல் அமைச்சர்..? ////

    அவனவன் வீடு வாசல் இல்லாம இருக்கான் ; இவருக்கு 39000 அனாமத்தா அரசு செலவழிக்கிறது . அரசு என்ன அரசு ; இவரே இப்படின்னா மத்தவங்களை கேட்கவா வேணும் .

    இதுக்கு என்ன செய்யலாமுன்னு நினைக்கிறீங்க சரவணன் ....

    ReplyDelete
  35. /அடப்பாவிகளா..ஒருத்தன் கூடவா சரக்குக்கு செலவு பண்ணலை//

    தண்டோரா.. அவங்க தின்னுருக்கிறத பாத்தீங்கள்ள.. அதெல்லாம் சரக்கு அடிச்சப்புறம் சாப்டதுதான்..:)

    ReplyDelete
  36. லட்சத்துலதான் கணக்கா. நம்மூரு பக்கத்தில நெருங்க முடியாது.

    ReplyDelete
  37. எப்படி எப்படியெல்லாம் நூதனமாக கொள்ளையடிக்கலாம் என்று இவர்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  38. [[[செ.சரவணக்குமார் said...
    //எப்படி டென்ஷன் இல்லாம இருக்குறது..? பி.பி.யும் எகிறிக்கிட்டுச்சு..! //

    உடம்ப பாத்துக்கோங்க தலைவா.]]]

    என்னத்த பார்த்துக்கறது..? மனசு சரியில்லையே..!

    இதையெல்லாம் பார்த்தா மனசு கொதிக்காம என்ன செய்யும்..?

    ReplyDelete
  39. [[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    //புதுவை முதல்வர் வைத்திலிங்கம் தனது சொந்த வீட்டில் குடியிருந்து கொண்டே வீட்டு வாடகையை அரசிடம் இருந்து வசூலித்து வருகிறார். மாத வாடகை 39000 ரூபாயாம். இவரல்லவோ முதல் அமைச்சர்..?//

    அவனவன் வீடு வாசல் இல்லாம இருக்கான்; இவருக்கு 39000 அனாமத்தா அரசு செலவழிக்கிறது . அரசு என்ன அரசு; இவரே இப்படின்னா மத்தவங்களை கேட்கவா வேணும். இதுக்கு என்ன செய்யலாமுன்னு நினைக்கிறீங்க சரவணன்]]]

    இவங்களையெல்லாம் விசாரணையே இல்லாம நிக்க வைச்சே சுட்டுத் தள்ளிரலாம்..!

    ReplyDelete
  40. [[[Cable Sankar said...

    /அடப்பாவிகளா..ஒருத்தன் கூடவா சரக்குக்கு செலவு பண்ணலை//

    தண்டோரா.. அவங்க தின்னுருக்கிறத பாத்தீங்கள்ள.. அதெல்லாம் சரக்கு அடிச்சப்புறம் சாப்டதுதான்..:)]]]

    அப்படீன்னுதான் நானும் நினைக்கிறேன் கேபிளு..!

    ReplyDelete
  41. [[[அக்பர் said...
    லட்சத்துலதான் கணக்கா. நம்மூரு பக்கத்தில நெருங்க முடியாது.]]]

    நம்மூரு 'கோடி'க்கு போயிருச்சு அக்பர்ஜி..!

    ReplyDelete
  42. [[[ananth said...
    எப்படி எப்படியெல்லாம் நூதனமாக கொள்ளையடிக்கலாம் என்று இவர்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.]]]

    திருடர்களைவிட, பகல் கொள்ளைக்காரர்களைவிட, முகமூடி கொள்ளைக்காரர்களைவிட அபாயமான கொள்ளையர்கள் இந்த அரசியல்வியாதிகள்தான்..!

    ReplyDelete
  43. என்ன கொடுமை இது அண்ணாச்சி, இவ்வளோ நாள் ஆகியும் உங்க பதிவுக்கு -ve ஓட்டு விழாம இருப்பது என்ன கொடுமை அண்ணாச்சின்னு சொல்லவந்தேன்!

    ஆமா ஒருவேளை பெரிய பெரிய நடிகைகள் கூட தின்பண்டம் சாப்பிடுவானுங்களோ???:)

    ReplyDelete
  44. [[[குசும்பன் said...
    என்ன கொடுமை இது அண்ணாச்சி, இவ்வளோ நாள் ஆகியும் உங்க பதிவுக்கு -ve ஓட்டு விழாம இருப்பது என்ன கொடுமை அண்ணாச்சின்னு சொல்லவந்தேன்!]]]

    கண்ணு வைக்காதடா..! ஏதோ எப்பவோ ஒருவாட்டின்னுதான் எனக்கு மைனஸ் குத்து கிடைக்குது..! நீ வேற ஞாபகப்படுத்தி தொலைச்சிராத..

    [[[ஆமா ஒருவேளை பெரிய பெரிய நடிகைகள் கூட தின்பண்டம் சாப்பிடுவானுங்களோ???:)]]]

    அப்படியும் இருக்குமோ..?

    ReplyDelete
  45. அண்ணே, தின்பண்டங்கள் சைட்டிஷ்ஷாக இருக்கும்...

    புதுச்சேரியல்லவா..??

    ReplyDelete
  46. //அரசியல்வாதிகளை 'அரசியல்வியாதிகள்' என்றே நான் குறிப்பிட்டு வருவதைக் குறித்து பல அரசியல் விமர்சனப் பதிவர்கள் நேரிலும், எழுத்திலும் ரொம்பவே வருத்தப்பட்டுக் கொண்டார்கள்.
    //

    வியாதிகளை (அதாவது நோய்களை) தரம் பிரித்துக் கண்டுபிடிக்கவோ, அழிக்கவோ, குறைந்த பட்சம் வராது தடுக்கவோ, வழிகள் பல உள்ளன. ஆனால், அரசியல் செய்பவர்களை இம்மாதிரி கண்டுபிடிக்கவோ, அழிக்கவோ, குறைந்த பட்சம் வராது தடுக்கவோ, வழி எதுவும் இது வரை கண்டுபிடிக்கவில்லை என்பதால்,

    அவர்களை அரசியல் வியாதிகள் என்று கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

    உறுப்பினர், அகில உலக வியாதிகள் எதிர்ப்போர் சங்கம்.

    ReplyDelete
  47. [[[butterfly Surya said...
    அண்ணே, தின்பண்டங்கள் சைட்டிஷ்ஷாக இருக்கும்...
    புதுச்சேரியல்லவா..??]]]

    அப்படித்தான் நானும் நினைக்கிறேன் சூர்யாஜி..!

    ReplyDelete
  48. [[[பெயர் சொல்ல விருப்பமில்லை said...

    //அரசியல்வாதிகளை 'அரசியல்வியாதிகள்' என்றே நான் குறிப்பிட்டு வருவதைக் குறித்து பல அரசியல் விமர்சனப் பதிவர்கள் நேரிலும், எழுத்திலும் ரொம்பவே வருத்தப்பட்டுக் கொண்டார்கள்.//

    வியாதிகளை (அதாவது நோய்களை) தரம் பிரித்துக் கண்டுபிடிக்கவோ, அழிக்கவோ, குறைந்த பட்சம் வராது தடுக்கவோ, வழிகள் பல உள்ளன. ஆனால், அரசியல் செய்பவர்களை இம்மாதிரி கண்டுபிடிக்கவோ, அழிக்கவோ, குறைந்தபட்சம் வராது தடுக்கவோ, வழி எதுவும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதால்,
    அவர்களை அரசியல் வியாதிகள் என்று கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
    உறுப்பினர், அகில உலக வியாதிகள் எதிர்ப்போர் சங்கம்.]]]

    கிண்டலை வெகுவாக ரசித்தேன் நண்பரே..!

    ReplyDelete
  49. மக்கள் ஓட்டு போடுறதுக்கே காசு வாங்கும் போது இதை எல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள்.....

    ReplyDelete
  50. namma neramum uzaippumthaan veen ivanga yaarum thiruntha maattaargal

    ReplyDelete
  51. உண்மை தமிழன் கலக்கல் ரிப்போர்ட்!

    சுண்டக்கா புதுச்சேரியே இப்படி பீதி கிளப்பினால் திமிங்கலங்கள் இருக்கும் தமிழ்நாடு நினைத்தாலே கண்ணை கட்டுது :-)

    இவங்க டிப்ஸ் வைத்த பணமே இவ்வளோ வருமோ! ;-)

    ReplyDelete
  52. அட பாவிங்களா! லட்ச கணக்குல சைட் டிஷ்சா? அப்போ சரக்குக்கு எவ்வளவு செலவாயிருக்கும்? நாடு தாங்காங்கோ.

    ReplyDelete
  53. மத்த கட்சி காரனாவது கொள்ளை அடிக்குறது போக மீதி நேரத்துலயாவது ஏதாவது திட்டம் போடுவாங்க ..காங்கிரஸ் காரங்க பெரிய உத்தமர் மாதிரி பேசிக்கிறது .ஆனா அமுக்குறத தவிர வேற எந்த திறமையும் கிடையாது .இதுல தமிழ்நாட்டுல தேசிய கட்சி வந்துட்டா ரொம்ப தான் பொளந்துடுவாங்கண்ணு பலருக்கு நினைப்பு வேற

    ReplyDelete
  54. உண்மை தமிழன் அண்ணன் வீட்டுக்கு டின் பீர் ஒரு கேஸ் பார்சல்....

    மொத்த பிரச்சனையையும் மறக்கடித்து விட்டு சிரிக்க வைத்து விட்டார்.

    கண்களில் தென்படாத விசயம் எங்கிருந்து தான் பிடிக்கிறீர்களோ. உண்மையான தமிழன் தான்.

    ReplyDelete
  55. [[[vishnupriya said...
    மக்கள் ஓட்டு போடுறதுக்கே காசு வாங்கும்போது இதை எல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள்.]]]

    உண்மைதான். ஆட்டு மந்தைகளாகிப் போன அறிவற்ற மக்களை வைத்து வேறென்ன செய்வது..?

    ReplyDelete
  56. [[[பித்தன் said...
    namma neramum uzaippumthaan veen ivanga yaarum thiruntha maattaargal]]]

    அதுக்காக கொள்ளையர்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது பித்தா..!!!

    ReplyDelete
  57. [[[கிரி said...

    உண்மைதமிழன் கலக்கல் ரிப்போர்ட்!
    சுண்டக்கா புதுச்சேரியே இப்படி பீதி கிளப்பினால் திமிங்கலங்கள் இருக்கும் தமிழ்நாடு நினைத்தாலே கண்ணை கட்டுது :-) இவங்க டிப்ஸ் வைத்த பணமே இவ்வளோ வருமோ! ;-)]]]

    தமிழகத்தைவிட இந்தியாவிலேயே உத்தரப்பிரதேசம்தான் சுரண்டலில் முதலிடத்தில் இருக்கிறதாம்..!

    ReplyDelete
  58. [[[ஷாகுல் said...
    அட பாவிங்களா! லட்ச கணக்குல சைட் டிஷ்சா? அப்போ சரக்குக்கு எவ்வளவு செலவாயிருக்கும்? நாடு தாங்காங்கோ.]]]

    எத்தனையோ தாங்கியாச்சு.. இதைத் தாங்க மாட்டோமா என்ன..?

    ReplyDelete
  59. [[[ஜோ/Joe said...
    மத்த கட்சிகாரனாவது கொள்ளை அடிக்குறது போக மீதி நேரத்துலயாவது ஏதாவது திட்டம் போடுவாங்க. காங்கிரஸ்காரங்க பெரிய உத்தமர் மாதிரி பேசிக்கிறது ஆனா அமுக்குறத தவிர வேற எந்த திறமையும் கிடையாது. இதுல தமிழ்நாட்டுல தேசிய கட்சி வந்துட்டா ரொம்பதான் பொளந்துடுவாங்கண்ணு பலருக்கு நினைப்பு வேற.]]]

    தேசியக் கட்சி என்றில்லை.. கொஞ்சமாவது மனசாட்சியுள்ள மக்கள் சேவையாற்றும் ஒருவர் வர மாட்டாரா என்கிற நினைப்புதான் பலருக்கும்..!

    ReplyDelete
  60. [[[ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

    உண்மை தமிழன் அண்ணன் வீட்டுக்கு டின் பீர் ஒரு கேஸ் பார்சல்....
    மொத்த பிரச்சனையையும் மறக்கடித்து விட்டு சிரிக்க வைத்துவிட்டார். கண்களில் தென்படாத விசயம் எங்கிருந்துதான் பிடிக்கிறீர்களோ. உண்மையான தமிழன்தான்.]]]

    தீக்கதிர் மற்றும் ஹிந்துவில் வெளியான செய்தி ஜோதி ஸார்..!

    சமீபத்தில் காரைக்கால் சென்றிருந்தபோது அங்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் இதனை தட்டிகளில் எழுதி பேருந்து நிலையம் அருகே மக்களின் பார்வைக்காக வைத்திருந்தனர்..!

    ReplyDelete
  61. இதெல்லாம் ஒரு செலவா?
    எங்கூரு கணக்கப் பாருங்க

    Karnataka spends Rs 1cr on one Cabinet meet

    ReplyDelete
  62. [[[Indian said...
    இதெல்லாம் ஒரு செலவா? எங்கூரு கணக்கப் பாருங்க. Karnataka spends Rs 1cr on one Cabinet meet]]]

    அவங்கவங்க தகுதிக்கேத்தாப்புல சுருட்டுறாங்க போலிருக்கு..!

    ReplyDelete
  63. தல . என்னை மாத்ரி திருடு பசங்க ஒரு நாள் நைட் அவங்க வீட்டுக்கு கொள்ளை அடிக்க போலாம்னு இருக்கோம்,. முடுஞ்சா கூட்டு சேர்ந்துகுங்க

    ReplyDelete
  64. தல . இன்னும் சூடா எதிபார்க்கிறேன். எனக்கும் பி பி ஏறி போச்சு

    ReplyDelete
  65. வியாதிகளை வியாதிகள்னு அடையாளம் கண்டுக்கிட்டாதான் அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற முடியும். நீங்க தொடர்ந்து அப்படியே எழுதுங்க உண்மைத் தமிழன் சார்!

    ReplyDelete