Pages

Friday, November 20, 2009

ஜெயில் - ஹிந்தி திரைப்பட விமர்சனம்..!

20-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மதூர் பண்டார்கரின் திரைப்படங்களை முதல் நாளே ஆர்வத்துடன் சென்று பார்க்கத் துடிக்கின்ற ரசிகர்களில் நானும் ஒருவன். ஆனால் இந்தத் திரைப்படம் வந்ததும் தெரியாமல், ஓடுவதும் தெரியாமல் என் கண்ணுக்குப் படாமல் எப்படி தப்பித்தது என்று எனக்குத் தெரியவில்லை.

ஹெட்லைன்ஸ் டுடே சேனலில் இடையிடையே ஓடிய விளம்பரங்களை வைத்துத்தான் இப்படியொரு திரைப்படம் ரிலீஸாகியிருப்பதே எனக்குத் தெரிந்தது. விடவில்லை. தேடிப் பிடித்து பார்த்துவிட்டேன்.

சந்தர்ப்ப சூழலால் குற்றவாளியாக உருமாறும் ஒருவன், தனக்குப் பழக்கமே இல்லாத அந்தக் குற்றச் சூழலை எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் இந்த ஜெயில் சொல்லும் கதை.


பராக் தீட்சித் என்னும் 25 வயது இளைஞன் அந்த வயதுக்கே உரித்தான துடிப்போடு ஒரு பைனான்ஸ் கம்பெனியில் பணியாற்றி வருகிறான். அவனுக்கு மேனேஜராக பிரமோஷன் கிடைத்த சந்தோஷத்தை தனது வருங்கால மனைவியுடன் கொண்டாடிய மறுநாளே ஒரு துன்பவியல் சம்பவத்தில் சிக்குகிறான்.

பராக் அவனுடைய ரூம்மேட்டான கேசவை அழைத்துக் கொண்டு தனது காரில் செல்கையில் வழியிலேயே போலீஸ் அவர்களை விரட்டிப் பிடிக்க பராக்குக்கு எதுவுமே புரியாத, தெரியாத சூழலிலேயே அந்த இடத்திலேயே கேசவ் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்படுகிறான். கேசவ் வைத்திருந்த பைகளை சோதனையிட அதில் போதைப்பொருள் இருக்கிறது. கேசவ் அந்த கேடுகெட்டத் தொழிலில் இருக்கிறான் என்பதே அப்போதுதான் பராக்கிற்கே தெரிகிறது. ஆனால் சட்டத்திற்குத் தெரியாதே..

போலீஸாரால் விசாரிக்கப்படுகிறான். அடிக்கப்படுகிறான். சிறைப்படுத்தப்படுகிறான். தொடர்கிறது கதை. வாழ்வின் கொண்டாட்டக் களங்களையும், மேற்கத்தியக் கலாச்சாரத்தையும், வாலிபத் துடிப்பின் அத்தனை இன்பங்களையும் துய்த்து, அதிலேயே தோய்ந்து போயிருந்த பராக்கிற்கு இந்த சிறை அனுபவம் என்னென்ன சொல்லிக் கொடுக்கிறது என்பதைத்தான் அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் சொல்லியிருக்கிறார் மதூர்.

தான் இதுவரையில் பார்த்திராத, பார்க்க விரும்பியிருக்காத அந்தச் சிறைச் சூழலை விரும்பி ஏற்க வேண்டிய கட்டாயம் வரும்வரையில் அல்லப்படும் பராக்கின் அன்றாட நடவடிக்கைகளை நீட்டமாகக் காட்டியிருப்பது சற்றே அலுப்பு தட்டுகிறது.

திருடர்கள், கொள்ளைக்காரர்கள், சிறு குற்றங்கள் செய்தவர்கள் என்று 20 பேர் இருக்க வேண்டிய அறையில் 60 பேர்களை அடைத்து வைத்திருக்க.. அந்த மூச்சுவிட முடியாத அறைக்குள் இருக்கும் அத்தனை கைதிகளுக்குள் இருக்கும் ஆயிரமாயிரம் கதைகளில் ஒன்றிரண்டின் துணையோடுதான் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.


ஜாமீன் கேட்டு அவனது காதலியும், அம்மாவும் முயல்வது.. போதை மருந்து கடத்தல் என்பதால் ஜாமீன் கிடைக்காமல் போவது.. போலீஸ் கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற வக்கீலின் அட்வைஸிற்காக ஒரு நொடியில் வக்கீலின் பீஸ் உயர்வது.. கோர்ட்டில் பராக்கின் வக்கீல் தனது வக்கீல் தொழிலின் நேர்மையையும், கன்னியத்தையும் கடைப்பிடிக்க வேண்டி நான்கு வார்த்தைகளில் தனது வாதத்தை முடித்துக் கொள்ள... பராக் கொள்ளும் பதட்டம் என்று திரைக்கதையில் வேகம் அதிகமாக இருந்தாலும், தொடர்ந்து போலீஸ், ஜாமீன், கோர்ட், சிறை என்று நான்கு இடங்களுக்குள்ளேயே திரும்பித் திரும்பி சுற்றி வருவதால் கொஞ்சம் போரடிக்கத்தான் செய்கிறது.

பூனா மத்திய சிறையிலும், எரவாடா சிறையிலும் சில காட்சிகளை எடுத்திருந்தாலும், முக்கால்வாசி செட்போட்டு எடுக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. செட் என்பதே தெரியாமல் இருப்பதுதான் கலை இயக்குநருக்கு பெருமை என்பது அவருக்குத் தெரியாமல் போனது எனக்கு ஆச்சரியம்தான்..


சதா சர்வகாலமும் பேசிக் கொண்டேயிருப்பது.. கவலைப்படாமல் கேரம் போர்டு விளையாடுவது.. அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாத ஜீவன்களாக இருப்பது என்று சிறைக்கைதிகளை ஒரு ஹைஸ்கூல் ஸ்டூடண்ட்டுகளை போல் காட்டியிருப்பது சற்று ஓவரோ என்று தோன்றுகிறது.

இருந்தாலும் சிறையில் கன்விக்ட் வார்டனாக இருக்கும் மனோஜ்பாஜ்பாய்க்கு ஒரு கிளைக்கதை.. மற்றும் ஆஷிஷ் சர்மாவுக்கு ஒரு கிளைக்கதை என்று சொல்லி மனதை கொஞ்சம் இளகச் செய்திருக்கிறார்.

பராக்காக நடித்திருக்கும் நீல் நிடின் முகேஷ் பாலிவுட்டில் இப்போது வளர்ந்து வரும் நடிகர் என்கிறார்கள். எப்போதும் சீரியஸாக இருக்கும் இவரது கேரக்டருக்கு இந்தக் கதாபாத்திரம் பொருத்தம்தான்.. சிறைக்குள் முதன்முதலாக வரும்போது துணிகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக நிற்கச் சொல்லும் காட்சியில் கூசி குனிகிப் போய் நிற்கின்றபோது அந்த மேல்தட்டு வர்க்கத்தின் அப்பாவி வேஷம் கச்சிதமாகத் தெரிகிறது.

இவருடைய காதலியாக முக்தாகோட்ஸே என்னும் நடிகை. ஒரு படுக்கையறை காட்சியில் உருண்டு புரண்டுவிட்டு பின்பு பார்க்கும்போதெல்லாம் கண்களில் கண்ணீரை உருளவிட்டுக் கொண்டு சோகத்தைப் பிழிய முயன்றார். ஆனால் எனக்குத்தான் கண்ணு கலங்கவில்லை. அவருடைய அம்மாவும் இதே போலத்தான். எல்லா அம்மாக்களும் இப்படித்தானே..


சிறையை மட்டும் காட்டிவிட்டால் போதுமா? உள்அரசியலை காட்ட வேண்டாமா? நிறையவே காட்டியிருக்கிறார் மதூர். உள்ளேயே சி.எம். போன்ற தோரணையில் தாதா ஒருவர். அவருடைய கடைக்கண் பார்வை காட்டினால்போதும் கைதி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அவருடைய குடும்பத்தினரை ஜெகஜோதியாக கண்டு மகிழ்ந்துவிட்டு வரலாம். அந்த தாதாவின் அனுசரணை கிடைத்தால் சிறையிலும் நல்ல கவனிப்பு கிடைக்கும்.. தாதா உள்ளே இருந்தபடியே செல்போனில் வெளியுலக கம்பெனி விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் அழகே அழகு..

இந்திய நிர்வாக அரசியலின் பொய்த்துப் போன முகமூடிகளை இங்கே கொஞ்சமாவது திறந்து காட்டியிருக்கிறார் மதூர். முரண்டுபிடிக்கும் கைதிகளை அடித்து உதைப்பது, இருட்டறையில் அடைப்பது என்று அத்தாட்சி பெற்ற இந்திய அரசியல் அரக்கர்கள் செய்கின்ற கொடுமை பராக்கிற்கு கிடைக்கிறது. இனி வருவதை எதிர்கொள்வோம் என்ற பக்குவத்தினை பராக்கிற்கு இந்த சம்பவமே உருவாக்கிக் கொடுக்கிறது.

இறுதியில் தாதாவின் உதவியோடு தப்பிக்க நினைக்கும் காட்சியில் கன்விக்ட் வார்டனான மனோஜ் வாஜ்பாய் இதனை கண்டுபிடித்துவிட அந்த நொடியில் பின்னணி இசையே இல்லாமல் காட்சியில் ஒன்ற வைத்துவிட்டார் இயக்குநர். திட்டம் தீட்டி அதன்படியே அவர்கள் தப்பிக்க.. பராக்கால் தப்பிக்க முடியாத அளவுக்கு அவன் மனம் பண்பட்டுவிட்டதை காட்டியபோதே படம் சொல்ல வந்த நீதி என்ன என்பது தெளிவாகிவிட்டது.

இந்தியாவில் சிறைச்சாலைகளில் இருக்கின்ற இந்தியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்றரை கோடி பேர். அதில் தண்டனை பெற்ற இந்தியர்கள் ஒரு கோடி பேர். மீதியிருக்கும் இரண்டரை கோடி இந்தியர்கள் வெறும் விசாரணைக் கைதிகள்தான்.

இவர்கள் செய்திருக்கும் குற்றத்திற்கு விசாரணை நடத்தி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் அது இப்போது அவர்கள் அனுபவிக்கும் சிறைவாச காலத்தை பல மடங்கு தாண்டிவிடும். இப்படித்தான் இந்தியாவின் நீதித்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சிறையில் அடைத்துவைத்து விசாரித்தால்தான் நீதிமன்றங்களில் விசாரணைகள் சீக்கிரமாக முடியுமெனில் இத்தனை ஆண்டுகளாக இரண்டரை கோடி பேரை சிறையில் அடைத்துவைத்தும் அந்த வழக்குகள் முடிந்திருக்க வேண்டுமே..? இந்திய அரசியல் நிர்வாகத்தில் உயர்ந்த அமைப்பான நீதித்துறைக்குள் இருக்கும் சோம்பேறித்தனத்திற்கு ஒரு சிறிய உதாரணத்தை இந்தப் படத்தின் மூலம் காட்டியிருக்கிறார் மதூர்.

ஆனாலும் அவருடைய முந்தைய படங்களில் இருந்த உயிர்ப்பான நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை இவையிரண்டும் இத்திரைப்படத்தில் மிஸ்ஸிங் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஒரு முறை பார்க்கலாம் மதூர் பண்டார்கருக்காக..!

38 comments:

  1. me the first
    அண்ணே கலக்கல் விமர்சனம்...நானும் பார்த்துர்றேன்...

    ReplyDelete
  2. enakku hindi konjam sikkal... porumaya padangal paaka aarambikanum anna..

    nalla vimarsanam... madhur-in Fashion parthen... first half super ah irundhalum, second half cinematic ah irundhudu...

    Page 3 than aduthu paakanum anna... :)

    India-vula arasiyal thakiduthithangal pathiyum uzhal pathiyum evlo padam venum naalum edukalam... yenna makkal athuku nallave pazhagitaanga... katchigalukkum, govt. oppicers-kum suranaye illama pochu...

    ReplyDelete
  3. தங்களுடைய விமர்சனத்திற்காகவே இந்த படத்தை ஒரு முறை பார்க்கிறேன். விசாரனைக் கைதிகள் பற்றி தாங்கள் எழுதியிருந்து ஏற்கனவே நான் பல முறை கேள்விபட்டதுதான். இவர்களுக்கு எப்போதுதான் விடிவு காலமோ.

    ReplyDelete
  4. நானும் பார்த்துர்றேன்...

    ReplyDelete
  5. [[[நாஞ்சில் பிரதாப் said...
    me the first. அண்ணே கலக்கல் விமர்சனம்... நானும் பார்த்துர்றேன்...]]]

    அவசியம் பாருங்கள் பிரதாப்..!

    ReplyDelete
  6. [[[kanagu said...
    enakku hindi konjam sikkal... porumaya padangal paaka aarambikanum anna..

    nalla vimarsanam... madhur-in Fashion parthen... first half superah irundhalum, second half cinematic ah irundhudu...
    Page3than aduthu paakanum anna...:)

    India-vula arasiyal thakiduthithangal pathiyum uzhal pathiyum evlo padam venum naalum edukalam... yenna makkal athuku nallave pazhagitaanga... katchigalukkum, govt. oppicers-kum suranaye illama pochu...]]]

    கனகு பேஷன் திரைப்படம் மதூரின் திரைப்படங்களில் விசேஷமானது.. பேஜ்3-ஐ பார்த்துவிடுங்கள். அதுவும் நல்ல படம்தான்..!

    ReplyDelete
  7. [[[ananth said...
    தங்களுடைய விமர்சனத்திற்காகவே இந்த படத்தை ஒரு முறை பார்க்கிறேன். விசாரனைக் கைதிகள் பற்றி தாங்கள் எழுதியிருந்து ஏற்கனவே நான் பல முறை கேள்விபட்டதுதான். இவர்களுக்கு எப்போதுதான் விடிவு காலமோ.]]]

    ஆண்டவன்தான் அவர்களுக்கு வழி காட்ட வேண்டும்..!

    ReplyDelete
  8. [[[T.V.Radhakrishnan said...
    நானும் பார்த்துர்றேன்...]]]

    அவசியம் பாருங்கள் ஐயா..!

    ReplyDelete
  9. //உள்ளேயே சி.எம். போன்ற தோரணையில் தாதா ஒருவர். //

    அண்ணே அருமையான விமர்சனம் உங்கள் நக்கலுடன் ரசித்தேன். அப்பறோம் நான் ஊருக்கு வர்றேன் அடுத்த வாரம் தங்களை சந்திக்கும் பாக்கியம் கிட்டுமா...?

    ReplyDelete
  10. நல்லாயிருக்கு..

    ஆச்சரியம்...கொஞ்சம் சுருக்கமா இருக்கு..??

    ReplyDelete
  11. [[[பித்தன் said...

    //உள்ளேயே சி.எம். போன்ற தோரணையில் தாதா ஒருவர். //

    அண்ணே அருமையான விமர்சனம் உங்கள் நக்கலுடன் ரசித்தேன். அப்பறோம் நான் ஊருக்கு வர்றேன் அடுத்த வாரம் தங்களை சந்திக்கும் பாக்கியம் கிட்டுமா...?]]]

    கண்டிப்பா.. உங்களைப் பார்க்காமயா..? வந்தவுடன் போன் செய்யுங்கள்.. சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறேன்..!

    ReplyDelete
  12. [[[butterfly Surya said...
    நல்லாயிருக்கு.. ஆச்சரியம்... கொஞ்சம் சுருக்கமா இருக்கு..??]]]

    நிறைய எழுதினா நிறையங்குறீங்க.. கொஞ்சமா எழுதினா சுருக்கம்ங்கிறீங்க..! அட போங்கப்பா..!

    ReplyDelete
  13. [[[கிறுக்கல் கிறுக்கன் said...
    ஜெயிலுக்கு போக விருப்பமில்லை.]]]

    எனக்கும்தான். ஆனால் ஜெயில் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கிறது..!

    ReplyDelete
  14. நீ........தித்துறை........இன்ஃபினிட்டி

    நல்லாயிருக்குங்க.. உண்மைத்தமிழன்

    ReplyDelete
  15. ஹிந்தி தெரியாது அண்ணா... subtitle இருந்தா கண்டிப்பா பாத்தர்லாம்

    ReplyDelete
  16. நேற்று இந்தப் படத்தைப் பார்த்தேன். மதூர் பண்டார்கரின் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஏமாற்றமே.
    உங்கள் விமர்சனம் அருமை.

    ReplyDelete
  17. தரவிறக்கம் செய்து ரொம்ப நாள் ஆகிடுச்சி, விமர்சனம் அருமை, அதனால் படம் பார்க்கிறேன்........

    ReplyDelete
  18. //சதா சர்வகாலமும் பேசிக் கொண்டேயிருப்பது.. கவலைப்படாமல் கேரம் போர்டு விளையாடுவது.. அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாத ஜீவன்களாக இருப்பது என்று சிறைக்கைதிகளை ஒரு ஹைஸ்கூல் ஸ்டூடண்ட்டுகளை போல் காட்டியிருப்பது சற்று ஓவரோ என்று தோன்றுகிறது.//

    true thamilanukkul avvappothu oru humarous thamilanum irukiraar

    ReplyDelete
  19. ப்ளஸ், மைனஸ் இரண்டும் சம அளவில் கொடுத்திருக்கிறீங்க.. பார்க்க வேண்டிய திரைப்பட பட்டியலில் ஜெயில் பெயரையும் இணைத்துள்ளீர்கள்! நன்றி!

    உங்க இ-மெயில் ஐடி ப்ளீஸ்...(தர முடியுமா?)

    ReplyDelete
  20. அய்யா.. நம்ம கமல் 15 வருசத்துக்கு முன்னயும் பாலா சில வருசததுக்கு முன்னையும் காட்டியாச்சே.. இந்திப் படத்த விடுங்க..
    நம்ம தமிழ்க்காரங்கள பாராட்டுங்கண்ணா...

    ReplyDelete
  21. நண்பர்கள் கவனத்திற்கு

    தமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....

    ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
    காணொளி தேடல் | வலைப்பூக்கள்

    ReplyDelete
  22. அண்ணே கலக்கல் விமர்சனம்.

    ReplyDelete
  23. [[[D.R.Ashok said...
    நீ........தித்துறை........இன்ஃபினிட்டி
    நல்லாயிருக்குங்க.. உண்மைத்தமிழன்]]]

    நன்றி அசோக்ஜி..!

    ReplyDelete
  24. [[[பேநா மூடி said...
    ஹிந்தி தெரியாது அண்ணா... subtitle இருந்தா கண்டிப்பா பாத்தர்லாம்.]]]

    எனக்கும்தான் தெரியாது.. நான் பார்க்கலையா..?

    ReplyDelete
  25. [[[செ.சரவணக்குமார் said...
    நேற்று இந்தப் படத்தைப் பார்த்தேன். மதூர் பண்டார்கரின் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஏமாற்றமே. உங்கள் விமர்சனம் அருமை.]]]

    ஏன் இப்படி கோட்டைவிட்டார் என்று புரியவில்லை..?

    முந்தையத் திரைப்படங்களுக்கு இருந்த எதிர்பார்ப்பும், பரபரப்புகூட இத்திரைப்படத்திற்கு இதுவரையில் கிடைக்கவில்லை..!

    ReplyDelete
  26. [[[ஊடகன் said...
    தரவிறக்கம் செய்து ரொம்ப நாள் ஆகிடுச்சி, விமர்சனம் அருமை, அதனால் படம் பார்க்கிறேன்.]]]

    இன்னுமா பார்க்கலை.. சீக்கிரம் பார்த்திருங்க ஊடகன்..!

    ReplyDelete
  27. [[[thenammailakshmanan said...

    //சதா சர்வகாலமும் பேசிக் கொண்டேயிருப்பது.. கவலைப்படாமல் கேரம் போர்டு விளையாடுவது.. அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாத ஜீவன்களாக இருப்பது என்று சிறைக்கைதிகளை ஒரு ஹைஸ்கூல் ஸ்டூடண்ட்டுகளை போல் காட்டியிருப்பது சற்று ஓவரோ என்று தோன்றுகிறது.//

    true thamilanukkul avvappothu oru humarous thamilanum irukiraar]]]

    எல்லாருக்குள்ளேயும் இருக்கும் தேனம்மை..!

    எனது மற்றைய பதிவுகளைத் தோண்டிப் பாருங்கள். நிறைய கிடைக்கும்..!

    ReplyDelete
  28. [[[ash said...
    ப்ளஸ், மைனஸ் இரண்டும் சம அளவில் கொடுத்திருக்கிறீங்க.. பார்க்க வேண்டிய திரைப்பட பட்டியலில் ஜெயில் பெயரையும் இணைத்துள்ளீர்கள்! நன்றி!]]]

    திரைப்பட ரசிகர் என்றால் அவசியம் பாருங்கள்..!

    உங்க இ-மெயில் ஐடி ப்ளீஸ்...(தர முடியுமா?)]]]

    tamilsaran2002@gmail.com

    ReplyDelete
  29. [[[kantha said...
    அய்யா.. நம்ம கமல் 15 வருசத்துக்கு முன்னயும் பாலா சில வருசததுக்கு முன்னையும் காட்டியாச்சே.. இந்திப் படத்த விடுங்க.. நம்ம தமிழ்க்காரங்கள பாராட்டுங்கண்ணா...]]]

    நம்மாளுகளை எவ்ளோதான் பாராட்டுறது..?

    ReplyDelete
  30. [[[mix said...

    நண்பர்கள் கவனத்திற்கு

    தமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....

    ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
    காணொளி தேடல் | வலைப்பூக்கள்]]]

    அழைப்புக்கு மிக்க நன்றிகள்..!

    ReplyDelete
  31. [[[மங்களூர் சிவா said...
    அண்ணே கலக்கல் விமர்சனம்.]]]

    நன்றி தம்பீ..!

    ReplyDelete
  32. The Shawshank redemption was a very fine film. You too Madhur Bhandarkar?

    ReplyDelete
  33. anna, nalla padam thaan... ana chennaiyil release ana madiriye theriyala...

    CD kidaithal parkkiren.....

    pune jail la homosex torture niraiya irukkum entru padithu irukkiren... antha matter ellam touch panni irukkangala????

    ReplyDelete
  34. [[[வெங்கிராஜா | Venkiraja said...
    The Shawshank redemption was a very fine film. You too Madhur Bhandarkar?]]]

    அதன் பக்க விளைவுதான் இப்படம் என்கிறீர்களா..?

    ReplyDelete
  35. [[[டம்பி மேவீ said...
    anna, nalla padam thaan... ana chennaiyil release ana madiriye theriyala... CD kidaithal parkkiren.....]]]

    நான் சென்னையில்தான் பார்த்தேன். தேவி காம்ப்ளெக்ஸில்..!

    [[[pune jailla homosex torture niraiya irukkum entru padithu irukkiren... antha matter ellam touch panni irukkangala????]]]

    ஒரு சீன் இருந்துச்சு..! ஆனால் அதுவும் சொல்வதுபோல் இல்லாததால்தான் சொல்லவில்லை..!

    ReplyDelete