Pages

Sunday, November 15, 2009

திடீர் பாசம்..! - சர்வேசனின் நச் கதைப் போட்டிக்கான சிறுகதை..!

15-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நம் வலையுலக இனிய நண்பர் சர்வேசன் அவர்கள் நடத்துகின்ற 'நச்!-2009 சிறுகதைப் போட்டி'க்காக நான் எழுதியிருக்கும் சிறுகதை இது..

திடீர் பாசம்..!

சந்திரன் மிக வேகமாகவே நடந்து கொண்டிருந்தான். அவனது கையைப் பிடித்தபடியே வந்து கொண்டிருந்த சிறுவன் அவனது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கிட்டத்தட்ட ஓடியபடியே உடன் வந்து கொண்டிருந்தான். சந்திரனின் ஒரு கை பேப்பர் கவரை பிடித்திருக்க அவனது மறுகையின் மணிக்கட்டுப் பகுதியைப் பிடித்தபடியே வருகிறான் சிறுவன்.

"என்ன பசிக்குதா..?" என்று சிறுவனை பார்த்து கேட்கிறான் சந்திரன். வாய் திறக்காமல் தலையை அசைத்து 'ஆமாம்' என்கிறான் சிறுவன். "பக்கத்துலதான் வீடு.. போனவுடனேயே சாப்பிடலாம்.. என்ன..?" என்று கேட்க சிறுவன் சரி என்று தலையசைக்கிறான்.

யாருமற்ற அந்த தெருவில் கதவுகளெல்லாம் சாத்தப்பட்டிருக்க தனது வீட்டின் வாசலுக்கு வந்து கதவைத் தட்டுகிறான் சந்திரன். பையன் அவனது கையை இறுகப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். கதவு திறந்த வேகத்தில் வார்த்தைகளும் வேகமாக பறந்து வருகின்றன சந்திரனை நோக்கி.

"ஐயா வீட்டுக்கு வர்றதுக்கு இவ்ளோ நேரமா..?" என்கிறாள் துளசி.. பையனை இழுத்தபடியே பதில் சொல்லாமல் வீட்டுக்குள் நுழைகிறான் சந்திரன். அப்போதுதான் சிறுவனை பார்க்கும் துளசி, "இது யாரு..?" என்று கேட்க.. அதற்குள் வீட்டுக்குள்ளேயே வந்து நிற்கும் சந்திரன், "யாருன்னு தெரியலை. பார்க்ல உக்காந்திருந்தேன். கிளம்பும்போது வாசல்ல நின்னு அழுதுகிட்டிருந்தான். பாவம்.. யாருமில்லையாம்.. அவங்க மாமா ஊருக்கு போறானாம்.. காசில்லைன்னான்.." துளசியின் குரலைக் கேட்ட சிறுவன் பயந்து போய் சந்திரனின் கால்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறான்.

சொல்லி முடிப்பதற்குள், "அதுக்கு.. அப்படியே வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தர்றதா..?" என்கிறாள் துளசி. "இல்ல துளசி.. ராத்திரியாயிருச்சு. பஸ் இருக்காது.. விடிஞ்சதும் அனுப்பி வைச்சிரலாம்..." என்றபடியே தனது கையில் இருந்த பேப்பர் கட்டை அவளிடம் கொடுக்கிறான் சந்திரன். "இதென்ன சத்திரமா..?" பேப்பர் கட்டில் இருந்த கீரையை வாங்கிக் கொண்டே துளசி கோபப்பட..

சந்திரன் பதில் சொல்லாமல் சிறுவனை பார்க்க சிறுவன் அண்ணாந்து பார்த்தவனின் முகத்தில் அர்த்தம் புரியாத கவலை. வெளியில் அனுப்பி விடுவார்களோ என்ற பயத்துடன் சிறுவன் நோக்க.. "மொதல்ல அவனை கொண்டு போய் விட்டுட்டு வாங்க.." என்று கத்துகிறாள் துளசி. "இல்ல.. ஒரு ராத்திரிதான.. இங்கயே தங்கட்டுமே.. காலைல அனுப்பி வைச்சிரலாம்.." சந்திரன் பையனின் தலையை ஆறுதலாகத் தடவியபடியே சொல்ல..

"னக்குப் பிடிக்கலீங்க.. ராத்திரி தங்கிட்டு காலைல போறதுக்கு இதொண்ணும் மடமில்லை.... கொண்டு போய் விட்டுட்டு வாங்க.." என்று ஹாலில் அவர்களை மறித்து நின்று கொண்டு துளசி சொல்ல.. சந்திரன் 'பாவம்மா..' என்று கண்களாலேயே கெஞ்சுகிறான்.

"முடியாது.. நான் விடமாட்டேன்.. மொதல்ல அவனை அனுப்பிட்டு அப்புறமா உள்ள வாங்க.. ஏதோ பார்க்ல பார்த்தாராம்.. கூட்டிட்டு வந்தாராம்.. கொஞ்சமாவது பொறுப்பு வேணாம்..? இதென்ன விளையாட்டா..?" என்று கேட்டு டைனிங் டேபிளில் பேப்பர் கட்டை பொத்தென்று போட்டுவிட்டு சேரில் அமர்கிறாள்.

"அதை அப்புறமா பேசிக்கலாம்.. பையன் ரொம்ப பசியா இருக்கான்.. மொதல்ல அவனுக்கு கொஞ்சம் சோறு போடும்மா.." சந்திரன் சொல்லி முடிப்பதற்குள் துளசி வெடிக்கிறாள். "நான் என்ன வைச்ச வேலைக்காரியா..? வர்றவன் போறவனுக்கெல்லாம் ஆக்கிக் கொட்டணும்னு எனக்கென்ன தலையெழுத்தா..?" என்கிறாள் ஆக்ரோஷமாக..

சந்திரன் கிட்டத்தட்ட அந்த சிறுவனின் நிலைமையில் இருந்தான் இப்போது. இனியும் துளசியிடம் பேசினால் எட்டு வீடு கேட்கும் அளவுக்குத் தனது குரலை நிச்சயம் உயர்த்துவாள். நாளை காலையில் அக்கம்பக்கம் வீட்டினர் தன்னை பார்த்து சிரிப்பார்கள் என்பது புரிந்தது.. வழக்கம்போலத்தான் இது என்றாலும், அந்தச் சிறுவனை பார்க்க பரிதாபமாக இருந்தது அவனுக்கு. வெளியில் போ என்று சொல்ல வாய் வர மறுக்கிறது..

சந்திரனின் தயக்கத்தைக் கண்ட துளசி.. "டேய் யார்ரா நீ..? உன் பேரென்ன..?" என்று கேட்க பையன் அவள் முகத்தைக் கூட பார்க்க பயந்து சந்திரனுக்குப் பின்னால் பதுங்கிக் கொள்ள.. "அவன் பேர் என்ன..?" என்கிறாள் சந்திரனிடம்.

சந்திரன் உண்மையாகவே "தெரியலம்மா.." என்று சொல்ல.. "ஐயோ.." என்று சொல்லித் தன் வாயைப் பொத்திக் கொள்கிறாள் துளசி. "பேரே தெரியலை.. வீட்டுக்குக் கூட்டிட்டு வர்றீங்களா..? ஏங்க உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா..? யார், என்னன்னு கேக்க வேண்டாம்..? அப்படியே கூட்டிட்டு வந்தர்றதா..? நீங்கள்லாம் ஒரு ஆம்பளை.. ச்சே.." என்று வெறுப்பை கண்களிலேயே உமிழ்ந்த துளசியை ஏறெடுத்துப் பார்க்க பயந்து போய் சந்திரன் வேறு பக்கம் பார்த்தபடியே, "சரி.. கத்தாத.. இப்ப சோறு போடு. விடிஞ்சதும் முதல் வேலையா நானே பஸ்ஸ்டாண்டுல கொண்டு போய் விட்டுட்டு வந்தர்றேன்.." என்கிறான்.

"இந்த கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம்.. மொதல்ல அவனை அனுப்பிட்டு அப்புறமா நீங்க உள்ள போங்க. இல்லேன்னா நீங்களும் சேர்ந்து வெளிய போயிருங்க.." என்று தீர்மானமாகச் சொல்கிறாள். சந்திரன் சிறுவனை பார்க்க சிறுவன் தன் கண்களில் உதிர்த்த சொட்டுக் கண்ணீருடன் சந்திரனை பார்க்கிறான்.

பட்டென்று எழுந்த துளசி, "ஊர் உலகத்துல எல்லா வீட்லேயும் ஆம்பளைங்க என்ன லட்சணத்துல இருக்காங்கன்னு நாலு வீட்டுக்கு போய் பார்த்தா தெரியும்.. இங்கதான் வீடு, வீடு விட்டா ஆபீஸ்ன்னு ஒரு சவம் மாதிரி போயிட்டிருக்கு.. எங்க தெரியப் போகுது..?" என்று சொல்லிக் கொண்டே பேப்பரில் சுருட்டியிருந்த கீரையைப் பிரித்து தனியே எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைகிறாள் துளசி.

சட்டென்று வெளியே எட்டிப் பார்க்கும் துளசி, "என்ன இன்னும் நின்னுக்கிட்டிருக்கீங்க.. மொதல்ல அவனை துரத்தி விடுங்க. ஏன் இப்படி என்னை அர்த்த ராத்திரில கத்த வைக்குறீங்க..?" என்கிறாள். மீண்டும் சமையலறையின் உட்பக்கம் திரும்பிக் கொண்ட துளசி "எவனையோ கூட்டிட்டு வந்து தங்க வைக்கணுமாம்.. அவன் யாரு, என்ன, எப்படின்னு தெரியலை.. விடிஞ்சு பார்த்தா வீட்ல என்னென்ன இருக்கோ இல்லையோ.. எதை எதை லவட்டிக்கிட்டு போகப் போறானோ.. யாருக்குத் தெரியும்..? ஆம்பளைன்னா இதையெல்லாம் கொஞ்சமாச்சும் யோசிக்க வேணாம்.. செய்புத்திதான் இல்லை.... சொல்புத்தியையாவது கேட்டுத் தொலையலாம்ல.. எனக்குன்னு வந்து வாச்சிருக்கு பாருங்க.." என்றபடியே கீரைக்கட்டுக்களைப் பிரித்து பாத்திரத்தில் போடத் துவங்க..

வெளியில் தனது முகத்தைப் ஏக்கத்துடன் பார்த்தபடியே நிற்கும் சிறுவனை பரிதாபமாக பார்க்கிறான் சந்திரன். இனியும் நின்றால் இவளிடம் பேச்சுவாங்கியே விடிந்துவிடும்.. வேறு வழியில்லை.. என்று நினைத்த சந்திரன் மெதுவாக பையனின் கையைப் பிடித்து வெளியே அழைத்து வருகிறான்.

பையன் சொல்ல முடியாத சோகத்தை முகத்தில் எப்படி காட்டுவது என்பதுகூடத் தெரியாமல் மெளனமாக சந்திரனுடன் வெளியேறுகிறான். தெருவில் நாலைந்து நாய்கள் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்க.. பையனை தனியே அனுப்ப முடியாது என்பதால் தானே அவனை பஸ்ஸ்டாண்டில் கொண்டு போய்விட முடிவு செய்து நடக்கிறார்.

பையன் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே வர.. "மனுஷியா இவ.. ஏதோ ஒரு வேளை சோறு போட்டா எதுல குறைஞ்சு போயிருவாளாம்..? சின்னப் பையன்னு ஒரு இரக்கம் வேணாம்.." என்றெல்லாம் சந்திரனின் மனம் குமைந்தாலும் துளசியை எதிர்த்து பேசுவது அவனுடைய சுபாவம் இல்லாததால் அந்தக் கோபத்தை நடையில் காட்டுகிறான் சந்திரன்.

பஸ்ஸ்டாண்டில் பையனை நிறுத்திவிட்டு அவன் பாக்கெட்டில் நூறு ரூபாயை திணித்து வைத்து "எங்கயாவது போயி பொழைச்சுக்கப்பா.." என்று சொல்லி அவன் கன்னத்தை ஆசையாகத் தடவிக் கொடுக்க.. பையன் கண்களில் பொங்கி நின்ற கண்ணீருடன் பணம் இருந்த பாக்கெட்டைத் தொட்டபடியே நிற்க.. விருட்டென்று திரும்பிப் பார்க்காமல் வீடு நோக்கி நடக்கிறார் சந்திரன்.

ஒரு நொடியில் திரும்பிப் பார்த்தால்கூட தன் மனம் மாறிவிடுமோ என்கிற சந்தேகத்தில் மனதை கல்லாக்கிக் கொண்டு வெக்கு, வெக்கென்று வீடு நோக்கி நடக்கிறார். அந்தப் பையன் தன்னை பார்க்கிறானோ..? தன் பின்னால் வருகிறானோ என்றெல்லாம் திடீரென்று ஒரு நொடி யோசித்துப் பார்த்தவர் வந்தாலும் வரலாம் என்று நினைத்து ஓட்டமும், நடையுமாக செல்கிறார்.

வீடு இருந்த தெருவுக்குள் வந்ததும் படுத்திருந்த நாய்கள் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு நம்மாளுல ஒருத்தருதான் என்பதைப் புரிந்து கொண்டு மீண்டும் தலையைச் சாய்த்துக் கொள்ள சந்திரன் தனது வீட்டை பார்த்து நடக்க..

வீட்டு வாசலில் கையில் பேப்பருடன் துளசி நின்று கொண்டிருக்கிறாள். "பொண்டாட்டியா இவ.. சண்டாளி.. அகங்காரி.. ஆணவக்காரி.. பேய், பிசாசு.. கொண்டுபோய் விட்டுட்டு வந்துட்டனான்றதைகூட வாசல்ல வந்து பாக்குறா பாரு.." என்று அவளைப் பார்த்த மாத்திரத்தில் மனதுக்குள் குமைந்தபடியே அவளை நோக்கி வருகிறான் சந்திரன்.

துளசியே அவரை நோக்கி ஓடி வருகிறாள். "ஏங்க.. எங்க அந்த பையன்.. எங்க பையன்..?" என்று கேட்க அவளுடைய வாயில் இருந்து அப்படியொரு வார்த்தை வரும் என்று எதிர்பார்த்திராத சந்திரன் திகைக்கிறான்.

அவரை உலுக்கிய துளசி, "எங்கங்க அந்த பையன்..?" என்று மீண்டும் கேட்க, "அதான்.. நீதான எங்கயாவது கொண்டு போய்விடச் சொன்ன..? பஸ்ஸ்டாண்ட்ல கொண்டு போய் விட்டுட்டேன்.." என்று முறைத்தபடியே சொல்லி முடிப்பதற்குள், பதறுகிறாள் துளசி.

"போங்க.. போங்க.. போய் அந்தப் பையனை கூட்டிட்டு வாங்க.." என்கிறாள் பதட்டத்துடன்.. "எதுக்கு..? எதுக்கு..? நீதான அனுப்பச் சொன்ன..?" என்று சந்திரன் திடீர் அதிர்ச்சியோடு கேட்க.. "ஐயோ.. இத பாருங்க.. அந்தப் பையன் வீட்டை விட்டு ஓடி வந்துட்டானாம்.. அவனைக் கண்டுபிடிச்சுக் கொடுத்தா பத்தாயிரம் ரூபாய் பரிசுன்னு அவங்க அப்பா விளம்பரம் கொடுத்திருக்காரு.. போங்க.. போய் அவனை பிடிச்சுக் கூட்டிட்டு வாங்க.. நமக்குக் காசாவது வரும். போங்க..." என்று அவனைப் பிடித்து தள்ளிவிட..

பிரமை பிடித்தாற்போல் நிற்கிறான் சந்திரன்.

69 comments:

  1. ரொம்ப நல்லாயிருக்கு உங்க flow ...

    அதுக்குத்தான் பேப்பரையும் மொதல்ல இருந்து கதைக்குள்ள கொண்டுவந்தீங்களா...


    சூப்பர்..

    ReplyDelete
  2. அண்ணே கதை சூப்பர்...

    அதுவும் அந்த சந்திரனின் பயத்தை ரொம்ப அழகா கொண்டு வந்திருக்கீங்க...

    திடீர் பாசம்.. கதைக்கு ஏற்ற தலைப்பு..

    // வீடு இருந்த தெருவுக்குள் வந்ததும் படுத்திருந்த நாய்கள் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு நம்மாளுல ஒருத்தருதான் என்பதைப் புரிந்து கொண்டு மீண்டும் தலையைச் சாய்த்துக் கொள்ள சந்திரன் தனது வீட்டை பார்த்து நடக்க.. //

    இது சூப்பர் அண்ணே. சந்திரனின் மன ஓட்டத்தை எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க.

    தமிழிஷ், தமிழ் மணம் இரண்டிலும் ஓட்டு போட்டாச்சுங்க.

    ReplyDelete
  3. கதை ஓகே...
    //
    சந்திரன் கிட்டத்தட்ட அந்த சிறுவனின் நிலைமையில் இருந்தான் இப்போது//
    எனக்கு ரொம்பப் பிடிச்ச வரிகள் இவைதான்.
    டிவிஸ்ட்டும் ட்ராமேட்டிக்காக இருந்தாலும் எதிர்பாராததுதான்.

    ReplyDelete
  4. கதை பிடிச்சு இருக்குங்க.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ம். எதிர்பார்த்த முடிவு !!!

    ReplyDelete
  6. நச் கதை தலீவா! நறுக்குன்னு இருக்கு.. பரிசு பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. செந்தழல் ரவிக்கு ரிப்பீட்டு!

    ReplyDelete
  8. கதை ரொம்ப நல்லா இருக்கு. ஆனா இப்படி ஒரு தலைப்பு வச்சா, முடிவ ஈசியா கண்டு பிடிச்சிட முடியுது. தலைப்ப மாத்தலாமான்னு யோசியுங்க.

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. கதை நல்லாக இருக்கிறது.பரிசுபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. //நாய்கள் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு நம்மாளுல ஒருத்தருதான் என்பதைப் புரிந்து கொண்டு//

    உங்க குசும்புக்கு அளவே இல்லண்ணே!! எல்லா கணவன்மார்களும் கிட்டத்தட்ட இந்த நிலைமைதான்....

    ReplyDelete
  11. கதை நல்லா இருக்கு நல்ல எதிர்பாரா முடிவு.

    ReplyDelete
  12. அண்ணே.. ஒரு டெம்ப்ளெட் பின்னூடத்தை போட்டுக்கங்க....

    ReplyDelete
  13. கதை நல்லா இருக்கு. வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வெற்றிபெற வாழ்த்துக்கள்.
    கதை நல்லா இருக்கு

    ReplyDelete
  15. nalla irundhudu na.. aana mudivu than konjam nadaga thanama aayiduchi... aanalum kadha na apdi thana irukkum :)

    pottiyil vetri pera enadhu vazthukkal :)

    ReplyDelete
  16. ந‌ல்ல‌ இருக்கிற‌து ந‌ண்ப‌ரே

    ReplyDelete
  17. பரிசை நீங்களே எடுத்துக்குங்க....எங்களுக்கு வேணாம்.

    ReplyDelete
  18. கதை நடை நன்றாக இருக்கிறது. ஆனால் முடிவு எதிர் பார்த்தது தான்.
    சந்திரன் நிலைமை அந்தப் பையன் நிலைமையை விட மோசமாக இருக்கிறதே.
    பையனாவது தப்பி ஓடி வந்து விட்டான். சந்திரன் கதி.......

    ReplyDelete
  19. [[[ஸ்வர்ணரேக்கா said...

    ரொம்ப நல்லாயிருக்கு உங்க flow..
    அதுக்குத்தான் பேப்பரையும் மொதல்ல இருந்து கதைக்குள்ள கொண்டு வந்தீங்களா... சூப்பர்..]]]

    தங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி ஸ்வர்ணரேகா..!

    ReplyDelete
  20. [[[இராகவன் நைஜிரியா said...

    அண்ணே கதை சூப்பர்... அதுவும் அந்த சந்திரனின் பயத்தை ரொம்ப அழகா கொண்டு வந்திருக்கீங்க...
    திடீர் பாசம்.. கதைக்கு ஏற்ற தலைப்பு..

    //வீடு இருந்த தெருவுக்குள் வந்ததும் படுத்திருந்த நாய்கள் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு நம்மாளுல ஒருத்தருதான் என்பதைப் புரிந்து கொண்டு மீண்டும் தலையைச் சாய்த்துக் கொள்ள சந்திரன் தனது வீட்டை பார்த்து நடக்க.. //

    இது சூப்பர் அண்ணே. சந்திரனின் மன ஓட்டத்தை எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க. தமிழிஷ், தமிழ் மணம் இரண்டிலும் ஓட்டு போட்டாச்சுங்க.]]]

    நன்றியோ நன்றி இராகவன்ஜி..!

    ReplyDelete
  21. [[[தமிழ்ப்பறவை said...

    கதை ஓகே...

    //சந்திரன் கிட்டத்தட்ட அந்த சிறுவனின் நிலைமையில் இருந்தான் இப்போது//

    எனக்கு ரொம்பப் பிடிச்ச வரிகள் இவைதான். டிவிஸ்ட்டும் ட்ராமேட்டிக்காக இருந்தாலும் எதிர்பாராததுதான்.]]]

    நன்றி தமிழ்ப்பறவை..!

    ReplyDelete
  22. [[[பா.ராஜாராம் said...
    கதை பிடிச்சு இருக்குங்க. வாழ்த்துக்கள்.]]]

    தங்களுடைய முதல் வருகைக்கு எனது நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  23. [[[gulf-tamilan said...
    ம். எதிர்பார்த்த முடிவு!!!]]]

    எப்படி எதிர்பார்க்க வைத்தேன் என்று எனக்குப் புரியவில்லை..

    ஆனாலும் எனது தவறை கவனித்தில் கொள்கிறேன்..

    அறிவுரைக்கு மிக்க நன்றி கல்ப் தமிழன்..!

    ReplyDelete
  24. [[[செந்தழல் ரவி said...
    theeeeemu okey. flow not ok.!!]]]

    ஏம்ப்பா கண்ணு.. நல்லாத்தான எழுதியிருக்கேன்.. எனக்கு வர்ணனையெல்லாம் சுத்தமா வரலேப்பா..! மன்னிச்சிரு..!

    ReplyDelete
  25. [[[விந்தைமனிதன் said...
    நச் கதை தலீவா! நறுக்குன்னு இருக்கு.. பரிசு பெற வாழ்த்துக்கள்.]]]

    தங்களின் முதல் வருகைக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  26. [[[ஹாலிவுட் பாலா said...
    செந்தழல் ரவிக்கு ரிப்பீட்டு!]]]

    நீங்களுமா..?

    எப்படிங்கய்யா இப்படி சட்டுன்னு கோஷ்டி சேர்றீங்க..?

    ReplyDelete
  27. [[[பெயர் சொல்ல விருப்பமில்லை said...
    கதை ரொம்ப நல்லா இருக்கு. ஆனா இப்படி ஒரு தலைப்பு வச்சா, முடிவ ஈசியா கண்டு பிடிச்சிட முடியுது. தலைப்ப மாத்தலாமான்னு யோசியுங்க.
    வாழ்த்துகள்!]]]

    இப்ப மாத்த முடியாதே ஸார்..!

    நீங்கள் சொன்ன பிறகுதான் யோசித்துப் பார்த்தேன். இப்படி தலைப்பு வைத்தது என் தவறுதான்.. ஒப்புக் கொள்கிறேன்..!

    ReplyDelete
  28. [[[T.V.Radhakrishnan said...
    கதை சூப்பர்.]]]

    நன்றிகள் ஐயா..!

    ReplyDelete
  29. [[[மாதேவி said...
    கதை நல்லாக இருக்கிறது. பரிசுபெற வாழ்த்துக்கள்.]]]

    உங்களது ஆசீர்வாதம்..!

    ReplyDelete
  30. [[[பித்தன் said...
    //நாய்கள் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு நம்மாளுல ஒருத்தருதான் என்பதைப் புரிந்து கொண்டு//

    உங்க குசும்புக்கு அளவே இல்லண்ணே!! எல்லா கணவன்மார்களும் கிட்டத்தட்ட இந்த நிலைமைதான்.]]]

    ச்சூ.. இதையெல்லாம் வெளில சொல்லக் கூடாதுய்யா..!

    ReplyDelete
  31. [[[மணி said...
    கதை நல்லா இருக்கு நல்ல எதிர்பாரா முடிவு.]]]

    நன்றி ஸார்..!

    ReplyDelete
  32. [[[தண்டோரா ...... said...
    அண்ணே.. ஒரு டெம்ப்ளெட் பின்னூடத்தை போட்டுக்கங்க....]]]

    ஏன் அதை போடக்கூட சோம்பேறித்தனமா..? கொடுமை..!

    ReplyDelete
  33. [[[அக்பர் said...
    கதை நல்லா இருக்கு. வெற்றிபெற வாழ்த்துக்கள்.]]]

    நன்றி அக்பர்ஜி..!

    ReplyDelete
  34. [[[மங்களூர் சிவா said...
    வெற்றிபெற வாழ்த்துக்கள். கதை நல்லா இருக்கு.]]]

    நன்றி சிவா..!

    ReplyDelete
  35. [[[kanagu said...
    nalla irundhudu na.. aana mudivu than konjam nadaga thanama aayiduchi... aanalum kadha na apdi thana irukkum :) pottiyil vetri pera enadhu vazthukkal :)]]]

    எங்கடா இன்னும் வரலியேன்னு நினைச்சேன். வந்துட்டீங்க தம்பி..! நன்றி..!

    ReplyDelete
  36. [[[திகழ் said...
    ந‌ல்ல‌ இருக்கிற‌து ந‌ண்ப‌ரே.]]]

    நன்றி திகழ்..!

    ReplyDelete
  37. [[[ஸ்ரீ said...
    நல்லாருக்குங்க.]]]

    நன்றி.. நன்றி.. நன்றி..!

    ReplyDelete
  38. [[[ஸ்ரீராம். said...
    பரிசை நீங்களே எடுத்துக்குங்க. எங்களுக்கு வேணாம்.]]]

    ஐயையோ.. இப்படீல்லாம் சொல்லாதீங்க.. ஏதோ எனக்கு வந்தது இதுதான்..!

    ReplyDelete
  39. [[[ஜெஸ்வந்தி said...
    கதை நடை நன்றாக இருக்கிறது. ஆனால் முடிவு எதிர்பார்த்ததுதான்.
    சந்திரன் நிலைமை அந்தப் பையன் நிலைமையை விட மோசமாக இருக்கிறதே. பையனாவது தப்பி ஓடி வந்து விட்டான். சந்திரன் கதி.......]]]

    அதோ கதிதான்..!

    முடிவு ஊகிக்கும்வகையில் கதை எழுதியது எழுத்தில் நான் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது என்பதைக் காட்டுகிறது..

    நன்றி ஜெஸ்வந்தி..!

    ReplyDelete
  40. அண்ணே நான் போட்டியிலருந்து விலகிக்கிறேன்.

    முடிவு உண்மையிலேயே ‘நச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்’

    ReplyDelete
  41. வணக்கம்னே! கதை நல்லாவே இருந்தது.. சே....இருக்கிறது! ஆமாண்ணே அதிகம் இப்போ script எழுதிறீங்களோ?

    நிசமாத்தாண்ணே! script-ல தான் எல்லாம் நிகழ்காலத்திலேயே வரும்..

    நடக்கிறார்... வருகிறார்... பார்க்கிறாள்... இப்படி!!
    கதை என்றால் எல்லாம் past-ல தானே வரும்..!
    நீங்க எல்லாம்.. presentலயே கொண்டு போய்கிட்டிருக்கீங்க... சே... எனக்கும் உங்களை மாதிரியே வருது... கொண்டு போயிருக்கீங்க! அதான் கேட்டேன்... ! கதை நல்லாயிருக்குண்ணே! கடைசி வரியிலேயே எனக்கு ஒரு சின்ன சலனம் வந்துட்டு போயிடுச்சு! ஒரு வேளை பையன் நல்ல பையன்னு தெரிஞ்சு கூட்டி வர சொல்றாளோ! அப்படின்னு ஒரு ஆசையைக் கொண்டு வந்தது.. அதற்கடுத்தடுத்த வார்த்தைகளே பணத்தாசையை உணர்த்திவிட்டன... நலம்.. நல்ல திருப்பம்..!

    ReplyDelete
  42. நல்ல கதை. முடிவு உண்மையிலேயே நச் தான்.

    ReplyDelete
  43. மிக அருமையான கதை...

    படித்தவுடன் மனசு ஏனோ வலிக்கிறது.

    வாழ்த்துக்கள் !

    அன்புடன்,

    செந்தில் முருகன். வே

    ReplyDelete
  44. [[[☀நான் ஆதவன்☀ said...
    அண்ணே நான் போட்டியிலருந்து விலகிக்கிறேன். முடிவு உண்மையிலேயே ‘நச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்’]]]

    அப்படியா..? தேங்க்ஸ் தம்பீ..!

    ReplyDelete
  45. [[[PRINCENRSAMA said...
    வணக்கம்னே! கதை நல்லாவே இருந்தது.. சே....இருக்கிறது! ஆமாண்ணே அதிகம் இப்போ script எழுதிறீங்களோ? நிசமாத்தாண்ணே! script-லதான் எல்லாம் நிகழ்காலத்திலேயே வரும்..
    நடக்கிறார்... வருகிறார்... பார்க்கிறாள்... இப்படி!!
    கதை என்றால் எல்லாம் past-லதானே வரும்..!
    நீங்க எல்லாம்.. presentலயே கொண்டு போய்கிட்டிருக்கீங்க... சே... எனக்கும் உங்களை மாதிரியே வருது... கொண்டு போயிருக்கீங்க! அதான் கேட்டேன்... ! கதை நல்லாயிருக்குண்ணே! கடைசி வரியிலேயே எனக்கு ஒரு சின்ன சலனம் வந்துட்டு போயிடுச்சு! ஒருவேளை பையன் நல்ல பையன்னு தெரிஞ்சு கூட்டி வர சொல்றாளோ! அப்படின்னு ஒரு ஆசையைக் கொண்டு வந்தது.. அதற்கடுத்தடுத்த வார்த்தைகளே பணத்தாசையை உணர்த்திவிட்டன... நலம்.. நல்ல திருப்பம்..!]]]

    தம்பீ..

    கதையில் வந்த திடீர் திருப்பம் மாதிரி நீயும் திடீரென்று வந்திருக்கிறாய்..!

    என்றைக்கோ நடந்த கதைதான்.. ஆனால் அதையும் அன்றைக்கு நடந்ததுபோல் எழுதியாக வேண்டுமே.. அதனால்தான் அந்த வார்த்தைகள்..!

    வேறு எப்படி எழுதுவது..?

    ReplyDelete
  46. [[[ananth said...
    நல்ல கதை. முடிவு உண்மையிலேயே நச்தான்.]]]

    நன்றி ஆனந்த்..

    ReplyDelete
  47. [[[senthil said...

    மிக அருமையான கதை...

    படித்தவுடன் மனசு ஏனோ வலிக்கிறது.

    வாழ்த்துக்கள் !

    அன்புடன்,

    செந்தில் முருகன். வே]]]

    நன்றி செந்தில்..!

    ReplyDelete
  48. மிக அருமையான கதை..சொன்ன விதம் மிக மிக அருமை..பணம் மட்டும் தான் வாழ்க்கையா...

    ReplyDelete
  49. ஒரு பக்கத்துக்கான சரியான “நச்”நாட்.
    கதைக்கு சரியான டீரிட்மெண்ட்?

    கதையின் ப்ளோவை நிறைய மெருகேற்றனும்.

    //சந்திரன் கிட்டத்தட்ட அந்த சிறுவனின் நிலைமையில் இருந்தான் இப்போது.//

    சூப்பர்

    ReplyDelete
  50. [[[புலவன் புலிகேசி said...
    மிக அருமையான கதை.. சொன்ன விதம் மிக மிக அருமை.. பணம் மட்டும்தான் வாழ்க்கையா...?]]]

    நன்றி புலவன் ஐயா..!

    ReplyDelete
  51. [[[கே.ரவிஷங்கர் said...

    ஒரு பக்கத்துக்கான சரியான “நச்”நாட். கதைக்கு சரியான டீரிட்மெண்ட்? கதையின் ப்ளோவை நிறைய மெருகேற்றனும்.]]]

    உண்மைதான் ரவி.. ஆனால் அந்த அலங்காரத் தோரணைகளும், வர்ணனைகளும்தான் எனக்கு வர மறுக்கிறது..

    ஒருவேளை நான் இன்னமும் சீரியல் உலகத்திலேயே இருக்கிறேன் போலும்..!!!

    ReplyDelete
  52. உண்மைத் தமிழன் கதை நல்லா இருக்குங்க

    இது போன்றவங்களை சந்திசு இருக்குறதால உங்க கதையோட நான் உடன்பாடு கொள்கிறேன் நல்ல சரளமான நடை

    ReplyDelete
  53. BGM,கலர் டோண், லைட்டிங் நாட் ஓக்கே:)

    ReplyDelete
  54. [[[thenammailakshmanan said...
    உண்மைத் தமிழன் கதை நல்லா இருக்குங்க. இது போன்றவங்களை சந்திசு இருக்குறதால உங்க கதையோட நான் உடன்பாடு கொள்கிறேன் நல்ல சரளமான நடை.]]]

    நன்றி தேனம்மை.. ஆயிரத்தில் ஒருவர் இப்படியிருப்பார் என்று நான் கருதுகிறேன். அவர்களில் ஒருவர் பற்றிய கதை இது. எல்லா பெண்களும் இப்படி இல்லையே..!

    ReplyDelete
  55. [[[குசும்பன் said...
    BGM, கலர் டோண், லைட்டிங் நாட் ஓக்கே:)]]]

    ஓகே.. புரிஞ்சது தம்பீ..!

    ReplyDelete
  56. [[[குசும்பன் said...
    கதை சைஸ் ஓக்கே!]]]

    நக்கல் நல்லாவே புரியுது தம்பீ..!

    நீ ரசிச்சு படிக்குற அளவுக்கு கதை எழுத எனக்கு திறமை இல்லைன்னு எனக்கே தெரியும்..!

    இருந்தாலும் வந்ததுக்கு நன்றி..!

    ReplyDelete
  57. With the writing capabilities you have proved, expected a better story than this. It looks more like a kumudam one pager story with a punch/twist in the last paragh. No doubt this is a good one but with unmaitamilan standards it does not make a mark honestly.

    With all due respect .. Regular visitor.

    ReplyDelete
  58. [[[Valaipayan said...
    With the writing capabilities you have proved, expected a better story than this. It looks more like a kumudam one pager story with a punch/twist in the last paragh. No doubt this is a good one but with unmaitamilan standards it does not make a mark honestly. With all due respect .. Regular visitor.]]]

    வலைப்பையன் புரிந்து கொண்டேன்.. என் தரத்திற்கு ஏற்றாற்போல் இல்லை என்று சொல்வதே கொஞ்சம் அதிகம் என்று நினைக்கிறேன்..

    ஏனெனில் எனக்கு தரம் என்ற கட்டுப்பாடோ மதிப்பெண்ணோ இல்லை. அதை தாங்கிய ஒரு பதிவராகவோ நான் இல்லை என்பது எனது கருத்து..!

    எப்படியிருப்பினும் வரக்கூடிய சிறுகதைகளில் இன்னும் சிறப்பாக வெளிப்படுத்த விழைகிறேன்.

    தங்களுடைய உண்மையான ஆலோசனைக்கு மிக்க நன்றிகள்..!

    ReplyDelete
  59. நல்லா இருக்கு முடிவும் அருமை.

    ReplyDelete
  60. முதல் பாரா அருமை. அந்த அளவு கலக்கல் பின் இல்லை. நிறைய எழுதுங்க. நடை நல்லா இருக்கு.

    ReplyDelete
  61. [[[Mohan Kumar said...
    முதல் பாரா அருமை. அந்த அளவு கலக்கல் பின் இல்லை. நிறைய எழுதுங்க. நடை நல்லா இருக்கு.]]]

    வெளி்ப்படையான உங்களது விமர்சனத்திற்கு மிக்க நன்றிகள் மோகன்..!

    ReplyDelete
  62. [[[கிறுக்கல் கிறுக்கன் said...
    அருமையான நடை, எதிர்பார்த்த முடிவு]]]

    நன்றி கிறுக்கன் ஸார்..!

    ReplyDelete