Pages

Friday, October 23, 2009

ஆதவன் - வடிவேலு மட்டும் இல்லைன்னா..?

23-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தற்போதைய திரை ரசிகர்கள் எந்த மாதிரியான திரைப்படத்தினை அதிகம் விரும்புகிறார்கள் என்பதை நீண்ட கால அனுபவம் வாய்ந்த இயக்குநர்களால் சற்றுக் கணிக்க முடியும். கே.எஸ்.ரவிக்குமார் பல வருட கால அனுபவம் வாய்ந்தவர். நன்றாகவே கணித்திருக்கிறார்..

சூர்யா போன்ற குட் ஓப்பனிங் உள்ள நடிகர்களை கையில் வைத்துக் கொண்டு எதைக் கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு மிக, மிக உதவிகரமாக இருந்தது கதாசிரியர் அல்ல.. 'நகைச்சுவை திலகம்' வடிவேலுதான்..!


படத்தின் ஹீரோவான வடிவேலு நாட்டையே உலுக்கியிருக்கும் உடல் உறுப்புகளை திருடுதல் தொடர்பான விசாரணை கமிஷனுக்குத் தலைமை ஏற்றிருக்கும் நீதிபதி பரத்முரளியின் வீட்டு வேலைக்காரன். அந்த வீட்டில் குடியிருக்கும் ஒரு காலனிக்கே சோறு பொங்கி படைத்துக் கொண்டிருக்கிறார்.

கொலை செய்வதையே குலத் தொழிலாகச் செய்து வரும் செகண்ட் ஹீரோ சூர்யாவுக்கு நீதிபதி பரத்முரளியை கொல்ல வேண்டிய கட்டாயம். அவருடைய சர்வீஸில் முதல் முறையாக முரளியைக் கொல்ல முயன்ற நிகழ்வில் தோல்வி கிடைக்க.. அதனை ஏற்றுக் கொள்ளாதவராக முரளியை கொன்றே தீர வேண்டும் என்ற வெறிக்கு ஆளாகிறார்.

இதற்காக முரளியின் வீட்டிற்குள்ளேயே நுழையத் திட்டமிட்டு நம்ம ஹீரோ வடிவேலுவை மடக்கி அவர் மூலம் உள்ளே நுழைகிறார் சூர்யா. பின்பு தான் நினைத்ததை முடித்தாரா இல்லையா என்பதுதான் கதை..

படத்தின் முற்பாதி முழுவதும் உட்கார வைத்திருப்பது ஹீரோவான அண்ணன் வடிவேலுதான்.. அவர் இல்லாமல் வேறு ஒரு ஹீரோ இருந்திருந்தால் அவனவன் சீட்டைக் கிழித்துப் போட்டுவிட்டு பாதியிலேயே போயிருப்பான். தூணாக இருந்து படத்தினை தனது முதுகில் சுமந்திருக்கிறார் வடிவேலு.

சூர்யா வழக்கம்போல.. கதைப்படி கொலைகாரன் என்பதால் அதற்கேற்றாற்போல் அவ்வப்போது முகத்தை இறுக்கமாக்கி நடித்திருக்கிறார். அவ்ளோதான்.. அந்த சிறுவன் கேரக்டருக்காக போட்டிருக்கும் மேக்கப் மட்டுமே ரசிக்க வைக்கிறது. அடிதடி, ஆக்ஷன், த்ரில்லர் என்று போய்விட்டதால் காட்சிகள் ஜம்ப் ஆகிக் கொண்டே செல்வதாலும் சூர்யாவின் நடிப்பைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

அயன் படத்தின் பாதிப்பு இப்படத்திலும் தொற்றியிருக்கிறது. போலீஸ் விரட்டும் வேட்டையில் சூர்யா ஓடுகின்ற ஓட்டம் பலவிதங்களில் லாஜிக்கை மீறியிருந்தாலும் கண்கட்டுவித்தையைக் காட்ட வேண்டும் என்று நினைத்துவிட்டதால் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். இந்தக் காட்சியில் கேமிராவின் வேகம் சூப்பர்ப்..

டயானா மரியம் கூரியன் எப்போதும்போல பாடல் காட்சிகளில் கோல்கேட் பேஸ்ட் விளம்பரம் மாதிரியான சிரிப்புதான்.. எப்போது நிறுத்துவார் அதை..? ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நடிப்பதற்கு அவருக்கு ஸ்கோப்.. அதிலும் கேமிராவை சூர்யாவின் முகத்திலேயே போய் ஒட்ட வைத்துவிட்டதால் பாவம்.. அந்த வேலையும் இல்லாமல் போய்விட்டது. இப்படியே தொடர்ந்து பொம்மை மாதிரி வந்துபோனால் சீக்கிரத்தில் பொட்டியைக் கட்டிவிட வேண்டியதுதான்..

வடிவேலுக்குப் பிறகு பாராட்டுக்குரிய நடிகர்கள் இரண்டு பேர். ஒருவர் முரளி. இன்னொன்று சாயாஜி ஷிண்டே.. இந்தக் கேரக்டருக்கு முரளியை விட்டால் வேறு யார் பொருத்தமானவராக இருக்க முடியும்..? பாவம்.. அற்புதமான நடிகர்.. பாவிப்பய முருகன் அதுவும் பொறுக்காம கூப்பிட்டுட்டான்.. வர்றேன்.. வர்றேன்னு நானெல்லாம் தயாரா இருக்கேன். என்னைய கூப்பிடாம.. சாதிக்கிறவங்களையும், சாதிக்கத் துடிக்கிறவங்களையும் கூப்பிட்டுக்குறான்.. நல்லா இருப்பானா அவன்..?

பிள்ளைகள் கொலை செய்யும் தொழிலில் இருக்கிறார்கள் என்பதைக்கூட இவ்வளவு மகிழ்ச்சியாகவா சொல்ல முடியும் ஒரு தகப்பனால்..? நச்சுன்னு இருக்கு சாயாஜியின் கேரக்டர்.. டயலாக் டெலிவரியில் மனிதர் பின்னுகிறார். பொதுவாக மேடை நாடக நடிகர்களுக்குத்தான் இந்த வித்தை நன்கு தெரியும். மனிதர் நாடகத்தில் நடித்திருப்பாரோ தெரியவில்லை..

'முன்னாளைய கனவுக்கன்னி', 'கன்னட ரத்னா', 'பெங்களூர் பைங்கிளி'யான சரோஜாதேவியின் கொஞ்சும் தமிழை கொஞ்சூண்டு கேட்டபோதே தாங்க முடியலை.. அந்தக் காலத்துல எப்படி தாங்கிக்கிட்டாங்கன்னு தெரியலை.. ஆனாலும் இழுத்து, இழுத்து பேசறதை பார்த்தா.. கொஞ்சம் லேட்டா பொறந்ததால நாம தப்பிச்சோம்னுதான் சொல்லத் தோணுது..

நீண்ட நாட்கள் கழித்து ஆனந்த்பாபுவிற்கு நல்ல கேரக்டர். விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி மீண்டிருக்கும் அவரது மனதைரியத்தை பாராட்டத்தான் வேண்டும். கால் கருகிப் போயிருக்கும் நிலையிலும் டான்ஸ் ஆடியும், பைட் செய்தும் அவர் காட்டியிருக்கும் நடிப்பு தீவிரத்தை பார்த்து அசந்துதான் போனேன். அவருடைய இந்த இரண்டாவது இன்னிங்ஸ் நல்ல பலனைக் கொடுக்கட்டும்..

'கதை : ரமேஷ்கண்ணா' என்று டைட்டில் சொல்கிறது. இடைவேளைக்குப் பின்னர் வருகின்ற அந்த ட்விஸ்ட்டுகள் அருமை. நான் எதிர்பார்க்கவே இல்லை.. அதுதான் திரைப்படத்திற்கு பிற்பாதியில் உயிர் ஊட்டியிருக்கிறது என்று நினைக்கிறேன்.. பரவாயில்லை.. கதையின் அடித்தளம் பல்வேறு திரைப்படங்களில் பார்த்ததுதான் என்றாலும், இதன் திரைக்கதையாக்கம் பாராட்டுக்குரியதுதான்..

ஆனாலும் சிற்சில லாஜிக் சொதப்பல்கள் இருந்து தொலைந்தாலும், எதில்தான் இல்லை என்ற நினைப்பில் ஓரம்கட்ட வேண்டியதுதான்.. விசாரணை கமிஷனுக்கு தண்டனைக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரமும் உண்டா என்பது சந்தேகமானது. குற்றம் நடந்ததைத்தான் சொல்ல முடியும்.. மீதியை அரசு மேலும் புலனாய்வு செய்து நீதிமன்றத்திற்கு கொண்டுபோக முடியும். இதுதான் நடைமுறை. இங்கே சிறை தண்டனை வழங்கவே ஆலோசனை சொல்வது கொஞ்சம் டூமச்சுதான்..

படத்தின் எடிட்டிங் குறிப்பிட்டு பாராட்டக் கூடிய நிலையில் இருந்தது.. பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் இளசுகளுக்குப் பிடித்தாற்போன்று கட் அண்ட் ஷாட்டுகள் சொருகப்பட்டுள்ளது தெரிகிறது.

ஆனால் டோட்டலாக பெயிலியர் ஆனது பின்னணி இசைதான். ஏதோ 'வள்ளி திருமணம்' நாடகத்திற்கு போடும் பின்னணி இசையை இங்கே போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். இதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கக் கூடாதா..?

ஏதோ ஐந்து பாடல்கள் ஒலித்தன. பாடல் வரிகள் என் நினைவுக்கு வர மறுக்கின்றன. ஏதோ ஒண்ணை போட்டு, அவங்க வெளிநாட்டுக்குப் போய் ஷூட் பண்ணிட்டு எடிட் பண்ணி தேத்திட்டாங்க. அவ்ளோதான்..

என்ன இருந்தாலும் பாருங்க. அந்தக் கால இசையமைப்பாளர்களை அடிச்சுக்க முடியாதுன்ற மாதிரி.. இப்ப வர்ற சினிமாக்கள்ல பழைய சினிமாப் பாடல்களை இடை, இடையே ஒளிபரப்பி கொஞ்சம் கவன ஈர்ப்பு பண்ணிக்கிறாங்க.. இதுலேயும் அதே கதைதான்.. சட்டில இருந்தாத்தான அகப்பைல வரும். இதுல ஒவ்வொரு இசையமைப்பாளரும் 40 லட்சம், 50 லட்சம் சம்பளம் வாங்குறாங்களாம்.. பாவம் பெரியவர்கள் எம்.எஸ்.வி.யும், ராமமூர்த்தியும். இந்தக் காலத்துல பொறந்து தொலைச்சிருக்கக் கூடாதா..?

தியேட்டரில் கூட்டம் பெருமளவுக்குக் கூடியிருந்தது. தமிழ்நாடு முழுக்க நல்ல வசூல்தான். காரணம் இதோட சேர்ந்து வந்த ரெண்டு படங்கள் சரியில்லாததால.. இதையாவது பார்த்துத் தொலைப்போமே அப்படீன்னு கூட்டம் இங்க வர ஆரம்பிச்சிருக்காம்.. பிக்கப் ஆயிரும்னு தயாரிப்பு தரப்பு தெம்பா சொல்லுது.. ஏதோ போட்ட காசு வந்தா நமக்கும் சந்தோஷம்தான்..

எண்டெர்டெயிண்ட்மெண்ட்டுன்னு போனா படம் ஓகேதான்..

ஆனா அண்ணன் வடிவேலு மட்டும் இல்லைன்னு வைச்சுக்குங்க..?

63 comments:

  1. படத்தின் ஹீரோவான வடிவேலு///பாத்து ஆட்டோ எதும் வரப் போவுது

    ReplyDelete
  2. படத்தின் ஹீரோவான வடிவேலு///பாத்து ஆட்டோ எதும் வரப் போவுது

    ReplyDelete
  3. இந்த படத்தின் விமர்சனம் சிரிதாக இருக்கும் போதே இந்த படத்தின் தரம் தெரிந்து விடுகின்றது...

    ஜகன் மோகினிக்கு பெரிய பதிவு என்ற நினைக்கின்றேன்...

    ReplyDelete
  4. அண்ணே... வழக்கம்போல விமர்சனம் டாப்பு,

    சரோஜாதேவி மேட்டரு செம காமெடி...

    //பாவிப்பய முருகன் அதுவும் பொறுக்காம கூப்பிட்டுட்டான்.. வர்றேன்.. வர்றேன்னு நானெல்லாம் தயாரா இருக்கேன். என்னைய கூப்பிடாம..?//

    ஏண்ணே... உங்கள் சேவை எங்களுக்கு தேவை... அவசரப்படாதீங்க... மெதுவாப்போலாம்...

    ReplyDelete
  5. அண்ணே... வழக்கம்போல விமர்சனம் டாப்பு,

    சரோஜாதேவி மேட்டரு செம காமெடி...

    //பாவிப்பய முருகன் அதுவும் பொறுக்காம கூப்பிட்டுட்டான்.. வர்றேன்.. வர்றேன்னு நானெல்லாம் தயாரா இருக்கேன். என்னைய கூப்பிடாம..?//

    ஏண்ணே... உங்கள் சேவை எங்களுக்கு தேவை... அவசரப்படாதீங்க... மெதுவாப்போலாம்...

    ReplyDelete
  6. விமர்சனம் ரொம்ப சின்னதா இருக்கு !!!
    :)))

    ReplyDelete
  7. ஒவ்வொரு படத்தைப்பற்றியும் உடனுக்குடன் விமர்சிக்கும் உங்கள் பொறுமைக்குப் பாராட்டுக்கள்.
    சரோஜாதேவியின் குரல் பற்றி எழுதி இருந்தீர்கள் .அவர் தமிழ் பேசினார் .அது பெரிய விஷயம் .இப்போது நடிகைகள் பத்து வருடம் தமிழ்ப்படங்களில் நடித்தாலும் டப்பிங் தானே.! எனக்கு இந்த டப்பிங் கலாச்சாரம் பிடிப்பதில்லை ,நடிப்பு முழுமை பெறுவதற்கு தனித்துவமான சொந்தக்குரலும் முக்கியம் ,சிவாஜியையும் கமலையும் ஏன் ரஜினியையும் அவர்களது சொந்தக்குரல் இல்லாமல் டப்பிங் குரலுடன் நினைத்துப் பார்க்க நன்றாகவில்லையே!
    ஹாலிவூட் படங்களில் ஆங்கிலம் பேசித்தானே ஆக வேண்டும் ,ஹிந்திப்படங்களில் கூட ஹிந்தி தெரியாமல் நடிக்க முடியாதே !ஆனால் தமிழ்ப்படங்களில் மட்டும் -(தெலுங்குப்படங்களும்) எல்லாக் கதாநாயகிகளுக்கும் ஒரே குரலில் கீச்சுக்குரலில் வந்து ஒரே பாணியில் ஒரு பெண் குரல் கொடுப்பது சில வேளைகளில் எரிச்சலைக் கொடுக்கிறது ,எந்த மொழிக்காரரும் எந்த மொழியிலும் நடிக்கலாம் ,ஆனால் அந்தந்த மொழிகளை அறிவதில் ஆர்வம் காட்டவேண்டும் ,அன்றைய நடிகைகள் வேற்று மொழிகளை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழை அழகாகப் பேசி நடித்தார்கள் ,இன்று அபூர்வமாகத் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஓரிரு நடிகைகள் கூட சொந்தக் குரலில் பேசுவதில்லை.
    ஆனால் நடிகர்கள் மட்டும் பெரும்பாலும் சொந்தக்குரலில் பேசுகிறார்கள் ,சொல்லபோனால் தமிழரல்லாத பிரகாஷ்ராஜ் ,அர்ஜுன் போன்றவர்கள் தமிழர்களைவிட அழகாகக் தமிழ் பேசுகிறார்கள் .ஒரு வேளை நடிகைகள் என்றால் வெறும் பொம்மைகள் மாதிரி கவர்ச்சிபொருட்கள் மாதிரி வந்து போவதால் அவர்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையோ ?

    --வானதி

    ReplyDelete
  8. ஓஹோ...இந்த விமர்சனம் இவ்வளவுதானா? சூர்யா மேல 'ஏதோ' கோபம் போலத் தெரியுது...! வானதியின் கருத்துக்களை நானும் ஒத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  9. நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்கிற்கு போய் இந்த படத்தை பார்த்தேன். தங்கள் விமர்சனம் நன்று. சூர்யாவைத் துரத்தும் காட்சிகள் தாங்கள் சொல்வது போல்தான் இருந்தது. எத்தனை பேர் எத்தனை திசைகளில் இருந்து துரத்துகிறார்கள் என்று யோசிக்க வைத்தது. அதுவும் அவர் சந்து பொந்து இண்டு இடுக்குகளில் எல்லாம் புகுந்து ஓடுகிறார். எல்லா இடத்திலும் போலீஸ்காரர்கள் அவரைத் துரத்துவதற்கு தயாராக இருக்கிறார்கள்.

    ReplyDelete
  10. என்னது கொஞ்சம் லேட்டா பொறந்துட்டீங்களா?????

    சந்தடி சாக்குல..., இப்படி எழுதிட்டா.. உங்க Face/Off பத்தி தெரியாம போய்டுமா என்ன? :) :) :)

    ReplyDelete
  11. விமர்சனத்தை இப்படி சிம்ப்பிளா முடிச்சுட்டீங்களே பாஸ்..

    உங்க ஸ்டைல் இதுல மிஸ்ஸிங்..

    (இந்த மாதிரி மொக்கை படத்துக்கெல்லாம் முழுக்கதையும் சொல்லிட்டா நாங்க தியேட்டருக்கு போக வேண்டிய அவசியமில்லையே..)

    :(

    ReplyDelete
  12. [[[shabi said...
    படத்தின் ஹீரோவான வடிவேலு///

    பாத்து ஆட்டோ எதும் வரப் போவுது]]]

    இதுக்குக் கூடவா ஆட்டோ வரும்..? தமிழ்நாட்டுக்காரங்க ரொம்பத்தானய்ய்யா பயப்படுறீங்க..?

    ReplyDelete
  13. [[[jackiesekar said...

    இந்த படத்தின் விமர்சனம் சிரிதாக இருக்கும் போதே இந்த படத்தின் தரம் தெரிந்து விடுகின்றது...

    ஜகன் மோகினிக்கு பெரிய பதிவு என்ற நினைக்கின்றேன்...]]]

    இல்லை ஜாக்கி.. ஜெகன்மோகினியைவிடவும் பரவாயில்லைதான்..!

    ReplyDelete
  14. [[[நாஞ்சில் பிரதாப் said...

    அண்ணே... வழக்கம்போல விமர்சனம் டாப்பு.. சரோஜாதேவி மேட்டரு செம காமெடி...]]]

    அம்மா கொஞ்சிப் பேசுறதே தனி அழகு.. அது அப்ப நல்லா இருந்திருக்கும். நம்ம ஜெனரேஷனுக்கு எப்படியோ..?

    //பாவிப் பய முருகன் அதுவும் பொறுக்காம கூப்பிட்டுட்டான்.. வர்றேன்.. வர்றேன்னு நானெல்லாம் தயாரா இருக்கேன். என்னைய கூப்பிடாம..?//

    ஏண்ணே... உங்கள் சேவை எங்களுக்கு தேவை... அவசரப்படாதீங்க... மெதுவாப் போலாம்...]]]

    அடப் போங்கப்பா..! நிம்மதியா மேல போலாம்னா ஆள் மாத்தி ஆள் இருக்கச் சொல்றீங்க.. இருந்து என்ன பண்ணப் போறேன்..?

    ReplyDelete
  15. [[[gulf-tamilan said...
    விமர்சனம் ரொம்ப சின்னதா இருக்கு!!!:)))]]]

    இந்தப் படத்துக்கு இது போதும்ண்ணே..!

    ReplyDelete
  16. [[[vanathy said...

    ஒவ்வொரு படத்தைப்பற்றியும் உடனுக்குடன் விமர்சிக்கும் உங்கள் பொறுமைக்குப் பாராட்டுக்கள்.]]]

    நன்றி

    [[[சரோஜாதேவியின் குரல் பற்றி எழுதி இருந்தீர்கள். அவர் தமிழ் பேசினார். அது பெரிய விஷயம். இப்போது நடிகைகள் பத்து வருடம் தமிழ்ப் படங்களில் நடித்தாலும் டப்பிங்தானே.! எனக்கு இந்த டப்பிங் கலாச்சாரம் பிடிப்பதில்லை, நடிப்பு முழுமை பெறுவதற்கு தனித்துவமான சொந்தக் குரலும் முக்கியம், சிவாஜியையும் கமலையும் ஏன் ரஜினியையும் அவர்களது சொந்தக் குரல் இல்லாமல் டப்பிங் குரலுடன் நினைத்துப் பார்க்க நன்றாகவில்லையே!
    ஹாலிவூட் படங்களில் ஆங்கிலம் பேசித்தானே ஆக வேண்டும், ஹிந்திப் படங்களில் கூட ஹிந்தி தெரியாமல் நடிக்க முடியாதே! ஆனால் தமிழ்ப் படங்களில் மட்டும் (தெலுங்குப் படங்களும்) எல்லாக் கதாநாயகிகளுக்கும் ஒரே குரலில் கீச்சுக் குரலில் வந்து ஒரே பாணியில் ஒரு பெண் குரல் கொடுப்பது சில வேளைகளில் எரிச்சலைக் கொடுக்கிறது. எந்த மொழிக்காரரும் எந்த மொழியிலும் நடிக்கலாம், ஆனால் அந்தந்த மொழிகளை அறிவதில் ஆர்வம் காட்டவேண்டும். அன்றைய நடிகைகள் வேற்று மொழிகளை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழை அழகாகப் பேசி நடித்தார்கள், இன்று அபூர்வமாகத் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஓரிரு நடிகைகள்கூட சொந்தக் குரலில் பேசுவதில்லை. ஆனால் நடிகர்கள் மட்டும் பெரும்பாலும் சொந்தக் குரலில் பேசுகிறார்கள். சொல்ல போனால் தமிழரல்லாத பிரகாஷ்ராஜ், அர்ஜுன் போன்றவர்கள் தமிழர்களைவிட அழகாகக் தமிழ் பேசுகிறார்கள். ஒரு வேளை நடிகைகள் என்றால் வெறும் பொம்மைகள் மாதிரி கவர்ச்சி பொருட்கள் மாதிரி வந்து போவதால் அவர்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையோ?

    --வானதி]]]

    அம்மா வானதி..

    இங்கே நடிகைகளின் டப்பிங்குக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. காரணம் முதலில் நடிகைகளே இங்கு முக்கியமில்லை. ஹீரோக்கள் ராஜ்ஜியம்தான்..

    சிம்ரன் இத்தனை ஆண்டு காலம் நன்றாகத்தான் நடித்திருந்தார். ஆனால் முழுக்க முழுக்க டப்பிங் வாய்ஸ்தான்..

    ஒரு சிலர் குரல் கேட்க நன்றாக இருக்கும். அவர்கள் பேசலாம். ஒரு சிலரின் குரல் கீச்சுக் குரலாக இருந்தால் கேட்பதற்கு நன்றாக இருக்காது. அவர்களுக்கு டப்பிங்தான் ஏற்பாடு செய்தாக வேண்டும். வேறு வழியில்லை.

    இங்கே சரோஜாம்மா பேசியது அவர்களுடைய வழக்கமான ஸ்டைலில் நின்று நிதானித்து பேசியது.. வடிவேலு சூப்பர் பாஸ்ட்டில் பேசிக் கொண்டிருக்க இவர் நின்று நிதானமாகப் பேசியது சட்டென்று காட்சியின் வீரியத்தைக் குறைக்கிறது.. படத்தைப் பார்த்தாயானால் உனக்கே புரியும்..

    பட் எனக்கும் சரோஜாம்மாவின் கொஞ்சம் தமிழ் கொஞ்சம், கொஞ்சம் பிடித்துதான் இருந்தது..

    எங்க வீட்டுப் பிள்ளை படம் பார். அப்பா ரங்காராவிடம் கண்களை உருட்டிக் கொண்டு செல்லமாகக் கொஞ்சிப் பேசும் காட்சிகளில் அன்றைய ரசிகர்கள் சொக்கித்தான் போனார்கள்..

    ReplyDelete
  17. [[[ஸ்ரீராம். said...
    ஓஹோ... இந்த விமர்சனம் இவ்வளவுதானா? சூர்யா மேல 'ஏதோ' கோபம் போலத் தெரியுது...!]]]

    ச்சே.. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க..

    இது வழக்கமான சினிமா விமர்சனம்தான்..!

    ReplyDelete
  18. [[[ananth said...
    நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்கிற்கு போய் இந்த படத்தை பார்த்தேன். தங்கள் விமர்சனம் நன்று. சூர்யாவைத் துரத்தும் காட்சிகள் தாங்கள் சொல்வது போல்தான் இருந்தது.

    எத்தனை பேர் எத்தனை திசைகளில் இருந்து துரத்துகிறார்கள் என்று யோசிக்க வைத்தது. அதுவும் அவர் சந்து பொந்து இண்டு இடுக்குகளில் எல்லாம் புகுந்து ஓடுகிறார். எல்லா இடத்திலும் போலீஸ்காரர்கள் அவரைத் துரத்துவதற்கு தயாராக இருக்கிறார்கள்.]]]

    கரெக்ட் ஆனந்த்.. இது வலிந்து திணிக்கப்பட்ட, பரபரப்புக் காட்சி.. படம் பிடித்ததில் ஒரு அழகு இருந்ததால் பாராட்டைப் பெற்றது..!

    ReplyDelete
  19. [[[ஹாலிவுட் பாலா said...
    என்னது கொஞ்சம் லேட்டா பொறந்துட்டீங்களா????? சந்தடி சாக்குல..., இப்படி எழுதிட்டா.. உங்க Face/Off பத்தி தெரியாம போய்டுமா என்ன? :) :) :)]]]

    ஹாலிவுட்ஜி..

    எழுதினது இந்த ஒரு வரிதான் கண்ணுக்குப் பட்டுச்சோ..

    எப்பவுமே காமாலைக் கண்ணோட பார்க்காதீங்க ஸார்..!

    நல்லவிதமா பாருங்க..!

    நீங்க என்னதான் கிண்டல் செஞ்சாலும் நான் யூத்துதான்..! போதுமா..?

    ReplyDelete
  20. [[[தீப்பெட்டி said...

    விமர்சனத்தை இப்படி சிம்ப்பிளா முடிச்சுட்டீங்களே பாஸ்.. உங்க ஸ்டைல் இதுல மிஸ்ஸிங்..

    இந்த மாதிரி மொக்கை படத்துக்கெல்லாம் முழுக்கதையும் சொல்லிட்டா நாங்க தியேட்டருக்கு போக வேண்டிய அவசியமில்லையே..)
    :(]]]

    அந்த ட்விஸ்ட்டுகளைச் சொல்லிவிட்டால் அப்புறம் படம் பார்க்க முடியாது. அதனால்தான் முழுதையும் சொல்ல முடியவில்லை.. மன்னிக்கவும்..

    நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்..!

    ReplyDelete
  21. அண்ணாச்சி நேற்று இசையருவியில் ஆதவன் சிறப்பு நிகழ்ச்சியில் வடிவேல் மட்டும் தான் பங்குபற்றினார் ஆகவே நீங்கள் சொல்வது போல வடிவேல்தான் படத்தின் ஹீரோ.

    ReplyDelete
  22. //படத்தின் ஹீரோவான வடிவேலு...//
    ஆரம்பத்துலயே... ஹா ஹா ஹா..

    //கொஞ்சம் லேட்டா பொறந்ததால நாம தப்பிச்சோம்னுதான் சொல்லத் தோணுது.. //
    நல்ல வேளை, நானெல்லாம் அப்போ பொறக்கவே இல்ல...

    //'கதை : ரமேஷ்கண்ணா' என்று ”டைட்டில் சொல்கிறது”//
    இதுல ஏதும் உள்குத்து?

    //பாடல் வரிகள் என் நினைவுக்கு வர மறுக்கின்றன. //
    அஜிலி பிஜிலி அஜகலி - கூடவா ஞாபகத்துக்கு வரல?

    //ஆனா அண்ணன் வடிவேலு மட்டும் இல்லைன்னு வைச்சுக்குங்க..? //
    நானும் ஆரம்பத்துல இருந்து பாத்துட்டு வரேன்... கடைசி வர சொல்லவே இல்லையே!

    ReplyDelete
  23. அண்ணே டென்ஷன் ஆகாதிங்க,

    நீங்களும் சரோஜா தேவியும் ஒரே ஏஜ் குரூப்னு
    சொன்னாங்க... உண்மையா அண்ணே?

    ReplyDelete
  24. [[[வந்தியத்தேவன் said...
    அண்ணாச்சி நேற்று இசையருவியில் ஆதவன் சிறப்பு நிகழ்ச்சியில் வடிவேல் மட்டும்தான் பங்குபற்றினார் ஆகவே நீங்கள் சொல்வது போல வடிவேல்தான் படத்தின் ஹீரோ.]]]

    உண்மை.. உண்மை.. உண்மையைத் தவிர வேறில்லை..!

    ReplyDelete
  25. [[[எவனோ ஒருவன் said...

    //படத்தின் ஹீரோவான வடிவேலு...//

    ஆரம்பத்துலயே... ஹா ஹா ஹா..]]]

    இது எப்படி இருக்கு..?

    [//கொஞ்சம் லேட்டா பொறந்ததால நாம தப்பிச்சோம்னுதான் சொல்லத் தோணுது.. //

    நல்லவேளை, நானெல்லாம் அப்போ பொறக்கவே இல்ல...]]]

    ரொம்பத் தப்பிச்சிட்ட தம்பீ..!

    [//'கதை : ரமேஷ்கண்ணா' என்று ”டைட்டில் சொல்கிறது”//

    இதுல ஏதும் உள்குத்து?]]]

    இதுல பல பேரோட கதை இருக்குது. அதுனாலதான்..

    [//பாடல் வரிகள் என் நினைவுக்கு வர மறுக்கின்றன. //

    அஜிலி பிஜிலி அஜகலி - கூடவா ஞாபகத்துக்கு வரல?]]]

    அப்படீன்னு ஒரு பாட்டா..? முருகா..!

    [//ஆனா அண்ணன் வடிவேலு மட்டும் இல்லைன்னு வைச்சுக்குங்க..? //

    நானும் ஆரம்பத்துல இருந்து பாத்துட்டு வரேன்... கடைசி வர சொல்லவே இல்லையே!]]]

    அதான் இப்ப சொல்லிட்டனே..!

    ReplyDelete
  26. [[[ஜெட்லி said...
    அண்ணே டென்ஷன் ஆகாதிங்க,
    நீங்களும் சரோஜாதேவியும் ஒரே ஏஜ் குரூப்னு சொன்னாங்க... உண்மையா அண்ணே?]]]

    யார் சொன்னா..? நான் யூத்து சாமிகளா.. யூத்து..!

    சொன்னா நம்புங்கப்பா..!

    ReplyDelete
  27. மத்தவங்க எல்லாம் இந்த படம் அப்படி ஒன்னும் இல்லன்னு சொல்லியிருக்கிறாங்க, வடிவேளைத் தவிர...... இருந்தாலும் நீங்க ஒன் ஸ்டெப் முன்னே போய் அவர ஹீரோன்னு சொல்லி இருக்கீங்க பாத்து சார் வீட்டு ஆட்டோ வரப்போகுது......

    ReplyDelete
  28. //பாத்து சார் வீட்டு ஆட்டோ வரப்போகுது......//

    பரவால்ல... வடிவேலுவும் ரவுடிதான்...

    ReplyDelete
  29. சரவணா! வழக்கமாக உன் விமர்சனத்தைப் பார்த்துவிட்டுத்தான் தியேட்டருக்குப்போகலாமா என்பதைத் தீர்மானிப்பேன்.

    நீ எழுதியது உண்மைதான். சாயாஜி ஷிண்டே அடிப்படையில் நீண்டநாள் நாடக நடிகர். 1972-ல் எனது தில்லி நாடகக்குழு பம்பாய் சென்று இ.பா.வின் மழை, போர்வை போர்த்திய உடல்கள் நாடகங்களை போட்டபோது, தமிழே தெரியாத இந்தக்கலைஞன் நாடகங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறான். ‘பாரதி’ படப்பிடிப்பின்போது சாயாஜி என்னிடம் சொன்னது!

    வானதியின் கருத்து உண்மையானது. சரோஜா தேவியின் ‘தமிழை’க்கேட்டே நாங்கள் வளர்ந்திருக்கிறோம்!

    பாரதி மணி

    ReplyDelete
  30. enna anna.. paattu oonu kooda nalla illanu solliteenga,,.. rendu paatu nalla irundhude...

    athe maathiri second half romba mokka pottuduchi... athuvum climax thaangala..

    ReplyDelete
  31. [[[niyazpaarvai said...
    மத்தவங்க எல்லாம் இந்த படம் அப்படி ஒன்னும் இல்லன்னு சொல்லியிருக்கிறாங்க, வடிவேளைத் தவிர. இருந்தாலும் நீங்க ஒன் ஸ்டெப் முன்னே போய் அவர ஹீரோன்னு சொல்லி இருக்கீங்க பாத்து சார் வீட்டு ஆட்டோ வரப்போகுது.]]]

    இன்னாபா இது.. அல்லாரும் இப்படி பூச்சாண்டி காட்டுறீங்க..

    வரட்டுமே.. நம்ம வடிவேலு அண்ணன்கிட்ட சொல்லிட்டாப் போச்சு.. அவர் லாரி அனுப்பிற மாட்டாரு..?

    ReplyDelete
  32. [[[எவனோ ஒருவன் said...

    //பாத்து சார் வீட்டு ஆட்டோ வரப்போகுது......//

    பரவால்ல... வடிவேலுவும் ரவுடிதான்...]]]

    அதான.. எல்லாம் அவர் பார்த்துக்குவாரு..!!!

    ReplyDelete
  33. [[[பாரதி மணி said...

    சரவணா! வழக்கமாக உன் விமர்சனத்தைப் பார்த்துவிட்டுத்தான் தியேட்டருக்குப் போகலாமா என்பதைத் தீர்மானிப்பேன்.]]]

    அப்படியா? ரொம்ப சந்தோஷம் ஸார்..!

    [[[நீ எழுதியது உண்மைதான். சாயாஜி ஷிண்டே அடிப்படையில் நீண்ட நாள் நாடக நடிகர். 1972-ல் எனது தில்லி நாடகக்குழு பம்பாய் சென்று இ.பா.வின் மழை, போர்வை போர்த்திய உடல்கள் நாடகங்களை போட்டபோது, தமிழே தெரியாத இந்தக்கலைஞன் நாடகங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறான். ‘பாரதி’ படப்பிடிப்பின்போது சாயாஜி என்னிடம் சொன்னது!]]]

    உண்மையில் சாயாஜி அனாயசமாக நடித்திருக்கிறார். அதனால்தான் எனக்கு சந்தேகம் வந்தது.. படத்தை இதற்காகவே பாருங்களேன்..!

    [[[வானதியின் கருத்து உண்மையானது. சரோஜாதேவியின் ‘தமிழை’க் கேட்டே நாங்கள் வளர்ந்திருக்கிறோம்!]]]

    ஓ.. அவங்களா நீங்க..!?

    என்ன இருந்தாலும் அந்தக் கொஞ்சும் தமிழை மறக்க முடியுமா ஸார்..!!!

    ReplyDelete
  34. [[[kanagu said...
    enna anna.. paattu oonu kooda nalla illanu solliteenga,,.. rendu paatu nalla irundhude...]]]

    நன்றாக இருந்தது எனில், அன்றைய நாள் முழுவதும் அந்த ஒரு பாடல் நம் மனதைவிட்டு அகலக் கூடாது. அதுதான் நன்றாக இருந்தது என்பதற்கு அர்த்தம்.. இதில் அப்படியா இருந்தது..?

    [[[athe maathiri second half romba mokka pottuduchi... athuvum climax thaangala..]]]

    கிளைமாக்ஸ் சொதப்பல்தான்.. ஆனாலும் கமர்ஷியல் திரைப்படங்களில் இது சகஜம்தானே..! விட்டுத் தொலைக்க வேண்டியதுதான்..!

    ReplyDelete
  35. சாயாஜி ஷிண்டே அடிப்படையில் ஒரு மராட்டிய நாடகக் கலைஞர் என்று கமெண்ட் போடலாமுன்னு நினைச்சேன்!. அதுக்குள்ளே திரு பாரதி மணி சொல்லிட்டாரு!
    ஓட்டு போட்டாச்சி!!!

    ReplyDelete
  36. [[[நல்லதந்தி said...
    சாயாஜி ஷிண்டே அடிப்படையில் ஒரு மராட்டிய நாடகக் கலைஞர் என்று கமெண்ட் போடலாமுன்னு நினைச்சேன்!. அதுக்குள்ளே திரு பாரதிமணி சொல்லிட்டாரு!]]]

    வருகைக்கு நன்றிகள் தந்தியாரே..!

    [[[ஓட்டு போட்டாச்சி!!!]]]

    இனிமேல் ஓட்டுப் போட்டு என்ன புண்ணியம்..? நேற்றே போட்டிருந்தால்கூட முகப்புப் பக்கத்தில் வந்திருக்கும்..!

    ReplyDelete
  37. என்னது வடிவேலு ஹீரோவா...பார்த்துப்பு, சூர்யா ஏற்கனவே ஈனப்பயலுக, கேனப்பயலுகன்னு திட்டிட்டு இருக்காரு!உங்களையும் அந்த மாதிரி எதாவது வில்லங்கமா....

    ReplyDelete
  38. யோவ் உனக்கு இன்னா தில்லுய்யா... வடிவேலு ஹீரோவா உமக்கு. எங்க தல சூர்யாவைப் பத்தி தரக்குறைவா சொன்ன உண்மைத் தமிழன் ஒழிக... :P

    ReplyDelete
  39. //ஏதோ போட்ட காசு வந்தா நமக்கும் சந்தோஷம்தான்..//

    அடடா? நீங்க படமெல்லாம் காசுபோட்டு தயாரிக்கிறீங்களா?

    ReplyDelete
  40. ஆனா அண்ணன் வடிவேலு மட்டும் இல்லைன்னு வைச்சுக்குங்க..?

    :-))))

    ReplyDelete
  41. [[[டவுசர் பாண்டி... said...
    என்னது வடிவேலு ஹீரோவா? பார்த்துப்பு, சூர்யா ஏற்கனவே ஈனப்பயலுக, கேனப்பயலுகன்னு திட்டிட்டு இருக்காரு! உங்களையும் அந்த மாதிரி எதாவது வில்லங்கமா....]]]

    ச்சேச்சே.. சூர்யா தம்பி அப்படியெல்லாம் பண்ணாது.. ரொம்ப நல்ல புள்ளை..!

    ReplyDelete
  42. [[[பிரசன்னா இராசன் said...
    யோவ் உனக்கு இன்னா தில்லுய்யா... வடிவேலு ஹீரோவா உமக்கு. எங்க தல சூர்யாவைப் பத்தி தரக்குறைவா சொன்ன உண்மைத் தமிழன் ஒழிக... :P]]]

    ஹி.. ஹி.. பிரசன்னா இராசன் வாழ்க..!

    ReplyDelete
  43. [[[யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

    //ஏதோ போட்ட காசு வந்தா நமக்கும் சந்தோஷம்தான்..//

    அடடா? நீங்க படமெல்லாம் காசு போட்டு தயாரிக்கிறீங்களா?]]]

    யோகன் ஸார்..

    இப்படியெல்லாம் கேக்காதீங்க.. அப்புறம் அழுதிருவேன்..!

    ReplyDelete
  44. [[[கிறுக்கல் கிறுக்கன் said...
    ஹி ஹி ஹி]]]

    ஹா.. ஹா.. ஹா..!

    ReplyDelete
  45. [[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    ஆனா அண்ணன் வடிவேலு மட்டும் இல்லைன்னு வைச்சுக்குங்க..?
    :-))))]]]

    உண்மை.. உண்மையைத் தவிர வேறில்லை..!

    ReplyDelete
  46. இருந்து என்ன பண்ணப் போறேன்..?//

    செத்து என்ன பன்ன போரீங்க? :)

    ReplyDelete
  47. //படத்தின் ஹீரோவான வடிவேலு//

    ஹ ஹ ஹ என்னங்க இப்படி போட்டு தாக்கிட்டிங்க.

    ReplyDelete
  48. வ‌ழ‌க்க‌ம் போல உங்க‌ பாணில‌ விம‌ர்ச‌ன‌ம் சூப்ப‌ர் ! ரொம்ப‌வே உண்மை பேச‌றீங்க‌.. பாத்துக்குங்க‌ :)

    -Toto
    www.pixmonk.com

    ReplyDelete
  49. [[[Prakash said...

    இருந்து என்ன பண்ணப் போறேன்..?//

    செத்து என்ன பன்ன போரீங்க? :)///

    இன்னுமொரு தமிழனுக்கு இடம் கிடைக்குமே..!!!

    ReplyDelete
  50. [[[சிங்கக்குட்டி said...

    //படத்தின் ஹீரோவான வடிவேலு//

    ஹ ஹ ஹ என்னங்க இப்படி போட்டு தாக்கிட்டிங்க.]]]

    உண்மையைச் சொல்வதில் என்ன தயக்கம் வேண்டிக் கிடக்கு..?

    ReplyDelete
  51. [[[Toto said...
    வ‌ழ‌க்க‌ம் போல உங்க‌ பாணில‌ விம‌ர்ச‌ன‌ம் சூப்ப‌ர்! ரொம்ப‌வே உண்மை பேச‌றீங்க‌.. பாத்துக்குங்க‌ :)

    -Toto
    www.pixmonk.com]]]

    அக்கறைக்கும், கரிசனத்திற்கும் நன்றிகள் டோடோ..!

    ReplyDelete
  52. உங்கள் standard க்கு இந்த விமர்சனம் இல்லை. ஒரு வேளை படம் உங்கள் standard க்கு இல்லையோ...

    அன்பு நித்யன்

    ReplyDelete
  53. [[[நித்யகுமாரன் said...
    உங்கள் standardக்கு இந்த விமர்சனம் இல்லை. ஒரு வேளை படம் உங்கள் standardக்கு இல்லையோ...
    அன்பு நித்யன்]]]

    இல்லைதான் நித்யா.

    ஆனால் நகைச்சுவைக் காட்சிகளும், பிற்பாதியில் வருகின்ற டிவிஸ்ட்டுகளும் படத்தைப் பார்க்க வைத்துவிட்டன.

    தவறில்லைதான்.. பாடலும், இசையும்தான் கோளாறு..!

    ReplyDelete
  54. நண்பரே,கலைஞர்'ல போட்டுத் தாக்குறாங்களாம் விளம்பரம்,நீங்க இப்படி சொல்றீங்க?

    ReplyDelete
  55. [[[அறிவன்#11802717200764379909 said...
    நண்பரே, கலைஞர்'ல போட்டுத் தாக்குறாங்களாம் விளம்பரம், நீங்க இப்படி சொல்றீங்க?]]]

    அதனாலதான் இப்பவும் கூட்டம் கூடத் துவங்கியிருக்கு..!

    இதுவொரு விளம்பர யுக்தி..!

    ReplyDelete
  56. \\கொலை செய்வதையே குலத் தொழிலாகச் செய்து வரும் செகண்ட் ஹீரோ சூர்யா//

    இது எல்லாம் கொஞ்சம் ஓவர் தல... உங்க வார்த்தைய நம்பித்தான் படம் பார்க்க போறேன் படம் நல்ல இல்லன்னு வையுங்க எந்திரன் படத்துக்கு நீங்கதான் எனக்கு ஸ்பன்சர் பண்ணனும். இப்பவே சொல்லிட்டேன்

    ReplyDelete
  57. ///Romeoboy said...

    \\கொலை செய்வதையே குலத் தொழிலாகச் செய்து வரும் செகண்ட் ஹீரோ சூர்யா//

    இது எல்லாம் கொஞ்சம் ஓவர் தல... உங்க வார்த்தைய நம்பித்தான் படம் பார்க்க போறேன் படம் நல்ல இல்லன்னு வையுங்க எந்திரன் படத்துக்கு நீங்கதான் எனக்கு ஸ்பன்சர் பண்ணனும். இப்பவே சொல்லிட்டேன்.///

    ரோமியோபாய்..

    என் மீது தைரியம் வைத்து படத்தை பார்க்கலாம்.. பார்த்துவிட்டு வந்து மறக்காமல் உங்களது கருத்தைச் சொல்லுங்கள்..

    எந்திரன் படத்துக்கு ஸ்பான்ஸர்ஷிப் எதுக்கு..? சென்னைல இருந்தீங்கன்னா எனக்கு போன் பண்ணுங்க. நானே கூட்டிட்டுப் போறேன்..!

    ReplyDelete
  58. //அயன் படத்தின் பாதிப்பு இப்படத்திலும் தொற்றியிருக்கிறது. போலீஸ் விரட்டும் வேட்டையில் சூர்யா ஓடுகின்ற ஓட்டம் பலவிதங்களில் லாஜிக்கை மீறியிருந்தாலும் கண்கட்டுவித்தையைக் காட்ட வேண்டும் என்று நினைத்துவிட்டதால் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். இந்தக் காட்சியில் கேமிராவின் வேகம் சூப்பர்ப்..//

    இது 007 ந் கேசினோ ராயல் தழுவல்.

    //நச்சுன்னு இருக்கு சாயாஜியின் கேரக்டர்.. டயலாக் டெலிவரியில் மனிதர் பின்னுகிறார். பொதுவாக மேடை நாடக நடிகர்களுக்குத்தான் இந்த வித்தை நன்கு தெரியும். மனிதர் நாடகத்தில் நடித்திருப்பாரோ தெரியவில்லை..//

    ஷாயாஜி ஷின்டே கல்கத்தாவில் ஒரு நாடக நடிகர் தான்.

    ReplyDelete
  59. [[[சீனு said...

    //அயன் படத்தின் பாதிப்பு இப்படத்திலும் தொற்றியிருக்கிறது. போலீஸ் விரட்டும் வேட்டையில் சூர்யா ஓடுகின்ற ஓட்டம் பலவிதங்களில் லாஜிக்கை மீறியிருந்தாலும் கண்கட்டுவித்தையைக் காட்ட வேண்டும் என்று நினைத்துவிட்டதால் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். இந்தக் காட்சியில் கேமிராவின் வேகம் சூப்பர்ப்..//

    இது 007-ந் கேசினோ ராயல் தழுவல்.]]]

    அப்போ அயனில் வந்த காட்சிகள்..?

    [[[//நச்சுன்னு இருக்கு சாயாஜியின் கேரக்டர்.. டயலாக் டெலிவரியில் மனிதர் பின்னுகிறார். பொதுவாக மேடை நாடக நடிகர்களுக்குத்தான் இந்த வித்தை நன்கு தெரியும். மனிதர் நாடகத்தில் நடித்திருப்பாரோ தெரியவில்லை..//

    ஷாயாஜி ஷின்டே கல்கத்தாவில் ஒரு நாடக நடிகர்தான்.]]]

    ம்.. கேள்விப்பட்டேன் சீனு.. நடிகர்களில் மேடை நாடகங்களில் நடித்து வெள்ளித்திரைக்கு வருபவர்கள்தான் நடிப்புத் திலகங்களாக இருக்கிறார்கள்..!

    இது வரலாற்று உண்மை.

    ReplyDelete