Pages

Friday, October 16, 2009

தைரியம் இருந்தா போட்டிக்கு வாங்க பதிவர்களே..!

16-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

குறும்படம் எடுத்தது பெரிசில்லை.. வீட்ல வைச்சு நானே ஆயிரம் வாட்டி பார்த்ததும் பெரிசில்லை. ஏதோ தெரியாத்தனமா பிரெண்டானவங்களையெல்லாம் பார்க்க வைச்சு கதறடிச்சதும் பெரிசில்ல.. ஊர்க்காரங்க பட்ட இம்சையை உலகம் பூரா பரப்பி அவுகளையும் நோகாம நொங்கெடுக்கணும்ன்றதுதான் இப்ப நம்மளோட கொள்கை.. லட்சியம்..

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு நான் எடுத்த புனிதப்போர் குறும்படத்தைப் பத்தி நானே பெருமையா சொல்லிக்கக் கூடாது.

இருந்தாலும், "இவனெல்லாம் ஒரு படம் எடுத்திட்டானே.. அதுலேயும் முப்பதாயிரம் ரூபா செலவுல.. டைரக்டர்ன்னு வேற பேர் போட்டுக்கிட்டானானே"ன்ற வயித்தெரிச்சல்ல நிறைய பேர் 'பொங்கித் தீர்த்த கதை'யையெல்லாம் அப்பவே நான் என் அப்பன் முருகன்கிட்ட 'பாஸ்' பண்ணிட்டு 'லூஸ்'ல விட்டுட்டேன்.

ஆனாலும் நீங்க பட்ட அந்த இம்சையை ஸ்டேட் முழுக்க கொண்டு போகணும்னு நினைச்சுத்தான், தமிழ்நாட்டுல நடந்த அத்தனை குறும்படப் போட்டிகளுக்கும் அனுப்பி, போஸ்ட்லேயே எல்லாருக்கும் 'தூக்குத் தண்டனை' கொடுத்திட்டிருக்கேன்.

அந்த வகைல என்னுடைய.. இல்ல.. இல்ல.. தப்பு.. தப்பு.. நம்முடைய 'புனிதப்போர்' குறும்படம், இதுவரைக்கும் தமிழ்நாட்டுல இது மாதிரி போட்டி நடத்துற அத்தனை ஊர்களுக்கும் பயணப்பட்டு, தன்னோட கொடுமையை நிறைவேத்தியிருக்கு..

இப்போ இன்னொரு முயற்சியா டெல்டா மாவட்டத்தில் இருந்து டால்டா செய்ய ஒரு நல்ல ஆஃபர் வந்திருக்கு.. விட்டுற முடியுமா? களத்துல குதிக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

நம்ம திருவாரூர் மாவட்டத்துல இருக்குற பன்னாட்டு லயன்ஸ் சங்கம்(324-A2 மாவட்டம்) படைப்பிலக்கியப் பரிசுப் போட்டி 2009-2010 என்கிற தலைப்பில் ஒரு போட்டியை நடத்துது. கூடவே குறும்படப் போட்டியும் நடத்துதாம்.

இந்த மாசம் வெளிவந்த 'கிழக்கு வாசல் உதயம்' அப்படீன்ற புத்தகத்துல இந்த நியூஸ் வெளியாகியிருக்கு.

இந்தப் போட்டிக்காக சிறுகதை எழுத்தாளர்களும், குறும்படத் தயாரிப்பாளர்களும் அவங்கவங்க எழுதின சிறுகதைகளையும், குறும்படங்களையும் அனுப்பி வைக்கச் சொல்லியிருக்காங்க..

சிறுகதைப் போட்டிக்காக சில விதிமுறைகளைக் கொடுத்திருக்காங்க.. அது என்னன்னா..?

1. போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். கதைகள் A4 அளவில் 7 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதே அளவில் ஈ-மெயிலிலும் அனுப்பலாம்.

2. இதுவரை பிரசுரமாகாத கதையாக இருத்தல் வேண்டும். போட்டி முடிவுகள் அறிவிக்கும்வரை வேறு எந்த இதழுக்கும் அனுப்புதல் கூடாது.

3. தழுவல் அல்லது மொழி பெயர்ப்புக் கதையாக இருக்கக் கூடாது. சொந்தக் கற்பனை என்ற உறுதி தேவை.

4. பரிசுக்குரிய கதைகள், அதற்கென அமைக்கப்படும் தேர்வுக் குழுவால், தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். அந்த முடிவே இறுதியானது.

5. அனுப்பும் கதைகளுக்கு நகல் எடுத்துக் கொண்ட பின், கதைகளை அனுப்பவும். தேர்வு பெறாத கதைகளை திருப்பியனுப்ப இயலாது.

சிறந்த சிறுகதைகளுக்கு முதல் பரிசு ரூபாய் பத்தாயிரம். இரண்டாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரம்.. மூன்றாம் பரிசு ரூபாய் மூவாயிரம்.

இவை தவிர சில கதைகள் ஆறுதல் பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்படுமாம்.

குறும்படப் போட்டிக்கான விதிமுறைகள்

1. கடந்த 2000ம் ஆண்டிற்குப் பிறகு எடுக்கப்பட்ட குறும்படங்களாக இருத்தல் வேண்டும். ஆவணப் படங்கள் போட்டிக்கு ஏற்புடையதல்ல.

2. 30 நிமிடங்களுக்கு மேற்படாத கால அளவு கொண்டிருத்தல் வேண்டும்.

3. குறும்படத்தின் இரண்டு CDக்களை அல்லது DVDக்களை அனுப்ப வேண்டும்.

4. போட்டிக்கென குறும்படத்தை அனுப்புபவர் எந்த உரிமையின் அடிப்படையில் அதை அனுப்புகிறார் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

போட்டிக்கு வரும் குறும்படங்களில் சிறந்த 5 படங்கள் பரிசுக்குரியவையாகத் தேர்ந்தெடுக்கப்படும்.

ஒவ்வொரு படத்துக்கும் தலா ரூபாய் ஐந்தாயிரம் பரிசாகத் தரப்படும்.

தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

சிறுகதைகளும், குறும்படங்களும் அனுப்ப வேண்டிய முகவரி

லயன் உத்தமச்சோழன்
மாவட்டத் தலைவர் - கலை, இலக்கியம்
525, சத்யா இல்லம்
மடப்புறம்-614 715
திருத்துறைப்பூண்டி
தொலைபேசி எண் : 04369-223292
அலைபேசி எண் : 94433-43292
மின்னஞ்சல் முகவரிகள் : kizhakkuvaasal@gmail.com / kizhakku_vaasal@yahoo.co.in

படைப்புகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கடைசி தேதி 31-10-2009

என்ன பதிவர்களே.. முழுவதுமாக படித்து விட்டீர்களா..?

சிறுகதைப் போட்டியாம்.. ஆனால் '7 பக்கந்தான்' அப்படீன்னு கண்டிஷன் போட்டிருக்கிறது எனக்கு ஒத்து வரலை. அதுனால வேற யாராச்சும் எனக்குப் பதிலா பரிசை வாங்கிக்கட்டும்னு ஒதுங்கிட்டேன்.

ஆனா அந்தக் குறும்படப் போட்டியை விடுறதா இல்லை..

கண்டிப்பா என்னோட 'புனிதப்போர்' காவியத்தை இந்தப் போட்டிக்கு அனுப்பப் போறேன்.. நிச்சயம் ஜெயிப்பேன் என்று இதுவரையில் அனுப்பிய அத்தனை போட்டிகளிலும் நம்பினதைப் போல இந்தத் தடவையும் உறுதியா நம்புறேன்..

நெஞ்சுல 'தில்' இருந்தா.. மனசுல 'மாஞ்சா' இருந்தா.. உடம்புல 'வலு' இருந்தா.. மைண்ட்ல 'தைரியமிருந்தா'.. அவங்கவங்க எடுத்த குறும்படத்தை அனுப்பி என்னோட 'புனிதப்போரோட' போட்டி போடுங்க பார்ப்போம்..

ஒரு கை பார்த்திருவோம் மக்களே..!

வாங்க.. வாங்க.. தயாராயிருக்கேன்..!!!

மறந்திராதீங்க.. வர்ற அக்டோபர் 31, கடைசி நாளு..

அதுக்குள்ள உங்களோட படைப்புகளை அனுப்பிருங்க..

நன்றி..!!!

93 comments:

  1. எங்க ஏரியா உள்ள வராதேன்னு போட்டுருக்கலாம்ல

    ReplyDelete
  2. ஏழு பக்கத்துல சிறுகதையா... யாரோ உங்களை நுழைய விடக்கூடாதுன்னு சதி பண்ணியிருக்காங்க உ.த!

    குறும்படப் போட்டியில் பரிசு பெற வாழ்த்துகள் (அப்புறம் மத்த போட்டிகளுக்கு அனுப்ப மாட்டீங்கல்ல) :) :) :)

    ReplyDelete
  3. jackeysekar made one for 1000 rs. can you try for a new one ?

    ReplyDelete
  4. /*சிறுகதைப் போட்டியாம்.. ஆனால் '7 பக்கந்தான்' அப்படீன்னு கண்டிசன் போட்டிருக்கிறது எனக்கு ஒத்து வரலை */

    இதை நீங்க சொல்லவே வேண்டாம் தல... அது ஏற்கனவே எங்களுக்கு தெரியும் புரியும்...

    நீங்க வேணா ஒரு எஸ்.எம்.எஸ். ட்ரை பண்ணுங்க... அவங்க அக்கவுன்ட்லே அது கதையா ஆகிரும்.

    ReplyDelete
  5. பதிவு சின்னதா இருக்கறதுல.. எனக்கு கொஞ்சம் வருத்தம்தான்.

    அது இல்லாம... தலைப்பை பார்த்ததும்... ஆஹா.. அடுத்த ஒருவாரம் ஜாலின்னு நினைச்சேன்.

    ஹும்ம்.......

    தீபாவளி வாழ்த்துகள்! :) :)

    ReplyDelete
  6. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

    புனிதப் போர் வெற்றி பெறுவதற்கும் வாழ்த்துகள் பாஸ்..

    ReplyDelete
  7. இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

    புனிதப் போர் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. ///shabi said...
    எங்க ஏரியா உள்ள வராதேன்னு போட்டுருக்கலாம்ல.///

    ரொம்ப ஓவரா பிலிம் காட்டக் கூடாது ஷபி..!

    கொஞ்சம் அடக்க வேணாமா? அதுனாலதான்..!!!

    ReplyDelete
  9. இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

    புனிதப் போர் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. [[[ஜ்யோவ்ராம் சுந்தர் said...
    ஏழு பக்கத்துல சிறுகதையா... யாரோ உங்களை நுழைய விடக்கூடாதுன்னு சதி பண்ணியிருக்காங்க உ.த!]]]

    உண்மைதான் ஜ்யோவ்.. யார் அந்த துரோகின்னு தெரியலை..! ஒருவேளை மன்னார்குடியில இருந்தெல்லாம் என் பிளாக்கை படிக்க ஆள் இருக்கோ.. என்னவோ?

    [[[குறும்படப் போட்டியில் பரிசு பெற வாழ்த்துகள் (அப்புறம் மத்த போட்டிகளுக்கு அனுப்ப மாட்டீங்கல்ல):):):)]]]

    ஏதாவது ஒரு போட்டில ஜெயிச்சிட்டா மனசு திருப்தியா இருந்திரலாம்னு பாக்குறேன்..!

    ReplyDelete
  11. [[[செந்தழல் ரவி said...
    jackeysekar made one for 1000 rs. can you try for a new one?]]]

    அவர் எடுத்தது கையடக்க வீடியோ கேமிரால..

    நான் எடுத்தது டிஜிகேம்.. அப்புறம் கல்யாண மண்டபம்.. ரெண்டு நாளா எடிட்டிங் பண்ணினது.. ஒளிப்பதிவாளர் காசு.. எல்லாம் மொத்தமா முப்பதாயிரம் ஆயிருச்சு..!

    ReplyDelete
  12. [[[நையாண்டி நைனா said...

    /*சிறுகதைப் போட்டியாம்.. ஆனால் '7 பக்கந்தான்' அப்படீன்னு கண்டிசன் போட்டிருக்கிறது எனக்கு ஒத்து வரலை */

    இதை நீங்க சொல்லவே வேண்டாம் தல... அது ஏற்கனவே எங்களுக்கு தெரியும் புரியும்...]]]

    ஓகே.. ஓகே.. புரிஞ்சா சரி தம்பீ..!

    [[[நீங்க வேணா ஒரு எஸ்.எம்.எஸ். ட்ரை பண்ணுங்க... அவங்க அக்கவுன்ட்லே அது கதையா ஆகிரும்.]]]

    அப்படீங்கிறே..!

    நக்கல்ல நீ எங்கயோ போயிட்டிருக்க தம்பீ..! உன் உடம்புக்கு இது நல்லதில்லை.. சொல்லி்ட்டேன்..!

    ReplyDelete
  13. [[[ஹாலிவுட் பாலா said...

    பதிவு சின்னதா இருக்கறதுல.. எனக்கு கொஞ்சம் வருத்தம்தான்.
    அது இல்லாம... தலைப்பை பார்த்ததும்... ஆஹா.. அடுத்த ஒரு வாரம் ஜாலின்னு நினைச்சேன்.
    ஹும்ம்.......
    தீபாவளி வாழ்த்துகள்! :) :)]]]

    ஆஹா.. என்னவொரு பாசம்..?

    ஹாலிவுட்ஜி.. உங்களை மனசுல வைச்சுக்குறேன். நேரம் வரும்போது பார்த்துக்குறேன்..!

    ReplyDelete
  14. [[[தீப்பெட்டி said...

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..
    புனிதப் போர் வெற்றி பெறுவதற்கும் வாழ்த்துகள் பாஸ்..]]]

    நன்றி தீப்பெட்டி..! நானும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

    ReplyDelete
  15. [[[இராகவன் நைஜிரியா said...

    இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

    புனிதப் போர் வெற்றி பெற வாழ்த்துகள்.]]]

    நைஜிரியா ஸார்..!

    உங்களோட கள்ளமில்லாத நல்ல மனசுக்கு என்னோட நன்றிகள் ஸார்..!

    புனிதப்போரை பார்த்தீங்களா இல்லையா..?

    ReplyDelete
  16. [[[T.V.Radhakrishnan said...

    வாழ்த்துகள்]]]

    உங்க ஆசீர்வாதத்துல மோதப் போறேன் ஸார்..!

    ஜெயிச்சுக் காட்டுறேன்..!

    ReplyDelete
  17. [[[சதீஷ் குமார் said...

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
    புனிதப் போர் வெற்றி பெற வாழ்த்துகள்.]]]

    பதில் வாழ்த்துக்கள் சதீஷ்..! நன்றிகளும்கூட..!

    ReplyDelete
  18. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    புனிதப் போர்

    ReplyDelete
  19. //நெஞ்சுல 'தில்' இருந்தா.. மனசுல 'மாஞ்சா' இருந்தா.. உடம்புல 'வலு' இருந்தா.. மைண்ட்ல 'தைரியமிருந்தா'//

    :) :) வெற்றி பெற வாழ்த்துகள் !

    ReplyDelete
  20. தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா.

    அதென்ன இப்படி தைரியம் இருந்தா போட்டிக்கு வாங்கனு சொல்லிட்டி இப்படி சிறுகதையிலிருந்து நழுவிட்டீங்க.

    குறும்படம் எடுக்கும் வசதியும், வாய்ப்பும் இல்லாததால் சிறுகதை எழுதி அனுப்பலாம் என இருக்கிறேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  21. ungaloda kurumpadatha inikku veetuku poi paakuren anna.. :)

    vetri pera vazthukkal :) thagavalkalukku nandri... :)

    ungalukku enadhu iniya deepavali thirunaal nalvazthukkal... :)

    ReplyDelete
  22. போட்டியில் பரிசு பெற வாழ்த்துகள் :-))

    ReplyDelete
  23. அண்ணே! புனிதப்போர்-னு பேரைப்பார்த்ததும் இதை ஈழப் போர் மாதிரி தீவிரவாதத்துல சேர்த்துட்டனுகளோ? உங்க பேரும் பதிவுலகத்துல உண்மைத்தமிழன்-னு இருக்கு...சூதானமா இருங்க அண்ணே....

    இம்முறை வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. [[[நேசமித்ரன் said...
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
    புனிதப் போர்]]]

    நன்றி நேசமித்ரன் ஸார்..!

    ReplyDelete
  25. [[[நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

    //நெஞ்சுல 'தில்' இருந்தா.. மனசுல 'மாஞ்சா' இருந்தா.. உடம்புல 'வலு' இருந்தா.. மைண்ட்ல 'தைரியமிருந்தா'//

    :):)வெற்றி பெற வாழ்த்துகள்!]]]

    ஊர் நெல்லை போலிருக்கு. அதான் கரெக்ட்டா அதை செலக்ட் பண்ணி போட்டிருக்கீக..! ஓகேதானா..?

    தீபாவளி வாழ்த்துக்கள் ஸார்..!

    ReplyDelete
  26. [[[Rads said...

    தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா.
    அதென்ன இப்படி தைரியம் இருந்தா போட்டிக்கு வாங்கனு சொல்லிட்டி இப்படி சிறுகதையிலிருந்து நழுவிட்டீங்க.]]]

    அதான் சிறுகதைப் போட்டில நான் இல்லைன்னு சொல்லிட்டனே..! ஏழு பக்கத்துல எல்லாம் சிறுகதை எழுத முடியுங்களா..?

    [[[குறும்படம் எடுக்கும் வசதியும், வாய்ப்பும் இல்லாததால் சிறுகதை எழுதி அனுப்பலாம் என இருக்கிறேன்.
    மிக்க நன்றி.]]]

    அனுப்புங்க.. அனுப்புங்க.. வெற்றி பெற வாழ்த்துகிறேன்..!

    ReplyDelete
  27. [[[kanagu said...

    ungaloda kurumpadatha inikku veetuku poi paakuren anna.. :)

    vetri pera vazthukkal :) thagavalkalukku nandri... :)

    ungalukku enadhu iniya deepavali thirunaal nalvazthukkal... :)]]]

    கனகு அவர்களே..

    உங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  28. [[[சிங்கக்குட்டி said...
    போட்டியில் பரிசு பெற வாழ்த்துகள் :-))]]]

    நன்றிகள் சிங்கக்குட்டி அவர்களே..! முதல்ல என் படத்தைப் பாருங்க.. அப்புறமா சொல்லுங்க..!

    ReplyDelete
  29. [[[ரோஸ்விக் said...
    அண்ணே! புனிதப்போர்-னு பேரைப் பார்த்ததும் இதை ஈழப் போர் மாதிரி தீவிரவாதத்துல சேர்த்துட்டனுகளோ? உங்க பேரும் பதிவுலகத்துல உண்மைத்தமிழன்-னு இருக்கு...சூதானமா இருங்க அண்ணே.... இம்முறை வெற்றிபெற வாழ்த்துக்கள்.]]]

    ஆஹா.. ரோஸ்விக்.. அப்படியொரு கோணமும் விமர்சனத்துல வந்தது..!

    உங்களை மாதிரி நண்பர்களெல்லாம் இருக்கும்போது எனக்கென்ன கவலை..?

    செத்துப் போனா மாலை போட வர மாட்டீங்களா..?

    ReplyDelete
  30. ஏம்ப்பா..

    யாராவது இன்னொரு ஆதரவு குத்து குத்துங்களேன்..

    இது தகவல் பலகையாச்சே.. தமிழ்மணத்துல இன்னிக்கு ராத்திரிவரைக்கும் நிக்க வேண்டாமா..?

    ReplyDelete
  31. இது தகவல் பலகையாச்சே.. தமிழ்மணத்துல இன்னிக்கு ராத்திரிவரைக்கும் நிக்க வேண்டாமா..?




    ///
    பரிசுப் போட்டி2 2009-1010 என்கிற தலைப்பில்..?

    ReplyDelete
  32. இடுகைத்தலைப்பு:
    தைரியம் இருந்தா போட்டிக்கு வாங்க பதிவர்களே..!

    உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!
    //

    இந்த ஒரு தடவை மட்டும் + ஒகே :)

    ReplyDelete
  33. //யாராவது இன்னொரு ஆதரவு குத்து குத்துங்களேன்..//
    குத்தியாச்சு !!! +1

    ReplyDelete
  34. //செத்துப் போனா மாலை போட வர மாட்டீங்களா..?//

    இது ஏன்?? :(((

    ReplyDelete
  35. போதும் போதும் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகையில் கொண்டுபோய் நிப்பாட்டாதீங்க :)

    அண்ணனுக்கு புடிக்காது :)

    ReplyDelete
  36. வாழ்த்துக்கள் !!!நான் இன்னும் உங்கள் குறும்படம் பார்க்கவில்லை :)))

    ReplyDelete
  37. ''நீங்க வேணா ஒரு எஸ்.எம்.எஸ். ட்ரை பண்ணுங்க... அவங்க அக்கவுன்ட்லே அது கதையா ஆகிரும்.
    ''
    நையாண்டி நைனாவின் இந்த பின்னூட்டத்தை இந்த மாதத்தின் சிறந்த பின்னூட்டமாக பரிந்துரைக்கிறேன்.

    உ.த வை கலாய்க்கற்துன்னா எல்லாருக்கும் அல்வா சாப்பிடுவது போல இருக்கு, ஜாக்கி சேகரைத் தவிர எல்லாரும் கலாய்க்கிறாங்க.. ஜாக்கி, நீயுன் உன் பங்குக்கு ஏதாவது சொல்லிட்டு போ...
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  38. பரிந்துரையில் வந்துவிட்டது !!!போதுமா !!

    ReplyDelete
  39. நைஜிரியா ஸார்..!

    உங்களோட கள்ளமில்லாத நல்ல மனசுக்கு என்னோட நன்றிகள் ஸார்..!

    புனிதப்போரை பார்த்தீங்களா இல்லையா..?
    //

    ஹய்யோ ஹய்யோ !!

    ReplyDelete
  40. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!
    தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  41. இணைப்பின் முந்தைய இடுகையின் காணொளி கண்டேன்:)))

    ReplyDelete
  42. தைரியமெல்லாம் நிறைய இருக்கு! ஆனாலும் போட்டி எல்லாம் வேணாம்!!
    தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  43. [[[மின்னுது மின்னல் said...
    இது தகவல் பலகையாச்சே.. தமிழ்மணத்துல இன்னிக்கு ராத்திரிவரைக்கும் நிக்க வேண்டாமா..?

    பரிசுப் போட்டி2 2009-1010 என்கிற தலைப்பில்..?]]]

    மாற்றிவிட்டேன் மின்னல்.. உதவிக்கு நன்றி..!

    ReplyDelete
  44. [[[மின்னுது மின்னல் said...

    இடுகைத்தலைப்பு:
    தைரியம் இருந்தா போட்டிக்கு வாங்க பதிவர்களே..!

    உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!//

    இந்த ஒரு தடவை மட்டும் + ஒகே :)]]]

    அடப்பாவி மின்னலு.. அவ்ளோ நல்லவனா நீயி..!

    ReplyDelete
  45. குறும்படம்னா நீங்க 300 நிமிஷம் எடுப்பீங்களே அதை எப்பிடி போட்டில சேத்துக்குறாங்க???

    :))

    ReplyDelete
  46. [[[gulf-tamilan said...
    //யாராவது இன்னொரு ஆதரவு குத்து குத்துங்களேன்..//

    குத்தியாச்சு !!! +1]]]

    நன்றி கல்ஃப் தமிழன் அவர்களே..!

    ReplyDelete
  47. [[[gulf-tamilan said...

    //செத்துப் போனா மாலை போட வர மாட்டீங்களா..?//

    இது ஏன்?? :(((]]]

    ச்சும்மா.. கேட்டு வைச்சுக்க வேண்டியதுதான்..! ஒரு பத்து மாலையாச்சும் விழுகும்யான்ற தெம்போட போய்ச் சேரலாம்ல.. அதுக்காகத்தான்..!

    ReplyDelete
  48. [[[மின்னுது மின்னல் said...

    போதும் போதும் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகையில் கொண்டுபோய் நிப்பாட்டாதீங்க :)

    அண்ணனுக்கு புடிக்காது :)]]]

    யார் சொன்னது.. அப்படி போய் நிக்குறதுதான் என் லட்சியம்..

    தம்பீ மின்னலு இப்படியெல்லாமா கவுக்குறது..

    ReplyDelete
  49. [[[gulf-tamilan said...
    வாழ்த்துக்கள!!! நான் இன்னும் உங்கள் குறும்படம் பார்க்கவில்லை :)))]]]

    தப்பிச்சீங்க..!

    ReplyDelete
  50. [[[sriram said...
    'நீங்க வேணா ஒரு எஸ்.எம்.எஸ். ட்ரை பண்ணுங்க... அவங்க அக்கவுன்ட்லே அது கதையா ஆகிரும். ''

    நையாண்டி நைனாவின் இந்த பின்னூட்டத்தை இந்த மாதத்தின் சிறந்த பின்னூட்டமாக பரிந்துரைக்கிறேன்.]]]

    எனக்கும் பிடிக்கிறது..!

    [[[உ.த வை கலாய்க்கற்துன்னா எல்லாருக்கும் அல்வா சாப்பிடுவது போல இருக்கு, ஜாக்கி சேகரைத் தவிர எல்லாரும் கலாய்க்கிறாங்க.. ஜாக்கி, நீயுன் உன் பங்குக்கு ஏதாவது சொல்லிட்டு போ...
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்]]]

    யார் சொன்னது ஜாக்கி ரொம்ப நல்லவன்னு..!

    அடப்பாவிகளா உலகமே இப்படித்தானா..

    ஜாக்கி உன்னையும் நல்லவன்னு சொல்ல ஒரு ஆள் இருக்குப்பா..

    ReplyDelete
  51. [[[gulf-tamilan said...
    பரிந்துரையில் வந்துவிட்டது !!! போதுமா!!]]]

    மிக்க நன்றி..!

    ReplyDelete
  52. [[[மின்னுது மின்னல் said...

    நைஜிரியா ஸார்..!

    உங்களோட கள்ளமில்லாத நல்ல மனசுக்கு என்னோட நன்றிகள் ஸார்..!

    புனிதப்போரை பார்த்தீங்களா இல்லையா..?//

    ஹய்யோ ஹய்யோ !!]]]


    என்ன சிரிப்பு.. ஏதோ அவர் நல்ல நேரம் தப்பிச்சிட்டாரு.. ஆனாலும் நாங்க விட மாட்டோம்ல.. இப்ப பாரு.. மாட்டிக்கிட்டாரு..!

    ReplyDelete
  53. [[[ஷங்கி said...
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்! தீபாவளி நல்வாழ்த்துகள்]]]

    மிக்க நன்றி..

    ReplyDelete
  54. [[[ராஜ நடராஜன் said...
    இணைப்பின் முந்தைய இடுகையின் காணொளி கண்டேன்:)))]]]

    உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே..!

    வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  55. [[[கிருஷ்ணமூர்த்தி said...
    தைரியமெல்லாம் நிறைய இருக்கு! ஆனாலும் போட்டி எல்லாம் வேணாம்!!
    தீபாவளி நல்வாழ்த்துக்கள்!]]]

    போட்டின்னு வந்தால்தான் சுவாரஸ்யமா இருக்கும் ஸார்..!

    ReplyDelete
  56. [[[மங்களூர் சிவா said...
    குறும்படம்னா நீங்க 300 நிமிஷம் எடுப்பீங்களே அதை எப்பிடி போட்டில சேத்துக்குறாங்க???
    :))]]]

    இது வெறும் 13 நிமிடங்கள்தான் சிவா..!

    ReplyDelete
  57. வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா....

    ReplyDelete
  58. சரவணா! ‘புனிதப்போர்’ என்றுமே தோற்றதில்லை! உன் குறும்படம் வெற்றிபெற வாழ்த்துகள்!

    எல்லா நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

    நினைத்ததெல்லாம் நிறைவேறட்டும்!

    அன்புடன்,
    பாரதி மணி

    ReplyDelete
  59. // ஜ்யோவ்ராம் சுந்தர் said...

    ஏழு பக்கத்துல சிறுகதையா... யாரோ உங்களை நுழைய விடக்கூடாதுன்னு சதி பண்ணியிருக்காங்க உ.த!

    //

    LOL :))

    வாழ்த்துக்கள் உ.த. அண்ணே.. அமீரக சார்பா சிலர் சேர்ந்து ஒரு குறும்படம் எடுக்கலாம்ன்னு பேசிக்கிட்டு இருக்கோம். விரைவில் அறிவிப்புடன் படத்தை வெளியிடறோம் :-)))

    ReplyDelete
  60. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உண்மைத்தமிழன் அண்ணா...

    ReplyDelete
  61. யோவ் பெரிசேய்,

    உம்மோட கொலவெறிக்கு அளவே இல்லியா? 30,000 ரூபாயா? ஏன் இப்படி பணத்த வேஸ்ட் பண்றீங்க?

    ஒருவருசத்துக்கு உக்காந்து சாப்டிருக்கலாமே?

    ReplyDelete
  62. Advance congratulation true tamilan.

    Try until you get success, please just avoid whoever given negative comments here. Our people never accept till we get achieve some goal.

    Again all the best, expect big parties once you win hehe...

    ReplyDelete
  63. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  64. [[[அது சரி said...
    வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா....]]]

    நன்றிகள் தம்பீ..!

    ReplyDelete
  65. [[[பாரதி மணி said...

    சரவணா! ‘புனிதப்போர்’ என்றுமே தோற்றதில்லை! உன் குறும்படம் வெற்றிபெற வாழ்த்துகள்!

    எல்லா நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

    நினைத்ததெல்லாம் நிறைவேறட்டும்!

    அன்புடன்,
    பாரதி மணி]]]

    தங்களது ஆசீர்வாதங்களுக்கு நன்றிகள் ஐயா..!

    ReplyDelete
  66. [[[சென்ஷி said...

    //ஜ்யோவ்ராம் சுந்தர் said...
    ஏழு பக்கத்துல சிறுகதையா... யாரோ உங்களை நுழைய விடக்கூடாதுன்னு சதி பண்ணியிருக்காங்க உ.த!//

    LOL :))
    வாழ்த்துக்கள் உ.த. அண்ணே.. அமீரக சார்பா சிலர் சேர்ந்து ஒரு குறும்படம் எடுக்கலாம்ன்னு பேசிக்கிட்டு இருக்கோம். விரைவில் அறிவிப்புடன் படத்தை வெளியிடறோம் :-)))]]]

    ஏம்ப்பா இதுக்காச்சும் டைரக்டர் போஸ்ட் எனக்குக் கொடுக்கக் கூடாதா..

    ReplyDelete
  67. [[[செ.சரவணக்குமார் said...
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உண்மைத்தமிழன் அண்ணா...]]]

    நன்றி சரவணக்குமார் தம்பீ..! நானும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

    ReplyDelete
  68. [[[Pot"tea" kadai said...

    யோவ் பெரிசேய், உம்மோட கொலவெறிக்கு அளவே இல்லியா? 30,000 ரூபாயா? ஏன் இப்படி பணத்த வேஸ்ட் பண்றீங்க? ஒரு வருசத்துக்கு உக்காந்து சாப்டிருக்கலாமே?]]]

    சாப்பிட்டிருக்கலாம்தான். ஆனா ஒரு குறும்படத்தை எடுத்திருக்கோமேன்னு சொல்லும்போது எம்புட்டு நல்லா இருக்கு தெரியுமா..

    ReplyDelete
  69. [[[Mãstän ::.. said...
    Advance congratulation true tamilan.
    Try until you get success, please just avoid whoever given negative comments here. Our people never accept till we get achieve some goal.
    Again all the best, expect big parties once you win hehe...]]]

    ஆஹா.. மஸ்தான்ஜி.. உங்களுடைய ஆசீர்வாதம் என்னை நெகிழ வைக்கிறது..

    நன்றி.. நன்றி.. நன்றி..!

    ReplyDelete
  70. [[[benza said...
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்]]]

    மிக்க நன்றிகள் ஸார்..!

    நானும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

    ReplyDelete
  71. எனது மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்,சரவணன்.

    ReplyDelete
  72. //ஆனா ஒரு குறும்படத்தை எடுத்திருக்கோமேன்னு சொல்லும்போது எம்புட்டு நல்லா இருக்கு தெரியுமா//

    உமக்கு மனசாட்சியே இல்லியா? அது வெறும் குறும்படமா? நெடுங்குறும்படம்.

    ReplyDelete
  73. புனிதப் போர் வெற்றி பெற வாழ்த்துகள்.......

    ReplyDelete
  74. [[[ஷண்முகப்ரியன் said...
    எனது மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள், சரவணன்.]]]

    நன்றிகள் ஐயா.!

    ReplyDelete
  75. [[[Pot"tea" kadai said...
    //ஆனா ஒரு குறும்படத்தை எடுத்திருக்கோமேன்னு சொல்லும்போது எம்புட்டு நல்லா இருக்கு தெரியுமா//

    உமக்கு மனசாட்சியே இல்லியா? அது வெறும் குறும் படமா? நெடுங் குறும்படம்.]]]

    பொட்டீ தம்பி.!

    13 நிமிஷமெல்லாம் ஒரு விஷயமா? ஏம்ப்பா ஏறுக்கு மாறா பேசுறே..?

    ReplyDelete
  76. [[[பித்தன் said...
    புனிதப் போர் வெற்றி பெற வாழ்த்துகள்.......]]

    நன்றி பித்தன் ஸார்..!

    ReplyDelete
  77. எனது மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  78. 7 பக்க சிறுகதையா ... ரொம்ப யோசிக்க வேண்டியதா இருக்கே !!!

    அட ஆமால்ல ... நீங்க பக்கம்பக்கமா வச்சிருப்பீங்கள்ல ... எனக்கு இமெயில் பண்ணீருங்க சரவணன் ..சரியா

    உங்க குறும்படத்த கொஞ்சம் காட்டக்கூடாதா ...

    அப்புறம் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  79. [[[butterfly Surya said...
    எனது மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்]]]

    சூர்யாஜி..

    நல்லா கொண்டாடியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்..!

    ReplyDelete
  80. [[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    7 பக்க சிறுகதையா ... ரொம்ப யோசிக்க வேண்டியதா இருக்கே !!!
    அட ஆமால்ல ... நீங்க பக்கம்பக்கமா வச்சிருப்பீங்கள்ல ... எனக்கு இமெயில் பண்ணீருங்க சரவணன். சரியா?]]]

    ரொம்பச் சரி..

    [[உங்க குறும்படத்த கொஞ்சம் காட்டக்கூடாதா...]]]

    இதுலயே லின்க் கொடுத்திருக்கேன். சரியா பாருங்க.

    [[[அப்புறம் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் .]]]

    வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் ஸார்.!

    ReplyDelete
  81. வெற்றி பெற வாழ்த்துக்கள். குறும் படம் இன்னும் பார்க்கவில்லை.

    ReplyDelete
  82. "இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

    புனிதப் போர் வெற்றி பெற வாழ்த்துகள்."


    புனிதப் போர் I

    புனிதப் போர் II

    புனிதப் போர் III ..... XXXVII - 2020.

    ReplyDelete
  83. /////இருந்தாலும், "இவனெல்லாம் ஒரு படம் எடுத்திட்டானே.. அதுலேயும் முப்பதாயிரம் ரூபா செலவுல.. டைரக்டர்ன்னு வேற பேர் போட்டுக்கிட்டானானே"ன்ற வயித்தெரிச்சல்ல நிறைய பேர் 'பொங்கித் தீர்த்த கதை'யையெல்லாம் அப்பவே நான் என் அப்பன் முருகன்கிட்ட 'பாஸ்' பண்ணிட்டு 'லூஸ்'ல விட்டுட்டேன்.
    ///////

    ;)

    என் வயித்தெரிச்சல் நினைவுக்கு வந்தது. இது காண்டால் வந்த வயித்தெரிச்சல் அல்ல. கண்ட காட்சியால் வந்த கன்னா பின்னா எரிச்சல். அண்ணாச்சி, பு.போக்கு பதிலா, புச்சா எடுத்து அனுப்புங்களேன்?
    http://surveysan.blogspot.com/2008/07/blog-post_21.html

    ReplyDelete
  84. [[[ஸ்ரீராம். said...
    வெற்றி பெற வாழ்த்துக்கள். குறும் படம் இன்னும் பார்க்கவில்லை.]]]

    ஐயோ.. சீக்கிரம் பார்த்திருங்களேன். லின்க் இதே போஸ்ட்ல கொடுத்திருக்கேன்.. நல்லா பாருங்கண்ணே..!

    ReplyDelete
  85. [[[♠புதுவை சிவா♠ said...

    "இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

    புனிதப் போர் வெற்றி பெற வாழ்த்துகள்."


    புனிதப் போர் I

    புனிதப் போர் II

    புனிதப் போர் III ..... XXXVII - 2020.]]]

    புதுவை சிவா..

    நீங்கள் பார்த்துட்டீங்களா..?

    புனிதப்போர் எப்படி?

    ReplyDelete
  86. [[[SurveySan said...
    //இருந்தாலும், "இவனெல்லாம் ஒரு படம் எடுத்திட்டானே.. அதுலேயும் முப்பதாயிரம் ரூபா செலவுல.. டைரக்டர்ன்னு வேற பேர் போட்டுக்கிட்டானானே"ன்ற வயித்தெரிச்சல்ல நிறைய பேர் 'பொங்கித் தீர்த்த கதை'யையெல்லாம் அப்பவே நான் என் அப்பன் முருகன்கிட்ட 'பாஸ்' பண்ணிட்டு 'லூஸ்'ல விட்டுட்டேன்.//

    ;)
    என் வயித்தெரிச்சல் நினைவுக்கு வந்தது. இது காண்டால் வந்த வயித்தெரிச்சல் அல்ல. கண்ட காட்சியால் வந்த கன்னா பின்னா எரிச்சல். அண்ணாச்சி, பு.போக்கு பதிலா, புச்சா எடுத்து அனுப்புங்களேன்?
    http://surveysan.blogspot.com/2008/07/blog-post_21.html]]]

    சர்வேசன..

    உம்ம புலம்பலையும் முருகன்கிட்ட தள்ளி விட்டுட்டேன்.. அவனாச்சு நீங்களாச்சு..?

    புதுசு எடுக்க ரெடியாத்தான் இருக்கேன். ஒரு முப்பதாயிரத்தை அனுப்ப முடியுமா..?

    ReplyDelete
  87. \\நெஞ்சுல 'தில்' இருந்தா.. மனசுல 'மாஞ்சா' இருந்தா.. உடம்புல 'வலு' இருந்தா.. மைண்ட்ல 'தைரியமிருந்தா'.. //
    எப்படி தல இந்த மாதுரி எல்லாம் எதுகை மோனைல எல்லாம் எழுதி கலக்குறிங்க..

    இதுவரைக்கும் எந்த சிறு கதை போட்டியிலும் கலந்து கொண்டது இல்லை. இதில் கலந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். தகவல்லுக்கு நன்றி .

    ReplyDelete
  88. [[[Romeoboy said...

    \\நெஞ்சுல 'தில்' இருந்தா.. மனசுல 'மாஞ்சா' இருந்தா.. உடம்புல 'வலு' இருந்தா.. மைண்ட்ல 'தைரியமிருந்தா'.. //

    எப்படி தல இந்த மாதுரி எல்லாம் எதுகை மோனைல எல்லாம் எழுதி கலக்குறிங்க..?///

    "மாதுரி"ன்னு எழுதியிருக்கீங்களே.. இதுல உள்குத்து ஏதும் இல்லையே..!?

    [[[இதுவரைக்கும் எந்த சிறுகதை போட்டியிலும் கலந்து கொண்டது இல்லை. இதில் கலந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். தகவலுக்கு நன்றி ///

    அனுப்புங்க.. அனுப்புங்க.. வெற்றி பெற வாழ்த்துகிறேன்..!

    ReplyDelete
  89. கிழக்குவாசல் பத்திரிகையில் பார்த்தேன் இதை...... நன்றி இங்கே வெளியிட்டதுக்கு.

    ReplyDelete
  90. [[[ஷைலஜா said...
    கிழக்கு வாசல் பத்திரிகையில் பார்த்தேன் இதை...... நன்றி இங்கே வெளியிட்டதுக்கு.]]]

    அப்ப நீங்களும் போட்டியில இருக்கீங்களா..?

    கதைன்னா ஓகே.. வாழ்த்துறேன்..

    குறும்படம்னு வந்து கிராஸ் பண்ணாதீங்க.. பிச்சுப்பிடுவேன் பிச்சு.. அது எனக்குத்தான்..!

    ReplyDelete