Pages

Friday, October 02, 2009

சில பதிவர்கள் எழுதுவதெல்லாம் கருமமா..? மதிப்பீடு செய்யும் தகுதி யாருக்கு..?

02-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அருமைத் தம்பி லக்கிலுக் என்னும் யுவகிருஷ்ணாவின் இந்தப் பதிவைப் படித்தேன்.

அந்தப் பதிவின் கடைசியில் இப்படி எழுதியிருக்கிறார்.

"தமிழ் பதிவுகளை எல்லாம் அவ்வளவாக பார்க்க நேரம் கிடைப்பதில்லை. எப்போதாவது எட்டிப் பார்த்தாலும் அரைகுறைகள் அரசியல் பேசுவதை கண்டால் அஜீரணமாக இருக்கிறது. கவிஞர்கள் கவிதையை மட்டுமாவது உருப்படியாக எழுதி தொலைக்கலாம். அரசியல் எழுதுபவர்கள் நாராசமாய் கவிதை எழுத முற்படாமல் இருக்கலாம். இரண்டுமே கண்ணறாவியாக இருக்கிறது.

சில பேர் தினவும் பதிவு போட்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால் உம்மாச்சி கண்ணை குத்திவிடுமோ என்ற பயத்தில் எந்த கருமத்தையாவது சக்கையாக எழுதி உயிரை வாங்குகிறார்கள். ம்ஹூம். இது ஆவறதில்லே!.."

இப்படி எழுதி தனது ஆற்றாமையைப் போக்கியிருக்கிறார் தம்பி யுவகிருஷ்ணா.

"அரைகுறைகள் அரசியல் பேசுவதைக் கண்டால் அஜீரணமாக இருக்கிறது" என்கிறார் தம்பி யுவகிருஷ்ணா. அவர் யாரை "அரைகுறைகள்" என்கிறார் என்று தெரியவில்லை. வலைப்பதிவர்களில் சிலர் 'அரைகுறைகள்' என்றால் "இவர் எப்போதும் நிறைகுடமாகத் தளும்புகிறவரா?" என்ற கேள்வி எழுகிறது. இவருடைய மதிப்பீட்டில் யார் அந்த அரைகுறைகள் என்பதையும் அறிய ஆவலாக உள்ளேன்.

ஏனெனில், இவரும் இதேபோல் அரசியல் கட்டுரைகள் எழுதியவர்தான் என்பது நமது அன்புத் தம்பிக்கு இப்போது வசதியாக மறந்துவிட்டது போலும்.

வலைப்பதிவர்கள் தங்களுக்கு எது வருகிறதோ, எவ்வளவு வருகிறதோ அவ்வளவுக்கு எழுதுகிறார்கள். ஒருவர் ஸ்டைல் ஒருவருக்கு வருவதில்லை. இதில் எதற்கு இந்த 'அரைகுறைகள்' என்ற பட்டப் பெயர். ஒருவேளை தான் மட்டுமே நிறைவான அரசியல் பேசும் வலைப்பதிவர் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ? இந்த மதிப்பீட்டைத் தருவதற்கு யாருக்காவது அத்தாட்சி கொடுத்திருக்கிறார்களா என்ன?

"கவிஞர்கள் கவிதையை மட்டுமாவது உருப்படியாக எழுதித் தொலைக்கலாம்" என்று நமது மாபெரும் கவிஞர் யுவகிருஷ்ணா கவிஞர்களுக்கு அறிவுரைச் சொல்லித் தொலைக்கிறார். வலையுலக் கவிஞர்களெல்லாம் தயவு செய்து கேட்டுத் தொலையுங்கள். இல்லாவிடில் தம்பி உங்களைத் தொலைத்துவிடுவார். அவருடைய அங்கீகாரத்தைப் பெறாமல் யாரும் கவிதை எழுதித் தொலைத்து, அவரை இன்னலுக்கு ஆளாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

"அரசியல் எழுதுபவர்கள் நாராசமாய் கவிதை எழுத முற்படாமல் இருக்கலாம். இரண்டுமே கண்ணறாவியாக இருக்கிறது" என்று கூச்சப்படாமல் தனது மதிப்பெண்ணை வழங்கியிருக்கிறார்.

இதன்படி, வலையுலகத்தில் இனிமேல் கவிஞர்கள் அரசியல் எழுத வேணடும் என்றால் தம்பியிடம் ஒப்புதல் பெற்று, அவரிடம் படைப்புகளைக் காட்டி விமர்சனங்களைப் பெற்று, அதன் பின் திருத்தங்கள் செய்து கொண்டு கடைசியாக எழுத முன் வரும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புரிந்து கொள்ளுங்கள்.

"சில பேர் தினவும் பதிவு போட்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால் 'உம்மாச்சி' கண்ணை குத்திவிடுமோ என்ற பயத்தில் எந்த கருமத்தையாவது சக்கையாக எழுதி உயிரை வாங்குகிறார்கள். ம்ஹூம். இது ஆவறதில்லே!" - முத்தாய்ப்பாக இப்படிச் சொல்லி தனது ஆற்றாமையை முடித்துக் கொண்டுள்ளார் தம்பி..

'தன்னைத் தவிர மற்றவர்கள் எழுதுவதெல்லாம் கருமாந்திரம்' என்று சொல்வதற்கெல்லாம் ஒரு தகரியம் வேண்டும். அது வலையுலகத்தில் இந்தத் தம்பிக்கு மட்டுமே உண்டு என்பது எல்லாருக்குமே தெரியும்.. ஆனாலும் இப்படியா தனது பொச்செரிச்சலைக் காட்டுவது.

இந்த அளவுக்குத் தைரியமாக தான் யார் என்பதை வெளிக்காட்டிய அவரை நாம் பாராட்டத்தான் வேண்டும். அவருடைய அறிவுரையும், மதிப்பீடுகளையும் நம்பியே வலையுலகம் இருந்து தொலைத்து வருவதால், தயவு செய்து அனைவரும் தம்பியின் விருப்பத்திற்கேற்ப மாறிவிடுங்கள். இல்லையேல் உங்களுக்கு அவருடைய மதிப்பெண்கள் கிடைக்காமல் போய்விடும்.

"இதில் சில பேர் தினமும் பதிவு போட்டே ஆக வேண்டும்" என்கிற வார்த்தையில் இருக்கிற அரசியல் மிக பிரசித்தமானது.

நான் வலையுலகத்திற்குள் நுழைந்த காலத்தில் இந்த அருமைத் தம்பி லக்கிலுக் என்னும் யுவகிருஷ்ணாவும் இதே போல் ஒரு நாளைக்கு மூன்று, நான்கு பதிவுகளைப் போட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்.

அதில் மூன்றைத்தான் நேற்றைக்கு ஒரே நாளில் மறுபடியும் மீள்பிரசுரம் செய்திருக்கிறார் 'டமாரு கொமாரு' என்று.. இது எப்படி இருக்கு..?

அப்போதெல்லாம் "ஏம்ப்பா வேற வேலை வெட்டியே இல்லையா..? இப்படி ஒரு நாளைக்கு மூணுன்னா எப்படிப்பா..?" என்று கேட்டதற்கு, "சும்மா இருண்ணே.. வலையுலகத்திற்கான அலெக்ஸா ரேக்கிங்ல முதலிடத்தைப் பிடிக்கணும். அப்புறம் என் பிளாக்கை டெய்லி ஆயிரம் பேர் வந்து படிக்கிறாங்க. இது ரெண்டாயிரமா மாறணும்.. அதுதான் எனது லட்சியம்.." என்றார். பரவாயில்லை.. தம்பி தெளிவாத்தான் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

ஏன் இன்றைக்கு இதேபோல் நினைத்து உழைக்கக் கூடிய வலைப்பதிவர்கள் இருக்கக் கூடாதா என்ன? நேரம் இருக்கும் வலைப்பதிவர்கள் இப்போது தொடர்ச்சியாக எழுதுவார்கள். என் அப்பன் முருகனின் விளையாட்டில் ஒரு கட்டத்தில் எழுத முடியாமல் போகும் சூழல் வரும்போது நிச்சயம் எழுத மாட்டார்கள்.(சமீபத்திய உதாரணம் சக வலைப்பதிவர் திரு.முரளிகண்ணன்) அது அனைவரின் வாழ்க்கையிலும் நிச்சயம் நடந்தே தீரும்.

நான்கூட இடையில் நான்கு மாதங்கள் பதிவு எழுதாமல் நிறுத்தியிருந்தேன். இப்போது எனக்கு நேரம் கிடைக்கிறது எழுதுகிறேன். நேரமில்லையெனில் எழுதமாட்டேன். பொழைப்பை பார்க்க போய்விடுவேன். எப்போது வாய்ப்பு இருக்கிறதோ அப்போது எழுதுவதில் என்ன தவறு..?

நேரம் வாய்க்கும்போதெல்லாம் எதையாவது எழுதுங்கள் என்று சொல்லித்தானே அவரவர்க்கு வலைப்பதிவு.. வலையுலக் கூட்டமே அதற்குத்தானே.. எழுத, எழுதத்தானே எழுத்து வரும்.. பதிவர்கள் எழுதுவதையெல்லாம் 'கருமம்', 'குப்பை' என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு, இங்கு யாருடைய எழுத்தும் சோரம் போகவில்லை. அவரவர் பாணி அவரவர்க்கு.. இதில் எதற்கு இந்தத் தம்பிக்கு இவ்வளவு கோபம் என்று தெரியவில்லை..

பதிவர்களின் கருத்து பிடிக்காவிட்டால் படித்துவிட்டு பேசாமல் போய்விடலாம். இதைத்தான் கிட்டத்தட்ட அனைத்துப் பதிவர்களும் கடைப்பிடிக்கிறார்கள். இருக்கவே இருக்கிறது தமிழ்மணத்தின் கருவிப்பட்டை. பிடித்தால் பிடிக்கிறது என்று குத்தலாம்.. இல்லாவிடில் பிடிக்கவில்லை என்று குத்தலாம். இதுவும் வேண்டாமெனில் மூடிவிட்டுப் போய்விடலாம்.

அதைவிட்டுவிட்டு, சக வலைப்பதிவர்களின் எழுத்துக்களையெல்லாம் 'குப்பை', 'கருமம்' என்று சொல்வதற்கெல்லாம் யாருக்கு என்ன தகுதி இருக்கிறது..?

ரொம்ப ரொம்பத் தவறாக எழுதியிருக்கிறார். மிகவும் வருத்தமடைகிறேன்..!

158 comments:

  1. //பதிவர்களின் கருத்து பிடிக்காவிட்டால் படித்துவிட்டு பேசாமல் போய்விடலாம். இதைத்தான் கிட்டத்தட்ட அனைத்துப் பதிவர்களும் கடைப்பிடிக்கிறார்கள்.
    //

    இது தான் நல்ல பிள்ளைக்கு அழகு

    ReplyDelete
  2. உண்மைத் தமிழன் அண்ணே!

    முழுவதுமாக உடன் படுகிறேன்.

    சமீப காலத்தில் புத்தகங்கள் எழுதியது ,சாரு நெருக்கம் இவையெல்லாம் லக்கி லுக்-கிற்கு ஒரு சுய செருக்கை ஏற்படுத்தியிருக்கிறது .

    ஆனால் இதில் நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்?

    ReplyDelete
  3. சிவா..

    உங்கள் பின்னூட்டத்தின் கடுமையால் அதை அனுமதிக்க முடியவில்லை.

    இவ்வளவு கோபம் வேண்டாம்..!

    ReplyDelete
  4. தூயாவை வழிமொழிகின்றேன்.

    ஒரு சின்ன சந்தேகம் அரசியல் எழுதுவதற்கென பிரத்தியேகமாக எதாவது படித்திருக்கவேண்டுமா? ஏனெனில் சில அரசியல்வாதிகள் படிப்புவாசனையே இல்லாதவர்கள்.

    ReplyDelete
  5. ///
    பதிவர்களின் கருத்து பிடிக்காவிட்டால் படித்துவிட்டு பேசாமல் போய்விடலாம். இதைத்தான் கிட்டத்தட்ட அனைத்துப் பதிவர்களும் கடைப்பிடிக்கிறார்கள். இருக்கவே இருக்கிறது தமிழ்மணத்தின் கருவிப்பட்டை. பிடித்தால் பிடிக்கிறது என்று குத்தலாம்.. இல்லாவிடில் பிடிக்கவில்லை என்று குத்தலாம். இதுவும் வேண்டாமெனில் மூடிவிட்டுப் போய்விடலாம்.

    ///

    சம்பந்தப்பட்ட இரண்டு ஆளுமைகளுக்கும் சேர்த்து வழிமொழிகிறேன்...!!!!

    நானும் நேற்று கருவிப்பட்டை பிரச்சினையால் ஒரே பதிவை மூன்று முறை வெளியிட்டேன் என்று கூச்சத்தோடு சொல்லிகொள்கிறேன்.

    ReplyDelete
  6. ”கோணவாயன் கொட்டாவி விட்டது” மாதிரி இருக்கு லக்கியோட பேச்சு

    ReplyDelete
  7. யுவாவின் கருத்து ஒரு பொதுஜனக்கருத்தாகக் கொள்ளலாம். அவ்ரின் கருத்தென்றாலும் அதற்கு அவருக்கு உரிமையுண்டு.

    பொதுக்கருத்தாகக்கொள்ளின், சரியே எனத்தோன்றுகிறது. Seeing is believing என்பார்கள் ஆங்கிலத்தில். அதை Reading is believing என்று மாததலாம்.

    நான் தமிழ்மணம் தினமும் திறந்து பார்க்கிறேன். யுவாவின் கருத்து சரியெனத் தோன்றுகிறது.

    பலர் கவிதையென்ற பெயரின் கக்குகிறார்கள் எதையாவது. திரைப்பட விமர்சனம் என்பதில் ஒரு தரமில்லை. எல்லாம் emotional outpourings.

    ஆனாலும், தனிநபர் வலைப்திவுகள் தனிந்பருக்காக்வே. அவர்கள் எதையும் எழுத், அவர்கள் சேர்த்துவைத்த கூட்டம் படித்துப்பின்னூட்டங்கள் தவறாகமல் போட, அவர்கள் தனிராச்சியமே நடாத்துகின்றனர். இதை யாரும் தடுக்கமுடியாது.

    சந்தை என்றால் போலிச் சரக்குகள் இல்லாமல் இருக்கா.

    விரும்பினால் படிக்கலாம். இல்லையேல், தடுக்கலாம் நமக்கு நாமே.

    யுவாவின் கருத்து சரி. போலிச்சரக்குகளை வாங்கி ஏமாறாதீர்கள் என்று எச்சரிக்கை விடுவதைப்போல்!

    ReplyDelete
  8. எனக்கும் வருத்தம் தான்.

    க்ருமாந்திரங்களை படிப்பதை விட நேரத்தை குடும்பத்துடன் செல்விடலாம் என்று சொன்னேன்.

    உங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.??

    உடல் நலத்தை பாதுகாக்கவும்.

    சீக்கிரம் குடும்பஸ்தானகவும்.

    ReplyDelete
  9. மணவறையில் மாப்பிள்ளையாகவும்
    பிணவறையில் சவமாகவும்
    தான் மட்டுமே மாலையுடன் இருக்க வேண்டும் என்ற கொள்கை நண்பருக்கு இருக்கிறது...யோக்கியன் குறி வைத்தது என்னைத்தான்..அதனால் மற்ற பதிவர்கள் குழம்ப வேண்டாம்.முருகன் மேல் பாரத்தை போட்டு ஒதுங்க நான் சரவணன் இல்லை.சூரசம்ஹாரம் நடத்த தயார் என்பதை யோக்கியனுக்கும் ஏழே முக்கால் லட்சம் பேருக்கும் தண்டோரா போட்டு தெரிவித்து கொள்கிறென்

    ReplyDelete
  10. //சமீபத்திய உதாரணம் சக வலைப்பதிவர் திரு.முரளிகண்ணன்//
    என்னவாச்சு அவருக்கு??

    ReplyDelete
  11. மிகவும் வருத்தமடைகிறேன்..!

    முன்னால் நண்பர் என்பதாலா!!?

    ReplyDelete
  12. பிபி ஏறிகிட்டே போகுதுண்ணே கொஞ்சம் குறைக்க வழி பாருங்க..!!!


    ஆ.விகடனில் கூடதான் 50 பக்கம் விளம்பரம் இருக்கு. அதுக்காக விளம்பரத்தை யாராவது படிப்பாங்களா..?

    அதுக்காக கருமம்னு வாங்காதவங்க இருக்காங்களா??

    எல்லா இடத்திலையும் கருமங்களும் குப்பைகளும் நிறைந்தது தான் இந்த உலக வாழ்க்கை நமக்கு தேவையானதை எடுத்து கொண்டு முன்னேறிகிட்டே இருக்கனும்.

    அண்ணபறவை போல் வாழ பழகுங்கள்..!

    ReplyDelete
  13. /எனக்கும் வருத்தம் தான்.

    க்ருமாந்திரங்களை படிப்பதை விட நேரத்தை குடும்பத்துடன் செல்விடலாம் என்று சொன்னேன்.

    உங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.??//

    உன்னை யாருய்யா அந்த கருமத்தை படிக்க சொன்னது?

    ReplyDelete
  14. //பிபி ஏறிகிட்டே போகுதுண்ணே கொஞ்சம் குறைக்க வழி பாருங்க..!!!


    ஆ.விகடனில் கூடதான் 50 பக்கம் விளம்பரம் இருக்கு. அதுக்காக விளம்பரத்தை யாராவது படிப்பாங்களா..?

    அதுக்காக கருமம்னு வாங்காதவங்க இருக்காங்களா??

    எல்லா இடத்திலையும் கருமங்களும் குப்பைகளும் நிறைந்தது தான் இந்த உலக வாழ்க்கை நமக்கு தேவையானதை எடுத்து கொண்டு முன்னேறிகிட்டே இருக்கனும்.

    அண்ணபறவை போல் வாழ பழகுங்கள்..!
    //

    ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம்!

    அடுத்த லெவல்ல இருக்குற பெரிய பெரிய "அரசியல் ஞானம் மிக்க எழுத்தாளர்கள்/கவிஞர்கள்" கிட்டே போயி காட்டினா நம்ம எழுத்தை கருமம்னுதான் சொல்லுவாங்க! அதுக்காக நாம எழுதுறதை நிறுத்திட முடியுமா என்ன? அல்லது உங்களை மாதிரி டென்ஷனோட புலம்பத்தான் முடியுமா என்ன?

    எழுதுவதற்குன்னுன்னு பொதுவுல வெச்சாச்சு! பிடிச்சவன் பாராட்டுவான்! பிடிக்காதவன் திட்டத்தான் செய்வான்!

    அப்படித் துப்பிட்டு கெளம்பப் பாருன்னு சொல்லிட்டு நான அடுத்த மொக்கையைப் போட வேண்டியதுதான்!

    ஆல் இன் த கேம்!

    நாம யாரையும் என் பதிவை/கவிதையை படிச்சே ஆகணும்னு கட்டாயப் படுத்தி இழுத்துட்டு வரலை! தமிழ்மணத்துலெ லிஸ்ட் ஆச்சுன்னா எல்லாத்தையும் படிச்சே ஆகணும்னும் யாருக்கும் தலையெழுத்து இல்லை!

    நமக்கு பிடிச்சதை நாம பாட்டுக்கு எழுதிகிட்டே இருக்க வேண்டியதுதான்!

    நீங்க வாங்க பாஸ்!
    இவங்க எப்பவுமே இப்படித்தான்! அடிச்சிக்கிட்டே இருப்பாங்க!

    ReplyDelete
  15. /அதைவிட்டுவிட்டு, சக வலைப்பதிவர்களின் எழுத்துக்களையெல்லாம் 'குப்பை', 'கருமம்' என்று சொல்வதற்கெல்லாம் யாருக்கு என்ன தகுதி இருக்கிறது..?//

    இதுக்கு தகுதி வேணுமா என்ன?சமீபத்தில் டோண்டுவை தாக்கி ஒரு இடுகை..இட்டவுடன் டெலிட்..காரணம்..இவரின் பாலோயர்கள் அதை ரீடரில் படிப்பார்கள்..இந்த சுழிய குற்றவாளிக்கு(மக்கள் தொலைக்காட்சியில் இப்படித்தான் சைபர்கிரைமை சொல்வார்கள்) இதை விட வேறு என்ன தகுதி வேண்டும்?(என்னிடம் அந்த நகல் இருக்கிறது)

    ReplyDelete
  16. லக்கிலுக்கின் கருத்துகள் பலர் மனதை வருத்தமடைய செய்துள்ளது.

    இதன் மூலம் லக்கிலுக்கு அன்புடன் கூறுவது பள்ளியில் அனைத்து மணவர்களும் முதல் நிலை (Ist Rank) பெறுவதில்லை.

    கண்ணதாசன் பாடலா சொன்னா

    "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை"

    நண்பராக இருந்த போதும் தவறை சுட்டி காட்டிய தமிழா வாழ்க உன் வீரம்.

    ReplyDelete
  17. உன்னை யாருய்யா அந்த கருமத்தை படிக்க சொன்னது?////////

    படிச்சவுடனே தானே தெரியுது..

    ReplyDelete
  18. இப்ப ஆரம்பிச்சிருக்கிற இந்த ஆட்டம் எத்தனாவது சீசன்?

    அனுமார் வால் தான் ஒரே ஒரு தரம் ரொம்ப நீளமா, அதுவும் ஒரு காரியத்துக்காக வளர்ந்ததாச் சொல்லுவாங்க.

    இங்கே தமிழ் வலைப்பதிவர்களிடையே வால் ரொம்ப நீளமா வளந்துகிட்டே போவுதே?

    /மானிட்டருக்கு முன் மோதிக்கொண்டாலும்,மனமாச்சார்யங்கள் நமக்குள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில்/

    இப்படியும் எழுதிக்கறாங்க. நார் நாராப் பதிவுல கிழிக்கறாங்க! ஆனா, நேர்ல பார்க்கும்போதி, பதிவர் சந்திப்பிலேயோ, "கட்டிப்புடி, கட்டிப்புடிடா, கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடான்னு" கட்டிப்புடி வைத்தியமும் செஞ்சுக்கறாங்க!

    உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறுவர் தம் உறவு கலவாமை வேண்டும்! அப்பனே முருகா!

    நம்ம உண்மைத் தமிழன் சார்பாக
    "அடேய், மசுறுக் கோவணாண்டி!"ன்னு உரக்கக் கூவிக்கறேன்!

    பின் குறிப்பு:நான் எந்த ஏழரைக்கும் , ஏழே முக்காலுக்கும் ரசிகனும் அல்ல, ஆதரவாளனும் அல்ல!

    ReplyDelete
  19. வழி மொழிகிறேன். உங்கள் கருத்திற் எனக்கு நூறு சதவீதம் உடன்பாடே. :)

    ReplyDelete
  20. உங்கள் கருத்துக்களை வழிமொழிகிறேன்....

    ReplyDelete
  21. நன்பர் தண்டோரா.

    உங்கள் தொடர்பின்னூட்டங்கள் மூலம் உங்கள் தொடர் காண்டு தெரிகிறது.

    அவரது எழுத்தை அவரது பணியோடு சம்பந்தப்படுத்திய கொலைவெறியை என்னவென்று சொல்வது ?

    சமீபத்தில் சுகுணா திவாகர் பதிவிலும் உங்கள்து தொடர் காழ்ப்புணர்ச்சி பின்னூட்டங்களை பார்த்தேன்.

    நல்ல மருத்துவரை பாருங்கள்.

    இதை சொல்லிவிட்டதற்காக என்னையும் தொடர்புண்ணூட்டங்கள் மூலம் திட்ட ஆரம்பிக்கவேண்டாம்.

    ReplyDelete
  22. பதிவர்களுக்குள் ஏனிந்த சண்டை... நிஜமாய் குழப்பமாய் இருக்கிறது...

    மண்டையை பிச்சுக்கலாம் போல் இருக்கு...

    பிரபாகர்.

    ReplyDelete
  23. பை த வே இந்த பதிவுக்கு ஓட்டு போட்டேன்.

    ReplyDelete
  24. /நன்பர் தண்டோரா.

    உங்கள் தொடர்பின்னூட்டங்கள் மூலம் உங்கள் தொடர் காண்டு தெரிகிறது.

    அவரது எழுத்தை அவரது பணியோடு சம்பந்தப்படுத்திய கொலைவெறியை என்னவென்று சொல்வது ?

    சமீபத்தில் சுகுணா திவாகர் பதிவிலும் உங்கள்து தொடர் காழ்ப்புணர்ச்சி பின்னூட்டங்களை பார்த்தேன்.

    நல்ல மருத்துவரை பாருங்கள்.

    இதை சொல்லிவிட்டதற்காக என்னையும் தொடர்புண்ணூட்டங்கள் மூலம் திட்ட ஆரம்பிக்கவேண்டாம்..

    நண்பரே நலமா?

    ReplyDelete
  25. எழுத்துப்பணி ஓகே..பிணி?

    ReplyDelete
  26. /உங்கள் தொடர்பின்னூட்டங்கள் மூலம் உங்கள் தொடர் காண்டு தெரிகிறது.

    அப்படியா?

    ReplyDelete
  27. //எனக்கென்னவோ நீங்களெல்லாம் காண்டு என்பது டோண்டு என்பது போல் தோன்றுகிறது//



    எது போலி டோண்டுவா?

    ReplyDelete
  28. ரவி ....நீங்கள் பார்த்த மருத்துவரையே பரிந்துரையுங்களேன்

    ReplyDelete
  29. /சமீபத்தில் சுகுணா திவாகர் பதிவிலும் உங்கள்து தொடர் காழ்ப்புணர்ச்சி பின்னூட்டங்களை பார்த்தேன்.//

    என்னுது மட்டும்தானா ?மற்றதெல்லாம் ?

    ReplyDelete
  30. /மூர்த்தி இஸ் தி பெஸ்ட் டாக்டர்... ப்ளீஸ் காண்டக்ட் ஹிம்.//

    அடப்பாவி அவனா?இன்னும் இருக்கானா?ராமன் எத்தனை ராமனடி

    ReplyDelete
  31. சரவண பவனில் இன்று அசைவ சாப்பாடு?அண்ணே எங்க போயிட்டுங்க?

    ReplyDelete
  32. 40.

    சனியன் சடைபோட ஆரம்பித்தால் பூ வைத்து பொட்டு வைக்காமல் போகாது என்று எங்கூரில் சொல்வார்கள்.

    ReplyDelete
  33. சனிப்பொணம் தனிப்போகாதுனு கூட எங்க ஊர்ல சொல்வாங்க....

    ReplyDelete
  34. //நேரம் வாய்க்கும்போதெல்லாம் எதையாவது எழுதுங்கள் என்று சொல்லித்தானே அவரவர்க்கு வலைப்பதிவு.. வலையுலக் கூட்டமே அதற்குத்தானே.. எழுத, எழுதத்தானே எழுத்து வரும்.. பதிவர்கள் எழுதுவதையெல்லாம் 'கருமம்', 'குப்பை' என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு, இங்கு யாருடைய எழுத்தும் சோரம் போகவில்லை. அவரவர் பாணி அவரவர்க்கு..//

    இது மிகச்சரியான வார்த்தைகள்..

    அப்புறம் பாஸ்.. அவர் எழுதுறத எதுக்கு நீங்க தேவையில்லாம லிங்க் எல்லாம் கொடுத்து விளம்பர உதவி பண்ணுறீங்க..

    //யாருக்கு என்ன தகுதி இருக்கிறது..?//

    அவுங்க அவுங்க சொந்த கருத்த அவுங்க சொந்த பதிவுல போடுறதுக்கு என்ன தகுதி வேணும்..?

    உங்க கருத்த இந்த பதிவுல நீங்க சொல்லுற மாதிரி அவர் கருத்த அவர் பதிவுல சொல்லியிருக்கிறார்.. அவ்வுளவுதான்..

    ரெண்டுமே தப்பு இல்ல.. ஆனா அவர் கருத்துதான் பதிவுலகோட மதிப்பீடுனு நீங்க ஏன் நினைச்சு இந்த பதிவ எழுதுனீங்கனு புரியல பாஸ்..

    ReplyDelete
  35. நல்லா எண்ணறீங்கண்ணே(40)

    ReplyDelete
  36. தீப்பெட்டி நல்லா கொளுத்தி காமீங்க..சூடம் ஏத்துவோம்

    ReplyDelete
  37. //அவர் கருத்துக்களை புறந்தள்ளுவதே மேல்... இது குறித்து எழுதி வீண் விளம்பரங்களுக்கு வழி வகுப்பதை தவிர்க்கலாம்.

    எப்படி எல்லோரையும் திருப்திப் படுத்த முடியும்.

    சமீபத்தில் நான் எழுதிய கவிதைக்கு 20/23 என வாக்குகள் வந்தது. 20 பேர் ஏற்றுக்கொண்டதற்கு எனக்கு காரணம் தெரியும். அது போதும். "ஏன் எதிர் வாக்கு போட்டேன்" எனச் சொல்ல தைரியம் இல்லாத கோழைகளிடம் நான் ஏன் என் கவனத்தை செலுத்த வேண்டும்.//

    கதிர் நீங்க கவிதை எழுதுவீங்களா?
    நான் அந்த குப்பையையெல்லாம் படிக்கிறதில்லை..

    ReplyDelete
  38. இந்தாளுக்கு பிரபல பத்திரிகையாளர்களை வம்பிழுக்கறதே வேலையாப் போச்சு... ச்சே!

    ReplyDelete
  39. /இந்தாளுக்கு பிரபல பத்திரிகையாளர்களை வம்பிழுக்கறதே வேலையாப் போச்சு... ச்சே

    ஹாஹா...உண்மைத்தமிழன் ரொம்ப நல்லவருங்க..ஆமாம் நீங்க யாரை சொல்றீங்க?

    ReplyDelete
  40. /இப்ப ஆரம்பிச்சிருக்கிற இந்த ஆட்டம் எத்தனாவது சீசன்?

    அனுமார் வால் தான் ஒரே ஒரு தரம் ரொம்ப நீளமா, அதுவும் ஒரு காரியத்துக்காக வளர்ந்ததாச் சொல்லுவாங்க.

    இங்கே தமிழ் வலைப்பதிவர்களிடையே வால் ரொம்ப நீளமா வளந்துகிட்டே போவுதே?

    /மானிட்டருக்கு முன் மோதிக்கொண்டாலும்,மனமாச்சார்யங்கள் நமக்குள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில்/

    இப்படியும் எழுதிக்கறாங்க. நார் நாராப் பதிவுல கிழிக்கறாங்க! ஆனா, நேர்ல பார்க்கும்போதி, பதிவர் சந்திப்பிலேயோ, "கட்டிப்புடி, கட்டிப்புடிடா, கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடான்னு" கட்டிப்புடி வைத்தியமும் செஞ்சுக்கறாங்க!

    உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறுவர் தம் உறவு கலவாமை வேண்டும்! அப்பனே முருகா!

    நம்ம உண்மைத் தமிழன் சார்பாக
    "அடேய், மசுறுக் கோவணாண்டி!"ன்னு உரக்கக் கூவிக்கறேன்!

    பின் குறிப்பு:நான் எந்த ஏழரைக்கும் , ஏழே முக்காலுக்கும் ரசிகனும் அல்ல, ஆதரவாளனும் அல்ல//

    ஆறுவது சினம்...தெரிகிறது..இருந்தாலும் ரெளத்திரம் பழகும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது....

    ReplyDelete
  41. டுரூ தமிழன் நல்லா இருக்கீங்களா. கமென்ட் மாடரேசன் தூக்கிட்டீங்க போல இருக்கே.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  42. //Ganesh said...

    டுரூ தமிழன் நல்லா இருக்கீங்களா. கமென்ட் மாடரேசன் தூக்கிட்டீங்க போல இருக்கே.

    வாழ்க வளமுடன்
    //

    ஹை! மறுபடியும் வந்துட்டீங்களா! சூப்பர்! இனிமே உண்மைத் தமிழன் அண்ணனுக்கு உங்க தலைவலையைத் தீர்க்கவே நேரம் சரியா இருக்கும்! ஊரு உலகத்தை பார்த்து டென்ஷன் ஆக மாட்டாரு!

    எப்படி இருக்கீங்க! நலம்தானே!

    ஒரு மெயிலைப் போடுங்க எனக்கு!
    namakkalshibi@gmail.com

    ReplyDelete
  43. சரி!
    ஏன் சார் இதுக்கு இப்படி டென்சன் ஆவுறியள்!

    அதிமுக வில் லக்கிலுக்கை சேரச் சொல்லியற்லாம்.

    கவலை வேண்டாம்!

    நீங்க ஏற்கனவே அதில் உறுப்பினரா இருப்பீர்கள்!

    அவரையும் சேத்துட்டா களைகளை ஒட்டப் பிடுங்க வாய்ப்பாக அமையும்.


    அதிமுக - அங்கீகாரம் மற்றும் திருத்தங்கள் முன்னேற்ற கழகம்

    ReplyDelete
  44. இதென்ன கொடுமை சரவணன் !!!

    ReplyDelete
  45. அண்ணே, நீங்க வர வர லூசு மாதிரி எழுதறீங்க.

    ReplyDelete
  46. யாருக்கு என்ன தகுதியிருக்கிறது என்பது அவர்கள் எழுதும் பதிவுகள் ஒரு சிலவற்றைப்படித்தாலே தெரிந்துவிடும்.

    தனக்குத்தான் அதிக தகுதியிருப்பதாக பீற்றிக்கொள்பவர்களுக்கெல்லாம் எப்பேற்பட்ட தகுதிகள் இருக்கிறது, அவர்கள் தராதரம் என்ன என்பது தமிழ் வலைப்பதிவுகள் குறைந்தது ஒரு 6 மாதகாலமாவது தொடர்பவர்களுக்குச் சிறப்பாகத் தெரியும்.

    நீங்கள் சுட்டிக்காண்பித்த மிக மிக அறிவாளியான, தமிழ் புலவரான, நுண்ணரசியல்வாதியான லக்கிலுக் என்ற யுவகிருட்டினா எப்பேற்பட்டவர் என்பது தமிழ் பதிவிடும் நல்லுலகிற்கு தெளிவாகத் தெரியும்.

    சுட்டிக்காண்பித்தமைக்கு மிக்க நன்றி.

    யாருக்குமே தகுதியில்லை என்று கண்டுபிடித்தவருக்குத் தனக்கு என்ன தகுதிகள் இல்லை என்று கண்டுபிடிப்பது ரொம்ப கடினம் இல்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  47. ithu thaadaayisa pokku migavum kandikkath thakkathu. naan ungal karuththudan muzuthum udanpadugiren.

    ReplyDelete
  48. ///♥ தூயா ♥ Thooya ♥ said...

    //பதிவர்களின் கருத்து பிடிக்காவிட்டால் படித்துவிட்டு பேசாமல் போய்விடலாம். இதைத்தான் கிட்டத்தட்ட அனைத்துப் பதிவர்களும் கடைப்பிடிக்கிறார்கள்.//

    இதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு]]]

    நல்லா சொன்ன கண்ணு.. இதைத்தான் நான் எல்லாருக்கும் சொல்லுறேன்.. பலர் புரிஞ்சுக்குறாங்க.. சிலர் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க..!

    ReplyDelete
  49. [[[ஜோ/Joe said...

    உண்மைத் தமிழன் அண்ணே!
    முழுவதுமாக உடன்படுகிறேன்.

    சமீப காலத்தில் புத்தகங்கள் எழுதியது, சாரு நெருக்கம் இவையெல்லாம் லக்கிலுக்கிற்கு ஒரு சுய செருக்கை ஏற்படுத்தியிருக்கிறது .
    ஆனால் இதில் நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்?]]]

    தான் எழுதுவதைத் தவிர மற்றதெல்லாம் குப்பை என்றால் கோபம் வரத்தானே செய்யும்..!

    ReplyDelete
  50. [[[வந்தியத்தேவன் said...
    தூயாவை வழிமொழிகின்றேன்.
    ஒரு சின்ன சந்தேகம் அரசியல் எழுதுவதற்கென பிரத்தியேகமாக எதாவது படித்திருக்கவேண்டுமா? ஏனெனில் சில அரசியல்வாதிகள் படிப்பு வாசனையே இல்லாதவர்கள்.]]]

    எங்களது ஊரில் திருடத் தெரிந்தாலே போதும்.. அதுதான் அரசியல்வியாதியாக ஆவதற்கான ஒரே தகுதி..!

    ReplyDelete
  51. [[[செந்தழல் ரவி said...
    //பதிவர்களின் கருத்து பிடிக்காவிட்டால் படித்துவிட்டு பேசாமல் போய்விடலாம். இதைத்தான் கிட்டத்தட்ட அனைத்துப் பதிவர்களும் கடைப்பிடிக்கிறார்கள். இருக்கவே இருக்கிறது தமிழ்மணத்தின் கருவிப்பட்டை. பிடித்தால் பிடிக்கிறது என்று குத்தலாம்.. இல்லாவிடில் பிடிக்கவில்லை என்று குத்தலாம். இதுவும் வேண்டாமெனில் மூடிவிட்டுப் போய்விடலாம்.//

    சம்பந்தப்பட்ட இரண்டு ஆளுமைகளுக்கும் சேர்த்து வழிமொழிகிறேன்...!!!!]]]

    யார் இரண்டு ஆளுமைகள்?

    [[[நானும் நேற்று கருவிப்பட்டை பிரச்சினையால் ஒரே பதிவை மூன்று முறை வெளியிட்டேன் என்று கூச்சத்தோடு சொல்லிகொள்கிறேன்.]]]

    பரவாயில்லை.. நீயாவது தைரியமா வெளில சொல்றியே.. குட்பாய்..!

    ReplyDelete
  52. [[[அப்பாவி முரு said...
    ”கோணவாயன் கொட்டாவி விட்டது” மாதிரி இருக்கு லக்கியோட பேச்சு]]]

    -))))))))))))))

    ReplyDelete
  53. [[[கள்ளபிரான் said...
    யுவாவின் கருத்து ஒரு பொதுஜனக் கருத்தாகக் கொள்ளலாம். அவ்ரின் கருத்தென்றாலும் அதற்கு அவருக்கு உரிமையுண்டு.]]]

    அதே போலத்தான் அதை விமர்சனம் செய்யவும் எனக்கு உரிமை உண்டு.

    [[[பொதுக் கருத்தாகக் கொள்ளின், சரியே எனத் தோன்றுகிறது. Seeing is believing என்பார்கள் ஆங்கிலத்தில். அதை Reading is believing என்று மாததலாம்.
    நான் தமிழ்மணம் தினமும் திறந்து பார்க்கிறேன். யுவாவின் கருத்து சரியெனத் தோன்றுகிறது.
    பலர் கவிதையென்ற பெயரின் கக்குகிறார்கள் எதையாவது. திரைப்பட விமர்சனம் என்பதில் ஒரு தரமில்லை. எல்லாம் emotional outpourings. ஆனாலும், தனிநபர் வலைப்திவுகள் தனிந்பருக்காக்வே. அவர்கள் எதையும் எழுத், அவர்கள் சேர்த்து வைத்த கூட்டம் படித்துப் பின்னூட்டங்கள் தவறாகமல் போட, அவர்கள் தனிராச்சியமே நடாத்துகின்றனர். இதை யாரும் தடுக்கமுடியாது. சந்தை என்றால் போலிச் சரக்குகள் இல்லாமல் இருக்கா? விரும்பினால் படிக்கலாம். இல்லையேல், தடுக்கலாம் நமக்கு நாமே. யுவாவின் கருத்து சரி. போலிச்சரக்குகளை வாங்கி ஏமாறாதீர்கள் என்று எச்சரிக்கை விடுவதைப்போல்!]]]

    போலி சரக்கு என்று முத்திரை குத்த உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? நீங்கள் யார் என்பதுதான் எனது கேள்வி..?

    ReplyDelete
  54. [[[butterfly Surya said...
    எனக்கும் வருத்தம்தான்.
    கருமாந்திரங்களை படிப்பதைவிட நேரத்தை குடும்பத்துடன் செல்விடலாம் என்று சொன்னேன்.
    உங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.?? உடல் நலத்தை பாதுகாக்கவும். சீக்கிரம் குடும்பஸ்தானகவும்.]]]

    குடும்பமா? அப்படீன்னா..?

    நீங்களும் கருமாந்திரம்னு சொன்னா எப்படி?

    அந்த வார்த்தையே தப்புன்றேன்.. எல்லாரும் அவங்களுக்கு வர்றதைத்தாங்க எழுதுறாங்க. உங்க எழுத்து உங்களுக்கு..! அவங்க எழுத்து அவங்களுக்கு..!

    ReplyDelete
  55. [[[தண்டோரா ...... said...
    மணவறையில் மாப்பிள்ளையாகவும்
    பிணவறையில் சவமாகவும்
    தான் மட்டுமே மாலையுடன் இருக்கவேண்டும் என்ற கொள்கை நண்பருக்கு இருக்கிறது. யோக்கியன் குறி வைத்தது என்னைத்தான். அதனால் மற்ற பதிவர்கள் குழம்ப வேண்டாம். முருகன் மேல் பாரத்தை போட்டு ஒதுங்க நான் சரவணன் இல்லை. சூரசம்ஹாரம் நடத்த தயார் என்பதை யோக்கியனுக்கும் ஏழே முக்கால் லட்சம் பேருக்கும் தண்டோரா போட்டு தெரிவித்து கொள்கிறென்.]]]

    போர் முரசு கொட்டியாச்சுன்னு நினைக்கிறேன்..!

    நடத்துங்க.. நடத்துங்க..!

    ReplyDelete
  56. [[[gulf-tamilan said...
    //சமீபத்திய உதாரணம் சக வலைப்பதிவர் திரு.முரளிகண்ணன்//

    என்னவாச்சு அவருக்கு??]]]

    வீட்டு வேலையும், ஆபீஸ் வேலையும் கழுத்தை நெறிக்குதாம். அதுனால லீவு லெட்டர் கொடுத்திருக்காரு..!

    ReplyDelete
  57. [[[gulf-tamilan said...

    மிகவும் வருத்தமடைகிறேன்..!

    முன்னால் நண்பர் என்பதாலா!!?]]]

    முன்னால் என்றில்லை கல்ப்.. எப்போதும் எனக்கு நண்பர்தான்..!

    ReplyDelete
  58. [[[மின்னுது மின்னல் said...
    பிபி ஏறிகிட்டே போகுதுண்ணே கொஞ்சம் குறைக்க வழி பாருங்க..!!!
    ஆ.விகடனில் கூடதான் 50 பக்கம் விளம்பரம் இருக்கு. அதுக்காக விளம்பரத்தை யாராவது படிப்பாங்களா..? அதுக்காக கருமம்னு வாங்காதவங்க இருக்காங்களா??
    எல்லா இடத்திலையும் கருமங்களும், குப்பைகளும் நிறைந்ததுதான் இந்த உலக வாழ்க்கை நமக்கு தேவையானதை எடுத்து கொண்டு முன்னேறிகிட்டே இருக்கனும்.
    அண்ண பறவை போல் வாழ பழகுங்கள்..!]]]

    மொதல்ல தயவு செஞ்சு கருமாந்திரம், குப்பைன்னு சொல்லாதீங்க மின்னலு.. கோபம், கோபமா வருது..!

    அது கஷ்டப்பட்டு கை வலிக்க டைப் செய்ற அவங்களை கேவலப்படுத்துற மாதிரியிருக்கு..

    ReplyDelete
  59. [[[தண்டோரா ...... said...

    /எனக்கும் வருத்தம் தான்.

    க்ருமாந்திரங்களை படிப்பதை விட நேரத்தை குடும்பத்துடன் செல்விடலாம் என்று சொன்னேன்.

    உங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.??//

    உன்னை யாருய்யா அந்த கருமத்தை படிக்க சொன்னது?]]]

    கரெக்ட்.. நியாயமான கேள்வி..!

    ReplyDelete
  60. [[[நாமக்கல் சிபி said...
    //ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம்! அடுத்த லெவல்ல இருக்குற பெரிய பெரிய "அரசியல் ஞானம் மிக்க எழுத்தாளர்கள்/கவிஞர்கள்" கிட்டே போயி காட்டினா நம்ம எழுத்தை கருமம்னுதான் சொல்லுவாங்க! அதுக்காக நாம எழுதுறதை நிறுத்திட முடியுமா என்ன? அல்லது உங்களை மாதிரி டென்ஷனோட புலம்பத்தான் முடியுமா என்ன?
    எழுதுவதற்குன்னுன்னு பொதுவுல வெச்சாச்சு! பிடிச்சவன் பாராட்டுவான்! பிடிக்காதவன் திட்டத்தான் செய்வான்! அப்படித் துப்பிட்டு கெளம்பப் பாருன்னு சொல்லிட்டு நான அடுத்த மொக்கையைப் போட வேண்டியதுதான்!
    ஆல் இன் த கேம்!
    நாம யாரையும் என் பதிவை/கவிதையை படிச்சே ஆகணும்னு கட்டாயப்படுத்தி இழுத்துட்டு வரலை! தமிழ்மணத்துலெ லிஸ்ட் ஆச்சுன்னா எல்லாத்தையும் படிச்சே ஆகணும்னும் யாருக்கும் தலையெழுத்து இல்லை!
    நமக்கு பிடிச்சதை நாம பாட்டுக்கு எழுதிகிட்டே இருக்க வேண்டியதுதான்!
    நீங்க வாங்க பாஸ்!
    இவங்க எப்பவுமே இப்படித்தான்! அடிச்சிக்கிட்டே இருப்பாங்க!]]]

    அடப்பாவி.. நான் சொன்னதையெல்லாம் திருப்பிச் சொல்லிட்டு என் மேலேயே பழியைத் தூக்கிப் போட்டுட்டுப் போறான் பாருங்க..! மாநக்கலு சாமி உனக்கு..!

    ReplyDelete
  61. [[[தண்டோரா ...... said...
    /அதைவிட்டுவிட்டு, சக வலைப்பதிவர்களின் எழுத்துக்களையெல்லாம் 'குப்பை', 'கருமம்' என்று சொல்வதற்கெல்லாம் யாருக்கு என்ன தகுதி இருக்கிறது..?//

    இதுக்கு தகுதி வேணுமா என்ன? சமீபத்தில் டோண்டுவை தாக்கி ஒரு இடுகை. இட்டவுடன் டெலிட். காரணம் இவரின் பாலோயர்கள் அதை ரீடரில் படிப்பார்கள். இந்த சுழிய குற்றவாளிக்கு(மக்கள் தொலைக்காட்சியில் இப்படித்தான் சைபர்கிரைமை சொல்வார்கள்) இதை விட வேறு என்ன தகுதி வேண்டும்?(என்னிடம் அந்த நகல் இருக்கிறது)]]]

    பார்சல் ப்ளீஸ்..!

    ReplyDelete
  62. [[[♠புதுவை சிவா♠ said...
    லக்கிலுக்கின் கருத்துகள் பலர் மனதை வருத்தமடைய செய்துள்ளது.
    இதன் மூலம் லக்கிலுக்கு அன்புடன் கூறுவது பள்ளியில் அனைத்து மணவர்களும் முதல் நிலை (Ist Rank) பெறுவதில்லை.

    கண்ணதாசன் பாடலா சொன்னா

    "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை"

    நண்பராக இருந்த போதும் தவறை சுட்டி காட்டிய தமிழா வாழ்க உன் வீரம்.]]]

    இதுல என்னத்தங்க இருக்கு வீரம்..! என் பதிவை குப்பை, மொக்கை, கருமாந்திரம்னு சொன்னா கோபம் வராது..!?????

    ReplyDelete
  63. [[[butterfly Surya said...
    உன்னை யாருய்யா அந்த கருமத்தை படிக்க சொன்னது?////////
    படிச்சவுடனேதானே தெரியுது..]]]

    முருகா.. முருகா.. திரும்பவுமா?

    ReplyDelete
  64. [[[கிருஷ்ணமூர்த்தி said...
    இப்ப ஆரம்பிச்சிருக்கிற இந்த ஆட்டம் எத்தனாவது சீசன்?]]]

    இரண்டாவது சீசன்..

    [[[அனுமார் வால்தான் ஒரே ஒரு தரம் ரொம்ப நீளமா, அதுவும் ஒரு காரியத்துக்காக வளர்ந்ததாச் சொல்லுவாங்க. இங்கே தமிழ் வலைப்பதிவர்களிடையே வால் ரொம்ப நீளமா வளந்துகிட்டே போவுதே?]]]

    கருத்து மோதல் வளர்ந்து, பெரிதாகி தனி மனித மோதலாக உருவெடுத்துவிட்டது. அதனால்தான்..

    /மானிட்டருக்கு முன் மோதிக்கொண்டாலும், மனமாச்சார்யங்கள் நமக்குள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில்/

    இப்படியும் எழுதிக்கறாங்க. நார் நாராப் பதிவுல கிழிக்கறாங்க! ஆனா, நேர்ல பார்க்கும்போதி, பதிவர் சந்திப்பிலேயோ, "கட்டிப்புடி, கட்டிப்புடிடா, கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடான்னு" கட்டிப்புடி வைத்தியமும் செஞ்சுக்கறாங்க!]]]

    வேற வழி.. நாகரிகத்தைக் காட்டணும்ல்ல..

    [[[உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறுவர் தம் உறவு கலவாமை வேண்டும்! அப்பனே முருகா! நம்ம உண்மைத் தமிழன் சார்பாக "அடேய், மசுறுக் கோவணாண்டி!"ன்னு உரக்கக் கூவிக்கறேன்!]]]

    அபயம் அளித்தோம் மகனே..!

    [[[பின் குறிப்பு:நான் எந்த ஏழரைக்கும், ஏழே முக்காலுக்கும் ரசிகனும் அல்ல, ஆதரவாளனும் அல்ல!]]]

    நல்லாவே தெரியுது ஸார்..! தப்பிச்சிட்டீங்க.. பொழைச்சுப் போங்க..!

    ReplyDelete
  65. [[[ரகுநாதன் said...
    வழிமொழிகிறேன். உங்கள் கருத்திற் எனக்கு நூறு சதவீதம் உடன்பாடே.:)]]]

    நன்றி ரகுநாதன்..!

    ReplyDelete
  66. [[[ஜெட்லி said...
    உங்கள் கருத்துக்களை வழிமொழிகிறேன்....]]]

    நன்றி ஜெட்லி ஸார்..!

    ReplyDelete
  67. உ. த. அண்ணே.. நல்லா சொல்லிருக்கிங்க..

    அவனவனுக்கு தெரிஞ்சத அவனவன் எழுதுறான்.. இவருக்கு ஏன் இம்புட்டு கோவம்..
    தல சிபியும் எதிர் கவுஜ போட்டு எதிர்ப்பு தெரிவிச்சிருக்காரே..

    //
    நேரம் வாய்க்கும்போதெல்லாம் எதையாவது எழுதுங்கள் என்று சொல்லித்தானே அவரவர்க்கு வலைப்பதிவு..
    //
    நெம்ப சரிங்..

    //
    சக வலைப்பதிவர்களின் எழுத்துக்களையெல்லாம் 'குப்பை', 'கருமம்' என்று சொல்வதற்கெல்லாம் யாருக்கு என்ன தகுதி இருக்கிறது..?
    //
    இதென்னவோ வாஸ்தவம் தானுங்..

    ReplyDelete
  68. [[[செந்தழல் ரவி said...

    நன்பர் தண்டோரா. உங்கள் தொடர் பின்னூட்டங்கள் மூலம் உங்கள் தொடர் காண்டு தெரிகிறது.
    அவரது எழுத்தை அவரது பணியோடு சம்பந்தப்படுத்திய கொலைவெறியை என்னவென்று சொல்வது?]]]

    அதனை சமீபத்தில் அவரே நீக்கிவிட்டார் தம்பி.. இல்லாவிடில் நான் நீக்கியிருப்பேன்.

    ReplyDelete
  69. [[[பிரபாகர் said...

    பதிவர்களுக்குள் ஏனிந்த சண்டை... நிஜமாய் குழப்பமாய் இருக்கிறது...

    மண்டையை பிச்சுக்கலாம் போல் இருக்கு...

    பிரபாகர்.]]]

    புதுசுதான.. இன்னும் நிறைய இருக்கு. ஆற, அமர பொறுமையா இருங்க.. காலப்போக்கில் புரியும் பிரபாகரன்..!

    ReplyDelete
  70. [[[செந்தழல் ரவி said...
    பை த வே இந்த பதிவுக்கு ஓட்டு போட்டேன்.]]]

    இதே மாதிரி என்னோட எல்லா பதிவுக்கும் நான் சொல்லாமயே ஓட்டுப் போட்டீன்னா நீ ரொம்ப, ரொம்ப நல்லப் பையன்..!

    ReplyDelete
  71. [[[தண்டோரா ...... said...

    /நன்பர் தண்டோரா.

    உங்கள் தொடர்பின்னூட்டங்கள் மூலம் உங்கள் தொடர் காண்டு தெரிகிறது.

    அவரது எழுத்தை அவரது பணியோடு சம்பந்தப்படுத்திய கொலைவெறியை என்னவென்று சொல்வது ?

    சமீபத்தில் சுகுணா திவாகர் பதிவிலும் உங்கள்து தொடர் காழ்ப்புணர்ச்சி பின்னூட்டங்களை பார்த்தேன்.

    நல்ல மருத்துவரை பாருங்கள்.

    இதை சொல்லிவிட்டதற்காக என்னையும் தொடர்புண்ணூட்டங்கள் மூலம் திட்ட ஆரம்பிக்கவேண்டாம்..

    நண்பரே நலமா?]]]

    நல்லாயிருக்கிறதாலதான் புன்னூட்டமே போடுறான்.. அப்புறமென்ன நலமான்னு ஒரு கேள்வி..?!!!

    ReplyDelete
  72. [[[தண்டோரா ...... said...

    எழுத்துப்பணி ஓகே. பிணி?]]]

    அதான் வலையுலக அடிக்ட்..!

    ReplyDelete
  73. [[[தண்டோரா ...... said...

    /உங்கள் தொடர் பின்னூட்டங்கள் மூலம் உங்கள் தொடர் காண்டு தெரிகிறது.

    அப்படியா?]]]

    பின்ன..?

    ReplyDelete
  74. [[[தண்டோரா ...... said...

    //எனக்கென்னவோ நீங்களெல்லாம் காண்டு என்பது டோண்டு என்பது போல் தோன்றுகிறது//

    எது போலி டோண்டுவா?]]]

    இது யார் சொன்னது? எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்..!

    ReplyDelete
  75. {{
    நல்லாயிருக்கிறதாலதான் புன்னூட்டமே போடுறான்.. அப்புறமென்ன நலமான்னு ஒரு கேள்வி..?!!!
    }}
    அண்ணே.. அப்போ நலமில்லைனா பின்னூட்டமுடியாதாணே..

    ReplyDelete
  76. [[[தண்டோரா ...... said...
    ரவி நீங்கள் பார்த்த மருத்துவரையே பரிந்துரையுங்களேன்]]]

    ஸ்வீடனுக்குத்தான் நீங்க போகணும்..!

    ReplyDelete
  77. [[[தண்டோரா ...... said...

    /சமீபத்தில் சுகுணா திவாகர் பதிவிலும் உங்கள்து தொடர் காழ்ப்புணர்ச்சி பின்னூட்டங்களை பார்த்தேன்.//

    என்னுது மட்டும்தானா? மற்றதெல்லாம் ?]]]

    கரெக்ட்.. சரியான கேள்வி..!!!

    ReplyDelete
  78. [[[தண்டோரா ...... said...

    /மூர்த்தி இஸ் தி பெஸ்ட் டாக்டர்... ப்ளீஸ் காண்டக்ட் ஹிம்.//

    அடப்பாவி அவனா? இன்னும் இருக்கானா? ராமன் எத்தனை ராமனடி]]]

    இன்னாபா இது...? ஆள் மாத்தி ஆள்.. இஷ்டத்துக்கு கமெண்ட்டை போட்டுட்டு டெலீட் பண்ணுட்டுப் போயிட்டீங்க..

    யார் என்ன எழுதுனாங்கன்னே புரியலை.. ஒரே கன்பியூஷன்ஸா இருக்கு..!

    ReplyDelete
  79. [[[தண்டோரா ...... said...
    சரவண பவனில் இன்று அசைவ சாப்பாடு? அண்ணே எங்க போயிட்டுங்க?]]]

    உங்களுக்காக என் வேலை, வெட்டியை விட்டு்ட்டு சும்மா இருக்கணுமா? பொழைப்பை பார்க்கணும்ல்ல..!

    ReplyDelete
  80. [[[செந்தழல் ரவி said...
    40. சனியன் சடைபோட ஆரம்பித்தால் பூ வைத்து பொட்டு வைக்காமல் போகாது என்று எங்கூரில் சொல்வார்கள்.]]]

    டேய் தம்பி.. இது டூ மச்.. உண்மை தெரியாமல் எழுதாதே..

    ReplyDelete
  81. [[[தண்டோரா ...... said...
    சனிப் பொணம் தனிப் போகாதுனுகூட எங்க ஊர்ல சொல்வாங்க....]]]

    போச்சுடா.. எதிர் சொலவடையா..? என்னவோ போங்க..!

    ReplyDelete
  82. [[[தீப்பெட்டி said...
    //நேரம் வாய்க்கும்போதெல்லாம் எதையாவது எழுதுங்கள் என்று சொல்லித்தானே அவரவர்க்கு வலைப்பதிவு.. வலையுலக் கூட்டமே அதற்குத்தானே.. எழுத, எழுதத்தானே எழுத்து வரும்.. பதிவர்கள் எழுதுவதையெல்லாம் 'கருமம்', 'குப்பை' என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு, இங்கு யாருடைய எழுத்தும் சோரம் போகவில்லை. அவரவர் பாணி அவரவர்க்கு..//

    இது மிகச் சரியான வார்த்தைகள்..
    அப்புறம் பாஸ். அவர் எழுதுறத எதுக்கு நீங்க தேவையில்லாம லிங்க் எல்லாம் கொடுத்து விளம்பர உதவி பண்ணுறீங்க.]]]

    புரியாம போயிருச்சுன்னா.. அது விளம்பரம் இல்லை.. தெரிஞ்சுக்கட்டுமே.. என்ன தப்பு இருக்கு?

    //யாருக்கு என்ன தகுதி இருக்கிறது..?//

    அவுங்க அவுங்க சொந்த கருத்த அவுங்க சொந்த பதிவுல போடுறதுக்கு என்ன தகுதி வேணும்..?]]]

    இதைத்தான் நானும் கேக்குறேன்..

    [[[உங்க கருத்த இந்த பதிவுல நீங்க சொல்லுற மாதிரி அவர் கருத்த அவர் பதிவுல சொல்லியிருக்கிறார்.. அவ்வுளவுதான்..]]]

    அந்தக் கருத்துக்குத்தான் எதிர் கருத்து இது..!

    [[[ரெண்டுமே தப்பு இல்ல.. ஆனா அவர் கருத்துதான் பதிவுலகோட மதிப்பீடுனு நீங்க ஏன் நினைச்சு இந்த பதிவ எழுதுனீங்கனு புரியல பாஸ்..]]]

    அப்படீன்னு நினைச்சு எழுதலை.. இது மாதிரியான ஒரு கருத்து பதிவுலகில் பதிவாகியிருக்குன்றதை சுட்டிக் காட்ட விரும்பினேன். அவ்ளோதான்..

    ReplyDelete
  83. [[[தண்டோரா ...... said...
    நல்லா எண்ணறீங்கண்ணே(40)]]]

    தப்பு.. நானும் எண்ணினேன்.. 36தான் வருது..!

    ReplyDelete
  84. பிடிச்சுருந்தா படிங்க பிடிக்காட்டி கண்ணப்பொத்திக்கிட்டு போயிட்டே இருக்கணும் நீங்க எல்லாம் வாசிக்கணும்ன்னு இங்க யாரும் அழுகலை..அய்யோ லக்கி என்னோட ப்ளாக்க்கு வரலியே அதனால நான் என்னோட ப்ளாக்க மூடிட்டு போறேன்னு யாரும் அழுது பொழம்ப போறதில்லை,ஆணவம் திமிரு இதெல்லாம் இதெல்லாம் நீங்க புதுசா சேந்துருக்குற வேலையில காட்டி பொழைக்கிற வழியப்பாருங்க,உங்களுக்கு அதுதான் தொழில் எங்களுக்கு இது எண்டெர்டயின்மெண்ட்மட்டும்தான் வெறும் டைம் பாஸ்.....போங்க பாஸ் போயி புள்ளை குட்டிய படிக்க வக்கிற வழியப்பாருங்க...

    இவண் நீங்க சொன்ன அதே அரை வேக்காட்டு பதிவர்

    ப்ரியமுடன் வசந்த்

    ReplyDelete
  85. [[[தண்டோரா ...... said...
    தீப்பெட்டி நல்லா கொளுத்தி காமீங்க. சூடம் ஏத்துவோம்]]]

    தண்டோராஜி இன்னிக்கு நல்ல மூட்ல இருக்காரு போலிருக்கு..!

    ReplyDelete
  86. [[[தண்டோரா ...... said...

    //அவர் கருத்துக்களை புறந்தள்ளுவதே மேல்... இது குறித்து எழுதி வீண் விளம்பரங்களுக்கு வழி வகுப்பதை தவிர்க்கலாம்.

    எப்படி எல்லோரையும் திருப்திப்படுத்த முடியும். சமீபத்தில் நான் எழுதிய கவிதைக்கு 20/23 என வாக்குகள் வந்தது. 20 பேர் ஏற்றுக்கொண்டதற்கு எனக்கு காரணம் தெரியும். அது போதும். "ஏன் எதிர் வாக்கு போட்டேன்" எனச் சொல்ல தைரியம் இல்லாத கோழைகளிடம் நான் ஏன் என் கவனத்தை செலுத்த வேண்டும்.//

    கதிர் நீங்க கவிதை எழுதுவீங்களா? நான் அந்த குப்பையையெல்லாம் படிக்கிறதில்லை..]]]

    கதிரா..? என்ன எழுதினாரு..? வரிசைல காணோமே தண்டோரா..!

    ReplyDelete
  87. [[[Pot"tea" kadai said...
    இந்தாளுக்கு பிரபல பத்திரிகையாளர்களை வம்பிழுக்கறதே வேலையாப் போச்சு... ச்சே!]]]

    பேராண்டி நீ ரொம்ப மோசம்.. தாத்தாவுக்கு மாரல் சப்போர்ட்கூட கொடுக்காம எஸ்கேப்பாகுற பாரு.. துரோகி..!

    ReplyDelete
  88. [[[தண்டோரா ...... said...

    /இந்தாளுக்கு பிரபல பத்திரிகையாளர்களை வம்பிழுக்கறதே வேலையாப் போச்சு... ச்சே

    ஹாஹா...உண்மைத்தமிழன் ரொம்ப நல்லவருங்க..ஆமாம் நீங்க யாரை சொல்றீங்க?]]]

    என்னைத்தான்.. வேற யாரைன்னு நினைச்சீங்க..?

    ReplyDelete
  89. [[[தண்டோரா ...... said...

    /இப்ப ஆரம்பிச்சிருக்கிற இந்த ஆட்டம் எத்தனாவது சீசன்?

    அனுமார் வால்தான் ஒரே ஒரு தரம் ரொம்ப நீளமா, அதுவும் ஒரு காரியத்துக்காக வளர்ந்ததாச் சொல்லுவாங்க.

    இங்கே தமிழ் வலைப்பதிவர்களிடையே வால் ரொம்ப நீளமா வளந்துகிட்டே போவுதே?

    /மானிட்டருக்கு முன் மோதிக்கொண்டாலும்,மனமாச்சார்யங்கள் நமக்குள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில்/

    இப்படியும் எழுதிக்கறாங்க. நார் நாராப் பதிவுல கிழிக்கறாங்க! ஆனா, நேர்ல பார்க்கும்போதி, பதிவர் சந்திப்பிலேயோ, "கட்டிப்புடி, கட்டிப்புடிடா, கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடான்னு" கட்டிப்புடி வைத்தியமும் செஞ்சுக்கறாங்க!

    உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறுவர் தம் உறவு கலவாமை வேண்டும்! அப்பனே முருகா!

    நம்ம உண்மைத் தமிழன் சார்பாக
    "அடேய், மசுறுக் கோவணாண்டி!"ன்னு உரக்கக் கூவிக்கறேன்!

    பின் குறிப்பு:நான் எந்த ஏழரைக்கும் , ஏழே முக்காலுக்கும் ரசிகனும் அல்ல, ஆதரவாளனும் அல்ல//

    ஆறுவது சினம்... தெரிகிறது. இருந்தாலும் ரெளத்திரம் பழகும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது....]]]

    கோபப்படு.. கோபத்தைக் காட்டுகின்றபோதும், கொட்டுகின்றபோதும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். அவ்ளோதான் மேட்டர்..!

    ReplyDelete
  90. [[[Ganesh said...

    hello mic testing 1 2 3]]]

    அண்ணே.. நல்லாயிருக்கீகளாண்ணே.. சொகமாண்ணே.. அப்படியே இருந்திருங்கண்ணே.. வேணாம்ணே.. நான் தாங்க மாட்டேண்ணே..!

    ReplyDelete
  91. [[[♥ தூயா ♥ Thooya ♥ said...

    ~~~~~~~~~~~~~~~]]]

    தூயா கண்ணு.. ரெண்டாவது தடவையா ஒரே பதிவுக்கு.. ஆச்சரியம் போ..!

    ReplyDelete
  92. அங்கும் எங்கும்
    சுற்றிய களைப்பு
    ஆள்காட்டி
    விரலுக்கு

    அரூபமாய்
    சொரூபம் காட்டி
    சொறிதலில் சுகம்
    காணும்
    அல்ப ம்

    நகக்குறியில்
    இருக்கும் மையில்
    சூரியன்
    இருப்பதால்
    நமைச்சல்
    நிறையவே

    ஆலையில்லா ஊரில்
    நான் தான் சர்க்கரை
    என்று தன்னை நோக்கி
    தானே சுட்டிய
    இலுப்பைபூ

    ஆள்பவர்களின்
    அடி வருடுவதால்
    பேள்வதை கூட
    பெருமையாக பேசி
    பீத்திக் கொள்கிறார்

    உன்னைப்போல்
    உண்டா என்று
    ஆள்காட்டி விரலை
    புகழ் பாடுகிறார்கள்
    நேரில் பார்க்கும்
    அத்தனை பேரும்
    நாகரீகம்..

    ஆள்காட்டி விரல்
    இப்போது
    என்னை சுட்டி
    பாவம்...
    எலுமிச்சை பழம்
    ஒன்று ஐந்து
    ரூபாயாம்

    ஐந்தாறு பெயர்களில்
    அவதூறு
    ஆபாச பார்ப்பான்
    நானென்று

    காறி துப்புகிறார்கள்
    அவன் அப்படித்தான்
    நீங்கள் விட்டு விடுங்கள்

    நண்பர்களுக்கு நன்றி
    நடப்பவை
    நல்லவையாக
    இருக்கட்டும்

    ReplyDelete
  93. [[[Ganesh said...
    டுரூ தமிழன் நல்லா இருக்கீங்களா. கமென்ட் மாடரேசன் தூக்கிட்டீங்க போல இருக்கே. வாழ்க வளமுடன்]]]

    ஐயா சாமி.. விட்ருங்க சாமி.. வந்தீங்க.. படிச்சீங்க.. பார்த்தீங்க.. போயிட்டீங்க.. இப்படியே இருந்திருங்க. அதான் நமக்கு நல்லது..!

    ReplyDelete
  94. [[[நாமக்கல் சிபி said...

    //Ganesh said...

    டுரூ தமிழன் நல்லா இருக்கீங்களா. கமென்ட் மாடரேசன் தூக்கிட்டீங்க போல இருக்கே.

    வாழ்க வளமுடன்//

    ஹை! மறுபடியும் வந்துட்டீங்களா! சூப்பர்! இனிமே உண்மைத் தமிழன் அண்ணனுக்கு உங்க தலைவலையைத் தீர்க்கவே நேரம் சரியா இருக்கும்! ஊரு உலகத்தை பார்த்து டென்ஷன் ஆக மாட்டாரு! எப்படி இருக்கீங்க! நலம்தானே! ஒரு மெயிலைப் போடுங்க எனக்கு!
    namakkalshibi@gmail.com]]]

    அடப்பாவி.. நீயே உனக்கு ஒரு மெயில் அனுப்பிக்குவியா..? எல்லாம் கலிகாலம்..!

    ReplyDelete
  95. [[[அத்திவெட்டி ஜோதிபாரதி said...
    சரி! ஏன் சார் இதுக்கு இப்படி டென்சன் ஆவுறியள்! அதிமுக வில் லக்கிலுக்கை சேரச் சொல்லியற்லாம்.
    கவலை வேண்டாம்! நீங்க ஏற்கனவே அதில் உறுப்பினரா இருப்பீர்கள்!
    அவரையும் சேத்துட்டா களைகளை ஒட்டப் பிடுங்க வாய்ப்பாக அமையும்.
    அதிமுக - அங்கீகாரம் மற்றும் திருத்தங்கள் முன்னேற்ற கழகம்]]]

    ஜோதி ஸார்.. உள்குத்தை வெகுவாக ரசித்தேன்.

    நிச்சயம் நான் அதில் இல்லை.

    ReplyDelete
  96. [[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    இதென்ன கொடுமை சரவணன் !!!]]]

    காலத்தின் கொடுமை சரவணன்..!

    ReplyDelete
  97. [[[Indy said...
    அண்ணே, நீங்க வர வர லூசு மாதிரி எழுதறீங்க.]]]

    தங்களது கருத்துக்கு மிக்க நன்றிகள்..!

    ReplyDelete
  98. [[[வஜ்ரா said...

    யாருக்கு என்ன தகுதியிருக்கிறது என்பது அவர்கள் எழுதும் பதிவுகள் ஒரு சிலவற்றைப் படித்தாலே தெரிந்துவிடும். தனக்குத்தான் அதிக தகுதியிருப்பதாக பீற்றிக் கொள்பவர்களுக்கெல்லாம் எப்பேற்பட்ட தகுதிகள் இருக்கிறது, அவர்கள் தராதரம் என்ன என்பது தமிழ் வலைப்பதிவுகள் குறைந்தது ஒரு 6 மாதகாலமாவது தொடர்பவர்களுக்குச் சிறப்பாகத் தெரியும். நீங்கள் சுட்டிக் காண்பித்த மிக மிக அறிவாளியான, தமிழ் புலவரான, நுண்ணரசியல்வாதியான லக்கிலுக் என்ற யுவகிருட்டினா எப்பேற்பட்டவர் என்பது தமிழ் பதிவிடும் நல்லுலகிற்கு தெளிவாகத் தெரியும். சுட்டிக் காண்பித்தமைக்கு மிக்க நன்றி. யாருக்குமே தகுதியில்லை என்று கண்டு பிடித்தவருக்குத் தனக்கு என்ன தகுதிகள் இல்லை என்று கண்டுபிடிப்பது ரொம்ப கடினம் இல்லை என்று நினைக்கிறேன்.]]]

    வஜ்ரா.. நிலைமை ரொம்ப மோசம்..!

    நீங்கள்லாம் ஓரமா ஒதுங்கித்தான் இப்படி..?!!!

    ReplyDelete
  99. [[[பித்தன் said...
    ithu thaadaayisa pokku migavum kandikkath thakkathu. naan ungal karuththudan muzuthum udanpadugiren.]]]

    நன்றி பித்தன் ஸார்..!

    ReplyDelete
  100. [[[सुREஷ் कुMAர் said...
    உ. த. அண்ணே.. நல்லா சொல்லிருக்கிங்க.. அவனவனுக்கு தெரிஞ்சத அவனவன் எழுதுறான்.. இவருக்கு ஏன் இம்புட்டு கோவம்..
    தல சிபியும் எதிர் கவுஜ போட்டு எதிர்ப்பு தெரிவிச்சிருக்காரே..]]]

    தார்மீக ஆதரவுக்கு நன்றி தம்பி.. அதென்ன உமது பெயர் வித்தியாசமாக இருக்கிறது.. கண்டுபிடிக்க முடியவில்லை..!

    ReplyDelete
  101. [[[[सुREஷ் कुMAர் said...

    {{நல்லாயிருக்கிறதாலதான் புன்னூட்டமே போடுறான்.. அப்புறமென்ன நலமான்னு ஒரு கேள்வி..?!!!}}

    அண்ணே.. அப்போ நலமில்லைனா பின்னூட்ட முடியாதாணே..]]]

    அப்புறம்.. ஆசுபத்திரில படுத்தா தமிழ்மணம் தெரியுமா?

    ReplyDelete
  102. [[[பிரியமுடன்...வசந்த் said...

    பிடிச்சுருந்தா படிங்க பிடிக்காட்டி கண்ணப் பொத்திக்கிட்டு போயிட்டே இருக்கணும் நீங்க எல்லாம் வாசிக்கணும்ன்னு இங்க யாரும் அழுகலை. அய்யோ லக்கி என்னோட ப்ளாக்க்கு வரலியே அதனால நான் என்னோட ப்ளாக்க மூடிட்டு போறேன்னு யாரும் அழுது பொழம்ப போறதில்லை, ஆணவம் திமிரு இதெல்லாம் இதெல்லாம் நீங்க புதுசா சேந்துருக்குற வேலையில காட்டி பொழைக்கிற வழியப் பாருங்க, உங்களுக்கு அதுதான் தொழில் எங்களுக்கு இது எண்டெர்டயின்மெண்ட் மட்டும்தான் வெறும் டைம் பாஸ். போங்க பாஸ் போயி புள்ளை குட்டிய படிக்க வக்கிற வழியப் பாருங்க.
    இவண் நீங்க சொன்ன அதே அரை வேக்காட்டு பதிவர்
    ப்ரியமுடன் வசந்த்]]]

    உமது பொறியலுக்கு நன்றி வசந்த்.. அதென்ன அரைவேக்காட்டு பதிவர்..?

    ReplyDelete
  103. [[[தண்டோரா ...... said...

    அங்கும் எங்கும்
    சுற்றிய களைப்பு
    ஆள்காட்டி
    விரலுக்கு

    அரூபமாய்
    சொரூபம் காட்டி
    சொறிதலில் சுகம்
    காணும்
    அல்ப ம்

    நகக்குறியில்
    இருக்கும் மையில்
    சூரியன்
    இருப்பதால்
    நமைச்சல்
    நிறையவே

    ஆலையில்லா ஊரில்
    நான்தான் சர்க்கரை
    என்று தன்னை நோக்கி
    தானே சுட்டிய
    இலுப்பைபூ

    ஆள்பவர்களின்
    அடி வருடுவதால்
    பேள்வதை கூட
    பெருமையாக பேசி
    பீத்திக் கொள்கிறார்

    உன்னைப்போல்
    உண்டா என்று
    ஆள்காட்டி விரலை
    புகழ் பாடுகிறார்கள்
    நேரில் பார்க்கும்
    அத்தனை பேரும்
    நாகரீகம்..

    ஆள்காட்டி விரல்
    இப்போது
    என்னை சுட்டி
    பாவம்...
    எலுமிச்சை பழம்
    ஒன்று ஐந்து
    ரூபாயாம்

    ஐந்தாறு பெயர்களில்
    அவதூறு
    ஆபாச பார்ப்பான்
    நானென்று

    காறி துப்புகிறார்கள்
    அவன் அப்படித்தான்
    நீங்கள் விட்டு விடுங்கள்

    நண்பர்களுக்கு நன்றி
    நடப்பவை
    நல்லவையாக
    இருக்கட்டும்]]]

    அடடா.. இப்படியெல்லாம் கவிதை நமக்கு வர மாட்டேங்குதே..!

    மாங்கு, மாங்குன்னு பத்து பக்கம் எழுத வேண்டியிருக்கு..

    இப்படி பத்து வரில மேட்டரை முடிச்சிட்டு போயிரலாம்..

    ம்.. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்..

    ReplyDelete
  104. அந்த பெரிய இவரு அரை குறைன்னு சொன்னாரில்லியா சார் அதத்தேன் சொன்னேன்.......

    ReplyDelete
  105. ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க அண்ணே.

    இதப் பாத்ததும் நர்சிம் எழுதின பதிவு ஒன்னு ஞாபகத்துக்கு வந்தது.
    http://www.narsim.in/2009/06/blog-post_26.html

    சக பதிவர் சக பதிவர்னு சொல்றாங்களே, அவர்களை மூத்தவர்கள் எப்படிக் கையாளவேண்டும் என்பதில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது.

    ReplyDelete
  106. //இதே மாதிரி என்னோட எல்லா பதிவுக்கும் நான் சொல்லாமயே ஓட்டுப் போட்டீன்னா நீ ரொம்ப, ரொம்ப நல்லப் பையன்..!
    //

    நான் கூட ஒரு ஓட்டு போட்டிருக்கேன்! தனியா தெரியுது பாருங்க! அது நம்ம ஓட்டுதேன்!

    :))

    ReplyDelete
  107. கொந்தளிச்சுப் போயிட்டீங்கன்னே.. நீங்க சொல்றதும் சரி போலத் தான் தெரியுது..

    அளவுகோல்கள் யாருக்கும் கிடையாது..
    அதேவேளை யாரும் யாரையும் விமர்சனம் செய்யலாம்.. அது தானே பதிவுலகம்..;)

    நாளை இன்னொருவர் வந்து உங்கள் எழுத்துக்கள் பற்றி எழுதினாலும் சரி தான் என்று சொல்லிட்டு போய்ட்டே இருக்கவேண்டியது தான்..

    அட யார் யாரோ எதையோ சொல்லட்டும்..

    நாம எழுதுவோம்..

    அதுக்குள்ளே 109 பின்னூட்டங்களா?
    பின்னுறாங்க அண்ணே..

    ReplyDelete
  108. // LOSHAN said...
    அதுக்குள்ளே 109 பின்னூட்டங்களா?
    பின்னுறாங்க அண்ணே..//

    அது மட்டுமா? தமிழ்மணத்துல 30/31!!!

    ReplyDelete
  109. அலோ யூத்! உங்க கோபம் புரிந்து கொள்ளக்கூடியதானாலும், அவரோட அங்கீகாரம் உங்களுக்குத் தேவையா?! உடம்பைப் பாத்துக்கோங்க உ.த.

    ReplyDelete
  110. //இன்னாபா இது...? ஆள் மாத்தி ஆள்.. இஷ்டத்துக்கு கமெண்ட்டை போட்டுட்டு டெலீட் பண்ணுட்டுப் போயிட்டீங்க. யார் என்ன எழுதுனாங்கன்னே புரியலை.. ஒரே கன்பியூஷன்ஸா இருக்கு//!

    உங்க பின்னூட்டங்களை உங்கள் மின்னஞ்சல் பெட்டிக்கும் வருமாறு அமைவு செய்து கொள்ளுங்கள். அவை ஆட்டமேட்டிக்காக அங்கும் வரும். பிறகு சம்பந்தப்பட்டவர்களே டெலீட் செய்தாலும் அவற்றை உங்களால் பார்க்கவியலும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  111. மொதல்ல தயவு செஞ்சு கருமாந்திரம், குப்பைன்னு சொல்லாதீங்க மின்னலு.. கோபம், கோபமா வருது..!

    அது கஷ்டப்பட்டு கை வலிக்க டைப் செய்ற அவங்களை கேவலப்படுத்துற மாதிரியிருக்கு..
    //

    ஏராளமான செக்ஸ் கதைகள் மற்றும்
    போலி எழுதியது எல்லாம் இன்னும் இனையத்தில் இருக்கு நான் குப்பைனு சொன்னது அதுதான்

    எனக்கு குப்பைனு சொன்னது உனாதானாவுக்கு இலக்கியமா தெரிந்தால் சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை

    எனக்கு தேவையானதை எடுத்துகிட்டு போய் கிட்டே இருப்பேன்


    கஷ்டபட்டு கைவலிக்க டைப் அடிச்சதற்காக அதையெல்லாம் என்னால கொண்டாட முடியாது

    ReplyDelete
  112. நடப்பவை
    நல்லவையாக
    இருக்கட்டும்...


    முருகா.. முருகா...

    ReplyDelete
  113. அண்ணெ..டெலிட் செய்யப்பட்ட சில பிராபகர்,கதிர் மற்றும் நான் இட்டவை..சில நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி டெலிட் செய்தேன்

    ReplyDelete
  114. உங்கள் வேதனை புரிகிறது உண்மைத் தமிழன்.

    ஆனால் MBA மார்கெட்டிங் முறைகளில், கொரிலா மார்கெட்டிங் என்று ஒன்று உண்டு. அதாவது, முரண்பாடான ஒரு கருத்தையோ அல்லது மற்றவர் உணர்ச்சியை சூடாக்க கூடிய தகவலையோ வெளியிடுவது, அதனால் அதற்கு பிறகு மற்றவர்கள் தன்னை அறியாமலே அந்த கருத்துக்கு விளம்பர பிரதிநிதியாகி விடுவார்கள்.

    இப்ப பாருங்க, நீங்க இதுக்கு ஒரு பதிவு போட்டு, அந்த பதிவுக்கு ஒரு லிங்க்கும் கொடுத்து அதை பெரிதாக்கி விளம்பரப்படுத்த, உங்க பதிவுக்கு 115 பின்னூட்டம் போட்ட அனைவரும், அந்த பதிவையும் சேர்த்து படிக்க, ஆக அந்த பதிவின் ஹிட் உயர, இங்கு ஒரு பதிவராக அவர் நோக்கம் நிறைவேறி விட்டது இல்லையா? .

    "அரசியலல்ல இது எல்லாம் சகஜம்டா-ன்னு" நல்ல கருத்துகளை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்றதை கழுவி விட்டு விட வேண்டும் என்பது இங்கு என் கருத்து.

    ReplyDelete
  115. ஸ்ஸப்பா இந்த 'மூத்திர' பதிவர்கள் சல்லை தாங்கமுடியலை.

    கண்டிக்கத்தக்கது.

    ReplyDelete
  116. [[[பிரியமுடன்...வசந்த் said...
    அந்த பெரிய இவரு அரை குறைன்னு சொன்னாரில்லியா சார் அதத்தேன் சொன்னேன்.......]]]

    அப்பாடா.. நான் தப்பிச்சேன்..!

    ReplyDelete
  117. [[[பிரியமுடன்...வசந்த் said...
    27வது ஓட்டு என்னோடது]]]

    நன்றிகள் வசந்த்..!

    ReplyDelete
  118. [[[எவனோ ஒருவன் said...

    ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க அண்ணே. இதப் பாத்ததும் நர்சிம் எழுதின பதிவு ஒன்னு ஞாபகத்துக்கு வந்தது.
    http://www.narsim.in/2009/06/blog-post_26.html

    சக பதிவர் சக பதிவர்னு சொல்றாங்களே, அவர்களை மூத்தவர்கள் எப்படிக் கையாளவேண்டும் என்பதில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது.]]]

    உண்மைதான் தம்பீ..

    முதலில் தேவை அன்புடன் கூடிய அரவணைப்பு. பின்புதான் மற்றதெல்லாம்..!

    ReplyDelete
  119. [[[நாமக்கல் சிபி said...

    //இதே மாதிரி என்னோட எல்லா பதிவுக்கும் நான் சொல்லாமயே ஓட்டுப் போட்டீன்னா நீ ரொம்ப, ரொம்ப நல்லப் பையன்..!//

    நான் கூட ஒரு ஓட்டு போட்டிருக்கேன்! தனியா தெரியுது பாருங்க! அது நம்ம ஓட்டுதேன்!

    :))]]]

    அடப்பாவி.. ஒரே ஒரு மைனஸ் குத்து குத்தினது நீதானா..? துரோகி.. நேர்ல வா.. நானும் ஒரு குத்து குத்துறேன்..!

    ReplyDelete
  120. [[[LOSHAN said...

    கொந்தளிச்சுப் போயிட்டீங்கன்னே.. நீங்க சொல்றதும் சரி போலத்தான் தெரியுது.. அளவுகோல்கள் யாருக்கும் கிடையாது.. அதேவேளை யாரும் யாரையும் விமர்சனம் செய்யலாம்.. அதுதானே பதிவுலகம்..;)
    நாளை இன்னொருவர் வந்து உங்கள் எழுத்துக்கள் பற்றி எழுதினாலும் சரிதான் என்று சொல்லிட்டு போய்ட்டே இருக்கவேண்டியதுதான்..
    அட யார் யாரோ எதையோ சொல்லட்டும்.. நாம எழுதுவோம்..
    அதுக்குள்ளே 109 பின்னூட்டங்களா? பின்னுறாங்க அண்ணே..]]]

    என்னைப் பற்றிச் சொன்னாலும் அது அவருடைய விமர்சனம் என்ற நோக்கில்தான் நான் எடுத்துக் கொள்வேன்.

    அனைவருக்கும் ஒரேவிதமான கருத்து இருக்க வேண்டும் என்றில்லையே லோஷன்..

    வருகைக்கு நன்றி..!

    ReplyDelete
  121. [[[எவனோ ஒருவன் said...

    // LOSHAN said...
    அதுக்குள்ளே 109 பின்னூட்டங்களா?
    பின்னுறாங்க அண்ணே..//

    அது மட்டுமா? தமிழ்மணத்துல 30/31!!!]]]

    நான் இத்தனை ஓட்டுக்கள் வாங்குறது இதுதான் முதல் முறைன்னு நினைக்கிறேன்..

    நன்றிகள் பதிவர்களுக்கு..!

    ReplyDelete
  122. [[[ஷங்கி said...
    அலோ யூத்! உங்க கோபம் புரிந்து கொள்ளக்கூடியதானாலும், அவரோட அங்கீகாரம் உங்களுக்குத் தேவையா?! உடம்பைப் பாத்துக்கோங்க உ.த.]]]

    தேவையில்லைதான்.. ஆனாலும் ஒரு மாற்றுக் கருத்தை அப்போதே முன் வைத்துவிடுவது வருங்காலத்திற்கு நல்லது ஷங்கி.

    ReplyDelete
  123. [[[dondu(#11168674346665545885) said...

    //இன்னாபா இது...? ஆள் மாத்தி ஆள்.. இஷ்டத்துக்கு கமெண்ட்டை போட்டுட்டு டெலீட் பண்ணுட்டுப் போயிட்டீங்க. யார் என்ன எழுதுனாங்கன்னே புரியலை.. ஒரே கன்பியூஷன்ஸா இருக்கு//!

    உங்க பின்னூட்டங்களை உங்கள் மின்னஞ்சல் பெட்டிக்கும் வருமாறு அமைவு செய்து கொள்ளுங்கள். அவை ஆட்டமேட்டிக்காக அங்கும் வரும். பிறகு சம்பந்தப்பட்டவர்களே டெலீட் செய்தாலும் அவற்றை உங்களால் பார்க்கவியலும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்]]]

    தகவலுக்கு நன்றிகள் டோண்டு ஸார்..!

    ReplyDelete
  124. [[[மின்னுது மின்னல் said...

    மொதல்ல தயவு செஞ்சு கருமாந்திரம், குப்பைன்னு சொல்லாதீங்க மின்னலு.. கோபம், கோபமா வருது..!

    அது கஷ்டப்பட்டு கை வலிக்க டைப் செய்ற அவங்களை கேவலப்படுத்துற மாதிரியிருக்கு..

    //ஏராளமான செக்ஸ் கதைகள் மற்றும் போலி எழுதியது எல்லாம் இன்னும் இனையத்தில் இருக்கு நான் குப்பைனு சொன்னது அதுதான்
    எனக்கு குப்பைனு சொன்னது உனாதானாவுக்கு இலக்கியமா தெரிந்தால் சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை. எனக்கு தேவையானதை எடுத்துகிட்டு போய்கிட்டே இருப்பேன்
    கஷ்டபட்டு கைவலிக்க டைப் அடிச்சதற்காக அதையெல்லாம் என்னால கொண்டாட முடியாது]]]

    மின்னலு..

    இது நம்ம வலையுலகத்துல இருக்குறவங்களை பத்திக் குறிப்பிட்டுச் சொன்னதுனாலதான் எழுதினேன்.. நானும் குறிப்பிடுவது நமது வலையுலகத்துல இருக்கிறவங்களைத்தான்..

    மத்தவங்களை இல்ல.. ஸோ.. அந்த மாதிரி கேட்டகிரி ஆளுங்களை நாம லிஸ்ட்லேயே சேர்க்க வேணாமே..?

    ReplyDelete
  125. [[[butterfly Surya said...

    நடப்பவை
    நல்லவையாக
    இருக்கட்டும்...


    முருகா.. முருகா...]]]

    சொல்றதையெல்லாம் சொல்லிட்டு.. செய்றதையெல்லாம் செஞ்சுப்புட்டு.. அப்புறமென்ன கடைசீல முருகா.. முருகா..!

    ReplyDelete
  126. [[[தண்டோரா ...... said...
    அண்ணெ டெலிட் செய்யப்பட்ட சில பிராபகர், கதிர் மற்றும் நான் இட்டவை. சில நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி டெலிட் செய்தேன்]]]

    நல்ல விஷயம்.. நண்பர்களுக்காகத் தலை வணங்குவது பாராட்டத்தக்கது. எனக்கு வேலை வைக்காம நீங்களே தூக்கிட்டீங்களே. எவ்ளோ பெரிய மனசு உங்களுக்கு?

    ReplyDelete
  127. [[[சிங்கக்குட்டி said...

    உங்கள் வேதனை புரிகிறது உண்மைத் தமிழன். ஆனால் MBA மார்கெட்டிங் முறைகளில், கொரிலா மார்கெட்டிங் என்று ஒன்று உண்டு. அதாவது, முரண்பாடான ஒரு கருத்தையோ அல்லது மற்றவர் உணர்ச்சியை சூடாக்ககூடிய தகவலையோ வெளியிடுவது, அதனால் அதற்கு பிறகு மற்றவர்கள் தன்னை அறியாமலே அந்த கருத்துக்கு விளம்பர பிரதிநிதியாகி விடுவார்கள். இப்ப பாருங்க, நீங்க இதுக்கு ஒரு பதிவு போட்டு, அந்த பதிவுக்கு ஒரு லிங்க்கும் கொடுத்து அதை பெரிதாக்கி விளம்பரப்படுத்த, உங்க பதிவுக்கு 115 பின்னூட்டம் போட்ட அனைவரும், அந்த பதிவையும் சேர்த்து படிக்க, ஆக அந்த பதிவின் ஹிட் உயர, இங்கு ஒரு பதிவராக அவர் நோக்கம் நிறைவேறி விட்டது இல்லையா? .
    "அரசியலல்ல இது எல்லாம் சகஜம்டா-ன்னு" நல்ல கருத்துகளை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்றதை கழுவி விட்டு விட வேண்டும் என்பது இங்கு என் கருத்து.]]]

    அங்கே தினமும் ஆயிரக்கணக்கானோர் ஏற்கெனவே வாசகர்களாக உள்ளனர் சிங்கம்..

    என்னால படிச்சது இன்னுமொரு ஐநூறு பேராக இருக்கலாம். இருக்கட்டுமே..

    நமக்கு நாம சொல்ல வந்த கருத்து சரியானதுதானா என்பதுதானே கவலை.. போதும்..!

    ReplyDelete
  128. [[[மங்களூர் சிவா said...
    ஸ்ஸப்பா இந்த 'மூத்திர' பதிவர்கள் சல்லை தாங்க முடியலை.
    கண்டிக்கத்தக்கது.]]]

    சிவா.. ச்சீ.. யார் அந்த மூத்திர பதிவர்கள்..? அப்படீன்னு யாருமே இங்கே இல்லையே..?

    ReplyDelete
  129. நானும் போடுவேனுல்ல 2 ஓட்டு ...

    ReplyDelete
  130. ///Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    நானும் போடுவேனுல்ல 2 ஓட்டு///

    ஒரு நல்ல ஓட்டு.. ஒரு கள்ள ஓட்டா..?

    ReplyDelete
  131. [[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    செம கலெகசன்]]]

    அடப் போங்க பிரதர்.. ஆரோக்கியமான விவாதமா வரலியே..?

    வினவு தளத்துல போய் பாருங்க.. என்ன நடக்குதுன்னு..!

    ReplyDelete
  132. சரீய்ய்ய்ய்...

    நான் நல்லதனமாதானே கமெண்ட் போட்டேன்... அதும் உண்மையைச் சொல்லியிருந்தேனே உண்மைத் தமிழன் சார்...

    அதை ஏன் தூக்கிட்டீங்க!

    -சிவா

    ReplyDelete
  133. //பதிவர்களின் கருத்து பிடிக்காவிட்டால் படித்துவிட்டு பேசாமல் போய்விடலாம். இதைத்தான் கிட்டத்தட்ட அனைத்துப் பதிவர்களும் கடைப்பிடிக்கிறார்கள்.
    //

    வழிமொழிகிறேன்

    ReplyDelete
  134. நிறை குடங்கள் மட்டுமல்ல காலிக் குடங்களும் தளும்புவது இல்லை.ஏன் இவ்வளவு கோபம்?கூல் டவுன்.

    ReplyDelete
  135. [[[siva said...

    சரீய்ய்ய்ய்...

    நான் நல்லதனமாதானே கமெண்ட் போட்டேன்... அதும் உண்மையைச் சொல்லியிருந்தேனே உண்மைத் தமிழன் சார்...

    அதை ஏன் தூக்கிட்டீங்க!

    -சிவா]]]

    கடைசி வார்த்தை சரியில்லை சிவா..!

    விடுங்க..

    ReplyDelete
  136. [[[ஷாகுல் said...
    //பதிவர்களின் கருத்து பிடிக்காவிட்டால் படித்துவிட்டு பேசாமல் போய்விடலாம். இதைத்தான் கிட்டத்தட்ட அனைத்துப் பதிவர்களும் கடைப்பிடிக்கிறார்கள்.//

    வழிமொழிகிறேன்]]]

    இதனை ஒருவர் பாக்கிவிடாமல் அனைவரும் பின்பற்றினால் கூச்சல், குழப்பம் வராது..!

    ReplyDelete
  137. [[[jeevaflora said...
    நிறை குடங்கள் மட்டுமல்ல காலிக் குடங்களும் தளும்புவது இல்லை. ஏன் இவ்வளவு கோபம்? கூல் டவுன்.]]]

    கோபமில்லை ஜீவா.. ரொம்ப கூலாகத்தான் இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்..!

    ReplyDelete
  138. // jeevaflora said...
    நிறை குடங்கள் மட்டுமல்ல காலிக் குடங்களும் தளும்புவது இல்லை.//

    லக்கு விழுந்த சாரி.. டொக்கு விழுந்த (குடத்தைச் சொல்கிறேன்)அரை குறைக் குடங்கள்தாம் எப்போதும் தழும்புகின்றன!, என்று சொல்லாமல் சொற்களின் மேன்மை தெரிந்து நன்றாக உபயோகிக்கின்றீர்கள். இப்படி நாசுக்காக குத்திக் காட்டிய உங்கள் திறமையே திறமை!...

    ReplyDelete
  139. //நான்கூட இடையில் நான்கு மாதங்கள் பதிவு எழுதாமல் நிறுத்தியிருந்தேன்.//

    ஹ்ம்ம்.. அது ஒரு கனாக் காலம்.. அதை ஏன்ணே இப்போ ஞாபகப் ”படுத்தறிங்க”?

    ReplyDelete
  140. // ♥ தூயா ♥ Thooya ♥ said...

    //பதிவர்களின் கருத்து பிடிக்காவிட்டால் படித்துவிட்டு பேசாமல் போய்விடலாம். இதைத்தான் கிட்டத்தட்ட அனைத்துப் பதிவர்களும் கடைப்பிடிக்கிறார்கள்.
    //

    இது தான் நல்ல பிள்ளைக்கு அழகு//

    கரெக்ட்.. உன் சமையல் பதிவுகளுக்கு நான் இதைதான் கடைபிடிக்கிறேன். அப்போ நான் நல்ல பிள்ளை தான். :)

    ReplyDelete
  141. [[[ஊடகன் said...
    அருமை தோழா!]]]

    நன்றி தோழா..!

    ReplyDelete
  142. [[[நல்லதந்தி said...

    //jeevaflora said...
    நிறை குடங்கள் மட்டுமல்ல காலிக் குடங்களும் தளும்புவது இல்லை.//

    லக்கு விழுந்த சாரி.. டொக்கு விழுந்த (குடத்தைச் சொல்கிறேன்)அரை குறைக் குடங்கள்தாம் எப்போதும் தழும்புகின்றன!, என்று சொல்லாமல் சொற்களின் மேன்மை தெரிந்து நன்றாக உபயோகிக்கின்றீர்கள். இப்படி நாசுக்காக குத்திக் காட்டிய உங்கள் திறமையே திறமை!...]]]

    அவர் திறமை அது.. உமது திறமை வெளிப்படையாக்குவது..!

    ReplyDelete
  143. [[[SanjaiGandhi said...

    //நான்கூட இடையில் நான்கு மாதங்கள் பதிவு எழுதாமல் நிறுத்தியிருந்தேன்.//

    ஹ்ம்ம்.. அது ஒரு கனாக் காலம்.. அதை ஏன்ணே இப்போ ஞாபகப் ”படுத்தறிங்க”?]]]

    அடப்பாவி.. நான் எவ்ளோ பெரிய சோகத்தை அந்த ரெண்டு வரில அடக்கியிருக்கேன்..

    உனக்கு படுத்துற மாதிரியிருக்கா..?

    ReplyDelete
  144. [[[SanjaiGandhi said...

    // ♥ தூயா ♥ Thooya ♥ said...

    //பதிவர்களின் கருத்து பிடிக்காவிட்டால் படித்துவிட்டு பேசாமல் போய்விடலாம். இதைத்தான் கிட்டத்தட்ட அனைத்துப் பதிவர்களும் கடைப்பிடிக்கிறார்கள்.

    //இதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு//

    கரெக்ட்.. உன் சமையல் பதிவுகளுக்கு நான் இதைதான் கடைபிடிக்கிறேன். அப்போ நான் நல்ல பிள்ளைதான்.:)]]]

    நோ.. நோ.. சமையல் கத்துக்க முடியாதுன்னு அடம் பிடிக்கும் கெட்ட பிள்ளை..!

    ReplyDelete
  145. எதோ இந்த மாதிரி பதிவெல்லாம் எழுதப் போய் தான் தமிழ் இன்னம் வாழுது. ஆனா !! லக்கி அண்ணன் ஏன் இப்படி திட்டுனாருன்னு தெரியலை.

    அரசியல யார் வேணும்னாலும் விமர்சிக்கலாம். அது போல, யாருக்கு தினமும் எழுத முடியுதோ எழுதுங்கோ !!

    ஏங்க..சினிமாவ பார்த்துட்டு ஒவ்வொருத்தரும் தன் கருத்த பக்கத்துல உள்ளவன்கிட்ட சொல்லுவான். இப்ப பதிவா போடுறான். விமர்சனத்துக்கு ஏது அளவுகோல் ?

    ReplyDelete
  146. [[[பின்னோக்கி said...

    எதோ இந்த மாதிரி பதிவெல்லாம் எழுதப் போய்தான் தமிழ் இன்னம் வாழுது. ஆனா லக்கி அண்ணன் ஏன் இப்படி திட்டுனாருன்னு தெரியலை.

    அரசியல யார் வேணும்னாலும் விமர்சிக்கலாம். அது போல, யாருக்கு தினமும் எழுத முடியுதோ எழுதுங்கோ !!

    ஏங்க சினிமாவ பார்த்துட்டு ஒவ்வொருத்தரும் தன் கருத்த பக்கத்துல உள்ளவன்கிட்ட சொல்லுவான். இப்ப பதிவா போடுறான். விமர்சனத்துக்கு ஏது அளவுகோல்?]]]

    நல்லா சொன்னீங்க பின்னோக்கி ஸார்..!

    ReplyDelete
  147. cool cool true tamilan.

    none have rights to say like this. who ever begining will do like that.

    ReplyDelete
  148. உண்மைத் தமிழன் அண்ணே,

    ரொம்ப கோவமா இருக்கீங்க போலருக்கு....கொஞ்சம் நிதானமா விவாதிக்கலாமா??

    உங்களுக்கு என்ன கோவம்னு எனக்கு புரியலை...அவர் அவரோட கருத்தை சொல்லியிருக்கார்...விமர்சனம்னு கூட வச்சிக்கலாம்..கடவுள், காந்திலருந்து ஆரம்பிச்சி நேத்தி வந்த ரித்தீஷ் குமார் வரை விமர்சிக்கப் படாதவங்கன்ன்னு யாரும் இல்லை....அப்புறம் பதிவுகளை மட்டும் விமர்சிக்க கூடாதுன்னு எப்படி சொல்ல முடியும்??

    உண்மை தான்...அவங்கவங்க அவங்களுக்கு தெரிஞ்சதை எழுதறாங்க...ஒருத்தர் ஸ்டைல் இன்னொருத்தருக்கு வராது....சிலருக்கு உயர்ந்த இலக்கியம்னு நினைக்கிறது மத்தவங்களுக்கு குப்பையா தோணலாம்...ஆனா, பொதுவுல வைக்கும் போது அது குறித்து விமர்சனம் வரத்தானே செய்யும்??? பதிவர்களோட தனிப்பட்ட டைரியை படிச்சிட்டு இங்க யாரும் விமர்சனம் பண்ணலை(அப்படி செஞ்சா அது பெரிய தப்பு)....ஆனா, அவங்க பதிவுல எழுதும் போது விமர்சனம் வரத்தான் செய்யும்...

    கலக்கிட்டீங்க....சூப்பர்...தூள்...இப்படி மட்டும் தான் விமர்சனம் வரணுமா?? என்ன கருமாந்திரம்னும்னும் விமர்சனம் வரத்தானே செய்யும்??? அபபடி சொல்ல ஒரு தகுதி வேணும்னு எல்லாம் சொல்ல முடியாது...அது அந்த தனிப்பட்ட மனிதரின் கருத்து...அவ்வளவு தான??

    சினிமா, கடவுள், கருணாநிதி, மன்மோகன் சிங்குன்னு பதிவர்கள் விமர்சிக்காத விஷயம் இல்ல...அப்படி விமர்சன‌ம் செய்றதில தப்பும் இல்ல...அப்ப அவங்களை பத்தி விமர்சிச்சா ஏன் உங்களுக்கு இவ்ளோ வருத்தம் அண்ணே??

    அய்யோ, கை வலிக்க எழுதறாங்க அப்படிங்கிறதுக்காக கலக்கல் தலன்னு மட்டும் தான் விமர்சனம் செய்யணுமா?? அரைகுறையா இருக்குன்னு யாருக்காவது தோன்றினா அதையும் சொல்லத் தான் செய்வாங்க இல்லையா??

    அது ஏன் அரைகுறை இல்லைன்னு விவாதம் செய்யலாம்...ஆனா, இப்படியெல்லாம் விமர்சனம் செய்ய என்ன தகுதியிருக்கு, எப்படி செய்யலாம்னு எப்படி சொல்ல முடியும்??

    என்னவோ போங்க...எனக்கு மனசுல பட்டதை சொல்லிட்டேன்....தப்பா எடுத்துக்காதீங்க....எனக்கு இந்த பதிவின் கருத்துல ஒப்புதல் இல்லைங்கிறதுனால நான் ஓட்டுப் போடலைண்ணே...

    (பி.கு. அரசியல் எழுதுபவர்கள், நாரசமாய் எழுதும் அரைகுறை கவிஞர்கள்னு படிச்சதும் எனக்கு கருணாநிதி ஞாபகம் வந்தது....நாரச கவுஜைக‌ள் அவர் தான எழுதறாரு?? உங்களுக்கு வேற ஆங்கிள்ல புரிஞ்சிருக்கு...)

    ReplyDelete
  149. [[[குரங்கு said...
    cool cool true tamilan. none have rights to say like this. who ever begining will do like that.]]]

    இது அவருக்குப் புரியணுமே..!

    ReplyDelete
  150. அது சரி அண்ணே..

    உங்களுடைய ஆங்கிள்லேயும் நான் யோசிச்சுப் பார்த்துட்டேன்..! என் மனசு சமாதானமாக மாட்டேங்குது..

    நான் கால் குறையா? அரைகுறையான்னே தெரியாத நிலைல எந்தவித பதிவுக்கான கருத்தையும் முன் வைக்காமல் பொத்தாம் பொதுவாக அரைகுறைகள்ன்னு சொல்றது எனக்கு சரியா படலை..

    ஒரு கருத்து பரிமாற்றத்தில் அந்தக் கருத்து சரியா சொல்லப்படலைன்ற அர்த்தத்துல வாதாடும்போது வேண்ணா இந்த விமர்சனத்தை வைக்கலாம்.

    எதுவுமே இல்லாமல் பொதுவா சில பதிவர்கள் அப்படீன்னு சொல்லும்போது எனக்கு வந்த சந்தேகம் பலருக்கும் வர வாய்ப்புண்டு..!

    உங்களுடைய ஆங்கிள் நிச்சயம் குறிப்பிடத்தக்கது..

    பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  151. என்னடா இது? இத்தனை பேர் வந்து, பார்த்து சாப்பிட்டுட்டுப் போயிருக்காங்க. முக்கியமான ஆள் மட்டும் வரலையே..!

    ReplyDelete
  152. ////////
    என்னடா இது? இத்தனை பேர் வந்து, பார்த்து சாப்பிட்டுட்டுப் போயிருக்காங்க. முக்கியமான ஆள் மட்டும் வரலையே..!
    /////////

    ஓக்கே...!! வந்துட்டேன்..! இப்ப இன்னா மேட்டரு??????

    ReplyDelete
  153. [[[ஹாலிவுட் பாலா said...
    //என்னடா இது? இத்தனை பேர் வந்து, பார்த்து சாப்பிட்டுட்டுப் போயிருக்காங்க. முக்கியமான ஆள் மட்டும் வரலையே..!//

    ஓக்கே...!! வந்துட்டேன்..! இப்ப இன்னா மேட்டரு??????]]]

    ம்.. வெத்தலைல சுண்ணாம்பு இல்லையாம்..!

    என்ன கேள்வி இது..?

    படிக்காமயே பின்னூட்டமா..? அட கண்றாவியே..!

    முருகா.. இந்த ஹாலிவுட் பாலாவை கொஞ்சம் தனியா கவனி.. அப்பத்தான் இந்த நக்கலெல்லாம் ஓடிப் போயிரும்..!

    ReplyDelete