Pages

Sunday, October 11, 2009

இந்திய மாநிலத்தின் முதல்வருக்கு 4 மனைவிகள்... தமிழகம் பரவாயில்லை..!

11-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மாலைப் பத்திரிகைகளை லேசாக புரட்டிக் கொண்டிருந்தபோது கண்ணில்பட்ட இந்தச் செய்தியைப் படித்து ஏற்கெனவே கொதிப்பில் இருக்கும் என் நெஞ்சு இப்போது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

அந்தச் செய்தியை நீங்களும் படித்து என் வயிற்றெரிச்சலில் பங்கெடுத்துக் கொள்ளுமாய் அன்போடும், பணிவோடும் கேட்டுக் கொள்கிறேன்..

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இந்திய-சீன எல்லையில் உள்ளது அருணாச்சலப்பிரதேச மாநிலம். மலையும், மலைசார்ந்த பிரதேசமுமான இம்மாநிலம் பெண் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாத பூமியாக இருக்கிறது என்பதுதான் இன்றைய லேட்டஸ்ட் செய்திகள்.


இம்மாநிலத்தில் வருகின்ற 13-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்த சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கை 60. இங்கு தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெறுகிறது.

முதல்மந்திரியாக டோர்ஜிகாந்து பதவியில் உள்ளார். 2 முறை இவர் போட்டியில்லாமல் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது 3-வது முறையாகவும் முக்தோ தொகுதியில் இருந்து போட்டியில்லாமல் தேர்ந்து எடுக்கப்படவுள்ளாராம். இவரை எதிர்த்து இத்தொகுதியில் யாருமே போட்டியிட முன் வரவில்லையாம்.


விஷயம் அதுவல்ல.. இந்த மாநிலத்தின் அரசியல்வியாதிகள் தாங்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தங்களது குடும்பத்தை பற்றித் தெரிவித்திருக்கும் சில உண்மைகள் தற்போதைய பரபரப்பிற்குக் காரணம்.



முதல் மந்திரி டோர்ஜி காந்து தாக்கல் செய்துள்ள தனது வேட்புமனுவில் தனக்கு 4 மனைவிகள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரது பெயரிலும் சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மொத்தமாக குடும்பச் சொத்து 43 கோடிக்கு இருக்கிறதாம். இவருக்கு மொத்தமாகச் சேர்ந்து 4 பையன்களும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த முதல் மந்திரியைப் போலவே இந்த மாநிலத்தில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களில் பெரும்பாலானோர்க்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிமார்கள் இருப்பது தற்போது வேட்பு மனு தாக்கலின்போது தெரிய வந்துள்ளது.


மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியான கெகாங் அபாங்குக்கும் 4 மனைவிகள்தானாம்.. இவர் காங்கிரஸ் வேட்பாளராக டுடிங்-யிங்-ரியாங் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதேபோல் முன்னாள் துணை முதல் மந்திரி ஹேமாங்தோலாவுக்கு 3 மனைவிகள். இவர் சாயாங் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

செபா மேற்கு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மந்திரி ஹோரி நாதூங் என்பவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

தற்போதைய சட்டப் பேரவையின் துணை சபாநாயகர் நகரா மார்டேவுக்கு 2 மனைவிகள்.. இவர் ஏற்கெனவே மந்திரியாகவும் பதவி வகித்தவராம்.

கோன்சா கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் டி.எல்.ராஜ்குமாருக்கு 2 மனைவிகள். இவரும் நீண்ட காலம் மந்திரியாக இருந்தவர்.

இதேபோல் பாரதீய ஜனதா கட்சியிலும் பல தார கணவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

சட்டா நகரில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடும் லெசிலெகுக்கு 3 மனைவிகள். திருணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தலோமுக்லிக்கு 2 மனைவிகள்..

மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் அருணாச்சலப்பிரதேசத்தின் கலாச்சாரம் மற்ற இந்திய மாநிலங்களிலிருந்து வேறுபட்டது என்கிறார்கள்.


இங்கு செல்வாக்குமிக்க மனிதர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது என்கின்றன அம்மாநில பத்திரிகை செய்திகள்.

இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் இந்த பலதார மணம் விஷயத்தில் சட்டம் வேறுபட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

அரசியல் சட்டத்தை வகுத்தவர்களில் அதிகம்பேர் ஆண்களாகவே இருந்து தொலைத்துவிட்டதினால் அதில் ஆண்களுக்கு சாதகமாக "முதல் மனைவி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையெனில், பல தார மணம் தவறில்லை.." என்று ஒரு உட்பிரிவைச் சேர்த்து ஆண்களுக்கு பாதுகாப்பு வழங்கிவிட்டார்கள்.

இதன்படி ஒரு அரசு ஊழியர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் கொண்டவராக இருப்பதை இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. தமிழ்நாட்டிலும் அந்த சட்டம் இருக்கிறது. அதில் இருக்கும் உட்பிரிவான "முதல் மனைவி ஆட்சேபிக்க வேண்டும்" என்ற வரிகளை வைத்துத்தான் நமது கழகத்தின் தலையில் இருந்து வால்வரையிலும் இதுநாளும் தப்பித்து வந்திருக்கிறார்கள்.

ஆனாலும், "முதல் மனைவி ஆட்சேபம் தெரிவிக்காவிட்டாலும்கூட ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் உண்மையாக இருந்தால், அவர்களை அரசுப் பணியில் இருந்து நீக்கலாம்.." என்று தமிழக அரசின் பணியாளர் நடத்தை விதிகளில் விதிமுறை இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்.

"அப்புறம் எப்படி ஒருத்தர், ஐந்து முறை முதல்வரானார்..?" என்று திருப்பிக் கேட்டதற்கு "ஸாரி எங்களுக்குத் தெரியாது.." என்கிறார்கள்.


"இதை அக்கட்சிகளின் மகளிரணியினரே கேட்காமல் வாயைப் பொத்திக் கொண்டிருக்க.. உனக்கெதுக்குடா இந்த வேலை..?" அப்படீன்னு நீங்க கேக்குறீங்களா..?

ஓகே.. எனக்கெதுக்கு பொறாமை..?

ஆனாலும் என் 'வயித்தெரிச்சல்' இவங்களை சும்மாவிடாதுன்றதை மட்டும் சொல்லிக்கிறேன்.. -))))))))))

96 comments:

  1. உங்க பதிவில் ,முதல் முறையாக முதல்ல கமெண்ட்

    ReplyDelete
  2. ஹைய்யா யாரும் இல்லையா

    ReplyDelete
  3. /// ஆனாலும் என் 'வயித்தெரிச்சல்' இவங்களை சும்மாவிடாதுன்றதை மட்டும் சொல்லிக்கிறேன்.. -)))))))))) //


    கூல் சரவணன் !!

    என்ன கொடுமை இது சரவணன் !!!

    ReplyDelete
  4. சூப்பர் 1லிருந்து 5 வரை நாந்தானா ..

    ReplyDelete
  5. உங்க ஏக்கம் புரியுது உ த

    ReplyDelete
  6. உண்மையில் வருத்தப்பட வைக்கும் விசயம்தான். அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு சாதகமாய் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்திக் கொள்வது அசாத்தியமாகும் வரை இக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்காது :-(

    உங்களின் வருத்தத்தில் நானும் இணைகிறேன்!

    ReplyDelete
  7. //ஆனாலும் என் 'வயித்தெரிச்சல்' இவங்களை சும்மாவிடாதுன்றதை மட்டும் சொல்லிக்கிறேன்//
    : ))) தேர்தலில் தோற்றால் உங்களுக்கு சந்தோசமாக இருக்குமா ???

    ReplyDelete
  8. கோவம் வந்தால் அமைதியா 2 நிமிசம் உங்காருங்க

    தண்ணி குடிங்க பாஸ்

    :)

    ReplyDelete
  9. முதல்வர் போன்ற அரசியல் பதவிகள் அரசு பணியாளர் என்று எடுத்துக்கொள்ளப்படாது என்று நினைக்கிறேன்.
    தெரியவில்லை, லக்கி விளக்கினால் நன்றாக இருக்கும் ;)

    ReplyDelete
  10. ஸ்டார்ஜன் ஸார்,

    முதல் வருகைக்கும், தொடர்ச்சியான பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்..!

    ReplyDelete
  11. [[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    //ஆனாலும் என் 'வயித்தெரிச்சல்' இவங்களை சும்மாவிடாதுன்றதை மட்டும் சொல்லிக்கிறேன்.. -))))))))))//


    கூல் சரவணன்!! என்ன கொடுமை இது சரவணன்!!

    கொடுமைதான்.. அதுனாலதான நெஞ்சு கொதிக்குது..!

    ReplyDelete
  12. [[[வடகரை வேலன் said...
    உங்க ஏக்கம் புரியுது உ த]]]

    -)))))))))))))))))))

    ReplyDelete
  13. [[[சென்ஷி said...

    உண்மையில் வருத்தப்பட வைக்கும் விசயம்தான். அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு சாதகமாய் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்திக் கொள்வது அசாத்தியமாகும்வரை இக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்காது :-( உங்களின் வருத்தத்தில் நானும் இணைகிறேன்!]]]

    இதையெல்லாம் அடுத்தத் தலைமுறைக்கு நாமதான் கொண்டு போகணும் தம்பி..!

    வருகைக்கு நன்றி ராசா..!

    ReplyDelete
  14. [[[gulf-tamilan said...

    //ஆனாலும் என் 'வயித்தெரிச்சல்' இவங்களை சும்மாவிடாதுன்றதை மட்டும் சொல்லிக்கிறேன்//

    : ))) தேர்தலில் தோற்றால் உங்களுக்கு சந்தோசமாக இருக்குமா ???]]]

    இல்லை.. அரசியலைவிட்டே இவர்கள் ஒதுங்கினால்தான் சந்தோஷமாக இருக்கும்..!

    ReplyDelete
  15. [[[மின்னுது மின்னல் said...

    கோவம் வந்தால் அமைதியா 2 நிமிசம் உங்காருங்க

    தண்ணி குடிங்க பாஸ்

    :)]]]

    குடிச்சி்ட்டேன் மின்னலு..!

    ReplyDelete
  16. [[[Nataraj said...
    முதல்வர் போன்ற அரசியல் பதவிகள் அரசு பணியாளர் என்று எடுத்துக்கொள்ளப்படாது என்று நினைக்கிறேன். தெரியவில்லை, லக்கி விளக்கினால் நன்றாக இருக்கும் ;)]]]

    அடப்பாவமே..

    ஜெயலலிதா மேல இருக்குற சொத்துக்குவிப்பு வழக்கு, லண்டன் ஓட்டல் வழக்கு, டிடி வழக்குல எல்லாம் முதல் குற்றச்சாட்டு என்னன்னு நினைக்கிறீங்க..?

    ReplyDelete
  17. :-)))ஐயா..வர வர எதுக்குத்தான் டென்ஷன் ஆறதுன்னு இல்லாமா ஆகிக்கிட்டு இருக்கீங்க..

    ReplyDelete
  18. //ஆனாலும் என் 'வயித்தெரிச்சல்' இவங்களை சும்மாவிடாதுன்றதை மட்டும் சொல்லிக்கிறேன்.. //

    :(((

    ReplyDelete
  19. அண்ணே இதெல்லாம் வழக்கமான முதல்வருக்கான தகுதியா கூட இருக்கலாம்.. யார் கண்டா..

    /*/*அரசியல் சட்டத்தை வகுத்தவர்களில் அதிகம்பேர் ஆண்களாகவே இருந்து தொலைத்துவிட்டதினால் அதில் ஆண்களுக்கு சாதகமாக "முதல் மனைவி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையெனில், பல தார மணம் தவறில்லை.." என்று ஒரு உட்பிரிவைச் சேர்த்து ஆண்களுக்கு பாதுகாப்பு வழங்கிவிட்டார்க*/*/

    அரசியல்வாதிங்கனா சும்மாவா??? வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாறி ஏத்தி புட்டாய்ங்க இல்ல... :))

    /*"அப்புறம் எப்படி ஒருத்தர், ஐந்து முறை முதல்வரானார்..?" என்று திருப்பிக் கேட்டதற்கு "ஸாரி எங்களுக்குத் தெரியாது.." என்கிறார்கள்.*/

    யாருக்கு விடை தெரியாத கேள்விக்கு விடை கேட்டா எப்டிண்ணே???

    ReplyDelete
  20. [[[T.V.Radhakrishnan said...
    :-)))ஐயா.. வர வர எதுக்குத்தான் டென்ஷன் ஆறதுன்னு இல்லாமா ஆகிக்கிட்டு இருக்கீங்க..]]]

    ஐயா..

    நம்ம நாட்டோட இன்னைய நிலைமையை நினைச்சா டென்ஷன் கூடத்தான் ஸார் செய்யுது..

    இதென்ன சாதாரண நியூஸா..?

    ReplyDelete
  21. [[[பீர் | Peer said...

    //ஆனாலும் என் 'வயித்தெரிச்சல்' இவங்களை சும்மாவிடாதுன்றதை மட்டும் சொல்லிக்கிறேன்.. //

    :(((]]]

    பீர்..

    சிரிப்பானின் அர்த்தம் எனக்கும் புரிகிறது..!

    ஆனாலும் உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும்..!

    ReplyDelete
  22. [[[kanagu said...

    அண்ணே இதெல்லாம் வழக்கமான முதல்வருக்கான தகுதியா கூட இருக்கலாம்.. யார் கண்டா..?]]]

    இனிமே இதுதான் தகுதின்னு வரப் போகுது..!

    //அரசியல் சட்டத்தை வகுத்தவர்களில் அதிகம்பேர் ஆண்களாகவே இருந்து தொலைத்துவிட்டதினால் அதில் ஆண்களுக்கு சாதகமாக "முதல் மனைவி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையெனில், பல தார மணம் தவறில்லை.." என்று ஒரு உட்பிரிவைச் சேர்த்து ஆண்களுக்கு பாதுகாப்பு வழங்கிவிட்டார்க*/*/

    அரசியல்வாதிங்கனா சும்மாவா??? வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாறி ஏத்தி புட்டாய்ங்க இல்ல... :))]]]

    இதை எதிர்த்து போர்க்குரல் கொடுக்க வேண்டாமா இந்தப் பெண் குலத்தினர்..!

    /*"அப்புறம் எப்படி ஒருத்தர், ஐந்து முறை முதல்வரானார்..?" என்று திருப்பிக் கேட்டதற்கு "ஸாரி எங்களுக்குத் தெரியாது.." என்கிறார்கள்.*/
    யாருக்கு விடை தெரியாத கேள்விக்கு விடை கேட்டா எப்டிண்ணே???]]]

    அப்படீங்கிறே..!

    ReplyDelete
  23. 137 பேர் பார்த்தும் வெறும் 11 பேர்தான் கமெண்ட்டா..?

    மூணே மூணு ஓட்டுதானா..?

    இந்தக் கொடுமையை எங்க போய்ச் சொல்றது..?

    முருகா..!

    ReplyDelete
  24. /37 பேர் பார்த்தும் வெறும் 11 பேர்தான் கமெண்ட்டா..?

    மூணே மூணு ஓட்டுதானா..?

    இந்தக் கொடுமையை எங்க போய்ச் சொல்றது..?/

    இப்பப் புரியுதா, என் இவங்க இத்தனை தாரம்,கிளை, மக்கள், வாரிசுகள்னு பெருஇக்கிகிட்டே போறாங்கன்னு!

    ஒண்ணைக் கட்டினவனே தடுமாறிக்கிட்டிருக்கான்! இதுல நாலு, ஐந்துன்னு மேல விழுந்து பிடுங்கினா என்ன செய்வான் பாவம்னு நினைச்சுப் பாத்தீங்களா?

    இக்கரைக்கு அக்கரை பச்சையாத் தான் தெரியும்!

    இதுல ரெண்டைக் கட்டின முருகன் துணைக்கா?!

    ReplyDelete
  25. [[[கிருஷ்ணமூர்த்தி said...

    /37 பேர் பார்த்தும் வெறும் 11 பேர்தான் கமெண்ட்டா..? மூணே மூணு ஓட்டுதானா..? இந்தக் கொடுமையை எங்க போய்ச் சொல்றது..?/

    இப்பப் புரியுதா, என் இவங்க இத்தனை தாரம், கிளை, மக்கள், வாரிசுகள்னு பெருகிகிட்டே போறாங்கன்னு!

    ஒண்ணைக் கட்டினவனே தடுமாறிக்கிட்டிருக்கான்! இதுல நாலு, ஐந்துன்னு மேல விழுந்து பிடுங்கினா என்ன செய்வான் பாவம்னு நினைச்சுப் பாத்தீங்களா?

    இக்கரைக்கு அக்கரை பச்சையாத்தான் தெரியும்!

    இதுல ரெண்டைக் கட்டின முருகன் துணைக்கா?!]]]

    ஐயா.. அப்ப எல்லாரும் அதே பாசத்துலதான் இருக்காங்கன்னு சொல்றீங்களா..?

    ReplyDelete
  26. அடுத்த ஜென்பத்தில் எதோ அப்பிரிக்காவுல ஜூலுவாகப் பொறக்குறதுக்குப் பதிலா அருணாச்சலப் பிரதேசத்துல பொறந்து குறைந்தது 5 பொண்டாட்டியாவது கட்டுங்க சார். அப்பொழுது வலைப்பதிவு ஆரம்பிச்சு "உண்மை அருணாச்சலம்" என்று பெயர் வச்சு உங்க எரியுற வயத்துல பாலை ஊற்றிக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  27. //இதையெல்லாம் அடுத்தத் தலைமுறைக்கு நாமதான் கொண்டு போகணும் தம்பி..!//

    அதுக்குத்தான் அப்போலேந்து சொல்றேன். சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க அண்ணாத்த! :)

    ReplyDelete
  28. /அப்ப எல்லாரும் அதே பாசத்துலதான் இருக்காங்க/

    எதே பாசத்துல? நான் அவஸ்தையை மட்டும் தான் சொன்னேன்!

    அப்புறம் தமிழ்நாடு தேவலைன்னு எதை வச்சுச் சொன்னீங்க?

    நம்மூரு கணக்குல எப்பவும் வீக்! கொறைச்சுத் தான் சொல்லும்!

    ReplyDelete
  29. [[[வஜ்ரா said...
    அடுத்த ஜென்பத்தில் எதோ அப்பிரிக்காவுல ஜூலுவாகப் பொறக்குறதுக்குப் பதிலா அருணாச்சலப் பிரதேசத்துல பொறந்து குறைந்தது 5 பொண்டாட்டியாவது கட்டுங்க சார். அப்பொழுது வலைப்பதிவு ஆரம்பிச்சு "உண்மை அருணாச்சலம்" என்று பெயர் வச்சு உங்க எரியுற வயத்துல பாலை ஊற்றிக்கொள்ளுங்கள்.]]]

    வஜ்ரா...

    அருமையான யோசனை..

    இதுக்கு என் அப்பன் முருகனின் தயவு வேண்டுமே..?

    ReplyDelete
  30. [[சென்ஷி said...

    //இதையெல்லாம் அடுத்தத் தலைமுறைக்கு நாமதான் கொண்டு போகணும் தம்பி..!//

    அதுக்குத்தான் அப்போலேந்து சொல்றேன். சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க அண்ணாத்த! :)]]]

    அப்படியும் ஒண்ணுதான ராசா பண்ண முடியும்..?

    ReplyDelete
  31. [[[கிருஷ்ணமூர்த்தி said...

    /அப்ப எல்லாரும் அதே பாசத்துலதான் இருக்காங்க/

    எதே பாசத்துல? நான் அவஸ்தையை மட்டும்தான் சொன்னேன்!

    அப்புறம் தமிழ்நாடு தேவலைன்னு எதை வச்சுச் சொன்னீங்க?

    நம்மூரு கணக்குல எப்பவும் வீக்! கொறைச்சுத்தான் சொல்லும்!]]]

    ஐயா..

    அந்த ஊர்க்கார அரசியல்வியாதிகள் தைரியமா, வெளிப்படையா தேர்தல் கமிஷனுக்கு அதைச் சொல்றாங்கன்னா அந்த ஊர் நிலைமை எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாருங்க..!

    நம்ம ஊர்ல அப்பப்ப தொட்டு்ட்டுப் போற மாதிரி ஒரு கணக்கு வைச்சிருப்பாங்க..

    இது மாதிரி மனைவி அந்தஸ்தெல்லாம் கொடுக்க மாட்டாங்க..

    கொடுத்தாங்க டப்பா டான்ஸ் ஆடிருமே..!

    ReplyDelete
  32. தமிழா

    "அந்தச் செய்தியை நீங்களும் படித்து என் வயிற்றெரிச்சலில் பங்கெடுத்துக் கொள்ளுமாய் அன்போடும், பணிவோடும் கேட்டுக் கொள்கிறேன்..'

    தலை எனக்கு திங்கள், செவ்வாய் வேலை பளு அதிகமாக இருக்கும் எனவே புதன் கிழமை உங்கள் வயிற்றெரிச்சலில் பங்கெடுத்துக் கொள்கிறேன்"


    ஒரு யுத்துக்கே வரவேண்டிய நியமான மன எழுச்சியாக இந்த பதிவை (உங்களையும் சேர்த்துதான் தலை) பார்கிறேன்.

    ReplyDelete
  33. உ.த.அண்ணா!
    சிலகாலமாக உங்கள் இடுகைகள் ஒரு தினுசாகவே இருக்கின்றன .சீக்கிரமே உங்களை ஒரு அண்ணியுடன் காண வேண்டுமென்று முருகனை வேண்டுகிறேன் .அல்லது இப்படியே போனால் உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாகிவிடும்.
    இந்தியாவின் சட்டப்படி முதல் மனைவி சம்மதித்தால் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாமா?மிகவும் வெளிப்படையான கலாச்சாரம் கொண்ட மேற்கு நாடுகளில் கூட ஒரே நேரத்தில் ஒரு மனைவியைத்தான் அனுமதிப்பார்கள் ,பலதாரம் என்றால் உடனே சிறைக்குள் தள்ளுவார்கள். ஆனால் கற்பு கலாச்சாரம் என்று முழங்கும் தென்னாசிய நாடுகளில் கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே என்று ஆண்கள் தங்களுக்கு வசதியாக சட்டங்களை ஆக்கியுள்ளார்கள்,அநியாயம்! அக்கிரமம்!
    --வானதி

    ReplyDelete
  34. அடியேங்கிறதுக்கு இங்க ஒண்ணையும் காணமாம்.. இது மத்தவஙக்ளை பார்த்து பொறாமை வேற..:)

    ReplyDelete
  35. விடுங்க பாஸ்
    மனைவி ஒன்றுதான் மீதி எல்லாம் துணைவி

    ReplyDelete
  36. //ஆனாலும், "முதல் மனைவி ஆட்சேபம் தெரிவிக்காவிட்டாலும்கூட ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் உண்மையாக இருந்தால், அவர்களை அரசுப் பணியில் இருந்து நீக்கலாம்.." என்று தமிழக அரசின் பணியாளர் நடத்தை விதிகளில் விதிமுறை இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்.//


    போகிற போக்கில் கொளுத்தி போடுவது தவறு சரவணன்... ஆதாரத்தை போட்டா நலலா இருக்கும்...

    குருநாதர் பாணி அப்படியே :)

    நமக்கு சனி நம்மிகிட்ட தான்..அடுத்தவஙக மூலமா இல்ல...

    ReplyDelete
  37. \\vanathy said...
    உ.த.அண்ணா!
    சிலகாலமாக உங்கள் இடுகைகள் ஒரு தினுசாகவே இருக்கின்றன .சீக்கிரமே உங்களை ஒரு அண்ணியுடன் காண வேண்டுமென்று முருகனை வேண்டுகிறேன் .அல்லது இப்படியே போனால் உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாகிவிடும்.//


    Repeat hea ..

    ReplyDelete
  38. http://in.answers.yahoo.com/question/index?qid=20080925142802AAUierI

    http://www.sudhirlaw.com/indianlaw/marriage-divorces/enactments/HMA55.htm

    பல தாரம் சட்டபடி தப்பு தலைவா...ஆனா சட்டம் ஒரு சில ஆதிவாசிகளுக்கு பல தார மணத்துக்கு அங்கிகாரம் குடுத்துருக்கு..அது அவங்க இனத்த பாதுகாக்க..நம்ம தலைவர்கள் சட்டத்துல ஓட்ட கண்டு பிடிச்சு சொத்துக்குவிப்பு பண்ற மாதிரி தான் இதுவும்...சட்டத்துல ஓட்ட...
    ஆதாரத்தை வைச்சு கிட்டு எழுதுங்க பாஸ்....

    ReplyDelete
  39. உண்மைத் தமிழன்,

    உங்களுக்கு வயித்தெரிச்சல் இருக்கோ இல்லையோ தெரியாது.ஆனால் மஞ்ச துண்டு மட்டும் விஷ்யம் கேள்விப் ப்ட்ட நாளிலிருந்து பொறாமையில் வெந்து கொண்டிருக்கும்.

    அது சரி இந்த முதலமைச்சரும் அருணாச்சல இன மான தலைவரா?

    ReplyDelete
  40. ஆப்பரசன் வந்துட்டாராம்

    ReplyDelete
  41. [[[♠புதுவை சிவா♠ said...

    தமிழா, "அந்தச் செய்தியை நீங்களும் படித்து என் வயிற்றெரிச்சலில் பங்கெடுத்துக் கொள்ளுமாய் அன்போடும், பணிவோடும் கேட்டுக் கொள்கிறேன்..'

    தலை எனக்கு திங்கள், செவ்வாய் வேலை பளு அதிகமாக இருக்கும் எனவே புதன்கிழமை உங்கள் வயிற்றெரிச்சலில் பங்கெடுத்துக் கொள்கிறேன்"]]]

    அடடா.. இப்படியொரு கரிசனமா..? வித்தியாசமா இருக்கே..!

    [[[ஒரு யுத்துக்கே வரவேண்டிய நியமான மன எழுச்சியாக இந்த பதிவை (உங்களையும் சேர்த்துதான் தலை) பார்கிறேன்.]]]

    அப்ப நீங்களும் யூத்துதான் சிவா.. வாங்க கை கோர்ப்போம்..

    ReplyDelete
  42. [[[vanathy said...

    உ.த.அண்ணா! சில காலமாக உங்கள் இடுகைகள் ஒரு தினுசாகவே இருக்கின்றன. சீக்கிரமே உங்களை ஒரு அண்ணியுடன் காண வேண்டுமென்று முருகனை வேண்டுகிறேன். அல்லது இப்படியே போனால் உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாகிவிடும்.]]]

    அதுக்காகத்தான் இப்படி எழுதியாவது என் டென்ஷனை குறைக்கலாம்னு பார்க்குறேன்..

    [[[இந்தியாவின் சட்டப்படி முதல் மனைவி சம்மதித்தால் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாமா? மிகவும் வெளிப்படையான கலாச்சாரம் கொண்ட மேற்கு நாடுகளில் கூட ஒரே நேரத்தில் ஒரு மனைவியைத்தான் அனுமதிப்பார்கள். பலதாரம் என்றால் உடனே சிறைக்குள் தள்ளுவார்கள். ஆனால் கற்பு கலாச்சாரம் என்று முழங்கும் தென்னாசிய நாடுகளில் கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே என்று ஆண்கள் தங்களுக்கு வசதியாக சட்டங்களை ஆக்கியுள்ளார்கள், அநியாயம்! அக்கிரமம்!
    --வானதி]]]

    உண்மை வானதி..

    இங்கே கற்பு, குடும்பம், பெண் தெய்வம் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி மறைமுகமாக ஆணாதிக்கத்தை நிலை நாட்டியிருக்கிறார்கள்.

    எல்லாம் நயவஞ்சக ஆண்கள் கொண்ட கூட்டம்..!

    ReplyDelete
  43. [[[shortfilmindia.com said...
    அடியேங்கிறதுக்கு இங்க ஒண்ணையும் காணமாம்.. இது மத்தவஙக்ளை பார்த்து பொறாமை வேற..:)]]]

    யோவ் ஷார்ட்பிலிம்மு..!

    உமக்கு ஏன்யா வயித்தெரிச்சல்..

    அதுதான் ஒண்ணுக்குரெண்டு லாகின் வைச்சிருக்கீல்லே.. இப்படித்தான் பேசுவ..!!!

    ReplyDelete
  44. [[[DHANA said...
    விடுங்க பாஸ். மனைவி ஒன்றுதான் மீதி எல்லாம் துணைவி.]]]

    அது நாம பேசுறதுக்கு மட்டும்தான். அரசியல் சட்டத்தின் முன் அனைவரும் மனைவிகள்தான்..!

    ReplyDelete
  45. [[[முத்து தமிழினி said...

    //ஆனாலும், "முதல் மனைவி ஆட்சேபம் தெரிவிக்காவிட்டாலும்கூட ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் உண்மையாக இருந்தால், அவர்களை அரசுப் பணியில் இருந்து நீக்கலாம்.." என்று தமிழக அரசின் பணியாளர் நடத்தை விதிகளில் விதிமுறை இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்.//

    போகிற போக்கில் கொளுத்தி போடுவது தவறு சரவணன்... ஆதாரத்தை போட்டா நலலா இருக்கும்... குருநாதர் பாணி அப்படியே :)]]]

    அண்ணே.. உண்மை அதுதான்..!

    [[[நமக்கு சனி நம்மிகிட்டதான்.. அடுத்தவஙக மூலமா இல்ல...]]]

    இதையெல்லாம் நினைக்காம இருக்கலாம்னா பேப்பர், புத்தகமெல்லாம் படிக்காம இருக்கணும். முடியுங்களா..?

    ReplyDelete
  46. [[[Romeoboy said...

    \\vanathy said...
    உ.த.அண்ணா!
    சில காலமாக உங்கள் இடுகைகள் ஒரு தினுசாகவே இருக்கின்றன. சீக்கிரமே உங்களை ஒரு அண்ணியுடன் காண வேண்டுமென்று முருகனை வேண்டுகிறேன். அல்லது இப்படியே போனால் உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாகிவிடும்.//

    Repeat hea ..]]]

    ஓ.. ரிப்பீட்டா..? வாக்கு பலித்தால் சரி..!

    ReplyDelete
  47. [[[செந்தில் நாதன் said...

    http://in.answers.yahoo.com/question/index?qid=20080925142802AAUierI

    http://www.sudhirlaw.com/indianlaw/marriage-divorces/enactments/HMA55.htm

    பல தாரம் சட்டபடி தப்பு தலைவா... ஆனா சட்டம் ஒரு சில ஆதிவாசிகளுக்கு பல தார மணத்துக்கு அங்கிகாரம் குடுத்துருக்கு.. அது அவங்க இனத்த பாதுகாக்க.. நம்ம தலைவர்கள் சட்டத்துல ஓட்ட கண்டு பிடிச்சு சொத்துக்குவிப்பு பண்ற மாதிரிதான் இதுவும்... சட்டத்துல ஓட்ட...
    ஆதாரத்தை வைச்சு கிட்டு எழுதுங்க பாஸ்....]]]

    அது சரி பாஸ்..!

    அப்ப நம்ம தமிழ்நாட்டுல எப்படி முதல்வராவும், சிலர் மந்திரியாவும் இருக்காங்க..

    சட்டப்படி தப்புன்னா இந்நேரம் சிலர் கோர்ட்டுக்கு போயிருப்பாங்களே..!

    ஏன் முடியலே..?

    ReplyDelete
  48. ///[[[செந்தில் நாதன் said...

    http://in.answers.yahoo.com/question/index?qid=20080925142802AAUierI

    http://www.sudhirlaw.com/indianlaw/marriage-divorces/enactments/HMA55.htm

    பல தாரம் சட்டபடி தப்பு தலைவா... ஆனா சட்டம் ஒரு சில ஆதிவாசிகளுக்கு பல தார மணத்துக்கு அங்கிகாரம் குடுத்துருக்கு.. அது அவங்க இனத்த பாதுகாக்க.. நம்ம தலைவர்கள் சட்டத்துல ஓட்ட கண்டு பிடிச்சு சொத்துக்குவிப்பு பண்ற மாதிரிதான் இதுவும்... சட்டத்துல ஓட்ட...
    ஆதாரத்தை வைச்சு கிட்டு எழுதுங்க பாஸ்....]]]

    அது சரி பாஸ்..!

    அப்ப நம்ம தமிழ்நாட்டுல எப்படி முதல்வராவும், சிலர் மந்திரியாவும் இருக்காங்க..

    சட்டப்படி தப்புன்னா இந்நேரம் சிலர் கோர்ட்டுக்கு போயிருப்பாங்களே..!

    //

    அவங்களும் ஆதிவசிகளோ என்னமோ? யார் கண்டா?

    ReplyDelete
  49. வர வர உங்களோட வயித்தெரிச்சலும் வருத்தங்களும் போற திசையே சரியா இல்லையே..

    ஏதோ இதெல்லாம் உங்களுக்கே நல்லயிருந்தா சரிதான் பாஸ்..

    ReplyDelete
  50. [[[பித்தன் said...
    Cool....]]]

    முடியல பித்தன்..!

    ReplyDelete
  51. [[[செந்தில் நாதன் said...
    http://in.answers.yahoo.com/question/index?qid=20080925142802AAUierI
    http://www.sudhirlaw.com/indianlaw/marriage-divorces/enactments/HMA55.htm

    பல தாரம் சட்டபடி தப்பு தலைவா... ஆனா சட்டம் ஒரு சில ஆதிவாசிகளுக்கு பல தார மணத்துக்கு அங்கிகாரம் குடுத்துருக்கு.. அது அவங்க இனத்த பாதுகாக்க.. நம்ம தலைவர்கள் சட்டத்துல ஓட்ட கண்டு பிடிச்சு சொத்துக் குவிப்பு பண்ற மாதிரிதான் இதுவும்... சட்டத்துல ஓட்ட...
    ஆதாரத்தை வைச்சுகிட்டு எழுதுங்க பாஸ்....]]]

    அது சரி பாஸ்..! அப்ப நம்ம தமிழ்நாட்டுல எப்படி முதல்வராவும், சிலர் மந்திரியாவும் இருக்காங்க..
    சட்டப்படி தப்புன்னா இந்நேரம் சிலர் கோர்ட்டுக்கு போயிருப்பாங்களே..!//

    அவங்களும் ஆதிவசிகளோ என்னமோ? யார் கண்டா?]]

    அவங்க ஆதிவாசிகள் இல்லை.. நம்மை ஆள வந்த எஜமானர்கள். நாம்தான் ஒன்றுமறியாத ஆதிவாசிகளாக இருக்கிறோம்..!

    ReplyDelete
  52. [[[தீப்பெட்டி said...
    வர வர உங்களோட வயித்தெரிச்சலும் வருத்தங்களும் போற திசையே சரியா இல்லையே.. ஏதோ இதெல்லாம் உங்களுக்கே நல்லயிருந்தா சரிதான் பாஸ்..]]]

    தீப்பெட்டியாரே..!

    நம்ம கண்ணுல படுற நியூஸெல்லாம் இப்படித்தான் இருக்கு.. நாம என்ன செய்யறது..?

    ReplyDelete
  53. //ஆனாலும் என் 'வயித்தெரிச்சல்' இவங்களை சும்மாவிடாதுன்றதை மட்டும் சொல்லிக்கிறேன்..
    //

    -))))))))))

    ReplyDelete
  54. விடுங்க தலைவா.... இவங்கல்லாம் நாலு அஞ்சு பொண்டாட்டி கட்டி ஏழு,எட்டு புள்ள பெத்தா தான் இவங்க காலத்துக்கு அப்பறம் சொத்து தகராறு வந்து அடிச்சு கிட்டு சாக வசதியா இருக்கும்....

    ReplyDelete
  55. இப்போவாவது தெரிந்து கொண்டீர்களா..??

    தமிழகம் பரவாயில்லை. அது...

    ReplyDelete
  56. அரசியல்வாதிகள் - எம்பிக்கள், எம் எல் ஏக்கள், மந்திரிகள் - அரசுப்பணியாளர்கள் அல்ல. எனவே, பலதாரமணம் ஒரு சட்டமீரலல்ல.

    அருணாசலப்பிரதேசம் சீன எல்லையைத்தொடுகிறது. சீனா அதைப் பன்னெடுங்காலமாக தங்கள் நாட்டின் ஒருபகுதி எனச்சொல்லி வருகிறது. அவர்கள் தேசவரைபடத்தில் இம்மானிலம் சீனாவின் ஒரு பகுதியென உட்படுத்தப்படுத்தப்படுகிறது.

    இந்தச்சூழ்னிலையில், அங்கு ஒரு தேர்தல் என்பது அம்மானிலமக்களை இந்திய தேசப்பற்றுடன் ஒற்றுமைப்படுத்தப்படும் நல்முயற்சியாகும்.

    அவர்களின், ஆதிவாச வாழ்க்கைப் பழக்கவழக்கங்களை பரிகாசம் பண்ணுவது அவர்களை இந்தியாவுக்கு எதிராகப் போகச்செய்யும் ஹேதுவாகும்.

    ReplyDelete
  57. பல் இருக்கவன் பக்கோடா சாப்பிடுறான்...
    சட்டைப் பையின் கனத்தைப் பொறுத்து, மனைவிகளின் எண்ணிக்கை உயர்த்திக் கொள்வது தொன்று தொட்டு வரும் பாரம்பரியம் : )
    வாங்க வேற வேலையை பாப்போம் : )

    ReplyDelete
  58. [[[மங்களூர் சிவா said...

    //ஆனாலும் என் 'வயித்தெரிச்சல்' இவங்களை சும்மாவிடாதுன்றதை மட்டும் சொல்லிக்கிறேன்..//

    -))))))))))]]]

    ரொம்ப ஆணி புடுங்குற வேலை போலிருக்கு..!

    ReplyDelete
  59. [[[JACK and JILLU said...
    விடுங்க தலைவா.... இவங்கல்லாம் நாலு அஞ்சு பொண்டாட்டி கட்டி ஏழு, எட்டு புள்ள பெத்தாதான் இவங்க காலத்துக்கு அப்பறம் சொத்து தகராறு வந்து அடிச்சுகிட்டு சாக வசதியா இருக்கும்....]]]

    ஜாக்..

    அந்தக் கொலைப் பழியும் அப்பாவிகள் மேலதான் விழுகுமே..!

    ReplyDelete
  60. [[[butterfly Surya said...
    இப்போவாவது தெரிந்து கொண்டீர்களா..?? தமிழகம் பரவாயில்லை. அது...]]]

    ரொம்பப் பரவாயில்லை சூர்யா..!

    ReplyDelete
  61. [[[கள்ளபிரான் said...
    அரசியல்வாதிகள் - எம்பிக்கள், எம் எல் ஏக்கள், மந்திரிகள் - அரசுப் பணியாளர்கள் அல்ல. எனவே, பலதார மணம் ஒரு சட்டமீரலல்ல.]]]

    சொத்தையான வாதம்.. அவர்களும் அரசு ஊழியர்கள்தான் என்பது பல்வேறு நீதிமன்றங்களின் தீர்ப்பு..!

    [[[அருணாசலப்பிரதேசம் சீன எல்லையைத் தொடுகிறது. சீனா அதைப் பன்னெடுங்காலமாக தங்கள் நாட்டின் ஒருபகுதி எனச்சொல்லி வருகிறது. அவர்கள் தேசவரைபடத்தில் இம்மானிலம் சீனாவின் ஒரு பகுதியென உட்படுத்தப்படுத்தப்படுகிறது.
    இந்தச் சூழ்னிலையில், அங்கு ஒரு தேர்தல் என்பது அம்மானில மக்களை இந்திய தேசப்பற்றுடன் ஒற்றுமைப்படுத்தப்படும் நல்முயற்சியாகும். அவர்களின், ஆதிவாச வாழ்க்கைப் பழக்க வழக்கங்களை பரிகாசம் பண்ணுவது அவர்களை இந்தியாவுக்கு எதிராகப் போகச் செய்யும் ஹேதுவாகும்.]]]

    அப்படீன்னு சொல்லித்தான் இந்தக் கண்றாவியை இதுவரைக்கும் கண்டுக்காம இருக்காங்களா நம்ம டெல்லி ஆட்கள்..?

    அடக்கடவுளே.. கடைசிவரைக்கும் ஒருத்தனை முட்டாளாவே வைச்சிருக்கிறதுக்கு எதுக்கு எலெக்ஷன் நடத்தணும்..? இவங்க எதுக்கு மத்தியில ஆட்சில இருக்கணும்..?

    ReplyDelete
  62. [[[கபிலன் said...
    பல் இருக்கவன் பக்கோடா சாப்பிடுறான்... சட்டைப் பையின் கனத்தைப் பொறுத்து, மனைவிகளின் எண்ணிக்கை உயர்த்திக் கொள்வது தொன்று தொட்டு வரும் பாரம்பரியம்:)
    வாங்க வேற வேலையை பாப்போம்:)]]]

    அப்புறம் எதுக்கு சட்டம், நீதி, கோர்ட்டுன்னு.. எவன் எப்படி வேண்ணாலும் இருந்திட்டுப் போங்கடான்னு போயிரலாமே..?

    ReplyDelete
  63. "உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    [[[கபிலன் said...
    பல் இருக்கவன் பக்கோடா சாப்பிடுறான்... சட்டைப் பையின் கனத்தைப் பொறுத்து, மனைவிகளின் எண்ணிக்கை உயர்த்திக் கொள்வது தொன்று தொட்டு வரும் பாரம்பரியம்:)
    வாங்க வேற வேலையை பாப்போம்:)]]]

    அப்புறம் எதுக்கு சட்டம், நீதி, கோர்ட்டுன்னு.. எவன் எப்படி வேண்ணாலும் இருந்திட்டுப் போங்கடான்னு போயிரலாமே..? "

    நம்ம சட்டத்தைப் பொறுத்த வரை, பல பெண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ஆனால், பல பெண்களோடு ஒன்றாக வாழலாம் திருமணம் செய்யலாம் : ). இதில் எந்த வித சொத்து போன்ற கமிட்மெண்ட்டும் கிடையாது. ஒண்ணா தங்கிட்டு, பொண்ணுங்களுக்கு நாமம் போட்டுறலாம் என்பதை சட்டம் அனுமதிக்கிறதே நண்பரே...அது சரியா ?

    இவங்களாவது மனைவின்னு சொல்லி உரிமைகளையும் சொத்தையும் பங்கிட்டு தருகிறார்கள் என்று சந்தோஷப் பட வேண்டியது தான்...

    இன்னொரு மேட்டர்......ராமரைப் பலருக்கு ஏன் பிடிக்கவில்லை என்று இப்பொழுது தான் தெரிகிறது : )

    ReplyDelete
  64. [[[கபிலன் said...

    "உண்மைத்தமிழன்(15270788164745573644) said...
    [[கபிலன் said...

    பல் இருக்கவன் பக்கோடா சாப்பிடுறான்... சட்டைப் பையின் கனத்தைப் பொறுத்து, மனைவிகளின் எண்ணிக்கை உயர்த்திக் கொள்வது தொன்று தொட்டு வரும் பாரம்பரியம்:) வாங்க வேற வேலையை பாப்போம்:)]]]

    அப்புறம் எதுக்கு சட்டம், நீதி, கோர்ட்டுன்னு.. எவன் எப்படி வேண்ணாலும் இருந்திட்டுப் போங்கடான்னு போயிரலாமே..?"

    நம்ம சட்டத்தைப் பொறுத்தவரை, பல பெண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ஆனால், பல பெண்களோடு ஒன்றாக வாழலாம். திருமணம் செய்யலாம்:).]]]

    இதுவே குழப்புகிறதே நண்பரே..!

    [[[இதில் எந்தவித சொத்து போன்ற கமிட்மெண்ட்டும் கிடையாது. ஒண்ணா தங்கிட்டு, பொண்ணுங்களுக்கு நாமம் போட்டுறலாம் என்பதை சட்டம் அனுமதிக்கிறதே நண்பரே...அது சரியா?]]]

    சட்டம் அனுமதிக்கவில்லை. புகார் கொடுத்தால் மாப்ளைகள் உள்ளே போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். புகார் கொடுக்க பெண்கள் வராததால்தான் சுணக்கம்..

    [[[இவங்களாவது மனைவின்னு சொல்லி உரிமைகளையும் சொத்தையும் பங்கிட்டு தருகிறார்கள் என்று சந்தோஷப்பட வேண்டியதுதான்...]]]

    எனக்கும் சந்தோஷம்தான்..!

    [[[இன்னொரு மேட்டர். ராமரைப் பலருக்கு ஏன் பிடிக்கவில்லை என்று இப்பொழுதுதான் தெரிகிறது:)]]]

    கிருஷ்ணரையும்தான் நிறைய பேருக்குப் பிடிக்கவில்லை. கிழி, கிழியென்று கிழிக்கிறார்களே.. பார்க்கவில்லை..!

    ReplyDelete
  65. [[[எறும்பு said...
    வாழ்க வளமுடன்]]]

    நன்றி எறும்பாரே..!

    ReplyDelete
  66. one wife law is only for hindus.
    we have lot of misconceptions
    Law also defines who is Hindu. You have to be married by going around fire to be called as Hindu.
    May be CM is not Hindu as he has said many times.
    If your caste allowed multiple wives traditionaly you can claim you are not Hindu. (dravidan)This is true for most indians, most of our grandfathers had multiple wives.

    i dont know why they have to punish govt servants .

    ReplyDelete
  67. போன வாட்டி ஏதோ ஆப்ரிக்கா
    நாட்டுக்காரன் நாலு கல்யாணம் பண்றான்னு சொன்னிங்க...
    இப்போ என்னன்னா நம்ம ஊர்ல நடக்கிறது....
    பல் இருக்குறவன் பகோடா சாப்பிட்ட உங்களக்கு என்ன ஜி??

    ReplyDelete
  68. புகை ஸ்மெல் இங்க அடிக்குது!

    ReplyDelete
  69. ஏனோ தெரியவில்லை.முஸ்லீம்கள் நாலு கல்யாணம் பண்ணிப்பானுங்க என்ற காவிக்கூட்டத்தின் கோயபல்ஸ் பிரச்சாரம் நினைவுக்கு வருகிறது.அரிதாக இருந்தாலும் அரசியல்வாதியோ,தனிமனிதனோ ஒன்றுக்கு மேல் திருமணம் செய்து கொண்ட முஸ்லீம்களை கொஞ்சம் பட்டியலிட முயற்சி செய்யுங்களேன்.

    ReplyDelete
  70. ///aathirai said...
    one wife law is only for hindus.
    we have lot of misconceptions
    Law also defines who is Hindu. You have to be married by going around fire to be called as Hindu.
    May be CM is not Hindu as he has said many times. If your caste allowed multiple wives traditionaly you can claim you are not Hindu. (dravidan)This is true for most indians, most of our grandfathers had multiple wives.
    i dont know why they have to punish govt servants.///

    ஹிந்து என்றில்லை கிறிஸ்தவர்களிடையேயும் இது தவறானதுதான்..!

    இந்த விஷயத்தில் பொதுவான சட்டம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த விதிமுறையை அரசுப் பணியாளர்களிடத்தில் புகுத்தினார்கள்.

    ReplyDelete
  71. [[[ஜெட்லி said...
    போன வாட்டி ஏதோ ஆப்ரிக்கா
    நாட்டுக்காரன் நாலு கல்யாணம் பண்றான்னு சொன்னிங்க... இப்போ என்னன்னா நம்ம ஊர்ல நடக்கிறது.... பல் இருக்குறவன் பகோடா சாப்பிட்ட உங்களக்கு என்ன ஜி??]]]

    அப்புறம் இதே மாதிரி லேடீஸெல்லாம் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம்னு சட்டம் போடலாம்ல.. ஏன் போட மாட்டேன்றாங்க..?

    ReplyDelete
  72. [[[வால்பையன் said...
    புகை ஸ்மெல் இங்க அடிக்குது!]]]

    கருகுற வாடையா..? அல்லாட்டி எரியற வாடையா..?

    ReplyDelete
  73. [[[yegalaivan said...
    ஏனோ தெரியவில்லை. முஸ்லீம்கள் நாலு கல்யாணம் பண்ணிப்பானுங்க என்ற காவிக்கூட்டத்தின் கோயபல்ஸ் பிரச்சாரம் நினைவுக்கு வருகிறது. அரிதாக இருந்தாலும் அரசியல்வாதியோ, தனிமனிதனோ ஒன்றுக்கு மேல் திருமணம் செய்து கொண்ட முஸ்லீம்களை கொஞ்சம் பட்டியலிட முயற்சி செய்யுங்களேன்.]]]

    இங்கே இந்தியாவில் எனக்குத் தெரிந்து இரண்டு திருமணம் செய்தவர்கள் இருக்கிறார்கள்.

    ஆனால், மூன்று, நான்கெல்லாம் சவூதி போன்ற வளைகுடா நாடுகளில் சகஜம் என்று அங்கிருக்கும் வலைப்பதிவர் தம்பிமார்களும், அண்ணன்மார்களும் தெரிவிக்கிறார்கள்.

    ReplyDelete
  74. துனைவிக்கு விளக்கம் சொன்ன நிங்க... என் இனிய மகளின் தாய்கு எப்பிடி விளக்கம் சொல்லுவீங்க ??

    ReplyDelete
  75. [[[இரும்புக்குதிரை said...
    துனைவிக்கு விளக்கம் சொன்ன நிங்க... என் இனிய மகளின் தாய்கு எப்பிடி விளக்கம் சொல்லுவீங்க??]]]

    அவங்கதான் துணைவி..!

    சொந்த மகளின் தாய் மனைவி..!

    ReplyDelete
  76. "நம்ம சட்டத்தைப் பொறுத்தவரை, பல பெண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ஆனால், பல பெண்களோடு ஒன்றாக வாழலாம். திருமணம் செய்யலாம்:).]]]

    இதுவே குழப்புகிறதே நண்பரே..! "

    ஆனால், பல பெண்களோடு ஒன்றாக வாழலாம். திருமணம் செய்யாமலே...என்றிருக்க வேண்டும். பிழைக்கு மன்னிக்கவும்!
    நம்ம ஊர் எழுத்தாளரே, திருமணம் செய்து, பிறகி விவாகரத்து செய்து, அதன் பிறகு நண்பர்களாக ஒரே வீட்டில் வாழும் கதை எல்லாம் இருக்குங்க...!

    ReplyDelete
  77. உண்மை தமிழா!!! பதிவு ரெம்ப சின்னதா இருக்கு?

    ReplyDelete
  78. அந்த ஊர் இன்னும் முன்னேற்றம் தேவைன்னு சொல்வாங்க... பாருங்க யாரும் நாலைத் தாண்டலை...

    ReplyDelete
  79. ஆனாலும், "முதல் மனைவி ஆட்சேபம் தெரிவிக்காவிட்டாலும்கூட ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் உண்மையாக இருந்தால், அவர்களை அரசுப் பணியில் இருந்து நீக்கலாம்.." என்று தமிழக அரசின் பணியாளர் நடத்தை விதிகளில் விதிமுறை இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்.

    "அப்புறம் எப்படி ஒருத்தர், ஐந்து முறை முதல்வரானார்..?" என்று திருப்பிக் கேட்டதற்கு "ஸாரி எங்களுக்குத் தெரியாது.." என்கிறார்கள்.//

    அரசு ஊழியரை வேலை நீக்கம் செய்யலாம் என்றால் முதல்வரை என்ன செய்வது? இது என் மனதில் ரொம்ப நாளா இருக்குற கேள்வி.


    ஓகே.. எனக்கெதுக்கு பொறாமை..?

    ஆனாலும் என் 'வயித்தெரிச்சல்' இவங்களை சும்மாவிடாதுன்றதை மட்டும் சொல்லிக்கிறேன்.. //

    ஆஹா, இந்த வருடமும் ஹஸ்பண்டாலஜி பாடத்தை ஆரம்பிக்க வேண்டிய நிலமை வந்திடும் போல இருக்கே.

    :))))))))

    ReplyDelete
  80. [[[கபிலன் said...

    "நம்ம சட்டத்தைப் பொறுத்தவரை, பல பெண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ஆனால், பல பெண்களோடு ஒன்றாக வாழலாம். திருமணம் செய்யலாம்:).]]]

    இதுவே குழப்புகிறதே நண்பரே..!"

    ஆனால், பல பெண்களோடு ஒன்றாக வாழலாம். திருமணம் செய்யாமலே... என்றிருக்க வேண்டும். பிழைக்கு மன்னிக்கவும்!]]]

    இது கிட்டத்தட்ட கிரிமினல் குற்றம்.. மொள்ளமாரித்தனம்.. இதனை ஏற்கவே முடியாது..!

    [[[நம்ம ஊர் எழுத்தாளரே, திருமணம் செய்து, பிறகி விவாகரத்து செய்து, அதன் பிறகு நண்பர்களாக ஒரே வீட்டில் வாழும் கதை எல்லாம் இருக்குங்க...!]]]

    ஓ.. நல்லாவே தெரியும்..!

    ReplyDelete
  81. [[[Bala said...
    உண்மைதமிழா!!! பதிவு ரெம்ப சின்னதா இருக்கு?]]]

    அதான் பின்னூட்டங்கள் பெரிசா இருக்கே.. அது போதாதா..?

    ReplyDelete
  82. [[[ஸ்ரீராம். said...
    அந்த ஊர் இன்னும் முன்னேற்றம் தேவைன்னு சொல்வாங்க... பாருங்க யாரும் நாலைத் தாண்டலை...]]]

    கம்மியா இருக்குன்னு சொல்றீங்களா..? இது உங்களுக்கே ஓவரா இல்லை..?

    ReplyDelete
  83. [[[புதுகைத் தென்றல் said...
    ஆனாலும், "முதல் மனைவி ஆட்சேபம் தெரிவிக்காவிட்டாலும்கூட ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் உண்மையாக இருந்தால், அவர்களை அரசுப் பணியில் இருந்து நீக்கலாம்.." என்று தமிழக அரசின் பணியாளர் நடத்தை விதிகளில் விதிமுறை இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்.
    "அப்புறம் எப்படி ஒருத்தர், ஐந்து முறை முதல்வரானார்..?" என்று திருப்பிக் கேட்டதற்கு "ஸாரி எங்களுக்குத் தெரியாது.." என்கிறார்கள்.//

    அரசு ஊழியரை வேலை நீக்கம் செய்யலாம் என்றால் முதல்வரை என்ன செய்வது? இது என் மனதில் ரொம்ப நாளா இருக்குற கேள்வி.]]]

    நல்ல கேள்விதாம்மா.. ஆனா பதில் சொல்லத்தான் தமிழ்நாட்டுல ஆள் இல்லே..

    [[[ஓகே.. எனக்கெதுக்கு பொறாமை..? ஆனாலும் என் 'வயித்தெரிச்சல்' இவங்களை சும்மாவிடாதுன்றதை மட்டும் சொல்லிக்கிறேன்..//

    ஆஹா.. என் டயலாக்கை வைச்சு எனக்கே ஆப்பா..?

    [[[ஆஹா, இந்த வருடமும் ஹஸ்பண்டாலஜி பாடத்தை ஆரம்பிக்க வேண்டிய நிலமை வந்திடும் போல இருக்கே.
    :))))))))]]]

    இன்னும் ஆரம்பிக்கலையாம்மா..? சீக்கிரம் போஸ்ட்டை போடும்மா.. நிறைய ஹஸ்பெண்ட்டுகள் தாங்கள் ஒரு ஹஸ்பெண்ட்டுங்கிறதையே மறந்து போய் இருக்காங்க..!

    நீதான் ஞாபகப்படுத்தணும்..!

    ReplyDelete
  84. இன்னும் ஆரம்பிக்கலையாம்மா..? சீக்கிரம் போஸ்ட்டை போடும்மா.//

    ஆஹா உங்களுக்கு என் ஹஸ்பண்டாலஜி பத்தி தெரியாம சொல்லிட்டீங்கன்னு நினைக்கிறேன். அந்தத் தொடர் முடிஞ்சப்ப ஒரு ரங்க்ஸின் பின்னூட்டம்”அப்பாடி முடிச்சிட்டாங்க :)) “ அம்புட்டு தூரம் ஆப்பு நடக்கும். அதாவது ஆப்புரேஷனுங்கோவ்.

    எதுக்கும் பழைய பாடங்களை ஒரு வாட்டி படிச்சு பாத்துட்டு நல்லா ரோசனை செஞ்சு சொல்லுங்க. அப்புறம் ரங்க்ஸ்களுக்கு வரும் சேதாரத்துக்கு கம்பெனி பொறுப்பில்லை. ஆமாம் சொல்லிட்டேன்

    :))))))))))))

    ReplyDelete
  85. [[[புதுகைத் தென்றல் said...
    இன்னும் ஆரம்பிக்கலையாம்மா..? சீக்கிரம் போஸ்ட்டை போடும்மா.//

    ஆஹா உங்களுக்கு என் ஹஸ்பண்டாலஜி பத்தி தெரியாம சொல்லிட்டீங்கன்னு நினைக்கிறேன். அந்தத் தொடர் முடிஞ்சப்ப ஒரு ரங்க்ஸின் பின்னூட்டம்”அப்பாடி முடிச்சிட்டாங்க :)) “ அம்புட்டு தூரம் ஆப்பு நடக்கும். அதாவது ஆப்புரேஷனுங்கோவ்.

    எதுக்கும் பழைய பாடங்களை ஒரு வாட்டி படிச்சு பாத்துட்டு நல்லா ரோசனை செஞ்சு சொல்லுங்க. அப்புறம் ரங்க்ஸ்களுக்கு வரும் சேதாரத்துக்கு கம்பெனி பொறுப்பில்லை. ஆமாம் சொல்லிட்டேன்
    :))))))))))))]]]

    அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லம்மா.. நீ பாட்டுக்கு எழுது..

    ஏன்னா.. நான் இன்னும் ரங்க்ஸ் ஆகலை.. அதுனால எனக்கு ஒண்ணும் பிரச்சினையில்லே..!

    ReplyDelete
  86. கொஞ்சம் பிசி அண்ணே,
    வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்து பதில் போடுறேன். ஆளைக் காணலையேன்னு உங்க ரசிகர் மன்றத்துல இருந்து நம்ம பேர தூக்கிறாதீங்க...

    அப்றம்,
    இந்தப் பதிவு ஏன் இவ்ளோ சின்னதா இருக்கு?

    ReplyDelete
  87. [[[எவனோ ஒருவன் said...
    கொஞ்சம் பிசி அண்ணே, வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்து பதில் போடுறேன். ஆளைக் காணலையேன்னு உங்க ரசிகர் மன்றத்துல இருந்து நம்ம பேர தூக்கிறாதீங்க... அப்றம், இந்தப் பதிவு ஏன் இவ்ளோ சின்னதா இருக்கு?]]]

    ஒரு நிமிஷம்கூட நேரமில்லைன்னு பொய்யெல்லாம் சொல்லக் கூடாது தம்பீ..!

    நினைச்சா செய்யலாம்..!

    ReplyDelete
  88. ஒரு நிமிசத்துல படிக்கலாம்.

    ஆனா, இப்படி அவசரமா படிச்சா நம்ம மண்டையில ஏதுமே ஏறாது. பத்தோட பதினொன்னா நின்னுட்டு அழிஞ்சு போயிடும்.

    ReplyDelete
  89. அண்னே இதுகெல்லாமா டென்ஷன் ஆகுறது. பல் இருக்குறவேன் பக்கோடா சாப்புடுறான். இல்லாதவன் பாப்பாளி பழத்தோட திருப்தி அடைய வேண்டியதுதான்.

    ReplyDelete
  90. //என் 'வயித்தெரிச்சல்' இவங்களை சும்மாவிடாதுன்றதை மட்டும் சொல்லிக்கிறேன்.//

    ஹ ஹ ஹ சரி சரி விடுங்க பாஸ், பல்லு இருகிறவன் பட்டாணி சாப்பிடுகிறான்.

    நம்ம தமிழ் மாநிலத்தில் யாருக்கும் இரண்டு மனைவி அல்லது துணைவி இல்லையா என்ன?

    ReplyDelete
  91. [[[எவனோ ஒருவன் said...

    ஒரு நிமிசத்துல படிக்கலாம். ஆனா, இப்படி அவசரமா படிச்சா நம்ம மண்டையில ஏதுமே ஏறாது. பத்தோட பதினொன்னா நின்னுட்டு அழிஞ்சு போயிடும்.]]]

    இதுவும் கரெக்ட்டுதான்..! ஆற, அமர பொறுமையா படிங்க..!

    ReplyDelete
  92. [[[ஷாகுல் said...
    அண்னே இதுகெல்லாமா டென்ஷன் ஆகுறது. பல் இருக்குறவேன் பக்கோடா சாப்புடுறான். இல்லாதவன் பாப்பாளி பழத்தோட திருப்தி அடைய வேண்டியதுதான்.]]]

    ம்.. ம்.. ம்ஹும்.. ஹூம்ம்..

    ReplyDelete
  93. [[[சிங்கக்குட்டி said...

    //என் 'வயித்தெரிச்சல்' இவங்களை சும்மாவிடாதுன்றதை மட்டும் சொல்லிக்கிறேன்.//

    ஹ ஹ ஹ சரி சரி விடுங்க பாஸ், பல்லு இருகிறவன் பட்டாணி சாப்பிடுகிறான். நம்ம தமிழ் மாநிலத்தில் யாருக்கும் இரண்டு மனைவி அல்லது துணைவி இல்லையா என்ன?]]]

    இருக்கத்தான் செய்யுது.. வைச்சிருக்கத்தான் செய்றாங்க..

    இவங்களுக்கு நம்மாளுக பரவாயில்லை போலிருக்கே. அதைத்தான் சொல்ல வந்தேன்..!

    ReplyDelete