Pages

Friday, October 30, 2009

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-30-10-2009

30-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கேசரி




இந்த 'டிஸைன்' நல்லாயிருக்குல்ல.. சத்தியமா 'டிஸைனை'த்தான் சொன்னேன்.. யாருன்னு யோசிச்சு வையுங்க..!!!

இட்லி

ஸ்பெக்டரம் ஊழல் தொடர்பாக தொலைத்தொடர்புத் துறையின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ அடித்த அதிரடி சோதனை ஒரு எச்சரிக்கை மணிதானாம். பொழுது விடிந்து பொழுது போனால் தமிழகத்தின் உறவுகள் ஆளுக்கொருவராக 'சிபாரிசு' என்று சொல்லி உயிரை வாங்குவதாகத் தனது புரட்சித் தலைவி அம்மாவிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறாராம் கழகத்தின் அடக்கமான ஒரே தொண்டரான மன்னமோகனசிங் அவர்கள்.

தன்னை எதிர்த்து கட்சியைவிட்டு விலகிப் போன சரத்பவாரே டெல்லியில் கொடுத்த வீட்டை எதிர்ப்பேச்சில்லாமால் வாங்கிக்கொண்டு போகும்போது கேவலம் செகரட்டரியை மாற்றியே தீர வேண்டும். இல்லாவிடில் வேலைக்கு வர மாட்டேன் என்று ஒரு தமிழகத்து கேபினட் மந்திரியே ஸ்கூல் பையன் மாதிரி அடம்பிடித்ததும் டெல்லியை கொஞ்சம் கோவப்படுத்திவிட்டதாம்..

இதற்கு முன்னதாக இந்தக் களேபரத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட ஜெய்ராம்ரமேஷை குறி வைத்து அவரைக் கண்டித்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததும் டெல்லியை உசுப்பிவிட்டதாம். பாவம் ரமேஷ்.. அவர் என்ன செய்வார்..?

எப்போதும் கேரளாவில் ஒரு முறை கம்யூனிஸ்ட்டுகள் என்றால் அடுத்த முறை காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரும். இது தொடர்ந்து நடந்து வருவதுதான். இதன்படி அடுத்து கேரளாவில் ஆட்சிக்கு வர காங்கிரஸ் தயாராக இருக்கும் நிலையில் ஆளுகின்ற கம்யூனிஸ்ட் ஒரு நப்பாசையாக அடுத்த முறையும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறது. அதனால்தான் நம்மூர் கழகங்களின் அடிச்சுவடைத் தொட்டு முல்லை பெரியாறு பிரச்சினையைத் தோள் கொடுத்துத் தூக்கியிருக்கிறது.

இப்போது இந்தப் பிரச்சினைக்கு நாம் தோள் தூக்காவிட்டால் அடுத்த தேர்தலில் நம்மைத் தூக்க ஆள் இருக்காது என்பதை கேரளத்து காங்கிரஸ்காரர்கள் வேப்பிலை அடிக்காத குறையாக டெல்லிக்கு காவடி எடுத்து புலம்பியதன் பலன்தான் ஜெய்ராம்ரமேஷின் அந்த ஒப்புதல் உத்தரவு.

இது தமிழகத் தலைமைக்கும் நன்கு தெரியும். ஆனாலும் அதை தெரியும் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா? மாமியாருக்கு இடுப்புல அடி என்றாலும் அடிபட்டுச்சா அத்தை என்று அக்கறையாக விசாரிப்பதுதான் மருமகளின் கடமை. அதைத்தான் தமிழக அரசு இப்போது செய்திருக்கிறது. டெல்லியையும் கூல் செய்ததுபோல் கடைசி நேரத்தில் கோர்ட்டில் உங்களது தரப்பைத்தான் நாங்களும் சொல்லப் போகிறோம் என்று மத்திய அரசு வக்கீல் கொடுத்த உறுதிமொழியை நம்பி கண்டனப் பொதுக்கூட்டத்தை ரத்து செய்திருக்கிறது.

உண்மையான காரணம் அதுவல்ல என்பது இப்போது தெரிகிறது. இப்படி ஆளாளுக்கு பச்சைப் புள்ளை மாதிரி அழுதா ஆத்தா என்ன செய்வா? கைல கிடைக்கிறதை தூக்கி நாலு சாத்து சாத்த மாட்டா..? அதான் சோனியா ஆத்தா செஞ்சிருக்காங்க.. ஒரே கல்லுல நாலு மாங்கா.. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டியாட்டம் ஸ்பெக்டரத்தை கிளப்பிவிட்டாச்சு. இனி பதில் சொல்லி மாள வேண்டியது ஆ.ராசாவும், தி.மு.க.வும்தான். 'மவனுகளா ஏதாவது ஆய்.. போய்.. ஊய்..ன்னீங்க.. அவ்ளோதான்.. ஸ்பெக்ட்ரம் ஊழல் அம்பலத்துக்கு வந்திரும். அடக்கமா எங்களுக்கு ஒத்து ஊதுங்க' என்கிற எச்சரிக்கைதான் இந்த சிபிஐ ரெய்டும், கொஞ்சூண்டு பரபரப்பும்.

தோசை

கோடம்பாக்கத்தில் மூலைக்கு மூலை இப்போதே நாலைஞ்சு பேர் கோட்டைச் சுவத்துல சாய்ஞ்சு நின்னுக்கிட்டு பெட் கட்டுறானுக..


'கோவா' படம் 'ஹேங்க் ஓவரோட' காப்பிதான்னுட்டு.. இப்படிச் சொல்றவனுக 'ஹேங்க்ஓவரை' பார்த்திருப்பானுகளான்றதே சந்தேகம். ஆனா சினிமாக்காரங்கள்லாம் இப்படித்தான். ஒரு மேட்டர் கிடைச்சா போதும்.. வாய்ல ரத்தம் வர்ற அளவுக்கு பேசிட்டுத்தான் ஓய்வாங்க..

அவங்களுக்குத் தெரியாமயே இன்னொரு படமும் பரபரப்பா அடுத்த வாரம் வருது. 'அதே நேரம் அதே இடம்' அப்படீன்ற படம். இது ஒரு கொரியன் படத்தோட ரீமேக்தானாம்.. 'My Sassi Girl' என்கிற கொரிய படத்தின் ரெண்டு வரி ஸ்டோரியை வைச்சுத்தான் இந்தப் படம் அப்படீன்றாங்க..

ஆனா பாருங்க.. இந்தப் படத்தோட கதையை வைச்சு மூணு டைரக்டர்களுக்கு மூணு ஸ்கிரிப்ட்டை நானே என் கையால டைப் பண்ணிக் கொடுத்திருக்கேன். மூச்சு விடுவேனா நானு..? இப்பல்லாம் நான் ரொம்ப நல்லவனா திருந்திட்டேன் சாமிகளா.. எனக்கு காசுதான் முக்கியம்.. வாங்கிக் கல்லால போட்டுட்டு வாய்க்கு பூட்டு போட்டுக்கிட்டேன்..


பொங்கல்

இந்த மாசத்து 'காலச்சுவடு' புத்தகத்தை லேட்டா இப்பத்தான் படிச்சேன். அதுல ஆஷ்துரை பத்தின கட்டுரை ரொம்ப நல்லா இருக்குது.. ஆ.இரா.வெங்கடாசலபதி எழுதியிருக்கிறார். அவருடைய கடின உழைப்புக்கும், எழுத்திற்கும் தலைவணங்குகிறேன். ஆஷ் துரை கொலை செய்யப்பட்டது, விசாரணை, அவருடைய கடிதங்கள், குடும்பத்தினர், என்று 180 டிகிரி கோணத்துல எழுதியிருக்காரு.. படிக்கப் படிக்க ரொம்ப ஆர்வமா இருந்தது. 'காலச்சுவடு' படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் இந்த ஒரு விஷயத்துக்காகவே வாங்கிப் படிங்க.. கொஞ்சம் பொது அறிவை வளர்த்துக்குங்கப்பா..

வடை

பத்திரிகையாளர்களுக்கு எதிராகத் திரையுலகினர் பொங்கியெழுந்த கூட்டத்தில் நடிகை ரோகிணி பேசியதை கேட்டேன். அதுல ஒரு விஷயம் சொல்லிருக்காங்க.. ரொம்ப நல்லாயிருக்கு.


"ரகுவரன் இறந்தன்னைக்கு என் பையனை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர்றேன்.. ஒரு அரைமணி நேரத்துக்கு என்னையும், என் பையனையும் ரகு உடலோட கொஞ்சம் தனியா விடுங்க.. எங்களுக்கு பிரைவஸி தேவைப்படுது"ன்னு பத்திரிகையாளர்கள்கிட்ட முன்கூட்டியே பேசியிருக்காரு. ஆனா பத்திரிகைக்காரங்க மாட்டேன்னுட்டாங்களாம்..

வேற வழியில்லாம அவரோட பையன் ஸ்கூல்ல இருந்து ஒண்ணுமே தெரியாம வீட்டுக்குள்ள வந்து சவப்பெட்டிக்குள்ள இருந்த அப்பாவை பார்த்ததும் திடீர்ன்னு ஏதோ ஒரு பயம் வந்து அழுததை கச்சிதமா படம் புடிச்சு நினைச்சதை சாதிச்சுக்கிட்டாங்க பத்திரிகைக்காங்க.. பையனுக்கு அந்த நேரத்துல ஏதாவது ஆகிருமோன்னு ரோகிணி பயந்தாங்களாம். அதுனாலதான் பத்திரிகையாளர்கள்கிட்ட அப்படி கேட்டுக்கிட்டாங்களாம். நம்மாளுகளா விடுறவங்க..?


அன்னிலேர்ந்து வைராக்கியமா ஒரு முடிவுல இருக்காங்களாம் ரோகிணி.. இனிமே ஒரு பத்திரிகைக்கும் பேட்டி கொடுக்கிறதில்லைன்னு.. இன்னிவரைக்கும் அதை பாலோ பண்ணி வந்திட்டிருக்காங்களாம்..

குட்.. வெரிகுட்.. வெரிவெரிகுட்.. இது மாதிரி எல்லாரும் செய்ய ஆரம்பிச்சா நல்லத்தான் இருக்கும்..

இது தொடர்பான இன்னுமொரு விஷயம் பின்னாடி வருது..

சட்னி

ICAF அமைப்பு வருஷா வருஷம் நடத்துற உலகத் திரைப்பட விழா இந்த வருஷமும் சென்னைல நடக்கப் போகுது.. டிசம்பர் 16ம் தேதியிலிருந்து 24-ம் தேதிவரையிலும் 9 நாட்கள் நடக்கப் போகுது.. கிட்டத்தட்ட 110 படங்களுக்கும் மேல காட்டப் போறாங்க.

இந்த வருஷம் புதுசா சிறந்த தமிழ்ப் படங்களுக்கு விருது கொடுக்கப் போறதா சொல்லி நம்ம வயித்துல அடிச்சிருக்காங்க.. எப்படீன்னா குத்துமதிப்பா முப்பது தமிழ்ப் படங்கள் போட்டிக்கு வருதுன்னு வைங்க.. அந்த 110-ல இந்த 30 கழிச்சு மிச்சம்தான் மத்த வெளிநாட்டுப் படங்கள்.. நமக்கு படம் குறையுதுல்ல சாமி..

எஸ்.வி.சேகர் என்கிற ஒரு எம்.எல்.ஏ.வை இழுப்பதற்கு சென்ற ஆண்டு அரசு செலவிட்ட தொகை 25 லட்சம் ரூபாய்.. என்ன புரியலையா..? ICAF அமைப்பின் துணைத் தலைவர் நடிகர் எஸ்.வி.சேகர்தான். போன வருஷம் தமிழக அரசிடமிருந்து 25 லட்சம் ரூபாயை மானியமாக பெற்றுக் கொடுத்தார் சேகர். இது விஷயமாக முதல்வரை சந்திக்கப் போய் அப்படியே உடன்பிறப்பாகவும் மாறிப் போய்விட்டார் சேகர். இது நடந்த கதை..

சேகரின் கட்சி தாவலுக்கு அஸ்திவாரம் போட்டதும் 2007-ம் ஆண்டு நடந்த உலகத் திரைப்பட விழாதான். அன்றைய துவக்க விழாவில் அப்போதைய மத்திய அமைச்சர் தயாநிதி மாறனோடு சேகரும் விழாவில் கலந்து கொண்டதுதான் போயஸ் தோட்டம் அவரோடு நடத்திய கபடி, கபடி விளையாட்டின் துவக்கம்.

சரி விடுங்க.. போன தடவை நம்ம பணம் 25 லட்சத்தை வாங்கிட்டும் பார்வையாளர்களிடம் 500 ரூபாயை வசூலிச்சாங்க... இந்த முறை 50 லட்சம் ரூபாய் மானியமாக கேட்டிருக்கிறார்களாம்.. முதல்வர் கொடுத்துவிட்டால் பார்வையாளர்களுக்கு கட்டணத்தைக் குறைப்பார்களா..? ம்ஹூம்.. சத்தியமா நடக்காது.. அப்புறம் எதுக்குங்க மக்களுடைய பணத்தை எடுத்து தனியார் அமைப்புக்குக் கொடுக்கணும்? அதுக்கு பதிலா தமிழக அரசே கேரள அரசு செய்வதைப் போல் தனியாக விழா நடத்திவிடலாமே..?

சாம்பார்

இந்த போட்டால இருக்கிறவரை நல்லா உத்துப் பாருங்க..


யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்கன்னா நீங்க கொஞ்சம் வயசானவரு.. புத்திசாலின்னு ஒத்துக்குறேன்..

கொத்தமல்லி சட்னி

மீண்டும் சினிமாவுக்கே வருவோம்.. இந்த வருஷம் தெலுங்கு மணவாடுகள் ராஜ்ஜியத்துல சூப்பர்டூப்பர்ஹிட் 'மகாதீரா'தான்.. கிட்டத்தட்ட 60 கோடி வசூல் என்கிறார்கள். சிரஞ்சீவியின் மகனுக்கு அப்படியொரு மார்க்கெட்டை ஏத்திவிட்டிருக்கு இந்தப் படம்.. ஆனால் இந்தப் படத்துக்கு பின்னால ஒரு சோகம் இருக்குன்றது இப்பத்தான் தெரிய வந்திருக்கு.


தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கதாசிரியர் இரண்டாண்டுகளுக்கு முன்பாக சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்தை சந்தித்து இந்தக் கதையை கையெழுத்துப் பிரதியாகவும், திரைக்கதையை ஒரு டேப்பில் பதிவு செய்தும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். இப்போது அவர் சொன்ன கதையில் சாமியார்களின் பெயர்களையும், ஊர்களையும் மட்டும் மாற்றிவிட்டு அப்படியே எடுத்திருக்கிறார்கள். விழி பிதுங்கிப் போய் நிற்கிறார் கதாசிரியர். பாவம்.. கஷ்டப்படுபவர். இதுவரையில் சினிமாவில் அடையாளம் இல்லாமல் இருப்பவர். இப்படியா செய்வார்கள்..?

விஷயம் இப்போது 'பெப்ஸி'யிடம் போயிருக்கிறது.. பார்ப்போம்.. ஏதோ ஒன்று நடந்தாக வேண்டும். ஏன்னா தயாரிப்பாளர் தாணு ஒன்றரை கோடி கொடுத்து ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். அவருக்கும் இந்த விவகாரம் சிக்கலை உருவாக்கும் என்கிறார்கள்.

மிளகாய் சட்னி

தாணு ஸார் சிக்கலை தானாவே உருவாக்கிக்குவார் போல.. தாணு எவ்ளோ பெரிய தயாரிப்பாளர்? அவரே இப்படி செய்யலாமா என்று குமுறுகிறார்கள் நடிகர், நடிகைகள் வட்டாரத்தில்..


'தினமலமும்' ஸாரி 'தினமலரும்', சினிமாக்காரங்களும் ஒருவருக்கொருவர் 'டூ' விட்டுக் கொண்டபின்பு வந்த வெள்ளிக்கிழமையன்று 'தினமலர்' ரோஷப்பட்டு 'வெள்ளித்திரை'யை வெளியிடவில்லை.

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பலரும் போன் போட்டு குடைய ஆரம்பித்தார்கள். எல்லாம் சின்ன பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள்தான். அவர்களுக்கு பத்திரிகை விளம்பரத்தை வைத்துத்தான் மார்க்கெட்டிங்கே செய்ய முடியும். இப்படி முடக்கிப் போட்டால் அவர்களது படத்திற்கு ஓசி விளம்பரம் யார் கொடுப்பது..?

'பூனைக்கு யார் மணி கட்டுவது?' என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் யோசித்துக் கொண்டிருக்க தாணுவோ ஒரு படி மேலே போய் பூனையைத் தூக்கி மடியிலேயே வைத்துக் கொண்டார்.


'தினமலர்' பத்திரிகைக்கு 'கந்தசாமி'யின் மெகா ஹிட் பற்றி இரண்டு பக்கங்களுக்கு ஒரு பேட்டியை கொடுத்து அசத்திவிட்டார். இது சென்ற வார ஞாயிறு 'வாரமலரில்' பிரசுரம் ஆகியிருக்கிறது..


“இப்படி கலையுலகத்துக்குள்ள ஒற்றுமை இல்லாம இருக்கிறதாலதான் போறவன், வர்றவன் எல்லாம் நம்மளை காறித் துப்புறான்..” என்று நடிகர் சங்கத்தில் கோபக் குரல் எழும்பியுள்ளது..


இது ஒரு புறமிருக்க இன்னொரு பக்கம் "மக்களோட விஷயங்கள்ல நாம நேரிடையா கலந்துக்கிட்டு போராடணும்.." என்ற சத்யராஜின் ஆவேசப் பேச்சைக் கேட்டு மூன்றாம் தரப்பினர் மகிழ்ச்சியடைந்தார்கள். குசும்பு புடிச்ச பத்திரிகையாளர்கள் சிலரின் உள்ளடி வேலையில் சத்யராஜ் வசமாக மாட்டத் தெரிந்து கடைசி நிமிடத்தில் தப்பித்தாராம்..

சைதாப்பேட்டையில் ஒரு பள்ளி அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் அதனை அகற்ற வேண்டும் என்று கோரி அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலரை சத்யராஜின் வீட்டுப் பக்கம் அனுப்பி வைத்து "எங்க போராட்டத்துக்கு துணைக்கு வாங்க.." என்று கேட்க வைத்துள்ளார்கள் குசும்பான பிரஸ்காரர்கள் சிலர். மிளகாப் பொடியை தானே எடுத்துக் கண்ணுல கொட்டிக்க அவருக்கென்ன கோட்டியா புடிச்சிருக்கு..? 'அது..' 'இது..' என்று சொல்லி தப்பிப்பதற்குள் மனிதருக்கு வேர்த்து விறுவிறுத்துவிட்டதாம்.

அந்த மீட்டிங்கிற்கு கொங்கு பெல்ட்டின் மருமகளும், தமிழகத்தின் ஒரே தைரியமான பெண்ணுமான குஷ்பக்கா ஏன் வரவில்லை என்று அனைவரும் கேள்விமேல் கேள்வி கேட்டு குடைந்து கொண்டிருக்க.. அக்காவோ ரொம்ப கூலாக, "இதையெல்லாம் கண்டுக்காமத்தான் போகணும்.. ஏன்னா எல்லா பத்திரிகைகளும் இப்படி எழுதறதில்லை. ஒருத்தர் ரெண்டு பேர்தான எழுதுறாங்க. அப்புறம் எதுக்கு எல்லாரையும் திட்டணும்..?" என்று திருவாய் மொழிந்திருக்கிறார். அக்காவோட ரூட்டு எப்பவும் தனிதான்..

பனியாரம்

கொஞ்சம் பிளைட் ஏறி போவோமா..? உலகப் புகழ் பெற்ற மூக்கழகி ஏஞ்செலீனா ஜூலியைப் பற்றி ஒரு பகீர் மேட்டர் இன்னிக்கு ரிலீஸாயிருக்கு.


அதாகப்பட்டது என்னவெனில் அம்மணி அவரோட 16 வயசுல ஒரு ஆணோட உறவு வைச்சுக்கிட்டாராம். இது என்ன பெரிய விஷயமா அப்படீங்குறீங்களா..? அதுவல்ல விஷயம். அந்த ஆண், ஜூலியின் அம்மா மார்செலின் பெர்ட்ராண்ட்டின் அப்போதைய காதலராம்.. அந்த சமயத்துல ஜூலியோட அம்மாவும், அவரோட காதலரும் சேர்ந்து வாழ்ந்துக்கிட்டிருந்தாங்களாம். இது எப்படி இருக்கு..?

இந்த விஷயம் அப்போதே ஜூலியின் அம்மாவுக்குத் தெரிஞ்சு மகளோட 'கா' விட்டுட்டாங்களாம். கூடவே அந்தக் காமாந்தக் காதலனையும் கழட்டிவிட்டுட்டாங்களாம்.. ஆண்ட்ரூ மார்ட்டன் அப்படீன்றவரு ஜூலியின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமா எழுதியிருக்காராம். அதுலதான் இந்த மேட்டரும் வந்திருக்கு அப்படீன்றாங்க..

ம்.. இதெல்லாம் தனி மனித சுதந்திரம்ங்க.. எவனுக்கு கேள்வி கேட்க ரைட் இருக்கு.? என்ன நான் சொல்றது..?

துவையல்

பதிவின் துவக்கத்தில் இருக்கும் அந்தப் போட்டால இருக்கிறது யாருன்னு தெரியலையா..?

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|


இவுங்கதான்..



சாப்பிட்டாச்சா? வயிறு நிறைஞ்சிருச்சா..?

சரி.. அடுத்த டிபன்ல சந்திக்கலாம்..!

குட்பை அண்ட் குட்நைட்..
!!!

100 comments:

  1. அது சுரேஷ் சக்கரவர்த்திங்கோ..நான் புத்திசாலி எல்லாம் இல்லைங்க. படத்த கிளிக் பண்ண சுரேஷ்.jpg அப்படின்னு வருதேங்க ;)
    அதெப்டிங்க, இவ்ளோ வயசானவரா ஆனாரு? எவ்ளோ வயசு இருக்கும் அவர்க்கு? ஒரு 40 ??
    மத்தபடி, குஷ்பூ படம் scroll பண்ணாம (நெஜமாங்க) உண்மையாவே கண்டுபிடிச்சிட்டேன்..:)

    and, me the first ??

    ReplyDelete
  2. சாம்பார்.. சன் டீவி ஆளுன்னு தெரிஞ்சிடுச்சி. ஆனா பேருதான் நினைப்பு வரலை.

    நடராஜ்-தான் சூப்பரா ஒரு போடு போட்டிருக்காரே! :) :) :)

    ReplyDelete
  3. நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கீங்க... நன்றி...

    ReplyDelete
  4. இதை வன்மையாக கண்டிக்கிறேன். நான் இதற்கு முன்பே பிரியாணி, பாயா என்று அசைவ மெனுவில் எழுத சொல்லி இருந்தேன் ஆனால் நீங்க மதிப்பு குடுக்கவில்லை.

    லோக்கல் மெஸ்ல சாப்பிடுறது நாள சைவ ஐட்டம்மா எழுதுறிங்க ..


    சுரேஷ் படம் பார்த்த உடனே கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன். கரு கரு என்று சுருள் முடி + முட்டை கண்ணுடன் அவரின் நகைச்சுவை நாடங்கள் பார்த்த நியாபகம் வருகிறது.

    இவருக்கு கண்டிப்பா இந்த வசனம் பொருந்தும்.

    "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்"

    ReplyDelete
  5. குஷ்புவை முதலிலையே கண்டுபிடித்துவிட்டேன். வெங்கட் பிரபுவின் படங்கள் பல படங்களின் கலவை என அவரே பல இடங்களில் சொல்லியிருக்கிறார். சாப்பாடு நல்லாயிருந்தது.

    ReplyDelete
  6. /////சாப்பிட்டாச்சா? வயிறு நிறைஞ்சிருச்சா..?////

    ஆகா, நெறஞ்சிருச்சு அண்ணாச்சி!
    டேங்க்ஸ்!

    ReplyDelete
  7. இன்று வெள்ளிக் கிழமை. அதனால் சைவ சாப்பாடாக இருக்கிறதோ. அனைத்தும் சுவையான தகவல்கள். ஆரம்பத்தில் ஸ்பெக்ட்ரம் என்றது அசுவாரசிமாகத்தான் படித்தேன். பின்பு சுவாரசியம் கூடி விட்டது.

    ReplyDelete
  8. அண்ணே…நான் சென்னை வர்றப்ப, நம்ம ரெண்டு பேரும் சரவணபவன் போய் புல்மீல்ஸ் கட்டுறோம்…ஓகேயா..
    உங்கள் மினி டிபன் சூப்பரண்ணே..

    ReplyDelete
  9. வரவேற்கிறோம்

    பாட்டி பேரவை - சிட்னி

    ReplyDelete
  10. அண்ணே..ஏற்கனவே பி.பி ஏறிப்போய் கிடக்கறேன்.இப்படி காரசாரமா டிபன் சாப்பிட்டா?

    ReplyDelete
  11. //இந்தப் படத்தோட கதையை வைச்சு மூணு டைரக்டர்களுக்கு மூணு ஸ்கிரிப்ட்டை நானே என் கையால டைப் பண்ணிக் கொடுத்திருக்கேன்

    //

    கிளிஞ்சது போங்க.....

    டிபன் சூப்பர் ஜி.

    ReplyDelete
  12. இந்த வாரம் எதுவும் கில்மா படம்
    ரிலீஸ் ஆகலையா ஜி??

    மாதவி, காதல் கதை படங்கள் மாதிரி எப்போது வேறு படங்கள் வரும் ??

    சும்மா ஒரு பொது அறிவுக்கு தான் கேட்டேன்...

    ReplyDelete
  13. [[[செந்தழல் ரவி said...
    :))))))))]]]

    அண்ணே.. அவ்வளவு பிஸிங்களாண்ணே..!

    ReplyDelete
  14. [[[Nataraj said...

    அது சுரேஷ் சக்கரவர்த்திங்கோ..நான் புத்திசாலி எல்லாம் இல்லைங்க. படத்த கிளிக் பண்ண சுரேஷ்.jpg அப்படின்னு வருதேங்க ;)]]]

    ச்சே.. நான் எவ்ளோ பெரிய முட்டாள்ன்னு இப்பத்தான் தெரியுது..! அந்தப் பேரை மாத்தணும்னு நினைச்சிட்டே இருந்தேன். கடைசி நிமிஷத்துல மறந்து போயிருச்சு..

    ஹேட்ஸ் ஆஃப் நட்ராஜ்..!

    [[[அதெப்டிங்க, இவ்ளோ வயசானவரா ஆனாரு? எவ்ளோ வயசு இருக்கும் அவர்க்கு? ஒரு 40??]]]

    மேலேயே இருக்கும்..

    [[[மத்தபடி, குஷ்பூ படம் scroll பண்ணாம (நெஜமாங்க) உண்மையாவே கண்டுபிடிச்சிட்டேன்..:)]]]

    இவ்ளோ அறிவா..? மை காட்..

    [[[and, me the first??]]]

    நோ.. செகண்ட்..

    ReplyDelete
  15. [[[ஹாலிவுட் பாலா said...

    சாம்பார்.. சன் டீவி ஆளுன்னு தெரிஞ்சிடுச்சி. ஆனா பேருதான் நினைப்பு வரலை. நடராஜ்-தான் சூப்பரா ஒரு போடு போட்டிருக்காரே!:):):)]]]

    ம்ஹும்.. சன் டிவில்ல வந்த வருஷக்கணக்கா முகத்தைக் காட்டிருக்காரா மனுஷன்..!? இப்ப ஆஸ்திரேலியால செட்டில் ஆயிட்டாராம்..!

    ReplyDelete
  16. [[[அப்பன் said...
    டீபன் ஏ ஓன்.......]]]

    என் அப்பனுக்கு நன்றி..!

    ReplyDelete
  17. [[[சரவணகுமரன் said...
    நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கீங்க... நன்றி...]]]

    நன்றி குமரா..!

    ReplyDelete
  18. [[[Romeoboy said...

    இதை வன்மையாக கண்டிக்கிறேன். நான் இதற்கு முன்பே பிரியாணி, பாயா என்று அசைவ மெனுவில் எழுத சொல்லி இருந்தேன் ஆனால் நீங்க மதிப்பு குடுக்கவில்லை.
    லோக்கல் மெஸ்ல சாப்பிடுறது நாள சைவ ஐட்டம்மா எழுதுறிங்க..]]]

    நமக்கு சைவமே போதும் ரோமியோ.. அசைவம் எழுதத்தான் எனதருமை அண்ணன் கேபிள் இருக்காரே..

    [[[சுரேஷ் படம் பார்த்த உடனே கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன். கரு கரு என்று சுருள் முடி + முட்டை கண்ணுடன் அவரின் நகைச்சுவை நாடங்கள் பார்த்த நியாபகம் வருகிறது.
    இவருக்கு கண்டிப்பா இந்த வசனம் பொருந்தும்.
    "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்"]]]

    சொல்லிடறேன்..!

    ReplyDelete
  19. [[[வந்தியத்தேவன் said...
    குஷ்புவை முதலிலையே கண்டுபிடித்துவிட்டேன். வெங்கட் பிரபுவின் படங்கள் பல படங்களின் கலவை என அவரே பல இடங்களில் சொல்லியிருக்கிறார். சாப்பாடு நல்லாயிருந்தது.]]]

    வந்தி..

    அப்போ நான் இன்னும் பாலபருவத்திலேயே இருக்கேன்னு நினைக்கிறேன்.

    என்னால முதல்ல குஷ்பூவை கண்டுபிடிக்க முடியலையே.. அதுனாலதான் போட்டேன். இப்ப சின்னப்புள்ளைத்தனமா போயிருச்சு..!

    ReplyDelete
  20. [[[SP.VR. SUBBIAH said...

    //சாப்பிட்டாச்சா? வயிறு நிறைஞ்சிருச்சா..?//

    ஆகா, நெறஞ்சிருச்சு அண்ணாச்சி!
    டேங்க்ஸ்!]]]

    அண்ணாச்சியா..? வாத்தியாரே என்ன இது..?

    ராகு, கேது பெயர்ச்சியோட விளைவா இது..?

    ReplyDelete
  21. [[[ananth said...
    இன்று வெள்ளிக்கிழமை. அதனால் சைவ சாப்பாடாக இருக்கிறதோ. அனைத்தும் சுவையான தகவல்கள். ஆரம்பத்தில் ஸ்பெக்ட்ரம் என்றது அசுவாரசிமாகத்தான் படித்தேன். பின்பு சுவாரசியம் கூடி விட்டது.]]]

    ஆஹா ஆனந்த்.. அரசியல் எழுதினா பிடிக்காதோ..! எனக்கு அதுதான் பிடிக்குது..!

    ReplyDelete
  22. [[[அவிய்ங்க ராசா said...
    அண்ணே… நான் சென்னை வர்றப்ப, நம்ம ரெண்டு பேரும் சரவணபவன் போய் புல் மீல்ஸ் கட்டுறோம்…ஓகேயா..
    உங்கள் மினி டிபன் சூப்பரண்ணே..]]]

    கட்டலாம் தம்பீ.. ஆனா பில்லை நீதான் கட்டணம்.. ஓகேவா..?

    ReplyDelete
  23. [[[கானா பிரபா said...
    வரவேற்கிறோம். பாட்டி பேரவை - சிட்னி]]]

    பாட்டியா..? குஷ்பூவுக்குத் தெரிஞ்சா கானா நீ சட்னி..!

    ReplyDelete
  24. [[[தண்டோரா ...... said...
    அண்ணே.. ஏற்கனவே பி.பி ஏறிப் போய் கிடக்கறேன். இப்படி காரசாரமா டிபன் சாப்பிட்டா?]]]

    அதுக்குத்தான் கேசரியும், பனியாரத்தையும் கொடுத்திருக்கேனே..?

    ReplyDelete
  25. [[[ஜெட்லி said...

    //இந்தப் படத்தோட கதையை வைச்சு மூணு டைரக்டர்களுக்கு மூணு ஸ்கிரிப்ட்டை நானே என் கையால டைப் பண்ணிக் கொடுத்திருக்கேன்//

    கிளிஞ்சது போங்க.....
    டிபன் சூப்பர் ஜி.]]]

    போகட்டும்.. யாருக்கு வெற்றி கிடைக்குதோ கிடைக்கட்டும்..!

    சுயசிந்தனை இல்லாமல் காப்பியடிக்கும் இயக்குநர்கள்தான் இங்கு அதிகம்..!

    ReplyDelete
  26. [[[ஜெட்லி said...

    இந்த வாரம் எதுவும் கில்மா படம்
    ரிலீஸ் ஆகலையா ஜி?? மாதவி, காதல் கதை படங்கள் மாதிரி எப்போது வேறு படங்கள் வரும்?? சும்மா ஒரு பொது அறிவுக்குதான் கேட்டேன்...]]]

    ரிலீஸ் ஆச்சு ஜெட்லி.. ஆனா தியேட்டர்கள் ரொம்ப தூரம்ன்றதால போக முடியல..

    ReplyDelete
  27. [[[Sen22 said...
    Arumaiyana Pathivu..]]]

    யாரது.. புதுசா இருக்கு.. வெல்கம் டூ பதிவுலகம்..!

    ReplyDelete
  28. [[[துளசி கோபால் said...
    :-))))))))]]]

    ரீச்சர்..! தேங்க்ஸ்..!

    ReplyDelete
  29. படித்தேன் ரசித்தேன்.

    ReplyDelete
  30. அண்ணே டிபன் சுப்பர்...... சுரேஷ் காலத்தின் மாற்றங்களுடன் அழகாகவே இருக்கிறார்.....

    ReplyDelete
  31. Tiffain super ன்னா. Mixed variety rice சாப்பிட்ட மாதிரி இருந்தது.

    டிபனில் சினிமா மேட்டேர்கள் சற்று அதிகம். சரி விடுங்க.. நம்ம எல்லாருக்கும் அது தான் அதிகம் பிடிக்கும்னு நினைக்கிறீங்க போல..

    சுரேஷ் சக்கரவர்த்தி photo ஆச்சரியமாதான் இருந்தது. அழகன் படத்தில் கண்ணாடி போட்டு கொண்டு தவழ்ந்து நடித்தவர் இன்று இப்படி ஆகிட்டாரா? இப்போ என்ன பண்றார்?

    மோகன் குமார்
    http://veeduthirumbal.blogspot.com/

    ReplyDelete
  32. நிறைவான பதிவு உ.த. அண்ணே

    குஷ்புவையும், சுரேஷ் சக்கரவர்த்தியையும் ஈசியா கண்டு பிடிச்சுட்டேனே....

    கோவா ஹேங்க் ஓவரோட காப்பியா இருக்கும்ன்னுதான் தோணுது. :(

    தமிழுக்கு ஏத்தா மாதிரி மாத்தி எடுத்தோம்ன்னு பொறுமையா பேட்டி கொடுப்பாங்க. வெய்ட்!

    ReplyDelete
  33. பொடி, எண்ணெய்,ஆப்பம்,தேங்காய்ப் பால்.. இதெல்லம் விட்டுட்டீங்க பாஸ்..

    ReplyDelete
  34. அது யாரு பாஸ்.. சுரேஷ் சக்கரவர்த்தி?

    ReplyDelete
  35. தீப்பெட்டி, நல்ல கேள்வி கேட்டீர்!!!!

    பதில்வந்தா நானும் தெரிஞ்சுக்குவேன்.

    முதல்லே நானும் கேக்கலாமான்னு நினைச்சேன். அறியாமையைப் பறை சாற்றவேணாம், நம்மைப்போல் ஒருவர் இருப்பாங்கன்னு நம்பினேன்.

    நம்பிக்கைப் பொய்க்கலை:-))))))

    ReplyDelete
  36. சொந்த நலனுக்காக தென் தமிழக மக்களின் வாழ்வைப்பற்றி அக்கறை காட்டாத தலைவர்கள் ,முல்லைப்பெரியாறு விஷயம்தான்.
    காப்பி அடிப்பதிலேயே முன்னணி வகிக்கும் தமிழ்த்திரையுலகம் .
    வர்த்தக நோக்குக்காக தனிமனித சோகங்களுக்கு மதிப்பு தராமல் அவர்களின் உணர்வுகளை மிதிக்கும் தமிழ் பத்திரிகையாளர்கள் .,
    மற்றவர்களின் கற்பனையை களவாடி தமது கற்பனையாகக் காட்டும் நேர்மையற்ற தன்மை .
    கொள்கை ,கருத்தியலுக்காக கட்சியில் சேராமால் பணத்துக்காகவும் பதவிக்காக்கவுமே அலையும் அடிக்கடி கட்சி தாவும் அரசியல்வாதிகள் .

    உண்மை அண்ணா ,இதுதான் இன்றைய தமிழகமா?

    ---வானதி

    ReplyDelete
  37. வழக்கம்போல டாப்பு..
    முதல் படத்துல முதுகை பார்த்தவுடனே தெரிந்துவிட்டது அது நம்ம குஷ்பக்கதான்னு,
    பின்ன இவ்ளோ பெரிய முகுது தமிழ்நாட்டுல வேற யாருக்கு இருக்கு? சரிதானே.. :-)

    ReplyDelete
  38. வழக்கம்போல டாப்பு..
    முதல் படத்துல முதுகை பார்த்தவுடனே தெரிந்துவிட்டது அது நம்ம குஷ்பக்கதான்னு,
    பின்ன இவ்ளோ பெரிய முகுது தமிழ்நாட்டுல வேற யாருக்கு இருக்கு? சரிதானே.. :-)

    ReplyDelete
  39. [[[புதுகைத் தென்றல் said...
    படித்தேன் ரசித்தேன்.]]]

    படித்தேன்.. தெரிந்தேன்.. வருகைக்கு நன்றி..!

    ReplyDelete
  40. [[[பித்தன் said...
    அண்ணே டிபன் சுப்பர்...... சுரேஷ் காலத்தின் மாற்றங்களுடன் அழகாகவே இருக்கிறார்.....]]]

    அப்படியா? உனது கருத்தை அவருக்கு பார்சல் செய்து விடுகிறேன்..!

    ReplyDelete
  41. [[[Mohan Kumar said...

    Tiffain superன்னா. Mixed variety rice சாப்பிட்ட மாதிரி இருந்தது.
    டிபனில் சினிமா மேட்டேர்கள் சற்று அதிகம். சரி விடுங்க.. நம்ம எல்லாருக்கும் அதுதான் அதிகம் பிடிக்கும்னு நினைக்கிறீங்க போல..

    சுரேஷ் சக்கரவர்த்தி photo ஆச்சரியமாதான் இருந்தது. அழகன் படத்தில் கண்ணாடி போட்டு கொண்டு தவழ்ந்து நடித்தவர் இன்று இப்படி ஆகிட்டாரா? இப்போ என்ன பண்றார்?

    மோகன் குமார்
    http://veeduthirumbal.blogspot.com/]]]

    ஆஸ்திரேலியால செட்டில்டு.. அது மட்டும்தான் எனக்குத் தெரியும்..!

    ReplyDelete
  42. [[[சென்ஷி said...

    நிறைவான பதிவு உ.த. அண்ணே
    குஷ்புவையும், சுரேஷ் சக்கரவர்த்தியையும் ஈசியா கண்டு பிடிச்சுட்டேனே....]]]

    அடப்பாவி.. மக்குப் பசங்களா இருப்பீங்கன்னு பார்த்தா இப்படி பின்றீங்களேடா கண்ணுகளா..?

    [[[கோவா ஹேங்க் ஓவரோட காப்பியா இருக்கும்ன்னுதான் தோணுது.:(]]]

    ம்..

    [[[தமிழுக்கு ஏத்தா மாதிரி மாத்தி எடுத்தோம்ன்னு பொறுமையா பேட்டி கொடுப்பாங்க. வெய்ட்!]]]

    அப்படீங்கிற..? பார்ப்போம்.. வெயிட் அண்ட் ஸீ..!

    ReplyDelete
  43. [[[தீப்பெட்டி said...
    பொடி, எண்ணெய்,ஆப்பம்,தேங்காய்ப் பால்.. இதெல்லம் விட்டுட்டீங்க பாஸ்..]]]

    அடுத்ததுல சேர்த்துத் தரேன் தீப்பெட்டி ஸார்..!

    ReplyDelete
  44. [[[தீப்பெட்டி said...
    அது யாரு பாஸ்.. சுரேஷ் சக்கரவர்த்தி?]]]

    ஒரு காலத்தில் திரைப்பட நடிகர்.. டிவி நடிகர், டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர், தொகுப்பாளர் அப்படீன்னு பல முகங்கள் இவருக்குண்டு..

    ஆனால் எங்க எல்லாருக்கும் மொதல்ல இவரை எப்படித் தெரியும்னா அந்தக் காலத்துல எங்களோட ஸ்வீட் ஹார்ட்டா இருந்த அமலாவோட மேனேஜர் இவர்தான். அந்த சமயம்தான் இவரோட பேரை தெரிஞ்சு வைச்சுக்கிட்டோம்.

    கடைசியா நான் பார்த்தது மறுபடியும் படத்துல.. நிழல்கள்ரவியோட அஸிஸ்டெண்ட்டா நடிச்சிருந்தாரு.. அதுக்கப்புறம் நிறைய டிவி சீரியல்கள்ல நடிச்சாரு.. டிவி தொடர்கள் எடுத்தாரு.. தொகுப்பாளராவும் இருந்தாரு சன் டிவிலன்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  45. [[[துளசி கோபால் said...

    தீப்பெட்டி, நல்ல கேள்வி கேட்டீர்!!!!
    பதில் வந்தா நானும் தெரிஞ்சுக்குவேன். முதல்லே நானும் கேக்கலாமான்னு நினைச்சேன். அறியாமையைப் பறைசாற்ற வேணாம், நம்மைப்போல் ஒருவர் இருப்பாங்கன்னு நம்பினேன்.
    நம்பிக்கைப் பொய்க்கலை:-))))))]]]

    டீச்சர் எவ்ளோ அழுத்தமான ஆளு..! ம்.. பதில் சொல்லிட்டேன் டீச்சர்..!

    ReplyDelete
  46. [[[SurveySan said...
    good one.]]]

    மிக்க நன்றி..!

    ReplyDelete
  47. [[[vanathy said...

    சொந்த நலனுக்காக தென் தமிழக மக்களின் வாழ்வைப்பற்றி அக்கறை காட்டாத தலைவர்கள் முல்லைப் பெரியாறு விஷயம்தான்.
    காப்பி அடிப்பதிலேயே முன்னணி வகிக்கும் தமிழ்த் திரையுலகம் .
    வர்த்தக நோக்குக்காக தனிமனித சோகங்களுக்கு மதிப்பு தராமல் அவர்களின் உணர்வுகளை மிதிக்கும் தமிழ் பத்திரிகையாளர்கள்.
    மற்றவர்களின் கற்பனையை களவாடி தமது கற்பனையாகக் காட்டும் நேர்மையற்ற தன்மை.
    கொள்கை, கருத்தியலுக்காக கட்சியில் சேராமால் பணத்துக்காகவும் பதவிக்காக்கவுமே அலையும் அடிக்கடி கட்சி தாவும் அரசியல்வாதிகள் .
    உண்மை அண்ணா, இதுதான் இன்றைய தமிழகமா?
    ---வானதி]]]

    ஆமாம்.. இதுவேதான்.. பளீர்ன்னு பத்திக்கிறியேம்மா..!

    ReplyDelete
  48. [[[நாஞ்சில் பிரதாப் said...
    வழக்கம்போல டாப்பு.. முதல் படத்துல முதுகை பார்த்தவுடனே தெரிந்துவிட்டது அது நம்ம குஷ்பக்கதான்னு, பின்ன இவ்ளோ பெரிய முகுது தமிழ்நாட்டுல வேற யாருக்கு இருக்கு? சரிதானே..:-)]]]

    நாஞ்சில் தம்பீ..

    ரொம்ப விவரந்தான்.. குஷ்பு அக்காவுக்கு மட்டும் இது தெரியாம இருக்கணும்.. அவ்ளோதான்..!

    ReplyDelete
  49. இந்த முதுகை எத்தன தடவை ஜெயா டிவியில் பார்த்து இருப்போம். கடந்த ஒன்னரை வருடமா இங்கு ஜெயா டிவி மட்டும் பார்த்துகிட்டு இருக்கோம். இந்த முதுகை கண்டுபிடிக்க முடியாதா..

    நாஸ்டா நல்லா கீது வாத்யாரே.. கீப் இட் அப்

    ReplyDelete
  50. // இதுவரையில் சினிமாவில் அடையாளம் இல்லாமல் இருப்பவர். இப்படியா செய்வார்கள்..? //

    அண்ணே சினிமா உலகத்தில் இந்த ஏமாற்று ரொம்ப சகஜமாக நடக்கின்ற மாதிரி தெரிகின்றதே...

    எல்லா இடத்திலேயும் மற்றவர்கள் உழைப்பில் சுரண்டுபவர்கள் இருப்பார்கள் போலிருக்கு

    ReplyDelete
  51. [[[இராகவன் நைஜிரியா said...

    இந்த முதுகை எத்தன தடவை ஜெயா டிவியில் பார்த்து இருப்போம். கடந்த ஒன்னரை வருடமா இங்கு ஜெயா டிவி மட்டும் பார்த்துகிட்டு இருக்கோம். இந்த முதுகை கண்டுபிடிக்க முடியாதா..]]]

    ராகவன் ஸார்.. உங்களை என்னமோன்னு நினைச்சேன்.. பின்னிட்டீங்க..!

    [[[நாஸ்டா நல்லா கீது வாத்யாரே.. கீப் இட் அப்]]]

    தேங்க்ஸ் வாத்தியாரே..!

    ReplyDelete
  52. [[[இராகவன் நைஜிரியா said...

    //இதுவரையில் சினிமாவில் அடையாளம் இல்லாமல் இருப்பவர். இப்படியா செய்வார்கள்..? //

    அண்ணே சினிமா உலகத்தில் இந்த ஏமாற்று ரொம்ப சகஜமாக நடக்கின்ற மாதிரி தெரிகின்றதே...]]]

    ரொம்பவே சகஜமா இருக்கு.. பாவம் அந்த மனுஷன்..

    [[[எல்லா இடத்திலேயும் மற்றவர்கள் உழைப்பில் சுரண்டுபவர்கள் இருப்பார்கள் போலிருக்கு.]]]

    சமுதாயத்தில் நூத்துக்கு 60 பேர் இப்படித்தான் இருக்காங்க..!

    ReplyDelete
  53. [[[எறும்பு said...
    உள்ளேன் அய்யா
    :-))))]]]

    ஓகே. பிரஸண்ட் போட்டர்றேன்..!

    ReplyDelete
  54. ஃபுல் டைட்டுங்க! பாதிதான் சாப்பிடமுடிந்தது!!

    ReplyDelete
  55. அன்புள்ள உண்மைத்தமிழன்..

    காலச்சுவடு இதழில் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய 'ஆஷ் அடிச்சுவட்டில்' ஆய்வுக்கட்டுரை பற்றி குறிப்பிட்டிருந்தது அருமை. அந்தக்கட்டுரை பற்றியும் திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி பற்றியும் நான் எழுதியுள்ளவற்றை நேரம் கிடைத்தால் படிக்கவும்.

    நன்றி

    ReplyDelete
  56. என்ன தான் சொல்லுங்க குஷ்பூ குஷ்பூ தான் ;-)

    கோவா ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..ஆர்வத்திற்கு ஒரு காரணம் தயாரிப்பு சவுந்தர்யா

    ஏகப்பட்ட தகவல் சொல்லிட்டீங்க.. ஆனா டிபன் கொடுத்து விட்டு குட் நைட் சொல்லிட்டீங்க :-)

    ReplyDelete
  57. [[[தேவன் மாயம் said...
    ஃபுல் டைட்டுங்க! பாதிதான் சாப்பிட முடிந்தது!!]]]

    அப்போ கொஞ்ச நேரம் கழிச்சு வந்து திரும்பவும் சாப்பிடுங்க..!

    ReplyDelete
  58. [[[செ.சரவணக்குமார் said...

    அன்புள்ள உண்மைத்தமிழன்..
    காலச்சுவடு இதழில் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய 'ஆஷ் அடிச்சுவட்டில்' ஆய்வுக் கட்டுரை பற்றி குறிப்பிட்டிருந்தது அருமை. அந்தக் கட்டுரை பற்றியும் திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி பற்றியும் நான் எழுதியுள்ளவற்றை நேரம் கிடைத்தால் படிக்கவும்.
    நன்றி]]]

    கண்டிப்பாக படிக்கிறேன் ஸார்..!

    ReplyDelete
  59. [[[கிரி said...
    என்னதான் சொல்லுங்க குஷ்பூ குஷ்பூதான் ;-)]]]

    கரெக்ட்டு..

    [[[கோவா ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஆர்வத்திற்கு ஒரு காரணம் தயாரிப்பு சவுந்தர்யா]]]

    நான் ஹேங்க்ஓவருக்காக எதிர்பார்க்கிறேன்..

    [[[ஏகப்பட்ட தகவல் சொல்லிட்டீங்க.. ஆனா டிபன் கொடுத்துவிட்டு குட் நைட் சொல்லிட்டீங்க :-)]]]

    நல்லா சாப்பிட்டுட்டு தூங்குங்க.. உடம்புக்கு நல்லதுதான்..!

    ReplyDelete
  60. அண்ணே நல்ல ருசியா இருந்தது : அப்புறம் உங்களுக்கு வயிறு நிறைந்ததா ....

    ReplyDelete
  61. குஷ்பு மாதிரி எல்லோருமே இருந்துட்டா பிரச்சனை இல்லல்ல ...

    \\ இந்த போட்டால இருக்கிறவரை நல்லா உத்துப் பாருங்க..

    யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்கன்னா நீங்க கொஞ்சம் வயசானவரு.. புத்திசாலின்னு ஒத்துக்குறேன்.. ///

    தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது ...

    அதனால நீங்களே சொல்லிடுங்க ....

    ReplyDelete
  62. வார‌க் க‌டைசிக்கு இப்ப‌டி ஒரு விருந்தா.. சூப்ப‌ர் உண்மைத்த‌மிழ‌ன் ஸார் !

    -Toto
    www.pixmonk.com

    ReplyDelete
  63. ///கட்டபொம்மன் said...
    அண்ணே நல்ல ருசியா இருந்தது : அப்புறம் உங்களுக்கு வயிறு நிறைந்ததா.///

    சாப்பிட்டது நீங்க..

    வயிறு நிறைந்ததான்னு என்னைக் கேட்டா எப்படி..?

    ReplyDelete
  64. [[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    குஷ்பு மாதிரி எல்லோருமே இருந்துட்டா பிரச்சனை இல்லல்ல.]]]

    கரெக்ட்டு.. ஆனா அவங்களுக்குப் பிரச்சினை வந்தப்ப நடிகர் சங்கம் தலையிடாம இருந்ததுதான் அக்காவுக்கு இப்ப கோபமாம்..

    \\இந்த போட்டால இருக்கிறவரை நல்லா உத்துப் பாருங்க.. யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்கன்னா நீங்க கொஞ்சம் வயசானவரு.. புத்திசாலின்னு ஒத்துக்குறேன்//

    தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது. அதனால நீங்களே சொல்லிடுங்க.///

    சொல்லிட்டனே.. மேலே இருக்குற பின்னூட்டங்களையெல்லாம் படிச்சுப் பாருங்க.. யாருன்னு தெரியும்..!

    ReplyDelete
  65. [[[Toto said...
    வார‌க் க‌டைசிக்கு இப்ப‌டி ஒரு விருந்தா.. சூப்ப‌ர் உண்மைத்த‌மிழ‌ன் ஸார் !

    -Toto
    www.pixmonk.com]]]

    நன்றி டோடோ அவர்களே..!

    ReplyDelete
  66. ஆரம்பமும் முடிவும் குஷ்பூதான்...OK.

    ReplyDelete
  67. [[[ஸ்ரீராம். said...
    ஆரம்பமும் முடிவும் குஷ்பூதான்... OK.]]]

    நன்றி.. இதை யாரும் யோசிக்கலையே.. நீங்கதான் பாயிண்ட்டை பிடிச்சிருக்கீங்க.. குட்வெரிகுட்..!

    ReplyDelete
  68. [[[Suresh Kumar said...
    nalla saappaadu]]]

    பின்னூட்டம் போட்டு பில் கட்டியதற்கு நன்றி சுரேஷ்..!

    ReplyDelete
  69. ஏகப்பட்ட ஐட்டம்!
    ரைட்டு.

    ReplyDelete
  70. அரசியல்... அரசியல்... ரொம்ப நல்லா இருந்துதுண்ணா இந்த பதிவு... அதுவும் முதல்ல ஸ்பெக்ட்ரம் மேட்டரும், முல்லை பெரியாரும் செம ஹாட்..
    /*யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்கன்னா நீங்க கொஞ்சம் வயசானவரு..*/

    இவ்ளோ சொன்ன பிறகு கண்டுபிடிப்பேனா???? ;)

    பதிவு நல்லா இருந்துதுண்ணா... :) :)

    உங்களோட பழைய அரசியல் பதிவுகள் சிலவற்றை படிச்சேன்... புடிச்சிருந்துதுண்ணா... நான் கொஞ்ச நாளா தான் உங்க எழுத்துக்கள படிக்கிறதுனால எனக்கு தெரியாம போச்சு அண்ணா.. அதான் கேட்டேன்...

    ReplyDelete
  71. [[[மங்களூர் சிவா said...
    ஏகப்பட்ட ஐட்டம்! ரைட்டு.]]]

    ஐட்டத்தை வெட்டியாச்சா..? திருப்தியா.. அல்லாட்டி அதிருப்தியா தம்பீ..!

    ReplyDelete
  72. [[[kanagu said...
    அரசியல்... அரசியல்... ரொம்ப நல்லா இருந்துதுண்ணா இந்த பதிவு... அதுவும் முதல்ல ஸ்பெக்ட்ரம் மேட்டரும், முல்லை பெரியாரும் செம ஹாட்..]]]

    /*யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்கன்னா நீங்க கொஞ்சம் வயசானவரு..*/

    இவ்ளோ சொன்ன பிறகு கண்டுபிடிப்பேனா???? ;)

    பதிவு நல்லா இருந்துதுண்ணா:) :)

    உங்களோட பழைய அரசியல் பதிவுகள் சிலவற்றை படிச்சேன். புடிச்சிருந்துதுண்ணா. நான் கொஞ்ச நாளாதான் உங்க எழுத்துக்கள படிக்கிறதுனால எனக்கு தெரியாம போச்சு அண்ணா.. அதான் கேட்டேன்.]]]

    பரவாயில்லை.. இப்பவாச்சும் படிச்சியே தம்பீ.. அதுவே போதும்..!

    ReplyDelete
  73. //'தினமலமும்' ஸாரி 'தினமலரும்', பத்திரிகையாளர்களும் ஒருவருக்கொருவர் 'டூ' விட்டுக் கொண்டபின்பு //

    தினமலரும் சினிமா காரங்களும் என்று வர வேண்டியது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  74. ஜாக்கெட் என்றாலே நினைவுக்கு வருவது நம்ம குஷ்பூ அக்காதானே, அவங்களை கண்டு பிடிக்காம இருப்போமா, என்ன தமிழன் சார் நீங்க?

    ReplyDelete
  75. [[[பெயர் சொல்ல விருப்பமில்லை said...

    //'தினமலமும்' ஸாரி 'தினமலரும்', பத்திரிகையாளர்களும் ஒருவருக்கொருவர் 'டூ' விட்டுக் கொண்டபின்பு //

    தினமலரும் சினிமாகாரங்களும் என்று வர வேண்டியது என்று நினைக்கிறேன்.]]]

    அட.. ஆமாம்.. எம்மாம் பெரிய தப்பு பண்ணிருக்கேன். யாருக்குமே தோணலையா..

    யப்பா.. சாமி.. பெயர் சொல்லாத பெருமாளே.. வாழ்க நீ..!

    மாற்றிவிட்டேன்.. நன்றிகள் கோடி..!

    ReplyDelete
  76. [[[பெயர் சொல்ல விருப்பமில்லை said...
    ஜாக்கெட் என்றாலே நினைவுக்கு வருவது நம்ம குஷ்பூ அக்காதானே, அவங்களை கண்டு பிடிக்காம இருப்போமா, என்ன தமிழன் சார் நீங்க?]]]

    ஆமாம்ல.. நான் என்ன தமிழனோ..? இவ்ளோ டியூப்லைட்டா இருக்கேன்..?!!!

    ReplyDelete
  77. நல்லாதான் இருக்கு...
    ஆனா கேசரியோட துவையல சேத்துருக்கீங்க... இந்த மிக்ஸிங் நமக்குப் பிடிக்காது.

    அப்றம்... இந்த வடை போன வடை மாதிரி இல்ல.

    ReplyDelete
  78. இட்லி வடை பொங்கல் கேசரி என்று ஏகத்திற்கு சாப்பிட்டதால் செரிமாணம் ஆகவில்லை போல. அடுத்த பதிவை நாலு நாளாக காணோமே உண்மைத் தமிழன் அய்யா.


    jigopi@yahoo.co.in

    ReplyDelete
  79. அல்லாரு மாதிரியும் அக்கா-ஆண்ட்டி படத்தை நானும் பக்குனு கண்டு பிடிச்சுட்டேன்...

    பின்னே,இப்படி ரோலர் சைஸ்ல இருக்கற ஆளுங்க நொம்பக் கம்மி நண்பா..

    ReplyDelete
  80. [[[எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...
    நல்லாதான் இருக்கு... ஆனா கேசரியோட துவையல சேத்துருக்கீங்க. இந்த மிக்ஸிங் நமக்குப் பிடிக்காது.]]]

    கேசரியை முதல்லயே சாப்பிட்டிரணும்..

    [[[அப்றம்... இந்த வடை போன வடை மாதிரி இல்ல.]]]

    போன வடையோட தொடர்ச்சி இந்த வடை..!

    ReplyDelete
  81. [[[gopi g said...
    இட்லி வடை பொங்கல் கேசரி என்று ஏகத்திற்கு சாப்பிட்டதால் செரிமாணம் ஆகவில்லை போல. அடுத்த பதிவை நாலு நாளாக காணோமே உண்மைத் தமிழன் அய்யா.
    jigopi@yahoo.co.in]]]

    அதேதான்.. எனக்கும் செரிமாணம் ஆகலை. சரியான பின்னாடி வரேன் கோபிஜி..!

    ReplyDelete
  82. [[[அறிவன்#11802717200764379909 said...

    அல்லாரு மாதிரியும் அக்கா-ஆண்ட்டி படத்தை நானும் பக்குனு கண்டு பிடிச்சுட்டேன்... பின்னே,இப்படி ரோலர் சைஸ்ல இருக்கற ஆளுங்க நொம்பக் கம்மி நண்பா..]]]

    அறிவன் ஸார்..!

    என்னைத் தவிர அத்தனை பேரும் நல்லவங்கன்னு நினைச்சது என் தப்புதான்..

    ReplyDelete
  83. இவரு கொடுமை தாங்கலையே.. 17 பதிவை ஒன்னா போட்டு சாவடிக்கிறாரே.. :(

    ReplyDelete
  84. சுரேஷ் சக்கரவர்த்தியை உடனே கண்டுபிடிச்ச நடராஜிக்கும், சுவாரசியமா எழுதுன உங்களுக்கும், ஒரு பிளேட் இட்லி, வடை, பொங்கல் மற்றும் காப்பி.

    ReplyDelete
  85. [[[SanjaiGandhi™ said...
    இவரு கொடுமை தாங்கலையே.. 17 பதிவை ஒன்னா போட்டு சாவடிக்கிறாரே:(]]]

    கடைசிவரைக்கும் படிச்சு முடிச்சுட்டு எதுக்கு இந்தப் புலம்பல்..?

    ReplyDelete
  86. [[[r.selvakkumar said...
    சுரேஷ் சக்கரவர்த்தியை உடனே கண்டுபிடிச்ச நடராஜிக்கும், சுவாரசியமா எழுதுன உங்களுக்கும், ஒரு பிளேட் இட்லி, வடை, பொங்கல் மற்றும் காப்பி.]]]

    நன்றி.. நன்றி.. நன்றி.. பில் அனுப்ப மாட்டீங்களே..!

    ReplyDelete
  87. [[[கிறுக்கல் கிறுக்கன் said...
    ஏவ்வ்வ்வ்...]]]

    ஏப்பம் விட்டாச்சா..? ஓகே.. செரிச்சிரும்..!

    ReplyDelete