Pages

Saturday, October 03, 2009

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-03-10-2009

03-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இட்லி


நான் எழுதியிருந்த கேவலமாகிப் போன தமிழக அரசின் திரைப்பட விருதுகள் பதிவில் இடம் பெற்ற திரைப்படங்களைப் பற்றிய அலசலில் புதிய விஷயம் ஒன்றும் தாமதமாகக் கிடைத்தது.


அதாகப்பட்டது என்னவெனில் பரிசுகளை வென்றுள்ள திரைப்படங்களில் 98 சதவிகித திரைப்படங்களின் டிவி ரைட்ஸ்கள் கலைஞர் டிவியிடம்தான் உள்ளனவாம். திரைப்படங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதால் அவர்களுக்கு பரிவு காட்டும் பொருட்டு இந்த ஏற்பாடு என்கிறது சேம்பர் வட்டாரம்.




'பூ' பார்வதியையும், 'பொம்மலாட்டம்' ருக்மணியையும் தாண்டி த்ரிஷாவுக்கு கொடுத்ததன் மர்மம் என்ன என்று விசாரித்தால், திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரபலமான திரை நட்சத்திரங்கள் வந்தால்தான் மார்க்கெட்டிங் செய்ய முடியும் என்று நிகழ்ச்சியை ஒளிபரப்ப காத்திருக்கும் கலைஞர் டிவியின் மார்க்கெட்டிங் டீமின் புலம்பலும் ஒரு காரணம் என்கிறார்கள்.

யாருக்காக யாரால் ஆட்சி செய்யப்படுகிறது என்பதே புரியவில்லை.

தோசை


ஜீ தமிழ்த் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும் ஒரே நாளில் அரை மணி நேர வித்தியாசத்தில் 'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்தை ஒளிபரப்பியதில் இருக்கும் மர்மங்களும் இதைப் போலவே பல கதைகளை உள்ளடக்கியதாக உள்ளது.




முதல் முறையாக ஜீ தமிழ்த் தொலைக்காட்சிக்கு விளம்பரங்கள் கொட்டத் துவங்கியது 'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்திற்குத்தான்.. முதலிலேயே விளம்பரங்களை அவர்களிடம்விட்டால் பின்பு நமக்கு கொஞ்சமாவது துண்டு விழுகுமே என்று யோசித்த சன் தரப்புதான் மிகுந்த திட்டமிட்டு, தங்களது வியாபாரத்தை முன் நிறுத்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டது.


தங்களுடைய சன் நெட்வொர்க் டிஜிட்டல் ஒளிபரப்பில் ஜீ தமிழ்த் தொலைக்காட்சியை ஒளிபரப்பும் வசதியைத் தருவதாகச் சொல்லி ஆசை காட்டியும், "இல்லைன்னா அன்னிக்கு மட்டும் உங்க கனெக்ஷனுக்கு டெக்னிக்கல் பிராப்ளம் வந்தாலும் வரலாம்" என்று செல்லமான மிரட்டலும் வந்தபடியால்தான் ஜீ தரப்பு இணங்கி வந்திருக்கிறது.


அவர்களுக்கும் வேலையாகணும்ல்ல.. வெறும் கேபிளில் வருவதைவிட சன் நெட்வொர்க்கில் வருவதால் கூடுதல் பார்வையாளர்களும், அதனால் எதிர்காலத்தில் கூடுதல் விளம்பர வருவாயும் கிடைக்குமே என்கிற வியாபாரத்தினால் ஜீ பெரிய மனதுடன் விட்டுக் கொடுத்திருக்கிறது.


சுமார் 85 லட்சத்துக்கு வாங்கியிருந்த 'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்தை ஒரு கோடி லாபம் வைத்து சன் தரப்புக்கு விற்றுவிட்டது ஜீ. கூடுதலாக ஏற்கெனவே செய்து வந்த விளம்பரத்தினால், அன்றைக்கு மட்டும் சும்மா ஓட்டிக் கொள்ள பெர்மிஷனும் வாங்கி ஓட்டியாகி விட்டது. அன்றைக்கு நிஜமாகவே வர வேண்டிய விளம்பர கல்லாவில் சுமார் 20 லட்சம் மட்டுமே குறைவாம்.. மற்றபடி ஜீ தமிழுக்கும் காசுதான்..



இன்னொரு விஷயமும் சேனல்கள் வட்டாரத்தில் உலா வருகிறது.. சமீபத்தில் வந்து தமிழகத்தைக் கலக்கிய 'நாடோடிகள்' திரைப்படமும் சன் தரப்பிடம் போய்விட்டதாம். அதுவும் ஜீ சேனலால் 2-க்கு வாங்கப்பட்டு கூடுதலாக 1 பெரிய நோட்டு லாபம் வைத்து சன்னின் கைக்கு போயே போய்விட்டது என்கிறார்கள்.

மிக விரைவில் சன் தொலைக்காட்சியில் 'சம்போ சிவசம்போ'வை காணலாம்.


பொங்கல்


உலக நாயகன், ஆழ்வார்பேட்டை ஆண்டவன், ஆஸ்கார் நாயகன், காதல் இளவரசன், கலைஞானி, அண்ணன் கமலஹாசனின் 50 ஆண்டு திரையுலக வாழ்க்கைக்கு முதற்கண் எனது வாழ்த்துக்கள்..


அண்ணனின் திரையுலக வாழ்க்கையை ஒட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விழா மிகப் பிரம்மாண்டமாக நடந்தது என்றாலும் என்னைப் போன்ற அவரது ஆரம்பக் காலத் தோழர்களுக்கு ஒரு விஷயம் குறையாகவே பட்டது.


அண்ணனுடன் ஜோடி போட்ட நடிகைகள் பலரும் மேடைக்கு வந்து அண்ணன் பற்றி தங்களது கருத்துக்களை தெரிவித்தார்கள்.

மீனா, ரேவதி, லிசி, நிரோஷா, ஊர்வசி, ராதிகா, கவுதமி, ஜெயசித்ரா, ரோகிணி, சரண்யா, ஷோபனா, தபு என்று பட்டியல் நீண்டாலும் என்னைப் போன்ற அவருடைய ஆதிகாலத்துப் படத்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சிலர் வராதது ஆச்சரியத்தை அளித்தது.


"ராதா, அம்பிகா சகோதரிகள் ஏன் வரவில்லை?" என்று கேட்டதற்கு "அழைப்பிதழ் கொடுத்தாச்சு.. கூப்பிட்டாச்சு.. சொல்லியாச்சு.. வரலை.." என்கிறது மீடியா வட்டாரம். மனோரமா ஆச்சிக்கு காலில் அடிபட்டிருப்பதால் வீட்டிலேயே பெட்ரெஸ்ட்டில் இருக்கிறார். ஸோ, அவரும் இல்லை.

இவர்களும் இல்லாமல் இன்னும் இரண்டு பேரை கமலஹாசனின் ரசிகர்கள் கூட்டம் எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றமடைந்தது.
அண்ணன் கமலஹாசனுடன் அதிகமாக ஜோடி போட்டு நடித்தவர்கள் வராமல் ஆப்சென்ட்டான அந்த இரண்டு பேர்தான். ஒருவர் ஸ்ரீப்ரியா, இன்னொருவர் ஸ்ரீதேவி.

ஸ்ரீப்ரியாவைப் பொறுத்தமட்டில் கமல் மீது மட்டுமில்லாமல் ரஜினி மீதும் காண்டுவில்தான் இருக்கிறார் என்கிறார்கள். எவ்வளவோ நெருங்கிய நண்பர்கள்போல் பழகியும் இரண்டு பெரிசுகளும் 16 வருடங்களுக்கு முன்பாக தனது திருமணத்திற்கே வராமல் ஏமாற்றிய கோபம் இன்னமும் ஆறாமல் அப்படியேதான் இருக்கிறார் ஸ்ரீப்ரியா.


அடுத்தது நம்ம ஸ்ரீதேவி அக்கா. ஸ்ரீப்ரியாவுக்கு கொஞ்சமும் சளைக்காமல் ஈகோ பார்க்கக் கூடியவர். ராணி எலிசபெத் அம்மையார் தலைமையில் நடந்த 'மருதநாயகம்' துவக்க விழாவில் தன்னை அழைத்து வெளியில் கூட்டத்தோடு கூட்டமாக அமர வைத்த கோபத்தில், அப்போதே எழுந்து வெளியேற முயன்றார். பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்க முடியாது என்று சொல்ல வேறு வழியில்லாமல் அமர்ந்திருந்துவிட்டு கிளம்பியவர்தான். சமீபத்தில் விஜயகுமார் வீட்டுக் கல்யாணத்தில் கமலஹாசனை தூரத்தில் பார்த்தவுடனேயே நழுவிக் கொண்டாராம் ஸ்ரீதேவி.

இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து, பத்திரிகை அனுப்பி, போனில் செய்தி சொல்லி.. வருவதை உறுதிப்படுத்த பல முறை முயன்றும் ம்ஹும்.. "நோ ரெஸ்பான்ஸ்" என்கிறார்கள் பத்திரிகையுலக நண்பர்கள்.

மரியாதை இருக்குமெனில் கமலேதான் தங்களை அழைக்க வேண்டும் என்று இருவருமே எதிர்பார்த்தார்களாம். நம்ம அண்ணன்தான் இந்த விஷயத்துல அவங்களுக்கே அண்ணனாச்சே. "எல்லாரையும்போல கூப்பிடுங்க.. போதும்.. வந்தா வரட்டும்.." என்று சொல்லிவிட்டாராம்.


வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவில் இந்த இரண்டு முக்கிய ஹீரோயின்களும் வராமல் போக.. எனக்கென்னவோ இளையராஜாவின் இனிமையான இசை, டான்ஸ், பைட் இல்லாத கமலஹாசனின் அந்தக் காலத்துப் படத்தைப் பார்த்ததுபோல் சப்பென்று இருந்தது.


வடை


மீண்டும், மீண்டும் முயற்சிக்கும் விக்கிரமாதித்தனை போல பல முறை வலை விரித்து கடைசியில் புவனேஸ்வரியை பிடித்து உள்ளே வைத்துவிட்டது காவல்துறை.


அவர் விபச்சாரம்தான் செய்கிறார் என்றாலும், அதற்கு அழைப்பு கொடுத்தது போலீஸ் நண்பர்தான். அந்த நண்பர் அழைக்காவிட்டால் அவர் பேசாமல் இருக்கப் போகிறார். காவல்துறைக்கு என்ன வந்தது..?

புவனேஸ்வரி குற்றவாளி என்றால், அவரை விருந்துக்கு அழைத்த அந்த போலீஸ் நண்பரும் குற்றவாளிதான்.. ஏற்பாடு செய்த போலீஸும்தான் குற்றவாளி.

இதென்ன பெரிய பயங்கரவாத குற்றமா? பொறி வைத்துப் பிடிப்பதற்கு..? ஏற்கெனவே ஒரு முறை பிடித்து அவரது சினிமா வாழ்க்கையை குதறிப் போட்டது போலீஸ். அப்போதும் இதே பாணியில் யாரோ ஒருவரை பயன்படுத்தித்தான் கைது செய்தது. அந்த ஆளே போர்ஜரி.. இருவரும் படுத்திருந்ததற்கு ஆதாரம் இல்லையென்று கோர்ட் விடுவித்தது.

இப்போது என்னடான்னா போலீஸ் ஒரு கடைல காண்டம் வாங்கிக் கொடுத்துச்சாம். அதை செல்போன்ல படம் எடுத்திருக்காங்களாம். அதே காண்டத்தைத்தான் புவனேஸ்வரி வீட்டு பெட்ரூம்ல எடுத்திருக்காங்களாம். அதை பயன்படுத்த வாங்கினவரே சொல்றாராம்.. நான் படுக்கக் கூப்பிட்டேன். அவர் வர்றேன்னாருன்னு.. இது கோர்ட்டுல செல்லுமாம்..

படுக்க வர்றேன்னு சொன்னவரைவிடவும், கூப்பிட்டவுனுக்கு என்ன தண்டனையான்னு கேட்டா... அது சும்மா ஒரு ஏற்பாடாம்..


அட போங்கய்யா.. நீங்களும் உங்க இ.பி.கோ.வும்..!


பாவம் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா. ரஞ்சிதா கோவிச்சுக்கிட்டு போனதால "யாரை வேண்ணாலும் அந்த வேஷத்துக்கு போடுவேன்"னு சொல்லி புவனேஸ்வரியை கொண்டாந்தார்.. அதுவும் கலைஞர் டிவிக்கு. இப்ப நிலைமை இப்படி ஆயிருச்சு..

இனி 'தெக்கத்திப் பொண்ணு' கதை என்னாகுமாம்..?


சட்னி


உள்ளூர்ல குத்துப் பாட்டு ஆடினது போதும். ஹாயா வெளிநாட்டுல போய் நடுரோட்டுல ஒரு ஆட்டம் போடலாம் வாங்க..

நம்ம ஊர் பத்மலஷ்மி முதல் முறையா கர்ப்பமா இருக்கிறதுதான் இப்போதைய லேட்டஸ்ட் சூப்பர்ஹிட் கிசுகிசு. இதுல என்ன கிக் இருக்குங்கிறீங்களா?

நம்ம பரபரப்பு எழுத்தாளர் சாலமன்ருஷ்டியுடனான மூணு வருஷ குடும்ப வாழ்க்கையில் இருந்து அம்மணி இப்பத்தான்.. ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் டைவர்ஸாகி வெளில வந்தாங்க. இப்பத்தான் நிம்மதியா இருக்காங்களாம்.

வயது 39 ஆச்சுன்னாலும், ஏதோ இப்பவாவது குழந்தை பெத்துக்குறாங்களே.. விட்டுட்டுப் போவியான்னு கேக்குறீங்களா?
அதுவும் கரெக்ட்டுதான்.. ஆனா பாருங்க.. தன்னுடைய இந்த கர்ப்பத்துக்குக் காரணமான அந்த ஆண்மகன் யாருன்னு பத்மா சொல்ல மாட்டேங்குறாங்க. அதான் பரபரப்புக்குக் காரணம்.

அநேகமா அது அவரோட நெருங்கிய உறவினரான ஒரு வக்கீலாத்தான் இருக்கணும் என்கிறது இணையதளச் செய்திகள்.


இந்த டைப் வாழ்க்கை நல்லாயிருக்கே..


சாம்பார்

முன்னொரு காலத்துல நம்ம பக்கத்து ஸ்டேட்ல ஒரு பெரிய நடிகரோட வீட்ல நள்ளிரவு நேரத்துல துப்பாக்கி வெடிச்சது.

நடிகரோட சேர்ந்து தண்ணியடிச்சிட்டிருந்த ஒரு தயாரிப்பாளருக்கு தொடைல, இடுப்புல எல்லாம் துப்பாக்கி கண்டு பாய்ஞ்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் காப்பாத்தினாங்க. கேட்டாக்கா தன்னோட படம் ஓடாத கோபத்துல நடிகர்தான் சுட்டாருன்னு போலீஸ் சொல்லுச்சு.


நடிகரும் சமர்த்துப் பிள்ளையை மனநிலை பாதிப்பாயிருச்சுன்னு ஆஸ்பத்திரில போய் அட்மிட் ஆகித் தப்பிச்சாரு. கூடவே மூணே மாசத்துல ஆதாரம் இல்லைன்னு கோர்ட்ல கேஸ் படுத்திருச்சு. இது நம்ம நாட்டுல..
ஆனா மத்த நாட்டுல எல்லாம் இப்படியா?

ரோமன் போலன்ஸ்க்கி. திரைப்பட ரசிகர்களால் மறக்க முடியாத 'தி பியானியஸ்ட்' திரைப்படத்தின் இயக்குநர். இந்தப் படத்திற்காக 2002-ம் ஆண்டின் ஆஸ்கார் விருதையும் வாங்கியவர் இவர்.

அமெரிக்க லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் 977-ம் வருஷம் ஒரு 13 வயசுப் பொண்ணோட உறவு வைச்சுக்கிட்டதா குற்றம்சாட்டப்பட்டு அப்பவே கைதாகி 42 நாட்கள் சிறையில் இருந்தார். வழக்கு விசாரணையில் இருக்கும்போதே அங்கேயிருந்து தப்பிச்சவர் போலந்து, பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்று இத்தனை வருஷமா இங்கிட்டும், அங்கிட்டுமா பொழப்பை ஓட்டிட்டாரு.



பாருங்க. இந்த வயசான காலத்துல எப்பவோ செஞ்ச தப்பு விடாம துரத்திப் பிடிச்சிருக்கு.

சமீபத்துல சுவிட்சர்லாந்து வந்த அவரை அமெரிக்க அரசோட வேண்டுகோளை ஏற்று அந்த நாட்டு போலீஸ் கபால்ன்னு புடிச்சு ஜெயில்ல வைச்சிருக்கு.. மனுஷன் 76-வது வயசுல ஜெயில்ல கிடக்குறாராம்..
இன்னும் அமெரிக்காவுக்கு கொண்டு போகலையாம்.

ஆனால் எப்பவோ நடந்த தப்புக்கு இப்ப கைது பண்றது நல்லாயில்லைன்னு ஹாலிவுட் பிரபலங்கள் மீட்டிங் வைச்சு பேட்டி கொடுத்திட்டிருந்தாலும், அமெரிக்க சட்டப்படி இந்த வழக்கில் இருந்து போலன்ஸ்கி தப்பிப்பது ரொம்ப கஷ்டமாம்..

என்ன செய்றது? விதி வலியது என்பது மறுக்க முடியாத உண்மை.


மிளகா சட்னி


ஆடுன காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள்.. அதைப் போல பல நடிகைகள் கல்யாணமாகிப் போன ஜோர்லேயே திரும்பி வந்து "நடிப்பு என்னை விட மாட்டேங்குது.." என்பார்கள். அந்த லிஸ்ட்டில் கூடிய சீக்கிரம் நம்ம மந்த்ராவும் வந்திருவார் என்கிறார்கள்.



அம்மணி தெலுங்கில் உதவி இயக்குநர் ஒருவரைக் கல்யாணம் செய்து குடும்பஸ்தியாக பிரமோஷனாகி, தனது கணவரான உதவி இயக்குநரை, தனது சொந்தக் காசையெல்லாம் போட்டு இயக்குநரா பிரமோஷன் பண்ணினாங்க. ஆனா அந்தப் படம் அட்டர்பிளாப்பாக.. மறுபடியும் வேலை தேடினாத்தான் பொழைப்பை ஓட்ட முடியும்ன்ற நிலைமையாம்.

இன்னொரு படம் ஆரம்பிக்கலாம்னு முயற்சிகள் செஞ்சப்பதான் அவரது கேரியரையே பகீராக்குற மாதிரி ஒரு வதந்தி போன மாசம் முழுக்க டோலிவுட்ல பரவி அவர் பேரு ஏகத்துக்கும் ரிப்பேராகிப் போய்க் கிடக்குதாம். "நான் அப்படி சொல்லலை.. சொல்லாததை ரிப்போர்ட்டர் தானா சொல்லிக்கிட்டிருக்காரு"ன்னு அம்மணி கிளிசரின் போடாம அழுது முடிச்சிருக்காங்க..


அழுது முடிச்சாலும் அரிதாரம் பூசிக்குற முடிவுல மாற்றமில்லையாம். அதுனால முதல் காரியமா பழைய மந்த்ராவா வர்றதுக்கான வேலைகளையெல்லாம் ஜிம்முல பழியா கிடந்து செஞ்சுக்கிட்டிருக்கிறதா கேள்வி..
வரட்டும்..

அக்கா, அண்ணி கேரக்டர்கூட கொடுத்து காப்பாத்த கோடம்பாக்கம் எப்பவுமே ரெடிதான்..


துவையல்


அக்கட தேசத்தில் நாயுடுகாருவுடன் டூ விட்டுக் கொண்டு இத்தாலிக்காரம்மா கட்சில சேர்றதுக்காக காத்துக்கிட்டிருக்கும் நமது முன்னாள் சிரிப்பழகி நடிகையோட வீட்ல கட்சி தாவுறது விஷயமா புயல் காத்து வீசுதாம்..


"கிட்டத்தட்ட ஒரு வருஷமா ஊர், ஊரா போயி 'அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடாதீங்க'ன்னு தொண்டை கிழிய கத்தி என் பொழைப்பையே கெடுத்திட்டு வீட்ல உக்காந்திருக்கேன்.. நீ எப்படி அந்தக் கட்சில சேரலாம்..?"னு அம்மணியின் வூட்டுக்காரர் கத்துறாராம்..


ஆனாக்க.. அம்மணியோ ரொம்பவே கூலா "நான் என் பொழைப்பை பார்க்குறேன்.. நீ உன் பொழைப்பை பாரு"ன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாங்களாம்..


பாவம் வூட்டுக்காரரு.. மெல்லவும் முடியாம, துப்பவும் முடியாம தவிச்சுக்கிட்டிருக்காரு..

ஆப்பம்


சினிமாக்காரங்க மட்டும்தான் குத்தாட்டம் போடுவாங்களா..? நாங்களும் போடுவோம்ல..

பணியாரம்

முருகா.. மன்னிச்சுக்கப்பா.. ஏதோ ஆர்வக் கோளாறுல பிள்ளைக பண்ணிட்டாங்க..

தேன்குழல்



என்னதான் ஆட்டமா ஆடுனாலும், ஏதோ ஒரு இடத்துல தலையை குனிஞ்சுதாங்க ஆகணும்..


போதும்ப்பா.. 'இட்லி-வடை' போட்டு ரொம்ப நாளாச்சேன்னு எழுத ஆரம்பிச்சா, ஒரே சினிமாவா வந்து குவிஞ்சிருச்சு.. அதுனால இது 'சினிமா ஸ்பெஷல்'ன்னு நினைச்சுக்குங்கோ..


அடுத்த வாரம் சந்திப்போம்..


நன்றி


வணக்கம்.

98 comments:

  1. ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    முடியலை!

    ReplyDelete
  2. //அவர் விபச்சாரம்தான் செய்கிறார் என்றாலும், அதற்கு அழைப்பு கொடுத்தது போலீஸ் நண்பர்தான். அந்த நண்பர் அழைக்காவிட்டால் அவர் பேசாமல் இருக்கப் போகிறார். காவல்துறைக்கு என்ன வந்தது..?
    //

    சபாஷ்னே! இங்கதான் நிக்கிறீங்க!

    விஜிலென்ஸ்ல 500ரூவாய் நோட்டுல பவுடரைத் தடவிக் கொண்டு போயி கொடுன்னு குடுத்தணுப்புறாங்களே! அப்பொ லஞ்சம் வாங்கின அதிகாரியை விட கொடுத்தனுப்புற ஆப்பீசருங்களுக்கும் தண்டனை கொடுக்கணும்னு சொல்றீங்களா அண்ணே!

    ReplyDelete
  3. சபாஷ்னே! இங்கதான் நிக்கிறீங்க!

    :-)))))))))

    ReplyDelete
  4. சுவாமியேய்ய்ய்ய் சரணம் அய்யப்பா...

    ReplyDelete
  5. [[[நாமக்கல் சிபி said...

    ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    முடியலை!]]]

    என்னாலேயும் முடியல முருகா..

    ReplyDelete
  6. சூப்பர் சினிமா ஸ்பெசல்

    சோ யாரிடமும் இப்படி பணிவாக வணக்கம் சொல்கிறார்.அண்ணே படம் போட்டுட்டுங்க கூடவே விவரம் சொன்னா புரியும்ல

    ReplyDelete
  7. [[[நாமக்கல் சிபி said...

    //அவர் விபச்சாரம்தான் செய்கிறார் என்றாலும், அதற்கு அழைப்பு கொடுத்தது போலீஸ் நண்பர்தான். அந்த நண்பர் அழைக்காவிட்டால் அவர் பேசாமல் இருக்கப் போகிறார். காவல்துறைக்கு என்ன வந்தது..?//

    சபாஷ்னே! இங்கதான் நிக்கிறீங்க!
    விஜிலென்ஸ்ல 500 ரூவாய் நோட்டுல பவுடரைத் தடவிக் கொண்டு போயி கொடுன்னு குடுத்தணுப்புறாங்களே! அப்பொ லஞ்சம் வாங்கின அதிகாரியைவிட கொடுத்தனுப்புற ஆப்பீசருங்களுக்கும் தண்டனை கொடுக்கணும்னு சொல்றீங்களா அண்ணே!]]]

    உன்னை ரெண்டு கூறா வெட்டணும்..

    அரசு அதிகாரிகள் செய்வது மக்கள் பணி.. அதுக்குத்தான் கவர்ன்மெண்ட் சம்பளம் கொடுக்குது..

    இங்க யார் இவரை அங்க போகச் சொன்னது..? அவங்களா என்கிட்ட வாங்கன்னு கூப்பிட்டாங்க..

    அவங்க வரக்கூடியவங்கதான் அப்படீன்னு நினைச்சுத்தான செட்டப் பண்ணியிருக்காங்க..! இந்த எண்ணம்தான் தப்புன்னா எத்தனை பேரை தூக்கி உள்ள போடணும் தெரியுமா?

    ReplyDelete
  8. [[[♠புதுவை சிவா♠ said...

    சபாஷ்னே! இங்கதான் நிக்கிறீங்க!

    :-)))))))))]]]

    நான் எங்கேயும் நிக்கல.. என் வீட்லதான் உக்காந்திருக்கேன் சிவா..!

    ReplyDelete
  9. [[[தண்டோரா ..... said...
    சுவாமியேய்ய்ய்ய் சரணம் அய்யப்பா...]]]

    அரோகரா.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. கந்தவேல் முருகனுக்கு அரோகரா..! வேல் வேல் வெற்றிவேல்..!

    ReplyDelete
  10. [[[Arun Kumar said...
    சூப்பர் சினிமா ஸ்பெசல்
    சோ யாரிடம் இப்படி பணிவாக வணக்கம் சொல்கிறார்.அண்ணே படம் போட்டுட்டுங்க கூடவே விவரம் சொன்னா புரியும்ல]]]

    நடிகை Rajasree-யின் மகன் திருமணத்தில்தான் நடிகை சாரதாவிடம் தலை குனிந்து ஆசி வாங்குகிறார் சோ.

    ReplyDelete
  11. [[[L-L-D-a-s-u said...

    Idly,Vadai & Cho ..

    Super combination]]]

    நன்றி லால்டாசு..!

    ReplyDelete
  12. முருகா என்னப்பா இது. உன்னையும் ஓட்டு வாங்க use பண்ணுதே உடன்பிறப்பு.

    ஆமாம். அன்னை, ஆதிபராசக்தி , அகிலாண்டேஸ்வரி(புரட்சி தலைவி) பத்தி படம் இருந்தா போடுவீங்களா

    ReplyDelete
  13. [[[jaisankar jaganathan said...
    முருகா என்னப்பா இது. உன்னையும் ஓட்டு வாங்க use பண்ணுதே உடன்பிறப்பு. ஆமாம். அன்னை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி (புரட்சி தலைவி) பத்தி படம் இருந்தா போடுவீங்களா]]]

    கண்டிப்பா போடுவோம்..! இருந்தா அனுப்பி வைங்க..!

    ReplyDelete
  14. //உன்னை ரெண்டு கூறா வெட்டணும்..
    //

    உங்க ரெண்டு பேரோட இரகளைக்குன்னே ரெண்டு பதிவுக்கும் வந்து போறேன்.... நடத்துங்க நடத்துங்க....


    அப்புறம் இந்த இடுகை, சுவாரசியமா இருக்குங்க.... உண்மைக்கு பெருமை சேர்க்குறீங்க அண்ணே!!

    ReplyDelete
  15. /////பனியாரம்///

    சொற்பிழை!
    பணியாரம் என்று திருத்திக் கொள்ளுங்கள் உனா தானா!

    ReplyDelete
  16. ஓட்டு போட்டாச்சு

    ஒரு டவுட்டு

    // வெறும் கேபிளில் வருவதைவிட சன் நெட்வொர்க்கில் வருவதால் கூடுதல் பார்வையாளர்களும், அதனால் எதிர்காலத்தில் கூடுதல் விளம்பர வருவாயும் கிடைக்குமே என்கிற வியாபாரத்தினால் ஜீ பெரிய மனதுடன் விட்டுக் கொடுத்திருக்கிறது.//

    ஜீ நெட்வோர்க் சன் நெட்வொர்க்கை விட மிக பெரியது.

    நீங்க சொல்றது புரியலை.. இந்த ஒப்பந்த்தால் சன் டிவி பேக்கேஜோடு ஜீ தமிழும் கிடைக்குமா? இல்லை எஸ் சி வியில் கவனிக்கபடுமா?

    ReplyDelete
  17. இந்த டைப் வாழ்க்கை நல்லாயிருக்கே..
    //


    ம் இருக்கும் இருக்கும்

    ReplyDelete
  18. [[[பழமைபேசி said...
    //உன்னை ரெண்டு கூறா வெட்டணும்..//

    உங்க ரெண்டு பேரோட இரகளைக்குன்னே ரெண்டு பதிவுக்கும் வந்து போறேன்.... நடத்துங்க நடத்துங்க.... அப்புறம் இந்த இடுகை, சுவாரசியமா இருக்குங்க.... உண்மைக்கு பெருமை சேர்க்குறீங்க அண்ணே!!]]]

    வருகைக்கு நன்றி பழமைபேசி..!

    ReplyDelete
  19. ஒரே நேரத்துல இம்புட்டா?

    செரிமானம் ஆக வேணாமா?

    ReplyDelete
  20. [[[SP.VR. SUBBIAH said...

    /////பனியாரம்///

    சொற்பிழை! பணியாரம் என்று திருத்திக் கொள்ளுங்கள் உனா தானா!]]]

    திருத்திவிட்டேன் வாத்தியாரே..! இதுக்குத்தான் வலையுலகத்துல ஒரு வாத்தியார் வேணும்கிறது..!

    ReplyDelete
  21. [[[Arun Kumar said...
    ஓட்டு போட்டாச்சு]]]

    நன்றி தம்பீ..

    ஒரு டவுட்டு

    //வெறும் கேபிளில் வருவதைவிட சன் நெட்வொர்க்கில் வருவதால் கூடுதல் பார்வையாளர்களும், அதனால் எதிர்காலத்தில் கூடுதல் விளம்பர வருவாயும் கிடைக்குமே என்கிற வியாபாரத்தினால் ஜீ பெரிய மனதுடன் விட்டுக் கொடுத்திருக்கிறது.//

    ஜீ நெட்வோர்க் சன் நெட்வொர்க்கை விட மிக பெரியது. நீங்க சொல்றது புரியலை.. இந்த ஒப்பந்த்தால் சன் டிவி பேக்கேஜோடு ஜீ தமிழும் கிடைக்குமா? இல்லை எஸ் சி வியில் கவனிக்கபடுமா?]]]

    சன் டிவியின் ஆண்ட்டனா வைத்து கொடுக்கப்படும் கனெக்ஷனிலும், டிடிஹெச் செட்டப் பாக்ஸிலும் இனிமேல் ஜீ கிடைக்கும்.

    இதற்குத் தமிழ்நாட்டில் மிகப் பெரிய மார்க்கெட் உண்டு தம்பி..

    ஏற்கெனவே சுமங்கலியில் வந்து கொண்டுதான் இருக்கிறது ஜீ தமிழ்..!

    ReplyDelete
  22. அண்ணே பதிவு கலக்கல். நம்ம தள சிபிக்கு உங்க பதிலும் கலக்கல் :)

    ReplyDelete
  23. [[[மின்னுது மின்னல் said...

    இந்த டைப் வாழ்க்கை நல்லாயிருக்கே..//

    ம் இருக்கும் இருக்கும்]]]

    மின்னலு.. முயற்சி செஞ்சு பார்க்கலாமா?

    ReplyDelete
  24. [[[கிருஷ்ணமூர்த்தி said...
    ஒரே நேரத்துல இம்புட்டா? செரிமானம் ஆக வேணாமா?]]]

    மொத்தத்தையும் சாப்பிட்டு ஒரு ஏப்பம் விட்ருங்க ஸார்..

    செரிச்சிரும்..!

    ReplyDelete
  25. [[[☀நான் ஆதவன்☀ said...
    அண்ணே பதிவு கலக்கல். நம்ம தள சிபிக்கு உங்க பதிலும் கலக்கல் :)]]]

    நன்றி தம்பீ..! ஓட்டு போட்டாச்சா..? அதான் முக்கியம்..!

    ReplyDelete
  26. எனக்கென்னவோ சோ தலையக் குனிஞ்சுகிட்டு இருக்குறது “உங்களை எல்லாம் திருத்தவே முடியாதுன்ற” மாதிரி தான் இருக்கு. போட்டாவ நல்லாப் பாருங்க. அவராவது பொம்பிளைங்ககிட்ட தலைவணங்குறதாவது..சிங்கம்லே

    ReplyDelete
  27. [[[பின்னோக்கி said...
    எனக்கென்னவோ சோ தலையக் குனிஞ்சுகிட்டு இருக்குறது “உங்களை எல்லாம் திருத்தவே முடியாதுன்ற” மாதிரிதான் இருக்கு. போட்டாவ நல்லாப் பாருங்க. அவராவது பொம்பிளைங்ககிட்ட தலைவணங்குறதாவது. சிங்கம்லே]]]

    ச்சே.. எனக்கு அப்படியெல்லாம் தோணலை பின்னோக்கி ஸார்..!

    அவர் நிசமாவே "அம்மா.. தாயே.."ன்ற மாதிரிதான் வணங்குறாரு..

    ரொம்ப நல்ல விஷயந்தான்..!

    ReplyDelete
  28. யப்பா.. உண்மைத்தமிழா... கலக்கிட்டப்பா...

    ReplyDelete
  29. ஏன் பாஸ் தண்ணிய விட்டுடிங்க ??

    அப்பறம் ஏன் எல்லாம் வெஜிடேரியன் ஐய்டமா இருக்கு ?

    அடுத்த தடவ பிரியாணி, பாயா , மட்டன் சுக்கா , சிக்கன் வறுவல்ன்னு நான் வெஜி டைட்டில்ல எழுதுங்க.

    சினிமா ஸ்பெஷல் சூப்பர் ..

    ReplyDelete
  30. innikkiththaan thamilmanaththila ottu pada mudinjadhu. haiya naanum ottu poda kaththukkitten!

    ReplyDelete
  31. அண்ணே உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லீங்கண்ணா...
    அநியாயத்துக்கு இப்படியா......
    அய்யோ ராமா..................

    ReplyDelete
  32. அப்பறம் ஏன் எல்லாம் வெஜிடேரியன் ஐய்டமா இருக்கு ?///

    purattasi maasathuku annan viratham irukaru athanala veg thaan

    ReplyDelete
  33. அண்ணே ஜுப்பரு.... அந்த முருகன் படத்துல யாரோட முகம் இருக்கு... ? இதெல்லாம் நீங்க கேக்கவே மாட்டீங்களா???

    படத்துக்கு கிழே விளக்கவுரையும் சேர்த்தே கொடுக்கலாம்ல...புள்ளைங்க ஆசைப்படுதுல்ல...

    அப்புறம் புவனேஸ்வரி படம் உங்களுக்கு வேற கிடைக்கவேயில்லையா??? உங்ககிட்ட இல்லாத படமா... யூத்துன்னு வேற நீங்களே சொல்லிக்கிறீங்க... ஏதாவது பார்த்து பண்ணுங்கண்ணே?!!!

    ReplyDelete
  34. //சுவிட்சர்லாந்து நாட்டில் 1977-ம் வருஷம் ஒரு 13 வயசுப் பொண்ணோட உறவு வைச்சுக்கிட்டதா குற்றம்சாட்டப்பட்டு அப்பவே கைதாகி 42 நாட்கள் சிறையில் இருந்தார்
    //

    சம்பவம் நடந்தது லாஸ் ஏஞ்சல்சில். தண்டிக்கப்பட்டதும் அமெரிக்காவில். கைது செய்தது சுவிஸ் காவல்துறை(அமெரிக்க கோரிக்கையின்படி).

    ReplyDelete
  35. 'சாம்பாரை’ சொதப்பிட்டீங்களே.. தல! :( :(

    கதை உல்டா!

    ReplyDelete
  36. [[[D.R.Ashok said...
    யப்பா.. உண்மைத்தமிழா... கலக்கிட்டப்பா...]]]

    நன்றி அசோக்ஜி..!

    ReplyDelete
  37. [[[Romeoboy said...

    ஏன் பாஸ் தண்ணிய விட்டுடிங்க??

    அப்பறம் ஏன் எல்லாம் வெஜிடேரியன் ஐய்டமா இருக்கு ?

    அடுத்த தடவ பிரியாணி, பாயா, மட்டன் சுக்கா , சிக்கன் வறுவல்ன்னு நான் வெஜி டைட்டில்ல எழுதுங்க.

    சினிமா ஸ்பெஷல் சூப்பர் ..]]]

    ஓகே ரோமியோ.. உங்களுடைய ஆலோசனை ஏற்கப்படுகிறது.

    அடுத்த வாரம் இட்லி-வடையோட சைடிஸ்ஸா நான்-வெஜ்ஜுக்கு மாறிருவோம்..!

    ReplyDelete
  38. [[[நல்லதந்தி said...
    innikkiththaan thamilmanaththila ottu pada mudinjadhu. haiya naanum ottu poda kaththukkitten!]]]

    முதல் ஓட்டே எனக்குத்தானா? தந்தியாரே.. நன்றி. நன்றி.. நன்றி...

    ReplyDelete
  39. [[[கும்க்கி said...
    அண்ணே உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லீங்கண்ணா...
    அநியாயத்துக்கு இப்படியா......
    அய்யோ ராமா..................]]]

    மனசாட்சி இருக்கிறதாலதான் கொஞ்சமா எழுதியிருக்கேன் கும்க்கி..!

    ReplyDelete
  40. [[[SPIDEY said...
    அப்பறம் ஏன் எல்லாம் வெஜிடேரியன் ஐய்டமா இருக்கு ?///

    purattasi maasathuku annan viratham irukaru athanala veg thaan]]]

    ஸ்பைடி தம்பி.. நாம அந்த மாதிரி விரதமெல்லாம் இருக்கிறதில்ல. இருந்தாலும் உதவிக்கு வந்ததுக்கு நன்றிங்கோ..!

    ReplyDelete
  41. [[[நாஞ்சில் பிரதாப் said...
    அண்ணே ஜுப்பரு.... அந்த முருகன் படத்துல யாரோட முகம் இருக்கு? இதெல்லாம் நீங்க கேக்கவே மாட்டீங்களா???]]]

    அடப்பாவிகளா..? அதுகூடவா தெரியலை.. அதுதான் வருங்கால முதல்வர், தளபதி ஸ்டாலின்.. என்ன கொடுமை சரவணா இது..?

    [[[படத்துக்கு கிழே விளக்கவுரையும் சேர்த்தே கொடுக்கலாம்ல புள்ளைங்க ஆசைப்படுதுல்ல...]]]

    அதான் சி்ன்னதா கொடுத்திருக்கோம்ல.. போதாதா..?

    [[[அப்புறம் புவனேஸ்வரி படம் உங்களுக்கு வேற கிடைக்கவேயில்லையா??? உங்ககிட்ட இல்லாத படமா... யூத்துன்னு வேற நீங்களே சொல்லிக்கிறீங்க...]]]

    இது ஒண்ணுதான் என் பிளாக்ல போடுற லட்சணத்துல இருந்தது. அதான் போட்டேன்..

    ReplyDelete
  42. [[[butterfly Surya said...
    மினி தினதந்தி...]]]

    ராத்திரில இந்த நேரத்துக்கு இணையத்துல என்ன வேலை..? பொறுப்பா குடும்பஸ்தன் மாதிரி இருங்க சாமி..!

    ReplyDelete
  43. [[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    கலக்கல் தொகுப்பு]]]

    நன்றி ஸ்டார்ஜன் ஸார்..!

    ReplyDelete
  44. [[[rapp said...

    //சுவிட்சர்லாந்து நாட்டில் 1977-ம் வருஷம் ஒரு 13 வயசுப் பொண்ணோட உறவு வைச்சுக்கிட்டதா குற்றம்சாட்டப்பட்டு அப்பவே கைதாகி 42 நாட்கள் சிறையில் இருந்தார்//

    சம்பவம் நடந்தது லாஸ் ஏஞ்சல்சில். தண்டிக்கப்பட்டதும் அமெரிக்காவில். கைது செய்தது சுவிஸ் காவல்துறை(அமெரிக்க கோரிக்கையின்படி).]]]

    ராப்.. தமிழ்நாட்டுல எந்தப் பத்திரிகை அதிகமா விக்குதுன்றதுலதான் போட்டியே தவிர.. யார் உண்மையான நியூஸை கொடுக்குறாங்கன்னு போட்டியே இல்லை.

    இரண்டு தினசரி பத்திரிகைகளை படித்துதான் இதை எழுதினேன். அந்த ரெண்டுலேயும் இந்த லட்சணத்துலதான் எழுதியிருந்தாங்க.

    இப்ப இணையத்தைத் துழாவித்தான் உண்மையைத் தெரிஞ்சுக்கிட்டேன்.

    தவறுக்கு மன்னிக்கணும்..

    திருத்தியமைக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  45. [[[ஹாலிவுட் பாலா said...

    'சாம்பாரை’ சொதப்பிட்டீங்களே.. தல! :( :(

    கதை உல்டா!]]]

    ஸாரி.. ஸாரி.. ஸாரி.. தினமலரையும், தினத்தந்தியையும் முழுசா நம்பித் தொலைச்சிட்டேன்..!

    ReplyDelete
  46. இட்லி முதல் இத்யாதிகளை - மிகவும் இரசித்து சாப்பிட்டேன் சூடாகவும், சுவையாகவும் இருந்தது - நன்றி.
    கௌதமன்

    ReplyDelete
  47. //என்னைப் போன்ற அவரது ஆரம்பக் காலத் தோழர்களுக்கு//

    ஓ..கோ.. விஷயம் அப்படி போகுதா?

    ReplyDelete
  48. அண்ணே.. யார் யாரோ கர்பமானதை பத்தி எழுதிட்டிருக்கீங்களே.. நீங்க எப்போ... ...........ஆக்குவீங்க..?

    அப்புறம் விருதுமேட்டர் டிவி ரைட்ஸை பத்தி நான் ஒரு பேட்டியில கூட சொல்லிட்டேன்..;0)

    ReplyDelete
  49. அண்ணே டிப்பன் சூப்பர்

    ReplyDelete
  50. //பாவம் வூட்டுக்காரரு.. மெல்லவும் முடியாம, துப்பவும் முடியாம தவிச்சுக்கிட்டிருக்காரு..//

    இவன் ஊட்டுக் கதை வெளிய தெரியுது.. இன்னும் இந்த மாதிரி ஃப்ராடுங்க நெறய இருக்குதுங்க உங்க ஆதரவோட..

    ReplyDelete
  51. எமது www.sindhikkalam.blogspot.com தளத்தை பார்வையிடவும்.
    பிடித்திருந்தால் பின்தொடருங்கள்

    ReplyDelete
  52. டிபன் செம சூடு.

    புவனேஸ்வரி மேட்டரும் தலைபும் எதேட்சையாக அமைந்ததா? இல்லை......?

    ReplyDelete
  53. [[[kggouthaman said...

    இட்லி முதல் இத்யாதிகளை - மிகவும் இரசித்து சாப்பிட்டேன் சூடாகவும், சுவையாகவும் இருந்தது - நன்றி.

    கௌதமன்]]]

    நன்றி கெளதமன் ஸார்..! அடிக்கடி வாங்க..!

    ReplyDelete
  54. [[[தீப்பெட்டி said...

    //என்னைப் போன்ற அவரது ஆரம்பக் காலத் தோழர்களுக்கு//

    ஓ..கோ.. விஷயம் அப்படி போகுதா?]]]

    பின்ன.. எங்க விசில் சப்தமும், கை தட்டலும் மட்டும் இல்லைன்னா தெரியும் சேதி..!

    ReplyDelete
  55. [[[VIKNESHWARAN said...
    hammmmm ninga periya kadal...]]]

    நோ.. நோ.. சின்னத் துளி.. அவ்ளோதான்..

    ReplyDelete
  56. [[[Cable Sankar said...

    அண்ணே.. யார் யாரோ கர்பமானதை பத்தி எழுதிட்டிருக்கீங்களே.. நீங்க எப்போ... ........... ஆக்குவீங்க..?]]]

    அடப்பாவி.. நீ எனக்கு நண்பனா, பகைவனா..? ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போலிருக்கே..!

    [[[அப்புறம் விருது மேட்டர் டிவி ரைட்ஸை பத்தி நான் ஒரு பேட்டியிலகூட சொல்லிட்டேன்..)]]]

    இருந்தால் என்ன? என் பதிவில் எனது கருத்தை நான் எழுதக் கூடாதா என்ன..?

    ReplyDelete
  57. [[[பித்தன் said...
    அண்ணே டிப்பன் சூப்பர்]]]

    கல்லால பில் காசை கட்டிட்டுப் போ கண்ணு..!

    ReplyDelete
  58. [[[SanjaiGandhi said...

    //பாவம் வூட்டுக்காரரு.. மெல்லவும் முடியாம, துப்பவும் முடியாம தவிச்சுக்கிட்டிருக்காரு..//

    இவன் ஊட்டுக் கதை வெளிய தெரியுது.. இன்னும் இந்த மாதிரி ஃப்ராடுங்க நெறய இருக்குதுங்க உங்க ஆதரவோட..]]]

    அப்படியா? யார் பிராடுங்கறதை எதிர்காலம் சொல்லும் தம்பீ..!

    ReplyDelete
  59. [[[Gr said...
    எமது www.sindhikkalam.blogspot.com தளத்தை பார்வையிடவும்.
    பிடித்திருந்தால் பின்தொடருங்கள்]]]

    பார்த்தேன்.. படித்தேன் நண்பரே.. அருமை.. மிக்க பயனுள்ளதாக உள்ளது.. பின் தொடர்கிறேன்..! நன்றி..!

    ReplyDelete
  60. [[[எவனோ ஒருவன் said...
    டிபன் செம சூடு. புவனேஸ்வரி மேட்டரும் தலைபும் எதேட்சையாக அமைந்ததா? இல்லை......?]]]]

    அப்பா சாமி.. இப்பத்தான் ஒரு மேட்டரை முடிச்சிட்டு நி்ம்மதியா இருக்கேன். நீ வேற எதையாவது கிளப்பி விடாத கண்ணு..

    சத்தியமா, எதேச்சையா அமைஞ்சு போச்சு..!

    பயபுள்ளைக என்னமா யோசிக்குதுக..!

    ReplyDelete
  61. கும்பிடுபவர் சோ. எதிரில் யார் என்று கண்டு பிடிக்க முடியலையே...

    'குத்தாட்டமும்' யார்னு தெரியவில்லை.

    ரோமன் பொலான்ஸ்கி "நீதி நின்று கொல்லும்?"

    புவனேஸ்வரி வீட்டுல ஏதோ மூத்த தலைவர் படம் இருந்ததாமே...யாருங்க அது? (சும்மா ஒரு பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாமேன்னுதான்)

    சுப்ரமண்யபுரம்....இதுல இவ்வளோ விஷயம் இருக்கா? அட கொக்கமக்கா...இங்கிட்டு வாங்கி அங்கிட்டு விக்கறதுலையே லாபம் வேறயா...

    ReplyDelete
  62. [[[ஸ்ரீராம். said...

    கும்பிடுபவர் சோ. எதிரில் யார் என்று கண்டு பிடிக்க முடியலையே...]]]

    பழம்பெரும் நடிகை சாரதா.

    [[['குத்தாட்டமும்' யார்னு தெரியவில்லை.]]]

    டிவி நடிகைகள் தேவிபிரியாவும், ஐஸ்வர்யாவும்..

    [[[ரோமன் பொலான்ஸ்கி "நீதி நின்று கொல்லும்?"]]]

    ஆம்.. வேறு வழியில்லை..!

    [[[புவனேஸ்வரி வீட்டுல ஏதோ மூத்த தலைவர் படம் இருந்ததாமே...யாருங்க அது? (சும்மா ஒரு பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாமேன்னுதான்)]]]

    தானைத் தலைவரும், தளபதியும்தான்..!

    [[[சுப்ரமண்யபுரம் இதுல இவ்வளோ விஷயம் இருக்கா? அட கொக்கமக்கா. இங்கிட்டு வாங்கி அங்கிட்டு விக்கறதுலையே லாபம் வேறயா...]]]

    நல்ல துட்டு பார்த்துட்டாங்க..!

    வருகைக்கு நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  63. //சபாஷ்னே! இங்கதான் நிக்கிறீங்க!

    :-)))))))))]]]

    நான் எங்கேயும் நிக்கல.. என் வீட்லதான் உக்காந்திருக்கேன் சிவா..!//

    பதார்த்தங்களை விட இந்தக் கடி நல்லாயிருக்குதே:)

    ReplyDelete
  64. [[[ராஜ நடராஜன் said...

    //சபாஷ்னே! இங்கதான் நிக்கிறீங்க!
    :-)))))))))]]]

    நான் எங்கேயும் நிக்கல.. என் வீட்லதான் உக்காந்திருக்கேன் சிவா..!//

    பதார்த்தங்களை விட இந்தக் கடி நல்லாயிருக்குதே:)]]]

    இது சும்மா ஒரு ஜாலி கடி ராஜா ஸார்..!

    ReplyDelete
  65. வயிறு புல் ஆயிடுச்சு அண்ணே....

    ReplyDelete
  66. எனக்கு ஒரு சந்தேகம் அண்ணே
    தீர்த்து வைப்பிங்களா.......

    தந்தி பேப்பர்இல் புவனேஸ்வரி 30,000 கேட்டதாகவும்,
    தினகரன் பேப்பர்இல் புவனேஸ்வரி 20,000 கேட்டதாகவும்
    போட்டு இருக்கிறார்கள்.... இதில் எந்த செய்தி உண்மை?
    (சும்மா ஒரு போது அறிவுக்கு கேட்டேன் அண்ணே)

    ReplyDelete
  67. [[[ஜெட்லி said...
    வயிறு புல் ஆயிடுச்சு அண்ணே....]]]

    போதுமா..? வர்ற வெள்ளிக்கிழமைவரைக்கும் தாங்கும்ல..!

    ReplyDelete
  68. [[[ஜெட்லி said...
    எனக்கு ஒரு சந்தேகம் அண்ணே
    தீர்த்து வைப்பிங்களா.......
    தந்தி பேப்பர்இல் புவனேஸ்வரி 30,000 கேட்டதாகவும்,
    தினகரன் பேப்பர்இல் புவனேஸ்வரி 20,000 கேட்டதாகவும் போட்டு இருக்கிறார்கள்.... இதில் எந்த செய்தி உண்மை? (சும்மா ஒரு போதுஅறிவுக்கு கேட்டேன் அண்ணே)]]]

    இது பொது அறிவா..?

    நமக்குத் தேவையா ஜெட்லி..?

    முப்பதாயிரம் உண்மையா இருக்கும்ன்றது எனது அபிப்பிராயம்..!

    ReplyDelete
  69. இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார் எல்லாம் ஜூப்பருங்கோ

    //முப்பதாயிரம் உண்மையா இருக்கும்ன்றது எனது அபிப்பிராயம்..!\\


    ரைட்ட்ட்ட்ட்ட்ட்டூ

    ReplyDelete
  70. [[[SurveySan said...
    தூள்!]]]

    நன்றி சர்வேசன் ஸார்..!

    ReplyDelete
  71. [[[கிறுக்கல் கிறுக்கன் said...
    இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார் எல்லாம் ஜூப்பருங்கோ]]]

    நன்றிங்கோ..!

    //முப்பதாயிரம் உண்மையா இருக்கும்ன்றது எனது அபிப்பிராயம்..!\\

    ரைட்ட்ட்ட்ட்ட்ட்டூ]]]

    ஏன்.. முயற்சி செய்யலாம்னு பார்க்குறீரோ..?

    ReplyDelete
  72. // உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    ஏன்.. முயற்சி செய்யலாம்னு பார்க்குறீரோ..?//

    ரேட்டெல்லாம் சொல்றீங்களே, நீங்க முயற்சி செஞ்சிருப்பீங்களோன்னு பாத்துருப்பாரு...

    ReplyDelete
  73. ஏம்ப்பா.....பி பி தாறுமாறா எகிறி இருக்கணுமே!!!!

    கத்தியைக் கீழே போட்டுட்டுப் பொழைப்பைக் கொஞ்சம் பார்க்கலாமா?

    போஸ்ட்மார்ட்டம் போதுங்கறேன்.

    ReplyDelete
  74. [[[எவனோ ஒருவன் said...

    //உண்மைத்தமிழன்(15270788164745573644) said...

    ஏன்.. முயற்சி செய்யலாம்னு பார்க்குறீரோ..?//

    ரேட்டெல்லாம் சொல்றீங்களே, நீங்க முயற்சி செஞ்சிருப்பீங்களோன்னு பாத்துருப்பாரு...]]]

    அவர் பாத்துருப்பாரா..? நீர் நினைச்சீரா?

    தம்பி.. என்கிட்டயே ரவுசா..?

    ReplyDelete
  75. [[[துளசி கோபால் said...

    ஏம்ப்பா.....பி பி தாறுமாறா எகிறி இருக்கணுமே!!!!

    கத்தியைக் கீழே போட்டுட்டுப் பொழைப்பைக் கொஞ்சம் பார்க்கலாமா?

    போஸ்ட்மார்ட்டம் போதுங்கறேன்.]]]

    முடியல டீச்சர்..

    பேப்பரை பிரிச்சாலே பி.பி. தானா எகிறுது..!

    இப்படியொரு மனசை முருகன் நமக்குக் கொடுத்துத் தொலைச்சுட்டானே.. என்ன செய்யறது..?

    ReplyDelete
  76. // உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    தம்பி.. என்கிட்டயே ரவுசா..?//

    அண்ணன்கிட்டதான பண்ண முடியும், வேறு எங்கயாவது பண்ணினாத்தான் டவுசரக் கழட்டிருறாங்களே. :)

    ReplyDelete
  77. [[[எவனோ ஒருவன் said...

    //உண்மைத்தமிழன்(15270788164745573644) said...
    தம்பி.. என்கிட்டயே ரவுசா..?//

    அண்ணன்கிட்டதான பண்ண முடியும், வேறு எங்கயாவது பண்ணினாத்தான் டவுசரக் கழட்டிருறாங்களே:)]]]

    அடப்பாவிகளா..!

    இது ஒண்ணை சொல்லியே கும்முருங்களேப்பா..!

    ReplyDelete
  78. [[[வால்பையன் said...
    நிறைய விசயங்கள்!]]]

    டூ லேட் பிரதர்..!

    ReplyDelete
  79. அண்ணே,
    இங்க உங்களத் தேடுறாங்க, போய் பிரசண்ட்ட போட்டுருங்க...

    http://butterflysurya.blogspot.com/2009/10/labor-pains.html

    ReplyDelete
  80. //எவனோ ஒருவன் said...
    // உண்மைத் தமிழன்

    ஏன்.. முயற்சி செய்யலாம்னு பார்க்குறீரோ..?//

    ரேட்டெல்லாம் சொல்றீங்களே, நீங்க முயற்சி செஞ்சிருப்பீங்களோன்னு பாத்துருப்பாரு...\\


    என் இனமடா நீ (பெஸ்கி)


    Read more: http://truetamilans.blogspot.com/2009/10/05-10-2009.html#ixzz0T7xB5XW7

    ReplyDelete
  81. ///எவனோ ஒருவன் said...
    அண்ணே, இங்க உங்களத் தேடுறாங்க, போய் பிரசண்ட்ட போட்டுருங்க...///

    போட்டாச்சு..!

    சூர்யாவுக்கும் ஒரு மார்க்கெட்டிங்கா..?

    கொடுமைடா சாமி..!

    ReplyDelete
  82. [[[கிறுக்கல் கிறுக்கன் said...
    //எவனோ ஒருவன் said...
    / உண்மைத் தமிழன்
    ஏன்.. முயற்சி செய்யலாம்னு பார்க்குறீரோ..?/

    ரேட்டெல்லாம் சொல்றீங்களே, நீங்க முயற்சி செஞ்சிருப்பீங்களோன்னு பாத்துருப்பாரு...\\

    என் இனமடா நீ (பெஸ்கி)]]]

    ஐயோ.. கோஷ்டியெல்லாம் எப்படி சேருதுன்னு பாருங்க..!

    ReplyDelete
  83. இட்லி தோசை பொங்கல் வடை சட்னி சாம்பார் அதோடு ஆப்பம், பணியாரம் தேன் குழல் எல்லாம் இலவசமா???

    ருசிச்சேன்

    ReplyDelete
  84. [[[புதுகைத் தென்றல் said...
    இட்லி தோசை பொங்கல் வடை சட்னி சாம்பார் அதோடு ஆப்பம், பணியாரம் தேன் குழல் எல்லாம் இலவசமா??? ருசிச்சேன்.]]]

    வருகைக்கு நன்றி புதுகைத்தென்றல்..!

    அடிக்கடிதான் வர மாட்டேன்றீங்க..!

    எப்பவாவதுதான் வர்றீங்க..?

    டிஸ்டேன்ஸ் ரொம்பவோ..?

    ReplyDelete
  85. sema vagayaravaa irukku...


    nadigai naale namma oorla elakaaram thaane... :(

    athe maathiri rajini, kamalkku virudhu koduthathu mattum enna niyayam nu theritiyala..

    adutha varusham Endhiran varatha irundha ivanga 2010-kkaana virudha ippave arivichiralaam..

    ReplyDelete
  86. [[[Anbu said...
    தூள்!]]]

    நன்றி அன்பு..!

    ReplyDelete
  87. [[[kanagu said...
    sema vagayaravaa irukku... nadigai naale namma oorla elakaaram thaane... :(

    athe maathiri rajini, kamalkku virudhu koduthathu mattum enna niyayam nu theritiyala..

    adutha varusham Endhiran varatha irundha ivanga 2010-kkaana virudha ippave arivichiralaam..]]]

    நிச்சயம் உறுதியாய் எந்திரனுக்காக இன்னொருமுறை ரஜினி விருது பெறப் போவது உறுதி..!

    ReplyDelete
  88. அடிக்கடிதான் வர மாட்டேன்றீங்க..!

    எப்பவாவதுதான் வர்றீங்க..?

    டிஸ்டேன்ஸ் ரொம்பவோ..?//

    சமீபத்துல என் வலைப்பூ பக்கம் நீங்க வரலை போல இருக்கு. :))
    கைவலின்னு பதிவு போட்டிருந்தேனேன். அதான் காரணம்

    ReplyDelete
  89. VERY NICE...SARAVANAN.....KEEP IT UP...UNGAL ELUTHU NADAI ALAGU

    ReplyDelete
  90. [[[புதுகைத் தென்றல் said...
    அடிக்கடிதான் வர மாட்டேன்றீங்க..! எப்பவாவதுதான் வர்றீங்க..?
    டிஸ்டேன்ஸ் ரொம்பவோ..?//

    சமீபத்துல என் வலைப்பூ பக்கம் நீங்க வரலை போல இருக்கு. :))
    கைவலின்னு பதிவு போட்டிருந்தேனேன். அதான் காரணம்]]]

    பரவாயில்லை. இனிமேலாச்சும் டெய்லி நம்ம வூட்டாண்டை வந்துட்டுப் போங்க..!

    ReplyDelete
  91. [[[Film Director Naveen said...
    VERY NICE SARAVANAN. KEEP IT UP. UNGAL ELUTHU NADAI ALAGU]]]

    நன்றி நவீன்..

    உங்களது அடுத்த படைப்பான "நெல்லை" வெற்றி பெற எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்..!

    ReplyDelete