Pages

Friday, September 18, 2009

அட என்னடா பொல்லாத வாழ்க்கை..?

அட என்னடா பொல்லாத வாழ்க்கை..?
அட என்னடா பொல்லாத வாழ்க்கை..?

யார நெனச்சு நம்மள பெத்தாளோ அம்மா..!
அடப் போகும் இடம் ஒண்ணுதான்
விடுங்கடா சும்மா..!

இதுக்குப் போய் அலட்டிக்கலாமா..?
இதுக்குப் போய் அல்ட்டிக்கலாமா..?

(அட என்னடா)

காடாறு மாதம் அப்பா!
நாடாறு மாதம் அப்பா!
ராஜாக்கள் கதை இதுதான்ப்பா..!
ஹோய்..
நம்ப நிலை தேவலையப்பா..!
ஹோய்..

முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடு!
இல்ல.. ஓடுற வரைக்கும் ஓடு !
இதுக்குப் போய் அலட்டிக்கலாமா..?
இதுக்குப் போய் அலட்டிக்கலாமா..?

(அட என்னடா)

படிக்க ஆசை வச்சேன் முடியல..!
ஹாஹாஹா..
உழைச்சும் பார்த்துப்புட்டேன் தெரியல..!
ஹாஹாஹா..
எனக்கும் வேற வழி தெரியலே..!
நடந்தேன் நான் நினைச்ச வழியிலே..!

இதுக்கு காரணந்தான் யாரு..?
படைச்ச சாமிய போய் கேளு..?
இதுக்குப் போய் அலட்டிக்கலாமா..?
இதுக்குப் போய் அலட்டிக்கலாமா..?

(அட என்னடா)

நான் செய்றேன் தப்புத்தண்டா!
வேற வழி ஏதும் உண்டா?
ஊருக்குள்ள யோக்கியனை கண்டா..
ஓடி போயி என்னிடம் கொண்டா!

கிடைச்சா கிடைக்கிறவரைக்கும் பாரு..!
பிடிச்சா திருட்டுப் பட்டம் நூறு..!
இதுக்குப் போய் அலட்டிக்கலாமா..?
இதுக்குப் போய் அலட்டிக்கலாமா..?

(அட என்னடா)

40 comments:

  1. இதுக்குப் போய் அலட்டிக்கலாமா..?

    ReplyDelete
  2. அட இதுக்குப் போயி அலட்டிக்கலாமா..?

    ReplyDelete
  3. இதுக்குப் போய் அலட்டிக்கலாமா

    ReplyDelete
  4. அன்பின் சரவணன்...

    என்ன ஆச்சு..

    நல்லாத்தானே இருந்தீங்க...

    அன்புடன்
    அரவிந்தன்
    பெங்களுர்

    ReplyDelete
  5. ஏன் இந்த கொல வெறி?!

    ஒண்ணுமே புரியலையே?

    ReplyDelete
  6. அட இதுக்குப் போயி அலட்டிக்கலாமா..?

    ReplyDelete
  7. என்னமோ சொல்ல வரிங்க ஆனா என்னன்னு தான் புரியல ...

    இந்த சைடு கொஞ்சம் எட்டி பாருங்க பாஸ் ..
    http://ennaduidu.blogspot.com/2009/09/blog-post_1559.html

    ReplyDelete
  8. ஏன் இந்த கொல வெறி?!

    ஒண்ணுமே புரியலை உலகத்திலே !! என்னமே நடக்குது மர்மமா இருக்குது !!!
    :(((

    ReplyDelete
  9. அண்ணன் உ.த அவர்களுக்கு ஏதோ ஆகி விட்டது. அருகாமையில் வசிப்பவர்கள் ஒர் எட்டு என்னவென்று பார்த்து விட்டு வாருங்கள்.

    ReplyDelete
  10. இளா..

    நான்தான் பாடுவேன்.. நீங்கள்லாம் கேட்டுக்கணும். அவ்ளோதான்..!

    எனக்கே எடுத்துத் தரக்கூடாது..!

    ReplyDelete
  11. [[[சென்ஷி said...
    அட இதுக்குப் போயி அலட்டிக்கலாமா..?]]]

    கவிஞர் தம்பி..!

    எதிர் கவிதை போட்டிருக்கலாம்.. ஸ்டேட்டஸ் மெஸேஜ் ஒண்ணு போட்டிருந்தியே.. அது மாதிரி..!

    ReplyDelete
  12. ராதா ஸார்..

    அலட்டிக்கக் கூடாதுன்னு நினைச்சுத்தான் பாடிட்டேன்..

    ReplyDelete
  13. அரவிந்தன்..

    எல்லா நாளும் ஒரே நாள்போல் இருக்காது..

    ஏதாவது ஒரு திருப்பம் கிடைக்கும்!

    ReplyDelete
  14. [[[pappu said...

    ஏன் இந்த கொல வெறி?!

    ஒண்ணுமே புரியலையே?]]]

    பாப்பூ..

    ஒண்ணுமே புரியலை உலகத்துலே..!

    ReplyDelete
  15. [[[பீர் | Peer said...
    அட இதுக்குப் போயி அலட்டிக்கலாமா..?]]]

    எல்லாருக்குமே புரிஞ்சு போச்சா..?

    அப்ப வேற பாட்டை போட்டிர வேண்டியதுதான்..!

    ReplyDelete
  16. [[[ராஜராஜன் said...

    என்னமோ சொல்ல வரிங்க ஆனா என்னன்னுதான் புரியல ...

    இந்த சைடு கொஞ்சம் எட்டி பாருங்க பாஸ் ..
    http://ennaduidu.blogspot.com/2009/09/blog-post_1559.html]]]

    வருகிறேன் ராஜராஜன்..

    நீடூழி வாழ்க..! வலையுலகம் உங்களையாவது நிம்மதியாக வாழ வைக்கட்டும்..!

    ReplyDelete
  17. [[[gulf-tamilan said...

    ஏன் இந்த கொல வெறி?! ஒண்ணுமே புரியலை உலகத்திலே !! என்னமே நடக்குது மர்மமா இருக்குது !!!
    :(((]]]

    அதான் நீங்களே கேள்வி கேட்டுட்டு பதிலையும் சொல்லிட்டீங்களே..!

    இது போதும்..

    ReplyDelete
  18. [[[ananth said...
    அண்ணன் உ.த அவர்களுக்கு ஏதோ ஆகி விட்டது. அருகாமையில் வசிப்பவர்கள் ஒர் எட்டு என்னவென்று பார்த்து விட்டு வாருங்கள்.]]]

    தம்பீ ஆனந்த்..

    உன்னை நினைக்கையில் என் கண்கள் கலங்குகின்றன..!

    என்னே பாசம்..!

    ReplyDelete
  19. ஆமா பாஸ், இந்த சின்ன வயசுலயே உங்களுக்கு உலகத்துமேல அப்படி என்ன வெறுப்பு..

    இப்படி கவிதை படிச்சுப்புட்டீங்க..

    ReplyDelete
  20. ஹைய்யா.... உ.த-க்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்கு போல! :) :) :)

    சரியான.. சிச்சுவேசன் சாங்... தல..! கலக்கிட்டீங்க! :) :)

    ReplyDelete
  21. "என்ன கொடுமை சரவணன் இது..!!!"
    (நான் உங்க பேரை சொல்லவில்லை.ஏன்னா நீங்க என் அண்ணன். நான் சொல்றது சந்தரமுகி டயலாக்.)

    ReplyDelete
  22. பக்கம் பக்கமாப் பதிவும் எழுதறீங்க!
    பொல்லாத வாழ்க்கையின்னு பாட்டும் படிக்கறீங்க!

    பட்டறைப்பக்கம் போய்வந்தப்புரம் சிறு அல்லது பெருங்கதையா வரும்னு பாத்தாக்க, வெறும் காத்து தாங்க வருதுன்னு சொல்ற மாதிரி,

    இன்னாதிது,புத்சாக்கீது...:-))

    ReplyDelete
  23. //நான் செய்றேன் தப்புத்தண்டா!
    வேற வழி ஏதும் உண்டா?
    ஊருக்குள்ள யோக்கியனை கண்டா..
    ஓடி போயி என்னிடம் கொண்டா!//

    அண்ணே என் பேரு பித்தன்.... நானும் உங்களூட ஒன்னு, இதுக்கு போய் அலட்டிக்கலாமா.....

    ReplyDelete
  24. //ஊருக்குள்ள யோக்கியனை கண்டா..
    ஓடி போயி என்னிடம் கொண்டா!//


    இது யாருக்கு?

    ReplyDelete
  25. ////ஊருக்குள்ள யோக்கியனை கண்டா..
    ஓடி போயி என்னிடம் கொண்டா!//


    இது யாருக்கு?//


    அரசியல்வியாதிக்கு

    ReplyDelete
  26. அண்ணே ,
    தப்பு தாளங்கள் பாட்டுக்கள் எங்கு தேடியும் கிடைப்பதில்லை.
    உங்களுக்கு தெரிந்த லிங்க் ஏதாவது இருந்தால் தயவு செய்து அறிய தரவும்.
    அன்புடன்,
    பாஸ்கர்

    ReplyDelete
  27. தப்பு தாளங்கள்
    வழி தவறிய பாதங்கள்
    இவர் இப்படி வாழ்வதென அவன்
    எழுதிய வேதங்கள் !!!!!

    ReplyDelete
  28. ///தீப்பெட்டி said...
    ஆமா பாஸ், இந்த சின்ன வயசுலயே உங்களுக்கு உலகத்து மேல அப்படி என்ன வெறுப்பு.. இப்படி கவிதை படிச்சுப்புட்டீங்க..///

    எல்லாம் அனுபவந்தான்..!

    ReplyDelete
  29. [[[ஹாலிவுட் பாலா said...

    ஹைய்யா.... உ.த-க்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்கு போல! :) :) :)

    சரியான.. சிச்சுவேசன் சாங்... தல..! கலக்கிட்டீங்க! :) :)]]]

    பாலா..

    அந்த சிச்சுவேஷனுக்கு இந்தப் பாட்டையா போடுவாங்க..?

    அது சோதனை மேல் சோதனை வர வேண்டிய கட்டம்..!

    ReplyDelete
  30. [[[நையாண்டி நைனா said...
    "என்ன கொடுமை சரவணன் இது..!!!" (நான் உங்க பேரை சொல்லவில்லை. ஏன்னா நீங்க என் அண்ணன். நான் சொல்றது சந்தரமுகி டயலாக்.)]]]

    அப்படியா தம்பீ.. சந்தோஷம்தான்..

    கொடுமை நடக்கும்போதுதான் இப்படியெல்லாம் பாட்டு வரும்.. இது சோக சிச்சுவேஷன். இப்படித்தான் பாட்டு போடணும்..!

    ReplyDelete
  31. [[[கிருஷ்ணமூர்த்தி said...
    பக்கம் பக்கமாப் பதிவும் எழுதறீங்க!
    பொல்லாத வாழ்க்கையின்னு பாட்டும் படிக்கறீங்க! பட்டறைப் பக்கம் போய்வந்தப்புரம் சிறு அல்லது பெருங்கதையா வரும்னு பாத்தாக்க, வெறும் காத்து தாங்க வருதுன்னு சொல்ற மாதிரி, இன்னாதிது, புத்சாக்கீது...:-))]]]

    சோகத்தை எப்படியாச்சும் ஆத்தணும்ல ஸார்..!

    அதான்..!

    ReplyDelete
  32. [[[பித்தன் said...

    //நான் செய்றேன் தப்புத்தண்டா!
    வேற வழி ஏதும் உண்டா?
    ஊருக்குள்ள யோக்கியனை கண்டா.. ஓடி போயி என்னிடம் கொண்டா!//

    அண்ணே என் பேரு பித்தன்.... நானும் உங்களூட ஒன்னு, இதுக்கு போய் அலட்டிக்கலாமா.....]]]

    ஹி.. ஹி.. பித்தன்ஜி.. நீங்களும் என்கூட சேர்ந்து கோரஸ் பாடுங்க. நல்லா பொழுது போகும் நம்ம ரெண்டு பேருக்கும்..!

    ReplyDelete
  33. [[[அக்னி பார்வை said...
    enna aachu unami thamizan ....?]]]

    கொஞ்சமா.. ஸ்மாலா.. மனசு உடைஞ்சிருச்சு..!

    ReplyDelete
  34. [[[வால்பையன் said...

    //ஊருக்குள்ள யோக்கியனை கண்டா.. ஓடி போயி என்னிடம் கொண்டா!//

    இது யாருக்கு?]]]

    வாலு.. அடங்க மாட்ட..? ஏத்தி விட்டுக்கிட்டிருக்க..?

    ReplyDelete
  35. [[[தண்டோரா ...... said...

    ////ஊருக்குள்ள யோக்கியனை கண்டா.. ஓடி போயி என்னிடம் கொண்டா!//


    இது யாருக்கு?//


    அரசியல் வியாதிக்கு]]]

    தண்டோரா.. மூச்.. இதையெல்லாம் தண்டோரா அடிக்கக் கூடாது..!

    ReplyDelete
  36. [[[அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    அண்ணே, தப்பு தாளங்கள் பாட்டுக்கள் எங்கு தேடியும் கிடைப்பதில்லை.
    உங்களுக்கு தெரிந்த லிங்க் ஏதாவது இருந்தால் தயவு செய்து அறிய தரவும்.
    அன்புடன்,
    பாஸ்கர்]]]

    கூகிளாண்டவரிடம் கேட்டுப் பாருங்கள்.. நிச்சயம் கிடைக்கும் பாஸ்..!

    ReplyDelete
  37. [[[அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    தப்பு தாளங்கள்
    வழி தவறிய பாதங்கள்
    இவர் இப்படி வாழ்வதென அவன்
    எழுதிய வேதங்கள் !!!!!]]]

    "இவர்" இல்லை. "இவள்" என்று இருக்க வேண்டும்.

    கண்ணதாசனின் பிற்காலத்திய காப்பியங்களுக்கு தூண்டுகோலாக இருந்தவர் இயக்குநர் சிகரம் கே.பி.தான்.

    சான்று, அவருடைய திரைப்படங்களில் மலர்ந்த கண்ணதாசனின் வைரவரிகள்..!

    ReplyDelete