Pages

Saturday, September 12, 2009

ஈரம் - திரைப்பட விமர்சனம்

12-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நம்ப முடியாத கதையை நம்புவது போல் எடுத்திருக்கிறார்கள். "ஏதோ ஒரு ஆங்கிலப் படத்தின் உல்டா" என்கிறார்கள். நான் அந்த ஆங்கிலப் படத்தை பார்க்கவில்லை. எனவே உறுதிப்படுத்த முடியவில்லை.

சைக்கோ கணவன் தனது மனைவியைக் கொன்றுவிட.. ஆவியான மனைவி, கணவன் தன்னைக் கொலை செய்யத் தூண்டுதலாக இருந்தவர்களை தண்ணீர் உருவத்தில் உருக்கொண்டு கொலை செய்வதுதான் கதை. இதற்கு லாஜிக் பார்க்காமல் நம்மை நம்ப வைக்க ரொம்பவே பிரயத்தனம் செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் அறிவழகன்.


வாசுதேவன் திருச்சியில் படித்துக்கொண்டிருக்கும்போது ரம்யாவை பார்த்தவுடன் காதல் கொள்கிறார். ரம்யாவுக்கும் அவரைப் பிடித்துப் போக ரம்யாவின் வீட்டுக்கு வந்து பெண் கேட்கிறார். அவள் அப்பாவோ வாசுதேவனின் எதிர்கால லட்சியமான காவல்துறை வேலையை மனதில் வைத்து பெண் தர முடியாது என்று மறுத்து பாலகிருஷ்ணன் என்னும் தொழிலதிபருக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

அந்த பாலகிருஷ்ணனுடன் ரம்யா சென்னையில் இல்லறம் நடத்தி வரும் சூழலில்தான் மர்மமான முறையில் இறந்து போகிறார். வழக்கை விசாரிக்க வருவது இப்போது அதே பகுதியில் அஸிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் வாசுதேவன். தனது காதலியின் மரணத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்பதை உணர்ந்து மேலதிகாரிகளிடம் வற்புறுத்தி கேஸை மூடிவிடாமல் தொடர்ந்து நடத்த..

அதே அபார்ட்மெண்ட்டில் தொடர்ந்து மூன்று கொலைகள்.. யார் செய்தது என்று விரட்டிப் பிடித்து கண்டுபிடிக்கிறார்.. ஆனால் குற்றவாளி இவர்தான் என்பதை துளியும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும், காட்சியமைப்புகளால் இப்படித்தான்.. நம்புனா நம்பு.. நம்பாட்டி இடத்தைக் காலி பண்ணு என்று சொல்லிவிட்டார் இயக்குநர்.


படத்தின் பெயரைப் போலவே காட்சிக்கு காட்சி ஈரம்தான்.. மழையும், தண்ணீரும் தென்படாத காட்சிகளே கிடையாது.. படத்தின் துவக்கக் காட்சியிலேயே மர்மக் கதை என்பதை மனதில் நிலை நிறுத்தி விடுகிறார் இயக்குநர்.

அவ்வப்போது வசனத்திலும், காட்சியமைப்பிலும் தியேட்டரில் கை தட்டல்கள் தூள் பறக்கிறது.. அபார்ட்மெண்ட்டுக்கு வந்து செல்லும் காதலனை தியேட்டர் டாய்லெட்டில் வைத்து கொலை செய்யும் காட்சியில் ஆவி நடந்து செல்வதை முதல் முறையாகக் காட்டும்போதே நம்ப வைத்துவிடுகிறார். இதன் பின் அவர் சொல்வதை நம் மனது செல்லாது என்று சொன்னாலும், இப்படியும் இருக்கலாமோ என்ற எண்ணத்தில் இறுதிவரையில் உட்கார வைத்துவிட்டார் இயக்குநர்.

ஒளிப்பதிவாளர் பிரமிக்க வைத்திருக்கிறார். பிரேமுக்கு பிரேம் அழகாக ஜொலிக்கிறது ஒளிப்பதிவு. பருவநிலை மந்தமான காலக்கட்டத்திலேயே முழு படத்தினையும் எடுத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் வாசுதேவனின் அலுவலகத்தில்கூட ஜன்னலைத் திறந்தவுடன் சூரியன் உள்நுழையும் ஒளி அவர்மேல் படுவதைப் போல் எடுத்திருக்கும் சிரத்தையை பாராட்டத்தான் வேண்டும்.

பிரதிபிம்பங்களான காட்சிகள் வரிசை கட்டி வந்து கொண்டேயிருக்கின்றன. புதிய இயக்குநர் என்றாலும், ஷங்கரின் வாரிசு என்பதால் காட்சிக்கு காட்சி வித்தியாசமான கோணங்களையும், காட்சியமைப்புகளையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

நடிப்பில் முதல் ஸ்கோர் கதாநாயகி சிந்துமேனன்தான்.. மலையாள தேசத்துக்கே உரிய முகக்களை. வருத்தமோ, சிரிப்போ முகம் காட்டுகின்ற முழுக்க முழுக்க டைட் குளோஸப் காட்சிகளிலேயே படம் பிடித்திருப்பதால் இவருடைய நடிப்பு நன்றாகவே நமக்குத் தெரிகிறது. வேறு கதாநாயகிகளை போட்டிருந்தால் டைட் குளோஸப்பிற்கு சான்ஸே இல்லை.


வாசுதேவனாக நடித்திருக்கும் ஆதியை விடவும், சைக்கோ கணவனாக நடித்திருக்கும் நந்தாவே பிரமாதமாக செய்திருக்கிறார். எந்த நேரம் நல்லபடியாக பேசுகிறார். எப்போது சைக்கோவாக மாறிவிட்டார் என்பதை யூகிக்கவே முடியாத அளவுக்கு செய்திருக்கிறது இவரது கேரக்டர்.

மிருகம் படத்தில் காட்டிய ஒரிஜினாலிட்டி நடிப்பு ஆதிக்கு இதில் மிஸ்ஸிங்.. எல்லாருக்கும் வருவதுதான் வரும் என்பதால் இனி வரும் படங்களில் இவரிடம் உட்கார்ந்து மல்லுக்கட்ட வேண்டாம்..
ஒவ்வொரு காட்சியிலுமே கதையை நகர்த்திக் கொண்டே போவதால் மர்மம் கூடிக் கொண்டேயிருக்க.. நடிகர்களின் நடிப்புத் திறமை இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டு கதையே பிரதானமாக இருந்ததினால் நடிகர்களின் நடிப்பு இங்கு தேவையில்லாத ஒன்றாக இருக்கிறது.

சின்னச் சின்ன ட்விஸ்ட்டுகள் ரசிக்கும்படி உள்ளது. முன்னாள் மாமனாரை நந்தா பார்க்கப் போனதோடு காட்சியை கட் செய்ய அடுத்தக் காட்சியில் வாசுவின் முன்னாள் காதலி என்பதால்தான் அவன் இந்த வழக்கைத் தேவையில்லாமல் இவ்ளோ தூரம் இழுத்துவிட்டு டார்ச்சர் செய்வதாக காதலியின் அப்பாவின் புகார் மனுவோட டிஜிபி பேசுவது செம ட்விஸ்ட்..

பின்னணி இசை பல இடங்களில் பின்னியிருக்கிறது. டாய்லெட் சீனில் காதலன் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து அதிரும் காட்சி, காதலி தன் வீட்டில் கண்ணாடியை பார்த்து அலறும் காட்சி.. நந்தாவின் பார்ட்னர் காரில் போகும்போது ஆக்ஸிடெண்ட்டில் மாட்டும் காட்சி.. தண்ணீர் உருண்டோடி வந்து கொண்டிருப்பது.. என்று அத்தனை கொலைக்களத்திலும் புகுந்து விளையாடிருக்கிறார் புதிய இசையமைப்பாளர் தமன்.

பின்னணி இசை ஓகே என்றாலும் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ஏனோதானோவென்று போட்டு காட்சிகள்கூட மனதில் ஒட்டாமல் உள்ளது. அதில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாம்..


ஒளிப்பதிவும், இசையமைப்பும் படத்திற்கு பக்க பலம் என்றால் படத்தின் டப்பிங்கில் அநியாயத்திற்கு கோட்டை விட்டிருக்கிறார்கள். 'பொக்கிஷம்' படம் போலவே இதிலும் கேரக்டர்கள் உதடு பிரிக்காமலேயே பேசி நடித்திருக்க.. டப்பிங் கலைஞர்கள் பெரும்பாடுபட்டிருக்கிறார்கள். கால்வாசி வசனங்களை மென்று துப்பிவிட.. வசதிக் குறைவான தியேட்டர்களில் ரசிகர்கள்பாடு திண்டாட்டம்தான்.

ஷூட் செய்யப்பட்டிருந்த ஒரு கிளைக்கதையை எடிட்டிங்கில் தூக்கியெறிந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஹீரோயினுக்கு குழந்தை பிறந்து அது பள்ளி செல்லும் பருவத்தில் இருக்கும்போதுதான் இந்தக் கொலைகள் நடப்பதாக முன்பு ஷூட் செய்யப்பட்டிருந்ததாம். அது 'ஆசை' படத்தின் கதையை அப்படியே உல்டா பண்ணுவதுபோல் ஆகிவிடும் என்று கடைசியில் யோசித்தவர்கள், அந்த போர்ஷனையே தூக்கிக் கடாசிவிட்டார்களாம்.. எடுத்த காசு போயே போச்சு..


ஹீரோயின் தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்திருக்கும் சூழலிலும் கேஸில் மர்மம் உள்ளது என்பதற்காக ஒரு வலுவான காரணத்தைக் கொடுக்காதது ஒரு குறைதான். இன்னொன்று ஹீரோவின் தோற்றமே புரொபஸரை போல் இருக்க அவர் கையில் புத்தகத்தைக் கொடுத்து காலேஜுக்கு அனுப்பி அவர் கூடவே இருக்கும் மாணவ நண்பர்களாக நம்ம கேபிள் சங்கர் மாதிரி ரெண்டு புள்ளை பெத்த வயதானவர்களையே நடிக்க வைத்திருப்பது கொஞ்சம் காமெடி.. நல்லவேளை.. யாருக்கும் அதிகமான காட்சிகளைக் கொடுக்காமல் பட், பட்டென்று முடித்ததால் எதுவும் தப்பாகத் தோன்றவில்லை..

ஷங்கர் மெகா பட்ஜெட் இயக்குநர் என்றாலும், மினிமம் பட்ஜெட் தயாரிப்பாளர் என்ற பெயரையே எடுத்துள்ளார். மூணு கோடிதான் என்று திட்டம் போட்டுப் படத்தைத் துவக்கி, நாலரை கோடிவரை கொண்டு வந்த இயக்குநர் மீது அசாத்திய கோபத்துடன்தான் இருந்தாராம் ஷங்கர். ஆடியோ ரிலீஸ் பங்ஷனின்போது இந்த கோபம் வெளிப்படையாகத் தெரிந்தததாகச் சொல்கிறார்கள்.

ஆனாலும் கொடுத்த காசுக்கு வஞ்சகமில்லாமல் எடுத்திருக்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள்.. கதாநாயகி சிந்துமேனன் இத்திரைப்படம் வெளிவந்து சூப்பர் ஹிட்டானால் தனது மார்க்கெட்டும் ஏறும்.. தயாரிப்பாளர்கள் வந்து குவிவார்கள். அப்போது சம்பளத்தை ஏற்றிவிடலாம் என்று வந்த வாய்ப்புகளை ஏற்காமல் தட்டிக் கழித்து வந்தார். இனி அவர் சம்பளம் ஏறுமா என்பது சந்தேகம்தான்..

படத்தின் அனைத்துக் குறியிடூகளுமே மேல்தட்டு வர்க்கத்தையே சுற்றி சுற்றி வருவதால் இப்படம் பி அண்டி சி வட்டாரங்களில் எந்த அளவுக்கு எடுபடும் என்பது கேள்விக்குறி.

'யாவரும் நலம்' அளவுக்கு மிரட்டவில்லையென்றாலும் அதில் முக்கால்வாசியை இப்படம் தொட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்.

இதுவே இப்படியென்றால் அடுத்து வரவிருக்கும் ஷங்கரின் அடுத்தப் படமான இந்திரா செளந்தர்ராஜனின் கதை, மர்மதேச இயக்குநர் நாகாவின் 'அனந்தபுரத்து வீடு' எந்த அளவுக்கு மர்மத்தைக் காட்டப் போகிறதோ தெரியவில்லை..?

அதற்கு முன்பாகவே 'இரட்டைச்சுழி'யை ரிலீஸ் செய்துவிட்டால் ஷங்கருக்கும், நமக்கும் நல்லது..

ஈரம் - பார்க்கலாம் ஒரு முறை..

62 comments:

  1. I didn't read the post, but I am glad that you are out of cyber crime
    issue. Keep going!

    ReplyDelete
  2. //படத்தின் அனைத்துக் குறியிடூகளுமே மேல்தட்டு வர்க்கத்தையே சுற்றி சுற்றி வருவதால் இப்படம் பி அண்டி சி வட்டாரங்களில் எந்த அளவுக்கு எடுபடும் என்பது கேள்விக்குற//

    இனிமேல் கொஞ்ச நாளைக்கு மதுரை, லைவ், போன்ற விஷயஙக்ளை வைத்து அலப்ப்ற் பண்ண் முடியாது என்பது இந்த படத்தின் வெற்றி உறுதிபடுத்தும்.

    அது சரி நீஙக் எந்த ஏரியா டிஸ்ரிபூயூட்டர். வந்திட்டாருய்யா.. கிராமத்து படமா எடுத்த் எத்தனை படஙக்ள் பி சியில் ஓடியிருக்கிறது..

    என்னை வம்பிழுக்கிலன்ணா தூக்கம் வராதா..?”:)

    ReplyDelete
  3. ஒரு வார்த்த சொன்னாலும் திருவார்த்த சொன்னீங்க ராசா கிச்சா.

    மொத்த பதிவுலகமுமே நாறுன நாறுல எட்டியே பாக்க முடியல.

    ReplyDelete
  4. //இன்னொன்று ஹீரோவின் தோற்றமே புரொபஸரை போல் இருக்க அவர் கையில் புத்தகத்தைக் கொடுத்து காலேஜுக்கு அனுப்பி அவர் கூடவே இருக்கும் மாணவ நண்பர்களாக நம்ம கேபிள் சங்கர் மாதிரி ரெண்டு புள்ளை பெத்த வயதானவர்களையே நடிக்க வைத்திருப்பது கொஞ்சம் காமெடி..//

    எதுக்கெடுத்தாலும் இப்படி யூத்துகளை குறிவைப்பதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

    இப்படிக்கு

    வலையுலக யூத் முன்னேற்ற சங்கம்.

    ReplyDelete
  5. Una thana..

    enna ananiya comment poda mudiyuthu.. romba nala eduthukku thaan wait pannen.. eni pattaya edukkiren..

    ReplyDelete
  6. அண்ணே, அது கோட்டைப்புரத்து வீடா.?
    ஆனந்த புரத்து வீடு என கேள்விப்பட்ட ஞாபகம்.

    ReplyDelete
  7. படத்தை பார்க்க போகும் ரசிகர்கள் யாரும் தயவு செய்து உ.தவின் விமர்சனத்தை படித்துவிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்ள படுகிறார்கள்.-கேபிள் ஷங்கர்.

    இந்த எச்சரிக்கையையும் மீறிப் படித்தேன்.
    உங்கள் பாணியில் முழுக்கதையையும் சொல்லி விட்டீர்கள்,சரவணன்.நன்றி.

    ReplyDelete
  8. //பார்க்கலாம் ஒரு முறை//
    அப்ப ஓகே :-)

    ReplyDelete
  9. கிழிச்சு தொங்க போடுறீங்களே.....

    ReplyDelete
  10. //பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. //

    என்ன அண்ணே இப்படி சொல்லிடிங்க...
    சாரல் ஏன் என் ஜன்னல் உடைக்கிறது
    ஒரு பாட்டு போதும்னே.... சூப்பர்

    ReplyDelete
  11. ///kicha said...
    I didn't read the post, but I am glad that you are out of cyber crime
    issue. Keep going!///

    அதுலயே இருக்கிறதுக்கு எனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு..!

    எழுத வேண்டியதை எழுதிரணும் கிச்சா..! நன்றிகள்..

    ReplyDelete
  12. ///Cable Sankar said...
    //படத்தின் அனைத்துக் குறியிடூகளுமே மேல்தட்டு வர்க்கத்தையே சுற்றி சுற்றி வருவதால் இப்படம் பி அண்டி சி வட்டாரங்களில் எந்த அளவுக்கு எடுபடும் என்பது கேள்விக்குற//

    இனிமேல் கொஞ்ச நாளைக்கு மதுரை, லைவ், போன்ற விஷயஙக்ளை வைத்து அலப்ப்ற் பண்ண் முடியாது என்பது இந்த படத்தின் வெற்றி உறுதிபடுத்தும்.///

    ஜெயிச்சா சந்தோசம்தான்..

    [[[அது சரி நீஙக் எந்த ஏரியா டிஸ்ரிபூயூட்டர். வந்திட்டாருய்யா.. கிராமத்து படமா எடுத்த் எத்தனை படஙக்ள் பி சியில் ஓடியிருக்கிறது..]]]

    இந்தப் படம் ஓடுறது முடியுமான்னுதான் கேட்டேன்.. ஓடிய படங்களும் உண்டு.. எனக்கும் தெரியும்..

    [[[என்னை வம்பிழுக்கிலன்ணா தூக்கம் வராதா..?”:)///

    வேற எந்த இளிச்சவாயனை எனக்குத் தெரியும்..

    ReplyDelete
  13. அண்ணே... கிட்டத்தட்ட முக்கால்வாசிக் கதைய சொல்லிட்டீங்க விமர்சனத்தில... மற்றபடி படம் பாக்கலாம் போல இருக்கு

    ReplyDelete
  14. அன்பு நண்பரே வணக்கம்.

    உங்கள் விமர்சனம் (?) படித்தேன். நன்றாகவே எழுதுகிறீர்கள். ஆனால் விமர்சனம் என்ற பெயரில் முழுக்கதையையும் இப்படி புட்டுப்புட்டு வைப்பது சரியான விமர்சனம் ஆகாது. படம் பார்க்க போகிறவர்களுக்கு அதனால் படத்தில் விறுவிறுப்பு நிச்சயம் குறையும். யோசிக்கவும். நன்றி.

    ReplyDelete
  15. யாவரும் நலம் அளவுக்கு இல்லைன்னா...ஏ செண்ட்டர்ல தேர்றது கூட கஷ்டம்தான்.

    இசையமைப்பாளர் யாரு?

    ReplyDelete
  16. இன்றைக்கு எ சென்டரில் உள்ள திரைப்பட பார்வையாளர்கள் எல்லாம் பி மற்றும் சீ சென்டெரில் இருந்து வந்தவர்கள் தான்.

    அது சரி இன்னமும் எ பி சீ சென்டெர் பாகுபாடு இருக்கிறதா.

    இன்று சென்னையில் இருக்கும் என்னை விட தூத்துக்குடி, ராமேஸ்வரம் நாகர்கோவில் போன்ற ஊர்களில் இருக்கும் மக்கள் பன்னாட்டு அறிவும், இன்றைய புடுமையயிம் அறிந்து உள்ளனர் (உபயம் இணையத்தளம்).

    ReplyDelete
  17. //ஷண்முகப்ரியன் said...

    படத்தை பார்க்க போகும் ரசிகர்கள் யாரும் தயவு செய்து உ.தவின் விமர்சனத்தை படித்துவிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்ள படுகிறார்கள்.-கேபிள் ஷங்கர்.

    இந்த எச்சரிக்கையையும் மீறிப் படித்தேன்.
    உங்கள் பாணியில் முழுக்கதையையும் சொல்லி விட்டீர்கள்,சரவணன்.நன்றி.//

    ரிப்பீட்டே :-))))

    அல்ரெடி மத்தவங்க விமர்சனம் படிக்கும்போதே ஓரளவு கதை கணிக்க முடிஞ்சது. நீங்க மொத்தமா போட்டு உடைச்சுட்டீங்க!

    ReplyDelete
  18. என்ன கொடும உ.த. அண்ணா, இப்பிடி எல்லாத்தயும் போட்டு ஒடச்சுட்டீங்களே :(

    ReplyDelete
  19. சரவணன் , நீங்க சொல்றத பாத்தா படம் பாக்கலாம் போல

    ReplyDelete
  20. [[[Anonymous said...
    ஒரு வார்த்த சொன்னாலும் திருவார்த்த சொன்னீங்க ராசா கிச்சா. மொத்த பதிவுலகமுமே நாறுன நாறுல எட்டியே பாக்க முடியல.]]]

    வருஷக்கணக்கா அப்படித்தான இருக்கு..!

    ReplyDelete
  21. [[[தராசு said...
    //இன்னொன்று ஹீரோவின் தோற்றமே புரொபஸரை போல் இருக்க அவர் கையில் புத்தகத்தைக் கொடுத்து காலேஜுக்கு அனுப்பி அவர் கூடவே இருக்கும் மாணவ நண்பர்களாக நம்ம கேபிள் சங்கர் மாதிரி ரெண்டு புள்ளை பெத்த வயதானவர்களையே நடிக்க வைத்திருப்பது கொஞ்சம் காமெடி..//

    எதுக்கெடுத்தாலும் இப்படி யூத்துகளை குறிவைப்பதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

    இப்படிக்கு

    வலையுலக யூத் முன்னேற்ற சங்கம்.]]]

    போலிகளை கண்டு ஏமாறாதீர்..!

    ReplyDelete
  22. [[[Anonymous said...

    Una thana..

    enna ananiya comment poda mudiyuthu.. romba nala eduthukku thaan wait pannen.. eni pattaya edukkiren..]]]

    சாமி.. வந்துட்டியா..? உனக்குப் பயந்து திரும்பவும் தடை உத்தரவை போட்டுட்டேன்..!

    ReplyDelete
  23. [[[♠ ராஜு ♠ said...
    அண்ணே, அது கோட்டைப்புரத்து வீடா.? ஆனந்தபுரத்து வீடு என கேள்விப்பட்ட ஞாபகம்.]]]

    உண்மைதான் ராஜு.. மாற்றிவி்ட்டேன்.. உணர்த்தியமைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  24. [[[ஷண்முகப்ரியன் said...

    படத்தை பார்க்க போகும் ரசிகர்கள் யாரும் தயவு செய்து உ.தவின் விமர்சனத்தை படித்துவிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்ள படுகிறார்கள்.-கேபிள் ஷங்கர்.

    இந்த எச்சரிக்கையையும் மீறிப் படித்தேன். உங்கள் பாணியில் முழுக் கதையையும் சொல்லி விட்டீர்கள். சரவணன்.நன்றி.]]]

    எழுதுனதே நாலு பக்கம்தான்.. இதுல எங்க கதையை எழுதினேன்.. சுருக்கம்தான ஸார் சொல்லியிருக்கேன்..!

    ReplyDelete
  25. [[[சிங்கக்குட்டி said...

    //பார்க்கலாம் ஒரு முறை//
    அப்ப ஓகே :-)]]]

    கண்டிப்பா பார்த்திருங்க சிங்கக்குட்டி..!

    ReplyDelete
  26. [[[பித்தன் said...
    கிழிச்சு தொங்க போடுறீங்களே]]

    கிழிக்கல்லாம் இல்லை.. நல்லவிதமாத்தான் எழுதியிருக்கேன்..!

    ReplyDelete
  27. [[[தீப்பெட்டி said...

    :)

    மகிழ்ச்சி..]]]

    வருகைக்கு நன்றி தீப்பெட்டி..!

    ReplyDelete
  28. [[[ஜெட்லி said...

    //பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை.//

    என்ன அண்ணே இப்படி சொல்லிடிங்க... சாரல் ஏன் என் ஜன்னல் உடைக்கிறது ஒரு பாட்டு போதும்னே.... சூப்பர்]]]

    அட போங்கப்பா.. பாட்டுன்னா கூடவே நாமளும் பாடுற மாதிரி மனசுல பச்சக்குன்னு ஒட்டிக்க வேணாம்.. நாக்குலயே மடங்க மாட்டேங்குது.. மியூஸிக்காம்.. பாட்டாம்..!

    ReplyDelete
  29. [[[Kiruthikan Kumarasamy said...
    அண்ணே... கிட்டத்தட்ட முக்கால்வாசிக் கதைய சொல்லிட்டீங்க விமர்சனத்தில... மற்றபடி படம் பாக்கலாம் போல இருக்கு.]]]

    கண்டிப்பா பார்க்கணும் கிருத்திகன்..!

    ReplyDelete
  30. [[[மஞ்சூர் ராசா said...

    அன்பு நண்பரே வணக்கம்.
    உங்கள் விமர்சனம்(?) படித்தேன். நன்றாகவே எழுதுகிறீர்கள். ஆனால் விமர்சனம் என்ற பெயரில் முழுக் கதையையும் இப்படி புட்டுப்புட்டு வைப்பது சரியான விமர்சனம் ஆகாது. படம் பார்க்க போகிறவர்களுக்கு அதனால் படத்தில் விறுவிறுப்பு நிச்சயம் குறையும். யோசிக்கவும். நன்றி.]]]

    ஐயோ.. ஸார்.. முருகா.. அப்பனே.. இது நூத்தியொண்ணாவது அட்வைஸ்..

    நான் என்னதான் செய்யறது..? மொக்கையா எழுத எனக்கு வர மாட்டேங்குது ஸார்..!

    ReplyDelete
  31. [[[டவுசர் பாண்டி... said...
    யாவரும் நலம் அளவுக்கு இல்லைன்னா. ஏ செண்ட்டர்ல தேர்றதுகூட கஷ்டம்தான்.
    இசையமைப்பாளர் யாரு?]]]

    ஓடிரும் பாண்டி.. இன்னிக்கு நிலைமை அப்படி இருக்கு..!

    இசையமைப்பாளர் பேரு தமன்..

    ReplyDelete
  32. [[[ராம்ஜி.யாஹூ said...
    இன்றைக்கு எ சென்டரில் உள்ள திரைப்பட பார்வையாளர்கள் எல்லாம் பி மற்றும் சீ சென்டெரில் இருந்து வந்தவர்கள்தான். அது சரி இன்னமும் எ பி சீ சென்டெர் பாகுபாடு இருக்கிறதா?]]]

    நிச்சயம் இருக்கிறது. அதனால் மதுரை சம்பவம் போன்ற படங்களெல்லாம் வருகின்றன.

    ReplyDelete
  33. [[[[சென்ஷி said...

    //ஷண்முகப்ரியன் said...

    படத்தை பார்க்க போகும் ரசிகர்கள் யாரும் தயவு செய்து உ.த.வின் விமர்சனத்தை படித்துவிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்ள படுகிறார்கள்.-கேபிள் ஷங்கர்.

    இந்த எச்சரிக்கையையும் மீறிப் படித்தேன். உங்கள் பாணியில் முழுக்கதையையும் சொல்லி விட்டீர்கள்,சரவணன்.நன்றி.//

    ரிப்பீட்டே :-))))

    அல்ரெடி மத்தவங்க விமர்சனம் படிக்கும்போதே ஓரளவு கதை கணிக்க முடிஞ்சது. நீங்க மொத்தமா போட்டு உடைச்சுட்டீங்க!]]]

    அப்ப பூசணிக்காயை எனக்கே உடைச்சிரு ராசா..!

    ReplyDelete
  34. [[[Anonymous said...
    என்ன கொடும உ.த. அண்ணா, இப்பிடி எல்லாத்தயும் போட்டு ஒடச்சுட்டீங்களே :(]]]

    அட போங்கப்பா.. எந்த விமர்சனம் எழுதினாலும் இதையே சொல்லி நக்கல் பண்றீங்க..?

    ReplyDelete
  35. [[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    சரவணன், நீங்க சொல்றத பாத்தா படம் பாக்கலாம் போல.]]]

    கண்டிப்பா பார்க்கலாம் ஸ்டார்ஜன்..!

    ReplyDelete
  36. எல்லோரும் சொல்லும், நீங்களும் சலித்துக்கொள்ளும் விஷயம் தான் இப்போது நான் சொல்லப்போவதும்.

    திரில்லர் படங்களின் முடிவு தெரிந்து விட்டால் படம் பார்க்கும் எண்ணம் குறைய ஆரம்பித்துவிடும்.

    சங்கர் அண்ணாவின் விமர்சனத்தை படித்து பார்க்கவேண்டும் எனும் எண்ணம் எழுந்தது, சஸ்பென்ஸாக இருந்தது.

    உங்களை படித்தபின் அந்த எண்ணம் சப்பென்று ஆகிவிட்டது.

    மாலை ஏடுகளில் பாருங்கள், 'பிரபல நடிகை மரணம்' என்று இருக்கும், உடனே வாங்க வேண்டும் எனும் எண்ணம் தோன்றும்.

    வாங்க எத்தனிக்கையில் 'நடிகை மயூரி மரணம்' என மற்றொரு போஸ்டர்டில் பார்க்கும்போது வாங்காமலேயே விட்டு விடுவோம்.

    முருகா, தப்பென்றால் சாரி....

    அது போல்தான். Anyhow I like your விமர்சனம்.

    பிரபாகர்.

    ReplyDelete
  37. நல்ல விமர்சனம். இன்னைக்கு டிக்கட் விக்கிற விலைல கதைகூட தெரியாம எப்பிடி போய் மொக்க படம்லாம் பாக்கிறது.

    படம் தேறும் போல இருக்கு, நன்றி.

    ReplyDelete
  38. //ஐயோ.. ஸார்.. முருகா.. அப்பனே.. இது நூத்தியொண்ணாவது அட்வைஸ்..

    நான் என்னதான் செய்யறது..? மொக்கையா எழுத எனக்கு வர மாட்டேங்குது ஸார்..! //

    நண்பா, உண்மைத்தமிழா, நான் சொல்வது என் கருத்து மட்டுமே. ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம். நான் விமர்சனம் தான் எழுத சொன்னேன். நீங்கள் மொக்கையா எழுத எனக்கு வராது என்கிறீர்கள்.

    விமர்சனம் என்பது கதையை முழுவதும் சொல்வது அல்ல. செழியன் என்பவர் விகடனில் அப்படித்தான் செய்துக்கொண்டிருந்தார்.
    அதையே நீங்களும் பதிவில் செய்கிறீர்கள்.

    மற்றவர்களும் பார்த்து ரசிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இப்படி விலாவாரியாக முழுக்கதையையும் எழுதி இது தான் விமர்சனம் என சொல்வது தவறு.

    கொஞ்சம் யோசிக்கவும்.

    ReplyDelete
  39. ஷங்கர் சொந்தமாகத் தயாரிக்கும் படங்கள் பொதுவாகவே நன்றாக இருக்கும்.புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் அவர் பாராட்டுக்கு உரியவர்.
    ஈரம்- நான் இன்னும் பார்க்கவில்லை.,வித்தியாசமாக உள்ளது என்று சொல்கிறார்கள்.
    தமிழ் மக்களின் ரசனை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு இருப்பது தெரிகிறது.
    வெறுமனே பெரிய நடிகர்கள் நடித்து பிரமாண்டமாக இருந்தால் மட்டும் ஒரு படம் வெற்றி பெறாது என்று ரசிகர்கள் கூறத்தொடங்கி விட்டார்கள்.அது மட்டுமல்ல புது நடிகர்கள் புது இயக்குனர் என்றாலும் நல்ல திரைக்கதையும் தனித்துவமும்-originality இருந்தால் தரமான படங்களுக்கு ஆதரவு தர ஆரம்பித்து விட்டார்கள் ,இது வரவேற்கத்தக்கது.-a healthy trend
    உங்கள் முழு விமர்சனத்தையும் நான் வாசிக்கவில்லை,கதையை முதலே தெரிந்து வைப்பதைத் தவிர்ப்பதற்காகத் தான் .விமர்சனங்களில் முழுக்கதையையும் கூறுவதை தவிர்ப்பது நல்லது.
    ---வானதி

    ReplyDelete
  40. ///நல்ல விமர்சனம். இன்னைக்கு டிக்கட் விக்கிற விலைல கதைகூட தெரியாம எப்பிடி போய் மொக்க படம்லாம் பாக்கிறது.//

    Repeettu

    Read more: http://truetamilans.blogspot.com/2009/09/blog-post_12.html#ixzz0QyH6GyyW

    ReplyDelete
  41. / மங்களூர் சிவா said...

    நல்ல விமர்சனம். இன்னைக்கு டிக்கட் விக்கிற விலைல கதைகூட தெரியாம எப்பிடி போய் மொக்க படம்லாம் பாக்கிறது?/

    இன்னொரு நல்ல விஷயமும் இருக்கு! ரொம்ப ப்ளேடு போடுவாங்கன்னு தெரிஞ்சா, எஸ்ஸாகிடலாம்! இப்படித்தான் ரொம்ப வருஷத்துக்கு முன்னால, பானுமதி சொந்தமாத் தயாரிச்சு, டைரக்ட் பண்ண படம் டைட்டில் போட்டு பத்து நிமிஷத்துக்குள்ளே மூணு பாட்டு! விமரிசனத்தைப் படிச்சுட்டுப் போயிருந்தா, காசுக்குக் காசும் மிச்சம்! கழுத்தும் தப்பும்!

    Spoilers விமரிசகர்கள் விமரிசனங்கள் வாழ்க!

    ReplyDelete
  42. I saw the film its good but maximum scenes are from

    Mirror Scenes from Mirror
    Darkwater
    Final destination

    innum theriyatha padam DVD ethanaiyo ;)

    ReplyDelete
  43. ////பிரபாகர் said...

    எல்லோரும் சொல்லும், நீங்களும் சலித்துக்கொள்ளும் விஷயம் தான் இப்போது நான் சொல்லப்போவதும்.

    திரில்லர் படங்களின் முடிவு தெரிந்து விட்டால் படம் பார்க்கும் எண்ணம் குறைய ஆரம்பித்துவிடும்.

    சங்கர் அண்ணாவின் விமர்சனத்தை படித்து பார்க்கவேண்டும் எனும் எண்ணம் எழுந்தது, சஸ்பென்ஸாக இருந்தது.

    உங்களை படித்தபின் அந்த எண்ணம் சப்பென்று ஆகிவிட்டது.

    மாலை ஏடுகளில் பாருங்கள், 'பிரபல நடிகை மரணம்' என்று இருக்கும், உடனே வாங்க வேண்டும் எனும் எண்ணம் தோன்றும்.

    வாங்க எத்தனிக்கையில் 'நடிகை மயூரி மரணம்' என மற்றொரு போஸ்டர்டில் பார்க்கும்போது வாங்காமலேயே விட்டு விடுவோம்.

    முருகா, தப்பென்றால் சாரி....

    அது போல்தான். Anyhow I like your விமர்சனம்.

    பிரபாகர்.///

    ஓகே.. ஓகே.. ஓகே.. அடுத்த த்ரில்லர் படங்களில் முடிச்சை முற்றிலும் தவிர்க்கிறேன்..

    ReplyDelete
  44. [[[மங்களூர் சிவா said...

    நல்ல விமர்சனம். இன்னைக்கு டிக்கட் விக்கிற விலைல கதைகூட தெரியாம எப்பிடி போய் மொக்க படம்லாம் பாக்கிறது.

    படம் தேறும் போல இருக்கு, நன்றி.]]]

    ஆஹா.. இதுவும் எனக்குத் தோதான பதிலா இருக்கே..!

    நன்றி சிவா தம்பீ..!

    ReplyDelete
  45. [[[மஞ்சூர் ராசா said...
    //ஐயோ.. ஸார்.. முருகா.. அப்பனே.. இது நூத்தியொண்ணாவது அட்வைஸ்.. நான் என்னதான் செய்யறது..? மொக்கையா எழுத எனக்கு வர மாட்டேங்குது ஸார்..! //

    நண்பா, உண்மைத்தமிழா, நான் சொல்வது என் கருத்து மட்டுமே. ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம். நான் விமர்சனம்தான் எழுத சொன்னேன். நீங்கள் மொக்கையா எழுத எனக்கு வராது என்கிறீர்கள். விமர்சனம் என்பது கதையை முழுவதும் சொல்வது அல்ல. செழியன் என்பவர் விகடனில் அப்படித்தான் செய்து கொண்டிருந்தார்.
    அதையே நீங்களும் பதிவில் செய்கிறீர்கள். மற்றவர்களும் பார்த்து ரசிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இப்படி விலாவாரியாக முழுக்கதையையும் எழுதி இதுதான் விமர்சனம் என சொல்வது தவறு.
    கொஞ்சம் யோசிக்கவும்.]]]

    ஓ.. மை காட்.. ? நான் என்னதான் செய்யறது..?

    ReplyDelete
  46. [[[vanathy said...
    ஷங்கர் சொந்தமாகத் தயாரிக்கும் படங்கள் பொதுவாகவே நன்றாக இருக்கும். புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் அவர் பாராட்டுக்கு உரியவர்.
    ஈரம்- நான் இன்னும் பார்க்கவில்லை. வித்தியாசமாக உள்ளது என்று சொல்கிறார்கள்.
    தமிழ் மக்களின் ரசனை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு இருப்பது தெரிகிறது.
    வெறுமனே பெரிய நடிகர்கள் நடித்து பிரமாண்டமாக இருந்தால் மட்டும் ஒரு படம் வெற்றி பெறாது என்று ரசிகர்கள் கூறத்தொடங்கி விட்டார்கள். அது மட்டுமல்ல புது நடிகர்கள் புது இயக்குனர் என்றாலும் நல்ல திரைக்கதையும் தனித்துவமும்-originality இருந்தால் தரமான படங்களுக்கு ஆதரவு தர ஆரம்பித்து விட்டார்கள், இது வரவேற்கத்தக்கது. a healthy trend
    உங்கள் முழு விமர்சனத்தையும் நான் வாசிக்கவில்லை, கதையை முதலே தெரிந்து வைப்பதைத் தவிர்ப்பதற்காகத்தான். விமர்சனங்களில் முழுக் கதையையும் கூறுவதை தவிர்ப்பது நல்லது.
    ---வானதி]]]

    நல்லது வானதி.. ஆனால் படத்தைப் பார்க்காமல் விடாதீர்கள்.. அவசியம் பாருங்கள்..!

    ReplyDelete
  47. [[[அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

    ///நல்ல விமர்சனம். இன்னைக்கு டிக்கட் விக்கிற விலைல கதைகூட தெரியாம எப்பிடி போய் மொக்க படம்லாம் பாக்கிறது.//

    Repeettu ]]]

    நன்றிக்கும் ஒரு ரிப்பீட்டு அருப்புக்கோட்டை பாஸ்கி..!

    ReplyDelete
  48. [[[கிருஷ்ணமூர்த்தி said...

    / மங்களூர் சிவா said...

    நல்ல விமர்சனம். இன்னைக்கு டிக்கட் விக்கிற விலைல கதைகூட தெரியாம எப்பிடி போய் மொக்க படம்லாம் பாக்கிறது?/

    இன்னொரு நல்ல விஷயமும் இருக்கு! ரொம்ப ப்ளேடு போடுவாங்கன்னு தெரிஞ்சா, எஸ்ஸாகிடலாம்! இப்படித்தான் ரொம்ப வருஷத்துக்கு முன்னால, பானுமதி சொந்தமாத் தயாரிச்சு, டைரக்ட் பண்ண படம் டைட்டில் போட்டு பத்து நிமிஷத்துக்குள்ளே மூணு பாட்டு! விமரிசனத்தைப் படிச்சுட்டுப் போயிருந்தா, காசுக்குக் காசும் மிச்சம்! கழுத்தும் தப்பும்!

    Spoilers விமரிசகர்கள் விமரிசனங்கள் வாழ்க!]]]

    அப்போவெல்லாம் 15 நாளைக்கு ஒரு தடவைதான சினிமா விமர்சனம் வரும்..! ஸோ.. அதை அனுபவிச்சுத்தான் ஆகணும்.. அது தலையெழுத்து.. இப்பவும் அதையே பாலோ செய்யணுமா..?

    தேங்க்ஸ் கிருஷ்ணமூர்த்தி ஸார்..!

    ReplyDelete
  49. [[[Suresh said...

    I saw the film its good but maximum scenes are from

    Mirror Scenes from Mirror
    Darkwater
    Final destination

    innum theriyatha padam DVD ethanaiyo ;)]]]

    சுடுவதில் தவறில்லை சுரேஷ்.. அதை நல்லவிதமாகப் பயன்படுத்தினாலே போதுமே..!

    கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் இந்த இயக்குநர்.. பாராட்டுகிறேன்..!

    ReplyDelete
  50. Correct Anna :-) copy adichu elutha kuda theriyanum neenga sonnathu sari

    ReplyDelete
  51. நல்ல வேளை உங்க விமர்சமான படிக்காம படத்த பார்த்துட்டேன் இல்லனா படம் பாக்கற சுவாரசியமே போய் இருக்கும். இந்த விமர்சனத்த படிச்சிட்டு படத்துக்கு போற எல்லோரும் கண்டிபாக உங்கள திட்டுவாங்கன்னு நினைக்குறேன் ..

    ReplyDelete
  52. [[[Suresh said...
    Correct Anna :-) copy adichu elutha kuda theriyanum neenga sonnathu sari]]]

    இதுவரை செய்யப்பட்ட காப்பியில் அற்புதமான காப்பி நாயகன் மட்டுமே..!

    ReplyDelete
  53. [[[ராஜராஜன் said...
    நல்ல வேளை உங்க விமர்சமான படிக்காம படத்த பார்த்துட்டேன் இல்லனா படம் பாக்கற சுவாரசியமே போய் இருக்கும். இந்த விமர்சனத்த படிச்சிட்டு படத்துக்கு போற எல்லோரும் கண்டிபாக உங்கள திட்டுவாங்கன்னு நினைக்குறேன்.]]]

    திட்டிட்டுப் போகட்டும்..! வேறென்ன சொல்றது ராஜராஜன்..?

    ReplyDelete
  54. எனக்குப் பிடித்ததே இந்த மாதிரி மர்ம கதைகள்தான். இந்த படத்தை நிச்சயமாக பார்ப்பேன். ஏதோ படத்தைப் பார்த்தோமா, ரசித்தோமா, பொழுதைப் போக்கினோமா என்றில்லாமல் லாஜிக் வேறு பார்க்க வேண்டுமா. மற்ற வகையான படங்களில் மட்டும் லாஜிக் நிறைய இருக்கிறதோ.

    ReplyDelete
  55. ///ananth said...
    எனக்குப் பிடித்ததே இந்த மாதிரி மர்ம கதைகள்தான். இந்த படத்தை நிச்சயமாக பார்ப்பேன். ஏதோ படத்தைப் பார்த்தோமா, ரசித்தோமா, பொழுதைப் போக்கினோமா என்றில்லாமல் லாஜிக் வேறு பார்க்க வேண்டுமா. மற்ற வகையான படங்களில் மட்டும் லாஜிக் நிறைய இருக்கிறதோ.///

    நியாயமான கேள்விதான் ஆனந்த்..

    நீங்கள் தயங்காமல் இந்தத் திரைப்படத்தினைப் பார்க்கவும்..!

    ReplyDelete
  56. சகோதரரே..., ஆனந்த புரத்து வீடு தான் சங்கரின் அடுத்த படைப்பு.....

    ReplyDelete
  57. [[[ஊடகன் said...
    சகோதரரே, ஆனந்தபுரத்துவீடுதான் சங்கரின் அடுத்த படைப்பு.....]]]

    கூடவே ரெட்டைச் சுழி என்கிற படத்தையும் தயாரித்து வருகிறார் ஷங்கர்.

    இந்தப் படம்தான் அடுத்து தீபாவளிக்கு ரிலீஸாகப் போகிறது.

    ஆனந்தபுரத்துவீடு அடுத்தாண்டு பொங்கல் தினத்தன்று வெளி வரும்..!

    ReplyDelete
  58. இது நல்ல விமர்சனம் அல்ல. கதையின் முடிச்சுகள் அனைத்தையும் சொல்லி விட்டீர்கள்.

    நான் இந்த படத்தை நேற்று பார்த்தேன். நல்ல வேலையாக இந்த விமர்சனத்தை முதலில் படிக்கவில்லை.

    ReplyDelete
  59. ///Chandrasekaran said...
    இது நல்ல விமர்சனம் அல்ல. கதையின் முடிச்சுகள் அனைத்தையும் சொல்லி விட்டீர்கள். நான் இந்த படத்தை நேற்று பார்த்தேன். நல்ல வேலையாக இந்த விமர்சனத்தை முதலில் படிக்கவில்லை.///

    ஆஹா.. தப்பித்துவிட்டீர்களா சந்திரசேகர்..!

    வாழ்த்துக்கள்..!

    வேறென்னத்த சொல்றது..?

    ReplyDelete
  60. //
    இப்படம் பி அண்டி சி வட்டாரங்களில் எந்த அளவுக்கு எடுபடும் என்பது கேள்விக்குறி.
    Read more: http://truetamilans.blogspot.com/2009/09/blog-post_12.html#ixzz0RqyLyN5M
    //

    மதுரையில் நல்ல தியேட்டர்களில் குறைந்த பட்ச சினிமா டிக்கடின் விலை இப்பொழுது 30 ரூபாயாக ஆகிவிட்டது. அப்படிப்பட்ட தியேட்டர்களில் (ஆட்லாப்ஸ் போன்ற) பி அண்ட் சி வருவதேயில்லை.

    2.50 க்குக் கூட டிக்கட் கொடுக்கும் தியேட்டர்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்தத் தியேட்டர்களில் இப்படிப்பட்ட படம் போடப்படுவதுமில்லை.

    இதில் தெரியவருவது என்னவென்றால் ஏ கிளாஸ் மக்கள் (மேல்தட்டு, மேல்மூடி, மேல்டப்பா...மேல்வர்க்கம்!) அதிகரித்துவிட்டனர். அவர்களுக்கென்று தனி மார்கெட் வந்துவிட்டது.

    ReplyDelete
  61. [[[வஜ்ரா said...

    //இப்படம் பி அண்டி சி வட்டாரங்களில் எந்த அளவுக்கு எடுபடும் என்பது கேள்விக்குறி.//

    மதுரையில் நல்ல தியேட்டர்களில் குறைந்தபட்ச சினிமா டிக்கடின் விலை இப்பொழுது 30 ரூபாயாக ஆகிவிட்டது. அப்படிப்பட்ட தியேட்டர்களில் (ஆட்லாப்ஸ் போன்ற) பி அண்ட் சி வருவதேயில்லை. 2.50க்குக் கூட டிக்கட் கொடுக்கும் தியேட்டர்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்தத் தியேட்டர்களில் இப்படிப்பட்ட படம் போடப்படுவதுமில்லை. இதில் தெரியவருவது என்னவென்றால் ஏ கிளாஸ் மக்கள் (மேல்தட்டு, மேல்மூடி, மேல்டப்பா மேல்வர்க்கம்!) அதிகரித்துவிட்டனர். அவர்களுக்கென்று தனி மார்கெட் வந்துவிட்டது.]]]

    உண்மைதான் வஜ்ரா ஸார்..

    இந்தப் படம் ஹிட் ஆகிவிட்டது.. போட்ட பணம் வந்துவிட்டது. இனி கிடைப்பது எல்லாம் லாபந்தான் என்கிறார்கள்.

    இது போன்ற படங்களில் இருக்கும் சிரமங்கள் என்னவெனில் சவுண்ட் சிஸ்டம் மற்றும் தியேட்டர் அமைப்புகள் நல்ல முறையில் இருந்தால்தான் இது போன்ற படத்தினை ரசிக்க முடியும்.

    டூரிங் தியேட்டர்களில் இந்தப் படம் ரசிகர்களை அந்த அளவுக்கு ஆட்படுத்தாது என்பது உண்மை.

    அதை மனதில் வைத்துதான் பி அண்ட் சி ரசிகர்களை எப்படி அடையப் போகிறதென்று தெரியவில்லையே என்று எழுதினேன்..

    ReplyDelete