Pages

Thursday, September 10, 2009

சைபர் கிரைம்-செந்தழல் ரவிக்கு எனது பதில்..!

ரவி..

என்னை என்ன கேணையன்னு நினைச்சியா..? கோயம்புத்தூர் மீட்டிங்ல வைச்சு என் பதிவுக்கு வர்ற அனானி கமெண்ட்டை பத்தியும், என்னோட போலி பிளாக் பத்தியும் புலம்பினப்ப.. அண்ணே.. இது லக்கியோட வேலையாத்தான் இருக்கும். அவன் இப்ப மூர்த்தியோட ஆள்.. அவன்கிட்ட ஜாக்கிரதையா இருண்ணேன்னு நீதானடா சொன்ன.

நீ சொன்ன அனானி கமெண்ட் அடையாளமெல்லாம் யுவகிருஷ்ணா கமெண்ட்டோட ஒத்துப் போன பின்னாடிதான், நான் சுத்தமா அவன்கிட்டேயிருந்து ஒதுங்கினேன்.

இந்த அருண்குமாரை பத்தியும் நீதான என்கிட்ட முதல்முதல்லா சொன்ன.. அருண் போன் பண்ணி பேசும்போதெல்லாம் அவன் யுவகிருஷ்ணாவை பத்தி சொன்னதையெல்லாம் உன்கிட்ட திருப்பி சொன்னனே.. நீயும் கேட்டுட்டு ஆமாண்ணே.. ஆமாண்ணேன்னு தலையாட்டுன.

அருண்குமாரோட ஏதோ ஒரு சைட் பாஸ்வேர்டை லக்கி மூர்த்திக்கு பார்வர்டு பண்ணியிருக்கான்.. மூர்த்தி அதை யூஸ் பண்ணி அருண்குமாரோட அம்மா, அப்பா போட்டோவையெல்லாம் போலி டோண்டு பதிவுல எடுத்துப் போட்டு கதையெழுதிட்டான்.. பாவம்ணே அருண்.. அப்படீன்னு வெண்ணை நீதானடா சொன்ன..

அதுக்கப்புறம்தான அருண்கிட்ட ஆதாரத்தை அனுப்புடான்னு கேட்டு வாங்கி உனக்கும் அனுப்பி வைச்சனே.. அப்போ தெரியலையா.. உன் பிரெண்டு நல்லவன்னு..

நீ புகார் கொடுக்க வந்தப்பவே இதுக்கு பாலபாரதியையும், யுவகிருஷ்ணாவையும் கூப்பிட வேண்டாம்.. நாமளே பார்த்துக்கலாம்னு சொன்னதுக்கு சரி.. சரின்னு தலையாட்டிட்டு கடைசில உன் மாப்ளை வரவனையானை பார்த்தவுடனே உல்டா அடிச்சுட்ட.. பாலபாரதி மீடியாவை கூப்பிட உதவுவாருன்னு சொல்லி என் வாயை அடைச்ச.. உன் பிரெண்டு யுவகிருஷ்ணாவை கடைசி நிமிஷத்துல கூப்பிட்டுத் தொலைச்சீங்க. அதுக்கு நானா பொறுப்பு..? செய்றதையெல்லாம செஞ்சுட்டு கடைசி நிமிஷத்துல அவன் நல்லவன் மாதிரி வேஷம் போட்டுட்டு அஸிஸ்டெண்ட் கமிஷனர் ரூமுக்குள்ளேயும் வந்து உக்காந்து சிரிச்சுட்டுப் போயிட்டான்.. கடைசியா நானும் காசியும், டோண்டுவும்தான் முட்டாளாயிட்டோம்..

யுவகிருஷ்ணாதான் முன்னாடியே ஒரு பதிவுல நான் போலியுடன் இருந்தேன். அது ஒரு காலம்.. கனவு மாதிரி மறந்திட்டேன்னு ஓப்பன் டாக்ல எழுதி வைச்சானே. படிச்சு பார்த்துட்டு நான் உனக்கு போன் அடிச்சு சொல்லலை.. இப்ப அவன் ரொம்ப ஜாக்கிரதையா பழைய பதிவு எல்லாத்தையும் அழிச்சிட்டான். நான் எங்கேயிருந்து ஆதாரம் காட்டுறது..?

எனக்கென்ன அவன்கூட வாய்க்கா, வரப்பு சண்டையா..? இல்ல பங்காளி சண்டையா..? நான் எதுக்கு அவன்கூட வீணா சண்டைக்குப் போகணும்..? பொழுதன்னிக்கும் அவனைப் பத்தி பேசுறதுதான் என் வேலைன்னு நினைச்சியா..? என்னை அனானியா திட்டி கமெண்ட்டும், மறைமுகமா திட்டி பதிவும் போட்டதுனாலதான் நான் அவன் மேல கோபமானேன்..

இப்பக்கூட எங்களுக்குள்ள என்னடா சண்டை..? நீதான் சொன்ன.. அண்ணே பாவம்ணே.. இப்பத்தாண்ணே எழுத ஆரம்பிச்சிருக்கான்.. விட்ருங்கண்ணே.. நல்லா வர வேண்டிய பையன்ணேன்.. நல்லா எழுத்தாளரா வருவாண்ணேன்னு நீ சாட்டிங்ல சொன்ன.. அப்பவும் நான் சொன்னது.. அவன் போலி டோண்டு மேட்டரை பத்தி எழுதினா மட்டும்தான் நான் பதிலுக்கு என்கிட்ட இருக்குறதை வைச்சு எழுதுவேன்னு சொன்னேன். அவ்ளோதான..

ஆனா அவன் சாரு மேட்டரை எழுதுவான்னு எனக்கென்ன தெரியும்..? அதுல நான் ஒரு பக்கம் இன்வால்வ் ஆயிருக்கேன்னு அவனுக்கும், உனக்கும் நல்லாத் தெரியும்.. தெரிஞ்சும் அப்படி பட்டும்படாம எழுதிட்டான்னு கோபம் வந்துச்சு. அதான் போஸ்ட் போட்டேன்.. அதுலேயும் எப்பவோ போலியோட தொடர்புன்னு ஒத்துக்கிட்டு எழுதிட்டானே.. அதோட நாம சொல்லித்தான் பல பேருக்குத் தெரிய வேண்டியதில்லை. இங்க நிறைய பேருக்கும் தெரியுமே.. கேஷூவலா எடுத்துக்குவான்னு நினைச்சுத்தான் சாரு பதிவுல அவனுடைய முன்னாள் நண்பர்ன்னுதான் குறிப்பிட்டேன்.. திரும்பி படிச்சுப் பாரு.. முன்னாள் நண்பர்ன்னுதான் சொல்லித் தொலைஞ்சிருக்கேன்.

உன் பிரெண்டு என்னடான்னா அப்படியே உல்டா அடிச்சு எதோ ஒரு வலைப்பதிவொன்றில் அப்படீன்னு என் பேர் போடாம மூஞ்சில அடிக்கிறாப்புல ஒரு விட்ஜெட்டை உருவாக்கி வைச்சுட்டான்.. அதைப் படிக்கிறவன் என்ன நினைப்பான்..? நான்தான் ஏதோ பைத்தியம் மாதிரி விடியற்காலை எந்திரிச்சதுல இருந்து ராத்திரி தூங்குவறைவரைக்கும் பொழப்பில்லாம உன் பிரெண்ட்டை பின்னாடியே விரட்டிருக்கேன்னு நினைச்சுக்க மாட்டானா..? இப்ப நான் என்ன செய்யறது..? அதான் அருண்குமாரை அனத்தி அந்த பதிவை போட வைச்சேன்.. அவனும் பாவம்.. அவன் அப்பாவை ஆஸ்பத்திரில சேர்த்துட்டு நாயா அலைஞ்சிட்டிருந்தவன் எனக்காக இருக்குற வேலைகளுக்கு நடுவுல இதையும் போட்டுத் தொலைஞ்சான்..

இதுக்கு நீ என்ன பதில் போடுற..? என்னடா நினைச்சுக்கிட்டிருக்க நீ..? இந்த மூர்த்தி விஷயத்துல மட்டும் எல்லாம் நீ சொல்ற மாதிரி.. சொன்ன மாதிரிதான நடந்துக்கிட்டேன்.. இந்த விஷயத்தைத் தவிர.. உன் பிரெண்டு விஷயத்துல மட்டும் மாட்டேன்னு நான் சொன்னதுக்குக் காரணம் உனக்கே தெரியும்.. தனிப்பட்ட முறையில உன் பிரெண்டு எத்தனை தடவை அனானி பேர்ல என்னைத் தாக்கி என் பதிவுலேயே கமெண்ட்டு போட்டிருக்கான்னு தெரியும்ல.

இவனை அனானியா வந்து திட்டிட்டு இவனே வலைப்பதிவர் சந்திப்பு வாண்ணே கூப்பிடுறானேன்னுதான் எனக்குக் கோபம்.. சோ பத்தி எழுதின பதிவுல போய் பாரு.. ஒரே நிமிஷத்துல அண்ணேன்னு போட்டுட்டு அடுத்த செகண்ட்டுல அனானியா முட்டாத்தமிழன்.. உட்டாலக்கடி தமிழன். அப்படி இப்படின்னு போட்டு வைச்சான்.. ஒரு செகண்ட்டுல எவனாவது அனானி கமெண்ட்டை அப்ரூவ் பண்ண முடியுமாடா..? இதையும்தான உன்கிட்ட சொல்லி வைச்சேன்.. அவன் அந்த விட்ஜெட்டை போடாம இருந்து தொலைஞ்சிருந்தா நானும் விட்டதுடா சனியன்னு என் வேலையை பார்த்துட்டுப் போயிருப்பேன்.. அவன் போட்டு வைச்சா அதுக்கு நான் எங்க போய் எவன் மயித்தப் புடுங்குறது..?

ஏதோ உன் பிரெண்ட்டு.. பிரெண்ட்டுன்னு சொல்லி கொஞ்சிக் குலாவுறியே.. நேர்ல பார்த்தா செருப்பால அடிப்பேன்னு சொன்னியே.. அந்த கருத்து கந்தசாமியும், மகேந்திரனும் உன் பிரெண்டுகூட இன்னிக்கு சேர்ந்து நின்னு மும்மூர்த்திகளா போஸ் கொடுத்திருக்காங்க.. இதுக்கு என்ன செய்யப் போற..?

விடாது கருப்பு டீம்ல ஆபாசப் பதிவு எழுதின லிஸ்ட்ல மகேந்திரன் பேரும் இருக்கு. அவரையும் சேர்த்துதான் மூர்த்தி கைப்பட எழுதிக் கொடுத்திருக்கான். லைவ் டெலிகாஸ்ட் மாதிரி விசாரணை நடக்கும்போதே உன்கிட்ட போன்ல இதை சொன்னனே.. ஞாபகமிருக்கா..? இப்போ உன் பிரெண்டுதான் அவன்கூட ஜோடியா கோல்கேட் விளம்பரம் போஸ் கொடுத்திருக்கான்.. என்னத்த புடுங்கப் போற..?

ரெண்டு நாளைக்கு முன்னாடி திபிசிதியை கண்டிச்சு ஒரு பதிவு போட்டியே.. என்ன மயித்துக்கு..? அவர் விடாது கருப்புவோட லின்க்கை வைச்சிருக்காருன்னு சொல்லித்தான.. ங்கொய்யால.. இங்க விடாது கருப்பு தளத்துல பதிவு எழுதினவர்கூடத்தாண்டா உன் பிரெண்டு சிரிச்சுக்கிட்டு நிக்குறான்.. இப்ப எங்கடா போய் நாண்டுக்கிட்டு சாவ..? இனிமே திபிசிதியையும், கோவியையும் எந்த மூஞ்சியை வைச்சுக்கிட்டு மூர்த்தியோட தோஸ்த்துக, அல்லக்கைகள்ன்னு சொல்லுவ..?

இந்த எழவுக்காகத்தான் அப்பவே மூர்த்தியோட யார், யார் இருக்காங்கன்னு தெரிஞ்சு அவங்ககிட்டேயிருந்து நான் ஒதுங்கினேன்.. திபிசிதி, கோவி, யுவகிருஷ்ணா, மகேந்திரன்னு இவங்க பதிவு பக்கம் போகாம ஒதுங்கி ஒரு வருஷமாச்சுடா.. என் கமெண்ட்டை இவங்க பதிவுல பாத்திருக்கியா..? ஒரு கொள்கைன்னு இருந்தா ஒரே மாதிரி இருந்திரணும்.. இல்லைன்னா ஆட்டைக்கு வரலைன்னு சொல்லிட்டு கூட்டத்தோட கூட்டமா சேர்ந்து கோவிந்தா போட்டுட்டு போயிரணும்..

டோண்டு இருக்கிறவரைக்கும் போலி டோண்டு இருப்பாண்ணே.. என்னால ஒண்ணும் செய்ய முடியாதுண்ணேன்னு பாலபாரதி சொன்ன பின்னாடிதான் நான் எந்தப் பதிவர் கூட்டத்துக்கும் போகாம ஒதுங்கியிருக்கேன்.. ஒண்ணு பதிவர்கள் மேல ஒரு அக்கறை இருக்கணும். அவனுக்கு ஒண்ணுன்னா உதவணும்.. அதில்லாம அவனை அடிச்சு விரட்டணும்னு நினைச்சு எதிர்க்கிறவனுக்கு மறைமுகமாக ஆதரவையும் கொடுத்துப்புட்டு பதிவர் சந்திப்புக்கு வாங்கன்னா கேக்குறவன்லாம் கேணையனா..? எந்த மூஞ்சியை வைச்சுக்கிட்டு நான் அங்க போய் செவிட்டு எழவுன்னு என்னைக் கூப்பிட்டவன்கிட்டபோய் இளிச்சுக்கிட்டு நிக்குறது..?

போதுண்டா சாமிகளா.. ஆளாளுக்கு தேவைன்னா ஓடி வருவீங்க.. நாங்களும் இருக்குற பொழைப்பையெல்லாம் விட்டுட்டு உங்களுக்காக ஓடி வரணும்.. கடைசியா நீங்கள்லாம் ஒண்ணு சேர்ந்துக்குவீங்க. நாங்க விரலைச் சூப்பிக்கிட்டு நடுரோட்டுல தனியா பைத்தியக்காரன் மாதிரி நிக்கணும்.. எனக்கென்ன தலையெழுத்தா..?

உங்களுக்குள்ள சண்டைன்னா நீங்களே முட்டி, மோதிக்கிட்டு சாவ வேண்டியதுதானடா.. என்னை மாதிரி ஆளுகளை என்ன எழவுக்குடா இழுத்துவிடுறீங்க.. இந்த பிரச்சனை ஆரம்பிச்சதுல இருந்து எனக்குக் கொஞ்ச நஞ்சம் இருந்த நிம்மதியும் போச்சு.. இதுக்காக உழைச்ச நேரத்துக்கு எங்கிட்டாச்சும் போய் பிச்சையாவது எடுத்திருந்தா, எனக்கு இன்னிக்கு சோத்துக்காச்சும் உதவும்.. எவ்ளோ உழைப்பு வேஸ்ட்டு.. ஏண்டா இந்த பிளாக் சனியனைத் தொட்டோம்னு இருக்கு எனக்கு..

இவ்ளோ தூரம் நாய்படாதபாடா அலைஞ்சிருக்கேன்.. கூலா கொரியால உக்காந்துக்கிட்டு அவரும் போலி டோண்டுவால் பாதிக்கப்பட்டவர்ன்னு பீலா வுடுறே.. அப்ப இத்தனை நாளா என்கிட்ட விட்டதென்ன உல்டாவா..?

கடைசியா அதென்ன எவனோ ஒரு எழுத்தாளனின் சதியா..? எந்த கேப்மாரி, சொமாறி அந்த எழுத்தாளன். அவன் யாருன்னாவது சொல்லித் தொலையேன்.. அவன் மூஞ்சியையாவது பார்த்துத் தொலையறேன்.. படிக்கிற அத்தனை பேரும் இப்ப என்ன நினைப்பான்..? ஏதோ உண்மைத்தமிழன் யார் என்ன சொன்னாலும் கேப்பான்.. சுய அறிவே இல்லாதவன்.. கேணப்பய.. எடுப்பார் கைப்பிள்ளைன்னு நினைச்சு இருக்குற மரியாதையும் போயிருச்சு.. ஏண்டா எழுதும்போது முன்ன பின்ன யோசிச்சு எழுத மாட்டியா..? அந்த பிரபல எழுத்தாளன் யாருன்னாவது சொல்லேன்.. நானும் தெரிஞ்சுக்குறேன்..

எனக்குத் தேவைதான்.. ஒழுங்கு மரியாதையா டோண்டு ஒழிக.. பெரியார் வாழ்க.. திராவிடம் வளர்கன்னு அன்னிக்கே உங்களை மாதிரி சொல்லிட்டுப் போயிருந்தா எனக்கு இன்னிக்கு இந்த நிலைமை வந்திருக்காது.. நான்தான் படிக்காத முட்டாளாச்சே. இன்னிக்குத் தெரியுது.. உனக்காகவும், உன் பிரெண்டுக்காகவும் நூத்தியெட்டு தடவை சொல்றேன்னு நினைச்சுக்க டோண்டு ஒழிக.. பெரியார் வாழ்க.. திராவிடம் வளர்க.. போதுமா..?

ஐயா சாமி.. எனக்கு இன்னும் என்னென்னவோ வாய்ல வருது.. முடியலை.. போதும்டா கண்ணு.. நீ நினைக்கிற மாதிரி ரப்பர் மாதிரி வளைஞ்சு கொடுக்குற ஆளும்.. கட்சிக்காரன் மாதிரி கால்ல விழுந்துகிடக்குற ஆளும் நான் இல்ல ராசா..

மெட்ராஸ் வந்தப்ப ஹோட்டலுக்கு கூப்பிட்டு நல்லா சோறு போட்ட.. சைபர் கிரைம் ஆபீஸுக்கு அலையறதுக்கு கொஞ்சம் காசு கொடுத்த.. தம்பி முருகன் சத்தியமா சொல்றேன்.. திரும்பி உன்னை பார்க்குறப்ப மருவாதையா அந்தக் காசை திருப்பிக் கொடுத்துர்றேன். இல்லேன்னா இப்ப உடம்புல இருக்குற ஒத்தை எலும்பும் நிக்காது.. சத்தியமா சொல்றேன்.. திருப்பிக் கொடுத்துர்றேன்..

இந்த மட்டுக்கும்போதும்பா..

நீயும் நல்லா இரு.. உன் பிரெண்ட்டும் நல்லா இருப்பான்.. அவன் நல்ல பெரிய எழுத்தாளனா வரட்டும்.. வாழ்த்துறேன்.. அந்த மூர்த்தியும் குடும்பத்தோட நல்லாயிருக்கட்டும்.. அல்லக்கைகளும் நல்லா வாழட்டும்..

சைபர் கிரைம்ல என் கேஸ் மட்டும்தான நிக்குது.. இனிமே நானே அதை பார்த்துக்குறேன். எவன் தயவும் எனக்குத் தேவையில்லை..

குட்பை..

பதிவு முழுக்க எப்பவும்போல டா போட்டுட்டேன்.. மன்னிச்சுக்க தம்பி.. கோச்சுக்காத.. திருப்பி திருத்த உக்காந்தா என் பொழப்பு கெட்டிரும்.. அதுனால நேர்ல என்னை பார்க்கும்போது உன் செருப்பை கழட்டி என்னை எவ்ளோ அடிக்கணுமோ அவ்ளோ அடிச்சுக்க..

நல்லாயிருப்பா ராசா..

107 comments:

  1. அண்ணே ! இந்த அளவுக்கு ஆதாரத்தோட வருவீங்கன்னு எனக்கு ரவியோட பதிவ பார்க்கும் போதே தெரியும்.... இவ்வளவு ஆதாரம் இருந்தும் வெளியிடாம இருந்த உங்க நேர்மை பிடிச்சிருக்கு. ஆனா விதி வலியது.. இப்போ எல்லாத்தையும் போட்டு உடைகிற மாதிரி ஆயிருச்சு.. சரி விடுங்க உண்மை ஒரு நாள் தெரிஞ்சு தான் ஆகணும்..

    இனிமேலாவது கண்ணாடி வீட்ல இருந்துக்கிட்டு கல் எரியிறவங்க திருந்துனா சரி..

    ReplyDelete
  2. Bro, truth is on your side. Neenga pattuku poite irrunga. Endha madhiri padhivu pottu unga timea waste pannadhenga (idhila oru ulkuthum illa) Ippadi padhivu potta endha pasanga ellam thirundhiria porangala eanna. Manasukulla vairagikayama irrundhu unga kariyatha mattum parunga. Endha pasangala kalam parthukuum - Ungala support panra oru mugam katta mudiyadha anony!!!

    ReplyDelete
  3. forget about yuvakrishna's connection with moorthy. Read this

    http://mugamoodi.blogspot.com/2007/09/blog-post.html

    In the comments section you'll find some links that shows the direct connection between ravi and doondu (one of the nick names for moorthy)

    ReplyDelete
  4. கிழிஞ்சது போங்க..!!

    க்வெண்டின் & நோலன் படங்கள் கூட இன்னும் கொஞ்சம் சீக்கிரம் புரிஞ்சிடும் போல.

    இந்த எழவு ஒன்னும் புரிய மாட்டேங்குது. யாராவது நாவல் மாதிரி வரிசையா எழுதுங்கப்பா..!

    புண்ணியமா போவும். இப்ப இந்த ரவி யாருன்னு கண்டுபிடிச்சி, அந்த பதிவை படிச்சா எதாவது புரியுமா சரவணன்???!!

    ReplyDelete
  5. உண்மைத்தமிழன்!

    உங்களுக்கு "உண்மை" அடைமொழி பொருத்தமாத்தான் இருக்கு! ஆனால் "வாய்மை" இந்த வலையுலகில் வெல்லுமா என்ன????

    ReplyDelete
  6. அண்ணே....

    உங்க கோபம் புரியுது...அது சரியா, தப்பான்னு நான் சொல்ல வரலை...

    ஆனா, நீங்க உட்பட எல்லாரும் வாழ்க்கையில அடுத்த ஸ்டெப்புக்கு போறீங்க...அதை கவனிக்கலாமே??

    உங்களுக்கு கோவம் இருந்தா சம்பந்தப்பட்டவங்க கிட்ட பேசினா பிரச்சினை சீக்கிரம் முடியும்...இந்த மாதிரி விஷயத்துல எழுதறதை விட, மனம் விட்டு பேசினா நல்லதுன்னு நான் நினைக்கிறேன்...

    ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொல்லிட்டேன்...தப்பா எடுத்துக்காதீங்க..

    ஆமா, நீங்க சின்னத்திரைக்கு போறீங்களா?? சொல்லவே இல்ல?? :0)))

    என்ன சீரியலா இல்ல வேற எதுனா ப்ரோக்ராமா?? எதா இருந்தாலும் வாழ்த்துக்கள்...அடுத்து பெரிய திரை வர்ற மாதிரி ஐடியா இருக்கா??

    ReplyDelete
  7. உ.த அண்ணே உங்க பதிவுக்கான பதில் இல்ல இது........
    ஆனாலும்
    ////////
    டோண்டு இருக்கிறவரைக்கும் போலி டோண்டு இருப்பாண்ணே.. என்னால ஒண்ணும் செய்ய முடியாதுண்ணேன்னு பாலபாரதி சொன்ன //////
    i 100% agree on this one...
    இதை கண்ணாபின்னானு வழிமொழிகிறேன்..
    (போன பதிவில் 2 செண்ட் குடுத்த அதே அனானி)

    P.S
    ஏதோ யார் பன்னுன புண்ணியமோ நானும் ஒரு சைக்கோவா மாறாம புளாக்க விட்டே ஓடிட்டேன்.

    ReplyDelete
  8. உண்மைக் குமுற‌ல்

    ReplyDelete
  9. அண்ணே,

    ------

    யோவ் ஒழுக்க சிகரம்.. மொதல்ல நீ யாருன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாத்தியாய்யா..

    "அருவெருப்பு, துர்நாற்றம், சாக்கடைப் பதிவு, அருவருக்கத்தக்க.."

    அடேயப்பா மவனே.. இதையெல்லாம் நீ சொல்லி நாங்க கேட்க வேண்டிய நிலைமையா..?

    இத்தனைக்கும் ஒட்டு மொத்த உருவமே நீதானய்யா.. நீ அடுத்தவனுக்கு அறிவுரை சொல்றியா..?

    மொதல்ல உனக்கு பிளாக்ல எழுதறதுக்காவது ஏதாவது தகுதி இருக்கான்னு யோசிச்சிருக்கியா..? அயோக்கியத்தனமா ஒரு பொண்ணு பேர்ல ஆபாசக் கதை எழுதி, அதையும் நாலு பேருக்கு படிக்கணும்னு தைரியமா திரட்டில வேற சேர்த்து கூத்தடிச்சியே.. அது மட்டும் அருவருப்பு இல்லையாக்கும்.. சாக்கடை இல்லையாக்கும்.. துர்நாற்றம் இல்லையாக்கும்..

    பின்ன.. அதெல்லாம் நீ எழுதின வேதமாக்கும்..? நல்லா வாய்ல வருது எனக்கு.. என்னய்யா படிச்சு கிழிச்ச நீ.. படிக்காத முட்டாள்கூட செய்ய மாட்டான்யா நீ செஞ்ச காரியத்தை.. என்னமோ பெரிசா எட்டு மாடி பில்டிங்ல கோட், சூட், டை கட்டிக்கிட்டு வேலை வேற பாக்குறியாம்.. த்தூ.. வெக்கமாயில்லை.. செய்றதையும் செஞ்சுட்டு அடுத்தவனுக்கு அறிவுரை சொல்ல வர்ற..

    மவனே அடுத்து எந்த இடத்துல உன் கமெண்ட்டை பார்த்தாலும் நிச்சயமா நான் இதே மாதிரிதான் பதில் கமெண்ட் போடுவேன்..

    இருக்குற மானம், மரியாதையை காப்பாத்திட்டு பேசாம வீட்ல போய் உக்காந்து உன் பிள்ளைகளுக்கு நல்ல அப்பனா இருக்கப் பாரு..

    அட்வைஸ் பண்றதுக்கும், அறிவுரை சொல்றதுக்குமெல்லாம் ஒரு தகுதி வேணும்யா.. வெங்காயம்.."

    Read more: http://truetamilans.blogspot.com/search/label/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D#ixzz0QjxwwvKw

    --------------

    அண்ணே, இதெல்லாம் யாரு யார பத்தி எழுதினதுன்னு நீங்க நெனைக்கிறீங்க.? எல்லாம் நீங்க எழுதியது !!
    அந்த பெரியவருடன் நீங்கள் ராசி ஆகி விட்டு இப்பொழுது சல்மா மேட்டரை நீங்கள் பேசாமல் அடக்கி வாசிக்கிறீர்களே, அது ஏன் ???

    அது மாதிரி தானே இதுவும். அன்றைய நட்பு இன்றைய விரோதமாக இருக்கலாம். மாறியும் இருக்கலாம்.
    வாழ்க்கைல இதெல்லாம் நடப்பது தான் அண்ணே!! எளிமையாக எடுத்துக்கொண்டு விட்டு தள்ளுங்கள்.

    ReplyDelete
  10. அண்ணே.

    கொதிக்காதீங்க.

    கிழுமத்தூர் குப்பை வண்டியைப்போலவோ, அல்லது சிங்கப்பூர் அ)சிங்கம் போலவோ போலிடோண்டுப்பதிவை திறந்து இவர் எழுதியதன் ஆதாரம் இல்லை. மாட்டார். குப்பை வண்டிகள் இவரை பயன்படுத்திக்கொண்டு மறைந்(த்)துகொள்ளப்பார்க்கின்றன. உங்களிடம் பதிவு போட்டு பேசினால் ஆகாது. தொலைபேசியில்தான் அழைக்கவேண்டும். இப்போதைக்கு தேவை ரெஸ்ட். யார் அந்த பிரபல எழுத்தாளர் என்று குழம்பவேண்டாம். அந்த பதிவின் கடைசி எழுத்து.

    ReplyDelete
  11. என்னுடைய பதிவில் குழலிக்கு எழுதிய பதில் உங்கள் பார்வைக்கும்:

    குழலியண்ணாத்தே.

    அன்றைக்கு நம்மை எல்லாம் பிரித்தாள அவர்(ன்) பயன்படுத்தியது அந்த டேர்ம்ஸ். இன்றைக்கு அவனுமில்லை. (நேற்று ஒரு நாள் மட்டும் பக்கம் பக்கமாக கமெண்டினான் பாவம்)

    எல்லோரையும் ஒருவகையில் பயன்படுத்தியுள்ளான். துளசியக்காவுக்கு டோண்டு பெயரில் இருந்தே மடலனுப்பினான், அவரும் ஏமாந்தார். அதன் மூலம் எவ்வளவு மன உளைச்சல் டோண்டுவுக்கு ? துளசியக்காவை அல்லக்கை நொள்ளக்கை என்றா சொல்லிவிடமுடியும் ?

    இல்லாத என்னுடைய அலுவலக முகவரியில் இருந்து டோண்டுவை அடிக்கவா என்று அவனுக்கே மடல் அனுப்புவது போலவும், அவனுக்கு க்ரெடிட் கார்டு தகவல் அனுப்புவது போலவும் உருவாக்கினான். அதை தரன் முகமூதி உட்பட எல்லோரும் இணைப்பு கொடுத்து சொறிந்துகொண்டார்கள். நான் நொள்ளக்கையா ?

    என்னுடைய குடும்பத்தை பற்றி வெளிப்படையாக எழுதிய விடாது கருப்பு தளத்தை அதன் பிறகு படித்து பெரியாரை தெரிந்துகொண்டதாகவும், அவன் தன்னுடைய நன்பன், ஆனால் அவன் போலி டோண்டா என்று தெரியாது, என்று சொல்லிய சிங்கப்பூர் அசிங்கம், என்னிடம் சேட்டில் பேசி, பஞ்சாயத்து செய்து, என்னுடைய ஸ்டேட் கவுண்டர் பாஸ்வேர்டை வாங்கி போலி டோண்டு மூர்த்தியிடம் கொடுத்தது. அந்த நொள்ளக்கையை தண்டிக்கமுடியவில்லை.

    மிடில் ஈஸ்டில் பிரவுசிங் செண்டரில் வேலை செய்யும் கிழிஞ்சவூர் குப்பைவண்டி இருந்து என்னுடைய பதிவுகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதில் ஆபாச தகவல்கள் சேர்த்து, அனானிகள் முன்னேற்ற கழக பதிவில் வெளியிட்டது. அந்த உண்மைகளை தெரியாமல் இந்த யுவகிருஷ்னா சென்று படம் எடுத்துக்கொண்டதை இன்றைக்கு சமயம் வரும்போது பயன்படுத்துகிறது சிங்கப்பூர் அசிங்கம்.

    இன்றைக்கும் நான் சொன்னது சொன்னது தான். இவைகளை நான் நேரில் பார்க்கும்போது நடக்கவேண்டியது நடக்கும். அதன் பிறகுதான் காவல்நிலையம். இதில் புதிய அடிஷன் பெங்களூர் பெருந்தகை.

    ReplyDelete
  12. திரு ஹாலிவுட் பாலா.

    என்னுடைய வலைப்பதிவு முகவரியை உண்மை தமிழன் அண்ணனிடம் வாங்கி படிக்கவும். புரியலாம், ஒருவேளை.

    நன்றி.

    ReplyDelete
  13. \\டோண்டு இருக்கிறவரைக்கும் போலி டோண்டு இருப்பாண்ணே.. என்னால ஒண்ணும் செய்ய முடியாதுண்ணேன்னு பாலபாரதி சொன்ன //////
    i 100% agree on this one...
    இதை கண்ணாபின்னானு வழிமொழிகிறேன்..
    (போன பதிவில் 2 செண்ட் குடுத்த அதே அனானி)//

    இது என்ன கொடுமையா இருக்கு? வலையுலகத்துல எல்லாரும் தங்களோட சாதிக்கு கொடி புடிக்கும் போது அவர் செஞ்சது தப்பா? அப்படியே தப்புன்னாலும் அதுக்காக குடும்பத்த சந்திக்கு இழுத்துதான் அவர ஒடுக்கனுமா? தொரத்தனுமா? எப்புடி எப்புடி? டோண்டு இருக்குற வரை போலி டோண்டு இருப்பாண்ணே, என்னால ஒன்னும் பண்ண முடியாதா? அடங்கொய்யாலே, எப்டிய்யா கரெக்டா ஆணித்தரமா சொன்னாரு? இதுக்குப் பேருதான் கிள்ளி விட்டு ஆட்டுறதா? ஊரு ஒலகத்துல அவனவன் என்னென்னமோ தில்லாலங்கடி செஞ்சு ‍ஹாய்யா இருக்கான். கோடி கோடியா அடிச்சு ஊர உலையில போடுறான். அதையெல்லாம் கேக்காம வலையுலகத்துல வந்து நீ எப்டிய்யா ஐயங்கார்னு சொல்லலாம்னு அவர் குடும்பத்தப் பத்தி அசிங்கமா எழுத வச்சு வேடிக்கை பாத்தாங்க. அவருக்கு சொல்லனும்னு தோணுச்சு சொன்னாரு. உனக்கும் தோணுச்சுன்னா நீயும் சொல்லிக்க. ஏன் தேவையில்லாம எல்லார் குடும்பத்தையும் அசிங்கமா திட்டி எழுதின? எழுத வச்ச?
    வாழும் பெரியாரோட பேரன்றதுனாலேயே வலைல அசிங்கமா எழுதி சாதிய ஒழிக்கக் கெளம்பினவர கோவி புண்ணியத்துல ஃபோட்டோல பார்த்தேன். அவரும் இவரும் மெட்ராஸ் வந்தாங்களாம், இப்போ விஷயம் மறுபடி கெளம்புன உடனே "என்னய ஏண்டா வம்புக்கு இழுக்குறீங்கன்னு" நாய்க் கவிதை எழுத வச்சு, சும்மா சொல்லக் கூடாது கோவியார் தன்னோட வேலய நல்லாவே காட்டுறார்.
    இப்போ பாருங்க‌ வ‌லையுல‌க‌ பெரும‌க்க‌ளே, போலி ஊருக்குப் போயாச்சு, அல்லைகைகள் எழுத்துலகுல பெரியாளா ஆயிட்டு வராங்க, கண்ணாலம் கட்டி புள்ள பெத்துட்டாங்க. இனிமே கோவி அன் கோ ஆட்டம் ஆர‌ம்பிக்கும். நாங்க‌ எல்லாம் சூப்புர‌ மேன், எங்க‌ள‌ அசைச்சுக்க‌ முடியாதுன்ற‌ ரேஞ்சுல‌ ஒரு ப‌திவு வ‌ரும். இது ந‌ட‌க்கும் போது ம‌றுப‌டி எல்லாரும் ஒப்பாரி வைப்பீங்க‌. இவ்வ‌ள‌வு ப‌டிச்சு க‌ம்பூட்ட‌ர்ல‌ எல்லாம் எழுதுற‌வ‌ங்க‌, வ‌லைல‌ எழுதி சாதிய‌ ஒழிக்க‌லாம்னு கூட்ட‌ணி போட்டது தான் இந்த‌ நூற்றாண்டோட‌ த‌மாசோ த‌மாசு.
    ஒருத்த‌ர் நார‌த்த‌ன‌மான‌ கொளுகைக‌ள‌ ப‌ர‌ப்புனாரு, இன்னோருத்த‌ர் அத‌ப் ப‌டிச்சு ப‌குத்த‌றிவு முத்திப் போயி அல்ல‌க்கையா மாறி அடுத்த‌வ‌னோட‌ விவ‌ர‌ங்க‌ளையெல்லாம் கொடுத்தாரு. ஆபாச‌க் க‌தைக‌ள், புகைப்ப‌ட‌ங்க‌ள், வ‌சைக‌ள் ‍- இதையெல்லாம் அவ‌ங்க‌வ‌ங்க‌ குடும்ப‌த்துல‌ குடுத்து ப‌டிக்க‌ சொல்லிட்டு அப்புற‌மா வ‌லைல‌ ஏத்தியிருந்தாங்க‌ன்னா அவ‌ங்க‌ செஞ்ச‌த‌ ச‌ரின்னு சொல்ல‌லாம்.
    என்ன‌மோ போங்க‌ வ‌லையுல‌க‌ பெரும‌க்க‌ளே, வ‌ருசா வ‌ருச‌ம் தீபாவ‌ளி வ‌ர்ற‌ மாதிரி போலித் திருவிழாவும் வ‌ருது. என்சாய் ப‌ண்ணுங்க‌. அண்ணா உ த‌ அண்ணா, ந‌ம‌க்கு இருக்குற‌ பொழ‌ப்பு த‌ழ‌ப்ப‌ப் பாத்து நாலு காசு பாருங்க‌ண்ணா. வீணா இதுல‌ உங்க‌ ம‌ன‌ச‌ப் போட்டுக் குழ‌ப்பி வாழ்க்க‌ய‌க் கெடுத்துக்காதீங்க‌. உங்க‌ளுக்கு நீங்க‌தான். வேற‌ யாரும் வ‌ர‌ப் போற‌தில்ல. அடிக்க‌டி க‌மெண்ட் போட்ட‌ உரிமைல‌ சொல்லுறேன். இத்த‌ இத்தோட‌ விட்டுருங்க‌. கொஞ்ச‌ நாள் வ‌லைப் ப‌க்கமே த‌லை வ‌ச்சுப் ப‌டுக்காதீங்க‌.
    நான் சொன்ன‌துல‌ த‌ப்பு இருந்தா ம‌ன்னிச்சுருங்க‌.
    2 செண்ட் குடுத்த‌ அனானி, நீங்க‌ளும் த‌ப்பா எடுத்துக்காதீங்க‌.

    ReplyDelete
  14. /////////
    என்னுடைய வலைப்பதிவு முகவரியை உண்மை தமிழன் அண்ணனிடம் வாங்கி படிக்கவும். புரியலாம், ஒருவேளை.
    /////////

    படிச்சேங்க..!!! ஆனா.. ஒன்னும் விளங்கலை. இப்ப ஒரு மாதிரி... ஜாதி-அனானி-கமெண்ட்-மூர்த்தின்னு நானே ஃபில் இன் த ப்ளாங்க் பண்ணிகிட்டு இருக்கேன்.

    ட்டோரண்ட் சைட்டில் இந்த அரசியல் தொந்தரவு இருந்ததுன்னுதான் இங்க வந்தேன். இங்க அதைவிட பெரிய ரவுசு இருக்கும் போல..!!

    ReplyDelete
  15. ம்ம்ம், சனி உச்சத்துல இருக்கும் போல இருக்கே

    ReplyDelete
  16. //வாழும் பெரியாரோட பேரன்றதுனாலேயே வலைல அசிங்கமா எழுதி சாதிய ஒழிக்கக் கெளம்பினவர கோவி புண்ணியத்துல ஃபோட்டோல பார்த்தேன்.
    //

    2செண்ட் அனானியாரே.

    உண்மையான பெரியார் பேரனே காங்கிரஸ்ல இருக்கார். இதுல...

    !!!

    ReplyDelete
  17. இதெல்லாம் நல்லால்ல... :(

    ReplyDelete
  18. நான் சொல்லவந்ததை சரியாக சொல்லவில்லை போலிருக்கிறது.

    will come back later with more (may be weekend, if i donnt have any other work:-)) )

    *****நான் போலியின் ஆபாச நடத்தையை ஒரு துளிகூட சரியென்று சொல்லவில்லை.*******

    the bottom line of my comment is
    "dondu used and spread this poli mater to get some limelight" period.
    he is a விளம்பர வெறியர் மற்றும் சுயநலவியாதி used and spoiled tamilmanam aka tamilblogs period.
    (again donnt compare with poli's work. i am not at all supporting any of his actions).

    Also i do believe that even after moorthi he might make an another guy as poli and he will be in limelight again. thats all...

    ReplyDelete
  19. அண்ணே, நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டிங்க இல்ல.

    இந்த மேட்டர்ல அடி முட்டாள் யாருன்னா அது நீங்கதான். அடுத்த முட்டாள் மூர்த்தி. இந்த முட்டாள்தனத்துக்கும் உங்க ரெண்டு பேரோட மற்ற செயல்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அது வேற, இதுவேற. எப்படின்னு கடைசில சொல்றேன்.

    மூர்த்திய மாட்டிவிடனும்னு நெனைச்ச எல்லாருக்கும் ஒரே டிரைவிங் ஃபொர்ஸு தான் இருந்தது. அவரால நேரடியா பாதிக்கப்பட்டதால சிலருக்கு அவர காட்டிக் கொடுக்கணும்நு என்னம். வேற சிலருக்கு மாட்டிவிடனும்னு எண்ணம். அவ்வளவா பாதிக்காதவங்களும் கொஞ்சம்கூட பாதிக்காதவங்களும் விட்டு விலகினா போதும்னு இருந்திட்டாங்க. எனக்கு தெரிஞ்சவரைக்கும் பதிவுலகம் உருப்படியா இருக்கனுமே என்ற கவலை பாலபாரதிக்கும் உங்களுக்கும் இருந்த மாதிரி இருக்கு. மூர்த்தியால நேரடியா பாதிக்கப் படாததால பாலபாரதி ஏனோதானோன்னு இருந்திட்டாரு. நீங்க கொஞ்சம் வெறியோட இருந்தமாதிரி இருக்கு.

    போலின்னு இன்னைக்கு சொல்லப்படுற அந்த பதிவர் அப்ப சிங்கம் மாதிரி இருந்தாரு. தனிமனித தாக்குதல்ல அவர் ஈடுபட்டுக்கிட்டு இருந்தபோதும் அவரோட நண்பர்கள் மத்தியில மரியாதையாத்தான் இருந்தாரு. ஏன்னா அவர்தான் பத்திரிகை உலகம் மாதிரி பதிவுலகமும் பார்ப்பான் கையில போகாம இருக்க பெரு முயற்சி பண்ணாரு. பார்ப்பான கருத்தியல் ரீதியா காயடிச்சவங்கள்ள இவருக்கும் முக்கிய இடம் உண்டு. (என்ன சிரிப்பு வருதா? உங்களுக்கு இது புரியாது, இந்த விசியத்துல நீங்க ஒரு டப்பாதான், அதனால சிரிங்க) இன்னைக்கு அவர போலின்னு சொல்றவங்க யோக்கியதை என்னான்னு கொஞ்சம் பாப்பமா?

    டோண்டு - இவர் எனக்கு தெரிஞ்சி போலியா பதிமூணு ஐடி வச்சிருந்தாரு. ஒன்னு மட்டும் மாட்டிகிச்சி. ஏன்னா அதுலதான் அதிகமா பின்னூட்டம் போட்டாரு. போலி ஐடியில படு ஆபாசமா பின்னூட்டம் போட்டவர்தான் இந்த பெரியமனுசன். இவர் சல்மா அயூப்ல ஆபாசமா பதிவு போட்டதும் இல்லாமா ஓனர் ஜெயராமன காப்பாத்த பயங்கரமா பல்டி அடிச்சிட்டு இருந்தாரு. இது தெரியாம இவருகூட செர்ந்திருந்திங்கன்ன நீங்க ஒரு முட்டாள், தெரிஞ்சி செர்ந்திருந்திங்கன்னா இலக்கில்லாதவன். முட்டாளும் இலக்கில்லாதவனும் முயச்சி எல்லாம் வீனாதான் போவும்.

    லக்கிலுக் - இவரையெல்லாம் இவளவு சீரியஸா எடுத்துக்கிட்டு நீங்க லோல் பட்டிங்கன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கு (நீங்கதான் முட்டாலாச்சே). திராவிட கொஷ்டிங்கல்லாம் எதுக்கு இவர கூட்டணியில சேர்த்தாங்கன்னு புரியல. சரியான ஜால்ரா பைய்யன் இவர். பாவம் சமூகத்துல பெரியாளா வர என்னென்னமோ குட்டிகானம் போடறாரு. அவரோட முயச்சிகள் எல்லாம் வீண் போகாம இருக்கனுன்னா இப்படி ஜால்ரா போட்டுத்தான் ஆவணும் என்பது நம்மூர்காரங்களின் தலைவிதி. குத்தம் சொல்லமுடியாது. திறமையெல்லாம் வீணாக கூடாதில்ல. கோயிந்து கோஷ்டியில சேர்த்து அவர அவர் வழியில விட்டிடனும். தீவிரமா இயங்குரவங்க எல்லாம் இந்தமாதிரி ஆளுங்களை கிட்ட சேர்க்கக்கூடாது. ஏன்னா சந்தடி சாக்குல நம்மள போட்டு குடுத்திடுவாங்க. இது தெரியாம இவர் கூட நெருங்கி பழகின மூர்த்தி ஒரு முட்டாள் தான?

    கோவி கண்ணன் - இவரெல்லாம் நண்பனா இருக்கவே கூடாது. மூர்த்திய காட்டி கொடுக்கல என்பது பரவாயில்ல. ஆனா மூர்த்தி கலக்கிகிட்டு இருந்தப்போ கைதட்டிட்டு, அவருக்கு வெறி தலைக்கு ஏறினப்போ அத மட்டுப்படுத்தாம கழண்டுக்கிட்டாறு இவரு.

    ReplyDelete
  20. குழலி - இவர் மூர்த்தியால தாக்கப்பட்டார் என்பதைத் தவிர இவருக்கு வேற தகுதி இல்ல. தனிமனித தாக்குதல் தவறு. கூட இருந்து குழி பறிப்பதும் தவறுதான். இத வேற மாதிரி இவர் கையாண்டு இருக்கலாம். பார்ப்பான் எல்லாம் எங்க இருந்தாலும் கடைசில ஒன்னாயிட்டாக. அழகா பதுங்கி கிட்டாங்க. காலகாலமா காட்டி கொடுத்து வரலாறை ரொப்பி வச்சிருக்கிற தமிழன் சைபர் உலகத்திலயும் அதையேதான் செய்கிறான்.

    ரவி - இவர் ரொம்ப தொல்லை அனுபவிச்சிருக்காரு மனுஷன். ஆனா பாருங்க மூர்த்தி வேலையை இவறும் செஞ்சிட்டு அவர கை காட்டி இவர் நல்லவனாயிடம்னு பாக்கிறாரு. இவர் கூட சேர்ந்தா நீங்க கேஸ்ல ஜெயிக்க முடியும்னு நெனைக்கிறீங்களா? இவருக்கு நல்லவர் பிம்பம் வந்ததும் லோல் பட்டது போதும்னு பொழப்ப பாக்க போயிட்டாரு. அந்த மாதிரி நீங்க போகாதது உங்க தப்புதான். புள்ள பூச்சிங்களையும், பொழப்ப பாகிரவிகளையும் திட்டி இவர் நல்லவனாக இன்னைக்கு வரைக்கும் முயற்சி பண்ணிகிட்டுதான் இருக்காரு.

    மூர்த்தி பண்ணது தப்புதான். அவர் தாக்கிட்டு இருந்த பார்ப்பநேல்லாம் எப்படி பட்டவங்கன்னு புதுபதிவர்களுக்கு தெரியாது. அப்ப அப்ப போலி டோண்டு மேட்டர எழிதி பூச்சாண்டி காட்டுற விரல் சூப்பிங்கல்லாம் அந்த கால பார்ப்பன பதிவர்கள் பத்தியும் ஒரு பதிவு போடலாம். அவர்கள் போடலன்னா போலி மேட்டர்ல ஞானஸ்தானம் பெற்றவிங்கலாவது எழுதலாம். ஏன்னா போலி வுருவானது எப்படின்னு இதுவரைக்கும் எவனும் எழுதினதா எனக்கு தெரியல. நான் கொஞ்சம் லைட்டா சொல்றேன்!

    முகமூடின்னு ஒருத்தர் இருந்தார். எவனெல்லாம் பெரியார பத்தி எழுதரான்னோ அவனையெல்லாம் போட்டு அடிப்பாரு. ஆனா பாருங்க கடைசிவரைக்கும் அவர் அனானிதான். ஆனா போலியில்ல. ஏன்னா அவர் பார்ப்பான், இவன் பார்ப்பான் இல்ல.

    விட்டது ரெட் குழுமம் - மூர்த்தி செஞ்ச அத்தனை வேலையையும் இவங்க செஞ்சாங்க. இன்னைக்கு இருக்கிற இடம் தெரியாம பதுங்கி கிடக்காங்க. ஏன்னா அவங்கள காட்டி கொடுக்க அவங்க ஜாதியில ஒருத்தனும் இல்ல. சிலர் இட்லி வடையில அப்பப்ப மூஞ்சிய காட்டுவாங்க. (இட்லி வடையில யார் மூஞ்சிய காட்டுறாங்க? நாலுவருஷமா பதிவு எழுதரவனுக்குதான் மொசப் புடிக்கிற நாயோட மூஞ்சி தெரியும்)

    காலம் (இந்த அஞ்சு வருசத்த சொல்றேன்) பலரோட அடையாளத்தை மாத்தி மாத்தி போட்டுவிட்டது. இன்று வரை மாறாதது எது தெரியுமா? இம்பெர்சொநேசன். அப்படின்னா ஒருத்தன் மாதிரியே நடவடிக்கைய மாத்தி அவனை வம்புல மாட்டி வைக்கிறது. இன்றும் இதில் விற்பன்னர்கள் நம்ம பார்ப்பனர்கள் தான். உதாரணம் சொல்லனும்னா, இப்ப ரெண்டு பெரு சண்டை போட்டாங்கன்னா அவங்கள்ள ஒருத்தன் மாதிரி ஒரு பதிவை எழுதி அவனை மாடிவைக்கிறது. பெஸ்ட் எக்சாம்புல் இட்டாளி வடை. அடுத்த எக்சாம்புல் பீர். நல்லதந்தி மாதிரி அப்பப்ப அங்கங்க காலத்தூகறதும் உண்டு.

    என்னமோ போங்கோ! நம்ம பசங்களா நம்பி நாசமா போனவர் மூர்த்தி. (அசிங்கமா பதிவெழுதி பெரியார் கொள்கையை வளர்க்கச்சொல்லி அவரே கனவுல வந்து சொன்னாராம் இவருக்கு). அதே பசங்களை நம்பி, கூடவே பாப்பானுங்களையும் நம்பி முச்சந்தியில நிக்கிறவர் நீங்க. இப்ப சொல்லுங்க ரெண்டு பெரும் முட்டாளுங்க தான?

    ReplyDelete
  21. அதிக‌மான‌வ‌ர்க‌ள் ப‌டிக்க‌க்கூடிய‌ ப்ளாக் உங்க‌ளுடைய‌து. நீங்க‌ள் பாதிக்க‌ப்ப‌ட்ட‌து உண்மை. ஆனால் குற்ற‌வாளிக‌ளுக்கு, உங்க‌ள் புல‌ம்ப‌ல் ம‌கிழ்சியை த‌ருவ‌தை அவ‌ர்க‌ளுடைய‌ பின்னூட்ட‌ங்க‌ளும், அது ச‌ம்ப‌ந்த‌மான‌ இடுகைக‌ளும் உண‌ர்த்துகின்ற‌ன‌. எனவே உங்க‌‌ள் நேர‌த்தை இந்த‌ மாதிரி இடுகைக‌ளில் வீணாக்காதீர்க‌ள்.

    The following conversation was between a Prof. Wasielewski's student and another student, whose advisor is a new professor at Northwestern University, USA.
    Wasielewski's Student: My boss is famous, your boss is not!
    Other student: Julia Roberts is famous, not your boss!
    Prof. Wasielewski is a very famous chemist and I like his research a lot. But my co-worker even don't know him! Everybody in US knows Julia Roberts.

    Yuvakrishna is neither famous nor he will be. Spending time on him is a waste.

    I am making this comment as a well wisher.

    ReplyDelete
  22. அண்ணே சத்தியமா சொல்றேன்... மன்னிச்சிக்குன்னா ரொம்ப வேதனையா இருக்கு... இந்த பதிவு எழுதும்போது உங்களுக்கு எவ்வளவு வேதனையா இருந்திருக்கும்னு புரியுது... எவனுவனுக்காகவோ எவன் எவனோ அடிச்சிக்கிற கதையா செந்தழல் ரவி என்னாத்துக்கு ஜாமீன் போடுறாப்லன்னு எனக்கு தெரியலை... பாவம்...

    ReplyDelete
  23. // இல்லாத என்னுடைய அலுவலக முகவரியில் இருந்து டோண்டுவை அடிக்கவா என்று அவனுக்கே மடல் அனுப்புவது போலவும், அவனுக்கு க்ரெடிட் கார்டு தகவல் அனுப்புவது போலவும் உருவாக்கினான். அதை தரன் முகமூதி உட்பட எல்லோரும் இணைப்பு கொடுத்து சொறிந்துகொண்டார்கள் //

    அடங்கொய்யால... நாம் பாட்டுக்கு செவனேன்னு போனாலும் கூப்பிட்டு சொறியிறீங்களே.. அது எப்பிடி கூச்சமே படாம ப்ளேட்ட மாத்தி மாத்தி போட்டு புருடா உட்டுகிட்டே இருக்க முடியுது. சரி கொஞ்சம் பிட்டு ஓட்டுவோம்.

    http://tvpravi.blogspot.com/2007/09/blog-post_20.html

    இந்த லிங்க் எங்கியோ பாத்த மாதிரி இருக்கா? இம்சை ரவி - அதாம்பா நீ.. உன்னோட இன்னொரு பதிவுதான். இந்த பதிவில் செந்தழல் ரவியின் வாக்கு மூலம் : போலி டோண்டுவின் நம்பிக்கையை பெறலாம், அவன் எண்ணங்களை அறியலாம், அதன் மூலம் வலையுலகின் நீண்ட கால பிரச்சினைக்கு ஒரு முடிவை எட்டிவிடலாம் என்று அவனுடன் மடல் தொடர்பில் இருந்தது உண்மை...

    அதே பதிவில் முகமூடியின் பின்னூட்டம் :- நீங்க போலியின் அல்லக்கை என்று நான் நம்பவில்லை. ஆனால் அவன் நம்பிக்கைக்கு உட்படுவதற்காக சென்ற தூரம் ரொம்பவும் அதிகம் என்றும் அது என்னை பொருத்த வரை அருவருப்பாக இருக்கிறது என்பதையுமே நான் சொல்லி வந்திருக்கிறேன். (ஆனால் இன்று எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கும் லக்கிலுக் போலியின் அல்லக்கை என்பது தனிப்பட என் நம்பிக்கை)

    மேற்கண்ட பதிவு இந்த நிமிடம் வரை இருக்கிறது. எதிர்காலத்தில் "தொழில்நுட்ப காரணங்களுக்காக" மாயமாவதும் சாத்தியமே.

    ReplyDelete
  24. மேற்கண்ட வாக்கு மூலம் கொடுக்கப்பட்ட தேதி - September 20, 2007

    இன்னமும் இதையேதான் பேசிக்கொண்டு இருக்கிறோம். நல்லா முன்னேறுது தமிழ் வலை ப் பூ...

    ReplyDelete
  25. Perisaeye,

    puchaa padam ethum paakkaliyaa...
    somma arachadhaiye arachinukkeera...

    ReplyDelete
  26. ஒண்ணுமே புரியல உலகத்துலே .. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது ??

    தல லேஸ் டென்ஷன் மோர் வொர்க் .. கோவம் அதிகமான உங்க உடம்புக்கு தான் பிரச்சனை . உங்கள் கோவம் புரிகிறது இந்த பதிவையும் படிச்சிட்டு அவங்க திருந்துன சரி.

    ReplyDelete
  27. ஏழேமுக்கால் லட்சம் வாசகர்களை 15 லட்சமாக்காம ஓய மாட்டீங்க போல..

    ReplyDelete
  28. நீங்களும் ரவியும் போலீசில் புகார் கொடுக்கச் சென்றபோது எனக்கு தகவல் சரியாகக் கிடைக்காததால் நான் சேர்ந்து கொள்ள முடியவில்லை. பிறகு தனியாகச் சென்று புகார் கொடுத்தேன்.

    என்னை சேர்க்கக் கூடாது என வரவனையான் வகையறாக்கள் கூறியதாகவும் கேள்விப்பட்டேன்.

    லக்கிலுக் கடைசி தினத்தன்று செந்தழலுக்கு பிரிண்ட் அவுட் எல்லாம் எடுத்துக் கொடுத்ததாலேயே நல்லவர் ஆகிவிடுவாரா? அவர் போலி டோண்டு மூர்த்தியின் அல்லக்கையாக இருந்து செயல்பட்டது இல்லையென ஆகிவிடுமா?

    செந்தழல் செய்தது முட்டாள்தானம். போயும் போயும் லக்கிலுக்கிடமா அத்தனை பேப்பர்களையும் பிரிண்ட் அவுட் எடுக்கச் சொல்வது? போலிக்கு உடனேயே விஷயம் போயிருக்குமே? அந்த அளவுக்கு தகவல் லீக்கேஜை அலவ் செய்யலாமா?

    2006-ஆம் ஆண்டு மினி பார்வதி ஹாலில் பதிவர் மீட்டிங்கில் நான் பேசியதை செல்போன் மூலம் மூர்த்திக்கு லைவ் ரிலே செய்த பதிவர் பற்றி குழலி கூறியதுமே அது லக்கிலுக்காகத்தான் இருக்க வேண்டும் என எனது மனதுக்கு உறுதியாகப் பட்டது. அப்போது எனக்கு இந்த விஷயமே தெரியாது.

    இருப்பினும் இவ்வளவு நாட்கள் கழித்து அதை ப்ரூவ் செய்ய என்னிடம் ஆதாரம் இல்லையென்பதால்தான் அமைதி காத்தேன். இப்போது கூறுகிறேன், அவ்வாறு செய்தது லக்கிலுக்கைத் தவிர வேறு யாராகவும் இருந்திருக்க முடியாது என.

    எதற்கும் இன்னும் ஓரிரு தினங்களில் நான் இன்னொரு பதிவு போடுகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  29. i.m very happy about bloggers fight

    ReplyDelete
  30. உண்மைத்தமிழன் உணர்ச்சிவசப்படும் ஒரு அப்பாவி போலத்தெரிகிறார். பிழைப்புக்கும் சரியான வேலையிலலாமல் இருக்கிறார்போல் தெரிகிறது. தயவு செய்து அவரை பிழைக்கவிடுங்கள்.

    அய்யா உண்மை போய் பொழக்கிற வேலையப்பாருங்க. இந்தச்சணடையினால் நீங்க ஒருவேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் போறது இன்று உங்களை எதிர்ப்பவர்கள் கூட விரும்பமாட்டார்கள்.

    ReplyDelete
  31. உண்மை தமிழன் , மிக வருத்தமாக இருக்கிறது ,

    நல்லவரான உங்களுக்கு முருகண் அருளால் எந்த தீங்கும் ஏற்படாது ,

    இன்று சிலர் தப்பித்துவிட்டதாக தோன்றினாலும் முருகன் விடமாட்டான்

    ReplyDelete
  32. அண்ணே.

    என்னுடைய நம்பகத்தன்மையை உங்களிடம் 'இனிமேல்தான்' நிரூபிக்கவேண்டும் என்றில்லை, இருந்தாலும், முகமூடி சார் தேடி கொண்டுவந்துள்ள சுட்டிகளுக்காகவாவது சில விஷயங்கள் சொல்லவேண்டும்.

    முகமூடியின் ஒரு பதிவில் இன்னும் அந்த போலியாக உருவாக்கப்பட்ட லிங்குகள் உண்டு. அதை பார்த்துவிட்டுத்தான் அதனை எழுதினேன்.

    டூண்டு ஜிமெயில் ஐடிக்க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டாலே அதன் பிறகு நீங்கள் போலி டோண்டு விடுதலை பேரியக்கத்தின் ஒரு உறுப்பினர். உங்கள் மின்னஞ்சலும் அந்த மாபெரும் ஆபாச மெயிலிங் லிஸ்டில் இணைந்துகொள்ளும்.

    விவாத பாணியிலான ஒரு மெயில் அனுப்பியபின்னும், விடாது கருப்புக்கு ஒரே ஒரு பதிவு அனுப்பியபின்னும் என்னையும் அந்த மின்னஞ்சல் லிஸ்டில் இணைத்தான்.

    அதன்பிறகு போலி டோண்டு தளம் வஜ்ரா போன்றவர்களை ஆபாசமாக திட்டி எழுத ஆரம்பித்தபிறகு, அதாவது ரெண்டு நாளைக்கு ஒருத்தர் என்ற ரீதியில் போன பிறகு, அதனை ப்ரூட் போர்ஸ் முறையில் உடைக்க முயற்சி செய்தேன். அந்த நேரத்தில் இரண்டு பேருக்கு அந்த தகவல் தெரியும். ஒருவர் டோண்டு. இன்னொருவர் ஒரு திராவிட தமிழர்கள் குழும உறுப்பினர், லக்கிலுக் அல்ல.

    அடுத்த நாளே இந்த தகவல் போலி டோண்டுவுக்கு போய்விட்டது. நமது குழுவில் இருந்துகொண்டு நமது குழுவையே உளவு பார்க்கிறாயா என்ற ரீதியில் ஆபாச அர்ச்சனை.

    //தொடர்கிறேன்//

    ReplyDelete
  33. டோண்டு மீட்டிங்கில் கலந்துகொண்டால் ஒருவர் கட்டாயம் அதில் கலந்துகொள்வார். அவரிடம் வலைப்பதிவும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. அவர் பெயர் பூ வில் ஆரம்பித்து குழந்தையில் முடியும். லக்கிலுக் எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பான். பாருங்கள் ரவி, இந்த பூபாலன் எப்படியும் போலிக்கு தகவல் அனுப்பிவிடுவான். டோண்டு சார் சொல்லும் 2006 மீட்டிங்கில் இந்த மனிதரும் கண்டிப்பாக இருந்திருப்பார். நீங்கள் விசாரித்துபாருங்கள்.

    ReplyDelete
  34. நாம் சென்னை சைபர்கிரைமில் சென்று நாய்படாத பாடு பட்டுக்கொண்டிருக்கையில் அருண்குமார் வந்தாரா ? இல்லையே ?

    அதே பெங்களூரில் இருந்து நான் காரில் போகிறேன், நீங்களும் வாருங்கள் என்று எவ்வளவோ அழைத்தேன்.

    ஆனால் வரவில்லை. காவல்துறையிடம் மறுபடி அழைத்துப்பாருங்களேன். வருகிறாரா என்று ?

    ஏன் என்று யோசித்தீர்களா ?

    ReplyDelete
  35. //ஆனால் அவன் நம்பிக்கைக்கு உட்படுவதற்காக சென்ற தூரம் ரொம்பவும் அதிகம் என்றும் அது என்னை பொருத்த வரை அருவருப்பாக இருக்கிறது என்பதையுமே நான் சொல்லி வந்திருக்கிறேன்///

    இங்கே தான் முகமூடி, எக்ஸ்ட்ராலார்ஜ் ஆக நம்புகிறார். கோவி கண்ணன் நிறுவ முயல்வது போல இவரும் முயல்கிறார். இந்த விடயத்தில் இருவரும் கைகோர்த்துக்கொள்கிறார்கள்.

    கைகோர்த்துக்கொண்டு விமானத்தில் ஊர் சுற்றும் போலி டோண்டுவும் கோவி கண்ணனும் இப்போதும் தனக்கான ஒரு ஜால்ரா கூட்டத்தை சேர்த்துக்கொண்டு ஆமாம் சாமி போட்டுக்கொள்கிறார்களில்லையா.. அது மாதிரி.

    போலி டோண்டு வலைப்பதிவான டூண்டு என்ற வலைப்பதிவை திறந்து நான் டோண்டு சாரை பற்றி ஆபாச பதிவை எழுதினேன் என்று சொல்லும் கருத்தாக்கம்.

    அப்படி பாஸ்வேர்ட் கிடைத்து இருந்தால் ஒரே நாளில் அந்த பதிவையே அழித்திருப்பேனே ? முடியவில்லையே ?

    முகமூடிக்கு ஒரே ஒரு உபரி தகவல். சென்னை சைபர் க்ரைம் பிரிவுக்கு கூகிள் நிறுவனம், போலி டோண்டு பதிவின் உள்ளே நுழைந்தவர்கள் பட்டியலை பி டி எப் கோப்பாக கொடுத்துள்ளது. அதில் லக்கிலுக் இல்லை. ஆனால் மகேந்திரன் பெ , கோவி கண்ணன் மீது சந்தேகம் வரும்படியான ஐபி உள்ளது. என்னுடையது இல்லவே இல்லை. அது உண்மையாருக்கு தெரியும், நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

    முகமூடி, இரண்டு ஆண்டுக்கும் மேலாக அடியேனை ஆபாசமாக தாக்கி எழுதப்படும் போலி வலைப்பதிவு ஒன்றும், தினமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக என்னுடைய குடும்பத்தவர், மனைவி, என்னுடைய பிறப்பு பற்றி ஆபாச பின்னூட்டங்களை எழுதிக்கொண்டும் இருந்த மூர்த்தியுடன் என்னை இணைத்து ஒரு இடுகை இருக்கிறதே உங்கள் பதிவில் ? நியாபகம் இல்லையா ? தேடவும்.

    ReplyDelete
  36. அதெல்லாவற்றையும் விட ஒரு அயோக்கியத்தனமான விடயம் ஒன்று.

    என்னிடம் தொலைபேசியில் அழைத்து பேசிய மூத்த பதிவர், என்னுடைய குடும்பம் பற்றி லைட்டாக விசாரித்தார்.

    நான் கலப்பு மணம் செய்துகொண்டது பற்றி கேட்டவர், மனைவியின் மதம், சாதி உட்பிரிவுகள் கேட்டார். தெரியாத்தனமாகவோ அல்லது வெளிப்படையாகவோ ஒரு தகவலுக்காக கேட்கிறார் போல என்று அதை சொல்லி தொலைத்தேன்.

    அடுத்த நாளே, என்னுடைய மனைவியின் சாதி பெயரோடு ஆபாச பின்னூட்டம் ஒன்று. அதன் பிறகு பல இடங்களில்.

    யார் அந்த மூத்த பதிவர் என்று உங்களுக்கு தெரியும்தானே உண்மை அண்ணா ?

    ReplyDelete
  37. முகமூடி:

    உங்கள் வலைப்பதிவில் காண கிடைக்கும் இமேஜ்ஷார்க் ஸ்க்ரீன்ஷாட்ஸ் சொல்வது என்ன ? போலிக்கு நான் அனுப்பிய பல மின்னனஞ்சல்கள்.

    அதில் பார்த்தீர்களானால், நான் வலைப்பதிவு ஆரம்பித்தபொழுது, என்னுடைய அலுவலக மின்னஞ்சலை வெளிப்படையாக எழுதியிருந்தேன், காரணம் எனக்கு ஜிமெயில் அக்சஸ் இல்லை.

    ஆனால் போலி டோண்டு, பொதுவாக போலி ஸ்க்ரீன் ஷாட் உருவாக்க அந்த மின்னஞ்சலையே பயன்படுத்தினான்.

    அதில் ஒரு காமெடி பாருங்க, என்னுடைய சிஸ்டர் கம்பெனி தாய் நிறுவனத்தோடு இணைக்கப்பட்டு என்னுடைய மின்னஞ்சலும் மாறிவிட்டிருந்தது. அது தெரியாமல் பழைய மின்னஞ்சலில் பல ஸ்க்ரீன்ஷாட்களை உருவாக்கி தன்னுடைய முட்டாள்தனத்தை காட்டினான்.

    அதில் கூட உங்களுக்கு தவறான புரிதல் ஏற்பட்டிருக்கலாம்.

    ReplyDelete
  38. போலியை ஒழித்ததில் யாருக்கும் பங்கில்லை. இன்றைக்கு வலைப்பதிவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு உங்களது கடும் உழைப்புதான் காரணம். அதற்கு தலைவணங்குகிறேன். ஆனால் உங்களுக்கு கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் லக்கியை போட்டு தாளிப்பது தவறு.

    அருண்குமார் சாட்சியம் ஏற்றுக்கொள்ளமுடியாது, அது உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். அருணும் லக்கியும் பங்காளிகள் :) அதனால் உறவினர்கள் சாட்சியம் செல்லாது செல்லாது.

    மற்றபடி உங்களை கோவை மீட்டிங்கிக் எச்சரித்தது, போலி அனுப்பும் மின்னஞ்சல் லிஸ்டில் இருந்த அனைவரையும் சொல்லியே. அதன் பிறகு அது ஒரு பார்வேர்ட், அதில் இருக்கும் அனைவரும் அவனுடைய ஆட்கள் அல்ல என்று கண்டுகொண்டேன். மகேந்திரன் முத்துக்குமரன் கோவி கண்ணன் தவிர.

    ReplyDelete
  39. இப்போதுகூட நான் கொரியாவில் இருப்பதாக எழுதியிருக்கிறீங்க. ஆனால் அது உண்மையில்லை. நான் இருப்பது அய்ரோப்பாவில். ஆக, உங்களுக்கு கிடைக்கும் தகவல்கள், தரவுகள், நீங்கள் நினைத்திருக்கும் அனைத்தும் உண்மை என்று எப்படி சொல்லமுடியும் அண்ணே ?

    ReplyDelete
  40. சரி, பாதிக்கப்பட்ட அருணை காவல் துறையிடம் புகார் தரச்சொல்லுங்கள். அவர்கள் விசாரித்து உண்மையை சொல்லட்டும்.

    ReplyDelete
  41. அண்ணே தயவு செய்து அனானி ஆப்ஷன் எடுத்துவிட்டு வலைப்பதிவர்கள் மட்டும் பின்னூட்டம் போடுமறு வைங்க

    ReplyDelete
  42. இன்றைக்கு சிங்கப்பூர் அசிங்கம் அதே லக்கியை வைத்து படம் போட்டு தனக்கு தேவையான கதையை எழுதிக்கொள்கிறார். இவர் பயன்படுத்தப்படுகிறார்.

    அவர் சென்னை வந்தபோது இந்த லூசு மீட்டிங் ஆர்கனைஸ் செய்தபோது போன் செய்து கன்னாபின்னாவென திட்டினேன். இவரை எளிதாக ஏமாற்றிவிடுகிறார்கள்.என்ன செய்வது சொல்லுங்கள் ?

    ReplyDelete
  43. நீ சொன்ன அனானி கமெண்ட் அடையாளமெல்லாம் யுவகிருஷ்ணா கமெண்ட்டோட ஒத்துப் போன பின்னாடிதான், நான் சுத்தமா அவன்கிட்டேயிருந்து ஒதுங்கினேன்.//

    அண்ணே. யுவகிருஷ்ணாமாதிரி என்ன, செந்தழல் ரவி மாதிரி, முகமூடி மாதிரி, ஏன் டோண்டு மாதிரி கூட அனானி கமெண்ட் வரும். அவன் கோவைத்தமிழ், ஈழத்தமிழ், சென்னைத்தமிழ் என்று பல வகைகளில் எழுதும் கில்லாடி. இப்போது கூட மேலே வரும் அனானி கமெண்ட் அவனுடையது தான். யுவகிருஷ்னாவுடையது அல்ல. இந்த விடயத்தை ஊதி பெருசாக்கி உங்கள் இருவரையும், அட்லீஸ்ட் உங்களை மட்டுமாவது மன நிம்மதி இல்லாமல் செய்ய மறுபடி கிளம்பிவிட்டான் பாருங்கள்.

    ReplyDelete
  44. செந்தழல்.. இதற்குள் புக விருப்பம் இல்லை. முகமூதி என்று (தேவையில்லாமல்) அன்பாக கூப்பிட்டதால் என்ன என்று எட்டி பார்த்தேன். மற்றபடி முயலவும் இல்லை ஆமையும் இல்லை. அது நாம் 2007ல் பேசியதன் காப்பி பேஸ்ட்தான். ஆகவே நிறுவ முயற்சிக்கிறார்கள் என்று கன்னா பின்னாவென உணர்ச்சிவசப்படவேண்டாம் (இதுக்கு மேலதான் புதுசா நிறுவனுமாக்கும்) அந்த சுட்டி கூட கூகிளில் ஒரு தேடு சொல் போட்டு சிம்பிளாகத்தான் அடைந்தேன். ரொம்பவும் மெனக்கெடவில்லை. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. உங்கள் நண்பர் என்பதால் அல்லக்கையை புனித*சுவாக நீங்கள் நிறுவ முயலுவதுதான் ப்ரச்னை என்பது புரியாவிட்டாலும் பரவாயில்லை.

    மற்றபடி என் குடும்பம் உட்பட எல்லார் குடும்பத்தையும் ஆபாசமாக எழுதப்பட்ட பல சுட்டிகள் தரவுகள் இணையம் முழுக்க இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. என் பதிவில் உங்களை பற்றி என்ன எங்கு இருக்கிறது என்று சுட்டினால், அது அப்பதிவுக்கு சம்பந்தப்படாத அனாவசிய சுட்டியாக இருக்கும்பட்சத்தில் ஆவண செய்யப்படும். புரிந்துணர்வோடு தொடரும் கொலைவெறிக்கு நன்றி.

    ReplyDelete
  45. அருண்குமாரோட ஏதோ ஒரு சைட் பாஸ்வேர்டை லக்கி மூர்த்திக்கு பார்வர்டு பண்ணியிருக்கான்.. மூர்த்தி அதை யூஸ் பண்ணி அருண்குமாரோட அம்மா, அப்பா போட்டோவையெல்லாம் போலி டோண்டு பதிவுல எடுத்துப் போட்டு கதையெழுதிட்டான்.. பாவம்ணே அருண்.. அப்படீன்னு வெண்ணை நீதானடா சொன்ன..//////////////////


    அண்ணே. பாஸ்வேர்ட் இருந்தால் தான் அந்த தளத்தில் இருந்து தகவலை எடுக்க்முடியும் என்றில்லை. வெளிப்படையான வலைப்பதிவு. அதில் இருந்து யார் வேண்டுமானாலும் தகவலை எடுக்கலாம்.

    ReplyDelete
  46. முகமூடி தான் போலி உருவாக காரணம் என்று ஒரு நொள்ளை அனானி உளறிவிட்டு போயிருக்கிறது.

    போலி ஒரு மனநோயாளி. அவன் உருவாக யாரும் காரணமில்லை. அவன் மனநோய்தான் காரணம்.

    ReplyDelete
  47. கண்ட கண்ட பேரெல்லாம் அடிபடுதே? என்ன கொடுமைங்க இது?

    என்னைப் பொறுத்தவரை, போலி டூண்டு பதிவில், 0.01% பங்கு வகித்தவர்கள் கூட, மகா மகா மட்டமானவங்க.

    இந்த விஷயத்தில், உ.தமிழன் அநியாயத்துக்கு அடிபட்டிருக்காரு. இந்தப் பதிவிலே கூட, சில அனானி ராஸ்க்கோல்களின் கமெண்டுகள் கொமட்டலை தருகிறது. வெளங்கிடும்.

    நான் பதிவுலகில் வந்த புதிதில் அமளி துமளியாக இருந்தது கெட்ட ஆட்டங்கள். சைபர் கிரைமெல்லாம் போய் தான் பித்தம் தெளிஞ்சது.

    அல்லக்கைகளோ, நல்லக் கைகளோ, மறப்போம் மன்னிப்போம்னு, அடுத்த வேலையப் பாக்கப் போங்க உ.த.

    இணையத்தில், யாரையும் நம்பாமல் இருத்தலே நலம்.

    என் தார்மீக சப்போர்ட் உங்களுக்கு, பைசாக்கு ப்ரயோஜனம் இல்லன்னாலும் :)

    ReplyDelete
  48. தனிப்பட்ட அளவில் : இது குறித்து இப்படி மீண்டும் மீண்டும் விவாதிப்பதில் - சைக்கோ வெளியுலகில் சுதந்திரமாக சுற்றும் பட்சத்தில் அவனுக்கு கொண்டாட்டம் என்பதை தவிர - எந்த பிரயோஜனமும் இல்லை. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.

    கீப் கொயட் - நான் என்ன சொன்னேன். குட் நைட்.

    ReplyDelete
  49. \\\\என் பதிவில் உங்களை பற்றி என்ன எங்கு இருக்கிறது என்று சுட்டினால், அது அப்பதிவுக்கு சம்பந்தப்படாத அனாவசிய சுட்டியாக இருக்கும்பட்சத்தில் ஆவண செய்யப்படும். புரிந்துணர்வோடு தொடரும் கொலைவெறிக்கு நன்றி....////

    குட் நைட்.

    ReplyDelete
  50. இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
    நாம் செலவழிக்கப்போவது எறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

    http://www.srilankacampaign.org/form.htm

    அல்லது

    http://www.srilankacampaign.org/takeaction.htm

    என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!

    ReplyDelete
  51. // செந்தழல் ரவி said...

    நாம் சென்னை சைபர்கிரைமில் சென்று நாய்படாத பாடு பட்டுக்கொண்டிருக்கையில் அருண்குமார் வந்தாரா ? இல்லையே ?

    அதே பெங்களூரில் இருந்து நான் காரில் போகிறேன், நீங்களும் வாருங்கள் என்று எவ்வளவோ அழைத்தேன்.

    ஆனால் வரவில்லை. காவல்துறையிடம் மறுபடி அழைத்துப்பாருங்களேன். வருகிறாரா என்று ?

    ஏன் என்று யோசித்தீர்களா ?//

    வணக்கம் ரவி,
    இதை நான் உங்களிடம் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

    தமிழ் வலைபூ பயன்பாட்டில் ஏற்கனவே எனக்கு நடந்த கசப்பான அனுபவத்தால் நான் மட்டும் அல்ல என் குடும்பத்தாரும் பாதிக்கபட்டு இருந்தனர்.

    மேலும் சில நேரங்களில் அவர்கள் அனுமதி இல்லாமல் நான் செயல்பட முடியாது. எனது குடும்பத்தார் அன்றைய நிலையில் என்னை அனுமதிக்கவில்லை என்பதே காரணம்.

    எனது சொந்த காரணத்தால் தான் என்னால் உங்களோடு வர முடியவில்லை. அதற்க்காக வருந்துகிறேன்.

    ReplyDelete
  52. @
    அருண்குமார் சாட்சியம் ஏற்றுக்கொள்ளமுடியாது, அது உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். அருணும் லக்கியும் பங்காளிகள் :) அதனால் உறவினர்கள் சாட்சியம் செல்லாது செல்லாது.@

    ரவி உங்களுக்கே நடந்தது அனைத்தும் தெரியும். சரி விடுங்க. :)

    உங்களுக்கு லக்கி நீண்ட நாள் நண்பர், அவரை தங்களால் விட்டு கொடுக்க முடியாது.

    ஆதாரம் தொடர்பாக

    எவ்வாறு ஆதாரத்தை நீருபித்தால் நம்புவீற்கள்? பெங்களூரில் நீங்கள் தற்போது இல்லை , பின் எப்படி சந்திக்கலாம். ??

    ReplyDelete
  53. ரவி,
    உங்களுக்கு நடந்தது அனைத்தும் தெரியும். நீங்களே முன்பு என்னிடம் சொல்லி இருக்கிறீர்கள்.

    உங்களுக்கு எது சரி என தெரிகிறதோ அதை செய்ய உங்களுக்கு முழு உரிமை உள்ளது.

    அதே நேரத்தில் நியாயம் உண்மை எது உங்களுக்கு தெரியும். வேறு ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை.


    எனக்கு இந்த பிரச்சனையால் ( மூர்த்தி) சில வருடங்கள் முன்பு தினமும் தலைவலி தான்.

    என் பதிவில் சொல்லி இருந்தது போல

    எனக்கு மீண்டும் இந்த பிரச்சனையை பேச விருப்பம் இல்லை. தேவை இல்லாமல் பேசி மறக்க வேண்டியவைகளை மீண்டும் பேசி என் மன நிம்மதியை கெடுத்து கொள்ள விரும்பவில்லை.


    சில விளக்கம்
    நான் வைத்து இருந்தது geocities account, அதன் உள்ளே அழைப்பின் பேரில் தான் உள்ளே நுழைய முடியும். அதன் படி தான் உள்ளே வந்தார்கள்.

    தற்போது எழுதவோ அல்லது பதில் சொல்லவோ எனக்கு அதிக நேரம் கிடைப்பதில்லை.. அதனால் மீண்டும் ஏதேனும் சந்தேகம் என்றால் , பதில் அளிக்க தாமதமாகும் என்பதை சொல்லி கொள்கிறேன்.

    நன்றி ரவி

    ReplyDelete
  54. //ஒழுங்கு மரியாதையா டோண்டு ஒழிக.. பெரியார் வாழ்க.. திராவிடம் வளர்கன்னு அன்னிக்கே உங்களை மாதிரி சொல்லிட்டுப் போயிருந்தா எனக்கு இன்னிக்கு இந்த நிலைமை வந்திருக்காது
    //
    அண்ணே இப்படியெல்லாம் சொன்ன என்னையும் சேர்த்து தானே அண்ணே ஆப்பு வச்சாங்க

    ReplyDelete
  55. எனக்கொரு சந்தேகம்ணா. லக்கியை அவதூறு பண்ணுறதுலே குழலி, உண்மைதமிழன், டோண்டு, அருண்குமார் நாலு பேரை தவிர வேற யாருக்கும் ஆர்வம் இல்லையே. ஏன்?

    பிரபல பதிவர்கள் நரசிம், பரிசல், ப்ரூனோ, ஜ்யோவ்ராம், அதிஷா, பைத்தியகாரன், பாலபாரதின்னு நிறைய பேர் உங்களை கண்டுக்கிட்ட மாதிரியே தெரியலை.

    பதிவர்களுக்குள் போட்டி இருக்கலாம். பொறாமை பொச்சரிப்பு இருக்க கூடாது. உண்மைதமிழன் நீங்களும் உருப்படியாக எழுதினால் லக்கி மாதிரி புகழ் பெறலாம்.

    ReplyDelete
  56. //பிரபல பதிவர்கள் நரசிம், பரிசல், ப்ரூனோ, ஜ்யோவ்ராம், அதிஷா, பைத்தியகாரன், பாலபாரதின்னு நிறைய பேர் உங்களை கண்டுக்கிட்ட மாதிரியே தெரியலை.//


    நீங்கள் குமுதம்,ஆனந்த விகடனுக்கு நகைச்சுவை துணுக்குகள் எழுதினால் நல்ல துட்டு கிடைக்கும்!

    ReplyDelete
  57. //அண்ணே இப்படியெல்லாம் சொன்ன என்னையும் சேர்த்து தானே அண்ணே ஆப்பு வச்சாங்க//
    அடப்பாவி மனுஷா அதையும் செய்தீரா? அப்பவுமா உங்களையும் போட்டுத் தள்ளினாங்க? :))))))))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  58. //Anonymous said...
    எனக்கொரு சந்தேகம்ணா. லக்கியை அவதூறு பண்ணுறதுலே குழலி, உண்மைதமிழன், டோண்டு, அருண்குமார் நாலு பேரை தவிர வேற யாருக்கும் ஆர்வம் இல்லையே. ஏன்?

    பிரபல பதிவர்கள் நரசிம், பரிசல், ப்ரூனோ, ஜ்யோவ்ராம், அதிஷா, பைத்தியகாரன், பாலபாரதின்னு நிறைய பேர் உங்களை கண்டுக்கிட்ட மாதிரியே தெரியலை.

    பதிவர்களுக்குள் போட்டி இருக்கலாம். பொறாமை பொச்சரிப்பு இருக்க கூடாது. உண்மைதமிழன் நீங்களும் உருப்படியாக எழுதினால் லக்கி மாதிரி புகழ் பெறலாம்.
    //
    டேய் பாடு இங்க வந்து உளறுவது, அப்புறம் அவனவன் கிட்ட போய் அய்யோ அண்ணே நொங்கெடுக்கறானுங்கன்னு அழுவறது... வெட்கமா இல்லை... தூ... இந்த பொழப்பு பொழைக்கறதுக்கு....

    ReplyDelete
  59. வால்பையன் அதில் உங்க பெயர் இல்லையே என்பது தானே உங்கள் கவலை ? எவ்வளது சீரியஸான பதிவாக இருந்தாலும் அதில் விளையாட்டு. ஹும்.

    அண்ணே பின்னூட்ட பொட்டியை மூடுவீங்களா ? அட்லீஸ்ட் அனானி ஆப்ஷனை மூடினாலாவது யார் பின்னூட்டம் போடுகிறார்கள் என்ற தகவலை கூகிளிடமிருந்து வாங்கிவிடலாம். ப்ளீஸ்.

    ReplyDelete
  60. ரவியண்ணே நானெல்லாம் குழந்தையண்ணே!

    இந்த பிராபலங்கள் ஸாரி பிரபலங்கள் பத்தி சொல்லும் போது உண்மையிலேயே லைட்டா சிரிப்பு வந்துருச்சுண்ணே!

    ReplyDelete
  61. ஒண்ணியும் வெளங்கலையே நைனா!

    ReplyDelete
  62. //மற்றபடி உங்களை கோவை மீட்டிங்கிக் எச்சரித்தது, போலி அனுப்பும் மின்னஞ்சல் லிஸ்டில் இருந்த அனைவரையும் சொல்லியே. அதன் பிறகு அது ஒரு பார்வேர்ட், அதில் இருக்கும் அனைவரும் அவனுடைய ஆட்கள் அல்ல என்று கண்டுகொண்டேன். மகேந்திரன் முத்துக்குமரன் கோவி கண்ணன் தவிர.//

    செந்தழல் ரவி எனது பெயரை குறிப்பிட்டு இருப்பதாலும், போலியின் ஆள் என்ற தொனி இருப்பதால் மட்டுமே இந்த பின்னூட்டம். விடாது கருப்பு என்ற மூர்த்தி தன்னை பெரியார் தொண்டராக காட்டிக்கொண்டிருந்த போதிலும் அவரின் அநாகரீகமான மொழியை ஏற்றுக் கொண்டதோ அல்லது எந்த ஒரு இடத்திலும் உயர்த்திப் பிடித்ததும் கிடையாது. திராவிடர் தமிழர் குழுமத்தில் நடைபெற்ற விவாதத்திலும் இதைத் தெளிவாகவே பதிவு செய்திருக்கிறேன். தேவைப்படுபவர்கள் அதை வாசித்து தெரிந்து கொள்ளலாம். 2006ல் ஒருமுறை செந்தழல் ரவி ஐரோப்பியநாடுகளுக்கு சென்ற போது ஒரு பதிவிட்டிருந்தார். நான் ஓய்வாக இருக்கிறேன் தொலைபேசி எண்கள் கொடுங்கள் பேசுகிறேன் என்று. வலைப்பதிவர்கள் பலரோடும் பேசினார். அப்போது நானும் என் எண் கொடுத்தேன், பேசினோம், அந்தப் பேச்சிலும் குறிப்பிட்டது விடாது கருப்பு நம்பத் தகுந்தவர் அல்ல, பெரியார் பெயரை அவர் தவறாகவே பயன்படுத்துகிறார் என்பது. இன்னொரு முறை பேசியது தம்பிக்காக வேலை வாய்ப்பு தொடர்பாக சில ஆலோசனைகள் பெற. போலிக்கு எதிராக போராடியவர்கள் ஒருபுறம், அவனை நிராகரித்துவிட்டு போனவர்கள் ஒருபுறம், ஆதரித்தவர்கள் ஒருபுறம் என்று இருந்ததில் இரண்டாவதை நான் தேர்ந்தெடுத்தேன். அதனாலேயே எனக்கு வந்த ஆபாச அர்ச்சனைகளை பொதுவெளியில் வெளிப்படுத்திக்கொண்டது கிடையாது. விடாது கருப்பில் என்னை அர்ச்சித்து சூத்துகுமரன் என்றும் ஓசி பிரியாணி வாங்கி தின்கிறேன் என்றெல்லாம் சொன்னபோது கூட அவனுடைய தூண்டுதலுக்கு பலியாகி எதிர்வினை புரிவதை விட நிராகரித்தோமேயானால் காலப்போக்கில் தனிமைப்பட்டு விடுவான் என்றும் அவன் எழுத்துக்களே அவனை அம்பலப்படுத்திவிடும் என்பதையும் உறுதியாக நம்பினேன். மற்றபடி என் நேர்மையை யாரிடம் விளக்கி பட்டயம் பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை.

    குழுமத்தில் விவாதித்திருப்பதை குறிப்பிட்டிருப்பதால் அதை இங்கே தருகிறேன். அதற்கான கூடுதல் காரணம் போலி விசயத்தை பயன்படுத்தி திராவிடத் தமிழர்கள் எல்லோரையும் போலியின் அல்லக்கை என்று நிறுவ முனைவது இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தது. அன்றைய சூழலில் திராவிடத் தமிழர் குழுமத்தில் நானும் ஒரு மட்டுறுத்தினராக இருந்ததும் இது தொடர்பான நிகழ்வுகளில் எங்களில் இருந்த வெளிப்படைத் தன்மையையும் அது உணர்த்தும் என்பதாலேயே!
    டிசம்பர் 8 2006 அன்று குழுமத்தில் கருப்பு தொடர்பாக எழுதிய பதிவு

    ReplyDelete
  63. அதிகரித்துவிட்ட பணிசூழலினால் கடந்த சிலநாட்களாக இணையத்தில் செலவிடும் நேரம்
    குறைந்துவிட்டது. தமிழ்மணத்திலிருந்து விடாது கருப்பு நீக்கம், அதைத்தொடர்ந்து
    குழுமத்தில் நடைபெற்ற விவாதங்களை வாசித்திருந்தேன். இந்த நேரத்தில் சில
    தெளிவுகளை முன்வைக்கவேண்டும் என்பதாலே இந்த விளக்கம்.
    தமிழ்மணத்திலிருந்து கருப்புவின் நீக்கம் ஒரு வருத்தமளிக்கும் செய்தி.
    ஆனால் அத்தகையதொரு சூழலை அவரின் எழுத்துகள் ஏற்படுத்திவிட்டன என்பதையும்
    மறுக்கமுடியாது. இது தொடர்பாக குழுமத்தில் அவரின் கருத்துகளை அறிந்த போது சில
    விசயங்களை சொல்ல வேண்டும் என்ற கட்டாயமும் வந்திருக்கிறது.
    திராவிட, மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியலை முன்னெடுப்பவர்கள் மிகவும்
    கவனமாக இயங்க வேண்டியதருணம் இது. இந்த அரசியலின் தேவைகளை முக்கியத்துவத்தை
    திரிப்பதில் தொடர்ந்து ஆதிக்க சக்திகள் வெற்றி பெற்று வருகின்றன. அதனால் மிக
    அதிகப்படியான கவனத்தோடு இயங்க வேண்டி இருக்கிறது. நாம் சொல்லும் செய்திகளை விட
    சொல்லபட்ட விதம் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. செய்தியின் கணத்தைவிட
    இந்த வெளிப்பாட்டிற்கு மிகுந்த முக்கியதுவம் அளிக்கப்படுகிறது. ஆகையால் வேகமாக
    வார்த்தைகளை வாரியிறைப்பது என்பது விழலுக்கு இழைத்த நீராகுமே தவிர நமக்கு
    எந்தவிதமான முன்னேற்றத்தையும் தாராது. நாம் போராட வேண்டியது, பயணிக்க வேண்டியது
    மிக நெடிய தூரம். அதில் முன்னேறி செல்வதை தடுக்க நமது சக்தியை வீணடிக்க
    திசைதிருப்ப, சோர்வடையச்செய்ய எல்லாவகையான தந்தரங்களையும் நம் எதிராளிகள்
    பிரயோகிக்கிறார்கள் என்பதையும் நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
    விடாது கருப்பு விடயத்திற்கு வருகிறேன். எவ்வளவு சீரிய கருத்தாயினும் அது
    முறையாக சொல்லப்படல் வேண்டும். தங்களது சமீபத்திய சில பதிவுகளின் தரம்
    எப்படியிருந்தது என்பதை அமைதியாக வாசித்தீர்களாயேயானால் உணர்வீர்கள். நீங்கள்
    பெரியாரின் வழி நடப்பவர் என்று சொல்லுவதால் பெரியாரைக்கொண்டே உங்களிடம்
    பேசுகிறேன்.
    பெரியாரின் முக்கியமான பொன்மொழி.* ''மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு'' *
    பெரியார் நம் சமூக மக்கள் மான உணர்வோடும், அறிவு உணர்வோடும் வாழ
    வேண்டுமென்பதற்காகவே தன்வாழ்வு முழுதும் உழைத்தவர். சுயமரியாதை, சமதர்மம்
    என்பனவற்றை உயிர்மூச்சாக கொண்டிருந்தவர். அறிவுக்குப் புறம்பபன எந்த ஒரு
    செயலையும் அவர் அனுமதித்ததில்லை.
    மனிதர்க்கு மரியாதை தரப்பட வேண்டும் என்பதுதான் சுயமரியாதையின் அடிப்படைத்
    தத்துவம். ஒரு பதிவரின் தாயை வேசி என்று குறீப்பிட்டு உங்கள் பதிவில்
    எழுதியிருந்தீர்களே, இது எந்த வகை அறிவுணர்ச்சியில் வருகிறது???
    அந்த தாயின் பெண்மையை விமர்சிக்க நீங்கள் யார்?? அந்த பெண்ணின் சுயமரியாதைக்கு
    நீங்கள் தரும் மரியாதை என்ன? இந்த மாதிரி பேசமாறு எந்த இடத்தில் பெரியார்
    கூறீயிருக்கிறார். சொல்ல முடியுமா?. சகமனிதனை மதிக்காதவன் எங்கனம்
    சுயமரியாதைக்காரனாக இருக்க முடியும்???.
    அடுத்ததாக,
    தீண்டாமை என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன? மனிதனை மனிதன் விலக்குவதுதான்
    தீண்டாமை. இது எல்லோர்க்கும் பொருந்தும். பார்ப்பனரை விலக்குவதும்
    தீண்டாமைதான். பார்ப்பனர் என்பதால் அவர்கள் குறைந்த பட்ச மனிதத்தன்மையிலிருந்து
    விலகிவிடுவதில்லை. குழலி அவர்கள் மாயவரத்தான் அவர்களோடு பேசுவது நட்பு கொள்வது
    பற்றீ விமர்சித்து இருந்தீர்கள். பெரியாரை படித்திருப்பவன், வழிநடப்பவன்
    எவனும் இதை விமர்சிக்க மாட்டான். ராஜாஜிக்கும் பெரியாருக்கும் இருந்த கருத்து
    முரண்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அவர்களுக்குள் ஆழமான நட்பு இருந்தது.
    எப்படி சாத்தியாமானது. இருவருக்கும் அவரவர் கொள்கையின் பாலலிருந்த நம்பிக்கை.
    இங்கு ஒரு பார்ப்பனிரிடம் பேசுவதாலோ, பழகுவதாலோ தன் கொள்கைகளை விட்டுக்கொடுக்க
    கூடிய அளவிற்கு பலவீனமானவர்கள் கிடையாது. குறிப்பாக நானோ, முத்து தமிழினியோ,
    குழலியோ பலவீனமானவர்கள் கிடையாது. கொள்கை என்பதும் நட்பு என்பதும் வேறு வேறு
    என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
    இன்னொன்று குழலியின் திராவிடத்தன்மையை பற்றி கேள்வி எழுப்பி இருந்தீர்கள்.
    உங்களிடம்தான் எங்களின் திராவிட தன்மையை நீருபித்தாக வேண்டும் என்ற அவசியம்
    இல்லை. தேவையும் இல்லை. யார் திராவிடத்தன்மையோடு இயங்குகிறார்கள் என்பதை
    தீர்மானிக்கும் அதிகாரமையம் நீங்கள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளவும்.

    ReplyDelete
  64. பெரியார் விரும்பியது இந்த சமூகம் நாகரீகமடைந்த சமூகமாக வளரவேண்டும்,
    அறிவுணர்ச்சியோடு வளர வேண்டும். சுயமரியாதையோடு வளரவேண்டும். அடுத்தவர்
    குடும்மத்ததை விமர்சிப்பது என்பதுதான் நீங்கள் காணும் நாகரீக வளர்ச்சியோ?? மனித
    நாகரீகத்திற்கு அப்பாற்பட்டது நீங்கள் செய்தது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
    இவ்வளவும் உங்களுக்கு சொல்வதன் காரணம் நீங்கள் பெரியாரைப் பின்பற்றுபவர்
    என்பதால்தான். தான் வாழ்ந்த காலத்திலே தன்னைப்பற்றிய விமர்சனத்தை
    ஏற்றுக்கொண்டவர், அனுமதித்தவர் பெரியார் என்பதால்தான்.அவரைப் பின்பற்ற
    முயலுங்கள்.
    திராவிட தமிழர் அமைப்பில் தொடர்வதும் தொடராததும் உங்கள் விருப்பம். ஆனால்
    நாகரீகமற்ற செயல்களை குழுமம் ஒரு போதும் ஆதரிக்காது. அதுயாராக இருந்தாலும் சரி.
    கருப்புவாக இருந்தாலும் சரி முத்துகுமரனாக இருந்தாலும் சரி.
    மற்றபடிக்கு உங்கள் செய்கைகளுக்கு எல்லாம் பெரியாரை கேடயமாக பயன்படுத்தினால்
    அதை அறிந்து கொள்ளமுடியாத அளவிற்கு இங்கு பகுத்தறிவற்றுப் போய்விடவில்லை.
    சொல்லில் இல்லாமல் செயலில் நீங்கள் பெரியாரைப் பின்பற்றுபவராக வாழ முயற்சி
    செய்யுங்கள்..
    குறைகளை களைந்து மீண்டும் இயங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடும்,
    எதிர்பார்ப்போடும் விருப்பத்தோடும் இப்போது விடைபெற்றூக்கொள்கிறேன்.
    அன்புடன்
    முத்துகும்ரன்

    ReplyDelete
  65. ஒரே பின்னூட்டமாக போட இயலாததால் மூன்றாக பிரித்து போட்டிருக்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  66. ஸ்ஸப்பா!

    இதுவரைக்கும் படிச்சதுலயே முத்துக்குமரன் அண்ணாத்தே எழுதினதை படிச்சப்புறம்தான் ஓரளவு வெளங்குது!

    அவரு சொல்லி இருக்குறதுதான் கரெக்டாவும் படுது!

    மேட்டர் ஓவர்! இதுக்கு மேல இங்க படிச்சிகிட்டிருந்தா என்னைக் கண்டுக்க நீங்க எல்லாரும் நிமான்ஸுக்குத்தான் வரணும்போல!

    (நிமான்ஸ் னு போட்டதால நான் பெங்களூரு இல்லைப்பா)

    ReplyDelete
  67. கடவுளே!

    இன்னும் அஞ்சாரு மாசத்துக்கு இந்த உண்மைத்தமிழன் அண்ணாத்தேக்கு தமிழ் டைப்பிங் மறந்து போற மாதிரி மந்திரம் செய்யப்பா! புண்ணியமாப் போகும்!

    ReplyDelete
  68. ஏசப்பா இந்தப் பாவிகளை ரட்சியும்...

    அண்ணே இன்னாண்ணே இன்னும் செஞ்சுரி போடல? நீங்க ஒவ்வொரு புன்னூட்டத்துக்கும் புன்னூட்டம் போட்டாலே டபுள் செஞ்சுரி போட்டுரலாம். வீக்கெண்டு வேற. கலக்குங்க...

    ReplyDelete
  69. "பதிவுலக வரலாறு - அன்றும் இன்றும்!

    ஒரு எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்" னு ஜூனியர் விகடன்ல ஒரு தொடர் ஆரம்பிச்சா இன்னும் 10 வருஷத்துக்கு உண்மைத்தமிழன் அண்ணே எழுதலாம்னு நினைக்கிறேன்!

    ReplyDelete
  70. ஐயோ! அப்புறம் அந்த தொடர்லயும் அத்தை எழுதலை, இத்தை எழுதலைன்னு இவரை மாதிரியே இன்னும் வேற யாராச்சும் கெளம்பிட்டாங்கன்னா என்ன பண்ணுறது?

    கடவுளே காப்பாத்து!

    ReplyDelete
  71. ********************
    இந்த பிரச்சனை ஆரம்பிச்சதுல இருந்து எனக்குக் கொஞ்ச நஞ்சம் இருந்த நிம்மதியும் போச்சு.. இதுக்காக உழைச்ச நேரத்துக்கு எங்கிட்டாச்சும் போய் பிச்சையாவது எடுத்திருந்தா, எனக்கு இன்னிக்கு சோத்துக்காச்சும் உதவும்.. எவ்ளோ உழைப்பு வேஸ்ட்டு.. ஏண்டா இந்த பிளாக் சனியனைத் தொட்டோம்னு இருக்கு எனக்கு..
    ****************
    இப்போவாவது உனக்கு கடவுள் புத்தியக் கொடுத்தானே..
    இனிமேலாவது கல்யாணம் காட்சியப் பண்ணி புள்ள குட்டிகள காப்பாத்தற வழியப் பாரு தம்பி.



    **************
    மெட்ராஸ் வந்தப்ப ஹோட்டலுக்கு கூப்பிட்டு நல்லா சோறு போட்ட.. சைபர் கிரைம் ஆபீஸுக்கு அலையறதுக்கு கொஞ்சம் காசு கொடுத்த.. தம்பி முருகன் சத்தியமா சொல்றேன்.. திரும்பி உன்னை பார்க்குறப்ப மருவாதையா அந்தக் காசை திருப்பிக் கொடுத்துர்றேன். இல்லேன்னா இப்ப உடம்புல இருக்குற ஒத்தை எலும்பும் நிக்காது.. சத்தியமா சொல்றேன்.. திருப்பிக் கொடுத்துர்றேன்..
    *******
    அது என்னய்யா நேர்ல பார்க்கும் போது கொடுக்கிறேன்? இப்பவே மணி ஆர்டர் அனுப்பு.

    ReplyDelete
  72. ஒரு முக்கிய வேண்டுகோள்!

    உரிமையோட!

    எழுத எதுவும் விஷயம் கிடைக்கலைன்னா நல்லா நிம்மதியா உறங்கி ஒய்வெடுக்கலாம்!

    சீரியல் எபிசோடுகளுக்கு என்னென்ன காட்சிகள், என்னென்ன வசனங்கள் னு நிதானமா யோசிச்சி எழுதி வைக்கலாம்! அதுதான் சோத்துக்கும் வழிகாட்டுறது!

    அதைவிட்டுட்டு பைசா பிரயோசனமில்லாம இதையெல்லாம் எழுதி, உங்க நிம்மதியையும் கெடுத்துகிட்டு, பழைய ஆளுங்களையெல்லாம் கெளப்பி விட்டுகிட்டு!

    இதெல்லாம் வேணுமா? கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க!

    உடம்பையும் மனசையும் ரிலாக்சா வெச்சிகிட்டு ஆக்கப்பூர்வமா எதையாச்சும் செய்ய முடியுதான்னு பாருங்க! அல்லது அடுத்தவங்களையாவது நிம்மதியா இருக்க விடுங்க!

    இதென்ன ஆடித் திருவிழாவா! வருஷம் ஒரு தபா ஒருத்தரையொருத்தர் கடிச்சி துப்பிக்கிறதுக்கு!

    இதெல்லாம் வேண்டுகோள் மட்டுமில்லை! அன்புக் கட்டளையும் இல்லை!

    எச்சரிக்கை! எச்சரிக்கை!எச்சரிக்கை!

    ReplyDelete
  73. நிறைய பேர் பின்னுட்டம்!!!உண்மை தமிழன் கொஞ்சம் பதில் போடுங்க சார் !!!

    ReplyDelete
  74. நாமக்கல் சிபிக்கு ஒரு பெரிய ரிப்பிட்டு!!!

    ReplyDelete
  75. என்னது! நாமக்கல் சிபிக்கு ஒரு பெரிய ரிவீட்டா?

    ஓ! ரிப்பீட்டா! அப்ப சரி!

    நன்றி!

    ReplyDelete
  76. //நிறைய பேர் பின்னுட்டம்!!!உண்மை தமிழன் கொஞ்சம் பதில் போடுங்க சார் !!!
    //

    சிபி: "அவரு கேப்பாரூங்குறீங்க?"

    கல்ஃப் தமிழன்: "கேப்பாரு!"
    சிபி: "கேப்பாரு!"
    கல்ஃப் தமிழன்: "கே ப் பா ரூஊஊ!"

    ReplyDelete
  77. சுப்பிரமணியபுரம் பார்ட் 2வா

    கதை சூப்பரா இருக்கு

    புல் லா சஸ்பென்ஸ் அண்ட் த்ரில்லேர்

    ReplyDelete
  78. Tamil TV serials (selvi, annamalai, chitthi, kolankal) koda puriyum pola,

    Indha postla ulla politics puriya matenguthu.

    ReplyDelete
  79. உ.தமிழன் அண்ணே நீங்களும் ஒரு குட்நைட் போட்டு இந்தச் சலசலப்பை முடிச்சு வைங்க. அடுத்த முறை பார்க்கும் போது என்னையும் ஒரு மொக்கை படத்துக்கு கூட்டிட்டு போவீங்களாம்..

    திங்கட்கிழமை ஒரு மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதுங்க. மறக்காம கடைசி வரியில் நீங்க யூத்துங்கிறத சொல்லிரனும் ஆமா.

    ReplyDelete
  80. உண்மை தமிழன் அண்ணே !
    விடுங்க தமிழ் வலைபூக்களுக்கு நீங்கள் செய்த உதவி யாராலும் மறுக்க முடியாது.

    தனிபட்ட முறையில் எனக்கு மூர்த்தி தொல்லை + அல்லகை தொல்லை ஒழிந்ததற்க்கும் காரணம் நீங்களே. அதை என்றைக்கும் மறக்க மாட்டேன்.

    மிக்க நன்றி.

    நானும் மிக நாட்களாக சொல்ல நினைத்தற்க்கும் களம் அமைத்து கொடுத்தற்க்கும் நன்றி..

    சில பேரை திருத்த முடியாதுன்னு விட்டு தொலைச்சுட்டு வேற வேலையை பார்க்க வேண்டியது தான்.
    கடந்த ஒரு வாரமாக உங்களுக்கு வேலைபளுக்கு இடையில் இந்த ப்ளாக் தொந்தரவு வேறு.

    ReplyDelete
  81. ரவி,
    ஆதாரம் தொடர்பாக நீங்கள் சொன்ன கருத்துகள் தவறானவை. சரி எப்படி நிருபிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?? சொன்னால் நல்லது.

    உங்களுக்கு ஏற்கனவே சில ஆடியோ fileகள் அனுப்பி வைத்து இருக்கிறேன். அவை உங்களிடம் தற்போதும் இருந்தால் மீண்டும் ஒரு முறை கேட்டு பார்க்கவும். சரி அழித்து விட்டீர்கள் என்றால் மீண்டும் அனுப்பி வைக்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  82. //பிரபல பதிவர்கள் நரசிம், பரிசல், ப்ரூனோ, ஜ்யோவ்ராம், அதிஷா, பைத்தியகாரன், பாலபாரதின்னு நிறைய பேர் உங்களை கண்டுக்கிட்ட மாதிரியே தெரியலை.//

    அய்யோ வாங்க அய்யோ காப்பாதுங்கன்னு ஒப்பாரி வைச்சும் உன்னை யாரும் கண்டுக்கிட்ட மாதிரியே தெரியலை. ஏழே முக்காலு எல்லாம் என்ன ஆச்சு

    ReplyDelete
  83. ***குழலி / Kuzhali said...

    //Anonymous said...
    எனக்கொரு சந்தேகம்ணா. லக்கியை அவதூறு பண்ணுறதுலே குழலி, உண்மைதமிழன், டோண்டு, அருண்குமார் நாலு பேரை தவிர வேற யாருக்கும் ஆர்வம் இல்லையே. ஏன்?

    பிரபல பதிவர்கள் நரசிம், பரிசல், ப்ரூனோ, ஜ்யோவ்ராம், அதிஷா, பைத்தியகாரன், பாலபாரதின்னு நிறைய பேர் உங்களை கண்டுக்கிட்ட மாதிரியே தெரியலை.

    பதிவர்களுக்குள் போட்டி இருக்கலாம். பொறாமை பொச்சரிப்பு இருக்க கூடாது. உண்மைதமிழன் நீங்களும் உருப்படியாக எழுதினால் லக்கி மாதிரி புகழ் பெறலாம்.
    //
    டேய் பாடு இங்க வந்து உளறுவது, அப்புறம் அவனவன் கிட்ட போய் அய்யோ அண்ணே நொங்கெடுக்கறானுங்கன்னு அழுவறது... வெட்கமா இல்லை... தூ... இந்த பொழப்பு பொழைக்கறதுக்கு....***

    In a serious topic of CYBER CRIME like this, it is unfortunate you guys allowing anonymous comments! :(((

    ReplyDelete
  84. ***dondu(#11168674346665545885) said...

    நீங்களும் ரவியும் போலீசில் புகார் கொடுக்கச் சென்றபோது எனக்கு தகவல் சரியாகக் கிடைக்காததால் நான் சேர்ந்து கொள்ள முடியவில்லை. பிறகு தனியாகச் சென்று புகார் கொடுத்தேன்.

    என்னை சேர்க்கக் கூடாது என வரவனையான் வகையறாக்கள் கூறியதாகவும் கேள்விப்பட்டேன்.

    லக்கிலுக் கடைசி தினத்தன்று செந்தழலுக்கு பிரிண்ட் அவுட் எல்லாம் எடுத்துக் கொடுத்ததாலேயே நல்லவர் ஆகிவிடுவாரா? அவர் போலி டோண்டு மூர்த்தியின் அல்லக்கையாக இருந்து செயல்பட்டது இல்லையென ஆகிவிடுமா?

    செந்தழல் செய்தது முட்டாள்தானம். போயும் போயும் லக்கிலுக்கிடமா அத்தனை பேப்பர்களையும் பிரிண்ட் அவுட் எடுக்கச் சொல்வது? போலிக்கு உடனேயே விஷயம் போயிருக்குமே? அந்த அளவுக்கு தகவல் லீக்கேஜை அலவ் செய்யலாமா?

    2006-ஆம் ஆண்டு மினி பார்வதி ஹாலில் பதிவர் மீட்டிங்கில் நான் பேசியதை செல்போன் மூலம் மூர்த்திக்கு லைவ் ரிலே செய்த பதிவர் பற்றி குழலி கூறியதுமே அது லக்கிலுக்காகத்தான் இருக்க வேண்டும் என எனது மனதுக்கு உறுதியாகப் பட்டது. அப்போது எனக்கு இந்த விஷயமே தெரியாது.

    இருப்பினும் இவ்வளவு நாட்கள் கழித்து அதை ப்ரூவ் செய்ய என்னிடம் ஆதாரம் இல்லையென்பதால்தான் அமைதி காத்தேன். இப்போது கூறுகிறேன், அவ்வாறு செய்தது லக்கிலுக்கைத் தவிர வேறு யாராகவும் இருந்திருக்க முடியாது என.

    எதற்கும் இன்னும் ஓரிரு தினங்களில் நான் இன்னொரு பதிவு போடுகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்***

    உபயோகமான நல்ல பின்னூட்டம். பத்திரப்படுத்தி வைக்கனும்! நன்றி, திரு. ராகவன்! :)))

    ReplyDelete
  85. புரிகின்றது. வலைப்பதிவிடலை எந்த அளவுக்கு அனுபவித்து, உள்ளக்கிடக்கைகளை பகிர்வதில் உன்மையாக மகிழ்ந்து, விமர்சனங்களை ரசித்து திருப்திப்பட்டு இருந்திருபீர்களானால், இப்படி ஒரு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பீர்கள்?.

    இந்தியா போன்ற நாடுகளில், போட்டி மற்றும் ஆதிக்கம் மட்டுமே வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லும் சூழ்நிலைகள் இருக்கு. எனவே போட்டிகளை சமாளிக்க கடும் உழைப்பையும் மீறி நடிக்க வேன்டி யிருக்கு. உன்மை சொரூபத்தை காட்டினால் இங்கு சங்குதான். அதனால் நடிப்பு (முகமூடி) மட்டுமே பிரதானமா இருக்கு, அதை யாரும் பெரிதாக கன்டுகொள்வதும் இல்லை, ஏனென்றால் அவர்களும் நடிகர்களே.

    நான் இரண்டு வலைப்பதிவில் நடித்துக்கொன்டிருக்கின்றேன். அதில் குற்ற உணர்வு துளியும் எனக்கு இல்லை, ஏனென்றால் இதுவும் உயிர்வாழ்வின் ஒரு செயல்தான் என்று சிறுவயது முதலே இந்தியாவில் வார்க்கப்பட்டேன்.

    நீங்கள் நிஜமாகவே உண்மைத்தமிழன் போல இருக்கு அதான் வெறுத்துவிட்டீர்கள். நான் மதிப்பிட்டதில் நீங்கள், அருன், லக்கி, ரவி, உன்மை டோண்டு, போலி டோண்டு, உன்மை போலி டோண்டு, போலி போலி டோன்டு யார் மீதும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒவ்வொருவரின் ஆளுமையில் ஆச்சரியமான விஷயங்களைக்கன்டேன், அதைப்பற்றி எழுத ஆசை ஆனால் முடியுமான்னு தெரியலை.

    எப்படியிருந்தாலும், உங்கள் உள்ளக்குமுறலை பட்ட‌வர்த்தனமாக கொட்டியிருக்கிறீர்கள், இதிலிருந்து தெரிகின்றது நீங்கள் டோன்ட்கேர் பாலிசி கொன்டவரென்று. அடியேனின் சின்ன வேன்டுகோள், எதையும் உண்மையென்று நம்பாதீர்கள். பதிவுகளை மீன்டும் சந்தோஷமாக அனுபவித்து எழுதித்தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  86. நானும் 5 வருசத்துக்கு முன்னாடி பதிவு எழுதிக்கிட்டு இருந்த மூத்த்த பதிவர் தான் ..

    எப்போ இந்த பிரச்சனை ஆரம்பிச்சதோ அப்போவே என் சொந்த சோலிய பாக்க போயிட்டேன்.. ( எஸ்கேப் ஆகிட்டேன் னு சொல்ல வரல .. ஆணி ஜாஸ்தி .. அதான்)

    "வடை பெறுகிறேன்" பதிவு கூட போடல ..

    அப்போ அப்போ வந்து எட்டி பாத்துட்டு போய்டுவேன்..

    இங்க நாம பண்றது எல்லாம் வெட்டி, மொக்கை, சுயசொறிதல் மட்டுமே..

    சும்மா, ஊருக்குள்ள நானும் இன்டர்நெட் ல எழுதறேன் னு சொல்லிக்கிறதுக்கு ..

    எழுதனும் னு interest இருக்கறவன், எழுதி தமிழ் தாய்க்கு சோறு போடனும்னு நெனைக்கிறவன் எல்லாம் 3 போஸ்ட் க்கு ஒரு தடவ ஒரு தமிழ் விக்கிபீடியா (ta.wikipedia.org) கட்டுரை எழுதுன கூட 1 லட்சம் கட்டுரைகள் வந்து இருக்கும்..

    பெருமை பேசறேன் னு நெனைக்காதீங்க.. நான் அது தான் பண்றேன்..

    இனிமேலாவது இந்த மொக்கை, கும்மி, சொறிதல், ஜாதி பெருமை, மத பெருமை, திராவிட பெருமை, ஆரிய பெருமை, பழம் பெருமை, அடுத்தவனுக்கு சிறுமை இதையெல்லாம் கொறச்சுட்டு ( நிறுத்திட்டு னு சொல்லவில்லை , ஏன் னா அது நடக்காது னு தெரியும் ) உருப்படியா எதாவது பண்ணுங்க..

    அப்பறம்.. பாதிக்கப்பட்டவர்களில்,
    அப்பாவிகளுக்கு அனுதாபங்கள்..
    அடப்பாவிகளுக்கு .. சீக்கிரம் எதாவது மனநோய் மருத்துவமனைக்கு போயிட்டு வந்துடுங்கப்பா ..

    கிடைக்காத ஸ்நான ப்ராப்தி ஒருவேளை கிடைக்கலாம் :)

    ReplyDelete
  87. அண்ணன் சக்திவேல் பதில் கண்டு பேரவை பெருமைப்படுகிறது..

    ReplyDelete
  88. //அனானிஸ் குழலி பாடு பற்றி தெளிவாக அறிந்து கொண்டோம் நன்றி. மாயவரத்தானோடு சாட்டிங் தொடர்பில் இருந்து முழு விவரமும் திரட்டி போலிக்கு கொடுத்தவன் அவனே.
    //

    அட நாதாறி, வாயிலே வருதுடா வெண்ணை! என்னவோ பக்கத்திலே உட்காந்து எனக்கு **** ப்**ச் மாதிரி எழுதிருக்கான்?!

    ரெண்டு பேரு நல்லா பேசிட்டிருந்தா 'இவனுக்கு' பிடிக்காதோ? கலகம் உண்டு செஞ்சு அப்புறம் ஒரு சொம்பை தூக்கிட்டு வந்து உட்காந்திடுவானாமே நாட்டாமைன்னு சொல்லிக்கிட்டு!

    ReplyDelete
  89. இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்னும் ரேஞ்சில் 3 பின்னூட்டங்கள் அளித்த முத்துக்குமரனுக்கு பதிலாக நானும் பதிவிட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2009/09/blog-post_12.html

    பை தி வெ நாம் எதிர்ப்பார்த்தது போல லக்கிலுக் போலி டோண்டு பற்றி தனது தொடரில் மூச்சு விடவேயில்லை. தொடரும் முடிந்தது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  90. To whom it may concern!

    There is nothing wrong in supporting someone for being "your kind" or a " good friend", But when someone is involving in a "criminal act" and "terrorizing" innocent people, WE ALL SHOULD JOIN TOGETHER to "ERASE" such a criminal for his/her inhuman acts no matter whohe/she is. That is everyone's responsibility in our tamil community

    If anyone who does not do that, that human being is "worthless" and a "traitor" for our whole tamil community!

    When you are talking about cyber crime, how can you leave out the "real villain" who terrorized everybody?????

    Only one of the following, could be a REASON for your cowardly act

    1) Are you a good friend of him??

    2) or ARE YOU AFRAID of him????

    It does not matter whether he is is a friend or you are scared of him, you should be ashamed of being yourself no matter what reputation you have in the internet world!

    -வருண்

    ReplyDelete
  91. //அண்ணன் சக்திவேல் பதில் கண்டு பேரவை பெருமைப்படுகிறது.. /

    ஆமா, படுக்கிறது சீ படுகிறது!

    ReplyDelete
  92. பை தி வெ நாம் எதிர்ப்பார்த்தது போல லக்கிலுக் போலி டோண்டு பற்றி தனது தொடரில் மூச்சு விடவேயில்லை. தொடரும் முடிந்தது.

    தொடர் முடிந்தற்க்கு இந்த பதிவே காரணமா??

    ReplyDelete
  93. லைட்டா எட்டி பார்த்துக்கிடட்டுமா?

    ReplyDelete
  94. தொடர் முடிந்ததுக்கு நானே காரணம் என டோண்டு மார் தட்டுவாரா?

    போலி டோண்டுபோல அவனோட அல்லகைககளும் போலி சல்மாவும் அவனோட அல்லகைகளும் போலிசுல இழுபடணும். அதென்னய்யா போலி டோண்டுக்கு ஒரு நியாயம். போலி சல்மாவுக்கு ஒரு நியாயம்.

    ReplyDelete
  95. \\செந்தழல் ரவி said...
    அதெல்லாவற்றையும் விட ஒரு அயோக்கியத்தனமான விடயம் ஒன்று.

    என்னிடம் தொலைபேசியில் அழைத்து பேசிய மூத்த பதிவர், என்னுடைய குடும்பம் பற்றி லைட்டாக விசாரித்தார்.

    நான் கலப்பு மணம் செய்துகொண்டது பற்றி கேட்டவர், மனைவியின் மதம், சாதி உட்பிரிவுகள் கேட்டார். தெரியாத்தனமாகவோ அல்லது வெளிப்படையாகவோ ஒரு தகவலுக்காக கேட்கிறார் போல என்று அதை சொல்லி தொலைத்தேன்.

    அடுத்த நாளே, என்னுடைய மனைவியின் சாதி பெயரோடு ஆபாச பின்னூட்டம் ஒன்று. அதன் பிறகு பல இடங்களில்.

    யார் அந்த மூத்த பதிவர் என்று உங்களுக்கு தெரியும்தானே உண்மை அண்ணா ?//

    இந்த மாதிரி எழுதுவதால் என்ன பயன்? யார் அந்த மூத்த பதிவர்? தனக்குத் தானே சங்கம் அமைத்துக் கொண்டவரா? உண்மையப் படாரென்று போட்டு உடைப்பதில் என்ன தயக்கம்?

    ReplyDelete
  96. உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தேயாக வேண்டும்..

    அது லக்கியாக இருந்தாலும் சரி, பெரியவர் டோண்டுவாக இருந்தாலும் சரி....

    ReplyDelete
  97. //எதற்கும் இன்னும் ஓரிரு தினங்களில் நான் இன்னொரு பதிவு போடுகிறேன்.//

    போடுங்க டோண்டு சார். இந்தப் பிரச்சனை திரும்பவும் சீக்கிறம் முடிஞ்சிடாம பார்த்துக் கொள்ளும் தலையாய கடமை உங்களுக்கு இருக்கு. வலையுலக வரலாறு உங்களை வாழ்த்தும்.

    ReplyDelete
  98. @சஞ்சய் காந்தி
    ரொம்ப லேட்டா சொல்லியிருக்கீங்க போலிருக்கு. நான் எப்பவோ போட்டாச்சே. போட்டாச்சா இல்லையான்னு கூட பாக்காம இங்க வந்து பின்னூட்டம் போட்டுட்டு அங்கேயும் உடனேயே வந்து போட்டிருக்கீங்க?

    உங்களை மாதிரி வேலையில்லாம மத்தவங்க கஷ்டத்தை வேடிக்கை பாக்கிறவங்களுக்கெல்லாம் வேற என்ன எழுதத் தெரியும்? அவனவன் பட்டாத்தான் புரிஞ்சுப்பான்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  99. //உங்களை மாதிரி வேலையில்லாம மத்தவங்க கஷ்டத்தை வேடிக்கை பாக்கிறவங்களுக்கெல்லாம் வேற என்ன எழுதத் தெரியும்? அவனவன் பட்டாத்தான் புரிஞ்சுப்பான்.
    //

    ஐயா வேலை உள்ள ஒரே ஒருவரே. நாங்க வேடிக்கைப் பார்க்கனும் பழச எல்லாம் கிண்டுங்கன்னா சொன்னேன்? இந்த கன்றாவியை நிறுத்தி தொலையுங்கள் என்று தான் சொல்றேன். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் திட்டியதை பாராட்டி பத்திரம் எதுவும் தரலை. அதை ஏன் திரும்பத் திரும்ப வெளியிட்டு ஆறின புண்ணை கிண்டறிங்கன்னு தான் கேட்கறேன்.ஆனால் நீங்கள் விட மாட்டிர்கள் எனத் தெரியும். அடுத்த அத்தியாயத்தையும் ஆரம்பிச்சி வச்சி இன்னும் பல த்லைமுறைக்கு புண்ணியம் சேர்த்துக்கோங்க. இனி உங்களுக்கு பதில் சொல்வதாய் இல்லை. உங்களுடன் வாக்குவாதம் தொடர்ந்தால் என்ன நிலைக்கு ஆளாக வேண்டி இருக்கும்னு தெரியும். :)
    நன்றி வணக்கம்.

    ReplyDelete