Pages

Saturday, August 29, 2009

கிழக்கு வாசல் உதயம்..! புதிய இலக்கிய இதழ்..!

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான இலக்கிய இதழ்' என்று விளம்பரத்துடன் 'கிழக்கு வாசல் உதயம்' என்கிற மாதாந்திர இலக்கிய பத்திரிகை திருத்துறைப்பூண்டியில் இருந்து வெளிவருகிறது.

எழுத்தாளர் உத்தமசோழனை ஆசிரியராகக் கொண்ட இந்த இதழ் சமீபத்தில்தான் எனக்குக் கிடைக்கப் பெற்றது. உத்தமசோழனின் எழுத்துக்களை கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பாகத்தான் படிக்க நேர்ந்தது. அதில் ஏதோ ஒருவித ஈர்ப்பு இருந்தது. இன்னமும் இருக்கிறது.

அவருடைய 'கசக்கும் இனிமை' என்கிற சிறுகதை 'ஆயிரத்தில் ஒருவனும், நூறில் ஒருத்தியும்' என்கிற வித்தியாசமான தலைப்போடு மின்பிம்பங்கள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ராஜ் டிவியின் மைக்ரோ தொடர்களில் ஒன்றாக திரையிடப்பட்டது. அந்தக் கதையை முழுவதுமாக தட்டச்சு செய்யும் பணி எனக்குக் கிட்டியதால் அப்போதே உத்தமச்சோழனின் இலக்கிய உலகம் எனக்குப் பரிச்சயமானது.

இந்த இதழில் சிறுகதை, கவிதை, சிகரம் தொட்ட கதை, இலக்கிய வீதி, பேட்டிகள், தொடர்கதை என்று பரந்துபட்ட விஷயத்தை மிக எளிமையான தமிழில் கொடுத்திருக்கிறார். ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம்.

விலை பதினைந்து ரூபாய். தொடர்புக்கு ஆசிரியர் உத்தமச்சோழன், செல்போன் எண் - 9443343292.


வளரட்டும் கிழக்கு வாசலின் படைப்பிலக்கியம்..!

3 comments:

  1. வெளி மாநிலத்துல இருந்துகிட்டு நாங்கல்லாம் எப்பிடி படிக்கிறது :((
    நெட்ல வருமா??

    ReplyDelete
  2. ///மங்களூர் சிவா said...
    வெளி மாநிலத்துல இருந்துகிட்டு நாங்கல்லாம் எப்பிடி படிக்கிறது :((
    நெட்ல வருமா??///

    அந்த அளவுக்கு இன்னும் வளரவில்லை சிவா..!

    எதிர்காலத்தில் கண்டிப்பாக நடக்கும்..!

    ReplyDelete