Pages

Friday, July 24, 2009

ஐந்தாம்படை..! - சினிமா விமர்சனம்

24-07-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கமான பக்கா கமர்ஷியல் திரைப்படம்தான்.. புதுமை என்று எதுவுமில்லை.

ஐந்து அண்ணன், தம்பிகள். இதில் மூத்தவர் நாசர். அடுத்தவர் முகேஷ், மூன்றாவது தம்பிதான் பிரபாகரன் என்னும் சுந்தர்.சி. நான்காமவர் விவேக். ஐந்தாவது ஒரு டிவி நடிகர். எதிரணியிலும் அண்ணன், தம்பிகள் கூட்டம்தான். அதற்குத் தலைமை தாங்குவது தனுஷ்கோடி என்னும் அண்ணன்.

அண்ணன் ஒன்று என்றால் இரண்டாக இருந்தாலும் ஒன்றை ஒடித்துப் போட்டு ஒன்றாக்கிக் காட்டும் செல்லத் தம்பி சுந்தர்.சி. தெருவில் கோலம் போடும் இடத்தில் கதாநாயகியைப் பார்த்து ஜொள்ளிவிட்டு தனது காதலைத் துவக்குகிறார்.

அதே ஊரில் ஒரு திருவிழாவுக்காக நடனமாட வரும் நாட்டியத் தாரகையாக சிம்ரன். சுந்தரும், விவேக்கும் சிம்ரனை கட்டாயப்படுத்தி நடனமாட வைத்ததால் கோபப்பட்டு தனது சலங்கையை கழட்டி எறிந்து இனி எப்போதும் நடனமாடப் போவதில்லை என்று சூளுரைக்கிறார் சிம்ரன்.

இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்கப் போன நாசரை சிம்ரனின் பெரியப்பாவான தனுஷ்கோடி அண்ட் கோ அடித்துவிட கோபம் கொண்ட உடன்பிறப்புகள் சுந்தரும், விவேக்கும் சிம்ரன் வீட்டுக்குள் நுழைந்து ரகளை செய்கிறார்கள். பின்பு நாசரின் தலையிட்டீல் மன்னிப்பு கேட்டு உடைத்தவைகளை ஒட்ட வைக்க அங்கேயே தங்குகிறார்கள். தங்குவதற்கு இன்னொரு காரணம் சுந்தரின் காதலி அங்கே பரதம் பயில்வதுதான்.

உடைந்த பொருட்களை ஒட்ட வைக்கும் முயற்சியில் இருக்கும் சுந்தரின் இந்த பெவிகால் வேலையை பார்த்ததும் சிம்ரனுக்குள் காதல் கெமிஸ்ட்ரி உருவாகிறது. இதை அறியாத நாசர் தனது முதல் தம்பி முகேஷுக்கு சிம்ரனை பேசி முடிக்கிறார். திருமண நாளன்றுதான் தனக்கு ஜோடி முகேஷ் என்பது சிம்ரனுக்குத் தெரிய வருகிறது.

இந்தத் திருமணத்தை நிறுத்திவிட்டு தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி சுந்தரின் காலில் விழுந்து கெஞ்சுகிறார் சிம்ரன். சுந்தர் மறுத்துவிட.. சிம்ரன் வேறு வழியில்லாமல் முகேஷை திருமணம் செய்து கொண்டாலும் சுந்தரை பழி வாங்க பத்தினி சபதம் எடுக்கிறார்.

தனது பெரியப்பாவான தனுஷ்கோடி குடும்பத்தாருடன் கூட்டணி சேர்ந்து வாக்கப்பட்டு வந்த ஐந்து சகோதரர்கள் குடும்பத்தை டெர்ரராக்குகிறார். இரண்டு சகோதர குடும்பங்களுக்கும் என்ன மோதல் என்பது பிளாஷ்பேக்கில் கொட்டப்படுகிறது.

தனுஷ்கோடியின் தம்பிகளில் ஒருவரான ராஜ்கபூர் சாராயம் காய்ச்சுகிறார். அதைக் குடித்து சிலர் சிவலோகத்திற்கு கப்பல் ஏறிப் போய்விட.. நாசருக்கு பேசி முடிக்கப்பட்டிருந்த பிரபல சமூக சேவகி தேவயானி, அந்தப் பகுதி மக்களை ஒன்று திரட்டி ராஜ்கபூரை எதிர்க்கிறார். துணைக்கு சூப்பர் கொழுந்தன் சுந்தரும் வருகிறார். தனுஷ்கோடியும் தனது ஆதரவாளர்களுடன் வந்து ரகளை செய்ய.. போலீஸ் வர.. கலவரம் வெடிக்க.. அந்த ஊர் அல்லலோகப்படுகிறது.

“இனிமேல் இந்த ஊரில் சாராயம் காய்ச்ச மாட்டோம்..” என்று தனுஷ்கோடி சகோதரர்கள் கலெக்டர் முன்னிலையில் பாண்டு பேப்பரில் கை நாட்டு வைத்துவிட்டு வருகிறார்கள்.
ராஜ்கபூர் தனக்கு செருப்பு மாலை போட்டு, சாணித் தண்ணியைக் கரைத்து ஊத்தி அழகு பார்த்த தேவயானியை மனதில் நினைத்து கொதிக்கிறார்.

நாசர்-தேவயானி திருமணத்தில் இடையில் புகுந்து கலாட்டா செய்கிறார் ராஜ்கபூர். கோவிலுக்கு எதிரே நட்ட நடுரோட்டில் தேவயானியின் கழுத்தில் தாலியைக் கட்டுகிறார். தடுக்கப் பாய்ந்த நாசரை ராஜ்கபூர் வீச்சறிவாளால் வெட்ட வர.. அது அவர் கழுத்திலேயே பூமாராங்காக பாய.. ஸ்பாட்டிலேயே மண்டையை போடுகிறார் ராஜ்கபூர். நிமிடத்தில் தேவயானி பைத்தியமாகிறார். இத்தனை நாட்களாக அவர் தனுஷ்கோடியின் வீட்டில்தான் அடைந்து கிடக்கிறார்.
Back to the current story..

மணல் குவாரியை ஏலம் விடும் கவுரவப் போட்டியில் சிம்ரன் இரட்டை வேடம் போட்டுவிட, கான்ட்ராக்ட் தனுஷ்கோடியின் கைகளுக்குச் சென்றுவிடுகிறது. சிம்ரன்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று விவேக்கும் தெரிந்து கொள்கிறார்.

சுந்தருக்காக அவளது காதலியை பெண் கேட்டு அந்த வீட்டுக்கு சிம்ரன் தலைமையில் குடும்பமே செல்ல.. அதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகத்தான் தனுஷ்கோடியின் கடைசித் தம்பிக்கு அந்தக் காதலியை நிச்சயம் செய்துவிட்டு அந்த டீம் வெளியே வருகிறது. சிம்ரனின் சதி வேலைதான் இது என்று புரிந்து கொள்கிறார் சுந்தர்.

மறுநாளே திருமணம். “தனது காதலியின் கழுத்தில் நான்தான் தாலியைக் கட்டுவேன். அதையும் நீதான் எடுத்துக் கொடுக்கப் போற...” என்று பத்து லட்சத்து பத்தாயிரத்து பத்தாவது முறையாக ஹீரோ சுந்தர் சபதமெடுக்க சிம்ரன் “அதையும் பார்ப்போம்..” என்கிறார். கட்டுனாரா இல்லையான்றதுதான் கிளைமாக்ஸ்.

இது மாதிரி கமர்ஷியல் திரைப்படங்களில் அதிகமாக நடிப்புக்கு ஸ்கோப் இருக்காது. இது சுந்தர் படம் வேற.. ஸோ.. சுத்தமா சுந்தருக்கு இல்லே.. பாவம் அவரு.. ஏதோ அவரால வந்தவரைக்கும் நடிச்சு முடிச்சிட்டாரு..

சிம்ரன் இப்பவும் நல்லாவே டான்ஸ் ஆடுறாரு.. நிறுத்தி, நிறுத்தி வசனம் பேசுறாரு.. மத்தபடி முகம்தான் பார்க்கவே முடியாத கோலத்துல இருக்கு.. 60 ரூபா கொடுத்து உள்ள போனதால பார்த்துத் தொலைச்சுட்டோம்.. ஆனாலும் நடிப்பு.. அதேதான்.

ஹீரோயினா அதிதி. புது ஹீரோயின்னு புடிச்சா சம்பளத்தை கர்ச்சீப்புல சுருட்டிக் கொடுக்கலாம்ன்ற சுருட்டல் ஐடியாலதான் இந்தப் படத்துக்கு புது ஹீரோயின் என்கிறார்கள். நடிப்பு பரவாயில்லை ரகம். அடுத்து ஏதாவது படத்துல சான்ஸ் கிடைச்சு நடிச்சா பார்த்துக்கலாம்..
அடுத்தது தேவயானி. குஷ்புவின் சொந்தப் படம் என்றவுடன் பைசா வாங்காமல் ப்ரீ சர்வீஸாக நடித்துக் கொடுத்திருப்பதாக சுந்தரே சொல்லியிருக்கிறார். ஆனால் வஞ்சகமில்லாமல் நடித்திருக்கிறார். நடனமும் ஆடியிருக்கிறார். ஆக எப்படியோ பிள்ளை பெத்த இரண்டு ஹீரோயின்கள் டான்ஸ் ஆடியிருக்கும் திரைப்படம் எது என்ற மொக்கை கேள்விக்கு உதாரணமாகிவிட்டது இத்திரைப்படம்.

இசை இமான்.. ரீமிக்ஸ் என்கிற பெயரில் “ஓரம்போ.. ஓரம்போ ருக்மணி வண்டி வருது” என்கிற அட்டகாசமான பாட்டை குதறித் தள்ளியிருக்கிறார்கள். இதுக்கு புதுசா வேற பாட்டை போட்டிருக்கலாம். அப்படியொரு கொடுமை அது..

இன்னொரு பாடல் யாரோ ஒரு அம்மணியோ, ஐயாவோ.. குடிகார குரலில் மென்று ஏதோ ஒரு பாடலை பாடித் துப்பியிருக்கிறார். எப்படித்தான் கேக்குறாங்களோ தெரியலப்பா.. மற்றபடி சுந்தருக்கு ஒரு கஷ்டமும் இல்லை. பாட்டு சீன்லகூட ஜாலியா வர்றார்.. போறார்.. கூட ஆடுறவங்கதான் பாவம்..

சிம்ரன் நடனமாடும்போது தொப்புள் காட்டாத ஒரே திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். வீட்டுக்காரர் தடா போட்டுவிட்டார் போலிருக்கிறது. இந்த மட்டுக்கும் சந்தோஷம்.

சிம்ரனின் ஹஸ்பெண்ட்டாக வரும் முகேஷ் பேச்சிலேயே மலையாளம் தெறிக்க, தெறிக்கப் பேசுகிறார். சிம்ரனை பார்க்க ஆசைப்பட்டு அண்ணன், தம்பிகளுக்குத் தெரியாமல் தென்காசிக்கு ஓடி அல்லல்படும் காட்சியில் கொஞ்சூண்டு சிரிக்க வைக்கிறார். பாவம், மசாலா படத்துல வந்து மாட்டுனதால இதுக்கு மேல அவரால ஒண்ணும் பண்ண முடியல..

நாசர் அதேதான்.. அலுங்காம, குலுங்காம தேவயானிக்கு மாப்பிள்ளையா வந்து நடிச்சிருக்காரு. ரொம்ப நாள் ஆயிருக்கும் இவரு மாப்பிள்ளை கோலத்துல உக்காந்து..

சொல்லி வைச்ச மாதிரி பாட்டும், சண்டையும் மாறி மாறி வந்து போறதால திட்டவட்டமா இதுதான் கமர்ஷியல் பார்முலான்னு முடிவு பண்ணிக் கொடுத்திருக்காங்க.

கமர்ஷியல்ன்னு சொன்னாலும் சீன் போட வேண்டிய சீன்லயெல்லாம் சட்டு.. சட்டுன்னு பிளாஷை போட்டு சீனை பிரேக் பண்ணிட்டதால, டச்சிங் சீன்ஸ்கூட மனசுல நிக்க மாட்டேங்குது.

ஆனா ஒண்ணு மட்டும் உண்மை..

விவேக் மட்டும் இந்தப் படத்துல இல்லேன்னா..!

அவ்ளோதான்..!

மனிதர் நெல்லைத் தமிழில் புகுந்து விளையாடியிருக்கிறார்.. ஏதோ அவரால முடிஞ்சதையெல்லாம் செஞ்சு குஷ்பூவை காப்பாற்றியிருக்கிறார். வாழ்த்துவோம்.

பரத நாட்டியக் கலைஞர் ஷோபனா ரமேஷ் அதே பெயரில் அதே குருவாகவே ஒரு சீனுக்கு மட்டும் வந்து சிம்ரனின் “இனி சலங்கையை கட்ட மாட்டேன்..” என்கிற சபதத்தை முறித்துவிட்டுப் போகிறார்.

கிளைமாக்ஸ் காட்சி திருப்பமாக மந்திரி ராதாரவியும் அவரது செட்டப்பாக குகிலி பாபிலோனாவும் வந்து செல்கிறார்கள். எவ்வளவோ செலவு செய்றோம்.. இதுனால என்ன ஆயிறப் போகுதுன்னு நினைச்சு நம்ம குஷ்பக்கா கடைசி நேரத்துல துட்டை வாரி இறைச்சிருக்கிற மாதிரி தெரியுது.

‘மாயாண்டி குடும்பத்தார்' திரைப்படத்திற்கு முன்பாகவே இப்படம் தயாராகி காத்திருந்தது. ஆனால் வாங்கத்தான் ஆளில்லாமல் இருந்ததாம். கேட்பவர்கள் ஏரியாவுக்கு ஏரியா அடிமாட்டு விலைக்கு கேட்க.. யாரிடமாவது மொத்தமாக படத்தை தள்ளிவிட நினைத்து காத்திருந்தார்கள்.

கடைசியில் கோடம்பாக்கத்தின் ஆஸ்தான சினிமா பைனான்ஸியர்கள் கை கொடுக்க.. படத்தினை ஐங்கரன் பிலிம்ஸ் வாங்கி வெளியிட்டிருப்பதாகத் தகவல்.

பார்க்கவே வேண்டாத திரைப்படம் அல்ல.. பார்த்தே தீர வேண்டிய படமும் இல்லை..

போரடிச்சா.. பொழுது போகலைன்னா.. கைல காசுக்குப் பஞ்சமில்லைன்னா.. போய் பாருங்க..!

டிஸ்கி : இடைவேளைல போட்ட ‘நந்தலாலா' திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்தவுடன் ‘மிஸ் பண்ணவே கூடாத படம் அது' என்பது புரிந்தது.. காத்திருப்போம்..!

56 comments:

  1. //போரடிச்சா.. பொழுது போகலைன்னா.. கைல காசுக்குப் பஞ்சமில்லைன்னா.. போய் பாருங்க..!//

    :))

    //அதே ஊரில் ஒரு திருவிழாவுக்காக நடனமாட வரும் நாட்டியத் தாரகையாக சிம்ரன். சுந்தரும், விவேக்கும் சிம்ரனை கட்டாயப்படுத்தி நடனமாட வைத்ததால் கோபப்பட்டு தனது சலங்கையை கழட்டி எறிந்து இனி எப்போதும் நடனமாடப் போவதில்லை என்று சூளுரைக்கிறார் சிம்ரன்.//

    தேவாசுரம் படம் மாதிரியோ?

    ReplyDelete
  2. சினிமா விமரிசனத்திற்குக் கூட இவ்வளவு பெரிய பதிவா? உ.த.,உங்களுக்கு பொறுமை அதிகம்தான்

    ReplyDelete
  3. இந்த படம் சூட்டிங் நெல்லையில நடக்கும்போது உள்ளூர்காரங்க நிறையபேர் நடிக்கப்போனதா சொன்னாங்க.சுந்தரே நடிக்கலைன்ன போது அவங்கள்லாம் .... :))

    ReplyDelete
  4. சிம்ரன் நடனமாடும்போது தொப்புள் காட்டாத ஒரே திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    :))

    ReplyDelete
  5. நீங்கள் நல்ல படங்களுக்கு மட்டும் விமர்சனம் எழுதினால் மகிழ்வோம்.
    இப்போது சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.

    ReplyDelete
  6. ////அதைக் குடித்து சிலர் சிவலோகத்திற்கு கப்பல் ஏறிப் போய்விட.. /////

    கப்பலிலா? என்ன ராஜா சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  7. //போரடிச்சா.. பொழுது போகலைன்னா.. கைல காசுக்குப் பஞ்சமில்லைன்னா.. போய் பாருங்க..!//

    அப்ப உங்ககிட்ட காசுக்கு பஞ்சமில்ல...ஒரு 500 ரூபா கைமாத்தா கொடுங்களேன்...

    ReplyDelete
  8. //விவேக் மட்டும் இந்தப் படத்துல இல்லேன்னா..!///

    நிஜமாவேவா?

    ReplyDelete
  9. என்னோட மோதி விளையாடு விமர்சனம் இங்கே...

    http://tamilsam.blogspot.com/2009/07/blog-post_24.html

    ReplyDelete
  10. தல

    இப்படி ரிஸ்க் எடுத்து இந்த மாதிரி படம் பார்க்குறது உங்களுக்கு ரஸ்கு சாப்பிடுறது போல, த்ச்சூ த்ச்சூ

    ReplyDelete
  11. அண்ணே, இப்பிடி கதையப் பூரா சொல்றீகளே..?
    பார்த்து, குஷ்பூ அக்கா உங்க மேல கேஸ் போடப் போறாக.

    ReplyDelete
  12. \\\\டக்ளஸ்... said...
    அண்ணே, இப்பிடி கதையப் பூரா சொல்றீகளே..?
    பார்த்து, குஷ்பூ அக்கா உங்க மேல கேஸ் போடப் போறாக.///

    REPEAT...

    ReplyDelete
  13. விரிரிரிரிவான விமர்சனத்திற்கு நன்றி அண்ணே!

    ReplyDelete
  14. உண்மைத்தமிழரே, சிம்ரன் இதுக்கு முன்னாடி பிதாமகன்ல அப்படி நடனம் ஆடி இருக்காங்க.

    நாடோடி இலக்கியன் இந்தப் படத்து சீனை தேவாசுரம் படத்தோட கம்பேர் பண்ணி இருக்காரே, ஒண்ணும் கண்டுக்க மாட்டிங்களா?

    ReplyDelete
  15. // T.V.Radhakrishnan said...
    சினிமா விமரிசனத்திற்குக் கூட இவ்வளவு பெரிய பதிவா? உ.த.,உங்களுக்கு பொறுமை அதிகம்தான்//]

    ஒரு பெரிய ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு

    ReplyDelete
  16. விநியோகஸ்தர்கள் வாங்காத்தால் ஜங்கரன் வாஙக்வில்லை.. முதலில் இருந்தே ஜங்கரன் தான் இந்த படத்தின் தயாரிப்பாளர். குஷ்பு.. பர்ஸ்ட் காப்பி தயாரிப்பாளர்.. ஜங்கரனின் பைனாஸ் பிரச்சனையினால் ரிலீஸ் செய்ய செட்டில் மெண்ட் செய்யாமல் இருந்ததால் லேட்..

    ReplyDelete
  17. .."பார்த்தேதீரவேண்டுமென்ற படம் அல்ல"

    ‘நந்தலாலா' திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்தவுடன் ‘மிஸ் பண்ணவே கூடாத படம் அது' என்பது புரிந்தது..

    விமர்சனத்துக்கும் தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete
  18. பதிவிட்டு விட்டு அண்ணன் உ.த எங்கு சென்று விட்டார். பின்னுட்டங்களுக்கு பதில் கூட போடாமல். எனது கணிணி crash ஆகி windows reinstal செய்து, தமிழ் எழுத்துகள் வெறும் சதுரம் சதுரமாக தெரிந்தது அதை சரி செய்து NHM Writerஐ intall செய்து இதை தட்டச்சுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

    //சிம்ரன் நடனமாடும்போது தொப்புள் காட்டாத ஒரே திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.//

    For you info. ஏற்கனவே பிதாமகன் படத்தில் அவர் வந்த ஒரே ஒரு பாடல் காட்சியில் தொப்புள் காட்டாமல் ஆடியிருக்கிறார்.

    ReplyDelete
  19. //சிம்ரன் நடனமாடும்போது தொப்புள் காட்டாத ஒரே திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ///

    தவறு பிதாமகன் படத்தில் ரீமிக்ஸ் பாடலுக்கும் தொப்புள் காட்டவில்லை.

    ReplyDelete
  20. நன்றி..

    கிகுஜீரோ.Sorry.

    நந்தலாலாவுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  21. //பார்க்கவே வேண்டாத திரைப்படம் அல்ல.. பார்த்தே தீர வேண்டிய படமும் இல்லை// :-))

    நன்றி உண்மைத்தமிழன்.

    நந்தலாலா பற்றி ....

    ReplyDelete
  22. என்னது எழுதி ரொம்ப நாளாச்சி....நிறைய மொக்கை படம் விமர்சிக்க கூட ஆள் இல்லாது இருக்கிறது...அதனால் உண்மைத் தமிழர் உடனடியாக களத்துக்கு வரவும்...

    ReplyDelete
  23. நான் follower ஆனவுடன் எழுதுவதை நிறுத்திய உண்மை தமிழனை கண்டித்து டீ குடிக்க போஹிறேன்.....

    ReplyDelete
  24. அண்ணாச்சி சீக்கிரம் ஏதாவது பதிவு போடுங்க

    ReplyDelete
  25. [[[நாடோடி இலக்கியன் said...

    //போரடிச்சா.. பொழுது போகலைன்னா.. கைல காசுக்குப் பஞ்சமில்லைன்னா.. போய் பாருங்க..!//
    :))

    //அதே ஊரில் ஒரு திருவிழாவுக்காக நடனமாட வரும் நாட்டியத் தாரகையாக சிம்ரன். சுந்தரும், விவேக்கும் சிம்ரனை கட்டாயப்படுத்தி நடனமாட வைத்ததால் கோபப்பட்டு தனது சலங்கையை கழட்டி எறிந்து இனி எப்போதும் நடனமாடப் போவதில்லை என்று சூளுரைக்கிறார் சிம்ரன்.//

    தேவாசுரம் படம் மாதிரியோ?]]]

    ஐயோ..

    ஏணி வைச்சாலும் எட்டாத படமாச்சே..!!!

    கதையின் ஒரு திருப்புமுனை மட்டுமே ஒரே மாதிரியான தோற்றம்..

    ReplyDelete
  26. [[[T.V.Radhakrishnan said...

    சினிமா விமரிசனத்திற்குக் கூட இவ்வளவு பெரிய பதிவா? உ.த., உங்களுக்கு பொறுமை அதிகம்தான்]]]

    ராதா ஸார்..

    இதைவிட பெரிசால்லாம் எழுதியிருக்கேன்..

    இதுல இவ்ளோதான் சரக்கு. அதனால கம்மி..!

    ReplyDelete
  27. [[[துபாய் ராஜா said...
    இந்த படம் சூட்டிங் நெல்லையில நடக்கும்போது உள்ளூர்காரங்க நிறையபேர் நடிக்கப்போனதா சொன்னாங்க.சுந்தரே நடிக்கலைன்ன போது அவங்கள்லாம் .... :))]]]

    நிறைய உள்ளூர் மக்கள் நடிச்சிருக்காங்க.. பின்னா காசு வாங்காம யார் நடிப்பாங்கோ சாமி.. நீங்களே சொல்லுங்க..!

    ReplyDelete
  28. [[[ஜெட்லி said...

    சிம்ரன் நடனமாடும்போது தொப்புள் காட்டாத ஒரே திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    :))]]]

    இல்லைன்னு பின்னாடி பின்னூட்டத்துல நிறைய பேர் சொல்லியிருக்கா ஜெட்லீ..

    ReplyDelete
  29. [[[அக்பர் said...

    :-)]]]

    நன்றி அக்பர்..

    ReplyDelete
  30. [[[கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

    நீங்கள் நல்ல படங்களுக்கு மட்டும் விமர்சனம் எழுதினால் மகிழ்வோம்.
    இப்போது சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.]]]

    ஆஹா.. இப்படியும் ஒரு நண்பரா..?

    கார்த்திக் மிக்க நன்றிகள்..!

    திரையுலகில் இருப்பதால் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.. கோபிக்க வேண்டாம்.

    கமர்ஷியல் திரைப்படங்களை பார்க்க விரும்புவர்கள் போய் பார்க்கட்டுமே..! அதனால்தான் எழுதினேன்..

    தங்களுடைய எதிர்பார்ப்பிற்கு என்னுடைய நன்றி..

    ReplyDelete
  31. [[[SP.VR. SUBBIAH said...

    ////அதைக் குடித்து சிலர் சிவலோகத்திற்கு கப்பல் ஏறிப் போய்விட.. /////

    கப்பலிலா? என்ன ராஜா சொல்கிறீர்கள்?]]]

    ஆமா வாத்தியாரே..

    அந்த ஊர்ப்பக்கமெல்லாம் அந்த மாதிரி ஆளுகளை கப்பல் மாதிரி பூப்பல்லக்கு செஞ்சுதான் கொண்டு போவாங்க.. அதான் இப்படி எழுதினேன்..!

    ReplyDelete
  32. [[[சம்பத் said...

    //போரடிச்சா.. பொழுது போகலைன்னா.. கைல காசுக்குப் பஞ்சமில்லைன்னா.. போய் பாருங்க..!//

    அப்ப உங்ககிட்ட காசுக்கு பஞ்சமில்ல...ஒரு 500 ரூபா கைமாத்தா கொடுங்களேன்...]]]

    என்கிட்டயே கைமாத்தா..?

    சம்பத்து இது நியாயமில்லை. யாருக்கும் கை மாத்து கொடுக்குற அளவுக்கு என் அப்பன் முருகன் என்னை வைக்க மாட்டேங்குறான்..!

    நீங்க அவன்கிட்ட வேண்டிக்குங்க. அவன் எனக்கு செஞ்சான்னா நான் உங்களுக்கு செய்யுறேன்..!

    ReplyDelete
  33. [[[சம்பத் said...

    //விவேக் மட்டும் இந்தப் படத்துல இல்லேன்னா..!///

    நிஜமாவேவா?]]]

    சத்தியமா.. அதுதான் உண்மை.. அவர் மட்டும் இல்லேன்னா படம் பப்படம்தான்..!

    ReplyDelete
  34. [[[சம்பத் said...

    என்னோட மோதி விளையாடு விமர்சனம் இங்கே...

    http://tamilsam.blogspot.com/2009/07/blog-post_24.html]]]

    வர்றேன்.. வர்றேன்..

    ReplyDelete
  35. [[[கானா பிரபா said...

    தல

    இப்படி ரிஸ்க் எடுத்து இந்த மாதிரி படம் பார்க்குறது உங்களுக்கு ரஸ்கு சாப்பிடுறது போல, த்ச்சூ த்ச்சூ]]]

    ஐயோ கானா தம்பி..

    உங்களுக்காக.. உங்க நன்மைக்காக.. உங்க நலனுக்காக கொஞ்சம் சித்ரவதையை தாங்குறது இந்த அண்ணனுக்கு ரொம்பவே புடிக்குது..!

    ReplyDelete
  36. [[[டக்ளஸ்... said...
    அண்ணே, இப்பிடி கதையப் பூரா சொல்றீகளே..? பார்த்து, குஷ்பூ அக்கா உங்க மேல கேஸ் போடப் போறாக.]]]

    போடட்டுமே..!

    ஒரே நாள்ல அகில உலகப் புகழ் பெற்று விடலாமே..!

    ReplyDelete
  37. [[[Anbu said...

    \\\\டக்ளஸ்... said...
    அண்ணே, இப்பிடி கதையப் பூரா சொல்றீகளே..? பார்த்து, குஷ்பூ அக்கா உங்க மேல கேஸ் போடப் போறாக.///

    REPEAT...]]]

    டக்ளஸுக்கு சொன்ன பதில் இங்கேயும் ரிப்பீட்டு..!

    ReplyDelete
  38. [[[எவனோ ஒருவன் said...

    விரிரிரிரிவான விமர்சனத்திற்கு நன்றி அண்ணே!]]]

    நன்றி தம்பீ..!

    ReplyDelete
  39. [[[ராஜா | KVR said...
    உண்மைத்தமிழரே, சிம்ரன் இதுக்கு முன்னாடி பிதாமகன்ல அப்படி நடனம் ஆடி இருக்காங்க.]]]

    அப்படியும் ஒரு ஷாட்ல நல்லாத் தெரியும்.. திரும்பவும் பாருங்க..

    [[[நாடோடி இலக்கியன் இந்தப் படத்து சீனை தேவாசுரம் படத்தோட கம்பேர் பண்ணி இருக்காரே, ஒண்ணும் கண்டுக்க மாட்டிங்களா?]]]

    என்னத்த சொல்றது..? நேர்ல வரட்டும்.. தீர்த்துறலாம்..

    ReplyDelete
  40. [[[அத்திரி said...

    // T.V.Radhakrishnan said...
    சினிமா விமரிசனத்திற்குக் கூட இவ்வளவு பெரிய பதிவா? உ.த.,உங்களுக்கு பொறுமை அதிகம்தான்//]

    ஒரு பெரிய ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு]]]

    ஒரு பெரிய நன்றிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறி!!!

    ReplyDelete
  41. [[[Cable Sankar said...
    விநியோகஸ்தர்கள் வாங்காத்தால் ஜங்கரன் வாஙக்வில்லை.. முதலில் இருந்தே ஜங்கரன் தான் இந்த படத்தின் தயாரிப்பாளர். குஷ்பு.. பர்ஸ்ட் காப்பி தயாரிப்பாளர்.. ஜங்கரனின் பைனாஸ் பிரச்சனையினால் ரிலீஸ் செய்ய செட்டில்மெண்ட் செய்யாமல் இருந்ததால் லேட்..]]]

    தகவலுக்கு நன்றி கேபிளு..!

    ReplyDelete
  42. [[[மாதேவி said...

    .."பார்த்தே தீர வேண்டுமென்ற படம் அல்ல"

    ‘நந்தலாலா' திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்தவுடன் ‘மிஸ் பண்ணவே கூடாத படம் அது' என்பது புரிந்தது..

    விமர்சனத்துக்கும் தகவலுக்கும் நன்றி.]]]

    நன்றி மாதேவி..!

    ReplyDelete
  43. [[[நாஞ்சில் நாதம் said...
    :)))]]]

    நன்றி நாஞ்சில் நாதம் அவர்களே..!

    ReplyDelete
  44. [[[ananth said...

    பதிவிட்டு விட்டு அண்ணன் உ.த எங்கு சென்று விட்டார். பின்னுட்டங்களுக்கு பதில் கூட போடாமல். எனது கணிணி crash ஆகி windows reinstal செய்து, தமிழ் எழுத்துகள் வெறும் சதுரம் சதுரமாக தெரிந்தது அதை சரி செய்து NHM Writerஐ intall செய்து இதை தட்டச்சுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.]]]

    என்னடா இது எனக்குத்தான் முருகன் சோதனையைக் கொடுப்பான் என்றால் என் நண்பர் ஆனந்துக்குமா?

    //சிம்ரன் நடனமாடும்போது தொப்புள் காட்டாத ஒரே திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.//

    For you info. ஏற்கனவே பிதாமகன் படத்தில் அவர் வந்த ஒரே ஒரு பாடல் காட்சியில் தொப்புள் காட்டாமல் ஆடியிருக்கிறார்.]]]

    ஆனால் அதிலும் நான் பார்த்திருக்கிறனே..!

    ReplyDelete
  45. [[[வந்தியத்தேவன் said...

    //சிம்ரன் நடனமாடும்போது தொப்புள் காட்டாத ஒரே திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ///

    தவறு பிதாமகன் படத்தில் ரீமிக்ஸ் பாடலுக்கும் தொப்புள் காட்டவில்லை.]]]

    ஐயையோ.. எத்தனை பேரு இந்த விஷயத்துல தெளிவா இருக்காங்கன்னு பாருங்கப்பா..!

    ReplyDelete
  46. [[[வண்ணத்துபூச்சியார் said...

    நன்றி..

    கிகுஜீரோ.Sorry.

    நந்தலாலாவுக்காக காத்திருக்கிறேன்.]]]

    நானும்தான் பூச்சியாரே..!

    ReplyDelete
  47. [[[சிங்கக்குட்டி said...

    //பார்க்கவே வேண்டாத திரைப்படம் அல்ல.. பார்த்தே தீர வேண்டிய படமும் இல்லை// :-))

    நன்றி உண்மைத்தமிழன்.

    நந்தலாலா பற்றி ....]]]

    எக்கச்சக்க எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது அத்திரைப்படம்..

    ReplyDelete
  48. [[[அது சரி said...
    என்னது எழுதி ரொம்ப நாளாச்சி....நிறைய மொக்கை படம் விமர்சிக்க கூட ஆள் இல்லாது இருக்கிறது...அதனால் உண்மைத் தமிழர் உடனடியாக களத்துக்கு வரவும்...]]]

    வந்துவிட்டேன் அதுசரியாரே..!

    ReplyDelete
  49. [[[ராஜகோபால் said...
    நான் follower ஆனவுடன் எழுதுவதை நிறுத்திய உண்மை தமிழனை கண்டித்து டீ குடிக்க போஹிறேன்.....]]]

    நல்லவேளை டாஸ்மாக் கடைக்குப் போறேன்னு சொல்லலையே.. அதுவரைக்கும் சந்தோஷம்..

    பாலோயர் ஆனதற்கு எனது மனமார்ந்த அனுதாபங்கள்..

    ReplyDelete
  50. [[[ராஜகோபால் said...
    அண்ணாச்சி சீக்கிரம் ஏதாவது பதிவு போடுங்க]]]

    போட்ருவோம்.. விடுங்க.. அதான் வந்துச்சுல்ல..!

    ReplyDelete
  51. பதிவர்களிடம் தாமதமான எனது பின்னூட்ட பதில்களுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    காரணத்தை அடுத்த பதிவில் விளக்குகிறேன்..!

    நன்றிகள் கோடி..!

    ReplyDelete
  52. நந்தலாலாவிற்கும் இந்த படத்திற்கும் சம்மந்தம் உண்டா ??

    என் பதிவு

    http://butterflysurya.blogspot.com/search/label/Kikujiro

    டிரைலர் எப்படி..??

    ReplyDelete
  53. ///வண்ணத்துபூச்சியார் said...

    நந்தலாலாவிற்கும் இந்த படத்திற்கும் சம்மந்தம் உண்டா ??
    என் பதிவு
    http://butterflysurya.blogspot.com/search/label/Kikujiro
    டிரைலர் எப்படி..??///

    தெரியல பிரதர்..

    படம் வந்தா தெரிஞ்சுற போகுது.. வெயிட் பண்ணுங்க..!

    ReplyDelete