Pages

Wednesday, July 22, 2009

ஒரு நட்பு முறிந்த சோகக் கதையைக் கேளுங்க..!

21-07-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


ரொம்ப நாளாக தொடர்பு கொள்ளாமல் இருந்த தம்பி சக்தி(புனை பெயர்) இன்று காலை திடீரென்று தொடர்பு கொண்டு தடித்த வார்த்தைகளால் கதறினான்.

“அண்ணே.. நம்ம கோபி(புனை பெயர்) இப்படி செய்வான்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலே.. மானம், மரியாதை போச்சுண்ணே.. வீட்ல வொய்ப் திட்டித் தீர்க்குறா.. போன் மேல போன் வருது.. மாமனார் ஊர்ல இருந்து கிளம்பிட்டாராம்.. மாமியாரே நொச்சுப் பிடிச்சாப்புல பேசுறாங்க.. இவனுக்கு ஏண்ணே இந்த வேலை..? ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லிட்டு வர வேண்டியதுதாண்ணே..” என்றான்.

இவனது போனை எதிர்பார்த்து நான் காத்திருந்ததால் எனக்கு ஒன்றும் பெரிய அதிர்ச்சியோ, ஆச்சரியமோ இல்லை. இவனும் இவனது சார்பு கதையை முழுதாகச் சொல்லி முடிக்கட்டும் என்று காத்திருந்தேன். எதிர்பார்த்தது போலவே இவனும் அவனது கதையைச் சொன்னான்.

அதற்கு முன்பாக இருவரின் கடந்த கால வாழ்க்கைக் கதையை சுருக்கமாகப் பார்ப்போம். கோபியும், சக்தியும் நீண்ட கால குடும்பத்து நண்பர்கள். இருவர் வீடும் அடுத்தடுத்தத் தெருக்களில்.. ஒரே பள்ளியில் ஒன்றாகவே படித்து வளர்ந்தவர்கள். பள்ளி நாட்களில் சக்தியின் வீட்டில் சமைக்கவில்லையெனில் அவன் நேராக கோபியின் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு மதியம் சோத்தையும் அங்கேயே கட்டி பார்சல் செய்து எடுத்துச் செல்வான்.

அதேபோலத்தான் கோபியும். தன் வீட்டுக்கு காய்கறி வாங்கப் போகும்போது அவர்கள் அழைக்கிறார்களோ இல்லையோ சக்தியின் வீட்டுக்கும் நேரில் சென்று அவர்களிடமும் லிஸ்ட் வாங்கிக் கொண்டு அவர்களுக்கும் வேண்டிய பொருட்களை வாங்கிக் கொடுப்பான். இருவர் குடும்பமும் இந்த அளவுக்கு அன்னியோண்யம்..

காலம்தான் எல்லாவற்றையும் மாற்றும் சக்தி படைத்ததே.. கோபி படிப்பில் பின் தங்கி தனது அப்பாவின் மரக்கடையை பார்த்துக் கொள்ளச் சென்றான். சக்தி மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து முடித்து சென்னைக்குச் சென்றுவிட்டான்.

அதன் பின்னர் சக்தியின் குடும்பத்தில் ஒருவனானான் கோபி. அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அவன்தான் செய்வான். சக்தியின் அப்பாவும், அம்மாவும் டூவீலரில் சென்றபோது விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இருந்தபோது தனது மரக்கடையைக்கூட விட்டுவிட்டு பக்கத்திலேயே இருந்து மகனைப் போல பார்த்துக் கொண்டான் கோபி.

சக்தி ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்னையில் இருந்து வந்து பார்த்துவிட்டு செல்வான். சக்திக்கு உடன் பிறந்தவர்கள் யாருமில்லை என்பதால் வயதான அவனது தாய், தந்தையர்க்கு செய்ய வேண்டிய அனைத்துவித உதவிகளுக்கும் அப்போதிலிருந்து கோபிதான் கை கொடுத்து வந்தான்.

சக்தி வேளச்சேரியில் சிங்கிள் பெட்ரூம் பிளாட் வாங்க முனைந்தான். பிளாட்டை விற்க வந்தவர் முன்பணமாக எட்டு லட்சம் ரூபாய் கொடுத்தால் பிற்பாடு மீதித் தொகையை தவணையில் வாங்கிக் கொள்ளத் தயார் என்றார். உடனேயே விழுந்தடித்து ஊருக்கு ஓடி வந்த சக்தி கோபியிடமும், அவனது தந்தையிடமும் பேசி எட்டு லட்சம் ரூபாயை பைசா வட்டியில்லாமல் வாங்கிச் சென்று வீட்டை பேசி முடித்து குடியேறினான்.

வீடு கிடைத்தவுடன் அவனாகவே பெண் தேடினான் சக்தி. அவனது அலுவலகத்திலேயே வேலை பார்த்த ஒரு பெண்ணை காதலித்தான். திருமணம் செய்ய அவனது அப்பா, அம்மாவிடம் கேட்க அனுமதி மறுத்தார்கள். முடியவே முடியாது என்று சாதித்தார்கள்.

இப்போதும் கோபிதான் கை கொடுத்து அவனுக்கு ஆதரவுக் கரம் கொடுத்து அவனை ரிஜிஸ்தர் மேரேஜ் செய்து கொள்ளச் சொல்லி ஆலோசனை சொன்னான். சக்தியின் பெற்றோரை தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டான். சக்தியும் தனது நண்பர்கள் உதவியோடு சென்னையில் தனது காதலியை மணந்து இல்லற வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டான். இது நடந்து மூன்று மாதங்களாகிவிட்டன.

சக்தியின் பெற்றோரோ அவன் தங்களைப் பார்க்க வரவேகூடாது என்று சொல்லிவிட்டார்கள். அங்கே அவர்களுக்கு கோபியே போதும் என்று அவர்கள் சொல்லிவிட இப்போது சக்திக்கு கோபியின் மீது ஒரு இனம் புரியாத கோபம் முளைத்துவிட்டது. ஆனாலும் இருவரும் அவ்வப்போது போனில் பேசிக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.

சமீபத்தில்.. அதாவது நேற்றைய தினம் காலை கோபி சென்னைக்கு விஜயம் செய்திருக்கிறான். தொழில் விஷயமாக புதுப்பேட்டை பகுதிக்கு வந்தவன், அங்கேயிருந்து கால்டாக்சியில் வேளச்சேரியில் சக்தியின் வீட்டுக்கு வந்திருக்கிறான் கோபி.

அவன் வந்த நேரம் பாருங்க.. சக்தியின் துணைவி வீட்டின் முன் கதவை லேசாகத் திறந்துவைத்துவிட்டு துவைத்த துணிகளை காயப்போடுவதற்காக வீட்டின் பின்புறமாகச் சென்றிருக்கிறார். அந்த வீடுதான் என்பதை சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படத்தின் மூலம் தெரிந்து கொண்ட கோபி விறுவிறுவென்று வீட்டுக்குள் நுழைந்தவன் பெட்டியை வைத்துவிட்டு அவசரமாக பாத்ரூம் போக வேண்டியிருந்த கடமை இருந்ததால் அதற்கு சென்றிருக்கிறான்.

இவன் உள்ளே போன நேரம் சக்தியின் துணைவி வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். பாத்ரூமில் தண்ணி கொட்டுவதை பார்த்து திகைத்திருக்கிறார். லேசாக பயந்து போய் வெளியில் வந்து நின்று பார்க்க நம்ம கோபியண்ணன்.. அலட்சியமாக அறைகளை நோட்டம் விட்டபடியே சமையல்கட்டுக்குள்ளும் நுழைந்திருக்கிறார்.

என்ன.. ஏதுவென்று யோசிக்க முடியாத சக்தியின் துணைவி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்ல.. அவர்கள் ஐடியாபடி கதவை இழுத்து வெளிப்புறமாகச் சாத்தியிருக்கிறார்கள். திருடன் ஒருவன் வந்திருக்கிறான் என்று திடமாக நம்பி போலீஸுக்கும் தகவல் கொடுத்துவிட்டார்கள்.

அதற்குள்ளாக வீட்டின் உள்ளேயிருந்த சிட்அவுட் பக்கம் போய் நின்று கொண்டு கோபி ரிலாக்ஸாக சிகரெட் பிடித்துக் கொண்டிருக்க.. ஒட்டு மொத்த பிளாட்டும் அந்த பக்கமாக வந்து அவனை வேடிக்கை பார்த்திருக்கிறது.

அவனுக்குள் ஏதோ ஒன்று சந்தேகப்பட வேகமாக வந்து கதவைத் திறக்க முயன்றிருக்கிறான். முடியவில்லை. ஏதோ சந்தேகப்பட்டவன் சிட்அவுட் பக்கம் வந்து நிற்க.. அவன் தப்பிக்க முயல்வதாக நினைத்து கீழே நின்றிருந்த அப்பாவி பொதுஜனங்கள் கைக்கு கிடைத்ததை எடுத்துக் கொண்டு தயாராக நிற்க.. பயலுக்கு கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை.

மக்களின் நண்பனான காவல்துறை மின்னல் வேகத்தில் வந்திருக்கிறது. காவல்துறை வந்து கதவைத் திறந்ததும் உள்ளே நுழைந்த இரண்டு காவலர்களைப் பார்த்து கோபி திகைத்துப் போய் நின்றிருக்கிறான். தான் சக்தியை பார்க்க வந்ததாகவும், தான் அவனது நண்பன் என்றும் ஊரிலிருந்து வந்திருக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறான்.

காவல்துறை நம்பாமல் அவனது செல்போனில் இருந்து சக்திக்கு போன் செய்து சொல்லியிருக்கிறது. இடையில் சக்தியின் மனைவியிடம் போலீஸ் கோபியிடம் பேசும்படி சொல்ல “அவர் யாருண்ணே தெரியாது. நான் எப்படி பேசுறது.. என் ஹஸ்பெண்ட் வரட்டும்.. அவரே பேசுவாரு..” என்று சொல்லிவிட கோபிக்கு அவமானத்துடன் கொஞ்சம் வெட்கமும் சேர்ந்துவிட்டது.

ஒட்டு மொத்த பிளாட்டும் உள்ளே வந்து “கதவு திறந்திருந்தா உள்ள வந்தர்றதா..? யார், என்னன்னு கேட்க வேணாமா? என்னய்யா நினைச்சிட்டிருக்க..? என்ன படிச்சிருக்க..” என்றெல்லாம் தாறுமாறான கேள்விகளோடு பயலை எகிறிவிட்டன.

சக்தி அரக்கப் பரக்க ஆட்டோவில் வீடு திரும்பியவன் கோபியை தனது நண்பன் என்று போலீஸிடம் அடையாளம் காட்ட.. போலீஸ் கோபியை லேசாக முறைத்துவிட்டு கடுமையாகத் திட்டித் தீர்த்துவிட்டுப் போனார்கள்.

சக்தியின் மனைவி ஒரு வார்த்தைகூட பேசாமல், ஸாரி என்றுகூட சொல்லாமல் பெட்ரூமிற்கு சென்று கதவை அடைத்துக் கொள்ள.. கோபிக்கு தன்மானம் பொங்கிவிட்டது. சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு அப்படியே தரையிரங்கி கோயம்பேட்டுக்கு ஆட்டோ பிடித்துவிட்டான்.

சக்திக்கு தனது மனைவியை சமாதானப்படுத்துவதா.. அல்லது கோபியை கூல் செய்வதா என்ற கவலையில் மனைவி மீது பாசம் அதிகமாகி வீட்டுக்குள்ளேயே இருந்துவிட.. இதுவும் கோபிக்கு கொஞ்சூண்டு வெறியை ஏற்படுத்திவிட்டது.

“முப்பது வருஷ நட்பு முப்பதே நிமிஷத்துல குழி தோண்டி புதைச்சுட்டாண்டா..” என்று ஒரு புல் ஓல்டு மாங்க் அடித்துவிட்டு என் குறை காதும் கிழிவதைப் போல் அழுதான் கோபி.

அவன் பேசிய பின்புதான் நம்ம சக்தி தம்பியும் என்னுடன் பேசி “கோபியை கோச்சுக்க வேண்டாம்னு சொல்லுங்கண்ணே..” என்கிறான்.

“ஏண்டா வெங்காயம்.. ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகிருக்கீங்களே.. உன் ஆரூயிர் நண்பன்னு அவனைப் பத்தி நல்லவிதமா உன் வொய்ப்கிட்ட சொல்லி வைச்சிருக்கலாம்ல.. லவ் பண்ணும்போதோ, கல்யாணம் பண்ணிக்கிட்ட பின்னாடியோ வொய்ப்கிட்ட போன்ல பேச வைச்சிருக்கலாம்ல..”ன்னு கேட்டேன்.

“நம்ம கோபிய பத்திதான் உனக்கே தெரியுமேண்ணே.. ஏதாவது உளறினாலும் உளறிருவான்னு நினைச்சுத்தான் தவிர்த்துட்டண்ணே..” என்று அராஜகத்தனமாகவே சொல்கிறான் சக்தி.

கோபியோ, “நான் செஞ்சது தப்புதாண்ணே.. தப்பாவே இருக்கட்டும். நான் கீழ இறங்கி வந்துட்டனே.. ஒரு வார்த்தை.. ஒரு வார்த்தை பின்னாடி வந்து பேசியிருக்கலாம்ல.. அஞ்சு நிமிஷம் நின்னு பார்த்தேண்ணே.. வரலைண்ணே அந்த நாயி.. அதான் நம்ம பொழைப்பை பார்க்கலாம்னு திரும்பி வந்துட்டேன். போதும்ணே அவன் சகவாசம். உணர்த்திட்டாண்ணா படிச்சவனோட பிரெண்ட்ஷிப்புன்னா என்னன்னு..? நான் படிக்காத முட்டாளாவே இருந்துட்டுப் போறேன்..” - நடு மண்டையில் அடிப்பதைப்போல் ஒரு போடு போடுகிறான் கோபி.

இப்போது சக்திக்கு இது வேறு விதமாகத் திசை மாறி எட்டு லட்சம் ரூபாய் மேட்டரில் தனக்கு ஆப்பு வருமா என்பதுதான் பெரும் கவலையாக இருக்கிறது..

எனக்கோ சக்தியின் பெற்றோருக்கு ஏதாவது சிக்கல்கள் கோபியால் வந்துவிடுமோ என்று கவலையாக இருக்கிறது.

இந்த லட்சணத்தில் இரண்டு பேரும் மாறி, மாறி “நீ பேசு.. நீ பேசுண்ணே..”ன்னு சொல்லி என் உயிரை எடுப்பதில் பொங்கி வந்த கோபத்தில் இதையும் டைப்பு செய்து தொலைத்துவிட்டேன். நமக்குத்தான் டைப்பு ஹாபியாச்சே..

அட்வைஸாவது மண்ணாவது.. !

இரண்டு பேர்கிட்டேயும் “ஒரு தெலுங்கு படத்தோட டிஸ்கஷனுக்கு ஹைதராபாத் போறேன்.. ஒரு வாரத்துல வந்திருவேன்.. வந்தவுடனே நேர்ல வந்து பேசுறேன்.. அதுவரைக்கும் ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்காம இருங்க. வந்து பேசிக்கலாம்...”னு சொல்லி வைத்திருக்கிறேன்.

உண்மையா ரெண்டு பேர்கிட்டேயுமே நான் எதையும் பேசப் போறதில்லை. அப்படியே விஷயத்தை ஊறப் போட்டு, ஆறப் போட்டுட்டு லூஸ்ல விட்டுற வேண்டியதுதான்..

ஏன்னா இந்தக் காலத்துப் பயலுகளை நம்பவே முடியாது.. எந்த நேரத்துல எப்படி கோஷ்டி சேருவாங்க.. எப்ப அத்து விடுவாங்கன்னே தெரியலை.. நமக்கெதுக்கு வம்பு..?

நாளைக்கே ஒரு 'குவார்ட்டராலயோ', 'ஆஃபா'லயோ, 'புல்'லாலயோ பிரச்சினை முடிஞ்சாலும் முடிஞ்சிரும்..!

இடைல போய் நாம அக்கறையாக அவங்களுக்காக பேசி.. கடைசியா அவங்களுக்கே சைடிஷ்ஷா நாம ஆயிறக்கூடாது பாருங்க..


ஏற்கெனவே அனுபவம் பலதும் இருக்கிறதாலதான் இந்த ஐடியா..!!!

என்ன நான் சொல்றது..?

48 comments:

  1. // எனக்கோ சக்தியின் பெற்றோருக்கு ஏதாவது சிக்கல்கள் கோபியால் வந்துவிடுமோ என்று கவலையாக இருக்கிறது.

    கோபி அப்படி பண்ண மாட்டாருன்னு எனக்கு தோணுதுங்க.

    ReplyDelete
  2. அண்ணே ஒரு மனுசனுக்கு இம்புட்டு தெனாவட்டு ஆகாதுண்ணே!! நண்பனுங்க சண்டை போட்டதுக்கப்புறமும் நீங்க சமாதானம் பண்ணி வைக்காம இப்படி பதிவு போட்டது சரியில்ல. இப்பவே கிளம்பி போய் கோபியை சமாதானம் பண்ணி சக்தி கிட்ட கூட்டிட்டு வந்து விடுங்க. அவங்க கட்டிப்புடிச்சு அழுது 'நீ ஏண்டா எங்க கதையெல்லாம் ப்ளாக்ல எழுதுனேன்னு' மொத்தினாங்கன்னா அதையும் முழுநீளப் பதிவாப் போடுங்கண்ணே. படிக்குறதுக்கு ஒரு சுவாரஸ்யம் வேணாமா? :-)

    ReplyDelete
  3. நான் கூட உங்கப் பதிவை முழுசா படிச்சுட்ட யாரோ ஒருத்தர்தானோன்னு மொதல்ல நெனச்சுட்டேண்ணே!!:-) அதானே பார்த்தேன் உங்க நண்பங்க யாராவது உங்க பதிவை வாசிச்சிட்டும் நண்பர்களாவே இருப்பாங்களா என்ன? :-)

    ReplyDelete
  4. அண்ணே... நண்பர்கள் கதைய பதிவு போடாதீங்கண்ணே... எல்லோர் பார்வையும் ஒண்ணாருக்காது. நான் அப்படிப் போட்ட பதிவு ஒண்ணுல என் நண்பனோட குடும்பம் கஷ்டப்பட்டு முன்னேறின கதைய எழுதினேன்.. எல்லோரும் பாராட்டினாங்க. என் நண்பன் என்னைய துரோகியா பார்த்தான்...

    ReplyDelete
  5. அற்புதம், அற்புதம்.

    படிக்கிறத நிப்பாட்ட முடியாயல, கதை அவ்வளவு வேகம் - பஸ்சுக்கு நேரமாச்சி - ஓடணும்.

    ReplyDelete
  6. கணவன் மனைவி குடும்ப தகராறு, உறவினர் பிரச்சினை என்றால் தாங்கள் சொல்வது/செய்வது சரி. ஆனால் இது இரு நண்பர்கள் சம்பந்தப்பட்டது. ஏதாவது மத்தியஸ்தம் செய்து பாருங்கள். சற்று கவணமாக கையாளுங்கள்.

    ReplyDelete
  7. \\Labels: பதிவர் சதுரம், பதிவர் வட்டம்\\

    எனக்கு இங்கதான் சந்தேகம் வருதுண்ணே...!

    ReplyDelete
  8. எனக்கு எல்லாம் புரிஞ்சி போச்சு.... புரிஞ்சு போச்சு...

    ReplyDelete
  9. ஹூம்... என்ன புரிஞ்சதுன்னா கேட்குறீங்க...?
    அதான் அண்ணாத்தே "புனைவு" அப்படின்னு போட்டிருக்காருல்லா தெளீவா....

    ReplyDelete
  10. //அனுபவம், நட்பு, பதிவர் சதுரம், பதிவர் வட்டம், புனைவுகள்//

    கடைசியா இருக்குற புனைவுகள் எங்களை கூமுட்டையாக்குறதுக்கா!

    ReplyDelete
  11. சக்தி செய்தது தப்பு......... அவர் கோபியைத் தடுத்திருக்கணும்......

    // எனக்கோ சக்தியின் பெற்றோருக்கு ஏதாவது சிக்கல்கள் கோபியால் வந்துவிடுமோ என்று கவலையாக இருக்கிறது.//

    கோபி அப்படிப் பட்டவராகத் தெரியவில்லை..... அவர் வெள்ளந்தின்னே......

    ReplyDelete
  12. கதை நல்லாயிருக்கு..

    ReplyDelete
  13. You are invited to be a part of the team that develops Nighantu.in the online dictionary for bloggers which consist of meanings of words in English, Malayalam, Tamil, Hindi and other local languages in India. You will be provided an unique link back to your blog to each words that you add in the dictionary. Read more at the following link
    http://www.nighantu.in/2009/07/attention-hindi-tamil-malayalam-telugu.html
    (sorry to post a comment which is not relevant to the article, you may delete it after reading)

    ReplyDelete
  14. /
    நமக்குத்தான் டைப்பு ஹாபியாச்சே..
    /

    ஆமாங்ணா படிக்கிறவங்களுக்கு ச்ச ஸ்க்ரால் பண்றவங்களுக்குதான் நாக்கு தள்ளிடுதாம்
    :)

    ReplyDelete
  15. \\\நமக்குத்தான் டைப்பு ஹாபியாச்சே///

    :)

    ReplyDelete
  16. //நமக்குத்தான் டைப்பு ஹாபியாச்சே..
    /

    ஆமாங்ணா படிக்கிறவங்களுக்கு ச்ச ஸ்க்ரால் பண்றவங்களுக்குதான் நாக்கு தள்ளிடுதாம்
    :)//

    விரல் நீண்டு போச்சுங்ண்ணா ஸ்க்ரால் பண்ணி பண்ணி.....

    ReplyDelete
  17. //அவங்க கட்டிப்புடிச்சு அழுது 'நீ ஏண்டா எங்க கதையெல்லாம் ப்ளாக்ல எழுதுனேன்னு' மொத்தினாங்கன்னா அதையும் முழுநீளப் பதிவாப் போடுங்கண்ணே. படிக்குறதுக்கு ஒரு சுவாரஸ்யம் வேணாமா? :-)//
    :-)))))))))

    ReplyDelete
  18. எங்க தல உண்மைத்தமிழன் அவர்களின் இணைய தொடர்பு வசதி பழுது பட்டு உள்ளது. அதனால் அண்ணனால் ஒரு பத்து நாட்களுக்கு பதிவு பக்கம் எட்டி பார்க்க முடியாத நிலை. பழுது நீக்க பட்ட பிறகு அண்ணன் தொடர்ந்து இயங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதுவரை நண்பர்களும், அன்பர்களும், ரசிகர்களும் பொறுமை காத்து அண்ணனுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
  19. எங்க தல உண்மைத்தமிழன் அவர்களின் இணைய தொடர்பு வசதி பழுது பட்டு உள்ளது. அதனால் அண்ணனால் ஒரு பத்து நாட்களுக்கு பதிவு பக்கம் எட்டி பார்க்க முடியாத நிலை. பழுது நீக்க பட்ட பிறகு அண்ணன் தொடர்ந்து இயங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதுவரை நண்பர்களும், அன்பர்களும், ரசிகர்களும் பொறுமை காத்து அண்ணனுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
  20. ////நாளைக்கே ஒரு 'குவார்ட்டராலயோ', 'ஆஃபா'லயோ, 'புல்'லாலயோ பிரச்சினை முடிஞ்சாலும் முடிஞ்சிரும்..!
    இடைல போய் நாம அக்கறையாக அவங்களுக்காக பேசி.. கடைசியா அவங்களுக்கே சைடிஷ்ஷா நாம ஆயிறக்கூடாது பாருங்க..
    ஏற்கெனவே அனுபவம் பலதும் இருக்கிறதாலதான் இந்த ஐடியா..!!!/////

    அருமையான முடிவு!
    இதைத்தான் பட்டறிவு என்பார்கள்!

    ”பட்டினிக்குத் தீனி
    கெட்டபின்னே ஞானி”
    - கவியரசர் கண்ணதாசன்

    ReplyDelete
  21. கதை அருமை!

    ஆனா அந்த எட்டு லட்சம் என்ன ஆச்சுதுன்னு இன்னொரு இடுகையிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.

    ReplyDelete
  22. எந்த சீரியல் அண்ணே இது !!

    ReplyDelete
  23. சக்தியின் மனைவி வெறுமனே ஒரு சாரி சொல்லியிருந்தாக்கூட மேட்டர் இவ்வளவு சீரியசாகி இருக்காது.

    எது எப்படியானாலும் எட்டு லட்சம் திருப்பித் தர வேண்டியதுதானே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  24. ///Vee said...

    //எனக்கோ சக்தியின் பெற்றோருக்கு ஏதாவது சிக்கல்கள் கோபியால் வந்துவிடுமோ என்று கவலையாக இருக்கிறது.//

    கோபி அப்படி பண்ண மாட்டாருன்னு எனக்கு தோணுதுங்க.///

    நானும் அப்படித்தான் நினைச்சேன்.. ஆனா விஷயம் கேள்விப்பட்டு கோபியோட உடன்பிறப்புக்கள் கொதிச்சுப் போய் பஞ்சாயத்தைக் கூட்டிட்டாங்களாம்..!

    இப்பவும் நான் எஸ்கேப்பாயிட்டேன்..!

    ReplyDelete
  25. [[[ஆசிப் மீரான் said...
    அண்ணே ஒரு மனுசனுக்கு இம்புட்டு தெனாவட்டு ஆகாதுண்ணே!! நண்பனுங்க சண்டை போட்டதுக்கப்புறமும் நீங்க சமாதானம் பண்ணி வைக்காம இப்படி பதிவு போட்டது சரியில்ல. இப்பவே கிளம்பி போய் கோபியை சமாதானம் பண்ணி சக்திகிட்ட கூட்டிட்டு வந்து விடுங்க. அவங்க கட்டிப்புடிச்சு அழுது 'நீ ஏண்டா எங்க கதையெல்லாம் ப்ளாக்ல எழுதுனேன்னு' மொத்தினாங்கன்னா அதையும் முழு நீளப் பதிவாப் போடுங்கண்ணே. படிக்குறதுக்கு ஒரு சுவாரஸ்யம் வேணாமா? :-)]]]

    அண்ணாச்சி..

    ரெண்டு பேருமே இணையம் பக்கம் மேயவே மாட்டாங்க.. அதான் தைரியமா போட்டிருக்கேன்..!

    ReplyDelete
  26. [[[ஆசிப் மீரான் said...
    நான்கூட உங்கப் பதிவை முழுசா படிச்சுட்ட யாரோ ஒருத்தர்தானோன்னு மொதல்ல நெனச்சுட்டேண்ணே!!:-) அதானே பார்த்தேன் உங்க நண்பங்க யாராவது உங்க பதிவை வாசிச்சிட்டும் நண்பர்களாவே இருப்பாங்களா என்ன? :-)]]]

    அதான் நீங்க இருக்கீகளே அண்ணாச்சி.. போதாதா..?!!!

    ReplyDelete
  27. [[[Keith Kumarasamy said...
    அண்ணே... நண்பர்கள் கதைய பதிவு போடாதீங்கண்ணே... எல்லோர் பார்வையும் ஒண்ணாருக்காது. நான் அப்படிப் போட்ட பதிவு ஒண்ணுல என் நண்பனோட குடும்பம் கஷ்டப்பட்டு முன்னேறின கதைய எழுதினேன்.. எல்லோரும் பாராட்டினாங்க. என் நண்பன் என்னைய துரோகியா பார்த்தான்...]]]

    இந்த நண்பர்கள் பார்வைக்கு இது போகாது.. அதனால ஒண்ணும் பயப்பட வேண்டாம்..!

    அறிவுரைக்கு நன்றிகள் கீத் ஸார்..!

    ReplyDelete
  28. [[[ஒரு காசு said...
    அற்புதம், அற்புதம். படிக்கிறத நிப்பாட்ட முடியாயல, கதை அவ்வளவு வேகம் - பஸ்சுக்கு நேரமாச்சி - ஓடணும்.]]]

    கதையா..? கதைன்னே நினைச்சுட்டீகளா ராசா..!!!!

    ReplyDelete
  29. [[[ananth said...
    கணவன் மனைவி குடும்ப தகராறு, உறவினர் பிரச்சினை என்றால் தாங்கள் சொல்வது/செய்வது சரி. ஆனால் இது இரு நண்பர்கள் சம்பந்தப்பட்டது. ஏதாவது மத்தியஸ்தம் செய்து பாருங்கள். சற்று கவணமாக கையாளுங்கள்.]]]

    அதனால்தான் ஒதுங்கியிருக்கிறேன்..!!!

    ReplyDelete
  30. [[[டக்ளஸ்... said...

    \\Labels: பதிவர் சதுரம், பதிவர் வட்டம்\\

    எனக்கு இங்கதான் சந்தேகம் வருதுண்ணே...!]]]

    கண்ணா.. எல்லாரையும் சந்தேகப்படுன்னு யாரோ ஒருத்தர் சொனனாராம்..!

    அதையெல்லாம் நீ படிச்சு வைச்சிருக்கன்னு இப்ப எனக்கு நல்லாத் தெரியுது..!!

    சந்தோஷம்..!!!

    ReplyDelete
  31. [[[நையாண்டி நைனா said...

    எனக்கு எல்லாம் புரிஞ்சி போச்சு.... புரிஞ்சு போச்சு...]]]

    என்னத்த புரிஞ்சது..?!!! கொஞ்சம் தெளிவா சொல்லேன்.. எனக்காவது புரியட்டும்..!!!

    ReplyDelete
  32. [[[நையாண்டி நைனா said...

    ஹூம்... என்ன புரிஞ்சதுன்னா கேட்குறீங்க...?

    அதான் அண்ணாத்தே "புனைவு" அப்படின்னு போட்டிருக்காருல்லா தெளீவா....]]]]

    வெளங்கிரும்..

    ReplyDelete
  33. [[[வால்பையன் said...

    //அனுபவம், நட்பு, பதிவர் சதுரம், பதிவர் வட்டம், புனைவுகள்//

    கடைசியா இருக்குற புனைவுகள் எங்களை கூமுட்டையாக்குறதுக்கா!]]]

    அது தமிழ்மணத்துல வரிசைப்படுத்துவதற்காகத்தான்..

    இது கற்பனை கதை இல்லை வாலு..! ஒரிஜினல் அக்மார்க் நடந்த கதை..!

    ReplyDelete
  34. [[[பித்தன் said...

    சக்தி செய்தது தப்பு......... அவர் கோபியைத் தடுத்திருக்கணும்.]]]

    தப்புதான். ஆனா தடுக்கலையே.. அதான பிரச்சினை..!!!

    // எனக்கோ சக்தியின் பெற்றோருக்கு ஏதாவது சிக்கல்கள் கோபியால் வந்துவிடுமோ என்று கவலையாக இருக்கிறது.//

    கோபி அப்படிப்பட்டவராகத் தெரியவில்லை..... அவர் வெள்ளந்தின்னே......]]]

    அவன் நல்லவன்தான்.. ஆனா கூடப் பொறந்தவங்களும் அப்படியே இருப்பாங்கன்னு நினைக்க முடியாதுல்ல. அதான் இப்ப அங்க பஞ்சாயத்து நடக்குதாம்..!!!

    ReplyDelete
  35. [[[வண்ணத்துபூச்சியார் said...

    கதை நல்லாயிருக்கு..]]]

    கிழிஞ்சது போங்க..!!!

    ReplyDelete
  36. [[[மங்களூர் சிவா said...

    /நமக்குத்தான் டைப்பு ஹாபியாச்சே../

    ஆமாங்ணா படிக்கிறவங்களுக்கு ஸ்க்ரால் பண்றவங்களுக்குதான் நாக்கு தள்ளிடுதாம்:)]]]

    அதான பார்த்தேன்.. இவ்ளோ நேரமா ஒருத்தர்கூட சொல்லலையேன்னு நினைச்சேன்.. வந்துட்ட..

    திருப்தியா..? சந்தோஷமா..? நல்லாயிரு..!!!

    ReplyDelete
  37. ]]]நாஞ்சில் நாதம் said...

    \\\நமக்குத்தான் டைப்பு ஹாபியாச்சே///

    :)]]]

    நன்றி நாஞ்சில் நாதம்..!!!

    ReplyDelete
  38. [[[manasu said...

    //நமக்குத்தான் டைப்பு ஹாபியாச்சே../

    ஆமாங்ணா படிக்கிறவங்களுக்கு ச்ச ஸ்க்ரால் பண்றவங்களுக்குதான் நாக்கு தள்ளிடுதாம்)//

    விரல் நீண்டு போச்சுங்ண்ணா ஸ்க்ரால் பண்ணி பண்ணி.....]]]

    மனசு, மனசை ரிலாக்ஸ்ல விடுங்க.. போகப் போக பழகிரும்..!!!

    ReplyDelete
  39. [[[ஜோ/Joe said...
    //அவங்க கட்டிப்புடிச்சு அழுது 'நீ ஏண்டா எங்க கதையெல்லாம் ப்ளாக்ல எழுதுனேன்னு' மொத்தினாங்கன்னா அதையும் முழுநீளப் பதிவாப் போடுங்கண்ணே. படிக்குறதுக்கு ஒரு சுவாரஸ்யம் வேணாமா? :-)//
    :-)))))))))]]]

    ஜோ.. அன்புக்கும், பாசத்துக்கும், ஆதரவுக்கும், பகிர்வுக்கும் நன்றிகள்..!!!

    ReplyDelete
  40. [[[கீழை ராஸா said...

    யூ...டூ]]]

    நான்தான்.. நானேதான்.. என்ன அதுனால..?!!!

    ReplyDelete
  41. [[[நையாண்டி நைனா said...

    எங்க தல உண்மைத்தமிழன் அவர்களின் இணைய தொடர்பு வசதி பழுதுபட்டு உள்ளது. அதனால் அண்ணனால் ஒரு பத்து நாட்களுக்கு பதிவு பக்கம் எட்டி பார்க்க முடியாத நிலை. பழுது நீக்க பட்ட பிறகு அண்ணன் தொடர்ந்து இயங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதுவரை நண்பர்களும், அன்பர்களும், ரசிகர்களும் பொறுமை காத்து அண்ணனுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்.]]]

    தம்பி.. கண்ணா.. ராசா.. செல்லம்..

    ரொம்ப ரொம்ப நன்றிடா பவுனு..

    தம்பின்னா உன்னை மாதிரிதான் இருக்கணும்..

    ஆபத்துக்கு வந்து உதவணும்.. நல்லாயிருப்பூ..!!!

    ReplyDelete
  42. [[[SP.VR. SUBBIAH said...

    ////நாளைக்கே ஒரு 'குவார்ட்டராலயோ', 'ஆஃபா'லயோ, 'புல்'லாலயோ பிரச்சினை முடிஞ்சாலும் முடிஞ்சிரும்..!
    இடைல போய் நாம அக்கறையாக அவங்களுக்காக பேசி.. கடைசியா அவங்களுக்கே சைடிஷ்ஷா நாம ஆயிறக்கூடாது பாருங்க..
    ஏற்கெனவே அனுபவம் பலதும் இருக்கிறதாலதான் இந்த ஐடியா..!!!/////

    அருமையான முடிவு!
    இதைத்தான் பட்டறிவு என்பார்கள்!
    ”பட்டினிக்குத் தீனி
    கெட்டபின்னே ஞானி”
    - கவியரசர் கண்ணதாசன்]]]

    வாத்தியாரே.. கரீக்ட்டு.. அதான் ஒதுங்கிட்டேன்..

    புரிந்து கொண்டமைக்கு நன்றிகள் வாத்தியாரே..!

    ReplyDelete
  43. [[[ஊர்சுற்றி said...

    கதை அருமை!

    ஆனா அந்த எட்டு லட்சம் என்ன ஆச்சுதுன்னு இன்னொரு இடுகையிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.]]]

    பஞ்சாயத்து நடக்குது ஸார்..!

    முடிஞ்சு என் காதுக்கு ஏதாவது நியூஸ் வந்தா கண்டிப்பா சொல்றேன்..!

    ReplyDelete
  44. [[[புருனோ Bruno said...
    எந்த சீரியல் அண்ணே இது !!]]]

    ஐயையோ டாக்டரு..

    நம்ப மாட்டீரா..? இது கதை இல்ல ஸாரே..

    நடந்த கதை..!!!

    ReplyDelete
  45. [[[dondu(#11168674346665545885) said...

    சக்தியின் மனைவி வெறுமனே ஒரு சாரி சொல்லியிருந்தாக்கூட மேட்டர் இவ்வளவு சீரியசாகி இருக்காது.

    எது எப்படியானாலும் எட்டு லட்சம் திருப்பித் தர வேண்டியதுதானே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்]]]

    திருப்பிக் கொடுத்துதான் ஆகணும்.. ஆனா கொடுக்கணும்னு இன்னிக்கிவரைக்கும் சக்திகிட்ட ஐடியா இல்ல..

    ஆனா வாங்கியே தீரணும்னு கோபியோட உடன்பிறப்புக்கள் ஒத்தக் கால்ல நிக்குறாங்களாம்.. இதுதான் இன்னியோட லேட்டஸ்ட் தகவல்..!

    ReplyDelete