Pages

Thursday, July 16, 2009

பதிவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்..!

16-07-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!




திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப் போல் பதிவுலகில் அனானிகளின் ஆட்டமும், முகம் தெரியாத முகமூடிகளின் அம்மண ஆட்டமும் மீண்டும் ஆரம்பித்துவிட்டது.

நேற்றைய ஒரே நாளில் அனானிகளின் வம்பிழுப்பினால் பதிவர் நர்ஸிமின் விலகலும், முகமூடிகளின் அட்டகாசத்தால் பதிவர் கார்க்கியின் தளம் சில மணி நேரங்கள் இழக்கப்பட்டு பின்பு மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொதுவாகவே அனானிகள் என்கிற இடத்தில் பதிவிற்குத் தொடர்பான பெயர்களைக் குறிப்பிட்டு சைவமான வகையில் பின்னூட்டங்கள் இட்டு நகைச்சுவைப் பகுதிக்கு பங்களிப்பு நடத்திக் கொண்டிருந்தார்கள் நமது வலையுலக கைப்புள்ளைகள்.

அவர்களுக்கு அனானி வசதி இல்லையெனில் இரண்டு கைகளும் ஒடிந்தது போலத்தான். ஆனாலும் எல்லாவற்றிற்கும் ஒரு அளவு உண்டு. அவர்களைப் போலவே அனைவரும் இருந்துவிட்டால் நல்லதுதான். இல்லாதவர்களை ஒடுக்குவதற்கு அனானி வசதியை பூட்டி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஏற்கெனவே போதையுலகம் போலிருக்கும் இருந்த வலையுலகத்தில் கால் பதித்துவிட்டு வெளியேற முடியாமல் பாதிப் பேர் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள் திரட்டிகளைப் பார்க்காவிடில் பைத்தியம் பிடித்தாற்போல் ஆகிறது. இது ஒருவகையிலும் போதைதான்.

என்னையே கணக்கில் எடுத்துக் கொண்டால், எத்தனை பக்கங்களை தட்டச்சு செய்து வைத்திருக்கிறேன் என்று தெரியவில்லை. இப்போது அதையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால் பக்கத்துக்கு பத்து ரூபாய் என்றால்கூட ஐம்பதாயிரம் ரூபாய் வரும்.

ஒரு பக்கத்தை தட்டச்சு செய்ய ஒரு நிமிடம் எனில் ஐயாயிரம் பக்கங்களுக்கு ஐந்தாயிரம் நிமிடங்கள் தட்டச்சிற்கே செலவாகியுள்ளது. அதன் பின்னர் பின்னூட்டங்களுக்கு பதில்.. பிற பதிவுகளை மேய்ந்தது.. அதற்கு பின்னூட்டங்கள் இட்டது.. திரட்டிகளை அடை காத்தது.. இதையெல்லாம் கணக்கில் எடுத்தால் இதுவரையிலும் கிட்டத்தட்ட 8 மாதங்கள் என்கிற அளவிலாவது இந்த வலைத்தளத்திலேயே மூழ்கிக் கிடந்தது போல் தெரிகிறது.

இது நேரத்தை விழுங்கும் போதை மருந்து என்றும் தெரிந்தும் இதிலேயே ஊர்ந்தும், திளைத்தும் கிடப்பது எதற்காகவெனில் சில நல்ல நண்பர்களின் நட்பும், காலத்தினாற் செய்த உதவியைப் போன்று கிடைக்கும் பல பொன்னான உதவிகளாலும்தான். மறக்கவில்லை. மறுக்கவில்லை.. இந்த ஒரு காரணத்திற்காகவே இந்த வலையுலகத்தின் மூலம் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், சோதனைகளை எதிர் கொண்டாலும் விட்டேனா பார் என்று நம்மை இழுக்கிறது.

பதிவுலகில் நட்புக்கு உலை வைக்கும் முதல் வேலையில் இருப்பது இந்த அனானிகள்தான். சில அனானிகள் நல்லவர்கள் போல் உதவிகள் செய்தாலும், பலரும் அனர்த்தம்தான் செய்து வைக்கிறார்கள். உதாரணம் நேற்றைய சக்திவேலின் பதிவில் அனானிகள் போட்டிருக்கும் ஆட்டம். அதில் பாதி அனானிகள் கிண்டலாகவும், மீதி பேர் பதிவர்களுக்கிடையில் சண்டையை மூட்டிவிடும்விதமாகவும், பிரச்சினைகளை கிளப்பும் அர்த்தத்திலும் பின்னூட்டங்களை போட்டிருக்கிறார்கள்.

அதில் பின்னூட்டம் போட்டிருக்கும் பலரது எண்ணங்களை சக்திவேல் எப்படி எடுத்துக் கொண்டார் என்று இன்னமும் நமக்குப் புரியாத நிலையில் அனானிகளின் கொட்டத்தை அவர் புரிந்து கொள்வாரா என்பது நமக்கு சந்தேகமே..

இதை முற்றிலுமாகத் தடுத்தால் ஒழிய வலையுலகில் மீண்டும், மீண்டும் சர்ச்சைகள் எழாமல் இருக்கப் போவதில்லை.. அனானிகளின் அநாகரிகமான பின்னூட்டங்களை விட்டுவைத்தால் அதுவே அவர்களை ஊக்கப்படுத்துவதுபோல் ஆகிவிடும். இதனை அனைத்துப் பதிவர்களும் புரிந்து கொண்டால் அத்தனை பேருக்கும் பலனையும், பயனையும் தரும்.

அனானி பின்னூட்ட அரசியலைக் கூர்ந்து கவனிக்க இயலாதவர்கள் தயவு செய்து மட்டுறுத்தல் செய்துவிடுவது மிகச் சிறந்தது. வேண்டவே வேண்டாம் இந்தத் தொல்லை என்று அனானிகளை முற்றிலுமாகத் தடை செய்துவிட்டால் பதிவர்களுக்குள் பிரச்சினைகள் எழாமல் இருக்க வாய்ப்பு உண்டு.

பதிவர் நர்ஸிமை தொடர்ந்து தாக்கி வரும் ஒரு மனநோயாளி சக்திவேலின் பதிவிலும் வேறு சில பதிவுகளிலும் எழுதி வருகிறார். இவர் பதிவர் என்றாலும் மனநோயாளியாகத்தான் இருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு. சக்திவேலால் அதனை ஊகிக்க முடியவில்லை என்றே நினைக்கிறேன். அவரே பாவம்.. பச்சைப் புள்ளை மாதிரியிருக்கிறார். ஆனால் இழப்பு நமக்குத்தான்..

தோழர் நர்ஸிம் திரட்டிகளிலிருந்து விடைபெறுவதாக அறிவித்தது நமக்குத்தான் நஷ்டம். இனி அவரது தளத்தை ரீடரிலும், பின் தொடர்வதிலும் மட்டுமே படிக்க முடியும். எத்தனை பேரால் அது முடியும்.. எத்தனை புதிய பதிவர்களுக்கு அவரது எழுத்து சென்றடையும் என்பது கேள்விக்குறிதான். ஆனால் அவர் திடமாக முடிவெடுத்து குட்பை சொல்லிவிட்டார். அதுகூட தேவையில்லாதது என்றுதான் நான் கருதுகிறேன். எந்த மடையன் என்ன சொன்னாலும் தூக்கிப் போட்டுவிட்டு கண்டு கொள்ளாமல் போய்க் கொண்டேயிருக்கலாம்.. பதிவர் நர்ஸிம் மீண்டும் திரட்டிகளில் இணைந்து பங்களிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

சென்ற இரண்டாண்டுகளுக்கு முன்பெல்லாம் மூர்த்தி என்னும் சைக்கோவால் வலையுலகம் என்ன பாடுபட்டது என்பதை பலரும் அறிவீர்கள். அவனை ஒழித்துக் கட்ட என்னென்னவோ முயற்சிகளை வருடக்கணக்காக செய்து கடைசியில் ஒரு வழியாக ஓரம்கட்டி உட்கார வைத்திருக்கிறோம். இப்போது அதே பாணியில் "ஆப்பு", "ஆப்பரசன்" என்று இரண்டு புதிய வலைத்தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பதிவர்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் இந்த இரண்டு போலியானவர்களுக்கு எந்தவிதத்திலும் ஊக்கம் கொடுத்துவிடாதீர்கள். அவர்கள் உங்களுடைய பதிவுகளுக்கு நாகரிகமாக பின்னூட்டமிட்டாலும் சரி.. அதனை அனுமதிக்காதீர்கள். ஏனெனில் அவர்கள் தங்களது தளத்தில் எழுதியிருப்பது அராஜகத்தனமான கட்டுரைகள்.

அதே போன்று நாளை நம்மைப் பற்றியும் எழுதலாம். நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக எதிரிக்கு எதிரி நண்பன் என்பதாக கருதி இது போன்ற பைத்தியங்களுக்கு சிலரோ அல்லது பலரோ ஆதரவுக் கரம் கொடுத்தால் அதே கத்தி பூமராங் மாதிரி அவர்கள் கழுத்துக்கே வந்து சேரும். இது கடந்த கால பதிவுலகம் நேரில் கண்ட காட்சி.

ஒரு பதிவரின் மேல் கருத்து வேறுபாட்டால் விமர்சித்து எழுதுவது பதிவர்களின் உரிமைதான். ஆனால் அதை முறைப்படி அவர் யார் என்பதை தெரிவித்துவிட்டு பின்பு விமர்சிக்க வந்தால் விமர்சிக்கப்படும் பதிவரும் தனது தரப்பு வாதத்தை வைப்பதற்கு ஏதுவாக இருக்கும். இது பற்றி எந்தவித வாய்ப்பும் தராமல் முகமூடி அணிந்து கொண்டு நர்ஸிமைத் தாக்குவதாகச் சொல்லியும், பதிவர் தம்பி அதிஷாவைத் தாக்கியும் பதிவு எழுதப்பட்டுள்ளது.

இவர்களெல்லாம் கோழைகள்.. தைரியம் இருந்தால் முகத்தை வெளிப்படுத்திக் கொண்டு போய் சொல்லட்டுமே.. சொல்ல மாட்டார்கள். இப்படியும் ஒரு பிரச்சினையைக் கிளப்பி அதிஷாவுக்கு நல்லதோ, கெட்டதோ நடந்துவிடட்டும் என்கிற எண்ணத்தில் இந்த மனநோயாளி உள் நுழைந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

தப்பித்தவறி கூட இந்த சைக்கோக்களுக்கு உங்களது தளங்களில் இடம் கொடுத்து விடாதீர்கள் என்று பதிவர்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். இவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாதது அல்ல. முறைப்படி புகார் கொடுத்தால் இரண்டு நாளில் முகமூடி கிழிந்துவிடும். ஏற்கெனவே கிழிக்கப்பட்டவரிடம் இந்த அண்ணாத்தைகள் கேட்டுத் தெரிந்து கொள்வது நலம் என்று எச்சரிக்கிறேன்.

இதே போன்று கணேஷ் என்கிற பெயரில் ஒரு சைக்கோ மலேசியாவில் இருந்து பின்னூட்டங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். என்னுடைய பதிவிற்கு வந்த பின்னூட்டங்களின் ஐ.பி.க்களை வைத்து சோதித்தபோது அது மலேசியாவைத்தான் காட்டுகிறது. இந்த கிறுக்கையும் அடக்க முடியலே.. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதுபோல் இவரது முகமூடியும் ஒரு நாள் கிழியும் என்பது உறுதி.

நேற்று நர்ஸிமின் பெயரில் அனானிகள் பல்வேறு தளங்களில் பின்னூட்டங்கள் போட்டிருக்கிறார்கள். இதில்தான் அவர் மிகவும் மனம் நொந்து போயிருப்பதாகத் தெரிகிறது.

இதுவும் சில ஆண்டுகளாகவே பதிவுலகில் நடந்து வருவதுதான். சக்திவேலின் பதிவில் பல பின்னூட்டங்கள் இப்படி அதர் ஆப்ஷனை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளன. இதனைத் தடுக்க ஒரே வழி நம் பெயருக்கு பின்பு பிளாக்கரின் எண்ணை போட்டுக் கொள்வதுதான், நான் போட்டிருப்பது மாதிரி..

ஏனெனில் எனக்கே இது போன்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இங்க போய் பாருங்க. இந்தத் தளத்தை உருவாக்கியது யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இன்றுவரையிலும் அது இருக்கிறது. முன்னொரு காலத்தில் நான் போகாத இடங்களிலெல்லாம் ஒரு அனானி இந்தத் தளத்தின் லின்க்குடன் சேர்த்து என் பெயரில் பின்னூட்டம் போட்டுத் தொலைவார். அத்தனையும் அசைவங்களாக இருக்கும்.

பலரும் என்னைத் திட்டுவார்கள். பல பெண் பதிவர்களின் பதிவிலும் இதே கதைதான் நடந்தது. அதன் பின்புதான் வேறு வழியில்லாமல் எனது பிளாக்கர் எண்ணை எனது பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டேன். இப்போது ஒரிஜினல் உண்மைத்தமிழன் நான்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிக எளிது.

என்னுடைய அவ்தாரின் மீது மவுஸ் கர்சரை வைத்தீர்களானால் மானிட்டரின் இடது பக்க கீழேயும் பிளாக்கர் எண் காட்டப்படும். அந்த எண்ணும், நான் குறிப்பிட்டுள்ள எண்ணும் சரியாக இருந்தால் ஆள் உண்மை என்று அர்த்தம். இதுதான் புகழ் பெற்ற எலிக்குட்டி சோதனை.

இது ஒரு பெரிய நொச்சாக இருக்கிறது என்றாலும், வேறு வழியில்லாமல் அதனை அப்படியே விட்டு வைத்திருக்கிறேன். நண்பர் நர்ஸிம் தேவைப்பட்டால் இந்த வசதியை கையாண்டு கொண்டு, மீண்டும் திரட்டிகளில் இணைந்து தனது எழுத்துப் பணியைத் தொடரலாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

புதுகை அப்துல்லா, சஞ்சய் என்று நான் கேள்விப்பட்டு சிலரது வலைப்பூக்கள் ஹேக் செய்யப்பட்டதைப் போல நேற்று தம்பி கார்க்கியின் தளமும் சில மணி நேரத்திற்கு ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. பின்பு சக தோழர்களின் உதவியோடு அதனை மீண்டும் கைப்பற்றியிருக்கிறார் கார்க்கி.

அதனை செய்தவரைக் கண்டுபிடிப்பதற்கு கார்க்கியின் உதவிதான் இப்போது தேவை. அந்த நேரத்தில் உலா வந்த ஐ.பி. நம்பர்களை கார்க்கி வெளிப்படுத்தினால் நிச்சயம் அது யார் என உறுதிப்படுத்தி அம்பலத்தில் ஏற்றலாம். தம்பி கார்க்கி வலையுலகத்திற்கு செய்யும் உதவியாக நினைத்து இதனைச் செய்வார் என்று நினைக்கிறேன்.

நமக்கு எழுதுவதற்கு எத்தனையோ நல்ல விஷயங்கள் உள்ளன. நமக்கு நேரமும், வாய்ப்பும் கிடைக்கின்றபட்சத்தில் திறம்பட எழுதுவோம். நம்மைப் பழிப்பவர்களை நாம் புறந்தள்ளிவிட்டு முன்னேறி போனாலே போதும்.. பின்னால் வரும் கூச்சலும், குழப்பமும் தானாகவே அடங்கி ஒடுங்கி, இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

பதிவர்கள் தங்களது எழுத்து தொடர்பான வேறுபாடுகளைத் தாண்டி இந்த ஒரு விஷயத்தில் ஒற்றுமையாய் இருந்து வலையுலகம் ஆரோக்கியமாய் திகழ ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொறுமையாய் படித்தமைக்கு எனது நன்றிகள்..!

வாழ்க வளமுடன்..!

64 comments:

  1. சரியா சொன்னீங்க நான் நீண்ட ஒரு பின்ன்னூட்டம் டைப் பண்ணியிருந்தேன் save ஆகாமல் போய்டுச்சு

    ReplyDelete
  2. ME THE FIRST ....................

    ReplyDelete
  3. நாந்தான் முதல்ல

    போலிகளை கண்டுபிடிக்க உங்க யோசனை சூப்பர் .

    என்ன செய்வது இவங்களை ,
    எனக்கு உங்க முதல் வரி ஞாபக‌த்துக்கு வருது

    அவங்க‌ளா பாத்து திருந்தணும்

    அண்ணே என் பக்கத்துக்கும் வாங்கண்ணே ....

    ReplyDelete
  4. உண்மைதாங்க
    கார்க்கி கண்டிப்பா சொல்லுவார்ன்னு நினைக்கிறேன்
    உங்க பதிவு மிக அவசியமான நேரத்தில் வந்திருக்கிறது எப்பவும் போல..!

    ReplyDelete
  5. உண்மைதாங்க
    கார்க்கி கண்டிப்பா சொல்லுவார்ன்னு நினைக்கிறேன்
    உங்க பதிவு மிக அவசியமான நேரத்தில் வந்திருக்கிறது எப்பவும் போல..!

    ReplyDelete
  6. எந்த விஷயத்தையும் ஆற அமர யோசித்து,அக்கு வேர் ஆணி வேராய் பெரும் பதிவிடும் உங்கள் செயலுக்கு ஹேட்ஸ் ஆஃப்

    ReplyDelete
  7. இது நேரத்தை விழுங்கும் போதை மருந்து என்றும் தெரிந்தும் இதிலேயே ஊர்ந்தும், திளைத்தும் கிடப்பது எதற்காகவெனில் /// இது முற்றிலும் உண்மை...இப்ப நான் அபுதாபில இருக்கேன் இரவு 11 மணிக்கு உங்க பதிவ பாத்துட்டு பின்னூட்டமும் போடுறேன் வேல முடிஞ்சு வந்து படிக்கலாம்னு உக்காந்தா சண்ட சில பதிவுக்கு நான் பின்னூட்டம் போடுவேன் சிலதை படித்துவிட்டு போய்விடுவேன்
    உருப்படியா எதுவும் எழுதவேணாம் அடுத்தவங்களைப் பற்றி தவறாக எழுதாமல் இருந்தாலே போதும் இங்க ரசிகர் கூட்டம் வேற எனக்கு அவனப்புடிக்கும் இவனப்புடிக்காதுன்னு ஒரு கூட்டம் இதுக்கு ஒரு பதிவு அதுக்கு anonyங்க பேர்ல பின்னூட்டம்

    ReplyDelete
  8. உருப்படியான காரியம் செஞ்சீங்க பாஸ்..

    நன்றி..

    ReplyDelete
  9. தல,
    வலையுலகத்துல இதெல்லாம் சாதாரணம்.. நேத்து மூர்த்தி இன்னைக்கு ஒருத்தன் நாளைக்கு இன்னொருத்தன்.. வேலை இல்லாத வெண்ணைங்க தான் இத ஒரு பொழப்பா வெச்சிகிட்டு அவனை கண்டு பிடிக்கிறேன் இவனை கண்டுபிடிக்கிறேன்னு கிளம்பிட்டு இருப்பாங்க.. இவங்க எல்லாம் ஒரு மாதிரியான சைக்கோங்க.. instant விளம்பரத்துக்காகவும், சுய அறிப்புக்காகவும் இதை செய்ய எப்பவுமே ஆள் இருந்துட்டே இருக்கும்.. இவனுங்களை ஊக்குவிக்காம அப்படியே விட்டா சும்மா போயிடுவானுங்க.. அதை விட்டு இவனுங்களுக்கு நேர செலவு செய்றது வேஸ்டு..

    ReplyDelete
  10. //வலையுலகத்துல இதெல்லாம் சாதாரணம்.. நேத்து மூர்த்தி இன்னைக்கு ஒருத்தன் நாளைக்கு இன்னொருத்தன்.. வேலை இல்லாத வெண்ணைங்க தான் இத ஒரு பொழப்பா வெச்சிகிட்டு அவனை கண்டு பிடிக்கிறேன் இவனை கண்டுபிடிக்கிறேன்னு கிளம்பிட்டு இருப்பாங்க.. இவங்க எல்லாம் ஒரு மாதிரியான சைக்கோங்க.. instant விளம்பரத்துக்காகவும், சுய அறிப்புக்காகவும் இதை செய்ய எப்பவுமே ஆள் இருந்துட்டே இருக்கும்.. இவனுங்களை ஊக்குவிக்காம அப்படியே விட்டா சும்மா போயிடுவானுங்க.. அதை விட்டு இவனுங்களுக்கு நேர செலவு செய்றது வேஸ்டு..//

    கண்டுக்காமவே விட்டுட்டா??

    ReplyDelete
  11. மிகச்சரியாகச் சொன்னீர்கள். இந்த நேரத்தில் அவசரமான அவசியமான அறிவுரை. நன்றி!

    //பதிவர் நர்ஸிம் மீண்டும் திரட்டிகளில் இணைந்து பங்களிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.//

    ஆமாம் நர்சிம், முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.

    ReplyDelete
  12. அட விடுங்கண்ணே, நமயெல்லாம் சாப்பாட்டையும் அதனுடனேயெ மலத்தையும் சேர்த்து சுமக்கும் மனுஷங்கத்தானே....

    இவங்களுக்கு பயந்த நாம் எப்படி வாழரது

    ReplyDelete
  13. //பதிவர் நர்ஸிம் மீண்டும் திரட்டிகளில் இணைந்து பங்களிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.//

    ஆமாம் நர்சிம், முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.

    இல்லையேல் ஆட்டத்தில் வென்றதாய் நினைத்து அவர்கள் தொடர்ந்து ஆடுவார்கள்.

    ReplyDelete
  14. அண்ணே
    எங்களை போன்ற புதிய பதிவர்களையும்

    விட்டு வைக்க வில்லை அந்த ஆப்பு,நீங்களே சிரமம் பாராமல் ஏன் இவர்களை ஆதரிக்க கூடாது?
    பிரபல பதிவர்கள் எவ்வளவு நல்லவர்கள்?போன்ற விபரத்தையும் தந்தீர்கள் என்றால்
    புதியவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும்.பிரபலர்கள் லட்சியம் செய்யவில்லை என்று யாரும் அங்கு போய் சேரமாட்டார்கள்...
    நடந்த விஷயங்களை உங்கள் சுவையான பாணியில் கொசுவத்தி சுற்றிநீர்கள் என்றால்
    புதிய பதிவர்கள் உஷாராவார்கள்..
    ஒரு நாளுக்கு மட்டும் புதிய பதிவர்கள் எவ்வளவு பேர் வருகின்றனர்?
    நடந்த மோசமான முன்னுதாரணத்தை மேலோட்டமா சும்மா வாயால் மட்டும் சொல்லாமல் உங்க பாணீல சொல்லுங்க..
    இப்போ இங்கு நேரம் 12-௦௦
    உங்கள் உண்மையான உழைப்பை மதித்து ஓட்டும் பின்னூடமும் போடுகிறேன்..

    ReplyDelete
  15. சிறப்பான இடுகை.. பதிவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..

    ReplyDelete
  16. //என்னுடைய அவ்தாரின் மீது மவுஸ் கர்சரை வைத்தீர்களானால் மானிட்டரின் இடது பக்க கீழேயும் பிளாக்கர் எண் காட்டப்படும். அந்த எண்ணும், நான் குறிப்பிட்டுள்ள எண்ணும் சரியாக இருந்தால் ஆள் உண்மை என்று அர்த்தம். இதுதான் புகழ் பெற்ற எலிக்குட்டி சோதனை//

    Hello Brother, I am a regular reader of your blog. Its interesting.... :-). I could not see any number if I place the cursor on your avthar (Photo) both in your blog and your comment in other blogs ?? !! :-) :-(

    ReplyDelete
  17. நல்ல விஷயம்..செய்துடுவோம்...நன்றி..

    ReplyDelete
  18. நீண்ட, தெளிவான இடுகை தந்தமைக்கு நன்றி. நேரமிருந்தால் எனது இடுகையையும் பார்வையிடவும்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  19. அக்கறையான, நேயமிக்க பதிவு. நன்றி.

    ReplyDelete
  20. //Hello Brother, I am a regular reader of your blog. Its interesting.... :-). I could not see any number if I place the cursor on your avthar (Photo) both in your blog and your comment in other blogs ?? !! :-) :-(
    //

    அடக்கடவுளெ! அப்பொ இந்த பிளாகும் உண்மையான உண்மைத் தமிழனுது இல்லையா?

    ReplyDelete
  21. //ஒரு பக்கத்தை தட்டச்சு செய்ய ஒரு நிமிடம்//
    ஆகா ஒரு பக்கத்துக்கு ஒரு நிமிசம் தானா? ம் நீங்க ரொம்ப வேகமா தட்டச்சிறிங்க...

    சைக்கோ அனானி புண்ணூட்டகாரர்கள் என்னதென்று அறியாமல் செய்கிறார்கள், சைபர் விளையாட்டு சொந்த வாழ்விலும் பாதிப்பேற்படுத்துமென்பது பாவம் அவர்களுக்கு தெரியாது போல...

    ReplyDelete
  22. அதர் ஆப்சன் கமெண்டுகளால் நாம் இரண்டு வருடங்களாக அவதியுறுவது நாம் அறிந்ததே!
    இப்போதிருக்கும் புதிய அனானிகள் வலையுலகில் பல மாதங்களாக உலாவி பின் இம்மாதிரி வேலைகளில் இருக்குவது போல் தெரிகிறது!

    எதா இருந்தாலும் முகமூடி போட்டு கொண்டு தனிநபர் தாக்குதல் நடத்துவது தவறு தான்!, அனானிகள் தங்களது போக்கை மாற்றி கொள்ளவேண்டும்!

    ReplyDelete
  23. Timely and well said. இந்த அனானிகள் புத்தர், காந்தி போல் நடந்துக் கொள்ளாவிட்டாலும் சற்று மனசாட்சியுடன் இருக்க வேண்டும். இப்படிப் பட்டவர்கள் broken familyயிலிருந்து வந்தவர்கள், ஒழுக்கமில்லாத தாய், தந்தையர், சகோதர சகோதரிகள், இந்த மாதிரியான குடும்பம் இவர்கள்தான் அதிகம். அல்லது இவர்களது காதலி/மனைவி இவர்களது நடத்தைப் பிடிக்காமல் வேறு எவனுடனாவது ஒடியிருப்ப்பாள். (இன்னும் கீழிறங்கி எழுதுவேன் வேண்டாம் அண்ணன் பெயர் கெடக்கூடாது). அந்த வெறுப்பை இங்கே காட்டுகிறார்கள். இதைப் பார்த்தவுடன் என் பெயரிலும் ஏதும் செய்யலாம். செய்து விட்டு (நாசமாய்) போகட்டும். இழப்பதற்கு ஏதுமில்லை. எதைப் பற்றியும் கவலையுமில்லை.

    ReplyDelete
  24. அன்பின் உண்மை தமிழன்,

    ஆகா, நீங்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறீர்கள். ஆனால் இது தான் உங்களின் பலம் & பலவீனம். பிறகு இந்த ஹேக்கிங் எல்லாம் உங்களின் அருகில் இருப்பவர்களோ பண்ணும் வேலை தான். தமிழ் பதிவர்களை யாரோ ஒரு எஸ்கிமோவே அல்லது மாயன் இனத்தவரோ ஹேக் செய்வதற்கான மேட்டிவ் கொஞ்சமும் கிடையாது. அவர்களுக்கு இது தேவையும் கிடையாது. அது போல தான் இந்த அனானி புண்ணுட்டங்களும். எங்களுக்கு வரும் சைபர் க்ரைம் ரிக்வெஸ்ட்களை பார்த்தாலே இது புரியும். இந்த ஹேக்கிங்களை தவிர்க்க அடுத்தவர் கணணியில் ஓசி இணைய உலாவல், கண்ட கணணிகளில் இணைய உலாவல் மற்றும் நண்பர்கள் தரும் மென்பொருட்களை சரியாக பரிசோதிக்காமல் பயன்படுத்துதல் போன்ற காரணங்கள் தான். இதை தான் நான் கடந்த ஆகஸ்ட் 5, 2007 ல் நடந்த சென்னை வலைப்பதிவர் பட்டறையில் நம்ம கிழக்கு பதிப்பக பத்ரியின் மடிக்கணணியில் விளக்கினேன். அதற்கும் நான் அனானிகளால் பதிவுலகில் தாக்கப்பட்டேன். இவர்கள் அனைவருமே ஒரு கை விரல்களின் எண்ணிக்கை அளவு தான். அதற்கு மேல் கிடையாது.


    இந்த அனானி புண்ணுட்டங்களுக்கு நாமும், நம் நடவடிக்கைகளுமே ஒரு மறைமுக காரணம் தான். இதெல்லாம் அவர்களின் ஒரு வகை கவன ஈர்ப்பு தீர்மானம் போல தான். புதிதாக வருபவர்களை நாம் சரியாக ஊக்கப்படுத்துவது கிடையாது. அவர்களின் இடுகைக்கு குறைந்தபட்சம் ஒரு பின்னுட்டம் இடுவது கிடையாது. ஆதலால் கோபமடைந்த அவர்கள் இது போன்ற கீழ்தரமான காரியத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்களை பற்றி அனைவரும் பேசுவதால் அவர்களுக்கு ஒரு மறைமுகமான ஆதரவு கிடைத்த தோற்றம். பிறகு அந்த அசிங்க குட்டையை விட்டு அவர்களுக்கு வெளிவர மனது இடம் தருவதில்லை.அதிலேயே ஊறி ஆனந்தம் அடைதலேயே அவர்கள் விரும்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். இது தான் நாங்கள் கண்டு கொண்ட உண்மை.


    மறுபடியும் ஒரு வலைப்பதிவர் பட்டறையை நடத்தினால் அது முற்றிலும் புதியவர்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும். அதில் நிறைய தொழில்நுட்ப விஷயங்கள் வருபவர்களுக்கு இலவசமாக கற்றுதரப்பட வேண்டும். மிக முக்கியமாக கற்றுதருபவரிடம் நேரடியாக கேள்விகளை கேட்டு, அதற்கு உடனே பதில் பெறும் இருவழி உரையாடல் முறை இருக்க வேண்டும். அப்போது தான் புதியவர்களால் இது போன்ற பிரச்சினைகளை எதிர்காலத்தில் திறமையாக கையாள இயலும். இல்லையொன்றால் " நம்ம சக்திவேலை" ப்போல் பலத்த அடிபட்டு தான் இவற்றை கற்கவேண்டி வரும். பட்டறையை நடத்த கிழக்கு மொட்டை மாடி சரியான இடம் தான். அங்கு இணைய வசதி கூட கிடைக்கும். தடங்கலற்ற இணைய வசதி மிக முக்கியம். 2007 ல் பட்ட அவதியை நான் இன்னும் மறக்க வில்லை. ஆகவே வருங்கால பயிற்சி பட்டறையை ஒரு முழுமையானதாக நடத்த எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு.


    இறுதியாக இந்த மேற்கோளுடன் முடிக்கின்றேன்.

    "நீங்கள் முன்னர் ஒரு விஷயத்தில் ஏமாற்றப்பட்டிருந்தால் , உண்மையிலேயே உங்களுக்கு அந்த விஷயத்தில் முழுமையான அறிவு/ஞானம் இல்லை என அர்த்தம்."

    இஸ்மாயிலானந்தா !


    ஆகவே கற்போம், கற்ப்பிப்போம். அதுவே மனித குலத்திற்கு முக்கிய தேவையான ஒன்று. நன்றி, வணக்கம்.


    with care & love,

    Muhammad Ismail .H, PHD,
    gnuismail.blogspot.com

    ReplyDelete
  25. யோவ் உனா, தானா,

    என் வேலைவெட்டிய எல்லாம் விட்டுபுட்டு, கஷ்டப்பட்டு பெரிய பின்னூட்டத்தை டைப்பி அதை இடுகையில் போட்டு, உனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னால் என்கிட்டயோ 'எவன்டா அது இஸ்மாயில்னு ' பின்னூட்டம் போட்டிருக்கான் என என்கிட்டயே கேப்பியாயா? ங்கொய்யாலா, உனுக்கு டூண்டு, கணேஷ், No எல்லாரையும் புண்ணூட்டம் போட வச்சாதான் அடங்குவய்யா.


    டென்சன் ஆவாதீங்க. சும்மா ஒரு கலாய்த்தல் தான்.


    with care & love,

    Muhammad Ismail .H, PHD,
    gnuismail.blogspot.com

    ReplyDelete
  26. ///shabi said...
    சரியா சொன்னீங்க நான் நீண்ட ஒரு பின்ன்னூட்டம் டைப் பண்ணியிருந்தேன் save ஆகாமல் போய்டுச்சு///

    வெரி ஸாரி ஷபி..

    எல்லாம் என் அப்பன் முருகன் செயல்..

    வேறு இடத்தில் இதே மாதிரி செய்து பாருங்கள்.. தப்பே வராது.. எனக்குத்தான் இதெல்லாம்..!

    ReplyDelete
  27. [[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    நாந்தான் முதல்ல

    போலிகளை கண்டுபிடிக்க உங்க யோசனை சூப்பர் .

    என்ன செய்வது இவங்களை ,
    எனக்கு உங்க முதல் வரி ஞாபக‌த்துக்கு வருது

    அவங்க‌ளா பாத்து திருந்தணும்

    அண்ணே என் பக்கத்துக்கும் வாங்கண்ணே ....]]]

    ஸாரி ஸ்டார்ஜன்.. நீங்க செகண்டுதான்.. ஷபி உங்களுக்கு முந்திக்கிட்டாரு..

    உங்க பக்கத்தையும் புரட்டிப் பார்த்தேன்.. முரளி தோஸ்த்தா..? அதான் ஒரே சினிமாவா பூந்து விளையாடிருக்கீங்க..!

    அந்த புள்ளிவிவரப் பட்டியல் சூப்பர்..!

    ReplyDelete
  28. [[[நேசமித்ரன் said...
    உண்மைதாங்க
    கார்க்கி கண்டிப்பா சொல்லுவார்ன்னு நினைக்கிறேன்
    உங்க பதிவு மிக அவசியமான நேரத்தில் வந்திருக்கிறது எப்பவும் போல..!]]]

    கார்க்கியிடமிருந்து தகவலுக்காக காத்திருக்கிறோம் நேசமித்ரன்..!

    வருகைக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  29. [[[T.V.Radhakrishnan said...
    எந்த விஷயத்தையும் ஆற அமர யோசித்து, அக்கு வேர் ஆணி வேராய் பெரும் பதிவிடும் உங்கள் செயலுக்கு ஹேட்ஸ் ஆஃப்]]]

    நன்றி டிவிஆர் ஸார்..!

    ReplyDelete
  30. [[[shabi said...
    இது நேரத்தை விழுங்கும் போதை மருந்து என்றும் தெரிந்தும் இதிலேயே ஊர்ந்தும், திளைத்தும் கிடப்பது எதற்காகவெனில் ///

    இது முற்றிலும் உண்மை...இப்ப நான் அபுதாபில இருக்கேன் இரவு 11 மணிக்கு உங்க பதிவ பாத்துட்டு பின்னூட்டமும் போடுறேன் வேல முடிஞ்சு வந்து படிக்கலாம்னு உக்காந்தா சண்ட சில பதிவுக்கு நான் பின்னூட்டம் போடுவேன் சிலதை படித்துவிட்டு போய்விடுவேன். உருப்படியா எதுவும் எழுத வேணாம் அடுத்தவங்களைப் பற்றி தவறாக எழுதாமல் இருந்தாலே போதும் இங்க ரசிகர் கூட்டம் வேற எனக்கு அவனப் புடிக்கும் இவனப் புடிக்காதுன்னு ஒரு கூட்டம் இதுக்கு ஒரு பதிவு அதுக்கு anonyங்க பேர்ல பின்னூட்டம்]]]

    போதை தெளிய சிகிச்சை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்..

    ReplyDelete
  31. [[[தீப்பெட்டி said...
    உருப்படியான காரியம் செஞ்சீங்க பாஸ்.. நன்றி..]]]

    படிச்சு உருப்பட்டீங்கன்னா போதும் தீப்பெட்டி ஸார்..!

    ReplyDelete
  32. [[[சந்தோஷ் = Santhosh said...
    தல, வலையுலகத்துல இதெல்லாம் சாதாரணம்.. நேத்து மூர்த்தி இன்னைக்கு ஒருத்தன் நாளைக்கு இன்னொருத்தன்.. வேலை இல்லாத வெண்ணைங்க தான் இத ஒரு பொழப்பா வெச்சிகிட்டு அவனை கண்டு பிடிக்கிறேன் இவனை கண்டுபிடிக்கிறேன்னு கிளம்பிட்டு இருப்பாங்க.. இவங்க எல்லாம் ஒரு மாதிரியான சைக்கோங்க.. instant விளம்பரத்துக்காகவும், சுய அறிப்புக்காகவும் இதை செய்ய எப்பவுமே ஆள் இருந்துட்டே இருக்கும்.. இவனுங்களை ஊக்குவிக்காம அப்படியே விட்டா சும்மா போயிடுவானுங்க.. அதை விட்டு இவனுங்களுக்கு நேர செலவு செய்றது வேஸ்டு..]]]

    சரி.. அதையாவது வெளில சொல்லணும்ல.. அதுக்குத்தான் இந்த போஸ்ட்டு..

    அந்த ரெண்டு தளத்துக்கும் போய்ப் பாரு.. பி்ன்னூட்டம் வேற போட்டிருக்காங்க..

    முன்னாடியே எச்சரிக்கணும்ல.. அதுக்குத்தான்..!

    ReplyDelete
  33. [[[நாமக்கல் சிபி said...
    :)]]]

    ச்சே.. எவ்ளோ பெரிய பி்ன்னூட்டம்..!!! பாவம்.. கை வலிச்சிருக்குமே ராசா..

    ReplyDelete
  34. [[[jothi said...
    //வலையுலகத்துல இதெல்லாம் சாதாரணம்.. நேத்து மூர்த்தி இன்னைக்கு ஒருத்தன் நாளைக்கு இன்னொருத்தன்.. வேலை இல்லாத வெண்ணைங்க தான் இத ஒரு பொழப்பா வெச்சிகிட்டு அவனை கண்டு பிடிக்கிறேன் இவனை கண்டுபிடிக்கிறேன்னு கிளம்பிட்டு இருப்பாங்க.. இவங்க எல்லாம் ஒரு மாதிரியான சைக்கோங்க.. instant விளம்பரத்துக்காகவும், சுய அறிப்புக்காகவும் இதை செய்ய எப்பவுமே ஆள் இருந்துட்டே இருக்கும்.. இவனுங்களை ஊக்குவிக்காம அப்படியே விட்டா சும்மா போயிடுவானுங்க.. அதை விட்டு இவனுங்களுக்கு நேர செலவு செய்றது வேஸ்டு..//

    கண்டுக்காமவே விட்டுட்டா??]]]

    அது எப்பன்னா.. அவனுகளைப் பத்தி நல்லாத் தெரிஞ்சு அவங்க பதிவெல்லாம் போடும்போது போகாம இருந்தாலே போதும்.. அடங்கிருவானுக..!

    ReplyDelete
  35. [[[பீர் | Peer said...

    மிகச்சரியாகச் சொன்னீர்கள். இந்த நேரத்தில் அவசரமான அவசியமான அறிவுரை. நன்றி!

    //பதிவர் நர்ஸிம் மீண்டும் திரட்டிகளில் இணைந்து பங்களிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.//

    ஆமாம் நர்சிம், முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.]]]

    வழிமொழிந்தமைக்கு நன்றிகள் பீர் குடிமகனே..!

    ReplyDelete
  36. [[[அக்னி பார்வை said...
    அட விடுங்கண்ணே, நமயெல்லாம் சாப்பாட்டையும் அதனுடனேயெ மலத்தையும் சேர்த்து சுமக்கும் மனுஷங்கத்தானே.... இவங்களுக்கு பயந்த நாம் எப்படி வாழரது]]]

    எச்சரிக்கை செய்ய வேண்டியது நம்ம கடமை இல்லையா..? அதுனாலதான் சொல்றேன்..!

    ReplyDelete
  37. [[[பீர் | Peer said...

    //பதிவர் நர்ஸிம் மீண்டும் திரட்டிகளில் இணைந்து பங்களிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.//

    ஆமாம் நர்சிம், முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.

    இல்லையேல் ஆட்டத்தில் வென்றதாய் நினைத்து அவர்கள் தொடர்ந்து ஆடுவார்கள்.]]]

    சத்தியமான உண்மை பீர்..!

    ReplyDelete
  38. Can you give links to those blogs please?

    ReplyDelete
  39. [[[கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...
    அண்ணே எங்களை போன்ற புதிய பதிவர்களையும் விட்டு வைக்கவில்லை அந்த ஆப்பு, நீங்களே சிரமம் பாராமல் ஏன் இவர்களை ஆதரிக்க கூடாது? பிரபல பதிவர்கள் எவ்வளவு நல்லவர்கள்? போன்ற விபரத்தையும் தந்தீர்கள் என்றால்
    புதியவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும். பிரபலர்கள் லட்சியம் செய்யவில்லை என்று யாரும் அங்கு போய் சேரமாட்டார்கள்... நடந்த விஷயங்களை உங்கள் சுவையான பாணியில் கொசுவத்தி சுற்றிநீர்கள் என்றால் புதிய பதிவர்கள் உஷாராவார்கள்.. ஒரு நாளுக்கு மட்டும் புதிய பதிவர்கள் எவ்வளவு பேர் வருகின்றனர்? நடந்த மோசமான முன்னுதாரணத்தை மேலோட்டமா சும்மா வாயால் மட்டும் சொல்லாமல் உங்க பாணீல சொல்லுங்க.. இப்போ இங்கு நேரம் 12-௦௦ உங்கள் உண்மையான உழைப்பை மதித்து ஓட்டும் பின்னூடமும் போடுகிறேன்.]]]

    நன்றி கார்த்திகேயன்..

    அது பற்றித் தெரிய வேண்டுமெனில் டோண்டு ஸாரின் தளத்திற்குச் செல்லுங்கள்.

    அங்கே போலி டோண்டு என்கிற தலைப்பை கிளிக் செய்து பொறுமையாக, ஆற, அமர படித்தீர்களானால் உண்மைகள் உங்களுக்கு விளங்கும்.

    என்னுடைய தளத்திலும் போலி, போலிகள் ஜாக்கிரதை என்று இரண்டு தலைப்புகளுக்குள் சென்று படித்துப் பாருங்கள்..

    புரியவில்லையெனில் சொல்லுங்கள்.. விளக்குகிறேன்..!

    ReplyDelete
  40. [[[ச.செந்தில்வேலன் said...
    சிறப்பான இடுகை.. பதிவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..]]]]

    நன்றி செந்தி்ல்வேலன்..!

    ReplyDelete
  41. [[[Jasmine said...
    //என்னுடைய அவ்தாரின் மீது மவுஸ் கர்சரை வைத்தீர்களானால் மானிட்டரின் இடது பக்க கீழேயும் பிளாக்கர் எண் காட்டப்படும். அந்த எண்ணும், நான் குறிப்பிட்டுள்ள எண்ணும் சரியாக இருந்தால் ஆள் உண்மை என்று அர்த்தம். இதுதான் புகழ் பெற்ற எலிக்குட்டி சோதனை//

    Hello Brother, I am a regular reader of your blog. Its interesting.... :-). I could not see any number if I place the cursor on your avthar (Photo) both in your blog and your comment in other blogs ?? !! :-) :-(]]]

    ஜாஸ்மின் மன்னிக்கவும்..

    இது என்னுடைய தவறுதான்..

    நான் அவ்தார் என்று சொன்னது எனது உண்மைத்தமிழன் என்கிற பெயரோடு இருக்கிற பகுதியைத்தான்..

    தாங்கள் புகைப்படத்தை மட்டும் கிளிக் செய்து பார்த்திருக்கிறீர்கள்.

    எனது உண்மைத்தமிழன் பெயரிலேயே மவுஸ் கர்சரை வைத்துப் பாருங்கள்..

    மானிட்டரின் கீழ்ப்பகுதியில் இடது பக்கம் பிளாக்கர்.காம் என்று சொல்லி தொடர்ந்து சில நம்பர்கள் வரும். அந்த நம்பரும் நான் என் பெயருடன் இணைத்துப் போட்டிருக்கும் நம்பரும் ஒன்றுபோல் இருக்கும்.

    இதுதான் எலிக்குட்டி சோதனை..!

    ReplyDelete
  42. நல்ல பதிவு.எனக்கென்னவோ இந்த அனானி்களுக்கு ஒரு cheap thrill
    கிடைக்கிறதோ என்ற எண்ணம்.

    ஏன்னெனில் நான் அரசியல்/மதம் பதிவு எழுதுவதில்லை.ஆனால் என்
    ஒரு கவிதை ஒன்றுக்கு “பரிசல்” மற்றும் “லக்கிலுக்” பேரில் ஆபாச பின்னூட்டம் வந்தது.

    பின்னூட்ட நடை ஒரு பதிவரின் நடையை ஒத்து இருந்தது.

    ReplyDelete
  43. [[[இங்கிலீஷ்காரன் said...
    நல்ல விஷயம்.. செய்துடுவோம்... நன்றி..]]]

    வருகைக்கு நன்றி இங்கிலீஷ்காரன்..

    ReplyDelete
  44. [[[ஸ்ரீ.... said...
    நீண்ட, தெளிவான இடுகை தந்தமைக்கு நன்றி. நேரமிருந்தால் எனது இடுகையையும் பார்வையிடவும்.
    ஸ்ரீ....]]]

    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  45. [[[RATHNESH said...
    அக்கறையான, நேயமிக்க பதிவு. நன்றி.]]]

    நன்றி ரத்னேஷ் ஸார்..!

    மறுபடியும் கலக்க வந்திருக்கிறீர்கள் போல் தெரிகிறது..!!!

    ReplyDelete
  46. [[[மின்னுது மின்னல் said...
    +ve]]]

    குத்திட்டியா..? எத்தனை நல்ல ஓட்டு..? எத்தனை கள்ள ஓட்டு..?

    உன்னையெல்லாம் நம்ப முடியுமா சாமி..?!!!

    ReplyDelete
  47. [[[நாமக்கல் சிபி said...

    //Hello Brother, I am a regular reader of your blog. Its interesting.... :-). I could not see any number if I place the cursor on your avthar (Photo) both in your blog and your comment in other blogs ?? !! :-) :-(//

    அடக்கடவுளெ! அப்பொ இந்த பிளாகும் உண்மையான உண்மைத்தமிழனுது இல்லையா?]]]

    இதெல்லாம் கண்ணுல தெரியும் மவனே..!

    அடிக்கிறதுன்னா சந்தோஷமா ஓடி வருவியே..!

    ReplyDelete
  48. [[[குழலி / Kuzhali said...
    //ஒரு பக்கத்தை தட்டச்சு செய்ய ஒரு நிமிடம்//

    ஆகா ஒரு பக்கத்துக்கு ஒரு நிமிசம்தானா? ம் நீங்க ரொம்ப வேகமா தட்டச்சிறிங்க...]]]

    என்னைவிட ஸ்பீடெல்லாம் இங்கன இருக்காங்க குழலி ஸார்..!

    [[[சைக்கோ அனானி புண்ணூட்டகாரர்கள் என்னதென்று அறியாமல் செய்கிறார்கள், சைபர் விளையாட்டு சொந்த வாழ்விலும் பாதிப்பேற்படுத்துமென்பது பாவம் அவர்களுக்கு தெரியாது போல...]]]

    புண்ணு பட்ட பின்னாடி தெரிஞ்சுக்கட்டுமே..!

    ReplyDelete
  49. [[[வால்பையன் said...

    அதர் ஆப்சன் கமெண்டுகளால் நாம் இரண்டு வருடங்களாக அவதியுறுவது நாம் அறிந்ததே!

    இப்போதிருக்கும் புதிய அனானிகள் வலையுலகில் பல மாதங்களாக உலாவி பின் இம்மாதிரி வேலைகளில் இருக்குவது போல் தெரிகிறது!

    எதா இருந்தாலும் முகமூடி போட்டு கொண்டு தனிநபர் தாக்குதல் நடத்துவது தவறுதான்!, அனானிகள் தங்களது போக்கை மாற்றி கொள்ளவேண்டும்!]]]

    இப்படியெல்லாம் மென்மையா அட்வைஸ் பண்ணா அவங்களுக்கு ஏறாது வாலு..!

    ஏன்னா திருடன், கொள்ளைக்காரனாவும், கொள்ளைக்காரன் கொலைகாரனாவும் மாறி ரொம்ப நாளாச்சு..!

    ReplyDelete
  50. [[[ananth said...
    Timely and well said. இந்த அனானிகள் புத்தர், காந்தி போல் நடந்துக் கொள்ளாவிட்டாலும் சற்று மனசாட்சியுடன் இருக்க வேண்டும். இப்படிப் பட்டவர்கள் broken familyயிலிருந்து வந்தவர்கள், ஒழுக்கமில்லாத தாய், தந்தையர், சகோதர சகோதரிகள், இந்த மாதிரியான குடும்பம் இவர்கள்தான் அதிகம். அல்லது இவர்களது காதலி/மனைவி இவர்களது நடத்தைப் பிடிக்காமல் வேறு எவனுடனாவது ஒடியிருப்ப்பாள். (இன்னும் கீழிறங்கி எழுதுவேன் வேண்டாம் அண்ணன் பெயர் கெடக்கூடாது). அந்த வெறுப்பை இங்கே காட்டுகிறார்கள். இதைப் பார்த்தவுடன் என் பெயரிலும் ஏதும் செய்யலாம். செய்து விட்டு (நாசமாய்) போகட்டும். இழப்பதற்கு ஏதுமில்லை. எதைப் பற்றியும் கவலையுமில்லை.]]]

    தம்பி ஆனந்த்து..

    இந்த அளவுக்கெல்லாம் போய் எழுத வேண்டாம்.. கோபத்தை அடக்கு..

    ReplyDelete
  51. [[[பித்தன் said...
    a timely one, thax]]]

    நன்றி பித்தன் ஸார்..!

    ReplyDelete
  52. இஸ்மாயில் ஸார்..

    தங்களுடைய நீண்ட புரிதலான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி..!

    வலைப்பதிவர் பட்டறை எதற்கு..? அவரவர் பதிவிலேயே அழகாக கிளாஸ் எடுத்துவிடலாம்..

    ஒரு பத்து, இருபது பேர் தினந்தோறும் அது பற்றி ஒரு பதிவு போட்டாலே போதும்.. படித்துப் புரிந்து கொள்வார்கள்..

    ReplyDelete
  53. [[[Muhammad Ismail .H, PHD, said...

    யோவ் உனா, தானா, என் வேலைவெட்டிய எல்லாம் விட்டுபுட்டு, கஷ்டப்பட்டு பெரிய பின்னூட்டத்தை டைப்பி அதை இடுகையில் போட்டு, உனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னால் என்கிட்டயோ 'எவன்டா அது இஸ்மாயில்னு ' பின்னூட்டம் போட்டிருக்கான் என என்கிட்டயே கேப்பியாயா? ங்கொய்யாலா, உனுக்கு டூண்டு, கணேஷ், No எல்லாரையும் புண்ணூட்டம் போட வச்சாதான் அடங்குவய்யா. டென்சன் ஆவாதீங்க. சும்மா ஒரு கலாய்த்தல்தான்.]]]

    இஸ்மாயில் ஸார்..

    நான் ஒரு முக்கால் செவிடு.. காதில் மிஷின் வைத்திருக்கிறேன்.

    நீங்கள் பேசிய வேகம் அத்தனை வேகத்தில் இருந்ததால் எனக்கு முதலில் சரியாக விழங்கவில்லை. அதனால்தான் இந்தக் குழப்படி..

    மன்னிக்கவும்..

    ReplyDelete
  54. [[[Prosaic said...
    Can you give links to those blogs please?]]]

    எதுக்கு சாமி அது..?

    அங்க போய் படிச்சு நீங்க அதை நாலு பேர்கிட்ட சொல்லி அது பிரபலமாகி..

    தேவையா அது..?

    பேரை மட்டும் ஞாபகத்துல வைச்சுக்குங்க.. ஆப்பு, ஆப்பரசன்.. அவ்ளோதான் போதும்..!

    ReplyDelete
  55. [[[கே.ரவிஷங்கர் said...
    நல்ல பதிவு. எனக்கென்னவோ இந்த அனானி்களுக்கு ஒரு cheap thrill
    கிடைக்கிறதோ என்ற எண்ணம்.
    ஏன்னெனில் நான் அரசியல்/மதம் பதிவு எழுதுவதில்லை.ஆனால் என்
    ஒரு கவிதை ஒன்றுக்கு “பரிசல்” மற்றும் “லக்கிலுக்” பேரில் ஆபாச பின்னூட்டம் வந்தது.
    பின்னூட்ட நடை ஒரு பதிவரின் நடையை ஒத்து இருந்தது.]]]

    இந்தக் குழப்பத்திற்காகத்தான் அனைவரும் தங்களது முகத்தைத் தெளிவுபடுத்திவிட்டு பதிவு எழுதுங்கள் என்று சொல்வது..

    ReplyDelete
  56. //சஞ்சய் என்று நான் கேள்விப்பட்டு சிலரது வலைப்பூக்கள் ஹேக் செய்யப்பட்டதைப் போல

    //

    அவ்வ்வ்வ்.. இது எப்போ? :(

    அண்ணே.. நானெல்லம் ரவுசி இல்லைணே.. என்னை எல்லாம் ஒரு பயலும் கண்டுக்க மாட்டான். என் வலைப்பூ எப்போதுமே களவாடப்பட்டதில்லை..

    ReplyDelete
  57. ///SanjaiGandhi said...

    //சஞ்சய் என்று நான் கேள்விப்பட்டு சிலரது வலைப்பூக்கள் ஹேக் செய்யப்பட்டதைப் போல//

    அவ்வ்வ்வ்.. இது எப்போ? :(
    அண்ணே.. நானெல்லம் ரவுசி இல்லைணே.. என்னை எல்லாம் ஒரு பயலும் கண்டுக்க மாட்டான். என் வலைப்பூ எப்போதுமே களவாடப்பட்டதில்லை..///

    இல்லியா..?

    படிச்ச மாதிரி ஞாபகம் இருந்தது. அதான் எழுதினேன்..

    தப்புன்னா மன்னிச்சுக்க ராசா..!

    ReplyDelete